யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

24 hours

Showing topics posted in for the last 1 days.

This stream auto-updates     

 1. Today
 2. கோபுரதரிசனம் கோடி புண்ணியம்......!
 3. அதில்லை விசயம் சிறியர், இங்கே முக்கியமாக வேலையில் வரும் டென்ஷன் குறைக்கவே பலர் வருகின்றனர். அவர் வடையுடன் வந்தாரெனில், எவ்வளவுக்கு ரிலாக்ஸ் ஆகலாம் என பீல் பண்ணி வந்து இருக்கிறார் என்பதை புரிந்து, அதற்கான ஆதரவை தருவோம் என்பதே எனது கருத்து. இங்கேயும் வந்து வேலை விசயமா எழுதுங்க எண்டால், நியாயமில்லை. உதாரணமாக, தமிழ்சிறி, என்ற ஒருவர், வேலையில் லீவு எடுத்த விதம் குறித்து எழுதப் போய், ஏனடா இங்கே சொன்னோம் என்று டென்ஷன் ஆக்கி விட்டோமா, இல்லையா? அவர் சமையல் குறிப்பும் தரட்டும். வசதியான போது, வேறு விபரங்களும் தரட்டும். என்ன, நீங்கலாமா இங்க என்று தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினால், ஒதுங்கிவிடுவார்கள். பிறகு என்னைய மாதிரி, நாதாரிகளிடம் மாட்டி, சின்னாபின்னமாவீர்கள் என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.
 4. இது கண்காணிப்பதற்காகவல்ல இன்னும் ஊக்கத்துடன் அவர்களை பார்க்க வைப்பதற்கு....!
 5. எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! தீபச்செல்வன்.. April 19, 2019 ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாடு எத்தகைய நீதியில் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் அன்னையர்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். தெருவில் வீழ்ந்து புரண்டழும் இந்த தாய்மாரைப் பார்த்தும் இலங்கை அரசும் உலகமும் நீதியை வழங்காமல் மௌனித்து அநீதி காக்கிறது.அன்னையர்களின் கண்ணீருக்கு பதில் அளிக்காதிருக்கும் மனிதாபிமானமற்ற கொடிய முகத்தையே நாம் உணரவேண்டியுள்ளது. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். அன்னையர்கள் தவித்து வாழும் தேசங்களில் வடக்கு கிழக்கு தமிழ் தேசமும் ஒன்று. ஈழம் முழுக்க முழுக்க அன்னையர்களின் தவிப்பாலும் கண்ணீராலும் ஏக்கத்தாலும் காத்திருப்பினாலும் மூழ்கியதொரு தேசம். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொடரும் நிலையிது. ஈழத்தில் இப்போது நடக்கும் போராட்டங்களைப் பார்க்கும்போது அர்ஜன்டீனா அன்னையர்களின் போராட்டமே நினைவுக்கு வருகிறது. அந்நாட்டில் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டபோது, அவர்களை மீட்க அன்னையர்கள் தெருவுக்கு வந்து போராட்டங்களை நடத்தினர். சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதை நினைவுபடுத்தி, கடதாசிச் சைக்கிள்களை செய்து வைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் துயரமும் மனித மாண்புக்கு இழிவு சேர்க்கும் செயலுமாக, போராட்டத்தில் ஈடுபட்ட அன்னையர்களையும் காணாமல் ஆக்கப்பட்டனர். ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக அன்னையர்கள் தம்மை உருக்கி காணாமல் போனபடி போராட்டத்தை நடத்துவதற்கு ஒப்பானதொரு செயலே இது. இன்று தியாகி அன்னை பூபதியின் நினைவுநாள். ஏப்ரல் 19 1988ஆம் ஆண்டு இந்தியப் படைகளுக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தவர் அன்னை பூபதி. இவர் பத்துப் பிள்ளைகளின் தாய். ஆனாலும் தன் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். இவர் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் அன்னையர் முன்னணியின் முதன்மைச் செயற்பாட்டாளர். இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அன்னையர் முன்னணி சார்பில் போராட்டத்தை மேற்கொண்டார். அன்னையர் முன்னணியின் கோரிக்கைக்கு இந்தியப் படைகள் செவிசாய்க்கவில்லை. அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. 