All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. நந்த வனத்திலோர் ஆண்டி, அவன் நாலாறுமாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.
 3. கருப்பின நபருக்கு ஆதரவாக அமெரிக்காவின் 25 நகரங்களுக்கு பரவிய கலவரம் வாஷிங்டன் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை முக்கியமான 25 நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான நகரங்களில் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளதுடன், போலீஸ் வாகனங்கள், கட்டிடங்கள் என ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.கலவரங்களை கட்டுப்படுத்த இந்த நகரங்களில் ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவந்துள்ளதுடன், ராணுவமும் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1992 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு கலவரத்திற்கு பின்னர் தற்போது தேசிய பாதுகாப்பு படையினரை களமிறக்கியுள்ளனர்.மட்டுமின்றி மாகாண ஆளுநர் கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர நிலையை பிரகடப்படுத்தியுள்ளார். மொத்தம் 11 மாகாணங்களும், கொலம்பியா மாவட்டமும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்குள் தேசிய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய பாதுகாப்பு படையினரின் உதவிக்கு அழைப்பு விடுக்கும் மாகாணங்களில் கலிபோர்னியா, ஜார்ஜியா, மினசோட்டா, மிசோரி, நெவாடா, ஓஹியோ, டென்னசி, டெக்சாஸ், உட்டா மற்றும் வாஷிங்டன் மாகாணமும் அடங்கும்.இதனிடையே உத்தரவு பிறப்பிக்கப்படும் 4 மணி நேரத்தில் ராணுவம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் தயார் நிலையில் இருக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பல கலவரத்திற்கு இலக்காகியுள்ளன. https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/01074101/George-Floyd-protests-spread-far-and-wide-at-least.vpf
 4. சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் -அமெரிக்கா னா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து பங்காளியாக செயல்படும் என அமெரிக்கா கூறி உள்ளது. பதிவு: ஜூன் 01, 2020 10:20 AM வாஷிங்டன் சீன இராணுவத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் அமெரிக்கா கூட்டாளியாக முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ கூறியதாவது:- "சீன கம்யூனிஸ்ட்கட்சியின் இராணுவ முன்னேற்றங்களைப் பொறுத்தவரை, அவை உண்மையானவை. சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது இராணுவ சக்தியை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார். இந்த அச்சுறுத்தலைப் உறுதிசெய்ய எங்களது பாதுகாப்புத் துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. ஜனாதிபதி டிரம்ப்பின் கீழ் எனங்கள் பாதுகாப்புத் துறை, இராணுவம், தேசிய பாதுகாப்பு அமைப்பு அமெரிக்க மக்களைப் பாதுகாக்கக்கூடிய நிலையில் உள்ளது என்று நான் நம்புகிறேன். உண்மையில் உலகம் முழுவதும் இந்தியா,ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான, பிரேசில்,ஐரோப்பா, போன்ற கூட்டாளிகளுடன் இணைந்து நாங்கள் நல்ல பங்காளிகளாக செயல்பட முடியும் என கூறினார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சமீபத்திய எல்லை நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாம்பியோ, "சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த முயற்சியில், நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவர்கள் நிச்சயமாக ஒரு தந்திரோபாய சூழ்நிலையைப் பயன்படுத்துவார்கள் அவர்கள் நீண்ட காலமாக இந்த அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பொருத்தமான, ஆனால் பதிலளிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தயாராக உள்ள ஒரு நிர்வாகம் எங்களிடம் உள்ளது, ஆனால் சீனாவின் முயற்சிகளில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்கும் கடமையை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என கூறினார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/01102020/US-can-partner-with-several-countries-including-India.vpf
