All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்! Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை! https://tamil.oneindia.com/news/tamilnadu/no-religion-related-foundings-have-been-found-n-keezhadi-civilization-yet/articlecontent-pf401983-363624.html
 3. Today
 4. உங்களின் அடுத்த கேள்விக்குப் பதில், இந்த விடயத்தை நான் சொன்னது போல இலங்கையில் வைத்தே இந்த நபரின் குடும்பம் செய்யலாம். இல்லையாயினும், ஒரு பிரிதானிய பிரஜை, அல்லது வதிவாளர் வெளிநாட்டில் ரேப் போல கடும் குற்றம் இழைத்தார் என்று பிரிதானிய பொலீசில் முறையிட்டால் நிச்சயம் அதை விசாரிப்பார்கள். ஒரு குற்றம் எங்கே வழக்காடப் படுகிறது என்பது பின்வரும் வழிகளில் தீர்மானிக்கப்படும். 1. எங்கே குற்றம் நிகழ்ந்தது? 2. குற்றத்துக்கான சாட்சியங்கள், சாட்சிகள் எங்கே உளர்? 3. குற்றவாளி எங்கே வசிக்கிறார்? முதலில் இதை பிரிதானிய பொலீஸ் விசாரிக்கும். இந்த நபர், மகளை இண்டர்வியூ செய்வார்கள். முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் CPS ற்கு அனுப்புவார்கள். அவர்கள் இந்த வழக்கை எங்கே விசாரிப்பது பொருத்தம் என தீர்மானிப்பர்கள். அப்போ இலங்கையின் நிலைமையை காட்டி, வழக்கை இங்கேதான் விசாரிக்க வேண்டும் எனக் கோரலாம். மீறி இலங்கை என CPS முடிவு செய்தால். இதை இலங்கை அரச வக்கீலுக்கு அனுப்பி, FCO மூலம் வழக்கை நியாயமாக நடத்த அளுத்தம் கொடுப்பார்கள். அதுவும் நடக்காவிடின், சாட்சிகளை யூகேயிற்கு எடுத்து, இங்கேயே வழக்கை நடத்துவார்கள்.
 5. இந்த பதின்ம வயது சிறுமியான பெண்ணை வன்முறை மூலம் கற்பமாக்கிய ஒரு முதியவருக்கு கட்டாய கலியாணம் செய்து வைக்குமாறு சொல்லும் நீங்களும் அந்த பாதக செயலை செய்தவரை போன்ற பாதக செயலையே செய்கிறீர்கள். உங்கள் அடாத்தான பஞ்சாயத் தீர்ப்பு எந்த விதத்திலும் இரக்கம் இல்லாதது. அந்த பெண்ணை பற்றி உங்களுக்கு கொஞ்சமும் அக்கறை இருப்பதாக தெரியவில்லையே?
 6. மீரா, இந்த பெண்ணுக்கு 19 என்றாலும், இந்த நபர் பின்வரும் வழிகளில் தண்டிக்கப்படலாம். 1. பாலியல் வன்கொடுமை (ரேப்). எத்தனை வயதான பெண்ணாகினும் இசைவு (consent) இல்லாமல் உடலுறவு கொண்டால் அது ரேப்தான். இசைவு தன்விருப்பில் வரவேண்டும். மாறாக மிரட்டியோ (கொல்லுவேன்), அளுத்தத்துக்கு உள்ளாக்கியோ (வேலையால் நீக்குவேன்) அல்லது போதை மயக்க நிலைக்கு உள்ளாக்கியோ பெறப்படும் இசைவு, இசைவாக கருதப்படாது. 2. ஒருவரின் மீது, குறிப்பாக வயதில் இளையவர்கள் மீது, நம்பிக்கைகுரிய, மதிப்புகுரிய தாக்கம் செலுத்தும் நிலையில் உள்ள பெரியவர்கள், அந்த இளயவருடன் உறவு வைத்தால், அந்த இசைவை சட்டம் உன்னிப்பாக பார்க்கும். உதாரணமாக ஒரு 21 வயது பலகலை மாணவி, அவரது பட்டமளிப்பை தீர்மானிக்கும் வலுவுடைய பேராசிரியருடன் உறவு வைத்தால், அதை உடனடியாக தன்விருப்ப உறவு என ஏற்கப்படாது. இலங்கையில் இசைவுக்கான வயது 16. ஆனால் 18 வயதுவரை ஒருவர் சிறார். இந்த பெண் சிறுமி எனும் நிலையில் இருந்து இப்போதுதான் young adult ஆக மாறியுள்ளார். இவரை இப்படி ஆக்கியவர் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் மாமன். இது நிச்சயமாக நம்பிக்கை மீறிய, அளுத்தம் மூலம் பெறப்பட்ட இசைவு. 3. எல்லாவற்றிக்கும் மேலாக, இந்த பெண்ணும், இந்த நபரின் மகளும் வழங்கப் போகும் சாட்சியத்தின் வலு. நினைத்துப் பாருங்கள் - இந்த நபரை அவரின் மகளே இலங்கை கொண்டு சென்று பொலீசில் ஒப்படைக்கிறார். மீடியாவை கூட்டி என் தந்தை இப்படி ஒரு வன்புணர்வாளன் இவரை தப்பவிடக்கூடாது என சொல்கிறார். வழக்கில் சாட்சியும் அளிக்கிறார். இந்த நபருக்கு வக்கீலுக்கு காசு கட்டவே யாரும் இல்லை எனும் நிலை. மேலே நான் சொன்னது போல நடந்தால் இந்த வழக்கில் இந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்தார் என நிறுவுவது இலகுவானது. 4. மேலே நான் சண்டமாருதனுக்கு அளித்த பதிலையும் பாருங்கள். முறைதவறிய உறவு (incest) எனும் வகையில் 15-25 வருடம் கடூழிய சிறைக்கு அனுப்பவும் முடியும். இரெண்டு குற்றபத்திரிகையும் ஒன்றாக தாக்கல் செய்யலாம். 5. இதுவே எனது குடும்பத்தில் நடந்து இருந்தால்? ஒரு வழக்கை ஒருபோதும் இப்படி subjective ஆக அணுக முடியாது. சில நேரம் இந்த நபரை நான் கொல்லவும் கூடும். என்ன செய்வேன் என்பதை நடந்த பிந்தான் கூறமுடியும். ஆனால் ஆத்திரம் கண்ணை மறைக்காமல், பெண்ணின் எதிர்காலத்துக்கு எது நல்லது என சிந்தித்து objective ஆக அணுகினால்- இந்த சிக்கலுக்கான விடை பின்வருமாறு. பெண் 19 வயதில் முறையற்ற கற்பவதி. எப்படியும் பிள்ளை பிறக்கும் போது ஊர் அறியும் (இப்போதே அறிதிராவிடின்). ஆகவே சொந்த ஊருக்கு இதை மறைத்து பயனில்லை. இலங்கையிலும், வெளிநாட்டிலும் வாழும் ஏனையோருக்கு இதை தெரியாவண்ணம், பெண்ணின் பெயரை வெளியிடக் கூடாது என ஒரு கோர்ட் ஓடரை பெற முடியும். டெல்லி வழக்கில் கொலையான “நிர்பயா” அந்த பெண்ணின் உண்மை பெயரா? இல்லை. ஆனால் உலகமே அந்த பெயரைதான் அறிந்தது ( பின்னாநாளில் அவர் குடும்பம் பெயரை வெளியிடும்வரை என நினக்கிரேன்). இவ்வாறு இந்த பெண்ணின் நலனை சகல வழியிலும் பாதுகாத்த படி இந்த நபருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். குறிப்பாக அந்த நபரின் மகள், மருமகன், குடும்பம் மனது வைத்தால். இங்கே பலதடவை எழுதப்பட்டது போல, இந்த நபரின் சொத்துக்களில் இருந்து இந்த பெண்ணுக்கு நட்ட ஈடும், பிறக்கும் குழந்தைக்கு ஜீவனாம்சமும் பெற்றுக் கொடுக்க முடியும். அதன் மூலம் இந்த பெண் தன் வாழ்வை, வேறு பெயரில், இலங்கையின் இன்னொரு பகுதியில் தொடரவும், பின்னாளில் ஒரு தக்க துணையை இனம்கண்டு குடும்ப வாழ்வில் ஈடுபடவும் கூட இது உதவக்கூடும். பி.கு: இந்த கிழவனை ரெண்டு தட்டுத் கட்டியதால் - அந்த பெண்ணிற்கு, அவரின் எதிர்கால வாழ்வுக்கு என்ன நன்மை விழைந்தது?
