யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. Oh, her eyes, her eyes make the stars look like they're not shinin' Her hair, her hair falls perfectly without her trying She's so beautiful and I tell her everyday Yeah, I know, I know when I compliment her she won't believe me And it's so, it's so sad to think that she don't see what I see But every time she asks me "Do I look okay?" I say When I see your face There's not a thing that I would change 'cause you're amazing Just the way you are And when you smile The whole world stops and stares for a while 'Cause girl you're amazing Just the way you are Yeah Her lips, her lips, I could kiss them all day if she'd let me Her laugh, her laugh she hates but I think it's so sexy She's so beautiful, and I tell her everyday Oh you know, you know, you know I'd never ask you to change If perfect's what you're searching for then just stay the same So don't even bother asking if you look okay, you know I'll say When I see your face There's not a thing that I would change 'Cause you're amazing Just the way you are And when you smile The whole world stops and stares for a while 'Cause, girl, you're amazing Just the way you are The way you are The way you are Girl, you're amazing Just the way you are When I see your face There's not a thing that I would change 'Cause you're amazing Just the way you are And when you smile The whole world stops and stares for a while 'Cause, girl, you're amazing Just the way you are Yeah
 3. Today
 4. அரியவகை மரங்களும் அவற்றின் பெயர்களும்.....!
 5. நால்வகை சேனை பின்தொடர நான்கு குதிரைகள் இழுக்கும் வண்டியில் பறந்து செல்லும் படைத்தலைவன்/ தலைவி .....!
 6. இதென்ன நான் எழுதிய கருத்தை காணவில்லை. சம்பந்தனே ஒப்புக்கொண்ட விடயம் அது. கூட்டமைப்பு வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க அபிவிருத்தி என்ற பெயரில் ஆளாளுக்கு 2 கோடி படி ரணில் கொடுத்த மாதிரி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ரணில் அரசை காப்பாற்றவும் ரணில் காசு கொடுத்திருப்பார் என எழுதியிருந்தேன். வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க கூட்டமைப்பினர் ரணிலிடம் பணம் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் கூறிய கருத்துக்கு சம்பந்தன் கூறிய பதில். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஐ தே க உறுப்பினர்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பெற்றது போன்றே எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் சில அபிவிருத்தி முன்மொழிவுகளை வழங்கி அந்த நிதியை பெற்றார்கள். http://globaltamilnews.net/2018/63759/
 7. காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது.......!
 8. இவருடைய பொறுப்பில் ஒரு பள்ளிக்கூடத்தை விட்டு வைத்திருக்கினம் நான் பட்ட துன்பம் பெறுக இவ்வையகமே என அந்தாள் பள்ளிக்கூடத்தை யாருக்காவது விகிறன் எண்டு சொல்லி காசுபாக்கப்போகுது.
 9. உஸ்....... இன்கம்டாக்ஸ் வந்துடும் பின்போட்டிருக்கிற ஜட்டியும் போயிடும் அதுதான்........!
 10. நவீன ரக ஆயுதங்கள் வாங்கி மனித உரிமைக்காக போரடியவர்களை அழிக்க முடியுது மற்றவன் நிலபுலங்களை அடாவடித்தனமாக அபகரிக்க முடியுது. சம்பந்தமே இல்லாத இடத்தில் விகாரத்தனமாக விகாரைகள் கட்டியெழுப்ப முடியுது. தொட்டது பட்டதுக்கெல்லாம் சூடுசுரணையில்லாமல் கண்டவன் கிண்டவனிட்டையெல்லாம் கடன் வாங்க முடியுது. ஆனால் தானியங்கி ரயில்கடவை மட்டும் வாங்க முடியேல்லை. ஏன்??? போட்டி போட்டுக்கொண்டு கடன் குடுக்கிற சர்வதேச புண்ணாக்கு நாடுகள் அதை செய் இதை செய் எண்டு சொல்ல உரிமை இருக்குத்தானே? அதையேன் பேசுவான்......ரயில் ரோட்டு போட்டுக்குடுத்த கிந்திய நாட்டுக்கு எங்கை போச்சுது புத்தி?உதுகள் எல்லாம் வெளிநாடுகளுக்கு வந்து என்னத்தை படிச்சிட்டு அங்கை போய் கிழிக்குதுகள் எண்டு தெரியேல்லை?????????
 11. பாம்பும் ஏணியும் கே.எஸ்.சுதாகர் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2018 இல் முதற் பரிசு பெற்ற சிறுகதை கே.எஸ்.சுதாகரின் 'பாம்பும் ஏணியும்'. நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது. - பதிவுகள் - சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கடை. ஜனகன் பெரும்பாலான நாட்களில் தனக்குத் தேவையான உணவை அங்குதான் எடுத்துச் செல்வான். ’பிறின்சஸ்’ என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அங்கு யாரும் வேலை செய்வதாகத் தெரியவில்லை. ஒரு வயது முதிர்ந்தவர் திருநீற்றுப்பூச்சுடன் பக்திப்பாடல்களை முணுமுணுத்தபடி கல்லாவில் இருப்பார். அவரின் மனைவியும், கூடமாட எடுபிடி வேலை செய்யும் ஒரு பையனும் அங்கே இருப்பார்கள். சமையல் அறைக்குள் யார் யாரெல்லாம் இருப்பார்கள்? சமீப நாட்களாக குசினிக்குள் வேலை செய்யும் ஒருவர், மறைவாக ஒழித்து நின்று ஜனகனைப் பார்க்கின்றார். ஜனகனும் அதை அறிவான். கண்களைப் பார்த்தால் பெண்போல இருக்கின்றாள். ஒருபோதும் நேரில் கண்டதில்லை. ஜனகன் கம்பீரமான உயர்ந்த இளைஞன். கூரிய மூக்கு. அளவாக வெட்டப்பட்ட மீசை. ஸ்ரைல் கண்ணாடி. பார்த்த மாத்திரத்தில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோற்றம். எப்போதும் அயன் செய்யப்பட்டு மடிப்புக் குலையாத ஆடை. சமயத்தில் தருணத்திற்கேற்றபடி நகைச்சுவையை அள்ளி வீசுவான். கல்லாவில் இருக்கும் முதியவருடன் அடிக்கடி பேச்சுக் கொடுப்பான்.கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா. இன்று காலை கடையில் அலுவலை முடித்துக் கொண்டு வெளியேறுகையில் அவனுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. கசக்கி எறியப்பட்ட கடதாசித் துண்டு ஒன்று அவன் கால் முன்னே வந்து விழுந்தது. குப்பைக்கூடைக்குள் அதை எறியப்போனவன், ஏதோ ஒரு யோசனை வந்ததில் அதை பிரித்துப் பார்த்தான். “நீங்கள் தனியாகவா இருக்கின்றீர்கள்?” என அதில் எழுதி இருந்தது. ஜனகனின் மனம் குழம்பியது. குரங்கு போலக் கும்மியடித்தது. அன்று அவனால் ஒழுங்காக வேலை செய்யமுடியவில்லை. வீட்டிற்கு வந்தால் உறங்க முடியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது? பெண்ணை நேரில் பார்க்காமல் எப்படி? அது எப்படி ஒருநாளும் சந்திக்காமல் கதைக்காமல் “நீங்கள் தனியாகவா இருக்கின்றீர்கள்?” என்று கேட்க முடியும். ஜனகனின் மனம் புழுவாய்க் குடைந்தது. ஒருவேளை முதலாளியுடன் கதைப்பதை வைத்துக் கொண்டு தன்னை நல்ல ஆண்மகன் என அவள் முடிவெடுத்திருக்கலாம். இருப்பினும் அடுத்தநாள் காலை கடை திறப்பதற்கு முன் காத்திருந்து அந்தப் பெண்ணைப் பார்த்துவிடலாம் என முடிவு செய்தான் ஜனகன். எதிர்ப்புறக் கடையில் ஒளித்திருந்தான். கடை முதலாளி காரை கடை முகப்பில் நிறுத்துகின்றார். முதலாளி அம்மாவும் ஒரு பெண்ணும் காரில் இருந்து இறங்குகின்றனர். ஏதோ சில பொருட்களை இறக்குகின்றனர். முதலாளி அவர்களுடன் ஏதோ கத்திக் கதைத்துவிட்டு காரைப் பின்புறமுள்ள தரிப்பிடம் நோக்கிச் செலுத்துகின்றார். அந்தப் பெண் பதட்டமடைந்தவளாக திரும்பி சுற்றுமுற்றும் பார்த்தாள். தரிசனம் கிடைத்தது. ஜனகன் எதிர்பார்த்ததைவிட அழகாக இருந்தாள். மெல்லிய அந்தப் பெண் அவர்களின் மகளாக இருக்கலாம். அவளே பிறின்சஸ் என்று ஜனகனின் மனம் அடித்துச் சொன்னது. ஜனகன் வீட்டிற்கு அரக்கப்பரக்க ஓடினான். மேல் ஆடையைக் கழற்றிவிட்டு ரி சேட் ஒன்றை மாட்டினான். அதன் முன்னும் பின்னும் கொட்டை எழுத்தில் ‘Yes’ என்று எழுதி இருந்தது. அந்த ரி சேட்டிற்கு பலன் கிட்டியது. அன்று விழுந்த பேப்பரில்: ‘நான் ஆபத்தில் சிக்கியுள்ளேன். இவர்கள் என்னைத் தினமும் சித்திரவதை செய்கின்றார்கள், துன்புறுத்துகின்றார்கள். உங்களால் எனக்குப் பாதுகாப்புத் தர முடியுமா? பதிலை கடை வாசலில் உள்ள பூச்சாடியின் கீழ் வைக்கவும்’ நான்கு நாட்களின் பின்பு இந்த விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்தது. ஒருநாள் காலை முதலாளியின் கார் வரும் திசைக்கு எதிராக ஜனகன் தனது காரை நிறுத்தி வைத்திருந்தான். அந்தப்பெண் காரை விட்டு இறங்கியதும், குறுக்காக ஓடி தயாராக நின்ற ஜனகனின் காருக்குள் ஏறிக் கொண்டாள். கார் விர் எனக்கிழம்பி ஓடத் தொடங்கியது. ● காரின் பின் கதவைத் திறந்து ஏற முற்பட்ட அவளை, ஜனகன் முன்னால் வந்து ஏறும்படி கத்தினான். கார் மெதுவாக நகரும்போதே அவள் முன் கதவைத் இழுத்துத் திறந்து தாவி ஏறினாள். “உங்கள் பெயர்?” முதன் முதலாக ஜனகன் அவளின் பெயரைக் கேட்கின்றான். “சிவானி…. நீங்கள்?” “நான் ஜனகன்.” “நாங்கள் இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?” ஓடிவந்த களைப்பில் சிவானிக்கு மூச்சு இரைந்தது. “உமக்கு முதல்ல நாலு நாட்கள் ஹோட்டல் எடுத்து வைச்சிருக்கிறன். அதுக்குப் பிறகு றென்றுக்கு வீடு ஒண்டு பாக்கலாமெண்டிருக்கிறன். தூரமா எடுத்தா உமக்கு நல்லாய் இருக்கும்” சொல்லியபடி ஸ்ரியரிங் வீலில் இருந்த தனது இடது கையை எடுத்து அவளின் வலதுபுற மணிக்கட்டில் வைத்து அழுத்தினான். சிவானி அதற்கு ஒன்றும் சொல்லாமல் ஜனகனை நிமிர்ந்து பார்த்தாள். கார் ஒரு தடவை ஆட்டம் கண்டு பின்னர் நெடுஞ்சாலையில் வேகமெடுத்து ஓடியது. ஹோட்டல் போய்ச் சேரும் வரைக்கும் அவர்கள் இருவரும் அதன்பின்னர் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. ஹோட்டலின் கீழ் உணவருந்திவிட்டு, திறப்பை எடுத்துக் கொண்டு அறைக்குப் போனார்கள். இவ்வளவு காலமும் புளிச்ச தோசையும் இட்டலியும் சாப்பிட்ட சிவானிக்கு ஹோட்டல் உணவு வினோதம் காட்டியது. “இனி உங்கள் கதையைச் சொல்லுங்கள்” என்றான் ஜனகன். அவள் மெல்ல அழத் தொடங்கினாள். அழுது அழுது தன் கதை சொன்னாள். |என்னுடைய அப்பாவும் அண்ணாவும் 2009 இலை நடந்த யுத்தத்திலை காணாமல் போச்சினம். அப்ப நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில இறுதியாண்டு படிச்சுக் கொண்டிருந்தனான். அம்மா ஸ்கூல் ரீச்சர் எண்டபடியாலை கஸ்ரப்பட்டு உழைச்சு என்னைப் படிப்பிச்சா. அப்பாவும் அண்ணாவும் போராளிகளாக இருந்தபடியாலை ஆமி அடிக்கடி வந்து அம்மாவைத் தொந்தரவு செய்தார்கள். அம்மா ஒருநாள் தற்கொலை செய்திட்டா. அம்மாவின்ரை மூத்த அண்ணா கணேசலிங்கம் மாமா தான் ’பிறின்சஸ் றெஸ்ரோரன்’ ஓனர். அவர் தான் கடையிலை நிக்கிறவர். அம்மா செத்தாப்பிறகு அவர்தான் எனக்கு ஸ்பொன்சர் செய்து இஞ்சை கூப்பிட்டவர்.