All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. எனக்குத் தெரிந்த மட்டில், 1. ஹை கொமிசனுக்கும், எம்பசிக்குமான வித்தியாசம் அமெரிக்க, பிரித்தானிய வேறு பாட்டால் வந்தது அல்ல. பழைய காலத்தில் ஒரு ராஜ்ஜியத்தில் இருந்து இன்னொரு ராஜ்ஜியத்தில் போய் தூதுவராக இருப்பவரை அம்பாசடர் என்றார்கள். இப்போதும் லண்டனில் இருக்கும் பிரெஞ்சு தூதரகம் எம்பசிதான். தூதுவர் French ambassador to the UK. அமெரிக்கா நாடாவதற்கு முன்பே அம்பாசடர், எம்பசி எனும் சொற்கள் பழக்கத்தில் வந்து விட்டன. 2. பிரித்தானிய சாம்ராஜ்யதுக்கு கீழ் வந்த நாடுகளில் மன்னரின் பிரதிநிதிகள் 3 வகை பட்டனர். கவர்னர்-ஜெனரல் (இந்தியாவில் வைஸ்ரோய்). இவர்கள் பிரித்தானிய நேரடி ஆளுகை/டொமினியன் தேசங்களை ஆண்டனர் ( பிரிடிஸ் இந்தியா). கவர்னர் - ராஜாக்களின் கீழ் வந்த சமஸ்தானக்களில் பிரித்தானியாவின் பிரதிநிதி. ஹைகொமிசனர் - பிரித்தானிய முடியின் நேரடி ஆளுகைக்குள் வராத ஆனால் பிரித்தானிய பாதுகாப்பில் இருந்த தேசங்களில் பிரித்தானிய முடியின் பிரதிநிதி. 3. பொதுநலவாயம் அமைந்த போது, பெரும்பாலான நாடுகள் குடியரசாக இல்லாமல் - நாட்டின் தலைவியாக ராணியை கொண்டிருந்தன (கனடா, அவுஸ், நீயூசிலாந்து இப்போதும்). எனவே இந்த நாடுகளிடையேயான தூதர்கள், ஒரே ராணியின் தூதர்களே. அவர்களை அம்பாசடர் என அழைக்க முடியாதல்லவா? எனவே ஹைகொமிசனர் என்றார்கள். 4. காலப்போக்கில் இந்தியா, இலங்கை என பலநாடுகள் குடியரசாகிய போதும், பொதுநலவாயத்தில் தொடர்வதால் - ஹைகொமிசனர் எனும் பதம் தொடர்கிறது. 5. முன்னைய குடியேற்ற நாடுகள் ஆனால் பொதுநலவாயத்தில் இல்லாத நாடுகளும் (அமெரிக்கா, அயர்லாந்து), ஒரு போதும் பிரிடிஸ் சாம்ராஜ்யத்யில் வராத நாடுகளும் ( பிரான்ஸ், சுவீடன், தாய்லாந்து, ஜப்பான்) தொடர்ந்தும் அம்பாசடர்/எம்பசி என அழைக்கப்படுகிறன. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். யாழில் இருப்பதை ஒத்த ஒரு துணைத் தூதரகம் கண்டியிலும் உண்டு. Downgrading/upgrading status of embassies - நாடுகள் கடைப்பிடிக்கும் நடைமுறைதான் - ஆனால் இது இந்தியாவால் இலங்கையில் செய்யப்படுகிறதா? என்பது கேள்விக் குறியே.
 3. இவருக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை பிடித்தவர்கள் கவிதை இயம்பி பாடுகிறார்கள் தெரிந்தவர்கள் துஸ்ட்டனை கண்டதுபோல் விலகி போகிறார்கள். இது நோயாளிக்கு மருந்துக்கு காசுத்தருகிறேன் ... நோயாளியை கொலைசெய்தால் என்பதை கேட்டு ... மருதத்துவ செலவுக்கு நோயாளியை கொல்லும் வேலை. இந்த வியாக்கினத்தின் படி சிங்களவர்களில் இப்போது ஏழையானவர்களே இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இலைகையின் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் பெரும்பாண்மை சிங்களவர்கள்.
