யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

24 hours

Showing topics posted in for the last 1 days.

This stream auto-updates     

 1. Past hour
 2. ஆலயத்துக்கு சென்றால், நேர்மறை எண்ணம் உண்டாகி அமைதி அடைகிறோம். ஆனாலும், சில ஆன்மிக நிலையம் என்ற பெயரில் அமைதியுடன் வருபவரை, வெறியூட்டி அனுப்பும் நிலைமை உள்ளதே என்பதே எனது கவலை. எங்கோயோ இருக்கும் நியூஸிலாந்து நாட்டில் கொல்லப் பட்ட வேறு நாட்டு இஸ்லாமியனுக்காக, சொந்த நாட்டு, வேறு மதத்தினை சேர்ந்தவர்களை கொன்று பழி தீர்க்கலாம் என்ற எண்ணத்தினை என்பது? கெனியாவில் இதேபோல ஒரு பெரிய அங்காடி ஒன்று மீது பெரும் தாக்குதல் நிகழ்ந்தது. போலீசார் இங்கே போராடிக்கொண்டிருந்த போது, அங்கே மீடியா வெளிச்சம் புகுந்திருந்த சந்தடி சைக்கிள், அடிப்படை வாதத்தினை பரப்புபவர்கள் என்று சந்தேகம் கொண்டிருந்த 7 பேரை போலீசார் ரகசியமாக சுட்டு தள்ளி இருந்தனர். இப்போது அங்கே பிரச்னை இல்லை.
 3. புல்லாவுக்கு இராணுவ மரியாதை, சில இளைஞர்களால் அண்மையில் கொடுக்கப்பட்ட ஒர் புகைப்படம் பார்த்தேன் அதை யாராவது இங்கு இணைத்தால் நல்லம் .....
 4. நான் நினைத்ததை மிகச் சரியாக எழுதி விளக்கி இருக்கிறீர்கள். நன்றி. மேலே நந்திக்கும் மரூதங்க்கேணிக்கும் அதே "ஈனப் புத்தி" இருந்து இருக்கிறது பாருங்கள். அது ஏன் இந்த காத்தான்குடி உங்களுக்கு அப்படி சுடுகிறது? உங்கள் மக்களை மாமாங்கத்தில் இருந்து.. திருக்கேதீஸ்வரம் வரை விரட்டியதுடன் பழிவாங்கலை அவர்கள் நிறுத்தி விட்டார்கள் என்று உங்கள் ஈனம் இல்லாத புத்திக்கு புரிகிறது. எங்கள் ஈனப் புத்திக்கு இந்த பழிவாங்கல் இன்னமும் தொடரும் என்று தெரிகிறது. உங்களுக்கும் இப்படி ஈனப் புத்தி தேவை என்றால் யாழ் களத்தில் நாங்கள் எழுதுவதை தொடர்ந்து படியுங்கள் - உங்களுக்கும் ஈனப் புத்தி இலவசமாக கிடைக்கும் .
 5. குண்டு வைக்கிறவனை விட மதசுதந்திரம் என்று சொல்லி மக்களுக்கு தேவையற்ற கருத்துக்களை பரப்புபவ‌ர்களை முதலில் விசாரணை செய்ய வேண்டும்...
 6. மோடிசார் இருக்கேக்கை வந்தால் ...பாகிஸ்தான் கோபம் ..இங்கை பாயும்..
 7. இதுக்குத்தான் ..முட்டாக்கு வேணும்..வேணுமின்னு சண்டை பிடித்தவை...ஆண்டவா திரிகோணமலை சண்முகாவை காப்பாத்து.. புல்லாவும், மன்னார் மன்னனும் ..இப்ப போவினம் ...பிணை எடுக்க...
