யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates     

 1. Past hour
 2. காசுருந்தா ஆசைப்பட்ட அல்லாத்தையும் வாங்கலாம்... அம்புட்டுக்கும் ஆசைப்படு பாலகுமாரா...
 3. 19ஆவது திருத்தத்தின் பாதிப்பை ஜனாதிபதி இப்போதே உணர்கிறார் அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பாதிப்பு தனது கண்களுக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, 19ஆவது திருத்தத்தின் பாதிப்புத் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்துள்ளமைத் தொடர்பில், அவருக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார். ஹங்குராகத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இன்னும் 4 மாதங்கள் உள்ளன தேர்தலுக்கு. எனவே 19ஆவது திருத்தத்தை மாற்றுவதற்கு நேரமில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, அரசமைப்பை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/19ஆவது-திருத்தத்தின்-பாதிப்பை-ஜனாதிபதி-இப்போதே-உணர்கிறார்/175-234531
 4. ரதி, ... நித்திரையோ, முழிப்போ ... இங்கிருந்து ஒப்பாரிதான் அதிகப்பட்சமாக பாட முடியும். அதற்கு மேல் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா? சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் ..???? கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ...??? ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை! கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், நாலறிவு விலங்கை பயன்படுத்தி ... காத்தான்குடி முதல் ஏறாவூர், நிந்தவூர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அபிவிருத்தி செய்தவைகளை. எங்கே எத்தனை தமிழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன? இன்றும் கிழக்கில் இருட்டில்!
 5. அவர் தமிழன் என்பதால் உங்கள் காலை இழுத்து விழுத்துவதில் கவனமாக இருப்பாரேயொழிய முந்துபவர்களைக் கண்டுகொள்ளமாட்டார் பாகிஸ்தான் நியூஸிலாந்தை வெல்ல எனக்கு இரண்டு புள்ளிகளும் வரும். பாகிஸ்தான் ஃபைனலுக்கும் வரும் போனஸாக நீர்வேலியான் மொட்டை வேறு போடுவார்! அய்! எல்லாமே நல்லதாக நடக்க வீரபத்திரர் அருள்புரிவார்!! அதனால்தான் சேஃப் பெட்டிங்! ஓடுறதெண்டா ஒருத்தியோடதான் ஓடுவேன்
 6. ஹி ஹி ஹி ஹி அறிவாளி பிரோ என்ர‌ போட்டியை கேட்ட‌ ப‌ய‌த்தில‌ , கிருப‌ன் அண்ணா திரும்பி பார்க்காம‌ ஓடி போய் விட்டார் , உசைன் வுலொட் கூட‌ ஒலிம்பிக்கில் அப்ப‌டி வேக‌மா ஓடி இருக்க‌ மாட்டான் , என்ன‌ ஓட்ட‌ம் கிருப‌ன் அண்ணான்ட‌
 7. பெரம்பலூரைச் சேர்ந்த அரசு ஊழியர் வெங்கடேசன். 1100 சதுரடி பரப்பிலான தரை தளத்தின் அடியில் 1000 சதுரடி பரப்பளவில் கான்கிரீட் தொட்டி அமைத்து அதன் மீது கான்கிரீட் கூரை அமைத்து வீடு கட்டியுள்ளார். இதன்மூலம் தண்ணீரைத் தேடி தவிக்க வேண்டியதில்லை.
