Jump to content

எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ?

Recommended Posts

இதை யாழ் இணையம் அனுமதிக்குமா இல்லையா என்பதால் முதலில் வேறொரு தலைப்பின்கீழ் இணைத்தேன், அது தூக்கப்படாமல் இருப்பதால் புதிய தலைப்பில் இணைக்கிறேன்.

இது எனது தனிப்பட்ட கருத்து, இதனால் ஏதேனும் பின்விளைவுகள் வருமென்றால் நீக்கி விடுங்கள்.

இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ?

எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ?

அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள்.

எங்குமே இல்லாத "தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்" இந்தியாவில் மட்டும்தான் உள்ளது.

நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே...

உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தமிழகமே திரண்டுள்ளது, ஆனால் நீங்கள் மட்டும் பின்நிற்பது ஏன் ?

நாள்தோறும் உங்கள் அயல் நாட்டிலே உங்கள் உறவுகள் செத்து மடிகிறார்கள், சாவின் விழிம்பிலே நிற்கிறார்கள்.

பச்சிளங் குழந்தைகள் பாசத்தை அறியமுன் பாடைக்கு போகிறார்கள்

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க ஒரு பாயின்றி, நாள்தோறும் பதுங்கு குழிகளுக்குள் பயத்தோடு அடைந்து கிடக்கிறார்கள்.

கேட்ப்பதற்கு யாரும் இல்லை, நாங்கள் கத்துகிறோம், வீதி வீதியாய் சென்று கெஞ்சுகிறோம், கண்டுகொள்ள யாருமில்லை.

சர்வதேசமே ! சிங்கள அரக்கர்களை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களே !

இதுதான் உங்கள் மனித நாகரீகமா ?

அன்பான தொலைக்காட்சிகளே, உங்களுக்கும் கேட்க்கவில்லையா ? இல்லை கேட்டும் செவிடர்களாக நடிக்கறீர்களா ?

அண்மையில் காஸாவில், இஸ்றேல் தாக்குதல் நடத்த, காஸாவில் நடப்பவற்றை அனைத்து அரபு தொலைக்காட்சிகளும்

அதையே, அமை மட்டுமே ஒளிபரப்புச் செய்தன. அது உலகெலாம் சென்றடைந்தது, உரியவர்களை ஈாத்தது.

ஆனால் !!! நீங்கள் என்ன செய்கறீர்கள் ? உங்கள் உறவுகளுக்காக, தமிழ்பேசும் உறவுகளுக்காக என்ன செய்கிறீர்கள் ???

குறைந்த பட்சம் உங்கள் செய்திகளிலாவது "உண்மையை" ஒளிபரப்ப முடியாது என்றால், எதற்காக உங்கள் சேவை ???

வெளிநாட்டு ஊடகங்கள்கூட தயங்காமல் உண்மையை உரைக்கின்றன, உங்களால் மட்டும் முடியாது என்றால் ???

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.

உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".

உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".

உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".

உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".

உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".

உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".

உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".

உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".

உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".

உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".

உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".

உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.

உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.

அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.

மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.

உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்.

நன்றி.

தாயகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத் தொலைக்காட்சிகளில் மக்கள் தொலைக்காட்சி ஒரளவு ஈழ அவலங்களை சொல்கிறது. மற்றையவை( குறிப்பாக சன், ஜெயா) சிறிலங்கா அரசின் பொய்ச் செய்திகளை அதிகளவில் வெளியிடுகிறது. ஆனால் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரெலியாவில் இத்தொலைக்காட்சிகள் பல ஈழத்தமிழர்கள் விடுகளில் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதைக் காணலாம். சிங்கள அரசின் பொய் செய்திகளை கேட்டும் , அது பொய் என்று தெரிந்தும் இவர்கள் இந்தத் தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு தருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட!! இவ்வளவு நிகழ்ச்சிகள் இருக்கோ? தாயகன் அவர்களே நீங்கள்சொல்லித்தான் எனக்குத்தெரியும். எங்கள் கண்டனங்களைத்தெரிவிக்க வேணும். தெரிவித்துக்கொண்டும் இருக்கின்றேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் தாயகன்!

