யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. இலங்கை தமிழனுக்கு பாவம் செய்த நாடுகளிலை உதுவும் ஒண்டு....
 3. ரோட்டில் தோசைக்கடை வைத்திருப்பது சாதனையா??????? நாதமுனி சொன்னமாதிரி கடின உழைப்பாளி.....அதுக்கு பெரிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லலாம். கந்தசாமி திருக்குமார் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். தொழில் எந்தவகையானாலும் உழைப்பு முக்கியம்.
 4. ம்.....ம்ம்ம்ம் இது ஒரு வித கடின உழைப்பு. சாதனை அல்ல...
 5. அடிவாங்கியும் ரோசம் மானம் இல்லாத கிந்தியர். இதையும் கையோடை நினைவு கூர்ந்து மகிழவும்.
 6. அப்படியாயின் ராஜீவ் காந்தியின் பயங்கரவாதத்திற்கு இலக்காகி ஈழத்தில் பலியான 5000 மக்கள்.. மற்றும் தமது அவயவங்களை இழந்த மக்கள்.. மானத்தை இழந்த பெண்கள் சார்பில் தமிழகத்தில் ஒரு பிரமாண்டப் பேரணி நடத்த ஹிந்திய சன நாய் அகம் இடமளிக்குமா...??! அதென்ன ராஜீவ் காந்தி என்பவர் மட்டும் தான் மனிதனோ..??! ராஜீவ்காந்தியால் கொல்லப்பட்டவர்கள் மனிதர்கள் இல்லையோ...??!
 7. Today
 8. ஜனாதிபதி தேர்தல் வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி – மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 7 ஆம் திகதிக்குள் நடத்தப்படும் என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் சட்டமன்றம், நிறைவேற்று அதிகாரி அல்லது அரசாங்கத்திடம் ஆலோசனை பெறவேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையதிற்கு இல்லை. அந்தவகையில் ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த தேர்தல்கள் ஆணையம் எதிர்பார்த்துள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் தினம் மற்றும் தேர்தல் பிரசாரத்தின் காலம் ஆகியவற்றை ஒக்டோபர் நடுப்பகுதியில் அறிவிக்கப்படும். ஆனால் ஜனாதிபதி தேர்தலை அரச விடுமுறை தினத்தில் நடத்த முடியாது” என்றும் கூறியுள்ளார். http://athavannews.com/ஜனாதிபதி-தேர்தல்-வருட-இற/
 9. பாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி உக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து நாடாளுமன்றில் பெரும்பானமையை பெற்றுக்கொள்வதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி, பொதுத்தேர்தல் நடத்தவும் அறிவித்தல் விடுத்துள்ளார். அரசியல் அனுபவமில்லாத வொளடிமீர் சிலேன்ஸ்கி கடந்த மாதம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பாராளுமன்றத்தில் அவருடைய புதிய கட்சியின் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவமும் இல்லை என்பதனால் பொதுத்தேர்தல் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் இடம்பெற்ற ஐந்து ஆண்டுகால மோதலில் 13 ஆயிரம் பேர் கிழக்கு உக்ரேனில் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்நிலையில் அங்கு போர்நிறுத்தத்தை அடைய வேண்டும் என்பதே தனது முதல் இலக்கு என ஜனாதிபதி வொளடிமீர் சிலேன்ஸ்கி கூறியுள்ளார். http://athavannews.com/new-ukraine-president-zelenskiy-dissolves-parliament/
 10. பிறிதொருவருக்கு தீங்கு ஏற்படாத வகையில் இருவர் தமக்கிடையே உறவினை ஏற்படுத்துவது அவர்களது உரிமை. அதனைப் புரிந்து கொண்டு மதித்து நடப்பது நாகரீக சமூகத்தின் பண்பு.
