Jump to content

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

 1. Past hour
 2. மடையன் போயும் போயும் லாரியை திருடியுள்ளான்.
 3. அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டது By SETHU 01 FEB, 2023 | 02:55 PM அவுஸ்திரேலியாவில் 2 வாரங்களுக்கு மேல் காணாமல் போயிருந்த, ஆபத்தான கதிரியக்கப் பொருள் கொண்ட சிறிய கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். 8 மில்லிமீற்றர் நீளமும் 6 மில்லிமீற்றர் அகலமும் கொண்ட இச்சிறிய கொள்கலனில், சீசியம்-137 எனும் கதிரியக்கப் பொருள் இருந்ததாக மேற்கு அவுஸ்திரேலிய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்திருந்தது. சுரங்க நடவடிக்கைகளுக்காக இது பயன்படுத்துபட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. மேற்படி கொள்கலன் கதிரியக்கத்தினால் எரிகாயங்கள் அல்லது நோய்கள் ஏற்படலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்திலுள்ள சுரங்கப் பணிக்காக 1400 கிலோமீற்றர் தூரம் கொண்ட பயணத்தின்போது கடந்த 12 -16 ஆம் திகதிகளுக்கு இடையில் இக்கொள்கலன் காணாமல் போயுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கொள்கலனானது, லொறி ஒன்றிலிருந்து விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில் இக்கொள்கலன் வீதியோரமொன்றிலிருந்து 2 மீற்றர் தூரத்தில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர். இத்தேடுதல் நடவடிக்கைக்காக கதிரியக்கத்தை கண்டறியும் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. https://www.virakesari.lk/article/147177
 4. நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை முழு விவரம் - நேரலை பட மூலாதாரம்,ANI 1 பிப்ரவரி 2023, 04:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையை ஏற்றுக் கொண்டவர்கள், அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு பெறவும் முடிவும். எதிர்பார்க்கப்பட்டபடியே, தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதற்கான நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய முன்னுரிமை அடிப்படையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபேட்கள், நீர்வழி விமான தடங்கள் புத்துயிரூட்டப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் உருவாக்குவோம் என்ற தொலைநோக்கு அடிப்படையில் 3 நகரங்களில் சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் சால் மையம் உருவாக்கப்படும். ரயில்வேக்கு மூலதன செலவாக 2.40 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நகரங்கள், பேரூராட்சிகளில் கழிவறைத் தொட்டி, சாக்கடைகளை இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யும் நிலை உருவாக்கப்படும். மாநில அரசுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும். மத்திய அரசின் மூலதன முதலீடு 33 சதவீதம் உயர்ந்து, 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது நாட்டின் ஜி.டி.பி.யில் 3.3. சதவீதமாகும். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் அதிகரித்து ரூ.79,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 740 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஊராட்சிகள், வார்டுகள் வாரியாக நூலகம் உருவாக்க மாநில அரசுகளுக்கு ஊக்கம் தரப்படும். அந்த நூலகங்களை தேசிய டிஜிட்டல் நூலகத்துடன் இணைக்க தேவையான கட்டமைப்புகள் செய்யப்படும். குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நாடு முழுவதும் தேசிய டிஜிட்டல் நூலகம் உருவாக்கப்படும். அனைத்து தரப்பினர், மொழிகள், துறைகள், தொழில்நுட்ப சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் அது இருக்கும். 2014-க்கு பிறகு தொடங்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து 157 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்படும். சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு; மாநில அரசுகள், தனியாருடன் இணைந்து புதிய திட்டம் - இளைஞர்கள் தொழில் தொடங்க புதிய வாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும், வேளாண் கடன் வழங்குவதற்கான இலக்கு 20 லட்சம் கோடியாக அதிகரிப்பு வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க சிறப்பு வேளாண்மை நிதி உருவாக்கப்படும். "உச்சநிலையில் பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை" - இந்திய அரசின் பட்ஜெட் சவால்கள்31 ஜனவரி 2023 கடந்த பட்ஜெட்டில் அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றியதா?29 ஜனவரி 2023 அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு: நேசக்கரம் நீட்டும் அபுதாபி31 ஜனவரி 2023 மக்களவையில் லேப்டாப் உதவியுடன் பட்ஜெட் உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையாக முடித்ததும், பட்ஜெட் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பட்ஜெட் மொபைல் ஆப்பை (Budget Mobile app) செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் பட்ஜெட் உரையை முழுமையாக பெறலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 4-4.5 சதவிகிதம் இருந்த நிலையில், தற்போது 6.4 சதவிகிதமாக உள்ளது. அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, அதாவது ஏற்றுமதியில் இருந்து அரசாங்கம் ஈட்டும் வருவாய்க்கும் இறக்குமதியில் செலவழிக்கும் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம், மற்றொரு சவாலாக உள்ளது. பணப் பற்றாக்குறையை சிறப்பாக சமாளிக்க பட்ஜெட் அறிவிப்புகளைத் தாண்டி, தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. https://www.bbc.com/tamil/articles/c0x9p4p8294o
 5. தமிழ்த்தேசியம், தமிழரசு இந்த பெயர்களை இழக்கவோ அல்லது யாருக்கும் விட்டுகொடுக்கவோ விரும்பாமல் அதை வைத்து மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்கிறார்கள். அதனாற்தான் சுமந்திரன் விக்கினேஸ்வரனுக்கு சவால் விட்டார். "முடிந்தால் த. தே. கூட்டமைப்பை விட்டு வெளியேறி தேர்தலில் வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டட்டும்" என்றார். நின்றார் வென்றார். தற்போது கூட பங்காளிக்கட்சிகளை விரட்டிவிட்டு போட்ட தடை த.தே. கூட்டமைப்பின் தேர்தல் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்பதே. அதாவது தேசியப்பெயர், சின்னம் எல்லாம் தாங்கள் பாவித்து மக்களை முட்டாளாக்கி அதன்மூலம் வெற்றி பெற்று அதை இல்லாமல் அழித்து பேரினவாத கட்சியின் பிரதிநிதிகளை களமிறக்கி இறுதியில் பேரினவாதத்தின் கையில் ஒப்படைப்பது. தமிழரசுக்கட்சி இளைஞரை உசுப்பேத்தி அழித்து முடிந்தது, இருப்பவர்களையும் அடிமைகளாக விற்று விட்டு, அவர்கள் சிங்கள இனத்தோடு கலந்து அவர்களோடு வாழ்வது எமது அதிஷ்டம் என்று அறிக்கை விட்டு தப்பிவிடுவார்கள். இழப்பு, அடிமை வாழ்வு எல்லாம் இந்த போக்கத்ததுகளை நம்பியவர்களுக்கே. கொஞ்சம் பொறுங்கள் மக்களின் தீர்ப்பு கிடைக்கும்வரை! ஆனால் சுமந்திரன் போடுற ஆட்டதைப்பாத்தால் போன முறை தேர்தலில் நடந்த குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருக்கு. இப்பிடியொரு இளிச்சவாயன் சிங்களத்துக்கு கிடைக்குமா?
 6. அதானி குழுமத்துக்கு 'உயிர் கொடுக்கும்' அபுதாபி நிறுவனத்தின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அபுதாபி அரச குடும்பத்துடன் தொடர்புடைய இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் 3,260 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் 20,000 கோடி ரூபாய் ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபரில்(FPO) முதலீடு செய்துள்ளது. திங்கட்கிழமை பங்குச்சந்தை முடிவில், இந்த FPO பங்குகளில் 3% மட்டுமே வாங்கப்பட்டிருந்தன. ஆனால் இதற்குப் பிறகு அபுதாபி அரச குடும்பத்துடன் தொடர்புடைய இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது. அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு: நேசக்கரம் நீட்டும் அபுதாபி31 ஜனவரி 2023 வீழும் அதானி குழும பங்கில் மேலும் முதலீடு: எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ.யில் உள்ள மக்கள் பணத்துக்கு ஆபத்தா?28 ஜனவரி 2023 அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் - எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?30 ஜனவரி 2023 'அதானி குழுமத்தின் மீதான எங்கள் ஆர்வத்திற்கு காரணம் அதானி எண்டர்பிரைசஸின் பொருளாதார ஆரோக்கியத்தின் மீதுள்ள நம்பிக்கைதான். இந்த நிறுவனத்தில் நீண்ட கால வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சையத் பஸர் ஷுயேப் கூறினார். அதானி குழுமம் எல்லா தரப்பிலிருந்தும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS/AMIT DAVE ஹிண்டன்பர்க் அறிக்கை நஷ்டம் விளைவித்ததா? அமெரிக்க தடயவியல் நிதி நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் மீது நிதி முறைகேடுகள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் முன்வைத்தது. அதன்பிறகு அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. மூன்று வணிக நாட்களில் அதாவது ஜனவரி 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 29 சதவிகிதம் சரிவை பதிவு செய்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 5.6 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை மாலை இது தொடர்பாக 413 பக்க விளக்க அறிக்கையை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் என்று அது கூறியது. இருப்பினும் இதற்குப் பிறகும் அதானி குழுமங்களின் பங்குகள் திங்கள்கிழமை சரிந்து, அதன் சந்தை மூலதனத்தில் 1.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அபுதாபியின் IHC நிறுவனத்தின் முதலீட்டு அறிவிப்புக்குப் பிறகு வேறு சில குடும்ப நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன. துபாய் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள சில குடும்ப நிறுவனங்களும் அதானி குழுமத்தின் FPO இல் 9000 கோடி ரூபாய் முதலீடு செய்யக்கூடும் என்று இந்து பிசினஸ் லைன், செவ்வாயன்று தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES அதானி குழுமத்தில் ஐ.ஹெச்.