ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
பழையதை மறந்து விட்டார்கள் : மஹிந்த நாட்டு மக்களின் உடலில் தோன்றும் உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பெலிஹத்த பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்ப காலங்களை மறந்து விட்டனர். வீதிகளிலிருந்த பள்ளங்களை நிரப்பி கொங்கிறீட் போட்டதையும் அதிவேக பாதைகள் அமைத்ததையும் உணர முடியாதவர்கள் இப்பொழுது வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாததையும் மருந்துகள் வாங்கும் போது வற்வரி விதிப்பதையும் உணருகின்றனர். முன்னைய அரசாங்கத்…
-
- 1 reply
- 236 views
-
-
ஏழு இலட்சத்து 19 ஆயிரம் லீற்றா் மதுபானம் நுகரப்பட்டுள்ளது முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டங்களில் 2015 இல் ஏழு இலட்சத்து 19 ஆயிரம் லீற்றா் மதுபானம் நுகரப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆண்டில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மாத்திரம் ஏழு இலட்சத்து பத்தொன்பதாயிரத்து 535 லீற்றா் மதுபானம் நுகரப்பட்டுள்ளதாக மேற்படி மாவட்டங்களின் மதுவரி நிலைய பொறுப்பதிகாரி ரிஏடிபி குணரட்ன தெரிவித்துள்ளார். இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து 359 லீற்றரும் முல்லைத்துிவு மாவட்டத்தில் மூன்று இலட்சத்து ஜம்பதாராயிரத்து 176 லீற்றரும் நுகரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு மதுபான நிலையமேனும் இல்லை, இங்கு இரண்…
-
- 0 replies
- 345 views
-
-
வெளிநாட்டு நீதவான்களைக் கொண்டு விசாரணை நடத்துமாறு இலங்கையை வலியுறுத்துவது நியாயமற்றது: Lord Naseby:- வெளிநாட்டு நீதவான்களைக் கொண்டு விசாரணை நடத்துமாறு இலங்கையை வலியுறுத்துவது நியாயமற்றது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் நேஸ்பெய் பிரபு தெரிவித்துள்ளார். ஈராக் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பிரித்தானியா உள்நாட்டு நீதவான்களைக் கொண்டு விசாரணை நடத்தி, இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதவான்களைக் கொண்டு விசாரணை நடத்துமாறு கோருவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்குமாறு பிரித்தானியாவும் அமெரிக்காவும் இலங்கையை வலியுறுத்துவது ஆச்சரியமளிக்…
-
- 0 replies
- 202 views
-
-
பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள்: வேதனையான விடயமாகும் திருகோணமலை சாம்பல் தீவு சந்தியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். நீண்டகாலத்திற்குப் பின்னர் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறு வது வேதனையான விடய மாகும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர் பில் ஊடகங்களுக்கு அவர்கருத்து வெளியிடுகையி லேயே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர்…
-
- 3 replies
- 435 views
-
-
70 இலட்சம் பெறுமதியான கொள்ளையிடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு (வீடியோ இணைப்பு) ரி.விரூஷன் யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையிடப்பட்ட சுமார் 70 இலட்சம் பெறுமதியான நகைகளை கைப்பற்றியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ணவின் வழிநடத்தலில் யாழ் பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலமையில் அமைக்கப்பட்ட விஷேட பொலிஸ் அணியினரே மேற்படி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். கட…
-
- 0 replies
- 485 views
-
-
இலங்கையில் செயற்படுவதாக சந்தேகிக்கப்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் பற்றிய தகவல்களை கண்டறிவதற்காக பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுகளில் பணியாற்றும் முஸ்லிம் அதிகாரிகளை ஈடுபடுத்தி உள்ளமை குறித்து அமெரிக்கா மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளதாக தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடலில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள இந்த தீர்மானத்தை கடுமையாக விமர்சித்துள்ள தூதரக அதிகாரிகள், பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான உண்மையான தகவல்களை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மறைப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். முஸ்லிம் அதிகாரிகள் தமது குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளவும், அந்த அதிகாரிகளுக்கு இஸ்லாம் மதம் மீதுள்ள கடும் நம்பிக்கை என்பன…
-
- 1 reply
- 237 views
-
-
பொருளாதார மத்திய நிலையம் :முடிவு முதல்வர் கையில் -சம்பந்தன் வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் முதலமைச்சரே முடிவு எடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றதன் பின்னர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு …
-
- 1 reply
- 195 views
- 1 follower
-
-
புலிகளின் மீள் எழுச்சியைத் தடுக்க தமிழரின் மனங்களை வென்றாக வேண்டும்.இப்படிக் கூறுகிறார் மங்கள தமிழர்களின் மனங்களை வெற்றி கொள்வதன் மூலமே விடுதலைப் புலிகளின் மீள்எழுச்சியைத் தடுக்க முடியும் எனடபதுடன் போர்க்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே, விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தச் செவ்வியில் அவர், “இலங்கை போர்க்குற்ற தீர்ப்பாயங்களையோ, கலப்பு நீதிமன்றத்தையோ உருவாக்கவில்லை. இந்த இரண்டு சொற்பதங்களுமே தவறானவை. பிழையாக வழிநடத்தப்படுபவை. …
-
- 0 replies
- 333 views
-
-
