• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. கண பேருக்கு விளங்கிறதில்லை.... உந்த மரவள்ளி, தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், லீக்ஸ், கோதுமை, மிளகாய், பீட்ரூட் போன்ற 130 வகை தாவரங்களையும் கொண்டு வந்து சேர்த்தது போர்த்துக்கேயர் எண்டு. வெள்ளைக்காரனிடம் வாழைப்பழம் எங்க இருந்து வருகுது எண்டால் கரிபியன் எண்டுவார்கள்.... அட கோதாரி விழுவானே, கரிபியன் இப்ப கொழும்பசுக்கு பின்னம் தானே வந்தது. தமிழனின் வாழைப்பழத்தினையும், மாம்பழத்தினையும் பிரேசிலுக்கும் பின்னர் கரிபியன் பகுதிக்கும் கொண்டு போய் சேர்த்தவன் போர்த்துகேயன் எண்டால்... முழுசுவான்.
 3. எங்கையக்கா... அந்த மா உருண்டைகள்... ம்.ம்ம்ம் ... பிழைதான்... இருந்தாலும் அந்த மாதிரி இருக்குது. இன்று 2 பனங்கட்டி குட்டான் £3 வாங்கிக் கொண்டு வந்தனான். ஒரு பயறு பாக்கெட்டும், தேங்காயும். உங்கட ரெசிபில செய்து பார்க்க தான் இருக்கு. ஆ... எப்படி குறையும்? இவ்வளவையும் செய்து தனியா இருந்து முழுசிக் கொண்டு அடைந்தால், எப்படி குறையும் எண்டு கேக்கிறேன்? சாப்பாடினை இரண்டு கிழமைக்கு நிறுத்துங்கோ... குறையும்...
 4. ரொட்டி ,சப்பாத்தி செய்வது ...தோசைக்கும் ,இட்லிக்கும் போடுவேன் ...ராகி மாவில் கேப்பங்களி செய்து பார்த்தேன் கொஞ்சம் சாப்பிட கடினமாய் இருந்தது ...திரும்பவும் செய்து பார்க்கோணும் தவிர வறுத்த கொள்ளை அரைத்து போட்டு அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன்..ரொட்டி...போன்றவற்றிக்கும் போட்டு இருக்கிறேன் ....ஆணால் உடம்பு மட்டும் குறையவில்லை
 5. Today
 6. கொரோனா பீதி : யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் முடக்கம் யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தின் தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கையை சேர்ந்த மாணவியின் சகோதரன் ஒருவர் கந்தக்காடு கொரோனா வைத்தியசாலைக்கு பணி நிமிர்த்தம் சென்று வந்ததன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டயறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று குறித்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அறிவியல்நகர் வளாகம் முடக்கப்பட்டுள்ளது. எவரும் வெளியேறாது தடுக்கப்பட்டுள்ளனர். மாணவியிடம் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் இன்று திங்கட்கிழமை மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொற்றுச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் ஆவார். அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு இராணுவ சிப்பாய் ஆவார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தத் தகவலின் அடிப்படையில், தொற்றுக்குள்ளான இராணுவச் சிப்பாயின் சகோதரி கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயில்வதனால், கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டுள்ளது https://www.virakesari.lk/article/85802
 7. கடல் புலிகளுக்கு அதிநவீன படகுகளை வழங்க இணங்கினோம் என பசில் என்னிடம் தெரிவித்தார் - சரத் பொன்சேகா அதிரடி கருத்து (ஆர்.யசி) விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் போராடிக்கொண்டு இருந்த வேளையில் ராஜபக் ஷக்கள் புலிகளுடன் உடன்படிக்கை செய்து அரசியல் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.தமிழர்களின் வாக்குகளை நிறுத்தியதற்காக கடல் புலிகளுக்கு அதி நவீன படகுகள் வழங்கப்பட்டதாக பசில் ராஜபக் ஷ என்னிடம் கூறினார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று வத்தளை பலகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கோத்தாபய ராஜபக் ஷவின் அரசியல் பயணம் தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதிவேக வீதியில் தவறான பக்கம் பயணிக்கும் வாகனத்தை போன்று அவர் பயணிக்க ஆரம்பித்துள்ளார். அவருக்கு அதில் குதுகலமாக இருக்கலாம் ஆனால் நாட்டிற்கும் மக்களுக்கும் இந்த பயணம் ஏற்புடையதல்ல. அவர் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் ராஜபக் ஷக்களுக்கு சகல சலுகைகளும் வழங்கப்படுகின்றது. ராஜபக் ஷவினரின் நோக்கம் ஒன்றதான். அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் சகல இடங்களிலும் அவர்களின் ஆதிக்கத்தை பெற்றுக்கொள்வது. ஆனால் இது ஜனநாயக அரசியலில் நல்லதொரு செயற்பாடாக நாம் கருதவில்லை. கருணா அம்மான் கூறிய விடயங்கள் நாட்டிற்கு பாதிப்பில்லையாம், கிரிக்கெட் ஊழல் நாட்டிற்கு அவப்பெயர் இல்லையாம் ஆனால் எதிர்க்கட்சியினர் செய்யும் ஜனநாயக அரசியலை நாட்டிற்கு எதிரான சூழ்ச்சி என ராஜபக் ஷவினர் கூறி பிரசாரம் செய்கின்றனர். ஆனால் இவர்களின் தேசத்துரோக செயற்பாடுகள் என்னவென்பதை நான் அங்கு அறிவேன். பசில் ராஜபக் ஷவும் நானும் ஒரு வகுப்பு நண்பர்கள், கடந்த யுத்த கால சூழலில் நாமும் அவரும் பல விடயங்களை பேசுவோம். நான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பசில் ராஜபக் ஷவுடன் பேசுவதுண்டு. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை நிறுத்த பிரபாகரனிடம் பேசிவிட்டோம், அவர் இணக்கம் தெரிவித்துள்ளார் என என்னிடம் பசில் கூறினார். பசில் பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி, தேர்தலில் தமிழர்கள் வாக்கை நிறுத்துவதற்கு பிரபாகரம் இணங்கியதற்கு பிரபாகருக்கும் கடல் புலிகளுக்கும் அதி நவீன படகுகளை பெற்றுக்கொடுக்க தாம் இணக்கம் தெரிவித்ததாக பசில் என்னிடம் கூறினார். அதுமட்டுமல்ல இந்த பேச்சுவார்த்தைகளில் அமரர் தொண்டமானும் இருந்ததாக என்னிடம் கூறினார். நாம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து எமது தமிழர்களை மீட்க வேண்டும் என்பதற்காக போராடிகொண்டிருந்த வேளையில் ராஜபம் ஷக்கள் புலிகளுடன் ஒப்பந்தங்களை செய்தி கொண்டிருந்தனர். பிரபாகரனை துரோகி எனக் கூற அச்சத்துடன் இருந்தனர், பிரபாகரனை மதிப்புக்குரிய பிரபாகரன் என்றே இவர்கள் கூறினார்கள். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2005 ஆம் ஆண்டு ஆற்றிய உரையை எடுத்துப்பாருங்கள். அதில் அவர் அவ்வாறே கூறினார். இன்று யுத்தம் முடிந்துவிட்டதுடன், பிரபாகரன் இறந்த பின்னர் வீரர்கள் போன்று பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த அழிவிற்கும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் ஒரு விதத்தில் ஆட்சியாளகள் காரணம் என்பதே உண்மையாகும். பல பொதுமக்கள் இறந்தமைக்கும், அழிவுகளை சந்திக்கவும் ஆட்சியாளர்களும் பொறுப்புக் கூற வேண்டும். இந்த தேர்தலில் மீண்டும் ராஜபக் ஷக்கள் வெற்றின்பெற்றால் மீண்டும் வெள்ளைவேன் கடத்தல்,கப்பம் பெறல், கொலைகள், கொள்ளைகள் உருவாகும். எவரும் எதுவும் கேட்க முடியாது என்ற நிலைமை உருவாகும். ஆகவே இன்னொரு நாசகார ஆட்சிக்கு மக்கள் இடமளித்துவிட வேண்டாம் என அவர் கூறினார். https://www.virakesari.lk/article/85803
