Leaderboard

 1. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   282

  • Content Count

   15,365


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   195

  • Content Count

   44,827


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   140

  • Content Count

   26,316


 4. Rajesh

  Rajesh

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   97

  • Content Count

   985Popular Content

Showing content with the highest reputation since 01/22/2019 in all areas

 1. 20 points
  உ சிவமயம். திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம். "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்" அன்புறவுகளுக்கு , நான் கடந்த ஆவணி மாதம் மனைவி மற்றும் மகனுடன் ஊருக்கு போய் இருந்தேன். அதை ஒரு பயணம் என்று சொல்வதைவிட கோவில் சுற்றுலா என்பது பொருந்தும். ஆவணி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரும்பாலான ஆலயங்களில் உற்சவங்கள் நடைபெறும்.ஊர் முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். கோவில்கள் எல்லாம் புதிதாக வர்ணங்கள் பூசி மிக அழகாக இருந்தன.நானும் பல வருடங்களின் பின் அங்கு சென்றதால் ஒருவித பரவச நிலையில் இருந்தேன் . அந்த நெகிழ்ச்சியான அனுபவங்களை யாழ் இணையத்தின் 21 வது அகவையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை. நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது. யாத்திரை தொடரும்.......! நிரவாகம். தயவு செய்து உரிய இடத்துக்கு மாற்றிவிடவும். பின் அங்கிருந்து தொடர்கின்றேன்.
 2. 18 points
  "லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட் பின்னேரம் வாறீயா போய் சந்திப்போம்" "யார் மச்சான் சுதா" "டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா, அவளோட போவள் 'இரட்டை பின்னல்' அவளைத்தான் சொல்லுறன்" "கலா ...." " டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை" "யாரப்பா போனில் சுதா,கலா என்று முழுசிக்கொண்டிருக்கிறீயள்" "மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்" "குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து வ‌ந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்." "போய் மீட் பண்ணுங்கோவன்" "மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோசிக்கிறன்" "என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே" " ஏனப்பா அப்படி கேட்கிறீர்" "பின்ன என்ன கலியாணம் கட்டின புதிசில ஒரு நாள் நித்திரையில் புலம்பினீங்கள் 'சுதா பிளீஸ் கலாவிட்ட கேட்டு சொல்லும் என்று' அதுகளா தான் இருக்கும்" "ஓமடியாத்த ஞாபக‌ம் வருது நீர் இன்னும் மறக்கவில்லை,அப்ப போய் மீட் பண்ணிவிட்டு வாரன் இரும் குகனுக்கு சொல்லுவம் சனிக்கிழமை சந்திக்க வாரன் என்று" "மச்சி நான் வாரன் என்ன கொண்டு போவம்? போத்தலை வாங்கி கொண்டு போவமோ" "இல்லை மச்சி தனியா வந்திருக்கிறாள்" "அப்ப நான் கட்டாயம் வாரன்" "சனிக்கிழமை உமக்கு எதாவது புராகிராம் இருக்கோ டாலிங்" " இல்லை நானும் உங்களாட‌ வாரது என்றால் வாரன்" "அவள் தனியா வ‌ந்திருக்கிறாளாம் ,குகனும் தனியத்தான் வாரானாம்" "யாருடன் வந்து நிற்கிறாளாம்" "அவளின்ட அக்கா சிட்னியில் இருக்கிறாளாம் அங்க தான்" "பின்ன சரி நீங்கள் அவளை போய் சந்தியுங்கோ நான் என்ட அக்கா வீட்டை போய்யிட்டு வாரன்" சனிக்கிழமை எழுந்தவுடன் மனைவியடமும் சொல்லாமல் சலூனுக்கு சென்றான். "ஐயா வாங்கோ ,வழமையா வெட்டுறமாதிரி நல்லா ஒட்ட‌ வெட்டிவிடவோ" "சீ சீ மீடியத்தில வெட்டிவிடும் தம்பி" வெட்டி முடிந்தவன் கண்ணாடியை பின்னுக்கு வைத்து "இந்த வெட்டு சரியோ" "அளவு சரி ,ஆனால் நரை நல்லாய் தெரியுது போல கிடக்கு" "டை அடிச்சு விடட்டே" "அடிச்சுவிடடா தம்பி, இந்த மீசையையும் டிரிம்ப் பண்ணி அதுக்கும் உந்த சாயத்தை பூசி விடு" "என்ன ஐயா வழமையா உதுகளை நீங்கள் செய்யிற இல்லை என்ன விசேசம்" "அடுத்த கிழமை கலியாணவீட்டை போகவேணும் அதுதான்" "இப்ப எங்கன்ட ஆட்களின் கலியாண சீசன் முடிஞ்சுதே ஐயா ,யார் வெள்ளைக்காரங்களின்ட கலியாணமோ" "ஒம் ஒம் வெள்ளையின்ட " சொல்லியபடியே கண்ணடியை பார்த்து 'லுக் சொ ஸ்மார்ட்' என மனதில் நினைத்து சிரித்து கொண்டான். "எவ்வளவு தம்பி" "40 டொலர்" "வழமையா 15டொலர்தானே எடுக்கிறனீர்" . "டை அடிச்சது மீசை டிரிம்ப் பண்ணினது அதுதான் ஐயா" கடன் ம‌ட்டையை தேச்சுப்போட்டு நன்றி சொல்லி விட்டு வீடு திரும்பினான். "இது என்னப்பா புதுசா இன்றைக்கு டை அடிச்சு இருக்கிறீயள் " "சும்மா ...பாபர் கேட்டான் அடிக்கட்டோ என்று ஒம் என்று சொல்லி போட்டன்" "நான் எத்தனை தரம் சொன்னனான் டை அடியுங்கோ எண்டு " "அது இன்றைக்கு பின்னேரம் சுதா வை மீட் பண்ணவேணும் " "நான் சொல்லும் பொழுது,புத்தர் சொன்னவர் இயற்கையோட வாழவேண்டும் எண்டு சொல்லி போட்டு இப்ப டை அடிச்சிருக்கிறீயள்" "கி கி கி ம்ம்ம்ம்ம்ம்" " போர போக்கை பார்த்தால் சுதாவுடன் ஒடிவிடுவியள் போல கிடக்கு.. பின்னேரம் நானும் வாரன்" "போடி விசரி ,கண நாளைக்கு பிறகு சந்திக்க போறன் அதுதான்" "இஞ்சருங்கோ உங்களான, என்னோட படிச்ச பெடியள் யாரும் வந்து நான் கொஞ்சம் மெக்கப் போட்டுக் கொண்டு தனியா போறன் என்றால் விடுவியளே" "நீ அப்படி போக மாட்டாய் என்று தெரியும் தானே ,நீ டமிழ் பெண்ணாச்சே" "ஆம்பிளைகள் எல்லாம் சிங்களேமே" "சரியப்பா நீரும் உம்மட பெடியள் வந்தா போய் ச‌ந்தியும்" "எனக்கு வேற வேலையில்லை,உந்த 96 படம் வந்திச்சிதே அதுக்கு பிறகு உந்த கிழடுகளுக்கு எல்லாம் சுதி வ‌ந்திட்டுது" எனகூறியபடியே சமையல் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள். "இஞ்சாரும் இந்த பாண்ட்ஸ்க்கு இந்த சேர்ட் மச்ச பண்ணுமே" "மாப்பிள்ளை இன்றைக்கு ஒரே குசியா தான் இருக்கிறார், மட்ச் பண்ணுது போடுங்கோ" ஆடைகள அணிந்து வாசனை திர‌வியங்களை அடித்து விட்டு இர‌ண்டு மூன்று தடவை கண்ணாடியில் பார்த்து விட்டு "டார்லிங் எப்படி ஸ்மார்ட்டா இருக்கிறனோ" "ஓம் நல்ல ஸ்மார்ட்டா இருக்கிறீயள் என்ட கண்ணே பட்டிடும் போல கிடக்கு ,உங்களையா குகனையா கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கிறது என கொன்வூயூஸ் ஆக போறாள் சுதா" "தாங்ஸ்" "உந்த செல்லத்துக்கு குறைச்சல் இல்லை,அது சரி நீங்கள் குகனை கூட்டிக்கொண்டு போறீயளோ அல்லது அவர் வருவாரோ" "அவன் தன்னூடைய பெண்ஸ் காரை கொண்டு வாரன் என்று சொன்னவன் ,அதில போவம்" " இப்ப இரண்டு பேருக்கும் போட்டி வரும் போல் கிடக்கு" குகனின் கார் குறித்த நேரத்திற்கு முதலே வந்துவிட்டது. "குகன் வந்திட்டான் நான் போயிட்டு வாரன்" "ஒம் ஒம் போன மாதிரியே திரும்பி வந்திடுவேணும்" "பயப்பிடாதயும், சுதா தான் வந்திருக்கிறாள் கலா வந்திருந்தால் சில நேரம் அவளோட ஒடியிருப்பேன் கி கி கி கி" "அடி செருப்பால , போயிட்டு வாங்கோ போன உடனே டெக்ஸ்ட் பண்ணுங்கோ" குகன் அழைப்பு மணியை அடித்தான்.சுதாவின் அக்கா கதவை திறந்து இருவரையும் வரவேற்றாள். "இருங்கோ சுதா பிள்ளைகளோட டெலிபோனில் கதைக்கிறாள் வந்திடுவாள்" சொல்லி முடிக்க முதலே மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சுதா சுதாவை கண்டவுடன் இருவரும் திகைத்து விட்டார்கள் முன்பு இருந்ததை விட மிகவும் அழகாக இருந்தாள்,இரட்டை பின்னல் போய் தலைமுடி மிகவும் அழகாக வெட்டப்பட்டிருந்தது ,உடல் நிறமும் கொஞ்ச‌ம் கூடியிருந்தது அத்துடன் லண்டன் ஆடை அவளின் அழகை மேலும் மெருகூட்டியது. "ஹலோ குகன் எப்படி சுகம் ஒடி வந்து கையை குழுக்கினாள்" "ஹலோ சுரேஸ் உங்களில் அவ்வளவு மாற்றமில்லை அப்ப பார்த்த மாதிரியே இருக்கிறீயள்" "அவ‌ன் மார்க்கண்டேய‌ர் பரம்பரையை சேர்ந்தவன்" என்றான் குகன் , மூவரும் பழைய நண்பர்கள் நண்பிகளை பற்றி விசாரித்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினார்கள். "உங்களுடன் வரும் கலா இப்ப எங்க இருக்கிறாள்" "எனக்கு வடிவாய் தெரியவில்லைஊரில் தான் இருக்க வேணும் என்று நினைக்கிறன்" "ஏன் அவளுக்கு வெளிநாடுகளுக்கு போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ" "அவள் அங்க டீச் பண்ணுவதாக கேள்விப்பட்டனான் ஆனால் ஒரு தொடர்புமில்லை" "வட்ஸ் அப், பேஸ் புக் என்றும் ஒரு தொடர்புமில்லையோ" "சீ சீ" "நாங்கள் பெடியங்கள் எல்லாம் சேர்ந்து 72 கிளப் என்று வைச்சிருக்கிறோம் நீங்களும் ஜொய்ன்ட் பண்ணலாம்" என்றான் குகன். "நோ நோ , இதால நான் பெரிய பிரச்சனையில் மாட்டுப்பட்டு இப்ப தான் வாழ்க்கை சுகுமா போகுது" "அப்படி என்ன பிரச்சனையை நாங்கள் தரப்போறம்" "எல்லா ஆண்களும் ஒரு மாதிரியில்லை...." அந்த பதிலுக்கு பிறகு சுரேஸ் கலாவைப்பற்றி கேட்கவில்லை. தேனீர் அருந்திய பின்பு இருவரும் விடை பெற்றனர். காரில் பயணிக்கும் பொழுது "மச்சான் இப்பவும் கலா ஊரில் தான் இருப்பாளே" "என்னை கேட்கிறாய்,அவளின்ட சினேகிதி சுதாவுக்கே தெரியவில்லையாம் பிறகு எனக்கு எப்படி தெரியும்" "அடுத்த மாதம் ஊருக்கு போறன் போய் பார்க்கலாம் என்று யோசிக்கிறன்" " தனிய போறீயோ குடும்பத்துடன் போறீயோ" "குடும்பத்தோட போறன்" "மனிசி விட்டால் போய் சந்திச்சு போட்டு வா" "மனிசி ஒன்றும் சொல்லமாட்டாள்" "பிறகு என்ன ,போய் அப்ப சொல்லாத லவ்வை இப்ப சொல்லி பார் கி கி கி ....." வீட்டில இறக்கும் பொழுது குகன் நக்கலாக‌ "குட் லக் மச்சி"என்றான். "இஞ்சாரும் உவள் கலா ஊரில் தான் இருக்கிறாளாம்" "அப்ப அடுத்த மாதம் ஐயா கலாவை சந்திக்கப்போறார்"
 3. 15 points
  மனிதர் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது. சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார். இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️
 4. 14 points