1988இல் ஜனவரி 4ஆம் திகதி திருகோணமலையிலும் பெப்ரவரி 10ஆம் திகதி கொழும்பிலும் அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அன்னையர் முன்னணியின் கோரிக்கைகளை இந்தியப் படைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்த அன்னையர் முன்னணி தீர்மானித்தது. சாகும்வரையிலான போராட்டத்திற்கு பல அன்னையர்கள் முன்வந்தனர். எனினும் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது. இதன்படி குலுக்கல் முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். பெப்ரவரி 14 மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருந்தபோது அன்னம்மா டேவிட் கடத்தப்பட்டமை காரணமாக இவரது உண்ணாவிரதப் போராட்டம் தடைப்பட்டது. இதனையடுத்தே அன்னை பூபதி மார்ச் 19 போராட்டத்தில் குதித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை பூபதி “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” என்று கடிதம் எழுதி வைத்தார். நீர் மட்டும் அருந்தியபடி, உணவை விடுவித்து போராட்டத்தில் ஈடுபட்டார் அன்னை பூபதி. உண்ணா விரதப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள், அன்னை பூபதியின் பிள்ளைகள் கடத்தப்பட்டபோதும் இவரது உண்ணிவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இந்திய படைகளினால் இவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சரியாக ஒரு மாத்தின் பின்னர் ஏப்ரல் 19 அன்னை பூபதி உயிர் துறந்தார். இந்திய நாட்டின் அகிம்சை முகத்தை திலீபன் என்ற போராளி கிழித்தெரிந்த நிலையில் அன்னை பூபதியின் அறப்போராட்டம் ஊடாக ஈழப் பொதுமக்களால் இந்திய அரசின் அகிம்சை முகம் கிழிக்கப்பட்டது. அன்னைபூபதி ஈழத் தமிழ் மக்களின் அறப்போராட்டத்தின் முகம். இந்திய படைகளின் அராஜகங்களுக்கு எதிரான அற வழி ஆயுதம். ஜனநாயக வழிப் போராட்டத்தின் அடையாளம். இன்றைக்கு ஈழத்தில் தாய்மார்கள் தெருத் தெருவாக வீழ்ந்து புரண்டு போராட்டத்தில் ஈடுபடும்போது அன்னை பூபதியே நினைவுக்கு வருகிறார். இன்றைக்கு எங்கள் தெருவெல்லாம் அன்னை பூபதிகள் உள்ளனர். அன்னை பூபதி இந்திய அரசின் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே உண்ணா விரதம் இருந்து உயிர் துறந்தவர். போரை நிறுத்தி, தம் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமே அவரிடமிருந்தது. இன்று எங்கள் தெருவெங்கும் அன்னையர்கள் போராடுவதும் பிள்ளைகளுக்காகவே. காணாமல் ஆக்கப்பட்ட தம் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் அவர்களின் உண்மை நிலை என்ன என்று அறிவிக்க வேண்டும் என்று போராடுகின்றனர். தம்மை உருக்கி, தம்மை அழித்து மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கும் அன்னை பூபதியின் போராட்டத்திற்கும் மிக நெருக்கம் உண்டு. எங்கள் அன்னையர்கள் – அன்னை பூபதிகள் நடத்தும் போராட்டங்கள் இலங்கை அரசின் கொடிய இன ஒடுக்குமுறை முகத்தை அம்பலம் செய்கிறது. அன்னை பூபதியின் 29 ஆண்டு நினைவுநாள் என்பது அன்னையர்கள் இத் தீவில் மூன்று தசாப்தங்களாக இருக்கும் புத்திர விரத்தின் அடையாளத்தையும் ஈழச் சனங்களின் வாழ்வையும் உணர்த்தும் ஒரு நாளாகும் அன்னைபூபதி அம்மாவின் நினைவு நாட்களின் முதல்நாள் ஈழநாதம் பத்திரிகையில் அவரது ஒளிபட இணைப்பு வரும். ஈழம் முழுதும் பெப்ருவரி 10 முதல் மார்ச் 19 வரை அவரது நினைவில் மூழ்கியிருக்கும். பள்ளிக்கூடத்திலும் தெருவிலுமாக எங்கள் வாழ்வோடு அவரது நினைவு நாட்கள் கலந்திருந்தன. ஈழத் தாய் சமூகத்தின் குறியீடே அன்னை பூபதி. குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் http://globaltamilnews.net/2019/118610/
 6. டிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு.. April 19, 2019 டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகை வழக்குரைஞரிடம், தலையீடு குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரை நீக்கச் சொன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என ஜனாதிபதி டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/118622/