 5. இலங்கை குறித்து ஜெனீவாவில் மற்றொரு தீர்மானம்; பிரிட்டன் தலைமையில் ஐந்து நாடுகள் முடிவு Bharati June 1, 2020இலங்கை குறித்து ஜெனீவாவில் மற்றொரு தீர்மானம்; பிரிட்டன் தலைமையில் ஐந்து நாடுகள் முடிவு2020-06-01T07:24:50+00:00 ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியமை குறித்து கவனத்தில் எடுக்காமல், மீண்டும் தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாட்டில் கொண்டு வர பிரிட்டன் தலைமையிலான ஐந்து நாடுகள் தீர்மானித்துள்ளன. புலம்பெயர் தமிழர்களின் கடும் அழுத்தங்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுவதாக சிங்களப் பத்திரிகையான திவயின தெரிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்தில் இருந்து விலகியதாக இலங்கை, ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு அறிவித்துள்ள போதிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீக்க முடியாது என ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு கூறியுள்ளது. இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கவில்லை என்பதுடன் கண்காணிப்பு மட்டத்தில் செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கண்காணிப்பு மட்டத்தில் இருந்தும் விலகுவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. http://thinakkural.lk/article/44518
 6. குருநாகல் - மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W.வீரகோன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கிருமிநாசினியை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எச்சரிகையாக இருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W.வீரகோன் கூறுகையில், இது குறித்த அரச திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குருநாகலில் இவ்வாறான தாக்கம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. https://www.tamilwin.com/community/01/247488?ref=home-imp-parsely
 7. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் துரித வேகத்தில் பறிக்கப்படுகின்றன- மக்கள் உரிமைகளிற்கான குழு கவலை Rajeevan Arasaratnam June 1, 2020சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் துரித வேகத்தில் பறிக்கப்படுகின்றன- மக்கள் உரிமைகளிற்கான குழு கவலை2020-06-01T08:11:01+00:00 தன்னிச்சையான கைதுகள் கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் உரிமைகள் குழுவென்ற அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் குறித்த பரப்புரைகளை மேற்கொண்டுள்ள மக்கள் உரிமை குழு அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. கருத்துச்சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் உரிய நடைமுறைகளை பின்பற்றப்படுதல் நியாயமான விசாரiணைகள் போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமீபகாலத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து குறிப்பிட்ட அமைப்பு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறான மீறல்கள் தொடச்சியாக காணப்பட்டுள்ள போதிலும் தனது கருத்தினை