All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. வாவ், உண்மைதான், எப்படி கண்டுபிடித்தீர்கள், நீங்கள் மிகவும் கெட்டிக்காறன்தான்,
 3. Today
 4. புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக .. பச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு. பியசீலி தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கப் பல் தேய்க்கும் பிரஸ்ஸை வாயில் வைத்தபடியே தொட்டியில் நிரப்பப் பட்டிருந்த தண்ணீரை ஒரு வாளியில் அள்ளிக்கொண்டு போய் கழிப்பறையில் வைத்து விட்டு “அப்பா தண்ணி ரெடி” என்று கத்தினான் குமார. இது அவனது அன்றாட நிகழ்ச்சி நிரலில் முக்கியமானது. இதை எப்போ தொடங்கினான் என்று தெரியாது. அவனுக்கு விபரம் தெரிய வந்த நாளில் ஒரு நாள் காலை வழமையாக பியசீலி தொட்டியிலிருந்து தண்ணீரை அள்ளியதுமே “அம்மா நான் கொண்டு போய் வைக்கிறேன்.” என்று அந்த வாளியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டுபோய் கழிப்பறையில் வைக்கத் தொடங்கியிருந்தான். இப்போ மூன்று வருடங்களாக அந்த வேலையை ஒரு கடமையாக ஒருவித மன நிறையோடு அவன் செய்து வருகிறான். சத்தம் கேட்டதுமே குணதாச படுக்கையிலிருந்து எழுந்து பக்கத்திலேயே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஊன்று கோல்களை எடுத்து இரண்டு பக்கமும் கைகளுக்கிடையில் வைத்துகொண்டு எழும்பி கொஞ்சம் தடுமாறினாலும் சுதாகரித்துக்கொண்டு ‘டக்….. டக்….’ என்கிற சத்தத்தோடு ஒற்றை காலை நிலத்தில் தடவியபடியே கழிப்பறைக்கு போவதை பல் தேய்த்தபடியே அவர் எங்கும் விழுந்துவிடக்கூடாது என்கிற அக்கறையோடு குமார கவனித்துக்கொண்டிருந்தான். “குமார……. பன்சாலைக்கு போகவேணும் கெதியா வா ” என்கிற பியசீலியில் சத்தம் கேட்டு அவசரமாக தொட்டி தண்ணீரில் குளித்து முடித்தவன், அவள் எடுத்து வைத்திருந்த வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு அவனது ஆடையை போலவே வெள்ளை வெளேரென முற்றத்தில் மலர்ந்திருந்த நித்தியகல்யாணி பூக்களை பிடுங்கி ஒருதட்டில் நிரப்பியவன் சிலவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு, வரவேற்பறையின் மூலையில் பொருத்தப்பட்டிருந்த பலகையின் மேல் சிறிய கண்ணாடி கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் சிலைக்கு முன்னால் காய்ந்து போயிருந்த பூக்களை எடுத்து எறிந்து விட்டுப் பியசீலி கொடுத்த தேநீரை குடித்து முடிந்ததும் அவள் தலை வாரி விட்டு நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள். காலைக்கடனை முடித்து முகம் கழுவிவிட்டு தட்டில் குமார வைத்த பூக்களை எடுத்து கண்ணாடிக் கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் முன்னால் வைத்து வணங்கிவிட்டுக் கதிரையில் வந்தமர்ந்த குணதாச முன்னால் பூக் கூடையை தூக்கியபடியே ஓடிப்போய் நின்றான். “உன் கோபத்தை குறைத்து நல்ல புத்தியை கொடுக்கும்படி புத்த பிரானை நன்றாக வேண்டிக்கொள்.” என்று பியசீலி வாரிவிட்ட தலையை லேசாய் கலைத்துவிட்டு ஒரு முத்தம் கொடுத்து அனுப்பிவைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குணதாச கடை திறக்கவேண்டியதில்லை எனவே தொலைக்காட்சியை போட்டுவிட்டு கதிரையில் சாய்ந்துவிட பியசீலி சமையலில் இறங்கிவிட்டாள். சிறிது நேரத்திலேயே வீதியில் எதோ சத்தம் கேட்டது “நோனா….. நோனா….. ஓடியாங்க உங்களோட மகன் என்னோட மகனை போட்டு அடிக்கிறான். தயவு செய்து ஓடியாங்க”. என்கிற சத்தத்தோடு அதே தெருவிலிருக்கும் ரமணி ஓடி வந்துகொண்டிருந்தாள். சத்தம் கேட்டு சமையலறையிலிருந்த பியசீலி வெளியே போய் ரமணியோடு சேர்ந்து ஓடினாள். குமார கொண்டுபோன மலர்தட்டு கீழே விழுந்து பூக்கள் எங்கும் சிதறிப்போய் கிடக்க அவன் ரமணியின் மகனை குப்புறப்போட்டு முதுகில் ஏறியிருந்து மாறி மாறி குதிக்கொண்டிருந்தான். பெரும்பாடு பட்டு அவனை பிரித்தெடுத்த பியசீலி “எதுக்கடா அவனை அடிக்கிறாய்? உனக்கு கோபம் குறைந்து நல்ல புத்தி கொடுக்க தானே பன்சாலைக்கு போ என்று அனுப்பினேன். எதுக்கடா?” என்றபடி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாலும் அது அவனுக்கு வலிக்கவில்லை . “அம்மா அவன் அப்பாவை கிண்டல் பண்ணினான்.அப்பா போல தாண்டி தாண்டி நடந்து காட்டினான். அதுக்காக அடிச்சது பிழையா?” என்று சத்தமாகவே கேட்டான் . “இல்ல நோனா அவன் நேற்று பந்து விளையாடும்போது உண்மையிலேயே மகனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அதுதான் தாண்டியபடி நடக்கிறான்”. என்று பயந்தபடியே ரமணி சொல்லி முடிக்க. “சரி உன்னைப்பார் ஒரே அழுக்கு, இனி பன்சாலை போகவேண்டாம்.” என்றபடி கீழே விழுந்திருந்த தட்டை தூக்கியவள் குமாரவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வரும்போதே தடியை ஊன்றியபடி குணதாச பாதி வழிக்கு வந்து விட்டிருந்தான். “என்ன நடந்தது?” என்கிற அவனது கேள்விக்கு, “எல்லாம் உங்களாலைதான் .” என்றுவிட்டுப் பியசீலி வேகமாக கடந்து சென்றுவிட, தடியை ஊன்றி வேகமாக நடந்ததால் தோள் பட்டைகள் வலியெடுக்க அப்படியே கொஞ்ச நேரம் குனிந்து நின்று ஆறுதல் படுத்திக்கொண்டு மீண்டும் வீட்டிற்குதிரும்பியிருந்தான். வீட்டுக்குள் நுழையும்போதே பியசீலிக்கும் குமாரவுக்கும் நடந்த கோபமான உரையாடல் அவன் காதில் விழுந்தது. “அம்மா நீ சொல்வது போல அவர்கள் ஒன்றும் நல்லவர்களில்லை. அவன் வேணுமெண்டே அப்பாவை கிண்டலடித்தான்..” “இல்லை மகனே அவர்கள் நல்லவர்கள். “எங்களுக்கு நிறைய உதவியிருக்கிறார்கள் ..” “இல்லை கெட்டவர்கள்…. அவர்களால் தான் அப்பாவுக்கு இந்த நிலைமை. அவரை பார் எவ்வளவு சிரமப்படுகிறார்?” “அது வேற. இது வேறடா. புரிஞ்சுகொள் ……” “இல்லை அவர்கள் எல்லாமே அப்பிடிதான். அவர்களை அடிக்க வேணும். முடிந்தால் கொலை கூட …..” “டேய்…… நீ கூட ………?” என்று பியசீலி ஆத்திரத்தில் கத்தும் போது உள்ளே வந்து விட்டிருந்த குணதாச “வேண்டாம் நிப்பாட்டு……..” என்று அதை விட சத்தமாக கத்தினான். வேகமாக வீட்டினுள் புகுந்து தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு பின்புறமாக சென்ற குமார சுவரோடு பந்தை அடிக்கத் தொடங்கியிருந்தான். அவனுக்கு கோபம் வரும்போதெல்லாம் தன் கோபத்தை குறைக்க அவன் செய்யும் வேலையது. சுவரில் பந்தை அடித்து அடித்து அது டமாலென வெடித்த பின்புதான் அவன் கோபம் ஆறும். பந்து சுவரில் மோதும் சத்தம் கேட்கத் தொடங்கிருந்தது. குணதாச கைத்தடிகளை கீழே போட்டு விட்டு நிலத்தில் அமர்து கொண்டு “என்ன பியசீலி நீ கூட….?” என்று சொல்லும்போதே அவன் கண்கள் கலங்க தொடங்கியிருந்தது. “இல்லை இப்போ அவன் வளர்த்துவிட்டான். எல்லாம் தெரிந்துகொள்ளும் வயதும் வந்து விட்டது. இனிமேலும் எல்லாத்தையும் மறைக்க முடியாது. அவனாக தெரிந்து கொண்டால் எங்கள் மீது வெறுப்பு வரும். எனவே சொல்லிதானே ஆகவேணும் ..?” “சரி சொல்லலாம். கொஞ்ச நாளில பள்ளிக்கூட விடுமுறை வந்துவிடும். நாங்கள் எல்லோரும் ஒரு சுற்றுலா போகலாம். அப்போ நானே பக்குவாமா அவனுக்கு சொல்லுறேன். அதுவரை பொறுமையா இரு”. டமாலென்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. சரி இன்னொரு பந்து வாங்கவேண்டும் என்றபடி பியசீலி வீட்டின் பின்புறமாக போனாள். ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ இதே கிராமத்தில் இதே காணியில் இருந்த சிறிய குடிசையில் தன் தாய் சகோதரியோடு தான் குணதாச வாழ்ந்தான். தந்தை யாரென்றோ அதைப்பற்றி அறியும் ஆவலோ அவனுக்கு இருந்ததில்லை. நீ வயிற்றில் இருக்கும்போதே, “அப்பா யாரோடோ ஊரை விட்டு ஓடிப்போய் விட்டார்.” என அம்மா சொன்னதை தவிர வேறெந்த தகவலும் அவனுக்கு தெரியாது. தேயிலை பதனிடும் சிறிய தொழிற்சாலை ஒன்றில்தான் அவன் அம்மா வேலை செய்தார். குணதாசவுக்கும் படிப்பில் பெரிய ஆர்வமில்லாததால் எட்டாவது வகுப்போடு நிறுத்திவிட்டு அம்மாவோடு அதே தொழிற்சாலைக்கு வேலைக்கு போக தொடக்கி விட்டிருந்தான். அவன் அக்கா பத்தாவது படித்து விட்டு வீட்டிலிருந்தபோது பன் சாலையில் வணங்க வந்த ஒரு போலிஸ் காரர் அவளைப் பிடித்துப்போய் பெண் கேட்டு வந்து திருமணமும் நடந்து அவர்களோடு அம்மாவும் கண்டி நகருக்கு போய்விட. வாழ்கையில் எந்த இலட்சியமும் இல்லாமல் வெறுமனே நாட்களை கடதிக்கொண்டிருந்த குணதாசவுக்கு தேயிலை தொழில்சாலையில் வேகமாக சுற்றிக்கொண்டிருந்த இயந்திரத்தின் பட்டி அறுந்து தோள்பட்டையில் அடிதபோதுதான் வாழ்கையின் முதல் வலி தெரிந்தது . அவசரமாக அவனை வைத்தியசாலைக்கு கொண்டு போனதும் வலியை குறைப்பதுக்காக மென்மையான வலியோடு ஊசி மருந்தை செலுத்திய தாதி பியசீலியை முதன் முதலாக சந்தித்தான். பின்னர் அவளை சந்திப்பதுக்காகவே வலிக்கான வழியை தேடி கண்டுபிடித்து வைத்திய சாலையின் வாடிக்கையாளன் ஆனான். தினமொரு வலியோடு தன்னை சந்திக்கவே வழி தேடி வருவதாக பியசீலி உணர்ந்துகொண்ட தருணத்தில் அவளுக்கும் அவனை பிடித்துப்போய் விடவே, “அடிக்கடி அடிபட்டு வராதே அன்பே. அன்போடு நானே உனை தேடி வருகிறேன். அப்பாவை வந்து பார்.” என்று அவள் சொல்லி விட்டாள். அவன் அவளின் அப்பாவை தேடிப்போனான். அவரோ, “வேலையென்ன? சம்பளமென்ன? இப்போவெல்லாம் வசதியான பெண்களை வழைத்து போட்டுக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கிறதே உங்களுக்கு வேலையாய் போச்சு. போய் முடிந்தால் ஒரு வசதியான வீட்டை கட்டி முடி. அப்போதான் என் மகளை கட்டிக்கொடுக்க முடியுமென்று கறாராக சொல்லி விட்டார்”. கூரை பிய்ந்து தொங்கிய குடிசையில் குந்தியிருந்து யோசித்தான். தேயிலை கொம்பெனியில் வேலை செய்து கூரை கூட வேயமுடியாது. வீடு எப்பிடி காட்டுறதாம்..? அப்போ தான் வாகனத்தில் வந்தவர்கள் வீசி விட்டு போன விளம்பரத்தை எடுத்தான். ‘எம் தேசத்தை நாமே மீட்க வேண்டும். இருக்கும் இந்த தீவு மட்டுமே எமக்கான இருப்பிடம். நான்கு பக்கமும் கடலால் மட்டுமல்ல எதிரிகளாலும் சூழப்பட்டிருக்கிறோம். இது அவசர தேவை. அதிக சம்பளம்.’ படித்து முடித்ததுமே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி கைகளை மடக்கி மேலே உயர்த்தி தசைகள் புடைக்கிறதா என பார்த்து விட்டு அடுத்த நாளே அந்த விளம்பரதிலுள்ள விலாசத்துக்கு போவதென முடிவெடுத்திருந்தான். அன்றிரவே அவன் கனவில் அந்த இடத்தில் ஒரு மாடி வீடு பிளஸ் மொட்டை மாடியில் பிய சீலியை அணைத்தபடி அவன்………. 000000000000000000000 இராணுவத்தில் சேர்ந்து விட்டிருந்தவன் பயிற்சிகள் முடிந்ததுமே கட்டாய சேவையாக வடக்குக்கு அனுப்பப் பட்டிருந்தான். புதிதாக சேர்ந்தவர்களின் கடமையே இரவுநேர காவல் நிலைகளில்தான் தொடங்கும். சண்டை தொடக்கி விட்டால் முன்னுக்கு செல்பவர்களும் அவர்கள் தான். மூன்று வருடங்கள் லீவு எடுக்கமால் அவ்வப்போது பியசீலிக்கு மட்டும் கடிதமெழுதி அனுப்பி விட்டு கல்வீட்டை கட்டி காதலியை மனைவியாக்கும் கனவோடு கடமையிலிருந்தானே தவிர நாட்டை பற்றிய கவலையேதுமிருக்கவில்லை. சண்டை தொடங்கி விட்டாலே எரிச்சலாவிருக்கும். முடிந்தவரை எங்காவது பதுங்கி விடுவான். “சண்டையில் என்ன கிழித்தாய்?” என்று அவன் அதிகாரி கேட்கும் கேள்விக்காக வானத்தை நோக்கி சுட்டு விட்டு துப்பாக்கி ரவை தீர்ந்த கணக்கை காட்டுவான். சமாதான பேச்சுவார்த்தை தொடங்கலாமென பேச்சு அடிபட்டுகொண்டிருந்த நேரம் தொடர்ச்சியாக விடுமுறையே எடுக்காத அவனுக்கு விடுமுறை கிடைத்தது. நேரடியாக பியசீலியின் வீட்டுக்கு சென்றவன் அவள் தந்தையிடம் “இதோ பொறுப்பான வேலையிலிருக்கிறேன். நல்ல சம்பளம். நாளையே ஒரு இஞ்சினியரை அழைத்துவந்து வீட்டுக்கு பிளான் கீறி அத்திவாரம் போடப்போகிறேன். தனி வீடு அல்ல மாடி வீடு”. என்று வாசலில் நின்றபடி சத்தமாகவே சொன்னான். இராணுவ உடையில் துப்பாக்கியோடு வேறு வந்திருக்கிறான். இதுக்கு மேலையும் முடியாது என்று சொன்னால் சுட்டாலும் சுட்டு விடுவான் என்கிற பயத்தில் உடனே அவர் ‘சரி’ சொல்லிவிட, எளிமையாக அவர்களின் திருமணம் நடந்து முடிந்து விட்டிருந்தது. வீடு கட்டும் வேலைகளும் ஆரம்பித்து விட்டதால் அவன் பியசீலி வீட்டிலேயே தங்கியிருந்தான். ஒரு மாத லீவு ஓடித் தீர்ந்துவிட அவளை வங்கிக்கு அழைத்துப்போய் அவள் பெயரை தன் கணக்கில் இணைத்தவன், “பணத்தை எடுத்து வீட்டு வேலைகளை கவனித்துக் கொள். அடுத்த விடுமுறைக்கு வரும்போது புது வீட்டுக்கு குடி போய் விடலாமென்றவன்.”, புதிய காதல் மனைவியை கண்ணீரோடு விடை பெற்றான். அப்போ சமாதான காலமென்பதால் அவனுக்கு அடிக்கடி விடுமுறை கிடைத்தது. கீழ் தளம் மட்டுமே கட்டி முடிக்கப்படிருந்த வீட்டுக்குள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும் வருடங்கள் செல்ல செல்ல அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்கிற கவலை மனதுக்குள் புகுந்து கொள்ளத் தொடங்கியிருந்தது . அங்கங்கே சிறு மோதல்களும் நடந்து பேச்சு வார்த்தை குழம்பி மீண்டுமொரு யுத்தம் தொடங்குவதுக்கான அறிகுறிகள் தோன்றியிருந்ததால் விடுமுறையில் போயிருக்கும் இராணுவத்தினர் அனைவரையும் உடனடியாக கடமைக்கு திரும்புமாறு அறிவித்தல்களும் வெளியாகியிருந்தது. சண்டை தொடங்கி விட்டால் இனி அடிக்கடி விடுமுறை கிடைக்காது எனவே வைத்தியரை போய் பார்த்து விடலாமென்று உள்ளுரிலிருந்த வைத்தியசாலையில் போய் பரிசோதனை செய்து பார்த்தார்கள். குறைபாடு குணதாசவிடமே என்றதும் அவனுக்கு மடியிலேயே ஒரு குண்டு விழுந்து வெடித்தது போலவிருந்தது. “இல்லை இவன் சரியில்லை. கொழும்பு போய் பெரிய வைத்திய சாலையில் பார்க்கலாமென்று” பியசீலி அவனை தேற்றினாள். மீண்டும் ஒரு சிறு நம்பிக்கையோடு கொழும்பு போனார்கள். அந்த வைத்தியசாலை பரிசோதனை முடிவுகளும் குணதாசவை நோக்கியே கையை நீட்டியது. அவன் வாழ்நாளில் நினைவு தெரிந்து முதன் முதலாக அழுதான். முழுதாய் உடைந்து போனவனை பியசீலி அணைத்து அழைத்து வந்தாலும் வீட்டில் மாட்டியிருந்த இராணுவ உடையில் கம்பீரமாக நின்றிருக்கும் அவனது படம் அவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பது போலவேயிருந்தது. கண்ணை மூடும் போதெல்லாம் பியசீலியின் தந்தை, “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா ? உனக்கெதுக்கு ராணுவ உடுப்பு? கையில துப்பாக்கி தூ ………” என்று துப்புவது போலவேயிருந்தது. ஒரு நாள் முழுதும் துவண்டுபோய் வீட்டிலேயே படுத்திருந்தவனுக்கு பியசீலியின் நிலையை யோசித்தான். பாவம் என்னை நம்பி வந்தவள், அவளை சமாதானப் படுத்த வேண்டும்என்பதுக்காக, “சரி விடு. எல்லாம் புத்தபகவான் பார்த்துக்கொள்ளுவார். மருத்துவத்தால் மாற்ற முடியாததையும் அவர் மாற்றுவார்.” என்று தேற்றியவன், மறு நாளே சில வேலைகளை திட்டமிட்டு செய்யத் தொடங்கியிருந்தான். வீடு மேல் தளம் கட்டுவதை இப்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்று முடிவெடுத்தவன் தன் பெயரில் ஆயுள் காப்புறுதி செய்துவிட்டு அன்றே வேலைக்கு திரும்பி விட்டிருந்தான். சில நாட்களிலேயே யுத்தமும் தொடக்கி விட்டிருக்க அவனை மன்னார் தளத்துக்கு அனுப்பி விட்டிருந்தார்கள். இராணுவம் மன்னாரிலிருந்தே களமுனையை திறந்து விட்டிருந்தது. இந்தச் சண்டையில் எப்படியும் செத்துப்போய் விடவேண்டும் அப்போதான் அவளுக்கு காப்புறுதி பணம் கிடைக்கும். வேறு யாரையாவது திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்பது மட்டுமே அவனது நோக்கம். இதுவரை காலமும் பதுங்கியிருந்து வானத்தை நோக்கி சுட்டவன் இப்போ முன்னுக்கு வந்து மூர்க்கமாகக் களமாடத்தொடங்கியிருந்தான். அவனது திறமையை பார்த்த அதிகாரியே அசந்துபோய் ஊடுருவி தாக்கும் சிறிய குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்திருந்தார். இராணுவம் மடுவைத் தாண்டி பல குறுக்கு பாதைகளாலும் கிளிநொச்சியை அண்மித்துக்கொண்டிருந்தது. அவனும் யுத்த களத்தில் திறமையால் குவித்த வெற்றிகளை பாராட்டி குறுகிய காலத்திலேயே ஒரு படையணியை வழிநடத்தும் அதிகாரியாகி விட்டிருந்தான். பியசீலிக்கு அவ்வப்போது குறுஞ் செய்தி அனுப்புவதோடு அவனுக்கு கிடைத்த பாராட்டுக்களும் பதவிகளாலும் ‘நான் வீரமான ஒரு ஆண்மகன். எனக்கு எந்தக்குறையுமில்லை.’ என நம்பத் தொடங்கியிருந்தான். கிளிநொச்சியின் பாரிய மண் அணையை உடைத்து உள்ளே புகுந்த அணியில் அவனது அணியும் முக்கியமானது. பொது மக்களை சரணடையும்படி அறிவித்தல் கொடுத்ததுமே எங்காவது ஒரு வழி கிடைக்காதா என காயங்களோடும் பசியோடும் ஏங்கயிருந்த மக்கள் சாரை சாரையாக சரணடையத் தொடங்கியிருந்தார்கள். இராணுவத்தினர் ஆண்களை, பெண்களை, வயதானவர்களை, காயமடைந்தவர்களை எனத் தனித்தனியாகப் பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். நடைப்பிணங்களாக நகர்ந்து கொண்டிருந்தவரிசையில் ஒரு சலசலப்பு. அவன் என்னவென்று விசாரித்தான். யாரோ ஒரு இளம்குடும்பம் பெண் நிறைமாத கர்ப்பிணியாம். கணவன் அவளை தனியாக விடமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் கவனிதுக்கொண்டிருந்தவன் நேராகப்போய் அடம்பிடிதுக்கொண்டிருந்தவனை எட்டி உடைத்து விட்டு இழுத்துக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான். “ஐயா பெறு மாசம் ஐயா. இண்டைக்கோ நாளைக்கோ பிறந்திடும். அவள் வேற நோஞ்சான இருக்கிறாள். நான் பக்கத்திலை பாத்துக்கொள்ளுறேன். விடுங்கோ ஐயா.” எண்டு புலம்பியபடியே இருந்தவனை இராணுவத்தினர் தள்ளிக்கொண்டு போனார்கள். அவள் மொத்தமாக அழுது கண்ணீர் தீர்ந்திருக்க வேண்டும். வயிற்றைப்பிடித்தபடி பற்களால் உதட்டை கடித்து கண்களை மூடி நின்றிருந்தவளை இராணுவ பெண்ணொருத்தி அழைத்துக்கொண்டு போனாள். இரவானதும் சரணடைவு நிறுத்திவைக்கப்பட்டு மறுநாள் வரும்படி அறிவித்தார்கள். இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கிகளின் சத்தம் அன்று கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அவர்களது தலைநகரம் வீழ்ந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் முற்றாக முடித்துவிடுவோம் என்று வெற்றிக்களிப்பில் நிறைந்திருந்த தன் அணியினர்ருக்கு வாழ்த்து சொன்னவன். தற்காலிக தங்குமிடமாகப் பாதி