 8. Today
 9. ரத்த மகுடம்-58 பிரமாண்டமான சரித்திரத் தொடர் ‘‘கேட்க வேண்டியவைகளை எல்லாம் கேட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன்... இனி நான் பதில் சொல்லலாம் அல்லவா..?’’நிதானத்தை இழக்காமல் அதேநேரம் அழுத்தம்திருத்தமாகக் கேட்ட சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர், தொண்டையைக் கனைத்தார். நீள்வட்டமாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் நிமிர்ந்தார்கள்.விக்கிரமாதித்தருக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த அனந்தவர்மர், தன் கண்கள் இடுங்க சாளுக்கிய மன்னர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தார்.பொறுமையை சோதிக்காமல் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு விக்கிரமாதித்தர் பேசத் தொடங்கினார்.‘‘சாளுக்கியப் பேரரசின் அமைச்சர் பிரதானிகளாக நீங்கள் இருந்தபோதும் ஒவ்வொருவருமே சிற்றரசர்களுக்கான அந்தஸ்துடையவர்கள். சாளுக்கியப் பேரரசின் விரிவாக்கத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். அப்படிப்பட்ட உங்கள் அனைவரது வீரத்துக்கும் தீரத்துக்கும் முதலில் தலைவணங்குகிறேன்! சாளுக்கியப் பேரரசின் நலன் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் உங்கள் செயல் உண்மையிலேயே என்னை நெகிழ வைக்கிறது; பெருமிதமாகவும் உணரச் செய்கிறது...’’நிறுத்திய விக்கிரமாதித்தர், எழுந்து அவையை வணங்கினார்.பதிலுக்கு அனந்தவர்மர் உட்பட அனைவரும் அநிச்சையாக எழுந்து மன்னரை வணங்கினர். பரஸ்பரம் இப்படி இருதரப்பும் வணங்கியபிறகு, ‘‘அமருங்கள்... உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்ற நம்பிக்கையில் நின்றபடியும் நடந்தபடியும் என் பதிலைத் தெரிவிக்கிறேன்...’’ என்ற விக்கிரமாதித்தர், நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.‘‘இந்த பாரத தேசத்தின் தட்சிணப் பகுதியை சாளுக்கியர்களாகிய நாம் ஆட்சி செய்து வருகிறோம். அது என்ன தட்சிணப் பகுதி..? வடக்கே விந்திய மலையும் நருமதை ஆறும்; தெற்கில் துங்கபத்திரை, கிருஷ்ணா நதிகள்... கிழக்கிலும் மேற்கிலும் கடல்... இதற்குள் இருக்கும் பகுதிதான் தட்சிணப் பிரதேசம். இந்த பீடபூமியின் கீழ்ப்பாகத்தில் கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்கு இடையிலுள்ள பகுதி மாமன்னர் அசோகர் காலத்தில் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டிருந்தது. பிறகு சாதவாகனர்களின் ஆளுகைக்குக் கீழ் அப்பகுதி வந்தது.இதன் பிறகு கூர்ஜர ராஜ வம்சத்தைச் சேர்ந்த சாளுக்கியர்களாகிய நாம் முன்னேற்றம் அடைந்து இந்த ‘தட்சிண’ப் பகுதியை ஆளத் தொடங்கினோம்...’’ நிறுத்திய விக்கிரமாதித்தர் மெல்ல நடந்தபடி தன் உரையைத் தொடர்ந்தார்.‘‘பாரத தேசம் பன்னெடுங்காலமாகவே நாடோடி கூட்டத்தாரின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. வடமேற்கிலுள்ள கணவாய் வழியாக சாரி சாரியாக அயலவர்கள் நம் நாட்டில் புகுந்து, இருக்கும் ராஜ்ஜியங்களை எல்லாம் கைப்பற்றி வருகிறார்கள்.ஆனால், ஒருவராலும் பாரதத்தின் தென் பகுதிக்கு வரவே முடியவில்லை. காரணம், அரணாக விளங்கும் நாம்! தட்சிணப் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் சாட்சாத் நாமேதான். நம்மை மீறி ஒருவராலும் தென் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. அதனாலேயே தனித்த நாகரீகத்துடன் தென் பகுதியானது காலம் காலமாகத் திகழ்ந்து வருகிறது.இதற்கான நன்றியை தென்பகுதி மக்கள் நமக்குத் தெரிவிக்க வேண்டும்! வரலாற்றில் நம் பெயரைப் பொறித்து நம்மை கவுரவிக்க வேண்டும்! ஆனால், அப்படி எதையும் அவர்கள் செய்யவில்லை.ஏன் என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறோமா..? நாள் முழுக்க இதுகுறித்துதான் நான் ஆலோசித்து வருகிறேன்...’’ என்ற விக்கிரமாதித்தர் அறையின் மூலையில் முற்றிலுமாக மூடியிருந்த சாளரத்தில் சாய்ந்தபடி நின்றார். ‘‘நமது முன்னோரான முதலாம் புலிகேசி, வேங்கியை ஜெயித்து வாதாபியில் சாளுக்கிய அரசை நிறுவினார். மகாராஜா என்னும் பட்டத்தையும் பெற்றார். நருமதை முதல் பாலாறு வரை பரந்திருக்க... மற்ற இரு பக்கங்களில் கடல் நிரம்பி வழிய... தன் ஆட்சியைத் தொடங்கினார். பிறகு முதலாம் கீர்த்திவர்மன், மங்களேசன் ஆகியோர் சாளுக்கிய அரியணையை அலங்கரித்தார்கள். ராஜ்ஜியத்தை விஸ்தரிக்காவிட்டாலும், அடைந்த பகுதியை இவர்கள் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றினர்.பின்னர் அரியணை ஏறிய என் தந்தையாரான இரண்டாம் புலிகேசி, மாமன்னரானார். வடக்கில் ஹர்ஷவர்த்தனரைத் தோற்கடித்து ஓட ஓட விரட்டினார். இதன் வழியாக வட பகுதி அரசுகள் தெற்கில் கால் பதிக்காதபடி செய்தார்.வடக்குப் பிரச்னை ஓய்ந்ததும் தென் பகுதியில் தன் கவனத்தைக் குவித்தார். இதன் ஒரு பகுதியாக தென்னக கடற்கரையோரமாக படையெடுத்து பல கோட்டைகளைக் கைப்பற்றினார். இது குறித்த விவரங்களை அய்கோலிக் கல்வெட்டில் நாம் காணலாம். அது மட்டுமா..? பல்லவ மன்னர் மகேந்திரவர்மரை காஞ்சிக் கோட்டைக்குள் பதுங்கும்படி செய்தார். பின்னர் காவிரி ஆற்றைக் கடந்து சோழர், சேரர், பாண்டியருடன் நட்புறவு பூண்டு வாதாபி திரும்பினார். என் தந்தைக் காலத்தில் பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் போர் நடைபெற்றிருக்கிறது.இவை அனைத்தும் வேங்கியை என் தந்தையும் சாளுக்கிய மாமன்னருமான இரண்டாம் புலிகேசி கைப்பற்றியபிறகே நடைபெற்றது. நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் ததும்பி வழிகிறது. எப்பேர்ப் பட்ட வீரம்...‘இரண்டாம் புலிகேசி தன்னுடைய சேனையை நடத்திச் செல்லும்போது கிளம்பிய தூசியானது எதிர்க்க வந்த பல்லவ மன்னனின் ஒளியை மங்கச் செய்தது; புலிகேசியின் பெரும் படைக்கடலைக் கண்டு காஞ்சிபுரத்தான் காஞ்சிக் கோட்டையில் ஒளிந்துகொண்டான்.... பல்லவர்களின் படையாகிய குளிர்ந்த பனிக்குக் கடுங்கதிராயுள்ள கதிரவனைப் போன்ற அவன் (புலிகேசி) சோழ, பாண்டிய, சேரர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கினான்...’ என்ற அய்கோலிக் கல்வெட்டின் வாசகங்கள் அனைத்தும் எவ்வளவு நிஜம்! இதிலிருந்து என்ன தெரிகிறது? தன் நாட்டின் ஒரு பகுதியை சாளுக்கியர்களிடம் மகேந்திரவர்மர் பறிகொடுத்தார்... அதில் வேங்கியும் ஒன்று.இப்பகுதியை தன் இளைய சகோதரராகிய விஷ்ணுவர்த்தனர் வசம் என் தந்தை ஒப்படைத்தார். இப்போது எங்கள் சித்தப்பாவின் குடும்பம் அப்பகுதியை சீரும் சிறப்புமாக ஆண்டு வருகிறது...’’ பெருமிதத்துடன் பேசிக் கொண்டே வந்த விக்கிரமாதித்தரின் நயனங்கள் சட்டென்று சிவந்தன.‘‘ஆனால், பல்லவர்களின் காசக்குடிச் செப்பேடுகள் என்ன சொல்கின்றன? சாளுக்கிய மாமன்னர் இரண்டாம் புலிகேசியையும் அவருக்குத் துணையாக நின்ற பல அரசர்களையும் காஞ்சிக்கு வடக்கே பதினைந்து கல் தொலைவிலுள்ள புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரவர்மர் புறங்காணச் செய்தார் என்கிறது... அத்துடன் இந்திரனைப் போன்று கீர்த்தி வாய்ந்த மகேந்திரவர்மர் பூமண்டலத்தைப் பாதுகாத்து வந்தார் என சிலாகிக்கிறது...என்றாலும் பல்லவ நாட்டின் வடபகுதியை சாளுக்கியர்களிடம் மகேந்திரவர்மர் இழந்தார் என்ற உண்மையை மட்டும் அவர்களால் மறைக்கவே முடியவில்லை. ஏனெனில் இதன்பிறகு வடக்கே வடபெண்ணை ஆற்றிலிருந்து தெற்கே சோழ மண்டலம் வரை பல்லவ நாடு சுருங்கிவிட்டது.