  கடவுள் படைக்காத மனிதர்கள்! அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரும் முன்னர் சில ஆண்டுகள் முன்பிருந்தே அடிப்படை வாதக் கிறிஸ்தவர்களின் (evangelical Christians) கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் பழமை வாதக் கொள்கைகளும் அக்கொள்கைகளை மதச் சார்பின்மையுடய அமெரிக்க சட்டத்தினுள் குறுக்கு வழிகளில் புகுத்தி மற்றவர்களின் நம்பிக்கைகளைத் தாங்கள் தீர்மானிக்கும் தீவிரமும் இவர்களை நான் "கிறிஸ்தவ தலிபான்கள்" என்று அழைக்கக் காரணங்கள். இந்தப் பழமை வாதக் கிறிஸ்தவர்களின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று டார்வினின் கூர்ப்புக் கோட்பாடு (theory of evolution). 1859 இல் சார்ள்ஸ் டார்வின் உயிரியல் உலகின் மிக முக்கியமான முன் மொழிதலான "உயிரினங்களின் கூர்ப்பு" எனும் தியரியை ஒரு நூலாக வெளியிட்டார். "கடவுளின் சாயலாக மனிதன் ஒரே நாளில் படைக்கப் பட்டான், அதன் பிறகு கடவுள் மனிதனுக்குப் பயன்படும் வகையில் மற்றைய உயிரினங்களைப் படைத்தார். இவையெல்லாம் ஏழே நாட்களில் நடந்து முடிந்தன" என்று பைபிள் கூறுகிறது. இந்த பைபிள் நம்பிக்கை மீது விழுந்த முதல் பாரிய அடியாக டார்வினின் கூர்ப்புக் கொள்கை இருந்தது. டார்வினின் கூர்ப்புக் கொள்கையை, வேறும் சில விஞ்ஞானக் கருது கோள்கள், அவதானங்களோடு இணைத்துப் பார்த்தால் பின்வரும் உயிர்களின் பயணச் சுவடு தெரிகிறது: ஒரு ஒற்றைக் கல உயிரினமாக ஆதிக் கடலில் உருவான முதல் உயிர், பல கலங்களாக மாறி, பின் முள்ளந்தண்டு உருவாகி, நுரையீரல் வளர்ந்த போது, தரையில் ஊர்வனவாக மாறியது. இந்த ஊர்வன பின்னர் குட்டி போட்டுப் பால் கொடுக்கும் நிலை கொண்ட பாலூட்டிகளை உருவாக்கின. இந்தப் பாலூட்டிகளில் சில மரத்தில் தொங்கி திரிந்து வாழ ஆரம்பித்த போது மந்திகள் உருவாகின. மந்திகளில் சில தொப்பென்று தரையில் விழுந்து அரைவாசி நிமிர்ந்த நிலையில் ஆதிப் புல் வெளிகளில் அலைந்து திரிய ஆரம்பித்த வேளையில் ஆதி மனிதர்கள் உருவானார்கள். இந்தப் பயணச் சுவட்டின் இன்றைய உச்சம், ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) எனப்படும் நாங்களாக இருக்கிறோம். ஒரு அறிவியல் கொள்கை மத நம்பிக்கையை அச்சுறுத்தும் போது நிகழும் எல்லாம், டார்வினின் கூர்ப்பியலுக்கும் நிகழ்ந்தன. ஆனால், கூர்ப்பு நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று நிரூபிக்கும் சான்றுகள் கடந்த 150 ஆண்டுகளில் ஏராளமாக வெளிவந்து விட்டன. உதாரணமாக மூளையை எடுத்துக் கொள்ளுங்கள். நவீன மனிதர்களான எங்களுடைய மூளையில் மூன்று பிரதானமான பகுதிகள் இருக்கின்றன. (மூளையைப் பல பகுதிகளாக வகைப் படுத்தலாம், நான் இங்கே குறிப்பிடும் வகைப் படுத்தல் கூர்ப்பியல் படிமுறையை எடுத்துக் காட்ட மட்டுமே என்பதைக் கவனிக்கவும்). எங்களிடம் இருக்கும் மூளையம் சார்ந்த மூளைத்தண்டுப் பகுதியை "ஓணான் மூளை" என்று அழைக்கலாம். சுவாசம், இதயத் துடிப்பு, உடல் அசைவு என்பவற்றைக் கட்டுப் படுத்தும் இந்தப் பகுதி ஊர்வனவற்றிலேயே உருவான ஆதி மூளை என்பதால் இப்படி அழைக்கலாம். பிறகு "நாய் மூளை" என்று நாம் பட்டப் பெயர் கொண்டழைக்கத் தக்க பெருமூளைப் பகுதியும் எங்களிடம் உண்டு. ஸ்பெஷலாக விருத்தியான முன் மூளைப் படை (prefrontal cortex) எனப்படும் அதி விசேட பகுதி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு பகுதி. சுருக்கமாகச் சொன்னால், ஒரு பழைய கணணிக்கு கட்டம் கட்டமாக RAM பொருத்தி அதனை செயற்றிறன் மிக்க கணணியாக மாற்றும் வேலை எங்கள் மூளையில் கூர்ப்பினால் செய்யப் பட்டிருக்கிறது. கூர்ப்பியல் சார்ந்த இந்த இலகுவான விளக்கத்தை அடிப்படை வாதக் கிறிஸ்தவர்கள் ஏற்க மறுத்து Intelligent Design எனும் தங்கள் கற்பனைக் கொள்கையொன்றை ஊக்குவிக்கிறார்கள். இன்ரெலிஜென்ட் டிசைன் கூர்ப்பினால் மனிதன் பெற்ற சிறப்புகளின் உரிமையை அப்படியே தங்கள் கடவுளின் கைவண்ணமாகச் சித்திரிக்கிற ஒரு நொண்டி முயற்சி. அமெரிக்காவின் சில தென் மானிலங்கள், தமது பாடசாலைகளில் கூர்ப்புக் கொள்கையின் "நன்மை தீமைகளை" ஆராயும் பாடங்கள் கற்பிக்கப் பட வேண்டுமென்று சட்டமியற்றியிருக்கின்றன. இதன் நீண்ட கால இலக்கு, மத நம்பிக்கையின் பால் பட்ட இன்ரெலிஜென்ற் டிசைன் ஒரு மாற்றுத் தியரியாக திணிக்கப் பட்டு குழந்தைகளை அதை ஏற்கச் செய்வதாக இருக்கிறது. டார்வின் கூர்ப்பினால் தக்கன பிழைத்து சூழலுக்கு இயைபாக்கம் அடைந்து புதிய உயிரினங்கள் உருவாகின்றன என்று ஊகித்த போது "ஜீன்" என்ற ஐடியாவே உருவாகியிருக்கவில்லை. ஆனாலும், இயற்பியலில் ஐன்ஸ்ரைனின் கோட்பாடுகள் நவீன பௌதீகவியலாளர்களால் இன்றும் நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருப்பது போல, டார்வினின் கூர்ப்பியல் நூல் வெளியாகி சரியாக நூறு ஆண்டுகளில் பின்னர் டி.என்.ஏ (DNA) மூலக்கூறினை விஞ்ஞானிகள் வாட்சனும் கிறிக்கும் கண்டு பிடித்து, கூர்ப்பின் மூலக்கூற்று அடிப்படையை ஆரம்பித்து வைத்தனர். தற்போதைய கூர்ப்பை நிரூபிக்கும் ஆய்வுகள், வெளித்தோற்றங்களைத் தாண்டி, நேரடியாக டி.என்.ஏ மூலக் கூறுகளையே ஆய்வு செய்து பல தகவல்களை உறுதி செய்கின்றன. இந்தக் கட்டுரை எழுதத் தூண்டுதலாக இருந்ததும் அப்படியான ஒரு டி.என்.ஏ சார் கூர்ப்பியல் ஆய்வு தான். ரஷ்யாவுக்கும் மொங்கோலியாவுக்கும் இடையே இருக்கும் டெனிசோவா எனும் பனி உறைந்த குகையொன்றை மனித வரலாறு தொடர்பான ஆய்வாளர்கள் 1980 இல் இருந்து அகழ்வு செய்து ஆராய்ந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அங்கே கண்டெடுக்கப் பட்ட என்புத் துகள்கள், மற்றும் கல்லாயுதங்கள் என்பவற்றை அவை அங்கே படிமமாகிய காலக் கணிப்பீட்டோடு ஆய்வு செய்யப் பட்ட போது பல சுவாரசியமான , மனிதக் கூர்ப்பின் படிமுறைகளை உறுதி செய்யும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அந்தக் குகையில் கிடைத்த ஒரு என்பின் டி.என்.ஏயின் படி, ஹோமோ சேபியன்ஸுக்கு நெருக்கமான டெனிசோவியன்ஸ் என்ற ஆதிமனிதர்களும் அவர்களுக்கு முன்னைய ஆதி மனிதர்களான நியண்டதால் (Homo neanderthalensis) மனிதர்களும் இனப் பெருக்க ரீதியில் கலப்பில் ஈடு பட்டிருக்கிறார்கள் (அதான்பா, அந்தக் குஜால் மேட்டர்!) என்பது தெளிவாகியிருக்கிறது. இது, மனிதனின் கூர்ப்பில் மிகவும் முக்கியமான ஒரு கண்டு பிடிப்பு. ஏன்? கூர்ப்பு என்பதன் அடிப்படை "ஒரு இனம் கொஞ்சம் கொஞ்சமாக இன்னொரு இனமாக, இன்னொரு வேர்சனாக (version) மாறுவது" என்பதாகும். இந்தப் படிமுறை மாற்றத்தை மனிதனில் டி.என்.ஏ வடிவில் நிரூபித்திருக்கும் முதல் கண்டு பிடிப்பு இது. டெனிசோவியன்கள் எனப்படும் புதிய மனித இனமும், நியண்டதால் என்ற ஆதியான இனமும் கலந்து, உருவான சந்ததிகளில் நியண்டதாலின் இயல்புகள் புதிய வாழ் நிலைமைகளுக்கு ஏற்புடையவையாக இருக்காமையால், அந்த மனித இனம் அருக, டெனிசோவியன்கள் பெருக எங்கள் நவீன ஹோமோ சேபியன்ஸ் இனம் உருவாகியிருக்கிறது. இந்த டெனிசோவாக் குகைகளில் நடந்த இன்னுமொரு ஆய்வில், 50,000 வருடங்களுக்குள் வாழ்ந்திருக்கக் கூடிய நவீன ஹோமோ சேபியன்ஸ் இனத்துடன் தொடர்பான கல்லாயுதங்களும் கண்டெடுக்கப் பட்டிருப்பது, இந்த ஊகத்திற்கு மேலதிக உறுதி சேர்க்கிறது. நாம் பல இடங்களில் காண்பது போல, அறிவியல் ஆய்வு முயற்சிகள் கடினமானவை, நீண்ட முயற்சியை வேண்டுபவை. அந்த அறிவியல் வியர்வை சிந்தி வெளிக்கொண்டு வரும் எமது கதையை கடவுளின் பக்தர்கள் தங்கள் அடிப்படை வாதத்தை வளப்படுத்தப் பாவிப்பது இன்னும் தொடரும் என நம்பலாம். இந்த இறுதிக் கண்டு பிடிப்பு இன்ரெலிஜென்ற் டிசைன் காரர்களுக்கு எப்படி உதவப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆதாரங்கள்: 1. Dating of hominin discoveries at Denisova, Dennell, R. Nature, vol 565, 571–572 (2019). 2. Timing of archaic hominin occupation of Denisova Cave in southern Siberia, Nature, vol 565, 594–599 (2019) .
 5. 13 points
  மலேரியா போய் கஞ்சா வந்தது! உலகளாவிய ரீதியில் மக்களின் ஆரோக்கியத்தைக் குறைக்கும் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளை ஆராய்ந்தால் வளர்ந்த மேற்கு நாடுகளிலும் அபிவிருத்தியடையாத ஆபிரிக்க, ஆசிய நாடுகளிலும் வெவ்வேறு விதமான காரணிகள் பிரதானம் வகிப்பதைக் காணலாம். மேற்கு நாடுகளில், மூன்றில் ஒரு பங்கினர் உடல் எடை அதிகரித்தவர்களாகவும் அதனால் வரும் உடல் நோய்களால் அவதியுறுவோராகவும் உள்ளனர்: இதய நோயும், புற்று நோய்களும் முதன்மையான மரண காரணிகளாக அமெரிக்காவில் இருக்கின்றன. ஆபிரிக்காவிலும் அபிவிருத்தியடையாத தெற்கு-தென்கிழக்காசிய நாடுகளில் தொற்று நோய்கள் முதன்மையான சவால்களாக இருக்கின்றன. நீர்மூலம் பரவும் வயிற்றோட்ட வகை நோய்கள் ஒரு புறமும், பூச்சிகளால் பரவும் மலேரியா போன்ற இரத்தத் தொற்றுகள் மறு புறமும் இந்த ஏழை நாடுகளைப் பந்தாடுகின்றன. இலங்கையில் வசித்த வேளையில் மலேரிய காய்ச்சல் வந்து அவதிப் பட்டோருக்கு அந்தக் காய்ச்சலின் அனுபவம் சட்டென்று நினைவில் வரும்- அந்தளவுக்கு உடலை வருத்தி முறித்துப் போடும் காய்ச்சல் அது! காய்ச்சல் அப்படியென்றால் அத்ற்கு எடுத்துக் கொள்ளும் குளோரோகுயின் மாத்திரையின் கசப்புத் தன்மை அதை விடக் கொடுமையானது-வாந்தி வர வைப்பது. மலேரியா எதிர்ப்பு அமைப்பு (Anti Malaria Campaign) என்ற அரச நிறுவனம் 1930 இல் இருந்து ஆற்றிய பணியின் விளைவாக 2016 இல் உலக சுகாதார அமைப்பு இலங்கையை "மலேரியா ஒழிக்கப் பட்ட" நாடாகப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்தப் பிரகடனம் நல்ல விடயம் என்றாலும், அது நிரந்தரமான ஒன்றல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு நாட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டில் பரவிய மலேரியா நோயாளிகள் யாரும் கண்டறியப் படாவிட்டால், உலக சுகாதார அமைப்பு இந்தப் பிரகடநதை வழங்கும்: இலங்கையில் 2012 இலிருந்து மலேரியா கேஸ்கள் பதிவு செய்யப் படவில்லை என்பதே இதன் அர்த்தம். நுளம்பினால் மலேரியா பரவுகிறது, அந்த வகையான நுளம்புகள் இன்னும் இலங்கையில் இருக்கின்றன- இதனால் மலேரியா அபாயம் நீங்கி விடவில்லை! இன்னும் ஒரு படிமேல் போய், விளக்கமாக நோக்கினால், மோசமான மலேரியா நோய் பரவும் நாடாக இலங்கை மாறக்கூடும். மலேரியா நோயை உருவாக்கும் கிருமி பிளாஸ்மோடியம் எனப்படும் ஒரு ஒற்றைக் கல உயிரினம். தென்னாசியாவில் மலேரியாவை உருவாக்கும் பிளாஸ்மோடியம் (Plasmodium vivax) வகையை விட தீவிரமான நோயை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் (Plasmodium falciparum) இனம் ஆபிரிக்க நாடுகளிலும் கிழக்காசியாவிலும் பரவலாகக் காணப்படுகின்றது. மூளை மலேரியா (cerebral malaria) எனப்படும் இந்த