சி. முதலீடு புதிதல்ல அபுதாபியின் அரச குடும்பத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு இந்தக்குழு, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி குழுமத்தின் பிற நிறுவனங்களில் இரண்டு பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் சகோதரர் ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் இந்த நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் அபுதாபியின் பங்குச் சந்தையின் வெற்றிப் படிக்கட்டுகளில் வேகமாக ஏறியுள்ளது. இந்த நிறுவனம் அபுதாபியின் பங்குச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிறுவனம் இந்த ஆண்டு வெளிநாடுகளில் தனது முதலீட்டை 70 சதவிகிதம் அதிகரிக்க முயற்சிக்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கை கூறுகிறது. வெளிநாட்டு முதலீடுகளை செய்யும் போது இந்த நிறுவனம், தூய்மையான எரிசக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த விரும்புகிறது. ஆனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்ததில் இருந்தே இந்த நிறுவனம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES 40 பணியாளர்களைக் கொண்ட நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிறுவனத்தில் நாற்பது பேர் மட்டுமே பணிபுரிந்தனர் என்று இந்த நிறுவனம் தொடர்பான ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனத்தின் பெயரை பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த நிறுவனம் மீன் வளர்ப்பில் இருந்து உணவு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகம் வரை செயல்பட்டு வந்தது என்று பைனான்சியல் டைம்ஸில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இப்போது அபுதாபியில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த குழுமத்தின் சந்தை மூலதனம் 240 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. சந்தை மூலதனத்தைப் பொருத்தவரை இந்த நிறுவனம், சர்வதேச நிறுவனங்களான சீமென்ஸ் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 42,000 சதவிகிதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கில் இந்த நிறுவனம் இப்போது செளதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. பட மூலாதாரம்,IHC படக்குறிப்பு, இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி வானளாவிய வெற்றியின் ரகசியம் என்ன? இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனியின் மகத்தான வெற்றிக்கான காரணம் புரியாத புதிர் தான். உலகின் பிற நாடுகளில் இந்த நிறுவனத்தின் பொருளாதார வெற்றியைப் பற்றி குறைவான தகவல்களே கிடைக்கின்றன. அதே நேரம் அபுதாபியின் பொருளாதார உலகத்துடன் தொடர்புடைய நபர்களிடமும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து அதிக தகவல்கள் இல்லை. இந்த நிறுவனம் எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தது என்பது யாருக்கும் தெரியாது என்று வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஒரு சர்வதேச வங்கியாளர், பைனான்சியல் டைம்ஸ் உடனான உரையாடலில் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சையத் பாஸர் ஷுயேப், இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தை ’சிறப்பானது’ என்று விவரிக்கிறார். "நாங்கள் எந்த விதமான டிவிடெண்டும் தருவதில்லை. 2020, 2021-ம் ஆண்டுகளில் கிடைத்த லாபம், திரும்ப முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு மாபெரும் நிறுவனத்தை உருவாக்க முயற்சித்து வருகிறோம்... உலக அளவில் பெரிய நிறுவனமாக மாற முயற்சிக்கிறோம்,"என்று அவர் கூறினார். இருப்பினும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் வணிகத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையே’மங்கலாகும் கோடு’ என்று சிலர் இந்த நிறுவனத்தை பார்க்கின்றனர். நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் இந்த மாபெரும் வளர்ச்சியைப் பற்றிய கவலைகள் இருக்கும் காரணத்தால் துபாய் அதிகாரிகள் தங்கள் பங்குச் சந்தையை ADX உடன் இணைக்கும் வாய்ப்பில் இருந்து பின்வாங்கத்தொடங்கியுள்ளனர் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c3g3xdlpg52o
 7. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டமும் வலுவடடைவதுபோல் தெரிகிறது. ஈழத் தமிழரில் சில பழமைவாதிகள் இந்துத்துவாவை ஒட்டிய மனநிலையில் உள்ளனர். 🙂
 8. மார்ச் 09 இல் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த வர்த்தமானி வெளியாகியது! By DIGITAL DESK 5 01 FEB, 2023 | 12:46 PM (இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் செவ்வாய்க்கிழமை (31) இரவு வெளியாகியுள்ளது. 24 தேர்தல் நிர்வாக மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானிகள் வெளியாகியுள்ளன.உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 38(1) இ உபபிரிவின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி காலை 07 மணிமுதல் மாலை 04 மணி வரை வாக்கெடுப்பு இடம்பெறும். அங்கிகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேட்சைக் குழுக்கள் ஊடாக 80,720 வேட்பாளர்கள் 339 உள்ளூராட்சிமன்றளில் போட்டியிடவுள்ளனர். காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபை மற்றும் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைகளை தவிர்த்து நாடளாவிய ரீதியில் உள்ள 339 உள்ளூர் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. எல்பிடிய பிரதேச சபை 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்றது.இருப்பினும் காலி மாவட்டம் எல்பிடிய அதிகார சபைக்கான தேர்தல் அப்போது இடம்பெறவில்லை.2019.10.10 ஆம் திகதி எல்பிடிய பிரதேச சபைத் தேர்தல் இடம்பெற்றது. 2022.03.20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டதை தொடர்ந்து இதற்கமைய ஏனைய உள்ளூராட்சிமன்றங்களை காட்டிலும் எல்பிடிய பிரதேச சபையின் பதவிகாலம் மேலதிகமாக நீடிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபையை தவிர்த்து ஏனைய உள்ளூராட்சிமன்றங்களுக்கான வாக்கெடுப்பை கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு 2022.12.29 தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்து நடவடிக்கைகளை முன்னெடுத்தது. கல்முனை மாநகர சபை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கல்முனை மாநகர சபையின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு கடந்த மாதம் 19 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை நீடிக்கப்பட்டது.கல்முனை விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/147160
 9. கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலை எந்த அளவுக்குப் பாதிக்கும்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலை பாதிக்கும்? முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை மெரீனா கடற்கரையில் அவரது நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. 81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடலுக்குள் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக 8,551.13 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்படவிருக்கிறது. அரசு தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி, இந்த நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்காற்று மண்டலம் (CRZ IA), CRZ II, CRZ IV-A ஆகிய பகுதிகளுக்குள் வருகிறது. இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையும் இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011ன் படி பகுதி IV(A)ன் கீழ் வருகிறது. IV (A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு புதிதாக எந்தக் கட்டுமானத்தையும் கட்ட முடியாது. ஆனால், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த விதிமுறையில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. மும்பை கடற்கரையை ஒட்டி சத்ரபதி சிவாஜி சிலையை அமைப்பதற்காக செய்யப்பட்ட அந்தத் திருத்தத்தின்படி, CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் நினைவிடங்கள்/நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்தத் திருத்தத்தின் அடிப்படையில்தான், தற்போது பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல்கள் ஆர்வலர்கள் எதிர்ப்பு ஆனால், இந்தத் திட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சில மீன்பிடி சங்கங்களும் எதிர்க்கின்றன. இந்தத் திட்டம் தொடர்பாக ஊரூர்குப்பம் மீன் பிடிப்போர் கூட்டுறவு சங்கம் மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் அதற்கான காரணங்களையும் முன்வைத்துள்ளது. "கடலிலும், கடற்கரையிலும் திட்டங்களை கொண்டுவரும் போது அந்தந்த மாவட்டங்களில் மீனவர்களுக்கு பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதனை அறிந்து கொள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2011 பத்தி 6(c)ல் மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை குழுமத்தில் (DCZMA) மூன்று மீனவ பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஆனால் 21 வருடங்கள் ஆகியும் DCZMAல் மீனவ பிரதிநிதிகள் ஒருவர் கூட கிடையாது. மீனவ பிரதிநிதிகள் இல்லாமலேயே கடலிலும், கடற்கரையிலும் அரசால் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களின் மீன்பிடி தகவல்களை அரசு முறையாக கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்யாமல் கடல் நடுவே கலைஞர் பேனா நினைவுச்சின்ன திட்டத்தை அமைத்தால் கரைத்தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மற்றும் நடுக்கடலை நம்பியுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் இந்த திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், மீனவர்களின் மீன்பிடி இடங்களை சட்டத்தில் கூறியுள்ள படி TNSCZMP ல் பதிவு செய்ய வேண்டும்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. "பேனா சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்" - வைரலாகும் சீமானின் கருத்து31 ஜனவரி 2023 பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்ட உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன?31 ஜனவரி 2023 ஆந்திராவில் அதிசய கிராமம்: டி.