Jump to content

தமிழர் தகவல் மையம்


Recommended Posts

எனக்கு ஒரு யோசனை(ஐடியா) தோன்றுகிறது..

உலகின் எப்போதும் தமிழ்மக்களை நேசிக்கிற நாடு ஒன்றை தெரிவு செய்து... எமக்கு என்று ஒரு சர்வதேச செய்தி தாபனம், தகவல் மையம் எப்போதும்(24மணி) ஆங்கிலத்தில் அதாவது அல் அசிரா, சி என் என், பிபிசி போன்றதுடன் தகவல்மையம் உலகத்தமிழர்களுக்காக உண்டாக்கி.. அதன் மூலம் எங்கள் போரட்டம் நியாயமானது என்பதை சர்வதேச ரீதியில் எப்போதும் செய்யக்கூடியதாகமாற்றினால்... உலகில் எம்போரட்டதில் உடன் முன்னேற்றம் ஏற்படும்..

உதாரணத்திற்கு சுனாமி அழிவு ஏற்பட்ட போது ரிரிஎன் செய்தி தாபனமூலம் இருட்டடிப்பு வெளிச்சமாக்கியது.. தேவையான தகவல்களை வெளினாட்டு செய்தி தாபனங்களுக்கு வழங்கியது.. அது போல் இப்போதும் தேவைகள் அதிகமுண்டு...

ஏன் இதை இப்போது சொல்கிறேன் என்றால் இப்போது இந்த சிங்கள (மனசாட்சியுள்ள) பெண் சொல்லும் உண்மைகளை, இவபோன்று உலகமெல்லாம பலர் இலங்கையை கண்டித்து பல அறிக்கைகளை விடும்போது

அவை சிதறி பலன் இல்லாமல் போகவேண்டிய இடங்கள் போகாமல் தமிழருக்குள் மட்டும் உலாவி மறைகின்றன.. அகவே ஒரு மத்திய தகவல் மையம் காலத்தின் உடனடி தேவை.. உங்கல் கருத்துக்கள் தேவை.. தற்போது இருக்கும் கிடிவி கூட அந்த அளவிற்கு மாற்றியமைக்கலாம்.. அல்லது ....? செயும் போது உலகசட்டஙளை மதிக்ககூடியதாகவும் இலங்கையின் சதியினால் பூச்சாண்டியினால் மூடாமலும் பாதுகாக்கப்பட்வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு யோசனை(ஐடியா) தோன்றுகிறது..

உலகின் எப்போதும் தமிழ்மக்களை நேசிக்கிற நாடு ஒன்றை தெரிவு செய்து... எமக்கு என்று ஒரு சர்வதேச செய்தி தாபனம், தகவல் மையம் எப்போதும்(24மணி) ஆங்கிலத்தில் அதாவது அல் அசிரா, சி என் என், பிபிசி போன்றதுடன் தகவல்மையம் உலகத்தமிழர்களுக்காக உண்டாக்கி.. அதன் மூலம் எங்கள் போரட்டம் நியாயமானது என்பதை சர்வதேச ரீதியில் எப்போதும் செய்யக்கூடியதாகமாற்றினால்... உலகில் எம்போரட்டதில் உடன் முன்னேற்றம் ஏற்படும்..

உதாரணத்திற்கு சுனாமி அழிவு ஏற்பட்ட போது ரிரிஎன் செய்தி தாபனமூலம் இருட்டடிப்பு வெளிச்சமாக்கியது.. தேவையான தகவல்களை வெளினாட்டு செய்தி தாபனங்களுக்கு வழங்கியது.. அது போல் இப்போதும் தேவைகள் அதிகமுண்டு...

