Jump to content

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள்
  3. அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  4. அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர். உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  5. அஞ்சலிகள். மத்திய கல்லூரிப் பழைய மாணவர். இறுதிக் காலத்தில் இணக்க அரசியல் செய்யும் ஒரு அணியில் இருந்தார் எனவும் அறிந்தேன்.
  6. இதய சத்திர சிகிச்சையின் போது இரு குடும்ப உறுப்பினர்கள் கூட இருக்க அனுமதிக்கப் பட்டார்களா? எங்கும் கேள்விப் படாத நடைமுறையாக இருக்கிறதே?
  7. கசூரினா பீச், சாட்டி பீச் போன்றவற்றிலும் உயிர்காப்பு நீச்சல் பிரிவு இருக்கிறதா?
  8. இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
  9. இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள் அதனைப் பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய் வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
  10. யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
  11. (இனியபாரதி) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள் குற்றச் சாட்டுகின்றனர். அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  12. வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில் நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  13. `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார். வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  14. மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது. டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது. டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
  15. Today
  16. கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும் இலங்கையில் கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
  17. 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே. இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  18. உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை... எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
  19. ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம் அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
  20. இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்?
  21. பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர். ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.
  22. புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால், மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு / அரச அரண்மனைக்கு / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால் " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும். - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்? ஆர்க்கிமிடீஸ் கி.மு.287 - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம் ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும் அதிசயமாக இருந்து இருக்காது? எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி
  23. பிணையை மறுப்பதனூடாக அவர் கனடாவில் தங்கி இருக்கும் நாட்களை அதிகரித்து அதை தனது வதிவிட விசாவுக்கு சாதகமாக்க முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும் ஆச்சு? இருப்புக்கு வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  24. மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும் @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  1. Load more activity
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.