Jump to content

Leaderboard

  1. ரசோதரன்

    ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      251

    • Posts

      325


  2. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      248

    • Posts

      14877


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      228

    • Posts

      43243


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      202

    • Posts

      29162


Popular Content

Showing content with the highest reputation since 03/18/24 in all areas

  1. வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார். அப்போ, மீண்டும் இலங்கை மீள, இப்படி ஒரு நீண்ட இடைவெளி விழும் என எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டில் எத்தனை மாற்றங்கள். ஒரு தொடர் குண்டு வெடிப்பு, ஒரு ஆட்சி மாற்றம், பெருந்தொற்று, பொருளாதர நெருக்கடி, ஒரு அற(ம்)(ர)களை, இன்னொரு ஆட்சி மாற்றம்…. நாட்டில் மட்டும் அல்ல, இந்த இடைவெளியில் என் மனதில் கூட பல போபியாஃக்கள் வந்து குடியேறி, ஆட்சி அமைக்கவும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறன. தெனாலி கமல் போல, வைரஸ் எண்டால் பயம், டெங்கு எண்டாலும் பயம், ரேபீஸ் நாய்க்கடி என்றால் மெத்த பயம் எனக்கு என்பதாக இந்த போபியா லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. என்னதான் ஒரு காலத்தில் அந்த நாட்டில் நுளம்புகளோடு தாம்பத்தியமே நடத்தி இருந்தாலும், போரின், இடப்பெயர்வின், சாவின் வடுக்களை அனுபவித்திருந்தாலும், சில தசாப்த புலம்பெயர் வாழ்வின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்பு, மனதை மென்மையாக்கியே விட்டுள்ளது. உண்மையில் இந்த பயணம் பல மட்டங்களில் எனக்கு ஒரு மீள் வருகைதான். நான் பிறந்த நாட்டுக்கான சில வருடங்களின் பின்னான பெளதீக மீள் வருகை மட்டும் அல்ல, உள ரீதியில் ஒரு தென்னாசியனாக என் இயற்கை வாழ்விடத்துக்கும், முன்னர் எனக்கு பழகி இருந்த அந்த வாழ்விடத்தின் அசெளகரியங்களுக்கும் கூட, இது ஒரு மீள் வருகைதான். இந்தத்தடவை தமிழ் நாடு போய், கப்பல் அல்லது விமானம் மூலம் யாழை சென்றடைய முயற்சித்தாலும் அது கை கூடவில்லை. புலம் பெயர் நாட்டில் இருந்து இந்த பயணங்களை இந்த தடத்தில் ஒழுங்கு செய்வது கொஞ்சம் கடினமாக, மிகவும் அயர்ச்சி தருவதாக இருந்தது. கப்பல் போக்குவரத்து இந்திய அரச கப்பல் நிறுவனம் செய்வதாக சொல்லி இருந்தாலும் அதன் இணைய தளத்தில் அந்தமான் சேவை பற்றி மட்டுமே அறிய கிடைத்தது. ஒரு வாட்சப் நம்பரை தேடி எடுத்து தொடர்பை ஏற்படுத்த முனைந்தும் பதில் ஏதும் இல்லை. அதே போல் விமான சேவை செய்யும் அலையன்ஸ் ஏர் டிக்கெட் விற்கும் இணையதளம் செயல்பட்ட வேகமும், முறையும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. மேலும் எத்தனை கிலோ எடுத்து போகலாம் என்பது பற்றிய நிச்சயமின்மை, சென்னையில் இடைத்தரிக்கும் நேர அளவு, self transfer என்பதால் ஏற்பட கூடிய அனுகூல இழப்புகள், யாழிற்கு நேரே போனாலும் எப்படியும் கொழும்புக்கு வர வேண்டி இருந்தமை, இந்தியன் வீசா கட்டணம் இப்படி பலதை கருத்தில் எடுத்தபோது, இந்த முறையும் நேரே கொழும்புக்கு போவதே உசிதமான தெரிவாக இருந்தது. ஹீத்துரோவில் தானியங்கி செக்கின் முறையில் ஏதோ குளறுபடி என ஒரு முப்பது நிமிடம் அளவில் தாலியை அறுத்தாலும், இந்த குளறுபடியில் நாற்பது கிலோவுக்கு பதிலாக நாற்பத்தைந்து கிலோவை லெகேஜில் தள்ளி விட முடியுமாக இருந்தது ஒரு சின்ன வெற்றியே. அதுவும் அந்த ஒயிலான இந்திய வம்சாவழிப் பெண் ஊழியை உதவிக்கு வந்தமை, இன்னொரு முப்பது நிமிடம் தாமதித்தாலும் பரவாயில்லை என்றே எண்ண வைத்தது. ஒரு வழியாக போர்டிங் வெட்டி, ஏழு கிலோவுக்கு பதில் பதினொரு கிலோ ஹாண்ட்லெகேஜுடன் விமான இருக்கையை வெற்றிகரமாக அடைந்து, முதல் ஆளாக போய் துப்பராவான கழிவறையை பாவித்து விட்டு, இருக்கை பட்டியை அணிந்து, விமான இருக்கை முன் உள்ள சின்ன திரையை நோண்ட ஆரம்பிக்க, விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையில் மெதுவாக உருள ஆரம்பித்தன. (தொடரும்)
    22 points
  2. பாகம் II ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான இடைவெளி போதாமையால், மடக்கி கொண்டிருக்கும் கால்கள் வலிக்கும். அதே விமானப்பயணத்தில் அனுகூலம் யாதெனில், இந்த கால் வலிக்கும் பிரச்சனயை சாட்டி, சிப்பந்திகள் பகுதியில் போய் நின்றபடி, அவர்களிடம் கோப்பி வாங்கி குடித்துக்கொண்டே கடலை போடலாம். இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை. மத்திய கிழக்கு விமானங்களில் இலங்கையர்கள் பணிப்பெண்களாக பொதுவாக வேலை செய்வதில்லை. இதை தமாராவிடம் கேட்ட போது, தானும் சிறிலங்கனில்தான் முன்பு வேலை செய்ததாயும், நிச்சயமற்ற நிலை காரணமாக இங்கே மாறி வந்ததாயும் கூறிக்கொண்டாள். அப்படியே பேச்சு வாக்கில், சிறிலங்கனில் டிக்கெட் போடாதே, செலவை மிச்சம் பிடிக்க they are cutting corners in maintenance (விமானப் பராமரிப்பில் கைவைக்கிறார்கள்) என்பதாயும் ஒரு எச்சரிக்கையை தந்து வைத்தாள் தமாரா. நீ இங்கே இருக்க நான் ஏன் சிறிலங்கனில் புக் பண்ண வேணும் என ஒரு அசட்டு ஜோக்கை அடித்தாலும், தமாரா தந்த அறிவுரையும், இதுவரை வாசித்து அறிந்த விடயங்களும் இலங்கையில் இந்த முறை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதையே கட்டியம் கூறுவதாக மனது நினைத்துகொண்டது. தமாராவை தவிர அதிகம் அலட்டி கொள்ள ஏதுமற்ற விமானப்பயணம் ஒருவழியாக முடிந்து, கட்டு நாயக்க நோக்கி விமானம் கீழிறங்கி, தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது. கட்டுநாயக்காவில் அதிக மாற்றம் ஏதும் இல்லை. பேப்பர் தட்டுப்பாட்டால் உள் நுழையும் சீட்டு முன்னர் தருவதில்லை என்றனர், ஆனால் இப்போ அது தாராளமாக சிதறி கிடந்தது. ஏலவே நுழைவு அனுமதி எடுத்தபடியால், அதிக அலுப்பின்றி குடிவரவை கடந்து, பொதிகளை எடுத்து கொண்டு, முப்பத்தியொரு டொலருக்கு இரெண்டு வாட் 69 போத்தல்களையும் வாங்கி கொண்டு, அழைக்க வந்திருந்த நண்பனின் வாகனத்தில் ஏறினால்….கண்களின் முன்னே காட்சியாக விரிந்தது இலங்கை. முதலில், முகத்தில் அறைந்தது போல் ஒரு நல்ல மாற்றம்…விமான நிலையத்தில், வழமையாக ஜனாதிபதிகளின் படம் இருக்கும் இடத்தில் ரணிலின் படத்தை காணவில்லை. அதேபோல, முன்னர் போல் வீதிகளிலும் தலைவர்களின் ஆளை விட பெரிய பதாதைகளை காணவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சிரச டீவி தனது விளம்பரத்துக்காக “பசில் திரும்பி வந்து விட்டார்” என்பதாக ஒரு பாரிய படத்துடன் கூடிய பதாதையை வைத்ததை கண்டேன். களனிப் புதியபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நேரடியாக ஏர்போர்ட் ஹைவேயில் இருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகன நெரிசலை ஓரளவு தவிர்த்து இறங்க கூடியதாக உள்ளது. இங்கே இருந்து பொரளை வழியாக, தமிழர் தலைநகரமாகிய வெள்ளவத்தைக்கு போகும் வழியில், 2010களுக்கு முந்திய காலம் போல அன்றி, கடைகள், வீடுகள் என பலதில் வெளிப்படையான தமிழர் அடையாளங்களினை பார்க்க முடிகிறது. நரெஹேன்பிட்ட, கிருலப்பன, திம்பிரிகசாய, ராஜகிரிய வரையும், மறுபுறம் பம்பலபிட்டிய தொடங்கி, கிட்டதட்ட இரத்மலான தாண்டி, மொரட்டுவ ஆரம்பம் வரையும் காலி வீதியின் இருமருங்கிலும் தமிழர் “ஆக்கிரமிப்பு”🤣, நடந்துள்ளமையை