 7. ஒரு சீனப் பழமொழியுண்டு – அதாவது, மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை. இதே போன்றுதான் நாமே, நமது குப்பைகளை கிளறுவதில் என்ன இருக்கின்றது, என்று நாம் அமைதியாக இருந்தாலும் கூட, சிலரது நடவடிக்கைகள் எல்லை மீறும் போது, அவர்கள் தொடர்பான உண்மைகளை தொடர்ந்தும் பேசாமல் இருக்க முடியவில்லை. தமிழ் மக்களுக்காக, சிலரது மக்கள் விரோத அரசியலை நாம் அம்பலப்படுத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் இன்னும் ஓயவில்லை. எழுக தமிழிற்கு எதிராக, முக்கியமாக பேரவையின் இணைத்தலைவராக இருக்கின்ற முன்னைநாள் வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிரான பிரச்சாரங்கள் இப்போதும் முற்றிலுமாக ஓய்ந்துவிடவில்லை. இவ்வாறான அவதூறுப் பிரச்சாரங்களை முன்னெடுத்தவர்கள் – இப்போதும் முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களாகவே இருக்கின்றனர். இது தொடர்பில் பேரவையின் உறுப்பினர் ஒருவர் பேசுகின்ற போது, இலங்கையிலேயே அதிகம் ஒழுக்கம் குறைந்தவர்கள் இருக்கின்ற ஒரேயொரு கட்சி கஜேந்திரகுமாரின் கட்சியாகத்தான் இருக்கமுடியும் என்றார். ஏனெனில் அந்தளவிற்கு மற்றவர்களை மிகவும் கீழ்த்தரமாக பேசுகின்றவர்களாக அவர்களே, இருக்கின்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி சுகாஸ் என்பவர், எழுக தமிழில் பங்குபற்றிய பொது அமைப்புக்கள், இதற்கு பதிலாக விபச்சாரம் செய்திருக்கலாம் என்று தூற்றியிருப்பதாக அந்த உறுப்பினர் கவலையுடன் தெரிவித்தார். எழுக தமிழ் ஒரு விபச்சாரச் செயற்பாடென்றால் அதில், பங்குகொள்வதற்காக திரண்ட பல்லாயிரக்கணக்கான நமது மக்களையும் விபச்சாரம் செய்பவர்கள் என்றா சைக்கிள் அணியினர் கருதுகின்றனர்? ஒரு விடயத்துடன் அரசியல் ரீதியாக எவரும் முரண்படலாம். அதனை விமர்சிக்கலாம் – அதில் எவ்வித தவறுமில்லை ஆனால் நாம் ஒன்றுடன் உடன்படவில்லை என்பதற்காக, ஒன்றிற்கு எதிராக மிகவும் கீழ்தரமாக நடந்துகொள்வதானது, மிகவும் குரூர அரசியலாகும். இத்தனைக்கும் நன்கு படித்த, அறிவுள்ளவராக கருதப்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி இப்படியாம் என்பது, இன்னும் அசிங்கமாக இருக்கிறது. நாங்கள் இல்லாவிட்டால் எழுக தமிழில்லை என்றவாறு உறுமிக்கொண்டிருந்த கஜேந்திரகுமாரின் திமிரும், இறுமாப்பும் செல்லாக்காசாகிவிட்டது. இதனால் ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்காக எழுக தமிழில் பங்களித்தவர்களை அரசியல் விபச்சாரிகள் என்றும், துரோகிகள் என்றும் கஜனின் ஆட்கள் பிரச்சாரம் செய்துவருகின்றனர். நேற்றுவரை தங்களுக்கு தலைமை தாங்க வருமாறு அழைக்கப்பட்ட, விக்கினேஸ்வரன் தொடர்பில் நாளொரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் கஜன். அவை உண்மையென்றால் அதனை ஏன் ஆரம்பத்திலேயே கூறவில்லை? ஆரம்பத்தையும் விட்டுவிடுவோம், விக்கினேஸ்வரன் தனியான கட்சியை அறிவித்த பின்னரும் கூட, அவரை சைக்கிள் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளில் கஜன் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதற்காக பலரை தூதுவிட்டிருந்தார். ஒரு மாகாண சபைத் தேர்தல் இடம்பெறக் கூடுமென்னும் நிலையிருந்ததை, தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கில், சைக்கிள் சின்னத்தை ஒரு தற்காலிக ஏற்பாடாகக் கொள்ளலாம் என்னும் அடிப்படையிலும் விக்கினேஸ்வரனுடன் பேசிப் பார்த்தார். இதற்காக சில பத்தியாளர்கள் உட்பட, ஆரம்பத்தில் விக்கினேஸ்வரனுக்கு நெருக்கமாக இருந்த பொ.ஜங்கரநேசன் வரையில் பலரையும் தூதனுப்பினார். ஆனாலும் விக்கினேஸ்வரன் சைக்கிள் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதை ஒரு பேச்சுக் கூட பொருட்படுத்தவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் கஜேந்திரகுமார், பேரவையின் பிறிதொரு அங்கத்துவ கட்சியான, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை இலக்கு வைத்து, தொடர்ச்சியாக விமர்சிக்கத் தொடங்கினார். சுரேஸ் ஒரு இந்திய உளவுத்துறையின் ஆள் என்றவாறு விசமத்தனமான பிரச்சாரங்களை முன்னெடுப்பதன் ஊடாக, விக்கினேஸ்வரனுக்கு உளவியல் ரீதியில் நெருக்கடிகளை கொடுக்க முற்பட்டார். கஜேந்திரகுமாரின் கணக்கு இதுதான்- அதாவது, விக்கினேஸ்வரன் வலிந்து, பதவியாசையின் காரணமாக, அரசியலுக்கு வந்த ஒருவரல்ல. மாறாக, பலரது வேண்டுகோளுக்கு ஏற்ப, – தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்த பணிகளை செய்வதற்காக வந்த ஒருவர். அவ்வாறான ஒருவருக்கு தொடர்ச்சியான நெருக்கடிகளை கொடுத்தால் – ஒன்றில் அவர் தனது சைக்கிளின் வழிக்கு வருவார் அல்லது, அரசியலை விட்டுவிட்டு தன்பாட்டில் சென்றுவிடுவார். ஆனால் கஜனின் கணக்கு பலிக்கவில்லை. கஜனின் போலி பிரச்சாரங்கள் எவற்றாலும் விக்கினேஸ்வரனின் அரசியல் உறுதிப்பாட்டை சீர்குலைக்க முடியவில்லை. இந்தப் பின்னணியில்தான் தான் இல்லாத பேரவையின் ஊடாக, விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் இணைந்து ஒரு எழுக தமிழை முன்னெடுப்பதை கஜேந்திரகுமாராலும், அவரது குழுவினராலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. வெறுப்பின் உச்சத்திற்கு சென்றனர். பேரவையின் உள்ளக கலந்துரையாடல்களின் போது விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களை பொது வெளிக்கு கொண்டுவந்து, விக்கினேஸ்வரன் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான ஒருவர் என்று நிறுவ முற்பட்டனர். அண்மையில் கஜேந்திரகுமாரின் ஜ.பி.சி. நேர்காணலொன்று வெளியானது. பேரவையின் அரசியல் தீர்வாலோசனை நகல் தயாரிக்கப்பட்ட போது, அதில் ‘தேசம்’ என்னும் சொல்லை போட வேண்டாமென்று விக்கினேஸ்வரன் குறிப்பிட்டதாக ஒரு பிரதி காண்பிக்கப்பட்டது. இதனை ஏன் இவ்வளவு காலமும் கூறாமல் இப்போது கூறுகின்றார்? உண்மையில் அது உள்ளக கலந்துரையாடலின் போது விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள். அதே போன்று தீர்வாலோசனைக் குழுவில் அங்கம்வகித்த பலரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அவ்வாறு முன்வைக்கப்பட்ட அனைத்து கருத்துக்களினதும் அடிப்படையில்தான் பேரவையின் இறுதி தீர்வு நகல் முடிவானது. அதனைத்தான் கஜேந்திரகுமாரும் ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த தீர்வாலோசனை வெளிவந்த பின்னர்தான் விக்கினேஸ்வரன் ஜயாவே வருக – தலைமை தாங்குக – என்றவாறான பதாகை ஒன்றை, தூக்கிப்பிடித்தவாறு கஜன் வீதிகளில் நின்று கொண்டிருந்தார். ஆனால் அதே கஜேந்திரகுமார்தான் இன்று தனது தாளத்திற்கு விக்கினேஸ்வரன் ஆடவில்லை என்றவுடன், புதிய கதைகளை சொல்லுகின்றார். விக்கினேஸ்வரனுடன் கொள்கை முரண்பாடு இருந்திருந்தால், அதனை அப்போதே முன்வைத்துவிட்டு, கஜேந்திரகுமார் பேரவையிலிருந்து வெளியேறிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அதில் ஒரு நேர்மை இருந்திருக்கும். ஆனால் விக்கினேஸ்வரனது செல்வாக்கை கொண்டு, தனது குடும்பக் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸை புணரமைப்புச் செய்யும் முயற்சி முற்றிலுமாக, தோல்வியடைந்த பின்னணியில்தான், இன்று, என்ன பேசுவதென்று தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார். கஜேந்திரகுமார் இன்று செய்யும் அரசியலை ஒரு வரியில் குறிப்பிடுவதானால், அது ஒரு கீழ்தரமான அரசியல். ஒருவர் பிரத்தியேக கலந்துரையாடல்களுக்காக அனுப்பும் கருத்துக்களை, பொது வெளிக்கு கொண்டு வந்து, அவர்களை தவறானவர்களாக காண்பிக்க முற்படுவதானாது, மிகவும் கேவலமானதொரு அரசியலாகும். அதனைத்தான் இன்று கஜேந்திரகுமார் செய்து கொண்டிருக்கிறார். முன்னரும் விக்கினேஸ்வரனால், பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட கடிதமொன்றை, ஊடகங்களில் கசியவிட்டு, விக்கினேஸ்வரனுக்கு அவதூறு பரப்ப முற்பட்டார். அதன் பின்னர் தற்போது, பேரவையின் உள்ளக கலந்துரையாடல்களின் போது, முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பொதுவெளிக்கு கொண்டு விக்கினேஸ்வரனை தவறான ஒருவராக காண்பிக்க முற்படுகின்றார். இதன் மூலம் கஜேந்திரகுமார் சாதிக்க முற்படுவது என்ன? இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் என்ன? இதற்கெல்லாம் கஜனிடம் இருக்கும் பதில் – தாங்களே கொள்கை வழி செய்லபவர்கள். மற்றவர்கள் கொள்கையிலிருந்து விலகியவர்கள். அது உண்மைதானா? கஜனின் கொள்கை என்ன? கஜனிடம் இருப்பது கொள்கையா – அல்லது கொள்கை என்னும் பெயரில் தனது குடும்பக் கட்சியை பலப்படுத்தும் நரித்தந்திரமா? 2010இல், கூட்டமைப்பிலிருந்து வெளியேறி கஜன், தனது பாட்டன்வழி அகில இலங்கை தமிழ் காங்கிரஸை தனியானதொரு மாற்றுக் கட்சியாக கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் அதில் இன்றுவரை வெற்றிபெற முடியவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் விக்கினேஸ்வரனுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கொள்கைகளை தீர்மானிக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அது நாளடைவில் ஒரு பிளவாக உருமாறியது. அந்த பிளவை பயன்படுத்தி, விக்கினேஸ்வரனுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார் கஜன். தான் என்னதான் முயன்றாலும் பொன்னம்பலம் பரம்பரையின் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற முடியாதென்று கருதிய கஜன், ஜனவசியமுள்ள விக்கினேஸ்வரனை தன்பக்கமாக சாய்த்துக் கொண்டால், காங்கிரஸை மீளவும் இலகுவாக கட்டியெழுப்பலாம் என்று கணக்குப் போட்டார். ஏனெனில் 2010இல் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய போது, தாங்களே புலிகளின் தொடர்ச்சி என்றவாறே மக்கள் மத்தியில் காண்பித்துக் கொண்டனர். ஆனாலும் மக்கள் அதனை ஒரு போதுமே ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டமைப்புடன் முரண்பட்டிருந்த புலம்பெயர் அமைப்புக்களும் கஜனுக்கு பணத்தை வாரிவழங்கின ஆனால் அனைத்துமே இறுதியில் விழலுக்கிறைத்த நீரானது. கஜேந்திரகுமாரை பொறுத்தவரையில், மாற்று என்பது தனது பாட்டனாரின் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒன்றுதான். அதாவது வீட்டுக்கு மாற்று சைக்கிள்தான். இந்த திட்டத்திற்கு விக்கினேஸ்வரனை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனதன் விளைவுதான், கஜேந்திரகுமாரின் இன்றைய அனைத்து புலம்பல்களுமாகும். ஆனால் இதன் மூலம் கஜேந்திரகுமார் உண்மையில் எதை செய்து கொண்டிருக்கிறார்? இதுதான் மக்கள் சிந்திக்க வேண்டிய இடம். தனது குடும்ப கட்சியை பாதுகாத்து, தனது பாட்டனார் வழியான வரலாற்று கறையை கழுவிக் கொள்வதற்காக, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வலுவான மாற்று தலைமை ஒன்று உருவாகுவதை திட்டமிட்டு தடுத்து வரும் ஒருவர்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அதற்காக அவர் கைக் கொண்டிருக்கும் மந்திர வார்த்தைதான் கொள்கை. ஆனால் அவரது உண்மையான கொள்கை, செல்வாக்கிழந்து வரலாற்றிலிருந்து அழிந்துபோன, தங்களது குடும்ப கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸை எப்படியாவது மீளவும் தூக்கிநிறுத்துவது ஒன்றுதான் கஜனின் இலக்கு. அந்த இலக்கிற்கு எவர் தடையாக வந்தாலும் அவர்கள் அனைவரும் கஜனின் பார்வையில் கொள்கையற்றவர்களாவர். இது அடிப்படையிலேயே ஒரு மக்கள் விரோத அரசியலாகும். – கரிகாலன் http://thamilkural.net/?p=2852
 8. கெடுத்துவருக்கு மகன் இருந்தால் கட்டி வைச்சுக்குங்க. அல்லது கெடுத்தவரையே கட்டிக்கச் சொல்ல வேண்டியான். வெறும் ஜீவனாம்சத்தோடு விசயத்தை முடிக்கப் பார்க்கிறேளே. இதுக்காகவா.. ரிக்கெட் எடுத்து அடிக்கடி.. ஊருக்குப் போய் வருகிறார்கள். எல்லாம் பயம் காய்ச்சல் விட்ட குணம்.