வெளிப்படுத்தியமைக்கா ரம்ஜி ராசீக் என்ற சமூகசெயற்பாட்டாளர் கைதுசெய்யப்பட்டமையும்,பிரபலமான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டமையும் இலங்கையில் சட்டத்தின் ஆட்சியின் வீழ்ச்சி குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது தவிர கொவிட் 19 தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்கும் பொலிஸ் ஊரடங்குகள், போன்றவற்றினால் கருத்துசுதந்திரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என மக்கள் உரிமைகள் குழு கவலை வெளியிட்டுள்ளது. ஏப்பிரல் 10 ம் திகதி தீவிரவாத கொள்கைகளிற்கு எதிராக கொள்கை ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என தனது முகநூலில் பதிவு செய்தமைக்காக ரம்ஜிராசீக் கைதுசெய்யப்பட்டார் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அவர் இனவெறிக்கு எதிரானவர் சமூக ஐக்கியம் சமத்துவம் மற்றும் நீதியை ஊக்குவிப்பவர் என்பது அவரது முகநூல் பதிவுகள் மூலம் வெளியாகியுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அவர் மீது ஐசிசிபிஆர் மற்றும் சைபர் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் ஆபத்துள்ளது என குறிப்பிட்டுள்ள மக்கள் உரிமைகள் குழு மனித உரிமை ஆணைக்குழு வெறுப்பை தூண்டும் பேச்சு குறித்த சட்டங்கள் பற்றி வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களை இலங்கை காவல்துறையினர் புறக்கணிப்பது கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளது. பௌத்தத்தை இழிவுபடுத்தும் நாவலை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் எழுத்தாளர் சக்திக சத்குமார தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதும், பௌத்த இலச்சினைகள் காணப்பட்ட சேலையை அணிந்தமைக்காக இஸ்லாமிய பெண் கைதுசெய்யப்பட்டமையும் ஐசிசிபிஆர் சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான சிறந்த உதாரணங்கள் என மக்கள் உரிமை குழு தெரிவித்துள்ளது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏப்பிரல் 14 ம் திகதி கைதுசெய்யப்பட்ட பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஒரு மாத காலத்திற்கு மேல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் சட்டத்தரணிகளை பார்ப்பதற்கான அனுமதியில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் மக்கள் உரிமைகள் குழு என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை ஹில்புல்லாவிற்கு உரிய நடைமுறைகள் மறுக்கப்பட்டமை ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என மக்கள் உரிமைகளிற்கான குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்தினதும் இலங்கையர்களினதும் கவனம் கொரோனா வைரஸ் குறித்து திரும்பியுள்ளதை பயன்படுத்தி அரச அதிகாரிகள் இலங்கையின் அரச அமைப்பும, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையும் உத்தரவாதம் செய்துள்ள உரிமைகளை மோசமாக மீறிவருகின்றனர் என மக்கள் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புகளிற்கு இனமுத்திரை குத்துதல்.முஸ்லீம்களிற்கும் சில கிறிஸ்தவர்களிற்கும் உடல்களை புதைப்பதற்கான உரிமைகள் மறுக்கப்படுதல்,போன்ற கொரோனா வைரசினை அடிப்படையாக கொண்ட இனவெறியின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது இலங்கை மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் துரிதவேகத்தில் பறிக்கப்படுவதை காணமுடிகின்றது எனவும் மக்களின் உரிமைகளிற்கான குழு தெரிவித்துள்ளது. http://thinakkural.lk/article/44528
