Jump to content

மூச்சின் இயல்பும் மகிமையும்


Recommended Posts


                                           மூச்சின் இயல்பும் மகிமையும்
 


{ "மகராஜி" என்று அழைக்கப்படும் பிரேம் ராவத் [ Prem Rawat] அவர்களின்
உரைகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.}




நீங்கள் உயிரோடு இருக்கும்வரை இந்த மூச்சு என்ற அன்பளிப்பு உங்கள் உள்ளே வந்து
கொண்டே இருக்கும். நீங்கள் துயரப்படும்போதும் அது அங்கு இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக
இருக்கும்போதும் உங்கள் மூச்சு அங்கேயே இருக்கிறது. நீங்கள் அழும்போதும் அந்த மூச்சு
தொடர்ந்து அங்கேயே இருக்கிறது. நீங்கள் சிரிக்கும்போதும் அது அங்கேயே இருக்கிறது.இந்த
உலகமே நிலைகுலைந்து போகும்போதும் அந்த மூச்சு தொடர்ந்தும் அங்கேயே இருக்கிறது.
எனவே அத்தகைய உங்கள் மூச்சை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? அது இலவசமானது.
அது விலைமதிக்கமுடியாத பெறுமதிமிக்க ஒரு பொருள். மூச்சு விலைமதிக்கமுடியாதது. அது
உங்களுடன் ஒட்டிக்கொண்டுள்ளது. நீங்கள் அதனை விற்கவும் முடியாது.உங்களுடைய மூச்சை
வேறு எவருக்கும் கொடுக்கவும் முடியாது. வேறெவரும் தம்முடைய மூச்சை உங்களுக்குத்
தரவும் முடியாது. அது உங்களுடன்தான் இருக்கும். அத்துடன் ஒவ்வொரு மூச்சின் உள்ளேயும்
எல்லையில்லாத ஆனந்தம் புதைக்கப்பட்டுள்ளது.


 

 

இந்த மூச்சு உங்கள் உள்ளே வருகிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது எவருக்கும்
தெரியாது.அது வந்து உங்களைத் தொடுகிறது. அங்ஙனம் மீண்டும் மீண்டும் வந்து தொடுவதினால்
மூச்சு உங்களுக்கு உயிர்வாழ்வைத் தருகிறது. அதன் காரணமாக எல்லா அழகான விடயங்களும்
உங்களுக்கு நடைபெறுகின்றன. உங்களின் மூச்சை நீங்கள் எவருக்கும் கொடுக்கமுடியாது.
நீங்கள் உங்கள் மூச்சை வாடகைக்குக் கொடுக்கமுடியாது. இந்த மூச்சை உங்களிடமிருந்து
எவராலும் திருடமுடியாது. அது உங்களுடையதுதான்.


நீங்கள் ஓர் அற்புதம். உங்கள் உள்ளே இந்த மூச்சு வருகிறது.அது எங்கிருந்து வருகிறது என்பது
உங்களுக்குத் தெரியுமா? படைத்தவனின் முத்தமாகிய இந்த மூச்சு உங்கள் உள்ளே வருகிறது;
அது உங்களைத் தொடுகிறது. உங்களுக்கு உயிர்ப்பைக் கொண்டுவருகிறது. உயிர்வாழ்வு
என்றால் என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பார்ப்பதற்கு, கேட்பதற்கு,
உணர்வதற்கு, சிந்திப்பதற்கு, புன்சிரிப்புச்செய்வதற்கு, வாழ்வதற்கு, மகிழ்ச்சியை,ஆனந்தத்தை,
அமைதியை அனுபவிப்பதற்கு உதவிடும் அற்புதப்பொருள். அதுதான் உயிர்வாழ்க்கை.


மூச்சு எனக்குள்ளே வருகிறது. அது வந்து என்னைத் தொடுகிறது. நான் அதனைத் திருப்பி
அணைத்துக்கொள்கிறேன்.
நான் அதனைத் திருப்பிக் கட்டித் தழுவுகிறேன். அதனால்
நன்றியறிதலை என் வாழ்வில்  உணர்கிறேன்.