 4. Today
 5. இன்று யார் எப்படிக் கருத்துக்கள் சொன்னாலும்.... தமிழரைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். தந்தை செல்வா. காப்பாற்றக் கடவுள் வந்தார். ஆனால் அவரைத் தமிழர்கள் முழுமையாக ஏற்கவில்லை.
 6. நல்ல விடயமே, ஆனாலும், குறித்த ஆவணத்தை இருவருமே ஏற்றுக்கொண்டால் நிலைமை என்ன....???
 7. எனக்கென்னவோ கோத்தா தேர்தலில் வென்றால் கூட மட்டக்களப்பில் சஜித் தான் முன்னிலை வகிப்பார் என தோணுது. பார்க்கலாம். பிள்ளையான் முன்பே மகிந்த கோத்தா பக்கம். எனவே இத்தேர்தலில் அவரது ஆதரவாளர்களது வாக்குகள் பெரிய தாக்கம் செலுத்தாது. முன்பை போலவே இருக்கும். வியாழேந்திரன் கோத்தாவுக்கு ஆதரவளிப்பதற்காக எத்தனை பேர் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில், ஒரு பகுதி வாக்குகள் கோத்தாவுக்கு செல்லலாம். ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெருமளவு வாக்குகளை பிரிக்கப்போவதில்லை, சிறுபகுதி வாக்குகளையே பிரிப்பார் என நினைக்கிறேன். 2010 தேர்தலில் மகிந்த வென்ற போது மட்டக்களப்பில், சரத் பொன்சேகா - 146,057 மகிந்த - 55,663 வாக்குகளை பெற்றிருந்தார்கள். இம்முறை என்ன நடக்கும் என பார்க்கலாம்.
 8. எனக்கு நியாபகம் இருக்கு. அக்கினிக்கு எப்ப்டியோ தெரியா . ஆனால் - கூட்டமைப்பில் நின்று கேட்டேன் ஆனால் அவர்கள் அந்தவேலைக்கு சரி வரமாட்டார்கள், எனவே தனியாக கிளம்பி விட்டேன் எனும் அவர் வாதத்திலும் நியாயம் உண்டே? வியாழேந்திரனின் ஆதரவுடன் கோட்ட வென்றால் - அது மட்டக்களப்பில் சேடம் இழுக்கும் தமிழ்தேசியத்துக்கு - பால் ஊற்றி கிரியை செய்தது போலவே இருக்கும். ஆனால் மக்களே தமிழ் தேசியத்தை விட்டு விலகி, தமக்கென ஒரு மாவட்ட தலைமையில் செயல்பட வேண்டும் என முடிவெடுத்தால், இல்லை என்று சொல்ல நாம் யார் ? மட்டக்களப்பின் தமிழ் அரசியல் ஒரு கவர் விடும் பாதையில் வந்து நிக்கிறது. ஒரு பக்கம் தமிழ் தேசிய அடிப்படையிலான உரிமை அரசியல். மறுவழி மாவட்ட-மைய அபிவிருத்தி அரசியல். பார்கலாம் மக்களின் முடிவை.
 9. கல்யாணி, நீங்கள் தந்துள்ள விளக்கம் சரிதான் ஆனால் இந்த வார்த்தையை நீங்கள் பாவித்த களம் (context) தப்பு. Pipe dream என்பது நடந்த ஒரு விடயத்தை (ஆள் காணமல் போதல்) நடக்கவில்லை என மறுப்பதல்ல. Pipe dream என்பது நடக்க முடியாத ஒரு விடயத்தை நடக்கும் என நம்புவது. தமிழில் இதற்கு தக்க வார்தைகளாக கானல் நீரை விடவும், “பகற்கனவு” அமையும் என்பதே என் கருத்து. BJP forming the government in Tamil Nadu will remain a pipe dream for the RSS. தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி அமைப்பதென்பது RSSற்கு வெறும் பகற்கனவாகவே நிலைக்கும். மொழி ஒரு கருவி, அறிவல்ல. ஆனால் எந்தக் கருவியையும் எப்படி கையாளுவது என்பதை கருவியோடு பரிச்சயம் உள்ளவர்களோடு பேசி அறிந்துதான் கையாள வேண்டும். கூகிளில் கார் ஓட்டுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, கார் ஓட்ட முடியாதுதானே? மொழிகளும் அப்படித்தான்.
