Jump to content

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

 1. Past hour
 2. நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அலுவலக சேவைகள் உட்பட 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்கஜன் இராமநாதன் செய்திகளைக்கூட வாசிப்பதில்லையா? அல்லது வாசிக்கத் தெரியாதா....???.
 3. தனது நாட்டு மக்கள்பற்றிய சிந்தனை இல்லாது, இராணுவச் சிந்தனையுடன் ஆட்சிசெய்ய விளையும் கோத்தபாயவின் தரமற்ற அரசாட்சிபற்றி, வீரகேசரிமூலம் மக்களுக்கு எடுத்துரைக்க முயலும் சத்ரியன் அவர்கள், குள்ள நரியைவிடவும் மோசமான கள்ள மூளை கொண்ட ரணில் விக்கிரம சிங்காவை வெளிப்படையாக விமர்ச்சிக்கத் தயக்கம் காட்டுவது ஏனென்று புரியலில்லை. ரணிலுக்குச் சிங்கக்கொடி ஆட்டிய சம்பந்தரின் விசுவாசிகளில் ஒருவரோ தெரியவில்லை.
 4. உதவிகள் தற்போது மெதுமெதுவாக கிடைக்கும் போல. ஜப்பான் கூத்தமைப்புக்கு ஒரு முகத்தையும் அரசுக்கு இன்னொரு முகத்தையும் காட்டுகிறது. தற்போது 3 பில்லியன் அமெரிக்க டாலரை ஜப்பான் கொடுக்கப் போகிறது. அமெரிக்கா இந்தியா அவுஸ் என்று ஒராளுக்கு பின் ஒராளாக பணம் கொடுப்பார்கள். தற்போதுள்ள நிலமை இன்னும் கொஞ்ச நாளில் மாறலாம்.
 5. Today
 6. நாங்கள் எல்லோரும் பணத்தை முற்றத்தில் தொலைத்துவிட்டு, கொல்லைப்புறத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். எப்படிக் கண்டடைவோம்
 7. நான் பார்த்த விளம்பரத்தில்... யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதி.. முகவரி இருந்தது.
 8. இத்தகைய மரணங்கள் வேதனையைத் தருவதாக இருந்தாலும், கழிவகற்றல் மற்றும் சுத்தம் செய்தலுக்கு நவீன தொழில்நுட்பங்களுக்கு மாறுவதற்கான வேகத்தை, அழுத்தத்தை அதிகரிக்கும்.
 9. அப்படி நான் நினைக்கவில்லை. வெவ்வேறு விதமாக, வெவ்வேறு காலங்களில் இது பற்றி பலரும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். சிலவற்றை அடிக்கடி நினைவூட்ட வேண்டும் என்பதால் எனக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தினேன். அவ்வளவுதான்.
 10. @விளங்க நினைப்பவன், உங்களது கருத்துக்களுக்கு நன்றி.. நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஊருக்குதான் உபதேசம் ஆனால் எங்களுக்கு இல்லை என ஒரு விஷயத்தை கூறலாம் என நினைக்கிறேன், தமிழ் மொழி தனியே வீட்டில் பேசுவதால் மட்டும் வளரப்போவதில்லை. கிருபன் அதனைப்பற்றி கூறியுள்ளார். அதனால் மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். நீங்களும் அதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெற்றோரையும் நான் குறை கூற மாட்டேன்.. ஏனெனில் கட்டாயப்படுத்தி ஒன்றை திணிக்க முடியாது என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டுள்ளனர். அதே போல நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. தமிழில் உள்ள பற்று காரணமாக வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவுகிறார்கள் அதற்குள் கற்பித்தலும் ஒரு வழி, அவ்வளவுதான்.. இந்த பதிவில் உங்களது பல கருத்துக்களை கவனித்துவிட்டே இதைக்கூற விரும்பினேன். குறை நினைக்க வேண்டாம் ———————————————— @தமிழ் சிறிஅண்ணா, @Paanchஅங்கிள், @Eppothum Thamizhanஅண்ணா மற்றும் @ரதி உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..
 11. வந்தாலும் வரலாம்.. ஏனெனில் வாக்குப்போட இன்னொரு புதிய வாக்காளர்களுக்கு உரிமை கிடைக்கும். அவர்களும் அன்றைய நிலையில் நாடு இருக்கும் நிலைக்கேற்ப வாக்களிப்பார்கள். 36 வருடங்களுக்கு முன் நடந்தவற்றை பற்றி ஏன் யோசிக்கப் போகிறார்கள்..