ஏன் இதை இப்போது சொல்கிறேன் என்றால் இப்போது இந்த சிங்கள (மனசாட்சியுள்ள) பெண் சொல்லும் உண்மைகளை, இவபோன்று உலகமெல்லாம பலர் இலங்கையை கண்டித்து பல அறிக்கைகளை விடும்போது

அவை சிதறி பலன் இல்லாமல் போகவேண்டிய இடங்கள் போகாமல் தமிழருக்குள் மட்டும் உலாவி மறைகின்றன.. அகவே ஒரு மத்திய தகவல் மையம் காலத்தின் உடனடி தேவை.. உங்கல் கருத்துக்கள் தேவை.. தற்போது இருக்கும் கிடிவி கூட அந்த அளவிற்கு மாற்றியமைக்கலாம்.. அல்லது ....? செயும் போது உலகசட்டஙளை மதிக்ககூடியதாகவும் இலங்கையின் சதியினால் பூச்சாண்டியினால் மூடாமலும் பாதுகாக்கப்பட்வேண்டும்..

நிச்சயமாக இதை தமிழர்கள் எப்போதெ அரம்பித்திருக்கவேண்டும். இனியாவது இதை செய்வார்களா?????

Link to comment
Share on other sites

தமிழின ஆர்வலர்கள், நலனில் ஆர்வமுடையவர்கள் ஒன்று சேர்ந்து அவசர தேவையாக செய்ய வேண்டும்..

மேல் உள்ள எதாவது ஒரு பெயரைப்பயன்படுத்தலாம்.. அல்லது வேறு தெரிவு செய்யலாம்

இலன்டனில் உள்ள பிரிட்டிச் தமிழ் போறம் (பி ரி எப்) போன்ற சேவையமைப்பின் உதவி நாடப்படலாம்..

முதல் வேலையாக இலங்கையின் இனவேற்றுமையை நன்கு அறிந்த எல்லா வெளி நாட்டு அமைப்புகள்,அரசியல் வாதிகள், நிருவனங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தல்..

உலகசெய்திகள். தமிழர்செய்திகள், தொழினுட்ப செய்திகள். சர்வதேச விளம்பரங்கள், முக்கிய் பேட்டிகள் இப்படி சர்வதேச செய்தி தாபனங்களின் தரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.. இதன் மூலம் பார்வையாளர்களின் அளவைக்கூட்டலாம்...

மேல் சொன்ன கூட்டமைப்பை அடிக்கடி கலந்துரையாடல், பேட்டிகள் மூலம் உலகமக்களுக்கு தெளிவான பதில்களை வழங்குதல்..

மேலும் உங்கள் கருத்துக்கள் எதிர்பார்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(...)

இலன்டனில் உள்ள பிரிட்டிச் தமிழ் போறம் (பி ரி எப்) போன்ற சேவையமைப்பின் உதவி நாடப்படலாம்..

முதல் வேலையாக இலங்கையின் இனவேற்றுமையை நன்கு அறிந்த எல்லா வெளி நாட்டு அமைப்புகள்,அரசியல் வாதிகள், நிருவனங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தல்..

உலகசெய்திகள். தமிழர்செய்திகள், தொழினுட்ப செய்திகள். சர்வதேச விளம்பரங்கள், முக்கிய் பேட்டிகள் இப்படி சர்வதேச செய்தி தாபனங்களின் தரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.. இதன் மூலம் பார்வையாளர்களின் அளவைக்கூட்டலாம்...

மேல் சொன்ன கூட்டமைப்பை அடிக்கடி கலந்துரையாடல், பேட்டிகள் மூலம் உலகமக்களுக்கு தெளிவான பதில்களை வழங்குதல்..

மேலும் உங்கள் கருத்துக்கள் எதிர்பார்கிறேன்..

ஒவ்வொரு நாட்டில் இருக்கும் தமிழ் அமைப்பிக்களினூடாக தமிழர் பிரச்சினைகளை புரிந்துகொண்ட அரசியல்வாதிகளினுடைய கருத்துக்ககை பேட்டிகளினூடு வெளிக்கொண்டு வருதல் தற்போதைக்கு முக்கியமானது என்று நினைக்கிறேன்.

தமிழின ஆர்வலர்கள், நலனில் ஆர்வமுடையவர்கள் ஒன்று சேர்ந்து அவசர தேவையாக செய்ய வேண்டும்..

