Jump to content

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - வடமராட்சி மண்ணில் வந்திறங்கிய விஜயர்கள்! (கவி - 02)


Recommended Posts

வெறிச்சோடிப்போன வீடுகளும் வீதிகளும்.... பசித்து பின் நொந்துபோன

அனாதை நாய்களின் ஈனக் குரைப்புகளுடன் அடங்கிப்போயின!

கோயில் திருவிழாக்கள் காணாத மக்கள் கூட்டத்தினை - அகதி மக்கள்

நிரப்பி வழிக்க... செஞ்சிலுவை சுமந்த சாலைகளும் அப்படியே!

வான் பறவைகளின் இரைச்சல்களில்..

அதைவிடச் சத்தமாய்... ஓலமிட்டது நாங்கள்தான்!

இரண்டுமாடி கட்டிடத்தின் "உயரிய பாதுகாப்பில்" நாமிருந்தபோதும்,

பயத்தினில் பரித்தவித்து உயிரை... கையில்தான் வைத்திருந்தோம்!

வெஞ்சினமோடு வந்த பகையை வெறியேற்ற எண்ணாத வரிப்புலிகள் ,

பக்குவமாய்ப் பதுங்கிப் போன பின்னும், வெறியாட்டம் ஆடிக்கொண்டே...

உள்நுழைந்த "விஜயன்கள்" துணைநின்ற பறவைகளின் குறியிலிருந்து,

இந்த ஐந்து வயது கவிக்குஞ்சு ஐந்தடி தூரத்தில்தான் தப்பியது!

சுட்டெரிக்கும் அமிலத்தையும் சுடு தார்ப்பீப்பாக்களையும்

சுமந்துவந்து வரைந்த கொடுஞ்சித்திரங்களை எம்மவர் மேனியில்

பார்த்துப் பரிதவிக்க.... அலறல் ஒலிகளும் அடங்கிப் போக,

என் அம்மா என் கண்களை மறைத்தபோது... தடுத்தன என் கரங்கள்!!!!

கலியாணம் கட்டாதோரும் பிள்ளையைச் சுமந்த நாளது!

தோளில் ஒன்று... கையில் ஒன்றென இரவல் குழந்தைகள்!

அப்போது, கைதின்பின் வதையிலிருந்து தப்பிக்க இரண்டே வழிகள்,

ஒன்றில், கையில் ஒரு பிஞ்சு... அன்றில், கழுத்தில் நஞ்சு!

புலிவேட்டை வந்த (அ)சிங்கங்களுக்கு அப்பாவிகள்தான் கிடைத்தார்கள்... கணக்குக் காட்ட!

ஒரு தாய்க்கு ஒரே மகன்... என் கண்முன், ஒரு தாயின் கதறல்!!!

இன்றும்... இந்த நிமிடம் வரையும்... அந்தத் தாயின் கதறலும்,

அந்த மகனின் கண்களும் அப்படியே... என் கண் முன்னால்!!!

ஐயோ... என்ர பிள்ளையை விட்டிடுங்கோ!!!

என்ர கடவுளே... நான் இனி என்ன பண்ணுவன்???

" ராசா மாரே! " விட்டிடுங்கோ ... என்ர பிள்ளையை!!!

ஓங்கியுதைத்த "பூட்ஸ்" கால்மிதியில் சரிந்து விழுந்த தாய்... பாவம்!!!

மீள எழும்பும்போது நகரத்தொடங்கிய இராணுவ வண்டியையை நோக்கி

நாசமாய்ப் போவீங்களடா!!! என்று சொல்லி....

அவள் அள்ளி எறிந்து வீசிய புழுதிமண்...

அந்த வாகனத்தினை துரத்திக்கொண்டே.......சென்றது!

பயங்கரங்களையும் பழகிக்கொள்ள... பழகிக்கொண்ட நாட்கள் அவை,

பலவிதமாய்ப் பயமுறுத்த பழகுவதற்காய் வந்தன!

