சுப.சோமசுந்தரம் 532 June 27, 2018 · Edited June 27, 2018 by சுப.சோமசுந்தரம் 2 of 2 members found this review helpful 2 / 2 members Share this review ஒன்றுபட்ட சமூகத்தில் ஒற்றுமை விரும்பிகள் நாம். பேரினவாதம் சிங்களச் சமூகத்தில் காலங்காலமாய்ப் புரையோடி இருக்கையில், ஈழம்தானே நமக்கான தீர்வு ? ஈழம் மலரும். தளபதி கோபித் போன்ற இணையற்ற போராளிகளின் தியாகம் வீண்போகாது. Link to review
Athi30 25 March 30, 2017 4 of 4 members found this review helpful 4 / 4 members Share this review அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி எங்கள் " அண்ணா !இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் !பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு சாள்ஸ் அன்ரனி படையணியை திறம்பட கோலோச்சிய பல சாதனைகளின் சரித்திர நாயகனே !உன்னுடைய நிதானமான பேச்சும், மற்றவர்களிடையே அன்பாக பம்பலாக நீ பழகும் விதமும் இன்றும் என் மனத்திரையில் அண்ணா !இரட்டைவாய்க்கால் என உச்சரிக்க முடியவில்லை எம்மால் சிங்களத்தின் சீரழிந்த செயலால் உன்னை இழந்து ஆண்டுகள் தான் ஆச்சு ஆற வில்லை இன்னும் எம் வலிகள்,அருவி கண்ட விழிகள் அடங்க வில்லை இன்னும்,நெஞ்சுக்குள் நின்றாடும் நினைவுகள் அழியாத கோலங்களாய்.....அழகாய் பூத்திடும் எம் தமிழீழம் அதில் மொட்டாக மலர்ந்திடும் உன் திருமுகம்!அன்றும் இன்றும் என்றும் உன் தன்னம்பிக்கை தோற்காது வன்னி மைந்தா !ஒரு கணம் எம் நினைவுகள் ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன் ! நினைவுபகிர்வு மார்ஷல் வன்னி http://www.pathivu.com/?p=113072 Link to review