 9. “அந்தச் சமூகத்தில் உள்ள அத்தனை பாதிப்புக்களையும் அவரே சுமக்க வேண்டும் என்று சொல்வது அபந்தமானது. “ என்று எழுதி இருக்கிறீர்கள். நான் அப்படி எதுவும் எழுதவில்லையே? நான் எழுதியது இந்த பெண்ணை கலியாணம் செய்வதற்கும் குழந்தைக்கு தந்தையாவதற்கும் பொருத்தமான ஒருவர் யார் என்பது பற்றியதே. பையன்26 பொருத்தமற்றவர் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? வேறு யார் இந்த பெண்ணை கலியாணம் செய்து குழந்தையையும் ஏற்று கொள்ள பொருத்தமானவர்?
 10. உங்கள் கருத்தின் முதற் பந்தி இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கருத்துக்களில் ஒன்றாக இருக்கிறது. உல்லாசப் பயணம் என்ற போர்வையில் சொறீலங்காவுக்கு சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுவிட்டு வருபவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டுக்களை வழக்குகளை பதிவு செய்வதன் வாயிலாக.. இவர்களை சர்வதேசப் பொலிஸின் உதவியோடு கைது செய்து வாழும் நாட்டில்.. விசாரணைக்கு உட்படுத்த முடியும். அல்லது நாடுகடத்தல் உடன்படிக்கைகள் இருப்பின்.. நாடு கடத்தி விசாரிக்க முடியும். இந்தச் சம்பவம்.. எம்மவர்களின் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பிக்கும் மனநிலையை வளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வர உதவின் அது தாயகத்தில் போரினால் அனாதரவாக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர் சிறுமிகளின் வாழ்வை சீரழிப்புவாதிகளிடம் இருந்து பாதுகாக்கும். உங்களின் இரண்டாம் பந்தி.. பஞ்சாயத்து தீர்ப்பு அடாத்தானது. ஒருவர் சமூகச் சீரழிவுக்காக குரல்கொடுக்கிறார் என்றால்.. அந்தச் சமூகத்தில் உள்ள அத்தனை பாதிப்புக்களையும் அவரே சுமக்க வேண்டும் என்று சொல்வது அபந்தமானது. அது சிலுவை சுமந்த ஜேசுவுக்கே பொருந்தாது. ஜேசு சிலுவை சுமந்தார் என்பதற்கா.. முட்கிரீடம் அணிந்தார் என்பதற்காக.. நீங்கள் எல்லாம் அவற்றைச் செய்யத் தயாரா..??! அடுத்தவர்களுக்கு.. விசமத்தனத்தை போதிக்காமல்.. உருப்படியாக முதல் எழுதிய பந்தியோடு முடிச்சிருக்கலாம். அடிப்படையில்.. பையன்26 இன் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்று தான். தாயகத்தில் பெண்களுக்கு சரியான பாதுகாப்பில்லை. சரியான சட்ட அமுலாக்கமில்லை. இந்தச் சூழலை புலம்பெயர் கிரிமினல்கள் தமக்குச் சாதமாக்கிக் கொண்டு.. சொந்த இனத்தை இன்னும் இன்னும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர். இதனை இப்படியே தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கூடாது. எனவே தாயகத்திற்கு சென்று குற்றம் இழைத்துவிட்டு வெளிநாட்டில் பதுங்க நினைக்கும் குற்றவாளிகள் அனைவருக்கும்.. ஒரு பொதுமுடிவை..நடைமுறைச் சட்டங்கள் வாயிலாக அமுல்படுத்துவதும்.. இவர்களால் பாதிப்புக்குள்ளாகும் தாயக மக்களின் மீட்சிக்கு... மறுவாழ்வுக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவுவதே.. இத்தலைப்பின் நோக்கம். எந்த சமூக அக்கறை உள்ள மனிதனும்.. பையன்26 போல் அந்தச் சூழலில் இருந்திருந்தால்.. மூஞ்சியில் தான் அந்தக் குற்றவாளியை குத்தி இருப்பான். இல்ல.. இப்படிச் செய்யனும்..
 11. கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ? ** 1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும். 2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன. 3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம். கடைச்சங்கத்தின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கே பலர் பல்வேறு குறுக்கு வழக்குகளோடு வருவர். சான்றெங்கே, ஆதாரம் எங்கே என்று நிற்பர். இப்போது கிமு ஆறாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் தெளிந்த சான்றுகளாகிவிட்டன. 5. ஆதன், சாத்தன் ஆகிய பெயர்கள் நம் இலக்கண உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன. ஆதனின் தந்தை ஆந்தை எனப்படுவார். சாத்தனின் தந்தை சாத்தந்தை எனப்படுவார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தையே பிசிர் ஆந்தையார் எனப்பட்டார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் யாராயினும் ஆதன் என்ற பெயர் வைக்கும் பழக்கம் தொல் தமிழரிடையே பரந்திருந்தது என்பது வெள்ளிடைமலை. ஆதன் என்பதற்கு உயிர் என்று பொருள். உயிரன். 6. ஒடிய மாநிலம் புவனேசுவரம் உதயகிரிக் குகைகளின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ள காரவேலனின் கல்வெட்டு பதின்மூன்று நூற்றாண்டுகளாய் நிலவிய சேர சோழ பாண்டியர்களின் கூட்டாட்சி வலிமையைக் கூறுகிறது. “தமிர தேக சங்காத்தம்” என்பது அக்கல்வெட்டினில் உள்ள தொடர். ஒடிய மன்னன் காரவேலன் அசோகருக்குப் பிறகு அப்பகுதியினை ஆண்டவன். கிமு இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். “அக்கல்வெட்டினில் இருப்பது பதின்மூன்று நூற்றாண்டுகள் இல்லை, வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கவேண்டும்” என்ற வழக்கும் ஓடியது. கீழடியில் பெருந்தமிழர் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கும் நிலைமையைக் காண்கையில் காரவேலன் கல்வெட்டு கூறுவது பதின்மூன்று நூற்றாண்டுகளாகவே இருக்க வேண்டும். 7. வைகை ஆறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பேராறாக நிறைந்து ஓடியிருக்க வேண்டும். அதன் கரைவெளி எங்கும் பாண்டியப் பேரரசில் பெருவாழ்வு வாழ்ந்த குடிகளின் தடயங்களைக் கண்டெடுத்திருக்கிறோம். 8. எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமுறை நிலவியிருக்க வேண்டும். மொழித்தோற்றத்தின் இளமைக் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும். அனைத்தையும் கொண்டு கூட்டிப் பார்க்கையில் தமிழ் மொழியின் தொன்மையைப் பகரும் சான்றுகள் பல பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியவை என்பது தெளிவாக நம் கண்ணுக்கே தெரிகிறது. 9. கீழடியில் தங்க அணிகள் கிடைத்திருக்கின்றன. தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட மணிகள் கிடைத்திருக்கின்றன. மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்தல் என்னும் தொழில்நுட்பம் சிறப்படைந்திருக்கிறது. இருப்புப் பொருள்களும் பல்வேறு மாழைப் பொருள்களும் (உலோகம்) பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. தனிப்பான்மையான குடிவாழ்வின் தன்னிகரற்ற வரலாற்று வளர்ச்சி நிலைகள் இவை. 10. இன்றைய நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றினைப் பார்ப்பது தவறு. மதங்கள், சாதிகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் என இன்று நாம் பற்றிப் பழகியிருக்கும் சிறுகண்களைக்கொண்டு பழைமையில் தேடுவது நன்றன்று. ஒற்றை நிலையில் ஒரு நிலத்தின் வரலாறும் அமையாது. காலப்போக்கில் அது பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நம் வரலாறெங்கும் அவ்வாறே நிகழ்ந்தது. எது எப்படியாயினும் அன்றைக்கும் இன்றைக்கும் இக்குடிவாழ்வின் பற்றுதலாக இருப்பது ஒன்றேயொன்று. அதுதான் முன்னைப் பழையதும் பின்னைப் புதியதுமான தமிழ்மொழி ! - கவிஞர் மகுடேசுவரன் மூலம் முக நூல் #######################₹₹₹######₹₹ கீழடி: சிறு வயது முதல் தமிழ் தமிழ் என வெறியாக சுற்றும் பலரை பார்த்திருக்கிறேன். ஏன் இவ்ளோ உணர்வெழுச்சி இவர்களிடமென வியந்திருக்கிறேன். தமிழ் தமிழ் என எதாவது செய்யுள் மேற்கோள் காட்டுவார்கள்.