All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. ஒரு இலையின் ஆயுட்காலத்திற்குள் ஒரு சின்னஞ்சிறு குருவி கூடு கட்டி முட்டைகள் இட்டு மூன்று குஞ்சுகளும் பொரித்து பறந்து போகுது.....இங்கு இருபது வருடமானாலும் வீட்டு கடனும் துலையாது வீடு சொந்தமாகும்போது அவன் நொந்து நூடுல்ஸ்சாப் போயிடுவான்......!
 3. செய்தி அதுவல்ல அம்பானையார். யுத்தக்குற்ற விசாரணை அது இது எண்டு தாரும் வந்தால், இந்த சப்பட்டை மூக்கன் பாத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான் என்று சொல்லுறார். டெல்லிக்காரனும் அந்த நிலை எண்டபடியால், அவர்களது வாயிலும் அல்வா தானே இருக்கும்... இதை தான் திருடனுக்கு தேள் கொட்டின கொடுமை என்பது...
 4. வணக்கம் வாத்தியார் .......! அதெப்படி ......இப்ப பிஷப் விரும்பினால் ஒரு நொடியில் குதிரை காலி....ஆனால் குதிரை தாவி தாவி குதித்தாலும் பிஷப்பை அசைக்க முடியாது......அப்படியே அதிகாரம் உடையவர்களின் முன்னால் சாமானியர்கள் வெறும் விலங்குகளே.......!
 5. அமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன? கரோனாவால் நிலைகுலைந்து போயிருக்கும் அமெரிக்காவை ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை உலுக்கியெடுத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தப் படுகொலையைப் பேசுகின்றன. சட்டரீதியாக அமெரிக்காவில் நிறப் பாகுபாடு ஒழிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது இன்னும் தொடர்ந்துகொண்டேயிருப்பதைத்தான் ஜார்ஜ் ஃப்ளாய்டுகளின் மரணங்கள் சொல்கின்றன. ஒரு ஜனநாயக நாடாக அமெரிக்கா தலைகுனிந்து நிற்கிறது. வடக்கு கரோலினா மாகாணத்தின் ஃபேயட்வில் நகரத்தில் 1973-ல் பிறந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு, வளர்ந்ததெல்லாம் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத்தில். பள்ளிப் பருவத்தில் கால்பந்து, கூடைப்பந்து அணிகளில் விளையாடியிருக்கிறார். 2014-ல் மின்னிசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்துக்குப் புலம்பெயர்ந்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கிளப்பில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். கரோனா நெருக்கடியால் வேலை இழந்த சில கோடி அமெரிக்கர்களில் அவரும் ஒருவர். ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு 22 வயதிலும், 6 வயதிலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். கடைசி நிமிடங்கள் மே 25 அன்று மாலை மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள ஒரு அங்காடிக்குச் சென்று, 20 டாலர் பணத்தைக் கொடுத்து சிகரெட் வாங்கியிருக்கிறார் ஜார்ஜ் ஃப்ளாய்டு. அவர் கொடுத்த பணம் கள்ளநோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த அங்காடியின் ஊழியர் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கிறார். சற்று நேரத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கே வருகிறார்கள். அந்த இடத்துக்கருகே ஒரு ஓரத்தில் நின்றுகொண்டிருந்த காரில் தன் நண்பர்கள் இருவருடன் இருந்த ஃப்ளாய்டைக் கைதுசெய்து போலீஸ் காரில் ஏற்ற முயல்கிறார்கள். தனக்கு ‘கிளாஸ்ட்ரோஃபோபியா’ (அடைத்திருக்கும் இடங்கள் உருவாக்கும் பீதி) இருக்கிறது என்கிறார் ஃப்ளாய்டு. எனினும், போலீஸ்காரர்களுக்கு அவர் எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை. காரில் ஏற்ற முயலும்போது ஃப்ளாய்டு கீழே விழுகிறார். அப்போது அங்கே இன்னொரு போலீஸ் கார் வருகிறது. அதிலிருந்து இறங்கிய டேவிட் சாவின், ஏற்கெனவே அங்கே இருந்த போலீஸாருடன் சேர்ந்து ஃப்ளாய்டை காரில் ஏற்ற முயலும்போது ஃப்ளாய்டு மறுபடியும் கீழே விழுகிறார். இரண்டு போலீஸ்காரர்கள் ஃப்ளாய்டின் கையையும் காலையும் பிடித்திருக்க, அவரது கழுத்தின் மீது முழங்காலை வைத்து டேவிட் சாவின் அழுத்துகிறார். ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்று தொடர்ந்து கத்துகிறார் ஃப்ளாய்டு. எட்டு நிமிடங்களுக்கும் மேலாக ஃப்ளாய்டின் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்திக்கொண்டிருக்கிறார் டேவிட் சாவின். ஆறு நிமிடங்களிலேயே ஃப்ளாய்டு அசைவற்றுப்போகிறார். அவரது நாடித்துடிப்பைப் பரிசோதிக்கும்படி நடைபாதையில் இருக்கும் ஒருவர் கூறவே ஒரு போலீஸ்காரர் ஃப்ளாய்டின் நாடியைப் பரிசோதிக்கிறார். துடிப்பு இல்லை. செல்பேசியில் பலரும் படம் பிடித்து இதை சமூக ஊடகங்களில் வெளியிட, மக்களின் கோபம் தீயாகப் பரவியது. அடுத்த நாள் அந்தக் காவலர்கள் நால்வரும் விடுப்பில் அனுப்பப்பட்டதாக மினியாபொலிஸ் காவல் துறை தெரிவித்தது. அன்று மாலையே அவர்கள் நால்வரும் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்றாலும், நான்கு நாட்கள் கழித்துதான் டேவிட் சாவின் கைதுசெய்யப்பட்டார். இதற்குள் மினியாபொலிஸ் நகரத்திலும், தொடர்ந்து அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஏனைய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. ஃப்ளாய்டின் இறுதி வாசகங்களான ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்பது போராட்டக்காரர்களின் தாரக மந்திரமானது. இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துவருவதில் ‘கறுப்பினத்தவரின் வாழ்க்கை முக்கியம்’ (Black Lives Matter) இயக்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டங்களில் ஏராளமான வெள்ளையின மக்களும் கலந்துகொண்டு, தங்கள் சகோதரத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவது ஒரு சின்ன ஆசுவாசம். தொடரும் பாகுபாடு போராட்டம் அமைதியான முறையில் ஆரம்பித்தாலும் மக்களின் கோபம் சில இடங்களில் கலவரமாக வெடித்தது. கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதுதான் தருணம் என்று போராட்டத்துடன் தொடர்பில்லாதவர்கள் கடைகளைச் சூறையாட ஆரம்பித்தனர். அதிபர் ட்ரம்ப் ‘லூட்டிங் (சூறையாடுதல்) ஆரம்பித்தால் ஷூட்டிங்கும் (துப்பாக்கியால் சுடுதல்) ஆரம்பித்துவிடும்’ என்று ட்வீட் போட இது வழிவகுத்தது. எல்லாவற்றையும் தாண்டியும் இந்த கரோனா காலத்திலும் ஒரு எளிய மனிதர் அநீதியாகக் கொல்லப்பட்டதற்காகப் பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருவது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறை மேல்தான் நவீன அமெரிக்கா எழுப்பப்பட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கறுப்பினத்தவர்கள் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களை விலங்குகளைப் போலவே அமெரிக்கர்கள் நடத்தினார்கள். அடிமைகள் பொருட்களைப் போல் ஏலம் விடப்பட்டார்கள். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்பது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் தாரக மந்திரம் என்றாலும், அமெரிக்க அரசமைப்பும்கூட அடிமை முறைக்கு ஆதரவே அளித்தது. 