 8. யாழ்பொது நூலகம் எரியூட்டப்பட்டமை : இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை நோக்கிய ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கை Rajeevan Arasaratnam June 1, 2020 யாழ்பொது நூலகம் எரியூட்டப்பட்டமை : இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை நோக்கிய ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கை2020-06-01T06:29:37+00:00அரசியல் களம் தமிழ் வேந்தன் ஆனந்தவிநாயகன் டிப்ளொமட் இலங்கையில் உருவாகிவருகின்ற உள்நாட்டு போர் குறித்த ஆரம்பகட்ட சமிக்ஞைகள் 1981 மே 31 ம் திகதி தென்பட்டன. ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள காடையர்கள் கும்பல் யாழ்ப்பாணத்தின் மிகவும் மதிப்புமிக்க நூலகத்தின் மீது வன்முறை தாக்குதலை மேற்கொண்டது. யாழ் நூலகம் அவ்வேளை மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக காணப்பட்டது.மேலும் தென்னாசியாவில் மிகவும் சிறந்ததாகவும் அது காணப்பட்டது. அந்த காடையர் கும்பல் அறிவற்றது இல்லை,விழிப்புணர்வு அற்ற சட்டத்தை தங்கள் கையிலெடுத்த அநாமதேய குழுவும் இல்லை. அவர்களில் இலங்கை காவல்துறையை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்டனர், அவர்களை சிறிஸ் மத்தியு காமினி திசநாயக்க என்ற அப்போதைய அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் இருவர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து சென்றிருந்தனர். தமிழர் விடுதலைக்கூட்டணியின் பேரணியை கண்காணிப்பதற்காகவும் குழப்பவதற்காகவுமே அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டனர். தமிழர்விடுதலைக்கூட்டணி அன்று தனது வரலாற்றின் உச்சத்தில் காணப்பட்டது,கொழும்பில் உள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணி காணப்பட்டது. எனினும் மோதல் காரணமாக அந்த பேரணி குழப்பத்தை சந்தித்தது மூன்று பொலிஸார்உயிரிழந்தனர். இந்த பின்னணியிலேயே யாழ்ப்பாண நூலகம் தீ மூட்டப்பட்டது,அணைக்கப்படாமல் இரண்டு நாட்கள் எரிந்தது. ஆனால் அது அங்கு முடியவில்லை-யாழ்ப்பாணத்தின் பல வீடுகளிற்கும் வர்த்தக நிலையங்களிற்கும் வன்முறைகளும் தீயும் பரவின.தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமையலுவலகம் ஈழநாடு பத்திரிகை அலுவலகமும் வன்முறைக்கு உள்ளாகின. தமிழ் கலாச்சார மத பிரமுகர்களின் சிலைகள் சேதமாக்கப்பட்டன. இந்த வன்முறைகளை காரணமாக வைத்து ஸ்ரீலங்கா பொலிஸார் அரசியல் எதிராளிகளை இலக்கு வைத்ததன் காரணமாக எனது தந்தை வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் தலைமறைவாக வேண்டிய நிலையேற்பட்டது. இதேவேளை அருகிலிருந்து யாழ்ப்பாண விடுதியொன்றிலிருந்தவாறு சிறில்மத்தியுவும் காமினி திசநாயக்கவும் நூலகம் எரிவதை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், நூலகம் எரிக்கப்பட்டமை துரதிஸ்டவசமான சம்பவம், சில பொலிஸார் மதுபோதையில் சூறையாடலில் ஈடுபட்டனர் அவர்கள் தாங்களாகவே இதில் ஈடுபட்டனர் என குறிப்பிட்டிருந்தனர். தனிநபர்கள் சூறையாடல்கள் கலவரங்களில் ஈடுபடுவது என்ற சொல்லாடல்கள் காலனித்துவத்திற்கு பிந்தைய இலங்கையில் நியாயப்படுத்தல்களிற்கான தொடர்ச்சியான வழிமுறையாக காணப்பட்டன.சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள ஊடகங்களும் இதனை தெரிவித்தன. இவ்வாறான ஒரு நிலைப்பாடு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பேர்லினின் ஸ்டேட் ஓபராவில் உள்ள சதுக்கத்தில் நாஜிகள் ஜேர்மனிய மொழியில் இல்லாத 25,000 நூல்களை தீயிட்டு கொழுத்திய 1933 ம் ஆண்டிலிலேயே யாழ் நூலகம் கேஎம் செல்லப்பாவின் தனிப்பட்ட சேகரிப்பாக ஆரம்பமானது.