All Activity

This stream auto-updates     

 1. Past hour
 2. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது மறவேன் மறவேன் அற்புதக் காட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம்
 3. பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோணுதே எங்கேயோ இதயம் போகுதே பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா… பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோணுதே எங்கேயோ இதயம் போகுதே பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா… இளமை இது எங்கும் வயது இரு விழியும் தூங்காது.. இனிமை சுகம் வாங்கும் மனது இனியும் இது தாங்காது… இளமேனி வாடுதே தனலாகவே… (ஹா… ) இளங்காற்று வீசுதே அனலாகவே பதில் இல்லையோ தர…னா…ன…ன..னா… பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோணுதே எங்கேயோ இதயம் போகுதே பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா… அருவி என ஆசை எழுந்து அணைக்கும் சுகம் பார்க்காதோ… உருகும் மனம் உன்னை நினைந்து உணர்வுகளை சேர்க்காதோ… உனக்காகவே ஏங்குதே ஒரு பூவுடல்.. உறவாடும் இன்பமோ திருப்பாற்கடல் பதில் இல்லையோ தர..னா..ன…ன..னா… பொன்மேனி உருகுதே என் ஆசை…(ஹா ) …பெருகுதே ஏதேதோ நினைவு தோணுதே எங்கேயோ இதயம் போகுதே பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா…
 4. இணைப்பிற்கு நன்றி தம்பி நுணாவில்! மண்டுவில் சோலை அம்மனுக்கு அரோகரா. தென்மராட்சி எண்டாலே ஒரே சோலைமயம்தான். அதிலையும் அம்மன் கோவில்கள் எண்டால் சோலைக்கும் குளிர்ச்சிக்கும் பஞ்சமில்லை. மனதுக்கும் சந்தோசமாய் இருக்கும். அதிலையும் மீசாலைப்பக்கம் சொல்லி வேலையில்லை.பிலாப்பழம் மாம்பழத்துக்கு பஞ்சமில்லை.மரக்கறிக்கும் பஞ்சமில்லாத ஊர். மீசாலையாரை மாங்கொட்டை சூப்பியள் எண்டு பட்டபெயர் சொல்லி கூப்புடுவினம். ஆக்கள் கசவாரம் எண்டதாலையோ தெரியாது.
 5. நல்லவேளை, தன் சாவுக்குப் பின், தன்னை கொன்ற ராஜபக்சேவுக்கு, பொன்னாடை போர்த்தும் படி பிரபாகரன் நடேசன் மூலம் அறிவித்தார் என்று சொல்லாமல் விட்டாரே
 6. 5. இலங்கை அனுபவம் அப்பாவை, சித்தப்பாவை ஒட்டியது. அப்பா வைத்தியர் சிவக்குமாரன்னின் நண்பர். வைத்தியர் கண்டிப்புக்கு பெயர் போனவர் ஆனாலும் அப்பாவின் நண்பர் என்பதால் கொஞ்சம் இயல்பாய் இருப்பார். தனியார் மருத்துவ மனையில் ஒருதரம் அப்பாவை பார்த்து விட்டு, அவரே இதைவிட என் கூடுதல் கவனிப்பு அரச மருத்துவ மனையில்தான் கிடைக்கும் அங்கே வாருங்கள் என மாற்றினார் ( இப்படி பட்ட உன்னதத்களும் எம்மத்தியில் இருந்தார்கள்). இதன் பின் அப்பா காலாமாகும் வரை அரச ஆஸ்பத்திரிதான். குறை சொல்ல முடியாத சேவை. என்ன இலங்கை ஆஸ்பதிரிகளுக்கே உரிய மூக்கை பிடுங்கும் மருந்து நாற்றம்தான் ஒரே குறை. 5. சித்தப்பா - தனியார் ஆஸ்பத்திரிக்கு போகும் போதே மூளைச்சாவு ஆகிவிட்டார். எனினும் 3 நாட்கள் செயற்கை உயிரூட்டியில் வைத்து காசை கறந்த பின்னரே விட்டார்கள் . பிகு: கல்வியும் மருத்துவமும், எப்போதும் அரச கையில் இருக்க வேண்டும். பெறும் நிலையில் (point of delivery/service) இலவசமாக இருக்க வேண்டும். இவை இரெண்டிலும் லாப நோக்க தனியார் கம்பெனிகளை விட்டால், அவர்கள் வேண்டும் என்றே அரச அமைப்புக்களை சீரழித்து, தனியாரே சிறப்பு. அல்லது காப்புறுதியே காப்பு எனும் நிலையை உருவாக்குவார்கள். அமெரிகாவை பார்த்தால், ஓபாமா கேர் இற்கு வந்த எதிர்ப்புகளை பார்த்தால் இது புரியும்.
