யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. ஜானவி மூலே பிபிசி மராத்தி படத்தின் காப்புரிமை facebook Image caption பாயல் தட்வி பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தீபக் குடள் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மீரஜ் - சங்லி என்ற இடத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார் பாயல். கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக மும்மையில் உள்ள டோபிவாலா மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார். புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார். படத்தின் காப்புரிமை Getty Images "அப்போதே புகார் தர இருந்தேன். ஆனால் பாயல் என்னை தடுத்துவிட்டார். புகார் அளித்தால், அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று பாயல் அஞ்சினார்," என்று டீனுக்கு எழுதிய கடிதத்தில் ஆபீதா குறிப்பிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பப் பின்னணி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்தாலும், அவர் மருத்துவரானார் என்றும் தன் மகளின் சாதனை குறித்து தாம் பெருமைப்பட்டதாகவும் ஆபீதா கூறுகிறார். மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம் என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். பாயலின் மனநிலை குறித்து அவரது தாய் வருத்தத்தில் இருந்திருக்கிறார். மேலும் அத்துறையில் இருந்து மாற்றிக் கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இறுதியாக பாயல் மே 22ஆம் தேதி தனது வாழ்க்கையை முடிந்துக் கொண்டார். படத்தின் காப்புரிமை Jean-Francois DEROUBAIX மகாராஷ்டிரா இருப்பிட மருத்துவர்கள் அமைப்பு (MARD) இதில் சம்மந்தப்பட்ட இருப்பிட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துறை தலைவரையும் நீக்க வேண்டும் என்று பாயலின் குடும்பம் வலியுறுத்துகிறது. MARD அமைப்பின் உறுப்பினர்கள் பாயலுக்கு மரியாதை செலுத்தி, "எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் துணை நிற்போம். எங்கள் பிரார்த்தனைகள்" என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாயலுடன் வேலை பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். பாயலின் மரணம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபாடு காண்பிப்பது, மன அழுத்தம் போன்ற விவகாரங்கள் குறித்து மீண்டும் அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக, ஜே.ஜே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், டாக்டர் அம்பேத்கர் மருத்துவ அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ரீவட் கனின்டேவிடம் பேசினோம். "மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து வந்த மாணவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அப்போது அவர் எந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்திருப்பார் என்று நினைத்து பாருங்கள்" என்று அவர் கூறுகிறார். "அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 'சம வாய்ப்பு அறை' ஒன்று இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த கல்லூரிகளிலும் இது இல்லை. தங்கள் சொந்த ஊர்களில் இருந்து தள்ளி வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.சி - எஸ்.டி அலுவலரை நியமிக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறுகிறார். பேரிழப்பு மருத்துவக் கல்லூரியின் டீன் ரமேஷ் பர்மல், "திறமையான ஒரு மாணவரை இழந்துவிட்டோம். அவர் மரணம் எங்களுக்கு பேரிழப்புதான். கிராமப்புறத்திலிருந்து வந்தவர் அவர், கிராம மக்களுக்காக பணியாற்ற விரும்பினார்.” என்கிறார். மேலும் அவர், "சுகாதார அறிவியலுக்கான மஹாரஷ்ட்ரா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ மன்றத்தின் வழிக்காட்டலின்படி பகடி வதை எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவம் நடந்த அடுத்த நாளிலிருந்தே விசாரணையை தொடங்கிவிட்டார்கள். 25 பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்" என்கிறார்.. https://www.bbc.com/tamil/india-48415043
 3. பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தொல். திருமாவளவன். பேட்டியிலிருந்து: கே. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை தேசிய அளவிலும் தமிழக அளவிலும் எப்படிப் பார்க்கிறீர்கள்? ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது. கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா? நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.. ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது. ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா? ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும். கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள்? ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு. கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம்? ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது. கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள். அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார். நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம்? இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே.. ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு. மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன். படத்தின் காப்புரிமை FACEBOOK கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள்? ப. அதை நான் மறுக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் நின்றால் எளிதாக வென்றுவிடலாம் என்றாலும்கூட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக தனிச் சின்னத்திலே போட்டியிட்டு தேர்தலை சந்தித்துவந்திருக்கிறோம். இந்தத் தேர்தல்களில் எல்லாம் நாங்கள் தோல்வியைச் சந்தித்தாலும்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்துவரும் கட்சி; சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டுவரும் கட்சி. ஆகவே அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு தொகுதிகளிலுமே தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். முடிவெடுத்தோம். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் மூன்று - நான்கு முறை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். கடலூர் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். 2001ல் நான் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றேன். அதன் பிறகு தொடர்ச்சியாக தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுவருகிறோம். 2006ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி ஜெயலலிதா அம்மையார் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அப்போது நாங்கள் மணிச் சின்னத்தில் போட்டியிட்டு கடலூரில் 2 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனாலும் அப்போது விழுப்புரத்தில் வெற்றிபெற முடியவில்லை. 2009ல் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, நான் சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் சின்னத்தில் வெற்றிபெற்றேன். அப்போதும் விழுப்புரம் மாவட்டத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். 2011ல் மெழுகுவர்த்தி சின்னத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனால், தி.மு.க. அணிக்கு எதிரான அலை தமிழ்நாடு முழுவதும் வீசியது. ஆகவே போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தோம். அப்போது நாங்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய இரு தொகுதியிலுமே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம் என்ற திருப்தி இருந்தது. 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நான் 3,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்தார்கள். சில நிமிடங்களில் 87 வாக்குகளில் நான் தோற்றதாக அறிவித்தார்கள். வெற்றியோ, தோல்வியோ 25 இடங்களில் தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம் என்பது ஒரு சிறப்பு. இந்த முறையும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றுதான் விரும்பினோம். ஆனால், விழுப்புரத்தில் மறுபடியும் தனிச் சின்னத்தால் வெற்றிவாய்ப்பை இழந்துவிடக் கூடாது; கூட்டணிக் கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தோம். அதனால் நான் தனிச் சின்னத்திலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவெடுத்தோம். இப்போது இரு தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திருக்கிறது. இது போராடிக் கிடைத்த வெற்றி என்றாலும்கூட தனித் தன்மையோடு வி.சி.க. ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்ற வரலாற்றை பதிவுசெய்திருக்கிறோம். கே. அடுத்த ஐந்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ப. மக்களுடைய உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க முடியும். மதசார்பின்மையைப் பாதுகாப்பதுதான் இப்போது நம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவால். சிறுபான்மை மக்களுக்கு, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, பெண்களுக்கு இந்துத்துவ, சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான ஒரு போராட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்களால் முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன். மற்றபடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம். என்றாலும் சாலைகளை அமைத்தோம், கட்டடங்கள் தந்தோம், வேலைவாய்ப்பு தந்தோம் என்பதையெல்லாம்விட அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்தினோம் என்பதற்கான வாய்ப்பாக இந்த ஐந்தாண்டு காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.. https://www.bbc.com/tamil/india-48422301
 4. May 27, 2019 யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது. காணிகளுக்கு போலி (கள்ள) உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பட்டுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயங்கள் அவர்களுக்கு தெரியவருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/122828/
 5. May 27, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. காவல்துறையினரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் காவல்துறையினர் மற்றும் படையினர் ஈடுபட்டதுடன் பாடசாலை சூழல் மோப்ப நாய்களைக் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் அனைவரது பொதிகளும் சோதனையிடப்பட்டன. 21ம்திகதி தாக்குதலின் பின்னர் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் கெடுபிடிகள் படிப்படியாக குறைவடைந்து வந்த நிலையில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #கிளிநொச்சி #பிரபல #பாடசாலைகளில் #விசேட சோதனை #kilinochchi #checking http://globaltamilnews.net/2019/122791/
 6. இளையராஜா அவரின் இசை அற்புதமானது அதே போல் ar ரகுமான் மனதை கொள்ளை கொள்ளும் ஆனால் இப்போது இந்தகாலத்துக்கு ஏற்றது போல் யாரிடமும் கேட்க்க கூடிய பாடல்கள் உருவாகுவது இல்லை திடிரென இந்த பூமியில் பாடல் பிறப்பு நின்றுவிட்டது போல் ஒரு பிரமை .
