யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

All Activity

This stream auto-updates     

  1. Past hour
  2. இல‌ங்கை அணி 1996 இருந்து 2015ம் ஆண்டு வ‌ர‌ ந‌ல்ல‌ நிலையில் தான் இருந்த‌து / இனி இல‌ங்கை அணியால் ஒரு போதும் மீழ‌ முடியாது / இல‌ங்கை அணிக்கு 2014ம் ஆண்டு உல‌க‌ கோப்பை தான் க‌ட‌சி கோப்பை / சிங்க‌ள‌வ‌ன் த‌ல‌ கீழா நின்றாலும் இனி அவ‌ர்க‌ளால் ஆசியா கோப்பையை கூட‌ தூக்க‌ முடியாது / இல‌ங்கை பேய் என்றால் இந்தியா பிசாசு / பேயின் க‌தை முடிந்து விட்ட‌து , பிசாசு விஸ்ப‌ரூப‌ம் எடுக்குது
  3. நான் ஒரு மழை விரும்பி. மப்பும் மந்தாரமாக 364 நாள் இருக்கும் நாடெல்லாவா இது. வெள்ளையள் எல்லாம் மழை, மழை என சலித்துகொள்ள நானோ காரில் இருந்து ஒவ்வொரு மழைதுளியாக ரசிக்கும் பேர்வழி. ஆகவே பொருத்தமான உடுப்பை போட்டால் காலநிலை எனக்கு பெரிய அலுப்பில்லை. சின்னதில் அப்பாவுடன் ஹட்டன் போய், திரும்பி போக வேண்டாம் என அடம்பிடிச்ச ஆள் நான், ஆகவே எனக்கு சொல்லப்போனால் இந்த காலநிலை ஒரு நித்திய வரப்பிரசாதம். நீங்கள் 90களில் இருந்திருப்பீர்களோ? முன்பு போல முகத்தில் அடிக்கும் துவேசம் இப்போ குறைவு. ஒரு பாக்கி நாட்டின் முன்னாள் கிரிகெட் கேப்டன், ஒரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் லண்டன் மேயர், இன்னொரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் உள்நாட்டு மந்திரி . வைத்தியம், சட்டம், அரசியல், கலை, தொலைக்காட்சி தொடங்கி அரச குடும்பம் வரை வெள்ளையர் அல்லாதோர் பிரசன்னம். நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. என் வாழ்நாளில் கண்ட அளவிலியே. ஆனாலும் பாக்கி என்றைழைக்கப் படுவது இருக்கத்தான் செய்கிறது. டாமி ரொபின்சன் வகையறாக்கள் வெறுப்பை உமிழ்வதும் தொடர்கிறது. சுருங்ககூறின் மல்டி கல்சரலிசம் வளர்கிறது, துவேசம் குறைகிறது.
  4. அப்படி எல்லாம் மனம் துவண்டு போகாதேங்கோ. 96 வரை எங்காத்து காரரும் கோட்டுக்கு போறார் எண்டு விளையாடிய அணி இலங்கை. 96-2006 தரமான அணியாக இருந்ததில்லையா? மேஇதீ வைபாருங்கள். எவ்வளவு திறமை இருந்தும் அடிப்படை முகாமைத்துவம் இல்லாதாபடியால் பிரகாசிக்க முடியவில்லை. நவீன கிரிகெட்டில் உட்கட்டமைப்பு முக்கியம். ஒரு கொன்வேயெர் பெல்ட் போல வீரர்கள் வர வேண்டும். வரும் போதே சச்சின் போல ஜீனியல் ஆக இருக்க வேண்டியதில்லை. ஸ்டீவ் ஸ்மித், பெயர்ஸ்டோவ், போல சாதாரண வீரர்களாய் வந்தும் பின்னாளில் பிரகாசிக்கலாம். இந்த