| சிவானியின் கதையைக் கேட்ட ஜனகனுக்கு கவலை வந்தது. காட்டிக் கொள்ளவில்லை. அதன் பின்னர் இருவரும் சொப்பிங் சென்ரர் சென்று, சிவானிக்குத் தேவையான உடுப்பு முதல் சகலதும் வாங்கிக் கொண்டார்கள். மீண்டும் ஹோட்டல் சென்று சிவானியை இறக்கிவிட்டு ஜனகன் புறப்படும்போது, ”அப்ப நீங்கள் இங்கே தங்கமாட்டீர்களா?” என்று ஏக்கமாகக் கேட்டாள் சிவானி. “பாதுகாப்புத் தர முடியுமா என்றுதானே கேட்டீர்கள். தந்துவிட்டேன். அவுஸ்திரேலியாவில் சகல மனிதரும் பாதுகாப்பாக வாழ முடியும். அடிக்கடி உங்களை வந்து பார்க்கின்றேன். நீங்கள் சிறிது காலம் மறைந்து வாழ்ந்தால் நல்லது என நினைக்கின்றேன். நீங்கள் முதலில் உங்கள் உறவினருக்கு ஒரு கடிதம் எழுதித் தாருங்கள். நான் போகும்போது போஸ்ற் பண்ணி விடுகின்றேன்.” சிவானி பேனைய எடுத்ததும் அவள் கைகள் நடுங்கின. அந்த நடுக்கத்தில் எழுத்துகள் கோணல் மாணலாக கடிதத்தில் விழுந்தன. ”நீங்கள் இதுவரை எனக்குச் செலவழித்த பணம் அத்தனையையும் கூடிய விரைவில் தந்துவிடுவேன். என்னை இங்கு அவுஸ்திரேலியாவிற்குக் கூப்பிட்டு விட்டதற்கு மிகமிக நன்றி. என்னைத் தேட வேண்டாம். நான் எனக்குரிய வழியில் செல்கின்றேன்.” கடிதத்தைப் புரிந்துகொள்ள ஜனகன் திண்டாடினான். ஜனகன் போகும்போது புதிதாக வாங்கிய ஒரு ’சம்சுங்’ போனை சிவானியின் கைகளிற்குள் பொத்தித் திணித்தான். “ஏதாவது தேவை என்றால் இந்த நம்பருக்கு அடியுங்கோ” தனது நம்பர் எழுதிய துண்டொன்றையும் சிவானியிடம் கொடுத்தான். சிவானி அந்தத் துண்டை வாங்கும்போது அவனது கையைப் பிடித்து, “நான் உங்களை விரும்புகின்றேன்” என்றாள். “அதெப்படி ஒரே நாளில் இப்படி ஒரு முடிவெடுத்தீர்கள்?” கேட்டான் ஜனகன். “ஒரு நாளல்ல. ஆறுமாசமா நான் உங்களை கடைக்குள்ளிருந்து மறைவாகப் பார்த்து வந்திருக்கின்றேன்.” “ஓ…. அப்பிடியா? ஆனால் இன்றுதானே உங்களை நான் நேரில் பார்க்கின்றேன். போகப் போக எனக்கும் உங்களைப் பிடிக்கும். நான் அகதியாக இந்த நாட்டுக்கு வந்தனான். எனக்கு நிறையப் பொறுப்புகள் இருக்கின்றன. நான் இப்ப மூண்டு இடங்களிலை இரவு பகலா வேலை செய்யிறன். அப்படி வேலை செய்யிறதாலைதான் என்னாலை சமாளிக்க முடியுது. என்னைப் போல நாலைஞ்சு பேர் சேர்ந்து வீடு ஒண்டு வாடகைக்கு எடுத்து இருக்கிறம்.” ஜனகன் தன் கதை சொல்ல, சிவானி வாய் பிளந்து அவன் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்னதான் இருந்தாலும் சிவானியின் கடிதமும், கள்ளம் கபடமில்லாச் சிரிப்பும் ஜனகனை அன்று முழுவதும் விரட்டியடித்தபடி இருந்தது. அவனது பாழும் மனதை உலுப்பியது. அன்று மாலை ஆறுமணியாவதற்குள் சிவானியின் றூமிற்கு முன்னால் நின்று அவளுக்கு ரெலிபோன் செய்தான். “சிவானி… இன்று இரவு நான் உன்னுடன் தங்குகின்றேன்.” அறைக்குள் சிவானி பதட்டத்தில் ரெலிபோனைப் போட்டடிக்கும் சத்தம் வெளியே நின்ற ஜனகனின் காதிற்குள் விழுந்தது. சற்று நேரத்தில் கதவு திறந்தது. ● சிவானி தன் வாழ்நாளில் ஹோட்டலில் ஒருபோதும் இருந்ததில்லை. அவளுக்கு எல்லாமே வியப்பாக இருந்தது. நறுமணம் கமழும் படுக்கை விரிப்புகள், நேரத்திற்கு சாப்பாடு, ரெலிவிஷன் என எத்தனை வசதிகள். இன்று ஜனகன் வர முடியாது என்று ஏற்கனவே சொல்லியிருந்தான். ஹோட்டலின் ஜன்னலைத் திறந்து வெளியே பார்க்கின்றாள். இரவு எங்குமே மின்குமிழ்கள் வர்ண ஜாலத்தில் வெளிச்சமிடுகின்றன. இயந்திரமாகிப்போன மனிதர்கள் தங்கள் பாட்டில் பரபரப்பாக நடமாடுகின்றார்கள். நகரம் கோலாகலமாக விழாக்கோலம் பூண்டது போல் இருக்கின்றது. என்னதான் இருந்தாலும் தனியாக இருப்பதற்கு சிவானிக்குப் பயமாக இருந்தது. ஜன்னலை மூடிவிட்டு தொப்பென்று கட்டிலில் விழுந்தாள். மேலே ஃபான் சுழன்றடித்துக் குளிர்காற்றை வாரி இறைக்கின்றது. அதிலே நாக்குத் தொங்கியபடி ஒரு உருவம் சுற்றுவது போன்ற பிரம்மை. அம்மா! விக்கித்துப் போனாள். மின்விசிறியையும் லைற்றையும் அணைத்துவிட்டுப் போர்வைக்குள் ஒதுங்கினாள். எல்லாச் சம்பவங்களும் ஒவ்வொன்றாக வந்து அவளைத் துன்புறுத்தின. சொந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்ததன் பின்னர்தான் அப்பா இயக்கத்திற்குப் போனார். அதன்பின்னரும் சிவானி அங்குள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அண்ணா படிப்பைக் குழப்பிவிட்டான். ஆனாலும் தங்கைக்குப் பாதுகாப்பாக பின்னுக்கும் முன்னுக்கும் சுழன்றடித்துக் கொண்டு திரிந்தான். பள்ளிக்கு சைக்கிளில் சிட்டாகப் பறந்து போகும்போது பின்னாலே நின்று பார்த்துக்கொண்டு நிற்பான். சிலவேளைகளில் தானும் பின்னால் சைக்கிளில் வந்து சிவானியை வழியனுப்பி வைப்பான். அம்மாவும் அவனைப் படி என்று வற்புறுத்தவில்லை. ”நாளைக்கு கலியாணம் செய்து புருஷனோடை போகேக்கை, நீயும் பின்னாலே அங்கை போய் குந்தியிருந்து அவளைக் கவனிக்கப் போறியா?” என்று அம்மா கிண்டல் செய்வார். அவர்கள் அங்கிருந்தும் இடம்பெயரவேண்டி வந்தது. அந்த இடம்பெயர்வின்போது அண்ணாவும் அவர்களைவிட்டுப் பிரிந்துவிட்டான். 2009 யுத்தத்தின்பின்னர் அப்பாவும் அண்ணாவும் என்ன ஆனார்கள் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. எல்லாம் முடிவடைந்து - ஒருநாள் மெல்பேர்ண் எயாப்போர்ட்டில் அதிகாலை நான்குமணியளவில் கால் பதித்தாள் சிவானி. கணேசலிங்கம் மாமாவும் மாமியும் வந்திருந்தார்கள். பிள்ளைகள் வரவில்லை. நேரடியாக தனது வீட்டிற்குள் கொண்டுவந்து அடைத்துவிட்டார். அதன்பின்னர் நான்கு சுவர்களுக்குள் குண்டுவெடிப்புகளின் சத்தம் இல்லாத உறக்கமும், நேரத்திற்குச் சாப்பாடும், றெஸ்ற்ரோறன்ரில் சட்டி பானைகளுடன் போராடும் வேலையும் கிடைத்தது. வீட்டையும் வேலை செய்யுமிடத்தையும் தவிர அவுஸ்திரேலியாவில் வேறொன்றையும் அறியாள். பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பு முடித்த அவளுக்கு, குசினிக்குள் ஒரு வேலை போட்டுக் கொடுத்து சிறைப்படுத்திவிட்டார் மாமா. இலங்கையில் 2009 நடந்த யுத்தத்தின்போது பட்ட கஸ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஷெல் அடிக்கும் குண்டுத்தாக்குதலுக்கும் பயந்து உயிரைக் காப்பாற்ற, தினம் இரவு பகலாக ஊன் உறக்கமின்றி ஊர் ஊராக ஓடிய ஓட்டம். உறங்குவதற்குக் கூட அப்பொழுது நேரம் இருக்கவில்லை. இப்பொழுது நிம்மதியான வாழ்க்கை கிடைத்தபோது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் அதுவே நிரந்தரமானபோது பயம் தொற்றிக் கொண்டது. ஹோட்டலில் தங்கியிருந்த நாலு நாட்களில், இரண்டு நாட்களை சிவானி ஜனகனுடன் பங்கிட்டுக் கொண்டாள். அதன்பின்னர் இரண்டு அறைகள் கொண்ட வீடு ஒன்றை ‘பலறாற்’ என்னும் இடத்தில் வாடகைக்கு எடுத்து சிவானிக்குக் கொடுத்தான் ஜனகன். வீடு மாறியபோது மீண்டும் சிவானியை சொப்பிங்சென்ரர் கூட்டிச் சென்றான் ஜனகன். றொலியைத் தள்ளியபடி வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஒவ்வொன்றாகத் தூக்கி றொலிக்குள் போட்டான் ஜனகன். சொப்பிங்சென்ரர் எங்கும் சுகந்தம் வீசியது. ”ஊரில் என்றால் கருவாட்டு நாற்றமடிக்கும்” என்றாள் சிவானி. ஜனகன் ஏதோ ஒன்றை எடுத்து, தான் தான் அதைக் கண்டுபிடித்தது போல, சிவானிக்குத் தூக்கிக் காட்டினான். பின் குனிந்து அவளின் காதிற்குள் கிசுகிசுத்துவிட்டுச் சிரித்தான். அவளும் தான் அதை வாழ்நாளில் காணாதது போல வெகுளிப்பெண்ணாகச் சிரித்தாள். ”நீர் ஒரு வேலை எடுக்கும் மட்டும், நான் உமக்கு உதவி செய்யிறன்” என்று சொன்ன ஜனகனைப் பார்த்து, “எப்போது என்னைத் திருமணம் செய்வீர்கள்?” என்று கேட்டாள். “காசு சேக்க வேணும். என்ரை குடும்பத்தையும் பாக்க வேணும். இந்த நாட்டுக்கு என்னைக் களவாக அனுப்பி வைத்த ஏஜெண்டிற்குக் காசு குடுக்க வேணும். காலம் வரட்டும்” இப்படிப் பல காரணங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கினான் ஜனகன். “எப்போது என்னைத் திருமணம் செய்வீர்கள்?” அவள் கேட்டுக் களைத்துப் போனாள். சிவானி, ஜனகனை தன்னுடன் வந்து இருக்கும்படி சொல்கின்றாள். ஆனால் ஜனகன் நண்பர்களை விட்டுப் பிரிய முடியாது எனவும்- இடைக்கிடை வந்து தங்கிச் செல்வதாகவும் சொன்னான். ● புதிய வீடு… புதிய கிராமம்… புது வாழ்க்கை. தனிமை அவளை வாட்டியது. குண்டுச்சத்தங்கள் இல்லாமல் நிம்மதியாக உறங்க முடிந்தாலும் பழைய நினைவுகள் அவளைத் துரத்தின. ஆரம்பத்தில் தேன் நிலவாகக் கழிந்த அவர்கள் இருவரினதும் காதல் வாழ்க்கை, நாளாக நாளாக இப்போது பிச்சுப் புடுங்கல்களாகத் தொடங்குகின்றது. கலியாணம் என்றவுடன் பொறுமை காத்த ஜனகன், சினம் கொள்ளத் தொடங்கினான். அவர்களிடையே மெதுவாக விரிசல் விழத் தொடங்கியது. அவுஸ்திரேலியா வந்ததன் பிற்பாடு முதன்முதலாக சிவானி கல்வி பயிலச் சென்றாள். ஆங்கில வகுப்பு, தாதி வேலை செய்வதற்கான ஆரம்பக்கல்வி என வகுப்புகளுக்கு போகத் தொடங்கினாள். தனக்கு அண்மையான சில இடங்களில் தற்காலிகமாக வேலை செய்து பணம் சேர்த்தாள். இவை எல்லாம் ஜனகனுக்குப் பிடிக்கவில்லை. சிவானிக்கு கார் ஓடிப்பழக விருப்பம் இருந்தது. இந்தா ஒழுங்கு செய்கின்றேன், அந்தா ஒழுங்கு செய்துவிட்டேன் என புருடா விட்டான் ஜனகன். உண்மையில் சிவானிக்கு உலகத்தில் ஒன்றும் தெரிந்திருக்கக் கூடாது என்றே ஜனகன் விரும்பினான், மொக்குத்தனமாக தான் சொல்வதை எளிதில் நம்பும்படியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம்தான் ஜனகனிடம் இருந்தது. அவுஸ்திரேலியா