யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. போரில் அரசுக்கு முண்டு கொடுத்தே முஸ்லிம்கள் தான். அது உளவு படையில் இருந்து தமிழ் கிராமங்களை அழிப்பது வரை.
 3. Today
 4. விக்கியின் கூற்றுக்கு முஸ்லீம் மதவெறியர்களின் பதிலிலுள்ள பதற்றம் அவரது கூற்றை உண்மையாக்குகிறது. நல்ல முஸ்லிம்களுடன் இன ஐக்கியத்தை ஏற்படுத்த, கள்ளக்காணி பிடிக்கும் முஸ்லீம் காடையர்களின் செயல்களை பகிரங்கமாக அம்பலப்படுத்துவது பெரிதும் உதவும். கிழக்குமாகாண பிரதிநிதியான சம்மந்தன் தனது வீட்டுக்கு கிட்ட இருக்கும் கன்னியா பறிபோவது கூடத் தெரியாமல் இருக்கும் நிலையில் இந்த விடயத்தில் விக்கியின் செயல்கள் பாராட்டப்பட வேண்டியவை.
 5. அதுசரி உங்கள் மறவன் புலவு சச்சியும் ,சிவ சேனையும் என்ன புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கிண்ணியாப்பிரச்சினைக்கு சிவ சேனை இறங்கி அடிக்கும் அடியில சிங்கள காடையர்கள் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுவார்கள் என்று பார்த்தால் , சிவசேனையும் சச்சியும் பம்முறார்கள் .. கிறிஸ்த்தவர்களோடு மல்லுக்கட்டத்தான் துணிவு வரும்போல ...
 6. தேர்தலுக்கான ஏற்பாடுகளை சிங்கள அரச கொலைகாரர்கள் தொடங்கியுள்ளனர்.
 7. மகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளிக் குழுக்கள் தாங்கள் கொள்ளையடித்த சொத்துக்களில் ஹிந்திய அரச பயங்கரவாதக் குழுக்களுக்கு ஒரு சிறு பகுதியை வழங்கியிருக்க வேண்டும். அதனாலேயே இப்படியான ஒரு விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
 8. அது தெரிந்த விடயம் தானே! அமைச்சு நாற்காலி தான் மனோ கணேஷனின் பிரதான நோக்கம் என்கிறது பலருக்கும் தெரிந்த விடயம் தானே!
 9. விக்கி இதை சரியான அரசியல் ராஜதந்திரத்துடன் (அரசியல் சித்துவிளையாட்டுகளுடன்) செய்திருந்தால் நிச்சயமாக பாராட்டுகளுக்கு உரியவர். சென்ற முறை கிழக்கு மாகாணத்தில் அவர் நடந்துகொண்ட விதத்தைவிட, இந்த முறை அவர் நடந்து கொண்ட விதம் கிழக்கு மாகாண அரசியல் யதார்த்தத்தை, குறிப்பாக கிழக்கு மாகாண தமிழர்களின் தேவையை உணர்ந்தவராக வெளிப்படுத்துகிறது. அவரது அடுத்த நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
 10. வட ஹிந்தியன் இந்து, இந்துவா என்ற பெயர்களில் காலங்காலமாக செய்துவருகிற பிரதான வேலை ஹிந்தி திணிப்பும், சமஸ்கிருத திணிப்பும் மட்டும் தான். வட ஹிந்தியனுக்கு, வட ஹிந்திய அரச பயங்கரவாதக் குழுக்களுக்கு இந்துக்களைப் பற்றி, குறிப்பாக சைவர்களைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லை. இந்த அடிப்படை அறிவு சிறிதரனுக்கு இல்லையென்று விளங்குகிறது. கூட்டமைப்பு என்ற போர்வையில் ஹிந்திய அரச பயங்கரவாதக் குழுக்களின் கைக்கூலிகளாக இருந்த சித்தார்த்தன், சுரேஷ், சம்மந்தன், மாவை போன்றவர்களின் கூட்டுவைத்த சிறீதரனுக்கும் ஏதாவது அந்த தொற்று நோய் ஏற்பட்டுவிட்டதோ?
