Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • entries
  27
 • comments
  0
 • views
  47,040

இனத்தால் ஒன்றுபடு நீ தமிழா!


PSIVARAJAKSM

873 views

ஆனையிறவில் அடிபட்டு ஓடியவர்!

பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடியவர்!

ஆதிக்க சக்திகளின் ஆயுத உதவிகளால்

மீண்டும் தலைகாட்டி சம்பூர் வாகரை என்றே

சதிராட்டம் ஆடுகிறார்! சதிகாரர் கூட்டுறவில்!

கூட்டுறவும் ஆதிக்க வர்கத்திற்க்கு அழகாக பயண்படுவது ஏன்?

அகங்காரம் கொண்டவரும் அழித்திடுவேன் என்கின்றார்!

தரணியில் தமிழர்கள் தனித்தனியாய் பிளவுண்டதனால்!

தண்டல்காரரென்றே தடியெடுத்து தாக்குகின்றார்!

தருக்கனவன் தலைகால் புரியாமல் தலைகனத்து ஆடுகின்றான்

தரணியில் தமிழர்கள் ஒன்றிணைந்தால் தருக்கரின் செருக்கழியாதா?

சிங்கமென்றாலும் சிறுநரி கூட்டம் ஒன்று சேர்ந்தே எதிர்த்தால்

கூற்றுவன் வந்தழைத்து போகானா அடலேறுஆனாலும் சிங்கத்தை!

புலி குணமேவிய தமிழன் புரிந்து நடந்தால்!

புத்தி கொண்டே புறப்பட்டு ஒன்றிணைந்தால்!

புவியும் உணரும் தமிழர் வலிமை! பின்

ஆப்பசைத்த குரங்கதுவும் வால்மாட்டி கதறியதுபோல்

சம்பூரில் வாகரையில் சதிராடியவர்! சாமார்த்தியம் காட்டியவர்!

சமர்களத்தில் சரணடைவார் சத்தியம் சொல்கின்றேன்!

நித்தியம் இதுவென்றே நீ உணர்வாய் என் தமிழா!

சாத்தியமா இதுவென்றே சற்றே மனம் தளர்ந்தால்

சரித்திரம் சொல்கின்றேன் சகித்திருப்பாய் சற்றே என் மொழிக்கு!

கந்தனுக்கு முன் பிறந்தான் கணேசன்

ஆனைமுகத்தான் அவன் என்றே ஆன்மீகத்தார்

அழைத்திடுவர் அவனையே முதல்வனென்று துதித்திடுவர்!

ஆனை அடி போல் அதிரசங்களும்!

குதிரை அடி போல் கொழுக்கட்டைகளும்

படைத்திடுவர் பாடி தொழுதிடுவர்!

சொந்த கதைகள் பலப் பல உண்டு அவருக்கு

வந்த கதையுமுண்டு தமிழகத்திற்க்கு வந்த கதையுமுண்டு!

அதில் அபிப்ராய பேதங்களும் ஆயிரம் உண்டு!

வாதாபி கணபதி வந்த கதை அவர் சொந்த கதை!

வாகனம் சுண்டெலியாம்! வாதாபி பிறப்பிடமாம்!

வாதபியை தலைமையிடமாக கொண்டே

வாழ்ந்து வந்தான் நாட்டை ஆண்டுவந்தான் புலிகேசி!

ஆசை மிகக் கொண்டதனால் புவி மேல் பாசம் கொண்டே

நாடு பிடிக்க நடத்திட்டான் படையை காஞ்சி நோக்கி!

கலைகள் பல வளர்த்த காஞ்சியை ஆண்டவனும்

கற்கோவில் கலைகளை உலகுக்கு தந்தவனும்

மகேந்திர வர்ம பல்லவன் என்றே பேர் கொண்டவனும்!

சிங்கமென சீறி சீறும் எரிமலையாக போர் புரிந்தான்

அப்போதும் அழகாக பொய் ஒன்றை சோடித்தே

பரப்பிட்டான் புலிகேசி! மகேந்திரவர்மன் புறமுதுகிட்டானென்றே!

மாகேந்திர வர்மனின் மகன் நரசிம்ம வர்ம பல்லவன்

மல்லனுக்கு மல்லன்! மாமல்லபுரமே அவன் பெயரால்!