இடிந்தவீடு ஓன்றில் ஓய்வெடுக்க சென்றிருந்தான். ஜெனறேற்றரில் ஒரேயொரு பல்ப்புமட்டும் மெல்லிய வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. லேசாகக் கண்ணயர்த்து போகும் நேரம் மீண்டும் சலசலப்பு. வேகமாக வந்த ஒருவன் சலூட் அடித்துவிட்டு, “சேர் .. சரணடைந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கப்போகிறது. வலியில் கத்துகிறாள் என்ன செய்யலாம்? ” என்றான். பல நாட்களுக்கு பின்னர் கழற்றி மாட்டியிருந்த சட்டையை போட்டுக்கொண்டு பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு போனவன் வலியில் துடிதுக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவன் அடித்து விரட்டியவனின் மனைவியேதான். “ராணுவ மருத்துவருக்கு தகவல் கொடுங்கள். அவளை என் தங்குமிடத்துக்குத் தூக்கிவாருங்கள்.” என்று கட்டளையிட்டு விட்டு மீண்டும் இருப்பிடம் திரும்பி விட்டான். அவளைக் கொண்டுவந்து நிலத்தில் கிடத்தி விட்டிருந்தார்கள். வைத்தியர் வந்து சேரும்போது வலியில் முனகிக்கொண்டிருந்தவள் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள். வைத்தியர் வந்ததுமே அவள் நாடித்துடிப்பை தொட்டுப்பார்த்து விட்டு வேகமாக இயங்கத் தொடங்கினார். குளுக்கோஸ் பையை எடுத்து ஒரு தடியில் கட்டி ஊசியை குழாயில் இணைத்து அவள் கையில் நரம்பை தேடிப்பிடித்து ஏற்றி விட்டு. சிறு பிளேட்டை எடுத்து அவளின் அடி வயிற்ரைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்தவர், அதே பிளேட்டால் தொப்பிள் கொடியை வெட்டி விட்டு தண்ணீர் வேணுமென்றதும் குணதாசவே வாளியில் தண்ணீரை கொண்டு வந்து வைத்தான். அதில் குழந்தைதையை அமிழ்த்தி கழுவத்தொடங்கியதுமே அழத் தொடங்கியிருந்தது. “குழந்தைக்கு பால் கொடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள்” என்று வைத்தியர் சொன்னதுமே, காவலுக்கு நின்ற ஒருவனை அழைத்து, “கைதானவர்களில் பால் கொடுக்கக் கூடிய தாய் யாராவதிருந்தால் உடனே வேகமாக அழைத்து வா..” என்று கட்டளையிட்டான். சில நாட்களுக்கு முன்னர் பிறந்த கைக்குழந்தையோடு ஒரு தாயை அவன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் சைகை செய்ததுமே ஒருவன் அவளிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொள்ள அழுதுகொண்டிருந்த குழந்தையை அவள் கையில் கொடுத்ததும் அங்கிருந்து ஓரமாக அவள் சென்றுவிட குழந்தையின் அழுகை சத்தம் நின்று போய் விட்டிருந்தது. தன் கடமைகளை முடித்த வைத்தியர் அவனிடம் வந்து, “தையல் போட்டிருக்கிறேன். நிறைய இரத்தம் வெளியேறியிருக்கிறது. ஏற்கனவே அந்தப்பெண் பலவீனமாக இருக்கிறாள். உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் உயிருக்கு ஆபத்து. வசதியுள்ள பெரிய வைத்திய சாலைக்கு எடுத்துப்போங்கள்.” என்று சொல்லிவிட்டு அவனுக்கு முன்னால் சல்யூட் அடித்து விட்டு விடை பெற்றுக்கொண்டான். வைத்தியர் போனதும் சுற்று முற்றும் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் காவலுக்கு நின்றவர்களும் குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண்ணும் சிறிது தூரத்திலேயே நிற்பது தெரிந்தது. அறைக்கு திரும்பி அசைவற்றுக்கிடந்த அவளையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தவன் மீண்டும் வெளியே பார்த்தான். அருகாக யாருமில்லை. கதவை மெதுவாக சாத்தி விட்டு இடுப்பிலிருந்த சிறிய கத்தியை எடுத்து அவளின் அடி வயிற்றின் கீழே செருகி மேல் பக்கமாக இழுத்தான். அப்போதுதான் போடப்பட்டிருந்த தையல்கள் கத்திக்கு வழி விட்டு இலகுவாக ஒவ்வொன்றாக அறுத்துக்கொண்டு சில அங்குலங்கள் அதையும் தாண்டி வந்து நின்றது. கத்தியை இழுத்தெடுத்து குளுக்கோஸ் குழாயை அறுத்தவன், அதிலிருந்து வழிந்த குளுக்கோசில் கழுவி மீண்டும் இடுப்பில் செருகி விட்டு குனிந்து பார்த்தான். அவள் அவனை வெறித்துப் பார்த்தபடியே உடல் ஒரு தடவை அசைந்தது. எதோ சொல்ல முயற்சித்தது போலவிருந்தது. கழுதுப்பக்கத்தில் விரல்களை வைத்துப் பார்த்தான். நாடித் துடிப்பு அடங்கிப்போயிருந்தது . வெளியே வந்து லேசாக விசிலடித்ததும் ஓடி வந்த பாது காவலனிடம், ‘அவள் இறந்து விட்டாள். கொண்டு போய் புதைத்துவிடு.’ என்று சைகையிலேயே சொன்னதும், இயந்திரம் போல இயங்கிய பாதுகாவலன் இறந்தவளின் உடலை அவள் கிடத்தியிருந்த துணியிலேயே சுருட்டி தோளில் சுமந்தபடி இருளில் மறையத் தொடங்கியிருந்தான். அவளுடலில் வழிவதற்கு இரத்தம் இருந்திருக்கவில்லை. வெளியே பாலுட்டி முடித்திருந்தவளிடம் அவளின் குழந்தையையும் எடுத்துக்கொண்டுபோய் உள்ளே படுக்கசொன்னதும் அவள் குழந்தைகளோடு உள்ளே நுழைந்து இரண்டு குழந்தைகளையும் அணைத்தபடி நித்திரையாகிப்போனாள். அரையிருளில் அறுந்துபோன குளுக்கோஸ் குழாயிலிருந்து இன்னமும் துளிகள் விழுந்துகொண்டிருந்தது. 0000000000000000000000000 நீண்ட நாளின் பின் குணதாச தொலைபேசியில் பிய சீலியை அழைத்ததும் அதிகாலை நேரம் பயத்தில் பரபரத்து, “உங்களுக்கு ஒன்றுமில்லையே…….? என்றவளிடம் , “இல்லை காலை விடிந்ததும் ஒரு வண்டியை பிடித்துக்கொண்டு கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு வவுனியா வந்துவிடு. இராணுவ அலுவலகத்துக்கு போக வேண்டாம். ரயில் நிலைய பக்கமாக வந்துவிடு. அங்கேயே காத்திரு. நான் வந்துவிடுகிறேன்.” என்று விட்டு தொலை பேசியை துண்டித்து விட்டான் . நடந்த முழு உண்மையையையும் பியசீலியிடம் சொல்ல முடியாது. எனவே அவளுக்கு சொல்வதுக்ககவே ஒரு கதையை தயார் செய்ய வேண்டியிருந்தது .யோசித்தான். கதை இதுதான் : ‘பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி பொது மக்களை மீட்டுக்கொண்டிருந்தோம். அப்போ ஒரு கர்ப்பிணி பெண்ணும் கணவனோடு ஓடி வந்துகொண்டிருந்தாள். அப்போ பயங்கரவாதிகளின் சூடு பட்டு கணவன் இறந்து போய் விடக் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணை மட்டும் என்னால் காப்பாற்ற முடிந்தது. ஆனால் அன்றிரவே குழந்தை பிறந்துவிட பலவீனமாக இருந்த அந்தப்பெண் இறந்து விட்டாள். எவ்வளவோ முயன்றும் என்னால் அவளை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. புத்த பிரானே எமக்காக இந்த குழந்தையை என் கையில் கொடுத்ததாக நினைத்தேன். இனி இவன் எங்கள் குழந்தை……” இதை பலமுறை அவன் சொல்லிப் பார்த்துக்கொண்டான். அதிகாலையே எழுந்தவன் நித்திரையிலிருந்த பெண்ணிடம், “உன் குழந்தையை கொண்டுபோய் முகாமில் உன் உறவினர் அல்லது தெரிந்தவரிடம் கொடுத்துவிட்டு வா.” என்றவன் பழைய துணியால் சுற்றியபடி நித்திரையிலிருந்த குழந்தையை தன்னுடைய இராணுவ சீருடை ஒன்றில் சுற்றி கையில் எடுத்து பார்த்தபடியே நிற்றிருக்கும்போதே அவள் வந்து விட்டிருந்தாள். குழந்தையை அவள் கையில் கொடுத்து ஜீப்பில் ஏற சொன்னவன், வண்டியை இயக்கியதும் அது ஏ 9 பாதையால் ஓடத் தொடங்கியிருந்தது. வழி நெடுகலும் அங்காங்கு இருந்த இராணுவ தடை கம்பங்கள் எல்லாமே அவனின் அடையாளத்தை உறுதி செய்து வழி விட்டுக்கொண்டிருந்தது. வவுனியா இரயில் நிலையத்துக்கு அருகில் வந்தவன் தொலைபேசியில் பியசீலியை தொடர்பு கொண்டதுமே, அருகிலிருந்த ஒரு வாகனத்திலிருந்து இறங்கி சுற்று முற்றும் பார்த்து விட்டு, வண்டியிலிருந்தவளிடம் குழந்தையை வாங்கும்போதே அது வீரிட்டு அழத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் பலவந்தமாகவே குழந்தையை பிரித்தெடுக்கும் போது அவள் உதடுகளை கடித்து கண்களை மூடிய படியே பேசாமலிருந்தாள். பியசீலியின் கைகளில் குழந்தையை கொடுத்தவன், பியசீலிக்காக சொல்வதுக்கு தாயார் செய்து வைத்திருந்த கதையை வேகமாக சொல்லி முடித்துவிட்டு , “நீ ஊருக்கு போக வேண்டாம். அமாவிடம் விபரம் சொல்லியுள்ளேன். நேராக அவர்கள் வீட்டுக்கு போ. போகிற வழியில் குழந்தைக்கு வேண்டிய பால்மா, பால் போச்சி வாங்கி கொள்.” என்றவனிடம் குழந்தைக்கு என்ன பெயர் என்ற பியசீலியின் கேள்விக்கு, “குமார………..” என்று விட்டு ஜீப்பில் போய் ஏறிக்கொண்டான். மீண்டும் கிளிநொச்சி சென்றுகொண்டிருந்த வாகனத்தை யாருமற்ற காட்டுப் பகுதியில் நிறுத்தி அவளை கீழே இறங்கசொன்னவன் துப்பாக்கியை அவள் தலையில் வைத்தான். எந்த அசைவுமற்று நின்றவளிடம் “உனக்கு சாக பயமில்லையா?” என்றதும் அவளது உதடுகள் லேசாய் விரிந்தது. அதை சிரிப்பென்று அவன் எடுத்துக்கொண்டான். “என்ன பெயர்?” என்று அவளிடமிருந்து வந்த உணர்வுகளற்ற குரலுக்கு. “என்பெயரா….?” என்று கோபமாய் கேட்டான். “இல்ல… உன் பெண்சாதி பெயர் ..” கம்பீரமாய் துப்பாக்கியை நீட்டியபடி நின்றிருந்தவன் கொஞ்சம் தடுமாறி, “எதுக்கு….? என்றான். “அந்தக் குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கொள்ள சொல்.” என்றதும் துப்பாக்கியை மீண்டும் இடுப்பில் செருகிவிட்டு, “சரி வந்து ஜீப்பில் ஏறு.” என்றான்.