Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • entries
  27
 • comments
  0
 • views
  47,077

இலங்கையில் இருந்த பிடிப்பை இழந்தது


PSIVARAJAKSM

990 views

தாயாதிகளுக்குள் கொண்ட பொறாமையினால்

பொறாமல் புழுங்கினான் துரியோத்தனன்!

பொறாமை தீ புசு புசுவென வளர

கள்ள சகுனி கவனமாக வளர்த்துவிட்டான்!

அரசர்க்கு அரசனாக ஆசைக் கொண்ட தர்மனவன்

அருமை தம்பியருடன் அறங்கேற்றினான் வேள்வித்தீயை!

தீயை தீ தீண்டியதால் திகு திகுவென வளர்ந்தது பொறாமைத் தீ!

வேள்வித் தீயினால் வெதும்பினான் துரியோதனன்!

வேண்டிணான் பொறாமை தீத் தணிக்க சகுனியிடம்!

வெஞ்சமர் புகுந்தால் வெற்றியோ தோல்வியோ!

விருந்துக்கழைத்திடுவாய் வெற்றியை உமக்களிப்பேன் என்றான் சகுனி!

அருமை மாமனின் ஆலோசனை அதுவென்றால்

அப்படியே நடக்கட்டும் என்றான் துரியோதணன்!

விருந்துக்கழைத்தனர் விரும்பியே வந்தான் தர்மன் தம்பியருடன்!

வல்ல சகுனியின் வாய் வீச்சில் வகையாக சிக்கினர்!

மெல்லத் தொடங்கியது சூது மெதுவாக வைத்திழந்தான் ஒவ்வொன்றாய்!

தம்பியரை இழந்தான்! தன்னைவைத்து பின் தாரத்தையும் சேர்த்திழந்தான்!

மாய சூதினில் மதிமயங்கி மானத்தை இழந்துவிட்டான்!

மாமனோர் தெய்வமென்றே மகிழ்ந்தான் துரியோதனன்!

மங்கை திரெளபதியின் துகிலுரித்தான் துச்சாதனன்!

வீரு கொண்டெழுந்த வீமன் ஆணையிட்டே உரை செய்தான்!

ஆண்மையில்லா துரியோதணனின் தொடை பிளந்து மாய்ப்பேன்!

அவன் தம்பி துச்சாதணன் தோள்களை பிய்ப்பேன்!

அங்கு கள்ளென ஊரும் இரத்தம் குடிப்பேன் இது பராசக்தி மீது ஆணை!

அர்சுணனும் ஆணையிட்டே சொன்னான்

கர்ணனின் கதை முடிப்பேன் இது- கரிய

கண்ணனின் மீதும் என் காண்டீபம் மீதும் ஆணை!

பாவி துச்சாதணன், துரியோதணன் செந்நீர் கலந்தே

சீவி குழல் முடிப்பேன் இது செய்யும்முன் முடியேன்!

இது பாண்டவர்தேவி திரெளபதியின் ஆணை!

குடும்ப பகை முடிக்க பாண்டவர் தேவி குழல் முடிக்க தொடங்கியது போர்!

குருஷேத்திரம் என்பதே களத்தின் பேர்!

பதினெட்டு நாள் நடந்தது போர்! பாரினில் உயர்ந்தது தமிழனின் பேர்!

ஆம் சகோதரர்களே, பதினெட்டு நாள் நடந்த பாரதப்போரில் காயம் பட்டவர்களுக்கும் களம் கண்டவர்களுக்கும் கணக்கில்லாது உணவளித்தான்! மருத்துவம் செய்தான் ஒரு மன்னன்! நெருக்கமுடைய நிலமும் அதன் மீது விரிந்த வானமும், அதற்க்கிடையில் தவழ்ந்து வரும் காற்றும், காற்றில் பரவும் தீயும், தீயை அனைக்கும் நீரும் போல நிலையாக நீதி காக்க பகைவர் செய்த பிழையை பொருத்து குலப்பகையை வெல்லும் ஆற்றலும் கொண்டே மானுடம் போற்றினான் அவன்! அவன் வேறுயாருமல்ல தோழர்களே! "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று அகிலத்துக்கு சொன்ன தமிழரின் முடியரசன்! அவர் பேர் பெருஞ்சோறளித்த சேரன்!