அவர் தனது வீட்டிலிருந்து நூல்களை வழங்க ஆரம்பித்தார். இந்த சாதாரண ஆரம்பம் , செல்லப்பா தலைமையிலான உள்ளுர் குழுவொன்று நூலகமொன்றை ஆரம்பிப்பதற்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் அந்த சிறிய நூலகத்தில் ஆயிரம் நூல்கள் பத்திரிகைகள், இதழ்கள் ஒரு சிறிய அறையில் காணப்பட்டன. எனினும் காலப்போக்கில் நூல்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.அதன் பின்னர் நூலகம் பிரதான வீதிக்கு மாற்றப்பட்டது. சந்தா முறை ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் நிரந்தர நவீன கட்டிடமொன்றை கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அந்த தருணத்தில் அறிவின் சோலையையும் தமிழர்களின் நினைவுகளையும் சேகரிப்பதற்கு உதவுவதற்கு பெருமக்கள் பலர் ஓன்றுசேர்ந்தனர். கட்டிடக்கலைஞர் விஎன் நரசிம்மன் புதிய கட்டிடத்தை வடிவமைத்தார்.அதேவேளை இந்தியாவின் பிரபல நூலகவியலாளர் எஸ்ஆர் ரங்கநாதன் நூலகம் சர்வதேச தராதரத்தில் காணப்படுவதை உறுதி செய்வதற்காக ஆலோசகராக செயற்பட்டார். தமிழ் சமூகத்தின் பெரும் மதிப்பிற்குரிய பிரமுகர்கள் நூல்களை வழங்கினார்கள். பிரதான கட்டிடத்தை 1959 இல் யாழ் மேயராக விளங்கிய அல்பிரட் துரையப்பா திறந்துவைத்தார். யாழ்ப்பாண நூலகத்தை சர்வதேச மற்றும் உள்நாட்டு புத்திஜீவிகள் நேசித்ததால் அதன் முக்கியத்துவமும் மேன்மையும் அதிகரிக்க ஆரம்பித்தது.குறிப்பாக அது தமிழ் சமூகத்திற்கான கலாச்சார தளமாக காணப்பட்டது. நூலகத்தில் 1736 இல் மயில்வாகன புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபமாலை என்ற யாழ்ப்பாண வரலாற்று நூலின் ஒரேயொரு பிரதி போன்ற மிகவும் அரிய நூல்கள் காணப்பட்டன. இராமாயணத்தின் மிகச்சிறிய அளவிலான பதிப்புகள், யாழ்ப்பாணத்தின் தமிழ் பத்திரிகைகளின் தொகுப்புகள்,முக்கியமான ஆவணங்களின் மைக்ரோபிலிம்கள்,இலங்கையின் காலனியாட்சியின் போது கிறிஸ்தவ மிசன்களால் வெளியிடப்பட்ட மோர்னிங் ஸ்டாரின் பதிவுகள் போன்றவை காணப்பட்டன. யாழ் நூலகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் பழைய அபூர்வமான கையெழுத்துப்பிரதிகளும் ஆவணங்களும் காணப்பட்டன. சில பெறுமதியான ஆவணங்கள் எழுத்தோலைகளில் எழுதப்பட்டு மணக்கும் சந்தனப்பெட்டிகளில் சேமிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. யாழ் நூலகத்தில் மூலிகை மருத்துவம் பற்றிய வரலாற்று பதிவுகளும்,பிரபலமான புத்திஜீவிகள்,எழுத்தாளர்கள் நாடக கலைஞர்களின் கையெழுத்துப்பிரதிகள் காணப்பட்டன. இவை அனைத்தும் சாம்பலில் கலந்தன. பிரபல சிங்கள நூலகர் எச்ஏஐ குணதிலக தனிப்பட்ட கடிதமொன்றை எழுதினார். எரியூட்டப்பட்ட அந்த கட்டிடம் இனவெறி வெறுப்பின் காட்டுமிராண்டித்தனமான மிருகத்தனமான போக்குகளிற்கு ஒரு சான்றாகும் என அவர் எழுதியிருந்தார். அந்த தீ வைப்பு சம்பவத்தின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான அமிர்தலிங்கம்( இவரும் பின்னர் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்) இலங்கை நாடாளுமன்றத்தில் கடுமையான உரையொன்றை ஆற்றினார். சில அரியவகை நூல்களும் முற்றாக எரிக்கப்பட்டன,இந்த நாட்டின் மக்கள் எந்தஅளவிற்கு கீழிறங்குவார்கள் என்பதற்கான அறிகுறி இது என அவர் குறிப்பிட்டிருந்தார். யாழ்பொது நூலகம் மீதான தாக்குதல் குறித்து ஒருபோதும் உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன்நிறுத்தப்படவில்லை,இலங்கையின் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கபடும் கலாச்சாரத்தில் இன்னொரு அத்தியாமாக இது காணப்படுகின்றது. யாழ் நூலகம் இன்னமும் உதயமாகாத, ஆனால் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள தமிழ் தேசத்தின் அறிவுசார் நீர்த்தேக்கமாக காணப்பட்டது. அறிவு வரலாறு மற்றும் நினைவை இலக்குவைத்தல் என்பன இனச்சுத்திகரிப்பின் முக்கியமான அம்சங்கள். 