அவள் ஏறி அமர்ந்ததும் ஜீப் நகரத்தொடங்கியது. இருவரிடமும் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வார்த்தைகளை வீணாக்க இருவருமே விரும்பவில்லை. ஜீப் மீண்டும் கிளிநொச்சி முகாமுக்குள் நுழைந்ததும் அவளை இறங்கி போகசொன்னவன், “உன் விசாரணைகளை விரைவாக முடித்து விடுதலை செய்ய சொல்கிறேன். நீ போகலாம்.” என்றதும் தன் பிள்ளை இருக்கும் இடத்துக்கு வேகமாக போய் கொண்டிருந்தவளிடம், “கொஞ்சம் நில்லு.” என்றவன், அருகில் போய், “அவள் பெயர் பியசீலி…… குழந்தையை பத்திரமா பார்த்துக்கொள்வாள். இதை பற்றி நீ யாரிடமும் சொல்லக்கூடாது. போ என்றான்.” எபோதாவது செத்து தொலைந்து விட வேண்டும் என்பதுக்காகவே முன்னரங்கில் மூர்க்கமாக படை நடத்தி வெற்றிகளை குவிதுக்கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் நகரத் தொடங்கியிருந்தான். ஒரு துப்பாக்கி ரவை கூட உரசிப் பார்க்கமேலேயே வாழ்க்கை வெறுத்துப்போயிருந்த காலங்கள் கடந்து போய் விட்டிருந்தது. இனி வாழ்ந்து விட வேண்டுமென முடிவெடுத்திருந்த அன்றிரவே அவனுக்கு பக்கத்தில் விழுந்து வெடித்த குண்டுச் சத்தத்தில் எழுந்த வலியோடு மயங்கிப் போயிருந்தான். ராணுவ வைத்திய சாலையில் கண்விழித்த போது, ஒற்றை காலடியில் குழந்தையோடு பியசீலி நின்றிருந்தாள். வலப்பக்கமாக பெரும் வலி. வலக்கால் பக்கமாக தொடைக்குக் கீழே வெள்ளை போர்வை மட்டுமே தெரிந்தது. ஆனாலும் விரல்கள் இருக்குமென்கிற நம்பிக்கையோடு அசைத்துப் பார்த்தான். முறிந்த பல்லியின் வால் போல அவனது தொடை மட்டும் கொஞ்சம் அசைந்தது. என்ன நடந்ததென ஞாபகங்கள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்றாக கோர்த்து பார்க்க முயன்றதில் குண்டு வெடித்தது வரை மட்டுமே ஞாபகத்தில் வந்தது. அறுந்து போயிருந்த நினைவு மீண்டும் ஓட்ட வைத்ததில் ஒற்றைக் கால் இல்லாதவனாகப் படுக்கையில். அதுக்கு மேல் அவனால் நினைவுகளை மீட்க முடியவில்லை. பியசீலி குழந்தையை அவனருகில் கிடத்தியதும், அது இரண்டு கால்களையும் அடித்து எதோ சத்தம் போட்டபோது அவன் ஒற்றைக் கால்வலியை மறந்து போனான். காயம் ஆறும்வரை சில மாதங்கள் வைத்திய சாலையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. ஒருநாள் வெளியே வீதியெங்கும் பட்டாசு சத்தம். காவலரணில் நின்றிருந்த இராணுவத்தினரும் வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். வைத்திய சாலை ஊழியர்களும் மகிழ்ச்சியோடு ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடி முடித்த மறுநாள் வைத்திய சாலைக்கு வந்திருந்த ராணுவ அதிகாரி காயமடைந்திருந்த அனைத்து வீரர்களின் வாயிலும் ‘பயங்கர வாதத்தை வென்று அரக்கனை கொன்று விட்டோம்.’ என்ற படியே பால்ச்சோற்றை ஊட்டி விட்டுச் சென்று விட்டார். காயம் ஆறிப்போனதும் வீடு திரும்பியிருந்தவனுக்கு காயமடைந்த இராணுவத்தினருக்கு கொடுக்கும் ஊக்கதொகையும் வேறு தொழில் தொடங்குவதுக்காக கைத்தொலைபேசி திருத்தும் பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டது. கிடைத்த தொகையில் வீட்டுக்கு முன்னாலேயே சிறிய தொலைபேசி திருத்தும் கடை ஒன்றை போட்டுக் கொண்டவனுக்கு ஒய்வுதியமும் கிடைதுக்கொண்டிருந்ததால் வாழ்க்கை சுமுகமாகப் போய்கொண்டிருந்தது. நாட்கள் செல்ல நடந்த சம்பவங்களும் நினைவிலிருந்து விலகிப்போய் இன்றுவரை நிம்மதியாகவே இருந்தான். இன்றைய சம்பவம் மீண்டும் அவனை பழைய நினைவுகளுக்கு இழுத்துக்கொண்டு செல்லவே, அடுத்த லீவுக்குக் குடும்பமாக கிளிநொச்சிக்குச் சுற்றுலாபோய் பியசீலிக்கு அவன் சொல்லி வைத்திருந்த அதே கதையை அங்குவைத்து நம்பும் படியாக குமாரவுக்கு சொல்லிவிடுவதென முடிவெடுத்திருந்தான். 0000000000000000000000000000 வாகனம் கிளிநொச்சி நகரை அண்டியிருந்தது. குணதாசவுக்கும் பியசீலிக்கும் நடுவில் கையில் பந்தை வைத்து உருட்டியபடியே குமார வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். குணதாசவோ இறுகிய முகத்தோடு பல வருடங்களுக்கு பின்னர் ஒரு இடத்தைக்காட்டி “இதோ……. இங்குதான் நீ கிடைத்தாய்.” என மீண்டும் சொல்லப்போகும் அந்த கதையையே மனதுக்குள் திரும்ப சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தான். கிளிநொச்சி சந்தியில் சனக்கூட்டமாகவும் சத்தமாகவும் இருக்க, சந்தியில் இருந்த உணவகத்தில் ஏதாவது சாப்பிடலாமென நினைத்து வண்டியை நிறுத்துமாறு சொல்லிவிட்டுத் தன் கைதடியைகளை எடுத்துக்கொண்டு இறங்கிய போது, வீதியின் மறுபக்கம் சனக்கூட்டமாக இருந்தது. “அங்கே என்ன நடக்கிறது?” என்று ஒருவரை கேட்டதும் , “ஒ……… அதுவா? காணமல் போனவர்களுக்கான போராட்டம். இதுவே இவங்களுக்கு வேலையா போச்சு.” எண்டு சொன்னபடி போய் விட்டார். குமார வண்டியிலிருந்து இறங்கும்போது கையிலிருந்த பந்து நழுவி வீதியில் குறுக்கே உருண்டோட தொடங்கியதும் அதை பிடிப்பதுக்காக அவன் வீதியில் பாய மறுபக்கமிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஓன்று பிரேக் அடித்து நிக்க, ஓடிப்போன குமார திரும்பவும் மறுபக்கம் வந்து விழுந்திருந்தான். என்ன நடந்தது என எல்லோருமே யோசிக்க முதல் அது நடந்து விட்டிருந்தது. அனைவருமே உறைந்து போய் நின்றிருக்கும் போது குணதாச வீதியில் கிடந்தவனை பார்த்தார். குறுக்கே ஓடிய குமாரவை காப்பாற்ற அவனை தள்ளி விட்டு பேருந்தில் ஒருவர் அடி பட்டு கிடந்திருந்தார். யாரோ போனடித்து விட்டிருக்க அம்புலன்ஸ் அவரை ஏற்றிக்கொண்டு போனதும் அங்கு வந்த போலிசார் பேருந்து ஓட்டுனரை கைதுசெய்து விசாரிக்க தொடங்கியிருந்தார்கள். குறுக்கே போன குணதாச தன் இராணுவ அடையாள அட்டையை காட்டி “என் மகனில் தான் பிழை. அவரை விட்டு விடுங்கள்.” என்றதும் போலிசாரும் “விசாரணைக்கு அழைக்கும்போது வரவேணும்.” என்று அவனை விட்டு விட்டார்கள். குமரவை காப்பாற்ற குறுக்கே விழுந்தவன் கையில் வைத்திருந்த எதையோ எறிந்து விட்டதை கவனித்திருந்த குணதாச அதை போய் எடுதுப்பார்த்தான். ஒரு பதாதையில் படம் ஒட்டியிருந்ததது. கீழே சிலவசனங்கள் . அந்த படம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைய இரவின் மங்கிய வெளிச்சத்தில் அவனிடம் எதையோ சொல்ல முயற்சி செய்து அப்படியே அடங்கிப்போனவளின் முகம். இன்னும் அவனின் நினைவிலிருந்தது. அங்கிருந்த ஒருவரிடம் “என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டான். “என் மனைவியும் பிள்ளையும் எங்கே……”? என்று எழுதியிருக்கு என்று சொல்லிவிட்டு அவன் போய் விட்டான். அக்கம் பக்கம் பார்த்து விட்டு அந்த படத்தை தனியாக பிரித்தெடுத்து சட்டைபைக்குள் மறைத்து வைத்துக்கொண்டான் . உணவகத்தில் சாப்பிட அமர்திருந்தாலும் அவனால் சாப்பிட முடியவில்லை. பியசீலியும் குமாரவும் கூட சரியாக சாப்பிடவில்லை. அரை குறையாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்திருந்தவர்கள் வண்டியில் ஏறியதும் “திரும்பவும் ஊருக்கே போ………” என்று ஓட்டுனரிடம் சொல்லிவிட எதுவும் புரியாமல் அவனும் வந்த வழியே வண்டியை செலுத்த தொடங்கியிருந்தான். குணதாச மடியிலேயே தலை வைத்து படுத்திருந்த குமார, “அப்பா……. எல்லாம் என்னால தானே…? அவருக்கு ஒண்டும் ஆகியிருக்காதே..?” என்றான். இல்லை ஒண்டும் ஆகியிருக்காது. அவர்களும் நல்லவர்கள் தான்”. என்று சட்டையை தடவிப் பார்த்துக் கொண்டான் குணதாச. ஊரை அடைந்திருந்தபோது இரவாகி விட்டிருந்தது. நீண்ட நேர மௌனத்தை உடைத்தவன், “இன்றைக்கு கொஞ்சம் குடிக்கவேண்டும்.” என்று பியசீலியிடம் மெதுவாக அனுமதி கேட்டான். அவளும் எதுவும் சொல்லவில்லை. வாகனம் சாராய கடையை அண்மித்தபோது றைவரின் தோளில்த் தட்டிப் பணத்தைக் கொடுத்தான். வண்டியை நிறுத்தியவன் ஓடிப்போய் வாங்கி வந்து அவனிடம் கொடுத்து விட்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான். இரவு பியசீலி அறைக்குள் போய் படுத்துவிட, அவன் குடிப்பதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த குமாரவை “வா…” என்று அழைத்தவன், அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டு, அப்பா இப்போ உனக்கொரு கதை சொல்லப் போகிறேன்.” என்று சொல்லத் தொடங்கியிருந்தான் 000000000000000000000 மறுநாள் காலை வழமையை விட தாமதமதமாக எழும்பிய குமார குணதாசவை பார்த்தபோது அவன் மூலையில் சிறிய கண்ணாடி கூண்டிலிருந்த புத்தர்சிலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் புதிதாக பிடுங்கி வைக்கப்பட்டிருந்த நந்தியாவட்டை பூக்கள் நிரம்பியிருந்தது. அருகில் ஒரு பெண்ணின் படம். ” குமார முகம் கழுவி விட்டு வா. தேநீர் தயார் செய்கிறேன்.” என்கிற பியசீலி சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதவன் பந்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பின்புறமாக சென்றிருந்தான். பந்து சுவரில்மோதும் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. குணதாச பியசீலியை திரும்பிப் பார்த்தான். அவள் முகட்டை வெறித்துப்பார்த்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குணதாச நினைவு தெரிந்து வாழ்கையில் இரண்டாவது தடவையாக அழ ஆரம்பித்திருந்தான். டமால் என்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது .
 5. Mulvaney brashly admits quid pro quo over Ukraine aid as key details emerge White House acting chief of staff Mick Mulvaney made a stunning admission Thursday by confirming that President Donald Trump froze nearly $400 million in US security aid to Ukraine in part to pressure that country into investigating Democrats. Mulvaney insisted that he only knew of a US request to investigate the handling of a Democratic National Committee server hacked in the 2016 election, but text messages between US diplomats show efforts to get Ukraine to commit to an investigation into Burisma, the company on whose board former Vice President Joe Biden's son sat. There is no evidence of wrongdoing in Ukraine by either Biden. "That's why we held up the money," Mulvaney said after listing the 2016-related investigation and Trump's broader concerns about corruption in Ukraine. After weeks during which Trump denied the existence of any political quid pro quo in his withholding of security aid to Ukraine, Mulvaney confirmed the existence of a quid pro quo and offered this retort: "Get over it." "We do that all the time with foreign policy," Mulvaney said of the influence of politics in the Trump administration. In an unusual statement expressing public distance from the White House, a senior Justice Department official responded: "If the White House was withholding aid in regards to the cooperation of any investigation at the Department of Justice, that is news to us." Trump's attorney Jay Sekulow told CNN's Jim Acosta: "The legal team was not involved in the acting chief of staff's press briefing." https://www.cnn.com/2019/10/17/politics/mick-mulvaney-quid-pro-quo-donald-trump-ukraine-aid/index.html
 6. (நா.தனுஜா) சர்வதேச ஊடகங்களின் முன்னிலையில் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, இவ்வாறு செய்வதற்கு அவருக்கு வெட்கமில்லையா? முதுகெலும்பு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினார். புதிய ஜனநாயக முன்னணியினால் கெகிராவ நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், கடந்த செவ்வாய்கிழமை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் முன்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ தலைகுனிய நேர்ந்த சம்பவத்தை அனைவரும் அறிவீர்கள். அடிப்படைவாதம் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அனைத்து பக்கமும் திரும்பினாரே தவிர, அவரிடமிருந்து பதிலில்லை. இவ்வளவு காலமும் அவர்கள் தேசிய பாதுகாப்பு குறித்தே பேசிவந்தார்கள். எனினும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உண்மைகள் அனைத்தும் வெளிவந்துவிட்டது. கடந்த காலத்தில் அவர்கள் யாருக்கு ஜம்பர் அணிவித்து, யாரை சிறையில் அடைத்தார்களோ அவரே போருக்கு தலைமைத்துவம் வழங்கிய யுத்தவீரர் என்று சர்வதேச ஊடகங்களின் முன்நிலையில் அவர்களுடைய வாயாலேயே ஏற்றுக்கொள்ளளும்படி நேர்ந்துவிட்டது. இராணுவத்தினரை தண்டிப்பார்கள், மின்சாரக்கதிரையில் ஏற்றுவார்கள் என்றெல்லாம் கடந்த காலத்தில் கூறினார்கள். அவ்வாறு மின்சாரக்கதிரையில் ஏற்றுவதற்காகவே அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய பதில் 'காட்டிக்கொடுப்பு'. ஆனால் பிரேமதாசவினர் யாருக்கும் பயந்தவர்கள் அல்ல. யாருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்படக்கூடியவர்கள் அல்ல. சர்வதேசத்தில் எவரொருவரைக் கண்டும் நான் அஞ்சவில்லை இராணுவத்தினருக்காக என்னுடைய கழுத்தைக் கொடுப்பதற்குக்கூட தயாராக இருக்கின்றேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/67112
 7. (இராஜதுரை ஹஷhன்) அனைத்து இன மக்களின் பாதுகாப்பினையும் பலப்படுத்திய எம்மை நாட்டு மக்கள் மீண்டும் தெரிவு செய்வார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குளியாப்பிடிய நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தி மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய முறையற்ற அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும். எமது ஆட்சியில் பாரிய போராட்டத்தின் மத்தியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தியுள்ள தேசிய பாதுகாப்பு மீண்டும் பலப்படுத்தப்படும். நாட்டுக்க வருமானத்தை ஈட்டும் அபிவிருத்திகளை மாத்திரம் நிர்மாணித்தோம். துறைமுகம், அபிவிருத்திகள் அனைத்தும் தேசிய வருமானத்தை ஈட்டும் விதமாக காணப்பட்டது. ஆட்சி மாற்றததினை தொடர்ந்து தேசிய வளங்கள் அனைத்தும் பிற நாட்டவருக்கு விற்கும் முயற்சிகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது. நாட்டை விற்கும் சட்டத்தை தவிர்த்து ஏனைய சட்டங்கள் அனைத்தும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். https://www.virakesari.lk/article/67118
 8. கிருபன் உங்களின் இந்த பார்வையுடன் நான் உடன்படுகிறேன். உங்களை போன்ற மதம் தொடர்பான தெளிவான பார்வையுடன் இருக்கும் எவரையும் மதம் மாற்றும் பேர்வளிகள் எதுவும் செய்ய முடியாது என்பது எனக்கு தெரியும். மதத்தில் நம்பிக்கை அற்ற என்னையும், மதத்தை சம்புரதாயத்திற்காக கடைப்பிடிக்கும் சாதாரண மக்களையும் மத மாற்றுபவர்களால் மாற்ற முடியாது நான் முன்னரே குறிப்பிட்டது போல் மதத்தையும் அது கூறிய மூடப்பழக்கங்களையும் மிக தீவிரமாக நம்புபவர்களை தான் மதம் மாற்ற முடியும் நீங்கள் quote செய்த எனது கேள்வி கடவுளில் நம்பிக்கை இருப்பதாக கூறிக்கொண்டு அந்த கடவுளுக்கும் மனித அறிவுக்கும் சற்றும் பொருத்தமற்ற முறையில் மதத்தால் பரப்பப்பட்ட, எமது மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள, அடிமுட்டாள் தனமான மூடத்தனங்களையும் நம்பிக்கொண்டு அதையும் பின்பற்ற வேண்டும் என்று வாதிடும் நபர்களுக்கானது. உங்களை போன்ற தெளிந்த சிந்தனை உடையவர்களுக்கானத அல்ல. நன்றி
 9. சிலிரிப்பு என்பது பொதுவாக அனைத்து மனிதர்களும் உணர்ந்திருக்கக்கூடிய ஒரு உடல் மாற்றமாகும். இதன்போது உடலின் தசைப் பகுதிகள் இறுக்கமடைவதுடன், உடலிலுள்ள உரோமங்கள் நிமிர்ந்த நிலையில் காணப்படும். ஆச்சரியம் மற்றும் பீதி ஏற்படும் சந்தர்ப்பங்களில் இதனை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். இந்த உணர்வுக்கான ஆச்சரியம் தரும் காரணம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ஆழ்மனத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிரீனலின் எனப்படும் ஹோர்மோன் வெளிவிடப்படும்.இது சிறுநீரகங்களுக்கு மேலாக காணப்படும் இரு சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹோர்மோன் ஆகும். இந்த ஹோர்மோன் ஆனது தோல் தசைகளில் ஏற்படும் சுருக்கத்திற்கு காரணமாக இருக்கின்றமை மாத்திரமன்றி பிற உடல் செயற்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இதன்போதே சிலிரிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய விலங்குகளில் இந்த ஹோர்மோன் ஆனது குளிரை உணரும்போதோ அல்லது பதட்டத்தை உணரும்போது வெளிவிடப்படும். ஆனால் மனிதர்களில் குளிர், பயத்தை உணர்தல், உணர்ச்சிவசப்படுதல் மற்றும் பதட்ட நிலமைகளின்போது அதிரீனலின் ஹோர்மோன் வெளிவிடப்படுகின்றது. அதுமாத்திரமன்றி கண்ணீர் விடும்போதும், உள்ளங்கைகள் ஈரலிப்பாக காணப்படும்போதும், இதயத்துடிப்பு அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள், கைகள் நடுங்கும்போது மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் என்பவற்றின்போதும் இந்த ஹோர்மோன் வெளிவிடப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534216
 10. சென்னை: சிவகங்கையில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் வயிற்றில் வளரும் 13 வார கருவை கலைக்க ஐகோர்ட் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கையில் தனியார் செவிலியர் கல்லூரி முதல்வர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக மாணவி குற்றச்சாட்டு தெரிவித்தார். மாணவிக்கு திருமணம் நடந்த சில நாட்களில் மருத்துவ பரிசோதனையில் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. 3 மாதமாக கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததை அடுத்து பெண்ணை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் கணவர் விட்டார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அடுத்து செவிலியர் கல்லூரி முதல்வர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார். அரசு மருத்துவமனையில் தனக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்ததை அடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கர்ப்பிணி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பித்தனர். அதில்; சிவகங்கையில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் வயிற்றில் வளரும் 13 வார கருவை கலைக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. மேலும் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்து மரபணு ஆய்வு செய்யவும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534242
 11. எதுக்கும் நம்ப ஊரு சூப்பர் ஷ்டார் ஆத்மீக பயணத்தை முடித்த பின்னர் அளவுங்கப்பா.
 12. வணக்கம் வாத்தியார்......! உம்பர்கட்கு அரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு வம்பெனப் பழுத்து என் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருள் துணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே எம்பொருட்டு உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே .....! ---பிடித்த பத்து----
 13. குர்துக்களுக்கு ஆதரவாகப் போரிட படை வீரர்களை அனுப்பிய ரஷ்யா சிரியாவில் குர்துக்கள் மீதான துருக்கியின் தாக்குதலைத் தடுக்கும் பொருட்டு, ரஷ்யா தனது படை வீரர்களை களத்தில் இறக்கியுள்ளது. சிரியாவின் வடகிழக்கே வசிக்கும் குர்துக்களை தீவிரவாதிகளாகக் கருதி, அவர்களுக்கு எதிராக துருக்கி ராணுவம் கடந்த ஒரு வாரமாக சண்டையிட்டு வருகிறது. இதன் காரணமாக துருக்கி - சிரியா எல்லையில் வசிக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குர்து இன மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அமெரிக்கா, தனது படைகளை வாபஸ் பெற்றதை அடுத்து, இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா இல்லாத வெற்றிடத்தை நிரப்புவதற்காக ரஷ்யா களத்தில் இறங்கியுள்ளது. குர்துக்களுக்கு ஆதரவாக சண்டையிடுவதற்காக தங்கள் நாட்டு படை வீரர்களை, சிரியாவுக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. https://www.polimernews.com/dnews/85144/குர்துக்களுக்கு-ஆதரவாகப்போரிட-படை-வீரர்களை-அனுப்பியரஷ்யா
 14. 2009 இல் நமது ஈழ மண்ணில் கேட்ட, பார்த்த அதே அவலங்கள் இன்று 2019ல். மக்களும், இடமும், நேரமும் தான் மாறி உள்ளன. காட்சியும் அவலமும் மாறவில்லை. ஒரு நேட்டொ நாடு இப்படி செய்கின்றது.
 15. வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கை மாணவன் சாதனை! இந்தோனேஷியாயாவில் நடைபெற்ற சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த 17 வயது மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இலங்கை கல்முனையில் உள்ள கார்மேல் பாத்திமா தேசியக் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர் கிருஷ்ணகுமார் முகேஷ் ராம் . இவர், அதிகரித்துவரும் சாலை விபத்தினால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் வகையில், மோட்டார் சைக்களில் பயணம் செய்வோர் அணியும் பாதுகாப்பான ஹெல்மெட் ஒன்றை கண்டு பிடித்தார். இதில் பொருத்தப்பட்டுள்ள கருவி, ஹெல்மெட்டில் ஏற்படும் அதிர்வை கணித்து, அது விபத்தினால் ஏற்பட்ட அதிர்வா அல்லது சாதாரணமாக ஏற்பட்ட அதிர்வா என்பதை கண்டுபிடித்து, விபத்தாக இருக்கும்பட்சத்தில் உறவினருக்கோ அல்லது போலிஸாருக்கோ குறுஞ் செய்தி அனுப்பும். இதன் மூலம், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்டு அவருடைய உயிரை காப்பாற்ற முடியும். இந்நிலையில், இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் கடந்த 9 ஆம் திகதி ஆரமபமாகி 12 ஆம் திகதி வரை சர்வதேச அளவிலான 19 வயதிற்குட்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில், இலங்கையிலிருந்து 12 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 260 இளம் கண்டுபிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்புகளுடன் கலந்துகொண்டனர். இவர்களில், பாதுகாப்பான தலைக்கவசம் கண்டுபிடித்த கல்முனை மாணவர் முகேஷ் ராம், வெள்ளிப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவனை வரவேற்கும் நிகழ்வு, கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து மாணவர் முகேஷ் ராம் கூறுகையில், ஆசிய நாடுகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். இதனால் மோட்டார் சைக்கிள் சாரதிகள் அதிகமானோர் விபத்தில் சிக்கி மரணமடைகின்றனர். இவற்றை தவிர்க்கும் நோக்கில் எனது கண்டுபிடிப்பு அமைந்ததால், சர்வதேச அளவில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளேன் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/67114
 16. புதுடெல்லி பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் பேட்டரி வாங்கிக்கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி தான் வாங்கி கொடுத்தது என்ற குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சிபிஐ சிறப்புக்குழு (MDMA) விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு, இதுதொடர்பாக கூடுதல் பதில் அளிக்க சி.பி.ஐ மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கானது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக விசாரணைக்கு வரவில்லை குறிப்பாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு வரும் நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தமுறை அந்த வழக்கை பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது, விசாரிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிட்டார். அதனை ஏற்ற நீதிபதி என்.வி.ரமணா, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். https://www.hindutamil.in/news/tamilnadu/520764-life-sentences-must-be-stopped-supreme-court-accepts-perarivalan-plea-1.html
 17. சசிகலா காலில் தவழ்ந்து முதல்வராகி விட்டார் எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் ராஜினாமா செய்து விட்டு வரட்டும், ஒரே தொகுதியில் போட்டுயிடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடிக்கு சாவல் விடுத்துள்ளார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருதகுளத்தில் நேற்று மாலை பிரசாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மத்தியில் நடக்கும் பாஜ ஆட்சிக்கு அடிமையாக நடந்து கொண்டிருக்கிறது. நான் அடிமை ஆட்சி என கூறுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்திரம் வந்துள்ளது. நாங்கள் மத்திய அரசுக்கு அடிமையல்ல என பதில் கூறியுள்ளார். அதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஆனால் அடிமை ஆட்சி என்பதற்கு எடுத்துக்காட்டாக பல உதாரணங்களை சொல்ல முடியும். அதில் ஒரே ஒரு உதாரணம் நீட் பிரச்னை. திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நீட் பிரச்னை வந்தது. ஆனால் கருணாநிதி அதை ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை சென்று தடையுத்தரவு பெற்றார். பின்னர் ஜெயலலிதாவும் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவர் சர்வாதிகாரியாக இருந்தாலும் கொள்ளையடிக்கும் ஆட்சி நடத்தினாலும் நீட் தேர்வை ஏற்க தயாராக இல்லை. எடப்பாடி முதல்வராக வந்த பின்னர் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்து விட்டது. அதனால் தான் தமிழகத்தில் அடிமை ஆட்சி நடக்கிறது என்கிறேன். தமிழகத்தின் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. டிஜிபி வீட்டில் ரெய்டு நடந்தது. அதை கேள்வி கேட்க எடப்பாடிக்கு துப்பு இல்லை. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது கேள்வி கேட்க எடப்பாடியால் முடியவில்லை. ஏனெனில் கேள்வி கேட்டால் ஆட்சி பறிபோய் விடும். முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயிலுக்கு போய் விடுவார்கள். அதனால் தான் கேள்வி கேட்க முடியவில்லை. ஜெயலலிதா இறந்தவுடன் ஓபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் சட்டசபையில் அவர் என்னை பார்த்து சிரித்து விட்டார். உடனே அவரது பதவியை சசிகலா பறித்து விட்டார். அதற்கு பின்னர் சசிகலா தானே முதல்வராக தேதி குறித்து விட்டார். 4 நாட்கள் விட்டிருந்தால் சசிகலா முதல்வராகி இருப்பார். சுப்ரீம் கோர்ட் அவருக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து விட்டது. அப்போது சசிகலா காலில் தவழ்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராகி விட்டார். அதனால் தான் பாஜ தலைவர்களின் காலில் எடப்பாடி வீழ்ந்து கிடக்கிறார். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும். ஒரே தொகுதியில் இருவரும் நிற்போம். போட்டியிட்டு பார்ப்போம் என்று அவர் சவால் விடுத்துள்ளார். https://www.ndtv.com/tamil/ready-to-compete-in-the-same-constituency-mkstalin-challenges-edappadi-2118408
 18. மத மாற்றம் என்பது ஒருவரின் வரலாற்றை அழிப்பது போன்றது. பாரம்பரியம், பண்பாடு, அறம் சார்ந்த மதிப்பிடூகள், நம்பிக்கைகள் எல்லாமே பாட்டன், பூட்டி அவர்களின் மூதாதையரின் நம்பிக்கைகளில் இருந்து வந்தது. அதனால்தான் பிற மதங்களுக்கு மாறியவர்கள் தாலி கட்டுவது போன்ற சடங்குகளை கைவிடாமல் இருக்கின்றனர். எனவே அந்நியமான மதத்திற்கு மாற்ற பிரச்சாரம் செய்பவர்களைக் கண்டால் ஆத்திரம் வருவது இயல்பு. மதங்களில் நம்பிக்கையில்லாத நான், மதம் மாறிய எனது உறவினர்கள் சிலருடன் கதைப்பது குறைவு. அவர்கள் தமது மூதாதையர்களை/வேர்களைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதுதான் காரணமாக இருக்கலாம்!