அலங்குளைப் புரவி அய்வரோடு சினைஇ

நிலந்தலைக் கொண்ட பெலாம் பூந்தும்பை

ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்!

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

என்று பதிவு செய்கிறது புறநானுறு!

இன்றும் நடக்கிறது போர் ஈழத்தில்

இன்று நடப்பது குடும்ம பகைக்கா? குறுகிய நோக்கிலா?

இல்லை! இல்லை! இது மானம் காக்க மறத்தமிழர் வீரம் காக்க!

அந்தோ பரிதாபம்! அவருக்கு மருந்தளிக்க உணவளிக்க

அனுமதிக்க தயங்குகின்றார் அரசு செய்வோர்!

தமிழரின் தயவினால் ஆட்சி செய்வோர்!

தயங்காமல் தருகின்றார் தமிழரின் எதிரிக்கு ஆயுதங்கள்!

தமிழினத் தலைவருக்கு,

பிறகேன் வினா? என்பதே என் வினா?

என்று தாங்கள் கூறிவிட்டபோதும்!

பின்னோக்கி பார்க்கமாட்டீர்களா?

என்பதுதான் எங்கள் வினா?

காலப்பேழையும் கவிதைச்சாவியும்

கண்களை திறக்குமா?

உங்கள் கவிதையே பேசுகிறது!

பல்வேறு உணர்வுகளை சுமந்து கொண்டு

பயணம் நடத்துகிறேன்; உம்மோடுக்கூட!

முன்னோக்கி செல்லும் பயணத்தில் சற்றுப்

பின்னோக்கி திரும்பிப் பார்க்கிறேன்

இதைத்தான் "அறிமா நோக்கு" என்பர் அறிஞ்சர்

அடியேன் நோக்கு அறியா நோக்காக கூட இருக்கலாம்;

இதில் தன்னல நோக்கு இல்லை,

தமிழர் வரலாற்று நோக்கும் இருப்பதால்

குறுகிய நோக்கென கொள்ளாமல்; என்

கொள்கை நோக்கெனக் கொள்வீர்!

நோக்கின் காரணம்; விடையாக

விரிந்து நிற்கிறது-

"பிறகேன் வினா?" என்பதே என் வினா?

நன்று கலைஞர் அவர்களே,

வருங்காலத் தமிழர்கள் வினவாமல் இருக்கத்தான்

வேண்டுகிறோம் பின்னோக்கி சற்றே பாருங்கள்!

பெருஞ்சோற்று சேரன் அவன் பெருந்தீனிக்காரனல்ல!

பெருஞ்சோற்று சேரன் அவன் பெருஞ்சோறு படைத்தவன் பசித்தவருக்கு!

வரலாறு திரும்பட்டும்! வளம்பெற வாழ்ந்திடுவர் நம் தமிழர்!

இதையும் சற்று பாருங்கள் கலைஞரே!

இதுவும் நீங்கள் எழுதியதுதான்!

தனது உள்ளங்கவர்ந்த செல்வனாம் விக்கிரம சோழனை

தனக்குத் துணையாகவும் தனக்குபின் அவனேதான் எனவும்

அறிவித்து ஆட்சி நடத்திய குலோத்துங்கன், அய்ம்பது ஆண்டுகள்

அரசு நடத்தினான் எனினும்; கலிங்கத்து பரணிக்கு காரணமான

கலிங்கப் போரில் அவன் கண்ட வெற்றியே

அவன் ஆட்சியில் பெற்ற கடைசி வெற்றிப்போலும்

விக்கிரம சேழனின் ஆட்சியும் நேர்மை நியாயம் போற்றிய ஆட்சியாக தந்தை

விட்டு சென்றதை இழக்காத ஆட்சியாக விளங்கிற்று, எனினும்

இலங்கையில் இருந்த பிடிப்பை இழந்தது; அதனை

பேரிழப்பின் ஆரம்பம்; பின்னடைவின் துவக்கமாயிறு எனலாம்!

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.