வந்ததும், கணேசலிங்கம் மாமா நேரடியாக கடைக்குள் கொண்டுவந்து சிவானியை குசினிக்குள் அடைத்துவிட்டார். ஜனகன் நல்லது செய்கின்றேன் என நடித்து இங்கே ஒரு வீட்டிற்குள் அடைத்துவிட்டான். சிவானிக்கு சிறிது சிறிதாக ஜனகன் மீது சந்தேகம் வரத் தொடங்கியது. தனது உடலின் மீது காட்டும் கரிசனை, வேறு எதனிலும் இல்லாதது கண்டு கவலை கொண்டாள். ஆரம்பத்தில் உணர்வு மேலீட்டால் எதற்கும் இடம் கொடுத்த சிவானி, பின்னர் தன் தவறை உணர்ந்து அதனின்றும் விடுபட நினைத்தாள். தன்னை ஒரு அடிமை போல நடத்துவதை வெகு சீக்கிரத்தில் புரிந்து கொண்டாள். “என்னைத் திருமணம் செய்யுங்கள். இல்லாவிடில் என்னைத் தனியாக வாழ விடுங்கள்” என்று ஒருநாள் சிவானி கெஞ்சியபோது, மிருகம் போல சீறிப் பாய்ந்து அவளின் முகத்தில் குத்துகள் விட்டான். குடித்துவிட்டு வெற்றுப் போத்தல்களை அவள் மீது உருட்டி விளையாடுவதும் உதைப்பதுமாக இருந்தான் ஜனகன். மூர்க்கம் கொண்ட மிருகமாக அவளைச் சில வேளைகளில் மேய்ந்தான். எல்லை மீறிப் போன ஒருநாள் அவள் பொலிசிற்குச் சொல்ல எத்தனித்தபோது, அவளின் மொபைல் போனைப் பிடுங்கி நிலத்தில் எறிந்து உடைத்தான். பச்சை மிளகாய் வெட்டி அவளின் உதட்டிற்குத் தேய்த்தான். அன்று முழுவதும் அவள் உதடுகள் இரண்டும் கொவ்வைப்பழம் போல் சிவந்து கிடந்தன. எதற்குமே அவனிடம் தங்கியிருந்ததால் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வீட்டை விட்டு வெளிக்கிடக் கூடாது என்று கட்டளை போட்டான். ஜனகன் தினமும் அங்கு வந்து தங்காதது, சிவானிக்கு தப்பிச் செல்லும் எண்ணத்திற்கு வலுச் சேர்த்தது. இருப்பினும் அவன் என் நேரமும் வரக்கூடும் என்ற பயமும் அவளிடம் இருந்தது. ஒருநாள் குடித்துவிட்டு ரெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜனகன். சிவானி நகங்களுக்கு நெயில்பொலிஸ் போட்டுவிட்டு, தனது உடுப்புக்களுக்கு ஸ்திரிக்கை (அயன்) செய்து கொண்டிருந்தாள். போதையில் கிறங்கிக் கிடந்த ஜனகனின் கண்கள் சிவானியை மேய்ந்தன. “எங்கே உந்த அலங்காரம்? எங்கே போகப் போகின்றாய்?” ஜனகனின் கேள்விக்கு பதில் சொல்லாது தட்டிக் கழித்தாள் சிவானி. எதிர்பாராதவிதமாக பாய்ந்து எழுந்த ஜனகன் ஸ்திரிக்கைப் பெட்டியை அவளிடமிருந்து பறித்து – சிவானியின் கை, முதுகு என சூடு போட்டான். வலியினால் கத்தியபடி துவண்டாள் அவள். அவன் கதவை அடித்து மூடிச் சாத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான். அன்று முழுவதும் அவளால் உறங்க முடியவில்லை. ரணத்தினால் துடித்தாள். காலையில் அயலில் உள்ள பொலிஸ் ஸ்ரேசனுக்குச் சென்றாள். நடந்த முழுவதையும் ஒன்றும் விடாமல் தனக்குத் தெரிந்த வகையில் சொல்லி முடித்தாள். அவர்கள் சிவானியிடமிருந்து ஜனகனின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நண்பர்களுடன் தங்கும் இடம் சிவானிக்குத் தெரிந்திருக்கவில்லை. விரைவில் தாங்கள் அவனைக் கைது செய்வதாகவும், அதுவரை பொறுத்திருக்கும்படியும் சிவானியைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் சொன்ன மூன்றாம் நாள் இரவு பதினொரு மணியளவில் மூன்று பொலிஷார் சிவானியின் வீட்டிற்கு அண்மையாகப் பதுங்கி இருந்தார்கள். வேலை முடித்து வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும்போது ஜனகனை அமுக்கிப் பிடித்தார்கள். கையில் விலங்கிட்டு வாகனத்தினுள் ஏற்றினார்கள். வீட்டிற்குள் ஒருவன் வந்து சிவானியுடன் சில நிமிடங்கள் கதைத்தான். ஜனகன் திருமணமானவன். அவனுக்கு பதினெட்டு, பதினாறு வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவனின் மனைவி வயது முதிர்ந்தவர்களைப் பராமரிக்கும் ஒரு இடத்தில் வேலை செய்து வருகின்றாள். பொலிஸ் சொல்லச் சொல்ல சிவானியின் தலைக்குள் மின்னல்கள் ஒவ்வொன்றாக இறங்கின. “நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீர்கள்” சொல்லிவிட்டு வேகமாகச் சென்றான். சிவானி கதவைப் பூட்டிவிட்டு இருக்கையில் அமர்ந்தாள். பெருமூச்சு விட்டுக் கொண்டாள். ’ஒரு பெண்ணுக்கு சொந்த நாட்டிலை மட்டுமில்லை, புலம்பெயர்ந்த நாட்டிலும்தான் பிரச்சினைகள் காத்துக் கிடக்கு’ நினைக்க நினைக்க அவள் தலை வலித்தது. எத்தனை வீழ்ச்சிகள், எத்தனை ஏற்றங்கள். எத்தனை பாம்புகள், எத்தனை ஏணிகள். இன்று அவள் யாராலும் வீழ்த்திவிட முடியாதவாறு உயரத்தில் நின்று கொண்டிருக்கின்றாள். வெளியே பொலிஸ் வாகனம் புறப்பட்டுச் செல்லும் சத்தம் கேட்கின்றது http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5242:2019-07-20-02-06-19&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20
 12. யூதர்கள் மீதான இனவழிப்பு விஷவாயுத் தாக்குதலிலிருந்தா ஆரம்பமானது? on July 15, 2019 பட மூலம், Motherhoodandmore பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனைத்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை ஊட்டுபவையாகத்தான் இருந்து வருகின்றன. ஆனால், இந்த அச்சத்தைப் பரப்பி வருபவர்கள் அந்தக் குழுக்களை இஸ்லாம் மதத்துடன் சம்பந்தப்படுத்தி பேசும் கணத்தில், அவர்கள் மிகவும் அழிவுகரமான பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரில் செயற்பட்டு வரும் அதி தீவிர சிறுபான்மைக் கூறொன்றான IS தீவிரவாத அமைப்பின் கொடூரமான செயல்கள் காரணமாக, உலகெங்கிலும் நூறு கோடிக்கு மேல் விசுவாசிகளைக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்தமான ஒரு சமயக்குழுவினர் மீது ‘அபாயகரமானவர்கள்’ என்ற லேபள் குத்தப்படுகின்றது. எந்தவொரு நபரையும் ஹிட்லருடன் அல்லது நாஸிசவாதிகளுடன் ஒப்பிடுவது மிகைப்படுத்திக் கூறுவதாக இருந்து வருவதாக நான் பொதுவாகக் கருதுகின்றேன். ஆனால், இன்று நான் அவ்வாறு உணரவில்லை. ஊடக மேதாவிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சாதாரண நபர்கள் ஆகியோர் இப்பொழுது முஸ்லிம்கள் தொடர்பாக முன்வைத்து வரும் ஒரு சில கூற்றுக்கள், யூதர்களுக்கு எதிராக நாஸிசவாதிகளால் முன்வைக்கப்பட்ட அச்சமூட்டும் கூற்றுக்களை நினைவூட்டுகின்றன. ஹேர்மன் கோரிங் அதி உயர் மட்ட நாஸிசவாதிகளில் ஒருவராக இருந்து வந்ததுடன், இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த பின்னர் கூட்டுப் படைகளினால் அவர் பிடிக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். “போர்க் குற்றங்கள்”, “சமாதானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள்” மற்றும் “மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள்” என்பன தொடர்பாக நூரம்பேர்க் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக தீர்மானித்ததுடன், அவருக்கு மரண தண்டனையையும் வழங்கியது. “நீங்கள் செய்ய வேண்டிய ஒரேயொரு காரியம் அவர்கள் தாக்கப்படுகின்றார்கள் எனக் கூறுவதும், சமாதானத்திற்காக குரலெழுப்பும் தேசத்துரோகிகளை கண்டிப்பதும், நாட்டை ஆபத்துக்குள் தள்ளி விடுவதும் ஆகும். இந்த நடைமுறை எந்த ஒரு நாட்டிலும் இதே விதத்திலேயே செயற்படுகின்றது.” – ஹேர்மன் கோரிங், நூரம்பேர்க் போர்க்குற்ற விசாரணைகளின் போது வழங்கிய ஒரு நேர்காணலில் (ஏப்ரல் 18, 1946) மேலே காட்டப்பட்டிருக்கும் மேற்கோள் வாசகங்கள் பிரபல்யமான உளவியலாளர் ஒருவருடன் நடத்தப்பட்ட தனிப்பட்ட சாம்பாஷைணையின் அடிப்படையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு விபரணத்திலிருந்து பெறப்பட்டதாகும். அந்த சம்பாஷைணையில் “மக்களை எப்போதும் எவ்வாறு தலைவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வைக்க முடியும்;” என்பதனை கோரிங் எடுத்து விளக்குகின்றார். ஹிட்லரும், நாஸிசவாதிகளும் முதலில் பல இலட்சக்கணக்கான யூதர்கள் மீது விஷவாயுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் யூத இன அழிப்பை ஆரம்பிக்கவில்லை என்ற விடயத்தை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். உண்மையிலேயே யூத இன அழிப்பு வார்த்தைகளின் மூலமே முதலில் ஆரம்பிக்கப்பட்டது. ஹிட்லரும் நாஸிசவாதிகளும் ஏற்கனவே மக்கள் மத்தியில் நிலவி வந்த யூத எதிர்ப்புணர்வை தமக்குச் சாதகமான விதத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். அச்சத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் தூண்டுவதன் மூலமும், யூத மக்கள் குறித்த பொய்யான அல்லது பிழையாக வழி நடத்தக்கூடிய தகவல்களை (பிரச்சாரங்களை) பரப்புவதன் மூலமும் இதனை அவர்கள் செய்தார்கள். ஜேர்மனிய மக்களின் தேசாபிமானத்தை அவர்கள் தந்திரமான விதத்தில் பயன்படுத்திக் கொண்டதுடன், அவர்களுடைய அச்சம் மற்றும் அற உணர்வு என்பவற்றை மேலும் தூண்டினார்கள். யூதர்களை உத்தியோகபூர்வமாக அடையாளங்கண்டு, பாதுகாப்பை ஒரு சாக்காக வைத்து, அவர்களுடைய உரிமைகளையும், சுதந்திரங்களையும் நசுக்குவது “உலகில் செய்ய வேண்டிய மிகவும் தர்க்கரீதியான மற்றும் நியாயமான ஒரு காரியமாக இருந்து வருகின்றது” என்பதனை அவர்களை உணரச் செய்தார்கள். யூதர்களுக்கு எதிராகவும், ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எனக் கருதப்பட்ட நபர்களுக்கு எதிராகவும் – ஜேர்மனிய வாழ்க்கை முறைக்கு அவர்கள் திட்டவட்டமான ஓர் அச்சுறுத்தலை விடுத்து வந்த காரணத்தினால் – வெற்றிகரமான விதத்தில் அடக்குமுறையும், வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது. இது ஒரு நீண்ட விளையாட்டாக இருந்து வந்தது. ஹிட்லர் பல வருட காலம் தனது ஆதரவாளர்களைப் பொறுத்து யூத எதிர்ப்பு செயற்பாட்டை ஒரு சந்தர்ப்பத்தில் உச்ச மட்டத்திலும், வேறு சந்தர்ப்பங்களில் தாழ்ந்த மட்டங்களிலும் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார். நீண்டகாலமாக வன்மம் மற்றும் அச்சம் என்பவற்றை ஒவ்வொரு துளியாக இடையறாத மக்களுக்கு ஊட்டுவதன் மூலம் அவர் தனது நாட்டு மக்களின் மனித நேயத்தை அழித்தொழித்தார். இதில் முற்றாக மூழ்கிப் போவதற்கு அவர் அவர்களுக்கு போதிய கால அவகாசத்தையும் வழங்கினார். யூதர்கள் மீது பழி சுமத்தக்கூடிய