 7. தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – April 18, 2019 தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தெரிவித்தார். வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் ; மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 30 ஆண்டுகள் போருக்கு பின் ஒரு சகாப்தம் முடிந்திருக்கின்றது. ஒரு தலைமுறையே எங்கள் தேசத்தை விட்டு போகவேண்டிய கட்டாயத்தினை காலம் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையினாலே மீதி இருக்கின்ற நாங்கள் வளர்ந்துவரும் இந்த இளம் சமுதாயத்திற்கு தலைமை தாங்குகின்ற இரட்டிப்பான பொறுப்பை எங்கள் தோளிலே சுமந்திருக்கின்றோம். ஆகையினாலேதான் இங்கே கூடியிருக்கும் அரசியல் . அரசாங்கம், அரசு என்ற மூன்று பகுதியையுடைய பிரதிநிதிகளையும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள். வௌ;வேறு பகுதிகளில் கடமையாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழரை பொறுத்தவரையில் இருப்பது ஓரு தேசம், இருப்பது ஒரு எதிர்காலம் கட்டவேண்டியது ஒரு சமுதாயம் ஆகையினாலே கட்டியமைக்கவேண்டிய அந்த சமுதாயத்திற்கான குறைந்தது குறிப்பிட்ட காலத்திற்காவது உங்கள் வேற்றுமைகளை விட்டு எங்கள் மக்களுக்காக பணிபுரியுங்களென்று தாழ்மையுடன் நான் கேட்டுக்கொள்வதுடன் அதுவே இந்த தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் நாங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய திடமான தீர்மானம் ஆகுமென்று ஆளுநர் இதன்போது தெரிவித்தார். எமக்கு செல்லவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கின்றது. செய்யவேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றது. ஆகையினாலே பேச்சுக்களையும் சந்திப்புக்களையும் குறைத்து அதிகளவில் வேலை செய்யவேண்டிய ஒரு கட்டாயம் எங்கள் மத்தியில் உள்ளது. இந்த புத்தாண்டிலே வடமாகாணம் ஒரு முன்மாதிரியான மாகாணமாக இருக்கவேண்டும் என்பதே எனது நோக்கமென்றும் குறிப்பிட்ட ஆளுநர், வடமாகாணத்தின் 28 பில்லியன் ரூபா வரவு செலவுத்திட்டத்தில் நான் நேற்று கையொப்பமிட்டுள்ளதுடன் இந்த 28 பில்லியனில் நாங்கள் எவ்வளவு வடமாகாணத்திற்குள் உழைத்துக் கொள்ளப்போகின்றோம் என்பது கேள்விக்குறியாகவும் கவலைக்குரியதாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த மாகாணத்தின் முழுவருமானத்தையும் எங்களுக்குள்ளேயே நாங்கள் உழைத்துக் கொள்ளமுடியும். ஏனெனில் பொருளாதார சுதந்திரம் இல்லாத ஒரு சமுதாயம் அரசியல் சுதந்திரத்தை யோசிக்கமுடியாது. ஆகையினாலே அடிப்படையாக எமது மக்கள் பொருளாதார சுதந்திரத்தை அடையக்கூடிய வழிமுறைகளை நாங்கள் தேடவேண்டியதுடன் அது எங்கள் ஒவ்வொருவருடைய கடமையாகவுள்ளது என்றும் ஆளுநர் ; குறிப்பிட்டார். தேசத்தை கட்டியெழுப்பும் பணியிலே அரசியல் சின்னங்களையும் அரசியல் யாதார்த்தங்களையும் குறிக்கோள்களையும் ஒரே ஒருமுறையாவது பின்வைத்து இந்த மக்களை நிமிர்த்த செய்வதற்காக முன்வாருங்களென வடமாகாணத்தின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்தார். http://globaltamilnews.net/2019/118582/
 8. வல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. April 18, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி – ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தென்கிழக்கு மூலையில் கற்கோவளம் வங்கக்கடல் தீர்த்த சமுத்திரத்துக்கு செல்லும் வீதியின் வலது புறத்தில் அமைந்துள்ள சம்புப்புல் பரம்பல் இன்று வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் 10 பரப்பு நிலத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த சம்புப் புல் பரம்பல் தீப்பற்றி எரிவதைக்கண்ட அதற்கு அண்மையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் உடனடியாக வல்லிபுரம் கிராமசேவையாளர் ஸ்ரீ சங்கருக்கு தகவல் வழங்கினர். கிராம சேவையாளர் பருத்தித்துறை பிரதேசசெயலர் ஆழ்வாப்பிள்ளை சிறிக்கு தகவல் வழங்கியதையடுத்து பிரதேச செயலாளர் பருத்தித்துறை பிரதேச சபைத்தலைவர் அ.சா அரியகுமாருடன் தொடர்பு கொண்டு பிரதேச சபை தண்ணீர் பவுசர்கள் எடுத்துச்செல்லப்பட்டு சபை ஊழியர்கள் தண்ணீரைப்பாய்ச்சி தீயை அணைக்க சுமார் இரண்டு மணி நேர போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். குறித்த தீயை அணைக்காது போனால் வல்லிபுரக்கோவிலுக்கு கிழக்கே உள்ள பனை வடலிக்கு தீ பரவி அருகில் உள்ள சவுக்கங்காட்டுக்கு பரவி பெரும் சேதங்களை ஏற்படுத்தி இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். http://globaltamilnews.net/2019/118577/