மேல் உள்ள எதாவது ஒரு பெயரைப்பயன்படுத்தலாம்.. அல்லது வேறு தெரிவு செய்யலாம்

புதிதாக ஒன்று ஆரம்பிப்பதை விட, எல்லோருக்கும் தெரிந்த GTVயை நாடுவது நல்லம் என்று நினைக்கிறேன். புலம்பெயர்ந்த பொதுமக்கள்-அமைப்புக்கள் இதற்கு பொருளியல்சார்ந்த உதவிகளை வழங்குதல் கூடியபலனைத்தரும்.

Link to comment
Share on other sites

உங்கட target audience யாரு?

தமிழரா? வேற்று நாட்டவரா?

நீங்கள் கதைப்பது தனிய டெலிவிசனா?

அல்லாது தமிழரின் news wire services (reuters / AFP / AP )?

இப்படி ஒண்டு செய்ய குத்து மதிப்பா எவ்வளவு செலவாகும்.?

தொடர்ந்து மாதா மாதா செலவு என்ன மாதிரி?

KUGGOO உங்கட ஐடியா நல்லது

கட்டாயம் தேவையானது.

ஆனால் உந்த விளக்கங்களோட புலம்பெயர் மண்ணில் எந்த ஊடகமும் இல்லை.

அவை இதை நோக்கி வேலை செய்யப் போறதும் இல்லை.

நாடகம் போட்டாத்தான் சனம் பார்க்கும் என்ற சமாளிப்புக்களைத்தான் இதுவரை கேட்டிருக்கிறேன்.

நீங்கள் சொல்வதன்படி செய்ய இளம் சமதாயம் தான் தேவை.

அதுவும் world class ல செய்ய வேணும்.

பார்ப்பம்.

__________________

தமிழனுக்கு உதவாத ரிவிக்கைளை புலம்பெயர் மண்ணை விட்ட அப்புறப்படுத்தும் புனிதப் பணியில் http://tvtamil.lefora.com

Link to comment
Share on other sites

நல்ல யோசனை. யாராவது முன் வந்து செய்ய வேண்டும் . தனிப்பட செய்வது எனில் நிறைய பணம் வேண்டும்.ஏற்கனவே தொடங்கப்பட்ட தொலைக்காட்சிகள் இலாப நோக்கில் இயங்க தான் நினைக்கின்றன. அதில் ஈழப்பிரச்சனையையும் தாங்கள் கவனமெடுப்பதாக காட்டுகிறார்கள். இங்கு வளரும் தமிழ் (அடுத்த) சமுதாயமாவது செய்யலாம்.

Link to comment
Share on other sites

யோசனைகளை முன்வைப்பது மட்டும் போதாது காலம் தாமதிக்காது அவற்றினை உடனடியா முடிவெடுத்து செயற்படுத்தவேண்டிய காலத்தில இப்ப நிக்குறம், அதிலையும் உடன 108 தொடங்காமல் 1ஐ பலமா தொடங்கினா போதும், எங்கடை ஆக்கள் போட்டிக்கு போட்டி போட்டு 1000 தொடங்குறதாலதான் எல்லாம் குழம்புறது

Link to comment
Share on other sites

STOP THE WAR

Genocide of Tamils எண்டு

யாழ் நிலவன் சொன்ன மாதிரி ஆளாளுக்கு ஒண்ட தொடங்காமா ....

வன்னியில இருந்து வந்த clips எல்லாம் பார்க்க ஒரு இடம் இல்லை.

படங்கள் பார்ப்பம் எண்டா எல்லா நாயும் தன்ட வெப்சைட் பேரை குறுக்கால அடிச்சு வைச்சிருக்கும்.

சரி போஸ்டர் அடிப்பம் பெரிய படமா தாங்கள் எண்டா.... சொறி அது தங்களின்ட படமாம்.

அவனவன் உயிரைக் குடுத்து படம் அனுப்பினா இதுகள் அதை வைச்சு தங்களுக்கு விளம்பரம் தேடுதுகள்.

யாராச்சும் பொதுவா எல்லாருக்கும் கிடைக்க கூடிய மாதிரி ஏதாவது செய்யிறதெண்டா சொல்லுங்க.

