All Activity

This stream auto-updates     

  1. Past hour
  2. தேசிய மெய்வல்லுநர் போட்டியில் நிமாலி தேசிய சாதனை (சுகததாச அரங்கிலிருந்து எம்.எம்.சில்ஸெ்டர்) 97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற நிமாலி லியனாராச்சி தேசிய சாதனையுடன் முதலிடம் வென்றார். இதுவே இதுவரை பதிவான ஒரேயொரு இலங்கை சாதனையாகும். ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேரட்ண பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் ஓடி முதலிடம் பிடித்தார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த வெள்ளின்று ஆரம்பமான 97 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி இன்றைய தினத்துடன் நிறைவடைகிறது. தேசிய சாதனை படைத்த நிமாலி பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் சிறப்பாக ஓடிய நிமாலி லியனாராச்சி புதிய தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இவர் இப்போட்டித் தூரத்தை 4 நிமிடங்கள் 15.89 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம், 2012 ஆம் ஆண்டு சம்பிக்கா தில்ருக்சியால் ஏற்படுத்தப்பட்ட 4 நிமிடங்கள் 16.42 செக்கன்கள் என்ற தேசிய சாதனையை முறிடித்தார். இப்போட்டியில் இரண்டாம் இடத்தை கயன்திகா அபேரட்ணவும் (4 நிமி.22.24 செக்.), முன்றாம் இடத்தை கே.ஏ. குமாரியும் (4 நிமி.49.77 செக்.), பெற்றுக்கொண்டனர். முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு முதலிடம் போட்டியின் முதல் நாளான வெள்ளியன்று நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் சப்ரின் அஹமட் 16.33 மீற்றர் தூரம் பாய்ந்து முதலிடம் வென்றார். வெலிகமவைச் சேர்ந்த இவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றார். தெற்காசிய விளையாட்டு விழாவில் தனது திறமைகளை அனைத்தையும் வெளிப்படுத்தி தாய்நாட்டுக்கு பதக்மொன்றை பெற்றுக்கொடுப்பதே எனது பிரதான நோக்கமாகும். எனினும், பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவில் உள்ளதால் எனக்கான விளையாட்டு உபகரணங்கள், போஷாக்கான உணவு போன்றவற்றுக்கு பெருந்தொகையான பணம் செலவாகிறது. இதுபோன்று இன்னும் பல சவால்களை எதிர்கொண்டே இப்போட்டியில் நான் தொடர்ந்தும் பங்கேற்று வருகின்றேன் என சப்ரின் அஹமட் தெரிவித்தார். யாழ். வீர வீராங்கனைகள் பிரகாசிப்பு கோலூன்றிப் பாய்த்தல் மற்றும் உயரம் பாய்த்தல் போட்டிகளை மையப்படுத்தி இம்முறை தேசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்றிருந்தனர். இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தக்சிதா நேசராசா இரண்டாம் இடத்தையும், அனிதா ஜெகதீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிக்கு அருந்தவராசா பவிதரன் முன்னேறினார். முதலிடத்தை தவறவிட்ட தக்சித்தா நேற்றைய இரண்டாம் நாளான்று நடைபெற்ற கோலூன்றிப் பாய்தலில் பங்கேற்ற சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவியான நேசராசா தக்சிதாவுக்கும், ஷஷினிக்கும் பலத்த போட்டி நிலவியது. இவ்விருவரும் 3.40 மீற்றர் உயரம் தாவியதுடன், 3.45 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் இருவரும் தோல்வியடைந்தனர். 