விதத்தில் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளின் நீண்ட பட்டியல்களை அவர் மெதுவாக ஒன்றுதிரட்டி வந்தார். யூத இன அழிப்பு, பல்லாண்டு காலம் அந்நாட்டில் இடம்பெற்று வந்த சொற்போர் மற்றும் பிரச்சாரம் என்பவற்றுடன் இணைந்த விதத்திலேயே ஆரம்பமாகியது. அது பெருமளவுக்கு பாதுகாப்பு மற்றும் பத்திரம் என்பவற்றின் பெயரில் வன்மத்துக்கும், அடக்குமுறைக்கும் வழிகோலியது. அதன் பின்னர் தடுப்பு முகாம்கள் உருவாக்கப்பட்டன. அதனையடுத்து விஷவாயுக் கூடங்கள் எடுத்து வரப்பட்டன. மேலும், அத்தகைய காரியங்களை பார்த்து சாதாரணமாக திடுக்கிடக்கூடிய கண்ணியமான மனிதர்கள், நாட்டில் நடப்பவற்றை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவதும், பிரச்சாரமும் இதே காரியத்தையே செய்கின்றன. அதன் காரணமாக, அத்தகைய செயற்பாடுகளை பார்க்கும் பொழுது, நாங்கள் அவற்றை சரியான பின்புலத்தில் வைத்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. இஸ்லாமிய எதிர்ப்பு இணையதளங்களிலிருந்து அல்லது மூலங்களிலிருந்து நீங்கள் இஸ்லாம் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொண்டால் அல்லது குடியேற்றவாசிகளுக்கு எதிரான இணையதளங்களிலிருந்து அல்லது மூலங்களிலிருந்து குடியேறிகள் அல்லது அகதிகள் குறித்த தகவல்களை நீங்கள் பெற்றுக்கொண்டால் ஒரு நிமிடம் நின்று நிதானித்து சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்து வந்தால், உண்மையான கிறிஸ்தவம் எது என்பதனை தெரிந்து கொள்வதற்காக ஒருவரை கிறிஸ்தவத்திற்கு எதிரான இணையதளமொன்றுக்கு அனுப்பி வைப்பீர்களா? யூத மதம் குறித்து கற்றுக்கொள்வதற்காக நீங்கள் ஒருவரை யூத எதிர்ப்பு இணையதளம் ஒன்றுக்கு அனுப்பி வைப்பீர்களா? என்னால் மிக எளிதில் பைபிலிலிருந்து வாசகங்களை எடுத்து, கிறிஸ்தவ பயங்கரவாதக் குழுக்களின் அல்லது தனிநபர்களின் வன்முறை மற்றும் தாக்குதல்கள் என்பன குறித்த கதைகளுடன் அவற்றை பொருந்திக் காட்ட முடியும் (ஆம், அத்தகைய கிறிஸ்தவ பயங்கரவாதக் குழுக்கள் இருந்து வருகின்றன் கூகலில் தேடிப் பாருங்கள்) அல்லது கிறிஸ்தவர்கள் உலகத்தை கைப்பற்றி, விபச்சாரத்தில் ஈடுபடுவர்களை கொலை செய்து, பெண்களை அடிமைப்படுத்தி, கீழ்ப்படிய மறுக்கும் பிள்ளைகளை கல்லடித்துக் கொன்று, அனைவரையும் பலவந்தமாக தமது நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளச் செய்யத் தூண்டும் ஒரு இணையதளத்தை மிக எளிதாக என்னால் ஆரம்பிக்க முடியும். அந்த இணையதளம் கிறிஸ்தவ சமயம் குறித்து கற்றுக்கொள்வதற்கு மிகப் பொருத்தமான ஒரு இடமாக இருந்துவர முடியுமா? சமயம் குறித்து நான் அறிந்து வைத்திருக்கும் அனைத்து விடயங்களும் வன்முறையாக இருந்து வந்தால், தீவிரதவாதக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் அனுப்பி வைக்கும் செய்திகளிலிருந்தே அவற்றை நான் பார்த்திருப்பேன். உண்மையிலேயே அப்படி இல்லை. அது மிக மோசமான ஒரு பிரச்சார வடிவமாக இருந்து வருவதுடன், பெரும்பாலான கிறிஸ்தவ மக்கள் நம்புவதிலும் பார்க்க, முற்றிலும் பொய்யான ஒரு சித்திரத்தை உருவாக்கிக் காட்ட முடியும். ஆனால், இஸ்லாம் குறித்து தாம் மக்களுக்கு கல்வியூட்டுவதாகக் கூறிக் கொள்ளும் பல இணையதளங்கள் அவ்விதமான காரியங்களையே இப்பொழுது செய்து வருகின்றன. பெரும்பாலான மக்கள் இதனை இன்னமும் புரிந்து கொள்ளாதிருப்பது மிகவும் அச்சமூட்டுவதாக இருந்து வருகின்றது. நாங்கள் இதற்கு முன்னரும் இதனைப் பார்த்திருக்கின்றோம். அதன் காரணமாக நாங்கள் வரலாற்றை படிக்கின்றோம். மனிதகுல வரலாற்றின் மிகக் கொடூரமான கதைகளிலொன்று எவ்வாறு நிகழ்த்திக் காட்டப்பட்டது என்பது குறித்த அனைத்துத் தகவல்களும் இப்பொழுது எம்மிடம் இருக்கின்றன. அத்தகைய ஒரு செயலை மீண்டும் ஒருபோதும் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு நாங்கள் மனச்சாட்சி மிக்க மக்களாக இருந்து வர வேண்டும் என்பதே எனது நம்பிக்கையும், பிரார்த்தனையுமாகும். ஆசிரியர் குறிப்பு: “The Holocaust Didn’t Begin With the Gassing of Jews. It Began With Prejudice and Propaganda” என்ற தலைபில் அன்னி ரேனோ எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். https://maatram.org/?p=7999
 13. அரசாங்கம் கடன் முகாமைத்துவ விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்பரால் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மீட்க முடியாத அளவிற்கு நாடு அபாய நிலைமையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. வெகு விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாடு பாரிய கடன் பொறியில் சிக்குவதனை தவிர்க்க முடியாது. கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடன் முகாமைத்துவத்தை சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/community/01/220933?ref=home-top-trending
 14. நூறு கதை நூறு படம்: 11 – ரத்தக்கண்ணீர் April 3, 2019 - ஆத்மார்த்தி · சினிமா / தொடர் கதையின் செல்திசை எப்போதும் முன்தீர்மானங்களுக்கு உட்பட்டது. எழுதிய கதைக்கும் திரைவழி கடத்தப்படுகிற கதைக்கும் இடையிலான பெரு வித்தியாசங்கள் ஒருபுறம் இருக்கட்டும். கோட்பாடுகளின்படி வரைமுறைகள் இலக்கணங்களுக்கு உட்பட்டு எடுக்கப்படுகிற திரைப்படக் கலையில் தன்னளவில் மீறல்களுடன், கலைதல்களின் மூலமாகவும் பல்வேறு யுக்திகளைப் பரிசீலிக்கிற அல்லது அனுமதிக்கிற முயல்வுகளாகவும் அமையும்போது பரீட்சார்த்த சினிமாவாகிறது. எல்லாக் கலைகளைப் போலவும் சினிமாவும்தான் அடுத்து நகர வேண்டிய நகர்தல் திசையையும், புதிய வரைவிலக்கணங்களையும் அடுத்த காலத்திற்கான கோட்பாடுகளையும் உருவாக்க முயலுகிற மற்றும் உருவாக்குகிற தன்மையுடனானது. இந்தியத் திரைப்படக் கலை கூத்து மற்றும் நாடகம் போன்ற நிகழ்த்துக் கலைகளின் பதிவு வடிவமாக ஆரம்பகாலம் முதலே புரிந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது. எங்கனம் சமூக வரையறைகளுக்கு உட்பட்டே முன் காலத்திய கலைவடிவங்கள் நிகழ்த்தப்பட்டு வந்தனவோ அங்கனமே அடைப்புக் குறிகளுக்குள் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்திக்கப்பட்ட சொற்களின் கூட்டு அர்த்தமாகவே சினிமாவும் இருக்க நேர்ந்தது. நூறு வருடத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் சரித்திரத்தில் இந்திய அளவில் தொடர்ந்து நம்பப்பட்டு வருகிற திரையாக்க பெரும்பாலானவை மக்களின் ரசனை சார்ந்து எடுக்கப்பட்ட முன்முடிவுகள் ஆகவே இருப்பது தெளிவு. இன்றளவும் கதை என்பது அதன் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இயங்கக் கூடியதாக இருக்கிறது சிலவற்றை மீறுவது ஊறாகும் என்றபோதும் பெரும்பாலான நம்பிக்கைகள் திரை வணிகம் சார்ந்த தொடர் நம்பகத்தின் நிர்ப்பந்தங்களே இந்த நவீன காலத்திலேயே படத்தின் மைய இழையை தாண்டி பெரிய அளவில் மாற்றத்தையோ புரட்சியோ திரைப்படத்தால் நிகழ்த்திவிட முடியாது என்பது நிதர்சனம். காலம் காலமாக சொல்லப்பட்டு நம்பப்பட்டு பிடிவாதமாக பின்பற்றப்பட்டு வந்துகொண்டிருக்கக்கூடிய எந்த ஒரு விதிமுறையும் கண்டுகொள்ளாமல் மிகவும் புரட்சிகரமாக சற்றேறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ரத்தக்கண்ணீர் இந்தியாவின் இதுவரையிலான மிகச்சிறந்த பத்துப்படங்களை வரிசைப்படுத்தினால் அதில் ரத்தக் கண்ணீருக்கு இடம் இருக்கும். தமிழில் முறியடிக்கப்படாத முதலிடத்தில் இன்றளவும் வீற்றிருப்பதும் ரத்தக்கண்ணீர்தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற ஒரு கோட்டை எடுத்துக்கொண்டு மனம் திருந்தினால் மார்க்கம் உண்டு என்பதுபோன்ற பல கற்பிதங்களை அடித்து நொறுக்கியது ரத்தக்கண்ணீர் ஆங்கிலேயன் விட்டுச் சென்ற பிற்பாடு மேற்குத் திசைமீதான இந்திய மோகத்தை இந்தப் படத்தின் அளவு இன்னொரு படம் சாடியது இல்லை வெள்ளைக்காரன் நம்மைவிட உயர்ந்தவன் என்கிற எண்ணத்தில் தொடங்கி மேட்டிமைத்தனம் ஆக கட்டமைக்கப்பட்ட வல்லாதிக்க சிந்தனைகள் பலவற்றையும் தூள் தூளாக்கியது ரத்தக்கண்ணீர் மேடை நாடகமாக பலமுறை நிகழ்த்தப்பட்ட கதை-வசனத்தை திருவாரூர் தங்கராசு எழுத கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இதனை இயக்கினார்கள் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் இதனை தயாரித்தார் திரைப்படத்தை கலையாக பயிலுகிற ஒவ்வொருவரும் காண வேண்டிய முதல் பாடமாகவே ஆதார அரிச்சுவடி ஆகவே ரத்தக்கண்ணீர் திரைக்கதை விளங்குகிறது. வெளிநாட்டில் படித்துவிட்டு ஊர் திரும்புகிறான் மோகன் அவன் ஒரு செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. தகப்பன் இல்லாத குடும்பத்தை அவன்தான் நிமிர்த்த போகிறான் என்று காத்திருக்கிறார் தாய், வந்து சேர்பவர் முற்றிலுமாக தன்னை நாட்டு மோகத்துக்கு ஒப்புக்கொடுத்தவனாக இருக்கிறான் மெல்ல மெல்ல அவனது பலவீனங்கள் அவனைச் சார்ந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது அவனது நண்பன் பாலுவும் மோகனின் அம்மாவும் ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தால் சரியாகிவிடும் என நம்புகிறார்கள் தினந்தோறும் மோகன் தேடி செல்லுவது காந்தா எனும் வஞ்சகி என யூகிக்க முடியாத கெடுமதி கொண்ட பெண்ணை. அவள் மீதான மோகத்தில் மோகன் அங்கேயே தவம் கிடக்கிறான். தனக்கு சந்திராவோடு திருமணமான பிற்பாடு மாமனாரை அவமதிக்கிறான் அம்மாவை எட்டி உதைக்கிறான் நண்பனை சுடுசொல் சொல்லி தள்ளி வைக்கிறார் மனைவியை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இத்தனைக்கும் பின்னால் அன்னையின் மரணத்திற்குப் பிறகும் பணப்பெட்டியோடு காந்தா வீடே கதி என்று இருக்கும் மோகனுக்கு மெல்ல ஆட்கொல்லி நோய் வருகிறது. அது ஒரு சர்ப்பத்தைப்போல அவனைப் பற்றிக் கொள்கிறது இனி அவன் தேற மாட்டான் என்று ஆகும்போது மெல்ல அவனை கைவிடுகிறாள் காந்தா. சில மனிதர்கள் வாழ்வில் நுழைந்தால் அவர்களை வைக்கிற இடத்தில் இருத்துவது உசிதம். இல்லாவிடில் வாழ்வு என்னாகும் இருக்கும்போது கண்மண் தெரியாத ஊதாரி ஒருவன் கண் தெரியாதபோது என்னவாகிறான் கோலம் அழிகிறது மெல்ல மெல்ல கண் பார்வை போகிறது காந்தாவால் செல்வம் அனைத்தும் பறித்துக்கொள்ளப்பட்டு விரட்டி அடிக்கப்படுகிறான் மோகன். ஒரு கட்டத்தில் யாசித்து அடுத்தவர் உதவியுடன் உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான் மனசாட்சியே இல்லாமல் தன் வாழ்வின் சரிபாதியை வாழ்ந்தவன் எல்லாவற்றையும் உணரும்போது காலம் கடந்துவிடுகிறது தன்னால் சந்திராவின் வாழ்க்கை பாழாகிவிட்டது என்பதை உணர்ந்து வேதனையுறும் மோகன் அவளை தன் நண்பன் பாலுவோடு இணைந்து வாழுமாறு வேண்டிக்கொண்டு தன் வாழ்வின் முடிவை நோக்கிச் செல்கிறான். மரணம் அவனைத் தழுவிக்கொள்கிறது ஊரில் எல்லோரும் பார்க்கும் இடத்தில் உருக்குலைந்த கோலத்தோடு மோகனின் சிலை இருக்கிறது அந்தச் சிலையின் கதையை பாலு ஊர்மக்களுக்கெல்லாம் எடுத்துரைக்கிற ஒரு புள்ளியில்தான் ரத்தக்கண்ணீர் படம் தொடங்கி முடிகிறது உலகின் நாகரீகமெனும் பெயரிலான பொய்கள் புரட்டுக்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் பக்தி என்னும் பெயராலும் பந்தம் எனும் பேராலும் பலவற்றாலும் எப்படி மனிதன் கட்டுண்டு கிடக்கிறான் என்பதை எல்லாம் முதல்முறையாக இந்திய அளவில் பெரிதாய்ப் பேசிய திரைப்படம் ரத்தக்கண்ணீர். எம்.