 9. நெடுந்தீவில் கடும் வறட்சி April 18, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு வன ஜீவராசி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன என நெடுந்தீவு பிரதேச செயலகம் தெரிவித்தது. நெடுந்தீவில் கடுமையான வறட்சி காணப்படுகின்றது. அதனால் குதிரைகள் குடிநீர் இல்லாது தவித்து வந்த நிலையில் , குதிரைகள் நீர் அருந்துவதற்கு என கட்டப்பட்டு உள்ள தொட்டிகளில் தினமும் வணஜீவராசி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நீர் ஊற்றப்படுகின்றது. அதேவேளை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இடர் முகாகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் சாராப்பிட்டியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்தும் , தேசிய குடிநீர் வழங்கல் அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தும் குடிநீரை பெற்று வழங்கி வருவதாக பிரதேச செயலகம் மேலும் தெரிவித்தது http://globaltamilnews.net/2019/118556/
 10. தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வட மாகாணசபை முன்னள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தவிசாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். http://www.virakesari.lk/article/54200
 11. மாங்குளம் பகுதியில் பாரிய பஸ் விபத்து மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து பாரியளவில் இடம்பெற்றுள்ள போதிலும், தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்குள்ளாகியுள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகம் காரணமாக குறித்த பஸ் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது. பாதையை விட்டு விலகிய பஸ் ஏ9 வீதியில் அமைந்துள்ள கனகாம்பிகை குளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது. மிக மோசமானமுறையில் குறித்த பஸ் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவருகின்றது. எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/54191
 12. இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும்போது அவை பயனற்றுப்போவது கவலையளிக்கின்றது - இந்திய பாடகி ஸ்ரீநிதி இலங்கையில் பெரும்பாலான தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக இந்தியர்கள் குரல்கொடுத்தும் அது சில சமயங்களில் பயனற்று போகின்றபோது கவலையளிக்கின்றது என இந்திய பாடகி ஸ்ரீநிதி தெரிவித்தார். வவுனியா வர்த்தக சங்கம் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஒழுங்கமைத்துள்ள இசை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வவுனியா வந்துள்ள நிலையில் இன்று ஊடகங்களுக்காக கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை கலைஞர் கடின உழைப்பாளிகள். குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரை பாடகர்கள் உட்பட அனைத்து துறைகளிற்கும் வாய்ப்புக்கள் நிறைய உள்ளது. ஆனால் இலங்கையில் அது குறைவாகவுள்ளதுடன் இங்குள்ள கலைஞர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்வதற்கும், தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்கும் கஸ்டப்படுகின்றனர். வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிற்கு நான் முன்பு வந்திருக்கிறேன், அப்பொழுது இங்குள்ள கலைஞர்களின் திறமைகளை பாத்திருக்கிறேன். இங்கு சிறந்த கலைஞர்கள் மட்டுமன்றி சிறந்த விளையாட்டடு வீரர்களும் உள்ளார்கள். இங்குள்ள கலைஞர்கள் மிகவும் திறமையாக செயற்படுகின்றார்கள். எனவே இங்குள்ள ஊடகங்கள் அவர்களிற்கு ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் அனைவரும் அவர்களுக்காக கண்களை திறந்து பாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன். இலங்கையில் நிறைய தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் கலைஞர்களும் மக்களுடன் மக்களாக இருந்திருக்கிறார்கள். அப்பொழுது இம்மக்களிற்காக குரல் கொடுத்திருந்தோம். இவர்களை காப்பாற்றுவதற்காகவும் இவர்களை தூக்கி விடுவதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இருந்தும் அது சில சமயங்களில் பயனில்லாமல் பயனற்றதாகவே போயுள்ளது என நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது என தெரிவித்தார். http://www.virakesari.lk/article/54190