சின்ன வயதெனினும் சிந்திக்க முனைந்த காலமதில்,

சிறிதாய் ஒரு தீப்பொறி.... என் மன வைக்கோற்போரில்!!!

பற்றியெரிந்த நெருப்பின் தகிப்புக்கள்...

தொடரும்...

இதன் முன்னைய பதிவுகளைப் பார்க்க:

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - கவிமுகம்

http://www.yarl.com/...showtopic=93656

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஒபரேஷன் லிபரேஷன் ஆரம்பம்" (கவி-01)

http://www.yarl.com/...showtopic=93788

Link to comment
Share on other sites

< கலியாணம் கட்டாதோரும் பிள்ளையைச் சுமந்த நாளது!

தோளில் ஒன்று... கையில் ஒன்றென இரவல் குழந்தைகள்!

அப்போது, கைதின்பின் வதையிலிருந்து தப்பிக்க இரண்டே வழிகள்,

ஒன்றில், கையில் ஒரு பிஞ்சு... அன்றில், கழுத்தில் நஞ்சு! >

நான் இனி தொடரவில்லை கவிதை , நீங்களே தொடருங்கள் . வாழ்துக்கள் :D :D :D .

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி கவிதை. பழைய நாட்களை அப்படியே கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள். ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது அந்த பிஞ்சு வயதில் அனுபவித்த வலிகள்.......! தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி. தொடருங்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீள் நினை வூட்டும் வலிகள்.....கவியின் வரிகளுக்குள் ஒரு காந்தம்

..நிறுத்தாது வாசித்து முடிக்க வைக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்நுழைந்த "விஜயன்கள்" துணைநின்ற பறவைகளின் குறியிலிருந்து,

இந்த ஐந்து வயது கவிக்குஞ்சு ஐந்தடி தூரத்தில்தான் தப்பியது!

ஒன்றில், கையில் ஒரு பிஞ்சு... அன்றில், கழுத்தில் நஞ்சு!

அருமையான கவிதை வரிகள், வழமை போல.

நல்ல ஒரு கவிதையைத் தந்தமைக்கு நன்றிகள், கவிதை!!!

Link to comment
Share on other sites

< கலியாணம் கட்டாதோரும் பிள்ளையைச் சுமந்த நாளது!

தோளில் ஒன்று... கையில் ஒன்றென இரவல் குழந்தைகள்!

அப்போது, கைதின்பின் வதையிலிருந்து தப்பிக்க இரண்டே வழிகள்,

ஒன்றில், கையில் ஒரு பிஞ்சு... அன்றில், கழுத்தில் நஞ்சு! >

நான் இனி தொடரவில்லை கவிதை , நீங்களே தொடருங்கள் . வாழ்துக்கள் :D :D :D .

கோ! தங்களின் "நெருடிய நெருஞ்சி"......... நெருடிய நெருடலின் தாக்கமே என் கவித்தொடர்!

ம் ஞாபகங்களை தூண்டிவிட்டு .... தாங்கள் "எஸ்கேப்" ஆக நாங்கள் அனுமதியளிக்க மாட்டம்!

பு..ரி..ஞ்..சு..தா?????? :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி கவிதை. பழைய நாட்களை அப்படியே கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள். ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது அந்த பிஞ்சு வயதில் அனுபவித்த வலிகள்.......! தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

தமிழினி... உண்மையில், எம் வலிகள்தான் புலிகளை உருவாக்கியது!

என் பிஞ்சு வயது வலிகள்........ இன்றும் மறக்கமுடியாத நினைவுகளாக என்னைத் துரத்துகின்றது!