ஆர்.ராதா எனும் மகா நடிகனின் குரலும் முகமும் உடல்மொழியும் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தின் தூண்களைப்போல் ஓங்கி நின்றன. S.S ராஜேந்திரன் சந்திரபாபு எம்.என்.ராஜம் ஆகியோரின் அளவான நடிப்பு வளமாயிற்று. ஜெயராமனின் பாடல் இசையும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பின்னணி இசை ஏற்பும் இப்படத்தின் பலங்கள். வசனத்திற்கான பெரு விருப்பப் படமாக ரத்தக்கண்ணீர் இன்றளவும் விளங்குகிறது. இந்தியாவின் நடிக பள்ளிகளில் மிக முக்கியமான ஒரு ஆதாரமேதமை எம்.ஆர்.ராதா என்றால் அது மிகையல்ல. அரசியல் சமூகம் மதம் திரைப்படத்துறை உள்பட இந்தப்படம் பகடி செய்யாத விஷயமே இல்லை எனும் அளவுக்கு நம்பமுடியாத நேர்மையோடு கண்கள் முன் விரிகிறது ரத்தக்கண்ணீர். அற்புதம் என்றால் அது ஒருமுறை நிகழ்வது அற்புதம் என்றால் அது மீவுரு செய்ய இயலாதது. காலம் கடந்து மிளிர்வது. ரத்தக்கண்ணீர் ஒரு அற்புதம் https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/நூறு-கதை-நூறு-படம்-11-ரத்தக/
 15. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை காணாதவர்களாக, 30 பேர்வரை உயிர் துறந்துள்ளனர்… July 20, 2019 போராட்டங்களை குழப்பும் வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா, 879 நாளாக தமது தொடர் போராட்டம் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் இன்றுவரை தமது நிலை தொடர்பாக தீர்வு வழங்குவதற்கு எவரும் முன்வரவில்லை. இதுவரை 30 பேர்வரை தமது பிள்ளைகளை காணாதவர்களாக உயிரை மாய்த்துள்ளனர் எனவும் கவலை வெளியிட்டுள்ளார். வடக்கில் உள்ள தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக தேர்தலில் களம் இறங்க வேண்டும். விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டது. அவர்கள் தமது சுயநலம் சார்ந்து செயற்படுகின்றனர். இந்த நிலையில் தமது பிள்ளைகளின் விடிவிற்காகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு ஓர் பொது அணி தேவைப்படுகின்றது. அவ்வாறு அனைத்து தரப்பும் ஓரணியில் திரண்டு செயற்படுவதே பொருத்தமானது எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். #காணாமல்ஆக்கப்பட்டவர்களின்உறவினர்கள் #கிளிநொச்சி #தமிழ்தேசியகூட்டமைப்பு http://globaltamilnews.net/2019/126971/
 16. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர். நேற்று (19) இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பு நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று 879 நாளாக எமது தொடர் போராட்டம் இடம்பெற்ற வருகின்றது. இன்றுவரை எமது நிலை தொடர்பில் தீர்வு வழங்குவதற்கு எவரும் முன்வரவில்லை. இதுவரை 30 பேர்வரை தமது பிள்ளைகளை காணாதவர்களாக உயிரை மாய்த்துள்ளனர். இந்த நிலையில் எமது அமைதிவழி போராட்டங்களை குழப்பும் வகையில் எமது கோவில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்து வருகின்றது. இவை திட்டமிட்டு எம்மீது திணிக்கப்படுகின்றமையை உணர்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். எமது அரசியல் தலைமைகள் அரசாங்கத்துடன் ஒத்து செயற்படுவதனாலேயே அவர்கள் மனோகணேசன் அவர்கள் அழைத்தபோது சென்றிருக்கவில்லை. உண்மையில் அவர்கள் அங்கு சென்றிருந்தால் அவர்களிற்கு சங்கடமான நிலை ஏற்பட்டிருக்கும் எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டிருந்தார். வடக்கில் உள்ள தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக தேர்தலில் களம் இறங்க வேண்டும் எனவும், விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை ஏமாற்றிவிட்டது. அவர்கள் தமது சுயநலம் சார்ந்து செயற்படுகின்றனர். இந்த நிலையில் எமது பிள்ளைகளின் விடிவிற்காகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசுவதற்கு ஓர் பொது அணி தேவைப்படுகின்றது. அவ்வாறு அனைத்து தரப்பும் ஓரணியில் திரண்டு செயற்படுவதே பொருத்தமானது எனவும் அவர் தெரிவித்தார். எமது அரசியல் தலைமைகள் சொத்துக்களை சேர்கின்றார்களோ தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும், காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்படுவதற்கும் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர். அவ்வாறு அவர்கள் தமது சுயநலத்தினை கருத்தில்கொண்டு செயற்பட்டமையால் அவர்களிற்கு வரபிரசாதங்கள் பல வழங்கப்பட்டிருக்கும். ஆகவே அவ்வாறு கிடைத்த அனைத்தையும் அவர்கள் சொத்தாக்கியிருப்பார்கள். அவர்கள் மக்கள் நலன் சார்ந்து செயற்படவில்லை எனவும் தெரிவித்தார். அவர்கள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.pagetamil.com/65886/
 17. ஈழத் தமிழரை ஒடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – 49 ஆண்டுகள்! July 20, 2019 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 49 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திர தாகத்தை ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அச் சட்டம் இன்னமும் தமிழ் மக்களை ஒடுக்கி ஆள்வதையே எமர்சனின் கருத்துக்கள் உணர்த்துகின்றன. இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை ஊக்குவிப்புக்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் குறித்து ஆராய வந்திருந்த எமர்சன் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும்போது கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மற்றொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் செயற்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அரசாங்கம் குறிப்பிட்ட காலத்திற்குள் நீதியை நிலைநாட்டத் தவறினால் இந்த விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபை வரை செல்லலாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பயங்கரவாதத் சட்டம் என்றால் என்ன? பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு கைது செய்தல், விசாரணை செய்தல், ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளல் என்பவை தொடர்பில் பரந்தளவிலான அதிகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிமுறை வழங்குகிறது. சந்தேகத்தின் அடிப்படையிலேனும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க முடியும். விசாரணைக்காக நபர் ஒருவரை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்கின்ற நிலையில் நீதிமன்ற வழிநடத்தல் இன்றி சொத்துக்களை முடக்க முடியும். சந்தேக நபரை தடுத்து வைப்பதன் கால எல்லையை 18 மாதங்களாக நீடிக்க முடியும். எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் வழக்கு விசாரணை முடியும் வரை கால வரையரையின்றி தடுத்து வைக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது. கைதாகி சிறையில் உள்ளபோது பாரிய – கீழ்த்தரமான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களினாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்த அதிகாரமற்றும் அந்த நடவடிக்கைக்கு இணக்கம் செய்யும் நிலையுமே நடைமுறையில் உள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனமாகவே கருகிறது. சிறுபான்மை தமிழ் இன மக்களுக்கான நீதி மறுத்து அவர்கள்மீதான மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியும் எதையும் செய்யும் அதிகாரத்தை இச் சட்டம் வழங்குகிறது. தமிழ் மக்கள்மீது இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு முந்தைய காலங்களில் அரசின் மூலம் உத்தியோக பூர்வமற்ற முறையில் இனக் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த தீவின் சிறுபான்மைத் தமிழ் இன மக்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அழிக்கும் உத்தியோகபூர்வ முறையை அதிகாரத்தை அரச எந்திரம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் இனவாதிகளுக்கும் கையளித்தது. ஒடுக்குமுறைக்கு உள்ளான ஈழத் தமிழ் மக்கள் தனி நாடு ஒன்றிலேயே சுதந்திரமாக வாழ இயலும் என்றும் அது தமிழீழம் என்ற நாட்டிலேயே சாத்தியமாகும் என்றும் முடிவுக்கு வர அடிப்படையாக இருந்த காரணங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஒன்றாகும். பயங்கரவாத தடைச் சட்டம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் கடந்த 48 வருடங்களாக பெரும் இன ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர். தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் எவரும் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்தைக் கூறியேனும் கைது செய்யப்படலாம் என்றும் அவருக்கு என்ன நேர்ந்தாலும் அதனைக் குறித்து கேட்க இடமில்லை என்ற நிலையும் காணப்பட்டது. இது தமிழ் மக்களின் அரசு அல்ல என்பதையும் இது தமிழ் மக்களை ஒடுக்கி அழிக்கும் அரசு என்பதையும் தமிழ் மக்கள் தமக்கான பாதுகாப்பை தமிழ் அரசு ஒன்றின் ஊடாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற யதார்த்தத்தையும் இச்சட்டத்தின் நடைமுறைகள் ஈழத் தமிழ் இனத்திற்கு உணர்த்தி நின்றன. சர்வதேசத்தின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றும் எமர்சன் எச்சரித்திருக்கிறார். எனினும் பயங்கரவாத ஒடுக்குதல் குறித்த ஐ.