 10. நாங்கள் மதத்தை அரசியலில் கலக்கமாட்டம்!!!
 11. தூதுவராலயம் (embassy) என்றாலும் உயர் ஸ்தானிகராலயம் (High commission) என்பதும் ஒன்று தான்! அமெரிக்க கண்ட நாடுகள் தூதுவராலயம் என்பதை, பிரித்தானிய ஆட்சியின் வழி வந்த பொது நலவாய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் என அழைக்கின்றன! இது அமெரிக்க பிரிட்டிஷ் வழமை வேறுபாட்டின் விளைவு! கௌரவ தூதுவர் (honorary consul) என்பது சில நாடுகள், உள்நாட்டிலேயெ ஒரு பிரமுகரைத் தேர்ந்தெடுத்து அவரை தங்கள் நாட்டின் தூதுவர் போல செயற்பட வைப்பது! உதாரணமாக மொறீசியஸ் நாட்டின் கௌரவ தூதுவராக ஈஸ்வரன் என்ற இலங்கைப் பிரமுகர் இருந்தார் என நினைக்கிறேன். கொன்சலேற் என்பது நான் ஏற்கனவே சொன்னது போல தலைமைத் தூதுவராலயத்தை விட வேறு நகரங்களில் அமைந்திருக்கும் கிளைத் தூதரகங்கள். attache என்பது "தகுதி வாய்ந்த அதிகாரி" என நினைக்கிறேன். தூதுவரின் கீழ் பல attache கள் இருப்பர். பாதுகாப்பு, வணிகம் என ஒவ்வொரு துறைக்கும் இப்படி இருக்கும் அதிகாரிகளை attache என்பர்!
 12. இது பல திரிகளில் எ.த மீள மீளச் சொல்லித்திரியும் ஒரு கருத்துத் தான்! அவர் ஆங்கிலம் தெரிந்தவர்களை விடத் தான் அறிவாளி எனச் சுட்டிக் காட்டப் பாவிக்கும் ஒரு கருத்தே ஒழிய வேறெதுவும் இல்லை! ஆங்கிலம் மட்டுமல்ல, ஒருவருக்குத் தெரிகிற ஒவ்வொரு மேலதிக மொழியும் ஒரு ஜன்னலைத் திறந்து வைப்பது போலத் தான்! இப்போது கூகிள் மொழிபெயர்ப்பும் செயலிகளும் வந்த பின்னர் அவை அவசரத்திற்கு எந்த மொழியிலும் உதவலாம்! ஆனால், ஆங்கிலம் தெரியாததால் சிறிலங்காவில் தாம் படித்த படிப்பிற்குரிய வேலைகளைப் பெற முடியாமல் இருப்போர், ஒரு படிவம் நிரப்ப உதவி தேடுவோர், தமிழில் மட்டும் போலிப் பரியாரி மார் வெளியிடும் யுரியூப் வீடியோக்கள் மட்டுமே உலகம் என்று நம்புவோர், இது போன்றோரிடம் தான் ஆங்கிலம் மொழி மட்டுமா அல்லது அதற்கு மேலுமா என்று கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்!