யுத்தக்குற்றவிசாரணையில் சர்வதேச நீதிபதிகள் : கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையில், சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதில் ஜனாதிபதிக்கு குழப்பங்கள் இருக்குமாயின், அதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும், ஐ.நா பிரேரணையில் பிரேரிக்கப்பட்ட விடயங்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார். …
-
- 9 replies
- 496 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் அமைக்கப்படவுள்ள பொறிமுறைக்கு வெளிநாட்டுநீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை. அதற்கு பதிலாக அரசாங்கம், தமது உள்ளுர் ரீதியில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைபொறுத்திருந்து அவதானிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு கிளையின் உதவிதலைமையாளர் போல் கோட்ப்ரே Godfray தெரிவித்துள்ளார். உள்ளுர் விசாரணைகள் காத்திரமில்லை என்ற நிலைமை ஏற்படும்போது வெளிநாட்டு நீதிபதிகளின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் என்று அவர் இலங்கையின்அரசாங்கம் செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/politics/01/111170
-
- 1 reply
- 234 views
-
-
மஹிந்தவின் மகன் நாமல் கைது முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான> ஹம்பாந்தோட்ட மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் இன்று காலை ஆஜராகி வாக்குமூலமளித்தார். இந்நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/176741/மஹ-ந-தவ-ன-மகன-ந-மல-க-த-#sthash.ZxJUdKsX.dpuf
-
- 5 replies
- 1.2k views
-
-
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜரான உதலாகம என்ற இந்த அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். லசந்த விக்ரமதுங்க கொலையுடன் இந்த அதிகாரிக்கு தொடர்பு இருப்பதற்கான தெளிவான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் 20 இராணுவத்தினரடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளமை கு…
-
- 2 replies
- 265 views
-
-
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சிங்கப்பூரில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு எதிர்வரும் 18ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தென்னாசிய புலம்பெயர்ந்தோர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவுள்ள நிலையில் அதில் இந்த மூவரும் பங்கேற்கவுள்ளனர். இந்தநிலையில் குறித்த மூவரும் தனியாக விசேடமாக குறித்து பலரும் வியப்பை வெளியிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.t…
-
- 0 replies
- 347 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதற்கு, அரசாங்கம் எடுத்த முடிவு சரியானதே என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்தவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பயிற்சிகளை முறையாகப் பெற்றவர்களல்ல. தமது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களே அவர்கள்.முறையான வழிமுறைகளின் ஊடாக இவர்கள் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மகிந்த ராஜபக்ச, ஜனாபதியாக இருந்த காலகட்டத்தில் அவரது உத்தரவின் பேரில் தான் இவ…
-
- 2 replies
- 314 views
-
-
அடுத்து வரும் மூன்று மாதங்களில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது. இது தேசிய விமான சேவையின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் செயற்பாடு என விமான சேவை தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. சிறிலங்கன் விமான நிறுவனம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர ஐரோப்பாவின் பிரான்ஸின் பரிஸ், இத்தாலியின் ரோம், ஜெர்மனியின் ஃப்ராங் ஃபர்ட், பிரித்தானியாவின் லண்டன் நகர் ஆகியவற்றிக்கு நேரடி விமான சேவையை முன்னெடுத்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ரோம் நகருக்கான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. ஒக்டோபர் மாதத்தில் இருந்து ஜெர்மன், ஃப்ராங் ஃபர்ட் நோக்கிய நேரடி விமான சேவையை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 250 views
-
-
ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே சோகமானது. சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண கால…
-
- 0 replies
- 254 views
-
-
By: ருகி பெர்ணான்டோ, மரிஸா த சில்வா மற்றும் சுவஸ்திகா அருலிங்கம் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் 2016 பங்குனி 30ஆம் திகதி தற்கொலை அங்கி, வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கண்டுப்பிடிக்கப்பட்டன. அன்றைய தினத்தில் இருந்து ஜூன் மாதம் 28ஆம் திகதி வரையில் 28 பேரின் கைது தொடர்பாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் அனைவருமே இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள். கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் பெண். இவரது கணவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச விமான நிலையத்தில் காகிதத் துண்டுகளை வழங்கிய மேலும் இருவர் (அவர்களும் தமிழர்கள்) மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு (PTA) அழைக்கப்பட்டனர். விசாரணையின் பின்னர் அன்றே அவர்கள் விடுதலை செய்…
-
- 0 replies
- 182 views
-
-
நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமூகங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்ட போதும் கடந்த காலங்களில் அவற்றில் நாடு வெற்றியை நோக்கி நகரவில்லை. குறிப்பாக கடந்த காலங்களில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பதிலாக மேலும் விரிசல்களை மேற்கொள்ளும் விஷமத்தனமான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாகவே யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்தோடி விட்ட நிலையிலும் எம்மால் இதுவரை தேசிய நல்லிணக்கத்தை அடைய முடியாமல் உள்ளது. இவ்வாறு யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்க செயற்பாடுகள் என்று வரும்போது யுத்த காலத்தில் சர்வதேச நாட…