மகேந்திரவர்மருக்குப் பிறகு பல்லவ சிம்மாசனத்தில் அமர்ந்த நரசிம்மவர்மர் காலத்தில் மீண்டும் இரு நாடுகளுக்கிடையில் போர் நடைபெற்றது. நரசிம்மவர்மர் காலத்தில் மீண்டும் என் தந்தை பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தார்.... ஆனால், அவர் காஞ்சியை அணுகும் முன் இருபது கல் தொலைவிலுள்ள மணிமங்கலம் என்னுமிடத்திலும், பரியளம், சூரமாரம் முதலிய இடங்களிலும் பல்லவ சேனைகள் பாய்ந்து வந்து சாளுக்கியப் படைகளைத் தாக்கி முறியடித்தன... என கூரம் செப்பேடு கூரை மீதேறி அறிவிக்கிறது. அதுவும் எப்படி..?‘இம்மரபில் உதயகிரியிலிருந்து (கிழக்கு மலையிலிருந்து) ஆதவனும் நிலவும் தோன்றுவது போல் தோன்றி தலைவணங்காத இம்மரபு மன்னர்களின் மணிமுடியில் சூடாமணி போல் விளங்கி, பகை மன்னர்களாகிய யானைக் கூட்டங்களுக்கு அரிமா போன்று நரசிம்ம மூர்த்தியே மண்ணுலகில் அரசகுமாரனாக அவதரித்ததைப் போல் நரசிம்மன் உதித்தான்...இவன் சோழர், கேரளர், களப்பிரர், பாண்டியர்களைத் திரும்பத் திரும்ப வென்று ஆயிரங் கைகளைக் கொண்டவன் (கார்த்தவீரியன்) போல் விளங்கினான்...பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய போர்களில் புறங்காட்டியோடிய புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தில் ‘வெற்றி’ என்னும் சொல்லைப் பொறித்தான்...இதற்குப் பின் கும்ப முனிவர் (அகத்தியர்), வாதாபியை (வாதாபி என்ற அசுரனை) அழித்ததைப் போல் இவன் வாதாபியை (இரண்டாம் புலிகேசியின் கோநகரை) அழித்தான்...’இப்படித்தானே கூரம் செப்பேடுகள் செப்புகின்றன..?’’ சீறினார் விக்கிரமாதித்தர்.‘‘இவை எல்லாம் உண்மைதானே மன்னா... இதன் காரணமாகத்தானே ‘வாதாபி கொண்ட நரசிம்மன்’ என்ற விருதுப் பெயரும் நரசிம்மவர்ம பல்லவருக்குக் கிட்டியது..?’’ அதுவரை அமைதியாக இருந்த ராமபுண்ய வல்லபர் இடையில் புகுந்தார்.விக்கிரமாதித்தர் பதிலேதும் சொல்லாமல் சில கணங்கள் தன் கண்களை மூடினார். ‘‘மறுக்கவில்லை சாளுக்கிய போர் அமைச்சரே...’’ தழுதழுத்தபடி சொன்னவர் தன் கண்களைத் திறந்தார். ‘‘என் சித்தப்பா நாகநந்தி அடிகள் நாட்டியக்காரியான சிவகாமியை விரும்பினார். தம்பிக்காக சிவகாமியைக் கவர்ந்தார் என் தந்தை. இதற்குப் பழிவாங்க படை திரட்டி வந்து வாதாபியை தீக்கிரையாக்கியதுடன் சிறையிலிருந்த சிவகாமியையும் நரசிம்மவர்மர் மீட்டுச் சென்றார்...இதன்பிறகு பதிமூன்று ஆண்டுகள் நம் தலைநகரான வாதாபி, பல்லவர்களின் வசம்தான் இருந்தது... இந்நிகழ்வுகளை எல்லாம் நான் எங்கே மறுத்தேன் ராமபுண்ய வல்லபரே..?இதற்கெல்லாம் சேர்த்துதானே அதே சிவகாமியின் வளர்ப்புப் பேத்தியான இளையவள் என நம்மால் அழைக்கப்படும் சிவகாமியை ஆயுதமாக்கி பல்லவர்களை பழிக்குப் பழி வாங்க திட்டமிட்டு இதோ காஞ்சிபுரத்துக்கும் வந்திருக்கிறோம்...’’ ‘‘ஆனால், அந்தத் திட்டத்தைத்தான் சாளுக்கிய மன்னரான நீங்கள் தகர்த்துவிட்டீர்களே... நம் ஆயுதமான இந்த இளைய சிவகாமி குறித்த உண்மையை கரிகாலனுக்கு அறிவித்துவிட்டீர்களே...’’ அனந்தவர்மர் பாய்ந்தார்.‘‘நம் திட்டத்தை நான் தகர்த்தேன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்..? சிவகாமி குறித்த எந்த விவரமும் கரிகாலனுக்குத் தெரியாது..!’’சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் இப்படிச் சொன்னதும் அந்த ரகசிய அவையில் இருந்த ஒவ்வொருவரும் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘என்ன சொல்கிறீர்கள் மன்னா..?’’ ராமபுண்ய வல்லபர் வியப்புடன் கேட்டார்.‘‘உண்மையை! கரிகாலனுக்கு இந்நேரம் சிவகாமி குறித்த சந்தேகம் எழுந்திருக்கும்! ஆனால், அவன் அறியப் போவது நாம் மறைத்திருக்கும் உண்மைகளை அல்ல! வேறொரு நாடகம் அங்கே அரங்கேறப் போகிறது!’’‘‘நாடகமா..?’’ அனந்தவர்மரின் குரலில் அதிர்ச்சி பூரணமாக வெளிப்பட்டது.‘‘ஆம்! நாடகமேதான். சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற ஓடி ஒளிந்திருக்கும் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரின் உதவியை நீங்கள் நாட முற்பட்டிருக்கிறீர்களே... அதற்காக இப்படியொரு விசாரணை நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்களே... அப்படி ஒரு நாடகத்தைத்தான் கரிகாலன் முன்னால் இப்போது சிவகாமி அரங்கேற்றிக் கொண்டிருப்பாள்!’’ என்றபடி விக்கிரமாதித்தர் புன்னகைத்தார்! (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15492&id1=6&issue=20190621