 13. காலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்…. நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சி முதலாவது கட்ட வெற்றியை எட்டியிருக்கிறது. காலத்தின் தேவையுணர்ந்து தங்களின் சமூக கடமையை புரிந்து இந்த முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் – கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடு பாராட்டப்பட வேண்டியது. ஐந்து கட்சிகளின் கையொப்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் ஆவணம், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட்டு அதுதொடர்பான அவர்களின் நிலைப்பாடு அறியப்படவுள்ளது. அதன் அடிப்படையிலேயே குறித்த ஐந்து கட்சிகளும் தமது ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்கவுள்ளன. கையெழுத்திடப்பட்டுள்ள ஆவணத்தில் தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளான இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் காணி விடுவிப்பு – அரசியல் கைதிகளின் விடுதலை – காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – பௌத்த ஊடுவல் – தொல்பொருள் திணைக்களத்தின் எதேச்சாதிகார செயற்பாடு – அரச நியமனங்களில் காணப்படும் குளறுபடிகள் எனப் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை பொறுத்தவரையில் தமிழர் தரப்படன் எந்தவிதமான எழுத்து மூலமான ஒப்பந்தங்களுக்கும் தயார் இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டனர். அவர்கள் விரும்பினாலும்கூட ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதுநிலைகள் தென்னிலங்கையில் இல்லை. அதற்காக, தமிழ் மக்களின் கோரிக்கைகளை தடாலடியாக பிரதான வேட்பாளர்களினால் புறந்தள்ளி விடவும் முடியாது. அது தமக்கான வெற்றியை அவர்களாகவே புறந்தள்ளி விடுஙகின்ற கைங்கரியமாகவே இருக்கும். இந்த தர்ம சங்கடமான நிலையை பிரதான வேட்பாளர்களும் அவர்களை சார்ந்தவர்களும் நன்கே உணர்ந்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை தம்மிடையே பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படு்ம் தரப்புககள் இணைந்துள்ளன. இந்த இணைவு, “எந்த ஒப்பந்தங்களையும் செய்து கொள்ள மாட்டேன். ஆனாலும் தமிழ் மக்கள் எனக்கே வாக்களிபார்கள்” என்று எகத்தாளமிட்ட தரப்புக்களையும் நிச்சயம் கொஞ்சம் யோசிக்க வைக்கும். எனவே, இந்த சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு தொடர்ந்தும் புத்திசாதுரியமாக கையாள வேண்டும். “தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை எழுத்து மூல ஒப்பந்தத்துக்கு தயாராக இல்லை என்று யாரும் தயாராக இல்லை” என்று சாத்தியமே இல்லாத சாராம்சத்திற்காக யாரும் தாழியை உடைத்து நாசம் பண்ணி விடக்கூடாது. ஓப்பீட்டளவில் அதிகபட்ச கோரிக்கையை சாதகமாக பரசீலிக்கும் தரப்பு எது? – எந்தத் தரப்பு கணிசமான – அதேவேளை காத்திரமான கோரிக்கைகளை தமது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க உடன்படுகின்றன போன்றவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதுமட்டுமன்றி, அதிகபட்ச கோரிக்கையை ஏற்றுக் கொள்பவர்களுடன் அவற்றிற்கான கால எல்லைகளை வரையறுத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, முடியுமானவற்றை அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக செயற்படுத்த வலியுறுத்த வேண்டும். குறித்த செயற்றிறன் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் அமையும் என்பதை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மறுபுறத்தில் சிவாஜிலிங்கம் களம் இறங்கியிருக்கிறார். யார் சொல் பேச்சுக் கேட்டு இறங்கினாரோ தெரியவில்லை. இருப்பினும் ஏற்கனவே ஒரு தடவை ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் அவர். “பிரதான வேட்பாளர்கள் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை சாதகமாக பரசீலித்தால் தேர்தலில் இருந்து விலகுவது தொடர்பாக பரிசீலிக்கலாம்” என்று ஏற்கனவே தெரிவித்து விட்டார். அதேவேளை, ஜே வி பி.யும் தனித்து நிற்பதால் சில ஆயிரம் வாக்குகள்கூட முடிவை மாற்றிவிடும் என்ற நிலையில் களநிலவரம் காணப்படுகின்றது. எனவே, “நீங்கள் எமது மக்களை மகிழ்ச்சிப்படுத்தினால் சிவாஜியை களத்தில் இருந்து அப்பறப்படுத்துவோம்” என்ற செய்தியை பக்கபலமாக தெரிவிக்கலாம். இவ்வாறு முடிந்தவரை தமிழ் மக்கள் பயனடையும் வகையிலும் அடிப்படை அபிலாசைகளை முன்னகர்த்தும் வகையிலும், இந்த சந்தர்ப்பம் பயன்படுத்தப்பட வேண்டும் – இன்றைய இணைவு முன்னகர வேண்டும். இந்த இணைவு இடைவழியில் இடற விடாமல், சூழ்ச்சிகள் சூழவிடாமல் முன்னகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பை மாணவர்கள் தொடர்ந்தும் சுமக்க வேண்டும் http://athavannews.com/காலத்தின்-தேவை-உணர்ந்த-இ/
 14. இந்தியர் உள்ளிட்ட மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு! இந்தியாவினைச் சேர்ந்த அபிஜித் பேனர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பேனர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரமெர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொள்கின்றனர். உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காகவே இந்த நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. அபிஜித் பேனர்ஜி கொல்கத்தாவில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்தியர்-உள்ளிட்ட-மூவருக/
 15. எனக்கும் சில சொற்கள் புரியவில்லை ஜஸ்டின் (அல்லது யாரும்) தெரிந்தால் விளக்கவும். Embassy Consulate High Commission Honorary Consulate Attache... என்பவற்றின் வேறுபாடுகள் என்ன? பிரித்தானிய உயர் ஸ்தனிகர் என்று கூறுகிறோம். அதேவேளை அமெரிக்க தூதர‌கம் என்று அழைக்கின்றோம். சமீபத்தில் நான் இலங்கைக்கான ஓர் லத்தீன் அமெரிக்க நாட்டின் தூதரகத்தை தேடியபோது எனக்கு கிடைத்தது. Honorary Consulate தான் உள்ளார் என கிடைத்தது? யார் இவர்கள்? எவ்வாறு நியமிக்க படுகின்றார்கள்?