அதைக் குறித்து பெருமை பேசுவார்கள். பின்னர் காரணமே இல்லாமல் யாரையாவது திட்டுவார்கள், குழம்புவார்கள், இன்னும் கலங்கி ஆற்றாமையால் பொருமுவார்கள், கோபப்படுவார்கள். அதையும் இதையும் சம்பந்தப்படுத்தி தமிழ் தமிழ் என்பார்கள். ஏன் இவ்வளவு மெலோ டிராமா இவர்களிடம் என யோசிப்பது உண்டு. இந்த மெலோ டிராமாவில் நாம் எக்காரணம் கொண்டு சிக்கிவிடக் கூடாது என்பது எனது தீர்க்கமான முடிவுகளில் ஒன்று. ஆதி தமிழ்ச் சமூகம் , குடியும் கொண்டாட்டமாகவும், சிரிப்பும் ஓலமுமாகவும் வாழ்ந்த ஒரு பழங்குடிக் கூட்டம் ( tribal group ) என்றே நம்பியிருந்தேன். இந்த tribal spirit ல் எனக்கு அதீத பெருமையும், பிடித்தமும் உண்டு என்பதால் அப்படியே நானும் எனக்குள் ஒரு முடிவு எழுதி வைத்திருந்தேன். 'பெரிய civilizationலாம் இருந்திருக்காது, சும்மா ஆங்காங்கே குடியிருந்து வாழ்ந்திருப்பாங்க. மண்ணுக்கும், பொன்னுக்கும், பெண்ணுக்கும் சண்டை போட்டுக் கொண்டு, கள்ளுக்கும் கறிக்கும் வெட்டிக் கொண்டு, கோழிக்கு கூடி ஆட்டுக்கு சண்டையிட்ட கூட்டம்யா நாங்க' என்கிற பெருமையே எப்பொழுதும் என்னிடம் இருந்தது. இந்த கூட்டத்தில் இருந்து தப்பினவன் கொஞ்ச பேர் எழுதி வச்சதில் மிச்சம் தான் சங்க இலக்கியங்கள் என்பதே என் புரிதலாக இருந்தது. இதை மாற்றியது கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள். முதல் பத்தியில் நான் சொன்ன மெலோ டிராமாவின் காரணம் கூட 'எங்களால், எங்களைப் பற்றி, இந்த உலகுக்கு, இந்த உலகம் புரிந்து கொள்ளும் முறையில் சொல்ல முடியவில்லையே' என்கிற தொடர் தோல்வியின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. தான் வாசிக்கும் இலக்கிய செழுமைக்கு ஆதாரம் தெரியாமல் புலம்புவது தமிழர்களின் குணமாகக் கூட ஆகிவிட்டதெனலாம். இலக்கியத்தில் மட்டுமே இருக்கும் பெருமையும், வரலாற்றை எப்படியாவது இந்த உலகுக்கு அறிவித்துவிட வேண்டும் என்கிற முயற்சியை துரிதமாக செய்ய நினைத்ததுதான் விடுதலைப்புலிகள் எனக் கூட தோன்றுகிறது. இன்னும் சாதி, குலம், குடி போன்ற பெருமை பீற்றல்கள் கூட தன் வரலாற்றிலிருந்து அறுந்து போன கூட்டத்தின் கதறல்களின் வடிவமே. உலகத்திடம் சொல்வதற்கென ஒரு மொழி வடிவம் இருக்கிறது. அதற்கென வடிவம் இருக்கிறது... அதன் பெயர் “அறிவியல் பூர்வமான தரவுகள்" - ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை எப்படி, எந்த வடிவில் சொல்லப்படுகிறதோ அந்த வடிவு தான் அது. தமிழக தொல்லியல் துறை "keeladi- An Urban Settlement of Sangam Age On The Banks Of River Vaigai" என்கிற புத்தகத்தை, அதே தரவுகளை முன் வைத்து எழுதி, மிக அருமையாக கொண்டு வந்துள்ளனர். இதில் எதை குறிப்பிட வேண்டுமோ அதை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் பன்றி , மான் போன்ற விலங்கினங்களின் எலும்புகளில் இருந்த கத்தி வெட்டுத் தடங்கள் - இவைகளை வெட்டி சமைத்திருக்கலாம் என சொல்லிருப்பதெல்லாம் பாராட்டப்பட வேண்டியவை. பிராமி என்கிற எழுத்து வடிவை குறிக்கும் பொழுது கூட தமிழி என சொல்லிருக்கிறார்கள். வழிப்பாட்டுத் தடயங்கள் கிடைக்கவில்லை என சொல்லிருக்கிறார்கள் - என்னை பொருத்தவரை வழிபாடு இல்லாது ஹோமோசேப்பியன் சமூகம் என்கிறதை உருவாக்கிவிட முடியவே முடியாது. These are all putting historical records straight . நல்லவேளை தென்னிந்தியா, திராவிடம்ன்னு போட்டு குழப்பாது தமிழ் என்றே குறிப்பிட்டுள்ளனர். முதல் வரியே “ உலக அரங்கில் தமிழர்களின் தொண்மையை உறுதிப்படுத்த.....:” என்றுதான் ஆரம்பிக்கிறது. உதயசங்கர் ஐ.ஏ.எஸ் க்கு உண்மையிலே பாராட்டுக்கள். நான் எஸ்தோனிய நாட்டு வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன். 1000 வருடங்கள் அடிமைத்தனம் முடிந்து முதல் தலைமுறை பட்டதாரிகள் செய்த முதல் காரியம் - தங்களுக்கான வரலாற்றை தாங்களே எழுதியதுதான்.. அதன் பின் நடந்தெல்லாம் அதிசயமும் ஆச்சரியமுமான the most digitalized modern country called Estonia . உதயசங்கர் அப்படியான ஒரு அறிக்கையை அறிஞர்கள் குழுவோடு செய்திருக்கிறார். கண்டிப்பாக தேம்பலும், எரிச்சலும், கோபமுமாய் குழப்பமுமாய் திரியும் தமிழ் சமூகத்திற்கு கீழடி விஷயம் ஆறுதல் அளிக்கும். இதுவே முடிவும் அல்ல... உலகின் மூத்த குடி எங்கள் குடி, உலகத்தின் மாண்பிற்கு அறிவை கொடுத்த மொழி எம் மொழி என்பதை இந்த உலகமே சொல்லி கேட்கும் வரை ஓயாது இந்த முணுமுணுப்பு, என்றாலும், கீழடியின் நகர நாகரீக பண்பாட்டுப் புரிதலும், அதை உலகத்தினர் ஏற்றுக் கொள்வதும், இந்த “ தமிழ் “ முணுமுணுப்பு குறைந்து, அதன் உள்ளார்ந்த பெருமைமிகு சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் இன்னும் செறிவோடும், ஆளுமையோடும், தீர்க்கத்தோடும் செயல்படும் வருங்காலத் தமிழ் சமூகத்தை கட்டமைக்க வழிவகுக்கும் என நம்புகிறேன். கீழடி ஒரு அற்புதம் . இதை நாம் ஆரிய எதிர்ப்புக்கும், திராவிட எதிர்ப்புக்கும் பயன்படுத்த போகிறோமா அல்லது நம்மை ஒருங்கிணைக்கவும் இன்னும் மெருகூட்டவும் பயன்படுத்த போகிறோமா என்பது நம் கைகளில்தான் இருக்கிறது. ஏனெனில் வரலாற்றை வைத்து நாம் என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம். மதமோ, மொழியோ, குழுவோ, இனமோ, வரலாறோ... அதை வைத்து என்ன செய்தீர்கள் என்று தான் இந்த உலகம் கேட்கும். அதை வைத்து பெருமை பட்டோம், சண்டை போட்டோம் என்றால் காரி துப்பும்... மிரிநோ நிர்மல்
 12. அன்பின் பையா , உங்களின் மற்றைய பதிவுகளை வாசிக்க முன் சிலவற்றை அறிய விரும்புகிறேன். 1. இந்த நபர் அந்த பிள்ளையுடன் பாலியல் உறவில் ஈடுப்பட போது அந்த பிள்ளை 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தாரா? 2. குற்றம் இழைத்தவராக கருதப்படும் நபர் பிரிட்டிஷ் நிரந்தர பதிவுடையவரா அல்லது பிரஜாவுரிமை பெற்றவரா? 3. பாதிக்கப்பட பிள்ளையின் உடல் உள நலனை இப்பொது யாரின் பொறுப்பில் உள்ளது? உங்கள் பதில்காலை வைத்து என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று பார்க்கலாம். பிரிட்டிஷ் நபர்கள் வெளிநாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பர்க் ஒரு அரச விசாரணையே 2018இல் இடம்பெற்றது. இந்த விவகாரம் பலரின் கவனத்துக்கு கொண்டுவரக்கூடியது. உங்கள் மனத்தாங்கல், கோபம் எனக்கு மிகவும் புரிகிறது. ஆனால் தயவு செய்து நீங்கள் உங்களை சட்ட பிரச்சனைக்குள் மாட்டிவிடாதீர்கள் பையா இனொரு விஷயம், இலங்கையில் மரபணு பரிசோதனை இப்போ வசதிகள் உண்டு.
