யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. பயங்கரவாதியை தடுத்து நிறுத்தி பலபேரின் உயிரைக்காப்பற்றி தன்னுயிரை இழந்த தமிழன்; தற்போது வெளிவந்த தகவல்! மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரமேஷ் என்ற நபர் தொடர்பில் பிபிசி உலக சேவை தகவல் வெளியிட்டுள்ளது. பெரிய பை ஒன்றுடன் தேவாலயத்திற்கு நுழைந்த தற்கொலை குண்டுதாரியை ரமேஷ் என்பவர் தடுத்துள்ளார். இதன் போது தான் உயிர்த்த ஞாயிறு ஆதாரனையை படம் பிடிக்க வேண்டும் என குண்டுதாரி தெரிவித்துள்ளார். பெரிய பைகளுடன் ஆலயத்திற்குள் அனுமதிக்க முடியாதென கூறி அவரை வெளியே நிற்குமாறு ரமேஷ் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் குண்டுதாரிக்கு வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்கொண்டு உள்ளே செல்ல முடியாத நிலையில் குண்டுதாரி அதிலேயே வெடித்து சிதறியுள்ளார். குறித்த நபர் தேவாலயத்திற்குள் சென்று வெடித்திருந்தால் உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் தேவாலயத்திற்குள் பாரிய மக்கள் கூட்டம் இருந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்ட போதும், குண்டுதாரியை தடுத்து நிறுத்திய ரமேஷ் கொல்லப்பட்டுள்ளார். ரமேஷ் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கைவிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். ரமேஷின் மனைவி கிருஷாந்தினி ஞாயிறு பாடசாலை ஆசிரியராவார். 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கற்பித்து வருகின்றார். அவர் கற்பிக்கும் பல மாணவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். அவரது பெற்றோர் இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டுள்ளனர். உறவினர்கள் சுனாமி பேரனர்த்தத்தின் போது உயிரிழந்துள்ளனர் என பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/118559
 3. இரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லாவின் கனவு நனவாகியுள்ளது - வியாழேந்திரன் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் பேசிய ஹிஸ்புல்லாஹ் மற்றும் ரிசாத் பதியுதீன் போன்ற சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றும் விரைவில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அவர்களை சுடுவார்கள் இவர்களை சுடுவார்கள் என பேசி இருந்தார்கள். இன்று அவர்கள் கண்ட கனவு அப்பாவி கிறிஸ்தவ மக்கள் மீது தற்கொலைக் குண்டுகள் வைக்கப்பட்டு நனவாகி இருக்கின்றது என்று தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன். இன்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில், கடந்த 40 நாட்கள் உபவாசமிருந்து நாட்டின் சமாதானத்திற்காகவும் அமைதிக்காகவும் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்து இயேசு பிரானின் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிப்பதற்காக தேவாலயத்தில் கூடிய பச்சிளம் குழந்தைகள்இ கர்ப்பிணி பெண்கள்இ ஆண்கள்இ எனப் பலர் போன்றோர் தீயில் கருகி கொலை செய்யப்பட்டுள்ளனர். என்னுடைய உறவினர்கள் கூட இருவர் இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இறந்து இருக்கின்றார்கள். இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று பல துன்பங்களை இந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் நாங்கள் பார்த்துதுள்ளோம். இவற்றிற்கான சரியான தீர்வை மக்களுக்கு பெறக்கொடுக்க வேண்டும். இந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள எந்த முஸ்லிம் அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதைவிடுத்து மறப்போம் மன்னிப்போம் என்ற வீணான பேச்சுக்களுக்கும்இ அவர் மீது பிழைஇ இவர் மீது பிழை என்ற நாடகம் ஆடுதலுக்கும் நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் என;றும் வியாளேந்திரன் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றினார். https://www.ibctamil.com/srilanka/80/118554
 4. அதிகார ஆசையிலேயே மகிந்தவுக்கு குறி! சம்பந்தன் சாட்டை! இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? இலங்கையை ஏன் தாக்க தீர்மானித்தார்கள் ? இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றதை அறிந்துகொண்டும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனவா?என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இப்போதும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் இந்த சம்பவங்களை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே நினைக்கின்றீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் சரியாகும் என நினைக்கின்றீர்கள். அவ்வாறு இருக்காது, முதலில் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். https://www.ibctamil.com/srilanka/80/118556
 5. தொப்பி பிரட்டிகள் என்று எமது மூதாதையர்கள் சொல்வார்கள். அததையே நான் இங்கு சொன்னால் சமதர்மம் தெரியாதவன் என்று கூண்டுக்குள் அடைப்பார்கள்.