 8. நேற்று இரவில் இருந்து ஏற்பட்ட ஒரு நடுக்கம் இன்னும் மனதில் இருந்து விலகவில்லை. கொழும்பில் இருக்கும் காலப்பகுதியில், முக்கியமாக A/L படிக்கும் காலப்பகுதியில் கொட்டாஞ்சேனை பகுதியில் தான் எல்லா ரியூசன் கிளாசுக்கும் செல்வது. அப்படி போகும் காலப்பகுதியில் ஒவ்வொரு வெள்ளியும் பொன்னம்பல வாணேச்சரர் கோவிலுக்கு போவது வழக்கம். அந்த கோயிலில் உறைந்து இருக்கும் இருளும் வெளிச்சமும் கலந்த ஒரு நிறம் மனசுக்கு மிகவும் அமைதியை கொடுக்கும். அப்படி போய்விட்டு வெளியே வந்து கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்கு முன் இருக்கும் ஒரு கடையில் பிளேன் ரீயும் வடையும் வாங்கி சாப்பிடுவது உண்டு. அத்துடன் பல தடவை அந்தோணியார் கோவிலுக்குள் போய் வணங்கி இருக்கின்றேன். பின் ஒரு தமிழ் கத்தோலிக்க பெண் ஒருவரை காதலித்துக் கொண்டு இருந்த இரண்டு வருடங்களில் அடிக்கடி உள்ளே அவருடன் சென்று அமைதியாக அமர்ந்து இருந்திருக்கின்றேன். எல்லா வழிபாட்டு தலங்களும் நேர்மறையான எண்ணங்களை அதிகமாக கொண்ட இடங்கள். வருகின்ற எந்த ஜீவனும் தம் பிரச்சனைகளுக்கு, கவலைகளுக்கு, முயற்சிகளுக்கு, நோய்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வருவர். எவரும் மற்றவர் நாசமாக போக வேண்டும் என்று வழிபட வருவதில்லை என்பதால் எப்பவும் நேர்மறையான எண்ணங்கள் கொண்ட இடமாகவே வணக்க தலங்கள் இருப்பதால் ஒரு கோவிலுக்கோ அல்லது தேவாலயத்துக்கோ அல்லது புத்த கோவிலுக்கோ உள்ளே சென்று அமைதியாக இருக்கும் போது மனம் மிகவும் நிரம்பி போய் இருக்கும். பூசைகள் மீதும் மெழுகுவர்த்திகள் மீதும் எப்பவும் எனக்கு நம்பிக்கை இருப்பதில்லை என்பதால் அவற்றில் இருந்து விலகி இருப்பதுண்டு. பின்னர் கடவுள் இல்லை என்று கண்டபின்பும் கூட வழிபாட்டு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு வந்தால் மறுப்பதும் இல்லை. போன வருடம் மகள் இயலினியை கூட்டிக் கொண்டு கொழும்பு போய் அங்கு தங்கிய 5 நாட்களில் ஒரு நாள் பொன்னம்பல வாணேச்சரர் கோவிலுக்கு கூட்டிச் சென்று காட்டியபின், அடுத்ததாக கொண்டு சென்றது கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்குதான். எம்முடம் வந்த அம்மா, இயலை கூட்டிக் கொண்டு சென்று சொரூபங்களை எல்லாம் தொட்டு கண்ணில் வைத்து வழிபட்டுக் கொண்டு இருந்தார். நான் வழக்கம் போல அமைதியை நிரப்பிக் கொண்டு இருந்தேன். இந்த இரண்டு கோவில்களும் மனசுக்குள் அத்தனை நல்ல நினைவுகளை கொண்டவை நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இந்த கோவிலும் பாதிக்கப்பட்டு அதில் பலர் இறந்தமையை கேட்டதில் இருந்து எனக்கு வந்த மெல்லிய நடுக்கம் இந்த நல்ல நினைவுகளின் மீது இழைக்கப்பட்ட கொடூரத்தின் குரூரத்தின் பேரால் வருகின்றது. ஏனைய இடங்களிலிருந்து வரும் இழப்புகளின் செய்திகள் மனதை வெறுமைக்குள் தள்ளி விடுகின்றது. அனைத்து வழிபாட்டு தலங்களின் மீதான தாக்குதல்களும் மானிடத்தின் பெயரால் கண்டிக்கபட வேண்டியவை. தம் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காக, மன அமைதிக்காக வரும் அப்பாவிகள் மீது கட்டவிழ்த்தப்படும் இந்த மாதிரியான வன்முறைகளால் மக்களை எப்பவும் ஒரு 'நடுக்கத்தில்' வைத்திருக்க செய்யும் உளவியல் போரிற்காக நூற்றுக்கணக்கானோரை கொன்று குவிக்கின்றனர். அவர்கள் எல்லாரையும் கொல்கின்றனர். ஆண் பெண் குழந்தைகள் என்று எந்த வேறுபாடும் இன்றி வழிபட வந்தவர்களை, ஆயுதம் எதுவுமற்ற அப்பாவிகளை குறிவைத்து கொல்கின்றனர். மனிதர்களை கொல்கின்றனர், போர் ஒன்றில் இலக்கு வைக்கப்படக் கூடாது என்று வரையறை செய்த இடங்களை இலக்கு வைத்து கொல்கின்றனர். அவர்களின் தேவை மனித சதையும், இரத்தமும், அது சிந்தும் போது வரும் அந்த நெடியும். துயரமும் யதார்த்தமும் என்னவெனில், இது இத்துடன் முடியப் போவது இல்லை என்பதுதான். தன் தாயை இழந்து, தன் குழந்தையின் முத்தங்களை இழந்து, பிரார்த்தனை செய்வதற்காக சென்ற அப்பாவை இழந்து, தனக்காவும் பிரார்த்தனை செய்ய போன துணையை இழந்து வாடும் உயிர்களுக்காகவும் மற்றும் காயம்பட்ட அத்தனை உறவுகளுக்காகவும் மனம் வருந்துகின்றேன். சபிக்கப்பட்ட உலககில் இருந்து வெறுமனே வருந்துவதை தவிர வேறு எது செய்ய முடிகின்றது?