தெளிவாக காணமுடிகிறது. களனிப் பாலமும், அதன் நேர் எதிர் திசையில் இருக்கும் தாமரை கோபுரமும் இரவில் அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கிறது. மின்சார தட்டுப்பாடு உள்ள நாட்டில் இது ஏன்? யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. போன மாதம் மக்களுக்கான மின்சார கட்டணத்தை 25% ஆல் குறைத்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த முறை யாழ்பாணம் போனால் எப்படியும் ஒரு டிஜே நைட்டில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழில் இப்படி எதுவும் நானிருந்த காலத்தில் ஏற்பாடாகவில்லை. ஆனால் ஒரு கலை நிகழ்ச்சிக்கு விஐபி வரிசையில் டிக்கெட் இனாமாக வந்தது என போய், பெரும்பாடாகி போய்விட்டது 🤣. இனாமாக டிக்கெட் தந்தவருக்காக மேலதிக தகவல்களை தவிர்கிறேன். ஆனால் கொழும்பில் சில தமிழ் டிஜே நைட்டுகளில் கலந்து கொள்ள முடிந்தது. ஆண்களும், பெண்களும் வரம்பை மீறியும் மீறாமலும் மகிழ்ந்திருந்தார்கள். வெளிப்படையாக அதீத போதை பொருட்கள் பாவிப்பதை இந்த இடங்களில் நான் காணவில்லை. ஆனால் எங்கும் பரவலாக சிவ மூலிகைப்பாவனை இருக்கிறது. மது, தண்ணீராக ஓடுகிறது. யாழிலும் எல்லாரும் போதை பொருளை இட்டு கதைக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நகர்களில் வெள்ளி இரவுகளில் தெரிவதை போல் அப்பட்டமாக இது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் நட்பு வட்டத்தில் இப்படி நாசமாகிய ஒரு இளையோரை பற்றி சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகவே உள்ளது. கொழும்பில் மூலைக்கு மூலை பெட்டிங் (சூது) கடைகள், ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் இதை நான் காணவில்லை. ஆனால், யாழிலும், மட்டகளப்பிலும் சில பிரபல விடுதிகளை சொல்லி, அங்கே பள்ளிகூட வயது பெண் பிள்ளைகள் வந்து போவார்கள் என சிலர் சொன்னார்கள். எந்தளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு முறை போகும் போதும், சில விடயங்கள் மேலும் மேலும் தளர்வதை உணர முடிந்தது. ஆனால் புலம்பெயர் நாட்டில் சிலர் சித்தரிப்பதை போல், எல்லாமும் நாசாமாகி விட்டது என்பதும் இல்லை. கொழும்பு, மேல் மாகாணத்தை தாண்டியும் சில சிங்கள பகுதிகளில் இந்த முறை நேரம் செலவிட்டேன். அம்பலாங்கொட போன்ற 99% சிங்கள மக்கள் வசிக்கும் இடங்களில் அடுக்கடுக்காக தமிழர் நகைக்கடைகள் இருந்தன. அதே போல் அனுராதபுரத்தில், பொலநறுவையில், கெக்கிராவ போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள், வியாபாரங்கள், மசூதிகள் என பரவலாக வெளிப்படையாக காண முடிந்தது. சிலாபம் போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் பெயர்களில் கடைகளை கண்டேன். பெளத்த மதத்தின் மீதான பற்று, சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அப்படியே உள்ளதை மத அனுஸ்டானங்களும், ஞாயிறு பள்ளிகளும் காட்டி நிற்கிறன. கொழும்பின் மதச்சார்பற்ற பிரபல பாடசாலைகளில் கூட, மாதாந்த பிரித் உட்பட பல வகையில் மதம் புகுத்தபடுவதாக பலர் விசனப்பட்டனர். மேல்மாகாண, மலையகத்தில் இருந்து மேல்மாகாணம் வந்த தமிழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு படி மேலே போயுள்ளனர். அதே போல் முஸ்லிம் சமூகம், வியாபாரத்தில் பல படி உயர்ந்து நிற்கிறது. வட கிழக்கு தமிழ்ச் சமூகமும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது. நிற்க, நாட்டில் வறுமை தலைவிரித்தாடும், வீதி எங்கும் பிச்சைகாரர் இருப்பர், 80 களில் சென்னை தி. நகர் போனால் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும் என நினைத்துப்போன எனக்கு, அப்படி எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. பிச்சைகாரர் எண்ணிக்கை முன்னர் போலவே உள்ளது. இலண்டனில் வீதி விளக்கில் நிற்போர் அளவுக்குத்தான் இருப்பதாக படுகிறது. அடிக்கடி வேலை நிறுத்தங்கள் வருகிறது. ஆனால் ஓடும் போது ரயில் பஸ்சுகள் ஓரளவு நேரத்துக்கு ஓடுகிறன. யாழ், கல்முனை/அக்கரைபற்றுக்கு நல்ல பஸ்சுகள் ஓடுகிறன. அதுவும் அக்கரைபற்றுக்கு, தெற்கு விரைவு சாலை வழியாக, விரைவாக, சுகமாக போக முடிகிறது. குருநாகலவில் ஒரு கொஞ்ச தூரம் கண்டி விரைவுச்சாலையின் ஒரு பகுதி மட்டும் பாவனைக்கு வந்து, தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் யாழ் பஸ் புத்தளம் வழியேதான் போகிறது. புத்தளம், அனுராதபுரம் இடையே உள்ள சேர்வீஸ் நிலையம், நல்ல தரமாயும், சுத்தமான கழிவறையுடனும் உள்ளது. அதேபோல் மாத்தறை விரைவுச்சாலையில் மேநாட்டு பாணியில் மிக திறமான சேர்விஸ் நிலையங்கள் இரு பக்கமும் உள்ளன. மருந்துகள் உட்பட எந்த பொருளும் இல்லை என்று இல்லை. ஆனால் எல்லாமுமே 2019 உடன் ஒப்பிடின் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. மேநாடுகளில் சாமான்யர்களின் பொருளாதாரத்தை பாணின் விலையை கொண்டு மதிப்பீடு செய்யும் ஒரு அடிப்படையான முறை உள்ளது. இலங்கையில் அதை மாட்டிறைச்சி கொத்து ரொட்டியின் விலையை கொண்டு அணுகலாம் என நினைக்கிறேன். முன்னர் 250-350 என இருந்த விலை இப்போ, 850-1000 ஆகி உள்ளது. அதே போல் 100க்கு கீழே இருந்த லீட்டர் பெற்றோல், இப்போ 400க்கு அருகே. ஆனால் மாதச்சம்பளம் இந்த அளவால் அதிகரிக்கவில்லை. ஆனாலும் பட்டினிசாவு, பிச்சை எடுக்கும் நிலை என்று பரவலாக இல்லை. அப்படியாயின் எப்படி சமாளிக்கிறார்கள்? பலரிடம் நயமாக கேட்ட போது, ரோலிங், கடன் அட்டை, சிலதை குறைத்துள்ளோம் என்பது பதிலாக வருகிறது. இதில் முதல் இரெண்டையும் அதிக காலம் செய்ய முடியாது. உண்மையில் மாத சம்பள ஆட்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமாளிக்கிறார்கள். சகல கடைகளிலும், நாடெங்கிலும் சனம். பொருட்கள் வாங்குதலில், உணவு கடைகளில், விழாக்களில், திருவிழாக்களில், திருமணங்களில்….ஒரு குறையும் தெரியவில்லை. ஒரு எள்ளுபாகு 50 ரூபாய் என்றதும் ஒரு கணம் ஜேர்க் ஆகவே செய்தது. ஆனால் கல்கிசை-வெள்ளவத்த பஸ் கட்டணம் 70 ரூபா என்றால் கணக்கு சரியாகவே தெரிந்தது. அம்மாச்சியில் மட்டும் எல்லாமுமே கொள்ளை மலிவு. வெளியே குறைந்தது 400 விற்கும் பப்பாசி பழ ஜூஸ், இங்கே 100! எப்படி முடிகிறதோ தெரியவில்லை. பொரித்த கச்சான் 100 கிராம் 100 ரூபாய், மஞ்சள் கடலை 100 கிராம் 150 ரூபாய், அவித்த சுண்டல் குறைந்த அளவு விலை 100 - என முன்னர் 20 ரூபாய் இருந்த இடத்தில் இப்போ 100 ரூபாய் இருக்கிறது. வாகனங்கள் இறக்குமதி இல்லை என்பதால் இன்னும் அதிகமாக விலை ஏறி உள்ளன. தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது. ஓரளவு பெயர் உள்ள கடைகளில் எல்லாம் contactless அட்டைகள் நாடெங்கும் பாவிக்க முடிகிறது ( தனியே பூட்சிட்டி, கீள்ஸ் மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்களின் சுப்பர் மார்கெட்டுகளிலும், பேக்கரிகளிலும் கூட). யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள். ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது. பண்ணை கடற்கரை பூங்கா அதே போல் தொடர்கிறது. நான் கண்டவரை முன்னிரவில் ஜோடிகள் சுதந்திரமாக கைகோர்த்தபடி ஆபாசம் இல்லாமல் மகிழ்ந்திருக்கிறார்கள். அருகேயே உணவு கடைகளும், சிறுவர் பூங்காவும், நடை பயிலும் பாதையும், அங்காடி பெட்டி கடைகளும் என சந்தோசமாக மக்கள் இருப்பதை காண சந்தோசமாக இருந்தது. ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது. எமிரோன் என்ற ஒரு யாழ் நொறுக்குதீனி கடை மேற்கத்திய பாணியில் பல கடைகளை திறந்துள்ளார்கள். கொழும்பில் கூட. அதே போல் தினேஸ் பேக்கவுசும் ஒரு பாரிய தொகுதியை கொக்குவிலில் திறந்துள்ளனர், மேலும் மூன்று கிளைகள் உள்ளன. யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது. இலங்கையில் தன் முகவரான அபான்ஸ் உடன் முறுகிகொண்டு மக்டொனால்ஸ் தன் கடைகளை மூடியுள்ளது. யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள். மட்டு நகரை அண்டிய வீதியோர காணிகளிலும் பேர்சுக்கு இதே விலைதான். யாழ் தனியார் பேரூந்து நிலையம் இயங்குகிறது. ஆனால் ஒருமாதம் முன்பும், பொது பேரூந்து நிலையத்தை அடைத்து, தனியார் ஆட்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றார்கள். தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது. அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை. நீர்கொழும்பு பெரிய முல்ல பகுதி கிரீஸ், சைப்பிரஸ் போல ஒரு இரவு வாழ்க்கை மையம் போல மாறியுள்ளது. தென்னிலங்கையில், களுத்தற முதல் காலி, மிரிச, வெலிகம வரை ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது. கடைகளில் சிங்களம், ஆங்கிலம், ரஸ்யனில் போர்டு வைப்பது சாதாரணமாக உள்ளது. ரஸ்யர்கள் தாமே வியாபாரங்களில் ஈடுபட்டு தமது வருவாயை குறைப்பதாக சுதேசிகள் முறையிட்டு இப்போ அரசு விசாரிக்கிறது. சகலதும் விலை கூடினாலும் வேகமாக ஓடி பொலிசிடம் மாட்டுப்பட்டால் கொடுக்கும் விலை மட்டும் இன்னும் 1000 ரூபாயாகவே உள்ளது. பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்). அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன. நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது. ஆனால் ரகளை குறைவு, இல்லை என்றே சொல்லலாம். எல்லாரும் ரணில் அல்லது ஏகேடி என்றே சொல்கிறார்கள். சொந்த வீடு உள்ள, வாடகைக்கு அடுத்த வீட்டை விடும் ஆட்கள் கூட ஏகேடி ஆதரவாய் இருப்பது முரண்நகையாக படுகிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கம் ரணிலின் பின்னால் நிற்பது கண்கூடு. முடிவுரை வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது. நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது. (முற்றும்) 🙏 சுக்ரியா மேரே (b) பையா🙏. பிளேன் எடுக்க முன்னம் நிறையை மீண்டும் அளந்து, போதிய எரிபொருளோடுதான் எடுப்பினம் என நினைக்கிறன். அத்தோட எல்லாரும் முழு அளவுக்கு வெயிட்டோட வாறேல்ல தானே. கூடவே சின்ன பிள்ளையள், குழந்தையள் எல்லாம் சேர்த்தா…நோ பிராப்ளம்.
    20 points
  3. யாழ். முற்றவெளியில் தமன்னாவை பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் சென்ற மாசி மாதம் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்ச்சியின் போது பல தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டமை வாசகர்களுக்கு நினைவிருக்கும். சுமூகமாக நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகை தமன்னா மேடைக்கு வந்த போது, ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் தமன்னாவை பார்க்க முண்டியடித்து மேடைக்கு முன் சென்ற போது நிகழ்ச்சியில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. சிலர் அங்கிருந்த பனைமரத்தில் ஏறி தமன்னாவை பார்த்து ரசித்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாக தென்னிந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் அலசி ஆராயப்பட்டது. பனைமரத்தில் ஏறிய இந்த நிகழ்வானது யாழ். மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதென்று ஒரு சாரார் கோபம் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு முற்றவெளியில் இருந்த இரு பனை மரங்களும் இனம் தெரியாத நபர்களால் வெட்டி வீழ்த்தப் பட்டுள்ளது. வீழ்ந்துள்ள பனைமரத்தின் அருகில், "யாழ்ப்பாணத்தின் அவமானச் சின்னமாக நான் இருக்க விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டேன். இப்படிக்கு பனைமரம்." என்று எழுதிய துண்டுப் பிரசுரத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளார்கள். இது சம்பந்தமான விசாரணைகளை காவல் துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும், பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர் பார்ப்பதாகவும், முதல் கட்டமாக நான்கு பல்கலைக்கழக மாணவர்களை சந்தேகத்தின்பேரில் கைது செய்து இருப்பதாகவும் மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார். Kaathilai puu. Com
    18 points
  4. (குறுங்கதை) ஒரு கிலோ விளாம்பழம் --------------------------------------- பல வருடங்களின் பின், சரியாக எண்ணிச் சொன்னால், 27 வருடங்களின் பின் அவன் தன் சொந்த ஊரில் அன்று கால் வைத்தான். வான் ஓடி வந்தவருக்கு எந்த ஒழுங்கையில் திரும்ப வேண்டும் என்று சொல்கின்றேன் என்றவன் சந்தியில் திடீரென்று வானை நிற்பாட்டச் சொன்னான். 'ஏன் அண்ணை, இங்க கடையில எதுவும் வாங்க வேண்டுமே?' 'இல்லை, இல்லை, நான் ஒழுங்கையை விட்டிட்டன். சந்திக்கு முன்னமே ஒழுங்கை வந்திருக்க வேண்டும்.......' சந்தியிலிருந்து அவன் வீட்டுப் பக்கம் இருக்கும் ஒழுங்கைகளை ஒவ்வொன்றாக மனதில் எண்ணிப் பார்த்தான். மூன்றாவது ஒழுங்கை தன் ஒழுங்கை என்று எண்ணி முடித்தவன், வானை திருப்பச் சொன்னான். ஒழுங்கை உடனேயே வந்துவிட்டது. அன்று தூரமாக இருந்தவை எல்லாம் இன்று அருகருகிலேயே இருப்பது போல தோன்றியது அவனுக்கு. அவன் வீட்டு ஒழுங்கை குறுகலாகத் தெரிந்தது. முன்னர் ஒன்றாக நான்கு நண்பர்கள் நான்கு சைக்கிள்களில் ஒரே கிடை வரிசையில் இதில் எப்படி போய்க் கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்பட்டான். வீடு திருத்த வேலைகள் முடிந்து அழகாக இருந்தது. வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தின் சில பெரிய கிளைகள் இப்பொழுது இல்லை. ஒரு விமான குண்டு வீச்சில் ஒரு குண்டு வீட்டின் பின்னேயும், இன்னொன்று முன்னேயும் அவனின் குடும்பம் இங்கிருக்கும் போதே விழுந்திருந்தது. அப்பவே அந்தப் பெரிய கிளைகள் சேதமாகி இருந்தன. பின்னர் அவை பட்டுப் போய் தறித்து விட்டார்களாக்கும் என்று நினைத்துக் கொண்டான். இப்பொழுது வீட்டில் தூரத்து சொந்த முறையிலான இருவர்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றனர். இரண்டு நாட்களில் எல்லாமே முற்றாக பழகிவிட்டன, கருக்கல் பொழுதுகளில் படையாக வரும் நுளம்புகள் உட்பட. இப்பொழுது ஒழுங்கைகள் எதுவும் குறுகலாகத் தெரியவில்லை. நெருக்கமான மற்றும் தெரிந்த மனிதர்கள் இருந்த, நடமாடிய இடங்கள் பலவும் வெறும் இடங்களாக மட்டும் இருந்தது தான் வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு சோகமாக மனதில் ஒரு மூலையில் இரண்டு நாட்களில் நிரந்தரமாக குடி வந்திருந்தது. இடத்தை தேடி வந்திருக்கின்றேனா, அல்லது அந்த மனிதர்களை தேடி வந்திருக்கின்றேனா என்பது அவனுக்குள் ஒரு குழப்பமாக இருந்தது. பழகிய மனிதர்கள் இல்லாவிட்டால், பழகிய இடங்கள் மெது மெதுவாக அந்நியம் ஆகுமோ? அடுத்த நாள் காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான். ஒரு காலத்தில் நித்திரை கொள்ளும் பொழுதுகளை விட்டால், அவனின் மிகுதி வாழ்க்கை அந்த விளாமரத்தை சுற்றியே போயிருந்தது. அந்தக் காணியில் ஒரு பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை இவனும், நண்பர்களும் உருவாக்கியிருந்தனர். மூன்று பக்கமும் வீடுகள் இருந்த படியால், பழைய மீன் வலைகளை உயர்த்திக் கட்டி, தடுப்புகள் கூட செய்து வைத்திருந்தனர். சில இரவுகளில் 'மின்னொளியில் கரப்பந்தாட்டம்' என்று விளம்பரப்படுத்தி போட்டிகளும் வைத்தார்கள். பல பகல் நேரங்களில் விளாமரத்தின் கீழ் இருந்து ரம்மி விளையாடி இருக்கின்றார்கள். அவனூரில் 304 மற்றும் வேறு விதமான சீட்டு விளையாட்டுகளை விட, ரம்மி விளையாட்டே அன்று பிரபலமாக இருந்தது. அவர்களுக்கு தமிழ்நாட்டுடன் இருந்த நெருக்கமான தொடர்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்று சீட்டுகளில் விளையாடப்படும் மங்காத்தா என்னும் ஒன்றையும் இடையிடையே விளையாடுவார்கள். ஒரு தடவை ஒரு அண்ணனை உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக வேண்டி வந்தது. அந்த அண்ணன் பிழைப்பானோ என்பதே சந்தேகமாக இருந்தது. மருத்துவர்கள் பல கேள்விகளின் பின், அண்ணனுக்கு முன்னர் விளாத்தி முள் ஒன்று குத்தி, அதை கவனிக்காமால் விட்டதால், அது இப்பொழுது ஏற்பு வலியாகி விட்டது என்பதை கண்டு பிடித்து, சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். இப்படி நினைத்துக் கொண்டே அந்த சின்ன ஒழுங்கையின் முனையை அடைந்தவனுக்கு ஒழுங்கையின் அடுத்த முனையில் விளாமரத்தின் உயர்ந்த கொப்புகள் தெரிய ஆரம்பித்தது. கோவிலுக்கு கோபுரம் தெரிவது போல. எல்லாமே மீண்டும் வந்து விட்டன என்பது போல அந்தக் கணத்தில் அவனுக்கு தோன்றியது. மரம் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. முழுக் காணியுமே புதர்களாக, வழி எதுவும் இல்லாமல் கிடந்தது. சுற்றி இருந்த வீடுகள் சேதமாகி இருந்தன. ஒரு காய் கூட மரத்தில் இல்லை. இந்திய இராணுவம் மக்களை கூட்டமாக கொன்ற அந்த இரண்டு நாட்களில், இந்த விளாமரத்தின் ஒரு பக்கத்தில் இருந்த வீடொன்றில் எட்டுப் பேர்கள் கொல்லப்பட்டிருந்தனர். விளாத்தியின் உச்சியில் இருந்து பார்த்தால் ஊர்ச் சந்தி தெரியும். கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் சந்தியில் வைத்தே கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் இந்த விளாமரம் என்றுமே காய்க்கவில்லை போல. முன்னர் இருந்ததை விட கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் இருப்பவர்களிடம் சந்தையில் விளாம்பழம் வாங்க முடியுமா என்று கேட்டான். சந்தையில் இருக்கின்றது, ஆனால் அவனை தனியே போக வேண்டாம் என்றனர் வீட்டிலிருப்பவர்கள். ஏன் என்று இவன் முழிக்க, வெளிநாடு என்று தெரிந்தால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என்ற பதில் வந்தது. ஒரு கிலோ விளாம்பழம் 150 ரூபாய்கள் என்று சொன்னர் அதை விற்றுக் கொண்டிருந்தவர். அங்கு அவர் ஒருவரிடம் மட்டுமே விளாம்பழம் இருந்தது. அவனுடன் போனவர் பேரம் பேசினார். பேசிக் கொண்டே இருந்தார்கள். 150 ஐ கொடுத்தே வாங்குவோமே என்று இவன் மெதுவாகச் சொன்னான். இல்லை, இல்லை, இவர்கள் ஏமாற்றுகின்றார்கள், நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் என்று, அன்று விளாம்பழம் வாங்காமலேயே இருவரும் திரும்பி வந்தனர். பின்னர், சில ஒன்று கூடல்கள், சந்திப்புகள், உள்ளூர் பிரயாணங்கள் என்று நாட்கள் ஓடி முடிந்தன. கொழும்பு திரும்பும் பொழுதும் வந்தது. ஆனால் விளாம்பழம் வாங்கப்படவேயில்லை. உறவினரும் அதை எப்பவோ மறந்து விட்டார், இவனைப் போலவே. கொழும்பு திரும்பி அடுத்த நாள் பகல் வெள்ளவத்தையில் நடந்து கொண்டிருந்தவன் அங்கு விளாம்பழங்களை ஒரு தெருக்கடையில் பார்த்தான். ஒரு கிலோ 200 ரூபா என்றார்கள். அப்படியே ஒரு கிலோ வாங்கினான். வீட்டில் அவனின் சின்னம்மாவிடம் அவன் தெருவில் வாங்கி வந்த விளாம்பழங்களை காட்டினான். பழங்களை கையில் எடுத்தும், மூக்கின் அருகிலும் வைத்துப் பார்த்த அவனின் சின்னம்மா 'இவை பழங்களே இல்லை. உள்ளுக்குள் பூஞ்சணம் கிடந்தாலும் கிடக்கும். ஊரில் நல்ல பழங்கள் இருக்குதே. அங்கேயே நீ வாங்கியிருக்கலாமே' என்றார்.
    13 points
  5. இவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார். இதே போல் தமிழர்கள் அமேரிக்கா போன போது, அங்கே மனிதர் யாரும் இருக்கவில்லை. தாம் ஆமையில் போய் அடைந்த கண்டம் என்பதை குறிக்கும் வகையில், இதை பண்டை தமிழர்கள் ஆமை- அருகா என்றே முதலில் அழைத்தனர். பின்னர் ஐரோப்பியர் வாயில் ஆமை-அருகா அமெரிக்கா என மருவி விட்டது. இதே போல ஊமல் கொட்டைகள் நிறைந்த ஒரு தீவை தமிழர்கள் ஆண்டனர். இங்கே ஊமல் கொட்டை வாங்க வருவோர் “கொட்டை இருக்கா”? என கேட்டு, கேட்டு - அதுவே அந்த தீவின் பெயராகி, இப்போ கோஸ்டோரீக்கா என வழங்குகிறது. முன்னர் தமிழர்கள் அமேரிக்க கண்டத்தை ஆட்சி செய்த போது, அங்கே சேலம் Salem என்று ஒரு நகரை எழுப்பினர். அதே போல் நீர்வழ நாடு என்ற கருத்தில் நீர்யோகபுரம் என இருந்த நகர்தான் இன்றைய நியூயோர்க். இவ்வளவு ஏன் மத்திய கிழக்கில் உள்ள ஜெருசலம் கூட தமிழர் நகரமே. எருமைகள் பல இருந்த சேலம் நகரை எரு-சேலம் என அழைத்தனர். அதுவே ரோமர் ஆட்சி காலத்தில் ஜெருசலேம் என்றாகிறது. அதே போல் முகமது நபி கூட தமிழர்தான் - முருகன் கந்தசாமி மகன் துரைச்சாமி என்பதே அவர் முழுப்பெயர். இதையே அவர் சுருக்கி மு.க.ம.து என ஆக்கி கொண்டார். இப்படி இன்னும் பல அரிய தகவல்கள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன். - உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது- காலம் 10/04/2024 இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்.
    12 points
  6. நான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டிச் செல்பவர். அந்தமுறை என் அம்மா கற்பித்த ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பத்துப்பேர் சேர்ந்து இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என் வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம். எனக்குப் பின் பிறந்த ஒரு தம்பியையும் இரு தங்கைகளையும் அம்மாவின் பெற்றோர் சகோதரிகளுடன் விட்டுவிட்டு ஆறே வயதான என் கடைக் குட்டித் தம்பியையும் எம்மோடு அழைத்து வந்திருந்தார். முதலில் ஊரில் இருந்து கிளம்பி தலை மன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தொடருந்தில் பயணம் எது பின்னர் எமக்காக ஒழுங்கு செய்திருந்த மகிழுந்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று மீண்டும் ஒரு மாதத்தின் பின்னர் ஊர் வந்து சேர்ந்தோம். முதலாவது அந்தக் கப்பல் பயணமே எனக்கு எத்தனையோ அனுபவங்களையும் மகிழ்ச்யையும் தந்தது என்றாலும் அதுபற்றி எழுதும் ஆர்வம் எனக்கு இதுவரை எழுந்ததில்லை. அதன் பின் பதினாறு ஆண்டுகளின் பின்னர் திருமணமாகி கணவர் பிள்ளைகளுடன் சென்றபோது என் தந்தையும் கணவரின் பெற்றோரும் எம்முடன் வந்தனர். அப்போது என் நண்பியின் தமக்கை போர் சூழல் காரணமாக இந்தியா சென்று அங்கு ஒரு சொந்த வீட்டையும் கட்டி மேல்மாடியில் உள்ள மூன்று அறைகளை இந்தியாவுக்கு வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவார். எமக்கும் அது பாதுகாப்பு என்று கருதியதால் நாமும் மகிழ்வாகவும் நிம்மதியுடனும் அங்கு இருக்க முடிந்தது. அடுத்த நாளே அவரிடம் கதைத்தபோது அவரே ஒரு டாடா சுமோ ஜீப் ஒன்றை எங்களுக்காக ஒழுங்குசெய்து தந்தார். ஒருமாதம் மீண்டும் கோவில்கள் அரண்மனைகள் முக்கிய