 11. Yesterday
 12. அந்த முகிலன் பற்றி இதுவரை அறியாமல் இருந்தமைக்கு வெட்கப்படுகிறேன். தங்கள் மூலம் அறிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நல்லதோர் அறிமுகத்தோடு வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
 13. வணக்கம் முகிலன்...! தங்கள் வரவு நல் வரவாகட்டும்....!
 14. Today marks 36 years since the horrific violence of the 1983 riots or Black July. Armed with voter registration lists, government-sponsored anti-Tamil pogroms killed at least 3,000 Tamil civilians, destroyed 5,000 shops, 8,000 homes, and displaced 150,000 Tamils. It also prompted the first large exodus of Tamil people: 500,000 of them fled the island.
 15. 1983 ஆண்டு யூலை மாதம் 25,27ம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)ஸ்தாபக தலைவர்களான தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி,முன்னணி போராளிகள் உட்பட 53போராளிகளின் நினைவாக நடைபெறும் தமிழ் தேசிய வீரர்கள் தினத்தை வடக்கு,கிழக்கில் டெலோ இயக்கம் அனுஷ்டித்து வருகின்றது. நாளை 25ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 5 .00 மணிக்கு திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் நினைவரங்கில் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக ரெலோவின் நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர் தெரிவித்தார். இந் நிகழ்விற்கு ரெலோவின் தவிசாளரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் உட்பட ரெலோவின் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இதேவேளை, இறுதிநாள் நினைவேந்தல் எதிர்வரும் 27ம் திகதி ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/திருகோணமலை/திருமலையில்-வெலிக்கடை-தியாகிகள்-நினைவுதினம்-அனுஷ்டிப்பு/75-235759
 16. மகளுக்கான மணமகனை தெரிவு செய்யப் போகிறார் நளினி இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு, அவருடைய மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ஒரு மாதம் சிறையில் இருந்து வெளியே வருவதற்கான 'பரோல்' வழங்கப்பட்டிருக்கிறது. நளினி தரப்பில் 6 மாதம் 'பரோல்' கேட்கப்பட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாதம் மட்டுமே வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பரோல் திகதி மற்றும் நளினி தங்கும் இடம், இரண்டு நபர்களின் பிணை உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறை கேட்டுள்ளதையடுத்து, நளினியின் தாய் பத்மா மற்றும் குடும்ப நண்பர் சத்தியவாணி ஆகியோரின் உறுதிமொழிப் பத்திரத்தை சிறை நிர்வாகத்திடம் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி ஒப்படைத்தார். இதுதவிர நாலைந்து மணமகன்களின் பொருத்தம் நன்றாக இருக்கிறது. நளினி வெளியே வந்தவுடன் மகளுக்கான மணமகனைத் தெரிவு செய்வார் என்று புகழேந்தி கூறியிருந்தார். இந்த வாரம் நளினி எப்போது வேண்டுமானாலும் பரோலில் வெளியே வருவார் என்ற நிலையில், அவருடைய அம்மா பத்மா விகடனிடம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். http://www.thinakaran.lk/2019/07/23/கட்டுரைகள்/37525/மகளுக்கான-மணமகனை-தெரிவு-செய்யப்-போகிறார்-நளினி
 17. வணக்கம் நல் வரவு . தொடர்ந்து இணைந்து இருங்கள்