 13. மாந்தை பகுதி காணிகளை கையளிக்கும் முயற்சி தோல்வி ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணை பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் ஏனைய நிலம் வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கயூ மரங்கள் பல ஏக்கர்கள் பயிர்செய்யப்பட்ட காரணத்தினால் குறித்த காணிகளை இராணுவத்தின் உதவியுடன் இலங்கை கயூ கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்றைய தினம் குறித்த காணிகளை பார்வையிடுவதற்காக இலங்கை கயூ கூட்டுத்தாபன தவிசாளர் மற்றும் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர். இந் நிலையில் குறித்த விஜயத்தின் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலையிட்டு குறித்த 275 ஏக்கர் காணிகளும் மாந்தை பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் முன்னால் போராளிகளுக்கு வழங்குவதற்ககென பிரதேச செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பட்டியலும் தயாரிக்கப்பட்டது. இந் நிலையில் எந்த விதத்திலும் கயூ கூட்டுத்தாபனத்திற்கு குறித்த காணிகளை வழங்க முடியாது எனவும் கட்டாயத்தேவை இருப்பின் வனவள திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்ட 275 ஏக்கர் நிலத்திலும் கயூமரங்கள் காணப்படுவதால் அரச அனுமதி பெற்று அக்காணிகளை கயூ கூட்டு தாபனத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்த நிலையில் முரண்பாடு ஒன்று தோற்றம் பெற்ற நிலையில் குறித்த விடுவிக்கப்பட்ட காணிகளை உடனடியாக பிரதேச செயளாலரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டது. அதே நேரத்தில் கயூ கூட்டுத்தாபனத்தின் கோரிக்கையின் அடிப்படையில் குறித்த வெள்ளாங்குளம் பண்ணை பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 30 ஏக்கர் காணிகளை பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி கயூ கூட்டு தாபனத்திற்கு வழங்க அனுமதி பெற்று தர முயற்சி எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கபட்ட நிலையில் குறித்த 275 ஏக்கர் பண்ணை நிலத்தையும் கையகப்படுத்தும் முயற்சி கைவிடப்பட்டது. http://www.virakesari.lk/article/54187
 14. அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் (ஆர்.யசி) இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.என்.எஸ் "மில்லிநோகேட் "மற்றும் யு.எஸ்.எஸ் "இஸ்ப்ருவன்ஸ் "ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்து வந்தடைந்தன. வருடாந்தம் இடம்பெறும் கடற்படை பயிற்ச்சிகளில் கலந்துகொள்ள இலங்கைக்கு இவ்வாறு வருகை தந்துள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் இரண்டையும் இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டன. யு.எஸ்.என்.எஸ் மில்லிநோகேட் போர்க்கப்பலானது 2362 தொன் நிறைகொண்டதுடன் 155.3 மீட்டர் நீளம் கொண்டதாகும். அதேபோல் யு.எஸ்.எஸ் இஸ்ப்ருவன்ஸ் கப்பலானது 9580 தொன் நிறை கொண்டதாகும். இவ்விரண்டு போர்க்கப்பல்களும் இலங்கை கடற்படை கப்பல்களுடன் இணைந்து தமது கடற்படை பயிற்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளன. இரண்டு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு நட்புறவு வலுவடைந்துள்ள நிலையில் இரு நாடுகளின் கடற்படை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் நோக்கிலும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இந்த கூட்டு கடற்படை பயிற்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/54186