நாவின் துறை சார்ந்த நிபுணர் ஈழத் தமிழர்கள் சந்தித்த ஒடுக்குமுறைகள் மாத்திரமின்றி உலகெங்கிலும் நடந்த ஒடுக்குமுறைகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவும் எமர்சனும் ஐ.நாவும் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எமர்சனின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு வழமைபோல நிராகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாகவும் அது ஒரு கொடிய சட்டம் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அனல் பறக்கப் பேசியிருந்தார். இதேவேளை இவ் வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை இடம்பெற்ற சமயத்தில் ஜெனீவாவில் வைத்து பேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் மனோ தித்தவல்ல பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்பட இருப்பதாக மங்கள சமரவீர கூறியிருந்தார். மிகக் கொடிய இந்த சட்டத்தின் பெயர் மாற்றப்படுகிறதே தவிர, இதன் உள்ளடக்கம் மாற்றப்படவில்லை என்று மனித உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர். சர்வதேச சமூகத்திற்காக சட்டத்தின் பெயரை மாற்றுவதுடன் சிங்கள இனவாதிகளை சமாளிக்க சட்டத்தின் உள்ளடக்கத்தை பாதுகாக்கவும் இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. எமர்சன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுவதற்கு சில நாட்களின் முன்னர், அதாவது ஜூன் மாத இறுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குவது தொடர்பாக தீர்மானிக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ கூறியிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தளர்த்துமாறு கோரிய சில பலம்பொருந்திய நாடுகளும் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், இதுவரை அதற்கான உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறியதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. பயங்கரவாத சட்டம் உருவாக்கப்பட்டு 48 ஆண்டுகள் என்றால் பயங்கரவாத சட்டத்தை நீக்கு! என்று தமிழ் மக்கள் குரல் எழுப்பியும் 48 ஆண்டுகள் என்று அர்த்தம். இச் சட்டத்தால் பல ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் பிள்ளைகளை, தாய், தந்தையரை இழந்துபோயுள்ளனர். கைதகளின் உறவுகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். சிறையில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எல்லாப் போராட்டங்களும் தீர்வின்றி முடக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் சட்டமும் அதனை கொண்டு கைதுசெய்யப்பட்டவர்களும் கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் தென்னிலங்கையின் அரசியல் முதலீடுகளாக ஆகியிருப்பதே இத் தீவின் பெரும் துயரமாகும். சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைவாகவே புதிய பயங்கரவாத தடைச் சட்டம் உருவக்கப்படும் எனவும் அனைத்து மக்களும் பயமின்றி வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படும் எனவும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க டெல்லியில் வைத்து கூறியிருந்தார். இலங்கை அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை நீக்கும் எண்ணத்தை கொண்டிருப்பதாக தெரியவில்லை. தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒடுக்கி ஆளும் ஒரு அரசு, அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழாமல் தடுத்து ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்று கருதுவதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை எப்படியோ நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது. ஈழத் தமிழர்களின் தனிநாட்டு உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சட்டத்தையே இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று அழைக்கிறது. தமிழ் மக்களின் சுய உரிமையை அவர்களிடமே கையளித்தல், அவர்களின் தாயகப் பிரதேசத்தில் அவர்களே ஆட்சி புரிதல், அவர்களின் தாயகத்தை அபகரிக்காது விடுதல், அவர்கள் மீதான இன ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்களை நிறுத்திக் கொள்ளல் என்பனவற்றை மேற்கொள்ளாமல் எந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் தமிழர்களின் இன உரிமைப் போராட்டத்தின் பயணத்தை தடுக்க இயலாது. இதனை 2009 இனப்படுகொலையின் பின்னர் பல்வேறு தடவைகள் ஈழத் தமிழ் மக்கள் உணர்த்தி விட்டனர். ஆசியாவின் மண்டேலா என்றும் ஆசியாவின் காந்தி என்றும் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கே வழங்க வேண்டும் என்றும் எமது தலைவர்களாளேயே வருணிக்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுதல் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்கு ஒப்பானது என்று கூறியதும் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பில் காண்பிக்கும் மௌனமும் , பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் தொடர்பிலும் பொறுப்புக் கூறுதல் மற்றும் நீதியை நிலை நாட்டுதல் தொடர்பிலும் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பிலும் பல சேதிகளை சொல்லிச் செல்கிறது. குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் http://globaltamilnews.net/2019/126929/
 18. "உண்ணாவிரதம் இருக்கும் கைதி தொடர்பில் அமைச்சர் மனோவை தலையிடுமாறும் கோரிக்கை" மகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதியொருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் நீரின்றி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவரது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்படுகினறது. முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான 62 வயதுடைய கனகசபை தேவதாசன் எனபரே இவ்வாறு நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். கோட்டை புகையிரத நிலையம் குண்டுவெடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றொரு வழக்கில் 20 வருடங்கள் கடுழீய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. குறித்த இரு வழக்குகளிலும் இவரே தனக்காக வாதாடியிருந்தார். தனது வழக்கில் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் முன்வைப்பதற்காக தனக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பில் அவர் தனது கோரிக்களை எழுத்து மூலம் அதிகாரிகளுக்கு அறிவித்தும் அதற்கான பதில்கள் இதுவரை கிடைக்காத நிலையில் தான் நீதி அமைச்சுக்கு அனுப்பிய கடிதங்கள் சிறை அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டதா என்பது தொடர்பிலும் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கும் கைதியின் உடல் நிலை மிகவும் மோசடைந்துள்ளது. இதுவரை அவரை வைத்தியர் மட்டுமே சென்று பார்வையிட்டுள்ளார். அதிகாரிகளோ , அரசியல்வாதிகளோ சென்று பார்வையிடவில்லை. எனவே அவர் சார்பில் மகசீன் சிறையில் உள்ள ஏனைய அரசியல் கைதிகள் அமைச்சர் மனோ கணேசனிடம் தங்களது விடயத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/60819
 19. முல்லைத்தீவு கோட்டை அழிவுறும் தருவாயில்; கவனமெடுக்காத தொல்பொருள் திணைக்களம் ! வன்னி மண்ணின் வீரமிகு மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வீர வரலாற்றை கூறும் முல்லைத்தீவு ஒல்லாந்தர் கோட்டை முற்றாக அழிவடைந்து செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது . தொல்பொருள் திணைக்களத்தின் நிர்வகிப்பின் கீழ் இருக்கும் இந்த கோட்டையை தொல்பொருள் திணைக்களம் உரியவகையில் பாதுகாப்பதில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் . தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடம் என தொல்பொருள் திணைக்களம் இதனை அடையாளப்படுத்தியுள்ளபோதிலும் இங்கே தொல்பொருள் திணைக்களத்தின் அறிவித்தல் பலகைகள் எதனையும் காணக் கிடைக்கவில்லை அத்தோடு சிதைவடைந்து செல்லும் கோட்டையின் எச்சங்களை பாதுகாப்பதற்கோ தொல்பொருள் திணைக்களம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் முல்லைத்தீவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் . பௌத்த இடங்கள் என தமிழ் மக்களின் புராதன ஆலயங்களையும் வரலாற்று இடங்களையும் முல்லைத்தீவில் அடையாளப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்யும் தொல்லியல் திணைக்களம் பல நூற்றாண்டு கால தமிழர் வீர வரலாற்றை கூறும் இடங்களை புறக்கணித்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர் . தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அமைந்திருக்கும் வளாகத்தில் 1715 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் இந்த கோட்டை அமைக்கப்பட்டது . இதன்பின்னர் இலங்கையை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை 1795 இல் கைப்பற்றி மீளுருவாக்கம் செய்தார்கள் . அத்தோடு ஆங்கிலேயர்களின் படைத்தலைமையகமாகவும் இந்த கோட்டை விளங்கியது . ஆங்கிலேயருடன் போர் புரிந்த வன்னி மண்ணின் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இந்த கோட்டையை கைப்பற்றி இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி வெற்றிபெற்றான் என வரலாறு கூறுகின்கிறது . இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் மிகவும் நுட்பமாக அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டது . ஆனால் அவர்களின் மௌனிப்புக்கு பின்னர் இலங்கை இராணுவத்தினரால் 2009 இல் இந்த கோட்டை அழிக்கப்பட்டிருந்தது . அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் புதிய வளாகத்தின் கட்டுமானப்பணிகளின் போதும் மிக மோசமாக அழிக்கப்பட்டிருந்தது . தற்போது இந்த கோட்டையின் ஒருபகுதியை இராணுவத்தினர் அபகரித்து முகாம் அமைத்துள்ள நிலையில் எஞ்சிய எச்ச பகுதிகள் மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளாலும் இயற்கையாலும் சிதைவடைந்து செல்கின்றது . விரைவில் முற்றாக அழிவடைய கூடிய சூழலும் தோன்றியுள்ளது. எனவே உரியவர்கள் இந்த வரலாற்று பொக்கிஷத்தின் எச்சங்களையாவது பாதுக்காக்க முன்வர வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட மக்களும் வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/60818