 18. EAST AND FUTURE SRILANKAN TAMIL POLITICS. V.I.S.JAYAPALAN இலங்கை தமிழர் அரசியலும் கிழக்கும். - வ.ஐ.ச.ஜெயபாலன். . வரலாற்றில் போராடி மக்கள் உரிமைகளை மேம்படுத்தியபடி வாழ்வதுதான் போராட்ட அரசியலின் இராசதந்திர அடிப்படையாகும். அரசியல் பிரச்சினைகளில் ஏமாற்ற வாய்ப்பில்லாத வகையில் உள்ளிருந்தோ வெளியில் இருந்து தலையிட்டோ யார் தீர்க்க முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். . கிழக்கில் படுவான்கரை சென்றபோது சோமாலியாவுக்கு வந்துவிட்டேனோ என அதிற்ச்சி அடைந்தேன். அதேசமயம் இலங்கையில் மாவட்ட ரீதியாக கொழும்பில் அல்ல யாழ்பாணத்தில்தான் அதிகமான அதிகமான பணம் வங்கியில் உள்ளதாக தெரிகிறது. இப்போதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளும் இந்திய சர்வதேச உதவிகளும் கிழக்குகுநோக்கி வர ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழர்கள் அரசியல் வடக்கின் செல்வம் கிழக்கின் வறுமை என்கிற இருமையை எதிர்கொள்வது முக்கிய சவாலாக இருக்கப் போகிறது. உண்மையில் எதிர்கால தமிழர் அரசியல் கிழக்கில் வறுமை ஒழிப்பும் இலங்கையில் மலைக தமிழர் முஸ்லிம்கள் மற்றும் முற்போக்கான சிங்களவர்களுடனான உறவும் - ஏனைய இனங்களின் அரசியல் - இந்தியா உட்பட இந்து சமுத்திர சர்வதேச அணி என்பவற்றின் மாறிவரும் நிலைபாடுகளும்தான் -சர்வதேசத்தின் இந்துசமுத்திர அரசியல்- தீர்மானிக்கப்போகிறது. போகிறது என்பது தெளிவாகிவருகிறது. ஆயுதம் கையில் இருந்த போது - 1987 மற்றும் ஜெனீவா 2006 காலக்கட்டங்களில் இந்தியா மற்றும் சர்வதேசத்தின் இந்து சமுத்திர அரசியலை நாம் இராஜதந்திர ரீதியாக கையாளவில்லையென நமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கால விமர்சகர்களும் இராஜதந்தரிகளும் சொல்லக்கூடும். இத்தகைய பல்வேறு அரசியல் இராஜதந்திர பிரச்சினைகளில் வடக்கை மையபடுத்திய நமது இராசதந்திர அணுகுமுறை தோற்றுப்போனது. இலங்கை தமிழர் போராட்டங்களும் அரசியலும் கிழக்கின் நிலைபாடு இன்றி வெற்றிபெறுகிற வாய்ப்பில்லை என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்தே வந்திருக்கிறது. . தமிழ் முஸ்லிம் உறவின் அமைப்பு தமிழரும் கிழக்கு மாகாண முஸ்லிம் தலைமையும் என்கிற வடிவத்தில்தான் இருந்தது. இப்ப மலையக +தெற்க்கு தமிழர்களும் இலங்கை தமிழர்களும் இலங்கை மற்றும் இந்துசமுத்திர அரசியலின் மேலோங்கிவரும் தாக்கத்தால் ஒருங்கிணைந்து வருகின்றார்கள். இங்குதான் மனோகணேசன் முக்கிய பாத்திரமாக மேம்படுகிறார். அதனால் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவு தமிழர்களது வடகிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமையுடனான உறவு தெற்க்கு முஸ்லிம் தலைமையுடனான உறவு என பன்முகப்படும் என்பதை உணர்கிறேன். கிழக்கில் முஸ்லிம் தமிழ் நல்லுறவைப் பொறுத்து கல்முனை வடக்கு கோரிக்கையை முஸ்லிம்களும் தென்கிழக்கு மாகாணக் கோரிக்கையை தமிழரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் நிலைபாடு, முஸ்லிம்கள் நிலதொடர்பற்ற தனி மாகாணம் கோரினாலும் தமிழர் அதனை திறந்த மனதுடன் பரிசீலித்து ஆதரிக்க வேண்டும். வடகிழக்கின் அரசியலை நாளை கொழுபு தீர்மானித்தாலென்ன சர்வதேச சக்திகள் தீர்மானித்தால் என்ன தமிழர் மலையக தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவுதான் சுபீட்சத்தின் அழவுகோலாக அமையும். . வடகிழக்கு தமிழ் முஸ்லிம் உறவு கல்முனை வடக்கு பிரச்சினையை தாண்ட முடியாமல் தள்ளாடுகிறது. கல்முனை வடக்கு பிரச்சினையின் தீர்வு வடிவமே எதிர்காலத்தில் மூதூர் உட்பட சகல தமிழ் முஸ்லிம் பிரதேச பிரச்சினைகளின் தீர்வுக்கான முன் உதாரணமாகவும் வாய்பாடாகவும் அமையப்போகிறது. அதன் அர்த்தம் தமிழரைப் பொறுத்து மூதூரிலோ வேறு இடங்களிலோ மறுக்கும் எதனையும் கல்முனையில் கோர முடியாது என்பதாகும், முஸ்லிம் தலமைகளைப் பொறுத்து கல்முனையில் விட்டுக்கொடுக்க மறுக்கும் எதனையும் மட்டக்களப்பு மாவட்டத்திலோ வேறு இடங்களிலோ கோரமுடியாது என்பதாகும். கல்முனையை தொடர்ந்து வடகிழக்கில் குறிப்பாக