1865-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். தொடர்ந்து, கறுப்பினத்தவருக்கான வாக்குரிமையைப் பற்றி அவர் பேசிவந்ததால் தன் உயிரையும் அவர் பறிகொடுக்க வேண்டியிருந்தது. அங்கிருந்து கறுப்பினப் பின்னணி கொண்ட ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் காலம் வரை எவ்வளவோ மாற்றங்களை அமெரிக்கா கண்டுவிட்டாலும் இன்னும் அவர்கள் கீழே வைத்துப் பார்க்கப்படுவது தொடர்கிறது. அமெரிக்க மக்கள்தொகையில் 12% கறுப்பினத்தவர்கள்; 61% வெள்ளையினத்தவர். ஆனால், காவல் துறையால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் வெள்ளையினத்தவரைப் போல மூன்று மடங்கு கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இது ஒரு பதம்தான். அமெரிக்காவின் நிறவெறி தொடர்பில் பேசுகையில், இந்தியாவில் சாதிவெறி தொடர்பில் சிந்தனை செல்கிறது. அமெரிக்காவில் ஒருபுறம் நிறவெறி இன்னும் நீடித்தாலும் மறுபுறம் அதற்கு எதிராக நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களும், அதற்கான ஊடகங்களின் ஆதரவும், பல்லாயிரக்கணக்கான வெள்ளை இனத்தவரும் அதில் தன்னெழுச்சியாகத் திரள்வதையும் நாம் பார்க்கிறோம். ஆனால், இங்கே சாதிவெறியால் நடத்தப்படும் கொலைகளுக்கான நம்முடைய எதிர்வினை என்ன என்று ஒரு கேள்வி எழுகையில் தலைகுனிவதைத் தவிர நமக்கு வழியில்லை. ஒவ்வொரு உயிருக்குமான முக்கியத்துவமே ஒரு சமூகம் சமத்துவத்தை நோக்கி நடத்தும் பயணத்தில் முக்கியமான உந்துசக்தி. நாமும் அதைப் பெற வேண்டும் https://www.hindutamil.in/news/opinion/columns/557417-george-floyd-protests-2.html
 6. அன்புள்ள மருதங்கேணி, ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள். சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும் சூசை அண்ணையின் தொலைபேசி அழைப்பை எடுத்த சந்தோஷ் இப்போ எங்கு என்பதையும் நீங்கள் அறிவீர்களா சந்தோஷ் சீமானிடம் தயவு செய்து இதை வெளியிடாதீங்கள் என்று கொடுத்த சூசை அண்ணையின் ஒலிப்பதிவை அரசியலுக்காக வெளியிட்ட காரணம் என்ன என்பதை அறிவீங்களா சீமானின் கருத்துகள் எங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. எங்கள் மண்ணில் எங்களுக்காக ஒரு அரசியல் திராணியற்ற எங்கள் வரலாறை கலாச்சாரத்தை பேச வழியில்லாத நிலையில் தாய் தமிழகத்தில் எங்களின் குரலாக ஒலிக்கும் சீமானின் குரலை எங்களுக்கான ஒரே வழி என்று நம்பாமல் உண்மைகளை தேடுங்கள். தெளிவுகளை அடையுங்கள். தமிழரை எவரும் ஏமாற்ற முடியாது. புலனாய்வு நுணுக்கங்கள் உங்கள் அறிவு எல்லைக்கு அப்பாற்ப்பட்டது. ஒரு சமூகத்தை இனத்தை ஒரு திசையில் நகர்த்தி தனக்கு வேண்டியதை சாதிக்கும் திறமை இந்திய புலனாய்வு அமைப்புக்கு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.அறியப்பட்ட எதிரியால் வசைபாடவைத்து ஆதரவுத்தளத்தை நிலைநிறுத்தும் நுட்பமும் அவர்களுக்கு தெரியும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்.அவரவர் அரசியல் பாதையை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் மத/இன உணர்வை வெளிப்படுத்தும் உரிமையை மதிக்கிறேன். அதேவேளை சில உண்மைகளை பற்றிய தெளிவுகளையும் வேண்டிநிற்கிறேன். பணிவுடன், பகலவன் குறிப்பு : மிகுந்த வேலைப்பளு காரணமாக உடனடி பதிலை எதிர்பார்காதீர்கள். ஆனால் விவாதத்துக்கு நிச்சயமாக பதில் அளிப்பேன்.