 8. வடக்கின் அரசியல் ; இதுவும் இரண்டாம் அலைதானா? July 13, 2020 2020 தேர்தல் களம் கொரொனாவை கடந்து சூடு பிடித்த நிலையில் மீண்டும் கொரொனா அச்சம் ஆட்கொண்டு இரண்டாம் அலை என பேசப்படுகிறது. இந்த இரண்டாம் அலையின் வருகைக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அந்த வரிசையில் வடக்கு அரசியல் மீது அவதானத்தைச் செலுத்தினால் அங்கும் இந்த இரண்டாம் அலை அரசியல் சூழலே நிலவுவதாக உணரமுடிகிறது. கட்சிகளையும் கொள்கைகளையும் அதன் பேசுபொருட்களையும் தாண்டி சுமந்திரனே அதிகமாகப் பேசப்படுகிறார். அது குறித்தே இங்கேயும் அவதானத்தைச் செலுத்தாமல் அங்கே போட்டியிடும் கட்சிகள் என்ன பேசுகின்றன என்பது பற்றி அவதானிக்கலாம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசு கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி), தமிழர் சமூக ஜனநாயக கட்சி ( ஈ.பி.ஆர்எல்.எப் வரதர் அணி) ஐக்கிய தேசிய கட்சி (ரணில் அணி), ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி), ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி, இப்படி பிரதான கட்சிகள் களமிறங்கியுள்ள அதேவேளை சுயேச்சைக் குழுவாக போட்டியிடும் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சுயேச்சைக் குழு, வடக்கு வாழ் இந்திய வம்சாவளி மக்களின் சுயேச்சைக் குழு, பேரினவாத கட்சிகள் வாக்குகளை சிதறடிப்பற்கென இறக்கிவிடப்பட்டுள்ள சுயேச்சைக் குழுக்கள் (வடக்கின் பாஷையில் ஒட்டுக்குழுக்கள்) இப்படி பல அணிகள் களமிறங்கி உள்ளன. இதற்கிடையே “ஆவா” குழுவும் தமது அரசியலை முன்வைக்கும் நிலை வந்துள்ளது. ஒட்டுக்குழு சுயேச்சைக்குழுக்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து அணிகளுக்கும் ஓர் அரசியல் கொள்கைக் கோட்பாடு இருக்கின்றது எனலாம். ஆனால் எந்தளவு தூரம் அவை மக்கள் நலன் சார்ந்ததாக அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக உள்ளது? அல்லது அதற்கேற்ப இற்றைப்படுத்தப்படுகிறது? அதேநேரம் இளைய சமுதாயத்தை உள்வாங்கி முன்செல்கிறது? என்பதில் பல கேள்விகளை எழுப்புகிறது. இப்போதைய ஆளுந்தரப்பின் ஒரே தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் அமைச்சுப் பதவி வகித்ததன் மூலம் ஒரு ஆறுதல் அரசியலை வடக்கிலே முன்னெடுத்துள்ளார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. எல்லோருமே அரசின் எதிரணி என்று இருந்திருந்தால் அரசாங்கத்தின் சேவைகளை, அபிவிருத்திகளை வடக்கு நோக்கிக் கொண்டு வருவதிலும் வடக்கு மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதிலும் பல சிக்கல்களை எதிர்நோக்கவேண்டி வந்திருக்கும். அதனை டக்ளஸ் சரிவர முன்னெடுத்தார் எனலாம். ஆனால் அந்த பணியைத் தொடர்ந்து முன்னெடுக்க அவருக்கு அடுத்ததாக வடக்கில் ஒருவரை அவர் வளர்த்தெடுத்திருக்கிறாரா என்றால் அதற்கு பதில் இல்லை. அவரை அடுத்த நிலையில் இருக்கும் எஸ்.தவராசாவும் ஓய்வு வயதை நோக்கிச் செல்கையில் சரிபிழைகளுக்கு அப்பால் டக்ளசின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கப்போவது யார்? இப்போதைய அரசு இனவாதப் போக்கோடு பௌத்த பேரினவாத கருத்தாக்கத்தை புராதன தடயங்கள் மீது கட்டமைக்க உருவாக்கியுள்ள செயலணியில் வடக்கு- கிழக்கு தமிழர் தரப்பில் ஒருவர் இல்லாத நிலையை கூட போக்கும் வல்லமை டக்ளசிடத்தில் இல்லாதிருப்பது வருத்தத்துக்கு உரியது. அவரது அமைச்சரவை பலம் இழக்கப்பட்டால் அடுத்த கட்டத்தில் அல்லது டக்ளசுக்குப் பின் ஈ.பி.டி.பி யின் நிலை என்னவாகும் என்பது பெருங்கேள்வியே. இதே நிலைமையை ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கும் விஜயகலாவின் எதிர்கால அரசியலும் கேள்விக்கு உள்ளாகிறது. இந்தமுறை ஐக்கிய மக்கள் சக்தியும் களம் இறங்கியுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சி வந்தால் அமைச்சுப் பதவியினைக் கொண்டு செய்யக்கூடிய குறைந்தபட்சமும் குறையவே வாய்ப்புள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி க்கு அங்கே தலைமை கொடுக்கும் கணேஷ் வேலாயுதமும் புதியவரல்ல. அவரும் தமிழ்த்தேசிய தரப்புதான். அடுத்தது அங்கஜன் தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என சொல்லிக்கொள்ளும் மொட்டு அணி. டக்ளஸ் – விஜயகலா விடக்கூடிய இடத்தை அமைச்சுப்பதவியினூடாக இட்டு நிரப்புவார் என எதிர்பார்க்க கூடியவர். 2018 ல் 52 நாள் அரசாங்கத்தில் இவருக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த முறை தோல்வி கண்ட பிறகு தேசிய பட்டியல் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தமுறை அந்த வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது மக்களே வாய்ப்பு வழங்குவார்களா எனத்தெரியாது. ஏனெனில் “ ஆவா” குறூப் என அழைக்கப்பட்ட வாள்வெட்டு வன்முறைக் குழு அவருடன் அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.”ஆவா” எனும் சிங்களச் சொல்லின் அர்த்தமே “வந்துவிட்டார்கள்” என்பதுதான். அவர்களின் தலைவர் என அறியப்படும் அருண் சித்தார்த் இப்போது வடக்கு அரசியலில் பேசு பொருள் ஆகி இருக்கிறார். இப்போது சுமந்திரனுக்கு அடுத்ததாக இவரது உரையாடலே அதிக கவனம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இவர் இருக்கும் இடம் சிக்கலானதுதான் என்றாலும் இவர் பேசும் விடயங்களும் மொழி ஆளுமையும் அவதானத்தைப் பெறுகின்றது. சுமந்திரனைப் பேட்டி கண்டு சர்ச்சையை ஏற்படுத்தி அதே சிங்கள ஊடகவியலாளரான சமுர்தித்தவை அருண் சித்தார்த் எதிர்கொண்டவிதம் பாராட்டுக்குரியது. சுமந்திரனை பேட்டி காணும்போது அவர் அளித்த பதில் நிதானமானது என்றாலும் காரமானதாக இருக்கவில்லை. ஆனால், அருண் நிதானத்துடன் காட்டமாகவும் பதில் அளிக்கிறார். அதுவே அவர் குறித்த அவதானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒருவகையில் சுமந்திரனும் , அருணும் பேசுபொருள் ஆவதற்கு காரணம் என்ன என பார்ப்பதற்கு இந்த கட்டுரையின் இறுதி பந்தியையும் நீங்கள் வாசிக்க வேண்டும். அதுதான் “தமிழ்த்தேசியம் எனும் தலைப்பில் உரையாற்றுக” எனும் தலைப்பில் ஒரே வகுப்பின் மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி வைப்பதுபோல் மூன்று அணிகள் பேசித் திரிவதாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (சுமந்திரன் தவிர்த்து), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒன்றாக இருந்து மூன்றாகப் பிரிந்து சண்டை இட்டுக் கொள்கின்றனவே தவிர பேசும் பொருள் ஒன்றையே சுற்றி, சுற்றி வருவதாகவே