வி., செல்போன், மின்சாரமே வேண்டாம் என தவிர்க்கும் மக்கள்31 ஜனவரி 2023 அதேபோல, அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசியத் தலைவரான ஆண்டன் கோம்சும் இது தொடர்பாக துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார். "சமீபத்தில் தேதிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் தமிழக கடற்கரையில் 422 கி.மீ. அளவுக்கு கடல் அரிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியாவில் கடல் அரிப்பு அதிகமுள்ள நான்காவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. 1990 முதல் 2018வரை 1802 ஹெக்டேர் நிலம் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலரிப்பைத் தடுக்கும் கட்டுமானங்கள் நூற்றுக்கணக்கில் செய்தும் பலனில்லை. ஆகவே நினைவுச் சின்னத்தின் நிலைப்புத் தன்மை, கடலரிப்பு, CRZ அறிவிப்பாணை, மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை மனதில் கொண்டு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும்" என்கிறார் ஆண்டன் கோம்ஸ். பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. "இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை காணமுடிகிறது. திட்ட அமைவிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறவில்லை என சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தென் சென்னையைச் சேர்ந்த 14 கிராமங்கள், வட சென்னையைச் சேர்ந்த 20 கிராமங்கள் என 34 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அப்பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பல ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பங்குனி ஆமைகள் (Olive Ridley Turtle) திட்ட அமைவிடத்தில் தென்படுவதாக சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் 175வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அழிந்து வரும் உயிரினமாக IUCN அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பங்குனி ஆமைகளின் வாழிடமாகவும் முட்டையிடும் இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளதால். இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் பங்குனி ஆமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. திட்ட அமைவிடத்தில் இருந்து 130மீ தூரத்தில் கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரப் பகுதி அமைந்துள்ளது. பொதுவாக இந்த முகத்துவாரப் பகுதியில தான் மீன்கள் அதிகம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதனால், கடலின் உயிர் பன்மையம் செழிப்பாக வைத்திருக்க உதவும் இப்பகுதியின் ஆரோக்கியம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரத்தின் அருகில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் அப்குதியின் உயிர் பன்மையம் கடுமையாக பாதிக்கப்படும். இத்திட்டத்திற்காக கடலில் ஆழ்துளைகள் போடப்பட்டு பிரமாண்ட தூண்கள் அமைக்கப்படவுள்ளன. இது மீட்டெடுக்க முடியாத நிரந்தர சூழலியல் பாதிப்புகளுக்கு வழிவகை செய்து விடும். ஏற்கெனவே துறைமுகம் கட்டியதன் விளைவாக ஆண்டிற்கு 20 மீட்டர் அளவிற்கான கடல் அரிப்பை வட சென்னை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டால் மெரினா கடற்கரை உட்பட அருகாமையில் உள்ள பல மீனவ கிராமங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும்" என அந்த அமைப்பு கூறியிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான ஆய்வே முறைப்படி செய்யப்படவில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன். "திட்ட ஆய்வை 2021 மே - ஜூலை மாதங்களில் செய்ததாகச் சொல்கிறார்கள். இந்த அரசே 2021 மே மாதம்தான் பதவியேற்றது. உடனே இந்த ஆய்வை நடத்தினார்களா?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர். "ஏற்கெனவே சென்னைத் துறைமுகத்தால், அதற்கு வடக்க உள்ள காசிமேட்டிற்கு அப்பால் துவங்கி திருவள்ளூர் மாவட்டம் நெட்டுக்குப்பம் வரை பல கிராமங்கள் கடலுக்குள் சென்றுவிட்டன. கிட்டத்தட்ட ஒன்றரை - இரண்டு கி.மீ.க்கு கடல் உள்ளே வந்துவிட்டது. பல பட்டா நிலங்கள் தற்போது கடலுக்குள் இருக்கின்றன. ஆனால், இந்தத் திட்டத்தில் பாலம் போலத்தான் அமைப்பதால் நீரோட்டம் பாதிக்கப்படாது என நம்புகிறோம். அந்தப் பகுதியில் மீன் பிடிக்க அனுமதிப்போம் என்கிறார்கள். ஆனால், அதைச் சட்டப்படி எங்களுக்குச் உறுதி செய்து தர வேண்டும். கடலும் கூவம் ஆறும் கலக்கும் இடத்தில் இந்தக் கட்டுமானம் நடக்கவிருக்கிறது. அது இறால் மீன்கள் அதிகமுள்ள பகுதி. ஆகவே கட்டுமான பணிகள் நடக்கும் நேரத்தில் மீனவர்களுக்கான வாழ்வாதாரத்தை அரசு உறுதிசெய்ய வேண்டும்" என பிபிசியிடம் தெரிவித்தார் அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ். பொதுவாக, இதுபோன்ற திட்டங்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. மேலும் பதிவுசெய்யப்படும் ஒவ்வொரு எதிர்ப்பிற்குமான பதிலை, திட்டத்தை செயல்படுத்துவோர் தர வேண்டும். செவ்வாய்க்கிழமையன்று நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சீமான் மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க அளவில் எதிர்ப்புக் கருத்துகள், ஆட்சேபணைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு மிக முனைப்பாக இருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cxwxly7y70vo
 10. @satan@குமாரசாமி இப்போ நீங்கள் இலங்கையில் இருந்தால் யாருக்கு வாக்கு போடுவீர்கள்? உள்ளதில் ஓரளவு தமிழ் தேசிய கொள்கைகை முன் எடுப்போர் என நீங்கள் நினைக்கும், கஜேஸ், விக்கி அல்லது dTNA? சரிதானே? மக்களின் நிலையும் இப்படித்தான். தமிழ் தேசியத்தை சுமக்க ஒரு குதிரையும் இல்லை என்ற போது, அதை கழுதைகளை வைத்தாவது சுமக்ககலாமா என பார்கிறார்கள். தொடர்ந்து தமிழரசுக்கு போடுவோர் கூட ஏனைய கழுதைகளை விட அந்த கழுதைகள் பராவாயில்லை என நினைத்தே போடுவார்கள். நாளைக்கே ஒரு குதிரை வருமாயின் எல்லா கழுதைகளையும் துரத்திவிட்டு குதிரைக்கு போடுவார்கள். ஆனால் நோக்கு ஒன்றுதான் தமிழ் தேசியம் என்ற பொதியை சுமத்தல். குதிரை, கழுதைகளின் பெயர், நிறம், யாரோடு சினை பிடித்ததன என்பதெல்லாம் கருது பொருட்கள் அல்ல. இதுவரை இதுதான் எம் மக்களின் அரசியல் போக்கு. இனி மாறலாம். திரைபடம், சாதி, சமயம் என பலதில் இந்தியாவை கொப்பி அடிக்கும் மக்கள் - இனி அரசியலிலும் அதே பாணியை எடுக்கலாம்.
 11. மானிப்பாயில் லொறியை திருடியவர் கைது By NANTHINI 01 FEB, 2023 | 12:31 PM (எம்.வை.எம்.சியாம்) மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் லொறி சாரதியை அச்சுறுத்தி, லொறியை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இச்சம்பவத்தோடு தொடர்புடைய நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். லொறி சாரதி லொறியை நிறுத்தி தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும்போது அவ்விடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் சாரதியை பயமுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முறைப்பாட்டின் பேரில் திருடப்பட்ட லொறியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரை மானிப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் 33 வயதுடைய ஆனைக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். மேலும், சந்தேக நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், மானிப்பாய் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/147173
 12. எங்கே மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்! நீங்கள் திறந்த மனதுடன் பங்காளிக்கட்சிகளுடன் உரையாடினீர்களா என்று. அவர்களை அழைத்து நான்கு சுவருக்குள் உரையாடி, ஆலோசனை வழங்கி, வழிநடத்தி சென்றிருந்தால் இவ்வளவு விபரீதம் நடந்திருக்குமா? குருட்டு வழிகாட்டிக்கு பின்னால தலையாட்டும் பொம்மைகள், இப்போ எல்லா பக்கமும் கண்டனங்கள் எழுவதால் பூசி மெழுகுகிறீர்கள். இப்போ பொது வெளியில் சொல்வதை, அப்போது முடிவெடுத்தவுடன் ஏன் அவர்களுடன் உரையாடவில்லை? எல்லாம் இரகசியமாக வைத்திருந்து, அதிகாரமாய், எந்தவொரு விளக்கமும் இல்லாமல் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம், நீங்கள் தனித்தோ சேர்ந்தோ போட்டியிடலாம். த. தே. கூட்டமைப்பின் சின்னத்தை பாவிக்கக்கூடாது என மொட்டையாய் அதிகாரம் பண்ணி விரட்டிவிட்டு சோடிக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தலைவர்கள் என்று உங்களை நீங்களே அழைத்துக்கொள்ளுங்கள் ஈனப்பிறவிகள்.
 13. நீரில் மூழ்கிய உலகில் இருந்து வெளியான பாடலும் வாக்குமூலங்களும் பட மூலாதாரம்,GIDEON MENDEL 31 ஜனவரி 2023 வெள்ளம் வந்து ஒரு மாதத்திற்குப் பிறகும், பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்ட புகைப்பட கலைஞர் கிதியோன் மெண்டல் அவற்றை படமெடுத்து காட்சிப்படுத்தியுள்ளார். நைஜீரியாவின் பயேல்சா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நீரில் மூழ்கிய வீடுகளுக்கு மத்தியில் நிற்கும் மக்களின் புகைப்படங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிரொலிக்கிறது. பூஞ்சைத் தொற்றால் மனிதர்களை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா?30 ஜனவரி 2023 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண்: இவ்வளவு பால் சுரக்குமா?30 ஜனவரி 2023 50,000 ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம்29 ஜனவரி 2023 "தண்ணீர் மெதுவாக வடிவதால், என்னை மக்கள் அவர்களின் வீடுகளுக்கு படகில் அழைத்துச் சென்றனர்," என்கிறார் கிதியோன் மெண்டல். "இது நான் பார்க்கும் மூன்றாவது வெள்ளம். ஆனால் பார்த்ததில் மிகவும் மோசமானது" என்று ஒக்பியா நகரைச் சேர்ந்த கிஃப்ட் இகுரு கூறினார். "என் உடமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. எங்களுக்கு தங்குமிடம் இல்லாததால், சாலையோரம் படுத்து தூங்குகிறோம்." இதுபோன்ற கடினமான சூழ்நிலையிலும் மக்கள் என்னை வரவேற்கின்றனர். தங்களின் அனுபவத்தை ஆவனப்படுத்த விரும்பி என்னை தங்களின் வீடுகளுக்கு படமெடுக்க அழைத்தனர், என்றார் கிதியோன். Play video, "Singing from a drowning world in