Jump to content

All Activity

This stream auto-updates

  1. Today
  2. போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀 போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
  3. இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும் கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
  4. இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல் குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
  5. LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார். ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார். சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம். பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  6. ஆமாம் நானும் விரும்புகிறேன் நடக்குமா?? நடக்காது ஓருபோதும். நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை 6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான் முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி முதல்வர் ஆகலாம்?? சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது சீமான் தான் மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம் அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும் ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே??
  7. கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  8. "பழைய சில பகிடிகள்" 1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile - Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன? மறுமொழி : மழை may not come. 3.சாப்பிட எதுவும் சூடாக கிடைக்காத ஹோட்டல் எது ? மறுமொழி : ஆறிய பாவன் 4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா அது ‘A”C’ க்கு நடுவிலே இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல கல்லை போட்டால் ஏன் மூழ்கிறது ? மறுமொழி: அதுக்கு நீச்சல் தெரியாது 7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito? Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு அறையிலே ஒரு மூலையில் ஒரு பூனை இருக்கு . வலது மூலையில் ஒரு எலி . இடது மூலையில் ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி : பூனையின் கண் இதில் இருக்கும் ? மறுமொழி: பூனையின் கண் அதோட முகத்தில்தான் இருக்கும் 10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  9. வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம்.
  10. "ஓடம்" "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன் காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள் பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!" "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத் தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!" "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல் திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார். அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல் பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்! அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை. அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான். எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான். அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை? ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர். ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க, காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது. அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள். அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. 15/2/24 மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர் கணக்க்கில மட்டோ அல்லது என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  12. எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
  13. சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣. பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
  14. இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
  15. ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.
  16. யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
  17. ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும். உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  18. அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  19. எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣. ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன்.
  1. Load more activity
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.