தங்கள் கருத்து வலுவானதே...!

மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி போன்றவை தமிழீழ ;அவலத்தை வெளிக்கொண்டு வருகின்றன. அவற்றில் மக்கள் தொலைக்காட்சியில் ஈழம் நேற்றும் இன்றும் என்ற நிகழ்ச்சி கடந்த கால நிகழ்வுகளின் உண்மையை வெளிக்கொண்டு வருகின்றன.

தாயகன் அனைவரும் இணைந்து தமிழ்தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இணையமடல் தாக்குதல் செய்தால் என்ன?

Link to comment
Share on other sites

சொல்வதன் மூலம் மட்டும் அவர்கள் ஒளியேற்றீடப்போறார்களோ??? நினைத்தாலும் அதிகாரம் அதாவது தமிழ்நாட்டு அரசு அங்கீகரிக்கவேணுமே, அழுத்தம் அங்கேயிருந்துதான் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன். இதனிடையே இரண்டு கருணாவிற்கும் இடையில் நெருங்கிய நேரடித்தொடர்புகள் பேணப்படுவதாக ஒரு செய்தி உலவுகின்ற வேளையில் எப்படி உண்மை வெளிவரும்???

Link to comment
Share on other sites

வாய்களால் உரைக்க முடியும், மெய்களிப் பொய்த்துப்போகின்றனவே, முடியாதுன்னு எதுவுமில்லை என்பது தெரியும், முடிக்கவேனும். என்னால் அது சாத்தியப்படவில்லை. அதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் முளைவிட்ட ஆரம்ப காலத்தில் தமிழீழத்தின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் சூறாவளி ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் அழிவு ஏற்பட்டிருந்தது பாதிக்கப்பட்ட மக்களிற்கு எவ்வாறேனும் உதவி செய்யவேண்டும் என்று விரும்பிய விடுதலைப்புலிகள் அந்த நேரம் அமைப்பின் மொத்த நிதியில் இருந்து அரைவாசியை கொடுக்க அனைவருமாக முடிவு செய்த்தனர் அந்த நிதி கூட குருவி கூடு கட்டுவது போல உடல் வருத்தி விடுதலைக்காக சேர்த்த நிதி இலங்கை ரூபா 5000 கொடுக்கப்பட்டது பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு.

அந்த பணம் மக்களுக்கான ஆத்மார்த்தமான சேவையூடாக வழங்கப்பட்டதாக இருக்கவேண்டும் என கூறிய தமிழீழ தேசியத்தலைவர் அதற்காக ஒரு வேளை சாப்பாட்டை நிறுத்தியிருந்தார் அனைத்து உறுபினர்களுக்கும்.அதன் மூலமே அந்த 5000 ரூபா பெறப்பட்டதாக இருக்கவெண்டும் என விரும்பினார்.

நாம் இந்திய தொலைக்காட்சிகளை இவற்றை ஒளிபரப்பாதே என கட்டளை போடுவது சரியாக இருக்குமா?

நமது முதுகுகளைப்பாருங்கள் எவ்வளவு அழுக்குகள்?ஒரு பக்கம் சாவின் ஓலம் மறு புறம் சில்லறை சந்தோசங்களுக்காக சிறிய குடும்ப நிகழ்வுகளுக்கு கூட ஊரையே புலம்பெயர்ந்த நாடுகளில் கூட்டி காசை இறைக்கின்றனர் அதனை அம்மக்களின் துயர் துடைக்க பயன்படுத்தினால் என்ன?

இதனைத்தான் ஊருக்கு உபதேசம் என்று சொல்வார்களா என்ன?