கட்டமைப்பு முன்பு அவுஸ், தெஆ விடம் இருந்தது. அவுசில் இப்போதும் உண்டு. இந்தியாவில் கடந்த 20 வருடமாயும் இங்கிலாந்தில் 10 வருடமாயும் இது கட்டமைக்க பட்டு வருகிறது. ஆனால் தெஆ வில் முன்பு போல இல்லை. உள்கட்டமைப்பு வினைத்திறன் மிக்கதாக இருக்கும் போது, உள்ளூர் விளையாட்டில் பணம் பிழங்கும், grass root மட்டத்தில் கிரிகெட் வளரும், இதுதானாகவே elite மட்டத்தில் நல்ல வீரர்களை தரும். நான் சொன்னது போல, 2005 க்கு பிறகு இங்கிலாந்தில் கிரிகெட்டை வளர்ப்பதில் பல கரிசனையான முன்னெடுப்புகள் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்தது. முன்பு இங்கிலாந்தில் கிரிகெட் ஒரு பணக்கார விளையாட்டு. Soft ball cricket, அரிதிலும் அரிது. மைதானம், மட்டை, காப்பு, எல்லாம் வாங்கும் வசதி படைத்த பள்ளிகளில் மட்டுமே ஆடப்படும் மேல்தட்டு விளையாட்டு. ஆனால் இப்போ, அப்படியில்லை, ECBயே ஆல் ஸ்டார்ஸ் போன்று பல திட்டங்கள் மூலம் கிரிகெட்டை ஜனரஞ்சகப் படுத்துகிறது. டிகெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்கிறன. இன்னொரு முக்கியமான விடயம் தெற்காசியர்களின் பங்களிப்பு, உலக மகா ஸ்பின்னர்கள் இலாவிடினும் மொயினும், லதீபும் நல்ல ஸ்பின்னர்கள். ஜான் எம்பூரி, ஸ்வான் இருவருக்கும் பின் இங்கிலாந்தில் இருக்கும் பெயர் சொல்லக் கூடிய ஸ்பின்னர்கள். ஒன்றை கவனியுங்கள். பாகிஸ்தான், இந்தியா, பங்களதேஸ், விளையாடும் எல்லா போட்டிகளும் சோல்ட் அவுட். இலங்கை, மேஇதீ போட்டிகள் பெரும்பாலும் சோல்ட் அவுட். இன்று இப்படி வெறிதனமாக கிரிகெட்டை ரசிக்கும் இந்த குடும்பங்களின் பிள்ளைகளும் நாளைக்கு இங்கிலாந்து அணிக்கே விளையாடுவார்கள். இன்னொரு நசீர் ஹுசைனாக, மொயின் அலியாக, ஜொவ்ரா ஆச்சராக. நல்ல உட்கட்டமைப்பு, சாதகமான இனப்பரம்பல், திறமைக்கு முக்கியத்துவம் இது மூன்றும் உள்ள நாடு விளையாட்டில் சோடை போகாது. எப்போதும் 1வதாக வராவிடினும், முதல் வரிசையில் இருக்கும். அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா இந்தவகை. எவ்வளவு திறமை இருந்தும் இந்த 3இல்லாவிடில் பயனில்லை. பாகிஸ்தான், இலங்கை, மேஇதீ, தெஆ இந்தவகை.
  5. சோம்பேறிக் குணம் தான்...காரணம் பையா...! மாடு மரத்தின் கீழ் படுத்து இரை மீட்டுவது போல.....தனிமையில்...இனிமை காண்பதில்....இப்போதெல்லாம் ஒரு சுகம்! பார்வையாளராக இருக்கத் தான் ...எண்னினேன்! இப்போது பங்காளியாகி இருக்கலாமோ என்று கவலைப்படுகின்றேன்!