Nigeria", கால அளவு 1,55 01:55 காணொளிக் குறிப்பு, நைஜீரியா வெள்ளம்: மூழ்கிய உலகின் ஒப்புதல் வாக்குமூலம் ஷிப்ரா திம்பிரி ஒட்டுகே படமெடுக்கும் போது கேமராவை மிகவும் கண்ணியமாக எதிர்கொண்டு, இந்த தருணத்தை ஆவணப்படுத்த உதவினார். அவர் தனது வீட்டிற்கு வெளியே நின்றுவாறு சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் தன்னியல்பாக ஒரு பாடலை பாடினார். அந்த பாடலில் சோகம் மட்டுமல்ல, மீண்டு வருவதற்கான மனவுறுதியும் தெரிந்தது. ஒக்பியாவில் வாழும் பலரும் அவர்களின் சிறிய நிலங்களில் பயிர்களை பயிரிட்டுள்ளனர். "எங்கள் பண்ணையில் தண்ணீர் தலைக்கு மேல் இருந்தது, எனவே எங்கள் மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்ய நாங்கள் நீருக்கடியில் மூழ்கி ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்தது," என்று ஒட்டுகே கூறினார். "இது எங்கள் சமூகத்திற்கு பெரும் அழிவையும் பட்டினியையும் கொண்டு வந்திருக்கிறது. நான் ஒரு சமூகவியல் மாணவன், வெள்ளத்தால் எனது கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. நான் இதுவரை கற்றுக் கொண்ட எனது பாடப்புத்தகங்கள், கையேடுகள், நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை." பட மூலாதாரம்,GIDEON MENDEL பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் விடுதியான டோர்காஸ் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. "இந்த பயங்கரமான சூழ்நிலையில் எங்கள் யாருக்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை", என்று ஜாய் கிறிஸ்டியன் கூறினார். பட மூலாதாரம்,GIDEON MENDEL "இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு நாங்கள் பெரும் மழை பெய்துள்ளது, ஆனால் கேமரூனில் உள்ள அணை திறக்கப்பட்ட பின்பு தான் இந்த வெள்ளம் வந்தது என்பதை நாங்கள் அறிவோம்" என்று எருபாய் அசே ஒட்டுபா கூறினார். "2012ஆம் ஆண்டு வந்த வெள்ளம் மிக மோசமானது என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் இம்முறை அதை விட மோசமாக இருந்தது. தூங்குவதற்கு இடமில்லை, தண்ணீர் தேங்கி இருப்பதால் நோய்த் தொற்றும் ஏற்படுகிறது. குறிப்பாக மலேரியா கொசுக்கள் இங்குள்ளது. "முழுமையடையாத கட்டிடத்தின் மேல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இந்த அசுத்தமான தண்ணீரை துவைக்கவும், குடிக்கவும் பயன்படுத்த வேண்டியுள்ளது." பட மூலாதாரம்,GIDEON MENDEL இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று ஒட்டுபா கூறினார். "வெள்ள நீர் எங்கள் பண்ணையில் சேமித்து வைத்து இருந்த உணவுப் பொருட்களை வெள்ள நீர் சேதமாக்கியது. எனவே உணவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய எங்கள் வீட்டின் அஸ்திவாரமும் சேதமடைந்துள்ளது. "ஆனால் எங்கள் சமூகத்தில் ஒருவருக்கொருவரை ஆதரிக்கிறோம். உணவு இருக்கும்போது அதை பகிர்ந்து கொள்கிறோம். நான் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளேன், ஆனால் நான் தற்போது வேலையில் இல்லை. நான் எங்கள் குடும்ப நிலத்தில் வேலை செய்கிறேன்." பட மூலாதாரம்,GIDEON MENDEL "வெள்ளம் வரப்போவதாக எங்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆனால் அதன் தாக்கம் இந்த அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. இந்த பகுதியில் வெள்ளம் அரிதானது," என்று விவசாயியான பிரின்ஸ் ஒகியாசா லூம் ஒட்டுகே கூறினார். "வெள்ளம் திடீரென்று வந்தது. தண்ணீரரின் வேகம் அதிகமாக இருந்ததால் தப்பிக்க வழியில்லாமல் போனது. தண்ணீரில் மூழ்கி பயிர்களை காப்பாற்றக்கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை." "இங்கே எங்களின் முக்கிய பயிர் வாழை. நடவுக்காக எங்களுக்கு கன்றுகள் தேவை. ஆனால் அவை அனைத்தும் வெள்ள நீரில் அழுகிப் போயிருக்கும்" என்றார். பட மூலாதாரம்,GIDEON MENDEL நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் பேரிடர் நிவாரண அமைப்பு (Ocha) தெரிவித்துள்ளது. 600க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 15 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது நாடு முழுவதும் வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளை பெருமளவில் சேதப்படுத்தி வாழ்வாதாரங்களை அழித்துள்ளது. "முதன்மை உணவுகளான மரவள்ளிக்கிழங்கு, அரிசி மற்றும் வாழை போன்ற பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நைஜீரியா முழுவதும் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து நெருக்கடி இன்னும் மோசமாகும் அபாயம் உள்ளது," என்று ஓச்சாவின் மட்டியாஸ் ஷ்மலே கூறினார். பட மூலாதாரம்,GIDEON MENDEL "இங்கு வாழ்வது எளிதாக இல்லை. நாங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தஞ்சம் புகுந்து வருகிறோம். நாங்கள் இப்போது முழுமையடையாத கட்டிடத்தின் மாடியில் வசிக்கிறோம்," என்று பள்ளி மாணவரான இராரோ ராபர்ட் ஒட்டுபா கூறினார். "எங்களின் உடமைகள் அனைத்தையும் இழந்துவிட்டோம். ஆனால் எனது குழந்தைகளின் பள்ளி புத்தகங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியை பார்த்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்," என்று அவரது தாயார் எடிகிராரு டொனால்ட் கூறினார். "எங்கள் பண்ணையில் இருந்த பயிர்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன. நான் பிழைக்க எந்த தொழிலும் செய்ய முடியாததால், இப்போது கடுமையாக கஷ்டப்படுகிறோம்." பட மூலாதாரம்,GIDEON MENDEL இது ஒக்பியாவில் உள்ள ஒரு தேவாலயத்தின் வெளிப்புறப்பகுதி. வெள்ள நீர் எவ்வளவு மெதுவாக வடிகிறது என்பதைக் காட்டுகிறது. "2012 ஆம் ஆண்டு நான் சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட வெள்ளம் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அது இதைப் போல மோசமாக இல்லை. இது இவ்வளவு பெரியதாக இருக்கும் என்று எங்கள் சமூகத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை, "என்று ஒட்டுபா கூறினார். பட மூலாதாரம்,GIDEON MENDEL அருகிலுள்ள யெனகோவா நகரைச் சேர்ந்த விவசாயியான ஒருபோ ஓரோ டோம்பியாவுக்கு, மரவள்ளிக் கிழங்கு தண்டுகளை இழப்பது மிக மோசமான அம்சமாகும். "இது எனக்கு பல வழிகளில் பேரழிவை ஏற்படுத்தி மன அழுத்தத்திற்கு காரணமாகி இருக்கிறது." "விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன, எனவே அனைத்து தண்டுகளும் அழுகிவிட்டன. அதனால் அடுத்த ஆண்டும் விளைச்சல் இருக்காது," என்றார். பட மூலாதாரம்,GIDEON MENDEL "இந்த வெள்ளத்திற்கு பல விஷயங்கள் காரணமாக இருந்தன என்பதை நாங்கள் அறிவோம். கேமரூனில் எல்லையில் இருக்கும் அணையை திறந்து விட்டதும், இதை தடுக்கும் வகையில் தடுப்பணை ஒன்றை எங்கள் அரசாங்கம் கட்டத்தவறியதும் தான் இதற்கு காரணம்," என்று அவர் கூறினார். "காலநிலை மாற்றத்தால் அசாதாரண மழை பெய்து, அணை நிரம்பி வழிந்தது என்று நான் நம்புகிறேன். என்னிடம் ஒரு படகு இருப்பதால் குறைந்தபட்சம் என்னால் என் வீட்டிற்குத் திரும்ப முடிகிறது." பட மூலாதாரம்,GIDEON MENDEL யெனகோவாவில் வசிக்கும் ஃபிடெலியா ஷெட்ராக், "நிலைமை பயங்கர மோசமாக உள்ளது. நான் மீன்களை வளர்த்து பிழைப்பு நடத்துகிறேன். என்னுடைய இரண்டு மீன்குட்டைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. அதில் நான் என்னுடைய மீன்கள் அனைத்தையும் இழந்துவிட்டேன்," என்கிறார். பட மூலாதாரம்,GIDEON MENDEL வெள்ளத்தில் வீடுகளை இழந்த பலரும் அடைக்கலம் தேடி வருகின்றனர். இது டோர்காஸ் அபார்ட்மெண்ட், இதன் மேல் தளங்கள் மட்டுமே இப்போது பயன்படுத்தும் நிலையில் இருக்கின்றன. "ஒருவர் எங்களுக்கு தங்குவதற்கு தனது இடத்தைக் கொடுத்தார், ஆனால் இப்போது அவர் எங்களை வெளியேறச் சொல்லி இருக்கிறார், எனவே நாங்கள் இப்போது சாலையோரத்தில் தங்கியுள்ளோம்," என்று ஒக்பியாவில் உள்ள அருமான் அசே கூறினார். பட மூலாதாரம்,GIDEON MENDEL "சில வெள்ள நிவாரணப் பொருட்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன, ஆனால் இவை போதுமானதாக இல்லை" என்று கிறிஸ்டியன் கூறினார். "நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் சமூகத்திற்கு ஒரு மூட்டை அரிசியும், பயறும் எப்படி போதுமானதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். எங்களுக்கு ஒரு கப் அரிசியும், பயறும் மட்டுமே கிடைத்தது. பட மூலாதாரம்,GIDEON MENDEL விவசாயியான ஜேனட் ஒட்டுகே, ஒக்பியாவில் உள்ள தனது சகோதரரின் வீட்டில் வசிக்கிறார். "நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் அந்த சிறிய அறையில் ஏழு பேர் தூங்குகிறோம்." "நான் எனது மரவள்ளி தண்டுகள் அனைத்தையும் இழந்து விட்டேன். எனவே நாங்கள் அடுத்த ஆண்டு நடவு செய்ய அவற்றை புதிதாக வாங்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு தண்டும் 1,000 நைராவுக்கு(இந்திய மதிப்பில் ரூபாய் 171) வரை விற்கப்படுகிறது, இது எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. "விவசாயத்தைத் தொடரவும், சேதமடைந்த சொத்துக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்." https://www.bbc.com/tamil/articles/cd179klw35wo
 14. மக்கள் எதை எதிர்பார்த்து வாக்கு போட்டார்கள் என்பது வேறு சாத்ஸ். அதை இந்த கட்சிகள் நிறைவேற்றவில்லை என்பது வேறு. 77-87 கூட்டணிக்கு வாக்கு போட்டார்கள். 77 இல் மக்கள் இவர்கள் சொன்னதை செய்வார்கள் என பூராணமாக நம்பினார்கள் (சொல்வதை பார்த்து வாக்கு போடல்). 83 இல் ஜப்பான் ஜீப் ஓடியது, 87 இல் அமிர்தலிங்கம் இறப்பர் செல் அடித்ததோடு அந்த நம்பிக்கை முற்றாக போய்விட புறம் தள்ளினார்கள் (செயலை பார்த்து வாக்கு போடுவது). இதேதான் த.தே.கூ/ தமிழரசுக்கு இப்போ நடக்கிறது. மக்கள் இன்று வரைக்கும் இருக்கும் அமைபுக்களில் தமிழ் தேசிய கொள்கையை ஒப்பீட்டளவில் முன் எடுத்து செல்ல கூடியோர் யார் என பார்த்தே அவர்களை தெரிகிறார்கள். அதனால்தான் கூட்டமைப்பை நம்பாதவகள் கஜேஸ், விக்கி என தாவினார்கள்: ஆனால் தெரியப்படும் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், தம் சுயலாப அரசியலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாற்றீடாக வருவோரும் தமக்குள் ஈகோ சண்டை பிடிக்கும், சுயநலமிகளாகவே உளர். வெறுத்து போன மக்கள் ஒரு தொகுதியினர் சிங்கள கட்சிகளுக்கு போடுகிறார்கள்.