நாம் முதலில் எமது பங்கை கடமையை ஆத்மார்த்தமாக செய்வோம்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இரஸ்யா ஆக்கிரமிப்பாளரின் பிடியில் சிக்கி அவலப்பட்டுக்கொண்டிருந்தது கிளர்ந்தெழுந்த மாண்வர் சமூகம் ஸ்ராளினிடம் போய்க்கேட்டார்களாம் நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை சொல்லுங்கள் நாம் செய்கிறோம் அதற்கு அவர் சொன்னாராம் உங்களுக்கு 3 கடமைகள் உண்டு

1.படிப்பு

2.படிப்பு

3.படிப்பு

எமது பொறுப்புகளையும் கடமைகளையும் மற்றவர் மேல் சுமத்தாதீர்கள்

Link to comment
Share on other sites

இதனிடையே இரண்டு கருணாவிற்கும் இடையில் நெருங்கிய நேரடித்தொடர்புகள் பேணப்படுவதாக ஒரு செய்தி உலவுகின்ற வேளையில்

நிலவன் என்ன சொல்கிறீர்கள்?? :rolleyes:

Link to comment
Share on other sites

எமது பொறுப்புகளையும் கடமைகளையும் மற்றவர் மேல் சுமத்தாதீர்கள்

மற்றவர்கள் மேல் சுமத்துகிறோமா ???

அப்போ அவர்கள் செய்வது சரி என்று சொல்லுகிறீங்களா ?

எமக்கு எந்த விதத்திலும் உதவாத இந்த மாதிரியான ஊடகங்களை ஏன் நாடிச்செல்லுகிறார்கள் எம்மவர்கள் ?

என்னையா இது பக்கத்தில் இருந்து கொண்டு இதைப்பற்றி வாய்திறக்காமல் இருக்கலாமா ? இது அவர்கள் பொறுப்பும் கடமையும்.

இப்போது விளங்குது தானே இவை எல்லாம் அரசியல் நோக்குடன் தான் இயங்குகின்றனவே தவிர மக்களுக்காக இல்லை.

Link to comment
Share on other sites

காலம் செல்லச்செல்ல வெட்ட வெளிச்சமாகும் அதாவது இலங்கையில இருந்து இந்தியாவுக்கு அடிக்கடி தொலபேசுதாம்.... இடைக்கிடை ஆக்களும் எட்டிப்பார்க்குதாம்... இப்ப வரைக்கும் 2தான், இனி எத்தனையோ???

Link to comment
Share on other sites

யாழில் இருந்து கொண்டு கண்டன் தெரிவிப்பதில் என்ன பலன்... உங்களது கண்டனங்கலை எழுதி அவர்களிற்கு அனுப்பினால் அதன் பலன் அதிகமாய் இருக்குமென்பது எனது கருத்து....குறிப்பாள யெயா விஐய் நிறுவனங்கள்.....

யாழில் நாலு கட்டுரை எழுதுவது அலது கண்டனங்கள் தெரிவிப்பதால் கிடைப்பது இஞகுள்ள ஒருசிலரின் பாரட்டுக்களும் தனிமடலில் அணட்டையும்.....

வெளியே வாருங்கள் போராட நிறைய கள்ங்கள் இருக்கின்றன.....

நன்றி

வணக்கம் ஐயா !

யாழை குறைத்து மதிப்பிட்ட உங்களை எண்ணி வருந்துகிறேன்.

இங்கே யாரும் பாராட்டுகளையோ அல்லது தனிமடலையோ (உங்களுக்கு வந்தபடியால் இப்படிச் சொல்வத தவறு) எதிர்பாாத்து செயல்ப்படுவதில்லை.

யாழைப் பொறுத்தவரை இது பல்லாயிரக்கணக்கான வாசகளின் வரவு உள்ள ஊடகம், இங்கு இணைப்பதால் அனைவரையும் சென்றடையும் வாய்ப்பு உள்ளது.

இங்கு இணைகஇகப்பட்டதன் நோக்கமே எம்மவர்கள் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்பதால்த்தான், இங்கே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது, எழுதப்பட்டுள்ளது, அனைவரும் கண்டனங்களை அனுப்புங்கள் என்று சொல்லியா புரியவேண்டும் ??? மேலே 'tigerblade' கூறியிருந்தார், அவருக்கு புரிந்துள்ளது.

நீங்கள் ஏதாவது எழுதவேணும் என்பதற்காக விதண்டாவாதமாக எழுத நினைத்தால் என்ன செய்வது ?

மீண்டும் ஒருமுறை யாழை குறைத்து மதிப்பிட்ட உங்களை எண்ணி வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

இதை யாழ் இணையம் அனுமதிக்குமா இல்லையா என்பதால் முதலில் வேறொரு தலைப்பின்கீழ் இணைத்தேன், அது தூக்கப்படாமல் இருப்பதால் புதிய தலைப்பில் இணைக்கிறேன்.