முன்னர் முஸ்லிம் தமிழ் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த மூதூரில் இரண்டு முஸ்லிம் பிரிவுகள்ம் (மூதூர், தோப்பூர்) ஒரு தமிழ் பிரிவும் (சம்பூர்) ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழரும் முஸ்லிம்களும் இணங்கி இந்த அரசின் காலத்திலேயே மூதூர் தோப்பூர் சம்பூர் பிரதேச செயலகங்களையும் பிரதேச சபைகளையும் பெற்றுவிடுவது நன்று. . வடகிழக்கு தமிழ் அரசியலில் வடக்கில் முதலிலாவதாக உரிமைப் போராட்டம் இரண்டாவதாக அபிவிருத்தி என்றும் கிழக்கில் முதலாவதாக அபிவிருத்தி இரண்டாவதாக உரிமைப் போராட்டம் என்கிற சமூக பொருளாதார அரசியல் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த அரசியல் சிக்கலுக்கு அரசியல் தீர்வை கொண்டுவருவது தொடர்பாக 10 வருடங்களாக ரணில் அரசினால் தமிழர் கூட்டமைப்பு ஏமாற்றபட்டு வந்ததே காரணமாகும். ஏமாற்றப்பட்டபோதும் ரணில் அரசுக்கு முண்டு கொடுத்த கூட்டமைப்பு ஆதரவுக்குப் பதிலாக அபிவிருத்தியை விலையாக பெற்றிருக்க வேண்டும். இப்போதும்கூட இலங்கையின் சோமாலியாவாக சிதைந்துபோயிருக்கும் படுவான்கரை அபிவிருத்தி தொடர்பாக சர்வதேச உதவியுடன் ஒரு ஒருங்கிணைந்த சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை பெறுகிற அக்கறை கூட்டமைப்பிடம் காணமுடியவில்லை என்பது வேதனை தருவதாக உள்ளது. இதுவே கிழக்கில் கூட்டமைப்பு எதிர்கொள்ளும் பாரிய சிக்கலாகும். . கிழக்கின் சில பகுதிகளின் சோமாலியா தன்மையை கண்டுகொள்ளாமைதான் இன்று கூட்டமைப்பு எதிர்கொள்ளும் சிக்கலாகும். இதனால் எதிர்கால அரசியல் முடிவுகளை அப்படியே கூட்டமைப்பிடம் கொடுத்து விடுவதில் பயனில்லை என்கிற முடிவை நோக்கி கிழக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ரணில் அரசுக்கு அளித்த ஆதரவுக்கு பிரதி உபகாரமாகவேனும் கிழக்கிற்க்கு பாரிய வறுமை ஒழிப்புக்கும் அபிவிருத்துக்கும் வழிவகுக்கும் விசேட திட்டமொன்றை கொண்டுவராமல் கிழக்கில் கூட்டமைப்பு அரசியல் தொடரும் வாய்ப்புகள் குறைந்து வருகிறது. . அரசுக்கு ஆதரவு கொடுத்தவாறே சோமாலிய வறுமையில் வாடிய கிழக்கில் நிலமைகள் மாற்றமடைந்து வருகிறது. அரசியலில் வடக்கில் தமிழர் பிரதிநிதிகள் அரசுக்கு வெளியில் இருந்து உரிமைக்கு போராடுகிறதும் கிழக்கில் தமிழர் பிரதிநிதிகள் அரசுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளித்து அமைச்சு பதவிகளை ஏற்க்கிறதும் என்கிற வடிவத்தை நோக்கியே ஈழ அரசியலில் திருப்பம் ஏற்பட்டு வருகிறது. ஒன்றுமில்லாமல் வெறுமனவே ரணில் அரசை ஆதரிப்பதைவிட தமிழர் கூட்டமைப்பின் உரிமைப் போராட்டத்துடன் கிழக்கின் அபிவிருத்தியை இணைப்பதால் ஒன்றும் குறைந்துபோகாது என்கிற கருத்து வலுவடைந்து வருகிறது. இதனை கூட்டமைப்பு இன்னும் கண்டுகொள்ளவில்லையென்பது வருத்தமாக உள்ளது. . பிரபாகரன் இல்லாத சூழலில் தமிழர் அரசியல் உரிமைக்கு உள்வாரி போராடங்களில் தங்கியிருக்கும் சூழலும் வல்லமையும் இல்லாது போய்விட்டது. அதனால் தமிழர் பிரச்சினை இது சமுத்திரம் சர்வதேசமென பரந்து வலிமை பெறுவது அவசியமாகின்றது. இந்து சமுத்திர சர்வதேச மயப்படும் தமிழர் அரசியலில் மலையகதமிழர்கள் முஸ்லிம்களுடனான அரசியல் உறவு முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதனுடன் ஒப்பிடுகையில் மகிந்தாவா ரணிலா என்கிற வாய்பாட்டுச் சிந்தனையின் அரசியல் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. . புதிய சூழலில் வடக்கில் உரிமைப் போராட்டமும் அபிவிருத்தியும் கிழக்கில் அபிவிருத்தியும் உரிமைப் போராட்டமும், என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இந்த குரலை எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் எதிர்கால தமிழரின் அரசியல் நிர்ணயமாகப் போகிறது.
