stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates     

 1. Past hour
 2. ஆசிரியர்களில் எத்தனை வீதம் திறமையற்றவர்கள் என கண்டுபிடித்த மைத்திரி இராணுவ அதிகாரிகள் 100% திறமையானவர்கள் என கூறியவர். இராணுவ வீரர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் 200% திறமையான அரசியல் தலைமைகள் சிங்கள தேசத்தில் இருக்கின்றார்கள்.
 3. சிங்கள அரசியல்வாதிகளை அரசியலால் வெல்லும் திறமை இல்லாத தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி வேண்டும் இல்லை விலக்கப்பட வேண்டும்.
 4. சுப்பிரமணியன் சுவாமி உட்பட பல தமிழின கொலையாளிகள் ஒன்று கூடிய வைபவம். அக்கா கனிமொழியும் கலந்து வாழ்த்தி இருப்பா என்று நினைத்தேன், படத்தை காணவில்லை.
 5. கடஞ்சா, 1. நான் ஒருபோதும் விக்கிபீடியாவை நம்பகமான source ஆக கருதுவதில்லை. ஒன்றில் எழுத்தில் வந்த புத்தகங்களில் இருந்து அல்லது, நான் மேலே காட்டிய நம்பகமான தளங்களை போல தளங்களில் இருந்து தகவல்களை மேற்கோள் காட்டும் போதுதான் ஒரு கருத்தை ஆமோதிக்க முடியும். இதை சொல்லுவதற்கு மன்னிக்கவும், ஆனால் இந்த விடயத்தில் நீங்கள் ஒரு தடவை இந்தியாவின் “பூர்வீக குடிகள்” அணுகுமுறை மாற்றம் பற்றி சொல்லும் போது, அது உங்கள் நண்பர்கள் வாயிலாக கேட்டதாக சொல்கிறீர்கள். இன்னொரு சந்தர்பத்தில் பாகிஸ்தான் வரலாறு பற்றி எழுதும் போதும் பாகிஸ்தானிய நண்பர்கள் கூறியதாக எழுதினீர்கள். இப்போ ஒரு slide show வை முன்வைக்கிறீர்கள். இந்த உலகில், குறிப்பாக இண்டெர்நேட் கண்டுபிடித்தபின் பொய்யான வரலாறும், அரைகுறையான வரலாறுமே எங்கும் வியாபித்துக் கிடக்கிறது. இந்த நிலையில், உங்கள் கருத்தை ஏற்க நான் தயங்க பிரதான காரணம் - உங்கள் கருத்து தரமான ஆதாரங்களால் நிறுவப்படவில்லை. 2. பாகிஸ்தான் பிரிவினையில், ஜின்னா 1937 பின்பே அதிக அக்கறை எடுத்தார் என்பதை நாம் எல்லாரும் ஒத்துகொள்கிறோம். 1933 ற்கு முன் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு எனும் கொள்கை வலிமையாக முன்வைக்கப்பட்டதா? என்றால் பதில் இல்லை என்பதே. அலியின் பிரகடனத்தை ஆமோதித்து ஒப்பமிடவே 3 பேர் இல்லாத நிலையே காணப்பட்டது. அதற்கு முன் எங்கோ ஒரு சிலர் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு என்பதை பற்றி சிலாகித்து இருக்கலாம். கோரிக்கையாகவும் முன்வைத்திருக்கலாம், ஆனால் 1940 வரை அது முஸ்லீம்களை பிரதிநிதிதுவம் செய்தவர்களின் கொள்கையாக இருக்கவில்லை. கூடவும் இக்பால் கேட்ட கூட்டாட்சி, அலி கேட்ட பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. அலிகேட்ட பாகிஸ்தான் ஜின்னா அடைந்த பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. ஆனால் முஸ்லீம்களிற்கெனெ ஒரு தனிநாடு என்பதை முதன்முதலில் ஒரு கொள்கையாக பிரகடனப்படுத்தி, அதை வட்ட மேசையில் சமர்பித்து, புதியநாட்டுக்கு பாக்(கி)ஸ்தான் எனப் பெயரும் சூட்டியவர் அலி.