இது எனது தனிப்பட்ட கருத்து, இதனால் ஏதேனும் பின்விளைவுகள் வருமென்றால் நீக்கி விடுங்கள்.

இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ?

எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ?

அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள்.

எங்குமே இல்லாத "தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்" இந்தியாவில் மட்டும்தான் உள்ளது.

நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே...

உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தமிழகமே திரண்டுள்ளது, ஆனால் நீங்கள் மட்டும் பின்நிற்பது ஏன் ?

நாள்தோறும் உங்கள் அயல் நாட்டிலே உங்கள் உறவுகள் செத்து மடிகிறார்கள், சாவின் விழிம்பிலே நிற்கிறார்கள்.

பச்சிளங் குழந்தைகள் பாசத்தை அறியமுன் பாடைக்கு போகிறார்கள்

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க ஒரு பாயின்றி, நாள்தோறும் பதுங்கு குழிகளுக்குள் பயத்தோடு அடைந்து கிடக்கிறார்கள்.

கேட்ப்பதற்கு யாரும் இல்லை, நாங்கள் கத்துகிறோம், வீதி வீதியாய் சென்று கெஞ்சுகிறோம், கண்டுகொள்ள யாருமில்லை.

சர்வதேசமே ! சிங்கள அரக்கர்களை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களே !

இதுதான் உங்கள் மனித நாகரீகமா ?

அன்பான தொலைக்காட்சிகளே, உங்களுக்கும் கேட்க்கவில்லையா ? இல்லை கேட்டும் செவிடர்களாக நடிக்கறீர்களா ?

அண்மையில் காஸாவில், இஸ்றேல் தாக்குதல் நடத்த, காஸாவில் நடப்பவற்றை அனைத்து அரபு தொலைக்காட்சிகளும்

அதையே, அமை மட்டுமே ஒளிபரப்புச் செய்தன. அது உலகெலாம் சென்றடைந்தது, உரியவர்களை ஈாத்தது.

ஆனால் !!! நீங்கள் என்ன செய்கறீர்கள் ? உங்கள் உறவுகளுக்காக, தமிழ்பேசும் உறவுகளுக்காக என்ன செய்கிறீர்கள் ???

குறைந்த பட்சம் உங்கள் செய்திகளிலாவது "உண்மையை" ஒளிபரப்ப முடியாது என்றால், எதற்காக உங்கள் சேவை ???

வெளிநாட்டு ஊடகங்கள்கூட தயங்காமல் உண்மையை உரைக்கின்றன, உங்களால் மட்டும் முடியாது என்றால் ???

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.

உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".

உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".

உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".

உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".

உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".

உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".

உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".

உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".

உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".

உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".

உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".

உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.

உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.

அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.

மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.

உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்.

நன்றி.

தாயகன்.

போட வென்னை( நான் சொல்லவில்லை) ஈழ(இளவு)த்து தமிழர்களால் நடத்த படும் ரிவிகளுக்கே நீங்கள் சொன்ன நிகழ்ச்சி எப்படியாவது வாங்கி வ்இட வேண்டும் என்ற போட்டி இருக்கும் போது 6 கோடி இருக்கும் மகளுக்காக நடத்த படும் ரிவிகள் உங்கட செத்த வீட்டட காட்டனுமோ?

சரி 2 யாபார நோக்கத்தத சொல்லவா?

1. இதுவரை இலவசமாக வந்த G ரிவி முக்கிய நேரத்தில் கட்டனமாக பொகிறது காரணம்(?) தற்போது வன்னியில் நடக்கும் படுகொலைகள் சண்டை காட்சிகள் அவர்களுக்கு தான் கி(கொ)டைக்க படுகிறது அதனால் தான்.........