இடங்கள் என்று அதில் திரிந்தபோதும் பார்த்த இடங்களை மீண்டும் பார்த்தபோதும் எனக்குச் சலிக்கவில்லை. ஆனால் ஜீப்புக்கு செலுத்திய தொகைதான் தலைசுற்ற வைத்தது. ஆனாலும் அதுபற்றி என் கணவரைத் தவிர யாரும் கவலைப்படவில்லை. ஆனாலும் மீண்டும் இனி இந்தியா போவதே இல்லை என்று என் கணவர் கூற எனக்கோ மீண்டும் போய் இந்தியா முழுவது திரிந்துவிட்டு வர வேண்டும் என்னும் அவா கூடியது. எல்லோரும் இருந்து இதுபற்றிக் கதைத்துக்கொண்டிருந்தபோது அந்த எம்மூர் அக்கா “நீர் இங்கை ஒரு பாங்க் ஏக்கவுண்ட் திறந்துபோட்டுப் போனால் வருஷா வருஷம் கொஞ்சக் காசை அனுப்பினால் உமக்கு ஊர் சூத்திப் பாக்க காசும் சேர்ந்திடும்” என்று சொல்ல எனக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிய ஒருவாறு கணவரை சம்மதிக்க வைத்து வங்கிக் கணக்கொன்றை எங்கள் இருவரின் பெயரிலும் திறந்தாச்சு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐநூறு டொச் மாக்குகள் மட்டும் அனுப்பி அதன்பின் 2001 இல் கணவரின் தம்பியின் திருமணத்துக்குச் சென்றபோது இன்னும் ஒரு ஆயிரம் என்று போட்டாலும் மனிசன் மட்டும் எங்கட நாடும் இல்லை. உன்ர விசர் கதையைக் கேட்டு எக்கவுண்டில காசைப் போட்டாச்சு. திரும்பக் கிடைக்குமோ இல்லையோ என்று எப்பவும் எதிர்மறையாக ஏச, கடைசிவரையும் போகாது என்று மனிசனுக்குக் கூறினாலும் எனக்கும் ஒரு வீதப் பயம் இருந்தது என்னவோ உண்மை. அதன்பின் 2014 இல் என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது மனிசன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இன்னும் ஒரு இரண்டாயிரம் பவுண்சுகளையும் கொண்டுசென்று முன்னர் போட்டவைகள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று ஆண்டுகள் நிரந்தர வாய்ப்பில் இட்டுவிட்டு வந்தாச்சு. மூன்று ஆண்டுகளின் பின்னர் தானாகவே புதுப்பிக்கப்படும். அப்போது உங்களுக்குக் கடிதம் மூலம் அறியத் தருவோம் என்றதுடன் சரி. எந்தக் கடிதமும் வரவில்லை. இப்ப மனிசன் எதுவும் சொல்லாமலே எனக்குப் பயம் எழ, வங்கி முகாமையாளருடன் தொலைபேசியில் கதைக்க அவரும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நான் மெயில் ஒன்று போடுகிறேன் என்று சொன்ன கையோடு அதுவும் வந்து சேர, அதன் பின்தான் எனக்கு நிம்மதி வந்தது. அது நடந்து படிக்கட்டு ஆண்டுகளாகியும் மீண்டும் இந்தியா செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஏனெனில் என் கணவருக்கு இந்தியா என்றாலே வேப்பங்காயாகவே இருந்ததும் பிள்ளைகள் கல்வி, திருமணம் என்னும் சுழலும் இந்தியாவைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை என்றானது. கடந்த ஆண்டு நான் ஆறு மாதங்கள் இலங்கை சென்ற போது எனது சுவிஸில் இருக்கும் நண்பி ஒருத்தியும் நானும் உன்னுடன் வர ப்போகிறேன் என்றதும் உடனே எனக்கு அவளுடன் இந்தியா செல்ல வேண்டும் என்னும் அவா எழ அவளிடம் கேட்கிறேன். அவள் இதுவரை இந்தியா சென்றதில்லை. இனிச் செல்லும் ஆர்வமும் தனக்கு இல்லை என்று கூற சரி இலங்கையிலாவது இருவரும் சேர்ந்து திரிந்து இடங்கள் பார்க்கலாம் என்றதுடன் நான் எங்கெங்கு செல்லலாம் ஆவலுடன் பட்டியலிட்டயபடி காத்திருக்க, அவளோ கடைசி நேரத்தில் தான் தனிய இலங்கை வருவது தன் கணவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறி வாராமலே விட்டது வேறு கதை. இம்முறை என் வளவில் மேலதிக மரக்கன்றுகள், செடி கொடிகள் எல்லாம் வைப்பதற்கு ஏற்ற காலம் ஒக்டோபர் என்பதால் நான் விமானச்சீட்டு முதலே எடுத்து வைத்தபடி காத்திருக்க, வாங்கிய வீட்டையும் வளவையும் நான் வடிவாப் பார்க்கவே இல்லை. நானும் உன்னுடன் வாறன் என்று மனிசன் சொல்ல சரி என்று அவருக்கும் பயணச் சீட்டு எடுக்க வெளிக்கிட இப்ப நான் வர ஏலாது. டிசம்பர் அல்லது தை மாதம் போவம் என்று கூற நான் ஏற்கனவே ஒக்டோபருக்கு எடுத்திட்டனே என்கிறேன். பரவாயில்லை மாத்து என்று சொல்ல, டிசம்பரில் விலை ஆயிரம் தாண்டியது. சரி தை மாதம் போடுவோம் என்று இணையத்தில் தேடினால் எல்லா 23-30 kg மட்டுமே கொண்டுபோகலாம் என்று காட்ட 40kg பொதிகள் கொண்டுபோகக் கூடிய விமானம் எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரண்டும் தான். அதில் என் தேர்வு எமிரேட்ஸ் தான். ஏனெனில் உணவும் கவனிப்பும் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். எல்லாம் எதிர்மாறாக இருந்தது வேறுகதை. வரும்
    10 points
  7. (குறுங்கதை) தோற்ற வழு ------------------- இது அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இங்கு பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்வது. அவர்கள் அங்கு மீண்டும் படிக்கவே போகின்றார்கள் என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வந்தால், அந்த எண்ணத்தை தயவுடன் இங்கேயே விட்டுவிடவும். அவர்கள் அவ்வளவு ஆர்வமானவர்கள் கிடையாது. அவர்களின் மகள் தான் அங்கு படிக்கப் போகின்றார். அவர்களின் மகன் மூன்று வருடங்களின் முன் வேறொரு பல்கலைக்கழகத்திற்கு போயிருந்தார். அதுவே அவர்கள் முதன் முதலாக இங்கு ஒரு பல்கலைக்கு உள்ளே போனது. இங்கு எல்லா பல்கலைகளும் அங்கு படிக்கப் போகும் பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கும் சேர்த்து ஒரு அறிமுக வகுப்பை இரண்டு நாட்கள் ஒழுங்கு செய்வார்கள். இது இலவசம் அல்ல, இதற்கு பெரிய கட்டணமும் வசூலித்துக் கொள்வார்கள். இங்கு பாடசாலைக் கல்வி இலவசம் தான், ஆனால், அதற்கு கந்து வட்டியும் சேர்த்து வாங்குவது போல பல்கலைக்கு கட்டணம் இருக்கும். பெரும்பாலும் கடன் எடுத்து தான் கட்டணம் கட்ட வேண்டும். எடுத்த கடனிலேயே அறிமுக வகுப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதுதான். மூழ்க நினைத்தால், நடுக்கடலில் மூழ்கினால் என்ன, இரண்டு பாக கடலில் மூழ்கினால் என்ன. உண்மையில் இந்த அறிமுக வகுப்புகளுக்கு போவதால், புதிதாக எதுவும் தெரிய வரும் என்றில்லை. முக்கியமாக முன்னர் ஒரு பிள்ளையுடன் போயிருந்தால், பின்னர் இன்னொரு பிள்ளையுடன், அது வெவ்வேறு பல்கலைகளாக இருந்தாலும், போக வேண்டும் என்றில்லை. எல்லா தகவல்களும் அவர்களின் இணையத்தில் கிடைக்கும். தகவல்களில் ஒரு புதுமையும் கிடையாது. ஆனாலும் மனம் விடாது, மணம் முடித்தவரும் விடார். முதல் நாள் அறிமுக வகுப்பு. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். வகுப்பு ஆரம்பித்துவிட்டது. ஒரு அவசர நிலையில் அவசரப் போலீஸை எப்படித் தொடர்பு கொள்வது என்று வகுப்பு போய்க் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒருவர் அவசரமாக வகுப்புக்குள் ஓடி வந்தார். வந்தவர் அவனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தை எடுத்துக்கொண்டார். எந்த தயக்கமும் இல்லாமல், 'வகுப்புகள் ஆரம்பிச்சு எவ்வளவு நேரமாச்சு?' என்று தமிழிலேயே கேட்டார். இந்தக் கூட்டத்தில் இன்னுமொரு தமிழ் குடும்பம் இருக்கும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் இவர் தமிழிலேயே தொடங்குகின்றாரே என்று ஆச்சரியம் அவன் மனைவியின் முகத்திலும் தெரிந்தது. தமிழ் முகம் என்று ஒன்று இருக்கின்றது போல, அது அந்த நபருக்கு தெரிந்தும் இருக்கின்றது. பின்னர் அந்த நபர் அவனை விட்டுப் பிரியவேயில்லை. இடைவேளை, உணவு வேளை என்று எல்லா நேரமும் கூடவே வந்தார். வகுப்பில் அவர் எதையும் கவனிக்கவில்லை. இவனும் கவனிக்கவில்லை. இவனின் மனைவி தான் வகுப்பையும் கவனித்து, இவர்கள் இருவரையும் அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று அவர் சொல்லாமலேயே தெரிய வந்தது. அவன் கன்னியாகுமரி அல்லது நாகர்கோயில் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அவரும் கேட்கவில்லை. இங்கு மருத்துவம் படித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும், அத்துடன் பெரும் செலவும் ஆகும் என்று சொன்னார். ஏன், இந்தியாவிலும் அதற்கு பெரும் செலவு தானே என்றான் அவன். இல்லை, இல்லை, இந்தியாவில் இலவசமாகவே படிக்கலாம் என்றார். கதை போதும், வகுப்பை கவனியுங்கள் என்று கண்ணாலேயே கடுமையான ஒரு அறிவுறுத்தல் அவனுக்கு அருகில் இருந்து வந்தது. இந்தியாவில் எப்படி இலவசமாகப் படிக்கலாம் என்ற கேள்வியை சேமித்து வைத்துக்கொண்டான் அவன். வகுப்புகள் முடிந்தது உடனேயே அவர் கிளம்பிவிட்டார். இரவு பெரிய விருந்திருக்குதே, நன்றாக இருக்குமே என்று இவன் சொல்லவும், அவர் நிற்காமல் போனார். போகும் பொழுது காலை உணவு கொடுப்பார்களா என்று கேட்டு விட்டுப் போனார். இது என்ன கணக்கு என்று இவன் முழித்தான். இப்ப பெரிய விருந்து வேண்டாம் என்கின்றார், ஆனால் காலையில் என்ன கொடுப்பார்கள் என்று கேட்கின்றார். அவரை காலையில் அவர் வீட்டிலிருந்து யாரோ ஒருவர் இங்கு வலுக்கட்டாயமாக அனுப்பி விடுகின்றார்களோ? அந்த ஆளை பார்த்தாலே ஒரு பைத்தியக்காரர் மாதிரி இருக்குது, நாளைக்கு நீங்கள் அவர் பக்கத்தில் இருக்கவே கூடாது என்று அவனின் மனைவி நல்லாகவே கடுமை காட்டினார். அவனா அந்த ஆளின் பக்கத்தில் போய் இருந்தான், அவர் தானாகவே வந்தாரே. நாளைக்கு அவரை எப்படி தவிர்ப்பது என்று அவனுக்கு தெரியவில்லை. மனைவியிடமே பின்னர் கேட்டு விடுவோம் என்று நினைத்தான். ஆலோசனைகளுக்கு அங்கு என்றும் குறைவு வருவதேயில்லை. அவரின் பெயரை அவன் கவனித்திருந்தான். பெயர்கள் எழுதப்பட்ட ஒரு துண்டை எல்லோரும் இடது பக்க நெஞ்சுப் பகுதியில் ஓட்டியிருந்தனர். ஏதோ ஒரு எண்ணத்தில் கூகிளில் அவரின் பெயரை அவன் அடித்து தேடினான். வந்த முதலாவது கூகிளின் முடிவிலேயே அவரின் பெயரும், படமும் இருந்தது. அவர் தான் அந்தப் பகுதியிலேயே மிகப் பிரபலமான மனநல மருத்துவர் என்றிருந்தது.
    10 points
  8. நாங்கள் புலம் பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரில் வாழ்ந்த காலத்தை விட, வெளியில் வாழ்ந்த காலமே அதிகம் என்றாகிவிட்டது. தெரிந்தவர்கள் பலர் வாழ்க்கை முடிந்து போகவும் ஆரம்பித்துவிட்டார்கள். என்னதான் வெளிநாடுகளில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், மனங்கள் என்றும் ஊரையும், அந்த நினைவுகளையுமே அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் என்றும் புலம் பெயரவே இல்லை என்னும் அளவிற்கு ஊர் நினைவுகள் அப்படியே ஒட்டியிருக்கின்றன. சில வேளைகளில் பார்த்தால், உண்மையில் கடைசிப் புகை மட்டும் தான் புலம் பெயர்ந்தது, அந்தந்த நாடுகளில் கலந்து விடுகிறதோ என்று தோன்றுகின்றது. ******************** புலம் பெயர்ந்த புகை ---------------------------------- இங்கு வந்த நாங்கள் இப்பொழுது இறக்க தொடங்கி விட்டோம் கடைசியில் ஒரு இடு வீட்டில் ஒரு வாரம் விறைப்பாக கிடந்து அங்கிருக்கும் புகை போக்கியால் எரிந்த மெய் புகையாக போகின்றது நாளை வாழ்வோம் நாளை வாழ்வோம் இன்று ஓடுவோம் இன்றே தேடுவோம் என்றிருக்க வாழ்க்கை ஓடியே போக காலம் முடிந்து விடுகின்றது இன்றே ஏன் வாழக்கூடாது எவருக்கும் சொல்லத் தெரியவில்லை இன்று அவர் ஓடுகின்றார் ஆகவே இவரும் ஓடுகின்றார் இன்று அவர் வாங்குகின்றார் ஆகவே இவரும் வாங்குகின்றார் பின்னர் ஒரு நாளில் ஊர் மண்ணை போய் சேர மீண்டு வரும் சொர்க்கம் என்று எண்ணி எண்ணி இருக்க அந்த நாள் என்றும் வருவதில்லை திடீரென பெய்த மழையில் கொத்தாக குருவிகள் ஒதுங்கின வீட்டுக் கூரைக்குள் கிச் கிச் கீச்சென்று ஒன்றையொன்று தள்ளி இடம் பிடித்தன துளி விழுந்து துள்ளி ஓடி வந்தது வெளியே போன குஞ்சு ஒன்று அகமும் விழியும் இருந்தால் இந்த வாழ்க்கை சமமே இங்கும் அங்கும்.
    10 points
  9. எனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
    9 points
  10. எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக்தியை தாறது. கொஞ்ச நாளைக்கு "முன் லைனிலே, பொசிசன் எடுத்து நிக்கப்போறன் - ஓவர்" ஒருகாலத்தில் (மைத்திரி வந்த போது) கொழும்பில் போய் இருப்பது (ஊரில் இருக்க முடியுமா தெரியவில்லை) திட்டமாக இருந்தது. கோத்தபாயவின் வருகை, கொரோனாவின் தாக்கம், பொருளாதார நெருக்கடி இதனால் முடிந்தவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு ஓடியதால் தற்போது வந்திருக்கும் Brain Drain போய் இருக்கும் எண்ணத்தை வெகுவாக பாதித்துள்ளது. இப்பத்தான் 38ஆவது வயசு நடப்பதால் பென்சன் எடுக்கும் காலம் பத்தி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பொருளாதார ரீதியில் சிறு உற்பத்தி ஏற்றுமதிகளோட மட்டுமில்லாமல் தகவல் நுட்பத் துறை சார்பான ஏற்றுமதிகளை எமது பக்கங்களில் ஊக்குவிப்பது தான் இப்போதைக்கு நாங்கள் லடயஸ்பொறா டமில்ஸ் செய்ய வேண்டியது/செய்யக் கூடியது. ஆனால் யாழ் மாவட்டத்தில் வேலை வாங்குவது மிகவும் கடினம். உதாரணத்துக்கு எனது நண்பன் ஒருவன் ஒரு சுயதொழில் செய்தார். அவரின் operations ஐ பாத்தவுடனேயே அதில் பல குறைபாடுகளை கண்டு பிடித்துவிட்டேன். இந்த இந்த மாதிரி செய், இத ட்ரை பண்ணு இன்னும் லாபத்தில ஓடும் எண்டு சொன்ன போது உதெல்லாம் வெளிநாட்டுக்குத்தான் சரி, எங்கட ஆக்களுக்கு உதுகள செய்ய பஞ்சி எண்டு சொல்லிப் போட்டான். ரெண்டு வாரியத்தில அவனிண்ட லாபத்தை விட கால்வாசி சம்பளத்தில அரச வேலை வந்தவுடனேயே பிஸினசையும் மூடிப்போட்டு இருக்கிறார். அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள். பொருளாதார இறுக்கத்தின் பின்னர் எனது நண்பர்களில் பல்கலை போன 90% எஞ்சினியர்/டொக்டர் ஊரிலே இல்லை. இருப்பவர்கள் ஆங்கில அறிவு போதாமையால் போகமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
    9 points
  11. சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக்கும் இலவச விளம்பரம்தான் அவரைப் பற்றி வரும் பதிவுகள். இந்தத் திரி யாழில் வந்ததற்கு பின்னர் குறைந்தது 3 - 4 பேராவது யாழிலிருந்து அந்த உதிரிப் பெண்ணை சமூகவலைத் தளங்களில் பின்தொடர்வார்கள்! மேலும் அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து அடித்து எந்தப் படிப்பினையையும் அவருக்குக் கொடுக்கவில்லை. தாமும் அவரைப் போல தரம் தாழ்ந்து, தலைவருக்கும் புலிகளுக்கும் அவமானத்தைத்தான் கொடுத்துள்ளார்கள். வீதியில் நாயின் மலம் 💩 இருந்தால் அதை விலத்தி நடப்பதுபோல சமூகவலைத் தளங்களில் கொட்டப்படும் மலங்களில் இருந்து தூர விலகவேண்டும். ஆனால் சிலர் மலநாற்றத்தை முகர்ந்து பின் தொடர்கின்றனர்!
    9 points
