• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. Yesterday
 3. ஈழப்பிரியன் அண்ணா... நீங்கள், ஜேர்மனியையையும்... இந்தியாவையும்.... ஒரே... தராசில் வைத்து ஒப்பிட்டதை, மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
 4. எப்போதும் தமிழன் கேட்டுக்கொண்டதற்கிணங்க..... கனடா நாட்டின், ஒன்றாறியோ மானிலத்தில் உள்ள மார்க்கம் நகரில் VANNI AVENUE இருக்கிறது. நண்பனை மீட்க முனைந்து அதற்காக உயிரைத் துறந்த BRUNTHAN PARK இருக்கு... இத்தனையும் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ? (Big match ஞாபகத்தில் வந்தது. தெரியாதவர்கள் பொறுத்தருள்க)
 5. தனக்கெதிரா தானே சாட்சியம் அளிக்கனுமே என்று கும்மான் பயந்திட்டார். போர்க்களத்தில் சரணடையும் போர் வீரர்களை ஜெனீவா போர்க்கைதிகள் விதிகளின் கீழ் ஐநா உடன்படிக்கையை அங்கீகரித்து கையெழுத்திட்டுள்ள நாடுகள் தான் பின்பற்ற வேண்டும். விபு ஒரு விடுதலை அமைப்பு. அது எந்த ஒரு சர்வதேச உடன்படிக்கைகளிலும் கையெழுத்திட்டிருக்கவில்லை. ஆனாலும் மனிதாபிமான அடிப்படையில்.. இயன்றளவு களத்தில் பிடிக்கப்பட்ட சரணடைந்த..போர்க்கைதிகளை பராமரித்தனர். சில சமயங்களில்.. தவிர்க்க முடியாத சூழல்களில் உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால்.. கும்மான் தவிர்க்கக் கூடிய சூழலிலும் திட்டமிட்டு படுகொலை செய்தவர். ஏனெனில்..1990 இல்.. கிளிநொச்சி.. மன்னாரில்.. சரணடைந்த சிங்கள.. தமிழ்.. முஸ்லீம் பொலிஸார் விடுதலை செய்யப்பட.. கிழக்கில் மட்டும் படுகொலை செய்யப்பட்டது.. தலைமைக்கு தெரியாமல் செய்யப்பட்ட படுகொலை ஆகும்.
 6. நீங்கள் இப்போ எது சொன்னாலும் அது மக்கள் காதில் விழாது எல்லோரும் புத்தமத கனவுலகில் இருக்கிறார்கள்.
 7. நீண் காலமாகி விட்டது இந்தப் பாட்டைக் கேட்டு. ராஜசுலோசனாவோடு. அட நம்ம நம்பியார்
 8. இது உண்மையா?... பிள்ளையாரப்பா! காப்பாத்தப்பா தமிழ் மக்களை. ஓ... உமக்கும் தமிழ் விளங்காதோ? யாரிடம் போய் முறையிட??
 9. வெள்ளைக்காரன் நாட்டில் இந்துக் கோயில் கட்டி, அபிஷேகம் செய்து, பூசை கூட நடக்குதாம். அங்கேயும் தலைவர் பதவிக்கு அடிபடுகினமாம் எங்கட ஆக்கள். அவன் விடாமலா இதெல்லாம் நடக்குது? நீங்கள் கேள்விப்படவில்லையோ??
 10. இப்படியானவர்களை லைற் போஸ்ட்டில் கட்டி வைத்து சாணியடிக்க வேண்டும்
 11. அவரின் குடும்பத்தில் சைவர்கள் கிறீத்தவர்கள் உள்ளனர். அத்துடன் அவர் ஒரு அரசியல்வாதி வேறு. இதனை நாம் எதிர்பார்க்காவிட்டால் எங்களில்தான் பிழை.