 6. Today
 7. தற்கொலை தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கப்பட்ட ஒத்திகை! வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்! உயிர்ப்பு ஞாயிறு தினமான கடந்த 20ஆம் திகதி கிழக்கு உட்பட இலங்கையின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. தற்கொலை தாக்குதல் நடைபெற ஓரிரு தினங்களுக்கு முன்னர் காத்தான்குடியை அண்டிய பகுதியில் தற்கொலைதாரி மோட்டார் சைக்கிளொன்றை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. உயிர்ப்பு ஞாயிறு தினமான கடந்த 20ஆம் திகதி கிழக்கு உட்பட இலங்கையின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு ஒத்திகை பார்க்கும் வகையிலேயே காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளொன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முக்கிய கேந்திர நிலையமான காத்தான்குடியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள போதும் இதற்கு அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதுகாப்பு தரப்பினரும் கூட இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அவ்வாறெனில் பல உயிர்களை காவு கொண்ட குறித்த சம்பவத்திற்கு முழு காரணமும் யார்? அத்தோடு தற்போதைய ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கடந்த காலங்களில் நாடாளுமன்றில் உரையாற்றும் போது வெளிப்படையாகவே இரத்த ஆறு ஓடும் என கூறியிருந்தார். அப்படியெனில் அவர் ஓடுவதாக கூறிய இரத்த ஆறு இலங்கையில் ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற குறித்த சம்பவங்களா? எனினும் ஹிஸ்புல்லா இரத்த ஆறு ஓடும் என கூறிய போது, பொறுப்போடு செயற்பட வேண்டியவர்கள் இனக்கலரத்தை ஏற்படுத்த கூடாது என கூறி, அவரின் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். https://www.ibctamil.com/srilanka/80/118555
 8. தமிழ் மக்களை அழிக்க உலக நாடுகளை எல்லாம் துணைக்கிழுத்தவர்கள் இப்போ.. வெளிநாடுகள் வேண்டாம் எனும் போதே... விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால்.. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரழிவின் பின் கொழும்பு.. மட்டு.. யாழ் ஆயர்கள் வழங்கிய செவ்விகள்.. பாதிக்கப்பட்ட மக்கள் மீது கொஞ்சமும் கருசணையற்றிருந்ததை காணலாம். இவர்களுக்கும்.. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரழிவின் பின் பால்சோறு வழங்கி கொண்டாடி மகிழ்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும்.. வெடிகொழுத்திக் கொண்டாடிய சிங்களவர்களுக்கும்.. சிங்கக் கொடிதூக்கிப் பிடித்த டக்கிளஸ்.. சம்பந்தன் உட்பட்ட காக்கவன்னியர்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன..??! ஆனால்... இழக்கப்பட்டவை எல்லாமே அப்பாவி மனித உயிர்கள்.. என்பது தான் அடிப்படை சோகமும் உண்மையும். அதில் கூட பாகுபாடு காட்டியவர்கள் தான்.. உந்த ஆயர்களும் அரசியல்வாதிகளும். அவர்களிடம் இருந்து மனிதாபிமானத்துக்கான குரலை நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது. இன்று கூட முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு அஞ்சலி செய்யப் போகத் தயங்குபவர்களின் பட்டியல் நீண்டது..?!!!