 10. பெற்றோர்கள் அமைவது விதி நண்பர்கள் அமைவது மதி இலங்கையில் தலைவர்கள் அமைவது தலைவலி !
 11. இதே மாநாட்டில் இவற்றையும் கூறியிருந்தார். மனித உரிமை மீறல்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாடுகளின் இறைமையில் தலையிட வேண்டாமென நான் குறிப்பாக கேட்டுக்கொள்கின்றேன். அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமும் ஜனநாயகமும் மிகவும் முக்கியமானதாகும். நாடுகளின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டுப்படுத்தவோ நாடுகளின் மீது அச்சுறுத்தல்கள், அழுத்தங்களை ஒருபோதும் பிரயோகிக்கவோ கூடாது என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன். https://tamil.news.lk/fetures/item/30122-cica
 12. விரலுக்கேற்ற வீக்கம் ராசா.... நானெல்லாஆஆஆஆஆஆஆம் இதுக்கு ஆசைப்படலாமா?
 13. தயவு செய்து இயற்கை தந்த கொடையோடை விளையாடாதேங்கோ..... ஏலுமெண்டால் மூண்டு நாளைக்கு சாப்பிடாமல் இருங்கோவன் பாப்பம்.
 14. கிருபன், நீங்கள் சும்மாவே திண்ணைக்கு மாசத்துகொருக்காத்தானே வாறது.
 15. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள மக்கள் அரசியல் வேறுப்பாடுகளை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், முஸ்லிம் மக்களும் இலங்கையர் என்ற நிலையில் இருந்து செயற்பட வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பு. ஆனால் நடைமுறையில் இவர்கள் அந்நிய நாட்டு கலாச்சாரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் மத்ரஸா பாடசாலைகளில் முழுமையாக பிற மதங்களின் மீதான வெறுப்புணர்வும் அடிப்படைவாதமுமே போதிக்கப்படுகின்றன. தற்போது இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் 35 ஆயிரம் மாணவர்கள் ஒரு காலத்தில் அடிப்படைவாதிகளாக தோற்றம் பெற வாய்ப்புண்டு இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டில் இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒரு புறமும், வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புக்கள் ஒப்பந்த ரீதியில் இடம் பெறுவது மறுபுறமும் இடம்பெறுகின்றன. இவ்விரு செயற்பாடுகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தான்தோன்றித்தனமாக பொருளாதார கொள்கைகளும், பொருத்தமற்ற அரசியல் கொள்கைகளும் மூல காரணியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கும் விற்கும் சோபா ஒப்பந்தத்தை இல்லாதொழிப்போம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/58993
 16. எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக கட்சியின் தேசிய மாநாட்டின் போது நியமிக்க உள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளதாகவும், தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது அறிவிப்பார் எனவும் அவரிற்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=115325
 17. பாக்கிஸ்தான் final இற்கு வந்தால் நான் மொட்டை அடிக்கிறேன்! கிருபன், எனது புள்ளியுடன், எனது நாற்காலியின் காலை பிடுத்துக்கொண்டு, இழுத்து விடுவதுக்கு இன்னொருவர் காத்துகொண்டு இருக்கிறார், அவரையும் நீங்கள் முந்த வேண்டும், நடக்கிற காரியமா. "கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்களே"
 18. நீங்களெல்லாம் கலியாணவீட்டு பங்சன்......பிறந்தநாள் பங்சனுக்கு போனியளெண்டால்????????? வேண்டாம் நினைக்கவே தலைய சுத்துது......