 12. அவர் தேர்தலை குறிவைத்து பேசினாலும், அவரின் நிலை இப்போ ஆப்பிழுத்த குரங்கின் நிலை. புலிகளுக்கு எதிராய் சாட்சி சொன்னால் சர்வதேசத்திடம் குற்றவாளியாய் மாட்டுப்படுவார். அரசுக்கு ஆதரவானாலும், ஒட்டுக்குழுக்களே போர்குற்றத்தில் ஈடுபட்டன, அதை வழிநடத்தியவர்கள் இவர்கள் என்று வாலாட்டும் சிலதை கைகாட்டும் சிங்களம். வசதி எப்பிடி? பாவம். வீரமரணம் அடைந்திருந்தால் மக்கள் மனதில் இருந்திருப்பார். இப்போ சிங்களவன் கையாலும் துரோகி என்கிற பெயரோடு மாழுவார். யார் அழுவாரோ யார் துப்புவாரோ
 13. மத சகிப்புத்தன்மைக்கு தான் ஏற்படுத்திய பாதிப்பு போதும் என வலம்புரி எண்ணுகிறது போல .
 14. மனசாட்சியை தொட்டு சொல்லுங்கோ அண்ணா 365 நாளும் மரக்கறி வதக்காமல்,பொரிக்காமல் நீங்கள் சாப்பிடுவீங்களோ?...அறுசுவை கொண்டது தான் எனது உணவு
 15. அவரை எனக்கு பார்த்த அந்த கணத்திலேயே பிடிக்காமல் போய்விட்டது. ஒரு சிலரை பார்த்தவுடன் பிடிக்காமல் போய், பிறகு பழக வேண்டி வந்து அதன் பின் பிடித்து போய்விட்ட சந்தர்ப்பங்களும் உள்ளது. ஆனால் இந்த மனிசனை கண்டவுடன் ஒரு போதுமே ஆளுடன் பழகக் கூடாது எனும் அளவுக்கு எனக்கு அப்படி ஒரு வெறுப்பு வந்து விட்டது. அரைவாசி மட்டுமே திறந்து பார்க்கும் கண்கள், மற்ற எல்லாரும் மயிருகள் என்ற மாதிரி பார்க்கும் அந்த ஏளனப் பார்வை, முகத்தில் எப்பவும் இருக்கும் ஒரு கிழமைக்கும் மேல் சவரம் செய்யாத தாடி, சாயம் போனது போன்று தோன்றும் முழுக்கை ஷேர்ட்டும் காக்கி நிற டவுசரும், அருகில் வந்தால் மூக்கில் அடைக்கும் சிகரெட் மணமும் என்று ஆள் ஒரு டைப்பாகவே இருப்பார். இலங்கை இந்திய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக அந்தக் கடைக்குச் செல்வது என் வழக்கம். அங்கிருக்கும் மரக்கறி வகைகளும் மீன் வகைகளும் ஓரளவுக்கு தரமாக இருப்பது அங்கு அடிக்கடி செல்வதற்கு காரணமாக இருப்பினும், காஷ்சியரில் நிற்கும் ஒரு பெட்டை கொஞ்சம் கவர்ச்சியாக நிற்பதும் இன்னொரு கூடுதல் காரணம்.அந்தக் கடையில் தான் இந்த ஆள் சி.டி.கள், டி.வி.டி.கள் விற்கும் பிரிவில் நிற்பார். அனேகமாக இவர் தான் அதற்கு பொறுப்பு என நான் நினைப்பதுண்டு. அவரிடம் ஒரு போதும் எதுவும் வாங்க நினைப்பதில்லை. அவருக்கு உள்ளூர நான் தன்னை வெறுப்பது தெரியும் என்பது போலத்தான் அவர் பாவனைகளும் இருக்கும். ஒரு நமுட்டுச் சிரிப்பை கக்கத்துக்குள் வைத்திருந்து என்னைக் கண்டதும் தன் முகத்தில் விரித்து வைப்பார். பார்க்க எரிச்சலாக இருக்கும். மகளை இலங்கைக்கு கூட்டிக் கொண்டு போன போது அவள் விரும்பிச் சுவைத்தவற்றில் ஒன்று கிரீம் சோடா. கனடாவுக்கு வந்த பின்பும் அவளுக்கு பிடித்த பானமாக அதுதான் இருக்கின்றது. இங்கு தமிழ் கடைக்கு போகும் போது வா என்று கூப்பிட்டால் இலேசில் வர மாட்டாள். ஆனால் கிரீம் சோடா