 9. மிலேச்ச பயங்கரவாதிகள் யார் என்பது கொஞ்சம் வெளிப்பட்டுள்ளது! வெளிப்பட்டுள்ளது ஆழப்புதைந்துள்ள பாரிய பனிப்பாறையின் ஒரு சிறுமுனை தான். 1983 இல் இருந்து இந்த இரண்டு மதவெறிப் பயங்கரவாதக் கும்பல்களும் இணைந்து தமிழின அழிப்பை மேற்கொண்டனர். அதே நேரத்தில் சிங்கள-பௌத்த இனமதவெறிப் பயங்கரவாதி கோத்தபாயவால், முஸ்லீம் இனமதவெறிப் பயங்கரவாதக் கும்பல்களை வீழ்த்த இராவண பலய, பொதுபல சேன, மகாசேன் பலகாய, வியத்மக ... போன்ற 6 சிங்கள-பௌத்த இனமதவெறி அமைப்புகள் உருவாக்கபட்டன.
 10. உவைட கெட்டித்தனத்தை இதில் காணலாம். https://www.bbc.co.uk/news/av/world-asia-48012576/sri-lanka-bomb-explodes-as-police-try-to-defuse-it அதுபோக.. பொதுமக்களை குண்டு இருக்கு என்று சந்தேகிக்கும் இடத்துக்கு அருகில் அனுமதிக்கும்.. இந்த வெங்காய இராணுவத்தின் நோக்கம் என்ன..??1
 11. இரண்டு நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருந்து வீராவேசமாக வீடியோவை வெளியிட்ட பின் இன்று அப்படியே பல்டி அடித்து இலங்கை விமான நிலையத்தில் இருந்து சவூதிக்கு போகும் முன் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்
 12. சொந்தமாய் மிளகாய்த்தூள் அரைக்கத்தெரியாத ஆக்கள் கறிக்கு உறைப்பு வேணுமெண்டால் இரண்டு செத்தல் மிளகாயை வறுத்தோ வறுக்காமலோ அருவல் நொருவலாக்கிப்போட்டு கறியோடை சேர்த்து சமையுங்கோ.......ஒரு பிரச்சனையுமேயில்லை.பின் விளைவு பக்க விளைவு எதுவுமேயில்லை. கோதாரி விழுந்த உந்த போத்தில் தூளுகளை வாங்கி பாவிச்சு வருத்தத்தை தேடாதேங்கோ....இல்லாட்டி இரண்டு உறைப்பான பச்சைமிளகாயை வாங்கி கடிச்சு சாப்பாட்டோடை சாப்பிட்டாலோ கறிக்கை போட்டு சமைச்சாலோ நல்லாய்த்தான் இருக்கும். போத்தில் மிளகாய்த்தூள்..........ஐயோ பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்ட ரேஞ்சிலை நான் இருக்கிறன். உங்கடை இனம் தெரியாத வருத்தத்துக்காக பின்னாலையும் முன்னாலையும் கமராவிட்டு செக்கிங் பண்ணுற அளவுக்கு உந்த போத்தில் தூளின்ரை விக்கனம் எக்கச்சக்கம் கண்டியளோ.. #அனுபவம் பேசுது#
 13. நாங்கள் விமானத்திலிருந்து போடும் குண்டுகளும் அப்படித்தான்....மக்கள் இருந்தால் வெடிக்காது ஆயுதங்களுடன் யாராவது நடமாடினால் வெடித்து அந்த மக்களையே அழித்துவிடும்
 14. சந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்தினரும் இன்று விளக்கினர். பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இது தொடர்பில் தெரிவிக்கையில், சந்தேகத்துக்கு இடமான பொதி, மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் கிடைத்ததும் முதலில் அங்கு வரும் அதிரடிப் படையினர் அப்பகுதியில் இருந்து முதலில் அனைத்து பொது மக்களையும் அப்புறப்படுத்துவர். பின்னர் எக்ஸ் ரே கதிர்வீச்சு தொழில்னுட்பத்தை பயன்படுத்தி அந்த சந்தேகத்துக்கிடமான பொதியை ஆராய்வர். அதன் பின்னர் அப்பொதியை திறக்க Detonation எனும் முறையை பயன்படுத்துவர். இதன்போது அது வெடிப்புச் சத்தம் போன்ற சத்தத்தை தோற்றுவித்து திறந்துகொள்ளும். அதன்பின்னர் சோதனைகள் இடம்பெறும். அந்த சத்தத்தையே மக்கள் குண்டு வெடிப்பு என நினைக்கின்ரனர்.' என்றார். சுற்றியுள்ள உயிர்களுக்கும் அதனை சோதனையிட அனுப்பப்படுவோருக்கும் உயிர் அச்சுறுத்தலாய் விளங்கும் சந்தேகத்திற்கிடமான பொருளைக் கண்டால், அதிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற இராணுவ அதிகாரிகள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே Controlled Explosion (கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு ) அல்லது Detonation (வெடிக்கச்செய்யும் அதிர்வேட்டு) என அழைக்கப்படுவதாக இராணுவம் குறிப்பிடுகின்றது. எனினும், Controlled Explosion அல்லது Detonation முன்னெடுக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பங்களாய் அர்த்தப்படாது. அச்சுறுத்தல் விடுக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படும் பட்சத்தில், அதிகாரிகளால் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை தந்திரோபாயமே Controlled Explosion அல்லது Detonation எனப்படும். http://www.virakesari.lk/article/54610
 15. இனி சிங்களம் தனக்கிருக்கிற அனுதாப அலையை பெருப்பிக்கிறதுக்காக மூலைமுடுக்குகளுக்கை தானே வெடிக்காத குண்டை வைச்சிட்டு ஐயோ அல்லா எண்டு கத்தப்போகுது. சீன வெடி வெடிச்சாலும் புலி குண்டு வைச்சிட்டுது எண்டு நாடகம் போட்ட சிங்களமெல்லே.... உலகத்திலையே ஆர்ரையும் அழிவிலை சுகபோகம் அனுபவிக்கிறதெண்டால் சிங்கள தேசம் மட்டும் தான்.
 16. தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர். சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் இடம்பெறும் விசாரணைகளிலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 தற்கொலைதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் விசாரணைகளில் அவர்கள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த அடையாளம் காணப்பட்ட எட்டு பேரில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்கடடினார். அப்பெண்ணே தெமட்டகொடை சொகுசு வீட்டில் தற்கொலை தாக்குதலை நடத்தியதாக சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் இந்த தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் தேசிய தெளஹீத் ஜமாத் எனும் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் அல்லது சஹ்ரான் ஹாசிம் என்பவர் இதன்போது தற்கொலை குண்டுதரியாக செயற்பட்டு உயிரிழந்தாரா இல்லையா என்பது மட்டும் மாலை வரை உறுதி செய்ய முடியாதிருந்ததாக விசாரணைகளை கையாளும் உயர் பொலிஸ் அதிகாரின் ஒருவர் தெரிவித்தார். இந் நிலையில் இந்த தொடர் தற்கொலை குண்டுத்தககுதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் நாட்டின் பல பகுதிகளிலும் சுமார் 70 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு 32 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றது. இதனைவிட பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நான்கு சந்தேக நபர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றது. இதற்கு மேலதிகமாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வரகாபொலை சோதனையும் சிக்கிய வேன், மோட்டார் சைக்கிளும் இதனிடையே நேற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தபோது, பொலிஸ் விஷேட அதிரடிப் படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விஷேட சுற்றிவளைப்பொன்று வரகாபொலை பகுதியில் நடத்தப்பட்டது. கேகாலை பொலிஸ் விஷேட அதிரடிப் படை முகாமின் பொலிஸ் பரிசோதகர் ரோஹன குமார தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பினை நடத்தினர். வரகாபொலை - அங்குருவல வீதியின் மஸ்ஜித் மாவத்தை பகுதியில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. இதன்போது சந்தேகத்துக்கு இடமானது என அறிவித்து தேடப்பட்டு வந்த எஸ்.ஜி.பி.எச். 3779 எனும் கே.டி.எச். ரக வேன் ஒன்றும் 144 - 2446 எனும் இலக்கத்தை உடைய செம்மஞ்சள் நிற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.