 7. Today
 8. ஆப்பிள் சேவையில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு பல லட்சம் ரூபாய் பரிசு அறிவிப்பு ஆப்பிள் நிறுவனத்தின் "சைன்-இன் வித் ஆப்பிள்" எனும் சேவையில் ஜீரோ-டே எனும் பிழையை தெலுங்கானாவை சேர்ந்த பொறியாளர் சமீபத்தில் கண்டறிந்து தெரிவித்தார். பாதுகாப்பு பிழையை கண்டறிந்து தெரிவித்த பொறியாளருக்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 75 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாதுகாப்பு பிழை எவ்விதமான பாதுகாப்பு வழிமுறைகளையும் கொண்டிருக்காத ஆப்பிள் ஆத்தென்டிகேஷனை பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு செயலிகளை பாதிக்கிறது. ஹேக்கர்களின் முயற்சியில் இந்த பிழை மூன்றாம் தரப்பு செயலிகளில் உள்ள பயனர் அக்கவுண்ட் விவரங்களை முழுமையாக அம்பலப்படுத்திவிடும். பவுக் ஜெயின் என்ற மென்பொறியாளர் ஆப்பிள் சேவையில் இருந்த பிழையை கண்டறிந்தார். மேலும் இந்த பிழை காரணமாக எந்த அக்கவுண்ட் விவரங்களும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் சைன் இன் வித் ஆப்பிள் சேவை ஆத் 2.0 போன்றே இயங்குவதாக அவர் தெரிவித்தார்.ஹேக்கர்கள் ஆப்பிள் சர்வெர்களால் உருவாக்கப்பட்ட ரகசிய குறியீடுகளை எந்தவொரு மின்னஞ்சல் முகவரி கொண்டும், மற்ற பயனர்களின் ஆப் அக்கவுண்ட் விவரங்களை இயக்கி விட முடியும். ஆப்பிள் நிறுவன மின்னஞ்சல் முகவரி கொண்டு குறியீடுகளை ஹேக்கர்கள் கோரினாலும், ஆப்பிள் அதனை பொது தளத்தில் உறுதிப்படுத்திக் கொண்டு இருந்தது என ஜெயின் தெரிவித்திருக்கிறார்.இவ்வாறு செய்யும் போது எந்தவொரு மின்னஞ்சல் முகவரி கொண்டும் ஆப் அக்கவுண்ட் விவரங்களை ஹேக்கர்கள் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் நிலவியதாக அவர் தெரிவித்தார். https://www.maalaimalar.com/technology/technologynews/2020/06/01152250/1565234/Apple-rewards-Indian-USD-1-lakh-for-finding-security.vpf
 9. சலூன்கள், பியூட்டி பார்லர் சென்றால் கட்டாயம் ஆதார் அட்டை - தமிழக அரசு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில், வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை குறித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையுறை மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கவும், நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது கைகளை கழுவதற்காக வசதி ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதை தடுக்க ஆன்லைன் மூலம் நேரம் நிர்ணயித்து சேவை வழங்கவும், ஒருமுறை பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்களை சுகாதார முறையில் அப்புறப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/02132941/Salon-beauty-parlor-to-go-to-the-Aadhaar-card--TN.vpf
 10. உயிருடன் சரணடைந்த பாலச்சந்திரன் என்ற சிறுவனை கொன்றதன் மூலம் நீங்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் / அரச பயங்கரவாதிகள் என்பது மீண்டும் உறுதியானது.