 13. அரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம் ஜனா­தி­பதி ட்ரம்ப் சீனா­வுடன் வர்த்­த­கப்­போரை உரு­வாக்­கினார். ஆனால் நிஜ­மான நீண்­ட­கா­லத்தில் தீமை பயக்கும் போர்­களை ஏற்­ப­டுத்­து­வதில் தயங்­கி­ய­வ­ராக காணப்­ப­டு­கிறார். அமெ­ரிக்க முன்னாள் பாது­காப்பு உதவி அமைச்சர் நில­வரம் பற்றி ஊட­கங்­க­ளுக்கு பேட்­டி­ய­ளிக்­கையில் அமெ­ரிக்கா, யேமனில் நடை­பெறும் உள்­நாட்டு யுத்­தத்­தி­லி­ருந்து வெளி­யேற வேண்டும் என்றார். ஜனா­தி­பதி ட்ரம்ப் உரத்­துப்­பே­சுவார் வார்த்தை ஜாலங்­களை அள்ளி வீசுவார். ஆனால் யுத்­தங்­களை ஆரம்­பிக்க தயங்­குவார். கூறி­ய­வற்றை நிறை­வேற்­ற­மாட்டார் எனவும் அவர் கூறினார். அமெ­ரிக்­காவில் 2020 இல் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட விரும்பும் ஜன­நா­யகக் கட்சி செனட்டர் சாண்டால் ஈரா­னுடன் மோது­தலை தவிர்க்க வேண்டும் என்றார். ஜனா­தி­பதி யுத்­தத்தை பிர­க­ட­னப்­ப­டுத்த முடி­யாது. அமெ­ரிக்க பாரா­ளு­மன்­ற­மான காங்­கிரஸ் மட்­டுமே யுத்தப் பிர­க­டனம் செய்யும் அதி­கா­ர­மு­டைய நிறு­வ­ன­மாகும் எனக் கூறினார். சர்­வா­தி­கார சவூதி அர­சாங்­கத்தின் கொடு­மை­க­ளுக்கு அமெ­ரிக்கா துணை போகக்­கூ­டாது என்றும் மத்­திய கிழக்கில் இன்­னு­மொரு யுத்­தத்தை ஆரம்­பிக்­கக்­கூ­டாது எனவும் தெரி­வித்தார். ஈரான், அமெ­ரிக்கா தக­ராறு மத்­திய கிழக்கில் இன்­னு­மொரு யுத்­தத்தை தோற்­று­விக்­குமா என்­பது உலகம் பூராவும் பல ஊட­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. https://www.virakesari.lk/article/65280
 14. Published by T. Saranya on 2019-09-21 15:30:41 தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் எவ்­வித முடிவை எடுக்க வேண்­டு­மென்று வட­, கி­ழக்கு தமிழ்மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்­களோ அந்த எதிர்­பார்ப்­பையும் விருப்­பத்­தையும் நிறை­வேற்றும் பாணியில் நடந்­து­கொள்ள இரா.சம்­பந்தன் முற்­ப­டு­கிறார் என்­பது அண்­மைய சந்­திப்­பு­களில் அவர் தெரி­வித்த கருத்­து­க்க­ளி­லி­ருந்து அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாகவுள்­ளது. கடந்த காலத்தில் நடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லாக இருக்­கலாம் அல்­லது பொதுத் தேர்­த­லாக இருக்­கலாம், மாற்று தேர்­தல்­க­ளாக இருக்­கலாம், தீர்க்க தரி­ச­ன­மாக, நடந்து கொள்­ளா­மையின் கார­ண­மா­கவே பல இழப்­பு­க­ளையும் தோல்­வி­க­ளையும் எல்­லா­வற்­றுக்கு மேலாக ஏமாற்­றங்­க­ளையும் தமிழ் மக்கள் சந்­திக்க வேண்­டி­யி­ருந்­தது. அதே தவறை மீண்டும் விடும் நிலை­யொன்றை கூட்­ட­மைப்பு தலை­வர் விடுவாராயின், இனி எக்­கா­லத்­தி­லுமே விமோ­ச­ன­மற்ற நிலையே தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­படும் என்று பயந்து கொண்­டி-­ருந்த நிலையில் சம்­பந்­தரின் தீர்க்­க­மான கருத்­து­க்களும் முடி­வு­களும் ஆறுதல் அளிக்­கின்றன என பொது­வா­கவே தெரி­விக்­கப்­படுகிறது. இவ்­வார ஆரம்­பத்தில் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவின் ஆத­ரவு அணிக்கும் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்சுவார்த்­தை­யின்­போது இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையே கருத்­துப்­ப­ரி­மாற்றம் இடம்­பெற்ற வேளை, தலைவர் இரா.சம்­பந்தன் அவர்கள் மிக காட்­ட­மான கருத்­து­க்களை முன்­வைத்­தி­ருந்தார். ”வர­லாற்றில் ஒரு சந்­தர்ப்­பத்தில் கூட, இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்­பாக பேசாத சஜித் பிரே­ம­தா­ஸவை நாம் எப்­படி ஆத­ரிக்க முடியும். எமது மக்­களை நாம் தொடர்ந்து ஏமாற்ற முடி­யாது. இனப் பிரச்­சி­னைக்­கான வர­லாற்று அறிவு, புரிதல் உணர்­திறன் அல்­லது குறிப்­பிட்ட அக்­க­றை­யில்­லா­த­வ­ரா­கவே இருந்­துள்ளார். அவரை நம்பும் அள­வுக்கு எவ்­வகை வாக்­கு­று­தி­களை அவர் எமக்குத் தர­மு­டியும். காலா­கா­ல­மாக தேர்தல் காலத்தில் இது போன்ற வாக்­கு­று­திகள் அளிக்­கப்­பட்­ட­போதும் அவை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. சஜித் அர­சி­யலில் ஒரு சின்­னக்­கு­ழந்தை. அர­சி­யலில் அதி­கா­ரப்­ப­கிர்வு தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வின் அர்த்­தத்தைப் புரி­யாத ஒரு நபர் ”என சம்­பந்தன் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் தலை­மையில் சந்­திக்க வந்த ஆத­ரவு அணி­யி­ன­ரிடம் கடும்­போக்கில் கதைத்­த­தாகத் தெரி­விக்கப்படு­கி­றது. சம்­பந்­தரின் க­டும்­போக்கு நிலை தொடர்பில் வட­கி­ழக்கு மக்கள் அதிக ஆத்ம திருப்­தி அடைந்­துள்­ளார்கள் என்­ப­தற்கு அப்பால் இவ்­வா­றா­ன­தொரு கடும்­போக்கு நிலைப்­பாட்டை எடுக்க வேண்­டிய தேவைக்கு தள்­ளப்­பட்­ட­மைக்­கான கார­ணங்கள் பல­வெ­னவே சுட்­டிக்­காட்­டப்­ப­டலாம். அதில் இரு அனு­ப­வங்­களும் ஏமாற்­றங்­களும் முக்­கி­ய­மா­னவை. 2009 ஆம் ஆண்டு யுத்த முடி­வுக்குப் பிறகு இரு ஜனா­தி­பதி தேர்தல், பொதுத்­தேர்தல் இரண்டை கூட்­ட­மைப்பு எதிர்­கொண்­டுள்­ளது. இத்­தேர்தல் ஒவ்­வொன்றின் மூலமும் எதிர்பார்க்­கப்­பட்ட அபி­லா­ஷை­களும் அடை­வு­களும் அடை­யப்­ப­ட­வில்­லலை, ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கி­றோ­மென்ற உண்­மை­யி­லி­ருந்து மீள முடி­யாத நிலை தமிழ்மக்­க­ளுக்கும் தலை­மைக்கும் தீராத வடு­வா­கி­யுள்­ளது என்­ப­தே­யாகும். 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் களம் இறக்­கப்­பட்ட பொது வேட்­பாளர் தொடர்பில் தமிழ்மக்­களும் அவர் தம் தலை­மை­களும் கொண்­டி­ருந்த அதிஉச்ச நம்­பிக்கை அதே­போன்று வர­லாற்றில் முதல் தடவையாக இரு தேசியக் கட்­சிகள் கைகோர்த்து அமைக்­கப்­பட்ட தேசிய அர­சாங்­கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கொண்­டி­ருந்த அசைக்க முடி­யாத நம்­பிக்கை அனைத்­துக்கும் மேலாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்க ஆகியோர் மீது கொண்ட விசு­வாசம் எல்­லாமே பொரிமாத் தோண்­டியின் கதை­யாகிப் போன நிலை­யி­லேயே புதிய தேர்தலுக்கு முகங் ­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. இரண்டாம் காரணம் தமிழ்மக்கள் குறிப்­பாக வட­கி­ழக்கு மக்கள் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது கூட்­ட­மைப்­பினர் முடிவு எடுக்கும் முன்பே அவர்கள் ஒரு முடி­வுக்கு வந்து விட்­டார்கள். அவர்­களின் முடி­வுக்கு மாறாக இன்­னொ­ரு­வித முடிவை எடுக்கும் வல்­லமை நிலையில் அக்­கா­லத்தில் கூட்­ட­மைப்பு இல்­லாத கார­ணத்தினாலேயே மக்கள் எடுத்த முடி­வுக்கு அமைய தாமும் சாய­வேண்­டு­மென்ற தீர்­மா­னத்­திற்கு அமை­யவே தபால் மூல வாக்கு அளிக்­கப்­பட்ட பின்பே கூட்­ட­மைப்பு தனது முடிவைப் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்­தது. அத்­த­கை­ய­தொரு மாய சூழ்­நி­லையைப் போல இன்­றைய சூழ்­நிலை காணப்­பட்­டாலும் மக்கள் மனதில் ஊறிகிடக்கும் விட­ய­மாக இன்று காணப்­ப­டு­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலை இறுதி வாய்ப்­பாக நினைத்­துக்­கொண்டு பேரம் பேசும் ஆதிக்க அர­சி­யலை செய்ய எத்­த­னிக்க வேண்டும். அதி­லி­ருந்து வழுக்கி விழுந்து விடக்­கூ­டாது. எத்­த­கைய கட்­சி­யாக இருக்­கலாம் எந்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக இருக்­கலாம் அவ­ரி­ட­மி­ருந்து ஆணித்­த­ர­மான உத்­த­ர­வா­தத்தைப் பெற்ற பின்பே அவ­ருக்கு ஆத­ரவு அளிக்கும் தீர்­மா­னத்­திற்கு வர­வேண்டும். முடிவு எடுக்க வேண்டும். அதி­காரப் பகிர்வு அர­சியல் தீர்வு என்ற தத்­து­வத்­துக்குள் அடக்­கப்­பட வேண்­டிய அனைத்து விட­யங்­களும் உள்­ள­டங்­கிய தீர்வை குறை­யின்றி பய­மின்­றித்­தர உத்­த­ர­வாதம் அளிக்கும் நப­ருக்கே இம்­முறை கூட்­ட­மைப்பு தனது ஆத­ரவை நல்க முன்­வர வேண்டும். பக­லொன்று பேசி இர­வொன்று கூறும் போலித்­த­ன­மான தலை­மை­க­ளுக்கு ஆத­ரவு அளிக்க முன்­வ­ரக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டில் தமிழ் மக்கள் இம்­முறை உறு­தி­யாக நிற்­கின்­றார்கள் என்ற உண்­மையை யதார்த்­த­பூர்­வ­மாக கூட்­ட­மைப்பு தரப்­பினர் உணர்ந்து கொண்­டதன் கார­ண­மா­கவே இன்­றைய கடும்­போக்கு நிலையைக் கடைப்­பி­டிக்க முற் ­ப­டு­கி­றார்கள் என்­பது தமிழ்மக்­களின் அபிப்­பி­ரா­ய­மாக இருக்­கி­றது. இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யாக இருக்­கலாம் அன்றில் 2002 ஆம் ஆண்­டுக்குப் பின்­னுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக இருக்­கலாம் நிபந்­த­னை­யுடன் கூடிய அல்­லது பேரம் பேசும் ஆதிக்­கத்­துடன் எந்­த­வொரு தேர்­த­லையும் எதிர்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. 1957 இல் செய்­யப்­பட்ட பண்டா –செல்வா உடன்­ப­டிக்கை, 1965 மேற்­கொள்­ளப்­பட்ட டட்லி – செல்வா ஒப்­பந்தம் ஆகிய இரண்டும் பேரம் பேசும் தன்­மை­யி­னாலோ அல்­லது பாரா­ளு­மன்ற பலத்தின் பேரிலோ செய்து கொள்­ளப்­பட்­ட­வை­யல்ல. அதே­வேளை ரணில் –பிரபா உடன்­ப­டிக்கை, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க கால தீர்­வுப்­பொதி என்­பன ஆயுத சம­ப­லத்தால் தீர்­மா­னிக்­கப்­பட்­டவை. இவ்­வகை அர­சியல் ஓட்­டத்தில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் நிபந்­த­னை­யுடன் கூடிய முன் வைப்­புகள் கூட்­ட­மைப்பின் புதிய போக்கை அல்­லது சம்­பந்­தனின் நீண்­ட­கால பட்­ட­றிவை புட­மிட்டுக் காட்­டு­வ­தாக அமை­கி­றது. ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­க­ முயற்சிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலை­வ­ரான சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஆத­ரவு கோரும் வகையில் அவரின் ஆத­ர­வ­ணி­யினர் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளனர். அந்த வகையில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன், ஜாதிக ஹெல உறு­மய­ தலைவர் சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோ­ருடன் சஜித் ஆத­ரவு அணி பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போது அந்தக் கட்சித் தலை­வர்கள் தமது நிபந்­த­னை­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் கவ­ன­மாக முன்­வைத்­துள்­ளனர். அந்த வகையில் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணி­யினர் மலை­யக மக்­களின் நாளாந்த பிரச்­சி­னைகள், தொழி­லா­ளர்­களின் சம்­பள விவ­காரம், அவர் தம் வாழ்­வா­தா­ரங்­க­ளுக்கு முடிவு காணப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன் வைத்­துள்­ளனர். முஸ்லிம் சமூ­கத்தின் மீதான தற்­கால அடக்­கு­மு­றைகள், பாது­காப்பு குறித்து முன்­னெ­டுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் போன்ற நியா­ய­மான நிபந்­த­னை­களை முஸ்லிம் தரப்­பினர் முன்­வைத்­துள்­ளனர். இந்த தரப்­பி­னரின் கோரிக்­கையை கால­தா­ம­த­மின்றி தீர்த்து வைப்­ப­தா­கவும் உடன்­பாடு ஏற்­பட்­ட­தற்கு அமைய சஜித்­துக்கு ஆத­ரவு தரு­வ­தற்கு தாம் தயா­ரா­க­வுள்­ளோ­மென மேற்­படி பங்­கா­ளிக்­கட்­சி­யினர் உத்­த­ர­வாதம் அளித்­துள்­ளனர். இவர்­களின் நிலையில் அடிப்­படைப் பொரு­ளா­தார மற்றும் வாழ்வு நிலைப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு வேண்­டு­மென முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எந்­த­வொரு நிலை­யிலும் அதி­காரப் பகிர்வு பற்­றியோ அர­சியல் சாசனம் பற்­றியோ கருத்­துகள் இடம்­பெற்­ற­தாகத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் கூட்­ட­மைப்­பி­னரோ பின்­வரும் நிரை ஒழுங்கில் தமது நிபந்­த­னை­களை வரி­சைப்­ப­டுத்திக் காட்­டி­யுள்­ளனர். 1)புதிய அர­சியல் அமைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும். 2) கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும். 3) வடக்கும் கிழக்கு தமிழர் பிர­தே­சங்­க­ளுக்கு துரி­த­மான அபி­வி­ருத்தி கொண்டு வரப்­பட வேண்டும். 4 ) வேலை வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும். 5) மக்­க­ளுக்குத் தேவை­யான வீட்டுத் திட்­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட வேண்டும். இவ்­வா­றான பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான வாக்­கு­று­தி­களே எமக்கு வேண்டும். இவற்றை நிறை­வேற்றக் கூடி­ய­வரை நாம் ஆத­ரிக்கத் தயா­ரா­க­வுள்­ளோ­மென சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.சம்­பந்­தனின் இக்­கோ­ரிக்­கை­க­ளா­னது மிக நீண்­ட­கால மற்றும் மக்­களின் எதிர்­பார்ப்பின் அடிப்­ப­டையில் கூறப்­பட்ட கோரிக்­கை­க­ளே. இந்தக்­கோ­ரிக்­கை­களை நெகிழ்ந்து கொடுத்தோ தட்­டிக்­க­ழித்தோ செல்­லக்­கூ­டிய நிலையில் தமிழ் மக்­களின் நிலைப்­பாடுகளு­மில்லை, போக்­கு­மில்­லை­யென்­பது தெளி­வான விட­ய­ம்.மேலே வரி­சைப்­ப­டுத்திக் காட்­டி­யுள்ள கோரிக்­கை­களில் தென்­னி­லங்கை தலை­மை­க­ளாலோ மக்­க­ளாலோ ஜீர­ணிக்க முடி­யாத விவ­கா­ரங்­க­ளாகக் காணப்­ப­டு­பவை புதிய அர­சியல் அமைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்­டு­மென்ற விட­யங்­க­ள்.அமைச்சர் சஜித்தைப் பொறுத்­த­வ­ரை, கூட்­ட­மைப்பின் தலை­மையால் விடு­விக்­கப்­பட்­டி­ருக்கும் மேற்­படி நிபந்­த­னையை ஏற்­றுக்­கொள்ளும் திறன் அவ­ரிடம் உண்டா என்­பது. அவ்­வாறு ஒரு வாக்­கு­று­தியை தமிழ் தலை­மை­க­ளுக்கு அளித்து விட்டு தென்­னி­லங்­கையில் அவரால் தலை­காட்­ட­மு­டி­யுமா என்­பது இன்­னொரு சந்­தேகம். அண்­மையில் யாழ்ப்­பா­ணத்­துக்குச் சென்­றி­ருந்த சஜித், ஊட­க­வி­ய­லாளர் வின­விய வினா­வுக்கு பதில் அளிக்­கையில் வட கிழக்குப் பிரச்­சி­னைக்­கான தீர்வை, 13 ஆவது திருத்­தத்தை உச்ச அளவில் அமுல்­ப­டுத்­து­வதன் மூலம் தீர்த்து வைப்பேன் என பதிலளித்­துள்ளார்.இவர் தந்தை பிரே­ம­தாஸ இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தை எதிர்த்­தவர் ; மாத்­தி­ர­மின்றி 13 ஆவது திருத்­தத்தின் மூலம் உரு­வாக்­கப்­பட்ட மாகாண ஆட்­சி­முறை ஒழிக்­கப்­பட வேண்­டு­மென கங்­கணம் கட்­டிய ஒருவர். இந்­திய ரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே விடு­தலைப் புலி­க­ளுடன் ர­க­சிய ஒப்­பந்­த­மொன்றை செய்­து­விட்டுக் காரியம் நிறை­வே­றிய பின் கைக­ழுவி விட்ட பெருமை இவ­ரையே சாரும். இவ­ருக்கு ஆத­ரவு நல்கும் ஒருவர் கூட்­ட­மைப்­புக்கும் சஜித் அணிக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்தை தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், ஒற்றை ஆட்­சிக்குள் அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­கிர்வு என்ற அடிப்­ப­டையில் மட்­டுமே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்த முடி­யுமே தவிர சமஷ்டிக் கோரிக்­கை­யுடன் சஜித் பேச்­சு­வார்த்தை நடத்தத் தயா­ரில்­லை­யெனக் கூறி­யுள்ளார். இருந்­த­போ­திலும், ”முஸ்லிம் சிங்­களக் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி ஆத­ரவைப் பெற்­றுள்ளேன். வெகு­வி­ரைவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளேன்” என அமைச்சர் சஜித் கூறி­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சஜித்­துடன் கூட்­ட­மைப்பு நடத்­திய பேச்­சு­வார்த்தை தொடர்பில் கூட்­ட­மைப்­புக்குள் இரு வேறு­பட்ட கருத்­துகள் காணப்­ப­டு­வ­தா­கவும் சில வதந்­திகள் தெரி­விக்­கி­ன்றன. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (17.09.2019) கூட்­ட­மைப்­பி­ன­ரி­டையே நடந்த கலந்­து­ரை­யா­டலின் போது தலைவர் சம்­பந்தன் ஏலவே சஜித் ஆத­ர­வ­ணி­யுடன் பேசிய விட­யங்கள் தொடர்­பாக விளக்­கும்­போது தமிழ்மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பது தொடர்பில் சஜித்­திடம் தெளி­வான திட்­டங்கள் இல்­லை­யெனக் கூறி­யுள்ளார். இந்த விவ­காரம் தொடர்பில் இரா.சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஆகிய இரு­வரும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க வேட்­பா­ள­ராக களம் இறங்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டிலும் கூட்­ட­மைப்பின் ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இதற்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தா­கவும் சில வதந்­திகள் உலாவி வரு­கின்­றன. இதில் உண்மைத் தன்மை இருக்­கலாம்; இல்­லாமலும் இருக்­கலாம். ஆனால் பிர­தமர் ரணில் அமைச்சர் சஜித் என்று வரு­கி­ற­போது கூட்­ட­மைப்­பினர் எடுக்கக் கூடிய முடிவு தொடர்பில் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. இதன் கார­ண­மாக கூட்­ட­மைப்­புக்குள் ஆத­ர­வான – எதி­ரான கருத்­துக்கள் தோன்ற இம்­முறை வாய்ப்­புகள் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கி­ன்றன. எவ்­வாறு எதிர்­வாத கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் தலைவர் சம்­பந்­தனின் முடிவு எடுக்கும் திறனில் கட்சி ஒட்டுமொத்­த­மாக உடன்­பட்­டுப்­போகும் சூழ்­நி­லையே அதி­க­மாக ஏற்­படும். எது எவ்­வாறு இருந்த போதிலும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (17.09.2019) பிர­த­ம­ருக்கும் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் நடை­பெற்ற சந்­திப்பின் போது சம்­பந்தன் பிர­தமர் ரணி­லிடம் மிகவும் காட்­ட­மாக வினா­விய விட­யங்கள் ஊட­கங்­களில் தலைப்புச் செய்­தி­க­ளாக வெளி­வந்­துள்­ளன. “புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­டுமா? தமிழ் மக்­களின் நீண்ட காலப் பிரச்­சி­னைக்­கான உறு­தி­யான தீர்­வாக எதனை முன்­வைக்கப் போகி­றீர்கள் என்­பதை துணி­க­ர­மாகக் கூறினால் மட்­டுமே எமது அடுத்த கட்ட தீர்­மா­னத்தை நாம் எடுப்போம். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தீர்­மானம் என்ன என்­பது பற்றி தெளி­வான விளக்­கத்தை அளிக்க வேண்­டு­மென சம்பந்தனிடம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலர் வலி­யு­றுத்தி வரும் நிலை­யி­லேயே அவர் மேற்­படி சந்­திப்பின் போது வெட்­டொன்று துண்டு இரண்­டென கார­சா­ர­மான கேள்­வி­களை முன் வைத்­துள்ளார்.