முதலில் மோட்டார் சைக்கிளை மீட்ட பொலிசார் பின்னர் வேனைக் கைப்பற்றினர். இதன்போது அங்கு வீட்டில் தங்கியிருந்த மொஹம்மட் ஜுனைட் மொஹம்மட் அமீன் என்பவரையும் மற்றொருவரையும் பொலிசார் கைதுசெய்தனர். அதன்பின்னர் அவர்களது வீட்டை சோதனை செய்த பொலிசார் அங்கிருந்து 4 வோக்கி டோக்கிகளை கைப்பற்றினர். இந் நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, 47 வயதான மொஹம்மட் ஜுனைட் மொஹம்மட் அமீன் கே.டி.எச். ரக வேனின் சாரதியாக செயற்பட்டுள்ளமையும் அவர், மாவனெல்லை - ஹெம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த மெளலவி ஒருவரின் கோரிக்கைக்கு அமைய கடந்த இரு வாரங்களாக டுபாயில் இருந்து வந்ததாக கூறப்படும் ஒரு குழுவை நாடு முழுதும் அழைத்துச் சென்றிருந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனையடுத்து ஹெம்மாத்தகமையைச் சேர்ந்த குறித்த மெளலவியையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அளுத்கம, பேருவளை, கட்டான பகுதிகளிலும் கைதுகள் இதேநேரம் நேற்று இரவோடிரவாக மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அளுத்கம பகுதியில் பள்ளிவாசல் ஒன்றில் கலந்துரையாடலில் இருந்த ஆறு பேர் அளுத்கம பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பேருவளையில் 5 பேரும் , நீர்கொழும்பு - கட்டான பகுதியில் நல்வரும் கைதுசெய்யப்பட்டனர். மாதம்பையில் கைதான எகிப்து பிரஜை இதேநேரம் மாதம்பே பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையிலிருந்து எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாவோ கடவுச்சீட்டோ இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். கிடைத்த தகவல்களுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளுக்கு குறித்த சந்தேகநபர் பயிற்சிகளை வழங்கியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரின் முகம், கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் முகத்தை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எகிப்து நாட்டை சேர்ந்த 44 வயதான குறித்த நபரை நாளை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வத்தளையில் கைதான புர்கா அணிந்து சென்ற ஆண் இதேநேரம் வத்தளையில் புர் கா அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஆண் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்ட நிலையில், அவரை மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். குண்டு தயாரிக்கப்பட்டது செப்பு தொழிற்சாலையிலா? இதேநேரம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுக்கு தேவையான வெடிபொருட்கள், குண்டுகள் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் அவிஸ்ஸாவளை வீதியில் இலக்கம் 111/ஏ எனும் முகவரியில் அமைந்துள்ள செப்பு தயரைப்பு தொழிற்சாலையில் தயரைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. அத்தொழிற்சாலை ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்சான் என்பவருக்கும் தெமட்டகொடையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பெண்ணுக்கும் சொந்தமானது என தெரியவந்துள்ள நிலையில் அங்கு தொழில் செய்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் உள்ளனர். இந் நிலையிலேயே சினமன் கிரான்ட் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியும் அத்தொழிற்சாலைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு குண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. தற்கொலைதாரிகள் தொடர்பிலான மேலதிக தகவல் தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்த, நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது. சிலருக்கு