  12. Dangar Island - தனிமை விரும்பிகளுக்கு மட்டும்… கொஞ்ச காலமாகவே ஒன்றிலும் நாட்டம் ஏற்படவில்லை. வேலைகளும் அதிகம், எல்லாவற்றிலும் இருந்து சற்று விலகி அமைதியாக இருக்க மனம் விரும்பியது. இந்த தீவு பற்றி கேள்விப்பட்டு அங்கே போவதற்காக ஓரு அதிகாலையில் வெளிக்கிட்டு இந்த தீவிற்கு வந்தோம். இது ஒரு சிறிய தீவு.. சிட்னியின் ஆரவார இயந்திர வாழ்கையிலிருந்து சற்று விலகி இருக்கும் ஒரு தீவு. Hawkesbury ஆற்றில் அமைந்துள்ள இந்த தீவை நீங்கள் ஆகக் குறைந்தது 1 மணித்தியாலத்திற்குள் சுற்றிப் பார்த்துவிட முடியும். Hawkesbury ஆற்றின் அழகு!! இந்த தீவிலும், இந்த தீவிற்கு வரும் வழியிலும் கண்ணில் பட்டதை கருத்தை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நான் இருக்கும் இடத்திலிருந்து 1 3/4 மணித்தியால கார் ஓட்டத்தில் Brooklyn என்ற இடத்திற்கு வந்து பின் அங்கிருந்து படகில் இந்த தீவிற்கு போகவேண்டும். Brooklynற்கு போகும் வழியில் Mooney Mooney என்ற இடத்தில் காலை உணவிற்காக நின்ற பொழுது.. அங்கே இருந்த Lawn bowling கிளப்பில் சிறிது நேரம் பொழுதை கழித்தோம். வேலையில் இருந்து ஓய்வு எடுத்தபின் இந்த பௌலிங் விளையாட்டு உதவும் என்பதால் அதனை விளையாடிப் பார்த்த பொழுது.. பின் மதிய உணவை முடித்துக்கொண்டு Brooklyn படகுதுறைக்கு மதியம் இரண்டு மணியளவில் போய்ச் சேர்ந்தோம்.. படகு வந்ததும் கட்டனத்தை செலுத்திவிட்டுப் படகில் ஏறி, 10 நிமிடங்களில் Danger Island வந்தடைந்தோம்.. இந்த தீவில் வாகன வசதி இல்லை என்பதால் நடந்தே தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். அதிகளவு பொருள்கள் என்றால் முன்பே பதிவு செய்து community buggy( சிறிய வண்டி) பயன்படுத்தலாம் மற்றப்படி படகுதுறையில் வைத்திருக்கும் சிறிய தள்ளுவண்டியில்( wheelbarrow) பொருள்களை வைத்து இழுத்துக் கொண்டு அல்லது தள்ளிக்கொண்டு வரவேண்டும்.. இந்த தீவி்ல் முன்பு அதிகளவு அவுஸ்திரேலிய பூர்வீக குடிகள் இருந்தனர் ஆனால் பிரித்தானியர்களின் வருகையுடன் பூர்வீக குடிகள் இல்லாமல் ஆக்கப்பட்டனர். இப்பொழுது 300லும் குறைவானவர்களே இந்த தீவின் மொத்த சனத்தொகை.. இங்கே ஒரு bowling club, NSW தீயணைப்பு நிலையம் மற்றும் ஒரு உணவகமும் உள்ளது.. சிறுவர் பூங்கா உள்ளது. அதுமட்டுமல்ல பல அரிய வகை தாவரங்கள், உயிரினங்கள், கடல்வாழ் உயிரினங்களும் உள்ளன. அவசரமில்லாமல் ஆறுதலாக இந்த தீவைச் சுற்றினால் நிறைய விடயங்களை காணலாம். தூய்மையான காற்றையும் சுவாசிக்கலாம். மேலும் இந்‌த தீவு இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் இருந்து எத்தனையோ மடங்கு பின்தள்ளி உள்ளதால் பதின்ம வயதினருக்குப் பிடிக்காது ஏனெனில் அவர்களுக்கு ஏற்றவகையில் ஒன்றும் இல்லை. சிறுவர்கள் விரும்பி வரக்கூடும் ஏனெனில் எந்தவித தடைகள், வாகனங்கள் இன்றி வீதிகளில் ஓடி விளையாட முடியும். இந்த தீவில் ஒரு சிறிய கடற்கரை உள்ளது. விடுமுறையில் வருவோர் தங்க வசதியாக கடற்கரையைப் பார்த்தபடி ஒன்றிரண்டு தங்குமிடங்களும் உண்டு.. மிகவும் அமைதியான ஒரு தீவு.. தனிமையை விரும்புபவர்கள் இங்கே வந்து அமைதியாக மனிதர்களின் தொந்தரவின்றி நாளை/நேரத்தை கழிக்க முடியும். Berowra Waters வீடு திரும்பும் வழியில் Berowra Waters என்ற இடத்தினூடாக வரும் வழியில் அந்த இடத்தைப் பார்த்து எனக்குள் நினைத்தேன் “ அவுஸ்திரேலிய உண்மையில் அழகான ஒரு தீவு.. இயற்கையாகவே அதிகளவு மலைகளும் அதனால் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும் அதே சமயத்தில் இந்த மலைகளுடாக காரில் பயணிப்பதும் ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தரும். அதுமட்டுமல்ல இயற்கையாகவே அழகிய கடற்கரைகளும் உள்ள ஒரு நாடு.. இதைப் போல மற்ற நாடுகளுக்கும் இருக்குமா என்பது சந்தேகமே” என்று.. வீடு திரும்பும் பொழுது யாழ் இணையத்தின் 26வது அகவைக்காக நன்றி - பிரபா
    9 points
  13. நானும் ஒரு அடிவிட்டன் எண்பத் தைந்துகளின் பிற்பகுதி பள்ளிக்கூடக் காலத்தில் கலக்கல் கோலி… கொழும்பில் இருந்தாலும் அவசர அழைப்பில் அல்வாயில் நிற்கும் காலம்… இறுதி ஆட்டமொன்று.. இறுக்கமான இரண்டு குழுவும்… இடையில் நடுவராக உடுப்பிட்டியின் உயர்ந்த ஜம்பாவான்…. ஆறடிக்கு மேல் உயரம்… அதுதான் பரவாயில்லை.. பிரதம அதிதி. பொலிசு அதிகாரி… அம்பயரின்…மைத்துனரம்.. அதுவும் பெரும்பான்மை இனம்.. மோதும் அணி இரண்டும் ஏலவே பிக்கல் புடுங்கல் உள்ளவை நடத்தும்..அணியும் நமக்கெதிரானதுதான்…. ஆட்டம் ஆரம்பம்…. அடி உதையும் நடக்குது…. முதல் கோல் நமக்கு… அம்பயரோ…ஆஃப்சைடு என்கிறார்…. கோல் அடித்தவனோ..இல்லை கோல் அம்பயர் ..மறுக்க அடிதடி… கோலிக்கு நின்ற எனக்கு கோபத்தின் உச்சம்… கோதாரி விழுந்தது.. கோலிக்கு நின்ற நான் ஹோலி யாகமாறி.. ஆறடி அம்பயரின் பிடரியில் அசத்தலான அடிவிட்டேன்.. ஆட்டமே அல்லோல கல்லோலம் அம்பயர் சொன்னார் ஆரடித்தாலும் பரவாயில்லை அலிஷ்பாண்ட் போட்ட பிளேயர் அடித்ததுதான் பொறுக்க முடியவில்லை.. அந்த பொலிசு அதிகாரியும் அம்பயர்…என் மைத்துனன் அவனை என் கண்முன்னால் அடித்த அந்த பிளேயர் ஆரென்றாராம்… ஆரவாரம் இப்ப டி இருக்க.. ஆட்கள் என்னைப் பிடித்து அலிஸ்பாண்டையும் பறித்து ஆளையும் உருமாற்றி அல்வாயுக்கு அனுப்பிய கதை.. அப்புறம் ஆறடி அம்பயர் என்றால்.. அந்தப் பக்கமே அடியேன் இல்லை…
    9 points
  14. எனது மனைவியின் அறுபதாவது பிறந்தநாளை பிரான்சில் உறவுகளுடன் கொண்டாட போகிறீர்களா? வெளியே எங்காவது போவோமா என்று மக்கள் கேட்டனர். எனக்கும் ஓய்வு தேவை வெளியில் போவோம் என்றேன். கடையை பூட்டவேண்டும் என்றால் எத்தனை நாட்களுக்கு முன் உங்களுக்கு சொல்லவேண்டும் என்றபோது ஒரு கிழமை போதும் என்றிருந்தேன். போன கிழமை இதிலிருந்து இத்தனை நாட்கள் கடையை பூட்ட அறிவியுங்கள் 15 இலிருந்து 25 வரையான வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடுப்புக்களை தயார் செய்யுங்கள் என்றனர். என் மக்களுக்கு மிக மிக சவாலான விடயம் எனக்கு தெரியாமல் எதையாவது செய்வது. தமிழிலோ பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ ஏன் சிங்களத்தில் கூட எனக்கு தெரியாமல் செய்வது கடினம். இது surprise பயணம். அதிலும் இது வெளிநாடு. (பாஸ்போர்ட் கேட்டிருந்தார்கள்) பணம் எவ்வளவு கொண்டு வரவேண்டும் என்று கேட்டேன் ஒரு சதமும் கொண்டு வரவேண்டாம் என்றார்கள். அந்த நாளும் வந்தது. காலையில் மக்கள் மருமக்கள் பேரன் அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்தோம். முடிந்தவரை எங்கே போகிறோம் என்பதை கவனிப்பதை தவிர்த்து வந்தேன். விமானம் ஏற முன்னரும் வரும் அறிவித்தல்களை காதை பொத்தி தவிர்த்தேன். பிள்ளைகள் மிகவும் ஆர்வத்துடன் செய்திருப்பதை குழப்ப விரும்பவில்லை. ஆனாலும் பக்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பன்னர்களில் சில பெயர்கள் வருவதை காண்பதை தவிர்க்க முடியவில்லை. விமானத்திலும் அறிவித்தல்களை கைட்பதை தவிர்த்தாலும் வந்து இறங்கியதும் கேட்டார்கள் எங்கே நிற்கிறோம் என்று. இதுக்கு மேல சொல்லாமல் இருக்க முடியாது. Palma என்றேன். சுற்றுலாவில் இருந்து தொடரும். ..
    8 points
