• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. சரி, போட்டோவை இணைக்கலாமென தேடினால் இவைதான் கிடைத்தன..! கோட்டை மெட்ரோ நிலையம்
 3. இந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா! இந்திய பிரபல நடிகர், ஹிந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இன்று (11) சற்றுமுன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். அது குறித்து டுவிட்டரில் டடுவிட் செய்துள்ள அமிதாப், “நான் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பம் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை இடம்பெறுகிறது. என்னோடு கடந்த பத்து நாட்களுக்குள் தொடர்பிலிருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து காெள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” – என்றுள்ளார். https://newuthayan.com/இந்திய-நடிகர்-அமிதாப்-பச/ அபிசேக் பச்சனுக்கும் கொரோனா! ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனை தொடர்ந்து அவரது மகனான நடிகர் அபிசேக் பச்சனுக்கும் இன்று (11) சற்றுமுன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. https://newuthayan.com/அபிசேக்-பச்சனுக்கும்-கொ/
 4. கிழக்கை பௌத்த மாநிலமாக்கவே செயலணி – விக்னேஸ்வரன் கிழக்கை சிங்கள பௌத்த மாநிலமாக அடையாளம் காட்டவே கிழக்கு ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்பது எல்லாவல்ல மேதானந்த தேரரின் கூற்று நிரூபித்துள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், https://newuthayan.com/கிழக்கை-பௌத்த-மாநிலமாக்க/
 5. Yesterday
 6. 1) இதில் எங்கே ஐயா அரசியல் இருக்கிறது 2) .................. 3) ""நூல்""என்பதற்குள் இத்தனை விடயங்களா ஆழ்ந்த நித்திரையை அனுபவியுங்கள் (Good night (இதற்கும் வேறு அர்த்தம் கற்பிக்கக் கூடாதல்லவா ) )
 7. ஏன் யாழ்கள கருத்தாளர்களை உங்கடை சுயநல அரசியலுக்கு இழுக்கிறீர்கள் ? முட்டையில் மயிர் இருக்கெண்டு இதுவரைக்கும் எனக்கு தெரியாது உங்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கவும் அது உங்கடை வேலை எண்ணுவது எங்கடையது அல்ல கோபிக்க கூடாது . நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குது உங்களை மறந்து சொன்ன தகவலுக்கு நன்றி
 8. ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து இருக்கும் நாடுகளில் சாதியம் அதிகம் பார்ப்பதில்.. முதலாம் இடம் கனடா இரண்டாம் இடம் இங்கிலாந்து மூன்றாமிடம் பிரான்ஸ் அல்லது ஜேர்மனி. கலியாண புரோக்கரிடம் மாப்பிளை பொம்புளை விசாரிச்சால் புரோக்கர் கேட்பது முதலில் சாதியைத்தான். இலங்கையில் சாதியை ஒரு காலமும் அழிக்க முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் நன்றாகவே ஊறி விட்டது.
 9. ஐயா முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம். இங்கு யாழ் களத்திலுள்ள ஒருவராவது ""தேனெடுத்தவன் புறங்கையை நக்காது இருப்பான்"" என்று கூறத் திருவுளம் கொள்வாரோ ? அப்படியிருக்க நீர் நான் கூற வந்த விடயத்தை விட்டுவிட்டு நூலில் தொங்கிக் கொண்டு நிற்கிறீர். தேர்தல் முடிந்த பின்னர் விமலேஸ்வரி காந்தரூபன் இந்த விடயத்தை பெரிதாக்கி உண்மையைக் கண்டறிவாரோ ? இல்லையென்றால் அவர் கொழுத்தியது வெடிதானே இலங்கை மத்திய வங்கியிடமே ஆயிரம் கோடி பணமில்லை. அப்படியிருக்க சுமந்திரன் அவரிடம் ஆயிரம் கோடி கேட்டால் அவர் பணத்திற்கு எங்கே போவார் இப்போது கூறுங்கள் யாருடைய வெடி பெரியது
 10. இந்த மொட்டை! அண்ணனுக்கா தம்பிக்கா வேலை செய்வது என்று தெரியாமல் முழிக்குது. மலிந்தால் சந்தைக்கு வருந்தானே, பொறுத்திருந்து பாப்போம். மஹிந்தர் எத்தனை கூத்தாடினாலும் நாமலுக்கு அந்த அதிஷ்டம் இல்லை என்றே நான் நினைக்கிறன். தமிழர் வாக்கு இல்லாமலே, எம்மால் அரசியலில் எதுவும் செய்யலாம். என்று சவால் விட்டவர்கள் குழைவதன் காரணம்? தமிழர் இல்லாமல், வெற்றியாய் அரசியல் நகராது. இதுதான் யதார்த்தம் இலங்கையில்.
 11. ஒன்றுமே இல்லை என்று எப்படி சொல்லலாம் இதே தமிழரசு கூட்டத்தில் மாவையின் மகன் குழற தான் கொண்டுவந்தனான் என்று ஒப்புதல் வாக்கு மூலம் சுமத்திரன் கொடுத்து உள்ளாரே ?