வாங்கித் தருவன் என்று சொன்னால் உடனே என்னுடன் வந்து விடுவாள். அன்றும் அப்படி அவளையும் கூட்டிக் கொண்டு வழக்கமாக போகும் அதே தமிழ் கடைக்கு போன போது அவளைக் கண்டு அந்த மனுசன் மெலிதாக புன்னகைத்தார். புன்னகைத்த பின் என் முகத்தையும் நேராக பார்க்கும் போது என்னால் பதிலுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. போனால் போகட்டும் என்று ஒரு சிறு புன்னகையை தெளித்து விட்டன். தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவர் என் கைகளை திடீர் என்று பற்றிக் கொண்டார். என்னை உற்று உற்றுப் பார்த்தார். சில கணங்கள் மெளனமாக நின்றார். பின் என்ன நினைத்தாரோ அல்லது ஏன் நினைத்தாரோ தெரியவில்லை மட மடவென கதைக்கத் தொடங்கினார். ----------------------------------------------------------------------- இருள் ஒரு திரவம் போல கண்களில் திடீரெனப் பரவத் தொடங்கியது. அருகில் இருந்த எல்லாம் ஒரு கணத்தில் எவையுமற்றதாகிப் போயின.மனம் ஒரு புள்ளியில் மட்டும் நிலைத்து நின்றது. எல்லையற்ற மெளனம் ஒரு சிறு குமிழாக உருவாகி பெரும் காடாக மனதில் விரிந்து சென்றது. "அந்தக் கணத்தை எப்ப நினைத்தாலும் இப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது தம்பி" "என்னைச் சுற்றி எல்லாமே இருளாகவும் எல்லாமே இல்லாமல் போனதாகவும் தான் அந்தக் கணத்தில் எனக்கு தெரிந்தது" "இந்த நாட்டுக்கு நான் வந்து 30 வருடங்களுக்கும் மேல் ஆகுது. பக்கத்து விட்டு சேமியோனின் குடும்பமே சிங்களம் போட்ட குண்டில் சிதறிப் போக அங்கு இருந்தால் என் குடும்பத்துக்கும் இப்படித்தான் ஆகும் என்று வெளிக்கிட்டவன் தான் தம்பி" "மனிசியையும் மகனையும் கொழும்பில கொண்டு வந்து விட்டுட்டு ஏஜென்சி மூலம் ஏறி இங்கு வந்து சேர ஆறு மாசம் எடுத்தது தம்பி" "வந்த அடுத்த நாளில் இருந்து ஒரு மெஷின் மாதிரி ஓடிக்கொண்டே இருந்தனான். முதலில் மனிசியையும் மகனையும் இங்கு எடுக்க மூன்று வேலைகள் செய்யத் தொடங்கினன் தம்பி. அவர்கள் வந்த பின் மேலும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறக்க இந்த மெஷின் அதுகளுக்காக இன்னும் இன்னும் ஓடத் தொடங்கிச்சு தம்பி" "வாரத்தில் ஏழு நாளும் வேலை. ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்களுக்கும் மேல் வேலை செய்ய வேண்டும். வருசம் கூட கூட வேலையிலும் பொறுப்புகள் கூட இந்த மெஷின் இன்னும் இன்னும் ஓடிச்சுது தம்பி" "வெளியில போன பிள்ளைகள் வீட்ட வரும் போது அம்மாக்காரி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவவை நான் வேலைக்கு விட வில்லை தம்பி" "பிறகு பிள்ளைகளும் வேலைக்கு போகத் தொடங்கி இருப்பினமே அண்ணா" நான் அவரிடம் கேட்டேன். "ஓம் தம்பி ..