மூச்சு என்பது மாறாமலே மாறும் ஒரு பொருள். எங்கும் செல்லாமல் அசையும் ஊஞ்சல் அது.
ஏனெனில் அது போகிறது, பின் வருகிறது; அது போகிறது வருகிறது;அது போகிறது வருகிறது.
அதனுடைய ஒத்திசைவில், சந்தத்தில் ஓர் இனிமை இருக்கிறது. அதில் ஓர் உறுதித்தன்மை
இருக்கிறது; அதில் ஓர் அழகு இருக்கிறது; அதில் ஓர் ஆனந்தம் இருக்கிறது. அது மாறாமல்
இடம்பெறும் மாற்றம். இறக்கும்தன்மை  கொண்ட  நாம் அடையக்கூடிய இறவாத்தன்மை அது.
எவராலும் தொடவும் உணரவும் கூடிய தெய்வத்தன்மை அது. அதற்கு நீங்கள் ஒரு புனித
ஆத்மாவாக இருக்கவேண்டும் என்பதல்ல. இந்த மனிதவாழ்வின் தெய்வத்தன்மையை
உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் அந்த நாளிலேயே நீங்கள் உங்கள் உள்ளே புனிதராகி-
விடுகின்றீர்கள். அதாவது உங்கள் உள்ளே. அந்த நாளில்தான் அழகான அந்த முடிவிலாப்
பொருளுக்கு எதிரான எல்லாத் தடைகளும் தகர்க்கப்படுகின்றன.



இந்த விடயங்கள் இந்தத் தராசில் ஆடிக்கொண்டிருக்கின்றன. மூச்சு, விழிப்புணர்வு, பின்பு
ஒன்றுமில்லாநிலை. மூச்சுத்தான் நாம்; விழிப்புணர்வுதான் நாம். இவைகள் நம்மிடமிருந்து
பறிக்கப்படுமாயின் நாம் ஒன்றுமில்லாதவர்கள். அதனால் இப்போது நீங்கள் உயிருடன்
இருக்கும்போது, விழிப்புணர்வுடன் இருக்கும்போது, அந்த மெய்ப்பொருள்மீது உங்கள்
கவனத்தைக் குவியுங்கள். உலகிலுள்ள எல்லாச்செல்வங்களையும் கொண்டு உங்களால்
வாங்கமுடியாத பொருள் என்ன? அது மிகமிக எளிமையானது; மிக இலகுவானது;அத்துடன்
இலவசமானது. அதைப் பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் எத்தகைய முயற்சியும் செய்யத்
தேவையில்லை. மிகுந்த விலைமதிப்புள்ள அன்பளிப்பு. அது என்ன?  அது என்னவென்பதை
நானே உங்களுக்குக் கூறிவிடுகிறேன்: ஒரு மூச்சு.



மூச்சின் உதவி காரணமாகவே உங்களால் உணவைச் சுவைக்கமுடிகிறது; ஒரு மலரை
மணக்கமுடிகிறது; சூரியோதயத்தை இரசிக்கமுடிகிறது. ஏனெனில் இந்த மூச்சு தொடர்ந்து
அங்கு வராவிடின் இந்த விடயங்கள் எதுவும் நடைபெறமுடியாது. மேலும் அற்புதமான
வகையில் நம்மை நிறைவு செய்வதற்கான வாய்ப்பு ஒவ்வொரு மூச்சிலும் இருக்கிறது. அதைப்
பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்!  இந்த மூச்சின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளல் மிகச்சிறந்த
அறிவாகும்; 100 சதவீதமான அறிவாகும். இந்தக் கணத்தின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளல்
100 சதவீதமான அறிவாகும். இந்த உயிர்வாழ்க்கை என்பது ஓர் அன்பளிப்பு என்பதைப் புரிந்து
கொள்ளல் 100 சதவீதமான அறிவாகும்.


நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்; அதுதான் இந்தப் பூமியின்மீதுள்ள மிகமேன்மையான
செய்தியாகும். நீங்கள் சீவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; ஒவ்வொரு வினாடியும் மூச்சு என்ற
அற்புதம் உங்கள் உள்ளே வந்து உங்களை நிரப்புகிறது; உங்களைத் தொடுகிறது. கடவுள்
என்று ஒருவர் இருக்கிறாரா என்று நீங்கள் அதிசயப்பட்டதுண்டா? எத்தனை தடவைகள்
நீங்கள் ஓர் அறையில் இருந்துகொண்டு, " கடவுளே, நீங்கள் உண்மையாகவே இருந்தால்
நான் உங்களைக் காணவிரும்புகிறேன் " என்று சொல்லியிருக்கிறீர்கள்?  ஆனால்  இந்த
எல்லா வேளையிலும் கடவுள் மூச்சுவடிவில் உங்களிடம் வந்து இந்த உயிர்வாழ்வைத்
தந்து ஆசீர்வதித்து இருக்கிறார்.
எல்லா ஆசீர்வாதத்திலும் மிக உண்மையான ஆசீர்வாதம்
அதுதான். அது அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது!
எனவே நேசிக்கவேண்டியதை நேசியுங்கள்.
உயிர்வாழ்வு நேசிக்கத்தக்கது; எனவே உயிர்வாழ்வை நேசியுங்கள். அங்ஙனம் நீங்கள்
உயிர்வாழ்வை நேசித்தால் ஏனைய விடயங்களுக்கான நேசித்தல்கள் அவற்றிற்கு உரியஉரிய
இடங்களில் அமையும்.