 12. சிங்களவரும், முஸ்லீம்களும்... நாட்டுக்கு கிடைத்த சாபத்தை, தங்களின் வசதிக்கு ஏற்ற மாதிரி... சொல்கிறார்கள். ஆனால்... நாட்டில் 70 வருடமாக, புரையோடிப் போன இன வெறி, அதனால் ஏற்பட்ட யுத்த செலவுகள், ஒன்றரை லட்சம் தமிழ்மக்களை கொன்ற சாபத்தை.. வசதியாக, மறைத்து விடுகிறார்கள்.
 13. அப்படித்தான் சொல்கிறார்கள்.. பார்ப்போம். மிக்க நன்றி vasse..
 14. முடிவுக்கு வருகிறதா ரணில் அரசு? சத்ரியன் கோட்டா – ரணில் அரசாங்கத்தின் பயணம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகருகிறதா என்ற சந்தேகம் இப்போது பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், நாட்டின் நிலைமை தற்போது மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. கோட்டா- மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் இருந்த நிலையை விட, மிக மோசமான கட்டத்துக்குள் நாடு தள்ளப்பட்டிருக்கிறது. சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர், மக்களின் எதிர்ப்பலையை சமாளிக்க கோட்டா -மஹிந்த அரசின் அமைச்சர்கள் முதலில் பதவி விலகினார்கள். அலரி மாளிகையில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, மஹிந்தவும் விலகிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்காகவே, ஒற்றை உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டார். அவரின் மூலமாக மேற்குலக நிதியுதவிகளை கொண்டு வரமுடியும் என்று ராஜபக்ஷவினர் நம்பினார்கள். ஆனால், சர்வதேச உதவிகளை எதிர்பார்த்தபடி, ரணில் விக்கிரமசிங்கவினால் பெற முடியவில்லை. அல்லது நாட்டு மக்களும், ராஜபக்ஷவினரும் எதிர்பார்த்த வேகத்துக்கு உதவிகளைப் பெறும் நடவடிக்கை நடந்தேறவில்லை. இது ரணில் விக்கிரமசிங்கவின் தவறு அல்ல. அவர் ஆட்சிக்கு வந்த போதே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்க 3 தொடக்கம், 6 மாதங்கள் செல்லும் என்று கூறியிருந்தார். சடுதியாக சர்வதேச உதவிகளை, இலங்கையின் பக்கம் திருப்புகின்ற வல்லமை தனக்கு இருப்பதாக அவர் ஒருபோதும் கூறவில்லை. அதேவேளை, அவர் வாராவாரம் ஊடகங்களின் ஊடாகவும், பாராளுமன்றத்திலும் உண்மையைச் சொல்கிறேன் என்ற பெயரில், வெளியிட்ட அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளுக்கும் மக்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்திய போதும், அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார் என்பதே உண்மை. அதாவது கடந்த காலத் தவறுகள் தான் தற்போதைய நிலைமைக்குக் காரணம் என்பதை, அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்த தவறவில்லை. அதன் மூலம், அவர் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்திருந்தார். ஆனால் ராஜபக்ஷவினரும், நாட்டு மக்களும், அவரிடம் எதிர்பார்த்தது வேறு. ரணில் வந்து விட்டார்- இனி அமெரிக்கா, இந்தியாவில் இருந்து உதவிகள் வந்து குவியும், என்ற அசட்டு நம்பிக்கை பலரிடம் காணப்பட்டதை மறுக்க முடியாது. அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தியமைக்கு ரணில் பொறுப்புக்கூற வேண்டியவரில்லை. ஏனென்றால், இப்போதைய நிலைமைக்கு அவர் எந்த வகையிலும் பொறுப்பாளி அல்ல. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் சாபத்தை தற்போது எதிர்கொள்கிறோம் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கடந்தவாரம் கூறியிருந்தார். கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் ஜனாசாக்களை எரித்ததன் சாபத்தையே அரசாங்கம் எதிர்கொள்கிறது என்று ரிஷாத் பதியுதீன், அதாவுல்லா போன்றவர்களும் கூறியிருந்தார்கள். எது சரியோ, ஏற்கனவே இழைக்கப்பட்ட தவறுகளின் பலாபலன்களைத் தான், நாடு தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. குறுகிய காலத்துக்குள் ஒட்டுமொத்த நாட்டையும் சீரழிவுக்குள் தள்ளியது போல, குறுகிய காலத்துக்குள் ஒட்டுமொத்த நிலைமைகளையும் மாற்றுவதற்கு ரணில் ஒன்றும் மாய வித்தைகளை நிகழ்த்துபவர் அல்ல. அதனை அவர் புரிந்து கொண்டிருந்ததால் தான், அவ்வப்போது உண்மைகளைப் போட்டு உடைப்பதாக, அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும், நாடு மோசமான கட்டத்துக்குள் –கிட்டத்தட்ட செயலிழந்து போகின்ற நிலைக்குள், தள்ளப்பட்டிருக்கின்ற சூழலில், இதற்குப் பொறுப்புக்கூறுகின்ற நிலையில் இருந்து அவராலும் தப்பிக்க முடியாது. இப்போது அரசாங்கத்தினால், நாளாந்த அரசாங்க செயற்பாடுகளைக் கூட, முன்னெடுக்க முடியாத நிலை, ஏற்பட்டுள்ளது. படிப்படியாக