 19. இலங்கையில் இந்து மதத்தையும் தழிழர்களையும் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆகவே இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனிமேலும்இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிரதேசம் இன்று அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து மக்களுக்கு கிருத்தியங்களைச் செய்ய முடியாதுள்ளது. கடந்த 16ஆம் திகதி ஆதீனத்துக்கான உரிமையாளர் ரமணியம்மாள் மற்றும் அகத்தியர் ஆகியோர் அங்கு சென்றபோது அவர்கள் மீது காடையளர்கள் சுடுநீரை ஊற்றியுள்ளனர். ஜுலை கலவரம் இடம்பெற்று 36 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இன்னமும் அரங்கேற்றப்படுவது மிகவும் வேதனைக்குரியதாகும். நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இன்னும் எந்தளவு தூரம் பயணிக்கவேண்டியுள்ளது என்பதை முதலில் சிங்கள சமூகத்தினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தலையிட்டு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் ஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் போன்றவர்கள், ஏன் தமது மதவெறிகளைத் தூக்கிவைத்துவிட்டு நியாயபூர்வமாக இந்துக்களுக்காக குரல்கொடுக்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். https://www.virakesari.lk/article/61049
 20. 21/4 உயிர்த்த ஞாயிறு தினத்தில், 3 கத்தோலிக்க தேவாலயங்கள் 3 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள், வெலிசறை கடற்படை முகாமைன் கீழ் உள்ள வெடிபொருள் களஞ்சியத்தில் இருந்து சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக, உரிய நடை முறைகளைப் பின்பற்றி விநியோகிக்கப்பட்டவையா என பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதால் அந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை வெளிப்படுத்தினார். எவ்வாறாயினும் சம்மாந்துறை மற்றும் நொச்சியாகம பகுதிகளில் பயங்கர்வாதிகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைதானவர்களிடமிருந்து மீட்க்கப்பட்ட வெடி பொருட்களில், வெலிசறை முகாம் ஊடாக சட்ட ரீதியாக விநியோகிக்கப்பட்ட வெடிபொருட்கள் இருந்ததாக லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/61055
 21. கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்து தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதமிருந்து தமிழ் மக்களுடைய மனதை வென்றவர் நீங்கள் என முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டினார் . இன்று செவ்வாய்க்கிழமை(23) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்த வேளை மேற்கண்டவாறு கூறினார். இச்சந்திப்பு கல்முனையில் அமைந்துள்ள சுபத்திரா ராமய விகாரை வளாகத்தில் இடம்பெற்றதுடன் சுமார் 1 மணி நேரம் இடம்பெற்றது. இதன் போது கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் சிங்கள மகா வித்தியாலய நிலைமை தற்போது மோசமாக இருப்பதாக கூறியதுடன் கிழக்கில் விதவை பெண்களின் வாழ்வாதாரம் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினைகள் உள்ளிட்டவைகளை ஆழமான விளக்கத்துடன் முன்வைத்தார். இதனை செவிமடுத்த முன்னாள் முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் சங்கரத்ன தேரர் நன்றாகத் தமிழ் பேசக் கூடியவர் என்ற வகையில் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொண்டுள்ளதை வரவேற்பதாகவும் சிங்கள மகா வித்தியாலயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அங்கு சகல விதமான இன மத மொழிசார் பிள்ளைகள் அப்பாடசாலையில் கல்வி கற்கின்ற படியினால் உரிய தரப்பினரிடம் தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். மேலும் அப்பகுதி மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் சகல வளங்களுடன் அப்பிரதேசங்களை அபிவிருத்தி அடைய முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். இவ்விஜயத்தின் போது தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளர் எஸ். சோமசுந்தரம் நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம் சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர் ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன் இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன் மற்றும் ஊடக உதவியாளர் எம். சதீஸ் உள்ளீட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர் https://www.virakesari.lk/article/61061
