Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • entries
  27
 • comments
  0
 • views
  47,043

அவரும் இவரும் வளராததற்க்கு காரணம்.


PSIVARAJAKSM

805 views

அவர் இருந்தால் இவர் இருந்தால், அவரெல்லாம் இருந்திருந்தால் இந்நேரம் மாற்று வாய்ப்புகள் மள மள வென்று வந்து ஐ.டியிலும் அண்டை நாட்டிற்க்கு சவால் விட்டிருப்பார். எல்லாம் குட்டி சுவராகிவிட்டது குற்றமில்லையா? குறிக்கோளை அடைய குறுக்கு வழியில் செல்கிறார்கள். அதனால்தான் அத்தனை தாமதம். குற்றம் சாட்டுகிறார்கள் சிலர். அழகான வார்த்தைகளும் வகை வகையான சான்றுகளும் வந்து விழுந்தபோது, நாமும் சற்றே சலனப் பட்டோம், சட்டென வந்து கலைஞ்சர் சொல்கிறார். அவர் இவர் வளரவில்லை என்பது அவசியமற்றது. இந்த மாற்றமே மகத்தானது அதுதான் படிமுறை வளர்ச்சி என்று சொல்லி வழிபடுத்துகிறார் பாருங்கள்.

மாற்றம் எதுவும் மறுநாள் விடிந்ததும் வந்திடவில்லை

மாந்த குரங்கினம் எழுந்து நிற்கவே

மாமாங்க காலம் ஒன்றிரண்டு பலகோடி வரவேண்டியிருந்தது

மனிதனாய் குரங்கு மாறிட மாநாடு போட்டுத் தீர்மானம்

நிறைவேற்றினால் போதுமா?

பரிணாம வளர்ச்சி என்பது பல்லாயிரம் ஆண்டுகள்

பட்டறையில் வைத்து உளியொன்றை உடை வாளாக்குவதன்றோ?

இலெமூர் குரங்குகளுக்கு பற்கள் முப்பத்தி ஆறு

இதற்க்கடுத்து தோன்றிய குரங்கிற்க்கு முப்பத்தி நாலு

மணிகணக்கில் மாறிவிட்ட பல் எண்ணிக்கையல்ல - அந்த

எண்ணிக்கை மாற்றத்துக்கே இடையில் எத்தனையோ நூற்றாண்டு!

கற்கால மனிதர்க்கு பற்கள் முப்பத்தி இரண்டென முளைத்துளதும்;

பிற்காலத்தில் இருபத்தி எட்டேதான் என மாறிடும் என்கின்றார்;

வாலூன்றி நின்ற வானரப் பிராணி

காலூன்றி நிற்பதற்க்கும் நடப்பதற்க்கும்

ஒலிம்பிக் தடகளத்தில் ஓடுகின்ற

மனிதப் பிராணி ஆவதற்க்கும்

இடையில் ஓடியது: எத்தனை ஆயிரம் நூற்றாண்டு

இதற்குப் பெயர்தானே படிமுறை வளர்ச்சி, பரிணாம வளர்ச்சி என்றும் பகிர்ந்திடுவர்.

- கலைஞர்

பேரின இனவெறியின் இறுமாப்பு

இறங்கிட இயங்கியதும் வேங்கையின்

இணையற்ற வீரமே காரணம்

இயம்பிடுவர் இயல்புணர்ந்தோர்

இந்தியாவிற்கு விடுதலை

இரவினில் கிடைத்ததனால்

இரவே விடுதலைக்கு காலம் - என்று

இயம்பிடுதல் அறிவோ! முறையோ!

அகிம்சையா? ஆயுதமா? என்பதுவும்

அடக்கியாள்பவரின் ஆணவம் தீர்மானிப்பது

அகிம்சை காப்பதற்க்கும் ஆயுதம் தேவை

அறிவிப்பதும் அகிம்சை நாடுதான்

அதனால்தான் அகிலத்தில் நான்காவது பெரிய இராணுவம்!

அகிம்சை வென்றும் ஆயுதம் இங்கே

அகிம்சை தோற்றதனால் ஆயுதம் அங்கே

இது சரி ஆனாலும் அது தவறு!

ஆகா! என்னே அழகான நிலைப்பாடு?

அவரரெல்லம் வளர்ந்திருந்தால்

அகிம்சையாலே விடுதலை அடைந்திருப்பார்!

அதற்க்கெல்லாம் காரணம்...

அழகாகத்தான் சொல்கின்றார்

அதற்கும் கலைஞரே பதிலிருக்கிறார்

பழம்பெரும் நாகரிகத்தின்

தொட்டில்கள் என சுட்டிக் காட்டப்படும்

எகிப்து, மாயா, மெசபதோமியா

அவைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு

எடுத்த எடுப்பிலேயே

சிந்துவெளி நாகரிகம்

கண் சிமிட்டுவதால்

கருநிலை அதற்க்கெங்கே யென்று

கடும் ஆய்வு நடத்தியவர்கள்

கடலுக்குள் மூழ்கிய குமரிக் கண்டப் பகுதியை

கழறுகின்றார்; நாமும் காணுகின்றோம்

மலைப்பு விளைக்கும் கேள்வியொன்றை

மதிவாணர் எழுப்பி விடையும் கூறுகின்றார்

குரங்கிலிருந்து மாந்தன் தோன்றியதாய்ப்

பரினாம வளர்ச்சி பகற்கிறதே

இன்றுள்ள குரங்குகள் ஏன்

அன்று போல் மாந்தராய் மாறவில்லை?

சிறிய செடி பெருமரமாய் வளரும் போது

உச்சக் கிளை மட்டுமே உயர்ந்து கொண்டே போகும்

பக்கக் கிளைகள் நாம் பார்த்த இடத்திலேயே

நிற்கும் நிலை போலவே

படிமுறை யெனும்

பரிணாம வளர்ச்சியும்

பாடமாய் அமைகிறது

பகுத்தறிவு பதில் தறுகிறது

மிதித்தி குழைத்த சேறு; நம்

மதித்து காத்திடும் சுவராய் மாறுது!

குழைத்த இடத்தில் கிடக்கும் சேறு

குட்டிச் சுவராகக் கூட பெறுவதில்லை பேறு

குரங்கினமும் அப்படித்தான்

கொலுவேறிக் குந்துகின்ற

மனித இனமாக ஒருபக்கம் உயர்ந்தாலும்

மண்ணிலே குழைந்த சேறு மிச்சமாக

மண்மீதே கிடப்பது போல

மனிதரிடையே மாந்த குரங்கும் இருக்கும்.

அன்புள்ள அங்கைனெட் இப்போது புரிகிறதா? அவரும் இவரும் வளராததற்க்கு காரணம்.

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.