ஒவ்வொரு துறையாக செயலிழந்து, கல்வி, சுகாதாரம், உணவு விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் கூட முடங்குகின்ற நிலை உருவாகி விட்டது. இதற்கு ஆட்சியில் உள்ள அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மக்களின் கோபமும், எதிர்ப்பும், கோட்டாவின் மீது மட்டுமல்ல, ரணில் மீதும் தான் ஏற்படும். அதேவேளை, இப்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின், அவசரமாக எரிபொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதற்காக கட்டாருக்கும், ரஷ்யாவுக்கும் அமைச்சர்கள் பறந்திருக்கிறார்கள். இந்தியாவிடம் இருந்து அவசரமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பேச்சுக்களின் முன்னேற்றங்கள் ஏற்பட்டு, எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் ஆகலாம். ஆனால், இலங்கையை நம்பி இப்போது எரிபொருளை வழங்க எத்தனை நாடுகள் முன்வரும் என்ற கேள்வி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சர்வதேசஅளவில் இலங்கையின் பெயர் கெட்டுப் போய் விட்டது. பொருளாதார ரீதியாக தோல்வியடைந்து விட்ட நாடு என்ற அடையாளம் உருவாக்கப்பட்டு விட்டது. நியூயோர்க் நீதிமன்றத்தில் தங்களின் இறையாண்மை பத்திரங்கள் மீதான முதலீட்டை திருப்பிச் செலுத்துமாறு வழக்குத் தொடர்ந்திருக்கிறது அமெரிக்காவின் ஹமில்டன் வங்கி. இவ்வாறான நிலையில், நாட்டைச் சீர்படுத்துவதற்கு முதலீடுகளையோ, உதவிகளையோ வழங்குவதற்கு எந்த நாடோ, நிதி நிறுவனமோ முன்வராது என்று கூறியிருக்கிறார் சம்பிக்க ரணவக்க. அதனால், எரிபொருளை எந்த நாட்டிடம் இருந்தும் பெறமுடியாது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதேவேளை, கலாநிதி தயான் ஜயதிலக, இன்னொரு காரணத்தைக் குறிப்பிடுகிறார். தோல்வியுற்ற தலைமைக்கு சர்வதேச அமைப்புகள், நாடுகள் நிதியுதவிகளை வழங்காது என்பது அவரது கருத்தாக உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டரை ஆண்டுகளில் தன்னை ஒரு தோல்வியுற்ற தலைவராக அடையாளப்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார். அவருக்கு சர்வதேச அளவில் மதிப்பு இருந்தால், அதனைப் பயன்படுத்தி நெருக்கடிகளை தீர்த்திருக்க முடியும். அவர் ஆரம்பத்தில் பல நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார், சில நாடுகளின் தலைவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார். ஆனாலும், அவரது வேண்டுகோளை பெருமளவில் உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை. மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் அதாவது மருந்து, அத்தியாவசியப் பொருட்களின் உதவிகளை வழங்க முன்வந்தாலும், நெருக்கடியில் இருந்து இலங்கையை காப்பாற்றும் திட்டத்துக்கு எந்த நாடும் உதவ முன்வரவில்லை. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியடைந்த ஒன்று என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இந்த நிலையில், தோல்வியுற்ற, ஊழல் நிறைந்த அரசாங்கம் என அடையாளப்படுத்தப்பட்ட அரசாங்கத்துக்கு புதியதொரு தலைமைத்துவம் கிடைக்காதன்றி, சர்வதேசம் உதவத் தயாராக இருக்காது. நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கு புதிய தலைமைத்துவம் நாட்டைப் பொறுப்பேற்க வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம், எல்லாக் கட்சிகளும் பங்கேற்கும் ஒரு அவசரகால அரசாங்கம் பதவிக்கு வேண்டும். அதற்கான சூழல் தற்போது இல்லை. கோட்டா தாம் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று கூறிவிட்டார். எஞ்சிய பதவிக்காலம் முழுவதும் ஆட்சியில் இருப்பேன், தோல்வியுற்ற தலைவர் என்ற அடையாளத்துடன் வீட்டுக்குச் செல்லமாட்டேன் என்பது அவரது பிடிவாதம். இந்த நிலையில், அனைத்துக்கட்சிகளும் இடம்பெறும் ஒரு அரசாங்கத்தை அமைப்பது தான் இருக்கின்ற ஒரே வழி. அதுகூட பெரியளவில் வெற்றிகரமானதாக இருக்காது. ஏனென்றால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள், கோட்டாவின் தலைமையிலான அரசாங்கத்தில் தாங்கள் இடம்பெறமாட்டோம் என்கின்றன. இந்த நிலையில், மோசமடைந்து வரும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, மக்களின் கவனத்தை திசை திருப்ப கோட்டா மீண்டும் ஒரு புதிய முகத்தை கொண்டு வந்து நிறுத்த முற்படலாம். மக்களின் கோபம், கொந்தளிப்பாக மாறும் நிலை ஏற்பட்டால், அரசியலில் எதுவும் நடக்கலாம். அது கோட்டா- ரணில் அரசாங்கத்துக்கு முடிவுரை எழுதினாலும் ஆச்சரியமில்லை. ஆனால் ஒன்று, அவ்வாறு செய்தால் ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வரும், அதேவேளை, சர்வதேச உதவிகளை பெறுகின்ற முயற்சிகள் தடைப்படுவதும் உறுதி. https://www.virakesari.lk/article/130693