3.40 மீற்றர் உயரத்தை தனது முதல் முயற்சியில் தாவிய ஷஷினிக்கு முதல் இடம் வழங்கப்பட்டது. மேற்படி உயரத்தை தனது மூன்றாவது முயற்சியில் தாவியதால் தக்சிதாவுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டது. அனிதாவுக்கு மூன்றாமிடம் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனிதா ஜெகதீஸ்வரன் 3.33 மீற்றர் உயரம் தாவி மூன்றாம் இடம் பிடித்தார். 3.40 மீற்றர் உயரத்தை தாவ எடுத்துக்கொண்ட மூன்று முயற்சிகளிலும் அனித்தா தோல்வியடைந்தார்.இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு யாழ் வீராங்கனையான ஹெரீனா 3.00 மீற்றர் உயரத்தை மாத்திரமே தாவியிருந்தார். இறுதிக்கு முன்னேறிய பவிதரன் போட்டியின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் பங்கேற்ற யாழ் சாவகச்சேரி மாணவனும் புவிதரனின் சகோதரருமான அருந்தவராசா பவிதரன் 4.40 மீற்றர் உயரம் தாவிய பவிதரன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முதல் சுற்றின்போது தாடை மற்றும் முழங்கால் பகுதிகளில் காயமடைந்தபோதிலும், அவற்றை பொருட்படுத்தாமல் பங்கேற்ற பவிதரன் அனைவரது பாராட்டை பெற்றார். இவர் பங்கேற்கும் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்ற மஹாஜனா கல்லூரி மாணவன் சுரேஸ்குமார் சுகி கேதரன் 3.85 மீற்றர் உயரத்தை தாவியிருந்ததுடன், மானிப்பாய் இந்து கல்லூரி மாணவனான சிவகுமார் கபில்சன் 3.85 மீற்றர் உயரத்தை தாவ தவறினார். 100 மீற்றரில் ஹிமாஷ, சுகந்தி முதலிடம் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை ஹிமாஷ ஏஷான், வினோஜ் சுரஞ்சய இருவரும் 10.49 செக்கன்கள் என்ற ஒரே நேரப் பெறுதியில் முடித்த போதிலும் சலன அசைவு புகைப்படத்தின்படி ஹிமாஷ ஏஷானுக்கு முதலிடமும், வினோஜ் சரஞ்சயவுக்கு இரண்டாமிடமும் வழங்கப்பட்டதுடன், முன்றாமிடத்தை பிரியதர்சன அபேகோன்(10.52 செக்கன்கள்) பெற்றார். பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் லக்சிக்கா சுகந்தி (12.08 செக்கன்கள்), அமாஷா டி சில்வா (12.20 செக்கன்கள்), சர்மிளா ஜேன் (12.24 செக்கன்கள்) ஆகியோர் முறையே முதல் முன்று இடங்களை பிடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருமேஷிகா ரட்நாயக்க எல்லைக் கோட்டைடை அண்மித்திருந்தபோது, தசைப்பிடிப்பின் காரணமாக வெற்றியீட்ட முடியாமல் போனது. 400 மீற்றர் ஓட்டப்போட்டி ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் 46.76 செக்கன்களில் ஓடி முடித்த அருண தர்ஷன முதலிடம் பிடித்தார். பி.எல். குணரட்ண (47.18 செக்.) இரண்டாவது இடத்தையும் , ஆர்.என். ராஜகருண (47.49 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான 400 மீற்றரில் நதீஷா ராமநாயக்க (53.11செக்.) முதலிடம் வென்றதுடன், கே.மதுஷானி (54.30 செக்.) இரண்டாவது இடத்தையும், ஈ.வீ. ரத்னகுமாரி (54.59 செக்.) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அசத்திய ஹிருனி விஜேரட்ண அமெரிக்காவில் வசித்துவரும் ஹிருணி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் இலங்கை வருகை தந்தார். நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டி அனைவரையும் கவர்ந்த போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் பங்கேற்ற ஹிருணி விஜேரட்ண 35 நிமிடங்கள் 30 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் வென்று தெற்காசியப் போட்டிக்கு தகுதி பெற்றார். இவருக்கு சிறந்த போட்டியை அளித்த லங்கா ஆரியதாசா 35 நிமிடங்கள் 42 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இப்போட்டியின் மூன்றாவது இடத்தை எஸ். ஏ. லமாஹேவகே (36 நிமி.52.8 செக்கன்கள்) பெற்றார். https://www.virakesari.lk/article/62885