தெரிகிறது. அவர்களின் சிந்தனையில் மாற்றம் வந்திருப்பதாக தெரியவில்லை. ஆட்களில் மாற்றம் வந்திருப்பதாகவும் தெரியவில்லை. மாவை முதல் கஜேந்திரன் வரை எல்லாமே 25 – 50 வருடமாக பார்த்த அதே முகமும் பேச்சும். விக்கினேஷ்வரன் புதிதாக வந்த பழையவர். சமயத்தில் “சண்டையைவிட்டுட்டு அமைதியா இருங்கோ பிள்ளைகள்” என ஆசிரியர் வகுப்பறை மாணவர்களைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு மக்கள் செல்கின்றனர். ஒரே விஷயத்தையே மக்களிடம் மாறி மாறி முன்வைக்கிறார்கள். இளைய சமூகத்தை நோக்கிய ஒரு மாற்று அரசியலை முன்வைக்க வடக்கில் இளையவர்கள் இல்லையா என்ன ? இவர்களுக்கு மாற்றமாக அதாவது தமிழ்த் தேசியத்துக்கு மாற்றாகவும் ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து போட்டியிடும் பேசும் தரப்பாக மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி (சுயேச்சைக் குழு) பறக்கவிடும் பட்டமும் நூலறும் நிலையிலேயே பறக்கிறது. அந்த மாற்று அணியில் கூடவா இளையவர்கள் இல்லை. அந்த அணிசாரந்த கலை – இலக்கிய அமைப்புகளில், கூட்டங்களில் வாய்கிழிய அரசியல் பேசும் இளைய “தோழர்கள்” தேர்தல் காலத்தில் எங்கே ஓடிவிடுகிறார்கள். பாவம் எத்தனை நாளைக்குத்தான் சி.கா.செந்திவேல் இந்த கைவண்டியை இழுப்பார். கம்பியுட்டர் சமூகம் கொஞ்சம் களம் இறங்கினால், அவர்களின், புனிதம் கெட்டுவிடப் போகிறதா என்ன? இப்படி அரசியல் அல்லாத தளத்தில் அரசியல் பேசிவிட்டு தேர்தல் களத்தில் காணாமல் போவதால்தான் உங்கள் கவிதைகளுக்கான பாடுபொருட்களாகும் சாதியமும், தமிழ்த் தேசியமும், ஆவா போன்ற வன்முறைகளும் கூட அரசியல் களங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான சட்டத்தரணி சுமந்திரன் அளவுக்கு “ஆவா அருண்” பேசுபொருள் ஆவதற்கு அவர்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் நின்று மாறுபட்ட புதிய கருத்துக்களைச் சொல்ல முனைகிறார்கள் என்பதுதான் அர்த்தம். அவர்களது உரைகள், கருத்துகள் மீதான விமர்சனம் இருந்தாலும் அவற்றைத் துணிந்து ஒரு மாற்றுக் கருத்தாக அவர்கள் முன்வைப்பதை மக்கள் பார்க்கிறார்கள். மாற்று சிந்தனைகளுடன் வடக்கின் அரசியலை முன்வைக்காது முன்செல்லும் வடக்கின் பெரும்போக்கு அரசியலும் கொரொனாவின் இரண்டாவது அலை போன்றதுதான். அதாவது ஏற்கனவே வந்த கொரொனாவேதான் திரும்பவும் வரும். வடக்கு மக்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். http://thinakkural.lk/article/54312
 9. பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த என்னை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுகின்றனர்- சசிகலா ரவிராஜ் வேதனை July 13, 2020 நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கவலை வெளியிட்டுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு என்பது குறித்து எந்தவிதமாற்றுக்கருத்தும் இல்லை என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். அந்த ஒற்றுமை என்பது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் அந்த வகையிலேயே நான் பரப்பபுரை நிகழ்வுகளில் பங்கேற்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களின் பெண் வேட்பாளர் என்ற வகையிலும் கட்சியின் மகளிர் அணி உட்பட சகல பெண்கள் அமைப்புகளின் ஆதரவை கோரும் முயற்சிக்கு தடைகள் விதிக்கப்படுகின்றது . பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த ஒருவரை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுவது வேதனை அளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார் http://thinakkural.lk/article/54409
 10. மிகவும் உண்மை. நான் 2003ம் ஆண்டு இஸ்தான்புல்லில் இருக்கும் இந்த நூதனசாலைக்கு சென்றேன். மிகவும் அற்புமான‌ ஒரு இடம். இந்த நாட்டில் இருக்கும் எல்ல பள்ளிவாசல்களும் கிறிஸ்தவ ஆலய அமைப்பையே கொண்டுள்ளது. இதன் மினராட் எனப்படும் கோபுரம் பள்ளிவாசால் கோபுரம் போன்று இருக்காது. கிறிஸ்தவ ஆலாயத்தின் ஊசியான கூர்மை முனைபோல் இருக்கும். இங்கிருக்கும் இன்னொரு இடத்தின் பெயர் எபிசஸ் இதுதான் வேதாமத்தில் உள்ள ஒரு நிருபமான புனித பவுல் எபேசியரின் சபைக்கு எழுதிய நிருபம் எனப்படும். இங்கு வாழ்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் அவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்படார்கள்.
 11. விக்னேஸ்வரனே என்னை பிணையில் விடுவித்தார்; அந்த அபிமானமே அவரை முதலமைச்சராக்க காரணம்: மனம் திறந்த மாவை.! மட்டக்களப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதால் நான் கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டிருந்தேன். க.வி.விக்னேஸ்வரன் திருகோணமலைக்கு நீதிபதியாக வந்த பின்னரே எனக்கு பிணை வழங்கப்பட்டது. அந்த அபிமானத்தினாலேயே அவரை வடக்கு முதலமைச்சராக்க சம்மதித்தேன் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. இன்று தமிழ்பக்கத்தில் ஒளிபரப்பான பேஸ்புக் நேரலையான- “எதுக்கு என்ன பாத்து இந்த கேள்வியை கேட்டாய்?“ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு மாற்றத்திற்கு எதிராக மட்டக்களப்பில் 1978 செப்ரெம்பரில் பெரும் போராட்டம் நடந்தது. நானும் இங்கிருந்து சென்றேன். ஆயிரம் ஆயிரமாக மக்கள் திரண்டார்கள். பலர் கைது செய்யப்பட்டனர். அரசியல் யாப்பை ஏற்கவில்லை, தமிழீழத்தை அடைய முயற்சிக்கிறோம் என கைது செய்யப்பட்டோம். முதல் இருந்த நீதிபதி எங்களிற்கு பிணையையே மறுத்து விட்டார். எங்களிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் வாதாடினார்கள். ஆனால் நீதியரசர் விக்னேஸ்வரன் எமக்காக வாதாடினார். எம்மை பிணையில் விடுவித்தார். அவரை முதலமைச்சராக்குவதென்றபோது, இந்த அபிமானத்தால் அதை ஏற்றுக்கொண்டேன். தானே எம்மை பிணையில் விடுவித்ததாக அவர் அண்மையிலும் கூறியிருந்தார். அவர் அண்மையில் இன்னொன்றையும் கூறியிருந்தார். கடந்த அரசில் கன்னியா வெந்நீரூற்றை விற்றுவிட்ட கூட்டமைப்புக்கு இம்முறை வாக்களித்தால் கோணேச்சரத்தையும் விற்றுவிடும் என கூறியுள்ளார். அவர் நீதியரசராக இருந்தவர். படித்தவர். பண்பானவர். உயர்ந்த மனிதராக மதிக்கப்பட்டவர். அவர் இந்த சொற்களை பாவித்தது நல்லதல்ல. பிறிதொரு கேள்விக்கு பதிலளிக்கையில், விக்னேஸ்வரனை முதலமைச்சரக தெரிவு செய்த முடிவு தவறானதென தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்பொழுது உணர்கிறோம் என்றார். http://www.pagetamil.com/134924/
