யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. Tue 25 June 05:30 (EDT) (YOUR TIME) Lord's, London 10:30AM UK ENGLAND AUSTRALIA இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெல்லும் என்று 17 பேரும் அவுஸ்திரேலியா வெல்லும் என்று 8 பேரும் விடையளித்துள்ளனர். அவுஸ்திரேலியா வெல்லும் என்று ராசவன்னியன்,புத்தன்,சுவைப்பிரியன் மருதங்கேணி,கல்யாணி,கறுப்பி,கந்தப்பு காரணிகன் ஆகியோர் விடையளித்துள்ளனர்
 3. செயற்கை மழையால் சென்னைக்கு நன்மையா... இல்லையா? இன்றைக்கு பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த செயற்கை மழை அறிவியலுக்குப் புதிதல்ல. 1830-களிலேயே இதுகுறித்த ஆராய்ச்சிகளை அமெரிக்கா மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார் ஜேம்ஸ்.ஆர்.பிளமிங். இதேபோலப் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும் அவை எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை. பின்னர் 1915-ல்தான் முதல்முறையாக மேகவிதைப்பு முறைக்கு விதை போட்டார் அமெரிக்க வேதியியல் நிபுணர் வின்சென்ட் ஜோசப் ஸ்ஷேபர். இவரின் தொடர் முயற்சிக்கு 1946-ல் வெற்றிகிடைத்தது. அதன்பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்து முதல் செயற்கை மழை உருவாக்கப்பட்டது. பின்னர் 1960-களிலும் குறிப்பிட்ட அளவு செயற்கை மழை பெய்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த ஆராய்ச்சிகளில் அதிதீவிரமாகச் செயல்பட்டனர். அதில் ஸ்ஷேபர் மற்றும் அவருடன் பணியாற்றிய வளிமண்டல விஞ்ஞானி பெர்னார்டு வென்னிகாட் செயற்கை மழை உருவாக்கத்திற்கான அடிப்படை காரணிகளை உருவாக்கியதோடு, அப்போதிருந்த முறைகளைத் தவிர்த்து, மற்ற முறைகளில் மழையை உருவாக்க முடியுமென்பதையும் நிரூபித்தனர். இன்னொருபுறம் சீன ஆராய்ச்சியாளர் சாங் சியாங் மற்றும் அவரின் குழுவினர் நவீன முறையில் மேகவிதைப்பு செய்து மழையைப் பொழியவைத்தனர். உலகில் இன்றளவும் செயற்கை முறையில் மழையை உருவாக்குவதில் சீனா முன்னணி வகிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த வெதர் மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2003-2004-ம் ஆண்டு இந்த மழைக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2008-ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில் 12 மாவட்டங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இதுவரைக்கும் இந்த முயற்சிகளில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வெற்றி கிடைத்ததாக தகவல்கள் இல்லை. சரி, இந்த மழை எப்படி உருவாக்கப்படுகிறது? மொத்தம் மூன்று படிநிலைகளில் உருவாகிறது. அவை, 1. காற்றழுத்தத்தை உருவாக்குதல் 2. மழை மேகங்களைத் திரட்டுதல் 3. மழை மேகங்களைக் குளிரச் செய்தல் மேகங்களின் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரியாக இருந்தால், அவை வெப்ப மேகங்கள் என்றும், பூஜ்ஜியம் டிகிரிக்குக் குறைவாக இருந்தால் அவை குளிர்ந்த மேகங்கள் என்றும் அழைக்கப்படும். வெப்ப மேகங்களைக் குளிர்விக்கும்போது நீர்த்திவலைகளின் அடர்த்தி அதிகரித்து மேகங்களின் அடியிலிருந்து மழைப்பொழிவு ஏற்படுகிறது. அதுபோல், குளிர்மேகங்களைக் குளிர்விக்கும்போது பனிக்கட்டியின் அடர்த்தி அதிகரித்து அவை உடையும்போது வானிலையில் ஏற்படும் வெப்ப மாற்றத்தினால் பனிக்கட்டியானது நீராகி மழையாகப் பொழிகிறது. https://www.vikatan.com/news/miscellaneous/160334-will-artificial-rain-help-chennai.html?artfrm=home_tab1