ஆனால் நிலையான ஒரு இடத்துக்கு வரும் வரைக்கும் நானும் வேலை செய்தால் தான் அவர்களுக்கு வாழ்க்கை சுகமாக இருக்கும் என்று நான் என்ர வேலையை விடேல்ல தம்பி" "அப்படி ஒரு நாள் வேலை செய்து கொண்டு இருக்கும் போதுதான் எனக்கு அப்படி எல்லாமே ஒரு நொடியில் இருளத் தொடங்கிட்டு. பிரமை பிடிச்ச மாதிரி ஒரே இடத்தில் நின்று கொண்டு ஒரே ஒரு புள்ளியை பார்த்துக் கொண்டு...." "எனக்குள் ஏதோ உடைந்து போன மாதிரி ஆயிட்டுது... அவ்வளவு நாளும் நான் சேர்த்து சேர்த்து வைச்சு இருந்த எல்லா நினைவுகளும் ஒரு வினாடியில் எனக்குள் இருந்து வெளியே போயிட்டுது தம்பி" " ஒரு அழி றபரால எல்லாவற்றையும் அழிச்ச மாதிரி என் பெயர் தொட்டு நான் ஆர் என்ற வரைக்கும் மறந்து போச்சுது தம்பி" "எதுவுமே ஞாபம் இல்லை. பெயர் ஊர் நான் ஆர், எங்க வீடு, மனிசி பிள்ளைகள் - எல்லாமே மறந்து போச்சு தம்பி" "நான் ஒரு செத்த சவம் போல ஆகிட்டன் தம்பி" "அதுக்கு பிறகு நடந்தது எனக்கு நினைவில் இல்லை. வேலையில் எனக்கு இப்படி நடந்ததால் கம்பெனியே பொறுப்பெடுத்து என்னை மருத்துவமனையில் அனுமதித்தது. 8 மாதங்கள் ஆஸ்பத்திரி வீடு என்று என்னை உருட்டி எடுத்தது வாழ்க்கை" "உங்களுக்கு நினைவுகள் வரத் தொடங்கவில்லையா அண்ணா" நான் அவரது கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டு கேட்கின்றேன். "8 மாதங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகள் வரத் தொடங்கிட்டு" "ஆனால் எனக்கு அப்படி வராமல், நினைவுகள் எதுவுமே இல்லாமல் ஒரு விசரனாக செத்து போயிக்க வேண்டு தம்பி" "ஏன் அண்ணா...." என்னால் அவரது பதிலை புரிந்து கொள்ள முடியவில்லை" "ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தமும், ஒவ்வொருவரும் யார் என்று நினைவு வரும்போதுதான் எனக்கு இந்த வாழ்க்கை மேல அப்படி ஒரு வெறுப்பு தம்பி" "வீட்டை கொண்டு வந்த பிறகு வந்த நாட்களில் ரிவி போட்டால் ஓப் பண்ணவோ அல்லது மற்ற சனலுக்கு மாற்றவோ தெரியாது.. படிகளில் ஏறத் தெரியும் ஆனால் இறங்க பயமாக இருக்கும். 24 மணித்தியால மணிக்கூட்டை புரிய முடியவில்லை. ஆராவது வெளியே போனால் வீட்ட வர மட்டும் தனிய இருக்க செரியான பயமாக இருக்கும்" "சப்பாடு எல்லாம் கரண்டியால சாப்பிட முடியவில்லை. கைகளால் சாப்பிட்டாலும் இடது கையால தான் சாப்பிட தொடங்கினன்" "ஏன் அண்ணா... உங்கள் குடும்பம் ... உங்களை...." எனக்கு மெலிதாக ஏதோ புரிய உணர்வுகள் தழம்பத் தொடங்கின அவரின் கண்கள் தீர்க்கமாக எதையோ தேடின. அவரது மனவேகத்துக்கு சொற்கள் இசையவில்லை என நினைக்கின்றேன். இதயக் கூடு மேலே எழும்பி எழும்பி தணிந்தது அவருக்கு. சில வினாடிகள் மெளனமாக இருந்தார்.பின் "என்னை ஹோலில் வைத்து விட்டு என்னைச் சுற்றி இருந்து என்னைப் பற்றி கதைப்பார்கள் தம்பி." "சனியன் செத்து போயிருந்தால் கூட பரவாயில்லை... இப்படி இருந்து உசிரை எடுக்குது" என்று சொல்லிவினம் தம்பி "பேஸ்மண்டில் கொண்டு போய் தள்ளி விட்டாலும் இதுக்கு மேலே வரத் தெரியாது...