 16. தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு! தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிரஜா, ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான வி. மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் ஆகியோரும். ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சி. வி. விக்னேஸ்வரன், ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர். http://athavannews.com/தமிழரின்-உரிமைகளை-வலியுற/
 17. வழமையான பாணியில் எடுக்கும் இந்த பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடலாம். 800 கோடி ரூபாய் / 21.5 மில்லியன்கள் மக்கள் ~ 400 ரூபாய்கள் தலைக்கு
 18. இந்த வசனம் சொல்வதற்கும. கேட்பதற்கும் இனிமையாக இருக்கலாம். ஆனால் அறிவியலில் எந்த துறையை எடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் கற்பதற்கு தமிழில் நூல்கள் இல்லை என்பது தான் யதார்த்தம். தமிழை அறிவியல் மொழியாக மாற்றுவதற்கான முனைப்பு காட்டாமல் வெறும் பழம் பெருமை பேசுவதில் மட்டுமே தமிழ் மொழி அறிஞர்கள் தமது நேரத்தை செலவு செய்யும் வரை இந்த நிலையே நீடிக்கும். அறிவியலை விடுங்கள் ஒரு தகவலை விரைவாக அறிய சாதாரண மக்களுக்கு உதவும் விக்கிபிடியாவில் பெருமளவு கட்டுரைகள் மற்றய மொழிகளில் பக்கம் பக்கமாக இருக்க தமிழில் இரண்டு அல்லது மூன்று பந்தியுடன் கட்டுரை முடிந்துவிடும். இப்படி யதார்தத நிலை இருக்க “ஆங்கிலம் என்பது அறிவல்ல” என்ற கூற்று வெறும் சப்பை கட்டு வாதமாகவே இருக்கும்.
 19. (ஆர்.யசி) ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்கள் என அனைவருக்கும் கொடுக்கும் அனாவசிய சலுகைகளை முழுமையாக நிறுத்துவோம் என தேசிய மக்கள் சக்கிதியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். பத்தரமுல்லயில் இன்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார மக்கள் கூட்டத்தில் பேசியபோதே அவர் இதனைக் கூறினார். நாட்டில் சகல பகுதிகளிலும் ஜனாதிபதிக்கான மாளிகைகள் உள்ளன. ஆனால் அதில் எவரும் குடியிருப்பதும் இல்லை, ஒரு இரவைக்கூட அங்கிருந்து அனுபவிப்பர்களா என தெரியவில்லை. ஆனால் இந்த மாளிகைகளை பராமரிக்க கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுகின்றது. மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெரமுன்னரே 800 கோடி ரூபாய் செலவழித்து வீடொன்றை நிர்மாணித்துள்ளார் என அறிந்துகொள்ள முடிந்தது. எனவே நாம் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிகள் பிரதமர்களுக்கு ஒதுக்கும் அனாவசிய செலவுகள் அனைத்தையும் நிறுத்துவோம். அத்துடன் ஆட்சியை கைப்பற்றி இரண்டு மாதத்தில் முழுமையாக அரச சொத்துக்களை தன்வசப்படுத்திய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம். வழங்காவிட்டால் நாமே அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி மக்கள் மயப்படுத்துவோம். அரச சொத்துக்களை கொள்ளையடிக்க எவருக்கும் உரிமையில்லை. அரச சொத்துக்கள் என்பது மக்களின் சொத்துகள் அதனை மக்களே அனுபவிக்க வேண்டும் என்பதே எமது கொள்கையாகும். நாட்டில் அனாவசியமாக செலவழிக்கும் பணத்தை சரியாக கையாண்டு கல்விக்கும், சுகாதாரதுறைக்குமான உயரிய சேவையை செய்ய முடியும். ஆனால் இன்று இந்த பணம் முழுமையாக ஆட்சியாளர் கைகளில் சிக்கிக்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். https://www.virakesari.lk/article/66873
 20. ஆனால் வியாளன் கூட்டமைப்பு சார்பில் தான் கடந்த தேர்தலில் வென்றார் என்பதையாவது ஞாபகம் வைத்திருக்கின்றோமா????