 11. ராஜீவ்காந்தி நினைவு தினத்தில் தமிழகத்தில் அமைதி ஊர்வலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறுகின்றது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில், தமிழக காங்கிரஸ் கட்சி வடசென்னை, தென்சென்னை, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு மாவட்டங்கள் சார்பில் சென்னையில் நடைபெறும் நினைவுநாள் நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர்கள் சஞ்சய்தத், சிரிவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், எம்.கிரு‌‌ஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள். அதேநேரம் மாவட்டங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், தமிழக காங்கிரஸ் சிறப்பு பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கின்றார்கள். அதன்படி திருச்சியில் ப.சிதம்பரம், மதுரையில் கே.ஆர்.ராமசாமி, வேலூரில் கே.வி.தங்கபாலு, தேனியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காஞ்சிபுரத்தில் சு.திருநாவுக்கரசர், கன்னியாகுமரியில் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ராஜீவ்காந்தி-நினைவு-தினம/
 12. #1: கந்தசாமி திருக்குமார் புலம்பெயர் தமிழனின் சாதனை வாழ்க்கை. தனது மண்ணையும் மக்களையும் கூறும் பெருந்தன்மை. … 18 வருடங்களாக நியூயோர்க்கில் தோசை- சிறு வண்டியில்பணமாக வென்மோவா(Venmo) என கேட்பது இவரின் மாற்றங்களுக்கு மாறும் வெற்றியை காட்டுகின்றது. மனைவியுடனும் மக்களுடனும் புலம்பெயர்ந்தவர். இன்று மகள் ஒரு மிக செல்வாக்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளார்.
 13. ஒரினச்சேர்க்கை என்பது ஆணுக்கும் ஆணுக்குமான உறவு, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான உறவு. திருநங்கை என்பவர் ஆணாக பிறந்து பின் உடலில் பெண் தன்மையை பெற்றுக்கொண்டவர். இலங்கை, இந்தியாவில் இவர்கள் சத்திரசிகிச்சை செய்து பெண்ணாக வாழ்வோர். இவர்கள் ஆண்களை திருமணம் செய்வதை ஓரினச்சேர்க்கை என கூற முடியாது. திருநங்கைகளுக்கு தனிச்சட்டம் உள்ளது. வெளிநாடுகளில் திருநங்கைகளிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளார்கள். அது வேறு.
 14. சாதாரண மக்களாக மக்களாக.. மக்களின் உணர்வோடு.. விக்கி ஐயா.. கஜேந்திரகுமார்.. மணிவண்ணன்.. அனந்தி.. கஜேந்திரன்.. சிறிதரன்.. மற்றும் சிலர் பங்கேற்றுள்ளனர். ஆனால்.. சம் சும் மாவை சாவை கும்பல் போகவே இல்லை.
 15. யார் உலகின் முதன்மை வல்லரசு? என்ற கேள்விக்கான போட்டி நடக்கின்றது. சீனா, உலகின் இரண்டவாவது பொருளாதார வல்லரசாக வளர்ந்து, அமெரிக்கவிற்கு சவாலாக வளர்த்து வருகின்றது. இதற்காக, தனது நட்பு நாடுகளாக பணத்தை, கடனை கொடுத்து வளைத்து போடுகின்றது, ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் தென் அமெரிக்காவிலும் சீனாவின் பொருளாதார முதலீடுகள் அதிகரித்து அதன் ஊடாக அரசியல் செல்வாக்கை அதிகரித்து வருகின்றது. பூட்டினின் ஆதரவும் ட்ரம்பின் 'அமெரிக்க முதலாவது ' என்ற கொள்கையும் இந்த சீனாவின் கொள்கைக்கு உதவு நிற்கின்றது.
 16. கடந்த பத்து வருட காலத்தில் எமது சமூகத்தின் ஒற்றுமை வீரியம் குறைந்தே காணப்படுகின்றது. ஒரு நம்பிக்கை தரக்கூடிய தலமை இல்லாத நிலையே காணப்படுகின்றது. இன்றைய சர்வதேச உலகின் அரசியலை உலக பொருளாதார நலன்களை அறிந்து அதன் ஊடாக சிங்கள இந்திய சீன மற்றும் அமெரிக்க நலன்களை அறிந்து எமது மக்களின் வாழ்வியலை மேம்படுத்தக்கூடிய தலைமை தேவைப்படுகின்றது. எமது அரசியல் தலைமைகள் அவர்களின் நிலைப்பாடுகள் அவை மீதான எமது சமூக அழுத்தங்கள் ஆராயரப்படல்வேண்டும். எமது மக்களின் தேவைகளை செய்து முடிக்கமுடியாதவர்கள் தமது பதவிகளை விட்டுக்கொடுக்கவேண்டும். சமூக பொருளாதார மேம்படுத்தலை தொடர்ந்தும் மக்கள் முன்னெடுக்க உள்ளூர் புலம்பெயர் அமைப்புக்கள் மேலும் திட்டமிட்ட முறையில் ஒரு கட்டமைப்பான முறையில் வடிவமைக்கவேண்டும். ஆவணப்படுத்தல்: இன்றுவரை ஒரு நிலையான ஒரு இடமோ இல்லை தொகுக்கப்பட்ட ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை. சர்வதேச ரீதியாக போர்க்குற்றம் என்ற நிலையில் இருந்து திட்டமிட்ட இனவழிப்பு என்பதை மேலும் வலுவாக முன்னெடுக்க வேண்டும். இதன் ஊடாக ஐ.நா. வரை எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டும் . தமிழினம் ஒரு சுய அலசல் செய்யவேண்டும்.