 7. உண்மை தான் நுனா அண்ணா , இவ‌ருக்கு இர‌ண்டு நாக்கு இருக்கு , இவ‌ர் என்ன‌ ம‌னித‌ பிற‌ப்பு என்று என‌க்கு தெரியாது , இவ‌ர் போட்டி இட்ட‌ தொகுதியிலும் ம‌க்க‌ளுக்கு காசு குடுக்க‌ ப‌ட்ட‌து / காசு குடுத்து ஓட்டை வாங்கும் பிராடுக‌ளுட‌ன் கூட்ட‌னி வைச்சு கொண்டு எப்ப‌டி தான் இவ‌ரால் வெளியில் த‌ல‌ காட்ட‌ முடியுது / ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருக்கும் போது வேறு பேச்சு , திமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சா பிற‌க்கு இன்னொரு பேச்சு
 8. மிகவும் அருமையான பதிவு சாமன்யன். எனக்கும் இலங்கையிலும் யூகேயிலும் ஆசுப்பத்திரி அனுபவங்கள் இருக்கு. 1. யூகே NHS ஆனது free at point of service எனும் நடைமுறையில் நடக்கிறது. ஆனால் பொது வரியில் இருந்து கணிசமான அளவு இதற்குப் போகிறது. யூகேயில் தனியார் காப்புறுதிகள் இருந்தாலும், அடிப்படை, மேல்நிலை (கான்சர், bypass surgery, transplant) இப்படி கிட்டத்தட்ட சகல பிரச்சினைக்களுக்கும் தரமான மருத்துவம், இலவசம். முன்னாள் பிரதமர் கமருன் பெரும் செல்வந்தர், மனைவி அவரை விட செழிப்பான குடும்பம். ஆனாலும் அவர்களின் வலுக்குறைந்த குழந்தை ஒன்றை முற்றிலும் என் எச் எஸ் சிலேயேதான் பராமரித்தார்கள். இங்கேயும் எமெர்ஜென்சியில் போனால் காத்திருக்கும் பிரச்சினை இருக்கு. பொதுவாக பெருநகரங்களில் இது அதிகம். ஆனால் எல்லா காத்திருப்பும் ரெகோர்ட் செய்யப்பட்டு. டார்கெட் இற்கு எதிராக மாத முடிவில் அலசப்படும். இந்த டார்கெட் இருப்பதால் எப்படியும் 3 மணதியாலதுக்குள் பார்த்துவிடுவர். 2. இங்கே பெரிய பிரச்சினை படுக்கை. Bed space. Social care செய்ய வேண்டிய ஒரு பகுதி வேலையும் மருத்துவ மனைகள் மீது விழுவதால், விடுவிக்க தயாரான பின்னரும் பல வயதானவர்கள் மருத்துவ படுக்கையில் இருப்பதால் - படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு. எமெர்ஜின்சி வார்டில், கொரிடோரில் கட்டில் போடும் நிலையும் சில சமயம் ஏற்படும். எனது தாயாருக்கு பல நோய்கள். அண்மையில் 3 கிழமை ஆசுபத்திரி வாசன். மிகவும் கண்ணியமான, கனிவான கவனிப்பு. அவரோடு 24/7 நாங்கள் நிண்டது பல தாதிகளுக்கு அதிசயம். அம்மாவுக்க்கு இலவச உணவு, அதையும் தாண்டி எம்மையும் கோப்பியை, பானை எடுத்து சாப்பிடமாறு வேறு கேட்பார்கள். அதுவரை அதிகப்படியான வரி என்று முக்கால் அழும் நான் அன்றுதான் அதன் பலனை உணர்ந்தேன். 3. இங்கே NHS ஒரு தேசிய அடையாளம். அதில் கைவைக்கப் போகிறார்கள், தனியார் மயப்படுத்த போகிறார்கள் என சதா தொழில் மற்றும் லிபரல் கட்சிகள் கன்சவேடிவ்வை தாக்கும். அவர்களுக்கும் அப்படி செய்ய ஆசைதான், ஆனால் அப்படி செய்தால் ஆட்சி பறிபோகும். எனவே சிறுக சிறுக தனியார் மயப்படுத்தலை புகுத்துகிறார்கள். மிக அதிகளவில் ஆசுபத்திரிகளை மூடி விட்டார்கள். 4. முன்னர் NHS ஐ உலகின் பொறாமை (envy of the world) என்பார்கள். இப்போ அந்த சிறப்பு இல்லை எனிலும், ஆதார மருத்துவம், அவசர மருத்துவம், மேல் மருத்துவம், மருத்துவ ஆராய்சி என்பதில் இன்னும் தரமான சேவையே தரப்படுகிறது. இப்போ கன்சேவேடிவ் ஜோன்சனும் கூடுதல் பண ஒதுக்கீடு அறிவித்துள்ளார். பார்க்கலாம்:
 9. Today
 10. தென்மராட்சியின் பழமரக்கிராமம் மீசாலை
 11. ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளால் அதிக‌ம் நேசித்த‌ , த‌மிழ் செல்வ‌ன் அண்ணா , 2006ம் ஆண்டு இந்தியா அர‌சுக்கு புரியும் ப‌டியாய் ஒரு உண்மையை சொன்ன‌வ‌ர் ( முந்தி செய்த‌ பிழையை மீண்டும் இந்தியா செய்ய‌க் கூடாது என்று / இந்தியா சமாதான‌ கால‌த்தில் இல‌ங்கை அர‌சாங்க‌த்துக்கு குடுத்த‌ டாட‌ர் ம‌ற்றும் , போராளிக‌ளின் ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ளை க‌ண் அறியும் க‌ருவிக‌ள் , அதை தாக்கி அழிக்கும் வெடி பொருட்க‌ள் இல‌ங்கை அர‌சுக்கு