 15. உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவிப்பு By SETHU 01 FEB, 2023 | 12:16 PM உக்ரேனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவது குறித்து தான் சிந்திப்பதாகவும் உக்ரேன் விவகாரத்தில் ஒரு மத்தியஸ்தராக செயற்பட விரும்புவதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளார். ரஷ்யாவுடன் இஸ்ரேல் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் அயல்நாடான சிரியாவின் வான் பரப்பை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் ரஷ்யா கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு நெத்தன்யாஹு நேற்று அளித்த செவ்வியொன்றில், ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட அமெரிக்கத் தொழில்நுட்பத்துடனான அயர்ன்டோம் வான் பாதுகாப்பு பொறிமுறை போன்றவற்றை உக்ரேனுக்கு இஸ்ரேல் வழங்குமா என கேட்கப்பட்டது. அப்போது, நிச்சயமாக நாம் இதை ஆராய்கிறோம்' என நெத்தன்யாஹு பதிலளித்தார். இஸ்ரேலில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி ஆர்டிலெறிகளை யுக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக நெத்தன்யாஹு கூறினார். அதேவேளை, யுக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படும், ஈரானினால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தான் இங்கு பட்டியலிடப் போவதில்லை எனவும் அவர் கூறினார். குறைந்த விலை ஆளற்ற விமானங்களை, உக்ரேன் மீதான படையெடுப்புக்காக ரஷ்யாவுக்கு ஈரான் விற்பனை செய்ததாக யுக்ரைனுக்கும் மேற்குலக நாடுகளும் கூறுகின்றன. ஆனால், இதை ஈரான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னர், உத்தியோகபூர்வமற்ற வகையில் மத்தியஸ்தர் பாத்திரம் வகிக்குமாறு தான் கோரப்பட்டதாகவும், ஆனால், அப்போது தான் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்ததால் அதை தன்னால் செய்ய முடியவில்லை எனவும் எனவும் நெத்தன்யாஹு கூறினார். எனினும், சம்பந்தப்பட்ட தரப்புகளும் அமெரிக்காவும் கோரினால் அதை தான் ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/147172 @வாலி @வாலி
 16. பதில் ஜனாதிபதியை நியமித்துச் செல்லும் அவசியம் அவருக்கு இருக்கவில்லை காரணம் புதிய ஜனாதிபதி, அமைச்சரவையை எதிர்பார்த்தே தாக்குதல் நடக்கும்வேளை நாட்டில் தான் இருக்கக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே திட்டம் போட்டு வெளியேறினார். அரசாங்கத்தில் உள்ள பலருக்கு தாக்குதல் நடத்தப்பட இருந்தது முன்பு தெரிந்தே இருந்தது, கொல்லப்படுவது தமிழர் உயிர்களே, யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை பத்தோடு பதினொன்றாக போகட்டுமேன் என்று எண்ணியிருப்பார். நஷ்டஈடு அறிவிக்கும்வரை இறந்த மக்களுக்காக மனம் வருந்தவில்லை, மன்னிப்பு கேட்க மனம் வரவில்லை. அவர் கொடுத்த விளக்கம் அவரது தெனாவட்டை நிரூபிக்குது. அதாவது தமிழர் கொல்லப்பட்டால் அதற்கு யாரும் தண்டகப்படமாட்டார்கள் என்பது இந்த நாட்டில் எழுதப்படாத சட்டம். அப்பாவிகளை பலிகொடுத்து பெற்ற பதவி பாதியிலே இழந்து பரிதவிக்கிறார் ஒருவர், அடுத்தது இவர் அனுபவியாமல் போகார்.
 17. Today
 18. இந்துத்துவம் ஏன் அஹிம்சையைக் கொன்றது? ராஜன் குறை கிருஷ்ணன் காந்தி, 1948 ஜனவரி 30 அன்று கொலையுண்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் சமயத்தில் முன் எப்போதையும்விட அந்த நிகழ்வு நம் சிந்தனையைத் தூண்டுகிறது. நிறைய கூட்டங்கள் நடக்கின்றன. கட்டுரைகள் எழுதப்படுகின்றன. குறிப்பாக அவர் கொலைக்கு நேரடி காரணமான இந்துத்துவக் கருத்தியல், அதாவது இந்து ராஷ்டிரம் / இந்து அடையாளவாத தேசம் என்ற கருத்தியல் இந்திய அரசியலில் முதன்மை பெற முயலும் நேரத்தில், அவர் கொலை அதிக முக்கியத்துவம் பெறுவதும், அனைவரையும் சிந்திக்க வைப்பதிலும் வியப்பில்லை. நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் காந்தியைக் கொன்ற கோட்சேவின் கருத்தியலான இந்து ராஷ்டிரம் என்ற இந்து அடையாளவாத தேசியம் மட்டும் ஏன் காந்தி கொல்லப்பட்டே ஆக வேண்டிய எதிரி என்று நினைத்தது? ஏன் கோரக்பூர் மடாதிபதியும், இந்து மகாசபை தலைவர்களில் முக்கியமானவருமான திக்விஜய் நாத் காந்தி கொல்லப்பட வேண்டும் என்று அவர் கொலைக்கு மூன்று தினங்களுக்கு முன்பு 1948 ஜனவரி 27ஆம் தேதி தில்லி கனாட் பிளேஸில் நடந்த பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார்? கொலை நடந்த பின் கைதுசெய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்தார்? அப்படிக் கொல்ல நினைக்க இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக் கலவரங்களோ, காந்தி முஸ்லீம் ஆதரவளராகக் கருதப்பட்டதோ, பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று காந்தி சொன்னதோ மட்டும் காரணமல்ல. அவை சில உடனடிக் காரணங்கள். அதன் பின்னால் இயங்கிய தத்துவார்த்த முரண்பாடு ஆழமானது. காந்தியுடன் முரண்பட்ட பிற தத்துவங்களான பொதுவுடமைத் தத்துவமோ, பெரியாரின் திராவிடக் கருத்தியலோ, அம்பேத்கரின் தலித்தியமோ காந்தியைக் கொல்லுமளவு வெறுக்கவில்லையே? அவருடன் முரண்பட்டபோதும், அவருடைய விழுமியங்களை முழுவதும் மறுக்கவில்லையே? ராமனையும், கிருஷ்ணனையும் (கீதை) உயர் விழுமியங்களின் உருவகமாகக் கொண்ட காந்தியை ஏன் இந்து அடையாளவாதம் கொன்றது? இந்த கேள்விக்கு விடை தேடுவது முன்னெப்போதையும்விட இன்றைக்கு அவசரமானது. விழுமியங்களும் நடைமுறைகளும் காந்தி வாழ்வியல் நடைமுறையில் தான் சந்தித்த எல்லா முரண்களுக்கும் விழுமியங்களையே தீர்வாக முன்வைத்தார். நடைமுறை முரண்களை அந்த தளத்திலேயே எதிர்கொண்டு தீர்க்க அவர் முயலவில்லை. ஆனால், விழுமியங்கள் குறித்த தன் எண்ணங்களை எழுத்திலும், செயலிலும் தீவிரமாக வெளிப்படுத்தினார். காந்தியால் தன் கருத்துக்களை நோக்கி பெரும்பாலானவர்களை, முக்கியமாக எளிய மக்களை ஈர்க்க முடிந்தது. இந்தியாவின் தன்னிகரற்ற வெகுஜனத் தலைவரானார். வெகுமக்கள் அவரை அவதார புருஷராக, நடமாடும் தெய்வமாக, மகாத்மாவாக கருதினார்கள். அதனால் இந்திய விடுதலை இயக்கத்தின் தனிப்பெரும் ஆற்றலாக அவர் உருவெடுத்தார். இருப்பினும் முரண்களை எதிர்கொள்வதில் சமூக இயக்கத்தில் விழுமியங்களுக்கும், நடைமுறைகளுக்குமான இடைவெளி தொடரவே செய்தது. உதாரணமாக காந்தி, முதலீட்டியத்தின் உபரி திரட்சிக்கும் (accumulation), தொழிலாளர் நலனுக்குமான முரண்பாட்டினை வர்க்க புரட்சி மூலமாக தீர்க்க வேண்டும் என்பதை ஏற்கவில்லை. மாறாக, எளிய மக்களின் பொருளாதார தன்னிறைவான வாழ்க்கை என்ற விழுமியத்தை முன்வைத்தார். உற்பத்தி, நுகர்வு பெருக்கத்தை மறுதலித்தார். ஒரு சின்ன தீவான இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சியே உலகை இந்தப் பாடுபடுத்தினால், இந்தியாவும், சீனாவும் தொழில்மயமானால் உலகம் வெட்டுக்கிளிகள் தாக்கிய வயல்போலாகிவிடும் என்றார். இன்று ‘மார்க்ஸ் இன் த ஆந்த்ரோபோசின்: டுவார்ட்ஸ் த ஐடியா ஆஃப் டீகுரோத் கம்யூனிஸம்’ (Marx in the Anthropocene: Towards the idea of Degrowth Communism - 2023) என்பன போன்ற நூல்களில் மார்க்ஸ் சூழலியலுக்கும், முதலீட்டியத்திற்கும் உள்ள முரண்கள் குறித்து சிந்தித்தது எடுத்துக்காட்டப்படுவதைக் காண்கிறோம். மற்றொரு முக்கிய பிரச்சினையான சாதிய ஏற்றத்தாழ்வில், காந்தி வர்ணாசிரம அமைப்பை முற்றும் மறுதலிக்க விரும்பவில்லை. ஆனால், அதன் உயர்வு - தாழ்வு நோக்கை மாற்றியமைக்கும் விழுமியங்களை முன்னிறுத்த முனைந்தார். அனைவருக்குமான தன்மானம், தன் மதிப்பு போன்ற விழுமியங்களில் தீர்வை உருவாக்க விரும்பினார். ஆங்கிலத்தில் இவை ‘செல்ஃப் ரெஸ்பெக்ட்’ (self-respect) என்றே எழுதப்படும்போது பெரியாரின் சுயமரியாதைக்கு அணுக்கமாகவே உள்ளன. இதிலும் காந்தியின் விழுமியங்கள் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போதுமானதாக இல்லை என்பதுதான் அம்பேத்கரும், பெரியாரும் அவரைக் கடுமையாக விமர்சிக்க, முரண்பட காரணமானது. ஆனாலும் காந்தியின் விழுமியங்களுக்கும், இவர்களது நடைமுறை முன்னெடுப்புகளுக்கும் முரண் முற்றானதாக இருக்கவில்லை. அதேசமயம், சீர்திருத்தங்களுக்கு எதிரான பிற்போக்குவாத சனாதன சக்திகள் காந்தியை மிகப் பெரிய எதிரியாக கருதியதை அட்சயா முகுல் எழுதிய ‘கீதா பிரஸ் அண்ட் த மேக்கிங் ஆஃப் இந்து இந்தியா’ (Gita Press and the Making of Hindu India - 2015) நூலைப் படிக்கும்போது புரிந்துகொள்ளலாம். காந்தியமும் இந்துத்துவமும் இவ்வாறான சூழலில் காந்தியின் விழுமியங்களையே முற்றிலும் முரணானதாகக் கண்டது வன்முறை நாடிய இந்துத்துவ அடையாளவாதமே. காந்தி கொலையுண்டதற்கு கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன், 1909 அக்டோபர் 24ஆம் ஆண்டு லண்டனில் நடந்த விஜயதசமி தின கூட்டத்தில் முதலும் கடைசியுமாக விநாயக் தாமோதர் சாவர்க்கரும், காந்தியும் நேரில் சந்தித்தனர். அன்றைய தினம் காந்தி பத்து தலைகள் கொண்ட ராவணனுடன் ராமர் நடத்திய போரும், கீதையில் கண்ணன் கூறிய போரும் நமது மனதிற்குள் நடக்க வேண்டிய போரின் உருவகங்கள் என்று கூறினார். தீய எண்ணங்கள் நம் உள்ளத்தில் களையப்பட வேண்டும் என்பதுதான் அவற்றின் நோக்கமே தவிர வன்முறையை போதிப்பது அல்ல என்றார். சாவர்க்கரோ ராமர் இலங்கைக்கு சென்று போர் புரிந்து தீயவர்களைக் கொன்றது சீதையை விடுவிக்கத்தான் என்றார். சரியான நோக்கங்களுக்காக வன்முறையைக் கைக்கொண்டு போராடுவது தவறல்ல என்றார். இந்த காந்தி - சாவர்க்கர் லண்டன் விவாதம் அதற்கு சில மாதங்கள் முன்பு மதன்லால் திங்கரா என்ற இளைஞர் கர்சான் வைலி என்ற பிரிட்டிஷ் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற நிகழ்வின் பின்னணியில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். திங்கரா சாவர்க்கரின் எண்ணங்களால், எழுத்துகளால் தூண்டப்பட்டிருந்தார். சாவர்க்கர் திங்கராவின் செயலை புகழ்ந்தார். காந்தி திங்கரா செய்த கொலையை வன்மையாகக் கண்டித்தார். நாற்பதாண்டுகளுக்கு பிறகு அதே சாவர்க்கரின் எண்ணங்களால், எழுத்துக்களால் உருவான நாதுராம் கோட்சே காந்தியைக் கொன்றது தற்செயலானது அல்ல. காந்தி - சாவர்க்கர் லண்டன் சந்திப்பு குறித்த தகவலை தனது ‘இந்துத்துவா அண்ட் வைலனஸ்: வி.