 7. Today
 8. தோப்பில் எனும் நவீனத்துவர் – மானசீகன் May 22, 2019 இஸ்லாம் தமிழ் மண்ணில் வேரூன்றிய காலத்திலிருந்து இஸ்லாமியர்களும் இங்கே இலக்கியங்களைப் படைத்துக் கொண்டு தான் இருந்தனர். சீறாப்புராணம், குத்பு நாயகம், ராஜநாயகம் போன்ற காப்பியங்களும் மஸ்தான் சாகிபு, பீரப்பா ஆகியோர் எழுதிய ஞானப் பாடல்களும் தமிழ் மரபின் சுவையோடு படைக்கப்பட்டன. அருணகிரிநாதர் எழுதிய அதே ஓசையோடு காசிம் புலவர் ‘திருப்புகழ்’ படைத்தார். சிற்றிலக்கியங்களில் ‘உலா’ தவிர்த்த அனைத்து வடிவங்களிலும் இஸ்லாமியப் புலவர்கள் படைப்புகளைப் படைத்தனர். முனஜாத்து, நாமா, கிஸ்ஸா, படைப்போர் போன்ற சிற்றிலக்கிய வடிவங்களை அவர்கள் புதிதாக உருவாக்கி தமிழுக்குக் கொடையாகத் தந்தனர். பிச்சை இப்ராஹிம் புலவர் போன்றோர் இலக்கணக் கோடரி என்று போற்றப்படுகிற அளவுக்கு தமிழ் இலக்கணத்தில் புலமை பெற்றிருந்தார். ‘மிஃறாஜ் மாலை’ எழுதிய ஆலிப்புலவர் சகலராலும் கொண்டாடப்பட்டார். வள்ளலாரின் பாடல்களை மருட்பா என்று வாதிட்ட இந்துவுக்கு ( ஆறுமுக நாவலர் ) எதிராக ஓர் இஸ்லாமியர் தான் (சதாவதாணி செய்குத்தம்பிப் பாவலர்) முஷ்டி முறுக்கி வாதிட்டார். ஆனால் நவீனத்துவம் புதுமைப்பித்தன் போன்றோரால் தமிழில் அறிமுகமான போது அந்த இலக்கிய ஜோதியில் இஸ்லாமியர்கள் தம்மை இணைத்துக் கொள்ளவில்லை. இதற்குப் பல காரணங்களைச் சொல்ல முடியும் . 1. கல்வி அறிவு மிகவும் குறைவாகப் பெற்றிருந்த இஸ்லாமியர்களிடையே செவி வழியாக மரபான தமிழ் இலக்கியங்களும், இஸ்லாமிய இலக்கியங்களும் போய்ச் சேர்ந்ததைப் போல நவீன இலக்கியங்கள் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. 2. கொஞ்ச நஞ்ச அறிவுஜீவிகளும் ஆங்கிலத்தையும் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகளையும் இஸ்லாத்திற்கு எதிரான ஒன்றாகவே கருதியதால் அவற்றைப் புறம் தள்ளியிருக்கலாம் ( சுதந்திர போராட்ட காலத்தில் தேவ்பந்த் மதரசா ஆங்கிலத்தை ‘ஹராம்’ என்று அறிவித்தது. இதன் எதிர்வினையாகவே சர் சையது அகமது கான் தொடங்கிய அலிகர் பல்கலைக்கழகத்தைப் பார்க்க முடியும் ) 3. அதுவரை இஸ்லாமியர்கள் படைத்த இலக்கியங்கள் யாவும் தம் சமயத்தை தமிழ் மண்ணின் மரபுகளோடு இணைத்துப் பாடப்பட்டவைகளாகவே இருந்தன. உருது, பாரசீக மொழியில் இருந்ததைப் போல சமயத்தைத் தாண்டிய கவிதை மரபு தமிழக இஸ்லாமியர்களிடையே உருவாகவில்லை. 4. இஸ்லாமியர்களின் அறிவுப் போக்கைத் தீர்மானிக்கும் அதிகார மையங்களாக மத குருக்களே கோலோச்சினர். அவர்கள் அப்போது உருவாகி வந்த நவீன இலக்கிய வாசிப்பை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மரபான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களே ஓரளவு விபரம் தெரிந்த இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இலக்கியங்களாக அறியப்பட்டிருந்தன. பிறர் மதகுருக்களின் உரைகளையே தங்களுக்கான ஒரே அறிவு வழிகாட்டுதலாக எண்ணி வாழ்ந்து கொண்டிருந்தனர். 5. இஸ்லாமியர்கள் அரசியல் விழிப்புணர்வைப் பெற்று காங்கிரஸ், முஸ்லீம் லீக், திமுக போன்ற இயக்கங்களில் ஈடுபட்ட போதும் அவர்களின் வாசிப்பு அபுனைவுகளாகவே இருந்தன. அந்த இயக்கங்களும் பொதுவான இலக்கிய வாசிப்புகளை ஊக்குவிக்கவில்லை. திக, கம்யூனிஸ்ட் போன்ற கடவுள் மறுப்பு இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்த முஸ்லீம்கள் பெரும்பாலும் அந்நிய சக்திகளாகவே சமூகத்திற்குள் செயலாற்றி வந்தனர். 6. அரசியலிலும் கூட பெரும்பாலான இஸ்லாமியர்கள் செயல் வீரர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். வாசிப்புப் பழக்கம் கொண்ட அறிவுஜீவிகள் மிகவும் குறைவு. 7. கதை, கவிதை ஆகியவை ஹராம் என்கிற மனப்போக்கை பின்நாட்களில் வஹாபிகளே கற்பித்தாலும், சமயம் சாராத கதை கவிதைகளை பெருமளவில் நாடாத மனநிலையையே பொது இஸ்லாமிய சமூகத்திற்குள் மதகுருக்கள் உருவாக்கி வைத்திருந்தனர். எனவேதான் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் முளைவிட்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிளை பரப்பிய நவீனத்துவ எழுத்து அதன் அசலான வீச்சோடு இஸ்லாமிய சமூகத்திலிருந்து வெளிப்பட எண்பதுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ( அப்போதும் அந்தப் படைப்புகள் இஸ்லாமிய சமூகத்தை பெரிய அளவில் தொடவேயில்லை ) தமிழ், மலையாளம், அரபு ஆகிய மூன்று கலாச்சாரங்களின் திரிவேணி சங்கமமாகத் திகழ்ந்த தேங்காய்ப்பட்டினம் தான் தோப்பிலின் சொந்த ஊர். செத்துப் போன இஸ்லாமியர்களைப் புதைக்கிற கபுர்ஸ்தானுக்குப் பக்கத்தில் வாழும் எளிய மனிதர்களை ‘தோப்புக்காரர்கள்’ என்று சற்று இழிவோடு கூறும் வழக்கம் அங்கு இருந்திருக்கிறது. அதையே தன் அடையாளமாக்கிக் கொண்டார் தோப்பில். கேரளாவில் வீட்டுப் பெயரைச் சொல்லி மனிதர்களை அழைக்கிற வழக்கம் உண்டு. புனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய ‘மீசான் கற்கள்’ நாவலில் இப்படி ஒரு காட்சி வரும். இஸ்லாமிய மாணவர்கள் அதிகம் படிக்கிற ஒரு பள்ளிக்கு ஒரு கல்வி அதிகாரி வருவார். அவர் ஒரு பையனிடம் பெயர் கேட்பார். அவன் ‘கம்பி வேலிக்குள் அசன்’ என்று பதில் சொல்வான். எல்லாம் முடிந்து போகிற போது ‘அடுத்த தடவை நான் வர்றதுக்குள் கம்பிவேலியை விட்டு வெளில வந்துரு’ என்று சொல்லி விட்டுப் போவார். புனத்திலின் தாக்கம் தோப்பிலிடம் அதிகம் உண்டு. இஸ்லாமிய நாவல்கள் பெரும்பாலும் கடந்த காலப் பின்ணணியைக் கொண்டே எழுதப்பட்டிருக்கின்றன. தோப்பில் ஐம்பதுகளுக்கு முந்தைய சித்திரத்தையே பெரும்பாலும் முன்வைக்கிறார் ( கூனன் தோப்பை மட்டும் கொஞ்சம் பிந்தைய காலகட்டத்தில் நிகழ்வதாகப் படைத்திருக்கிறார் ). மீரான் மைதீன், ஜாகிர்ராஜா (பெரும்பாலான நாவல்கள்), சல்மா, அர்ஷியா ஆகியோரின் நாவல்கள் எண்பதுகளில் நிகழ்வதாக எழுதப்பட்டிருக்கின்றன. ஏன் இஸ்லாமிய நாவலாசிரியர்கள் சமகாலத்தை அதிகம் பேசவில்லை என்பது தனித்த விவாதங்களுக்கு உரியது. தோப்பில் பெரும்பாலும் நவீனத்தின் குரலை ஒலிக்கிறார். அந்தக் குரல் மதப்பழமைவாதத்திற்கும் நிலவுடைமைக்கும் எதிராக ஒலிக்கிறது. கடற்கரையோர இஸ்லாமிய கிராமங்களில் நிலவுடைமை சார்ந்த மனநிலையோடு பொருளாதாரச் சுரண்டல், எதேச்சதிகாரம், ஆணாதிக்கம், சாதிய மனநிலை, ஆண்டான் – அடிமை மனோபாவம் ஆகியவற்றை முன்னிறுத்துகிற அகமது கண்ணு முதலாளி மதத்தைத் தனக்கேற்ப வளைத்துக் கொள்வதையும் பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத மதகுருமார்கள் அதற்குப் பணிந்து போவதையும் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலில் பேசுகிறார். அதற்கு மாற்றான தீர்வாக தோப்பில் கல்வியையையே முன்நிறுத்துகிறார். ஆனால் மதமும், அதிகாரமும் அந்தப் புதிய மாற்றங்களை தோற்கடித்து விடுவதான சித்திரங்களையே அவர் படைப்புகளில் காண்கிறோம். ஆங்கிலப் பள்ளிக்கூடம் மதப்பழமைவாதத்தால் தீ வைத்து எரிக்கப்படுவதும் (ஒரு கடலோர கிராமத்தின் கதை), எந்த வாழ்வாதாரமும் இல்லாத எளிய சிறுவனான பீருடைய வீடு முதலாளித்துவத்தால் சூறையாடப்படுவதும் ( துறைமுகம் ), எந்த மதம் என்று அடையாளம் காண முடியாத பெண்ணுடல் மதக்கலவரத்தால் கரை ஒதுங்கிக் கிடப்பதும் (கூனன் தோப்பு), பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டத் தருணத்தில், எப்போதும் நம்பிக்கையோடிருக்கும் வாப்பா, நபிகள் நாயகம் போல் விண்ணுலகப் பயணம் சென்று புராக் வாகனத்திலிருந்து கீழே விழுவதைப் போல் கனவு காண்பதும் (அஞ்சுவண்ணம் தெரு), திருவிதாங்கூர் சமஸ்தானமே கொண்டாடிய மாபெரும் வீரனின் கடைசி வாரிசு கடற்கரையில் அநாதையாக செத்துக் கிடப்பதும் (சாய்வு நாற்காலி) என்று வீழ்ச்சியே அவர் நாவல்களின் உச்சக்காட்சிகளாகப் படைப்பட்டிருக்கின்றன . கலை, கலாச்சாரம், மானுட விழுமியங்கள், மரபான அந்தஸ்து, நல்லிணக்கம் ஆகிய சிகரங்களிலிருந்து இந்தச் சமூகம் சீரழிவை நோக்கி இறங்கிப் போன சித்திரங்களையே தோப்பில் அதிகம் முன்வைத்திருக்கிறார். நபிகள் நாயகத்தின் ரத்த வாரிசுகளாக தம்மைச் சொல்லிக் கொள்ளும் இந்திய இஸ்லாமியர்களுக்கு ‘தங்கள்கள் ‘என்று பெயர். இவர்கள் நன்றாக அரபி மொழியை கற்றிருப்பதோடு ஜின்கள், செய்வினை, மாந்த்ரீகம் ஆகியவற்றையும் நன்கு அறிந்தவர்கள். தோப்பிலின் கதைவெளியெங்கும் ‘தங்கள்கள்’ தேவதை முகமூடிகளைப் போட்ட சாத்தான்களாக வந்து போகிறார்கள். ஒரு கடலோர கிராமத்தின் கதையில் வரும் ‘தங்கள்’ ஊரை ஆட்டிப் படைக்கும் முதலாளியின் தலையில் உட்கார்ந்து அவரையே ஆட்டிப் படைக்கிறார . குழந்தையில்லாத பெண்ணுக்கு ஓதிப் பார்ப்பதாகச் சொல்லி அவளைக் கற்பழிக்கும் ‘தங்கள்’ அவர் காணாமல் போன பிறகு புனிதராக்கப்படுகிற சித்திரம் அந்த நாவலில் இடம் பெற்றிருக்கிறது. ‘தங்களுக்கும்’ அகமது கண்ணு முதலாளிக்கும் இடையிலான உறவு மிக முக்கியமானது. ‘தங்கள்’ சொகுசாக வாழ இவர் உதவுகிறார். இவருடைய நிலப் பிரபுத்துவத்தை மதத்தின் பெயரால் செயல்படுத்த ‘தங்கள்’ வழியமைத்துத் தருகிறார். இந்து மதத்தின் பிராமண & சத்ரிய கூட்டணியின் தொடர்ச்சியை இங்கும் வேறு வடிவத்தில் பார்க்க முடிகிறது. விபச்சாரம் செய்வதற்கு காசு வேண்டும் என்பதற்காக நிகழும் ஒரு சாதாரணக் கோழித் திருட்டு மிகப்பெரிய மதக்கலவரத்தில் முடிவடைவதை ‘கூனன் தோப்பில்’ சித்தரித்திருக்கிறார். இஸ்லாமிய மீனவர்களுக்கும் கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இடையிலான இந்தச் சண்டையில் வசதி படைத்த சாயபுகள் எடுக்கும் விலகிய நிலையையும் தோப்பில் சித்தரிப்பதன் வழி மதக் கலவரங்களுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் வர்க்க அரசியலை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். அந்தக் கலவரத்தின் போது ஜமாத் தலைவர் குடும்பத்தோடு வெளியூரில் அறை எடுத்துத் தங்கியிருப்பார். படத்திற்குப் போகும் போது மனைவியை முட்டாக்கு போட வேண்டாம் என்று தடுப்பார். சாதாரணத் தருணங்களில் பெண் உடலை மூடச்சொல்லும் அதே ஆண்கள் தங்கள் இரட்டை வேடம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக முட்டாக்கை எடுக்கச் சொல்லும் சித்திரம் மிக முக்கியமானது. இலங்கையில் முகத்தை மூடச் சொல்லி வலியுறுத்திய சர்வ வல்லமை பொருந்திய ஜமாத்துல் உலமா சபை, குண்டு வெடிப்பிற்குப் பிறகு ‘முகத்திரையை அகற்றுங்கள்’ என்று சிங்கள அரசாங்கத்தின் அதே குரலில் கட்டளை பிறப்பித்திருப்பதை தோப்பிலின் சித்தரிப்போடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெண்களின் உடை விஷயத்தில் முற்போக்கோ பிற்போக்கோ என்னவாக இருந்தாலும் அது ஆண்களால் அவர்கள் வசதிக்கேற்பவே தீர்மானிக்கப்படுகிறது என்கிற குறிப்பை தோப்பில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தன் நாவலில் படைத்துக் காட்டியிருக்கிறார். ‘துறைமுகம்’ நாவலில் வரும் காசிம் ஒரு காந்தியவாதி. நவீனத்தை அவன் காந்தியின் வழியாகவே உணர்கிறான். கட்டாய மொட்டையடித்தல், கல்வியறிவின்மை, குழந்தைத் திருமணம், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை முறியடிப்பதற்கு அவன் காந்தியத்தையே தனக்கான கை விளக்காகக் கொள்கிறான். இது இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்தவரை அரிதான சித்திரம் என்றே சொல்லலாம். ஜின்னா மற்றும் காயிதே மில்லத்தின் முஸ்லீம் லீக், திமுக போன்ற இயக்கங்களுடனும் அரிதாக இடதுசாரிகளுடனும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதே தொண்ணூறுகளுக்கு முந்தைய தமிழ் முஸ்லீம்களின் பொதுவழக்காகும். இஸ்லாமியனாகப் பிறந்து நவீனத்துவத்தை நோக்கி நகர்கிற ஒரு காந்தியனின் சித்திரம் மிக மிக முக்கியமான ஒன்று. தோப்பிலின் படைப்புகளில் இடைவிடாமல் ஒலிக்கும் பெண்ணியக் குரலை அவரது நுட்பமான வாசகர்கள் கண்டுணர்ந்திருப்பார்கள். ‘நாம வீட்டு மிருகம். ஊமைப்பிராணி. நமக்கென்ன சுதந்திரமிருக்கு? ஒரு குஷ்டரோகியின் கையிலிருக்கும் தாலிக்கு கழுத்தை நீட்டிக் கொடுக்கச் சொன்னா கழுத்தை நீட்டிக் கொடுக்கவும் அவர் படுக்கை அறையில் அவரோடு படுத்து தன் ஜென்மங்களை பாழ்படுத்த விதிக்கப்பட்ட அனுசரணையுள்ள மிருகம்’ என்கிற குரல் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்குச் செய்யும் அவலம் நிரம்பிய உபதேசம் மட்டுமே இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறாறுக் கொடுமையின் இன்னொரு சாட்சி. உலகெங்கும் நீடித்த பால் பயங்கரவாதத்திற்கு ‘உள்ளேன் ஐயா’ என்று கையைத் தூக்கிக் காட்டும் இன்னொரு அடையாளக் குரல். சமீபத்தில் முகநூலெங்கும் பேசுபொருளான ‘இஸ்லாமிய ரோஜாக்களுக்கான’ அறிவுரைகளின் சாரம் இதுவன்றி வேறென்ன? அதைத் தான் மீரானும் மாறாத துயரமாகச் சாடியிருக்கிறார். ‘சாய்வு நாற்காலி’ நாவலில் நூர்கண்ணு முதலாளி மைனிமார்களின் சாதாரணக் கிண்டலுக்கும், ‘ஏன் மாட்டு வண்டில வந்தீஹ? சொல்லியிருந்தா குதிரை வண்டி அனுப்பியிருப்பேனே?’ என்ற மாமனாரின் யதார்த்தமான கேள்விக்கும் கூடக் கோபப்பட்டு மூன்று திருமணங்களைச் செய்கிறார். அவருடைய மகன் ‘அதபுப் பிரம்பால்’ ஒரு பெண்ணையே அடித்துக் கொலை செய்கிறார். சகலத்தையும் தொலைக்கும் அகமது கண்ணு மனைவியை நாயை விட கேவலமாக நடத்துகிறார். இந்த சித்திரங்களை தோப்பில் தன் நாவல்களில் வெறுமனே வரையவில்லை. அடையாளம் காட்டியிருக்கிறார். இந்தக் கறைகளை நீக்கிய பிறகு உங்கள் லட்சியக் கனவுகளை ஸ்தாபித்துக் கொள்ளுங்கள் என்று கர்ஜிக்கிற சீர்திருத்தக்காரனின் ஆதங்கம் அது. கிறிஸ்தவத்தைப் போல இஸ்லாம் வைதீக மரபின் சாதியை உள்வாங்கவில்லை என்றாலும் கூட மனிதர்களின் மனவெளியில் சாதியடுக்கு உருவாக்கிய பார்வைகளை அந்த மதத்தாலும் வெல்ல முடியவில்லை. பெரும்பாலான தமிழக இஸ்லாமியர்களிடையே அவர்களுக்கே தெரியாத ஒரு இடைசாதி மனநிலை உண்டு. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பாரம்பர்யமான ஊர்களில் உள்ள பணக்காரக் குடும்பத்தினருக்கு பிராமணர் அல்லாத உயர்சாதி மனநிலை இருக்கும். இவற்றின் தடங்களை தோப்பிலின் நாவல்களில் காணலாம். கடலோரத்தில் முதலாளிகளாக வாழும் சாயபுகள் மீனவ இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் ஒரே தட்டில் வைத்து நோக்குகிற சித்திரம் ‘கூனன் தோப்பில்’ இடம் பெற்றிருக்கிறது. சாய்வு நாற்காலியில் சில தலைமுறைகளுக்கு முன்பு நாடார் சமூகத்திலிருந்து மதம் மாறிய குடும்பத்திலிருந்து பவுரீன் பிள்ளை உப்பாவின் குடும்பத்திற்கு வாக்கப்பட்டு வந்தவளை ‘நிக்கொப் பெத்தாம்மா களீக்காலெயிலெ இருந்து கொளச்செ வரெ மொலையெ தொறந்திட்டு நடுத்தெரு வழி ஓடுனது தெரியாதாக்கும்’ என்று அவள் நாத்தனார் ஏசுகிறாள். இந்த ஏசலுக்குப் பின்னால் நாடார் பெண்களை முலையறுத்த வரலாறு இருக்கிறது. அதுமட்டுமல்ல, தம்மைப் பிள்ளைகளோடு நிகழ்ந்த அரேபியக் கலப்பால் உருவான இனமாகக் கற்பனை செய்து கொண்டு இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிறகும் அவர்களை நாடார்களாகவே கருதி கீழ்நிலையில் வைத்துப் பார்க்கும் வருண மனநிலையும் வெளிப்பட்டிருக்கிறது. அந்த உண்மையை தோப்பில் திரை விலக்கிக் காட்டும் அரிய தருணமே இந்த உரையாடல். மீரானின் மிக முக்கியக் குறைகளாக நான் இரண்டு விஷயங்களைப் பார்க்கிறேன். ஒன்று, பாத்திரங்கள் வழி அவர் உருவாக்கும் கருப்பு வெள்ளைச் சித்திரம். நிலபிரபுத்துவம் X கல்வி, மதப்பழமைவாதம் X சீர்திருத்தவாதம், சுரண்டல் முதலாளித்துவம் X காந்தியம், ஜமாத் அமைப்பு X தனிநபர் சீர்திருத்தவாதம் என்கிற இருமைகளை உருவாக்கி அதற்கேற்ப பாத்திரங்களை உருவாக்குகிறார். ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம் போன்ற இரு நாவல்களிலும் இப்படிப்பட்ட சித்திரங்களே இடம் பெற்றிருக்கின்றன. அதனால் அவை சண்டை மற்றும் டூயட் காட்சிகள் இல்லாமல் இறுதியில் நம்பியாரே வெல்லும் எம்ஜிஆர் படங்களைப் போல் முடிந்து விடுகின்றன. தோப்பிலின் மிகப்பெரிய பலமான பாத்திர உரையாடல்களில் வெளிப்படும் வட்டார மொழியே நாவல்களை முக்கியமானவைகளாக மாற்றுகின்றன. அப்படிப்பட்ட இருமைகளை உருவாக்காத வேறு இரு நாவல்களான கூனன் தோப்பும் அஞ்சுவண்ணம் தெருவும் நாடகத்தனமான காட்சிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த நாவல்களிலும் வட்டார மொழியே நாவலின் பலவீனங்களை ஈடு செய்கின்றன. கறுப்பு வெள்ளைச் சித்திரங்களோ, நாடகத்தனமான காட்சிகளோ இன்றி தேர்ந்த கலையமைதியுடன் எழுதப்பட்ட நாவலாக நான் ‘சாய்வு நாற்காலியை’ மட்டுமே குறிப்பிடுவேன். நிலப் பிரபுத்துவத்தின் வீழ்ச்சியை ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக் கொண்டு நனவோடை உத்தி வழியாக கதையைச் சொல்லி மிகச் சிறந்த கலையனுபவத்தைத் தருகிற நாவல் அது மட்டும் தான். தோப்பிலின் படைப்புகளில் புற உலகச் சித்தரிப்புகள் துல்லியமாக இருந்தாலும் காலகட்டத்தைக் குறிப்பிடும் சித்திரங்கள் மிக மிகக் குறைவு. ‘சாய்வு நாற்காலி’ நாவலில் கூட கடந்த கால வரலாறான திருவிதாங்கூர் சமஸ்தானச் சண்டையை வர்ணிப்பதில் காட்டும் அக்கறையை அவர் அகமது கண்ணு முதலாளி வாழும் நிகழ்கால வரலாற்றைச் சித்தரிப்பதில் காட்டவில்லை. வரலாற்றின் அரவங்களற்ற தனித்தீவில் தன் கதாபாத்திரங்களை சமய அடையாளங்களோடும் தொன்மங்களோடும் கடத்திக் கொண்டு போய் ‘ம்… வாழ்ந்து காட்டுங்கள்’ என்று மீரான் ஆணையிட்டதைப் போலவே அவர் நாவல்கள் நிகழ்ந்து முடிகின்றன. அவருடைய இன்னொரு பலவீனம், சூஃபிகள் குறித்த சித்தரிப்பு. போலியான சூஃபிகளை அடையாளம் காட்டுவது தவறென்று நான் கருதவில்லை. கண்டிப்பாக படைப்புகளில் அவை நிகழ வேண்டும். ஆனால் தன் சமயத்தின் ஆன்மீக சாரமான சூஃபியிசத்தை அவர் வெறுமனே தட்டையான கறுப்பு வெள்ளைப் பார்வையிலேயே அணுக முயன்றிருக்கிறார். இன்றைய சூழலில் அவருடைய நாவல்களின் பல பகுதிகளை வஹாபியர்கள் தாராளமாக தங்கள் கருத்துகளை நிலைநாட்ட எடுத்துப் பயன்படுத்தி விட முடியும் ( சமகாலத்தில் நிறைய பெரியாரியர்கள் அதே அளவுகோலில் சூஃபியிசத்தை அணுகுவதாலேயே மறைமுகமாக வஹாபியிசத்திற்கு துணை போகின்றனர் ) அதற்காக அவரை வஹாபிய மனநிலை கொண்டவர் என்று கூறிவிட முடியாது. மாறாக, அவர் சூஃபியிசத்தை அற்புதங்கள், தர்ஹா, மாந்த்ரீகம் என்கிற அளவிலேயே மேம்போக்காக புரிந்து வைத்திருந்தார். அதன் மூலமாக நிகழும் மானுடத் தவறுகளை அடையாளம் காட்டியே வஹாபியர்கள் சூஃபியிசத்தை பழமைவாதமாகக் கட்டமைத்து நவீன மனங்களை வென்றெடுத்தனர். தெரிந்தோ தெரியாமலோ தோப்பிலின் படைப்புலகமும் அதே திசை நோக்கி நகர்ந்திருக்கிறது. முல்லாயிசத்திற்கும் சூஃபியிசத்திற்குமான வேறுபாட்டையும் கூட அவர் சரிவர விளக்கவில்லை. ‘துறைமுகம்’ நாவலில் சகல அயோக்கியத்தனங்களையும் செய்யும் இப்னு ஆலிசம் தன்னை அஜ்மீர் காஜாவின் சிஷ்யனாக அடையாளப்படுத்திக் கொள்கிறான். டெல்லி அதிகாரத்தை எதிர்த்து மக்களின் ஞானியாக வாழ்ந்த அஜ்மீர் காஜாவுக்கும் இப்னு ஆலிசமிற்கும் இடையிலான வேறுபாட்டை தோப்பில் சொல்ல முனைவதே இல்லை. தொண்ணூறுகளுக்குப் பிறகு வஹாபியர்களின் அட்டகாசங்கள் அளவுக்கு அதிகமாக பொதுவெளியை ஆக்கிரமித்தன. அவருடைய ‘அஞ்சுவண்ணம் தெரு’ நாவல் 2000திற்க்குப் பிறகு ‘சமநிலைச் சமுதாயம்’ இதழில் வெளிவருகிறது. அந்த நாவலில் சமகாலப் பிரச்சினைகள் பேசப்படுகின்றன. வஹாபிகளைப் பற்றி தோப்பில் முதன்முதலாக வாய் திறக்கிறார். ஆனால் அவர் இரு சிந்தனைப் பள்ளிகளின் மோதலாக மட்டுமே வஹாபியர்கள் பத்தாண்டு கால அட்டகாசங்களைக் கடந்து