  6. தலைவர் பதவி வேண்டாம் | ராகுல் காந்தி உறுதி! நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்ததிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டுமெனச் சில அங்கத்தவர்கள் விரும்புவதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் தனக்கு அப்பதவி வேண்டாமெனவும் அதற்கு இன்னொருவரை நியமிக்க்கும் பட்சத்தில் தான் அதில தலையிடப் போவதில்லை எனவும் ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியாக 80 இருக்கைகளையும், தனியாக 52 இருக்கைகளையும் பெற்றது. அதே வேளை பா.ஜ.க. கூட்டணியாக 350 இருக்கைகளையும், தனியாக 303 இருக்கைகளையும் பெற்றது. இதனால் மக்களவையில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி நிலையைக்கூடத் தக்கவைக்க முடியாத நிலையில் (இதற்கு குறைந்தது 54 இருக்கைகள் வேண்டும்) காங்கிரஸ் அவமானப்பட்டுப் போய் இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து பல மானில காங்கிரஸ் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தமது பதவிகளிலிருந்து விலகிக் கொண்டனர். ராகுல் காந்தியும் தான் தனது தலைவர் பதவியைத் துறப்பதாக அறிவித்தார். ஆனால் கசியின் மூத்த தலைவர்கள் அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார்கள். ஆனாலும் ராகுல் காந்தி தனது முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அத்தோடு கட்சியின் தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதிலும் தான் தலையிடப் போவதில்லை எனப்தில் மிகவும் உறுதியாக உள்ளதாகவும் தெரிகிறது. Video Credit: youtube/oneindia-tamil http://marumoli.com/தலைவர்-பதவி-வேண்டாம்-ராக/?fbclid=IwAR3BprrdJAUoKvY3KjuSD-_QJDZcz_x-7fUhzaRQ1Dxj-0pVh5kozC10nfo
  7. இதுவும் வாங்கி வைச்சிருக்குது....! சின்ன வெங்காயம் மட்டும் வாங்கினால் போதும்..!
  8. கராஜ் ஒன்றில் வேலை செய்யும் போது, ஒரு வெள்ளை பாக்கி என்றான். போடா ஐரிஷ்காரா என்றேன். அவ்வளவு தான். தான் எப்படிப்பட்ட ஆங்கிலேயன், அப்பா, அம்மா என்று தோம்பு இழுத்து, தனது பரம்பரை சொல்லி, என்னை போய், ஐரிஸ் காரர் எண்டு சொல்லி போட்டியே என்றான். ஆகா, உங்கட வீக் பாயிண்ட் அங்கவா இருக்குது எண்டு.... ஆனாலும், சுத்த ஆங்கிலேயன் இப்படி நடந்து கொள்ள மாட்டானே.... எண்ட படியால் நீ, ஐரிஸ் தான் என்றேன். நொந்து போய் போனார். ஐரிஷ் காரர்கள் எங்களுக்கு ஒன்றும் கெடுதல் செய்ய வில்லை. ஆங்கிலேயர்கள் அவர்களை கீழாகவே பார்ப்பார்கள் என்று புரிந்தது.
  9. இங்லாந் அணியிட‌ம் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை , இப்ப‌ இருக்கிர‌ மோர் அலி ம‌ற்றும் ர‌சித் இவ‌ர்க‌ள் அங்கினேக்க‌ ப‌ந்தை சுழ‌ட்டி போடின‌ம் / இங்லாந் அணியில் ( ப‌ட்லர்) (மோர்க‌ன்) ( ரோட் ) இவ‌ர்க‌ளின் ஓய்வோடு ம‌ற்றும் ஒரு சில‌ வீர‌ர்க‌ளின் ஓய்வோடு இங்லாந் அணி பின்ன‌டைவை ச‌ந்திக்கும் / இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை / ப‌ட்ள‌ர் ம‌ற்றும் மோர்ன் அலியின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இங்லாந் அணி ப‌ல‌மான‌ அணியா வ‌ந்த‌து / இந்தியாவில் எத்த‌ன திற‌மையான‌ சுழ‌ல் ப‌ந்து வீச‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் , என‌க்கு இந்தியா அணிய‌ பிடிக்காது உண்மையை சொல்ல‌ போனால் ( இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் கிரிக்கேட் உல‌கில் )
  10. Today
  11. ரதி அக்கா, கவர் போடாமைக்கு இதுதான் காரணம். ஊரில் ஒரு மைதானத்திலும் ஒழுங்கான நீர்வடிப்பு (டிரைனேஜ்) இல்லை. அதனால் அவுட் பீல்டில் சின்ன மழைக்கே வெள்ளம் தேங்கி விடும். இங்கே அப்படி இல்லை. எல்லா பெரிய கிரவுண்டுமே ஒரு டிரைன் வலைஅமைப்பின் மீதுதான் இருக்கும். ஆகவே விழும் மழை தங்காது உடனடியாக கீழே போய்விடும். எனவே இங்கே முழு கிரவுண்டையும் மூட வேண்டிய தேவை இல்லை. பிரிஸ்டல், தோண்டன் போன்ற டெஸ்ட் போட்டிகள் நடவாத இரு சின்ன கிரவுண்டுகளில் மட்டும் இந்தளவுக்கு டிரைனேஜ் வசதி இல்லை. தவிரவும் அன்றைக்கு அடிச்ச அடைமழைக்கு கவர் போட்டும் கண்டிராது. அடைமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுதால், மழை நீர் கவருக்கு கீழாலேயும் பரவும். அது வேறவாய்