டி.சாவர்க்கர் அண்ட் த பாலிடிக்ஸ் ஆஃப் ஹிஸ்டரி’ (Hindutva and Violence: V.D.Savarkar and the Politics of History - 2022) என்ற நூலில் தரும் விநாயக் சதுர்வேதி இத்தாலிய தேசியவாதியான மாஜினியின் சிந்தனைகளும், வாழ்க்கையும் எப்படி சாவர்க்கரின் சிந்தனையை வடிவமைத்தன என்பதையும், அதேசமயம் காந்தி எப்படி மாஜினியை முற்றிலும் வேறு முறையில் புரிந்துகொண்டார் என்பதையும் குறிப்பிடுகிறார். சாவர்க்கரை சந்தித்த பிறகு கப்பலில் நாடு திரும்பும் போதுதான் காந்தி தன்னுடைய புகழ்பெற்ற ‘ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற நூலை எழுதினார். அதில் அவர் மாஜினி உருவாக்க நினைத்த மக்களின் சுயாட்சி என்பது இத்தாலியில் உருவாகவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆஸ்திரிய மன்னரின் மேலாதிக்கத்திலிருந்து இத்தாலிய மன்னர் விடுவிக்கப்பட்டார் என்பதுதான் நடந்தது, மக்களுக்கு சுயாட்சி கிடைக்கவில்லை என்று தெளிவுபடுத்துகிறார். இதற்குக் காரணம் இத்தாலிய தேசம் கரிபால்டியின் ராணுவ நடவடிக்கைகள் மூலம் பெற்ற விடுதலைதான் என்று கூறுகிறார் காந்தி. வன்முறை மூலம் மக்களின் உண்மையான சுயாட்சியை உருவாக்க முடியாது என்று திட்டவட்டமாக எடுத்துரைக்கிறார். பிறரைக் கொல்வது என்பது வீரமல்ல, கோழைத்தனம் என்று காந்தி வரையறுக்கிறார். ஒருவர் தனது லட்சியங்களுக்காக தன்னுயிரைக் கொடுப்பது வீரமாக, தியாகமாக இருக்கலாம்; ஆனால் பிறரைக் கொல்வது கோழைத்தனம் என்கிறார். காந்தியின் தத்துவத்தை நாம் இறையாண்மை தேசியத்திற்கும், சுயாட்சி தேசியத்திற்குமான வேறுபாடாகப் புரிந்துகொள்ளலாம். இறையாண்மை தேசியம் என்பது ராணுவமயமானது; சுய பாதுகாப்பு மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பின் சாத்தியங்களை உள்ளடக்கியது. சுயாட்சி தேசியம் என்பது மக்கள் தங்கள் வாழ்வை தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை. அது மக்களின் ஆன்ம விழிப்பால், பகுத்தறிவால் உருவாவது; ஆயுதங்களால் அல்ல. உலக வரலாற்றிற்கு காந்தி பரிந்துரைத்த மாற்று பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இத்தாலியில் உருவான முதலீட்டிய நடைமுறை காலனீயத்திற்கு அதாவது ஐரோப்பிய நாடுகள் உலகின் பிற பகுதிகளில் கால் பதித்து வர்த்தகம் செய்ய, ஆதிக்கம் செலுத்த வழி கண்டன. பின்னர் முதலீட்டியமும், காலனீயமும் சேர்ந்து நவீன நாகரீகத்தின் இரண்டு முக்கிய அம்சங்களை உருவாக்கின. ஒன்று அரசர்களிடம் இருந்த இறையாண்மையை மக்களை நோக்கி நகர்த்த முற்பட்டது. இரண்டு, அறிவியல் தொழில்நுட்பம், இயந்திரங்களின் பெருக்கம், தொழிற்புரட்சி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி - நுகர்வை பெருக்கியது. இந்த இரண்டும் இணைந்தபோது, தேசியக் கருத்தியலும், ராணுவமயமான தேசங்களும் உருவாயின. மோட்டார் வாகனங்கள், ரயில், விமானம் ஆகியவையும், புதிய வகை ஆயதங்களும், வெடிகுண்டுகளும் பெருகி தேசங்களுக்கிடையேயான யுத்தங்களை அனைத்து மக்களையும் பாதிக்கும் கொலைக்களங்களாக மாற்றின. இரண்டு உலக யுத்தங்கள் பெரும் அழிவை உலகெங்கும் தோற்றுவித்தன. அதன் இறுதியில் அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்ட பின் உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் பெருகியுள்ளன. காந்தி இவ்வாறு உற்பத்தி, நுகர்வு, வன்முறையை பெருக்கிய நவீன நாகரீகத்தை ஏற்கவில்லை. அதற்கு மாற்றாக தன்னிறைவுப் பொருளாதாரம், தற்சார்பான வாழ்க்கை, பகிர்தல், வன்முறையை முற்றிலும் மறுத்தல் ஆகியவற்றையே நம்பினார். ஒரு தேசத்தின் சுயராஜ்யம் என்பது அனைத்து மக்களும் சுயாட்சி உரிமைகள் பெறுவதே என்று உறுதிபடக் கூறினார். மன்னர்களோ, பணக்காரர்களோ ஆட்சியதிகாரம் பெறுவது விடுதலையல்ல என்று நினைத்தார். இந்தியர்கள் மேற்கத்திய நாகரீகத்தை ஏற்க மறுத்து தங்கள் வாழ்க்கை முறையை சீர்படுத்தி வாழ்வதே சுயாட்சிக்கு வழி வகுக்கும் என்ற காந்தி, ஆங்கிலேயர்களும் அந்த வாழ்க்கை முறையை ஏற்றால் இங்கேயே வாழலாம் என்று ‘ஹிந்த் ஸ்வராஜ்’ நூலில் கூறினார். அப்படியெல்லாம் வரலாற்றில் இதுவரை நடந்ததில்லையே என்ற கேள்விக்கு, இதுவரை வரலாற்றில் நிகழாதது, இனிமேலும் நிகழாது என்று நினைப்பது மனித கெளரவத்தையே மறுப்பதாகும் என்றார் காந்தி. இத்தகைய நம்பிக்கையுடன், இந்திய விடுதலை என்பது புதிய அரசியல் விழுமியங்களை உலகிற்கு அளிப்பதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் காந்தி. ஆனால், இந்துத்துவர்கள் ஐரோப்பாவில் தோன்றிய பாசிஸம், நாசிஸம்போல, ஒற்றை அடையாளவாத, வன்முறை இறையாண்மை நோக்கினைக் கொண்ட நவீன தேசியத்தையே விரும்பினார்கள். நவீன உலகில் பிற நாடுகளுடன் போட்டியிட்டு ராணுவ வல்லரசாக வேண்டும் என்று விழைந்தார்கள். காந்தி இறையியல் நோக்கு என்பது தனிப்பட்ட கடவுளர்கள், மதங்களை கடந்த பொதுவான மானுடவியல் பண்பாக இருக்க வேண்டும் என நினைத்தார். மனிதர்கள் தங்கள் எளிமையினை புரிந்து இயற்கையின் மடியில் இறை உணர்வுடன் ஒன்றியிருக்க வேண்டும் என நினைத்தார். இந்துத்துவர்களோ தெய்வங்கள் என்பவை, ராமரோ, கிருஷ்ணரோ, தங்கள் மத அடையாளத்தை உறுதிசெய்துகொண்டு, வன்முறை மூலம் தேசத்தினை கட்டமைக்க உதவக்கூடியவையாகவே கருதினார்கள். காந்தியின் விழுமியங்கள், நவீன அடையாளவாத வல்லரசிற்கு முற்றிலும் எதிரானவை என்பதால்தான் அந்த எழுபத்தெட்டு வயது மனிதர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்வதுகூட இந்துத்துவ இலட்சியத்தை நிரந்தரமாக சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று அஞ்சி தோட்டக்கள் அவர் மேல் பாய்ச்சப்பட்டன. அகிம்சையைக் கொல்லாமல் வன்முறை தழைக்காதே? https://www.arunchol.com/rajan-kurai-krishnan-on-gandhi-assassination
 19. 13 பற்றிய யதார்த்தம் February 1, 2023 — கருணாகரன் — முப்பத்தி ஆறு வருடங்களுக்குப் பிறகு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தயார் என்று இலங்கை ஜனாதிபதி ஒருவர் (ரணில் விக்கிரமசிங்க) பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். இதைக் குறித்த உரையாடல்கள் தீவிரமடைந்துள்ளன. “மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அதைக் கடுமையாக எதிர்ப்போம்” என்று கூறுகிறது பிக்குகள் முன்னணி. இதே எதிர்ப்பை வெளியிட்டுள்ளன விமல் வீரவன்ச போன்றோரின் சிறிய சில இனவாதக் கட்சிகள். இதற்கு நிகராக மறுமுனையில் “மாகாணசபைகளுக்காகவா எங்களுடைய போராட்டமெல்லாம்?” என்று கேட்கின்றன அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் அரசியற் தரப்புகள். கூடவே புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் அமைப்பினர்களிற் சிலரும் “மேல்நிலை தமிழ் அரசியல் அபிப்பிராயவாதி”களும் இதே கேள்வியை எழுப்பியுள்ளனர். (இவர்களுடைய கற்பனைக்கு எல்லையே இல்லை. மாகாணசபையைத் தவிர்த்து வடக்குக் கிழக்கு மாகாணங்களை அல்லது இவர்கள் சொல்வதைப்போல தமிழர் தாயகத்தை எந்த அடிப்படையில் இணைத்து உரிமைகளைப் பெறுவது? அதில் முஸ்லிம் மக்களுக்கான இடமென்ன? அதற்கு அவர்களுடைய சம்மதம் உண்டா? நடைமுறைச் சாத்தியமான திட்டமும் தீர்வும் என்ன? என்பவை குறித்தெல்லாம் இந்தத் தரப்புகள் ஒரு போதுமே தெளிவாகப் பேசுவதில்லை. பதிலாக அதிதீவிர அரசியற் பிரகடனத்தை (தமிழீழம்) மட்டும் வசதியான நிலையில் இருந்து கொண்டு திருவாய் மலர்ந்தருள்கின்றன). ஆக தமிழ், சிங்களத் தரப்பிலுள்ள மிகச் சிறிய ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ள சிறிய தரப்பினரே மாகாணசபை முறைமையை – அதற்கான அதிகாரங்களைக் குறித்து – தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன. இவை எப்போதும் இப்படித்தான். நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திப்பதில்லை. பிரச்சினைகள் தீர்வதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தே தம்மை வாழ வைக்கின்றன. ஆனால், ஏனைய பெருங்கட்சிகள் அனைத்தும் இதற்கு ஆதரவாகவே உள்ளன. இதேவேளை ஜனாதிபதியின் இந்த அறிவிப்பைக் குறித்து இதுவரையில் முஸ்லிம் தரப்புகள் ஏதும் சொல்லவில்லை என்பது கவனத்திற்குரியது. அவை என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ள என்பது கேள்வியே! இவ்வளவு காலமும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. இலங்கை இந்திய உடன்படிக்கையில் கூறப்பட்ட சில அதிகாரங்களை 1990 இல் அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச தந்திரோபாயமாக வெட்டியெடுத்திருந்தார். இதற்கு அவர் அப்பொழுது விடுதலைப் புலிகளையும் புலிகளுக்கு இணக்கமாக இருந்த ஈரோஸ் இயக்கத்தையும் பயன்படுத்தினார். மாகாணசபையைப் பலவீனப்படுத்தி, அதில் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த ஈ.பி.ஆர். எல்.