Jump to content

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம்.
  3. "ஓடம்" "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன் காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள் பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!" "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத் தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!" "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல் திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார். அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல் பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்! அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை. அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான். எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான். அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை? ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர். ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க, காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது. அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள். அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. Today
  5. 15/2/24 மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர் கணக்க்கில மட்டோ அல்லது என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  6. எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
  7. சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣. பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
  8. இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
  9. ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.
  10. யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
  11. ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும். உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  12. அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  13. எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣. ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன்.
  14. என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣.
  15. அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  16. 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம் நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
  17. Yesterday
  18. கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
  19. அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  20. நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
  21. ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு 200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
  22. சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால் படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும் ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
  23. ஆழ்ந்த இரங்கல்கள். மேலே ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது , கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’ என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது. ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது. - மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower).
  1. Load more activity
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.