 12. புரிகின்றது விசுகு ஐயா 18 வயது தாண்டிய பிள்ளை என்ன உயர்கல்வியை படிக்கவேண்டும் என்று தானே தீர்மானிக்கின்றது. அந்தப் பிள்ளையே என்ன வேலை செய்யவேண்டும் என்று தீர்மானித்து தன் வாழ்வை, எதிர்காலத்தை திட்டமிடுகிறது. இதற்குள் பெற்றோர் தமது விருப்பங்களைச் சொல்லலாம், ஆனால் பொதுவாகத் திணிப்பதில்லை. அப்படித் திணித்து படிப்பு பாழ்பட்ட சிலரையும் பார்த்திருக்கின்றேன். படித்து முடித்து வாழ்வைப் பற்றி சுயமாக முடிவெடுக்கக்கூடிய பிள்ளைகளை திருமணம் என்று வரும்போது பெற்றோர் தமது வரட்டுக் கெளரவத்திற்காக வேறுவிதமான முடிவுகளை emotional blackmail மூலம் செய்யப்பண்ணி அவர்களின் வாழ்க்கையைக் கெடுத்ததையும் அறிந்திருக்கின்றேன். எனவே, பிள்ளைகளை உனது சொந்தக்காலில் நில், சரி பிழைகளை அறிந்துகொள், தேவையென்றால் உதவிக்கும், ஆலோசனைக்கும் பெற்றோர் இருக்கின்றார்கள் என்று independent ஆக வளர்ப்பதுதான் மேற்குநாடுகளில் பொருந்தும்.
 13. வளவன், உங்கள் கருத்தோடு ஒத்துக்கொள்ள முடிகின்றது ஆனால் தரவுகள் இல்லாமல் வீதங்களை சொல்லமுடியாது. கள ஆய்வு செய்து தரவுகளைக் வைத்துத்தான் நம்பகமான நம்பர்களைச் சொல்லலாம். இல்லாவிட்டால் Finger in the Air Estimate தான்.
 14. புலம் பெயர்ந்த நாடுகளுக்கு 20 வயதை கடந்து வந்தவர்கள் அனைவருக்குமே சாதிபாகுபாடு என்பது மனதில் உறங்கி கொண்டே இருக்கிறது, ஆனால் அதை வெளிப்படையாக காட்டமுடியாததுக்கு இரண்டே காரணங்கள்தான். 1) எந்த ஒரு மனிதனிலும் தங்கி எவரும் இல்லை, எவருக்கும் சலாம் போடவேண்டிய அவசியமில்லை, 2) அப்படி திமிர்காட்டி நேரடி ஒடுக்குமுறைகாட்டினால் சட்டம் எந்த பாகுபாடும் பார்க்காமல் குற்றவாளிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கும். அங்கே தனிமனிதர்கள் தமது அந்தஸ்தை காண்பித்து சட்டத்தை வளைத்து தமக்கு சாதகமாய் ஆக்கமுடியாது. தாயகத்தில் சாதிய செல்வாக்கில் உள்ளவர்கள் தமது செல்வாக்கு அந்தஸ்தை பாவித்து காவல்துறையை தமது வீட்டுக்கே கூட்டி வந்து விருந்து வைப்பார்கள், அல்லது தனிப்பட்ட ரீதியில் கவனிப்பார்கள், அங்கே ஒடுக்கப்பட்ட ஏழைகள் பக்கம் இருக்கும் நீதி சபையேறாது. புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறையாக பிறந்தவர்களிடம் 50% சாதி உணர்வு இருக்கும் அது அவர்களாய் உணர்ந்ததல்ல பெற்றோர்களால் அறிவுறுத்தப்பட்ட வளர்ப்பு அது., அதுக்கடுத்த தலைமுறையில் 75% சாதி இல்லாமல் போகும் , அதுக்கடுத்த தலைமுறையில் சாதி மட்டுமல்ல தமிழும் இல்லாமல் போகும். அதுக்கு அடுத்த அடுத்த தலைமுறைகள் எப்படி தமது மூதாதையர்கள் வெளிநாடுகளுக்கு வந்தார்கள் என்ற வரலாற்றையே குத்து மதிப்பாகதான் அறிந்து வைத்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் சாதி முற்றாகவே இல்லாமல் போகும். ஆனால் எத்தனை தலைமுறைகள் அல்ல நூற்றாண்டுகள் ஆனாலும் தாயகத்தில் சாதிவெறி என்பது இருந்தே ஆகும், இப்போது இருப்பதைவிட அது பல மடங்கு அதிகரித்தும் செல்லவும் வாய்ப்பு உண்டு. சாதி தவறு மனிதனை பிரித்து பார்க்ககூடாது, சாதியில் ஒன்றுமில்லை என்று குரல் எழுப்புகிறவர்களில் 90% வீதத்திற்கு அதிகமானோர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்பதே கசப்பான உண்மை. என்றைக்கு உயர் சாதியென்று தம்மை கருதிகொள்பவர்களில் 90% வீதம்பேர் சாதி தவறென்று குரல் கொடுக்கிறார்களோ அன்றுதான் சாதிய ஒழிப்பு சாத்தியப்படும்.ஆனால் அதற்கான சாத்தியங்கள் ஒருபோதுமேயில்லை. பையன் இங்கே குறிப்பிட்ட மீனவர் சாதி என்பது வெள்ளாளர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்கள்,அதனால் போனால் போவுதென்று சகித்து கொண்டிருப்பார்கள். இதுவே அதற்குகீழ் உள்ள மரமேறுபவர்கள்,மூட்டை சுமப்பவர்கள், முடி வெட்டுபவர்கள், சலவை தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை காதலித்திருந்தால் கண்டிப்பா ஒரு பிரளயமே நடந்திருக்கும், ஆக குறைந்தது பிள்ளைகளுடனான உறவையாவது முறித்து கொண்டிருப்பார்கள். தாயகத்தை பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்கள் சாதிகளை ஒழிப்பினை ஒரு போதும் சந்திக்க முடியாவிடினும் தூர நின்றுகொண்டே ஒரு மறைமுக சமத்துவத்தை ஏற்படுத்த மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்களுக்கு கை கொடுக்கும் அவை: கல்வி பொருளாதாரம். கண்ணியமான பழக்க வழக்கங்கள்.