  3. தலைமைப்பீடம் என்று வரும் போது அரசியல் தலையீடுகள், நிர்வாக ஊழல்கள் என்று தேவையற்ற அவப்பெயர்கள் சைவத்திற்கு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, ஏற்கனவே இயங்கும் உள்ளூர் சைவ அமைப்புகளூடாக மக்கள் நலத் தொண்டுகள், அறநெறி வகுப்புகள் போன்ற செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் சைவநெறியைத் தழைக்கச் செய்வதுடன், சமூகச் சீர்கேடுகளையும் குறைக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். சைவர்களின் நம்பிக்கையுள் அனாவசியமாக மூக்கை நுழைப்பவர்கள், போலி முற்போக்குவாதிகள் போன்றோறோரின் விஷமப்பிரச்சாரத்திலிருந்து சைவர்களை மீட்டெடுக்க இது உதவலாம். https://yarl.com/forum3/topic/231067-’அறநெறி-வகுப்புகளால்-குற்றச்செயல்கள்-தடுக்கப்படுகின்றன’/?tab=comments#comment-1393142
  4. Today
  5. தொழில்நுட்பம் வளர்ந்து வரும்பொழுது அது பெரும்பாலும் இலாபத்தை குறி வைத்தே எழுதப்படும் / முகாமைப்படுத்தப்படும். எனவே, சமுதாயத்தில் பணம் இல்லாதவர்கள் இல்லை பெரியளவில் பணம் சம்பாதிக்க முடியாத மக்கள் பகுதியில் இவ்வாறான புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவில் கால் பாதிப்பதில்லை. ஆனால், சில வேளைகளில் சில நல்ல பயனுள்ள செயலிகள் உருவாவதுண்டு. பெயர்: மைக்ரோசோப்ட் சவுண்ட்ஸ்கேப் விலை : இலவசம் தளம் : நிச்சயமாக ஆப்பிள் ஐ ஓஎஸ். ஆன்ட்ராய்ட்டில் இருக்கலாம் இது என்ன செய்யும்: ஜி. பி. எஸ், இனை கொண்டு இயங்கும், 3டி வடிவில் இடங்களை கூறி பாதுகாப்பாக நடக்க, வாக்கம் ஓட்ட உதவும் குறிப்பு : நீங்கள் வாழும் நாட்டில் இன்னும் இருக்காமல் இருக்கலாம். யாரெனுக்கும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பயன்படலாம் ( இவ்வானவை தமிழில் இருந்தால் .... )
  6. தாயக தமிழ் உறவுகள் இவ்வாறான ஒரு நிலையை கோத்தபாய விடயத்தில் எடுக்க கூடும், 2006 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரியை விரும்பாதவர்கள் ட்ரம்பிற்கு வாக்களித்தார்கள் என்றும் அதனாலேயே அவர் வென்றார் எனவும் கூறுபவர்கள் உள்ளனர்.
  7. புலம்பெயர் மேற்கத்தைய நாடுகளில் பல வேறு வழிகள் இருந்தும் கூட, பதின்ம வயதினர் பல 'சிக்ககளுக்கு' உள்ளாகின்றனர். ஆனால், அவர்களுக்கு பல வேறு தெரிவுகள் உள்ளன : விருப்பமான ஒரு விளையாட்டை தெரிந்து அதில் ஈடுபடுதல் ; ' நெட்ப்ளிக்க்சில்' 'பிந்ச்' பார்த்தல் என தெரிவுகள் உள்ளன. தாயகத்தில் அவ்வாறான தெரிவுகள் குறைவு. அந்த மக்களுக்கு அறநெறி கல்வி என்பது இவ்வாறான தவறான தெரிவுகளை செய்வதை தடுக்க முடியும். அந்த வகையில் அறம் சார்ந்த கல்வி என்பது மதம் சார்ந்தும் இருக்கலாம். அதில் அவர்கள் கற்கும் சில ஆக்கம் விதிமுறைகள் அவர்கள் வளர்ந்து ஆளான பின்பு, தாமாக எது சரி / பிழை என்பது தமது பகுத்தறிவால் அறியும் காலம் வந்த பின்பு அதில் உள்ள காலத்திற்கு ஒவ்வாத படிப்பினைகளை நீக்குவார்கள். ஆக, இவ்வாறான கல்விகள் தமது பிள்ளை செல்வங்களுக்கு உகந்ததா இல்லையா என்பதை அவர்கள் முடிவு செய்யும் உரிமை பெற்றோர்களுக்கு உள்ளது.
  8. அப்பர் ஆத்தையின் புத்திதானே பிள்ளைகளுக்கு வரும்.
  9. Yesterday
  10. தற்போது பலாலி பகுதியில் எந்தளவு நிலம் இராணுவ வசம் உள்ளது என்பதை காட்டும் வரைபடம் ஏதேனும் உள்ளதா?