மோசமான மலேரியா, ஆபிரிக்காவில் மட்டும் வருடாந்தம் 400,000 மரணங்களுக்குக் காரணமாக இருக்கிறது. இது ஏன் இலங்கையில் பரவலாக இல்லை? இந்த இடத்தில் தான் vector எனப்படும் நோய் காவியான நுளம்பின் பங்கு முக்கியமாகிறது. மூளை மலேரியாவைப் பரப்பும் நுளம்பினம் சாதாரண மலேரியாவைப் பரப்பும் நுளம்பினத்தை விட வேறான ஒரு வகை. இந்த வகை நுளம்புகள் இலங்கையில் இருப்பதாக அறியப் படவில்லை- ஆனால் இந்த நிலை 2017 இல் மாறுவதற்கு, மன்னாரில் நடத்தப் பட்ட நுளம்பினப் பரம்பல் பற்றிய ஆய்வு கட்டியம் கூறுகிறது. அந்த ஆய்வில், மன்னாரின் பல பிரதேசங்களில் எடுக்கப் பட்ட நுளம்பின் குடம்பி மாதிரிகள் (இவை நுளம்பின் இளம் வடிவங்கள், இவையே தேங்கிய நீரில் வாழ்பவை) அனோபிலிஸ் ஸ்ரிபென்சி (Anopheles stephensi) என்ற புது நுளம்பினத்தின் குடம்பிகளாக அடையாளம் காணப்பட்டன. கவலைக்குரிய விடயம் என்னவெனில், இந்த வகை நுளம்புகள் கிழக்காசிய நாடுகளில் மூளை மலேரியாவைப் பரப்பும் இயல்புடையவையாக அறியப் பட்டிருக்கின்றன என்பது தான். பெரும்பாலும் குடி தண்ணீர்க்கிணறுகளில் அடையாளம் காணப்பட்ட இந்த நுளம்பினக் குடம்பிகள் உண்மையிலேயே மூளை மலேரியாவை இலங்கையிலும் பரப்புமா என்பதை எதிர்வரும் வருடங்களில் நடக்கும் மலேரியாக் கண்காணிப்புத் தான் தீர்மானிக்கும். இலங்கை ஒரு தீவாக இருப்பதால் பல தொற்று நோய்களைக் கட்டுப் படுத்துவது ஒப்பீட்டளவில் இலகுவானது (மாலை தீவுகளும் மலேரியா ஒழிக்கப் பட்ட ஒரு நாடு என்ப்தை இங்கே குறிப்பிட வேண்டும்). எப்படி புது நுளம்பினம் வந்திருக்கக் கூடும்? தற்போதைய மாதிரிகளின் படி, இந்தியாவின் வழியாகவே இது இலங்கைக்கு வந்திருக்கலாம் என்ற ஊகம் இருக்கிறது. இங்கே தான் இலங்கையின் மன்னாருக்கும் இந்தியாவின் தென் முனைக்கும் இடையே நடைபெறும் கட்டுப் பாடற்ற கடற் போக்கு வரத்தின் இன்னொரு ஆபத்து வெளிப்படுகிறது. எல்லை தாண்டிய மீன்பிடி, பொருட் கடத்தல், தினசரி செய்திகளில் அறிக்கையிடப் படும் கேரள கஞ்சாக் கடத்தல் என்பன வடக்கிலும் இலங்கையிலும் பேரிடர்களை உருவாக்கும் நோய்களையும் நாட்டினுள் கடத்திவருகின்றன. இத்தகைய கடத்தல் குற்றச் செயல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்தை வடக்கின் கடற்பரப்பைக் கட்டுப் படுத்தும் காவல்படையினர் எப்போது உணர்வர் என்பதே இப்போதுள்ள கேள்வி! ஆதாரமும் மேலதிக தகவல்களும்: 1. Genotype and biotype of invasive Anopheles stephensi in Mannar Island of Sri Lanka. Surendran et al., Parasit Vectors, 2018, 11:3 2. First record of Anopheles stephensi in Sri Lanka: a potential challenge for prevention of malaria reintroduction. Dharmasiri et al., Malaria Journal, 2017, 16:326
 6. 12 points
  அண்மையில் சிட்னியிலிருந்து தாயகம் சென்று கர்நாடக இசை நிகழ்ச்சி(பாட்டுக்கு ஒரு புலவன்) ஒன்றை துர்க்கா மணிம்ண்டபத்தில் எமது குழந்தைகள் நடத்தினார்கள்.இதில் பங்கு பற்றிய அனைவரும் அவுஸ்ரெலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்க விடயமாகும் ...யாழ்நகரில் சிவபூமி முதியோர் இல்லம்,நாவற்குழி திருவாகச அரண்மனை,துர்க்கா மணிமண்டபம் ஆகிய் இடங்க‌ளிலும்,கொழும்பில் சைவ மங்கையர்கழகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. எனது புதல்விகள் இருவர் இதில் பங்கு பற்றினார்கள் ..... பாடல்களுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கும் இருவரும் எனது மகள்மார்..... நன்றி சிவன் தொலைகாட்சி நிறுவனத்தினருக்கு
 7. 11 points
  யாத்திரை.....(7). பின்பு நாங்கள் ஒரு ஆட்டோவில் பெரிய கடைக்கு (டவுனுக்கு) சென்று காசை மாற்றுகிறோம். அன்று ஒரு ஈரோ அண்ணளவாய் இருநூறு வரை போகின்றது.அதிலும் பெரிய தாளுக்கு ஒரு விலை,சிறிய தாளுக்கு ஒரு விலை. எனது பர்ஸ் நிறைய பணம்.எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை. பர்சில் இவ்வளவு பணம் நான் கனவிலே கூட வைத்திருந்ததில்லை. மனைவியும் மாத்திக்கொண்டு வருகின்றா. பக்கத்தில் லிங்கம் கூல்பாரில் ஐஸ்கிரீம், சர்பத் என்று ஆளாளுக்கு விரும்பியதை வாங்கி சாப்பிடுகின்றோம். நானும் டயபடிஸ் சுக்கு டாட்டா காட்டிவிட்டு சாப்பிடுகிறன். மனிசி பில்லுக்கு காசை குடப்பா என்று சொல்ல நானும் நோ ...நோ நீ உன்ர காசை குடு. இது முழுதும் என்ர செல்வ் செலவுதான்.நான் கண்கடை தெரியாமல் "உல்லாச உலகம்" தங்கவேலு ரேஞ்சில் நிக்கிறன். உடனே மச்சாளும் தங்கையிடம் பொறடி இவர் நாலு நாளைக்கு கிலுக்குவார்.பிறகு காய்ஞ்சு போய் உன்னட்ட வரேக்க நீ குடுக்காத என்று புத்தி சொல்லுறா.நான் அதை காதிலேயே வாங்க வில்லை. அங்கு உறவினர் வீடுகளும் கோவிலும் என்று திரிவதால் சாக்ஸ்சும் சப்பாத்தும் அசௌகாரியமாய் இருக்கு. அதனால் செருப்பும் இரண்டு சேர்ட்டும் வாங்க ஐயாயிரம் ரூபா பில். சந்தோசமாய் இழுத்து குடுத்தன்.பின்பு போனுக்கு சிம்கார்ட் ,சார்ஜ், இன்டர்நெட் இரண்டாயிரத்து ஐந்நூறு, மீண்டும் ஆட்டோவில் வீடு வர பத்தாயிரம் காலி. (30 வருடத்துக்கு முன் எனது 8 மாதச் சம்பளம்). மச்சான் வீட்டில் இரவு சாப்பாடு கதைகள் என்று அன்றையநாள் போகிறது. அங்கு பின் வளவில் அன்று நாங்கள் பாவித்த வாகனங்களில் சில லொறி, கார், ஸ்கூட்டர்,சயிக்கிள் எல்லாம் கறல் பிடித்து போய் வெறும் இரும்பாய் கிடக்கின்றன.பார்க்க கண்கள் பணிக்கின இன்று காலை தோய்ந்து சரியாக கிழக்கு பார்த்து நின்று வணங்கி விட்டு எனது குருநாதரையும் சில நண்பர்களையும் பார்க்க பரிசுப்பொருட்களுடன் சயிக்கிள் எடுத்து கொண்டு கிளம்பினேன்.அவர்களை சந்தித்து கடைகளில் சாப்பிட்டு நன்றாக பொழுது போனது.அவருக்கு ரொம்ப வயதாகி விட்டிருந்தது.என்னை கண்டதும் சந்தோசமாய் என் கையை பிடித்து கொண்டு நெடுநேரம் கதைத்து கொண்டிருந்தார்.அவருக்கு உபயோகமான சிறப்பான பரிசு பொருட்கள் குடுத்தேன்.பின் எனது பால்ய நண்பனை போய் சந்தித்தேன்.இவர் எனது குருநாதரின் பெறாமகன். என்கூட லிபியாவிலும் வந்து வேலை செய்தவர். பின்பு அங்கு பிரச்சினை வர ஊர் வந்து மீண்டும் அவர் லிபியா போகவில்லை. பிள்ளைகளும் வளர்ந்து விட்டினம். அங்கேயே மீண்டும் கராஜ் போட்டு நடத்திக் கொண்டிருக்கின்றார். சிறு வயதில் இருந்து ஒன்றாக ஓடி விளையாடி ஒன்றாக படங்கள் பார்த்து,ஒருத்தர் வீட்டில் ஒருத்தர் சாப்பிட்டு சேர்ந்து தொழில் செய்து முன் பின்னாய் திருமணமும் செய்து....... இருவரும் நிறைய நேரம் அளவளாவினோம். கன காலத்தின் பின் சேர்ந்து போய் கடையில் சாப்பிட்டோம். பின் அவரது மோட்டர் சைக்கிளில் சென்று மேலும் சில நண்பர்களை பார்த்து பரிசுப்பொருட்கள் குடுத்து கதைத்து விட்டு வந்தேன். யாத்திரை தொடரும்......! சம்பவம்: எனது நண்பன் காதலித்த காலங்களில் அவருக்கு நான்தான் காதல் காதல் கடிதம் எழுதித் தருவது."அலைகடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றாத" என்ற பிரசித்தமான வசனத்தின் முன்னோடிகள் நாங்களே.இப்படியே அவர்கள் காதல் வளர்ந்ததும் அது திருமணத்தில் முடிந்ததும் தனிக்கதை. ("பொன்மணி" என்று ஒரு ஈழத்து தமிழ்ப்படம் அன்றுதான் ஆரம்பம்.). அன்று மாலை அந்தப்படத்தை நானும் அவனுமாய் பார்க்கிறோம். அதில் வந்த முதலாவது காட்சியே எங்களை அதிர்சிக்குள்ளாக்குகின்றது. ஒரு சோமர்செட் கார் ஒரு பெண்ணுடன் கோட்டை முனியப்பர் வீதியால் வேகமாய் போகின்றது. இதே சம்பவம் இன்று அதிகாலைக் கருக்கலில் அதே வீதியில் நடந்தது. காரின் நிறம்தான் வேறு. இது எப்படி சாத்தியம். இதன் தொடர்பு என்ன தெரியாது. மேலும் இன்று ஏன் இந்தப் படத்திற்கு நாங்கள் வர வேண்டும். எம்மை எது அழைத்து வந்தது....இன்றுவரை புரியவில்லை.....! நான் கடிதம் எழுதி குடுத்ததே தவிர அவாவை நான் ஒருநாளும் பார்த்ததில்லை. அன்று வருடப்பிறப்பு. மருதடி விநாயகர் தேர். n .r .t .b யில் வேலை. நான் ஓடும் பஸ்ஸில் இருந்து ஸ்டைலாய் குதித்து(அது அப்ப எழுதப் படாத விதி) கோவிலுக்குள் சென்று கும்பிட்டுவிட்டு வெளியே வருகின்றேன்.சனக் கூட்டம். ஒரு பெண் ஓடிவந்து அண்ணா என்று என் கையை பிடிக்கிறாள். மறுகையில் பிள்ளை ஒன்று. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் முழுச அண்ணா "அலைகடல் வற்றினாலும்" என்று சொல்ல அப்பவும் புரியவில்லை. என்பின்னால் இருந்து நண்பன் வெளிப்பட்டு "டேய் கழுதை இது என்ர மனிசியும் பிள்ளையும்" என்கிறான். நானும் நண்பனும் அப்பப்ப சந்திப்பதுண்டு.ஒரே நகரத்தில்தான் வாழுகின்றோம்.ஆனால் சுமார் மூன்று வருடத்தின் பின் அவர் மனைவியை பிள்ளையுடன் முதன் முதலாய் பார்க்கிறேன். அவனை தள்ளி கூட்டிப்போய் "எருமை நான்தான் கடிதம் எழுதினது எண்டு சொல்லிபோட்டாய்" போல. அதெல்லாம் அப்பவே சொல்லிட்டன்.முதலிரவன்று வேறு என்னத்தை கதைக்குறதாம்.....!
 8. 9 points
  யாத்திரை :(4). நன்றாக விடிந்து விட்டது. கிளிநொச்சி நகரம் மிகவும் பரபரப்பாக அன்றைய நாளைத் தொடங்கி விட்டது. எல்லோரும் அரக்க பரக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.எங்கள் வண்டியும் "அம்மாச்சி" உணவகத்தின் முன்பாக வந்து நின்றது. அங்கும் ஒரே சனக் கூட்டம். அனைத்து விதமான காலை உணவுகளும் அங்கு கிடைக்கின்றன. அத்தனையும் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கின்றது. நாங்களும் எமக்குத் தேவையானவற்றை வாங்கி சாப்பிட்டோம். எனது பார்வையில் நகரம் முழுவதும் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன.வீதிகள் அகலமாக இருக்கின்றன. நிறையக் கடைகள். மாடிகளுடன் கூடிய பெரிய பெரிய கடைகள். சாரதியும் எமது வண்டியை எடுத்து கொண்டு ஓடி பரந்தன், ஆனையிறவு வீதியை பிடிக்காமல் பூநகரி பக்கமாய் செலுத்திக் கொண்டு போகிறார்.நானும் என்ன தம்பி இந்த வீதியால் போகிறீங்கள். ஆனையிறவு பாதையால் போறதில்லையோ என கேட்க, அவரும் இப்ப நாங்கள் இந்த கிளாலி பாதையைத்தான் பாவிப்பது.சுற்று இல்லாமல் விரைவாக சென்று விடலாம் என்று சொன்னார். அந்த வீதியும் நன்றாக இருந்தது. என்ன நிறைய டிப்பர் வாகனங்கள் நிறைய போய் வருகின்றன மிகவும் வேகமாக. நான் முன்பு வரும்போது பார்த்த கிளாலி கடல் வேறு.இப்போது அங்கு பெரிய பாலம்போட்டுபயன்படுத்துகிறார்கள். எனது மனைவியின் கண்கள் கலங்க விம்மல் வெடிக்கிறது. மருமகள் கேட்கிறாள் ஏன் அன்ரி அழுகிறீங்கள் என்று. அவர் அந்த சம்பவத்தை சொல்லிக்கொண்டு வருகிறார். தொடர்ந்து வரும்போது நாவற்குழியடியில் புதிதாய் ஒரு சிவன் கோவில் இருந்தது.சாரதி கூறினார் இதுதான் சிவபூமி என்று. பிறிதொருநாள் அங்கு வரவேண்டும் என்று நினைத்து கொண்டேன். யாத்திரை தொடரும்........! சம்பவம்: எனது மனைவியும் இரு பிள்ளைகளும் பிரான்ஸ் வருவதற்காக கொழும்பு வரவேண்டும். அப்போது ஆனையிறவு பாதை அடைப்பு. கிளாலியில் வந்து வரிசையில் காத்திருக்கிறார்கள். அப்போது பாலம் இல்லை.சிறிய படகில்தான் பயணம்.தனியாக சிறுவர்களான இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும். சரியான குளிர்.கை கால் எல்லாம் விறைக்குது. நன்றாக இருட்டி விட்டது.ஒரு மாதிரி படகில் ஏறியாகி விட்டது. படகுக்கு உள்ளும் தண்ணீர் வருகுது. நெருக்கமான சனம்.வெளிச்சமும் இல்லை. இருந்தால் செல் வந்து விழும்.பிள்ளைகளை காலடியில் இருத்தி இறுக்கிப் பிடித்து கொண்டாள். பெட்டிகள் எல்லாம் ஈரமாகி விட்டது. நீச்சல் தெரிந்த சிலர் படகை விட்டிறங்கி படகுடன் நீந்தி வருகினம்.ஒரு மாதிரி பூநகரி கரைக்கு வந்தாச்சுது. அன்று நானும் என்ர பிள்ளைகளும் தப்பியது அருந்தப்பு. பெட்டியில் இருந்த உடுப்புகள் எல்லாம் உப்புத்தண்ணி பட்டு சேதமாகி விட்டன. கூறைப் புடவையைத் தவிர........!