சேர்வருக்கான செலவை நான் ஏற்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு முயற்சி இது பேச்சிலேயே இருக்காமல் செயலில் காட்ட வேண்டும் என்னால் ஆன உதவியை நான் செய்யக்காத்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி இது பேச்சிலேயே இருக்காமல் செயலில் காட்ட வேண்டும் என்னால் ஆன உதவியை நான் செய்யக்காத்திருக்கிறேன்

காலம் கடந்த, ஆனால் ஆக்கபூர்வமான சிந்தனை.

KUGGOO,Snegi, Saniyan,Nunavilan, யாழ்நிலவன்,வில்லன் ஆகியோரது கருத்துகள் ஏற்புடையதாகும். ஆனால் இவற்றை உரிய முறையிலே செயற்படுத்தும்போது மட்டுமே தடைகளைத் தகர்த்து காலூன்றி நின்று நிலைத்துச் செயற்பட முடியும். இதிலே நாம் தற்போதுள்ள காணொளிச் சேவைகளை அணுகுதல், குறிப்பாக ஜீ.ரீவீயைக் கூட அணுகலாம். நாம் ஜீ.ரீவீயை அணுகி இப்பொழுது முதலே, தினம்தோறும் நான்குதடவைகள் ஆங்கில மொழியிலே மக்களது அவலங்களை வெளிக்கொணரும் விதமாக சேவைகளை மாற்றியமைப்பது இன்றைய தேவையாகும். இதனை நாம் அனைத்துலகத் தமிழர் தகவற் பலகை என்ற ஒரு குடையின் கீழ் இணைத்து, அதனது காணொளிச் சேவைப் பிரிவாக வடிவமைத்து நடத்தலாம். புலத்திலே வாழ்கின்ற தமிழ்க்குடும்பமொன்று மாதாந்தம் பத்து யூரோ வீதம் போட்டாலே வெற்றிகரமாக நடத்தமுடியும். முன்பு சில காலங்களுக்குமுன் தமிழர் நிதியம் பற்றியும் ஊடகங்களில் பேசப்பட்டது மட்டுமே. செயலாகவில்லை. எனவே பேச்சாக இல்லாது செயலுருப்பெற வேண்டும். தமிழினத்தின் சுவடுகளையும் தொடர்ந்து எமது தலைமுறையிடம் எடுத்துச் செல்லவும் உதவும். இன்று இளையோரிடையே திறமைகள் கொட்டிக்கிடக்கிறது. முயன்றால் சாத்தியமாகும். இதனை நாம் ஒரு சுயாதீனமான அமைப்பாக நிறுவுதலும், தமிழ்த் தேசியத்தை நேசிப்போரைக் கொண்ட அமைப்பாகவும் ஏற்படுத்த வேண்டும். தமிழினம் சிந்திக்க வேண்டியதும் அவசியமானதுமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு கசப்பான விடயமும் சுட்டப்பட வேண்டும். ஏதும் அடிபிடி என்றால் வரிசையா கருத்து வரும். ஆனால், நானுட்பட நாலாவது நாள்தான் கவனிச்சிருக்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி...... உடனே செயற்பட வேண்டும்.

என்னாலான சகல உதவிகளையும் செய்ய காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வாறு யார் எங்கு ஆரம்பிப்பது யாராவது தெரிந்தவர்கள் உதவுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சனையை 58 க்களிலிருந்து சிந்தித்தால் இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

எமது இளையோர் சமுதாயம் புதிய வழிகளில் புதிய சிந்தனைகள் மூலம் எதிரியை ஊடறுக்கமுடியும்.

எமது பிரச்சனையை இன்றுவரை சர்வதேசசமூகம் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை.

அவர்கள் கவனத்திலெடுத்திருந்தாலும் இடையில் சர்வதேசத்திடம் பிச்சையெடுக்கும் தென்கிழக்காசிய வல்லரசு தனது வல்லமையை பிரயோகிக்கின்றது.

எமக்கு தற்போதைய முக்கியத்துவம் அதிரடி முக்கியமும் கூட தமிழருக்கென்று ஒரு ஆங்கில ஊடகம் அதாவது ஒலிஒளி தொடர்புகள்.