 12. க்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன் July 11, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா தொடர்கள் க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் Memento | English | 2000 | USA | 1 hr 53 mins | Christopher Nolan க்றிஸ்டோஃபர் நோலனின் தம்பி ஜோனதன் நோலன். ஆறாண்டு இளையவர். அவர் தன் கல்லூரிப் பாடத்தின் பகுதியான‌ உளவியல் வகுப்பில் தோன்றிய எண்ணத்தின் அடிப்படையில் Memento Mori என்ற சிறுகதையை 90களின் இறுதியில் எழுதினார். “நீ மரிப்பாய் என்பதை நினைவிற் கொள்” என்பது தலைப்பின் பொருள். ஏர்ல் என்பவன் குறுங்கால மறதியால் (Anterograde amnesia – நம்மூர் பாஷையில் சொன்னால் Short-term Memory Loss) அவதிப்படுபவன். சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவனது நினைவுகள் அழிந்து விடும். அவன் மனைவியை யாரோ வன்புணர்ந்து கொன்ற நிகழ்வின் போது ந‌டந்த‌ கைகலப்பில் தான் அவனுக்கு இப்பிரச்சனை ஆரம்பிக்கிறது. இதோடு அவன் கொலையாளியைக் கண்டுபிடித்துப் பழிதீர்க்க வேண்டும். அதற்காக கொலையாளி பற்றிய தகவல்களை உடலெங்கும் பச்சை குத்திக் கொள்கிறான். கதை இரு வேறு காலகட்டங்களிடையே மாறி மாறிப் பயணிக்கிறது. இக்கதையை ஜோனதன் சொன்ன போது க்றிஸ்டோஃபர் அவரை ஊக்குவித்து எழுதச் சொல்லி இருக்கிறார். அதன் முதல் வரைவு தயாரானதும் க்றிஸடோஃபர் நோலன் அதற்குத் திரைக்கதை எழுத ஆரம்பித்தார். ஜோனதனும் அக்கதையைத் தொடர்ந்து செப்பனிட்டுக் கொண்டிருந்தார். இருவரும் தத்தம் பிரதிகளை அவ்வப்போது பறிமாறி, விவாதித்து மெருகேற்றினர். க்றிஸ்டோஃபர் நோலனுக்கு அவர் மனைவி எம்மா தாமஸின் சினிமாத் தொடர்புகள் வழி அத்திரைக்கதையைப் படமாக்கும் வாய்ப்பு வந்தது. 2000ம் ஆண்டில் திரைப்படம் வெளியானது. அதன் பிறகு ஓராண்டு கழித்து (2001) Esquire சஞ்சிகையில் ஜோனதன் நோலனின் சிறுகதை வெளியானது. Memento Mori சிறுகதையை இந்த இணைப்பில் படிக்கலாம்: https://www.londonscreenwritersfestival.com/assets/Memento-Short-Story-by-Jonathan-Nolan.pdf. மேற்சொன்ன அதே கதை தான் Memento படத்திற்கும். கதாபாத்திரப் பெயர்கள் வேறு. அவர்தம் குணநலன்கள் வேறு. சம்பவங்கள் வேறு. முடிவு வேறு. எல்லாவற்றுக்கும் மேல் படத்தின் தனித்துவம் தலைகீழ்க் கதை சொல்லும் பாணி (Reverse Chronology). இதில் நாயகன் லியோனார்ட் என்ற லென்னி. குறுங்கால மறதி என்றால் அவனால் புதிய நினைவுகளை உண்டாக்கிக் கொள்ள முடியாது. அவனது கடைசி ஸ்திர நினைவு அவன் மனைவியின் முகம். குளியலறையில் வல்லுறவு செய்யப்பட்டு நிர்வாணமாய்க் கிடக்கும் அவளது உயிர்விடும் கணங்கள். மறதியை எதிர்கொள்ள அவன் மூன்று உபாயங்களைக் கையாள்கிறான். ஒன்று கொலையாளி பற்றிய துப்பு கிடைக்கும் போதெல்லாம் டாட்டூ குத்தும் கடைகளுக்குச் சென்று அதைத் தன் உடல் முழுக்கப் பச்சை குத்திக் கொள்கிறான் (JOHN G. RAPED AND MURDERD MY WIFE, FIND HIM AND KILL HIM, FACT 1: MALE, FACT 2: WHITE, FACT 3: FIRST NAME JOHN OR JAMES, FACT 4: LAST NAME G______, FACT 5: DRUGDEALER, FACT 6: car license number SG13 7IU, NEVER ANSWER THE PHONE, remember sammy jankis – இப்படி மார்பு, வயிறு, விலா, கை, கால் என எல்லா இடங்களிலும்). இரண்டாவது அவன் ஒரு இன்ஸ்டன்ட் போலராய்ட் கேமெரா வைத்திருக்கிறான். அவன் தான் சந்திருக்கும் நபர்களைப் புகைப்படமெடுத்து, அதில் அவர்கள் பெயர்களையும், அவர்கள் பற்றிய குறிப்பையும் எழுதி, எப்போதும் அவற்றைத் தன் சட்டைப் பையில் வைத்திருக்கிறான். மூன்றாவதாய் அவனோ, மற்றவர்களோ காகிதங்களில், அட்டைகளில் எழுதித் தரும் குறிப்புகள். இவற்றை எல்லாம் வைத்துத் தன் ஞாபக‌க் குறையை நிரப்ப முனைகிறான். அவன் உயிர் வாழ்வதே அவன் மனைவியின் சாவுக்குக் காரணமானவனைக் கொல்லத் தான். கதை இரண்டு பகுதிகளாகப் பிரிந்திருக்கிறது. ஒரு பகுதி கருப்பு வெள்ளையில் அசல் கால வரிசையில் போகிறது. மற்ற பகுதி கலரில் தலைகீழ் வரிசையில் போகிறது. மாறி மாறி இவ்விரு பகுதிகளும் வருகின்றன. இறுதியில் இரண்டும் இணைகின்றன. உதாரணமாய் மொத்தமாகவே படத்தில் பத்து காட்சிகள் தாம் இருக்கின்றன என வைத்துக் கொள்வோம். ஐந்து கருப்பு வெள்ளைக் காட்சிகள்: 1, 2, 3, 4 & 5 (இது படத்தில் இப்படியே நேராய் வரும்). ஐந்து கலர் காட்சிகள்: A, B, C, D & E (இது படத்தில் தலைகீழாய் வரும்: E, D, C, B & A). இந்த இரண்டும் மாறி மாறி படத்தில் வரும். அந்தப் பத்தும் நிகழ்ந்த நிஜக் கால வரிசை இது: 1, 2, 3, 4, 5, A, B, C, D & E. ஆனால் படம் அவற்றை இந்த வரிசையில் காட்டுகிறது: E, 1, D, 2, C, 3, B, 4, A & 5. கருப்பு வெள்ளைப் பகுதி முழுக்க லென்னி டிஸ்கவுண்ட் இன் என்ற ஹோட்டலின் அறையில் தங்கியிருந்து தொலைபேசியில் டெட்டி என்ற போலீஸ்காரருக்குத் தன் கதையைச் சொல்வதும், பச்சை குத்திக் கொள்வதும் காட்டப்படுகின்றன. அவன் ஓர் மருத்துவக் காப்பீட்டு விசாரணை அதிகாரி. முன்பு சாம்மி என்பவரின் கேஸில் அவர் விபத்தில் குறுங்கால மறதியால் அவதிப்படுவதற்கு இன்ஷ்யூரன்ஸ் கிடைக்குமா என விசாரித்து மறுத்து விடுகிறான். சாம்மியின் மனைவியிடம் அவருக்கு நினைவுத்திறம் மீளும் வாய்ப்புள்ளது என்கிறான். நீரிழிவு நோயாளியான அவள் அதை நம்பித் தன் கணவனைப் பரிசோதிக்க தனக்கு ஒரே வேளையில் மீண்டும் மீண்டும் இன்சுலின் போடச் சொல்கிறாள், அவர் அவள் மீது அதிபிரியம் கொண்டுள்ளவர் என்பதால் அதன் மூலம் அவர‌து நினைவு திரும்பும் என்ற நம்பிக்கையில். ஆனால் அவரோ மறதியால் மூன்று முறை அவளுக்கு இன்சுலின் செலுத்தியதால் அவள் மீளவியலாக் கோமாவுக்குப் போகிறாள். இக்கதையைத் தன் கதையோடு ஒப்பிட்டுக் கொள்கிறான் லென்னி. போலீஸ்காரர் டெட்டியின் வழிகாட்டுதலில் ஜிம்மி என்ற போதைப்பொருள் கடத்தல்காரன் தான் தன் மனைவியைக் கொன்றவன் என நம்பி ஒரு பாழடைந்த தொழிற்சாலையில் வைத்துக் கொன்று புகைப்படமெடுப்பதோடு கருப்பு வெள்ளைப் பகுதி முடிகிறது. கொலை செய்த போலரைட் புகைப்படம் கருப்பு வெள்ளையிலிருந்து கருப்புக்கு மாறும் அழகிய‌ ரசவாதத்தோடு இத்திரைக்கதை மாற்றம் காட்டப்படுகிறது. அங்கே தெரிய வரும் ஓர் உண்மையில் அதிர்ந்து லென்னி மூன்று விஷயங்கள் செய்கிறான்: ஜிம்மியைக் கொன்ற‌ புகைப்படத்தை எரிக்கிறான், டெட்டியின் படத்தில் “அவன் பொய்யன், நம்பாதே” என எழுதி வைத்துக் கொள்கிறான், டெட்டியின் காரின் நம்பர் ப்ளேட்டைக் கொலையாளியின் அடையாளமாய்க் குறித்துக் கொள்கிறான். படத்தின் கலர்ப் பகுதிகள் முழுக்க நகர்வது இந்த மூன்று செயல்களால் தான். கலர்ப் பகுதி முழுக்க அவன் கொல்லத் துர‌த்துவது கொலையாளியை அல்ல‌, டெட்டியைத் தான். அதாவது உண்மையை மறைத்து தனக்குத் தானே ஒரு பொய்யைச் சொல்லிக் கொள்கிறான். அந்த குறுங்கால‌ மறதி நோய் ஒரு சாபம் தான். ஆனால் அதை அவன் தன் ஆயுதமாக அப்போது ஆக்கிக் கொள்ளும் பிரமாதமான தத்துவத் தருணம் அது. கலர்ப் பகுதி முழுக்க அவன் ஹோட்டல் டிஸ்கவுண்ட் இன்னில் வேறோர் அறையில் தங்கியிருக்கிறான். இறந்த