 19. விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. ‘தி மொமண்ட்’ (தருணம்) என பெயரிடப்பட்டுள்ளது இந்த புகைப்படம் லண்டனின் இயற்கை வரலாற்று (Natural History Museum) அருங்காட்சியகம் ஆண்டுதோறும் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருதினை வழங்கி வருகிறது. 2019 ஆண்டிற்கான வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது அக்டோபர் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த வைல்ட்லைப் போட்டோகிராபர் விருது சீனாவை சேர்ந்த புகைப்படகாரர் யோங்க்யூங் பவோவிற்கு வழங்கப்பட்டது. திபெத்திய நரியும் மர்மொட்டும் இருக்கும் புகைப்படம் தான் சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சீனாவின் க்விங்ஹாயை சேர்ந்த யோங்க்யூங் இந்த புகைப்படத்தை க்விங்ஹாய்-திபெத் எல்லையில் எடுத்துள்ளார். ‘தி மொமண்ட்' (தருணம்) என பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் நரியை கண்டு மர்மொட் அஞ்சுவது போல் உள்ளது. ‘தக்க தருணத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது' என தேர்வு குழுவின் தலைவர் ராஸ் கிட்மான் பாராட்டியுள்ளார். 2019 ஆண்டின் இளம் வைல்ட்லைப் போட்டோகிராப் விருது நியூசிலாந்தின் க்ரஸ் எட்மணுக்கு வழங்கப்பட்டது. இந்தோனேசியாவில் படமெடுக்கப்பட்டது அந்த புகைப்படம். 100 நாடுகளை சேர்ந்த சுமார் 48,000 பேரை வீழ்த்தி இந்த விருதை வென்றுள்ளனர் யோங்க்யூங் பவோ மற்றும் க்ரஸ் எட்மண். விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. https://www.ndtv.com/tamil/and-the-wildlife-photographer-of-the-year-award-goes-to-a-china-photographer-2118383?pfrom=home-lateststories
 20. என்னைக் கவர்ந்த நிழற்படம் பல கருத்துக்கள் கூறக்கூடிய படம், ஆனால், கூறமுடியாது .
 21. ஹொங் கொங்கின் பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமை ஹொங் கொங்கின் ஜனநாயகத்துக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்ததோடு, அவரைப் பதவி விலகுமாறு இன்று மீண்டும் மீண்டும் இடைநிறுத்தப்பட்ட சட்டசபை அமர்வொன்றில் கோரிய நிலையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அந்தவகையில், இவ்வாறானதொரு நிலைமை நேற்றும் ஹொங் கொங் சட்டசபையில் ஏற்பட்டிருந்த நிலையில் காணொளி மூலம் தனது வருடாந்த கொள்கையை நிகழ்த்தியிருந்த பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாம், அது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றபோதே நேற்று இரண்டாவது நாளாகவும் ஹொங் கொங் சட்டசபையில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதேவேளை புதிய வீதி வன்முறையாக, கத்திகளையும், சுத்தியல்களையும் கொண்டிருந்த முகமூடி அணித்த தாக்குதலாளிகள், பாரியதொரு ஜனநாயக ஆதரவுக் குழுவின் தலைவரொருவரை நேற்று தாக்கியுள்ளனர். அந்தவகையில், இது குறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளை சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. சீன அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்படும் பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமின் கைகளில் இரத்தம் உள்ளதெனத் தெரிவிக்கும் ஜனநாயகத்துக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளை அங்கிகரிக்குமாறு கோரியிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள், பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமின் உரையில் கண்டு கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபையிலிருந்து டசின் கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்புக் காவலர்கள் வெளியேற்றியிருந்த நிலையில், அவர்கள் கோஷமிட்டிருந்ததுடன், பிரதம நிறைவேற்றதிகாரி கரி லாமின் கைகளில் இரத்தம் இருக்கும் பதாதைகளைக் காண்பித்திருந்தனர். http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஹங-கங-சடடசப-இடநறததபபடடத/50-240113
 22. ஓம். வெறுப்பு மட்டுமல்லாமல் அச்சமும் காணப்படுகின்றது வடக்கில்
 23. மூளைக்கு ஓய்வு ஆயுளுக்கு நீட்சி! மனிதர்களிலும் உயிரினங்களிலும் ஆயுள் என்பது வரையறை உடையது! இது எப்படி வரையறுக்கப் பட்டிருக்கிறது என்ற விளக்கம் தெரிந்தால் ஆயுளை நீட்டிக்கும் வல்லமை சாத்தியமாகும் என்ற கோணத்தில் தான் வயதாவது, ஆயுள் நீட்டிப்பு தொடர்பான ஆய்வுகள் நகர்கின்றன. ஏற்கனவே சில உயிரியல் காரணிகள் ஒரு உயிரினத்தின் வாழ்வுகாலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இனங்காணப் பட்டிருகின்றன. விலங்குக் கூட்டத்தில், அனுசேப வீதம் (இது சக்தியை உடல் எரிக்கும் வேகம்) குறைந்த விலங்குகளான யானை, ஆமை போன்றவை அதிக அனுசேப வீதம் கொண்ட எலி, பூனை போன்றவற்றை விட ஆயுள் காலம் கூடியவை. இதை அடிப்படையாக வைத்து நடந்த ஆய்வுகளில், எலிகளில் கூட அவை உள்ளெடுக்கும் கலோரிகளை உணவுக் கட்டுப் பாட்டினால் குறைத்து விட்டால், அவற்றின் ஆயுள் கொஞ்சம் அதிகரிப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். மனிதர்களைப் பொறுத்த வரை, இது புரிந்து கொள்ளக் கூடிய ஒரு பொறிமுறை: உணவுக் கட்டுப்பாடு நீரிழிவு, இதய நோய் இரத்த அழுத்தம் போன்ற தற்காலத்தில் மரணத்திற்குக் காரணமான பல நோய்களைக் குறைத்து விடுவதால் ஆயுள் சிறிது அதிகரிக்கலாம். ஆனால், உணவும் அனுசேபமும் மட்டுமே இந்த நோய்களைக் குறைத்து விடுவதில்லை, மனப் பதட்டம் (stress) போன்ற சமூகக் காரணிகளும் நோய்களை உருவாக்கக் கூடியவை என்பதால் அந்த திசையிலும் ஆய்வுகள் நகர்கின்றன. இந்தக் கோணத்தில் செய்யப் பட்ட ஒரு ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவு தான் மேலே தலைப்பில் இருக்கும் "மூளைக்கு ஓய்வு" என்பது! நூறு பில்லியன் கலங்களால் ஆன மூளை எங்கள் உடலின் சக்தித் தேவையில் 20% இனை விழுங்கிக் கொள்ளும் ஒரு உறுப்பு. அந்த நூறு பில்லியன் மூளைக்கலங்களான நியூரோன்களிடையே உருவாகும் நரம்புப் பிணைப்புகள் (synapses) ட்ரில்லியன் கணக்கில் இருக்கும். இந்த வலையமைப்பே (neural network) நாம் கற்றுக் கொள்ளவும், அனுபவம் பெறவும், உணர்வுகளால் நெகிழவும் காரணமான அடிப்படை அமைப்பாக இருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும் போது கொண்டிருக்கும் அதேயளவான நியூரோன்கள் தான் அது வளரும் போதும் அதன் மூளையில் இருக்கின்றன. ஆனால், இந்த நியூரோன்களிடையேயான தொடர்புகள் தான் மூளை வளர்ச்சியாக எமக்குத் தெரிகிறது. பின்னர் எமக்கு வயதாகும் போது கொண்டு வந்த நியூரோன்களில் சில ஆயிரத்தை நாம் இழக்கிறோம். அந்த இழப்போடு நரம்புப் பிணைப்புகளும் இழக்கப் படும் போது மூளைக்கு வயதாக ஆரம்பிக்கிறது. முதுமையின் இயற்கையான மாற்றம் இது. இந்த நரம்புப் பிணைப்புகளை இழக்காமல் வைத்திருக்க ஒரு வழி மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது. பொதுவாகவே உடலில் சுவாசத்தையும், இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும் உடற்பயிற்சி முதல் மூளைக்கு வேலை தரும் கணக்கு, வாசிப்பு, யோசிப்பு, இசை வரை என பல வழிகளில் மூளையின் நரம்புப் பிணைப்புகளை இழக்காமல் காக்க முடியும். மூளையின் நியூரோன்கள் அதிகம் அளவுக்கு மீறி செயற்படாமல் பாதுகாப்பதாலும் ஒரு உயிரின் ஆயுளை அதிகரிக்கக் கூடும் என்று தற்போது வெளிவந்திருக்கும் ஆய்வு கூறுகிறது. இந்த அளவுக்கு மீறிய நியூரோன்களின் செயல்பாடு (excitation) என்பது எங்கள் மனப் பதட்டத்தின் பால் பட்டதாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். 80 வயதுவரை வாழ்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில் 85 வயது வரை வாழ்ந்தவர்களின் மூளையில் "றெஸ்ட்" (REST) எனப்படும் ஒரு ஜீனின் செயல்பாடு அதிகமாக இருந்ததாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த றெஸ்ட் ஜீனின் வேலை மூளையின் நியூரோன்கள் அதிகமாக பதகளிப்பாகாமல் (over-excitation) பார்த்துக் கொள்வதாகும். இதே ஜீனினால் இயக்கப்படும் ஒரு நரம்பியல் பாதை தான் உடலில் மனப்பதட்ட நேரத்தின் போது நிகழும் அனுசேபத் தொழிற்பாடுகளையும் கட்டுப் படுத்துகிறது. எனவே, பதட்டம், அதனால் நிகழும் அனுசேபத் தொழில்பாடு அதோடு மூளையில் கொஞ்சம் அதிகமாகத் துள்ளும் நியூரோன்கள், இவையெல்லாம் இணைந்தே எங்கள் ஆயுளைக் குறைப்பதாக கருதுகிறார்கள். உணர்ச்சி வசப்படாமல் இருப்பது சில சமயங்களில் சாத்தியமில்லையானாலும் " அமைதியாய் இருந்தால் சில ஆண்டுகள் அதிகம் வாழலாமே?" என்ற கவர்ச்சிகரமான நன்மை கருதி இனி உணர்ச்சி மயமாவதைத் தவிர்ப்போம்! (இது எனக்குப் பொருந்தாத அட்வைஸ்!). ஆய்வின் இணைப்பு: https://www.nature.com/articles/s41586-019-1647-8 சாதாரண மொழியில் ஆய்வின் சுருக்கம்: https://www.nature.com/articles/d41586-019-02958-x நன்றி. ஜஸ்ரின்
 24. காரை துர்க்கா / 2019 ஒக்டோபர் 17 , இனிமையான ஒரு மாலைப் பொழுது; மழையோ வெயிலோ இல்லாத இ(மி)தமான ஒரு காலநிலை. யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில், புதினப் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.... சனசமூக நிலையத்துக்கு வெளியே இருந்த வேப்பமரத்தடி நிழலில், சிலர் அரசியல் உரையாடலில் மூழ்கிப் போயிருந்தனர். கலகலப்பாகவும் ஆனால், அர்த்தங்கள் நிறைந்ததாகவும் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. கதைக்கின்ற அவர்களைக் காட்டிலும், கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கிடைத்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது. “என்ன, எங்கட சுமந்திரன் ஐயா, தங்களிடம் முதிர்ச்சியான அரசியல் தலைமை உண்டு எனக் கூறியுள்ளாராமே” என ஒருவர் கூறினார். “அங்கு தலைமையில் உள்ளவர்கள் எல்லாரும், எங்களைப் போல முதியவர்கள் தானே; அதைத்தான் சுமந்திரன் சொல்லியுள்ளார் போலும்” எனச் சொன்னார் இன்னொரு முதியவர். வேடிக்கையாகச் சொன்னாலும், உள்ளே மறைமுகமாக ஆழமான கருத்து உள்ளதுதானே? யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறப்பு விழா, கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன், “எங்களிடம் முதிர்ச்சியான அரசியல்த் தலைமை உண்டு” எனக் கூறியிருந்தார். மேலும், அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளின் முக்கியத்துவம், கம்பெரலியவின் நோக்கம் எனப் பல விடயங்களைத் தொட்டுப் பேசி உள்ளார். அபிவிருத்தி நடவடிக்கைகள், முக்கியத்துவம் நிறைந்தனவே; அவை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகளே; அதில் மாறுபட்ட கருத்துகளுக்கு இடம் கிடையாது. இன்னும் சிறிது காலங்களில், நிறைவுக்கு வரவுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில், அரசியல்த் தீர்வு விடயத்திலும் கூட, கூட்டமைப்பு பல விட்டுக் கொடுப்புகளைச் செய்துள்ளது. என்ன விதத்திலாவது, புதிய அரசமைப்பை உருவாக்குவதன் ஊடாக, நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என முழுமையாக நம்பி நடந்துள்ளது. இந்நிலையில், “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவோம் என, எழுத்து மூலமான உறுதி மொழியை வழங்கத் தயங்கினால் அல்லது தவறினால், ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என, இலங்கைத் தமிழரசுகக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவருமான சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். சி.