 15. நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி: ஏன்? மின்னம்பலம்2022-07-03 "அதிமுகவின் சட்ட விதிகளின்படி நான்தான் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்" என்று ஓ.பன்னீர் செல்வம், நேற்று (ஜூலை 2) வரை உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்க வந்தபோதுதான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கடந்த ஜூன் 23 ஆம் தேதி அரைமணி நேரத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில்... அன்றில் இருந்தே, ‘இனி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது’ என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். இதை எடப்பாடி பழனிசாமி தரப்பில் முதன் முதலில் சி.வி. சண்முகம் அறிவித்தார். அதன் பின் ஜூன் 26 ஆம் தேதி இரவு எடப்பாடி பழனிசாமியின் பெயர் குறிப்பிடாமல் தலைமை நிலையச் செயலாளர் என்ற அவரது பழைய பதவியைக் குறிப்பிட்டு 27 ஆம் தேதியன்று தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தை சட்ட விதிகளுக்குப் புறம்பான கூட்டமாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனபோதும் தன்னை தலைமை நிலையச் செயலாளர் என்று அழைத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி. உள்ளாட்சி இடைத்தேர்தலில் சின்னம் வழங்குவது பற்றி பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்துக்கு ஜூன் 30 ஆம் தேதி, பதில் கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி தன்னை தலைமை நிலையச் செயலாளர் என்று பதிவு செய்தார். மேலும் பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டார். இப்படி கட்சி ரீதியான கடிதங்களில் மட்டுமல்ல, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் எடப்பாடி தன்னை தலைமை நிலையச் செயலாளர் என்று ஜூலை 1 ஆம் தேதி அதிகாரபூர்வமாக மாற்றிவிட்டார். தேதி வாரியாக கடந்த ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடாத எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற ஆவணங்களில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை சுட்டிக் காட்டி ஓ.பன்னீர் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள். “கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்றும் அதனால் பன்னீர் செல்வம் எழுதிய கடிதமே செல்லத் தக்கதல்ல என்றும் கடிதம் எழுதினார் எடப்பாடி. ஆனால் பொதுக்குழு முடிந்து ஐந்து நாட்கள் கழித்து அதாவது ஜூன் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்திருக்கும் அபிடவிட்டில் தன்னை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக குறிப்பிட்டு, நான் சொல்வதெல்லாம் சரியே என்று கையெழுத்தும் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், ‘அதிமுக பொதுக்குழுவில் ஏற்கனவே முன் வைக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். மற்ற தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது’ என்று 23 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டுக்காக ஜூன் 28 ஆம் தேதி தேதியிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருக்கும் அபிடவிட்டில், ‘அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கருப்ப கவுண்டரின் மகன் கே.பழனிசாமியாகிய நான்’ என்று தொடங்கி, இந்த அபிடவிட்டில் நான் சொல்லியிருக்கும் தரவுகள் என் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் உண்மையானவை. எதையும் நான் மறைக்கவில்லை’ என்று குறிப்பிட்டு உறுதிமொழி அளித்து கையெழுத்திட்டிருக்கிறார். ஜூன் 23 ஆம் தேதியில் இருந்தே பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளரும் இல்லை, எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை எல்லாமே காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி தரப்பினர் சொல்லி வரும் நிலையில், ஜூன் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அப்பீலுக்கான அபிடவிட்டில் தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டு உறுதியளித்து கையெழுத்திட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது யாரை ஏமாற்றும் வேலை?” என்று கேட்டனர். அந்த அப்பீல் ஆவணங்களும் நம்மிடம் கிடைத்தன. நாம் இதை உறுதி