  11. திட்டம் 1 நாட்டில் வெள்ளை நிற வான்களுக்கான கேள்வியை அதிகரித்து, அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது. இப்படி பல திட்டம் கைசவம் இருக்கு. #சொல்லாமலே
  12. சின்ன கஜே எப்படி பேரம் பேசுவாராம்? ஒருவேளை கேட்கிறத தராட்டி தெற்குக்கு 50ஆயிரம் சவப்பெட்டி அனுப்புவோம் என்று பேசுவாரோ.
  13. கரைகள் ஓய்வை விரும்பினாலும் , அலைகள் விடுவதில்லை. கருத்தாளர் ஓய்வை விரும்பினாலும் அம்பனை விடுவதில்லை . #இந்தமாதம், சமய மாதம்
  14. 2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:35 -க. அகரன் வவுனியா மாவட்டத்தில், 1 இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு, சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, வவுனியா – கூமாங்குளம், குளக்கரை, அதனை அண்டிய பகுதிகளில், நேற்று (17) 1,000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு, வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால். 10 ஆயிரம் பனை விதைகள், வவுனியா பிரதேசத்தில் விதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/வவுனியாவில்-1-இலட்சம்-விதைகளை-நடும்-திட்டம்-ஆரம்பம்/72-236925 எழுத்தூர் குளத்தை ஆழப்படுத்த நடவடிக்கை 2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:30 எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் நகர சபைக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் காணப்படும் குளத்தை ஆழப்படுத்துவதற்கு மன்னார் நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக, மாவட்டத்தில் உள்ள குளங்கள், நீர் நிலைகள் வற்றிய நிலையில் உள்ளன. இந்த நிலையில், மன்னார் நகர சபைக்குட்பட்ட மக்களின் பயன்பாட்டில் காணப்பட்ட குறித்த குளமும் முழுமையாக வற்றியுள்ளது. இந்த நிலையில், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சனின் பணிப்புரைக்கு அமைவாக, குறித்த குளம் அகலப்படுத்தப்பட்டும் ஆழப்படுத்தப்பட்டும் வருகின்றது. இவ்வாறு ஆழப்படுத்தப்படும் போது, குறித்த குளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் மண், மன்னார் நகர சபைக்குட்பட்ட சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்புப் பணிக்குப் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/எழுத்தூர்-குளத்தை-ஆழப்படுத்த-நடவடிக்கை/72-236921
  15. 2019 ஓகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:19 -க. அகரன் வவுனியா மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறி வகுப்புகளால், மாணவர்கள் பாரிய குற்றச் செயல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதாக, தரணிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது. தரணிக்குளம் கிராமத்தில், பாடசாலை விடுமுறைக் காலங்களில் தனிமையில் வீடுகளிலும் வெளி இடங்களிலும் உலாவும் சிறுவர்கள், தீய செயல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகி, சிறுவயதிலேயே பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலை கடந்த காலங்களில் காணப்பட்டது. இந்நிலையில், கிராமப்புறங்களில் அறநெறி வகுப்புகள் நடைபெறுவதால், சிறுவர்கள் அறக் கல்விகளைப் பயிலும் அதேவேளை, தீய சமூகத்திலிருந்தும் பாதுகாக்கப்படுதவாக, தரணிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் http://www.tamilmirror.lk/வன்னி/அறநெறி-வகுப்புகளால்-குற்றச்செயல்கள்-தடுக்கப்படுகின்றன/72-236915
  16. நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் அணித் தலைவரின் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் கைகொடுக்க, இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், காலியில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டெய்லர் 86 ஓட்டங்களையும் நிக்கொலஸ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 5 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 267 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருந்தது. இலங்கை அணி சார்பாக டிக்வெல்ல 61 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 53 ஓட்டங்களையம் மெத்தியூஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் பட்டேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் 