-
- 0 replies
- 453 views
-
-
65 வருடகாலமாக தமது உரிமைகளுக்காக போராடி வரும், சமஷ்டி முறையிலான தீர்வினை வலியுறுத்தி வரும் தமிழ் மக்கள் மத்தியில், ஒற்றையாட்சி தீர்வை ஏற்றுக்கொள்வதற்கான மனோநிலையை உருவாக்குவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே, மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்கவின் கருத்துக்கள் அமைவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் சமஷ்டி முறையிலான தீர்வு திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றும், அவர்கள் ஒற்றையாட்சிக்குள் வாழ்வதற்கு விரும்புவதாகவும், புதிய அரசியல்யாப்பு தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான லால் விஜேந…
-
- 0 replies
- 314 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சு பதவியை அல்ல வீதியை கூட்டுவதற்குக் கூட தகுதியற்றவர் என தேசப்பற்றுடைய பௌத்த பிக்குகள் அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறிழைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சோ, அதனால் ஒட்டுமொத்த இராஜபக்ச குடும்பத்தையும் சிறையில் அடைக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட தேசப்பற்றுடைய பௌத்த பிக்குக…
-
- 1 reply
- 310 views
-
-
இலங்கையின் மாகாணங்களின் அதிகாரத்திற்கு உட்பட பகுதிகளில் இருக்கும் பொலிஸார், அந்த மாகாண முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் பொறுப்புக் கூற வேண்டும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. எனினும் இலங்கைக்குள் ஒரு பொலிஸ் படையினரே இருக்க வேண்டும் எனவும் அந்த குழு கூறியுள்ளது. 24 பேரை கொண்ட இந்த குழுவின் தலைவராக சட்ட நிபுணரான லால் விஜேநாயக்க செயற்பட்டு வருகிறார். மாகாணங்களில் செயற்படும் பொலிஸ், அரசியல் தலையீடு இன்றி செயற்பட வேண்டும் எனவும் அனைத்து மாகாணங்களிலும் வழக்கு நடவடிக்கை நெறிப்படுத்த வழக்கு பணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், மாகாண மட்டத்தில் ப…
-
- 0 replies
- 354 views
-
-
விளையாட்டுக்கள் மூலம் உடல், உள ஆரோக்கியத்துடன் எமது இளைய சமுதாயம் வழிதவறிச் செல்வதைத் தடுத்து ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்கலாம் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி-உருத்திரபுரம் உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழகம் நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று 3.00 மணிக்கு விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக் கலந்துகொண்ட வடமாகாண அமைச்சர் குருகுலராசா உரையாற்றும் போதே மேற்படிகருத்துக்களைத் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், இங்கு உதைபந்தாட்டத்தில் பங்குபற்றிய வீரர்கள் மிகவும் சிறப்பான முறையி…
-
- 0 replies
- 318 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனைக்கு அமைய, போர்க்குற்றங்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை மிகவும் சிக்கலானதாக இருக்கும் என ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொம் மெலினோவிஸ்கி தெரிவித்துள்ளார். சர்வதேச செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இதனைக் கூறியுள்ளார். எவ்வாறாயினும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டு ஆலோசனைகள் அத்தியாவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய யோசனைகளை முழுமையாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமானது எனவும் அவர் …
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கை அரசாங்க படைகளுக்கும்- தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற 2009ம்ஆண்டு இறுதிக்கட்ட போரில் மோசமான மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்பயன்படுத்தப்பட்டிருந்தால் அவை தொடர்பாக உடனடி விசாரணைகள் நடத்தப்படவேண்டும். இதனைநாம் சுட்டிக்காட்டுவது எவரும் கோபப்படுவதற்காக அல்ல. இவ்வாறான சம்பவங்கள்எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்வதற்கே ஆகும். மேற்கண்டவாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான,அனுரகுமார திஸநாயக்க கூறியுள்ளார். நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கான விஜயம்ஒன்றை மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் 2009ம் ஆண்டு போரின்இறுதிக்கட்டத்தில் கொத்து குண்டுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்பயன்பட…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில் உலக நாடுகளின் சுற்றுலா அபிவிருத்தி அமையத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மைக்கல் நிவாஸ் தலைமையிலான 50 நாட்டு சுற்றுலாப் பிரஜைகள் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை(14-07-2016) யாழ். மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வமான விஐயமொன்றை மேற்கொண்டு வருகை தந்தனர். இரண்டு உலங்கு வானுர்திகளில் யாழ்ப்பாணம் சுப்பிரமணிய விளையாட்டு அரங்கில் வந்திறங்கிய இவர்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார். குறித்த பிரஜைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசாமி ஆலயத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டதுடன் அங்கு இடம்பெற்ற விசேட சமய நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து யாழ். நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்…
-
- 1 reply
- 351 views
-