 9. 7 points
  யாத்திரை....(5). மதியம் வீட்டுக்கு வந்து விட்டோம். என்னுடைய மச்சாள் அறுசுவையோடு அசைவங்களும் சேர்த்து நிறைய உணவுகள் தயாரித்து வைத்திருந்தாள். எனது மனைவியும் அவாவும் புளுகி புளுகி கதைத்துக் கொண்டிருக்கினம். எங்கள் மகனையும் "நீ ரொம்ப வளர்ந்திட்டாயடா" என்று பாசத்துடன் பக்கத்தில் இருத்தி கதைக்கினம். நான் போய் தோய்ந்து குளித்துவிட்டு வர அருகில் உள்ள காளி கோவிலில் இருந்து பூசை மணி ஒலித்தது. மச்சாளும் நீங்கள் வந்த நேரம் இன்று கோயிலில் அன்னதானம். ஐயர் வந்துட்டார் போல அதுதான் மணி கேட்குது என்று சொல்ல நானும் இருங்கோ வாறன் என்று சொல்லிவிட்டு முற்றத்தில் இருந்த நித்யகல்யாணியில் இருந்து நாலு பூவை பறித்துக் கொண்டு வெளியே கோவிலுக்கு வந்தேன். கண்ணீர் மல்க அம்பாளை மனமுருக நன்றாக சேவித்து விட்டு அங்கேயே தரையில் சம்மணமிட்டு அமர்ந்து ஆசை தீர அன்னதான பிரசாதம் வாங்கி சாப்பிட்டேன். அங்கிருந்த யாருக்குமே என்னை அடையாளம் தெரியவில்லை. பழைய ஆட்கள் சிலர் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்து விட்டு பிறகு வந்து கட்டிப்பிடித்து கதைத்தார்கள். பின்பு வீட்டுக்கு சென்றதும் சமைத்ததை சாப்பிடவில்லை என்று பாசமான திட்டுகள் வாங்க வேண்டி வந்தது. மாலைநேரம் உறவினர்கள் நண்பர்கள் என்று அறிந்து அறிந்து வந்து பார்த்து கதைத்து விட்டு சென்றனர். இரவு சாப்பிட்டு விட்டு நானும் மனைவியும் மச்சாளும் கதைத்துக் கொண்டிருக்க மகன் மேல் வீட்டில் போய் படுத்து விட்டார்.கொஞ்ச நேரத்தின் பின் நானும் மேல் அறையில் படுக்க போகும் போது அவள் சொன்னாள் நீ அங்க போய் படுகிறது சரி,ஆனால் நான் சொல்லாமல் கீழ இறங்கி வரக்கூடாது என்று.உடனே நான் சீ ச் சீ நாங்கள் இப்ப விரதம் என்றேன். உன்ர விரதம் கிடக்கட்டும், இரவு அவர் உவடம் முழுக்க உலவித் திரிவார். நாளைக்கு விரதம் பிடிக்க நீ இருக்க மாட்டாய் நம்பாவிட்டால் பல்கனியை எட்டிப்பார் என்று. எட்டிப்பார்த்தேன் என்னளவு உயரத்தில் வைரவர் வாகனம் அமைதியாக என்னை பார்த்து கொண்டு கம்பீரமாய் நிக்குது. குரைத்திருந்தால் கடிக்காது என்று நம்பி இருப்பேன். இது குரைக்கவில்லை. நான் மேலே சென்று அறையைப் பூட்டியதும் அவர் அவளுடன் கீழே சென்று உலாவித் திரிகின்றார். இவர் போன்ற ஒருவர்,ஆனால் இவர் அவரல்ல......! யாத்திரை தொடரும்.....! சம்பவம்: முன்பெல்லாம் அந்தக் கோவில் இருப்பதே வெளியில் தெரியாது.ஒரு வீட்டுக்கு உள்ளேதான் இருந்தது. இப்பொழுது வெளியே கோவிலாய் உள்ளது. நானும் தினமும் காலையில் வேலைக்கு போகும்போது ஒரேயொரு மல்லிகை அல்லது செம்பருத்தம் பூ எடுத்து வந்து வெளியில் நின்று அந்த வேலித் தகரத்தில் உள்ள ஒரு துவாரத்தில் வைத்து வணங்கி விட்டுத்தான் போவது வழமை. அதுக்காகவா அந்தத் தாய் நான் வந்ததும் வராததுமாக காத்திருந்து என்னை அழைத்து எனக்கு உணவளித்தாள்......!
 10. 7 points
  யாத்திரை....(3). சென்ற ஆடி மாதக் கடைசியில் உறவினர்களும் நண்பர்களும் விமான நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைக்க பாரீஸ் விமான நிலையத்தில் இருந்து அழகிய பணியாளர்களைக் கொண்ட கத்தார் விமானத்தில் ஏறிப் பயணப் பட்டோம்.தரமான உணவு வகைகளும்,சிறப்பான சேவையும் அந்த விமானத்தில் இருந்தது.ஒவ்வொரு இருக்கைக்கு முன்னும் ஒவ்வொரு சிறிய திரை.அதில் படங்கள்,பாட்டுகள் மட்டுமன்றி அந்த விமானத்தின் வழித்தடங்களையும் பார்க்க முடிந்தது. சுமார் ஐந்து மணித்தியாலப் பறப்பின் பின் இடைத் தங்கலாக கட்டாரில் தரை இறங்கியது. இரு மணித்தியாலத்தின் பின் அதே போன்ற மற்றோரு விமானத்தில் பயணம் தொடர்ந்தது. அந்த விமானம் இலங்கை நேரப்படி அதிகாலை 01 : 30 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறங்கியது. அங்கு அரைமணி நேரத்தில் சுழன்று வந்த எமது பெட்டிகளை எடுத்து வண்டிலில் போட்டுக்கொண்டு வெளியில் வந்தோம். அங்கே தயாராக எனது மருமகள் வானோடு வந்து எம்மை வரவேற்றாள். பரஸ்பரமான விசாரிப்புகளின் பின்பு நாம் கொழும்பு செல்லாமல் நேராக யாழ்ப்பாணம் செல்வது என முடிவெடுத்தோம்.இரவுப் பிரயாணத்தில் வாகன நெரிசல் இருக்காது மதியத்துக்கு முன் யாழ்ப்பாணம் போய் விடலாம் என சாரதி சொன்னதை ஏற்றுக் கொண்டு யாழ் நோக்கி பயணப் பட்டோம். வான் செல்லும்போது வழியில் விதியோரக் கடையில் துக்கத்தில் இருந்த கடைக்காரரை எழுப்பி ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களும் வாங்கிக் கொண்டோம். காலை எட்டு மணியளவில் முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.அங்கு கை, கால், முகம் கழுவிவிட்டு வந்து கடையில் தேங்காயும் கற்பூரமும் வாங்கிக்கொண்டு போய் கோயிலடியில் கற்பூரம் ஏற்றி சிதறு தேங்காய் போட்டு விட்டு பிள்ளையாரை சேவிக்க பூசை நடந்து கொண்டிருந்தது. கண்கொள்ளாக் காட்சி.நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு வந்து மறக்காமல் சில தேங்காய் சில்லுகளும் பொறுக்கி எடுத்து கொண்டு வந்து கடையில் கச்சானும் புழுக்கொடியலும் வாங்கிக் கொண்டு (இப்ப எல்லாம் பைக்கட்டுகளில் கிடைக்கிறது) தேநீர் குடித்து விட்டு மீண்டும் பயணப்பட்டோம். யாத்திரை தொடரும்.....! சம்பவம்: நான் கோவிலை சுற்றி வரும்போது எனது மருமகள் கேட்கிறாள், மாமா இங்கு சாப்பிடுவோமா அல்லது கிளிநொச்சியில் சாப்பிடுவோமா என்று அது என் காதிலேயே விழவில்லை அப்படி ஒரு பரவசநிலையில் நான்.மனிசி சொல்கிறாள் அவருக்கு இப்ப ஒன்றும் கேட்காது, நாங்கள் கிளிநொச்சிக்கு போய் சாப்பிடுவம் என்று. அது பரவாய் இல்லை.பிறகு சொன்னாள்.பார் இப்ப வானில் எறியவுடனே உந்தக் கடலை,புழுக்கொடியல் எல்லாம் தேங்காயுடன் சேர்த்து அரைத்து ஒரு வழி பண்ணிடுவார் என்று. அதேபோல் நானும் அதுகளை எடுத்து அரைக்க சாரதி உட்பட எல்லோரும் சிரிக்கினம். நான் புரியாமல் விழிக்கிறேன்.....!
 11. 7 points
  மாற்று மருத்துவம்: அனுபவமா ஆராய்ச்சியா? ஒரு எடுகோளை உருவாக்கி அதை அளவிடக் கூடிய ஒரு கேள்வியாகச் சுருக்கி எவ்வாறு நவீன மருத்துவ விஞ்ஞானம் நோய்களின் காரணங்களையும் அந்தக் காரணங்களை வெல்லும் அல்லது கட்டுப் படுத்தும் மூலக் கூறுகளையும் உருவாக்கி வெல்கிறது என்று கடந்த பகுதியில் பார்த்தோம். இன்று மாற்று மருத்துவ மரபுகள் ஏன் இந்த விஞ்ஞான முறையை இன்னும் பயன் படுத்துவதில் பின்னிற்கின்றன எனப் பார்க்கலாம். விஞ்ஞான முறைகளை மாற்று மருத்துவத்தில் பயன்படுத்துவதில் பல மட்டங்களிலும் சிக்கல்கள் இருக்கின்றன. முதல் சிக்கல் என நான் கருதுவது இம்மருத்துவ முறைகளின் ஆரம்பம். நவீன மருத்துவம் அடிப்படையான உடல் அமைப்பியலைப் புரிந்து கொள்ள விளைந்த பொழுதிலேயே,அது காரண காரியத்தை வைத்து முன்னகர ஆரம்பித்து விட்டது. பாரம்பரிய மருத்துவ முறைகள், அவை உலகின் எந்தப் பிரதேசத்தில் உருவாகியிருந்தாலும், இந்தக் காரண காரியத் தொடர்பை நிராகரித்து ஒரு வித ஆன்மீகத் தன்மையை தமது அடிப்படையாக வரித்துக் கொண்டன. சிவனிடமிருந்து சித்த மருத்துவம் ஒரு சில சித்தர்களுக்கு மட்டுமே அருளப்பட்டதால், சித்தர்கள் அல்லாதோர் கேள்வி கேட்க முடியாது. யின் யாங் (நன்மையும் தீமையும்) சமநிலையில் இல்லாது போவதால் நோய் வருவதாக சீன பாரம்பரிய மருத்துவம் சொல்வதை அந்தக் காலத்து சீன மக்கள் கேள்வி கேட்க அங்கே இருந்த மதநம்பிக்கைகள் இடம் தரவில்லை. இன்றும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மருத்துவம், என்பவற்றைப் பயின்று தொழில் புரிவோர் தாம் கற்பதைக் கேள்வி கேட்பதில்லை. கேள்வி இல்லாமல் எடு கோள் இல்லாமல் காரண காரியத் தொடர்பு நோக்கி இந்த மருத்துவ முறைகள் சிறுதும் நகர முடியாது. ஆனால், இந்த மாற்று மருத்துவ முறைகள் பலன் தருவதாக நோயாளர்கள் சாட்சியம் சொல்கிறார்களே? இந்த அனுபவ சாட்சியங்கள் (anecdotal evidence) விஞ்ஞான முறைகளுக்கு ஈடாக எடுத்துக் கொள்ள முடியாதா? நோய் குணமாவது தானே முக்கியம்? அது எப்படிக் குணமானது என்பது முக்கியமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தர, இருநூறு வருடங்கள் முந்தைய நவீன மருத்துவத்திற்குச் செல்வோம். அந்தக் காலங்களில் மருத்துவர் ஏதாவது மருந்து தந்தால் தான் தங்கள் நோய் குணமாகும் என்று அடம் பிடிக்கும் நோயாளர்களை சமாளிக்க சில நவீன மருத்துவர்கள் கண்டு பிடித்த தீர்வு தான் "போலிமருந்து" (placebo). சில மருத்துவர்கள் வீரியம் குறைந்த மருந்துகளை "இது இந்த நோய்க்கு சொல்லப் பட்ட சாமான்" என்று கொடுத்து இந்த நோயாளிகளைச் சமாளித்துக் கொண்டிருந்த போது, சில கில்லாடிகள் மருந்தே அல்லாத வெறும் சீனி, மாவு, நிறமூட்டிய தண்ணீர் என்று கொடுத்து "போலி மருந்து" வழங்கிக்கொண்டிருந்தார்கள். அதிசயம் என்னவெனில் இந்தப் பச்சைத் தண்ணி மருந்துகளை எடுத்த நோயாளிகளின் நோய்க் குணங்கள் (symptoms) மறைந்தன- போலி மருந்துகள் வேலை செய்தன. சில மருத்துவர்கள் ஒரு படி