கிடந்து உழலுது என்று சொல்லுவினம் தம்பி" "எனக்கு நினைவுகள் சரியாக வராவிட்டாலும் சொல்பவற்றை விளங்கிக் கொள்ள ஏலும் என்றது அவையளுக்கும் தெரியும் தம்பி. ஆனாலும் என்னை குத்தி காயப்படுத்தி பார்க்க அப்படி ஒரு ஆசை அவர்களுக்கு" "ஏன் அண்ணா... உங்கள் மனைவி...?" "அவா என்ன செய்வா.... நானும் இப்படி ஒரே அடியாக வீழ்ந்து விட்டதால் பிள்ளைகள் சொல்லுக்கு தானே கட்டுப்பட வேண்டும் தம்பி" "ஆனாலும் பிள்ளைகளுடன் சேர்ந்து அவவும் என்னை திட்டுவதைத்தான் என்னால் கொஞ்சம் கூட தாங்க முடியவில்லை தம்பி" "30 வருடம் ஓடியதால் களைத்துப் போன இந்த மெஷினை எப்படா ஒரே அடியாக தூக்கி எறியலாம் என்று தான் எல்லாரும் யோசிச்சினமே ஒழிய இந்த மெஷினுக்கு இன்னும் உசிரும் உணர்வும் இருக்கு என்று விளங்கிக் கொள்ளவில்லை " "நினைவுகள் முழுசா வர வர வேதனைகள் தான் கூடிச்சு " "வருத்தம் வந்தாலும் வயசு போனாலும் இந்த மனசுக்கு அது தெரிவதில்லை தம்பி. அது எப்பவும் போல அடி மனசுக்குள் அன்பை எதிர்பார்த்து யாராவது அரவணைப்பார்களா என ஏங்கும் தம்பி" எனக்குள் ஏதோ அறுந்து போய் கொண்டு இருந்தது. கண்களின் ஓரம் மெலிசாக ஓடத் தொடங்கி சில நிமிடங்கள் ஆயிருந்தன. "சரி அண்ணா.. ஆனால் இப்ப நீங்கள் சரியாகத்தானே ஆகிட்டீர்கள். தனியாக கடையின் ஒரு பகுதியை பொறுப்பெடுத்து நடத்துகின்றீர்கள்..." நான் கேட்டேன் "ஓம் தம்பி... எனக்கு இப்ப முழுக்க சரியாகிட்டுது. 3 வருசங்கள் ஆச்சுது சரியாக தம்பி" "போன நினைவுகள் சுனாமி மாதிரி திரும்ப வரும் போது மறந்த விடயங்களையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டது. என்னால சின்ன வயதில நடந்த எல்லா விடயங்களையும் திகதி வாரியாக சொல்ல முடியும் தம்பி" "இப்பவும் குடும்பத்துடனா இருக்கின்றியள்?" நான் கேட்டன் ஒரு மெலிதான... ஏளனமான அந்த சிரிப்பு அவரின் முகத்தில் பரவியது. அவர் குரலில் தொற்றிக் கொண்டது உற்சாகமா அல்லது இவ் உலகைப் பார்த்து செய்யும் நையாண்டியின் மொழியா என தெரியவில்லை. "ஓம் தம்பி. ஆனால் முன்னை மாதிரி இல்லை. நானே ராஜா நானே மந்திரி ... மாசம் காசு கொண்டு வருதால் எனக்கு அங்கு இப்ப திருப்பி நடப்பு இருக்கு..வீடும் என்ற பெயரில் தான் இருக்கு. ஆனாலும் நானே எனக்கு உரிய சாப்பாட்டை சமைச்சு, நானே என்னை முழுக்க கவனிச்சு... எனக்கு பிடிச்ச எல்லாவற்றையும் நானே செய்றன் தம்பி" "இப்பதான் தம்பி என்ற வாழ்க்கையை நான் வாழ்றன்" சில வினாடிகள் மெளனமாக இருந்தார். பின்னர் "கெதியன இவர்கள் எல்லாரையும் விட்டுட்டு ஒரு நாள் நான் வெளியே போய் விடுவன் " "எங்கே அண்ணா போவீர்கள்..." அவர் பற்றியிருந்த கைகளை விடுவித்துக் கொண்டு "சரி தம்பி பிள்ளை கன நேரமாக எங்களையே பார்த்துக் கொண்டு