 6. எம்மவர்கள் பலர் இப்போதெல்லாம் புதுமை என்று கூறிக்கொண்டு பல கோமாளித்தனங்களைச் செய்கின்றனர். இதுபோன்ற ஒன்று தான் இதுவும். தாலி கட்டுவது என்பதே விசர் வேலை. இதில் ஆணுக்கும் கட்டுவது ????? சடங்குகள் இன்றி தமிழ்முறைப்படி இவர்கள் திருமணம் செய்திருந்தால் வாழ்த்தலாம், பாராட்டலாம். கேரள இனத்தவரின் சடங்குகளில் ஆணும் பெண்ணும் கழுத்துக்கு நகை அணிவிப்பது உண்டு. அதை பார்த்தும் இவர்கள் செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை தேவையற்ற விடயமும் எம் அங்கலாய்ப்பும்
 7. Today
 8. இந்த மாப்பிள்ளை யாழ்கள உறவாம்? யாரென்று தெரியவில்லை ஆனாலும், அவர் இதை விளம்பரப்படுத்தி செய்யாத போது, இதை நாமும் ஒரு தனிப்பட்ட விடயமாக கடந்து செல்வதுதானே கண்ணியமான அணுகுமுறை? இதை சிலாகிப்பதில் ஏதும் பொது நலனிருப்பதாக தெரியவில்லை. பிக்பாசில் மூன்றாம் நபர்களின் தனிமனித விடுப்பு வேண்டாம் என்று கருத்தாடலை தடை செய்யும் நாம், இன்னொரு கள உறவின் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைப்பானேன்? அவர் இதைதான் ஒரு புரட்சியாக செய்வதாயோ அல்லது எல்லோரும் இப்படி செய்யுங்கள் என்றோ கூறவில்லையே? சொல்லப்போனால் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊகம் மட்டுமே சொல்கிறோம். அவர்களுக்கு ஒரு காரணம் இருக்கும். அதை அவர்கள் மட்டுமே அறிந்தால் போதும். ஊரில் கதைக்க பிரச்சினையா இல்லை. டேப்லாயிட் பத்திரிகைகள் போல தனிமனித வாழகையில் மூக்கை நுழைக்கும், கருத்து சொல்லும் அருவருப்பான பழக்கத்தை முடிந்தளவு தவிர்ப்போம் என்பதே என் வேண்டுகோள்.
 9. ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கட்சிகளின் வேட்பாளர்களில் எவருக்காவது ஆதரவு வழங்குவது என்றால் முதலில் அவர்களிடம் இருந்து சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் தமிழர் தரப்பு உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதனைவிடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்களை கோருவார்களானால் அதுவே மீண்டும் தமிழ் மக்களின் தலைகளில் மண்ணை அள்ளிபோட்டுக்கொள்ளும் முடிவாக அமைந்துவிடும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் எச்சரித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவை எடுப்பதற்கு முன்னர் தமிழர் தரப்பினர் அனைவரையும் இணைத்துக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பொதுவான முடிவொன்றை எடுத்து சிங்கள தலைமைகளுடன் பேரம் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். சிறிலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனும், சுமந்திரனும் மாத்திரம் தன்னிச்சையாக எடுக்காது, தமிழ் தேசியத்திற்காக உறுதியாக செயற்பட்டுவரும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பொதுவான முடிவொன்றை எடுக்க முன் வர வேண்டும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டுவருகின்ற நிலையில், தமிழர் தரப்பினர் அனைவரும் இணைந்து பலமான அணியாக கோரிக்கைகளை முன்வைக்கும் பட்சத்திலேயே சிங்கள தலைமைகள் கவனம்செலுத்தும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களுக்கு ஒரு வருடத்திற்குள் எவ்வாறு தீர்வு வழங்கப் போகின்றார் என்றும் கேள்வி எழுப்பினார். https://www.ibctamil.com/srilanka/80/128053
 10. நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கனும்.....!