மேலே சென்று இதை ஒரு பரிசோதனையாகவே நடத்திப் பார்த்தனர். போலி மருந்தை உண்மையான மருந்தெனக் கொடுத்து நோயாளி நன்றி சொல்லத் திரும்பி வரும் வேளையில், அது வெறும் போலி மருந்து தான் என்று உண்மையைச் சொல்லி, மீண்டும் அதே மருந்தை மறுபடியும் அதே நோய்க் குணங்குறி வருகையில் உண்மை சொல்லிக் கொடுத்துப் பார்த்தனர். இப்போது போலி மருந்து நோய்க் குணக்குறிகளை மாற்றவில்லை. இதனால், போலி மருந்தை உட் கொண்ட நோயாளியின் மன நம்பிக்கை அவரது நோய்க் குணங்குறிகள் மறையக் காரணமாயிருந்தது என்ற முடிவுக்கு நவீன மருத்துவர்கள் வந்தனர். இதனாலேயே, நவீன மருத்துவத்தில் ஒரு புதிய மருந்தைப் பரிசோதிக்கும் போது, தோற்றத்திலும், சுவையிலும் அசல் மருந்தைப் போலவே இருக்கும் "போலி மருந்து" (placebo) இன்னொரு குழுவினருக்குக் கொடுக்கப் படுகிறது. அசல் மருந்தின் விளைவு போலி மருந்தின் விளைவுடன் ஒப்பிடப் பட்டே அசல் மருந்து உண்மையில் எதிர்பார்த்த பலன் தருகிறதா என்று முடிவு செய்ய இயலும். பெரும்பாலான மருந்துகள், இப்படியான போலி மருந்துக் குழுவோடு ஒப்பிடப் பட்டால் மட்டுமே FDA போன்ற மேற்கு நாடுகளின் மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகள் அந்த மருந்தை அங்கீகரித்து விற்பனைக்கு அனுமதி தருகின்றன. சரி, நோயை மன நம்பிக்கை குணமாக்கவாவது மாற்று மருத்துவ முறைகள் உதவுகின்றனவே? அது போதாதா? மேலே நன்றாகக் கவனித்தால் நான் நோய்க் குணங்குறிகள் (symptoms) போலி மருந்துகளால் மறைந்தன என்றே குறிப்பிட்டிருக்கிறேன். இதன் அர்த்தம் என்னவெனில், நோயின் குணங்குறிகளின் அடிப்படையான நோய் (disease) மறையாமலே மன நம்பிக்கை நோயின் குணங்குறிகளை மாற்றி விடக் கூடும். இது பல நோய்களைப் பொறுத்த வரை ஆபத்தானது. மூட்டு அழற்சி (arthritis) நோயாளியொருவர் மாற்று மருத்துவ முறையினால் மூட்டு வலியைக் (joint pain) குறைக்கலாம். இது மன நம்பிக்கையால் நிகழலாம். ஆனால், மூட்டின் அழற்சி தடுக்கப் படாவிட்டால், நோய் மூட்டைச் சிதைத்து உடல் ஊனம் வரைக் கொண்டு போகக் கூடும். மேலும், மன நம்பிக்கையை ஒரு மாற்று மருத்துவர் பணம் வாங்கிக் கொண்டு சிகிச்சையாக விற்பது ஒழுக்க ரீதியிலும் தவறானது. பில்லியன் டொலர் கணக்கில் முதலீடு செய்து பல்லாயிரம் மனித மணித்துளிகள் உழைப்பினால் உருவாகும் நவீன மருத்துவ முறைகளை சுரண்டல் என்றும் பணமீட்டும் பிசினஸ் என்றும் உடனே சந்தேகத்துடன் நோக்கும் நோயாளிகள், விளைவிருக்கிறதா என்றே தெரியாமல் நோயாளியின் மன நம்பிக்கையை வைத்து விற்கப் படும் மாற்று மருத்துவ முறைகளைப் பகற்கொள்ளையாகப் பார்க்காதிருப்பது பெரிய விந்தை! எல்லா மாற்று மருத்துவ முறைகளும், மருந்துகளும் போலி மருந்துகளா? நவீன மருத்துவம் இவற்றை ஏற்றுக் கொள்கிற, நிரூபித்து அங்கீகரிக்கிற சந்தர்ப்பங்கள் உண்டா? அடுத்துப் பார்ப்போம். -தொடரும்.
 12. 6 points
  நல்ல ஒரு சிந்தனை...! நான் என்பது தான் அடையாள,ம் எனப் பலர் கருதுகின்றார்கள்| எனினும்....உற்று நோக்கும்போது...நான் என்பது அகங்காரம் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு எனபது புரியும்! நான் என்னும் அகந்தை....ஓரளவுக்கு மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்கு...உந்துதலை அளிக்கின்றது என்பதும் உண்மை தான்! ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை அது முன்னோக்கி நகர்த்தும் எனப்தும் உண்மை! எமது சமூகங்களில்....இந்த அடையாளங்கள் பெரிதும் உதவவில்லை ...என்றே நினைக்கிறேன்! தனது அடையாளத்தைப் பாடும் புலவர்களுக்கு அள்ளிக்கொடுத்ததும்....தனது அடையாளத்தை நிலை நிறுத்தக் கோவில்களும் ..கோபுரங்களும் கட்டியதும் தான் எமது வரலாற்றின் பெரும்பகுதியாகும்! அப்பூதியடிகள் போன்று....அடையாளத்தை நிலை நிறுத்த அன்னதான மடங்களும்,....அனாதை விடுதிகளும்....மருத்துவ சாலைகளும் அமைத்தவர்கள் வெகு சிலரே! ஆணவம் அகன்ற நிலையில்... தனது அடையாளத்தை...அடக்கி வாசித்து....திருநாவுக்காரசரின் அடையாளத்துக்குள் மறைந்து ...சமூகப் பணிகளை முன்னெடுத்தார்! எனினும் நாவுக்காரசரை விடவும் ...அவரது அடையாளமே....இன்னும் வாழ்கின்றது! சி;எ உண்மைகளை....நாம் ஏற்றுக்கொள்ளாத வரையில்...நமது சமூகத்தில் பெரும் முன்னேற்றத்தை....நாம் எதிர்பார்க்க முடியாது! பெருமளவிலான பணக்கையிருப்பு எம்மிடமிருந்தும்.....போரின் வடுக்களினால் பாதிக்கப்படட....உறவுகள்...பெண்கள்...குழந்தைகள்...அனாதைகள் என...எல்லோரையும் கை விட்டு விட்டுத்....தனி மனித அடையாளங்களை நிலை நிறுத்தவே முனைந்தோம்! இதைச் செய்தவர்கள் சாதாரணமாக மனிதர்கள் அல்ல! எமது சமூகத்தைத் துயரங்களிலிருந்து...தூக்கி விடப் புறப்படடவர்கள்! தனி மனித அடையாளங்கள்...சமூக முன்னேற்றத்துக்கு...இங்கே உதவவில்லை! ஜஸ்டின் ...மேலே குறிப்பிட்ட்து போலத் தனிமனித அடையாளங்கள்...காலப்போக்கில் அழிந்து போய் விட....செய்த செயல்களின் பயன்கள் மட்டும்.....காலத்தால் அழிந்து போகாது...சமூக வளர்ச்சிக்கு என்றும் துணை போகும்! நன்றி....மல்லிகை வாசம்!
 13. 6 points
  சாம்பார் வந்த கதை .. ! மராட்டியர்கள் நமக்குத் தந்த உணவுக் கொடைதான் சாம்பார். மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள். தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன் சாஹூஜி-1 காலத்தில் தான் சாம்பார் உருவானது. 12 வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் அவர். மராட்டியர்கள் செய்யும் ஆம்தி, சாஹூஜிக்குப் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாம். ஆனால், சாஹூஜிக்குப் பிடித்தமான குழம்பை வைப்பதற்கு அடிப்படைத் தேவையான "கோகம் புளி" ஒரு நாள் வரவில்லை. இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த சாரு விலாச போஜன சாலை, எனப்பட்ட தஞ்சை அரண்மனை சமையலறையின் நிபுணர்கள், நாம் பயன்படுத்தும் புளியம்பழத்தை வைத்து முதன்முறையாக ஒரு குழம்பை வைத்திருக்கிறார்கள். அத்துடன் துவரம்பருப்பு, காய்கறி, மசாலா பொருட்களையும் சேர்த்திருக்கிறார்கள். அதுவே இன்றைய சாம்பாரின் மூலகர்த்தா. ஆச்சரியம் என்னவென்றால், ராஜா சாஹூஜிக்கு இந்த புதிய குழம்பு பிடித்துப் போய்விட்டது. எவ்வளவு பிடித்தது என்றால் தனது ஒன்றுவிட்ட சகோதரரான, மராட்டிய சிவாஜியின் மகன் சாம்போஜிக்கு விருந்தில் சாம்பாரைப் படைத்துள்ளார். அதன்பிறகு சாம்போஜியை கவுரவிக்கும் வகையில், அதற்கு சாம்போஜி ஆம்தி என்று பொருள்படும் வகையில், சாம்பார் என்ற பெயரை வைத்ததாக கூறப்படுகிறது. சாம்பார் தொடர்பாக போஜன குதூகலம், சரபேந்திர பாஸ்திரம் என்ற இரண்டு நூல்களில் எழுதப்பட்டுள்ளன. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவை இரண்டும், உணவு செய்முறையை விளக்கும் புத்தகங்கள். மராட்டிய மன்னர்களுக்கு பொதுவாகவே எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பண்பு இருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், இந்த நூல்கள். பின்னால் இரண்டாம் சரபோஜி (1812) காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நூல்கள் பாதுகாக்கப்பட்டன. ஆனால் சரபேந்திர பாஸ்திரத்தில் வேப்பம்பூ சாம்பார் செய்முறை மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஒரு வேளை அதற்குப் பிறகு மற்ற சாம்பார் வகை பிரசித்தி பெற்றிருக்கலாம். ஆனால் சாம்பார் என்ற வார்த்தை தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததாக தமிழ் பேரகராதி குறிப்பிடுகிறது. சம்பாரம் என்பது மசாலா பொருட்களை அரைத்துச் சேர்ப்பது என்றும், அதனால் தான் இதற்கு சாம்பார் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/08/19112937/Day-One-Message-The-story-of-Sambhar.vpf டிஸ்கி : குழம்பு சரி ? அதென்ன சாம்பார் ? இட்டலி , தோசை , சாப்பாடு என எங்கிருந்து அன்றாட தமிழர் வாழ்வியலில் ஒட்டிக்கொண்டது ? என்ற தேடலின் விடை இதுதான் . பேராசிரியர் திரு.மு .இளங்கோவன் அவர்களின் "மராத்தியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்" என்ற நூலில் இது பற்றி குறிப்புகளை எழுதியுள்ளார் . https://ta.m.wikipedia.org/wiki/மு._இளங்கோவன்
 14. 5 points
  யாத்திரை ....(6). அடுத்தநாள் சீக்கிரமே எழுந்து விட்டேன். கீழே மச்சாள் கூட்டி பெருக்கும் சத்தம் கேட்டது. நான் இறங்கி வரலாமா என்று கேட்க அவரை பால்கனியில் விட்டு பூட்டியாச்சு இனி உவரை இறங்கச் சொல்லு என்று குரல் கேட்டது. அன்று மழை குணமாய் இருட்டி இருந்தது.தோய்வதற்கு கொஞ்சம் யோசனையாய் இருந்தது.இங்கு எந்த கோடையிலும் பைப்பில் சுடுதண்ணி கலந்துதான் குளிக்க வேண்டும்.என்று நினைத்து கொண்டு உள்ளே போய் சிறிது சிறிதாக குளிக்கும் போது குளிர் தெரியவில்லை. பச்சத் தண்ணீரில் தோய முடிந்தது. வெளியே வந்து பார்த்தால் எல்லா இடங்களிலும் வெத்தலை கொடி பந்தலாய் படர்ந்திருக்கு. பார்க்க சந்தோசமாய் இருக்கு. எனக்கு தெரிந்தவரை முன்பு எங்கள் அயலட்டையில் வெற்றிலைக் கொடி இருக்கவில்லை. தேசிக்காய் மரம் கூட எங்காவது ஒன்று இரண்டு வீட்டில் அருமையாய் இருக்கும். இப்போது அநேகமாய் எல்லா வீடுகளிலும் வெற்றிலை, தேசிக்காய் , கறிவேப்பிலை,முருங்கை எல்லாம் வைத்து இருக்கிறார்கள். அவைகளும் செழிப்பாய் வளர்ந்திருக்கின்றன. நானும் ஒரு வெற்றிலையும் இரண்டு பூவும் பறித்து சூரியனைப் பார்த்து வணங்கி விட்டு பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு செல்கிறேன். காலையில் கோவிலில் நிறைய சனம் வந்து கும்பிடுகின்றார்கள்.பூசையின்போதுமேளம்,சேமக்களம்,சங்கொலி போன்ற வாத்தியங்களின் ஓசை ஒரு மின்சாரப்பெட்டியில் இருந்து ஒலித்துக்கொண்டிருக்கு. எல்லா கோவில்களிலும் அந்த சாதனம் வாங்கி வைத்திருக்கினம். சாமி கும்பிட்டு அர்ச்சனைகள் செய்கிறேன், தட்டத்தில் குறைந்தது 20 ரூபாயில் இருந்து 50,100 ரூபாய்வரை நிறைந்து கிடக்கு.நன்றாக கும்பிட்டுவிட்டு வருகின்றேன். யாத்திரை தொடரும்.....! சம்பவம்: நான் வெளியே வந்து சூரியனை பார்த்துகும்பிடுகிறேன். வீடும் பெரிதாய் கட்டி இருப்பதால் இருட்டு, திசையிலும் குழப்பம். கையில் பூவோடும் நீரோடும் கும்பிட்டுக்கொண்டு நிக்க மச்சாள் வந்து "உந்தப் பக்கம் யாரைப்பார்த்து ஒற்றைக்காலில் நின்று தவம் செய்கிறாய்.