இந்தியா குடுத்த‌து , இது எல்லாம் வ‌ன்னி த‌லைமைக்கு தெரியும் , 2006ம் ஆண்டில் இந்தியா உத‌வின‌த‌ விட‌ 2008 ம‌ற்றும் 2009ம் ஆண்டு உத‌வின‌து அதிக‌ம் / க‌ணிமொழி , திருமாள‌வ‌ன் , ராம‌தாஸ் , இவ‌ர்க‌ளிட‌ம் கேட்ட‌து போரை நிப்பாட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுங்கோ , எங்க‌ள் ம‌க்க‌ள் செத்து ம‌டியின‌ம் என்று , வ‌ன்னியில் இருந்து அழைப்பு வ‌ர‌ 2ஜீ ஊழ‌லுக்கு சொந்க‌க் காரியான‌ க‌னிமொழி ரெலிபோனை எடுக்க‌ வில்லை , 2009ம் ஆண்டு ராம‌தாஸ்சின் கேலி கூத்தை பின்னாளில் , அண்ண‌ன் மேல் முருக‌ன் ஆதார‌த்தோடு சொன்ன‌வ‌ர் /
 12. டார்கெட் மிஸ் ஆகாம இருந்தா சரி !!!! யப்பா சனீஸ்வரா
 13. இந்தோ- பசுபிக் பிராந்தியப் பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் டில்லிக்கு என்ன சொல்ல வேண்டும்? தீர்மானிக்க வேண்டிய தமிழ் தரப்பு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்தே இந்தியாவுக்குச் செல்ல வேண்டும்? இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்கவுள்ளனர். கடந்த மே மாதம் இரண்டாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திரமோடி சில நாட்களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்திருந்தார். அப்போது கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்த மோடி புதுடில்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிரா கூறுகின்றார். ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கையுடன் இந்தியாவுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள பனிப்போர் தொடர்பாகவே கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் புதுடில்லி செல்வதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அல்லாமல் தமிழ்த் தரப்பாக ஏனைய கட்சிகளின் பிரநிதிகளையும் அழைத்துக் கொண்டு செல்லக் கூடிய நிலைமை ஒன்றை சிவில் சமூக அமைப்புகள் உருவாக்க வேண்டுமென அவதானிகள் கருதுகின்றனர். கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, போன்ற கட்சிகள் இந்தியாவுடன் என்ன பேச வேண்டும் என்பது தொடர்பாக வெளிப்படையாகவே கருத்துக் கூற வேண்டும். அறிக்கை வெளியிட வேண்டும் அத்துடன் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தமது பூகோள அரசியல் நலன்களுக்கு ஏற்ப இலங்கையில் அரசியல் மாற்றங்களும் அமைய வேண்டுமென இந்திய மத்திய அரசு கூறுவதைக் கேட்பதைவிட, தமிழ்த் தரப்பாக இந்தியாவுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்தே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். 1985 ஆம் ஆண்டு திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் முரண்பாட்டில் ஓர் உடன்பாடாகச் சென்று பேசியிருந்தன. எனவே 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து பத்து ஆண்டுகளின் பி்ன்னரான சூழலிலாவது அவ்வாறான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஒன்றை தற்போதைய பூகோள அரசியல் ஏற்படுத்தியுள்ளது. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா அரசியல், பொருளாதார, இராணுவ நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. அமெரிக்காவும் இந்தியாவை நன்கு பயன்படுத்துகின்றது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரான சூழலில் அமெரிக்காவும் இந்தியாவும் தமது பூகோள அரசியல் தேவைக்கா இலங்கை மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதுடன். ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்ளேயே ஏதாவது ஒரு தீர்வை முன்வைத்து விடலாம் அல்லது அது இலங்கையின் உள்ளகப் பிரச்சினை என்ற நிலைப்பாட்டில் இரு நாடுகளும் செயற்படுவதை 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரான நகர்வுகள் கோடிகாட்டுகின்றன. வடக்குக்- கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை இலங்கை மீறிவிட்டதாக இன்று வரை இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடுகளுமே பேசவில்லை. எனினும் காஷ்மீர் மாநிலத்துக்குரிய சிறப்பு அதிகாரங்களை இந்திய மத்திய அரசு ரத்துச் செய்துள்ளமை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது இவ்வாறானதொரு நிலையில் புதுடில்லிக்குச் செல்லவுள்ள தமிழரசுக் கட்சியை மையப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியா சொல்வதையே செவிமடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவே கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, போன்ற கட்சிகள் இந்தியாவுடன் என்ன பேச வேண்டும் என்பது தொடர்பாக வெளிப்படையாகவே கருத்துக் கூற வேண்டும். அறிக்கை வெளியிட வேண்டும். அத்துடன் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசிய இயக்கமாக தமிழ்ப் பிரதிநிதிகள் குழு ஒன்று புதுடில்லிக்குச் செல்ல வேண்டும் என சிவில் அமைப்புகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏனெனில், சர்வதேச உட்படிக்கை மூலமே காஷமீர் மாநிலத்துக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் வடக்குக்-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்தமையும் சர்வதேச ஒப்பந்தமே. அதாவது இந்திய- இலங்கை ஒப்பந்தம் என்பது சர்வதேச ஒப்பந்தமாகும். அதன் மூலமே இல்ங்கைத் தீவில் மாகாண சபைகளும் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை இலங்கை மீறிவிட்டது என்று இன்று வரை இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடுகளுமே பேசவில்லை. எனினும் காஷ்மீர் மாநிலத்துக்குரிய சிறப்பு அதிகாரங்களை இந்திய மத்திய அரசு ரத்துச் செய்து்ள்ளமை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா- பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் காஷ்மீர் விகாரம் தொடர்பாகப் பேச வேண்டும் எனவும் சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றது. எனினும் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை தொடர்பாக இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் நின்று கொண்டு தீர்வை முன்வைக்கலாமென்ற கருத்தையே அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தொடர்ச்சியாகப் பரிந்துரைக்கின்றன. மறுபுறத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்துடன் காஷமீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரங்களையே தன்னிச்சையாகப் பறித்தெடுத்த இந்தியா, ஈழத் தமிழர்களுக்கு எப்படி இறைமையோடு கூடிய சுயநிர்ணய உரிமையை வழங்குமாறு இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. ஆனாலும் பூகோள அரசியல் தேவைப்பாடுகளுக்குள் ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையில் எடுக்க வேண்டிய தேவை தற்போது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்துமா சமூத்திரத்தில் இலங்கையை முக்கியத்துவம் வாய்ந்த நாடாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை சிங்கள ஆட்சியாளர்கள் முன்வைத்துள்ளனர். ஒரு புறம் சீனாவின் பக்கபலத்துடனும் மறுபுறம் அமெரிக்காவின் செல்வாக்கோடும் செயற்பட்டு அந்த இரு நாடுகளின் பூகோள அரசியல் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப இலங்கையை, குறிப்பாக வடக்குக்- கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பகுதிகளை விட்டுக் கொடுத்து இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையைப் பிரதான சக்தியாக மாற்றுவதே சிங்கள ஆட்சியாளர்களின் தற்போதைய நிலைப்பாடு குறைந்த பட்சம் தென்னிந்தியாவிற்குள் கூட இலங்கை ஒரு முக்கிய சக்தியாக மாற வேண்டும் என்ற எண்ணக்கருவை சிங்கள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கின்றனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே இந்த எண்ணக் கரு உருப்பெற்றிருந்தது. ஐரோப்பாவில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அணி இருப்பது போன்று, இந்தோ- பசுபிக் சமுத்திரத்தை மையப்படுத்திய இன்னுமோர் இராணுவப் பாதுகாப்பு அணி ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது. குவாட் (quad) எனப்படும் இந்தப் பாதுகாப்பு அணியை அமெரிக்கா, இந்தியா அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. இதற்கு இந்தியாவிடமே தலைமப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை ஒரு முக்கிய சக்தியாகமாற வேண்டும் என்ற எண்ணக்கருவை சிங்கள ஆட்சியாளர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். அமெரிக்காவுடனான சேபா உடப்டிக்கை கூட இதன் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்ற நிபந்தனைகளை இலங்கை முன்வைத்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. பௌத்த மகாநாயக்கத் தேரர்களும் அதனை அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஒரு புறம் சீனாவின் பக்கபலத்துடனும் மறுபுறம் அமெரிக்காவின் செல்வாக்கோடும் செயற்பட்டு அந்த இரு நாடுகளின் பூகோள அரசியல் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப இலங்கையை, குறிப்பாக வடக்குக்- கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பகுதிகளை விட்டுக் கொடுத்து இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையைப் பிரதான சக்தியாக மாற்றுவதே சிங்கள ஆட்சியாளர்களின் தற்போதைய நிலைப்பாடு. இதன் காரணமாகவே இந்திய மத்திய அரசு இலங்கையோடு பனிப் போர் ஒன்றை நடத்துகின்றது.நரேந்திரமோடி இரண்டாவது தடவையாகப் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு உடனடியாகப் பயணம் செய்தமை கூட இலங்கைக்கான எச்சரிக்கையாகவே சிங்கள ஆட்சியாளர்களினால் நோக்கப்பட்டது. மாலைதீவு எப்படி இந்தியாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதோ அதேபோன்று இலங்கையும் இருக்க வேண்டும் என்ற செய்தியையே நரேந்திரமோடி கொழும்புக்கு வந்ததன் மூலம் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கொடுத்திருந்தார். இந்திரகாந்தி காலத்தில் இருந்து இந்தியாவை சிங்கள ஆட்சியாளர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பது குறித்தும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் புனைகதைகளை நம்பி இந்தியா ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலையில் அவசியமற்ற அச்சமான சூழல் ஒன்றைத் தாமே உருவாக்கிச் செயற்பட்டதனால் இன்று ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர்பாகவும் தமிழ்த் தரப்பு எடுத்துக் கூற வேண்டும் எனவே இந்தப் பணிப்போருக்கு மத்தியில் தமிழ்த்தரப்பு இராஜதந்திரமாகச் செயற்பட்டு ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இந்திரகாந்தி காலத்தில் இருந்து இந்தியாவை சிங்கள ஆட்சியாளர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பது குறித்தும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் புனைகதைகளை நம்பி இந்தியா ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலையில் அவசியமற்ற அச்சமான சூழல் ஒன்றைத் தாமே உருவாக்கிச் செயற்பட்டதனால் இன்று ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர்பாகவும் தமிழ்த் தரப்பு எடுத்துக் கூற வேண்டும். இலங்கை ஒற்றையாட்சி அரசின் சாதாரண கட்சி அரசியலுக்குள் நின்று மோதுப்படாமல், தோ்தல் அரசிலுக்கான தயார்ப்படுத்தல்களில் மாத்திரம் ஈடுபடாமல் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தின் அனுபவங்கள் ஊடே இந்தியா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளை எப்படி அணுகுவது என்ற நிலையை தமிழ்த் தரப்பு உருவாக்க வேண்டிய