  12. NEWS அருகிவரும் தாடிகளும் மசூதிகளும் | சீனாவில் இஸ்லாம் சீனாவில் சுதந்திரமான மத வழிபாடுகளுக்கு விதிக்கப்படும் தடை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமின் தொழுகை விடயத்தில் அரசின் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பி.பி.சி. ஊடகத்தின் நிருபர் ஜோன் சட்வேர்த் சீனாவின் மேற்குப் பிரதேசமான சின்ஜியான்ங் கிற்குச் சென்று சில தகவல்களைத் திரட்டி வெளியிட்டுள்ளார். சின் ஜியாங் ஒரு அதிகாரப் பகிர்வைக் கொண்ட பிரதேசம். அரச பாதுகாப்பு கெடுபிடிகள் அவரது சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய போதிலும் அவர் அவதானித்த விடயங்கள் அதிர்ச்சி தருவனவாக உள்ளன. பல இடங்களில் மிக நீண்டகாலமாக இருந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. தெருக்களில் இஸ்லாமிய கலாச்சாரத்தின் சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளன. இஸ்லாமிய அடையாளங்களை அணியும் மனிதர்கள் அருகி வருகின்றனர். குறிப்பாக ஆண்கள் தாடி வைத்துக்கொள்வது குறைந்து வருகிறது. அரசின் கெடுபிடிகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவது பற்றி மனித உரிமை அமைப்புக்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமது நிலைமைகளைச் சுதந்திரமாக எடுத்துச் சொல்ல மிகவும் அச்சப்படுவது தெரிகிறது. பெரும்பாலான மத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் அரச சார்புடையவர்களின் கைகளிலேயே இருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கக் கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. நன்றி: விக்கிபீடியா தரவு: 2009 இல் நடத்தப்பட்ட கணிப்பின்படி, சீனாவில் 21.7 மில்லியன் (1.6%) முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். முகம்மது நபியின் மறைவிற்கு 20 ஆண்டுகளுக்குப் பின்னர் (கி.பி.651) இஸ்லாம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனா முழுவதிலும் 39,000 மசூதிகள் உள்ளன. இவற்றில் 25,000 சின்ஜியாங்கில் உள்ளன. முதாலாவது மசூதி கி.பி. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1954 மக்கள் புரட்சிக்குப் பின்னர்தான் சின்ஜியாங் சீனாவோடு இணைக்கப்பட்டது. சீனா ஒரு மதசார்பற்ற நாடாக இருப்பினும் சீன மக்கள் அதிக மத நம்பிக்கை கொண்டவர்கள். பெரும்பாலானவர்கள்புத்த புத்த சமயத்தையும், சிலர் நாட்டார் வழக்குடையை மத நம்பிக்கைகளையுடையவர்களாகவும், தாயோயிசம், கொன்பூசியனிசம் போன்ற சித்தாந்த மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். சீனாவில் வேகமாகப் பரவி வரும் மதம் கிறிஸ்தவம் (வருடத்துக்கு 7% வளர்ச்சி) http://marumoli.com/அருகிவரும்-தாடிகளும்-மசூ/?fbclid=IwAR0HkpLzwCynEFL77nEn_rKdBASsxPq97oUkt8LDy-HvsTt4CTZuu0GT5J8
  13. ஓரளவுக்கு......ஆங்கிலம் பேசுபவர்களை....அண்ணார்ந்து பார்த்த அடிமைப் புத்தி தான் காரணம்.. என நினைக்கிறேன்! நானும் இங்கிலாந்திலிருந்து...தொழில் ரீதியாக...அவுஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்தவர்களுக்குள் அடங்குவேன்! முக்கியமான காரணம் எனது துணைவியாருக்குக் குளிர் காலனிலை ஒத்து வரவேயில்லை! மற்றும் படிக்கு...இங்கிலாந்தில்....இருந்த நண்பர்களையும்.....அந்தக் காலனிலையையும்...இன்னும் மிஸ் பண்ணுகிறேன்! பாக்கி என அவர்கள் அழைக்கும் போது .....ஒரு காலத்தின் கொதித்தும் போயும் இருக்கிறேன்! இப்போதெல்லாம் அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்! அவுஸும் அருமையான தேசம் தான்..! எல்லோரும் வந்தான் வரத்தான் என்ற படியால்...பாக்கி என்று அழைக்கும் துவேசங்களும் மிகவும் குறைவு...! மார்கழி மாதத்துக் காலனிலை.....புங்குடுதீவையே நினைவு படுத்தும்! காகங்கள் மட்டும்...கொஞ்சம் வித்தியாசம்..! அண்டம் காகங்களுக்குக் கொஞ்சம் வெள்ளையடிச்சு விட்டது மாதிரி..!