 20. யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர் ஒருவரின் தலையில் மிளகாய் அரைத்து, அவரிடமிருந்து 92,000 ரூபாயை சுருட்டியுள்ளனர் தொலைபேசியில் ஏமாற்றும் திருடர்கள். தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளும் எமகாதகர்கள், அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளது என கூறி பண மோசடியில் ஈடுபடுவது நீண்டகாலமாக நடந்து வருகிறது. எனினும், ஏமாற்றுக்காரர்களின் வலையில் சிக்குவதற்கு ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி வலையில் சிக்கி ஏமாந்துள்ளார் யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர். கரணவாய் பகுதியை சேர்ந்த இந்த அதிபரிடம் 8 கோடி ரூபா அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளதாக கூறி, 92,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் அவருக்கு 8 கோடி ரூபா கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மெய்மறந்த அதிபரை, உடனடியாக தமக்கு 92,000 ரூபாய் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறி நம்ப வைத்தனர். இதையடுத்து நெல்லியடியிலுள்ள கொமர்ஷல் வங்கி கிளையில் 92,000 ரூபாய் பணத்தை செலுத்தினார். பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், மேலும் இரண்டரை இலட்சம் ரூபாவை செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அதிபர், மீளவும் அந்த இலக்கத்தை தொடர்புகொள்ள முயன்றபோது, அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர்தான் தனது தலையில் மிளகாய் அரைக்கப்பட்டதை உணர்ந்த அதிபர், நேற்று நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். http://www.pagetamil.com/65899/
 21. "தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்ட சம்வத்தினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்" கன்னியா போராட்டத்தின் போது தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்ட சம்வத்தினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை தமது கண்டன அறிக்கயினை இன்று வெளியிட்டுள்ளனர். கன்னியா போராட்டத்தின் போது ஆதீன சுவாமிகள் மீது தேநீர் வீசி தாக்குதல் நடத்திய சம்பவமானது கடும் கண்டனத்திற்குரியது. இந்து சமயத்திலே உயர் நிலையில் இருக்கும் எமது சுவாமி அவர்கள் மீது நடாத்தப்பட்ட இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு எமது மதத்தின் தலைவர்களுகளுக்குரிய கௌரவத்தினயும் உரிய முறையில் வழங்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். சாத்வீகமான முறையில் கன்னியாவின் தமிழர் பூர்வீகத்தை பாதுகாக்கும் போராட்டத்தை வழி நடத்திய ஆன்மீக தலைவர்களில் ஒருவராகிய வணக்கத்துக்குரிய தென் கைலை ஆதீனத்தின் மீது தேநீர் வீச்சினை மேற்கொண்டவர்கள் மீது இது வரை எந்த நடவடிக்கையுமில்லை என நாம் அறிகின்றோம். இவ் கன்னியா போராட்டத்தை அகிம்சை முறையில் மேற்கொண்ட மக்களை அடக்க முற்பட்டு வருகின்றனர். அனைவரும் ஒன்றிணைந்து எமது சமய தலைவர்களில் ஒருவரும் தமிழர்களின் பூர்வீக கன்னியாவை மீட்கும் போராட்டத்தின் முதன்மை வழி காட்டியுமான தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாருக்கு இழைக்கப்பட்ட கொடுஞ் செயலுக்கு நீதி வேண்டும் என மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை தமது கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/60813
 22. வவுனியா நெடுங்கேணி பட்டடைப்பிரிந்தகுளம் அ.த.க.பாடசாலையினை மூடுவதற்கு மக்கள் எதிர்ப்பு வுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி பட்டடைப்பிரிந்தக்குளம் அ.த.க.பாடசாலையினை மூடுவதற்கான உத்தரவினை வவுனியா வடக்கு வலய பணிமனை தெரிவித்திருந்தது.இதனை எதிர்த்து அவ்வூர் மக்களால் கடந்த 15.07.2019 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான கெளரவ பொ.தேவராசா,ஜேசுதாகர்,பார்த்தீபன்,தமிழ்செல்வன், கோட்டக்கல்வி அதிகாரி திரு. கிருபானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, இப்பாடசாலையினை தற்காலிகமாக மூடப்படுவதனை அவ்வூர் மக்கள் விரும்பாத நிலையில் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு இவ்விடயம் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டு அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. https://www.virakesari.lk/article/60807
 23. ரயில் விபத்தில் இருவர் பலி கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிளோடு மோதி குறித்த விபத்து இடம்பெற்றள்ளது. குறித்த இளைஞர்கள் இருவரும் விபத்த இடம்பெற்ற பகுதியில் தமது வீட்டுக்கு அருகில் ரயில் கடவையில் அமர்ந்திருந்து சம்பாசித்துக்கொண்டிருந்ததாகவும், ரயில் வருவதை அவதானிக்காமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றயவர் தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் புகையிர அதிகாரிகளினால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/60805
 24. பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான் பிரிட்டனிலும் லைபீரியாவிலும் பதிவு செய்யப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து வளைகுடாவில் பதற்றநிலை அதிகரித்துள்ளது. பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஸ் கொடியுடன் காணப்பட்ட ஸ்டெனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை 23 மாலுமிகளுடன் கைப்பற்றியுள்ள ஈரான் குறிப்பிட்ட கப்பல் கடல்சார் விதிமுறைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட கப்பலை ஈரானிய கடற்படையினர் பன்டர் அபாஸ் துறைமுகத்திற்கு எடுத்துசென்றுள்ளனர் என தெரிவித்துள்ள ஈரானிய செய்திச்சேவையொன்று மாலுமிகள் கப்பலிலேயே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. ஈரானின் மீன்பிடிப்படகொன்றுடன் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்தே குறிப்பிட்ட கப்பல் கைப்பற்றப்பட்டது என ஈரானிய செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை ஹார்முஸ் ஜலசந்திப்பகுதியில் கப்பலை சிறிய படகுகளும் ஹெலிக்கொப்டரும் சுற்றி வளைத்ததாக கப்பலின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை லைபீரிய கொடியுடன் காணப்பட்ட பிரிட்டனில் இருந்து இயங்கிய மற்றொரு எண்ணெயக்கப்பலையும் ஈரான் கைப்பற்றியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. மெஸ்டர் என்ற இந்த கப்பலை சிறிது நேரம் தடுத்து வைத்திருந்துவிட்டு பின்னர் அதனை ஈரானிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர் என அந்தநாட்டின் செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/60815
 25. உழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் அண்ணாச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னை நகரிலுள்ள சிறிய கிராமத்தில பிறந்தவராவார். தனது 12 வயதில் இருந்து உழைக்க ஆரம்பித்தார். அப்போது போக்குவரத்து வசதி கூட இல்லாத அந்த அந்த கிராமத்தில் இருந்து பிழைப்பிற்காக சென்னைக்கு வந்த ராஜகோபால், முதலில் ஒரு சிறிய ஹோட்டல் ஒன்றில் மேசை துடைக்கும் பணியாளராகவே தனது பணியை தொடங்கினார். பின்னர் ஹோட்டல் டீ மாஸ்டருடன் பழகி டீ போடுவது எப்படி என்பதை கற்று கொண்டு டீ மாஸ்டராக மாறினார். இதன் பின்னர் பலசரக்குக்டை ஒன்றை தொடங்கினார். அப்போது பகல் வேளையில் கடைக்கு வந்த ஒருவர் அண்ணாச்சி சமான்களை சீக்கிரம் தாருங்கள். இங்க ஹோட்டல் கூ ட இல்லை என்று கூறியுள்ளார். 1981 ஆம் ஆண்டு தனது கடைக்கு வந்த நபர் கூறிய வார்த்தைகள் ராஜ கோபால் மனதில் ஹோட்டல் திறக்கும் எண்ணத்தை விதைத்தது. அதே ஆண்டில் டிசம்பர் மாதம் இன்னொருவர் நடத்தி வந்த கமாட்சி பவன் ஹோட்டலை விலைக்கு வாங்கி ஹோட்டல் தொழிலை ஆரம்பித்தார். இந்த ஹோட்டலை பின்னர் சரவணபவன் என பெயர் மாற்றினார். படிப்படியாக ஹோட்டல் சரவணபவனின் கிளைகள் முளைத்தன. ஹோட்டல் தொழிலில் ராஜகோபால் உச்சத்தை தொட்டார். சென்னையில் 25 கிளைகள் உட்பட உலகம் முழுவதும் 46 கிளைகள் இப்போது உள்ளன. சைவ உணவு என்றாலே சரவணபவன் ஹோட்டல் தான் என சொல்லும் அளவுக்கு தரமான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. தீவிர முருக பத்தரான ராஜகோபால் கிருகானந்த வாரியாரின் சீடனாகவும் விளங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கச்சினா விலையில் வனத்திருப்பதி என்ற பிரமாண்ட கோயிலை நிர்மாணித்தார். இந்நிலையில் தான் ஜோதிடர் ஒருவர் மூன்றாவதாக திருமணம் செய்தால் நீங்கள் மேலும் உச்சத்திற்கு செல்லாம் என்று ஆலோசனை கூற ராஜகோபாலின் வாழ்க்கையே புரண்டுபோனது . 1990 களில் கடைசி காலங்களில் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் ஜீவ ஜோதி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஜீவஜோதி இதற்கு சம்மதிக்கவில்லை. அதற்கு மாறாக சரவணபவன் ஹோட்டலில் பணிபுரிந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். குறித்த பெண் திருமணமான அடுத்த சில நாட்களிலே அவரது கணவரை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்று கொலை செய்து விடுகிறது. விசாரணையில் கணவரை ராஜகோபால் சொல்லி தான் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. அதன் பின் சிறையில் அடைக்கப்பட்ட ராஜகோபால் ஒரு வழியாக போராடி 2003 ஆம் ஆண்டு ஜூலை பிணையில் வெளியே வந்தார். ஆனால் அவரால் வழக்கில் இருந்து நிரந்தரமாக வெளியே வரமுடியவில்லை. இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது. இதை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றம் சென்றார். ஆனால் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தியதுடன் கடந்த ஜூலை 7 ஆம் திகதி சரணடையுமாறு உத்தரவிட்டது. நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் சரணடைய இயலாது எனக் கூறி கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ராஜகோபால். தொடர்ந்து உடல்நல பிரச்சினையால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால், நேற்று உயிரிழந்தார். கடும் உழைப்பால் பெரும் புகழ் பெற்றவர், ஒரே ஒரு தவறால், வாழ்நாள் சரிவைச் சந்தித்தார். https://www.virakesari.lk/article/60777