2 வது எப்பவுமே கட்டனத்தில் வேலை ச்எய்யும் தீபம் தற்போது இலவசமாக விட்டு இருகிரது காரணம்(/0 தீபத்துக்கும் தமிழ்த் தேசிய உணர்வு வந்து விட்டது

3 வது அய்ங்கரன் . அட கொயாலே கருணா'நிதி ஆப்பு வச்சாலும் இவர்கள் அந்த நோவுக்கு கீரிம் பூசி விடுகிரார்களாம், அதாவது லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் , சுவிஸ் போராட்டத்துக்கு அண்டர் ரைட்டில் செய்தி போடிகினம் , முடியல என்னால முடியலா உண்மமயாக இவர்கள் ஏமார்றுகிரார்களா அல்லது புலத்து தமிழர்கள் ஏமாறுகிறார்களா?

தாயகன் சும்மா நானும் எழுதுகிறேன் என்றி எழுதி விட்டு போகிரார்.

ஆனால் மேலெ சொன்ன நிகழ்ச்சிகள் அனைத்தும் ஈழத்து ரிவிகளால் ஜரோப்பாவில் ஒளிபரப்ப படுகிறது என்பதை ஏன் மறைத்தார் என நான் அறியேன்...............

(தாயகன் @ Feb 11 2009, 03:17 AM)

இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா

?

நீங்கள் என்ன குருடரா?

Link to comment
Share on other sites

போட வென்னை( நான் சொல்லவில்லை) ஈழ(இளவு)த்து தமிழர்களால் நடத்த படும் ரிவிகளுக்கே நீங்கள் சொன்ன நிகழ்ச்சி எப்படியாவது வாங்கி வ்இட வேண்டும் என்ற போட்டி இருக்கும் போது 6 கோடி இருக்கும் மகளுக்காக நடத்த படும் ரிவிகள் உங்கட செத்த வீட்டட காட்டனுமோ?

சரி 2 யாபார நோக்கத்தத சொல்லவா?

1. இதுவரை இலவசமாக வந்த G ரிவி முக்கிய நேரத்தில் கட்டனமாக பொகிறது காரணம்(?) தற்போது வன்னியில் நடக்கும் படுகொலைகள் சண்டை காட்சிகள் அவர்களுக்கு தான் கி(கொ)டைக்க படுகிறது அதனால் தான்.........

2 வது எப்பவுமே கட்டனத்தில் வேலை ச்எய்யும் தீபம் தற்போது இலவசமாக விட்டு இருகிரது காரணம்(/0 தீபத்துக்கும் தமிழ்த் தேசிய உணர்வு வந்து விட்டது

3 வது அய்ங்கரன் . அட கொயாலே கருணா'நிதி ஆப்பு வச்சாலும் இவர்கள் அந்த நோவுக்கு கீரிம் பூசி விடுகிரார்களாம், அதாவது லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் , சுவிஸ் போராட்டத்துக்கு அண்டர் ரைட்டில் செய்தி போடிகினம் , முடியல என்னால முடியலா உண்மமயாக இவர்கள் ஏமார்றுகிரார்களா அல்லது புலத்து தமிழர்கள் ஏமாறுகிறார்களா?

தாயகன் சும்மா நானும் எழுதுகிறேன் என்றி எழுதி விட்டு போகிரார்.

ஆனால் மேலெ சொன்ன நிகழ்ச்சிகள் அனைத்தும் ஈழத்து ரிவிகளால் ஜரோப்பாவில் ஒளிபரப்ப படுகிறது என்பதை ஏன் மறைத்தார் என நான் அறியேன்...............?

நீங்கள் என்ன குருடரா?

சுத்தம் !!!!!

உள்ளுக்குள்ள ஏதோ இருக்குது எண்டுதான் நினைச்சன், ஆனால் களிமண்தானா ???

இதற்குப் பதில் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஏனெண்டால் உங்களுக்குப் புரியவில்லை. வீணாக கருத்து முரண்பா வந்து களத்தால் மூடப்பட்டு விடும்...

மற்றது ஈழத்து தொலைக்காட்சி ஒன்று மட்டும்தான் "த.தே.தோ".

மேலே நீங்கள் குறிப்பிட்டவை என்ன செய்கின்றன என்பது முக்கியமில்லை, அவற்றை நாடிச்செல்வது உங்கள் தப்பு, சோறு தண்ணி இல்லாமல் இருந்தாலும் இவை இல்லாமல் இருக்க மாட்டோம் எண்டு அடம் பிடித்தால், அதுக்கு அவையா பொறுப்பு ???

