Sign in to follow this  
  • entries
    27
  • comments
    0
  • views
    46,771

நல்லது நடக்காம போயிடுமா?

Sign in to follow this  
PSIVARAJAKSM

1,022 views

யாரது ஈழத்து தம்பியா? என்னப்பா இது அடையாளமே தெரியவில்லை ஒரே அடியாக மாறிவிட்டாய்?

ஆமாங்க என்ன செய்வது? இந்த பாழப்போன சண்டை வந்ததிலிருந்து ரேஷனும் கிடைக்கலை பயிரையும் விளையவிடல விளைந்த பயிரையும் அழிச்சிடுராங்க பஞ்சம் ஏற்ப்பட்டுவிட்டது, ஏற்கனவே இருந்த பிரச்சனையில இதுவும் சேர்ந்ததால் உடம்பு பாழாப் போச்சி உடம்பு இளைச்சாலே உருமாறித்தானே போகும் உடம்பு!

அடப்பாவமே முகம் கருத்துக் கிடக்கு?

நான் எப்பன்னே சிகப்பா இருந்தேன்?

மாநிறமா இருப்பியே?

கவலைதான் எல்லாத்துக்கும் காரணம்

ஆமாம் ஆமாம் அதுக்கு ஏதாச்சும் செய்யுப்பா, ஆமாம் உன் தம்பி ஒருத்தன் இருந்தானே துறு துறுன்னு அவன் எப்படி இருக்கான்?

ஆண்டவன் புண்ணியத்துல அவன் நல்லாதான் இருக்கான். அவன் இருக்கிறதுதான்ணே எங்களுக்கு பாதுகாப்பு, அவன் இல்லேன்னா நாங்க இருந்த இடத்துல புள்ளு மொளச்சிருக்கும்னே,

என்னமோப்பா உடம்ப நல்லா பார்த்துக்க இரும்பா இருந்த நீ துரும்பா போயிட்ட

முதல்ல உன்னை பார்த்த போது அடையாளமே தெரியல உருவமே மாறிடிச்சு

ஆமாண்ணே அப்படித்தான் கோவலண்ணன் கூட சொன்னாறு

என்ன கோவால பார்த்தியா? பாத்தியா என்ன பார்க்கரத்துக்கு முன்னடியே அவன பாத்திருக்க, அவன் என்ன என்னோட பெரியவனா? எங்கிட்ட இருந்தவன் தானே என்னமோ என் புள்ளைங்களோட போட்டி போட்டதனால அவன கழட்டி விட்டுட்டேன்

இப்ப என்னடான்னா அவன் குண்டம்மாக்கிட்ட சேர்ந்துகிட்டு கும்மாளம் போடறான், அவன் குண்டக்க மண்டக்கன்னு அப்ப அப்ப பேசுனதினால அவன கும்மி எடுக்குது அந்தம்மா ஆனாலும் இரண்டு இட்லி அதிகமா கொடுத்ததாலா அதுகிட்டயே போயிட்டான்.

என்னன்னே என் பிரச்சனையை தீர்த்து வைப்பீங்கன்னு வந்த உங்க பிரச்சனையை சொல்லுறீங்க, சரிண்ணே நா வரேன்!

செய்யுப்பா உடம்ப பார்த்துக்கப்பா என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு போறார் கலை அண்ணன்.

கலை அண்ணனின் வீடு பெரியது தான் ஆனா கூட்டுக் குடும்பம் ஒவ்வொறுத்தரும் ஒரு மாதிரி. விருந்தாளியெல்லாம் வீட்டுக்கு போக முடியாது. அம்மையார் அவ்வளவு சுதந்திரா தேவி. அந்த அம்மையார் அந்நியம்தான் அவருக்கு அது ஒரு பெரிய கதை அது இருக்கட்டும் அந்த ஈழத்தம்பிய கொஞ்சம் பார்ப்போம், அங்க கொஞ்சம் வேலை இருக்கு.