எவ்வை அப்புறப்படுத்துவதற்கு புலிகள் விரும்பினர். இதை தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திப் பிரேமதாச வெற்றியடைந்தார். இதனால்தான் 1990 இல் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையை கலைத்தார் அ.வரதராஜாபெருமாள். இதனால்தான் மாகாணசபை முறைமை தொடர்ந்தும் நம்பிக்கையீனமாகவும் சர்ச்சைக்குரியதாகவும் நோக்கப்படுகிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அதற்குப் பிறகு ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் அதிகாரத்திலிருந்த ஜனாதிபதிகளும் மாகாணசபையின் அதிகாரங்களை வழங்காமல் – நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்தே வந்தனர். போதாக்குறைக்கு ஜே.வி.பியின் மூலமாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை சட்டரீதியாகப் பிரித்தனர். ஆனாலும் 2009 இல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு உருவான அரசியற் சூழலில் மாகாணசபையைத் தவிர, வேறு உடனடி மார்க்கம் ஏதுமில்லை என்ற யதார்த்தம் உருவானது. இதனால்தான் மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைத் தவிர்ந்த ஏனைய தமிழ்க்கட்சிகள் அனைத்தும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு ஆறு தமிழ்க் கட்சிகள் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தன. இதை விட தனித்தனியாகவும் ஏனைய தமிழ்க்கட்சிகள் இதை இந்தியாவிடமும் இலங்கை அரசிடத்திலும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் இந்தியாவும் இந்தியாவின் வலியுறுத்தலின் அடிப்படையில் ஐ.நாவும் இவற்றின் அடிப்படையில் இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவும் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசும் நிலை உருவாகியுள்ளது. அதாவது 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு மிகச் சாதகமான ஒரு சூழல் கனிந்து வந்துள்ளது என்பதை மனதிற் கொண்டே ரணில் விக்கிரமசிங்க கடந்த நவம்பரில் வரவு செலவுத்திட்ட உரையின்போது இனப்பிரச்சினைக்கு ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். இதில் அவர் ஓரளவுக்கு உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது. அவருடைய நோக்கில் (சிங்களநோக்கு நிலையில்) இதற்கு மேலான அதிகாரத்தை வழங்குவதற்குப் பதிலாக 13 உடன் நின்றுவிடலாம் என்றும் யோசித்திருக்கக் கூடும். இதை விடவும் அதிகமான அனுகூலங்களை ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய அரசியல் நலனுக்காகவும் சிங்கள மேலாதிக்க நலனுக்காகவும் சிந்திக்கலாம். ஆனால், தமிழ் பேசும் சமூகங்களைப் பொறுத்து இதை அவை எப்படி அணுகப் போகின்றன? ஏனெனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரும் 13 ஐப் பற்றியே பேசியிருக்கிறார். மட்டுமல்ல, இந்த விடயம் உள்பட ஏனைய விடயங்களைப் பற்றிப் பேசுவதற்காகவும் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்திருக்கிறது இந்தியா. ஆக மொத்தத்தில் இப்பொழுது 13 ஐ நடைமுறைப்படுத்துவதே முதன்மையான விடயமாக மாறியுள்ளது. ஆனால், இதற்கு தமிழ்த் தரப்பில் இன்னொரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் அறிவிப்பினால் ஏற்பட்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெளிப்படையான விரிசல் 13 நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை மற்றும் அதற்கான பேச்சுகளைப் பாதிக்கக் கூடிய நிலையே ஏற்பட்டுள்ளது. இதேவேளை ரணில் விக்கிரமசிங்க தான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் பல விதமான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருகிறார். சுதந்திர தினத்தையொட்டி இன்னொரு தொகுதி அரசியற் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ அறிவிப்பார் என்று தெரிகிறது. கூடவே வலி வடக்கில் மேலும் ஒருதொகுதி நிலத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் தமிழ்த் தேசியத் தரப்புகள் இதையிட்டெல்லாம் திருப்திப்பட்ட மாதிரித் தெரியவில்லை. இறுதியில் 13 உம் இல்லை. சமஸ்டியும் இல்லை. தமிழீழமும் இல்லை என்ற நிலைதான் வருமோதெரியாது. ஏனென்றால் 1987 இல் 13 ஐ வலுப்படுத்தக் கூடிய சூழல் இருந்தது. தமிழ்த்தரப்பில் காணப்பட்ட பிளவே (புலிகள் – ஈ.பி.ஆர்.எல்.எவ் + இந்திய அரசு) அது பலவீனமாகக்காரணமாகியது. இப்பொழுது அதே 13 ஐ பலப்படுத்துவது, நடைமுறைப்படுத்துவது என்று பேசுவதற்கே 36 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. இடைப்பட்ட காலப்பகுதியில் கொடுக்கப்பட்ட விலை – இழப்புகள் கொஞ்சமல்ல. இந்த 36 ஆண்டு காலத்திலும் தமிழர்கள் பெற்றது எதுவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் செய்த தியாகங்கள், நடத்திய போராட்டங்கள், சந்தித்த இழப்புகள் எல்லாவற்றுக்குப் பின்னும் 13 ஐ நடைமுறைப்படுத்துவது – அமுலாக்குவது என்றளவில்தான் பேச்சுகள் உள்ளன. இதற்கு அப்பால் செல்வதற்கு இந்தியாவோ பிற சர்வதேச சமூகமோ சிந்திப்பதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் சோதனையாகவும் சாதனையாகவும் 13 வந்து முன்னே நிற்கிறது. எண் சோதிடத்தின்படி 13 என்பது அதிர்ஸ்டமற்ற எண் என்று சொல்வார்கள். தமிழர்களுக்கும் இலங்கைக்கும் அது என்ன மாதிரியான எண் என்பது வரலாற்றின் முடிவாகும். அப்படியான – அதற்கான ஒரு வரலாற்றுத் தருணம் இப்பொழுது வந்துள்ளது. யதார்த்தவாதிகள் 13 வரவேற்கிறார்கள். கற்பனாவாதிகள் எதிர்க்கிறார்கள். இனவாதிகள் எதிர்க்கிறார்கள். நியாயவாதிகள் ஆதரிக்கிறார்கள். இப்படியான ஒரு விசித்திரத்தின் முன்னே நிற்கும் 13 ஐப்பற்றிய உண்மையான நிலவரத்தை அடுத்து வரும் மாதங்களில் துலக்கமாக – நிர்ணயமாக அறிந்து கொள்ளலாம். ஆம், தமிழ் பேசும் மக்களுடைய எதிர்காலத்தையும்தான். https://arangamnews.com/?p=8637
 20. அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இக்கட்டான காலங்களில் அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை உறுதியளித்திருந்தார். பொருளாதார நெருக்கடி, இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஏனைய அம்சங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடியதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/236982
 21. மன்னிப்புக் கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது மைத்திரிக்கு வாக்களிக்குமளவிற்கு மக்கள் முட்டாள்களல்ல - பேராயர் இல்லம் By Digital Desk 5 01 Feb, 2023 | 09:56 AM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை முன்னரே அறிந்திருந்தும் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயம் சிறை செல்வார். ஊடகங்களில் மன்னிப்பு கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து அவரால் தப்பி விட முடியாது என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூக தொடர்புகளுக்கான பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார். யுத்த காலத்தில் இடம்பெற்ற எந்தவொரு தாக்குதல்களும் முன்னரே அறிவிக்கப்பட்டவையல்ல. அதன் அடிப்படையில் அவற்றுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சமப்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய அருட்தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களிக்குமளவிற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல என்றும் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நேற்று தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் , ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அருட்தந்தை இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த 30 ஆண்டுகளாக வடக்கில் நிலவிய யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். யுத்த காலத்தில் இடம்பெற்றவற்றையும் , இதனையும் சமப்படுத்த முடியாது என்பதை முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவர் அறியவில்லையா? யுத்த காலத்தில் பயங்கரவாதிகள் தமது எதிர்தரப்பினர் மீது தாக்குதல்களை மேற்கொள்வர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். இந்த தாக்குதல்கள் தொடர்பில் முன்னரே தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையிலும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் யுத்த காலத்தில் இவ்வாறு முன்னரே அறிவிக்கப்பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இவ்விரண்டையும் தொடர்புபடுத்த முடியாது. தாக்குதல் தொடர்பில் முன்னரே அறிந்திருந்தும் அது தொடர்பில் அறிவிக்காமையே இங்கு இழைக்கப்பட்ட பாரிய குற்றமாகும். தனக்கு கீழ் செயற்பட்ட அதிகாரிகளின் தவறால் தான் அவருக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பினை நன்றாக பார்க்குமாறு அவரிடம் வலியுறுத்துகின்றோம். தீர்ப்பு ஆங்கில மொழியில் காணப்பட்டமையால் அவர் அதனை சரியாக புரிந்து கொள்ளவில்லை போலும். அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தாக்குதல்கள் தொடர்பில் அவருக்கு அறிவிக்கவில்லை என்றால் , அதற்கான சூழலை ஏற்படுத்தாமலிருந்தது ஜனாதிபதி என்ற ரீதியில் அவர் இழைத்த தவறாகும் என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு ஜனாதிபதியும் வெளிநாடு செல்லும் போது பதில் ஜனாதிபதியொருவரை அல்லது பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமித்துச் செல்ல வேண்டியது அத்தியாவசியமானதாகும். அவர் அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமையும் தவறாகும். நாட்டில் பல மாதங்களாக தேசிய பாதுகாப்பு சபை