அதாவது எமக்கென்று ஒரு ஆங்கில தொலைக்காட்சி,ஆங்கில வானொலி :mellow:

அங்கே எமது அவலவிடயங்கள் பிறமொழிகளில் விவரணப்படமாக ,இசையும் கதையுமாக சித்தரிக்கப்படவேண்டும்.இதுத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது GTVஉடன் தொடர்புகொண்டு இந்தமுயற்சியை ஆரம்பிக்கவும். நான்வசிக்கும்நாட்டிலிருந்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சனையில் சர்வதேசம் ஒரு இரட்டை வேடம் அணிந்து வினொதமான போக்கைக்கடைப்பிடிக்கிறது,,சி

ங்கள்த்தின் இன அழிப்பு நடவடிக்கைக்கு பெயர் "மனிதாபிமான போர்". இந்தியாவில் இருந்து பறந்து வரும் முகர்ஜி போன்றவர்களின் தமிழர் மீதான கரிசனை " தமிழ்ப்பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது அனால் போர் தொடர ஆசிகள் உண்டு" சிங்கள்த்தின் அறிக்கைகள் ஏதோ தமிழன் மீதுள்ள அளவிறந்த கரிசனைகள் இப்படி தமிழர்களை ஏமாற்றிக்கொண்டு உலகம் அமைதியாக ஒரு இன அழிப்பிற்கு அங்கீகாரம் வழங்கி நிற்கிறது அவர்களின் தேவையும் அதுதானானே?

தமிழனனும் தன் பங்கிற்கு ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என்று ஒரு புறமும் மறு புறம் தனது அன்றாட சில்லறை சந்தொசங்களுக்காக பல இலட்சம் டொலர்களை வார இறுதிக்கொண்ட்டாட்டங்கள்,பிற

Link to comment
Share on other sites

நல்ல யோசனை தான். ஆனால் காலம் தாழ்த்திய யோசனை. இந்த வேலையைத் தான் மத்திய கிழக்கு மக்களுக்காக அல்ஜசீரா தொலைக்காட்சி செய்கின்றது. அப்போதே அதே போல் ஆரம்பித்திருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம். இன்று உலகில் அல்ஜசீரா தொலைக்காட்சி முக்கிய இடம் பிடித்து விட்டது போல், எமக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கும். எமக்காக ஒற்றுமையாக இவ்விடயத்தை எவர் செய்ய முன் வருவார்கள் ?? எதை எடுத்தாலும் நான் பெரியவனா அல்ல நீ பெரியவனா என்ற போட்டி மனப்பாண்மை தானே முன்னுக்கு நிற்கின்றது. இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு எமக்கான விடிவிற்காக எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்பட்டு ஒரு தொலைக்காட்சி உருவாகி எமது பிரைச்சினைகளை வெளிக் கொணர்வதோடு, மற்றைய நாட்டவர்களின் பிரைச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றையும் ஒளிபரப்புச் செய்ய முன் வர வேண்டும். அதன் முலம் தான் ஏனைய நாட்டவர்களையும் கவரலாம்.

அதே போல் தமிழ்மொழியில் வரும் மற்றைய தொலைக்காட்சிகளை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, குறிப்பிட்ட இத்தொலைக்காட்சியின் வளர்ச்சியில் போதிய ஆக்கபபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் பல நணபர்களை நாம் சம்பாதிக்கின்றோமோ இல்லையோ நண்பர்களை எதிரிகளாக்காமல் இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

உலகில் அல்ஜசீரா தொலைக்காட்சி முக்கிய இடம் பிடித்து விட்டது போல், எமக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கும். எமக்காக ஒற்றுமையாக இவ்விடயத்தை எவர் செய்ய முன் வருவார்கள் ??

தை எடுத்தாலும் நான் பெரியவனா அல்ல நீ பெரியவனா என்ற போட்டி மனப்பாண்மை தானே முன்னுக்கு நிற்கின்றது.