செல்கிறார். முல்லாக்கள் மற்றும் ஜமாத்தினர் ஆகியோருக்கும் வஹாபிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் இந்த மண்ணின் பண்பாட்டு வெளியும், நல்லிணக்கமும் அடித்து நொறுக்கப்பட்டதையோ அதற்கான தீர்வாக இந்த இரண்டையும் கடந்த சூஃபியிசம் மட்டுமே இருக்க முடியும் என்பதையோ அவர் பதிவு செய்யவேயில்லை ( ஒருவேளை அவருக்கே கூட அதுகுறித்த அக்கறையின்மை இருந்திருக்கலாம்). ‘கூனன் தோப்பு’ நாவலில் ஒரு காட்சி வரும். வாலை மஸ்தான் தர்ஹாவில் சகலரும் வேண்டிக் கொள்வார்கள். வாப்பாவிடம் பல தடவை எடுத்துச் சொல்லியும் டவுசர் கிடைக்காமல் கிழிந்த டவுசரோடு உலா வரும் பீர் மாபெரும் ஞானியான வாலமஸ்தானிடம் ‘வாப்பா எனக்கொரு நிக்கர்’ என்று வேண்டுகிறான். சகல புனிதங்களையும் கலைத்துப் போட்டு மானுடத் தேவை குறித்துப் பேசும் இந்த சித்தரிப்பு மிக முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவருடைய படைப்பு வெளியில் ஆன்மீகம் இந்தப் புள்ளியை விட்டுத் தாண்டுவதே இல்லை என்பதுதான் பிரச்சினை. இனவரைவியல் நாவல்களில் கடந்த கால பண்பாட்டுப் பெருமிதங்களும் நிகழ்காலச் சீரழிவுகளும் பேசப்படும். அந்த முரணியக்கத்தின் நடுவே மானுடப் பாத்திரங்களைத் தாண்டி விஸ்வரூபமெடுத்து நிற்கும் வரலாற்றுப் பெருவெளியில் கண்ணுக்குப் புலனாகாத ஒரு சூட்சம சக்தி ஒரு அலையாக மேலெழுந்து சகலத்தையும் வாரி தனக்குள் சுருட்டிக் கொள்ளும். அவருடைய படைப்புகளில் வரலாற்றின் கொந்தளிப்பும் இல்லை. அந்தப் பேரலையின் கருணையுமில்லை. சீர்திருத்தக்காரனின் விவரணைகளுடன் கூடிய துல்லியமான ஆவேசம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. சர்ச்சுகளுக்குள் அடைபடாத இயேசுவின் கருணை, மதம் பார்க்காமல் சகலருக்கும் பாலூட்டும் கடலம்மாவின் கறுத்த மார்பு, உள்ளூர் தேவதையின் கையசைப்பு, கடலில் மிதக்கும் மோசேயின் கைத்தடியின் அசைவு, மன்னர்களின் வாளுக்கு அஞ்சாத சூஃபிக்களின் பாடல் இவற்றை அறியாமலே பல நவீனத்துவர்கள் வரலாற்றின் மீதான தங்கள் தீர்ப்பை எழுதி விடுகின்றனர். அவர்களில் தோப்பிலும் ஒருவர். தான் விமர்சிக்கும் அதே புழுதியில் முளைத்தெழுந்த ரோஜாவை நுகர்கிற போது தான் படைப்பாளி இருமைகளைத் தொலைத்து தன் படைப்புக்குள் தொலைந்து போகிறான். தன் சமூகத்தின் அவலங்களைக் கண்டு கொதித்த நிஜமான சீர்திருத்தக்காரர் தான் தோப்பில். ஆனால் அவர் அங்கேயே தீர்விருப்பதைத் தவறவிட்டவர். ஒரு கலாச்சாரத்தின் நவீனம் என்பது மரபின் மற்றொரு முகம் மட்டுமே என்பதை அவர் உணராமலே இயங்கினார். நவீனத்தையும் தாண்டி பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் நடனத்தின் தாள லயத்தை அவர் கேட்கவே இல்லை. அவர் மருந்தாகக் கண்ட கல்வியையும் பகுத்தறிவையும் வைத்தே இன்னொரு கொடும் நோய் இங்கே பரப்பப்படுவதை கண்ணால் கண்ட பிறகும் பேசாமலிருந்தார். (ஆனால் அவருடைய முக்கியமான சிறுகதைகள் வேறுவிதமான தன்மைகள் கொண்டவை. அவற்றைப் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும்) இஸ்லாமிய மரபிலிருந்து பின்- நவீனத்துவ கதை சொல்லிகள் சிலர் இப்போது தோன்றியிருக்கிறார்கள். இன்னும் பலர் உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் எல்லோரும் தாண்ட வேண்டிய எல்லைக் கல்லாய் தோப்பிலின் படைப்புகள் தான் நம் கண் முன்னே நின்று கொண்டிருக்கின்றன. காலம் கடந்து நவீனத்துவம் உருவாக்கிய அந்தக் கடைசிப் படைப்பாளி தான் இஸ்லாமிய சமூகத்தின் முதல் நவீனப் படைப்பாளி. இந்த முரணே அவர் இருப்பிற்கான நியாயத்தை கூடுதலாக முன்மொழிகிறது. இன்னும் சில வருடங்களுக்காவது அவரே அந்தக் எல்லைக் கல்லாய் நிற்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆம், நாம் அங்கிருந்து தான் தொடங்க முடியும். http://tamizhini.co.in/2019/05/22/தோப்பில்-எனும்-நவீனத்துவ/
 9. கொஞ்ச‌க் கால‌ம் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி இருந்த‌ நான் தாத்தா , த‌மிழீழ‌த்தையும் எங்க‌ட‌ போராட்ட‌த்தையும் நினைச்சா ம‌ன‌ம் வ‌லிக்கும் , பேஸ்வுக் ம‌ட்டும் தான் பாவிச்ச‌ நான் , செய்திக‌ள் அதில் வ‌ரும் , அன்மையில் ஜ‌முனா கூட‌ க‌தைச்ச‌ன் போனில் , ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு , உங்க‌ளை ப‌ற்றி க‌தைச்சு சிரிச்சோம் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் நீங்க‌ள் என்னையும் ஜ‌முனாவையும் ப‌ற்றி எழுதின‌த‌ ப‌ற்றி / உங்க‌ளை நாங்க‌ள் ம‌ற‌க்க‌ வில்லை தாத்தா ப‌ழைய‌ அன்பு பாச‌ம் இப்ப‌வும் உங்க‌ள் மேல் இருக்கு , ச‌ரி தாத்தா ஆறுத‌லா எழுதுவோம் ,
 10. ஞானசார தேரர் ஒரு பெளத்த துறவி. பெளத்த தர்மத்தின் பிரகாரம் பெளத்த துறவிகள் அன்பு வழி நடத்தல் வேண்டும். பெளத்த தர்மத்தைப் போதிக்க வேண்டும். அகிம்சையை நிலைநாட்டுவதே அவர்களின் தலையாய பணி. எனினும், இலங்கையில் இருக்கக்கூடிய பெளத்த துறவிகளில் கணிசமானவர்கள் அரசியல் பேசுகின்றனர். இனவாதத் தீயை வளர்க்கின்றனர். மதவாதத்தைத் தூண்டி விடுகின்றனர். இத்தகைய பெளத்த துறவிகளால் இந்த நாடு மிகப்பெரிய அனர்த்தங்களையும் அவ லங்களையும் சந்திக்க நேர்ந்தது. சிறைத் தண்டனையை அனுபவிக்கும் ஆனந்தசுதாகரனின் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போக, அவரின் இரண்டு சிறு பிள்ளைகளும் தாயை இழந்து வாடுகின்றனர். தாய் உயிரோடு இல்லை. தந்தை சிறையில் என்ற மிக இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்; எங்கள் அப்பாவை விடுதலை செய்யுங்கள் என்று ஜனாதிபதியிடம் இரந்து கேட்டனர். அதற்கு உங்கள் அப்பாவை விடுதலை செய்வேன் என்று அந்தப் பச்சிளம் பாலகர்களி டம் ஜனாதிபதி உறுதியளித்தார். ஆனால் இன்றுவரை ஆனந்தசுதாகர னுக் குப் பொது மன்னிப்புக் கிடைக்கவில்லை இது ஏன் என்பதுதான் புரியவில்லை ஞானசார தேரருக்குக் காட்டிய கருணையை; தாயை இழந்து நிற்கும் அந்தத் தமிழ்க் குழந் தைகளுக்குக் காட்டாதது ஏன்? அவர் சிங்களவர். இவர்கள் தமிழ்க்குழந்தைகள் இதுதான் மன்னிப்பின் வேறுபாடா?
 11. #TamilEntrepreneur #தமிழ் #தாய்மண் #பொருளாதாரம் #மரம் #மண் #பிராணவாயு #கரியமலவாயு #புவிவெப்பம் #வரட்சி #தண்ணீர் பாலை நிலமாகிறதா தமிழகம்? என்ன காரணம்? வடசென்னை பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. https://www.bbc.com/tamil/india-47928489?fbclid=IwAR0Hpc6boDCv1PhZGSfTJuWFB4q3FV08s5J7_y34Y5qBZRCJFLRx4xGHErk