 21. இந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க வில்லை. எனவே மலையக மக்கள் தேவைக்காக மாத்திரம் பயன்படுத்தும் ஊறுகாயோ கறிவேப்பிலையோ அல்ல என அருனலு மக்கள் முன்னணியின் தலைவரும் அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவித்தார். நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று பகல் டிக்கோயா அருனலு மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கினை எடுத்துக்கொண்டாலும் சரி மலையகத்தினை எடுத்துக்கொண்டாலும் சரி எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாக தோட்டங்கள் காடாக மாறியுள்ளன. பல தோட்டங்கள் துண்டாடப்பட்டு தோட்டத் தொழிலாளர்களை முதலாளியாக்குவோம் என தெரிவித்து மொட்டையாக்கிய வரலாறுகள் தான் உள்ளன.நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரம் மற்றும் சாதாரணதரம் படித்த 23 ஆயிரம் பேரும் பட்டதாரிகள் 300 பேரும் வேலையின்றி உள்ளனர். இவர்கள் எவருக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் ஜெனிவா சென்று தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் இல்லாமல் தொழிலாளர் சேமலாப நிதியம், தொழிலாளர் நலன்புரி நிதியம் ஆகியவற்றை அறவிட முடியாது என சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.இதனை பிரதமர் ,ஜனாதிபதிக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என்று தெரிவித்த போதிலும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் 52 நாள் அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ச பிரதமராகிய போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.இந்நிலையில் தான் நாங்கள் ஒரு சில நிபந்தனைகளுடன் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம். அவர் வெற்றிபெற்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் அல்லது 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தருமாறும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணியுரிமை பெற்றுக்கொடுக்க , வீட்டுரிமை, மலையக இளைஞர்களது தொழில்வாய்ப்பு, தோட்ட சுகாதார மேம்படுத்தல் போன்ற பல கோரிக்கைகளை எழுத்து மூலம் தருவதற்கு இணக்கம் தெரிவித்ததனையடுத்தே நாங்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளோம். எனவே நாடு பூராகவும் உள்ள எமது கட்சி அங்கத்தவர்கள் அவருக்கு ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். ஹற்றன் விசேட நிருபர் https://www.thinakaran.lk/2019/10/14/உள்நாடு/42031/மலையக-மக்கள்-ஊறுகாயோ-கறிவேப்பிலையோ-அல்ல
 22. என்ன சிறித்தம்பி? இந்தியாவில் மன அமைதிக்கும் ஆன்மீகத்துக்கும் இல்லாத இடங்களா? இதுக்கு ஏன் சுவீஸ்? ஹவாய்? தலைவர்! சுவீஸ்சுக்கு வாறதெண்டால் கள்ளக்காசு போடத்தான் வருவார்.சுவீஸ்தானே கள்ளக்காசு அமுக்குறதுக்கு சரியான இடம்.
 23. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 17 ஆம் திகதி திறப்பு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. நிர்மானப்பணிகள் இடம்பெற்றுவரும் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ரகவனுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்கான விமான சேவைகள் முதலில் இடம்பெறவுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/யழபபணம-சரவதச-வமன-நலயம-17-ஆம-தகத-தறபப/175-240016
 1. Load more activity