 19. ரதியின் பல பல கருத்துக்களை நான் பார்த்து மண்டையை பிடித்துக்கொண்டது உண்டு (கோபத்தோடு) ஆனால் இந்த கருத்து மனசுக்கு பிடித்துக்கொண்டது (மகிழ்ச்சியோடு)
 20. வாவ்....... கொட்டில் வீடமைப்புகள் யாருக்கும் பங்கமில்லை.
 21. எவன்/எந்த நாட்டுக்காரன் கோப்பை தூக்கினாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் இஞ்சை எங்கடை போட்டியிலை என்ரை தெய்வம் கோப்பை தூக்கவேணும்.
 22. கிறிஸ்தவ மதத்தை கொண்ட அநேக ஐரோப்பியர்களும் மத நம்பிக்கையை இழந்து வருகின்றார்கள் என நான் நினைக்கின்றேன்.
 23. முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இங்கே அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் தங்களை "மத நம்பிக்கையற்றவர்கள்" என்று அடையாளப்படுத்திக் கொள்வது கடந்த 2013ஆம் ஆண்டு முதல் எட்டிலிருந்து 13 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. 30 வயதிற்குட்பட்ட மக்கள்தான் அதிகளவில் தங்களை மத நம்பிக்கையற்றவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என இந்த ஆய்வு கூறுகிறது. இதில் விதிவிலக்கு ஏமன். பெண்கள் உரிமை அதே போல ஒரு பெண் அங்கு பிரதமர் அல்லது அதிபராகும் உரிமைக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள். இதில் அல்ஜீரியா மட்டும் விதிவிலக்காக இருக்கிறது. அங்கு 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே ஒரு நாட்டின் தலைவராக பெண் இருப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் வீட்டு விவகாரங்கள் என்று வரும்போது, பெரும்பாலான பெண்கள் உட்பட, பலரும் கணவர்தான் குடும்பத்திற்கான இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று நம்புகின்றனர். மொரோக்கோ நாட்டில் மட்டும் சரிபாதிக்கும் குறைவான மக்களே கணவன்மார்கள் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஒரு பாலுறவு அங்கு பெரும்பாலான மக்கள் ஒரு பாலுறவை ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்த அல்லது மிகக் குறைந்தளவு மக்களே ஒரு பாலுறவை ஏற்றுக் கொள்கிறார்கள். சமூக தாராளவாத கொள்கைகள் கொண்ட நாடாக பார்க்கப்படும் லெபனானில் கூட ஆறு சதவீத மக்களே இதனை ஏற்றுக்கொள்கிறார்கள். மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு குறித்த கவலைகள் பலருக்கும் அதிகமாக இருக்கிறது. தங்கள் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எந்த நாடு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்ற கேள்விக்கு, இஸ்ரேலுக்கு பிறகு, அமெரிக்காவே மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுகின்றனர். மூன்றாவது இடத்தில் இரான் உள்ளது. கணக்கெடுப்புக்காக கேள்வி கேட்கப்பட்டவர்களில் ஐந்தில் குறைந்தது ஒருவர் பிற நாடுகளுக்கு குடியேற யோசித்திருந்தார்கள் சூடானில் பாதி மக்கள் தொகையினர் குடியேற்றத்தை கருத்தில் கொண்டிருந்தனர். பொருளாதார விஷயங்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. https://www.bbc.com/tamil/global-48741272
 24. திண்னையும் யாழும் ஒன்று தான் ஜ‌யா / போட்டி என்று வ‌ந்த‌ பையை26 எதை செய்ய‌ த‌ய‌ங்க‌ மாட்டார் /
 1. Load more activity