 4. Artificial intelligence / செயற்கை நுண்ணறி செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சியை காட்டும் உச்ச நிலையாகும், இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். செயற்கைஅறிவாற்றல் என்பது கொடுக்கப்படும் உள்ளீட்டிற்கு தகுந்ததுபோல் அதுவாகவே செயல்படுவதுதான் செயற்கை நுண்ணறிவு ஆகும். செயற்கை அறிவாற்றலின் பயன்பாடுகளை அனைத்துத் துறைகளிலுமே காணமுடியும். உதாரணமாக, விவசாயம், தொழில்நுட்பம், கார், ஆட்டோமொபைல், மருத்துவம், பொறியியல், ஆசிரியர்பணி போன்ற அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவாற்றல் முறைகளைப் பயன்படுத்தமுடியும். செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படையில் தாமாக சிந்தித்து செயல்படக்கூடிய இயந்திரம் அல்லது கணினி. ஆனால், கணினியால் தாமாக எந்த வேலையையும் செய்ய முடியாது என்றல்லவா கேள்விப்பட்டிக்கிறோம்? சரிதான். அதாவது மனிதன் எவ்வாறு சிந்திப்பான், செயல்படுவான் என்பதை நிரலாக்கக் குறியீடுகளை வைத்து கணினி செயல்படும். இது கண்டிப்பாக சுலபமான வேலையில்லை. மனிதன் என்ன நினைக்கிறன் என்று மனிதனுக்கே சரியாக தெரியாத போது அதை கணினிக்கு கற்றுக்கொடுப்பது என்பது சுலபம் இல்லை. செயற்கை நுண்ணறிவின் சிறந்த பயன்பாடுகளின் பட்டியல் இங்கே- 1. ஸ்மார்ட் கார்கள் இது கூகிளின் சுய-ஓட்டுநர் கார் திட்டத்தையும் டெஸ்லாவின் "தன்னியக்க" திட்டத்தையும் கொண்டுள்ளது. மேலும். செயற்கை நுண்ணறிவானது முதல் வீடியோ விளையாட்டின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டது. 2. மோசடி கண்டறிதல் மோசடிகளை கண்டறிவதற்கு AI ஐ பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். பல மோசடிகள் எப்போதும் வங்கிகளில் நடக்கின்றன, இவற்றில் 90% AI யின் துணை கொண்டே கண்டறியப்படுகிறது. 3. ஆன்லைன் வாடிக்கையாளர் ஆதரவு ஆன்லைன் வாடிக்கையாளர் ஆதரவில் AI முக்கிய பங்கு வகிக்கிறது. பல வலைத்தளங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடி அரட்டை விருப்பம் உள்ளது. பொருட்கள் ரீதியான தேவையான உதவிகளை இது நமக்கு வழங்குகிறது, பல சந்தர்ப்பங்களில், நமது சந்தேகங்களுக்கு பதிலளிப்பது உள்ளீடு கொடுக்கப்பட்ட ஒரு கணிணி மட்டுமே ஆகும், 4. இதயத் தாக்குதல்களை தடுத்தல் இப்போதெல்லாம் மருத்துவத்துறையில் உயிர்களை காப்பாற்ற AI பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத் தரவுகளை நுட்பமாக ஸ்கேன் செய்ய இது பயன்படுத்தப்படுகிறது. மேலும், நோயாளிக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இருந்தால் எளிதில் கணிக்க முடியும். 5. தயாரிப்பு செயற்கை நுண்ணறிவு உற்பத்தி நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி பொருட்களுக்கு உபயோகிக்கிறோம். மேலும் உற்பத்தி பொருட்களில் மாற்றங்களை AI ஐ பயன்படுத்தப்படுகிறது. 6. பொறியியல் வடிவமைப்பு & இரசாயன பகுப்பாய்வு இது நிபுணத்துவ வரைபடங்கள் மற்றும் இரசாயனத் தொகுப்புகளை வடிவமைக்கப் பயன்படுகிறது. செயற்கை நுண்ணறி எங்கே தேவைப்படுகிறது ? இது நீங்கள் கணினி விளையாட்டுகள் விளையாடியிருந்தால் தெரிந்திருக்கும். நீங்கள் இந்த அசைவை செய்தால் என்ன செய்ய வேண்டும், தாக்கினால் என்ன செய்ய வேண்டும், மறைந்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என மனிதனை ஒத்த செயல்களை செய்யுமாறு குறியீடு செய்யப்பட்டிருக்கும். சரி, இங்கு மட்டும் தானா? இல்லை. உங்கள் திறன்பேசியில் உள்ள Google Assistant, Siri , Cortana கூட ஒரு செயற்கை நுண்ணறிவு தான். இப்போது டெசுலா நிறுவனத்தின் சுய ஓட்டுதல் தொழில்நுட்பமும் கூட செயற்கை நுண்ணறிவை தான் பயன்படுத்துகிறது. சுருக்கமாக சொல்லப் போனால், இயந்திர மனிதன் (robot) இந்த செயற்கை நுண்ணறிவை தான் பயன்படுத்துகின்றது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், இந்த நிரல்களை இயக்க, அதிக திறனுடைய கணிணிப்பாகங்கள் தேவை. செயற்கை நுண்ணறிவு எந்த அளவு மனிதனின் செயல்களை ஒத்த செயல்களை செய்ய முற்படுகிறதோ, அந்த அளவு அதிக திறனுடைய கணிணிப்பாகங்கள் தேவை.