 9. இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம் தலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பின் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவபிட்டி - புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியவற்றிலும் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷங்ரில்லா, சினமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலிலும் இன்று காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையில் குண்டுத் தககுதல்கள் இடம்பெற்றன. இந்த ஆறு சம்பவங்களும் தற்கொலை தாக்குதல்கள் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது. அத்துடன் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதுடன் பின்னர் 2.30 மணியளவில், தெமட்டகொட பொலிஸ் பிரிவில் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மூவர் தெமட்டகொட மஹவில பூங்கா பகுதி சொகுசு வீட்டில் இடம்பெற்ற குன்டுவெடிப்பில் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந் நிலையில் இந்த 8 சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், அவ்வனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை செய்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் பொறுப்பு குற்றப் புலனயவுப் பிரிவின் (சி.ஐ.டி.) பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்றைய குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை வரை 13 பேர் கைது செய்யப்ப்ட்டிருந்தனர். அவர்களில் மூவர் தெமட்டகொடை வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். ஒருவர் வெடிபொருள் எடுத்து வந்த வேனின் சாரதியாவார். ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பிலும் எத்தனை பேர் கொல்லப்பட்டரகள் என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாத போதும், நேற்று மாலை வரை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை மையபப்டுத்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இது வரையிலான காலப்பகுதியில் 77 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மேலும் 261 பேர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு வைத்தியசாலையில் 104 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர்ந்தும் 100 பேர் வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேபோல் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் ( களுபோவில) இரு சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மேலும் 6 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களாவர். மட்டக்களப்பு குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 51 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொழும்பு வடக்கு போதன அவைத்தியசாலையில் ( ராகம) 7 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 32 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் கம்பஹ வைத்தியசாலையிலும் இருவர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள பிரேதங்களில் இன்று மாலையாகும் போது 35 வெளிநாட்டவர்களின் சடல்ங்கள் இருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அவர்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், மொரோக்கோ, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்தவ்ர்கள் உள்ளடங்குவதாக அந்த அதிகாரி சுட்டிக்கடடினார். http://www.virakesari.lk/article/54377
 10. அகதிகளுக்கு கொடுக்கல் வாங்கலை கவனிக்கும் அதிகாரி. களவாக வேலை செய்யும் போது இவர்களிடம் மாட்டுப்பட்டால் கதை கந்தல்.
 11. ஐபாட் பயிற்சி குறிப்புகள்; iPad Working Tips—2 ஐபாட்டின் பெயரை மாற்றுவது எப்படி? Hom buttonஐ தட்டி Settings buttonஐ தட்டி General என்ற சொல் மேல் தட்டி About என்ற சொல் மேல் தட்டி, Name என்ற சொல்லிற்கு வலப்பக்கதில் தட்டி ஏற்கனவே உள்ள பெயரை அழித்து விட்டு புதிய பெயரை தட்டச்சிடுங்கள்.
 12. வரும் கால ஜனாதிபதி ஒருவர் அறிக்கை விட்டார் .....முஸ்லீம்கள் ஐக்கிய இலங்கைக்காக பாடுபட்டார்கள் என்று....