கருத்துக்கு பதில்க்கருத்து எழுதோணும், அதுவும் ஏதாவது விதண்டா வாதமா எழுதோணும் எண்டு நீங்கள் சிந்தித்துக்கொண்டிருங்கள், நாடு உருப்படும்....

இதில் ஏன் பார்வையற்றவர்களை தேவையில்லாமல் இழுக்கறியள் ? பார்வையற்றவர்கள் என்றால் அவ்வளவு இழக்கனமா உங்களுக்கு ???

முதலில் உங்கள் எழுத்துப் பிழைகளைத் திருத்துங்கள், மிச்சத்தை பிறகு பார்க்கலாம்....

இதற்குப் பிறகு என்ன கருத்து எழுதப்பட்டாலும் பதில் கருத்து எழுதமாட்டேன், தேவையற்ற விவாதமாக மாறி விட்டது....

நன்றி வணக்கம்.

எனது பெயர் இதுதான் தாயகன 'tigertel இது அல்ல 'tigerblade'

அடடா மன்னித்து விடுங்கள் "tigertel" வேறு எங்கோ பார்த்த ஞாபகத்தில் எழுதி விட்டேன்... :)

ஒண்டும்மில்லை என்று தெரிந்ததால் தானே உங்கல் கருத்துகு பதில் சொன்னேன் :) இந்தியாவில் நீங்கள் சொன்ன எந்த ஒரு தொலைகாட்சியும் அரசியல் சார்பில்லாத தொலைக்காட்சிகள் இல்லை அவர்களுக்கு 2 முக்கியம் 1 தங்கள் அரசியலை வளர்த்து கொள்வது 2 வது பனம் சம்பாதிப்பது இதுக்கு பின் தான் அனைத்தும்.

எழுத்து பிழைகள் என்னால் திருத்த முடியாது அது பள்ளிக்கூடம் போய் படித்தவர்கள் செய்யும் வேலை :(

எனக்கும் இதற்க்கு மேல் கருத்து இதில் எழுத விருப்பமில்லை ஆனால் நீங்கள் என்ன நோக்கத்தில் எழுதிதினீர்களோ அது வெற்றி பெற வேண்டும் என்பது தான் இதில் முக்கியம் .

ஈழத்து மக்களால் நடத்தும் ரிவிகளின் தவறுகளையும் சுட்டு காட்டி இருக்கலாம் என்பது தான் எனது கருத்தின் நோக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகன் தங்களுடைய கருத்துக்களை நான் வரவேற்கின்றேன் உங்களின் ஆதங்கம் புரிகிறது

Link to comment
Share on other sites

ஒரு ஈழத்தமிழனின் வேதனை....

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "ஈழத்தமிழனின் தோலோடு தசைத்துண்டம் ஆடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்களால் கடியுண்டு.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "சோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "சோடிகள்" அழியுது ?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிசத்தில் நடக்குது.

உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".

உங்களுக்கு "கோப்பி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".

உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".

உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".

உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".

உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".

உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".

உங்களுக்கு "ச ரி க ம" எங்களுக்கு "சா நீ தமிழா".

உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".

உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".

உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".

உங்களுக்கு "ராணி மகா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

---வேதனையுடன்,

சதைத்துண்டங்களின் நடுவிலிருந்து ஒரு தமிழன்.

Link to comment
Share on other sites

புறக்கணிப்போம்....! என்றதை விட அவ்வ+டகங்களை எமது பக்கம் திருப்புவதே நன்மை. முடியாதது என்று எதுவுமே இல்லை..! யாராவது தொலைக்காட்சிகளின் இணைய முகவரிகளை இங்கே இணையுங்கள் ஒரு மாதிரி மடலையும் இணையுங்கள் இணைந்து இணையமடல்கள் அனுப்பினால் எதையுமே வெற்றிகொள்ள முடியும் சலிக்காதீர்கள், நம்பிக்கையிழக்காதீர்கள,; நம்புங்கள் வெற்றிபெறுவோம்! அல்லல்படும் எமது உறவுகளுக்காய்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.