 11. புது டெல்லிக்கு சொல்லப்பட்ட செய்தி? " இலங்கையில் இந்தியா தலையிடுவதை சீன அரசு அனுமதிக்காது".
 12. p>மூன்று நாள்களின் பின்னர் எனது கை விரலில் பேனையின் தழும்பு பதியும் அளவுக்கு நான் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்றையதினம் (01.06.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வரவழைப்பதற்காக, சட்ட மா அதிபரால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களில், அரசாங்கத்தின் தலைவன் என்ற ரீதியில், மூன்று நாள்களில் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டது. மஹேந்திரனை, மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதற்குத் தான் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் அரசாங்கத்தை அமைத்து இரண்டு வாரங்களே ஆகியிருந்த நிலைமையில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விரிசலைக் கொண்டுவந்துவிடும் என்ற காரணத்தால், பிரதமரின் சிபாரிசுக்கு தலைசாய்த்தேன். இதில் எனது விருப்பு இன்றியே இந்நியமனம் வழங்கப்பட்டது. 2019இல், சிங்கப்பூரில் நடந்த மாநாடொன்றுக்குத் தான் சென்றிருந்த போது, அந்நாட்டுப் பிரதமரைத் தனிப்பட்ட ரீதியில் சந்தித்து, அர்ஜுன மஹேந்திரனை எம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/83212
 13. இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் 55 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நேற்றைய தினம் தனது பதவியினை இராணுவ தலைமையகத்தில் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/83215
 14. படம் :தேசிங்கு ராஜா (1960) இசை: ஜி. ராமநாதன் பாடியோர் : சீர்காழி & ஜிக்கி வரிகள் : தஞ்சை. ராமைய தாஸ் வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய் மனமோகனா சுகுமாரா மறவேன் உனை எழில் தீரா வனமேவும் ராஜகுமாரி வளர் ஜோதியே சுகுமாரியே மனம்போலே நாம் இனி பாரில் மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில் நிழல் நீயே தேகம் நானே நிஜம் இது கேள் பெண்மானே மலர் மேவும் தென்றல் போலே நிலை மாறுதே உன்னாலே வனமேவும் ராஜகுமாரா ……. மல்லாடும் வீரரெல்லாம் .... வணங்க வரும் மன்னவரே அல்லாவின் அருளாலே எனக்கெனவே பிறந்தவரே உல்லாச வேளையிலே ஓவிய பூங்காவிணிலே உள்ளன்பால் தேடி வந்தேன் உறவாடும் பூங்குயிலே உறவாடும் பூங்குயிலே…… கலை வீசும் கண்களாலே கனிந்தேன் கண்ணே அன்பாலே கவி பாடும் இன்பதாலே கவர்ந்தாய் கண்ணா இன்னாளே வளமாகும் காதலினாலே மகிழ்வோம் மேன்மேலே நிழலோடு தேகமும் போலே நிஜ வாழ்வில் நாம் இனீமேலே வளமாகும் காதலினாலே…… இயலோடு இசை போலே எழில் மேவும் சோலையிலே இணை இல்லா ஜாடை சேர்ந்ததே புயல் மேவும் அலை போலே பொங்கிடும் காதலரால் பொறாமை கொள்ள நேர்ந்ததே வனமேவும் ராஜகுமாரி மனமோகனா சுகுமாரா மறவேன் உனை எழில் தீரா மறவேன் உனை எழில் தீரா வளமாகும் காதலினாலே மகிழ்வாகினோம் மேன்மேலே நிழலோடு தேகமும் போலே நிஜ வாழ்வில் நாம் இனிமேலே…….