ஜிம்மியின் சினேகிதியான நடாலி லென்னியின் ஞாபக மறதியைத் தன் சொந்த பிரச்சனை ஒன்றைத் தீர்க்கப் பயன்படுத்திக் கொள்கிறாள். ஹோட்டல் ரிசப்ஷனில் இருப்பவனும் அதைப் பயன்படுத்துப் பணம் பார்க்கிறான். போலீஸ்காரர் டெட்டி அவனைத் தொடர்ந்து வந்து ஏதோ எச்சரித்துக் கொண்டே இருக்கிறார். லென்னியும் அவன் மனைவியும் குளியலறையில் வைத்து யாரோ இருவரால் தாக்கப்படும் ஃப்ளாஷ்பேக்கும் இந்தக் கலர்ப் பகுதியில் தான் வருகிறது. லியோனார்ட் என்ற‌ லென்னி மனைவியைக் கொன்ற‌வனைக் கண்டுபிடித்தானா, பழி தீர்த்தானா போன்ற‌ கேள்விகளுக்கு ஒரு பலத்த திருப்பத்துடன் பதில் கிடைக்கிறது. மேலே சொன்னது போல் கலர்ப் பகுதியின் முதல் காட்சி தான் காலவரிசைப்படி கடைசிச் சம்பவம். அது டெட்டியைக் கொலை செய்து எடுக்கும் புகைப்படத்தில் ஆரம்பிக்கிறது. அந்தப் போலரைட் புகைப்படம் மெல்ல மெல்லக் கலரிலிருந்து கருப்பு வெள்ளைக்கு மாறுகிறது. அதிலிருந்தே கலர்ப் பகுதிகள் கால வரிசையில் தலைகீழாகக் காட்டப்படவிருக்கறது என்பது பார்வையாளனுக்குச் சொல்லப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு கலர்க் காட்சி முடிகையிலும் அடுத்த காட்சியின் (அதாவது காலவரிசைப்படி முந்தைய சம்பவம்) ஆரம்பமும் சில நொடிகள் காட்டப்படுகிறது. காரணம் தலைகீழ் வரிசை என்பதால் பார்வையாளனுக்குத் தெளிவாக்கும் விதமாக. உதாரணமாக காட்சி வரிசையில் முதலில் லென்னி நடாலியை ஓர் உணவகத்தில் சந்தித்து கொலையாளியின் கார் பற்றிய தகவல்களையும் அவளது அறையில் தான் தவற விட்டு வந்த ஹோட்டல் அறையின் சாவியையும் பெறுகிறான். அடுத்த காட்சி அவன் ஹோட்டல் அறைக்குப் போய்ச் சாவியின்றிக் குழம்பி ஹோட்டல் ரிசப்ஷன் ஆளிடம் பேசித் தேடிய பின்னர் தன் காகிதக் குறிப்பைப் பார்த்து நடாலியாவைச் சந்திக்கப் போவது. உணவகத்தில் அமர்ந்திருக்கும் நடாலி லென்னியின் கையைப் பிடித்திழுக்கும் காட்சியோடு முடிகிறது. முதலில் சொல்லப்பட்ட‌ காட்சியின் துவக்கமும் அதுவே. ஆக, பார்வையாளன் காட்சி இரண்டு முதலில் நடந்திருக்கிறது, அதன் தொடர்ச்சியாய்க் காட்சி ஒன்று வருகிறது என விளங்கிக் கொள்ள முடியும். ஹாலிவுட் சினிமாவில் சிக்கலான திரைக்கதை அமைப்பு கொண்ட படங்களில் இது முதன்மையானது. படம் வெளியான போது திரையரங்கில் வைத்து பார்த்தோரில் எத்தனை பேருக்குப் படம் துல்லியமாய்ப் புரிந்தது எனத் தெரியவில்லை. பொதுவாக நான் புரிதலின் நிமித்தம் எந்தப் படத்தையும் இரண்டாம் முறை பார்ப்பவனில்லை. அதற்கு படத்தை மீண்டும் ரசிக்கும் உத்தேசமே காரணமாய் இருக்கும். அப்படியான‌ நானே இப்படத்தை கணிணியில் சப்டைட்டிலோடு பார்த்ததில் முதல் முறை 90% தான் புரிந்தது. சில காட்சிகளின் நுணுக்கமும், அதன் பின்னுள்ள‌ காரண காரியங்கள் பற்றியும் இடைவெளிகள் இருந்தன. அவ்விடங்களை மட்டும் தள்ளிவைத்து மீண்டும் பார்த்து நிரப்பிக் கொண்டேன். அவ்வகையில் இது ஒரு சவாலான திரைப்படம் தான். இந்த முன்பின் கலைத்துப் போடும் விஷயங்கள் இல்லாவிடிலும் சுவாரஸ்யமான திரைக்கதை. இது சேர்வதால் சவாலான‌ திரைக்கதையாகப் பரிணாமம் கொள்கிறது. ஒருவரது ஊனத்தை எப்படி ஒவ்வொருவரும் தம் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே படத்தின் அடிநாதம். இறுதியில் அவனே தன் ஊனத்தை எப்படித் தன் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதில் முடிகிறது. லென்னியின் குறுங்கால‌ மறதி தொடர்பான காட்சிகள் மிக‌ நன்றாக வந்திருக்கின்றன. உதாரணமாய் ஒரு காட்சியில் லென்னியை ஒருவன் கொல்லத்துரத்துகிறான். அவன் ஓடுகிறான். அப்போது அவனுக்கு முந்தைய பத்து நிமிடங்களின் நினைவுகள் அழிந்து எதற்கு ஓடுகிறோம் என்பது புரியவில்லை. பக்கவாட்டில் அவனைத் துரத்துகிறவன் ஓடிக் கொண்டிருக்கிறான். தான் அவனைத் துரத்துவதாக எண்ணிக் கொள்கிறான். “Oh, I’m chasing this guy.” துரத்துபவன் லென்னியைத் தன் துப்பாக்கியால் சுடுகிறான். அவனுக்கு உறைக்கிறது. “No, he’s chasing me.” இன்னொரு காட்சியில் நடாலியாவை லென்னி அடித்துக் காயப்படுத்துகிறான். அவள் வெளியேறி காருக்க்குப் போகிறாள். அதைப் பதிவு செய்ய பேனா பேப்பர் தேடுகிறான் லென்னி. ஆனால் அதற்குள் அவனுக்கு மறந்து விடுகிறது. வெளியே போனவள் திரும்பி வீட்டுக்கு வந்து தன்னை வேறொருவன் தாக்கி விட்டதாக லென்னியிடம் அழுகிறாள். அவனே அவளது ரத்தக் காயத்துக்குப் பனிக்கட்டி ஒத்தடம் அளிக்கிறான். நடாலியா முதல் முறை லென்னியைச் சந்திக்கும் காட்சியில் அவன் சொல்லுகின்ற‌ ஞாபகப் பிரச்சனையைப் பரிசோதிக்க அவனது பியர் கோப்பையில் அவனைய எச்சில் துப்பச் செய்து குடிக்க வைக்கிறாள். அவன் துப்பியது மறந்து அதைக் குடிக்கிறான். Following போலவே மிகக் குறைந்த‌ பாத்திரங்கள். கை பியர்ஸ் என்பவர் லென்னியாக நன்றாக‌ நடித்திருக்கிறார். (முதலில் ப்ராட் பிட் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது என்கிறார்கள்.) நடாலியா மற்றும் டெட்டியாக நடித்துள்ளோரும் சிறப்பு. நோலனின் முந்தைய படத்துக்கு இசையமைத்த டேவிட் ஜூல்யனே இதற்கும் இசை. ஒளிப்பதிவும் அற்புதமாக வந்திருக்கிறது. அதுவும் இரண்டு நிறங்களிலும். நோலனின் முந்தைய படம் போலவே வசனமும் பிரமாதம். உதாரணமாய் நினைவுகள் சரியாய் இருப்பதும் ஒன்றும் சிறப்பான விஷயமல்ல என்பதற்கு லென்னி சொல்லும் வரி: “Memories can be distorted. They’re just an interpretation, they’re not a record, and they’re irrelevant if you have the facts.” நடாலியாவிடம் தன் கடைசி நினைவுகள் பற்றி லென்னி சொல்லும் வசனங்கள்: “What’s the last thing that you do remember?” “My wife…” “That’s sweet.” “…dying.” எல்லாவற்றுக்கும் மேல் கொன்றவனைப் பழிவாங்கினால் மட்டும் உனக்கென்ன அது நினைவிருக்கவா போகிறது எனக் கேட்கப்ப‌டும் போது லென்னி சொல்லும் விளக்கம்: “My wife deserves vengeance. Doesn’t make any difference whether I know about it. Just because there are things I don’t remember doesn’t make my actions meaningless. I have to believe in a world outside my own mind. I have to believe that my actions still have meaning, even if I can’t remember them. I have to believe that when my eyes are closed, the world’s still there. Do I believe the world’s still there? Is it still out there? Yeah. We all need mirrors to remind ourselves who we are. I’m no different.” Memento வணிகரீதியாக வெற்றியடைந்தது. விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக அதன் திரைக்கதைப் பிரதிகள் இருபதாண்டுகள் கழித்து இப்போதும் சினிமா எழுதக் கற்கும் மாணவர்களுக்குப் பிரம்மிப்பூட்டும் ஒரு பாடமாக இருந்து வருகிறது. தமிழில் நோலன் படங்கள் சில பிரதியெடுக்கப்பட்டிருக்கின்றன. மொத்தமாக இல்லை என்றாலும் காட்சிகள், கருத்துக்கள் என ஆங்காங்கே. உதாரணமாய் Following படத்தின் தழுவல் தான் ஐ. அஹமத் இயக்கிய முதல் படமான வாமனன் (ஜெய், ரகுமான் நடித்தது). ஏஆர் முருகதாஸ் Memento-வைத் தழுவி சூர்யா, அசினை வைத்து கஜினி எடுத்தார். அதை இந்தியிலும் அமீர் கானை வைத்து மறுஆக்கம் செய்தார். வாமனன் சுமாராக ஓடியது. கஜினி இரண்டுமே பெருவெற்றிப் படங்கள். அவரது மேலும் சில படங்களும் தமிழில் பிரதி செய்யப்பட்டிருக்கின்றன. அவை அடுத்த அத்தியாயங்களில். இப்படத்தில் நோலன் காலத்தை வைத்துக் கலை செய்யும் போது நினைவுகளையும் விளையாட்டுப் பொருளாக்கி விட்டார். மறதி என்பதே காலத்தை இழப்பது தானே! (கடிகை ஓடும்) https://uyirmmai.com/news/சினிமா/intro-to-christopher-nolans-psychological-thriller-film-memento-by-saravanakarthikeyan/