 26. முஸ்லிம்களின் பேரம்­பே­சலை பறித்­தெ­டுக்கும் தேர­வாத வியூகம் முஸ்லிம் சமூ­கத்தின் கூட்­டுப்­பொ­றுப்பை உணர்த்தி பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்கள், எதைச் சாதித்­தனர், இந்­தப்­ப­தவி விலகல் உணர்த்­திய செய்­திகள் என்ன? இந்தக் கேள்­வி­களின் எதி­ரொ­லி­களே முஸ்லிம் அர­சியல் களத்தின் எதிர்­கால நகர்­வு­களைக் கட்­டியங் கூறப் போகின்­றன முஸ்லிம் பெயர்­தாங்­கிய ஒரு சில இளை­ஞர்­களின் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை ஒட்­டு­மொத்­த­மாக முஸ்லிம் சமூ­கத்தின் மீது திணிக்க முயன்ற, தேர­வா­தி­களின் பிர­யத்­த­னங்­களை, இப்­ப­தவி வில­கல்­களால் முறி­ய­டிக்க முடிந்­ததை மட்டும் எல்­லோரும் ஏற்றுக் கொண்­டே­யாக வேண்டும். முஸ்லிம் எம்­.பி.க்­களை மீண்டும் அமைச்­ச­ர­வைக்குள் உள்­வாங்கும் அரச உயர் மட்­டத்தின் முயற்­சிகள் இத­னையே உணர்த்­து­கின்­றன. எதிர்­வரும் தேர்­தல்­களில் முஸ்லிம் பிர­தே­சங்­களில் காலூன்­று­வ­தற்கு அரச தரப்பு எடுக்கும் இர­க­சிய இரா­ஜ­தந்­தி­ரங்­களும் இந்த முயற்­சிக்குள் உள்­ளன. கண்டி, போகம்­பரை மைதா­னங்­களில் வானு­யர எழுந்த முஸ்லிம் விரோ­தக்­கு­ரல்­க­ளுக்கு பிர­தமர் உட்­பட அர­சாங்­கத்தின் முக்­கிய தரப்­புக்கள் பதி­ல­ளிக்­கா­ததை சந்­தே­கத்­துடன் நோக்­கிய முஸ்­லிம்கள் நிதான போக்­குள்ள தேசிய கட்­சி­களின் தலை­மை­களே ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வர வேண்­டு­மெ­னவும் விரும்­பு­கின்­றனர். தேர வாதத்­துக்கு துணை­போகும் தலை­மை­களில் அவர்கள் நாட்டம் காட்­ட­வில்லை என்­பதும் தெளி­வு­ப­டு­கி­றது இன்னும் சில காலத்­துக்கு தங்கள் தலை­மைகள் அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­காது கூட்டுப் பொறுப்பைப் பேணினால் இன­வா­தத்­துக்கு தலை­சாய்க்கும் தேசிய கட்­சி­களின் பாரம்­ப­ரி­யங்­களை இல்­லாமல் செய்­து­வி­டலாம்.எனவே அமைச்சுப் பொறுப்­புக்கள் தற்­போ­தைக்கு தேவை­யில்லை எனவும் முஸ்லிம் அர­சியல் தளத்தில் பேசப்­ப­டு­கி­றது.இன, மத, சமூ­கங்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு குறுக்­காக நிற்கும் எந்தக் கோரிக்­கை­க­ளையும் ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி ஏற்றுக் கொண்­ட­தில்லை.ரணிலின் தலை­மைக்கு முன்னர், நடந்த சில சம்­ப­வங்­க­ளாலே, ஐ.தே.கவும் பௌத்த தேசி­ய­வாதத் தலை­மை­யாகப் பார்க்­கப்­பட்­டது. இந்­தப்­பார்­வை­களை படிப்­ப­டி­யாக தாரா­ள­வாதப் பக்கம் திசை­தி­ருப்­பி­யது ரணிலின் தலை­மையே! இத­னாலே தெற்கில் ஆழக்­கா­லூன்ற ஐ.தே.வுக்கு முடி­யா­துள்­ளது. இத­னால்தான் ராஜ­ப­க் ஷக்­க­ளுக்கு நிக­ராக, சிங்­கள பௌத்த வாக்­கு­களைப் பெறும் நோக்­குள்ள சிலர், ரணிலின் தலை­மையை மாற்றக் கோரு­கின்­றனர். இச்­சிந்­த­னை­களின் ஏணிப்­ப­டி­க­ளி­லி­ருந்தே சிறு­பான்­மை­யினர், குறிப்­பாக முஸ்­லிம்கள் அடுத்த அர­சாங்­கத்தை தெரி­வ­தற்­கான நகர்­வு­களில் இறங்க வேண்டும். கட்­சி­க­ளல்ல இங்கு பிர­தானம். கட்­சி­களின் தலை­மை­களைப் புடம்­போ­டு­வதில் தருணம் தப்­பாத சிந்­த­னையே எமது தலை­மை­க­ளுக்கு அவ­சியம். உண்­மையில் ஜன­நா­ய­க­வாதத் தாராள சிந்­த­னையால் ஆட்­சி­களைப் பிடிக்கும் பல சந்­தர்ப்­பங்­களை ரணில் தவ­றி­யி­ருந்­தாலும் தனது அர­சியல் முத­லீ­டு­களில் கடும்­போக்­கு­வாதம், இன­வாதம், தேர­வா­தத்தை அவர் வைப்­பி­லிட்­ட­தில்லை. ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னர் கிளம்­பி­யுள்ள ஓர­வஞ்­சனைச் சமாந்­த­ரங்கள், சித்­தாந்­தங்­களை முறி­ய­டிக்கப் பொருத்­த­மான ஆளு­மையை ஓர­ள­வுக்­கா­வது முஸ்­லிம்­களும் முஸ்லிம் தலை­மை­களும் அடை­யாளம் கண்­டுள்­ளன. அர­சுக்கு எதி­ரான சகல பிரே­ர­ணை­களும் தோற்­க­டிக்­கப்­பட்­டதும் இந்­தப்­புரிதல்­க­ளில்தான்.இத­னால்தான் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு கிடைப்­பதைத் தடுக்கும் தூர­நோக்குச் சிந்­த­னைகள் படிப்­ப­டி­யாக பல விஸ்­வ­ரூ­பங்­களில் வெளிப்­ப­டு­கின்­றன. இக் காலத்தில் முஸ்லிம் எம்.­பி.க்கள் மிக விழிப்­புடன் செயற்­ப­டு­வது பாராட்­டுக்­கு­ரி­யது. முஸ்லிம் எம்­.பி.க்­களை அமைச்­சுப்­ப­த­வி­களை எடுக்­க­வி­டாமல் தடுப்­ப­த­னூ­டாக, அடிப்­ப­டை­வா­தத்தின் சாயல்கள் இன்னும் வீழ­வில்­லை­யென்ற விம்­பத்தைக் காட்­டு­வதும், முஸ்லிம் பிர­தே­சங்­களில் ஐக்­கிய தேசிய கட்சித் தலை­மைகள் இல­கு­வாக நுழை­வதைத் தடுக்­க­வுமே, இந்தக் கோஷங்கள் தலை­யெ­டுக்­கின்­றன. இல்­லா­விட்டால் எதற்கு இப்­போதும் ரிஷாத் பதி­யுதீன் மீது விரல்கள் நீட்­டப்­பட வேண்டும்? ஈஸ்டர் தினத்­தாக்­கு­த­லுக்குப் பின்னர் ரிஷாத்தின் மீது முந்­நூறு குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய கடும்­போக்­கர்கள் இன்னும் ஓய்ந்­த­பா­டில்லை. தாக்­குதல் நடந்து மூன்று மாதங்­க­ளா­கி­விட்­டன. ஒரு நாளைக்கு ஒரு குற்­றச்­சாட்டை முன்­வைத்­தாலும் தொண்­ணூறு குற்­றங்­க­ளுக்கே சாத்­தியம். மூன்று மாதத்தில் முந்­நூறு குற்­ற­மென்றால் ஒரு மாதத்­துக்கு நூறு குற்­றங்கள்."சைபர்" குற்­றங்­களைச் செய்­வ­தற்கும் (இணைய குற்றம்) இக்­கால இடை­வெளிகள் சந்­தர்ப்­ப­ம­ளிக்­காது. இவர்­களின் கோரிக்­கைகள், குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு அஞ்சி, அமைச்சுப் பத­வி­களைப் புறந்­தள்­ளு­வது முஸ்லிம் சமூ­கத்தின் பேரம்­பேசலை கடும்­போக்­கர்­க­ளுக்கு கைய­ளித்­த­தா­கி­விடும். இதுவே மீண்டும் அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்கத் தூண்­டு­கின்­றது. இன்­றுள்ள நிலை­மை­களில் பிர­தேச அபி­வி­ருத்­தி­களைத் துரி­தப்­ப­டுத்தி வாக்­கா­ளர்­களைத் தக்­க­வைக்க முடி­யுமா? என்றும் சிலர் சிந்­திக்­கலாம். “கடும்­போக்­கர்­க­ளுக்கு அர­சாங்கம் அஞ்­ச­வில்லை, முஸ்­லிம்கள் இணங்­க­வில்லை” என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கே அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்க வேண்டி உள்­ளது.இல்­லா­விட்டால் தேர­வா­தமும், கடும்­போக்கும் சிறு­பான்­மை­யி­னரின் பேரம்­பே­சலைக் கையி­லெ­டுத்த கதை­யாகி நிலை­மைகள் குரங்கு ஆப்­பி­ழுத்த கதை­யாக நேரி­டலாம். கல்­முனை உள்­ளிட்ட தமிழ் முஸ்லிம் சமூ­கங்கள் முரண்­படும் விட­யங்­க­ளுக்­கான தீர்வை தேர­வா­தத்­துக்குத் துணை­போகும் தலை­மை­க­ளிடம் எதிர்­பார்த்து சிறு­பான்மைத் தலை­மைகள்,ஏட்­டிக்குப் போட்­டி­யான காய்­களை நகர்த்­து­வது,எமது அபி­லா­ஷை­களை எடுப்பார் கைப்­பிள்­ளை­யாக்கி விடும்.சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­க­ளுக்கு தேர­வா­தத்தில் தீர்­வு­கிட்­டா­தென்ற தெளி­வு­க­ளூ­டா­கவே, உள்­ளக நிர்­வாக முரண்­பா­டுகள் தீர்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளது தற்­போது பர­வ­லாகப் பேசப்­படும் முஸ்லிம் விவாகச் சட்டம் மெது­மை­யான கோணத்தில் ஆரா­யப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளித்­ததும் ரணிலின் தாராண்­மை­வா­தம்தான். இஸ்­ரேலை வர­வ­ழைத்த ஜே.ஆர். ஜெய­வர்­தன, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை இரண்டு வரு­டங்கள், தாரை­வார்த்த பிரே­ம­தாச ஆகி­யோரின் நேர்­கோ­ண­லான சிந்­த­னைக்கு இட­ம­ளித்­தி­ருந்தால் ரணி­லாலும் தெற்கில் நிலைப்­பட்­டி­ருக்க முடியும். 2002 முதல் 2004 வரை, ரணிலும் இதே தவறைச் செய்­த­தாக சிலர் வாதிட்­டாலும் வெளிநா­டு­களின் கண்­கா­ணிப்­புக்குள் அந்த அரசு இருந்­ததால் எழு­மாந்­த­மாக அவர்­களால் செயற்­பட முடி­ய­வில்லை. முடிந்­தாலும் அவர்­களால் நிலைக்க இய­ல­வில்லை. இந்­தக்­கா­லப்­ப­கு­தியில் இவர்கள் நடந்து கொண்ட முறைகள், வடக்கு கிழக்கில் தனி இராச்­சியம் கோரிய ஆயு­த­தா­ரி­களின் மன நிலை­களைப் புரிந்து கொள்ள உதவியது. இதன்பின்னர்தான் ரணிலின் ராஜதந்திரங்களைச் சிலர் கண்டுகொண்டனர். ஐக்கிய தேசிய கட்சியின் சாரதியாக ரணில் இருக்கும் வரை முஸ்லிம்கள் அந்த பஸ் வண்டியில் பயணிக்கக் கூடாதென மு.கா, தலைவர் அஷ்ரப் ஏன் சொல்லியிருப்பார் என்பதையே இப்போது ஆராய வேண்டி­யுள்ளது. இருபது வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் ஒன்றித்திருந்த தெற்கு முஸ்லிம்களைத் தனித்துவக் கட்சியில் ஈர்ப்பதற்கு வேறு வழியின்றியே இந்தத் தாரக மந்திரத்தை அஷ்ரப் பாவித்திருப்பார்.கிழக்கு முஸ்லிம்களை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தாலும் தெற்குத் தளம் அஷ்ரபுக்கு ஒரு சவாலாக இருந்ததாலேயே இந்தத் தாரக மந்திரம் பாவிக்கப்பட்டதோ தெரியாது. அரசியல் சிந்தனைகள் காலவோட்டத்துக்கு ஏற்ப மாறவேண்டுமே தவிர, வேத வாக்குகளல்ல. - சுஐப் எம் காசிம்- https://www.virakesari.lk/article/60756
 1. Load more activity