கிழக்கு இந்தப்பக்கம் எல்லோ இருக்கு என்று சொல்ல மனைவியும் தன் பங்குக்கு ஏன் அக்கா அம்மையாவின்ர பெட்டைகள் ஒருத்தரும் உங்கு இல்லையோ என்று கேட்கிறாள். அவை எல்லாம் வீடு மாறிபோட்டினம். அவர்களும் கலியாணம் கட்டி பிள்ளை குட்டிகளுடன் இருக்கிறார்கள்.என்று சொல்கிறாள். அம்மையா: அப்படித்தான் அவரை எல்லாரும் அழைப்பது.ஆண் பெண் என ஒரு எட்டு பத்து அழகான பிள்ளைகள். பார்த்தால் வினு சக்கரவர்த்தி மாதிரி இருப்பார். அவர்தான் அன்று ஒருநாள் நிறை போதையில் தண்ணி அள்ளும்போது அந்தக் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டார். இரவு 11 மணி இருக்கும். நான் நல்ல நித்திரையாய் கிடக்க அம்மம்மா ஓடி வந்து எட தம்பி பக்கத்து வீட்டில் எல்லோரும் குளறி கேட்குது என்னெண்டு ஓடிப்போய் பாரடா என்று சொல்ல நானும் உடுத்திருந்த சறத்துடன் ஓடிப்போய் மதிலை ஒரு ஜம்ப் பண்ணி பார்த்தால் அம்மையா கிணத்துக்குள்ள. நான் யோசிக்காமல் குதித்திட்டன். மேலிருந்து டார்ச் அடிக்கிறார்கள். பின் கயிற்றில் பெற்றோமக்ஸ் லைட்டும் இறங்குது. நான் கீழபோய் அவரை பிடரி சேட்டுடன் பிடித்திட்டன்.கட்டு கல்லில் வைத்து பிடித்துக்கொண்டு நிக்கிறன்.அவற்றை வெறி எல்லாம் முறிஞ்சு போச்சு. நான் அவரிடம் அம்மையா என்னை நல்லா இறுக்கி பிடியுங்கோ. என் கைக்கு மேல் கொஞ்ச உயரம்தான் மேல் கட்டு. ( முக்கால்வாசி கிணற்றில் தண்ணி நிறைந்திருக்கு. கிணற்றின் மேல் பிளாட் போட்டு கடை கட்டி இருப்பதால் ஒரு சின்ன சதுர இடைவெளியில்தான் காப்பியில் தண்ணி அள்ளுவது). நான் கயிற்றுடன் போய் அவர்களின் கையை பிடிக்க எங்களை மேல இருக்கிறவர்கள் தூக்கி போடுவார்கள் என்று சொன்னன். அவரும் ஓமடா தம்பி நான் உன்னை இறுக்கி பிடிக்கிறன் என்று சொன்னார். அந்தப் பிளானில் கயிற்றில் நான் பிடிக்க அம்மையா என் இடுப்பை ( நிஜமாய் அப்ப எனக்கு இடை இருந்தது).பிடிக்க அவர்கள் மேலே இழுத்து என்கையை பற்றி விட்டார்கள். அம்மையா என் சறத்துடன் மீண்டும் கீழே போய் விட்டார். பிறகு நான் கீழே வர அவர் தவளை மல்லாந்ததுபோல மேலே வந்தார் பிடிச்சிட்டன். பிறகு வேட்டியால அவரை கயித்துடன்சேர்த்து கட்டி மேலே தூக்கியாச்சு. இப்ப எனக்கு மேலே வர வெட்கம். சறம் இல்லை.மாமா (அம்மாவின் அண்ணன்,மனிசியின் அப்பா) கத்துறார் மேலே வாடா என்று.நான் நிலைமையை சொல்ல இரண்டு "அதுதான் அதை" சொல்லி கத்துறார்.அதுக்குள் ஒரு நண்பன் சேர்ட் ஒன்றை போட்டான் நான் அதை கோவணமாய் கட்டிக்கொண்டு (அப்ப வெள்ளி அறுணாக்கொடி அட்ஷரக்கூட்டுடன் கட்டியிருப்பன்) மேலே வந்தேன். பின் அந்த நேரத்தில் அத்தை தேனீர் வார்த்துகொண்டுவந்து எல்லாருக்கும் குடுக்கிறா. பொடியள் எல்லாம் கலாய்கிறாங்கள். போடா போடா நீ பொட்டை விழுந்திட்டுதென்றுதான் ஓடிப்போய் குதிச்சனி என்று.எல்லோரும் போனபின் மாமா வந்து சொன்னார், கவனமடா அப்பு கொப்பரை மாதிரி நீயும் தண்ணிக்குள்ள போயிடாதே என்று. மாமா என் வைத்துள்ள பாசம் அன்றுதான் புரிந்தது.(மற்றும்படி சவுல் அடிதான் எனக்கும், அவரின் மூத்த மகனுக்கும் அப்பப்ப குறையின்றி தாராளமாய் நடக்கும்). என் ஐயா வவுனியாவில் ஒரு குளத்தில்தான் நீந்தும்போது மோசம் போனவர். அப்ப நான் அம்மா வயிற்றில் எட்டு மாத கர்ப்பம்.....!
 15. 5 points
  யாத்திரை ....( 2 ). நாங்கள் இந்த நாட்டுக்கு வந்து பல வருடங்கள் ஓடி விட்டன. இங்கு இடைவிடாத வேலைப்பளு. பிள்ளைகளும் சிறுவர்கள்.மற்றும் வயதான பெற்றோர் (அம்மாவும், மாமியும்) . போன்ற சூழ்நிலைகளால் ஊருக்கு போகும் எண்ணம் "சாம்பல் பூத்த நெருப்பாக" எங்கள் உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது. காலம் உருள பிள்ளைகளும் வளர்த்து விட்டினம். பெற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராய் இயற்கை எய்தி விட்டார்கள். சென்ற வருட ஆரம்பத்தில் நினைத்தோம், எப்படியும் இந்த வருடம் ஊருக்கு போய் வர வேண்டும் என்று. மனைவி சொன்னார்,ஒருநாள் என்றாலும் நல்லூர் திருவிழா பார்க்க வேண்டும் என்று. அதற்கேற்றாற் போல் கட்டார் எயர் விமானத்தில் விமானசீட்டு முன் பதிவு செய்து கொண்டோம். ஒரு ஆளுக்கு 40 கிலோவும், கைப்பெட்டியில் 7 கிலோவும், மற்றும் தோளில் தொங்கும் ஒரு பையும் கொண்டு செல்லலாம். 40 கிலோவை இரு பெட்டிகளில் 20, 20 ஆக வைக்க வேண்டும். அதன்படி நாங்கள் பாரிஸில் நின்று உறவினர்கள் தந்த பொருட்களையும் சேர்த்து கட்டிக்கொண்டோம். யாத்திரை தொடரும்....! சம்பவம்: பெட்டிகளில் சாமான்கள் வைக்கும் போது அவை 19 கிலோவுக்கு மேற்படாமல் பார்த்து கொண்டோம்.அது விமான நிலையத்தில் பொதிகளை அனுப்பும் இடத்தில் பேருதவியாய் இருந்தது. அடுத்து மகனுக்கு அவரது வேலையின் நிமித்தம் 20 நாட்கள்தான் தங்க முடிந்தது. அதனால் அவர் எமக்கு முன்பே கிளம்பி விட்டார். நாங்கள் இருவரும் ஒரு மாதம் தங்கி நின்று வந்தோம்......! ஊக்கமளிக்கும் உறவுகளுக்கு உளமார்ந்த நன்றி....!
 16. 5 points
  விதியை கண்டிப்பாக மதியால் வெல்லலாம். ஆனால் மதி என்பது ஒரு சில மனிதர்களின் மதியால் மட்டுமல்ல. மக்களின், இனக் குழுமத்தின், சமூகத்தின், குடும்பத்தின் ஒட்டுமொத்த மனிதர்களால் அல்லது பெரும்பான்மை மனிதர்களால் சரியாக மதியை பயன்படுத்தப்படும் போது விதியை இலகுவாக வெல்லலாம். கட்டுக்கோப்பும், ஒற்றுமையும், சாதி பேத வேறுபாடுகளை மீறி இனமானம் கொண்ட இனம் வெல்லுது. இதில் எதுவும் இல்லாத இனம் தோற்குது. உண்மையில் விதி என்றே ஒன்றும் இல்லை. வீதியில் சிவனே என்று சரியாக போன ஒரு விரிவுரையாளரை வாகனம் மோதி கொல்லுது என்றால் அது விதி அல்ல. அந்த ஊரில், நாட்டில் இருக்கும் மக்கள் வீதி ஒழுங்கை சரியாக மதிக்காமையால் நிகழும் ஒன்று. இப்படி சட்டங்களை மதிக்காத எம் நாடுகளுடன் ஒப்பிடும் போது ஏனைய படித்த, சட்டங்களை ஓரளவுக்கேனும் மதிக்கும் நாடுகளில் விபத்தில் ஆட்கள் சாவது குறைவாக இருப்பது ஏன்? விபத்து என்றாலே எங்கோ ஒருவரின் தவறால் இன்னொருவருக்கு ஏற்படுவது தானே? வண்ணாத்திப் பூச்சி தியறி (butterfly theory) தான் இங்கு. எங்கோ ஒரு சிறு துணிக்கையில் நிகழும் அசைவு,சலனம், அல்லது சலனமின்மை மெதுவாக பரவி பரவி பூமியில் எங்கோ இருக்கும் இன்னொன்றை பாதிக்கின்றது. எங்கோ ஒரு நாட்டில் போன கப்பல் விபத்துக்குள்ளாகி அதன் உடைவுகள் உலகின் எங்கோ ஒரு தீவில் கரை ஒருங்கும் போது அந்த தீவிற்கு உடைவுகளில் பயணித்த சிறு எறும்பு கூட்டம் தரையிறங்கி அவ் தீவில் இலட்சக்கணக்கான வருடம் வாழும் நண்டுகளுக்கு ஆபத்தாக அமைகின்றது. உடைவுகளின் பயணத்தை தீர்மானித்தது காற்று வீசும் திசையும், புவியமைப்பும். இதில் விதி என்பது என்ன? நாம் வெற்றியடையும் போது. எல்லாம் விதி என்று சொல்வதில்லை. தோல்வியும் இழப்பும் நிகழும் போது மட்டுமே விதியை கூப்பிடுகின்றோம். விதி என்பது தோற்றவர்கள் தம் தோல்விக்கான நியாயமான காரணங்களை தம்மில் தேடாமல் சோம்பேறித் தனமாக 'எல்லாம் விதி' என்று புலம்ப சொல்லும் ஒரு தப்பித்தல் காரணம் என்று தான் நான் நம்புகின்றேன்.
 17. 4 points
  இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது! -கதவைத் தட்டும் பேரழிவு: தீர்வு எங்கே உள்ளது? நரேஷ் பிரச்சினைகள் எவ்வளவு வலுவானவையாக இருந்தாலும், தீர்வுகள் என்றும் எளிமையானவைதான். இயற்கையும் எளிமையானதுதான். அந்த எளிமையைப் புரிந்துகொள்ள முடியாமல் முட்டி மோதும் இடத்தில்தான் முரண் தொடங்குகிறது. பசுமைப் புரட்சியும், நஞ்சான உணவும் நிலமும் நீரும் மிகப் பெரிய பிரச்சினைகள்தான். ஆனால் அவற்றின் தீர்வு மிக எளிமையானது. அந்த எளிமையைப் புரியவைப்பதுதான் கடினமான வேலை. அதைச் சிறப்பாகச் செய்தவர்களுள் ஒருவர் நம்மாழ்வார். உரங்களை வெறும் உப்புதான் என்றார் அவர். ‘கருவாட்டுல உப்பு போடுறது நுண்ணுயிரிகள் உற்பத்தியாகாம இருக்கத்தான். அதையே நிலத்துல போட்டா நிலத்துலையும் நுண்ணுயிரிகள் உற்பத்தியாகாதுதானயா. வெறும் உப்பத் தின்னு செடி நெடு நெடுனு வளர்ந்தாலும் அதுல என்னையா நுண்ணூட்டம் இருக்கப்போகுது’ என்று பாமர மொழியில் பேசினார் அவர். அந்த எளிமைதான் இன்று இயற்கை விவசாயமும் நஞ்சில்லா உணவும் இவ்வளவு பெரிய விழிப்புணர்வைப் பெற்றிருப்பதற்கான காரணம். பிரச்சினைகளை புரியவைப்பதுதான் தீர்வை நோக்கிச் செல்வதற்கான முதல் படி. சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் மக்களுக்குப் புரியாத மொழிகளிலேயே பேசப்படுகின்றன. புவி வெப்பமயமாதல், பசுமை இல்ல வாயுக்கள், வெப்பச் சலனக் கதிர்வீச்சு என்று என்னதான் தமிழ்ப்படுத்தினாலும் சாதாரண மக்களுக்கு அவை அந்நியமானவைதான். இந்தச் சூழல் பிரச்சினைகளை சாதாரண மொழியில் புரியவைக்க வேண்டியது சூழலியல் செயற்பாட்டாளர்களின் தலையாய கடமை. அவற்றுக்காக நாம் பெரிதாகப் படிக்க வேண்டியதில்லை. எளிமையான மனிதர்களின் செயல்களைக் கவனிப்பதும், காது கொடுத்துக் கேட்பதும் போதும். புவி வெப்பமயமாதலுக்கும் நிலத்தடி நீரை நாம் உறிஞ்சுவதற்கும் உள்ள தொடர்பினை மிகவும் எளிமையாக ஒரு விவசாயி விளக்கினார். அது அவ்வளவு எளிமையாக இருந்தது. அவ்வளவு உண்மையாக இருந்தது. அதுதான் இன்றைய தேவை. “ஒரு சோத்துப் பானை எடுத்துக்கங்க. அதுல தண்ணி ஊத்தி அரிசி போட்டு கொதிக்க வெக்கிறீங்க.. அப்போ என்ன ஆகுது? தண்ணி சூடாகி ஆவியாகிடும். அந்த நீரோட பதத்தை உறிஞ்சி அரிசி வெந்துவரும். இப்போ அரிசிக்குப் பதிலா மண்ணும் தண்ணியும் ஊத்தி கொதிக்கவெச்சா, தண்ணி ஆவியாகி மண்ணு மட்டும் இருக்கும். இப்போ தண்ணியே ஊத்தாம, மண்ணை மட்டும் கொட்டி சட்டிய சூடு பண்ணா என்ன ஆகும்? மண்ணு கொதிச்சுப் போயிடும்..” என்றார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாயி ஞானப்பிரகாசம். இதுக்கும் புவி வெப்பமயமாதலுக்கும் என்ன சம்பந்தம்..? “என்ன தம்பி..? இன்னும் புரியலையா. அந்த சோத்துசட்டிதான் நம்ம பூமி. பூமியோட மையத்துல கொதிச்சிட்டுகிற வெப்பம்தான் அடுப்பு. நிலம்தான் மண்ணு. நிலத்துக்கு அடில இருக்க நீரை நாம தொடர்ந்து எடுத்துட்டே இருக்கோம். இப்போ நிலத்துக்கு அடியில நீரே இல்லாம போகுது. அப்போ பூமியோட மையத்துல இருந்து வர்ற வெப்பத்துனால மண்ணு சூடாகி வெப்பத்தைக் கக்குது. காத்து அந்த மண்ணுல இருந்து வர்ற வெப்பத்தை எடுத்துட்டு சூடாகுது.” “நிலத்துக்கு