 11. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கடந்த 12 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் அவரது திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/65088
 12. 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை தெரிவித்திருந்தார். இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்த நிலையிலேயே இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இம் முறை ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் உட்பட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக 17 பேர் போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க போட்டியிட உள்ளதாக இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அத்துடன் அங்கத்துவம் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தனித்தோ, அல்லது சுயாதீனமாகவோ தேர்தலில் போட்டியிடுவதாக தமது கட்சி மட்டத்தில் அறிவித்துள்ளனர். எவ்வாறு இருப்பினும் இம்முறை மாறுப்பட்ட விதத்தில் 17 பேர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளமை முக்கிய அம்சமாகும் https://www.virakesari.lk/article/65085
 13. தமிழ் இளைஞர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்! அவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவின் சிட்னி – Strathfield பகுதியைச் சேர்ந்த 28 வயதான சக்திவேல் லோகநாதன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு நியூசவுத் வேல்ஸ் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சக்திவேல் லோகநாதன் கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் Wollongong-க்கு அருகிலுள்ள Scarborough ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து எவ்வித தகவல்களும் இல்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர் தனது வங்கிக்கணக்கைப் பயன்படுத்தவில்லை எனவும், எவ்வித தொடர்பாடல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் Crimestoppers-I 1800 333 000 என்ற இலக்கத்திலோ அல்லது https://nsw.crimestoppers.com.au/ என்ற இணையத்தளத்திலோ தொடர்புகொள்ளுமாறு நியூசவுத் வேல்ஸ் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். http://athavannews.com/தமிழ்-இளைஞர்-மாயம்-விசார/
 14. லைபீரியாவில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 மாணவர்கள் உயிரிழப்பு! லைபீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியாவில் இன்று (புதன்கிழமை) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 30 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்தையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்ததுடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சேர்த்தனர். இந்நிலையில் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்தமை தொடர்பாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோர்ஜ் வே தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். http://athavannews.com/லைபீரியாவில்-பாடசாலையில/
 15. நாட்டின் ஆசிரியர்களில் 10 வீதமானவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி நாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ளவர்களில் 10 வீதமானவர்கள் குறித்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்படி சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேரில் 10 வீதமானவர்கள் ஆசிரியர் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்பது கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். மேலும், பரீட்சை சான்றிதழ்களை கொண்டிருந்த போதிலும் ஆசிரியர் தொழிலுக்கு தேவையான தரத்தை அவர்கள் கொண்டிருக்காமையே அதற்கு காரணம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாட்டின்-ஆசிரியர்களில்-10/
 16. ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதையடுத்தே குறித்த ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஜனாதிபதி-தேர்தலுக்கான-வர/
 17. தகவல் அறியும் உரிமைக்கு.. வலுச்சேர்க்க, ‘தகவல் மாதம்’ பிரகடனம் சர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினத்திற்கு அமைவாக ‘தகவல் மாதம்’ என்பதை பிரகடனப்படுத்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட அமைச்சரவை முடிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2016ஆம் ஆண்டு இலக்கம் 12இன் கீழான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்கான சட்டம் தற்பொழுது உலகில் சிறந்த 4ஆவது சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் சட்டம் நடைமுறைப்படுத்தும் அடிப்படை பொறுப்பை கொண்டுள்ள வெகுஜன ஊடக அமைச்சினால் இதை செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 28ஆம் திகதி இடம்பெறும் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சர்வதேச தினத்திற்கு அமைவாக செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை ‘தகவல் மாதம்’ என்று பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் இந்த சட்டத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுவதற்கும் இதற்கு அமைவாக நாடு முழுவதிலும் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் சிவில் பிரஜைகளை தெளிவு படுத்தும் வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ‘கிராமத்திற்கு தகவல் உரிமை’ என்ற தொனிப்பொருளில் நடமாடும் சேவைகளை 5 மாவட்டங்களைத் தெரிவு செய்து நடைமுறைப்படுத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/தகவல்-அறியும்-உரிமைக்கு/
 18. மணப்பெண் மாப்பிள்ளைக்கு தாலிகட்டிய சம்பவமாக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் நடை பெற்றது மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் தமக்குள் தாலி மாற்றிக்கொண்ட நிகழ்வே என தனிப்பட்ட தகவல்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.