 15. மரவள்ளி கிழங்கு வடை பற்றி முன்பு அறியவில்லை. வீடியோ செய்முறை நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் Healthy ஆன வகையில் இதை செய்யலாமா? கோதுமை மாவுக்கு மாற்றீடாக வேறு எந்த மாவை பாவிக்கலாம்? பொரிப்பதற்கு பதிலாய் வெதுப்பி எடுக்கலாமே.
 16. இருக்கலாம் ஆனால் பெற்றோரின் விருப்புவெறுப்புக்களும் அவர்களின் கௌரவங்களும் அதில் முக்கிய இடம் வகிக்கும்.
 17. லண்டன் "டவர் கில்ஸ்" மெட்ரோ நிலையத்தில் இறங்கி அருகே இருக்கும் சிறு பூங்காவில் (ஒரு ஆங்கிலேயரின் சிலையும் அங்கே இருந்தது) உட்கார்ந்து 'சாக்லேட் பாப்கார்ன்' கொரித்துக்கொண்டு, அப்படியே பொடிநடையாக சுரங்கப் பாதை மூலம் சாலையை கடந்தால் அங்கே ஒரு சிறிய அரண்மனை கோட்டை..! அருகேயிருந்த 'ஸ்டார் பக்ஸ்'ஸில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, டவர் ப்ரிட்ஜ் பாலத்தை பார்க்க தேம்ஸ் நதியின் கரையோரம் நடந்தால், எதிர்புறம் 306 மீ உயர 'சார்ட்' கூம்பு வடிவ கட்டிடம்.. கடும் குளிரில் நடுங்கியபடி பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே நதிக்கரையோரம் டவர் பிரிட்ஜ் நோக்கி நடந்தேன்..! லண்டன் நகர மக்களின் ரசனை, லைஃப் ஸ்டைல், துபாய் நகரத்தைவிட வேறு விதமாக இருந்தது.. கீழேயுள்ள காணொளியை இன்று பார்த்தபோது 8 மாதங்களுக்கு முன் சென்று வந்த லண்டன் காட்சிகள் மனக்கண்களில்..
 18. நீங்கள் வேறு உலகத்தில் இருக்கிறீர்கள். இங்கே விபரங்களை தருவது நாகரீகமாகாது என்பதால் அதனை தவிர்க்கிறேன். ஆனால்... நான் சொன்னது பொய் அல்ல.
 19. உங்களால் விளக்கமுடியவில்லை நாதமுனி. சும்மா ஒரு வசனம் விட்டால் போதாது. அடுத்த தலைமுறைக்கு எப்படி சாதி அறிவு ஊட்டப்படுகின்றது என்று சொன்னால் எங்களுக்கும் புரியும்தானே. சமய அறிவை ஊட்ட எவ்வளவோ கஷ்டப்படவேண்டி உள்ளது எனும்போது எப்படி இளம் சமுதாயத்திற்கு சாதி அறிவு ஊட்டப்படுகின்றது? பெரும்பாலானோர் தாங்களாகவே துணையைத் தேடிக்கொள்வார்கள் அல்லது புதிய AI technology உள்ள apps மூலம் சரியானவர்களைக் கண்டுகொள்வார்கள். அப்படித்தான் எதிர்காலம் உள்ளது.
 20. அவர்களுக்கு திருமணம் நடக்கும் வரை அல்லது திருமணம் பேச்சு வரும் வரை பொறுங்கள்.
 21. சமூகச் சாளரம் பகுதியில் இருந்து “குறிப்பு பொருத்தம் பாருங்கோவன்” எனும் திரி நீக்கப்பட்டுள்ளது. களவிதி: எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும்
 1. Load more activity