 13. சோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா குறுந்திரைப்படங்கள் பார்ப்பது எனது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் பார்த்த குறுந்திரைப்படம்தான் மாசறு. இப்படம் யாழ்ப்பாணத்தில், திரு.கு.உதயரூபன் என்பவரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில் கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடனும் இடம் பெயர்ந்து ஒரு ஊரில் வசித்து வருகின்ற போது அப் பெண் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியே இக் கதை கூறுகின்றது. நம்முடைய சமூகம் தமது கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முனையாமல், பக்கத்து வீட்டுக்காரர்களின் கண்ணில் இருக்கும் துரும்பைத்தான் எடுக்க துடி துடிக்கின்றனர். ஒரு சிறு பிரச்சினை பக்கத்து வீட்டில் ஏற்பட்டு விட்டால் அதுவும் பெண்களுக்கு எதுவும் என்றால் அதனை நடு வீதிக்கு இழுத்து விட்டு வேடிக்கை பார்ப்பதே வழக்காகிற்று. நாலு பேருக்கு நல்லது செய்யா விட்டாலும் உபத்திரமாக இருக்காமல் இருந்தாலே புண்ணியமாக இருக்கம். கதைக்களம் போரில் கணவனை இழந்த ஒரு பெண் சமூகத்தின் பார்வையில் எப்படிப் பார்க்கப்படுகின்றார் என்பதுதான் இதன் சாராம்சம். போரில் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த ஒரு இளம் பெண் தன் இரு குழந்தைகளுடன் ஒரு சிறு கிராமத்தில் வசித்து வருகின்றார். அப்போது அப் பெண்ணின் மேல் அயல் வீட்டுப் பெண்கள் ஒரு கண் வைத்திருந்தனர். ஒருநாள் இவர்கள் தோட்ட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது இவர் வீட்டிற்கு இருவர் வந்திருப்பதாக ஒரு வயோதிபர் அழைப்பு விடுகின்றார். இவளும் செல்கின்றார். இதை அயல் வீட்டு மூன்று பெண்கள் பார்த்துப் புறம் பேசிக் கொண்டே இருப்பர். இப் பெண்ணிடம் ஒரு ஆண் அடிக்கடி வருவதை இவர்கள் பார்க்கின்றனர். இவளிடமும் அதிகமாக பணப் புழக்கம் ஏற்படுகின்றது. இது அவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. இவள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாக நினைத்து வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கும் இவள் தவறானவள் அவள் குழந்தைகளுடன் சேர வேண்டாம் என பிஞ்சு குழந்தைகள் நெஞ்சில் நஞ்சை விதைக்கின்றனர். இந்தப் பெண் ஒரு நாள் கடைக்கு வந்து செல்லும் வழியில் வேறு இரு ஆண்கள் அவளை இடைமறித்து சேட்டை செய்கின்றனர். அவள் ஒன்றும் பேசாமல் செல்கின்றாள். அவர்கள் இருவரும் அவள் வீட்டிற்கு வந்து அவள் உடை மாற்றும் வேளை எட்டிப் பார்த்து போனில் போட்டோ எடுக்கின்றனர். சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்கும் போது இவர்கள் ஓடுகின்றனர். அச்சமயம் இவள் பதட்டத்துடன் நிற்கைளில் பக்கத்து வீட்டுக் காறி பார்த்து அதை தவறாக புரிந்து எல்லோரையும் அழைத்து அவளை வாய்க்கு வந்தபடி திட்டுகின்றார்கள். பின் இவள் அவமானம் தாங்க முடியாமல், தன் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் Àக்கு மாட்டி சாக விழைகையில் அவளை காப்பாற்றி வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவள் உயிர் பிழைக்கின்றாள், நடந்தவற்றை வைத்தியரிடம் கூறுகின்றாள். வைத்தியரின் ஆலோசனை அவளுக்குக் கிடைக்கின்றது. பின் அயலவருக்கு உண்மை நிலவரம் தெரிய வருகின்றது. அவள் சமூகத்தின் பார்வையில் நல்லள் ஆக்கப்படுகின்றாள் அத்தோடு படம் நிறைவடைகின்றது. இன்று நம்மைத் Àற்றும் சமூகம்தான் நாளை நம்மை போற்றும் என்பதை இப்படம் உணர்த்தி நிற்கின்றது.  இப்படத்தில் கையாளப்பட்டுள்ள வட்டார மொழி வழக்குகள் அச் சமூகத்தை முன்னிறுத்திக் காட்டுவது சிறப்பாக உள்ளது.  நம்முடைய வாழ்வியலில் ஏற்படும் ஒரு சமூகவியல் பிரச்சினையினை கருவாகக் கொண்டு களம் அமைத்தமை வரவேற்கத்தக்கது. இது போன்று நம் பண்பாட்டு வாழ்வியல் சார் அம்சங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும். நம் யதார்த்தம் உலகறிய பறைசாற்றப்பட வேண்டும்.  இப் படத்தில் ஒரு கிராமிய சூழல், நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அச் சூழலுக்கு ஏற்றதாக படைக்கப்பட்டுள்ளமை படைப்பாளியின் கற்பனை யதர்த்தத்தை தோற்றுவித்துள்ளது.  யாழ்ப்பாணத்தில் அதிக கிராமப்புறங்களில் தோட்டத் தொழில் புரிபவர்கள், இதில் வரும் வருமானத்தைக் கொண்டே தமது இயல்பு வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர் என்பதைப் புரிய வைக்கின்றது.  அத்தோடு இப் படம் ஆண்களுக்கு தம் மறைவின் பின்னர் தம் மனைவியர் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதையும் முன்னெச்சரிக்கின்றது.  இப்படத்தில் இயற்கைச் சூழல் கதைக் களமாகக் கொள்ளப்பட்டது வரவேற்கத்தக்கது. சாதாரண கிராமிய வாழ்வியல் ஒவ்வொரு காட்சியிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. உம்- வீடுகள், வீட்டு வேலிகள், வீதியோரக் கடைகள், கிராமிய வாழ் பாத்திரங்கள், உடைகள், ஒப்பனைகள், வீட்டுத்தோட்டங்கள்….  பக்கத்து வீட்டுப் புதினம் பார்ப்பதற்கு மீனை வாங்கிய படி தோழியின் வீட்டிற்கு வரும் காட்சி இயல்பு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.  சம்பவங்கள் கோர்க்கப்பட்ட விதம் கதைக்கு தனிச் சிறப்புக் கொடுக்கின்றது. தூக்கு மாட்டுதல், பின் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றுதலோடு ஆரம்பிக்கும் காட்சி விறு விறுப்பை ஏற்படுத்தியது. இங்கு பிரச்சினையுடன் படம் தொடங்குகின்றது.  