1992 இல் சரஜீவோவில் உள்ள ஓரியன்டல் நிறுவகத்தின் மீதான சேபியன் தேசியவாதிகளின் தாக்குதல் மூலம் இது மீண்டும் புலனாகியது. ஆகவே யாழ் பொதுநூலகம் எரியூட்டப்பட்டமை சாதாரண காடையர் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவமல்ல. அது வரவிருக்கும் பேரழிவை ஏற்படுத்தும் போரின் முன்னோடியாக காணப்பட்டது.இந்த போர் 1983 இல் கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் தினத்தில் ஆரம்பமாகி 2009 மேயில் முடிவடைந்தது.இதன் காரணமாக 200,000ற்க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்,உலகில் அதிகளவானவர்கள் பலவந்தமாக காணமல்போகச்செய்யப்பட்ட இரண்டாவது நாடாக இலங்கை மாறியது. ஆனால் இவற்றை விட எரியூட்டல் இன்னொரு முக்கியமான செய்தியை தெரிவித்தது. அதிகாரத்தில் உள்ளவர்களால் தாங்கள் நினைத்த நேரத்தில் இனத்துவ அடையாளங்களை அழிக்க முடியும் என்பதே அது. யாழ் நூலகத்தை எரித்தமை என்பது தமிழ்சமூகத்தின் பெருமை மற்றும் கண்ணியம் ஆகியவற்றை களவாடுவதற்கான ஒரு முயற்சியாகும். இது அவர்களின் பாரம்பரியத்தை அழிப்பதற்கான ஒரு முயற்சியாகும். அந்த பேரழிவு தரும் எரியூட்டல் மற்றும் மோசமான உள்நாட்டு போரிற்கு , பின்னர் நூலகம் சமீப காலங்களில் நன்கொடையாளர்களின் நல்லெண்ணத்தின் காரணமாகவும், தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கான அரசாங்கத்தின் முயற்சி காரணமாகவும் புனரமைக்கப்பட்டது. விலைமதிப்பற்ற ஆவணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தமிழ் பாரம்பரியம் மற்றும் பின்னடைவுகளில் இருந்து மீள் எழுவதற்கான தமிழர்களின் அவர்களின் திறமையை உறுதிப்படுத்துகின்றது. http://thinakkural.lk/article/44415
 9. கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்தது- சற்றுமுன்னர் மற்றுமொரு மரணம் Rajeevan Arasaratnam June 1, 2020கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்தது- சற்றுமுன்னர் மற்றுமொரு மரணம்2020-06-01T09:13:23+00:00 கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சு இதனை உறுதிசெய்துள்ளதுடன் இலங்கையில்11 வது கொரோனா வைரஸ்மரணம் நிகழ்ந்துள்ளதை உறுதிசெய்துள்ளது . குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயது நபர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹோமாஹம மருத்துவமனையில் கிசிச்சை பெற்றுவந்த நபரே உயிரிழந்துள்ளார். http://thinakkural.lk/article/44538 நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டது Daya Dharshini June 1, 2020நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டது2020-06-01T07:51:00+00:00 நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டுள்ளது . கடந்த சனிக்கிழமை 30 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் இன்று முதலாம் திகதி திங்கட்கிழமை அதிகாலை வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது. இந்நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டுள்ளது . அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல், ஜூன் 3 ஆம் திகதி வரை தினமும் இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன் படி ஜூன் 6 ஆம் திகதி தொடக்கம் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது http://thinakkural.lk/article/44500
 10. மன அழகைக் காட்டும் முகமே அழகானது. அந்த அழகுதான் காண்போரின் மனத்தை இதமாக்கி அன்பு சுரந்து மகிழவைப்பது. உடல் அழகும் அதற்கான ஒப்பனையும் கவர்ச்சியைக் காட்டுவது. காண்போரைக் கிறங்கவைத்துக் காமத்தில் ஆழ்த்தித் தவறுகளும் செய்ய வைப்பது. பூகம்பமே உண்டாகும்.
 11. மலர் வண்டை வருந்தி அழைப்பது. பின் குய்யோ முய்யோ என்டுறது.