 13. Today
 14. The Navaly Church bombing was the bombing of the Church of Saint Peter and Saint Paul in Navaly (or Navali) in the Jaffna peninsula by the Sri Lankan Air Force during the Sri Lankan Civil War. It is estimated that at least 125 civilians, who had taken refuge from the fighting inside the church, died as a result of this incident. The victims included men, women and children.[1][2] https://en.wikipedia.org/wiki/Navaly_church_bombing இப்படியான தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எப்போதும் இலங்கைத் தீவில் தண்டிக்கப்பட்டது கிடையாது. நவாலி தேவாலயம்.. யாழ் பெரிய தேவாலயம்.. மடு தேவாலயம் எல்லாமே.. சிங்கள இனவெறிப்படைகளின் நேரடி இலக்காகவும் மக்களை பலியெடுக்கும் இடமாகும் இருந்துள்ளமை கடந்த கால வரலாறு. அந்த தாக்குதல் சூத்திரதாரிகள் யாரையும் இந்த உலகம் இன்று வரை தண்டிக்கவும் இல்லை.. தட்டிக்கேட்கவும் இல்லை. அதுவே இந்த மனித அவலத்தின் தொடர்ச்சிகளுக்கு காரணமாகவும் உள்ளது. இங்கு எல்லாமே அதிகம் இலக்கு வைக்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் கிறிஸ்தவ மக்களாகவர். அதாவது தமிழர்கள் ஆவர். இது பல பலமான சக்திகளின் கூட்டுச் சதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாகவே இருக்க முடியும்.
 15. குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மிகவும் சக்தி வாய்ந்த நவீன தொழில்நுட்பத்திற்குரியது , உதாரணமாக இந்த வகை குண்டுகளை வெடிக்கப்பயன்படுத்தப்படும் ஊக்கி கூட ஒரு வெடிகுண்டிற்குரிய சேதத்தை விளைவிக்கக்கூடியது , பல சந்தர்ப்பங்களில் வெறும் ஊக்கி மட்டும் வெடித்து குண்டு வெடிக்காது விட்டிருக்கிறது , இக்குண்டை இணப்பதற்கு நன்றாக பயிர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் பல இடத்தைல் சமகாலத்தில் ஒரு தொடர் தாக்குதலை நடத்தக்கூடிய மிகப்பெரிய வலைப்பின்னல் இருத்தல் வேண்டும் இவ்வளவு ஆட்பலமும் நன்றாக ஒருங்கிணைப்புத்திறனுடன் அமைப்பு ரீதியாக இந்த தாக்குதலை முஸ்லீம் குழுவால் செய்திருக்கமுடியுமா? அதுவும் இலங்கை புலனாய்வு அமைப்பு அறியாமல் அதுவும் தலைநகரிலேயே முஸ்லீம் குழுவால் செய்திருக்க சாத்தியமேயில்லை ,இதுவரை காலமும் இப்படியான மிகப்பேருந்தாக்குதல் இலங்கை வரலாற்றில் எந்த குழுவாலும் நிகழ்த்த முடியவில்லை , இலங்கை ஆளும் சக்திகள் எப்படி திருனெல்வேலி தாக்குதலுக்கு முன்னரேயே தமிழ் மக்களுக்கெதிராக 1983 இல் இறுதி தீர்வுநடவடிக்கை எனும் பெயரில் தமிழ் மக்களுக்கெதிராக இனப்படுகொலை திட்டமிடல்நடவடிக்கை மேற்கொனண்டார்களோ அது போல் இதுவும் அப்பாவி முஸ்லீம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் திட்டம்
 16. பெங்களூருவிடம் ஒரு ஓட்டத்தில் வீழ்ந்தது சென்னை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி ஒரு ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது. ஐ.பி.எல்.தொடரின் 39 ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் தலைவர் தோனி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை குவித்தது. 162 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. சென்னை அணி சார்பில் வோட்சன் மற்றும் டூப்பிளஸ்ஸி தலா 5 ஓட்டத்துடனும், ரய்னா டக்கவுட் முறையிலும், ராயுடு 29 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 9 ஓட்டத்துடனும், ஜடேஜா 11 ஓட்டத்துடனும், பிராவோ 5 ஓட்டத்துடனும், தாகூர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், தோனி 84 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். இதேவேளை இப் போட்டியில் சென்னை அணிக்கு இறுதி ஓவருக்கு 26 ஓட்டங்கள் என்ற நிலையிருக்க அந்த ஓவரை எதிர்கொண்ட தோனி ஒரு நான்கு நான்கு ஓட்டம் 3 ஆறு ஓட்டங்களை விளாசி பெங்களூரு அணிக்கு அச்சுறுத்தல் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் ஸ்டெய்ன் மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுக்களையும், சாஹல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். நன்றி ; ஐ.பி.எல்.இணையத்தளம் http://www.virakesari.lk/article/54379
 17. தீவிரவாத முயற்சிகளை முறியடிக்க தேசிய, சர்வதேச உதவிகள் பெறப்படும் இந்த நிமிடம் நாட்டுக்குள் எவ்வித தீவிரவாத நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, நாட்டை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சிப்பார்களாயின், தேசிய, சர்வதேச உதவிகளைப் பெற்று குறித்த தீவிரவாத செயற்பாட்டை முறியடிக்க வலுவாக உறுதிப்பூணுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாகவே புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்திருந்தாலும், அது தொடர்பில் தனக்கும் அமைச்சர்களுக்கும் அறிவிக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் போதிய அவதானம் செலுத்தப்படாமைக் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தான் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு இது குறித்து அறிவிக்காமை அதில் உள்ளடங்கும் என்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தீவிரவாத-முயற்சிகளை-முறியடிக்க-தேசிய-சர்வதேச-உதவிகள்-பெறப்படும்/175-232176
