Jump to content

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. தகவலுக்கு நன்றி இந்த ஊர் யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
  3. நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
  4. மிக்க நன்றி, கு.சா🙏 பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி, ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  5. Today
  6. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும் ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  7. பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது. சரி போகுது.... யார் குற்றினாலும், அரிசி ஆனால் சரிதானே... 🤣 (இலங்கை ராணுவம் பலி)
  8. பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......! 😂
  9. மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/ மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மேலூர் ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன். https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/ மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம் (தனி), கலசப்பாக்கம், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/ மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம், ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
  10. 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  11. சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  12. நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய : சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்? தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் வட சென்னை மக்களின் மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது. வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது. திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார். https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/ மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய : 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார் என்ற கேள்விக்கு பதில் தேடி, நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது. அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான அரக்கோணம் (தனி), திருத்தணி, சோளிங்கர், காட்பாடி, இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார். அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன். https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/ மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி) பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார். https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/ மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்… களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான திருச்சிராப்பள்ளி (கிழக்கு), திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
  13. ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=273802
  14. பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024 ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
  15. மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024 பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய கோவிந்தசாமி கல்பனா என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. https://globaltamilnews.net/2024/201801/
  16. வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள். ஆகவே, சிங்களத் தலைவர்கள் “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  17. தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3) http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  18. நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
  19. இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
  20. Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன சுரங்கப்பாதையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  1. Load more activity
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.