18 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 285 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும்இழக்க இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 267 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. தனது 2 ஆவது இன்னிங்ஸில் இலங்கை அபாரமாக விளையாடி வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. திரிமான்னேயின் அரைச்சதமும் (64) அணித்தலைவரின் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் (122) கைகொடுக்க இலங்கை அணி தனது சொந்த மண்ணில் கைத்து நியூசிலாந்து அணியை வெற்றி கொண்டு 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவுள்ளது. https://www.virakesari.lk/article/62878
  17. 97 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் போட்­டியின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் அட்­டனைச் சேர்ந்த குமார் சண்­மு­கேஸ்­வரன் முத­லிடம் பிடித்து தங்கப் பதக்கத்தினை சுவீ­க­ரித்தார். ஆண்­க­ளுக்­கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்­டியில் பங்­கேற்ற இரா­ணு­வத்தைச் சேர்ந்த குமார் சண்­மு­கேஸ்­வரன், போட்டித் தூரத்தை 31.47 நிமிடங்களில் ஓடி முடித்து முத­லிடம் பிடித்தார். இதன்மூலம் நேபா­ளத்தில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்கு தகு­தி­ பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து ‘வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்டு’ க்கு பிரத்­தி­யே­க­மாக கருத்து தெரி­விக்­கையில், “இந்த வெற்றி எனக்கு மிகுந்த உத்­வே­கத்தை தந்­தது. தெற்­கா­சியப் போட்­டியில் பங்­கு­கொண்டு இலங்­கைக்கு தங்கப் பதக்­க­மொன்றை பெற்­றுக் கொ­டுப்­பதே எனது இலட்­சி­ய­மாகும். இப்­போட்டி பிற்­ப­கல் ­வே­ளையில் நடை­பெற்­றமை ஓடு­வ­தற்கு கடி­ன­மாக இருந்­தது. எனது எதிர் போட்டியாளர்களுடன் கடுமையாக போராட வேண்டியிருந்தது. நானும் எதிர்­கா­லத்தில் மேலும் முன்­னேற்­ற­ம­டைந்து சிறந்த நேரப் பெ­று­தியில் ஓடி தேசிய சாத­னையை முறி­ய­டிக்க எதிர்­பார்த்­துள்ளேன்” என்றார். இப்­போட்­டியின் இரண் டாம் இடத்தை எம்.யூ. குமா­ரவும் மூன்றாம் இடத்தை குமார பண்டாரவும் பெற்றுக் கொண்டனர். https://www.virakesari.lk/article/62876
  18. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் கடவுளை வணங்குவோர் தமது உருவ வழிபாட்டு முறைக்கு சிலைகளை பயன்படுத்துவது தெரியும், அவர்களது நம்பிக்கையை மதிப்பதால் அவற்றை பொம்மையாக நான் பார்ப்பதில்லை. அவர்களது நம்பிக்கையை மதிக்காதோருக்கு தான் பொம்மையாக தெரியும்.
  19. வீரவணக்கங்கள்! எனக்கும் இது போல சிலர் இருக்கிறார்கள். (நம்மில் பலருக்கும் இருப்பார்கள்). உங்கள் எழுத்து அந்த நினைவுகளையும் கிளரிவிட்டது.
  20. என்ன பாஸ் பயணக் கட்டுரை எண்டுட்டு க்ரைம் நாவல் எழுதுறீங்க! செமயாக போகிறது ( பையன்களுடனா சம்பாசணைகள் மற்றும் வர்ணணைகள் தூள்). முன்பு தினமுரசில் அற்புதன் எழுதும் தொடருக்கு ஏங்குவதை போல, அடுத்த பாகத்தை வேண்டி ஏங்குது மனது. ஆனால் ஜிபிஎஸ் குறித்து போலீசார் சொன்னது சரியாகவே படுகிறது. Multi storied கட்டிடங்களில் கண்டு பிடிப்பது முடியாத காரியம்.
  21. இந்த பதவிக்கு யாழ் களத்திலேயே பல பொருத்தமான ஆட்கள் உள்ளார்களே?
  22. கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்படும் நஞ்சு. முன்பெல்லாம் நானறிந்த வகையில், ஏடு தொடக்கும் போது - வீட்டில் பெரியவரை அல்லது நன்கு கற்றறிந்த ஒருவரை கொண்டு தொடக்குவார்கள். இப்போ பெரும்பாலாக ஏடு தொடக்கலை செய்யது கோவிலில் வேலை செய்யும் பிராமணிகள். லண்டன் கோயில்களில் எல்லாம் சின்ன பிள்ளைகளை, ஐயர்மாரின் காலில் பெற்றோரே விழுந்து வணங்க வைப்பது சர்வ சாதாரணம். இலங்கையில் முன்பெல்லாம், ஐயர் கோவிலில் மணி அடித்து, பூசை செய்து பிரசாதம் வழங்குபவர் மட்டுமே. அவருக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. ஆனால் புலம் பெயர்நாடுகளில் ஐயர்மாருக்கு “குரு” அந்தஸ்து வழங்கப்படும் போக்கு அதிகரிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக, எமது அடுத்த சந்ததியை, தமிழ்நாட்டு மக்களை போல், பிராமணர்களை உயர்வான, பூசிக்கப் படவேண்டியவர்களாக நோக்கும் நிலைக்கு நாமே தள்ளுகிறோம்.