 5. Data Analytics / அது என்ன டேட்டா அனலிடிக்ஸ்?டேட்டா என்றாலே நம் அனைவர்க்கும் நினைவுக்கு வருவது கஸ்டமர் முகவரி, மொபைல் நம்பர் போன்றவைதான். ஆனால், டேட்டா அனலிடிக்ஸ் என்பது அணுவைத் துளைத்து புரோட்டான், நியூட்ரானை துல்லியமாக அளவிடுவதுபோல நம் மொபைலில் நாம் எடுக்கும் ஒரு புகைப்படத்தை வைத்து, அது எடுக்கப்பட்ட இடம், அதன் அட்சரேகை, தீர்க்கரேகை விவரங்கள், அந்த இடத்தின் அருகில் உள்ள கடைகள் மற்றும் அவை அளிக்கும் சலுகைகள் என்று அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். நாம் முகநூல் பார்க்கும்போது ``உங்களுக்கு இவரைத் தெரிந்திருக்கலாம்" என்று மற்றவர்களை நமக்குக் காட்டுமே! அதுவும் டேட்டா அனலிடிக்ஸின் அடிப்படையில் தான். மொத்தத்தில் இதுவும் ஒரு செயற்கை நுண்ணறிவுதான். விரிவடைந்து வரும் ஐ.டி துறையில், டேட்டா சயன்ஸ், மெஷின் லேர்னிங் துறையில் 50,000 வேலைவாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பு தேடுவோர் எண்ணிக்கை, காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் போன்றவற்றின் மூலம் இது கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக, டேட்டா சயன்டிஸ்ட் பணிக்கான தேவை கடந்த 2017-ம் ஆண்டில் உச்சத்தில் இருந்துள்ளது. இணையம் அறிமுகமான காலந்தொட்டே புதுப்புது துறைகளும், அவற்றுக்கான வேலைவாய்ப்புகளும் வளர்ந்துவருகின்றன. இணையத்தின் அடுத்த பரிமாண வளர்ச்சியாக சமூக வலைதளங்கள் அதிகரித்துவருவதால், உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான தகவல்கள் இணையத்தில் பரவிக்கிடக்கின்றன. இந்தத் தகவல்களைத் திரட்டி, அதிலிருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்கள், ஆய்வுகளை நடத்த டேட்டா சயின்ஸ் உதவுகிறது. உலக அளவில் டேட்டா சயின்ஸ், மெஷின் லேர்னிங் துறைகளில் 12% வேலைவாய்ப்புகளை இந்தியா நிரப்புகிறது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், இ-காமர்ஸ், ஹெல்த்கேர் மற்றும் மீடியா துறைகளில் டேட்டா சயன்ஸ் மற்றும் டேட்டா அனலிடிக்ஸ் பணிகளுக்கான வாய்ப்புகள் மிகுதியாக இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, கடந்த 2017-ம் ஆண்டில், வங்கிகள் மற்றும் நிதித்துறைகளில் மட்டும் டேட்டா சயன்டிஸ்ட் மற்றும் அனலிஸ்ட் பணிகளுக்கான தேவை 44% இருந்தது. வரும் 2020-ம் ஆண்டுக்குள் 39,000 அனலிடிக்ஸ் பணியிடங்கள், சைபர் செக்யூரிட்டி துறையில் 5,000 பணியிடங்கள், ஹெல்த்கேர் துறையில் 15,000 பணியிடங்கள் உருவாகக்கூடும் என்றும் தெரியவருகிறது. எனவே இவற்றை கணக்கில்கொண்டு அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்வது வேலைதேடுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 6. நாட்டில் உள்ள முஸ்லீம்களுக்கு எதிரான நிலைமையை பாவித்து இந்த கொலை நடந்திருக்குமானால் இது நாடு ஒரு ஆபத்தான நிலைக்குள் செல்கின்றது என பார்க்கலாம். தமிழர்களும் கூட சிறுபான்மை மக்கள் தான். இவ்வாறான நிலைமை எமக்கும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.