அடியில நீர்தான், பூமியோட மையத்துல இருந்து வெப்பம் நிலத்தை நேரடியா தாக்காம பாதுகாத்தது. பூமியில இருந்து வர்ற வெப்பத்துல ஆவியாகி காத்தோட ஈரப் பதத்துல கலக்கும். இல்ல மண்ணோட கலந்து வெப்பத்தைச் சீரா வெச்சிக்கும். நம்ம தண்ணிய பூரா உறிஞ்சு எடுத்துட்டோம்னா, மண்ணு மட்டும்தான் சூடாகும். அந்த வெப்பம் புவியிலையும் காத்துலையும்தான பரவும்..?” என்று கேட்டார். பேசிவிட்டு வந்து அறிவியல் தரவுகளைச் சோதித்துப் பார்த்தபோது சரியாக இருந்தது. சூரியனிலிருந்து 14.96 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பூமிக்கு, சூரியனிலிருந்து வரும் வெப்பத்தைவிட, பூமியின் நடுப்பகுதியிலிருந்து (Earth core) 6371.393 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருக்கும் நிலத்துக்கு வரும் வெப்பம்தான் அதிகம். அந்த வெப்பம் காற்று மண்டலத்தை (atmosphere) தாக்காமல் பார்த்துக்கொள்வது கடலும் நிலத்தடி நீரும்தான். அந்த வெப்பம் முழுமையாக நிலத்தின்மீது செலுத்தப்பட்டால், சோற்றுச்சட்டியில் வேகும் கறியைப் போல நாம் வெந்துவிடுவோம் என்றார். ஆபத்தை இதைவிட எளிமையாக விளக்க முடியுமா என்ன? “நம்ம பயன்படுத்துணும்தான் நிலத்துக்கு மேல ஆறுகளையும், அருவிகளையும், நீர்நிலைகளையும் கொடுத்துவெச்சது இயற்கை. நாம பயன்படுத்தக் கூடாது என்பதாலதான் பூமிக்கு அடியில கண்ணுக்குப் புலப்படாத ஆழத்துல நிலத்தடி நீரை மறைச்சுவெச்சது இயற்கை. வழங்கப்படுறத மதிக்காம, சுரண்டிப் புடுங்குறது தப்பில்லீங்களா..?” இந்தக் கேள்விக்கு நவீனத்தால் பதில் கொடுக்க முடியுமா? https://minnambalam.com/k/2019/02/10/15
 18. 4 points
  ருல்பென், ஆர்வத்திற்கும் கேள்விக்கும் நன்றி! எக்சிமா என்பது தொற்றில் இருந்து எம் உடலைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பீடனக் கலங்கள் (immune cells) , கொஞ்சம் மிகையாகத் தொழிற்பட்டு தோல் அழற்சியை ஏற்படுத்தும் நிலை. இது சாதாரணமாக ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியால் வருவது. இது தோலில் வந்தால் எக்சிமா, சுவாசக் குழாயில் வந்தால் ஆஸ்துமா! வரும் பொறிமுறை ஒன்று தான். உங்கள் கேள்விக்குப் பதில்: இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் இணையங்களிலும் வெளியீடுகளிலும், தேங்காயெண்ணை, மஞ்சள் தொடங்கி சீன பாரம்பரிய மருந்துகள் வரை எக்சிமாவைக் குணமாக்கும் என்று தகவல்களைத் தருகிறார்கள். இவற்றுள், சீன மருத்துவத்தினால் எக்சிமா குணமாவது நிரூபிக்கப் படவில்லை என 28 ஆய்வுகளை மீளாய்வு செய்து 2013 இல் முடிவாகச் சொல்லியுள்ளார்கள். இதை விட ஆயுர்வேதத்தில் எக்சிமாவைக் குணப்படுத்தும் என்று கூறப்படும் பிறிம்றோஸ் எண்ணை, borage oil என்பனவும் 27 ஆய்வுகளைத் தொகுத்துப் பார்த்த பொழுது எக்சிமாவின் தீவிரத்தைக் குறைக்கவில்லை எனக் கண்டறிந்துள்ளார்கள். இந்தத் தகவல்கள் நடுநிலையான ஆய்வாளர்களால் நிர்வகிக்கப் படும் எனும் cochrane library நூலக இணையத்தில் பெறப்பட்ட தகவல்கள். அதன் இணைப்பு: https://www.cochranelibrary.com/cdsr/about-cdsr தேங்காயெண்ணை, மஞ்சள் என்பன பற்றி சில ஆய்வுகள் தனிப்பட்ட ஆய்வாளர்களால் நடத்தப் பட்டு அவை எக்சிமா தீவிரத்தைக் குறைப்பதாக அறிக்கையிடப் பட்டிருக்கிறது- ஆனால் இந்த ஆய்வுகளின் நம்பகத் தன்மை மிகவும் குறைவானது (ஏன் என்று நான் அடுத்த பகுதி எழுதும் போது நீங்கள் அறிவீர்கள்). ஆனால் அது வரை: தேங்காயெண்ணை எக்சிமா மீது ஈரலிப்பை தக்க வைப்பதாலும், மஞ்சளில் இருக்கும் குகுமின் (cucurmin) என்ற இரசாயனம் கிருமிகளைக் கொல்வதாலும் எக்சிமா தீவிரம் குறையக் காரணமாக இருக்க ஒரு வாய்ப்பு உள்ளது. இவற்றை எக்சிமா மீது நேரடியாகத் தடவுவதால் இந்த நன்மைகள் கிடைக்கக் கூடும். ஆனால் நிரூபிக்கப் பட்டதாக தகவல் இல்லை! தொடர்ந்து இணைந்திருங்கள்!
 19. 4 points
  கொஞ்சப் பேர் சொல்லினம் விதியை மதியால் வெல்லலாம் என்று இதை நம்புகிறீர்களா?...நான் சொல்றன் முடியாது என்று இது பற்றிய உங்கள் கருத்து என்ன? அது,அது நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும்...அழுது,புலம்பி கடவுளை வேண்டினால் பாவ,புண்ணியத்தை கொஞ்சம் கூட்டி குறைக்கலாம் ...சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருத்தல் என்பதும்,இல்லாமல் தவிர்த்தல் என்பதும் விதியின் விளையாட்டு அல்லவா! நான் கடுமையான நோயின் பிடியில் இருந்து போராடி தப்பித்து விட்டேன் என்பார்கள்...தப்பித்து வரணும் என்பது தான் விதியாக இருந்தால்? ... காதலித்து திருமணம் செய்து நன்றாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தாங்கள் எந்த வித சாதகமும் பார்க்காமல் திருமணம் செய்தோம்.நன்றாய்த் தானே இருக்கிறோம் என்பார்கள் ..அப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பது சித்தமாக இருந்தால் மாத்த முடியுமா? எதோ எழுத வேண்டும் என்று தோன்றிச்சு...எழுதியிடடன்🙂
 20. 4 points
  நீங்கள் சந்தித்த ஆட்களை பொறுத்தது. சிலர் வருசத்துக்கு இருமுறை ஊருக்கு போகும் வசதியுடன் வாழ்கின்றனர். சிலர் வட்டிக்கு விட்டு வாழ்கின்றனர். சிலர் அரச மானியத்தில் வாழ்கின்றனர். சிலர் டிவி சீரியலில் வாழ்கின்றனர். சிலர் நித்திய தண்ணியில், மப்புடன், ஏன் இங்கே வந்தோம் என்று புரியாமல் வாழ்கின்றனர். சிலர் ஏழ்மை, நோய் என சீரழிந்து வாழ்கின்றனர். சிலர் சிறப்பான வாழ்வு வாழ்கின்றனர். இவர்களில் யாரை நீங்கள் சந்தித்தீர்கள் என்பதை பொறுத்தது தான் அவர்களது பதில்.
 21. 4 points
  சுமந்திரன் தனது பக்க நியாயத்தை முன்வைப்பதற்குப் புலிகளை விமர்சிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்படுகிறதென்பது ஒரு முக்கியமான கேள்வி. எனது பார்வையில், சிங்களத் தலைவர்கள் செய்யவேண்டிய ஒரு வேலையை சுமந்திரன் செய்கிறார் என்று நினைக்கிறேன். அதாவது, "தமிழர்கள் புலிகளை வெறுக்கிறார்கள், அவர்கள் ஒருபோதுமே பிரிவினையை ஆதரிக்கவில்லை, அவர்கள் விரும்புவது ஒருமித்த நாட்டிற்குள் ஒரு தீர்வையே, சமஷ்ட்டி என்பது நாட்டைப் பிரிப்பது கிடையாது" போன்ற விளக்கங்களை சுமந்திரனைக் கொண்டே சிங்கள மக்களிடம் தெரிவிக்க சிங்களத் தலைவர்கள் விரும்புகிறார்கள். அல்லது, "போய்ப் பட்டுத் தெளியட்டும்" என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது சுமந்திரன் பேச்சுப்பற்றி சிங்களவர்கள் கொதித்தெழும்போது, ரணிலோ அல்லது அவரது அமைச்சர்களோ தமக்கும் சுமந்திரன் கூறுவதற்கும் சம்பந்தம் இல்லாதது போலவும், அவர் கூறுவது தவறு என்பதுபோலவும் நடந்துகொள்கிறார்கள். ஏக்கிய ராஜ்ஜிய எனும் சிங்களச் சொல்லிற்கு சுமந்திரனும் ரணில் உற்பட்ட பல அமைச்சர்களும் கொடுத்த வேறுபட்ட விளக்கங்களே இதற்குச் சாட்சி. அடுத்ததாக, சிங்களவர் முன் தனது தீர்வை முன்வைக்கும் சுமந்திரன், அவர்கள ஆத்திரப்படாதவாறு நடந்துகொள்ள முயற்சிக்கிறார். அதாவது சிங்களவர்கள் விரும்புவதை அவர்களுக்குச் சொல்லுவது. "புலிகள் அழிக்கப்பட்டதை நான் தவறென்று கருதவில்லை, அது சரியானதுதான்" என்கிற அவரது வாதம், தன்னைப் புலிகளிடமிருந்து அந்நியப்படுத்தும் ஒரு கைங்கரியம் என்பதோடு, சிங்களவரின் மனங்களைக் குளிர்விக்கவும் அவர் இதன்மூலம் எத்தனிக்கிறார். இதேபோல, சிங்களவரை ஆத்திரமூட்டும் இன்னொரு விடயமான சிங்கள ராணுவத்தினர் மீதான போர்க்குற்ற விசாரணைகள் என்பது பற்றிய கருத்தாடல்களை வேண்டுமென்றே தவிர்ப்பதன் மூலம் தனது கருத்தினைச் சிங்களவர்கள் மத்தியில் பரப்ப முயற்சிக்கிறார். பொதுமக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதை வேண்டுமென்றே பேச மறுக்கும் சுமந்திரன், வெறுமனே, "பயங்கரவாதிகளைக் கொன்ற விதமும் பயங்கரவாதமே" என்பதன் மூலம் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சிங்கள மக்கள் முன் தமிழராக பறைசாற்றுவதோடு மட்டுமல்லாமல், ராணுவம் அப்பாவிகளைக் கொன்று குவித்ததை மறைத்துவிட்டு வெறுமனே புலிகளை மட்டுமே கொன்றதாக முடித்து விட நினைக்கிறார். இப்படிச் செய்வதன் மூலம் சிங்களவரின் நன்மதிப்பையும், அபிமானத்தையும், அத்துடன் தனது தீர்வுப்பொதிக்கான ஆதரவையும் பெற்றுவிடலாம் என்று சுமந்திரன் நினைக்கலாம். ஆனால், அதற்கான ஆதரவென்பது எந்தச் சிங்களத் தலைவரிடமிருந்தும் இதுவரை வரவில்லை. மகிந்த அணியினர் சுமந்திரன் நாட்டைப் பிரிக்க முயல்கிறார் என்று சிங்கள மக்களை உசுப்பேற்ற, சுமந்திரன் கஷ்ட்டப்பட்டு பதவியில் அமர்த்தியிருக்கும் ரணிலோ, சுமந்திரன் பேசுவதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று அப்பட்டமாக அறிவிக்க, யார் சிறந்த பெளத்த சிங்கள இனவாதியென்கிற போட்டி மகிந்த - ரணிலுக்கிடையில் நடக்கிறது. இதில் அடிபட்டுப் போகப்போவது சுமந்திரனது கருத்து மட்டுமில்லாமல், மொத்தத் தமிழர்களது மீதமிருக்கும் ஒரு சில நம்பிக்கைத் துளிகளும்தான்.
 22. 4 points
  சும்மின் அரசியல்! சும்மின் நிலைப்பாடு! ... தயவு செய்து என்னவென்று கூறுங்கள்????????????................. ... பின் வாசலால் நுளையும் மட்டும், மன்னிக்கவும் பின்வாசலால் உட்புகுத்தப்படும் எங்கிருந்தார்? அப்போது அவரின் நிலைப்பாடு என்ன? ........ வீரபாண்டிய கட்ட பொம்மன் வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது, " எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அல்லது ...",. யார் இவர் எம் கடந்த காலங்களை அரசியலை விமர்சிக்க? தேசிய பக்தர்களுக்கு வருமான விவகாரம் என்றால், அதை விட கூடிய வருமான விவகாரம் புலி வாந்தி எடுப்பவர்களுக்கு! எமக்கு புலி வாந்தி எடுக்க, இறைக்கப்படுவதற்கு கணக்கு காட்ட, கூடக்கூட வாந்தி எடுக்க வேண்டும்! நாமும் அன்று, யுத்தம் காலத்திலேயோ அல்லது முடிந்த பின்னும் பல ஏமாற்றங்கள்/கோபங்கள்/விரக்திகளில் பல கேள்விகள் கேட்டவர்கள்தான்! இன்றும் ஏப்பம் விடும் சிலரை நோக்கி கேள்விகள் கேட்கிறோம்தான்! இன்று எங்கள் பிரதிநிகள் எனும் பெயரால் இராஜபோகங்கள் அனுபவிப்பதை விட என்னத்தை எம்மக்களுக்கு செய்தார்கள்????? சுமந்திர/சம்பந்தர்கள் இன்று செய்வது விபச்சாரத்தை விட மோசமானது! விபச்சாரிகள் பணத்துக்காக தங்கள் உடலைத்தான் விற்கிறார்கள்! ஆனால் இவர்கள், கேவலம் அப்பாவி மக்களின் வாழ்மை விற்று, தாம் வாழ்கிறார்கள்!