நிற்குது" என்று சொல்லி மகளின் கன்னத்தில் தடவி விட்டு கடைக்கு வெளியே சென்றார்' "அப்பா ஏன் அவர் உங்களிட்ட இப்படி தன் பிரைவேட் கதையை சொன்னார்" என்று மகள் கேட்டாள். என்னிடம் பதில் இருக்கவில்லை. மனம் முழுசும் மனிதர்கள் மீதான வெறுப்பு படந்து இருந்தது. * *************************************************************** அடுத்த கிழமை கடைக்கு போய்அவரை உள்ளே சென்று தேடிப்பார்க்கும் போது அண்ணா இருக்கவில்லை. கடைக்கு போனால் ஆரைப் பார்க்க விருப்பம் இல்லாமல் அவ்வளவு காலமும் தவிர்த்தேனோ அவரை தேடி தேடி கடைக்குள் சுற்றி வந்தேன். அவரை காண முடியவில்லை. சாமான்கள் வாங்கி காசும் கொடுத்து வெளியே வந்து காரை ஸ்ராட் பண்ணும் போது தான் எதேச்சையாக கடையின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டு இருந்த அந்த நோட்டீஸ் கண்களில் பட்டது. "காணவில்லை" எனும் தலைப்பிட்டு அந்த அண்ணாவின் படம் போட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. மனம் பதபதைக்க காரை விட்டு இறங்கிச் சென்று காணாமல் போன திகதியை பார்க்கின்றேன். அதே திகதி....தன் கதையை எனக்கு சொன்ன அதே திகதி! (யாவும் கற்பனை அல்ல)
 16. உண்மையில் இப்படியொரு சம்பவம் வலம்புரி பத்திரிகையில் கூறியபடி (Discribed) நடைபெற்றிருந்தால் கண்டிக்கப்படவேண்டும். இதில் யாருக்கும் இரண்டாம் கருத்திருக்கும் என நான் எண்ணவில்லை. (அதுசரி நான் கண்டிக்கவில்லை என எப்படிக்கூறலாம். முதலில் கருத்தெழுதியதே நான்தான். அதிலும் பிறரைக் குற்றம் சாட்ட வேண்டாம் என தெளிவாகவே கூரியுள்ளேன். சமயத்தை வைத்து பிழைப்பு நடாத்தும் கேவலமான செயலை என்பிள்ளைகளுக்கு நிச்சயம் கற்பிக்கப் போவதில்லை ஏனென்றால் நா Kapithan ஆக்கும் )
 17. ஏன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, படங்களை பிரசுரிக்கவில்லை? அவர்கள் வாள்வெட்டுக்குழு என்கிற அடையாளம் சமூகத்துக்கு தெரிந்து விடும் என்பதாலா? மாதா, பிள்ளையாரை நம்பி பலனில்லை என்றெண்ணி, தாங்களே களத்தில் இறங்கியவர்களுக்கு அடையாளம் காட்டத் தயக்கம் ஏன்? இவனையெல்லாம் படைத்து, நானே அசிங்கப்படுகிறேனே என்று படைத்தவனே கலங்குவான். இவ்வளவும் தெரிவித்தவர்கள் குறிப்பிட்ட பாதிரியாரின் பெயரை மட்டும் தெரிவிக்காதது ஏனோ?
 18. அதை நேரில் பாத்தால் தான் சொல்லலாம் நாங்கள் யோக்கியம் என்று சொல்றவர்களை தான் நம்ப கூடாது உங்களை போல ஆண்கள் தான் பெண்களை பலவீனப்படுத்தி,எப்ப தங்கள் வலையில் வீழ்த்தலாம் என்று காத்திருப்பவர்கள்
 19. இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி
 20. வருடத்தில் ஒரு நாளாவது இப்படி வாழையிலை போட்டு ஆற,அமர ரசித்து ,ருசித்து சாப்பிட வேண்டும் என்பது என் ஆசை வாழ்க்கையில் ஒரு தடவை இப்படி சாப்பிடலாம்
 1. Load more activity