 15. ஆயிரம் கணக்கானவர்களின் கண்ணீர் வெள்ளத்துடன் பூமியில் சங்கமமாகிய 10 உறவுகள் (காணொளி) மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் ஆயிரம் கணக்காணவர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இன்று மாலை மண்ணுடன் சங்கமமாகின. மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் உடல்கள் இன்று அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டன. பத்து பேரின் உடல்களும் டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன. அங்கு நாட்டின் பல பிரதேசங்களிலும் இருந்து திரண்டு வந்த ஆயிரம் கணக்கான மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதனால் மட்டக்களப்பு நகரம் எங்கும் சோகமயமாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியைகள் மற்றும் இறுதி ஆராதனைகளுக்காக மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் உடல்கள் வைக்கப்பட்டன. இதன் பின்னர் சடலங்கள் புளியங்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இறுதி அஞ்சலி வழிபாடு ஒப்புகொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறு பேரின் உடல்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதோடு டச்பார் பிரதேசத்தினை சேர்ந்தவர்களின் உடல்கள் தன்னாமுனை பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற தேவ ஆராதனைகளை தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டன. மட்டக்களப்பில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், மாணவர்கள், இளைஞர்கள், கிராமத்தவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர். http://www.virakesari.lk/article/54185
 16. பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது.....!
 17. வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க (ஆர்.யசி) ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பலரது கருத்துக்கள் உள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணியாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால் பெற முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பல கருத்துக்கள் உள்ளன ஆனால் குழப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரதான நபர்கள் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் நகர்வுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இப்போது கட்சிக்குள் குழப்பங்கள் நிலவுவதாக கூறும் கதைகள் அனைத்துமே பொய்யானவை. கட்சிக்குள் பல கருத்துக்கள் உள்ளன. ஐக்கிய தேசிய கட்சியாக சிலர் தமது நிலைப்பாட்டினை கூறுகின்றனர். ஐக்கிய தேசிய முன்னணியாக நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் இடையில் பல கருத்துக்கள் நிலவுகின்றது. ஆகவே இவை அனைத்தையும் தாண்டி பொதுவான ஒரு நிலைப்பாட்டினை எம்மால் எட்ட முடியும். இப்போதும் அவ்வாறான நிலைப்பாடு ஒன்றினை நாம் எட்டியுள்ளோம். எவ்வாறு இருப்பினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெரும். இதில் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவில் வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவில் எம்மால் ஆட்சியை அமைக்க முடியும். சகல மகளுக்குமான பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை நாம் நல்லாட்சியில் முன்னெடுத்து வருகின்றோம். அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து ஆரோக்கியமான திசைக்கு நாட்டினை கொண்டு செல்வோம் என்றார். http://www.virakesari.lk/article/54184
 18. நான் கிரிக்கட் சூதாட்டம் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று சந்தேகப்பட்ட ஆட்டம் நேற்றையது.....! டெல்லி நேற்று வெரி டல்....டெல்லி நேற்று பாட்டிங் செய்யவே இல்லை ,ஓவர்கள் குறைந்தது கொண்டு வாறதை பற்றிய கவலை கொஞ்சம் கூட கிடையாது. அட ஒரு மனுஷன் ஸ்கோர் போர்ட்டை கூடவா பார்த்து விளையாட மாட்டாங்கள்........!
