யாழ் – இசைக்கருவி

மீனா
Sign in to follow this  

பண்டை இன்னிசைக்கருவி- பண்டை காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த இன்னிசைகருவிகளில் யாழ் என்னும் நரம்பு கருவி மிகவும் சிறப்புடையதாகும். முற்காலத்தில் வாழ்ந்த இசை புலவர்கள், துளைகருவிகளாகிய வேய்ங்குழல், நரம்பு கருவியாகிய யாழையும் துணைக்கொண்டே குரல் முதலிய ஏழிசைகளையும் குற்றமற ஆராய்ந்து, பெரும் பண்புகளும் அவற்றின் வழி பிறக்கும் திறன்களும், ஆகிய நுட்பங்களை இனிமை பொருந்த வசித்து கட்டியுள்ளார்கள் . முற்காலத்தில் யாழ் கருவியை நிலைக்களம் ஆக கொண்டே பெரும் பண்களும் அவற்றின் திறன்களும் நுண்ணிதின் ஆராய்ந்து வகைபடுத்தபட்ட, யாழ் நரம்பின் துணை கொண்டு ஆராய்ந்து கண்ட பண் வகைகளை யாழின் பகுதி – தொல். அகம் –  எனவு, அப் பண்புகளின் இயல்புகளை விளக்கும் இசை நூலை நரம்பின் மறை – தொல். தூன்மரபு எனவும் குறிப்பிடுகின்றார்கள்.

 

http://www.ourjaffna.com/பாரம்பரியம்/யாழ்-இசைக்கருவி

Sign in to follow this  

Photo Information for யாழ் – இசைக்கருவி