 12. MI6 பிரித்தானியாவினது என்றாலும் அதன் வெளிநாடுகளுக்கான உளவுத்துறை. (foreign intelligence service). அவர்கள் ஏற்கனவே பல காலமாக பிரான்ஸ் மற்றும் வேறு பல நாடுகளில் தொழிற்பட்டு வருவோர். CIA, NSA போன்றன தாம் டயானாவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு அதை ஆவணப்படுத்தி வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டன. ஆனால் தாம் அதை கொலைக்கு பயன்படுத்தவில்லை என கூறினர். (அவர்கள் அதை சொல்ல மாட்டார்கள் தானே) முன்னாள் MI6 அதிகாரியே டயானாவின் கொலை பற்றி கருத்து தெரிவிக்கும் போது இதே முறையில் driver இன் கண்ணில் ஒளியை அடித்து remote control மூலம் பிரேக் செயலிழக்க வைத்து வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய திட்டமிட்ட கலந்துரையாடல்கள் பற்றிய ஆவணங்களை முன்னரே பார்த்ததாக கூறினார். அவர் கூற வந்தது இதையும் MI6 செய்தது என்பது தான். பல நாடுகள் ஒன்றிணைந்து செய்யும் கொலைகள் என்பது பல இடங்களில் நடப்பது தான். இவர்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து செயற்படுவர் (பல வைத்தியர்கள் உட்பட). வெளிநாடுகளில் “umbrella” என்று சொல்லுக்கு தனியொரு அர்த்தம் உள்ளது. தமிழர்களுக்கு அதிகம் இது பற்றி தெரியாது.
 13. இப்படி எடுத்ததுக்கு டென்சனாகினால் அநேகமா புர்காவை போட்டு குதிரை ஓடுன கூட்டமாய் இருக்கும் .
 14. இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் மட்டுமின்றி, பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்த புலம் பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறையினர் மற்றும் இலங்கையுடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத பிரிட்டன் வாழ் மக்கள், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 2,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். "பிரபாகரன் நடத்திய நிர்வாகம்" இலங்கை அரசுப்படைகளுக்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சுமார் 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போரின்போதோ அல்லது போர் முடிவுற்ற பிறகோ, உயிர் பிழைத்துக் கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கானோர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாகவும், பணிவாய்ப்பு மற்றும் கல்விக்காகவும் புலம்பெயர்ந்தனர். இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போரின் கொடுமைகளை விளக்குவதுடன், இலங்கை தமிழர்களின் வரலாற்றை இளம் சந்ததியினருக்கு எளிதில் புரிகிற வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த 'தமிழ் தகவல் நடுவம்' என்ற அமைப்பின் உறுப்பினரான ரோஷிணியிடம் பேசினோம். "இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிந்து இலங்கை உருவானது முதல் அங்கு வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், உணவுப் பழக்கம், அரசியல் நிர்வாகம், இசை ஆகியவை மட்டுமின்றி உள்நாட்டுப் போரின்போது சந்தித்த பேரவலம் போன்றவற்றை விளக்கும் ஓவியங்களை உலகம் முழுவதுமுள்ள புகழ்பெற்ற ஓவியர்களிடமிருந்து பெற்று காட்சிப்படுத்தியிருந்தோம். தமிழர்களின் இன்பம் மற்றும் துன்பகரமான நிகழ்வுகளின்போது தவறாது இடம்பெற்ற இசைக்கருவியான 'பறை'யின் அருமை, பெருமைகளை இந்த கண்காட்சியின் ஊடாக வெளிப்படுத்தியதுடன், பயிற்சி பட்டறையையும் நடத்தினோம். குறிப்பாக, விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த இடைக்கால தமிழீழ அரசின் தேசியக் கொடி, வரைபடம், படைப்பிரிவுகள், உள்துறை, பள்ளி-கல்லூரிகள், மருத்துவ வசதிகள், வங்கிகள், கலை பண்பாட்டு பிரிவு, புனர்வாழ்வு மையங்கள் உள்ளிட்ட முழுமையான அமைப்புமுறையுடன் செயலாற்றியதை, தக்க சான்றுகளுடன் விளக்கியிருந்தோம்" என்று ரோஷிணி மேலும் கூறினார். இந்த கண்காட்சியில், தமிழகத்திலிருந்து இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிவதற்காக அழைத்துச் செல்லப்பட்டு அன்று முதல் இன்று வரை போராட்டமான வாழ்க்கையை சந்தித்து கொண்டிருக்கும் மலையகத் தமிழர்களின் வரலாறும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறுகிறார் அந்த அமைப்பை சேர்ந்த மற்றொரு உறுப்பினரான ஆரதி ராஜாந்த். "மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்துவதற்காக பிரிட்டனிலுள்ள இளம் தலைமுறையினருடன் சேர்ந்து பல மாதங்களாக வேலை செய்து உருவாக்கிய கருத்துருவாக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கான முதல்படியாக இதைப் பார்க்கிறோம்" என்று அவர் மேலும் கூறுகிறார். முள்ளிவாய்க்கால் நினைவலைகள் இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்கும் வகையிலான காட்சி பொருட்கள் இந்த கண்காட்சியில் தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, போரின்போது ராணுவத்தின் தாக்குதலுக்கு இரையானவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. அதில், போடப்பட்டிருந்த ரத்தம் படிந்த ஆடைகளின் மாதிரிகள் பலரது நினைவுகளைத் தூண்டின. "போரின் இறுதிக்கட்டத்தின்போது, ராணுவத்தின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைப்பது மட்டுமின்றி உயிர்வாழத் தேவையான உணவை பெறுவதும் மிகவும் கடினமாக இருந்த சமயத்தில் எங்களுக்கு உப்பு, சப்பில்லாத கஞ்சி மட்டுமே கிடைத்தது. எனவே, போரின் உக்கிர நிலையை உணர்த்தும் வகையில், அதே சுவை கொண்ட கஞ்சியை கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு அளித்தோம். அது பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது" என்று கூறுகிறார் ரோஷிணி. https://www.bbc.com/tamil/global-48410310