 19. எல்லோரும் சிக்ஸ் பாக்குக்கு அலையுறாங்கள் இங்க டுவல் பாக்காய் கிடக்கு.மிளகாய் சுத்தி போடுங்கோ......!
 20. டெல்லியை வெற்றிகொண்டது மும்பை ஐ.பி.எல். 12 ஆவது தொடரின் 34 ஆவது போட்டியில் தனது சொந்த ஊரில் வைத்து டெல்லி அணி மும்பை அணியிடம் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து மும்பையின் தொடர் வெற்றிக் கணக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தது மும்பை. டெல்லி கெபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ரோகித் சர்மா துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார். இதையடுத்து, மும்பை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் டி கொக் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் 30 ஓட்டங்களுடனும் டி கொக் 35 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து பென் கட்டிங் 2 ஓட்டங்களுடனும் சூர்யகுமார் யாதவ் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களை எடுத்தது. குருணால் பாண்டியா 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். இதையடுத்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 128 ஓட்டங்களை எடுத்து மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. டெல்லி அணியில் அதிக பட்சமாக பிரித்வி ஷா 20 ஓட்டங்களையும் தவான் 35 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தனர். இப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்டியா தெரிவுசெய்யப்பட்டார். http://www.virakesari.lk/article/54189
 21. இஞ்சி திண்ட குரங்கு மாதிரி ஆகிவிடுவீர்களே! நானும் 2017இல் ஆரோக்கியம் முக்கியம் என்று நல்ல சாப்பாடுகளை ஒரு மூன்று மாதம் தொடர்ந்து உண்டு நல்ல பயனையும் பெற்றேன். ஆனால் உணவுகளை மாற்றி மாற்றி சாப்பிடவேண்டும். இல்லையேல் உடல் பழக்கப்பட்டு ஆரோக்கியம் இல்லாமல் போய்விடும்! அந்த மூன்று மாதங்களில் தேநீரோ, கோப்பியோ அருந்தவில்லை ( ஆனால் அப்படி ஒரு கட்டுப்பாடும் இருக்கவில்லை). சீனி இல்லாமல் தேநீர், கோப்பி குடித்துப் பழக்கம் இல்லாததால் முற்றாகக் கைவிட்டிருந்தேன். எனினும் சீரகத்தண்ணி, தேனும் எலுமிச்சைப் பழமும் கலந்த மிதச்சூடுள்ள நீர், இன்னும் பல காலையில் குடித்துவந்தேன்! இப்போது பழையபடி வேதாளம் முருங்கைமரத்தில் ஏறியமாதிரி தினமும் பல சொக்கிலேற் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிவருகின்றேன்!
 22. நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 23. அதுதானே ..... நாங்கள் கடலை வடை உடைந்தால் பக்கோடாவாகவும் உளுந்து வடை உதிர்ந்தால் குழம்பாகவும் மாத்தி எப்படியோ சாப்பிட்டு விடுவோம்.... ஆனால் அறிவுதான் கொஞ்சம் கம்மி. அதை நீங்கள் வளர்த்து விடுங்கள் நில்மினி....!
 1. Load more activity