உண்மை இதுதான், இதை புறந்தள்ளிவிடவேண்டும்.... அத்தோடு ஒரே இலக்காக திட்டமிட்ட பயணம் ஒன்றினை நேரிய இலக்கில் பரந்துபட்ட தேசத்தில் நிலைநிறுத்தவேண்டும்.... நினைத்தால் முடியும், சாதிக்கலாம், யார் ஆரம்பிப்பது, யார் தலமைதாங்குவது என்னும் ஓர் கேள்வியே இங்கே நீடிக்கின்றது.... இதில் அனுபவமுள்ளவர்களாக முகாமைத்துவத்திலும் தமிழிலும் அனுபவம் உள்ளவரான லோசனை இங்கே நிறுத்தலாம்... இது என் தனிப்பட்ட கருத்து... சரிவிலிருந்த ஓர் வானொலியை தட்டி எழுப்பிய பெருமை அவரைச்சாரும் என்பதானால் ஒழிய வேறெந்த கருத்துமில்லை.....

Link to comment
Share on other sites

முதலில் கருத்துக்கள் ஆலோசனை எழுதிய எல்லோருக்கும் நன்றி..

ஒரு விடையம் எல்லோரும் இதன் தேவையை உணர்ந்துள்ளீர்கள்..

இனி ஜி ரிவி யுடன் ஒரு பகுதியாக முக்கிய நேரங்களில் ஆங்கிலத்தில் செய்திகளாக ஆரம்பிக்கலாம்.

அல்லது சர்வதேச செய்தி தாபனமாக முழு நேர ஆங்கிலத்தில் மற்றைய செய்தி தாபனங்களுக்கு நிகராக தமிழ்மக்கள் நலன் அன்பர்கள் எல்லாம் எம்மக்களின் கதியை கருத்திற்கொண்டு எந்த வேற்றுமையின்றி ஒற்றுமையாக தனிப்பட்ட இலாபம் இன்றி

எமது தமிழரின் உண்மையான செய்திகள் உலகம் முழுவதும் சென்று அடைதல்

என்பதே முழு நோக்காக செயல்படவேண்டும்..

எந்தவித நெருக்கடிவந்தாலும் தொடர்ந்து நடத்தக்கூடியதாக அடித்தளம் உறுதியாக அமைத்தல். முக்கியமானது..

எமது நோக்கம் எப்போதும் சரியான திசையில் செல்லவேண்டும்..

எமக்கு எப்போது சுயவிளம்பரம் இல்லாத எம்மினத்தின் இக்கட்டு நிலையை எப்போதும் மறவாமல் எம்மால் முடியும் என்னும் துணிச்சலுடன்

யார் குத்தினாலும் அரிசியாக வேண்டும்.. அதாவது எமது நோக்கம் சரியாக நிறை வேற வேண்டும்..

உங்கள் ஊக்கம் என்னை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுகிறது.. நன்றி.

மேலும் பயனுள்ள கருத்துக்கள், தகவல்களை தாருங்கள்..