பார்வையாளர் மத்தியில் கேள்வியை எழுப்பி, சந்தேகத்தை தோற்றுவித்து, இரக்கப்பட வைத்து, குழப்பத்தில் ஆழ்த்தி, பின்னர் தெளிவு பெற வைப்பதாக இதன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஆடம்பரமான ஒளி, ஒலிகள் இதில் பயன்படாமை கதைக்கான சூழலை உண்மையாக உணர வைத்தது. உம்- அவள் வ்டு ஒரு ஓலைக் குடிசை. அதற்குள் குனிந்துதான் செல்ல வேண்டும் அவ்வாறு இருக்கும் போது அதற்குள் ஒளியின் கதிர் வீச்சு செல்லும் வேகம் குறைவாக இருக்கும். அதற்கமைய கமறா பதிவு இடம் பெற்றுள்ளமை அழகை, எழிமைத் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.  ஓவ்வொரு சம்பவங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இசை அல்லது ஒலிகள் அச்சம்பவங்களை உண்மையாக உணர வைத்துள்ளது. உம்- காலையில் கதிரவன் ஒளி வீசுகையோடு பாடசாலைக்கு செல்லும் காட்சி.  அர்த்தமற்ற எதையோ தேடிக்கொண்டு ஓய்வு இல்லாமல் அலையும் இளம் தலைமுறைக்கும், எதிர்கால சந்ததிக்கும் நமது பண்பாட்டை அடையாளம் காண வைக்கும் காட்சிகள் வாழ்வியல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளமை நன்மையேபயக்கும். உம்- பழங்கஞ்சி சாப்பிடும் பழக்கம்.  பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்பதை இதில் வரும் சம்பவங்கள் அடையாளப்படுத்துகின்றது. பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்ற நிலை ஏற்படக் காரணம் என்ன? இதற்குள் இருக்கும் மறைமுக ஆணாதிக்க செயற்பாடு எதுவாக இருக்கும்?  ‘விதவை விதவை எண்டு அப்பாவியா வெளில காட்டிக் கொண்டு உள்ள நல்ல கூத்துத்தான் நடக்கிது’, ‘ஆழப்பாரன் மினுக்கிக் கொண்டு வாறத’ போன்ற வாய் பேச்சுக்கள் பொறாமைக்கான குறியீடாக உள்ளது. அவ்வாறு பொறாமை ஏற்படுவதற்கு காரணம் என்ன?  தான் பெற்ற பிள்ளை வந்து ‘நீங்க கூடாதாம்… அம்மா! நீங்கள் உண்மையாவே கூடாதா?’ என்று தாயிடம் கேட்கும் போது தாய் உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்? தாயின் வயிற்றில் இருக்கும் போது நச்சுக் கொடிக்குள் அகப்படாத குழந்தை, வெளியில் வந்து இந்த சமூகத்தின் நச்சு வசையினால் ஆட்கொள்ளப்படுகின்றது. இங்குதான் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் இந்த சமூகம் சூன்னியம் வைக்கின்றது என்று கூறலாம்.  ‘குண்டுக்குத் தாக்குப் பிடீத்த எங்களால இங்க இவங்கட வாய் வார்த்தைக்குத் தாக்குப் பிடிக்க ஏலாம இருக்கு’, ‘வறுமையைத் தாங்கிக் கொள்ளலாம் அவமானத்தை எப்படித் தாங்கிக் கொள்வது?’ போன்ற வசனங்கள் ஒரு பெண்ணின் உளம் கசக்கிப் புளியப்பட்டு இயலாமையில் வரும் வார்த்தைகளாகவே உணர கூடியதாக உள்ளது. ஒரு பிறந்த குழந்தைக்கு அதன் தாய் இதுதான் உன் அப்பா,பாட்டி, பாட்டன் என்று திரும்பத் திரும்ப சொல்லும் போது அதை அக்குழந்தை உண்மையாக்கிக் கொள்கின்றது. ஒரு பொய்யினைத் திரும்பத் திரும்ப நாம் சொல்லும் போதோ அல்லது செய்யும் போதோ அது உண்மையாகின்றது. அது போலதான் நம் சமூகத்தில் பல சம்பவங்கள் நடத்தப்படுகின்றது. தவறான எண்ணங்களை விடுத்து நல்லதையே சிந்திப்போம், நல்லதையே செய்வோம். அ.ஆன் நிவேத்திகா http://globaltamilnews.net/2020/146659/
 14. எமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் ஒரு நியாயமான தீர்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலினால் கட்சிகளுக்குள்ளேயும் கட்சிகளுக்கிடையேயும் எழுந்துள்ள ஒற்றுமைக்குலைவு ஒரு வேதனையான விடயமாக அமைந்திருக்கிறது. இன்றைய எமது நிலையில் குழுக்களாகப் பிரிந்து நின்று சுயநலத் தேர்தல் அரசியல் செய்வது ஆரோக்கியமான அணுகுமுறையாக அமையாது. எமது வாக்குகள் அற்ப சலுகைகளுக்காக விலை பேசப்படும் இந்த நிலையிலே எமது தேசிய நலனில் அக்கறை கொண்டுள்ள நாம் பிரிந்து நின்று சண்டையிடுவதற்கான காரணங்களைத் தேடுவதிலும் பார்க்க ஒற்றுமைப்பட வேண்டியதற்கான அவசியத்தையும் அதன் அனுகூலங்களையும் ஆராய்வது ஆரோக்கியமானதாக அமையும். எமக்கு நியாயப்படியும் சட்டப்படியும் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஒழுங்குவிதிக்கமைய தரமறுத்து அவற்றை தமது முகவர்களின் ஊடாக குழப்பமான முறையில் நடைமுறைப்படுத்த முயன்று அவற்றை எமக்கு வழங்கப்படும் சலுகைகளாக சித்திரிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. அதனைச் செய்யும் அந்த முகவர்கள் செயல் வீரர்கள் போல நம் மத்தியிலே உலா வருகின்றனர்.வறுமையையும் சமூக சிக்கல் நிலைகளையும் எம்மக்கள் மத்தியிலே திட்டமிட்டு ஏற்படுத்திவிட்டு அதை தீர்க்கவென தற்காலிக போலிச் சலுகைகளைக் காட்டி அவர்களின் வாக்குகளை விலைபேச முயல்வது மனிதத்துவம் ஆகாது. தமது வறுமையைப் போக்கவென தமது வாக்குகளைச் சலுகைகளுக்காக விற்கும் எம்மவர்களை கோபித்துக் கொள்வதும் அர்த்தமற்றது. அந்தச் சூழ்நிலைக் கைதிகளின் நிலையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பல்வேறு அழுத்தங்களால் தடம்மாறி நிற்கும் மக்கள், எம் மக்கள் அல்ல என்று ஆகிவிடாது அவர்களையும் தடம்மாற்றி சலுகைகளுக்காக எமது வாக்குகள் விலைபோகாது என்பதை சரியான முறையில் எமது வாக்குரிமையைப் பயன்படுத்தி நிரூபிப்போமாக இருந்தால் எதிர்காலத்தில் இவ்வாறு விலை பேசும் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். இது எமது விடியலை நோக்கிய பயணத்திற்கு உரம் சேர்க்கும். எலும்புத் துண்டையும் உணவுத் துண்டையும் காட்டி தமது ஆட்டத்திற்கு ஆட்டி வைக்கப்படும் வட்டரங்கு விலங்குகள் (Circus animals) போல நாம் இல்லை என்பதை தெளிவாக்கும்.பொது விடயங்கள் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் சம்பந்தமாகவேனும் நாம் ஒற்றுமைப்படாவிட்டால் நாம் பிரித்தாளப்பட்டு எமது அபிலாசைகள் சிதைக்கப்படுவதற்கான ஆபத்து நிலை இருக்கிறது. கோணேசர் கோயிலும் நல்லூர் ஆலயமும் கூட நம் பூர்வீகமல்ல என வாதிடுபவர்களுக்குக்கூட இது வரப்பிரசாதமாக அமைந்துவிடும். இந்த ஒற்றுமைக்காக தமிழ் மக்கள் பேரவையானது அனைத்துத் தமிழ் தலைவர்களுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது. இந்த முயற்சிகள் தொடரும். இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு சரியான திசையில் சிந்திக்கும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் முன் எழுந்து நிற்கிறது. அரசியல்வாதிகளின் குறுகிய சுயநல சிந்தனைப் போக்குகள் காரணமாகவும் மாறிவரும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை காரணமாகவும் எம்மக்கள் மனமுடைந்து விரக்தியடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் காரணமாக சரியாகச் சிந்தித்து வாக்களிக்கும் திறன் உடைய பலர் “வாக்களித்து என்ன பயன்” என்று எண்ணி வாக்களிக்காமல் இருந்து விடுவார்களோ? என்ற ஏக்கம் எம்மத்தியில் எழுகிறது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் விலைபோன வாக்குகளால் மட்டுமே எமது பிரதிநிதிகள் எனப்படுவோர் தெரிவாகும் ஒரு ஆபத்து நிலை இருக்கிறது. அவ்வாறு நடந்தால் அது ஒரு பிழையான செய்தியை உலகிற்கு தெரிவிப்பதாக அமைந்துவிடும். எனவே எத்தனையோ இடர்களைத் தாண்டி பயணித்த நாம் மனம் சோர்ந்து போகாது ஒரு தூய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக அனைவரும் அணிதிரண்டு சிந்தித்து வாக்களிப்போம். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் தவறாமல் சிந்தித்து வாக்களிக்கத் தூண்டுவோம். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்வோம். #தேசியஇனம் #தேர்தல் #ஒற்றுமை #வறுமை #வாக்கு #தமிழ்மக்கள்பேரவை தமிழ் மக்கள் பேரவை http://globaltamilnews.net/2020/146701/