 15. (நா.தனுஜா) இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது. வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அதனை மேற்கோள் காண்பித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிடப்பட்டிருக்கிறது. சீனாவின் கொள்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கும் வகையிலான இலங்கையின் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம். சீனாவும், இலங்கையும் மூலோபாய அடிப்படையில் நெருங்கிய பங்காளர்களாக உள்ள அதேவேளை இருநாடுகளும் பரஸ்பரம் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றன. எமது உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/83226
 16. பல வைத்தியர்களுக்கு கூட சம்பளம் செலுத்த முடியாமல் உள்ள வைத்தியசாலைகள். 30 மில்லியன்கள் மக்களுக்கு வேலை இல்லை ஆக, வேலை ஊடாக வரும் வைத்திய காப்புறுதி இல்லை எனவே, பணம் செலுத்த முடியாத பலரும். இதனால், வைத்தியசாலைகள் வருமானம் குறைய ... பல வைத்தியர்களுக்கு கூட சம்பளம் செலுத்த முடியாமல் உள்ள வைத்தியசாலைகள்.
 17. அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களின் ஆபத்பாந்தவன் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்! உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிடப் பயன்படும் சிறிய க்ளிப் (Clip) போன்ற ஒரு எலெக்ட்ரானிக் கருவியே ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 80% பேர் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படுத்தாத ஏசிம்ப்டமடிக் (Asymptomatic) நிலையில் இருப்பவர்களாம்! இந்தத் தகவலை சில வாரங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) வெளியிட்டது. அதாவது ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பவர்களுக்குக் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவுமே இருக்காது. அப்படி இருந்தாலும் மிகவும் குறைவாகவே வெளிப்படும். ஏசிம்ப்டமடிக் நிலையில் உள்ளவர்கள் தங்களுக்கு நோய்த்தொற்று இருப்பதையே அறியாமல் இருப்பார்கள். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு இந்நோய்த்தொற்று மருத்துவ சிகிச்சை இல்லாமலேயே சரியாகிவிடும். ஆனால், மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களுக்கு உடலில் ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும்போதே கொரோனா தொற்று இருப்பது தெரியவரும். உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவ சிகிச்சைக்காகச் செல்லும் ஏசிம்ப்டமடிக் தொற்றாளரை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாம். இவர்களுக்கு ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Finger Pulse Oximeter) சிறந்த தீர்வாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்றால் என்ன... அது எவ்வாறு செயல்படுகிறது... யாரெல்லாம் அதைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநரும், மருத்துவருமான குழந்தைசாமியிடம் பேசினோம். ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்றால் என்ன? உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிடப் பயன்படும் சிறிய க்ளிப் (Clip) போன்ற எலெக்ட்ரானிக் கருவியே ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர். இந்தக் கருவியை கையின் ஏதேனும் ஒரு விரலில் மாட்டி, கொஞ்சம் அழுத்தம் கொடுக்கும்போது மிகவும் குறைவான அளவு ரத்தம் எடுக்கப்பட்டு (அதாவது அந்தக் கருவியிலுள்ள நுண்ணிய ஊசி விரலில் குத்தி ரத்தத்தை எடுத்துக்கொள்ளும்) நம் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு கணக்கிடப்படுகிறது. இந்த அளவு ஆக்ஸிமீட்டரின் டிஸ்பிளேயில் நமக்குக் காட்டப்படுகிறது. பொதுவாக ஒருவருக்கு உடலில் ஆக்ஸிஜன் அளவு 95 சதவிகிதத்திற்கு மேலே இருக்க வேண்டும். இந்த அளவு 95 சதவிகிதத்திற்குக் கீழ் இருப்பின் அவரின் உடலில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இல்லையென்று அர்த்தம். அதுவே இந்த அளவு 80, 70 சதவிகிதமாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு நாள்பட்ட நுரையீரல் நோய், ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், ரத்தச்சோகை, மாரடைப்பு