Link to comment
Share on other sites

நம் உறவுகள் தினம் தினம் கொல்லப்படும் போது ஏன் எம்மக்கள் உணர்ச்சி கொண்டு ஒருவேளை எழுகின்றார்கள் மறுநிமிடமே அடங்கிப்போகின்றனர். 50 பேர் கொல்லப்பட்டனர் எண்டதும் ஒருமுறை கொதித்தெழுந்தனர், பின்னர் 100 என்று வந்ததும் அதற்கு கொதித்தெழுந்தனர், பின்னர் 100இற்கு கீழ் மதிப்பற்று போனதும் பின்னர் 300 எண்டதும் எல்லாரும் பதைத்தனர், துடித்தனர், ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர், பின்னர் தாமாக அடங்கிக் கொண்டனர், அதன் பின்னர் 300இற்கு கீழ் மதிப்பிழந்துபோனது, அப்படியானால் இனி மீண்டும் எம்மவர்கல் கொதித்தெழ வேண்டுமாயின் இழப்பு 300இலும் கூடவாக இருகவேன்டுமா??? அப்போ எங்கள் மக்களின் இறப்பிலேயே போராட்டம் கொண்டுசெல்லப்பட வேண்டுமானால் போராட்டம் முற்றுப்பெறும் சந்தர்ப்பத்தில் எம்மவர்கள் யாரும் இருக்கமாட்டார்கல் போலும்.... எப்படி காசாவில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தனர்? சிறிது காலத்துக்குள் அவர்களால் ஈர்க்க முடிகின்றது? அப்படியானால் நாம் போராடும் வழிமுறைத்தவறா இல்லை நாம் இன்னமும் பலமாக போராடவேண்டுமா? இனியும் காலம் தாழ்த்தாது நாம் எல்லாரும் விரைவாக செயற்படவேண்டியகாலமிது.... சரியான வழிகாட்டிகள் இல்லாமையே இப்போராட்டங்கள் மழுங்கடிக்கப்படக்காரணமோ அல்லது நம்மவர்கள் தாம் ஒவ்வொருவரும் தாம், தம் பெயர் நிலைக்க வேண்டுமென போராடுகின்றதனாலோ இச்சரிவு நிலை. உறுதியாக ஒரு சொல்லில் போராடுவோம். வேற்றுமை மறப்போம். ஓரனியிற் திரள்வோம்.

Link to comment
Share on other sites

நண்பர்களே,

நான் அண்மையில் இடம்பெற்ற ஓர் சம்பவம் பற்றி அறிந்ததும் மனவேதனை அடைந்தேன், ஏன் எம்மவர்கள் இவ்வாறு இருக்கின்றார்கள் என்று நினைத்து வருந்தினேன்....அதனை தங்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

நம்மவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர் காணொளிகளை நீங்கள் வெளிநாட்டவருக்கு அனுப்புங்கள் என்று... நானும் சந்தோசப்பட்டேன் ஓய்வு நேரத்தில் அவர்கள் அவற்றினை அவதானித்து எம்மவர்களின் பிரச்சனைகள் பற்றி புரிந்துகொள்வார்கள் என்று...

இங்கே நடந்திருப்பதோ யாரும் எதிர்பார்க்காதது, எம்மவர்கள் காணொளிகளை யூ ரியூப்பிலிருந்து தரவிறக்கம் செய்து இறுவட்டில் தரவேற்றம் செய்து அனுப்பியுள்ளார்கள் அதன் பிரதி ஒன்று கிடைக்கப்பெற்றது நானும் அவதானித்தேன், அதிலே நம் உறவுகள் கொல்லப்பட்டுக்கிடக்கும் நிறைய காணொளிகள் காணப்பட்டன ஆனால் உற்றுக்கெட் கும்போதே தெரிந்துகொண்டேன் அவற்றை சிங்களவர்கள் தரவேற்றம் செய்திருக்கின்றார்கள் என்று. எமது காணொளிகளுக்கே ஆங்கிலத்தில் அவர்கள் தவறான வழிகாட்டல்களைக் கொடுத்திருக்கின்றார்கள். ஆங்கிலம் சரியாகத் தெரியாத நம்மவர்கள் சிலரும் அவற்றை தரவிறக்கம் செய்து அவற்றினை அனுப்பியதனால் கடைசியாக வென்றது அவர்களே தான். எம்மவர்கள் அவர்களது பொய்ப் பிரச்சாரத்தை தெரிந்தோ தெரியாமலோ அனுப்பியதனால் அதனைப் பார்த்தவர்கள் கண்டிப்பாக தமிழர்களது நியாயமான போராட்டத்தினை தவறாகவே எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்பது ஓர் சிறந்த உதாரணம் நாம் மிக விரைவில் எமக்கான ஓர் ஆழமான ஊடகம் தேவை என்பது....

Link to comment
Share on other sites

நாங்கள் எல்லாம் அடிப்படை சரியில்லாம கதைக்கிறம் எண்டு நினைக்கிறன்.

முதலாவது: ஊடகம் எண்டா தொலைக்காட்சியை மட்டும் அடிப்படையா வைச்சுக் கதைக்கிறம்.