வி.கே சிவஞானம் சிரேஷ்ட அரச அதிகாரியாகப் பணியாற்றியவர். அத்துடன், நீண்ட காலமாக அரசியலிலும் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக, முக்கிய பதவியில் உள்ளார். இவரது இந்தப் பேச்சு, ‘முதிர்ச்சி’யான அரசியல் பேச்சா என விளங்கவில்லை. மேலும், “தேர்தல் பகிஷ்கரிப்பு, தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதிய விடயம் அல்ல; 2005ஆம் ஆண்டிலும் செய்து காட்டியிருந்தார்கள்” எனவும் கூறி உள்ளார். சரி பிழைகளுக்கு அப்பால், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் கடுமையான விளைவுகளை, இன்னமும் தமிழினம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது என்பதையும் நாம் உணர வேண்டிய நிலையில் உள்ளோம். மறுபக்கத்தில், கடந்த காலங்களில் இனப்பிரச்சினை விடயத்தில், இந்த நாடு பல உடன்படிக்கைகளை, ஒப்பந்தங்களை எழுத்து வடிவில் கண்டது. அவற்றுக்கு எல்லாம் ஈற்றில் என்ன நடந்தது? ஓப்பந்தங்களைத் தூக்கியெறிவதும், எரிப்பதும், கிழிப்பதும் பேரினவாதிகளுக்குக் கடினமான காரியங்கள் அல்ல; இவற்றை விவரிக்க வேண்டிய தேவைப்பாடு இல்லை. இந்நிலையில், அன்று தமிழ் இளைஞர்கள் கரங்களில் மட்டும் இருந்த ஆயுதம், இன்று அனைத்துத் தமிழ் மக்கள் கைகளிலும் உள்ளன. ஆம்! அதுவே வாக்கு எனும் ஆயுதம். அதுவே, தற்போது தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ள பலமான ஆயுதம்; அத்துடன் உரிமையும் கூட. அதை எவ்வாறு உத்தமமாகப் பயன்படுத்தலாம் எனத் திட்டம் தீட்டுவதும், அதை உச்சமாகப் பயன்படுத்துவதும் அதற்கான ஊக்கத்தைக் கொடுக்க வேண்டியவர்களும் வாக்கு என்ற ஆயுதத்தை வெற்றுக் காகிதங்களாகப் பார்க்கின்றார்களா? தமிழ் மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ தேர்தலில் வாக்களித்தோ, புறக்கணித்தோ பௌத்த சிங்களவரே இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ளார். இந்த நிதர்சனமான உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆகவே, தமிழ் மக்கள் வாக்களிக்காது ஒதுங்கி, விலகி இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, ஒற்றுமையாகக் கணிசமான தமிழ்க் கட்சிகள் ஒன்று கூடித் தீர்மானம் எடுத்து, தமிழ்த் தலைமை சுட்டு விரல் காட்டும் சிங்கள வேட்பாளருக்கு, வாக்களிக்க வேண்டும். இதனூடாக, இலங்கைத் தீவின் ஐனாதிபதியைத் தீர்மானிக்கும் வல்லமை பொருந்தியவர்களாகத் தமிழினம் மாற வேண்டும். மாறாக, ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் விடயத்தில் ஒ(ப)துங்கி இருக்கக் கூடாது. கொழும்பிலிருக்கும் சிங்களத் தலைமை, திருகோணமலையில் இருக்கும் தமிழ்த் தலைமையிடம் நேராகச் சென்று ‘வாக்கு’க் கொடுத்து, வாக்குக் கேட்க வைக்க வேண்டும். எதிர்காலத்தில், தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்று, ஐனாதிபதியாகிய பின்னர், தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்காமலும் போகலாம் என்ற பயமும், தமிழர்களுக்கு உள்ளூர உண்டு. மறுபுறத்தில், தமிழ் மக்கள் வாக்களிக்காது விடுவதால், தெரிவு செய்யப்படும் வேட்பாளராலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படலாம் தானே? ஆனால், சி.வி.கே. சிவஞானம் கூறுவது போல, “நாம் தேர்தலைப் புறக்கணித்து, ஒதுங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், யார் அதன் பின் ஆட்சிக்கு வருகின்றார்களோ, அவர்களுக்குச் சர்வதேச சமூகத்தின் ஊடாக, எமது பிரச்சினைக்குத் தீர்வை வழங்க அழுத்தம் கொடுப்போம்” என்பது எந்தளவு சாத்தியப்பாடானது? தமிழ் மக்கள் விடயத்தில், சர்வதேசம் என்பது, எப்போதோ முடிந்த காரியம் என்றாகி விட்டது என்றே, தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். ‘சீவன் துடிக்கத் துடிக்கப் போன போது, வேடிக்கை பார்த்தவர்கள், அந்தியேட்டிக்கு வந்தது போல’ போர் முடிந்தும் பத்து ஆண்டுகளில், தமிழ் மக்கள் விரும்பும்படியாகக் குறிப்பிட்டுக் கூறும்படியாக, சர்வதேசத்தால் என்னத்தைச் சாதிக்க முடிந்தது? ஆகவே, சர்வதேசம் என இன்னும் எத்தனை நாள்களுக்குக் கூறிக் கொண்டு இருக்கப் போகின்றோம். களத்தின் தோற்றப்பாடும், காலத்தின் தேவைப்பாடும் தமிழர்கள், தங்களது சர்வ வல்லமையைப் பெருக்குவதிலேயே முற்றிலும் தங்கி உள்ளது. இதேவேளை, பேரினவாதம் தங்களுக்குள் கதிரைக்கான அரசியல் போட்டி என்று வரும் போதே, குடும்ப ஆட்சி வேண்டுமா, நாட்டைக் கட்டி எழுப்பும் தலைவர் வேண்டுமா, அராஜக ஆட்சி வேண்டுமா, சமாதான ஆட்சி வேண்டுமா எனக் கேள்வி கேட்பார்கள். ஆனால், நாடு என்று வரும் போது, வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமை வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். “பயங்கரவாதத்தை முறியடித்தவரை, மின்சாரக் கதிரையிலிருந்து நானே காப்பாற்றினேன்” எனக் காப்பாற்றவும் அடைக்கலம் கொடுக்கவும் முண்டியடிப்பார்கள். அதுவே, முதிர்ச்சியான அரசியல்த் தலைமைத்துவம் ஆகும். தமிழ் மக்களிடம், முதிர்ச்சியான அரசியல் தலைமை இல்லை என்றே கூற வேண்டும். தற்போது, தமிழர்கள் அரசியலில் வெறுமையே நிலவுகின்றது. தகுதியான தமிழ்த் தலைமைக்கான பதவி, இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. “தமிழ்க் கட்சித் தலைவர்களே தயவு செய்து ஓரணியில் அணி திரளுங்கள். ஒன்றுபட்டுத் தேர்தலை எதிர்கொள்வோம்” எனத் தமிழ்ச் சமூக சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என ஒட்டுமொத்தச் சமூகத்தினரும் கோரிக்கை விடுத்தும், ஒற்றுமை என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எந்தத் தமிழ்க் கட்சியும் தங்களது கட்சி நலனையும் தங்களது சொந்த நலனையும் விட்டுக் கொடுக்கத் தயார் இல்லை. அதேவேளை, தமிழ் மக்களும் எந்தத் தமிழ்க் கட்சியையும் எந்தத் தமிழ்த் தலைவரையும் தனியாக முன்னுரிமைப்படுத்தவும் தயார் இல்லை. அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழ்ச் சமூகத்தில், அதன் அரசியல்த் தலைவர்கள் தங்களது மக்களது விடிவுக்காக அணியாகச் செயற்பட இன்னமும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. மாறி மாறி மற்றவர்கள் மீது குறைகளைச் சொல்லுவதும் குழிபறிப்பதும் குறுக்கே நிற்பதும் தொடர் கதையாகவே உள்ளது. இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பாள்புரம், பாலைப்பாணி, கொல்லவிளாங்குளம், வடகாடு ஆகிய பகுதிகளில் சீரான போக்குவரத்து வசதிகள் இன்மையால் 45க்கு மேற்பட்ட மாணவர்கள், பாடசாலையை விட்டு இடைவிலகி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதேச சபையிலும் மாகாண சபையிலும் நாடாளுமன்றத்திலும் தங்களது கதிரைகளைப் பிடிக்க முண்டியடிக்கும் அரசியல்வாதிகளால், அப்பாவிச் சிறுவர்களது போக்குவரத்து வசதிகளைச் சீர்படுத்தி, பாடசாலைக் கதிரைகளில் அவர்களை அமர்த்த முடியாது உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில், இரண்டு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராகத் தமிழர் உள்ளார். இதைவிடத் தமிழ் மக்களது உரிமைகளைக் கடமைகளை நிறைவேற்றவென, பல தமிழ்க் கட்சிகள் உண்டு. ஆகவே, அவர்கள் அனைவரும் இதற்கும் பொறுப்புக் கூறல் வேண்டும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மதரசசயன-அரசயல-தலம-எஙகளடம-உணட/91-240139
 25. எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:58 இவ்வருட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி, முஸ்லிம்களின் பெயரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, பௌத்த தீவிரவாதக் குழுக்கள், பயங்கரமான முஸ்லிம் விரோத பிரசாரமொன்றை ஆரம்பித்து, முன்னெடுத்துச் சென்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அக்குழுக்கள் பெரும்பாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களாக இருந்தமையால், அப்பிரசாரத்தில் ஓர் அரசியல் நோக்கமும் தென்பட்டது. எதிர்வரும் தேர்தல்களின் போது, முஸ்லிம்கள் தம்மை ஆதரிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டில், அந்த மக்களின் வாக்குகள் அவசியமில்லை என்றதோர் எண்ணத்தில், இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவே அப்போது கருதப்பட்டது. எனவே, அந்த முஸ்லிம் விரோத பிரசாரம், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரையில், அடுத்த பொதுத் தேர்தல் வரை நீடிக்கும் என்றும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது, அது தீவிரமடையும் என்றும் கருதப்பட்டது. இந்த இனவாதப் பிரசாரம், அரசியல் நோக்கம் கொண்டது என்றும் எனவே, அது ஜனாதிபதித் தேர்தல் வரை நீடிக்கும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு கூட்டத்தின் போது கூறியிருந்தார். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய நிலையில், தற்போது நிலைமை மாறியிருக்கிறது போல் தெரிகிறது. வெற்றி பெறுவதற்காகவே போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, தாம் தேசப்பற்றாளர்கள் என்று பறைசாற்றிக் கொண்டு, சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களைச் சீண்டியும் அச்சுறுத்தியும் இஸ்லாத்தை நிந்தித்தும் வந்த பௌத்த தீவிரவாதிகள், அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, நாட்டின் தென் பகுதிகளில் சிறுபான்மையினரின் வாக்குகளை மொத்தமாக பெற்றுக் கொண்டும், ஐக்கிய தேசிய கட்சி சுமார் 36 இலட்சம் வாக்குகளையே பெற்றது. பொதுஜன பெரமுன, சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை அவ்வளவாகப் பெறாத நிலையிலும், 49 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. எனவே தான், பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளின்றியே தமக்கு, ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என ஆரம்பத்தில் கருதியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால், பின்னர் அவர்கள் வேறு விதமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏனைய தேர்தல்களைப் போல் ஜனாதிபதித் தேர்தலின் போதும், வெற்றி பெறுபவர் தோல்வியடைபவர்களை விடக் கூடுதலாக வாக்குகளைப் பெற்றால் மட்டும் போதாது. அவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். அவ்வாறு இல்லாவிட்டால், இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணியே, வெற்றி பெறுபவர் தீர்மானிக்கப்படுவார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன 62 இலட்சம் வாக்குகளையும் மஹிந்த ராஜபக்‌ஷ 58 இலட்சம் வாக்குகளையும் பெற்றனர். எனவே, இம்முறை வெற்றி பெறுபவர் குறைந்த பட்சம் 65 இலட்சம் வாக்குகளைப் பெற வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. இது, சாத்தியமா என்று எழுந்துள்ள சந்தேகமே, மொட்டு கட்சியினர் என்றழைக்கப்படும் பொதுஜன பெரமுனவினர் சிறுபான்மையின வாக்குகளை நாடக் காரணமாய் இருக்கிறது என்று கருதலாம். இந்த நிலையில், கடந்த காலத்தில் அந்த முஸ்லிம் விரோதிகள் தூக்கிப் பிடித்த சில விடயங்கள், காணாமற் போயுள்ளதை அவதானிக்க முடிகிறது. 