அந்த ஈழத்து தம்பி அதுபாட்டுக்கு போயிட்டு இருக்கு நாம அந்த கடைக்கு போயிட்டு போவோம். அட அந்த உயரமான இருக்கிற அண்ணன் நம்ப ஈழத் தம்பிய பார்த்து என்னமோ சொல்றார் என்னன்னு கேட்போம்

அண்ணே அந்த ஈழத்து தம்பி முன்ன நல்லா இருந்தாராம் இப்பதான் இப்படி ஆயிட்டாராம் அங்க ஒரு அண்ணன் சொன்னாரு இனவெறிதான் இதுக்கொல்லாம் காரணம்னு.

அப்படியா சொன்னான் அவன் சொல்லுவான் சொல்லுவான்

என்னண்ணே தப்பு அவர் சொன்னதில முந்தி அவர்

ஆள் முன்ன மாதிரி இல்ல இளைச்சிதான் போயிருக்கிறான். எல்லாம் அவன் செஞ்ச வினை. அடிமையா ஒழுங்கா மரியாதையாதான் இருந்தாம்பா, அப்புறம் ஏம்பா நல்ல படிச்சான்? புத்திசாலி ஆயிடலாம்னு நினைச்சான், அவனெல்லாம் முன்னுக்கு வந்துட்டா நாங்க எப்படி பொழைக்கிறது, இங்க நாங்க 3, 4 பேர் இருந்துகிட்டே இவனுங்கள கடவுள் பெயரால காவடி எடுக்க வச்சுட்டோம், பத்தும் பத்தாதற்க்கு பஞ்சாயத்து நாட்டமெல்லாம் நாங்கதானே விட்டு விடுவோமா?அதனால தான் அங்க அங்க ஆப்பு வைக்கிறோம்

நாங்க எங்க ஆத்துல இருந்துகிட்டே இவனுங்கள குளத்து மீனாகவும் குளக்கரை எறும்பாகவும் பிரிச்சி வச்சி இருக்கோம். எங்க தேவைக்கு தகுந்தா போல எங்க ஆத்துல தண்ணிய கூட்டி குறைச்சி குட்டையை குழப்பி ஆட்டம் காமிக்கிறோம். குளத்து மீனையும் குளக்கரை எறும்பையும் ஆட்டுவிப்பது ஆத்து நீரும் அருகில் உள்ள தர்ப்பையும்தான்னு அங்கைனெட் அழகாக கூறியபிறகும் அத நாமே ஏன் எழுதனும் அத படிங்க புரியும்.

ஆனாலும் அவங்க முரண்டு பிடிக்கிறாங்க விடுவமா, நாங்க 3, 4 பேர் இருந்துகிட்டே சமாளிக்கிறோம். அங்க அதிகமா இருக்கவங்க கிட்ட இவனுவ பாட்சா பலிக்குமா? அதான் சாவுராங்க சாவுட்டும் சாவுட்டும். அவங்கல்லாம் எங்களுக்கு போட்டியா வந்துட்டா நாங்க அவங்க வேலையையா செய்ய முடியும்? நாங்க எங்கேயிருந்து பொறந்தவங்க!

உயரமான ஆள் இவ்வளவு கோவமாக பேசும் போது நாம ஏன் விவாதத்த வளர்க்கனும். அவங்கள வேற இடத்துல பார்த்துக்கலாம்.

ஈழத்து தம்பி கஷ்டத்துல இருக்கிறத இரண்டு பேரும் ஒத்துகிறாங்க ஆனாலும் அதுக்கு காரணம்தான் வேற வேற சொல்லுராங்க. அதுக்கு காரணம் அவங்க குணமும் பண்பாடும் அப்படி.

நாம ஈழத்து தம்பிய தொடர்ந்து பார்ப்போம் அவருக்கு இருக்கிற பிரச்சனைய பேசுவோம். நல்லவங்க நாலு பேர் காதுல விழுந்தா அதுக்கு நல்லது நடக்காம போயிடுமா?

Sign in to follow this  


0 Comments


Recommended Comments

There are no comments to display.