அல்லது வேறு ஏதேனும் நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் இருக்கலாம். இவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆக்ஸிமீட்டர்' ஏசிம்ப்டமடிக் வகையினருக்கு எப்படி உதவும்? கொரோனா டெஸ்டில் ஒருவருக்கு `பாசிட்டிவ்' என்று வருகிறது. உடனே அவரைச் சார்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு டெஸ்ட் செய்கிறார்கள். அவர்களில் சிலருக்கு பாசிட்டிவ், சிலருக்கு நெகட்டிவ் என்று வரலாம். இதில் பாசிட்டிவ் என்று வந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும். நெகட்டிவ் என்று வந்தவர்களுக்கு எதிர்காலத்தில் பாசிட்டிவ் ஆனாலும் ஆகலாம் என்பதன் அடிப்படையில் அவர்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். ஒருவேளை இவர்கள் ஏசிம்ப்டமடிக்காக இருந்தாலோ, கொரோனாவுக்கான லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தாலோ தங்களுக்கு பாதிப்பு இல்லை என்றே நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், வைரஸ் இவர்கள் உடலுக்குள் பெருகிக்கொண்டே செல்லும்போது நுரையீரல் பாதிக்கப்பட்டு ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கொண்டே வரும் தங்களுக்கு ஏற்படும் மயக்கம், மூச்சுத்திணறலைக் கொண்டே சிலர் தங்களின் உடலில் ஏதோ தவறாக நிகழ்வதைக் கண்டறிந்துவிடுவார்கள். ஆனால், சிலருக்கு உடலில் பெரும்பான்மையான ஆக்ஸிஜன் குறைந்து அதீத மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மட்டுமே தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உணர முடியும். இவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். இதனால் கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா ஏசிம்ப்டமடிக்காக இருக்கலாம் என்று யூகிக்கப்படுபவர்கள், வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள், வயதானவர்கள் மற்றும் ஏற்கெனவே ஏதேனும் சுவாசப் பிரச்னை அல்லது மற்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் அவ்வப்போது வீட்டிலேயே ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உதவியுடன் தங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை செக் செய்து கொள்ளலாம். கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் சாதாரண காய்ச்சல், சளி இருந்தால் கூட ஆக்ஸிமீட்டர் கொண்டு ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை செக் செய்துகொள்வது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை யாருக்கு வேண்டுமானாலும் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தலாம். ஆக்ஸிமீட்டர் டெஸ்ட் எப்போதெல்லாம் செய்யலாம்? டயாபடிஸ் டெஸ்ட்போல் சாப்பிடுவதற்கு முன்பு, பின்பு என்ற வரைமுறையெல்லாம் ஆக்ஸிமீட்டர் டெஸ்டுக்கு கிடையாது. ஒருநாளில் எப்போது வேண்டுமானாலும் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு டெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளைகள் கூட ஆக்ஸிஜன் அளவை செக் செய்யலாம். ஆக்ஸிமீட்டர் டிஸ்பிளேயில் காட்டப்படும் அளவைக் குறித்துக்கொண்டு மூன்று வேளைகளிலும் எடுக்கப்பட்ட அளவீடுகளை ஒப்பிட்டுப் பாருங்கள். உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்துகொண்டே வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஏசிம்ப்டமடிக்காக இருக்கும் ஒருவருக்கு அவர் உடலில் ஆக்ஸிஜன் குறையத் தொடங்கிய ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில் வென்டிலேட்டர் இல்லாமலேயே அவரை குணப்படுத்த முடியும். எங்கு கிடைக்கும்? அனைத்து மருந்தகங்களில் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி கிடைக்கும். இதன் விலை ரூபாய் 1500-ல் இருந்து 2,500-க்குள் இருக்கலாம். தான் ஏசிம்ப்டமடிக்காக இருக்கலாம் என்று நினைப்பவர்கள் மற்றும் கொரோனா தொற்று இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வாங்கி வீட்டிலேயே தன் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை டெஸ்ட் செய்து கொள்ளலாம்" என்றார் மருத்துவர் குழந்தைசாமி. https://www.vikatan.com/story-feed
 1. Load more activity