 7. Today
 8. இந்தியாவிற்கு தோல்விப்பயத்தை காட்டிய ஆப்கான் இன்று வெற்றிபெறுவார்கள் என நினைத்தேன் இன்றும் தோல்வியா?
 9. Yesterday
 10. காப்புறுதி முகவர்களாக நிறைய இலங்கை தமிழர்கள் இருக்கின்றார்கள்.அது மட்டுமில்லாமல் வீடு வாங்க விற்க என்று அந்த துறையில் கோலோச்சுகின்றார்கள்..
 11. லூசு மனுஷி வைனை குடிச்சு நித்திரை அடித்துவிட்டு பாவம் ஒரு பிளைட் அட்டென்டன்னுக்கு வேலைக்கு ஆப்பு வைச்சு இருக்கு. இதுக்கு இவாவுக்கு செக் எழுதுவதைவிட ... எயர்போர்ட் பாதுகாப்பு துறைக்கு அதிக அளவில் தண்டம் கட்ட வேண்டும்.
 12. காசுருந்தா ஆசைப்பட்ட அல்லாத்தையும் வாங்கலாம்... அம்புட்டுக்கும் ஆசைப்படு பாலகுமாரா...
 13. 19ஆவது திருத்தத்தின் பாதிப்பை ஜனாதிபதி இப்போதே உணர்கிறார் அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பாதிப்பு தனது கண்களுக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, 19ஆவது திருத்தத்தின் பாதிப்புத் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்துள்ளமைத் தொடர்பில், அவருக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார். ஹங்குராகத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இன்னும் 4 மாதங்கள் உள்ளன தேர்தலுக்கு. எனவே 19ஆவது திருத்தத்தை மாற்றுவதற்கு நேரமில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, அரசமைப்பை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/19ஆவது-திருத்தத்தின்-பாதிப்பை-ஜனாதிபதி-இப்போதே-உணர்கிறார்/175-234531
 14. ரதி, ... நித்திரையோ, முழிப்போ ... இங்கிருந்து ஒப்பாரிதான் அதிகப்பட்சமாக பாட முடியும். அதற்கு மேல் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா? சம்/சும்/மாவையோ அல்லது அம்மான்/பிள்ளையான் கும்பலோ இன்றுவரை தமிழ் மக்களுக்கு செய்த ஏதாவது நல்ல காரியங்கள் ..???? கடந்த ஆட்சியில் அம்மான் அமைச்சர் ... ஏதாவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்தது என்று ...??? ... ஒன்று மட்டும் செய்தை கூறுகிறார்கள் ... பல பெண்களை மனைவிகளாக்கியதை! கடந்த கால முதலமைச்சர் ... பிள்ளையான் ... ரோட்டை மட்டும் தமிழ் பகுதிகளுக்கு போட வைத்து விட்டு, நாலறிவின் ஆங்கில/தமிழ் அறிவை துல்லியமாக அளந்த முஸ்லீம் அரசியல்வாதிகள், நாலறிவு விலங்கை பயன்படுத்தி ... காத்தான்குடி முதல் ஏறாவூர், நிந்தவூர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் அபிவிருத்தி செய்தவைகளை. எங்கே எத்தனை தமிழ் நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன? இன்றும் கிழக்கில் இருட்டில்!
 15. அவர் தமிழன் என்பதால் உங்கள் காலை இழுத்து விழுத்துவதில் கவனமாக இருப்பாரேயொழிய முந்துபவர்களைக் கண்டுகொள்ளமாட்டார் பாகிஸ்தான் நியூஸிலாந்தை வெல்ல எனக்கு இரண்டு புள்ளிகளும் வரும். பாகிஸ்தான் ஃபைனலுக்கும் வரும் போனஸாக நீர்வேலியான் மொட்டை வேறு போடுவார்! அய்! எல்லாமே நல்லதாக நடக்க வீரபத்திரர் அருள்புரிவார்!! அதனால்தான் சேஃப் பெட்டிங்! ஓடுறதெண்டா ஒருத்தியோடதான் ஓடுவேன்
 16. ஹி ஹி ஹி ஹி அறிவாளி பிரோ என்ர‌ போட்டியை கேட்ட‌ ப‌ய‌த்தில‌ , கிருப‌ன் அண்ணா திரும்பி பார்க்காம‌ ஓடி போய் விட்டார் , உசைன் வுலொட் கூட‌ ஒலிம்பிக்கில் அப்ப‌டி வேக‌மா ஓடி இருக்க‌ மாட்டான் , என்ன‌ ஓட்ட‌ம் கிருப‌ன் அண்ணான்ட‌
 17. பெரம்பலூரைச் சேர்ந்த அரசு ஊழியர் வெங்கடேசன். 1100 சதுரடி பரப்பிலான தரை தளத்தின் அடியில் 1000 சதுரடி பரப்பளவில் கான்கிரீட் தொட்டி அமைத்து அதன் மீது கான்கிரீட் கூரை அமைத்து வீடு கட்டியுள்ளார். இதன்மூலம் தண்ணீரைத் தேடி தவிக்க வேண்டியதில்லை.