  14. நான் பௌத்த பிக்குகளுடன் சேர்ந்து செய்யும் இவ் உண்ணாவிரதப்போராட்டத்தை தான் பக்கா அரசியல் என கூறினேன். தமிழர்களையும் தூண்டி விட்டு முஸ்லிம்களையும் தூண்டி விட்டு மோதவிடும் முயற்சி. முஸ்லிம் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் எதை செய்தார்களோ அனைத்தும் அரச ஆதரவுடனே செய்தார்கள். இப்பொழுதும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரசு பெருசா பிரச்சினை கொடுக்காது. சாதாரண தமிழ், முஸ்லிம்களை மற்றும் முஸ்லிம், சிங்களவர்களை தான் மோத விடுகிறார்கள். இந்த பிக்குகளுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்குக்கு அவர்கள் நினைத்தால் உண்ணாவிரதம் இருக்காமலே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். சும்மா இந்து-பௌத்த, தமிழ்-சிங்கள ஒருங்கிணைப்பு போல் காட்டி தமது அரசியலையும் செய்து முஸ்லிம்களையும் கடுப்பேற்ற நினைக்கிறார்கள். ஏற்கனவே இதை காரணம் காட்டி சமூக வலைத்தளங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் முரண்படுகிறார்கள். இவர்கள் இணைந்த போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தால் மகிழ்ச்சி தான். ஆனால் அதன் விளைவுகளையும் எதிர் பார்த்திருக்க வேண்டும். முன்னர் தமிழ் முஸ்லிம் பிரச்சினை ஏற்பட்டதன் பின்னணியில் சில உளவு அமைப்புகள் இருந்தன. அதன் பாதிப்பு இன்னும் முடியவில்லை.
  15. சந்திரவதனா யாழ்களத்தில் முன்பு எழுதியவர். ஜேர்மனியில் வசிக்கிறார் என நினைக்கிறேன்.
  16. 2023க்கு பிறகு விளையாடக்கூடிய பொடியள் இப்ப 10ம் ஆண்டுச் சோதனையில் பிசியா இருப்பாங்கள் . 2005க்கு பிறகு இங்கிலாந்தின் அணுகுமுறை ரொம்ப மாறிவிட்டது. 20/20 போட்டியை கண்டு பிடித்து கவுண்டி மட்டத்தில் அறிமுகம் செய்த காலம் தொட்டு வெள்ளை பந்து கிரிகெட்டில் இங்கிலாந்துக்கு ஏறுமுகம்தான். அடம் ஹோலியோக், நிக் நைட், நீல் பியர்பிரதர் எண்டு பந்துக்கு நோகாம அடிக்கிற ஆக்கள் போய், ரோய், லம்ப், ஹேல்ஸ், பட்லர், பிரயர் போன்ற அதிரடி ஆட்டக்காரரின் வரவு இதன் பின்னரே நிகழ்தது. இப்போ 100 பந்துகள் வீசும் இன்னொரு வகை ஆட்டத்தை இங்கிலாந்து கவுண்டியில் அறிமுகம் செய்யப் போகிறாரகள். விளையாட்டில் மேலே கீழே நாடுகள் போவது வழமை, ஆனால் அதிரடி ஆட்ட முறை இங்கிலாந்தில் கொஞ்ச காலத்துக்கு நிலைக்கும் என்றே படுகிறது. நம்ம தொழில் கஸ்டம் புரியாத சனங்கள் இஞ்ச, இவவாவுக்கு தங்கட டீம் சவுத் ஆபிரிக்காவை விட திறம் எண்ட நினைப்பு . ஆப்கனிஸ்தானோடயே தலை தப்பினது தம்பிரான் புண்ணியம். Chokers ஐ நம்பினால் ஆகுவீர்கள jokers! வழமையா குவாட்டரல, செமில தான் குப்புற விழுறது, இந்த முறை ஆரம்பத்திலேயே.