இந்தச் ­சந்­திப்­பின்­ உ­ரை­யா­டல்­களும் தர்க்­கித்­தல்­களும் வழ­மையைப் போல் அல்­லாது சூடா­கவும் கார­சா­ர­மா­கவும் இருந்­துள்­ளது என்­ப­தற்கு அப்பால் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனின் புதிய போக்­கையும் தீவி­ரத்­தையும் எடுத்துக் காட்­டு­வ­தா­கவே அமை­கி­றது. வர­லாற்றில் ஏற்­பட்ட தொடர் நிலை ஏமாற்­றங்கள், நம்­பிக்கை அறுப்­புகள் அவ­ருக்கு இவ்­வா­றா­ன­தொரு அனு­பவ முடிவை எடுக்க வேண்­டிய தேவையை உணர்த்­தி­யுள்­ளது. இவ்­வகை முடி­வொன்­றுக்கே கூட்­ட­மைப்பின் தலை­வரும் கட்­சி­யி­னரும் வர­வேண்­டு­மென்ற நீண்­ட­கால எதிர்­பார்ப்பு கொண்­ட­வர்­க­ளாக தமிழ்மக்கள் இருந்து வரு­கி­றார்கள் என்­பதே உண்மை. அது மட்­டு­மன்றி தென்­னி­லங்கைத் தலை­மை­களின் ஏமாற்று வித்­தைகள் ஓர­மாக்கிப் போட நினைக்கும் இழிநிலை எண்­ணங்­க­ளுக்கு முடி­வு­காண வேண்­டு­மாயின் இவ்­வா­றா­ன­தொரு முடி­வுக்கே வர­வேண்­டு­மென்­பது தமிழ்மக்கள் அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டிய விடயம். ரணி­லு­ட­னான சந்­திப்­பின்­போது அவர் கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் அழுத்­த­மான வாக்­கு­று­தி­களை நல்­கி­யி­ருப்­ப­தாக சிங்­கள மற்றும் ஆங்­கில ஊட­கங்கள் செய்­திகள் வெளி­யிட்­டுள்­ளன. புதிய அர­சியல் அமைப்­பொன்றை உரு­வாக்கத் தேவை­யான சகல வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்து ஒருவருட காலத்­துக்குள் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்ததாக அறிய வருகிறது. இவரின் வாக்குறுதி தொடர்பில் கூட்டமைப்பினர் என்ன முடிவை எடுக்கப்போகிறார்கள் என்பதற்கு அப்பால் தமிழ்மக்களின் நீண்ட கால அபிலாஷைகள் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்பவற்றை உள்ளடக்கிய வகையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சிக்கு பிரதமர் எதிர்காலத்தில் தன்னை தயார்படுத்திக் கொள்வாரா என்ற கேள்வியும் தொக்கி நிற்கின்றது. எவை எப்படியிருந்த போதிலும் கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடு தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஏட்டிக்குப் போட்டியான எதிர்ப்பு அலைகள் வீசும் நிலை உருவாகியுள்ளன. இதன் ஒரு அம்சமாகவே கடந்த திங்கட்கிழமை (16.09.2019) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வில் சில பிரகடனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 01. தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை சிங்களத் தலைமைகளும் அவர் தம் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 02. தீர்வு குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 03. சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டும். 04. சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான சமஷ்டித் தீர்வே தமிழ் மக்களுக்கு வேண்டுமென்ற கோஷத்துடனான பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரகடனம் தொடர்பில் ஆழமான கருத்துகளை முன்வைப்பது கூட்டமைப்பின் பொறுப்பில்லையாயினும் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை ஜனநாயகக் கட்சியென்ற வகையிலும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையிலும் அந்த தார்மீகப்பொறுப்பு இருக்கிறது. எது எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு எடுக்கப்போகும் முடிவானது தமிழ் மக்களின் எதிர்கால தலைவிதியையும் இருப்பையும் தீர்மானிக்கப் போகும் விவகாரம் மாத்திரமல்ல, கூட்டமைப்பின் புதிய மாற்றத்துக்கான பாதையையும் திறந்து விடப்போவதாகவே இருக்கவேண்டும். திரு­மலை நவம்
 15. 'கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழக மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. தமிழ் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழைமையானது என நான்காம் கட்ட ஆய்வு முடிவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. மேலும், வைகை நதி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவும் சொல்லப்படுகிறது. சங்ககால வரலாற்றையே மாற்றி அமைக்கும் எனத் தகவல்கள் வெளியாகின்றன. இவை குறித்து பேராசிரியர் அருணனிடம் பேசினோம். "நான் முதலில் தமிழக அரசைப் பாராட்டுகிறேன். இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிகரமானது. ஏனென்றால், இதற்குமுன் ஆய்வுசெய்த முதல்கட்ட முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. தமிழனுக்கென்று ஒரு நாகரிகம் இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லையா என்று எண்ண வைக்கிறது. மத்திய அரசு முழு முடிவையும் வெளியிட வேண்டும் என விரும்புகிறேன். இப்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவு, தமிழர்கள் நாம் எவ்வளவு தொன்மையானவர்கள் என்பதை உணர வைக்கிறது. மேலும், கீழடி ஆய்வில் கிடைத்த மற்றுமொரு முக்கிய அம்சம் 'எழுத்துரு'. கீழடியில் பானை ஓடுகளில் கிடைத்துள்ள எழுத்துருக்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்த எழுத்துருவோடு ஒத்துப்போகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி முதல் வைகை நதி வரை ஒரு நாகரிகத் தொடர்பு இருக்கிறது. இந்த அடிப்படையில் மேலும் பல ஆய்வுகள் தொடர வேண்டும். 'ஹரப்பா', 'மொகஞ்சதாரோ' போல கீழடியையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கிடைத்த பொருள்களை அங்கே அருங்காட்சியகமாக வைக்க வேண்டும். கீழடி ஆய்வுக்காக மத்திய அரசிடம் மாநில அரசு கூடுதல் நிதி கேட்டிருக்கிறது அந்த நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும். மேலும், கீழடி ஆய்வுக்கான முழு உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும். இன்றைக்கு வரலாற்று அறிஞர்கள் மிக முக்கியமான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். கீழடி ஆய்வை முழுமையாகத் தொடர்ந்தால் தெற்காசியாவின் வரலாற்றை மாற்றி அமைக்கும்" என உறுதியாகக் கூறினார் பேராசிரியர் அருணன். பேராசரியர் பாரதி புத்திரனைத் தொடர்புகொண்டபோது, தமிழ் நாகரிகத்திலிருந்த மேன்மையான தன்மைகள் குறித்துப் பேசிய அவர், " "சங்ககாலம் என்பது தொல்லியல் சார்ந்து நம் ஆய்வாளர்கள் கி.மு 2-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3-ம் நூற்றாண்டு வரையிலான 500 ஆண்டுகள் எனக் குறிப்பிடுகிறார்கள். தற்போது கிடைத்துள்ள பொருள்கள் இன்னும் 300, 400 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்கிறது. அசோகருடைய காலம் கி.மு 3-ம் நூற்றாண்டு என வரையறுத்திருக்கிறார்கள். அப்படிப் பார்க்கையில் அசோகர் காலத்துக்கு முன்பே தமிழில் எழுத்துருக்கள் இருந்திருப்பதாகத் தெரிகிறது. அகழ்வாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் இருக்கிற ஒப்புமையைப் பார்க்கிறபோது சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது எனக் கருத வைக்கிறது. தமிழர் நாகரிகம், நகர நாகரிகமாக இருக்கிறது. ஆய்வில் கிடைத்த உரைகிணறுகள், சுகாராதப் போக்குகள் ஆகியவற்றைக் காணும்போது 'ஹரப்பா', 'மொகஞ்சதாரோ' போல ஒரு முதிர்ச்சியான நாகரிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், வைகை நதியைப் பயன்படுத்தி ரோமானியர்களுடன் கடல்வழியாகத் தொடர்புகொண்டிருக்கிறார்கள் என, அங்கு கிடைத்துள்ள பொருள்கள் மூலம் தெரிய வருகிறது. தமிழர்கள் கப்பல் கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப அறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என இதன் மூலம் அரிய முடிகிறது. கடல் மற்றும் இயற்கை சார்ந்த புரிதல் தமிழர்களுக்கு அதிகம் என்பதையே ஆய்வில் கிடைத்த தானியங்கள், பானை ஓடுகளில் கிடைத்த குறியீடுகள் காட்டுகின்றன. மேலும், இவை பாண்டியர்களின் தலைநகராக இருக்கக்கூடுமோ என்ற தகவல் இதை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது. ஏனென்றால், பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு மணலூர், ஆலவாய் உள்ளிட்ட பல பேர்கள் உள்ளன. எனவே, அந்த வகையில் நிரூபிக்கப்பட்டால் தென் பாண்டிய வரலாறு இன்னும் பழைமையாக இருக்கும். தமிழ் எழுத்துரு குறித்த தெளிவான முடிவு கிடைத்திருக்கிறது. புழங்கு பொருள்களின் மீது தம் பெயரை எழுதிவைக்கும் முறையைப் பற்றி ஏற்கெனவே ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுவார். அந்த வகையில் எளிய மக்களும் எழுத்தறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்று. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கிறபோது கீழடி மிகத் தொன்மையான, சிறப்பான நாகரிகம் என்பது தெளிவாகிறது" எனப் பெருமை பொங்க பேசினார் பாரதி புத்திரன். https://www.vikatan.com/news/tamilnadu/was-keezhadi-capital-of-pandiya-nadu
 16. இந்த நபர் தான் தந்தை என்று லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நிறுவினால் , வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் மற்றும்சொத்தில் பெரும் பாகம் ஆகியவற்றை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கும். பாதிக்கப் பட்டவர் எந்த நாட்டிலும் இருக்கலாம். இந்த தீர்ப்பின் மூலம் இந்த நபரே குழந்தையின் தந்தை என்பது நிரூபிக்க பட்டு இருக்கும். பையன்26 உம் அவரின் நண்பரான பெண்ணின் உறவினர்களும் இவ்வாறான முயற்சியை விரும்பாமல் தமது வழியில் அறை, உதை என்று செயற்பட்டு இருக்கிறார்கள். இந்த பெண்ணுக்கு ஒரு கணவரும், குழந்தைக்கு ஒரு தந்தையும் இப்போது தேவை. பையன்26 நல்லவரும் இளையவரும் இந்த பெண்ணை அறிந்தவரும் இந்த பெண் மேல் பாசம் கொண்டவருமாக தெரிகிறார். ஆகவே அவரே இந்த பெண்ணை கலியாணம் செய்து குழந்தைக்கும் தந்தையாகி தனது நல்ல காரியத்தை சுபமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். எல்லாம் சுபமாக முடிய வாழ்த்துகள் பையன்26.