காலகட்டமிது. இலங்கை அரசியலில் பௌத்த மகாநாயக்கத் தேரர்கள் செல்வாக்குச் செலுத்துகின்றனர் என்பதை தமது இலங்கை குறித்த அரசியல் அனுபவத்தின் ஊடே அறிந்து கொண்ட அமெரிக்கா, இன்று மகாநாய்க்கத் தேர்களையும் சந்தித்து விளக்கமளித்து வருகின்றது. மகாநாயகத் தேரர்களோடும் பேசினால் மாத்திரமே இலங்கைத் தீவில் தமது பூகோள அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டது போன்று வடக்குக்- கிழக்கில் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளோடும் பேசி அவர்களின் அரசியல் விடுதலைக்குரிய ஏற்பாடுகளை செய்தால் மாத்திரமே தமது அரசியல் நலன்களை எட்ட முடியும் என்ற அவசியத்தை உணரத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான சூழலில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் இந்தோ- பசுப் பிரந்தியத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலைமை ஒன்று இருந்தது. https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=1165&fbclid=IwAR1N_kIujjz-BMq-mRany0KjQ2Mtug0b2pLsY6GiUX6c48fYDCmLh9uTulY
 14. 2009 காலப்பகுதியில்( முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு பின் ) ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போ இந்தியாவின் அரசியல் ,தமிழ் நாட்டு அரசியல் பற்றியெல்லாம் பேசினார். அப்போ மேல் கூறிய கூற்றை பற்றி கூறாதவர் இப்போ கூறுவது பொய் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.
 15. வ‌ன்னியில் இப்ப‌ எம்ம‌வ‌ர்க‌ள் இல்லை தானே , அத‌ன் துனிவு தான் திருமாவை இப்ப‌டி பேச‌ வைக்குது , திருமாவின் கேவ‌ல‌மான‌ அர‌சிய‌லுக்காக‌ இத போல‌ ப‌ல‌ க‌தை சொன்னாலும் புலம் பெய‌ர் நாட்டில் உண்மை என்று ந‌ம்ம‌ எம்ம‌வ‌ர்க‌ள் சில‌ர் இருக்கின‌ம் / க‌ருணாநிதி வைக்கோவோட‌ ப‌ய‌ணிச்சு அவ‌ர்க‌ளின் ந‌ரி புத்தியும் ந‌ரி குன‌மும் திருமாள‌வ‌னிலும் தொத்திட்டு / இன்னும் நிறைய‌ பொய்யை அவுட்டு விடு திருமா , த‌லைவ‌ரை உயிருக்கு உயிரா நேசித்த‌ பிள்ளைக‌ள் ல‌ச்ச‌ க‌ண‌க்கில் இருக்கிறோம் அவ‌ர்க‌ளுக்கு தெரியும் எது பொய் எது உண்மை என்று / இவ‌ரை விட‌ அண்ண‌ன் சீமான் ம‌ற்றும் அண்ண‌ன் வேல்முருக‌ன் , எவ‌ள‌வோ வெற்ற‌ர் /
 16. புதிய ஆராய்ச்சியில் தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது எனவும் அதில் தமிழ் மிகப் பழமையான மொழி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும் டேராடூன் இந்திய வன உயர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டன. தெற்காசியப் பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. திராவிடம், இந்தோ–ஐரோப்பா, சீனா–திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த 6 மொழிக் குடும்பங்களில் முதன்மையானதும் பழமையானதும் திராவிட மொழிக் குடும்பமே என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழியை 22 கோடி மக்கள் தற்போது பேசுகின்றனர். இதில் பழைமையான மொழி தமிழ். சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் தமிழ் மொழியின் கல்வெட்டுக்களும் காப்பியங்களும் தற்காலம் வரை காணக் கிடைக்கின்றன எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. http://athavannews.com/புதிய-ஆராய்ச்சியில்-தமிழ/