 19. ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்....
 20. வடமாகாணத்தில் 15 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு நல்லவிடயம் குளங்கள் தான் ஒரு நிலத்தின் முக்கிய பாகம்
 21. நாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி பகல் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/65087
 22. ****** ***** ****** பாகிஸ்தான் என்பதை மத அடிப்படையிலான கருப்பொருள் என எழுதியிருந்தீர்கள். முன்னைய கருத்துகளை குறிப்பிட்டு பாகிஸ்தான் கேட்டார்கள் என எழுதினீர்கள். முன்பு முன்வைக்கப்பட்ட கருத்துகள் மதம் என்பது தேசியத்தை நிர்ணயிக்கும் காரணியாகவும் இந்துக்கள் முஸ்லிம்களை இரு தேசமாக கருதக்கூடிய கருத்துகளும் வைக்கப்பட்டனவே தவிர பாகிஸ்தான் என்பது மத அடிப்படையிலான கருதுகோள் அல்ல, முன்னைய கருத்துகள் பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்குவதற்கான கருதுகோள்களும் அல்ல. இது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். நீங்கள் இணைத்த இணைப்பில் 4 ஆம் பக்கத்தில் Syed Ahmed Khan “Pakistan” என்ற சொல்லை கண்டுபிடித்ததாக உள்ளது. கண்ட கண்ட இடங்களில் வரலாறு படிக்க வெளிக்கிட்டால் இப்படி தான் தலைகீழாக படிக்க வேண்டி வரும். 12 ஆம் பக்கத்தில் ரஹ்மத் அலி 1933 இல் வெளியிட்ட துண்டுப்பிரசுரம் பற்றி குறிப்பிடப்படுகிறது. அதில் Pakistan and its provinces was used for the first time என்றுள்ளது. அதன் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இவ்வாறு உள்ளது. On January 28, 1933, he issued his first memorable pamphlet “Now or Never; Are we to live or perish forever?” He coined the word “Pakistan” for 30 million Muslims who live in the five northern units of India; Punjab, North West Frontier (Afghan) Province, Kashmir, Sindh and Baluchistan. 13 ஆம் பக்கத்தில் லாகூர் பிரகடனத்தை பாகிஸ்தான் பிரகடனம்/தீர்மானம் என குறிப்பிட்டு கீழே Although the name “Pakistan” has been proposed by Choudhary Rahmat Ali in his Pakistan declaration என்றும் போட்டு வைத்துள்ளார்கள். 1940 லாகூர் பிரகடனத்தில் இருதேச கோட்பாட்டை முஸ்லிம் லீக் கையிலெடுத்தது. Syed Ahmed Khan இருதேச கோட்பாடு பற்றி முன்னர் கருத்து தெரிவித்தவர் என்ற ரீதியில் அவரை வரலாற்றில் நினைவு கூர்கிறார்களே தவிர அவர் பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவரோ, பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்தவரோ கிடையாது. Syed Ahmed Khan முஸ்லிம்களுக்கு கல்வியறிவு புகட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் Aligarh movement ஐ உருவாக்கியவர். 1930 இல் கவிஞர் முகமது இக்பாலின் உரையை (அவர் கூட்டாட்சி முறை பற்றியே கூறியவர்) தொடர்ந்து தான் ரஹ்மத் அலி முஸ்லிம்களின் தேசத்துக்கு பெயர் வைக்க நினைத்து 1933 இல் பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கி வெளியிட்டார். அவர் விரும்பிய முஸ்லிம் தேசம் முகமது இக்பாலினதிலிருந்து வேறுபட்டது. 1938 இல் முகமது இக்பால் மரணமடைந்தார். மரணமடைய முன் ஜின்னாவுக்கு தனது கோரிக்கைகளை முன்வைத்து பல கடிதங்களையும் எழுதியிருந்தார். 1937 தேர்தலில் காங்கிரஸ் பெருவெற்றியடைந்ததும் ஜின்னாவையும் முஸ்லிம் லீக்கையும் குப்பையில் தூக்கி எறிவது போல் எறிந்ததன் விளைவு தான் 1940 லாகூர் பிரகடனம். (எத்தனையோ விடயங்களை தேடி எழுதும் நீங்கள் 1937 தேர்தலின் பின் நடைபெற்ற விடயங்கள் பற்றி மூச்சு கூட விடவில்லை). ஜின்னா ஆரம்பத்தில் தனிநாடு கோரவில்லை என நான் மீண்டும் மீண்டும் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினாலும் இந்திய ஆதரவு மாயையில் உள்ள நீங்கள் அவற்றை புறக்கணிக்கத்தான் செய்வீர்கள்.
 23. இலங்கை 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (புதன்கிழமை) வெளியிட்டது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது. https://www.bbc.com/tamil/india-49745004 முன்னதாக, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 11ஆம் தேதி பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை அறிவித்திருந்தது.
 24. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும்போது தங்கள் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம்தேதி முதல் தனது அமெரிக்க பயணத்தை தொடங்கவுள்ளார். செப்டம்பர் 27-ம்தேதி வரையில் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் மோடி கலந்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அவரது விமானம் பாகிஸ்தான் வழியே அமெரிக்காவுக்கு செல்லவிருந்தது. இந்த நிலையில், இந்தியா உடனான உறவில் பாகிஸ்தான் விரிசலை ஏற்படுத்தி இருப்பதால், மோடி அமெரிக்க செல்வதற்கு தங்கள் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். இம்மாத தொடக்கத்தின்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்துக்கு சென்றார். அப்போது, அவருக்கு தங்கள் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அரசு தடை விதித்திருந்தது. முன்னதாக கடந்த பிப்ரவரி 26-ம்தேதி பாலகோட்டில் இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதலை நடத்தி சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தனது வான் வெளியை இந்தியா பயன்படுத்த தடை விதித்திருந்தது. பின்னர் இந்த தடை ஜூலை மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த தடை காரணமாக பாகிஸ்தானுக்கு ரூ. 800 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.ndtv.com/tamil/india-pakistan-wont-allow-pm-modi-to-use-our-airspace-says-pakistan-foreign-minister-2103274?pfrom=home-tamil_bigstory
 1. Load more activity