ஆணையிட்டே நடந்தான் வாதபிக்கு உளவு பார்க்க!

தரணிபோற்ற கலைபோற்றியவன் தன்னந் தனியனாக!

அப்போது பல்லவ தலபதியாம் பரஞ்சோதியும்!

படையுடன் பின் தொடர்ந்தான்!

பார் வியக்க படை நடத்தி பகை முடித்து

வாதாபி நகரழித்து வாகை சூடினான் பரஞ்சோதி

பின்னாளில் சித்தத்தை சிவன் பால் வைத்தே

சீரிய சிவனடியனாகி சிறப்புற்றான் நாயன்மாராக!

வாதாபி வெற்றியை வையகத்திற்கு உணர்த்த

வரிசையாய் சீர் வரிசையாய் கொண்டுவந்த திரவியத்தில்!

ஆணைமுகம் கொண்ட அழகான சிலையுமொன்று!

அதுவே வாதாபி கணபதியாயிற்று இது வரலாறு!

வாதாபியிலிருந்து வந்ததனால் வஞ்சிக்காமல்

அனைவரும் ஆண்டவன் பிள்ளைகள் என்றதனால்

அதுவே தரணியில் தமிழர்களின் கொள்கை என்றதனால்

ஆணைமுகத்தானும் ஆதி சிவனுக்கு பிள்ளையானான்!

திருத்தொண்டர் புராணமென்றும் பெரிய புராணமென்றும்

சைவர்கள் போற்றும் நயான்மார் வரலாற்றை

நமக்குவந்து நற்றமிழில் அளித்த சேக்கிழார்

வாதாபி வெற்றிக்கு வாழ்த்து பாடுகிறார்!

மன்னவர்க்கு தண்டுபோய் வடபுலத்து வாதாபித்

தொன்னகரம் துகளாகத் துளை நெடுங்கை வரையுகத்தும்

பன்மனி நிதிக் குவையும் பகட்டினமும் பரித்தொகையும்

இன்னன எண்ணிலகவர்ந்தே இகலரன் முன் கொணர்ந்தார்."

வாதாபி வீழ்ச்சிக்கு பதிலிருக்க

பகை கொண்டே வெகுண்டெழுந்தான்

புலிகேசியின் வழித் தோன்றல்

வெஞ்சினம் கொண்டவன் பேர் விக்கிரமாதித்தன்

விரைந்தான் காஞ்சி நோக்கி

இடியாக புயலாக சுழன்று சுழன்று தாக்கினான்

திடீர் தாக்குதலால் திக்குமுக்காடி தினறியது

பல்லவ சேனை! பார்த்தும் பொறுப்பாறா?

பண்பாடு போற்றும் தமிழர் அவர்!

மானமுள்ள தமிழர் சேனை! மறுபடியும் கூடியது!

தமிழர் ஒன்றுபட்டால் தாக்குபிடிப்பாரா எதிரி!

சரணடைந்தது சாளுக்கியப் படை!

சமர்களத்தை விட்டு ஓடியது!

பரமேஸ்வர வர்ம பல்லவர் தன் பட்டத்து யானை

அரிவாரண மீதமர்ந்து ஆர்த்தெழுந்தான்!

கந்தலாடையுடன் கலக்கிய பல்லவன்!

உதவி கேட்காமலேயே ஓடி வந்த

தமிழரசர்களுக்கு தலைவணங்கி நன்றி சொன்னான்!

விக்கிரமாதித்தன் விதி வலியதென்றே!

ஓடினான் ஓடினான் தமிழக எல்லையைவிட்டே!

தமிழர்கள் ஒன்றினைந்தாள் தருக்கர்களின் செருக்கழியாதா?

நம்மை பிரிப்பதற்க்கே சதிவலையை பின்னிடுவர் - அவர்

பெயரில் பரிவு (அதாங்க கிரேஸ்) இருக்கும் என்னத்தில் விஷம் இருக்கும்!

இனத்தால் ஒன்றுபடு நீ தமிழா!

இல்லையெனில் தரணியில் தாழ்ந்திடுவாய் தமிழா!

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.