 17. அரசியல் நோக்கங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல், தங்களுடன் இணைந்து ஒரே நாடு என்ற அடிப்படையில் முன்னோக்கி செல்வதற்காக கைகோர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வட,கிழக்கு இளைஞர் யுவதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு கொழும்பு - தாமரைத் தடாக கலையரங்கில் நேற்று இடம்பெற்றது. இதன்போது வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தங்களிடம் நிலையான தீர்வு உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏனைய பகுதிகளுக்கு வழங்கும் அனைத்து அபிவிருத்திப் பணிகளும், வடக்கு, கிழக்கிற்கும் வழங்கப்படும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. நாட்டிற்கு பாதுகாப்பு என்பது எந்தளவு முக்கியமானது என்பதை குறித்து நாட்டின் ஆட்சியாளருக்கு போதிய அறிவு இருக்க வேண்டும். இந்த நிலையில், நாட்டின் புலனாய்வுத் துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால், நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்ற பதங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், ஊடக சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு வெளியிடும் சுதந்திரம் என்பன தங்களின் கீழ் இல்லாதுபோய்விடுமா என்ற அச்சம் உள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறதே என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துள்ள அவர், தங்களது அரசாங்கத்தின் கீழ் தாங்கள் எப்போதும், ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களுக்கு மதிப்பளிப்பதாகவும், ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/222892/கோட்டாபய-வடகிழக்கு-இளைஞர்-யுவதிகளிடம்-முன்வைத்துள்ள-கோரிக்கை?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf
 18. இது ந‌ம்பும் ப‌டியாய் இல்லை , அன்மையில் காவேரி தொலைக் காட்சியில் திருமாள‌வ‌னால் , நெரியாள‌ர் மத‌ன் கேட்ட‌ கேள்விக்கு இந்த‌ திருமாள‌வ‌னால் ச‌ரிய ப‌தில் அளிக்க‌ முடியாம‌ கோவ‌த்தின் உச்சிக்கே போன‌வ‌ர் / 2013ம் ஆண்டு கூடா ந‌ட்பு கேடாய் முடியும் என்று கொலைஞ‌ர் க‌ருணாநிதி காங்கிர‌ஸ்சை விட்டு வெளிய வ‌ந்த‌ போது இந்த‌ திருமாள‌வ‌ன் என்ன‌ சொன்னார் / 2009ம் ஆண்டு ஈழ‌த்தில் போர் யார் செய்தார்கள் என்று எம் வ‌ன்னி த‌லைமைக்கு ந‌ல்லாவே தெரியும் / அண்ண‌ன் சீமானை 2009ம் ஆண்டு க‌ருணாநிதி கைது செய்து சிறையில் அடைக்கும் போது உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் வ‌ன்னி த‌லைமைக்கு அறிவிக்க‌ ப‌ட்ட‌து / ( இன்றில் இருந்து திருமாள‌வ‌ன் ஒரு பொய்ய‌ன் ம‌ற்றும் நேர‌த்துக்கு நேர‌ம் நிர‌ம் மாறும் கேவ‌ல‌மான‌ ம‌னித‌ர் )
 19. வாஷிங்டன்: தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது புகார் எழுந்துள்ளது. விண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா விசாரணை நடத்தி வருகிறது. ஒரு பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018 ல் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில், சம்மர் வொர்டன், அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் அளித்த புகாரில், மெக்லைன், விண்வெளியில் இருந்து, வங்கி கணக்கை இயக்கியதாக புகார் அளித்துள்ளார். தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மெக்லைன், விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை இயக்கியதை ஒப்பு கொண்டதுடன், தாம் எந்த தவறும் செய்யவில்லை எனவும், சம்மர் வொர்டன் மற்றும் தனது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என பரிசோதனை மட்டும் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக நாசா அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520894
 20. இல்லை சிறி. பெண்களிடம் எப்போதும் செல்லம் கொட்டுவது பிடிக்காது. முக்கியமாக படுக்கையில் கொஞ்சம் முரட்டுத்தனத்தை எதிர்பார்ப்பார்கள்.அங்கும் போய் செல்லம் கொட்டிக் கொண்டிருந்தால் இப்படி ஒரு மாப்பிள்ளை தேவைதானா என்று கிளர்ந்தெழுந்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது.? இப்படியான ஆக்களை ஊரில பொன்னையன் மாதிரி இருக்கிறானே என்று சொல்வார்கள். இதுக்காக மனைவியுடன் செல்லம் கொட்டுபவர்கள் கோபிக்கக் கூடாது. பெண்ணின் குணாம்சங்களை முற்றுமுழுதாக ஆண்கள் கொண்டிருக்கக் கூடாது.