  23. இதற்கும் ஒரு தீர்வு உள்ளது. அதை நாம் இன்னும் அறிய, இல்லை அமுல்படுத்த முடியவில்லை.
  24. இலங்கை பெளத்த நாடு என்பதே ஆட்சியாளர்களின் உச்சாடணம் என்பதால் பெளத்த மதத்துக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படமாட்டாது. மாறாக கத்தோலிக்க மதத்தைப் பொறுத்த வரை கத்தோலிக்க சிங்களவர்களும் இருப்பதன் காரணமாகவும் வல்லாதிக்க நாடுகள் கத்தோலிக்க மதம் சார்ந்தவை என்பதாலும் இலங்கையில் கத்தோலிக்க நிந்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதற்கு மேலாக இஸ்லாமியத்தில் கைவைத்தால், கழுத்து வெட்டும் நாடுகள் பெற்றோலை வெட்டி விடும் என்ற பயம். எனவே இஸ்லாமியத்துக்கும் எந்த ஆபத்தும் இல்லை. மாறாக சைவ சமயம் இந்த நாட்டின் ஆதிச் சமயம். இலங்கை வேந்தன் இராவணன் சிறந்த சிவபக்தன். இலங்கையை சிவபூமி என்று திருமூலர் நாயனார் புகழ்ந்துரைத்துள்ளார். இப்படியயல்லாம் இருந்தும் சைவ சமயத்தை என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள். கேட்பதற்கு ஆள் உள்ளூரிலும் இல்லை. வெளிநாடுகளிலும் இல்லை என்ப தன் காரணமாக சைவ சமயத்துக்கு ஒரு சதமும் மதிப்பில்லை என்றாயிற்று. இந்த உண்மையை சைவ மதத் தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும். அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நல்லை ஆதீனத்தில் சைவ சமயத் தலைவர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு தொடர்பில் தகவல் தெரிவித்த சைவ சமயத் தலைவர்கள்; வெறும் வேலை, செப்படி வித்தை என்று கூறினார்கள். ஆக, இந்தச் சந்திப்பானது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையேயன்றி வேறில்லை என்பது புரிதற்குரியது. தவிர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டு மல்ல இலங்கையில் யார் பிரதமராக இருந் தாலும் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இதுவே நிலைமை. இதில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சைவ சமயத்தை மதிப்பதில்லை. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றில் தென்கயிலை ஆதீன சுவாமிகளுக்கு ஒரு பேரினவாதி கொதி நீரால் ஊற்றிய சம்பவம் நம் எல்லோர் மனதையும் சுட்டுக் கொண்டது. ஆனால் இன்று வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குக் கண்டனம் கூடத் தெரி விக்கவில்லை எனின் சைவ சமயத்துக்கு இருக்கக்கூடிய மதிப்பு என்ன என்பதை சைவ சமயத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். அதேநேரம் சைவ சமயத்தை மதிக்க வைப்போம் என்ற உறுதிமொழியையும் நாம் எடுத் தாக வேண்டும். இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் முதலில் சைவ சமயத்துக்கென ஒரு தலைமைப் பீடத்தை உருவாக்க வேண்டும். அந்தத் தலைமைப்பீடம் என்ன சொல்கிறதோ அதன்படியே சைவ மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கும்போது அரசியல்வாதிகள் கைகட்டி வாய்பொத்தி நிற்பார்கள். பெளத்த பீடங்களில் அரசியல்வாதிகள் எப்படி வளைந்து வந்தனம் செய்கிறார்களோ அதுபோல சைவத் தலைமைப்பீடங்களுக்கும் வருகின்ற அரசியல்வாதிகள் குந்தியிருந்து கும்பிடு போடுவர்கள். இது நிச்சயம் நடக்கும். http://valampurii.lk/valampurii/content.php?id=19276&ctype=news
  25. தமிழ் மக்களுக்கு விடுதலைக்காகப் போராடி மரணித்த வீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  1. Load more activity