Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • entries
  27
 • comments
  0
 • views
  47,040

சீடனாக வந்தென்னை சேர்ந்தனன், தெய்வமே!


PSIVARAJAKSM

696 views

எம்மொழி பேசி எம்மிலும் பிறறாய்

எம்முணர்வு அறிவு இரண்டிலும் வேறாய்

என்ன கருத்திலோ கரிகாலன்

என்னிலும் அறிவில் குறைந்தவன் போலவும்

என்னைத் துணைக் கொண்டு என்னுடை முயற்சியால்...

என்னுடை பழகலால் எம்மொழி கேட்டலால்

மேம்பா டெய்த வேண்டினன் போலவும்

எம்முடை அறிவை என்மதி அளவை

இவற்றினைப் பெருமையிலங்கின வென்று

கருதுவான் போலவும் கரிகாலன் கண்ணன்

சீடனாக வந்தென்னை சேர்ந்தனன், தெய்வமே!

பேதை போல் நானும் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்தேன்!

கள்ள கண்ணனாம் கரிகாலன்

மெல்ல என்னை அனுகி அகிம்சையால்

வெல்ல ஆலோசனை வேண்டுமென்றான்

மெல்லும் வெறும் வாய் கிழவிக்கு

வெல்லம் கலந்த அவுள் கிடைத்தது போல்

நல்ல கருத்தினை நவிழ்கின்றேன் - என்றே

மெல்ல ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தேன்

நல்ல பேச்சை நாட்டிலே முழங்கு

வல்ல கருத்தை வரிசையாய் வழங்கு

இந்நூல் கற்பாய்; இப்படி மொழிவாய்

இணையமுள்ளிட்ட இருநூற்றுக்கும் இரண்டே குறைவான வழிகள்தாம்

இனவெறியினின்றும் தப்பிட இவையே போதுமென்றேன்

உளவியல் தாக்கும், அரசியல் தலையீடென்றே

அமைதியாக அரசுடைமைகளில் ஆளுமை செய்

என பல தர்மம் எடுத்துக் கூறி

ஓய்வில்லாது அவனொடு உயிர் விட்டேன்

கருத்து பரவலை கவனமாக செய்ய

பருத்த கொடிகளை பல வண்ணங்களில் கட்டிடென்றேன்

சொந்த உடைமைகளை சுக்கலாக்கு

கந்தலாடை உடுத்தி கவனத்தை ஈர்

நன்றாக நடித்துக் காட்டு

நயம்பட பாடிக் காட்டு

கொடும்பாவியை எரித்துக் காட்டு

கொடும் பாவியிடம் பல்ளித்துக் காட்டு

வெளி நடப்பு செய்துக் காட்டு

வாயில்லா ஊமைபோல் நடித்துக் காட்டு

காட்டு காட்டு என்றே கட்டுக் கட்டாய் கதையை நான்

காட்ட அவனோ கதையிலே கணவன் சொல்லுக்கு

எதிர் செய்யும் மனைவிப் போல்

நான் காட்டும் நெறிக்கெல்லாம் நேர் எதிரே

நடக்கலானான் நானும் விடாமல்

குறிப்பிட்ட சமூக புறக்கனிப்பு

சரிப்பட்டால் சாத்தியபட்டால்

சரிபடேல் ஒட்டுமொத்த புறக்கனிப்பு

நானிலம் போற்றிடும் புகழும்

நன்றாக அறிவும் கொண்டிருந்தும்

நான் காட்டிய வழி விலகியே நடக்க

என் மனம் நோக நடந்திட கண்டே

இன்னும் சிலவற்றை சொல்லிடலுற்றேன்

அரசு பணத்தை அவமரியாதை செய்

அசலோ வட்டியோ அடைத்திடாதே

வாங்கிய கடனை கொடுத்திடாதே

வங்கியில் பணத்தை வைத்திடாதே

அரசு வேலை செய்யாதே

அரசவையில் பங்கு பெறாதே

சொல்லிநான் கண்ணனை தொளைத்திடலானேன்

தேவ நிலையில் சேர்ந்திடா விடிலும்

மானுடந் தவறி மடிவுறா வண்ணம்

கண்ணனை நானும் காத்திட விரும்பித்

தீயெனக் கொதித்து சினமொழியுரைத்தும்

சிரித்துரைக் கூறியும் செள்ளென விழுந்தும்

கேலிகள் பேசிக் கிளரியும் இன்னும்

எத்தனை வகையிலோ என் வழிக்கவனைக்

கொணர்ந்திட முயன்றேன் கொள்பயனொன்றில்லை

கவனம் செலுத்தாதது கவனத்தை ஈர்த்ததனால்

கடும் கோபம் மேலிட கடுமொழி உரைத்தே

செள்ளன விழுந்து சொல் என உரைத்தேன்

கொள்ளென சிறித்தவன் கூறினான் ஒவ்வொன்றாய்

ஒரு நூற்று தொன்றூற்று எட்டில் ஒன்றிரண்டை பலவற்றை நான் விட்டுவிட்ட போதும்

ஒன்றும் விடாமல் ஒன்றொன்றாய் ஒப்பித்தான்

ஒன்றும் விடாமல் எண்ணினேன் இருநூற்றுக்கு இரண்டே குறைச்சல்

நன்றென்று கூறி நானும் கேட்டேன் எப்படி என்று

நாங்கள் நடந்து வந்த பாதையை

எங்கள் முன்னோர் கடந்து வந்த பாதையை

நீங்கள் படித்து வந்து சொன்னீர் பலவற்றை விட்டுவிட்டீர்

நாங்கள் பயண்படுத்தி பார்த்தவர்கள் - என்றே

நமுட்டுச் சிரிப்புடன் நயமாகத்தான் சொல்லிவிட்டான்

ஆனாலும் நான் நாணிவிட்டேன்

சட்டென மறைந்து விட்டான்

சடுதியில் ஏடொன்றை எடுத்து கொடுத்தான்

படித்துப் பார்த்தேன் பதறிவிட்டேன்

என்னவிருந்தது ஏட்டில்?

அனைத்துக் கட்சிக் குழுவுக்கு ஜாதிக கெல உறுமய முன் வைத்த யோசனைகளின்படி தமிழர்களுக்கு இந்த நாட்டில் நில உரித்து இல்லை அதனால் அவர்களுக்கு சுயாட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது

தமிழர்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினர் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்களுக்கு பிரஜா உரிமை உண்டு ஆனால் நில உரித்தோ சுயாட்சி உரிமையோ அவர்களுக்கு இல்லை, சிங்களவருக்கே உரித்தான ஒரே நாடு இது

- கெல உறுமயா (தேதி 24.07.2007 பத்திரிக்கை: உதயன்)

சொத்துடைமை இல்லையென்றதும்

பொதுவுடைமை அங்கே பூத்துவிட்டதாக

புள்ளறிவாளர்கள் சொல்லக்கூடும்

நல்லறிவாளர்கள் நம்ப மாட்டார்

நன்றி

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.