சட்டம் தொடர்பில் பட்டம் உள்ளது. தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்தவர். பின்னர் முதுகலை படிப்பை அவுஸ்திரேலியவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக கண்டறிந்துள்ளோம் என பாதுகப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கூறினார். குண்டு புரளியால் அச்சத்தில் மக்கள் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியிலுள்ள சவோய் திரையரங்கிற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து, இன்று அப்பகுதியில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டது. காலை 9.30 மணியளவில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அவ்விடத்திற்கு விரைந்ததுடன், சவோய் திரையரங்கிற்கு அருகில் உள்ள அனைவரையும் அப்புறப்படுத்தி எக்ஸ் கதிர் வீச்சு ஊடாக மோட்டர் சைக்கிளை முதலில் சோதனைச் செய்தனர். எனினும் அந்த மோட்டார் சைக்கிளின் இருக்கையை திறந்து சோதனைச் செய்ய முடியாமல் போகவே அந்த இருக்கையை திறக்க பொலிசார் பாதுகாப்பாக வெடிப்பு முறையைக் கையாண்டனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை ஆராய்ந்த போதும் அதில் எந்த வெடிபொருட்களும் இருக்கவில்லை. அத்துடன் களுபோவிலை வைத்தியசாலையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் அங்கு சற்று அச்ச நிலைமை ஒன்று இன்று ஏற்பட்டது. கொஹுவளை பொலிசாருக்கு அது குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில் நிலைமையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேநேரம் களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் 3 ஆம் மாடியில் இருந்த சந்தேகத்துக்கு இடமான பொதியால் பதற்றம் ஏற்பட்டது. எனினும் இதன்போது முப்படை, பொலிஸ் விஷேட அதிரடிப் படை ஸ்தலத்துக்கு சென்று நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. குறித்த பொதியை சோதனைச் செய்தபோது அதில் வெடி பொருட்கள் எதுவும் இருக்கவில்லை. மேலும் இன்று பிற்பகல் புறக்கோட்டை பொலிஸ் பிரிவின் ஐந்து லாம்பு சந்தி, முதலாம் குறுக்குத்தெரு ஆகிய பகுதிகளிலும் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதியிலும் சந்தேகத்துக்கு இடமான மூன்று மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அச்சத்துடன் கூடிய சூழல் உருவானது. பொலிஸ் தலைமையகம் மற்றும் முதலாம் குறுக்குத்தெரு ஆகிய பகுதிகளை அண்மித்த பகுதிகளில் இருந்த மோட்டர் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்ட பின்னர் அதில் எதுவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும் ஐந்துலாம்பு சந்தி பகுதியில் இருந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் பரிய சந்தேகம் எழுந்த நிலையில், அந்த மோட்டார் சைக்கிள் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப்பட்டது. எனினும் அந்த மோட்டார் சைக்கிளில் எந்த வெடிபொருட்களும் காணப்படவில்லை. இந் நிலையில் மோட்டார் சைக்கிளின் பதிவை மையப்படுத்தி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட கட்டான தேவாலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்த சந்தேகத்துக்கு இடமான பொதியால் இன்று பதற்றம் ஏற்பட்டது. ஹோட்டல் அதிகாரிகளின் தகவலால் அங்கு சென்ற விமானப்படையினர் அந்த பொதியை பாதுகாப்பாக வெடிக்க வைத்து திறந்த நிலையில், அதிலும் வெடிபொருட்கள் எதுவும் இருக்கவில்லை. இந் நிலையில் அப் பொதியின் உரிமையாளர் பின்னர் அங்கு வருகை தந்துள்ளதுடன் தான் தவறுதலாக மறந்து பொதியை வைத்துவிட்டு சென்றதாக கூறி அப்பொதியை பொறுப்பேற்றார். http://www.virakesari.lk/article/54614
 1. Load more activity