 18. 15 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்த ஐதராபாத் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 38 ஆவது லீக் போட்டி இன்று மாலை 4.00 மணிக்கு ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை குவித்தது. இதையடுத்து 160 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட வெற்றியிலக்கினை 15 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டினை இழந்து கடந்தது. ஐதராபாத் அணி சார்பில் டேவிட் வோர்னர் 38 பந்துகளில் 5 ஆறு ஓட்டம் 3 நான்கு ஒட்டம் அடங்களாக 67 ஓட்டங்களை குவித்தது ஆட்டமிழந்ததுடன், ஜோனி பெயர்ஸ்டோ 43 பந்துகளை எதிர்கொண்டு 7நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்களாக 83 ஓட்டத்துடனும், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் யர்ரா ப்ரித்விராஜ் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார். நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம் http://www.virakesari.lk/article/54367
 19. சத்தமின்றி சாதிக்கும் இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி அணி! ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 37 ஆவது போட்டி நேற்று டில்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டன. இதில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியானது, முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்த அணி சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 69 ஓட்டங்களையும், மன்தீப் சிங் 30 ஓட்டங்களையும் எடுத்தனர். டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் தரப்பில், சந்தீப் 3 விக்கெட்டுக்களையும்;, அக்ஷர் பட்டேல் மற்றும் ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. இதில், பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது பிரித்வி ஷா 11 ஓட்டங்களில் வெளியேறினார். இவரை அடுத்து தவானுடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்து, நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் அரை சதமடித்து 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற, இவரையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும், இறுதிவரை நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் அய்யர், 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். இறுதியில் டெல்லி அணி 19.4. ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து, 166 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. http://athavannews.com/சத்தமின்றி-சாதிக்கும்-இள/
 20. கொழும்பு குண்டுவெடிப்பு – இதுவரை 13 பேர் கைது கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக தெமட்டகொட பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் இருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் இதுவரை 215 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர். நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பல குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று வந்த நிலையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் போன்றவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னரும் கட்டநாயக்க விமான நிலையத்தில் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் பல பகுதிகளில் குண்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் முக்கிய பகுதிகள் மற்றும் வீடுகளிலும் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் உரிமைகோரவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு சிவில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இத்தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. http://athavannews.com/கொழும்பு-குண்டுவெடிப்ப-2/
 21. இன்னும் காத்தான்குடி படுகொலையோடு கட்டிக்கொண்டு கிடக்க வேண்டியான். எங்கள் மக்களை மாமாங்கத்தில் இருந்து.. திருக்கேதீஸ்வரம் வரை விரட்டினானுகள்.. கொன்று குவித்திட்டானுகள்... இப்ப தேவாலாயம் மீதான தாக்குதல் பழிவாங்கல் என்று காட்ட நினைக்கும் உங்களின் ஈனப்புத்தி.. எவருக்கும் வராது.
 22. இருக்கலாம் மேலைநாட்டு கிறிஸ்தவர்கள் பல மத்திய கிழக்கு நாடுகள் மீது போர்தொடுத்து லட்ஷ கணக்கில் மக்களை கொன்று வருகிறார்கள் அவ்வப்போது பல அப்பவாவிகளை கொன்று தமது மீடியாக்களின் உதவியுடன் பழிகளை வேறு நபர்கள் மீதும் போட்டு விடுவார்கள். பள்ளிவாசலில் இறந்தவர்கள் ஆத்திரத்தில் உண்மையை மறந்து இருக்கலாம் இப்போ ஆதாரங்கள் மூலம் உண்மையான கொலையாளிகளை கண்டுவிடார்கள் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். உண்மை இறைவனுக்கே வெளிச்சம்.
 23. "சோசல்காரி" என்றால் என்னவென்று பொருள் விளக்கம் சொன்னால், நாங்களும் ரசிப்போம். ('ரோசாப்பூ ரவிக்கைக்காரி' என்றுமட்டும் சொல்லிப் போடாதையுங்கோ..!)
 24. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளுக்கு பழிவாங்கலாக இருக்கும் என்கிறீர்களா?
 1. Load more activity