 21. ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற வகையிலேயே சக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தி என்பது உண்மைக்குப் புறம்பானது என பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளரினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உங்கள் மீது காணி சம்பந்தமான சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்றார். அது தொடர்பான விசாரணைகளும் தமிழரசு கட்சி மட்டத்திலே இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியை மட்டத்தில் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டத்திலேயே மூன்று கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர்களை ஒரு குழுவாக அமைத்து பாராளுமன்ற உறுப்பினர் இருவரையும் விசாரிக்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையிலே அவரால் கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறாக நான் காணி அபகரிக்கவும் இல்லை. காணியை களவாக பிடிக்கவும் இல்லை. அதற்குரிய சகல ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றது. அந்த காணிக்கென்று ஒரு வரலாறு இருக்கின்றது. அது எனது கணவரின் தந்தையாருக்கு சொந்தமான காணி. அந்த காணியிலே எனது கணவர் 40 வருடங்களாக வயல் செய்கின்றார், தோட்டம் செய்கின்றார். ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற வகையிலேயே சக பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தி என்பது உண்மைக்குப் புறம்பானது. இதனுடைய விசாரணைகளின் முடிவில் அரசாங்க அதிபர் எழுத்து மூலமாக எனக்கு அறிவித்திருக்கிறார். இது கையகப்படுத்தப்பட்ட காணி அல்ல பாராளுமன்ற உறுப்பினர் என்ற அந்த போர்வையிலேயே நான் இந்த காணியை கையகப்படுத்தவில்லை. எனது கணவருக்கு அது சொந்தமான காணி என்பதை எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றார். விசாரணைகளின் முடிவில் இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/63371
 22. இது உண்மையாக இருப்பினும், வரலாறும், அனுபவவும் காங்கிரஸ் ஈழதது தமிழரிடர்க்கு ஆதரவில்லை என்பது மட்டுமல்ல, எதிரானதும் எனப்து மட்டுமல்லாமல், காங்கிரஸ் வரலாற்று அடிப்படையில் எழுந்த இனப் பிரச்சனைகளை தீர்ப்பதில் கையகலாதவர்கள் என்பதை வரலாறு காட்டி விட்டது. நான் பிஜேபி மற்றும் கிந்தியா இற்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால், எவர் எதை சொன்னாலும், பிஜேபி, இலங்கைத்தீவை பொறுத்தவரையிலான ஈழத்தமிழரின் பிரச்சனையை வரலாற்று அடிப்படையில் நன்றாக புரிந்துள்ளது. அந்த சரியான புரிதலை, வெளிப்படையாக, ஆணித்தரமாக, ஈழத்தமிழர் பிரச்சனையின் எதிர் சாராரான சிங்களத்துக்கு அதிகாரத் தொனியில் வெளிப்படையாக அறிவுறுத்தவும் தயங்கவில்லை. ஈழத்தமிழரின் வரலாற்றையே இல்லாதாக்கியது காங்கிரஸ், சிவ் சங்கர் மேனனின் நேரடியான statement, தமிழர் இலங்கையில் வந்தேறு குடிகள். வரலாற்ற்றில் உண்டாக்கிய, உருவாக்கிய தவறுகளால் பாதிக்கப்பட்டோரை, வரலாற்றின் அடிப்படியில் பின்னோக்கிப் பார்க்காமல், தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு பிஜேபி யே ஜம்மு-காஷ்மீர் இல் தீர்த்தும் வைத்துள்ளது.
 1. Load more activity