Jump to content

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  3. 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள். சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  4. என் மகன்கள் இருவருமே ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர்.. ஏன் தெரியுமா? சீமான் சொன்ன அடடே காரணம்! Read more at: https://tamil.oneindia.com/news/chennai/seeman-reveals-his-sons-studied-in-english-medium-schools-594131.html
  5. கோமாளி க‌ம‌ல‌க‌சான் அர‌சிய‌லுக்கு வ‌ராட்டி நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லிலே அங்கீகரிக்கப்பட்ட கட்சியா ஆகீருக்கும்.............விவ‌சாயி சின்ன‌மும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு நிர‌ந்த‌ர‌ சின்ன‌மாய் இருந்து இருக்கும்.............மைய‌ம் தொலைக் காட்சியை உடைச்சு போட்டு யாரை எதிர்த்தாரோ க‌ட‌சியில் அவ‌ர்க‌ளிட‌ம் ச‌ர‌ன் அடைந்து விட்டார்..........................
  6. நாம் தமிழர்கட்சி இந்தமுறை சீற் வெல்லமுடியாது போகலாம். ஏனென்றால் இது பாராளுமன்றத் தேர்தல். ஆனால் அதன் வாக்கு சதவீதத்தை 10 சத வீதத்திற்கு மேலே எடுத்தால் அது பெரிய வெற்றி 2026 சட்ட மன்றத் தேர்தலில் முக்கிய சக்தியாக விளங்கும்.
  7. Today
  8. திமுகாவில் ஒரு it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
  9. தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
  10. இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣. கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
  11. 28 MAR, 2024 | 11:04 AM நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  12. உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
  13. Published By: SETHU 28 MAR, 2024 | 02:08 PM சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர். கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன. கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  14. கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
  15. தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35 இடங்களில் தானே திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  16. சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம். பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக. பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது. 2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும். பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார். படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
  17. ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர் உங்களுக்கு நினைவிருக்கோ முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  18. க‌ண்டிப்பாய் த‌மிழ‌க‌த்தில் மக்கள் புரட்சியை உருவாக்கியிருக்க முடியும் 2009க‌ளில் அண்ண‌ன் சீமானுக்கு இப்ப‌ இருக்கும் ம‌க்க‌ள் ஆத‌ர‌வு அப்ப‌ இருந்து இருக்க‌னும் தீயை ப‌த்த‌ வைச்சு இருப்பார் அது த‌மிழ‌க‌ம் எங்கும் காட்டு தீ போல் எரிந்து இருக்கும்............க‌ருணாநிதி என்ன‌ எந்த‌ கொம்ப‌னா இருந்தாலும் ச‌ரி மக்கள் புரட்சிக்கு முன்னால் அவர்கள் தோற்றுப் போய் விடுவார்க‌ள் .............இது தான் உண்மையான‌ வ‌ர‌லாறு....................உதார‌ன‌த்துக்கு 2013ம் ஆண்டு மாண‌வ‌ புர‌ட்சி த‌மிழ‌க‌த்தில் வெடிக்க‌............அதை பார்த்த‌ க‌ருணாநிதி கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று காங்கிர‌ஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிறோம் என்று அறிவித்தாரா இல்லையா.............அந்த‌ ப‌ய‌ம் இருக்க‌னும்..........................
  1. Load more activity
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.