 15. மொரகஹகந்த திட்டத்தின் மூலம் இரணைமடு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்திற்கு நீர் கிடைக்கிறது. இந்நீர் யாழ்ப்பாணத்தில் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பேரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்கிறது. கைத்தொழிலுக்கான நீர்த்தேவைகள் சூழலியல் சுற்றுலாத்துறை மற்றும் முறையான வெள்ளநீர் கட்டுப்பாடு ஆகியவை இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் இதர பயன்களாகும். மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 2019 இல் 185,000 ஹெக்டயார் விளைநிலத்திற்கு தேவையான நீர்ப்பாசன வசதி பெரும்போகம் சிறுபோகம் ஆகிய இரு போகங்களின் போதும் கிடைக்கும். விளைச்சலை இது அதிகரிக்கும் நிலையில் 109,000 தொன் நெற்செய்கையை எதிர்பார்க்கலாம். வருடாந்த நிகர விவசாய பயனைப் பொறுத்தவரை இது 27.7 மில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது. மொரகஹகந்த - களுகங்கை ஆகிய இரு நீர்த்தேக்கங்களின் மூலம் 25 மெகாவோல்ட் மின்சாரம் உற்பத்தியாகும். இதனால் கிடைக்கும் வருடாந்த எரிபொருள் சேமிப்பு கிட்டத்தட்ட 2.19 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு நீர்த்தேக்கங்களிலிருந்து 4,700 தொன் நன்னீர் மீன் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நிகர பயன் 1.67 பில்லியன் டொலர்களாகும். 1994 ஆம் ஆண்டு இப்போதைய ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிறிசேனவின் கட்சி ஆட்சிக்கு வந்ததுடன் சாத்திய வள ஆய்வறிக்கைகள் பரீட்சிக்கப்பட்டன. அதன் பின்னர் நீர்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காகஆரம்பிக்கப்பட்ட வரைபடங்களும் தயாரிக்கப்பட்டன. ஆயினும் மகாவலி அதிகார சபையின் மீள் கட்டமைப்பு செயற்பாடுகளினால் அப்பணி தாமதமடைந்தது.
 16. நாட்டு நிலைமை சீராகிவிட்டது, உல்லாச பிராயாணிகளே வாருங்கள் வாருங்கள் என்று கூறுவது அவர்களை பலிக்கடாவாக்குவதற்கா?
 17. ஐ.நா. என்ற அமைப்பின் கீழேயே உங்கள் ஒழுக்கம் ஹெயிட்டியில் கொடிகட்டி பறந்ததையும் உலகம் அறியும் !
 18. ஒரு சிலரா........போர் முடிந்த்வுடன் எத்தனை பேர் இங்கு வந்து அசைலம் அடித்தனர்.....!!! அதன் பின்னர் அசைலம் கிடைத்த பின்னர் இவர்கள் திருமணம் முடித்து வந்தவர்கள் எத்தனை பேர்.........!!! அதுமட்டுமல்ல இந்த யாழ் களத்திலேயே எத்தனை பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தமிழ் சிங்கள போராக சித்தரிக்க முற்பட்டனர்
 19. ஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்! ஒரு கப் காபி! ஒரு முதிர்ந்த ஆண், இளம் பெண்ணிடம் தாய்ப்பால் பருகும் காட்சியானது ஐரோப்பிய நாடுகளில் பல முறை ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்த ஓவியங்களில் தென்படும் முகங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதில் சில அம்சங்கள் மட்டும் ஒன்றாக இருப்பதைக் காண முடியும். அந்த நபர் ஓர் அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிடும் விஷயங்கள் பின்னணியில் இருக்கும். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம், அந்த இளம் பெண்ணின் கண்களில் தென்படும். அந்தப் பெண் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகக் குழந்தை பெற்றவள் என்றோ அல்லது அவள் அருகில் பச்சிளங்குழந்தை இருப்பது போன்றோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சில ஓவியங்களில் முதிர்ந்த பெண் தன் கையினால் இளம் குழந்தையின் வாயை மூடி அதன் அழுகையைக் கட்டுப்படுத்துவது போன்றிருக்கும். இந்தச் சித்திரத்தைப் பார்த்தவுடன் சிலருக்கு இன்செஸ்ட் கதைகள் நினைவுக்கு வரலாம். ஆனால், அதுவும்கூடச் சில நொடிகளில் காணாமல்போகும். ஐரோப்பியக் கண்டத்தில் சில நூறு ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் கதைகளை மையமாகக்கொண்டு இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. நாட்டை ஆளும் மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாகக் கூறி, ஒரு முதியவர் கைது செய்யப்படுகிறார். உணவு, நீர் எதுவுமின்றி அவர் சிறையில் வாடுகிறார். தந்தையைக் காண வரும் மகள், அவரது வறிய தோற்றம் கண்டு வருந்துகிறாள். கையில் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது எனும் கட்டுப்பாடு உள்ளதால், வேறு வழியின்றித் தாய்ப்பால் ஊட்டித் தந்தையின் பசியைப் போக்குகிறாள். இதனைக் கண்டு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி புல்லரித்துப் போகிறார் அல்லது மனம் மாறுகிறார் என்று சில கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரே நாளில் நடந்து முடிவதாக இந்தக் கதை அமைகிறது. இதற்கு மாறாக, பல ஆண்டுகள் தொடர்ந்து அம்மகள் தந்தைக்குப் பாலூட்டியதாகவும், ஒரு நாள் உண்மை தெரிந்து அம்மகளின் தியாகத்துக்காக அந்தத் தந்தையை விடுதலை செய்ததாகவும் விவரணைகள் நீள்கின்றன. எந்த ஒன்றையும் பார்த்தவுடன் எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என்பதை இது உணர்த்துகிறது. உதாரணமாக, குறை தூரத்தில் இருக்கும் ஒரு சுவருக்குப் பின்னால் பெண்ணின் அல்லது ஆணின் தலை தெரிவதாக வைத்துக்கொள்வோம். சுவருக்குப் பின் மேடு, பள்ளம் அல்லது சமவெளி இருக்கலாம். தலையை நீட்டும் நபர் அங்கு உட்கார்ந்திருக்கலாம் அல்லது நின்றுகொண்டிருக்கலாம் அல்லது உயரமான கட்டிலில் படுத்துக்கொண்டு தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த சாத்தியங்களை மீறி அந்த நபரின் முகபாவனைகளும் அசைவுகளும் நம் மனதில் ஒரு சித்திரத்தை உருவாக்கும். ஒவ்வொருவரும் அடுத்தவர் குறித்து இப்படியொரு சித்திரத்தை வாழ்நாள் முழுவதும் வரைந்துகொண்டிருக்கிறோம். இடையில் இருக்கும் சுவரைத் தாண்டினாலோ அல்லது எட்டிப் பார்த்தாலோ உண்மையை ஓரளவுக்கு உணர முடியும். மீண்டும் அந்தத் தந்தை மகள் விஷயத்துக்கே வருவோம். ஐரோப்பியக் கண்டத்தில் தொடர்ந்துவரும் இந்தச் சித்திரங்களும் கதைகளும் நமக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்கின்றன. அம்மகள் செலுத்தும் அன்புக்கு முன்னால் நமது முன்முடிவுகள் மட்டுமல்ல, இந்த உலக நியதிகளும் தூள் தூளாகும் என்பதே அது. - பா.உதய் https://minnambalam.com/k/2019/05/27/9
 20. முதலில் நங்கள் எங்கள்து பொருளாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் அதுக்கு பின்னர் தான். அதை விட சிங்கள பேரினவாதம் தமிழருக்கு பெரும் பிரச்சனையாக இருக்காது. அது மின்சாரம் நின்ற மின் விசிறி கொஞ்சம் சுற்றி தான் நிற்கும்: அதுக்குரிய காரணம் 80களுக்கு பின்னர் பிறந்த சிங்கள சமூகம் இனவாதத்தில் அக்கறை காட்டபோவதில்லை: ஒரு கேள்வி எத்தனை வீடுகள் புலம்பெயர் தமிழரால் மக்களுக்கு கட்டி கொடுக்கபட்டன; எத்தனை வியாபார முயற்சிகள் செய்யபட்டன; ஆனால் ஊர் கோவில்களை திருத்த ஊருக்கு எத்தனை கோடிகள் செலவளிக்கப்ட்டது .......? அங்கு இருப்பவர்களை வெளிநாட்டுக்கு எடுக்க எத்தனை கோடிகள் செல்வளிக்கப்பட்ட்து.......? இவற்றை யோசியுங்கோ தமிழன் தோல்வி எங்கே தொடங்குகிறது என விளங்கும்
 21. ஒரு சிலரின் அறியாமைக்கு ஒட்டு மொத்தமாய் கோவப்படுவதும் அறியாமைதான் .