 18. ரத்த மகுடம்-58 பிரமாண்டமான சரித்திரத் தொடர் ‘‘கேட்க வேண்டியவைகளை எல்லாம் கேட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன்... இனி நான் பதில் சொல்லலாம் அல்லவா..?’’நிதானத்தை இழக்காமல் அதேநேரம் அழுத்தம்திருத்தமாகக் கேட்ட சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர், தொண்டையைக் கனைத்தார். நீள்வட்டமாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் நிமிர்ந்தார்கள்.விக்கிரமாதித்தருக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த அனந்தவர்மர், தன் கண்கள் இடுங்க சாளுக்கிய மன்னர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தார்.பொறுமையை சோதிக்காமல் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு விக்கிரமாதித்தர் பேசத் தொடங்கினார்.‘‘சாளுக்கியப் பேரரசின் அமைச்சர் பிரதானிகளாக நீங்கள் இருந்தபோதும் ஒவ்வொருவருமே சிற்றரசர்களுக்கான அந்தஸ்துடையவர்கள். சாளுக்கியப் பேரரசின் விரிவாக்கத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். அப்படிப்பட்ட உங்கள் அனைவரது வீரத்துக்கும் தீரத்துக்கும் முதலில் தலைவணங்குகிறேன்! சாளுக்கியப் பேரரசின் நலன் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் உங்கள் செயல் உண்மையிலேயே என்னை நெகிழ வைக்கிறது; பெருமிதமாகவும் உணரச் செய்கிறது...’’நிறுத்திய விக்கிரமாதித்தர், எழுந்து அவையை வணங்கினார்.பதிலுக்கு அனந்தவர்மர் உட்பட அனைவரும் அநிச்சையாக எழுந்து மன்னரை வணங்கினர். பரஸ்பரம் இப்படி இருதரப்பும் வணங்கியபிறகு, ‘‘அமருங்கள்... உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்ற நம்பிக்கையில் நின்றபடியும் நடந்தபடியும் என் பதிலைத் தெரிவிக்கிறேன்...’’ என்ற விக்கிரமாதித்தர், நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.‘‘இந்த பாரத தேசத்தின் தட்சிணப் பகுதியை சாளுக்கியர்களாகிய நாம் ஆட்சி செய்து வருகிறோம். அது என்ன தட்சிணப் பகுதி..? வடக்கே விந்திய மலையும் நருமதை ஆறும்; தெற்கில் துங்கபத்திரை, கிருஷ்ணா நதிகள்... கிழக்கிலும் மேற்கிலும் கடல்... இதற்குள் இருக்கும் பகுதிதான் தட்சிணப் பிரதேசம். இந்த பீடபூமியின் கீழ்ப்பாகத்தில் கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்கு இடையிலுள்ள பகுதி மாமன்னர் அசோகர் காலத்தில் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டிருந்தது. பிறகு சாதவாகனர்களின் ஆளுகைக்குக் கீழ் அப்பகுதி வந்தது.இதன் பிறகு கூர்ஜர ராஜ வம்சத்தைச் சேர்ந்த சாளுக்கியர்களாகிய நாம் முன்னேற்றம் அடைந்து இந்த ‘தட்சிண’ப் பகுதியை ஆளத் தொடங்கினோம்...’’ நிறுத்திய விக்கிரமாதித்தர் மெல்ல நடந்தபடி தன் உரையைத் தொடர்ந்தார்.‘‘பாரத தேசம் பன்னெடுங்காலமாகவே நாடோடி கூட்டத்தாரின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. வடமேற்கிலுள்ள கணவாய் வழியாக சாரி சாரியாக அயலவர்கள் நம் நாட்டில் புகுந்து, இருக்கும் ராஜ்ஜியங்களை எல்லாம் கைப்பற்றி வருகிறார்கள்.