நன்றி தமிழினி! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவித் தொடர் நன்றாகவே போகிறது வாழ்த்துக்கள்..ஆனாலும் எனக்குள் ஒரு சின்ன கேள்வி எழுகிறது...எப்படி ஐந்து வயது பாலகனாக இருக்கும் போதே இவ்வளவு விஷயங்களை அப்போது கிரகித்து கொண்டீர்கள்..???புரிந்து கொள்ள முடியாமல் தான் முன்பு ஒரு முறை உங்கள் கவிதைப் பகுதியில் எழுத தோன்றாமல் சிமைலியை போட்டு விட்டு போனேன்.ஆமி,பல புரியாத பெயர்களைக் கொண்டு விமானங்களின் குண்டு சத்தங்கள் அந்த தருணங்களை இப்போதும் நான் நினைச்சுப் பார்த்தால் இருதயம் நின்று உயிர்ப்பது போல் ஒரு பிரமை ஏற்படும்.

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி. தொடருங்கள் :)

மிக்க நன்றிகள் சஜீவன்! :)

Link to comment
Share on other sites

மீள் நினை வூட்டும் வலிகள்.....கவியின் வரிகளுக்குள் ஒரு காந்தம்

..நிறுத்தாது வாசித்து முடிக்க வைக்கிறது

என் வரிகளில் உணர்வுகள் இருக்குதோ இல்லையோ... இன்றும் உணர்வோடு இருக்கும் இதயங்களில் வலிகள் மட்டுமே மீதமாய் இருக்கின்றன!

மீள் நினைவுகளில்... மீட்டப்படும் சில விடயங்கள்.... நல்லதற்காய் அமையட்டும்!

நன்றி நிலா அக்கா! :)

Link to comment
Share on other sites

அருமையான கவிதை வரிகள், வழமை போல.

நல்ல ஒரு கவிதையைத் தந்தமைக்கு நன்றிகள், கவிதை!!!

நன்றி புங்கையூரன்!

தங்களின் நடுநிலையான விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன்!

தயவுசெய்து... குறைகள் இருந்தால், தயங்காமல் சுட்டிக் காட்டவும்!

நன்றிகள் பல! :)

Link to comment
Share on other sites

கவித் தொடர் நன்றாகவே போகிறது வாழ்த்துக்கள்..ஆனாலும் எனக்குள் ஒரு சின்ன கேள்வி எழுகிறது...எப்படி ஐந்து வயது பாலகனாக இருக்கும் போதே இவ்வளவு விஷயங்களை அப்போது கிரகித்து கொண்டீர்கள்..???புரிந்து கொள்ள முடியாமல் தான் முன்பு ஒரு முறை உங்கள் கவிதைப் பகுதியில் எழுத தோன்றாமல் சிமைலியை போட்டு விட்டு போனேன்.ஆமி,பல புரியாத பெயர்களைக் கொண்டு விமானங்களின் குண்டு சத்தங்கள் அந்த தருணங்களை இப்போதும் நான் நினைச்சுப் பார்த்தால் இருதயம் நின்று உயிர்ப்பது போல் ஒரு பிரமை ஏற்படும்.

யாயினி! வாழ்க்கையில், எத்தனை சந்தோசங்களையும் மறந்துவிடலாம்... ! ஆனால், பட்ட வலிகள்....... நெஞ்சில் சுட்ட வடுக்களாய் ஆறாமல் நினைவில் நிற்கும்! இன்றைக்கும் நான்... இத்தனை இழப்புக்களின் பின்னும், ஒரே இலட்சியத்தில் உறுதியாய் இருக்கின்றேன் என்றால்... அதற்கு நான் பட்டறிந்த வலிகளே காரணம்!

வலிகளோடு ஒன்றிப்போய் அதிலிருந்து விடுபடும் விடியலில்தான்.... உண்மையான சுதந்திரம் இருக்கும் என எண்ணுகின்றேன்!

எதற்கும் ஓர் எல்லையுண்டு........... நாம் அனுபவிக்கும் வலிகளும் அதற்கு விதிவிலக்கல்ல!

நன்றி யாயினி! :)

உங்கள் கவிதைக்கு நன்றி கவிதை

நன்றி வாத்தியார்!

தங்கள் விமர்சனங்களையும் விட்டுச் செல்லுங்கள்! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.