 22. 96 பாடல்கள்: இளையராஜாவின் சர்ச்சை பதில்! இசையால் தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடம் பேசப்பட்டுவரும் இளையராஜா சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார். பாடல்களுக்கான ராயல்டி தொடர்பாக நீண்ட விவாதங்கள் எழுந்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் உள்ளிட்டோருக்கும் இளையராஜாவுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ ஆகியோர் ஜூன் 2ஆம் தேதி சென்னை, ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் கச்சேரியில் பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு நேர்காணல் அளித்தார். அப்போது ரசிகர்கள் தங்கள் நினைவுகளை உங்களது பாடல்கள் வழியே மீட்டெடுக்கின்றனர். 96 திரைப்படத்திலும் அத்தகைய தன்மை வெளிப்பட்டிருந்தது அது பற்றிய தங்கள் கருத்து என்ன என்பதாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இளையராஜா, “ அதெல்லாம் மிகவும் தவறான விஷயம். ஏதோ ஒரு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தின் பாடல்களையே பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எங்கு அவர்களால் முடியவில்லையோ, அங்கு புகழ்பெற்ற பாடலைத் திணிக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அதற்கு ஈடான பாடல்களை அவர்களால் தர முடியாததுதான்” என்று அவர் கூறினார். மேலும் அவர் யோதோன் கி பாரத் என்ற இந்திப் படம் ஒன்றை மேற்கோள்காட்டி இருபது ஆண்டுகளுக்கு முன்னுள்ள பாடல் மூலம் குடும்பம் இணைவதைக் காட்டுவதற்காக இசையமைப்பாளரே அந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய பாடலை உருவாக்கியதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இது அவர்களுடைய பலவீனத்தைக் காட்டுகிறது. இது ஆண்மையில்லாத தன்மையாகத்தானே உள்ளது?! ஒரு கதையில் 1980களில் உள்ள பாடல் என்றால் 80களில் வெளியான பாடல்களுக்கு நிகரான பாடலையே இசையமைக்கவேண்டும். ஏன் இசையமைக்க முடியவில்லை? ஜனங்களை என்னுடைய இசையை விட்டுப் பிரிக்கமுடியாது. அதனால் என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துகிறார்கள். இது ஆண்மையில்லாத்தனம்” என்று காட்டமாகக் கூறியுள்ளார். ஒரு காலகட்டத்தை மக்கள் மனதில் விரியச் செய்வதற்கு அந்த காலகட்டத்தின் அடையாளமாக இளையராஜாவின் பாடலை பயன்படுத்துவது அவரை பெருமைப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக மோசமான வார்த்தைகளை இளையராஜா பயன்படுத்தியிருப்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. https://minnambalam.com/k/2019/05/27/35
 23. தொட்டதுக்கெல்லம், சிங்களவனை பிழை கூறினால் அதிகார அலகு கூட இல்லை, மாநகர சபை கூட கிடையாது. என்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சிங்க்ளவன் தமிழ் இனவழிப்பு நடவடிக்கையின் அங்கமாக எங்கழுடைய ஈழ போராளிகள் மாற்ற முயன்றார்களோ அத்துடன் தீர்மானித்தேன் இந்த இனம் உருபடபோவதில்லை என்று பிரான்ஸில் இருந்து ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேற்கிறார் அது ஏன் புலம்பெயர் தமிழர்கள் பாவிக்கும் ஹொட்டல்களில் குண்டு வெடித்ததாம்......? இதை வாசித்த போது அவரது அறிவை நினைத்து அழுவதா சிரிப்பதா......??? பிறகு திருநாவுகரசு என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார் இது 2வது முள்ளிவாயிக்காலாம், அப்பப்பா கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா .....??? இப்படிபட்ட அரசியல் மற்றும் பொருளாதார அறிவற்ற இனம் உருப்படிம......??? எங்களுக்கு தெரிந்த பொருளாதாரம் 60 லட்சம் அனுப்புவது எங்களுக்கு தெரிந்த அரசியல் அந்த 60 லட்சத்தை வைத்து பிரான்ஸில் வந்து அசைலம்....!!!!!! அந்த 60 லட்சத்தை வங்கியில் போட்டால் 10% படி வருடம் 600,000 வட்டி வரும் என்பதை கூட அறியாத முட்டாள் கூட்டம்
 24. காத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 63 பேர் கைது மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது காத்தான்குடியைச் சேர்ந்த பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் என பொலிஸார் அடையாளம் கண்டு பிடித்ததையடுத்து. குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர், பொலிஸார், மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் கடந்த ஒரு மாத காலத்தில் 63 பேரைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இதேவேளைத் தொடர்ந்து இந்த பிரதேசங்களில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . http://www.virakesari.lk/article/56840
 25. மீண்டும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது - ஞானசார தேரர் (எம்.மனோசித்ரா) நான் களைப்படைந்து விட்டேன். இனி போராடப்போவதில்லை என்று கூறினாலும் இளைஞர்களது கோரிக்கைக்கு இணங்கவும், மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் மீண்டும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மாகாநாயக்க தேரர்களை நேற்யை தினம் சந்தித்ததன் கண்டி - தலதா மாளிக்கைக்கு விஜயம் செய்த அவர், விஷேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, நான் சிறையிலிருந்து விடுதலையானதிலிருந்து ஒரு நாளைக் கூட நிம்மதியாகக் கழிக்க முடியாதளவிற்கு தற்போது நாட்டின் நிலைமை மிக மோசமாகக் காணப்படுகின்றது. எதிர்கால சந்ததியினருக்கான எமது சுக துக்கங்களை துறக்க வேண்டியுள்ளது. எனவே வெகுவிரைவாக பௌத்த சங்க சம்மேளனத்தைக் கூட்டி இதற்கான தீர்வினை காணப்பதற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மாகாநாயக்க தேரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஏனைய பௌத்த மதகுரமார்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். இதனை வைத்து அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதையும், ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதையும் நிறுத்த வேண்டும். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினைக் காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/56841
 26. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைப்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படவுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் நவம்பர் மாதம் கட்டுநாயக்க வரை நீடிக்கப்படவுள்ளது. வெளிச்சுற்று வீதி அமைக்கப்பட்வுடன் கடவத்தையில் இருந்து கெரவெலப்பிட்டி ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. http://www.dailyceylon.com/183507/
 1. Load more activity