ஆனால், ஒருவராலும் பாரதத்தின் தென் பகுதிக்கு வரவே முடியவில்லை. காரணம், அரணாக விளங்கும் நாம்! தட்சிணப் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் சாட்சாத் நாமேதான். நம்மை மீறி ஒருவராலும் தென் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. அதனாலேயே தனித்த நாகரீகத்துடன் தென் பகுதியானது காலம் காலமாகத் திகழ்ந்து வருகிறது.இதற்கான நன்றியை தென்பகுதி மக்கள் நமக்குத் தெரிவிக்க வேண்டும்! வரலாற்றில் நம் பெயரைப் பொறித்து நம்மை கவுரவிக்க வேண்டும்! ஆனால், அப்படி எதையும் அவர்கள் செய்யவில்லை.ஏன் என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறோமா..? நாள் முழுக்க இதுகுறித்துதான் நான் ஆலோசித்து வருகிறேன்...’’ என்ற விக்கிரமாதித்தர் அறையின் மூலையில் முற்றிலுமாக மூடியிருந்த சாளரத்தில் சாய்ந்தபடி நின்றார். ‘‘நமது முன்னோரான முதலாம் புலிகேசி, வேங்கியை ஜெயித்து வாதாபியில் சாளுக்கிய அரசை நிறுவினார். மகாராஜா என்னும் பட்டத்தையும் பெற்றார். நருமதை முதல் பாலாறு வரை பரந்திருக்க... மற்ற இரு பக்கங்களில் கடல் நிரம்பி வழிய... தன் ஆட்சியைத் தொடங்கினார். பிறகு முதலாம் கீர்த்திவர்மன், மங்களேசன் ஆகியோர் சாளுக்கிய அரியணையை அலங்கரித்தார்கள். ராஜ்ஜியத்தை விஸ்தரிக்காவிட்டாலும், அடைந்த பகுதியை இவர்கள் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றினர்.பின்னர் அரியணை ஏறிய என் தந்தையாரான இரண்டாம் புலிகேசி, மாமன்னரானார். வடக்கில் ஹர்ஷவர்த்தனரைத் தோற்கடித்து ஓட ஓட விரட்டினார். இதன் வழியாக வட பகுதி அரசுகள் தெற்கில் கால் பதிக்காதபடி செய்தார்.வடக்குப் பிரச்னை ஓய்ந்ததும் தென் பகுதியில் தன் கவனத்தைக் குவித்தார். இதன் ஒரு பகுதியாக தென்னக கடற்கரையோரமாக படையெடுத்து பல கோட்டைகளைக் கைப்பற்றினார். இது குறித்த விவரங்களை அய்கோலிக் கல்வெட்டில் நாம் காணலாம். அது மட்டுமா..? பல்லவ மன்னர் மகேந்திரவர்மரை காஞ்சிக் கோட்டைக்குள் பதுங்கும்படி செய்தார். பின்னர் காவிரி ஆற்றைக் கடந்து சோழர், சேரர், பாண்டியருடன் நட்புறவு பூண்டு வாதாபி திரும்பினார். என் தந்தைக் காலத்தில் பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் போர் நடைபெற்றிருக்கிறது.இவை அனைத்தும் வேங்கியை என் தந்தையும் சாளுக்கிய மாமன்னருமான இரண்டாம் புலிகேசி கைப்பற்றியபிறகே நடைபெற்றது. நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் ததும்பி வழிகிறது. எப்பேர்ப் பட்ட வீரம்...‘இரண்டாம் புலிகேசி தன்னுடைய சேனையை நடத்திச் செல்லும்போது கிளம்பிய தூசியானது எதிர்க்க வந்த பல்லவ மன்னனின் ஒளியை மங்கச் செய்தது; புலிகேசியின் பெரும் படைக்கடலைக் கண்டு காஞ்சிபுரத்தான் காஞ்சிக் கோட்டையில் ஒளிந்துகொண்டான்.... பல்லவர்களின் படையாகிய குளிர்ந்த பனிக்குக் கடுங்கதிராயுள்ள கதிரவனைப் போன்ற அவன் (புலிகேசி) சோழ, பாண்டிய, சேரர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கினான்...’ என்ற அய்கோலிக் கல்வெட்டின் வாசகங்கள் அனைத்தும் எவ்வளவு நிஜம்! இதிலிருந்து என்ன தெரிகிறது? தன் நாட்டின் ஒரு பகுதியை சாளுக்கியர்களிடம் மகேந்திரவர்மர் பறிகொடுத்தார்... அதில் வேங்கியும் ஒன்று.இப்பகுதியை தன் இளைய சகோதரராகிய விஷ்ணுவர்த்தனர் வசம் என் தந்தை ஒப்படைத்தார். இப்போது எங்கள் சித்தப்பாவின் குடும்பம் அப்பகுதியை சீரும் சிறப்புமாக ஆண்டு வருகிறது...’’ பெருமிதத்துடன் பேசிக் கொண்டே வந்த விக்கிரமாதித்தரின் நயனங்கள் சட்டென்று சிவந்தன.‘‘ஆனால், பல்லவர்களின் காசக்குடிச் செப்பேடுகள் என்ன சொல்கின்றன? சாளுக்கிய மாமன்னர் இரண்டாம் புலிகேசியையும் அவருக்குத் துணையாக நின்ற பல அரசர்களையும் காஞ்சிக்கு வடக்கே பதினைந்து கல் தொலைவிலுள்ள புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரவர்மர் புறங்காணச் செய்தார் என்கிறது... அத்துடன் இந்திரனைப் போன்று கீர்த்தி வாய்ந்த மகேந்திரவர்மர் பூமண்டலத்தைப் பாதுகாத்து வந்தார் என சிலாகிக்கிறது...என்றாலும் பல்லவ நாட்டின் வடபகுதியை சாளுக்கியர்களிடம் மகேந்திரவர்மர் இழந்தார் என்ற உண்மையை மட்டும் அவர்களால் மறைக்கவே முடியவில்லை. ஏனெனில் இதன்பிறகு வடக்கே வடபெண்ணை ஆற்றிலிருந்து தெற்கே சோழ மண்டலம் வரை பல்லவ நாடு சுருங்கிவிட்டது.மகேந்திரவர்மருக்குப் பிறகு பல்லவ சிம்மாசனத்தில் அமர்ந்த நரசிம்மவர்மர் காலத்தில் மீண்டும் இரு நாடுகளுக்கிடையில் போர் நடைபெற்றது. நரசிம்மவர்மர் காலத்தில் மீண்டும் என் தந்தை பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தார்.... ஆனால், அவர் காஞ்சியை அணுகும் முன் இருபது கல் தொலைவிலுள்ள மணிமங்கலம் என்னுமிடத்திலும், பரியளம், சூரமாரம் முதலிய இடங்களிலும் பல்லவ சேனைகள் பாய்ந்து வந்து சாளுக்கியப் படைகளைத் தாக்கி முறியடித்தன... என கூரம் செப்பேடு கூரை மீதேறி அறிவிக்கிறது. அதுவும் எப்படி..?‘இம்மரபில் உதயகிரியிலிருந்து (கிழக்கு மலையிலிருந்து) ஆதவனும் நிலவும் தோன்றுவது போல் தோன்றி தலைவணங்காத இம்மரபு மன்னர்களின் மணிமுடியில் சூடாமணி போல் விளங்கி, பகை மன்னர்களாகிய யானைக் கூட்டங்களுக்கு அரிமா போன்று நரசிம்ம மூர்த்தியே மண்ணுலகில் அரசகுமாரனாக அவதரித்ததைப் போல் நரசிம்மன் உதித்தான்...இவன் சோழர், கேரளர், களப்பிரர், பாண்டியர்களைத் திரும்பத் திரும்ப வென்று ஆயிரங் கைகளைக் கொண்டவன் (கார்த்தவீரியன்) போல் விளங்கினான்...பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய போர்களில் புறங்காட்டியோடிய புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தில் ‘வெற்றி’ என்னும் சொல்லைப் பொறித்தான்...இதற்குப் பின் கும்ப முனிவர் (அகத்தியர்), வாதாபியை (வாதாபி என்ற அசுரனை) அழித்ததைப் போல் இவன் வாதாபியை (இரண்டாம் புலிகேசியின் கோநகரை) அழித்தான்...’இப்படித்தானே கூரம் செப்பேடுகள் செப்புகின்றன..?’’ சீறினார் விக்கிரமாதித்தர்.‘‘இவை எல்லாம் உண்மைதானே மன்னா... இதன் காரணமாகத்தானே ‘வாதாபி கொண்ட நரசிம்மன்’ என்ற விருதுப் பெயரும் நரசிம்மவர்ம பல்லவருக்குக் கிட்டியது..?’’ அதுவரை அமைதியாக இருந்த ராமபுண்ய வல்லபர் இடையில் புகுந்தார்.விக்கிரமாதித்தர் பதிலேதும் சொல்லாமல் சில கணங்கள் தன் கண்களை மூடினார். ‘‘மறுக்கவில்லை சாளுக்கிய போர் அமைச்சரே...’’ தழுதழுத்தபடி சொன்னவர் தன் கண்களைத் திறந்தார். ‘‘என் சித்தப்பா நாகநந்தி அடிகள் நாட்டியக்காரியான சிவகாமியை விரும்பினார். தம்பிக்காக சிவகாமியைக் கவர்ந்தார் என் தந்தை. இதற்குப் பழிவாங்க படை திரட்டி வந்து வாதாபியை தீக்கிரையாக்கியதுடன் சிறையிலிருந்த சிவகாமியையும் நரசிம்மவர்மர் மீட்டுச் சென்றார்...