  17. கால‌ம் மிக‌ வேக‌மாக‌ ஓடுது / 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஈழ‌த்தில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கு எம் போராட்ட‌ம் ப‌ற்றி பெரிசா தெரியாது / அதுங்க‌ளின் உல‌க‌ம் இபோது ( ஜ‌போன் ம‌ற்றும் பேஸ்வுக் ) புல‌ம் பெய‌ர் நாட்டில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கு , எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌லும் த‌மிழீழ‌ ம‌ண்ணின் பெருமைக‌ளும் தெரியாது / யாழ்பாண‌த்தில் சிங்க‌ள‌வ‌னின் ஆதிக்க‌ம் அதிக‌ரிக்குது / ஒரு க‌ட்ட‌த்தில் த‌மிழீழ‌த்தின் த‌லை ந‌க‌ர‌ம் ஆனா திருகோன‌ம‌லையில் த‌மிழர்க‌ள் ம‌ட்டும் தான் வாழ்ந்தார்க‌ள் , இப்போ திருகோன‌ம‌லை எங்கும் சிங்க‌ள‌வ‌னின் ஆதிக்க‌ம் / இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் பொறுத்தா நான் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ ஊரிலும் சிங்க‌ள‌னின் குர‌ல்க‌ள் கேக்கும் /
  18. எனக்குத் தெரிய இப்படி போற ஆக்கள் வலு குறைவு. சிங்கிளாக இருப்பவர்கள் கலியாணம் கட்ட எண்டு போவீனம். அல்லது ப்ரொபெசனல்ஸ் வேலை தேடிப் போவீனம். ஆனால் ஐரோப்பாவில் இருந்து வாற மாரி குடும்பம் குடும்பமா வாறேல்ல. போலந்து, ரொமேனியா, பல்கேரியா காரர் ஏன் வருகீனம் என்றது விளங்குது, ஆனா 10 வருசத்துக்கும் மேலாக யூகேயை விட பெரிய பொருளாதாரத்தை உடைய நாட்டில் வசித்து விட்டு, பிள்ளையள் நல்லா டொச் கதைக்கிற நிலையிலும் ஏன் எங்கட சனம் ஓடி வருதெண்டுதான் விளங்கேல்ல.
  19. காக்காகுடி.....மன்னிக்கவும்.....காத்தான் பூத்தான்குடி...சாரி காத்தான்குடி மேன்மக்கள் அரேபியரா இல்லை தமிழரா? மொழிகளுக்கு நான் எதிர்ப்பு இல்லை...ஆனால் தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத மொழி புகுத்தப்படும் போதுதான் சினம் வருகின்றது.
  20. உண்மை தான். அதோடு சவுத் வெஸ்ற்ரில் இருக்கைகளை முதலே தேர்வு செய்ய முடியாது. ஒரே ஒரு நல்ல விடயம் கூடகுறைய சாமானுகளை அள்ளிக்கட்டிக் கொண்டு போகலாம்.
  21. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் நாம் நீண்ட தூரம் பயணப்பட வேண்டியுள்ளது. Genocide இனப்படுகொலை என சொல்ல மறுக்கும் தமிழ் கூட்டமைப்பினர் கூட்டங்களை இனியாவது கதிரைகளில் இருந்து இறக்குங்கள் ! #motion #Genocide #pass #Canadianparliament
  22. இதுக்குதான் தங்கச்சி! ஒழுங்கான அரசியலைமைப்பு அரசியல் தலைவர்கள் வேணும் எண்டுறது. சீமானையும் ஒருக்கால் மேடையேத்தி பாக்கலாமே
  1. Load more activity