 12. இது கிருபன் அவர்களுக்கு எழுதியது ... உங்கள் அறிவு அளவுக்கெல்லாம் எங்களால் வாதிட முடியுமா? அதை நான் ஏற்கனவே மேலேயே எழுதி இருக்கிறேனே? சீமான் செய்த பாவமோ என்னமோ நாம் இப்படி அறிவின்றி பிறந்துவிட்டோம். நீங்கள் போட்டு தாக்குங்கள் அக்கா
 13. Today
 14. பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் -கல்வி அமைச்சு அனுப்பியுள்ள ஆலோசனை கொரோனா அச்சுறுத்லை அடுத்து மூப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் பின்பற்றவேண்டிய தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம், மாகாண மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் சித்ரானந்த தெரிவித்துள்ளார். மாணவர்களின் எண்ணிக்கை, சுகாதார நிலைமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய குறித்த வழிகாட்டலை தயாரிப்பது அவசியமாகும். மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144404?ref=imp-news
 15. யாழ் - கதிர்காமம் பாதயாத்திரை கைவிடப்பட்டது யாழ்.கதிர்காம பாதயாத்திரை கைவிடப்பட்டுள்ளதாக பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சாமி தெரிவித்தார். வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை ஆரம்பமானது. எனினும் மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் கைதடிசிவன் ஆலயத்தைச் சென்றடைந்ததும் கைவிட நேரிட்டது என குறிப்பிட்டுள்ளர். கொரோனோ வைரஸ் தாக்கத்தினால், இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்ததாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி இருந்த சி.ஜெயசங்கரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144406
 16. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை தடுக்க அண்ணா பல்கலைக்கழகம் போட்டுள்ள திட்டம் டிரோன் உதவியுடன், வியூகம் வகுத்து வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று இந்தியாவை ஒருபுறம் தாக்கிவரும் நிலையில், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உட்பட சில மாநிலங்களில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து கபளகரம் செய்து வருகிறது. ‘லோக்கஸ்ட்’ வகையான இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் எமன், ஈரான், பாகிஸ்தான் நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கிறது. பசுமையான இடங்களை நோக்கி படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கோடிக்கணக்கில் புகுந்து, நாசம் செய்கிறது. இதுவரை இந்தியாவின் 41 மாவட்டங்களின் விளைநிலங்களை சூறையாடியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று வேளாண்துறை சொல்லி இருந்த நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் இருந்ததை பார்த்து விவசாயிகளும், மக்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இதனை ஆய்வுசெய்த வேளாண்துறை அதிகாரிகள், விவசாய நிலங்களை சூறையாடும் ‘லோக்கஸ்ட்’ வகை வெட்டுக்கிளிகள் இல்லை என்றும், சாதாரண வகை வெட்டுக்கிளிகள்தான் என்றும் தெரிவித்துள்ளனர். இது பெரும்பாலும் எருக்கஞ்செடிகளில் மட்டும்தான் காணப்படும் எனவும் கூறினர். இந்தநிலையில், தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை ஆயத்தமாகி வருகிறது. வானூர்தி துறையின் இயக்குனர் செந்தில்குமார் தலைமையில், மூத்த விஞ்ஞானி வசந்த்ராஜ் உள்பட சுமார் 80 பேர் இதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். https://www.ibctamil.com/india/80/144407
 17. நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் In இலங்கை May 31, 2020 10:51 am GMT 0 Comments 1591 by : Dhackshala மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் தற்போது நடை பெற்றுவருகின்றன. அகில இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் அமைச்சர் தொண்டமானின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன், அவரின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என 500 பேர் வரையில் மைதானத்தில் குழுமியுள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை சற்று முன்னர் நோர்வூட் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. இந்த இறுதிக்கிரியைகளுக்காக நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் பரவல் மற்றும் பாதுகாப்பு ஆகியன கருத்திற்கொண்டு சுகாதாரப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மைதானத்தின் உள்ளே செல்லும் ஒவ்வொருவரும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடல்வெப்பம் அளவிடும் கருவியின் மூலம் உடல்வெப்பம் அளவிடப்பட்ட பின்னரே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதிக்கிரியைகளில் பங்கெடுக்கும் ஒவ்வொரு நபரும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸார் மற்றும் சுகாதாரப்பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் வாகனங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை பாதுகாப்பு பிரிவினர் தடைசெய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நோர்வூட்-விளையாட்டு-மைதா/
 1. Load more activity