 23. 4 points
  தமிழர்கள் தனித்துவத்தை பேண எத்தனிப்பது பிழை என்று சொன்ன பிரித்தானிய ராஜதந்திரிகளுக்கு பாடம் புகட்டி அனுப்பிய விக்னேஸ்வரன் பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் மேலும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஆகிய ஃபேர்கஸ் ஒளல்ட், இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன், அலுவலர் ஜோவிடா அருளாநந்தம் ஆகியோர் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை இன்று (24.01.2019) காலை 11.45 மணியளவில் நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்தனர் . இந்த சந்திப்பின்போது பிரித்தானிய ராஜதந்திரிகள் தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெரிவித்த சில கருத்துக்களுடன் உடன்பட மறுத்த விக்னேஸ்வரன் அவர்களுடன் தர்க்கம் செய்தார். பிரித்தானியாவில் பல நாடுகளில் இருந்தும் மக்கள் தம் நாட்டுக்கு வந்து தம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நாட்டை முன்னேற்றிச் செல்வதாக கருத்து கூறியதுடன் தனித்துவத்தை நீங்கள் பேண எத்தனிப்பது சரியான ஒரு விடயம் என்று தமக்குப் படுவதாகத் தெரியவில்லை என்று ஃபேர்கஸ் கருத்து கூறியபோது அதற்குப் பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் வெளிநாடுகளில் இருந்து எத்தனைபேர் வந்தாலும் நாட்டின் அதிகாரம் பிரித்தானிய நாட்டு மக்களின் கைகளிலேயே அமைந்துள்ளது என்றும் ஒரு நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மற்றவர்கள் இணைந்து செயற்படுவது வேறு தம் நாட்டிலேயே இரண்டாந் தரப் பிரஜைகளாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலை வேறு என்றும் கூறினார். அதற்கு திரு ஃபேர்கஸ் அவர்கள் பிரித்தானியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவ்வாறான வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், உதாரணமாகத் தமிழர்கள், பெரும் பங்காற்றி வருகின்றார்கள் என்றும்; ஏன் அதேவாறு தமிழ் மக்களும் நாட்டின் அரசியல் நீரோட்டத்தினுள் நுழைந்து பங்காற்ற முடியாது என்றும் கேட்டார். அதற்கு முன்னைய முதலமைச்சர் அவர்கள் ‘எம் நாட்டிலேயே எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கிவிட்டு எம்மை நாட்டின் அரசியல் நீரோட்டத்துடன் சேரச் சொல்வது முறையானதாக எனக்குப்படவில்லை. கிணற்றின் உள்ளே ஒருவரை வைத்துக் கொண்டு கிணற்றுக்கு வெளியே மற்றொருவர் நின்று கொண்டு ஏன் என்னோடு ஒருமித்து செயற்பட மறுக்கின்றீர்கள் என்று கேட்பது போல் இருக்கின்றது உங்கள் கேள்வி’ என்று கூறினார். இந்த சந்திப்பு தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது: பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் மேலும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஆகிய ஃபேர்கஸ் ஒளல்ட் என்பவர் இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன் அவர்களுடனும் அலுவலர் ஜோவிடா அருளாநந்தம் அவர்களுடனும் முன்னைய முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை இன்று (24.01.2019) காலை 11.45 மணியளவில் நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்தார். அண்மையில் ஒரு புதிய அரசியல் கட்சியை நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் தொடங்கியதாகத் தாம் அறிந்து கொண்டதாகவும் அதற்கான காரணம் என்னவென்றும் அவர் முன்னைய முதலமைச்சரிடம் கேட்டார். அதற்கு நீதியரசர் அவர்கள் மக்களிடம் வாக்குப் பெறச் செல்லும் போது சில முக்கியமான அடிப்படை விடயங்களைப் பெற்றுத் தருவதாக மக்களிடம் கூறி வாக்குப் பெற்று விட்டு அவை சம்பந்தமாக அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்யாது மிகவும் குறைந்த அளவு சில உரிமைகளைப் பெற இன்றைய தமிழ்த் தலைவர்கள் முயன்றுள்ளதால் அதை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் தமது முதுமையின் போது இவ்வாறான ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிப்பது என்பது சாதாரண விடயம் அன்று என்றும் எனினும் நடைபெறும் விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லா விட்டால் 2000 வருடங்களுக்கு மேலான தமிழ் மக்களின் பாரம்பரியமானது ஒரு சில வருடங்களில் இல்லாதொழிக்கப்படும் என்றும் கூறினார். இதற்கு திரு ஃபேர்கஸ் அவர்கள் பிரித்தானியாவில் பல நாடுகளில் இருந்தும் மக்கள் தம் நாட்டுக்கு வந்து தம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நாட்டை முன்னேற்றிச் செல்வதாக கருத்து கூறியதுடன் தனித்துவத்தை நீங்கள் பேண எத்தனிப்பது சரியான ஒரு விடயம் என்று தமக்குப் படுவதாகத் தெரியவில்லை என்று கூறினார். அதற்குப் பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் வெளிநாடுகளில் இருந்து எத்தனைபேர் வந்தாலும் நாட்டின் அதிகாரம் பிரித்தானிய நாட்டு மக்களின் கைகளிலேயே அமைந்துள்ளது என்றும் ஒரு நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மற்றவர்கள் இணைந்து செயற்படுவது வேறு தம் நாட்டிலேயே இரண்டாந் தரப் பிரஜைகளாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலை வேறு என்றும் கூறினார். அதற்கு திரு ஃபேர்கஸ் அவர்கள் பிரித்தானியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவ்வாறான வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், உதாரணமாகத் தமிழர்கள், பெரும் பங்காற்றி வருகின்றார்கள் என்றும்; ஏன் அதேவாறு தமிழ் மக்களும் நாட்டின் அரசியல் நீரோட்டத்தினுள் நுழைந்து பங்காற்ற முடியாது என்றும் கேட்டார். அதற்கு முன்னைய முதலமைச்சர் அவர்கள் ‘எம் நாட்டிலேயே எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கிவிட்டு எம்மை நாட்டின் அரசியல் நீரோட்டத்துடன் சேரச் சொல்வது முறையானதாக எனக்குப்படவில்லை. கிணற்றின் உள்ளே ஒருவரை வைத்துக் கொண்டு கிணற்றுக்கு வெளியே மற்றொருவர் நின்று கொண்டு ஏன் என்னோடு ஒருமித்து செயற்பட மறுக்கின்றீர்கள் என்று கேட்பது போல் இருக்கின்றது உங்கள் கேள்வி’ என்று கூறினார். மேலும், தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் திரும்பவும் கையளிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் கூறுவது போல் எம்மாலும் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நீரோட்டத்தினுள் உள்ளீர்க்கப்பட்டு செயலாற்ற முடியும் என்றும் கூறினார். ஆனால் முதலில் எங்களைக் கிணற்றினுள் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இராணுவத்தை வைத்துக் கொண்டு பக்கச்சார்பான சட்டங்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டு தமது அரசியல் நீரோட்டத்தினுள் சேருமாறு சிங்கள அரசியல் தலைவர்கள் கோரினார்களேயாகில் அது சமத்துவ அடிப்படையிலான கோரிக்கை அன்று என்று விளக்கினார். எமது உரிமைகளை அரசாங்கம் தந்த பின்னர் நாம் மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து செயலாற்ற முடியும். ஆனால் முதலில் எமது தமிழ்ப் பேசும் பிரதேசங்களான வடகிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும். சர்வதேச சட்டத்தின் கீழ் உள்நாட்டு சுயநிர்ணய உரிமை எமக்கு இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்;கொள்ள வேண்டும். மேலும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் வடகிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் இறுதியில், ‘உங்கள் மக்களின் உரிமைகளுக்காக நீங்கள் போராடுவதாக இருந்தால் அதனை நான் பாராட்டுகின்றேன். உங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகின்றேன்’ என்று கூறி சந்திப்பை முடித்துக் கொண்டார் கௌரவ ஃபேர்கஸ் அவர்கள். இன்று மத்தியானமே இரயிலில் கொழும்புக்குப் பிரயாணம் செய்வதாகக் கூறினார். http://www.samakalam.com/செய்திகள்/தமிழர்கள்-தனித்துவத்தை-ப/
 24. 4 points
  இந்த விடயத்தில் விக்கி ஐயாவின் கருத்து மிகச் சரியென்று நான் நினைக்கிறேன். சட்டத்தின் ஆட்சி, யாரிடம் என்ன திறன் இருக்கிறது என்று இனம், தோல் நிறம் தாண்டிப் பார்க்கும் (பெரும்பாலும்) மனநிலை கொண்ட மக்கள், மொழி அமல்படுத்தலை அரசியலாக அல்லாமல் பயன்பாட்டு ரீதியாக நோக்கும் அரசுகள் இப்படி இருக்கும் நாடுகளின் நிலையில் இருந்து இலங்கையில் இருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளை நோக்கக் கூடாது. வந்தவர் விக்கிபீடியாவில் இலங்கை பற்றி அவசரமாக வாசித்து விட்டு கூட்டத்திற்கு வந்திருப்பார் போல!
 25. 4 points
  பயனாளர்களே கேள்வி கேட்டு அவர்களே பதில் அளிக்கும் வகை இணையதளங்களில் கோரா (Quora) இணையதளம் உலக அளவில் முன்னிலையில் இருக்கிறது. ஆங்கில மொழியில் தொடங்கப்பட்ட இந்த இணையதளம் பின்னர் பல்வேறு மொழிகளுக்காகவும் தொடங்கப்பட்டது. தற்பொழுது அந்த வரிசையில் தமிழ் மொழியும் இணைந்திருக்கிறது. கடந்த வாரம் முதல் கோராவின் தமிழ் இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அதைப் பயன்படுத்தி இனிமேல் தமிழில் கேள்விகளைக் கேட்கவும், பதில் அளிக்கவும் முடியும். https://ta.quora.com/ என்ற இணையதள முகவரியில் இந்த தளத்துக்குச் செல்ல முடியும். அதைப் பயன்படுத்தி இனிமேல் தமிழில் கேள்விகளைக் கேட்கவும், பதில் அளிக்கவும் முடியும். `` உலகின் அறிவுச் செல்வத்தைப் பகிர்வதும் வளர்ப்பதுமே எங்களின் லட்சியம். அதற்காக நாங்கள் உயர் தரமான உள்ளடக்கத்தை உருவாக்கி வருகிறோம். தமிழ் மொழி பேசும் பலர் கோரா இணையதளத்தை ஆங்கிலத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். தற்பொழுது நாங்கள் தமிழ் மொழியில் தொடங்குவதன் மூலமாக மேலும், பலர் பங்கேற்பார்கள் என நம்புகிறோம்" எனக் கோராவின் நிறுவனர் ஆடம் டி ஏஞ்சலோ (Adam D'Angelo) தெரிவித்துள்ளார். தற்பொழுது தமிழ், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி போன்ற இந்திய மொழிகள் உட்பட 17 மொழிகளில் கோரா இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. இதை உலகம் முழுவதும் 30 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். நன்றி விகடனுக்கு https://www.vikatan.com/news/miscellaneous/147655-quora-launches-tamil-website.html