கூட்டப்படவில்லை. அரச தலைவர் என்ற ரீதியில் தேசிய பொறுப்பினை அவர் தட்டிக்கழித்துள்ளமையும் பெருந்தவறாகும். அவரது இந்த தட்டிக்கழிப்பினால் 270 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. பலர் அங்கவீனமுற்றவர்களாகியுள்ளனர். பலர் தமது உறவினர்களை இழந்துள்ளனர். எனவே இதனை சாதாரணமானதாகக் கருத முடியாது. இவை அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. நீதிமன்ற தீர்ப்பினை அறியாமல் ஊடகங்கள் முன்னிலையில் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார். கத்தோலிக்க அருட்தந்தைகள் இந்த தீர்ப்பினை நன்றாக படித்தறிந்து கொண்டுள்ளனர். எனவே எம்மிடம் பொய்யுரைக்க வர வேண்டாம். கத்தோலிக்க மக்கள் அவரை அன்புடன் வரவேற்பதாகக் கூறுவதும் முற்றிலும் பொய்யாகும். கொச்சிக்கடை பிரதேசத்திற்குச் சென்றால் மக்கள் அவரை எவ்வாறு வரவேற்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளலாம். இறைவனுக்காக மன்னிப்பு கோருவதாகக் கூறும் அவர் இறைவனின் பிரதிநிதி அல்ல. கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது. உண்மையில் மன்னிப்பு கோர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருந்தால் , தாக்குதல்கள் இடம்பெற்ற அன்றைய தினமே மன்னிப்பு கோரியிருக்க வேண்டும் என்பதோடு மாத்திரமின்றி , ஜனாதிபதி பதவியிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். மாறாக தற்போது வசனத்தினால் மன்னிப்பு கோருவதால் மாத்திரம் எம்மை ஏமாற்றிவிட முடியாது. நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியமைக்காக அவர் முழு இலங்கையர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும். மாறாக ஊடகங்களில் அவர் மன்னிப்பு கோருவதால் அனைத்தும் வழமைக்கு திரும்பப் போவதில்லை. நீதிமன்ற தீர்ப்பின் படி நஷ்ட ஈட்டை வழங்குவதற்கு தன்னிடம் வசதியில்லை என்று அவர் பொய் கூறினாலும் , அவரிடமுள்ள சொத்து விபரங்களை நாம் அறிவோம். தேர்தல் அண்மித்துள்ளமையின் காரணமாகவே அவருக்கு கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தோன்றியுள்ளது. இதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எண்ண வேண்டாம். எமது மக்கள் அவருக்கு வாக்களிக்கும் வகையில் முட்டாள்கள் அல்ல. தேர்தல் முடிவுகளின் பின்னர் அவர் அதனை உணர்ந்து கொள்வார். தெரிந்தே இழைத்த தவறுக்காக அவர் நிச்சயம் சிறை செல்வார். அதிலிருந்து ஒருபோதும் அவரால் தப்பிக்க முடியாது. அரசியல் ரீதியில் அவர் தோல்வியடைந்தவராவார். அவரது உறவினர்கள் கூட உதவ முன்வராத நிலைமையிலேயே அவர் காணப்படுகின்றார். இவ்வாறானவரால் எவ்வாறு அடுத்த ஜனாதிபதியாக முடியும்? ஜனாதிபதி மாத்திரமல்ல , அவர் அதற்கு முன்னர் கிராம உத்தியோகத்தராகக் கூட ஆக முடியாது என்றார். https://www.virakesari.lk/article/147145
 22. பாக்முட் அருகே உள்ள கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு ! உக்ரேனிய நகரமான பாக்முட் அருகே உள்ள கிராமத்தை வான்வழி படையினரின் உதவியோடு கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரத்தை சுற்றி வளைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சுமார் 75 ஆயிரம் சனத்தொகையை கொண்ட பக்முட் நகரை கைப்பற்றுவது ரஷ்யாவின் முதல் பெரிய போர்க்கள சாதனையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் பக்முட் மீது ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் சிறுவன் உட்பட இரண்டு பொது மக்கள் கொல்லப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்த மாத தொடக்கத்தில், சுமார் 400 பேர் இருந்த உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள கிளிஷ்சிவ்கா என்ற கிராமத்தைக் கைப்பற்றியதாகவும் ரஷ்யா அறிவித்திருந்தது. இதேவேளை வுஹ்லேடரின் பகுதியையும் கைப்பற்றியதாக இந்த வாரம் ரஷ்யா அறிவித்த போதும் அந்தத் தாக்குதலை பெருமளவில் முறியடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1322616
 23. ஜெனிவாவில் இன்று நடைபெறவுள்ள 42வது அமர்வில் இலங்கை நிலவரம் குறித்து பரிசீலனை ! இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக, ஜெனிவாவில் இன்று நடைபெறும் 42வது அமர்வில், உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்யவுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் பொதுச் சபையால் நிறுவப்பட்ட உலகளாவிய காலமுறை தொடர்பான மதிப்பாய்வு குழுவினால், ஒவ்வொரு உறுப்பு நாடும் நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. 2008 ல் முதல் தடவையாகவும், 2012 ல் இரண்டாவது தடவையாகவும் 2017 ல் மூன்றாவது தடவையாகவும் இலங்கை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் நான்காவது சுழற்சியின் கீழ் 2022 டிசம்பர் 22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் 2017 நவம்பரில் உலகளாவிய காலமுறை தொடர்பான குழுவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று ஆராயப்படவுள்ளது. அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் விரிவான ஆலோசனைகளின் பின்னர் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அறிக்கை தயாரிக்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இதே காலகட்டத்தில் 75வது சுதந்திரக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மீளாய்வுக்கான அறிக்கையை முன்னரே பதிவுசெய்யப்பட்ட வீடியோ அறிக்கை மூலம் சமர்பிக்கவுள்ளார். இதில் மனித உரிமை மேம்படுத்த அரசாங்கம் சுயமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட விடயங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அமுல்படுத்திய விதம் குறித்தும் அவர் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தவுள்ளார். https://athavannews.com/2023/1322590
 24. ஜனாதிபதியின் 13 A திட்டத்தை முறியடிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி சபதம்! 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக உள்ளனர் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. ஒற்றையாட்சி அந்தஸ்தை இல்லாதொழிக்கும் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. இதேவேளை 13வது திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியிடுமாறு, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய சுதந்திர முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, பிவுத்துரு ஹெல உறுமய, நிதாஹஸ் ஜனதா பெரமுன ஆகிய கட்சிகள் தமது நிலைப்பாட்டை இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1322614
 25. இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாதவர் வி.மணிவண்ணன் – ஆனோல்ட் குற்றச்சாட்டு இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாத முன்னாள் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைத்திருக்கின்றார் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றஞ்சாட்டினார். யாழ் மாநகர சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,”நேற்று சபை அமர்வுக்கு வரமால் கையெழுத்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். சபை கூட்டத்திலே முழுமையாக கலந்து கொள்ளாமல் ஒரு உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடுவது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம், தாம் கொண்டுவந்த செயல்திட்டங்களை இடைநிறுத்துகிறார்கள் என கூறுகின்றார். ஆனால் அவர்கள் கல்வெட்டுக்களில் பெயர்போட்ட திட்டங்கள் எல்லாமே எனது காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள். ஆரிய குளம் தவிர முன்னாள் முதல்வரால் புனரமைக்கப்பட்ட அனைத்து குள திட்டங்களும் நான் முதல்வராக இருக்கும் போதே முன்மொழியப்பட்ட திட்டங்களாகும். என்னால் ஆரம்பிக்கப்பட்ட செயல்திட்டங்களை தான் முன்னாள் முதல்வர் செயற்படுத்தினரே தவிர அவர் ஒன்றும் புதிதாக ஒன்றும் செய்யவில்லை. டயலொக் நிறுவனத்தினருடன் ஒப்பந்தமே இல்லாத போது குளத்தின் அண்மையில் பதாகைகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.இது ஒரு வியப்பான விடயமாக உள்ளது. தங்களுடைய விளம்பரத்திற்காகவும் தங்களுடைய சுயலாப அரசியல் முன்னேற்றத்திற்காகவும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட விடயமே தவிர புதிதாக அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது வேறு திட்டங்களை செயற்படுத்தவில்லை. நான் முதல்வராக இருக்கும்போது அரசாங்கத்திடமிருந்து 720 மில்லியன் ரூபா நிதியினை பெற்று பல திட்டங்களை நிறைவேற்றி இருந்தேன். கம்பரெலியா திட்டம் வேறு பல திட்டங்களை செயற்படுத்தி யாழ் நகரத்தினை பல வேலை திட்டங்களை செயற்படுத்தி இருக்கின்றோம். யுத்தத்தின் போது அழிவடைந்த யாழ் மாநகர சபையின் நிரந்தர கட்டிடத்தினை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அந்த கட்டிடத்தினை கட்டுவதற்கு அடித்தளமிட்டது நான் தான். 2023 ம் ஆண்டு பாதீடு தோற்கடிக்கப்பட்டதுஇரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க வக்கில்லாத முன்னாள் முதல்வர் மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைக்கிறார் வெட்கம் இல்லையா? அவருக்கு ஒரு சட்டம் தெரிந்த சட்டத்தரணி திருட்டுத்தனமாக நான் முதல்வராக வந்ததாக தெரிவிக்கின்றார். இது ஒரு வியப்பான விடயம் என்றார். https://athavannews.com/2023/1322613
 1. Load more activity
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.