செய்துகொண்டு எடப்பாடி தரப்பின் வழக்கறிஞரான இன்பதுரையிடம் பேசினோம். “என்னிடம் வேறு சிலரும் இதே கேள்வியை எழுப்பினார்கள். நான் இதற்கு பதில் சொல்கிறேன். பொதுக்குழு பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டிருந்தார். அதில் அவரது பதவி இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல அந்த தீர்ப்புக்கு எதிராக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் அப்பீல் செய்த வழக்கிலும் எதிர் மனுதாரராக எடப்பாடி பழனிசாமி சேர்க்கப்பட்டிருந்தார். அதிலும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் இருந்தது. அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே மேற்குறிப்பிட்ட அந்த வழக்குகளில் எதிர்மனு தாரரான எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அதே நிலையில் அப்பீலுக்கான அபிடவிட்டிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். மேலும் அதே அப்பீல் வழக்கில் case synopsis எனப்படும் வழக்குச் சுருக்கத்தில் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இல்லை, அவர் தலைமை நிலையச் செயலாளராகவே இருக்கிறார் என்பதை தெரிவித்துவிட்டோம். எனவே இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை” என்று விளக்கம் அளித்தார் இன்பதுரை. https://minnambalam.com/politics/2022/07/03/15/iam-co-oridnator-edapadi-palaniswamy-afidavit-supreme-court-ops-side-question
 16. ”இலங்கை கலவரங்களின் மையமாக இருக்கும்”: மைத்திரி எச்சரிக்கை! சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் மையமாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்திற்கு பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்கு திறமையும் அறிவும் இல்லை. இதனால் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க நான் தயாராக இல்லை. இதனால் ஆளும்கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுமாறு கேட்கின்றேன். அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்து அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். http://www.samakalam.com/இலங்கை-கலவரங்களின்-மையம/
 17. நாடு முழுமையாக முடங்கும் நிலை! எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் முதல் முழுநாடும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் இறக்குமதி நடக்கும் வரையில் நாட்டில் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு நாடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நெருக்கடியால் சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதிய எரிபொருளை வழங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்கிய போதிலும், கடந்த வாரமும் பல அத்தியாவசிய சேவைகள் தடைபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/நாடு-முழுமையாக-முடங்கும்/
 18. யாழ். – கொழும்பு இடையே சரக்கு ரயில் சேவைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை! யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப்பொருள் விநியோகத்துக்காக ரயில் சேவையை பயன்படுத்த உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் யாழ். கொழும்புக்கிடையில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப்பொருள் விநியோகத்துக்காக மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ். வணிகர் கழக பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், யாழ்.மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் இதுவரை காலமும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான லொறிகளை பயன்படுத்தினர். துரதிஷ்டவசமாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் லொறிகளை பயன்படுத்த முடியாத நிலையிலுள்ளனர். தற்போதைய நெருக்கடி நிலை மேலும் மோசமடைந்து, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்காளாகியுள்ளனர். யாழ்.மாவட்டத்திலுள்ள வர்த்தகர்களுக்கு போக்குவரத்துக்காக சுமார் பத்து அல்லது பன்னிரெண்டு ரயில்கள் தேவைப்படுவதால் அதற்கான செலவை அவர்கள் செலுத்த தயாராக உள்ளனர். எனவே இப்பிரச்சினையின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பொருட்களை ரயில்கள் மூலம் சலுகை விலையில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/யாழ்-கொழும்பு-இடையே-சரக்/
 1. Load more activity
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.