 22. மானிப்பாயில் இளைஞன் சுட்டுக்கொலை ; கைதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறிலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மானிப்பாய் இணுவில் வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்தனர். எனினும் அவர்கள் தப்பித்த வேளை, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து வாள்களையும் மீட்டிருந்தனர். இந்த நிலையில் மானிப்பாயில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த கும்பலுக்கு பாதை காண்பிப்பதற்கு வந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே இவ்வாறு இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர். யாழ்ப்பாணம், நாவாந்துறை அராலி வீதி வசந்தபுரத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து சூடு இடம்பெற்றதும் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற இளைஞனின் பணப்பையை (பேர்ஸ்) சம்பவ இடத்தில் தவறிய நிலையில் பொலிஸார் மீட்டிருந்தனர். மானிப்பாய் சுதுமலை தெற்கு ஐங்கரன் வீதியைச் சேர்ந்த சிவசுந்தரராஜா சானுசன் (வயது – 18) என்ற இளைஞனே இவ்வாறு தனது பணப்பையைத் தவறவிட்டுச் சென்றார். அவரது அடையாள அட்டையை வைத்து சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்த நிலையில் சந்தேகநபரை மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முற்படுத்தினார். அவரைக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் ஏனைய சந்தேகநபர்கள் நால்வர் தொடர்பிலும் எந்தத் தகவலையும் சானுசன் தெரிவிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னலையில் இன்று மாலை முற்படுத்தினர். மேலும் சந்தேகநபர்களைக் கைது செய்யவேண்டியுள்ளதாகப் பொலிஸார் மன்றுரைத்தனர். வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/61065
 23. இன்னொரு கடல் நகரை உருவாக்க திட்டம் - சம்பிக்க துறைமுக நகர திட்டத்தில் புதிய சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதலீடுகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்துவதுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிதி நகரத்திற்கு 15-20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடுகளை கொண்டுவருவதும் அதன் மூலமாக இலங்கையில் தனி நபர் வருமானத்தை 1000 டொலர்களினால் அதிகரிக்க செய்வதுமே எமது அரசாங்கதின் நோக்கமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார். அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ள நிலத்தில் சர்வதேச பாடசாலை, சர்வதேச தரம் வாய்ந்த வைத்தியசாலை ஆகியவற்றை முதலில் உருவாக்க நாம் தீர்மானம் எடுத்துள்ளோம். இன்று கார் பந்தைய நிலங்களை பூங்காவாக மாற்றி ஏனைய இடங்களில் வர்த்தக மையமாக மாற்றவும் பொதுமக்கள் பயன்பாட்டு மையங்கள் மற்றும் தொடர்மாடி வீடுகளை அமைக்வுள்ளோம். இதில் பொதுப்போக்குவரத்து எவ்வாறு என்ற கேள்வி இருந்தது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதிவேக பாதைகளுடன் தொடர்புபடுத்திய போக்குவரத்து மற்றும் புகையிரத சேவைகள் என்பவற்றை நாம் உருவாக்கவுள்ளோம். இந்த பகுதியை நிதி நகரமாக மாற்றுவதே எமது இலக்காகும். இந்து சமுத்திரத்தில் பிரதான மையமாக மாற்றுவதே எமது இலக்காகும். இதற்கு அப்பால் இன்னொரு கடல் நகரை உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். துறைமுக நகரை முடித்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/61054
 1. Load more activity