 17. வாஷிங்டன்: மற்ற நாடுகளை விட பெரிய அளவில் ராணுவத்தை கட்டமைத்து வரும் சீனா, உலகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் கூறியதாவது: மற்ற நாடுகளை விட வேகமாக ராணுவத்தை கட்டமைத்து வரும் சீனா, உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதற்காக, அந்த நாடு அமெரிக்க பணத்தை பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் பணத்தை, சீனா எடுத்து கொள்ள அமெரிக்க முன்னாள் அதிபர்கள் அனுமதித்தனர். எங்களின் அறிவுசார் சொத்துரிமையையும் சீனா திருடவும் அனுமதித்தனர். ஆனால், அதனை நான் விட மாட்டேன். வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவும் சீனாவும் செயல்பட்டு வருகின்றன. சீன பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இது அடுத்து வரும் நாட்களிலும் அதிகரிக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2372409
 18. இந்த சம்பவம் உண்மையா பொய்யா என்பதை முதலில் உறுதிப்படுத்த முடியாது. சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பதும் யாருக்கும் தெரியாது. பதிந்தவர் யார் என்பதும் வெளிப்படையாக தெரியாது. 19 வயது பெண்ணை சின்னப் பெண் என்று சட்டம் ஏற்கவும் மாட்டாது. இவ்வாறான பதிவுகளால் யாருக்கு என்ன நன்மை என்பதும் தெரியாது. பகிரங்கப்படுத்தவும் சமூகம் தடுக்கின்றது. கர்பத்தை எப்படி மறைப்பது ஒருவேளை குழந்தை பிறந்தால் அதுக்கு யாரை தந்தை என்று காட்டுவது அப்போது இந்த சமூகம் என்ன சொல்லும் என்ற கேள்வி எழுகின்றது. எமது சமூகத்தை புரிந்துகொள்ள இந்த பதிவு ஒரு சிறந்த உதாரணம். இதே கதியில்தான் எமது சமூகம் உள்ளது. இவ்வாறான சம்பவங்களை கதையாக எழுதி கதைகதையாம் பகுதியில் இணைக்கலாம். எந்த ஆதராமும் அடிப்படையுமற்ற செய்தியாக பதிவிடும்போது நிர்வாகம் நீக்கியிருக்கவேண்டும் ஆனால் இத்திரியின் கீழ் நிறைய கருத்துக்கள் நேரம் செலவளித்து பலரால் எழுதப்பட்டுவிட்டது.
 19. சம்பந்தப்பட்ட நபரை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டாலோ, அல்லது சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விபரங்களை பகிரங்கபடுத்தாமல் விட்டாலோ, இந்த திரி ஆதாரமற்ற செய்திகளின் வரிசையில் வந்துவிடுமே? ஆதாரமற்ற,வாய்வழி மூலமான செய்திகளை யாழில் இணைக்ககூடாது என்பது பொது விதியாக உள்ளதே அது இந்த திரிக்கு பொருந்தாதா?
 20. Yesterday
 21. எமக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது மட்டும் சட்ட நடைமுறையை ஏற்றுக்கொள்ள கூடாது என்றால் என்ன நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைக்கின்றீர்கள்.
 22. த‌மிழீழ‌த்தில் எத்த‌னையோ பெண் பிள்ளைக‌ள் பாதிக்க‌ ப‌ட்டு இருக்கின‌ம் மீரா , யாழில் ச‌ட்ட‌த்த‌ ப‌ற்றி ***** ****** ****** கூட்ட‌ம் அதுங்களுக்கு நீதி வேண்டி குடுக்க‌ த‌யாரா , இவ‌ர்களை ஒரு பொருட்டாக‌வே எடுக்க‌ கூடாது , இன‌த்துக்காக‌ உண்மையும் நேர்மையுமாய் துனிவோடு ப‌ல‌ செய‌லை செய்யும் பிள்ளைக‌ள் எங்கை , கொம்பியூட்ட‌ருக்கு முன்னால் இருந்து கொண்டு ****** ******* ******கூட்டம் எங்கை / எம‌க்காக‌ போராடின‌ போராக‌ளின் ஒரு குடும்ப‌த்தை புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு எடுக்க‌ , ஒரு யாழ் உற‌வின் கை எழுத்து தேவை ப‌ட்ட‌து , அத‌ கூட‌ செய்ய‌ த‌ய‌க்க‌ம் காட்டினார் , அதோடு நானும் அத‌ ப‌ற்றி அவ‌ருட‌ன் க‌தைப்ப‌து இல்லை , அந்த‌ போராளி குடும்ப‌த்த‌ நான் வ‌சிக்கும் நாட்டு அர‌சாங்க‌ம் அடுத்த‌ வ‌ருட‌ம் danske røde kors மூல‌ம் கூப்பிட‌ போகின‌ம் , ப‌ல‌ பேரின் போலி முக‌ங்க‌ளை கிழிக்க‌ நீண்ட‌ நேர‌ம் ஆகாது மீரா , அந்த‌ போராளி குடும்ப‌ம் அடுத்த‌ வ‌ருட‌ம் இங்கை வ‌ர‌ட்டும் அதுக்கு பிற‌க்கு , யாழில் போலி புலி வேச‌ம் போட்ட‌வையின் உண்மை முக‌ம் வெளியில் தெரிய‌ வ‌ரும் ,
 23. (அரசியல்) கடவுளுக்கு தட்சணையாக கொடுக்கப்பட்டிருக்கும் ! பலகையில் அபிவிருத்தி யுத்தம் என்று போடப்பட்டுள்ளது. வீதி போட்டவன் அபிவிருத்தி எண்டதை மறந்திடான். எங்கடை பூந்தோட்டம் சித்திரவதை முகம் புகழ் சித்தர் என்னவும் செய்வார்.
 24. பிரிந்து வாழுதலும் விவாகரத்தும் திருமணம் செய்யும் பொழுது வாழும் நகரத்தில் திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அப்பொழுது அதை உறுதிப்படுத்தும் ஒரு பத்திரமும் தரப்படுகின்றது. சேர்ந்து வாழும்பொழுது, இரு மனங்களும் இணைந்து வாழ்வில் மகிழ்ச்சியையும், முன்னேற்றத்தையும் கனவுகளை நனவாக்கும் பாதையில் பயணிப்பார்கள். இவர்கள் ஒன்றாக வாழ்வதை அரசும் வருடாந்த வருமான வரி பத்திர தாக்கலில் அரசு உறுதிப்படுத்துகின்றது. சேர்ந்து வாழுவதால் அவர்களும் வரி சலுகையையும் பெறுகிறார்கள். சேர்ப்பித்து இரு மனங்கள் பிரிந்து வாழ முடிவெடுக்கும் பொழுது, இதே வரித்தாக்கல் அதை உறுதிப்படுத்தும் ஒரு மூலமாக இருக்கின்றது. ஒரு வருடத்திற்கு மேலாக பிரிந்து வாழும்பொழுது எந்த கேள்வியும் இல்லாமல் பிரியலாம். ஆனால், அதற்கு இரு நபர்களும் கை ஒப்பம் இட்டு மீண்டும் பதிந்த நகராட்சியில் பதியவேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி விவாகரத்து என அமையாது. சட்டப்படி விவாகரத்து இல்லாமால் நபர் ஆ முதலில் இறந்துவிட்டால் அவரது சொத்துக்கள் நபர் அ விற்கு செல்லும். ஆனால், நபர் ஆ ஒரு உயிலை எழுதி இருந்தால், அதன் படி அவரின் சொத்து பிரிக்கப்படும். ஆனால், பலரும் உயிலை எழுதுவதும் இல்லை நிலைமைக்கு ஏற்ப அதனை மாற்றி எழுதுவதும் இல்லை. சிலர் சட்டப்படி விவாகரத்து எடுத்து மீண்டும் திருமணம் செய்வார்கள். நபர் அ அவ்வாறானவர். அவருக்கு பிள்ளைகள் நபர் ஆ ஊடாக உள்ளன. நபர் அ மறுமணம் செய்த நபர் இ விற்கும் ஏற்கனவே பிள்ளைகள் உள்ளன. நபர் அ மரணம் அடைந்து விட்டார், உயிலும் இல்லை. அவரின் சொத்துக்கள் நபர் இ விற்கு செல்லும். நபர் இ அதை நபர் அ வின் பிள்ளைகளுக்கு கொடுக்காமல் விடும் உரிமையும் உண்டு. ஆகவே உயில் எழுதுவது பொதுவாக வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம்.
 25. ஆசிய கண்டம் முழுவதுமாக சீனாவின் அரசியல், இராணுவ முக்கியமாக பொருளாதார தாக்கங்கள் பெருகி வருகின்றன. அதன் ஒரு சின்னமே இந்த கோபுரம். கேள்வி இங்கே என்னவென்றால், தமிழீழத்தை ஆயுதப்போராட்டம் மூலமாக மலர அனுமதிக்காத மேற்குலம் தொடர்ந்தும் சீன வளர்ச்சியை இலங்கையில் அனுமதிக்க போகின்றதா?
 26. இராணுவ தளபதி – ஆளுநர், இருவருமே போர்க்குற்றவாளி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்கள். தங்கள் கொள்கையை, தமிழின அழிப்பை, முன்னெடுக்க நடாத்தப்படும் அரசியல் - இராணுவ நாடகத்தில் வெளியிடப்படும் உளவியல் தாக்க செய்தி இது.
 1. Load more activity