இதன்பிறகு பதிமூன்று ஆண்டுகள் நம் தலைநகரான வாதாபி, பல்லவர்களின் வசம்தான் இருந்தது... இந்நிகழ்வுகளை எல்லாம் நான் எங்கே மறுத்தேன் ராமபுண்ய வல்லபரே..?இதற்கெல்லாம் சேர்த்துதானே அதே சிவகாமியின் வளர்ப்புப் பேத்தியான இளையவள் என நம்மால் அழைக்கப்படும் சிவகாமியை ஆயுதமாக்கி பல்லவர்களை பழிக்குப் பழி வாங்க திட்டமிட்டு இதோ காஞ்சிபுரத்துக்கும் வந்திருக்கிறோம்...’’ ‘‘ஆனால், அந்தத் திட்டத்தைத்தான் சாளுக்கிய மன்னரான நீங்கள் தகர்த்துவிட்டீர்களே... நம் ஆயுதமான இந்த இளைய சிவகாமி குறித்த உண்மையை கரிகாலனுக்கு அறிவித்துவிட்டீர்களே...’’ அனந்தவர்மர் பாய்ந்தார்.‘‘நம் திட்டத்தை நான் தகர்த்தேன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்..? சிவகாமி குறித்த எந்த விவரமும் கரிகாலனுக்குத் தெரியாது..!’’சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் இப்படிச் சொன்னதும் அந்த ரகசிய அவையில் இருந்த ஒவ்வொருவரும் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘என்ன சொல்கிறீர்கள் மன்னா..?’’ ராமபுண்ய வல்லபர் வியப்புடன் கேட்டார்.‘‘உண்மையை! கரிகாலனுக்கு இந்நேரம் சிவகாமி குறித்த சந்தேகம் எழுந்திருக்கும்! ஆனால், அவன் அறியப் போவது நாம் மறைத்திருக்கும் உண்மைகளை அல்ல! வேறொரு நாடகம் அங்கே அரங்கேறப் போகிறது!’’‘‘நாடகமா..?’’ அனந்தவர்மரின் குரலில் அதிர்ச்சி பூரணமாக வெளிப்பட்டது.‘‘ஆம்! நாடகமேதான். சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற ஓடி ஒளிந்திருக்கும் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரின் உதவியை நீங்கள் நாட முற்பட்டிருக்கிறீர்களே... அதற்காக இப்படியொரு விசாரணை நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்களே... அப்படி ஒரு நாடகத்தைத்தான் கரிகாலன் முன்னால் இப்போது சிவகாமி அரங்கேற்றிக் கொண்டிருப்பாள்!’’ என்றபடி விக்கிரமாதித்தர் புன்னகைத்தார்! (தொடரும்) கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம் http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15492&id1=6&issue=20190621
 19. பெற்றோர்கள் அமைவது விதி நண்பர்கள் அமைவது மதி இலங்கையில் தலைவர்கள் அமைவது தலைவலி !
 20. இதே மாநாட்டில் இவற்றையும் கூறியிருந்தார். மனித உரிமை மீறல்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாடுகளின் இறைமையில் தலையிட வேண்டாமென நான் குறிப்பாக கேட்டுக்கொள்கின்றேன். அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமும் ஜனநாயகமும் மிகவும் முக்கியமானதாகும். நாடுகளின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டுப்படுத்தவோ நாடுகளின் மீது அச்சுறுத்தல்கள், அழுத்தங்களை ஒருபோதும் பிரயோகிக்கவோ கூடாது என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன். https://tamil.news.lk/fetures/item/30122-cica
 21. விரலுக்கேற்ற வீக்கம் ராசா.... நானெல்லாஆஆஆஆஆஆஆம் இதுக்கு ஆசைப்படலாமா?
 22. தயவு செய்து இயற்கை தந்த கொடையோடை விளையாடாதேங்கோ..... ஏலுமெண்டால் மூண்டு நாளைக்கு சாப்பிடாமல் இருங்கோவன் பாப்பம்.
 1. Load more activity