 17. அவங்களை காட்டி இவங்களிட்ட வாங்குவது! எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?! உயிர்த்த ஞாயிறு சம்பவங்களிற்கும் சீன பயணத்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்குமோ?!
 18. திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஅருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடியில் ஆண் - திருநங்கை திருமணத்தை அங்கீகரித்து திருமண பதிவு சான்று வழங்கப்பட்டது. தூத்துக்குடி சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு 31.10.2018 அன்று தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து திருமணத்தை பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர். அப்பொழுது தமிழக சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார்- ஸ்ரீஜாவின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது எனவும், ஆண் மற்றும் திருநங்கை இடையிலான திருமணத்தை பதிவு செய்ய வழிவகை இல்லாததால் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று சார்பதிவாளர் கூறியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். ஆனால் அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தங்களின் திருமணத்தை பதிவு செய்து திருமண பதிவு சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு கூறியது. அதில் அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கலப்புத் திருமணத்திற்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார் -ஸ்ரீஜா தம்பதி பெறத் தகுதியானது என்று கூறியும் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்ய விண்ணப்பம் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் அனைவரின் முன்னிலையில் மோதிரம், மாலை மாற்றி கொண்டனர்.அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தங்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளனர். https://www.bbc.com/tamil/india-48341076
 19. தவிபு இருக்கும் வரை தமிழர்களுக்கு தீர்வு என்றார்கள், அவர்கள் இல்லாதபோது பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டது என்கிறார்கள்.
 20. LGBTQ நீண்ட காலமாக உள்ளது. ஆனால் தம் விருப்பப்படி அதை தெரிவு செய்வோரை விட திட்டமிட்ட வகையில் அவர்களை உருவாக்குவது அதிகரித்துள்ளது. அதற்கு நான் எதிர். உலகத்தில் பல கொடுமைகள் நடக்குது. சொன்னால் என்னை முட்டாள் என நிரூபிக்க நிற்கிறார்கள் (உங்களை சொல்லவில்லை). அதனால் சொல்வதை குறைத்து விட்டேன், விரைவில் நிறுத்தி விடுவேன்.
 21. இதுவரைக்கும் ரணில்,மைத்திரி,நாமல் மூன்று பேரும் போயிருந்தார்கள் ...மெதடிஸ்த ஆலய தாக்குதலுக்கு ஏன் கத்தோலிக்க மதகுரு போக வேண்டும் ?
 22. தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிப முன்னணியின் தலைவர் க.பிருந்தாபன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா பிரதான சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். http://athavannews.com/தமிழரசுக்-கட்சியின்-ஏற்ப/
 23. பொங்குதமிழ் எழுச்சி தூபிக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்! வவுனியா நகரசபைக்கு முன்பாகவுள்ள பொங்குதமிழ் தூபி முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் இறந்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்துடன் உயிரிழந்த உறவுகளுக்காக மலர் தூவி அஞ்சலியும் செலுத்தபட்டது. குறித்த நிகழ்வு, வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை உறுப்பினர்கள், கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். தமிழின அழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வுகள் தாயகப் பகுதிகளிலும், தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் உணர்வுபூர்வமாக பல்வெறு நிகழ்வுகளுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பொங்குதமிழ்-எழுச்சி-தூபி/ கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவுகூரல்! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் குறித்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது நினைவுநாள் பொதுச்சுடர் இறுதி யுத்தத்தினால் உறவுகளை இழந்த ஒருவரால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்க்ள, உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வையடுத்து பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கிளிநொச்சியில்-தமிழ்-தேச/
 1. Load more activity