உயிர்வாழ்வு என்பது எவ்வளவு எளிமையாக இருக்கமுடியும்? இந்த மூச்சு வருவது போன்ற
எளிமையாக இருக்கவேண்டும். " தூயஅன்பு " என்ற சொல்லை முன்பு எப்போதாவது
கேட்டிருக்கிறீர்களா? இந்த மூச்சு என்பது தூயஅன்பு. அது திரும்பவும் வந்தது. உங்களுக்கு
அந்த அன்பளிப்பைக் கொண்டுவந்தது; மிக உச்சமான அன்பளிப்பு; உயிர்வாழ்வு என்ற
அன்பளிப்பு ......... உங்களின் புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கூர்மைப்படுத்துங்கள். அதாவது
இந்த உலகைப்பற்றிப் புரிந்துகொள்ளும் ஆற்றலை அல்ல; இந்த மூச்சைப்பற்றி புரிந்து-
கொள்ளும் ஆற்றலைக் கூர்மைப்படுத்துங்கள்.


இந்த உலகில் உங்களுக்குச் சொந்தமானதென எதனைக் கூறலாம்? எதுதான் உண்மையில்
உங்களுக்குச் சொந்தமானது? இந்த மூச்சுத்தான் உங்களுக்குச் சொந்தமானது. இதுதான்
உங்களுக்கான அற்புதம்; உங்கள் வாழ்வுக்கான திருவருள். ...........   மனிதர்களுக்குத்
 தரப்பட்டுள்ள மிகநுட்பமான, மிகவியப்பான, மிகஎளிமையான இந்த மூச்சுடனேயே
 ஆனந்தப்படுதல் என்பது ஆரம்பமாகிறது. அதனைப் புரிந்துகொள்ளும், தெரிந்துகொள்ளும்
 தகுதி உங்களிடம் உள்ளது. என்னுடைய வாழ்விலும், உங்கள் வாழ்விலும் இது சாத்தியமானதே.

 

 


முடிவுடைய பொருளும், முடிவில்லாப்பொருளும் சந்தித்து இணைந்துகொள்வதால்
உருவாவதே மனிதவாழ்வு. நீங்கள் உயிரோடு இருக்கும்வரை மூச்சு என்ற அன்பளிப்பு
உங்கள்  உள்ளே வந்துகொண்டேயிருக்கும். உங்களுடைய கடைசிக்கணம்வரை அங்கிருக்கும்
ஒரேயொரு பொருள் இந்த மூச்சு மட்டுமே.
மூச்சு வந்து உங்களை உயிர்ப்பினால் நிரப்புகின்ற
அந்தக் கணப்பொழுதே முடிவுடையபொருளுக்கும் முடிவில்லாப்பொருளுக்கும் இடையில்
எப்போதும் இருக்கக்கூடிய மிகக்குறைந்த தூரமாகும். அவ்வாறாக முடிவுடையபொருளின்
இராச்சியத்தினுள் முடிவில்லாப்பொருள் புகுந்துள்ளது.



உங்கள் வாழ்வின் வலிமைமிகுந்த பொருள்  -- மூச்சு  --  உங்களுக்குத் தெரிவிக்காது வந்து
உங்களை நிரப்புகிறது. அது வந்துபோவதில் ஒரு தாளலயம் இருக்கிறது; அதில் ஓர் எளிமை
இருக்கிறது. நீங்கள் அதற்காக எதனையும் செய்யத்தேவையில்லை. உங்களுடைய
விருப்பங்கள், விருப்பமின்மைகள், எண்ணங்கள், தேவைகள், உங்களின் தேவையற்றவைகள்,
உங்களின் நல்லவைகள், கூடாதவைகள் --- இவை எல்லாம் அங்கு  இடம்பெற்றுக் கொண்டுதான்
இருக்கும். எனினும் இவை எல்லாவற்றிற்கும்  மூலமுதலாக இருப்பது, நுட்பமான, அழகான
இந்த மூச்சே. ஆனால் அந்தக்  காற்றாக இல்லாத அந்தக் காற்று உங்கள் ஊடாக அதிர்ந்து
கொண்டிருக்கிறது.




என்னிலாரும் எனக்கு இனியாரில்லை

என்னிலும் இனியான் ஒருவன் உளன்

என்னுளே உயிர்ப்பாய் புறம்போந்துபுக்கு

என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே.

     ----------    நாவுக்கரசரின் தேவாரம்
.





கூடுதலாக அறிந்துகொள்ள: [கனடா = தமிழில்] : 416 431 5000


                                                     http://www.wopg.org/en/

                                                      http://www.tprf.org/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.