 15. அமைச்சுப் பதவி பெறுகின்ற எண்ணம் கூட்டமைப்புக்கு அறவே இல்லை என்கிறார் சம்பந்தன்.! "புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த 11ஆம் திகதி வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, 'அரசியல் தீர்வு கிடைக்க எவ்வளவு காலம் எடுக்கும் எனச் சொல்ல முடியாது. அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் எமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது அத்தியாவசிய தேவை. புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தனை அமைச்சுக்கள், என்னவிதமான அதிகாரங்கள் என்பவற்றைப் பேரம் பேச எமக்குப் பலம் இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அமைச்சுப் பதவி தொடர்பான சுமந்திரனின் இந்தப் பேச்சு அரசியல் மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் கண்டனங்களையும் தெரிவித்திருந்தன. இவ்வாறானதொரு நிலையில், புதிய அரசில் அமைச்சுப் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளுமா என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேட்டபோது, "புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையே இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றிப் பேச வேண்டிய அவசியமும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார். http://aruvi.com/article/tam/2020/07/13/14405/ டிஸ்கி சம்பந்த சிஷ்யர் .. .. வட போச்சே..
 16. கொழும்புத் தலைமைகளால் வடகிழக்கு மக்கள் ஆளப்படுகிறார்களா.? கொழும்புத் தலைமைகளால் வடக்கு கிழக்கு மக்கள் ஆளப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. தென்னிலங்கையின் பிடியிலிருந்து கொழும்பின் பிடியிலிருந்து சிங்களத் தலைமைகளின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என நினைக்கும் வடகிழக்கு ஈழத்தமிழ் மக்கள், கொழும்பு தமிழ் தலைமைகளால் ஆளப்படுகின்ற ஒரு சூழலுக்குள் செல்லுவது சரிதானா? கொழும்புத் தமிழ் தலைமைகள் தமிழர்களுக்கு எவ்வாறான நன்மைகளைச் செய்து உள்ளார்கள்? அவர்களால் வரலாற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை குறித்து ஆராய வேண்டிய ஒரு அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பை தனது சொந்த இடமாகக் கொண்டவர். இவரது தந்தை மற்றும் தாத்தா கொழும்பை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவரது தாத்தா ஜிஜி பொன்னம்பலம் அன்றைய காலத்தில் எடுத்த தீர்மானங்கள் அனைவரும் அறிந்ததே. அதனால் ஈழத்தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. டிஜி பொன்னம்பலம் தந்தை செல்வநாயகத்தை விட்டு பிரிந்து அரசாங்க அமைச்சராக பதவி ஏற்றமை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக கருதப்படுகிறது. அதேபோன்று வடக்கில் முன்னாள் முதல்வர் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர். கொழும்பில் இருந்து வடக்கு முதலமைச்சராக இறக்குமதி செய்யப்பட்டவர். ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ் தலைவர்களை விட விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் இனஅழிப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றார் என்றாலும் அவரும் கொழும்பின் அல்லது தென்னிலங்கையின் இறக்குமதி என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம். கொழும்புத் தமிழ் தலைமைகளால் ஆளப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதன் உச்ச கொடுமையாக சுமந்திரனின் வருகையை குறிப்பிடலாம். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் அதன் தலைமைக்கு எதிராகவும் தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழ் மக்களை பெரும் சினம் கொள்ள வைத்துள்ளன. தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டு தமிழ் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த தலைவரையும் தமிழ் மக்களுக்காக உன்னதமான போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தும் சுமந்திரனை கொழும்பில் இருந்து நாம் ஏன் அழைத்து வரவேண்டும்? அத்தகைய சுமந்திரன் தற்போது அம்பிகாவை பாராளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றொரு புதிய நபராக அம்பிகா கருதப்படுகின்றார். இவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒருவர்தான். இம்முறை தேர்தலில் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களின் தலைமை முழுமையாக கொழும்பின் கீழ் போகக்கூடிய அபாய நிலை காணப்படுகிறது. சுமந்திரனின் வெற்றியுடன் அம்பிகாவும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றால் அது தமிழ் மக்களுக்கு பல்வேறு பின்விளைவுகளை தருகின்ற ஒரு விடயமாகும். பல்வேறு தியாகங்களின் மத்தியில் மிகப் பெரும் தலைவர்களை உருவாக்கிய வடகிழக்கு மண்ணில் ஏன் சிறந்த அரசியல் வாதிகள் இல்லையா? ஏன் நாம் கொழும்பிடம் கையேந்த வேண்டும்? அல்லது கொழும்பில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்? வடகிழக்கில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் சில விமர்சனங்களை கொண்டாலும் சிறந்த அறிவை கொண்டவர்களும் அணுகுமுறையை கொண்டவர்களும் உள்ளனர். அப்படி உள்ள நிலையில் நாம் ஏன் தென்னிலங்கையிலிருந்து கொழும்பிலிருந்து அரசியல்வாதிகள் இறக்குமதி செய்ய வேண்டும்? பிரபாகரன் என்ற வரலாற்றில் அதி உன்னத தலைவன் உருவாகிய மண்ணிலிருந்து ஏன் எம்மால் சிறந்த அரசியல்வாதிகளை மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க முடியாது? அனைவரும் சிந்திப்போமாக… https://www.vanakkamlondon.com/sumanthiran-ambika-13-07-2020/
 17. ஆதி திராவிடர் & பட்டியல் பிரிவு விவகாரம் - ஆ.ராசா பெண்கள் பிரிவு & மகளிர் அணி - கனி மொழி ரெல்லி விவகாரம் & சுத்துமாத்து - பாலு கலை இலக்கியம் & பெண்ணுரிமை - தமிழச்சி தங்க பாண்டியன் தமிழ் தேசிய எதிர்ப்பு & ரூவிட்டர் இணைய தள அலப்பறைகள் - பிரசன்னா. அந்த வரிசையில் முன்னர் ஈழ விவகாரத்தை "கவனித்து" வந்த கனி மொழி விலக்கபட்டு புதியதாக இவர் ஒப்பொயின்ற் செய்திருப்பார்கள் போல கிடக்கு .. சமீப காலமாக இவரிண்ட குரல் கேட்குது..
 1. Load more activity