இரண்டாவது: அல்ஜசீரா எண்டுறம். அவங்கட ரிவில தனிய மத்திய கிழக்கு நாடுகளின்ட பிரச்சனையை மட்டும் கதைக்கிறல்ல.

அதோட அதில வேலை செய்யிற நிரம்பப் பேர் வெள்ளைக்காரங்கள்.

எங்களால எங்கட பிரச்சனையை unல கதைச்ச மெக்சிகோவ கூட ஏனப்பா நீ கதைச்சனி எண்டு கேட்டு சொல்ல ஒருத்தர் இல்லை.

சரி அது கிடக்கட்டும். இப்பவாவது யோசிக்கிறமே.

எண்ட முக்கியமான கேள்வி.

ஊடகம் ரிவி எண்டெ வைச்சுக் கொள்வம்.

அதை மற்ற நாட்டவர்கள் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

ஏதோ அல்ஜசீரா மாதிரி வளர்ந்திட்டுது.

கொஞ்ச சனம் பார்க்குது எண்டே வைச்சக் கொள்வம்.

பிறகு....

அவையள் பார்த்தா என்ன நடக்கும்?

நாடு கிடைச்சிடுமா?

நான் பேய்த்தனமா கேக்கிறன் எண்டு நினைக்காதீங்கோ.

எதை செய்ய போறம் . .அதின்ட விளைவு என்னவா இருக்க வேணும் எண்டதில தெளிவு முக்கியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(...)

எண்ட முக்கியமான கேள்வி.

ஊடகம் ரிவி எண்டெ வைச்சுக் கொள்வம். அதை மற்ற நாட்டவர்கள் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? ஏதோ அல்ஜசீரா மாதிரி வளர்ந்திட்டுது. கொஞ்ச சனம் பார்க்குது எண்டே வைச்சக் கொள்வம்.

பிறகு....

அவையள் பார்த்தா என்ன நடக்கும்?

நாடு கிடைச்சிடுமா? நான் பேய்த்தனமா கேக்கிறன் எண்டு நினைக்காதீங்கோ. எதை செய்ய போறம் . .அதின்ட விளைவு என்னவா இருக்க வேணும் எண்டதில தெளிவு முக்கியம்

Saniyan, நாடுகிடைச்சிடும் என்பதற்காக தொலைக்காட்சியை தொடங்க விருப்பப்படவில்லை. முக்கியமாக பல்லின அடித்தட்டு மக்களுக்கு நமதுபோராட்டத்தின் நியாயம் சென்றடையவேண்டும் என்பதே குறிக்கோள். முக்கியமாக பலஸ்தீன் பிரச்சினை பற்றிதெரிந்திருக்கும் உலகமக்களுக்கு தமிழீழப்பிரச்சினைபற்றி நூற்றுக்கு 1விகிதம்கூட தெரியாது. இதுக்கு நாமன்றி வேறுயார் காரணமாக இருக்கமுடியும்? :rolleyes:

------------------------------------------

உறவுகளே... இப்பகுதியில் காத்திரமான தொலைக்காட்சியை எப்படி உருவாக்குவது என்பதை பற்றிய ஆக்கங்களை மட்டும் முன்வையுங்கள். இப்பகுதிக்கு தேவையற்ற விவாதங்கள், பத்தியின் முக்கியத்தன்மையை குறைப்பதுடன், நமது targetஐ வேறுதிசையில் கொண்டு சென்றுவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி இலவச பக்கங்களை நாம்பாவிப்பதால்தான் சிலவிடையங்கள் நமக்கெதிராக வந்து முடிகின்றது. இதனால்தான் யாழ் மாதிரி தமிழர்கள் தமக்காக பதிவேற்றம் செய்யத்தக்கதொரு இணையத்தளம் தேவை. அதை கண்காணிப்பதற்கு உலகத்தில் உள்ள (குறைந்தபட்சம்) யாழில் உள்ள இணைய தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவி தேவை. ஆரம்பித்து வைக்க நான் தயார். கொண்டு நடத்த யாழ் உறவுகள் தயாரா????? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.