4,000 பௌத்த பெண்களை மலடிகளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குருநாகல் மருத்துவர் முஹம்மத் ஷாபியை, அவர்கள் முற்றாக மறந்து விட்டனர் போலும். 4,000 பெண்களை மலடிகளாக்குவது என்றால் இலேசான விடயமா? அதனை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா? ஆனால், மறந்துவிட்டார்கள். எனவே, இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியவர்களின் இனப் பற்று, உண்மையான இனப்பற்றாக இருக்குமா? அல்லது, இது பொய்க்குற்றச்சாட்டு என்பதை அறிந்தும், இனவாதத்தால் சுயதிருப்பதி அடைவதற்காக, அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்களா என்பதை, இப்போது நன்றாக விளங்கிக் கொள்ள முடியும். அதேபோல், ஐ.தே.க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, கடந்த காலங்களில் செயற்பட்டமையை பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் ஏதோ தேசத் துரோகமாகக் கருதுவதாகவே தெரிந்தது. எதற்கெடுத்தாலும் ஐ.தே.க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைப்படி செயற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். கூட்டமைப்பும் குறிப்பாக, அதன் தலைவர் இரா. சம்பந்தன், அதன் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், நாட்டை பிளவுபடுத்த கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படும் பயங்கர சக்திகளாகவே, அவர்கள் சித்திரித்தனர். ஆயினும், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கவே நிலைமை மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பது இப்போது பாவமாகக் கருதப்படுவதில்லை. தமது கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்ததை நடத்தவிருப்பதாகவும் ராஜபக்‌ஷவின் கோரிக்கையின் பேரிலேயே அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் அண்மையில் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இது எவ்வாறு சாத்தியமாகும்? இது சாத்தியமாவதற்கு ஒன்றில் கூட்டமைப்பு மாறியிருக்க வேண்டும். அல்லது பொதுஜன பெரமுன மாறியிருக்க வேண்டும். இது சாத்தியமாவதாக இருந்தால், ஒன்றில் கூட்டமைப்பின் பார்வையில் பொதுஜன பெரமுன இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைகளைச் செய்த தலைவர்களின் கட்சியல்ல; அதேபோல், பொதுஜன பெரமுனவின் தலைவர்களின் பார்வையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலிகளுடன் இணைந்து நாட்டைத் துண்டாட முயற்சித்த கட்சியல்ல. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்தார். ஆனால், இறுதியில் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முற்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியால், ஐ.தே.க ஆட்சி காப்பாற்றப்பட்டது. தமிழர்களுக்கு நாட்டைத் தாரைவார்த்துக் கொடுக்க வாக்குறுதி அளித்தே, மஹிந்தவின் அரசாங்கத்தை, ரணில் விக்கிரமசிங்க கவிழ்த்ததாக, அப்போது பொதுஜன பெரமுனவினர் கூறினர். அந்தத் தமிழ்க் கூட்டமைப்புடன் தான், இப்போது பேச்சுவார்த்தை நடத்த கோட்டா அழைப்பு விடுத்துள்ளார். ஓரிரு மாதங்களுக்கு முன்னர், கடும் தேசப்பற்றாளர்களாக இருந்தவர்கள், அந்த அழைப்புக்கு எதிராகக் குரல் எழுப்புவதாகத் தெரியவில்லை. உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் இலக்குகளாகினர். அந்தப் பௌத்த தீவிரவாதிகளின் பின்னணியில், பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளே இருந்தனர். முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வும் அவ்வாறு இலக்கானவர்களில் ஒருவராவர். அவரும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் நோக்கம் எதுவாக இருந்தாலும், அதனால் கோட்டாபய பயனடையப் போகிறார் என்பது தெளிவானதாகும். ஹிஸ்புல்லாஹ்வுக்குத் தமிழர்களோ, சிங்களவர்களோ வாக்களிக்கப் போவதில்லை; ஓரிருவர் ஆங்காங்கே வாக்களிக்கலாம். அவர் பெரிதாக வாக்குகளைப் பெறாவிட்டாலும் முஸ்லிம்களே அவருக்கு வாக்களிப்பர். முஸ்லிம்களில் ஒரு சிலரைத் தவிர்ந்த ஏனைய அனைவரும், சஜித்துக்கு வாக்ளிப்பர் என்றே தெரிகிறது. அந்த வாக்காளர்களில் சிலர், ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால், அதன் பயன் கோட்டாவையே சென்றடையும். எனவே, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகக் குரல் எழுப்பிய பௌத்த தீவிரவாதிகள், அவர் ஜனாதிபதியாவதற்கு போட்டியிடுவதைப் பற்றி எதுவுமே கூறுவதில்லை. இது தான், தேசப்பற்றின் இலட்சணம். தேசப்பற்று: மேலும் சில உதாரணங்கள் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநராகவிருந்த அஸாத் சாலி, வர்த்தக வணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர், பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றே கடந்த மே மாதம் 31 ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், ‘சாகும் வரை’ உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த மூவரும், ‘முஸ்லிம் பயங்கரவாதிகள்’ என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஹிஸ்புல்லாஹ்வின் ‘பற்றிகலோ கம்பஸ்’ எனப்படும் பல்கலைகழகத்துக்கு எதிராக, ரத்தன தேரர் பெரும் போராட்டத்தையே நடத்தினார்கள். ஆனால், ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவொரு சதித் திட்டமோ, குறுகிய நோக்கமோ இருப்பதாகக் கோட்டாவை ஆதரிக்கும் ரத்தன தேரர் காணவில்லை. அவர் இப்போதும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதோ, ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதைப் பாவித்து, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைத் தூண்ட வேண்டும் என்பதோ, இதன் அர்த்தம் அல்ல. ஆனால், ரத்தன தேர் போன்றோர்களின் தேசப்பற்றின் உண்மையான சுபாவத்தைப் புரிந்து கொள்ள, இது நல்லதொரு சந்தர்ப்பமாக இருக்கிறது என்பதே எமது வாதமாகும். மதுமாதவ அரவிந்த என்பவர், ஒரு சிங்களப் பாடகர், நடிகர். அதேபோல், அவர் கடந்த வாரம் வரை, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரதித் தலைவராக இருந்தார். அண்மையில், கோட்டாவுக்கு ஆதரவாக நடைபெற்ற சிறிய கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், முஸ்லிம்களைப் பற்றி மிக மோசமாகக் கருத்துத் தெரிவித்தார். இந்த உரை, சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, தமது உரையால், தமது கட்சி அசௌகரியத்துக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறி, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து அவர் இராஜினாமாச் செய்தார். தாம், இனக் குரோதச் சொற்களைப் பாவித்தமை பிழை என, மதுமாதவ கூறவில்லை. மாறாக, அந்த உரையால், கட்சி அசௌகரித்துக்கு உள்ளாகியதாலேயே அவர் பதவி துறந்துள்ளார். இந்த விடயத்தை விளக்குவதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது, கட்சித் தலைவர் கம்மன்பிலவும் அவர் பாவித்த சொற்கள் பிழையானவை என்று கூறவில்லை. மதுமாதவ பாவித்த சொற்கள், முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறாக ‘அமைந்திருக்கக் கூடும்’ என்பதால், அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக ஒரு கட்டத்தில் கூறினார். அவர் பாவித்த சொற்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சாக ‘அமைந்திருக்கக் கூடும்’ என்பதால், அந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக, மற்றொரு கட்டத்தில் அவர் கூறினார். இந்த உரையை அடுத்து, ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மதுமாதவவைத் தொலைபேசி மூலம் திட்டித் தீர்த்ததாகவும் அதனாலேயே அவரைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்விக்க கம்மன்பில நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மறுபுறத்தில், இது தேர்தல் காலமாக இல்லாதிருந்தால், பொதுஜன பெரமுனவினரும் கம்மன்பிலவும் அந்த உரையை நியாயப்படுத்தி இருப்பார்களேயல்லாமல், இவ்வாறான நடவடிக்கை எதுவும் எடுக்கப் போவதில்லை. கடந்த காலத்தில், ஞானசார தேரர் போன்றோர்கள் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் மிகவும் மோசமாக நிந்தித்த சந்தர்ப்பங்களில், அது பௌத்தத்துக்கு அவப் பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கும் செயல் என எவரும் கூறவில்லை. ரத்தன தேரர், இரசாயன உரப் பாவனையைக் கடுமையாக எதிர்ப்பவர். தேசிய விவசாயத்தை அழிக்க ஏகாதிபத்தியவாதிகள் இரசாயன உரத்தைப் பாவிக்கிறார்கள் என்பதே அவரது வாதமாக இருக்கிறது. கோட்டாவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம், அநுராதபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற போது, தமது ஆட்சியின் கீழ் இலவசமாகவே விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்கப்படும் என கோட்டா வாக்குறுதியளித்தார். ரத்தன தேரரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தார். தாம் ‘ஏகாதிபத்தியவாதிகளின் சதிக்கு’ சாதகமாகச் செயற்படுவதாக, கோட்டா அந்தக் கூட்டத்தின் போது கூறிய போதிலும், ரத்தன தேரர் அதனை விமர்சிக்கவில்லை. தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளுக்காக ஐ.தே.க நாட்டை அவர்களிடம் அடகு வைத்திருப்பதாகவே பொதுஜன பெரமுனவினர் கடந்த காலங்களில் கூறி வந்தனர். அதே வாக்குகளுக்காக, இப்போது அவர்களும் தாம் தேசப்பற்றாக எடுத்துரைத்ததை வேண்டுமென்றே புறக்கணித்துச் செயற்பட்டு வருகிறார்கள். உண்மையான தேசப்பற்றை அவ்வாறு புறக்கணிக்கவோ, மறக்கவோ, உதாசீனப்படுத்தவோ முடியுமா? http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அநதத-தசபபறறளரகள-எஙக/91-240140
 1. Load more activity