  15. Palma விமானநிலையத்தில் ஒரு மினிபஸ் எங்களுக்காக காத்திருந்தது. அதில் ஏறியதும் கிட்டத்தட்ட 40 நிமிட பயணத்தின் பின்னர் ஒரு நட்சத்திர ஹோட்டல் முன்னால் நின்றது. நாங்கள் 4 குடும்பம் மற்றும் எனது கடைசி மகள். அதற்கு ஏற்ப 5 ரூம்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அத்தனையையும் கடலில் இருந்து 50 மீற்றர். ஜன்னலை திறந்தால் முன்னால் கடல். கீழே நீச்சல் குளம் sauna hammam jacuzzi மற்றும் மூன்று நேர சாப்பாடு வொலாந்தேர் (நூற்றுக்கும் மேற்பட்ட சாப்பாடுகள் கேக் ஐஸ்கிரீம் மற்றும் பழ வகைகள்) அத்துடன் 24 மணிநேர ஓபன் பார். மேலும் இரவு ஏழு மணிக்கு தொடங்கி பன்னிரண்டு மணிவரை ஆடல் பாடல் விளையாட்டுக்கள். அத்துடன் காலையில் 2 வான்கள் வந்து எம்மை ஏற்றி சென்று ஒவ்வொரு நகரமாக இந்த இடத்தின் விசேடமாக பார்க்க வேண்டிய இடங்களை காட்டி மீண்டும் கொண்டு வந்து கோட்டலில் விட்டு செல்கின்றன. நேற்று பலநூறு பேர் முன்னால் கோட்டல் நிர்வாகத்தினால் என் மனைவியின் பிறந்த நாள் கேக் வெட்டி சம்பைன் உடைத்து கொண்டாடப்பட்டது. உண்மையில் மறக்க முடியாத அனுபவம். நான் எனது வாழ்க்கையில் 11 மாதங்கள் பல மணிநேர வேலை மற்றும் வேலை வீடு என்று வாழ்பவன். ஆனால் ஆவணி மாதம் மட்டும் கோடீஸ்வர வாழ்க்கை. மக்களுக்கும் அதையே பழக்கி இருந்தேன். இன்னொரு விடயம்: வீட்டில் நாங்கள் மேசையில் இருந்து சாப்பிடும் போது என் பிள்ளைகள் மற்றும் மனைவியின் கண்கள் என் கோப்பை மற்றும் கிளாசிலேயே இருப்பது வழக்கம். ஆனால் இங்கே அதிலிருந்தும் விதிவிலக்கு. நான் 4 அடி பாய்ந்தால் என் பிள்ளைகள் 16 அடி பாய்ந்ததை உணர்ந்தேன். அனுபவித்தேன். இதுவரை எனது பொக்கற்றில் இருந்து ஒரு சதம் கூட வெளியே எடுக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. நான் இந்த தீவில் பார்த்தவை மற்றும் இந்த தீவு பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். நன்றி.
    8 points
  16. பாத்து,பவுத்திரமா எழுதுங்க தம்பி! அப்புறம் ஒண்டு கிடக்க இன்னொண்டு ஆவப்போவுது ராசா... உப்புடித்தான் சிஐஏ ஈராக்கிலை தார் பீப்பாவை கெமிக்கல் ஆயுதம் எண்டு அச்சொட்டாய் ஆதாரம் காட்ட......அந்த நாட்டையே அழிச்சு நாசமாக்கினார்கள். அதே போல லிபியா,சிரியா எண்டு ஒரு பட்டியலே நீளும்.... ஈராக்கிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂 லிபியாவிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂 சிரியாவிலை சிஐஏ சொன்னது உண்மை எண்டால்😂 ஆப்கானிஸ்தானிலை சிஐஏ சொன்னது சரி எண்டால்😂 உக்ரேனிலை சிஐஏ சொல்லுறதெல்லாம் சரி எண்டால்😂 என்ரை அன்புத்தம்பி கோஷான் சொல்லுறதும் சரிதான்....🤣 அரோகரா....அரோகரா சாமிவாறார் வழி விடுங்கோ😎
    8 points
  17. "உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பயண சிநேகிதர்கள், விளையாட்டு குழு, .... என உறவு தொடர்கிறது. இவர்கள் ஒவ்வொருவருடனும் நாம் ஒவ்வொரு விதமாகப் பழகுகிறோம். சுருக்கமாக 'சொந்தங்கள் அல்லது குடும்ப உறவுகள்', 'நண்பர்கள்', 'பழக்கமானவர்கள்' [Family Relationships, friends, Acquaintances] என்று உறவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். பொதுவாக மனித வாழ்க்கை என்பது உறவுகளின் ஓர் வலைப் பின்னலே என்று கூறலாம். தன்னோடு உறவு, அயலாரோடு உறவு, உலகத்தோடு உறவு, ஏன் தன்னை படைத்தவர் கடவுள் என நம்பி, அந்த ஆண்டவனோடும் உறவு, மற்றும் தன்னை சுற்றி அமைந்து இருக்கும் இயற்கையோடும் உறவு - என்று உறவுகளின் தொகுப்பே இங்கு வாழ்க்கையாக விரிகிறது. அது மட்டும் அல்ல, “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என எல்லா உலக மக்களையும் தன் உறவினராக பேணியதை இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். ஆணானாலும், பெண்ணானாலும் அவர்களுக்கு குடும்பம், உறவு, நட்பு என்பவை முக்கியமான அவசியமான ஒன்று. பொதுவாக எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்ந்து விட முடியாது. மனித வரலாறு அதைத்தான் எமக்கு காட்டுகிறது. திருவிளையாடல் படத்தில் கேபி சுந்தராம்பாள் பாடிய 'பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா' என்ற பாடலில் உறவை பற்றி மிக அழகாக கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு வரியில் 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு' என விபரிக்கிறார். அதாவது, ஊருண்டு – ஊரில் இருக்கும் பொதுச்சனம் உண்டு, பேருண்டு – சாதிக்காரங்க உண்டு. அதாவது குறிப்பிட்ட பெயர்களை கொண்ட கூட்டம் உண்டு, உறவுண்டு – தேர்வினால் வந்த சொந்தங்களும் நண்பர்களும் உண்டு [Relatives by choice], சுகமுண்டு – சுகம் தரும் மனைவி, குழந்தைகள் என்ற தன் குடும்பம் உண்டு, உற்றார் – பிறப்பினால் வந்த சொந்தம் உண்டு [Relatives by birth], பெற்றார் – தன்னை பெற்ற அம்மா அப்பா உண்டு என்கிறார். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது என்றோ அல்லது ஒரு உள்ளுணர்வு என்றோ கூறலாம். இது வெவ்வேறு சூழல்களில் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. எனவே, பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற் போல வெவ்வேறு சொற்கள், உதாரணமாக, நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் .... பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக, அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது என்றோ அல்லது இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம் என்பதால், அந்த புரிதல் தான் அன்பு என்றோ கூறலாம் என்றும் கருதுகிறேன். இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்று யாராவது கேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே அன்பும் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றை சொல்லுவது வழக்கம். அந்த ரீதியில் நாம் பார்க்கும் பொழுது வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என்பன அன்பின் எதிரான பதம் ஆகும். என்றாலும் அன்பிற்கு நாம் நாளாந்த வாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒரு அளவிடக் கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "அன்பை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய அன்பு" (“make love“, “fallen in love“, “lots of love“) போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். பண்டைய கிரேக்க தத்துவவாதிகளும் அன்பை நான்கு வகையாக பிரிக்கின்றனர். அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia), காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) ஆகும். அதன் நீட்சியாக மேலும் இன்று இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் போன்றவை அன்பின் வகைகளாக கருதப் படுகிறது. சுருக்கமாக அன்பின் அனுபவத்தை 1] இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்றும், 2] ஒரு வீட்டின் மீது கொண்டுள்ள அன்பு, பெற்றோரின் கடமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் அல்லது இணைப்பு என்றும், 3] பாலியலின் ஆரம்ப உணர்ச்சியினால் ஏற்படும் ஆசை அனுபவம் அல்லது காமம் என்றும் வல்லுநர்கள் பிரிக்கின்றனர். பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் [சுயநலம்] அவசியமாகிறது. அது மாட்டு அல்ல, சுயநலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. ஏன் என்றால், சுயநலமாய் இருக்கக் கூடாது என்று இருப்பதுவே ஒரு சுயநலம் தான். ஒருவர், சில செயல்களை செய்யும் பொழுது, சுயநலம் இல்லாமல் தாம் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச் செயல் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை தருவதால் தான் அப்படிச் செய்கிறார்கள். இதை எவரும் மறுக்க முடியாது. பெரியாரிடம் ஒரு முறை ஒருவர், பொது நலம் என்றால் என்ன என்று கேட்டார், அதற்கு பெரியார், இதோ மழை பெய்கிறதே, இது தான் பொது நலம் என்றார். அடுத்து அவர் சுயநலம் என்றால் என்ன என்று பெரியாரிடம் கேட்டார். அதற்க்கு அவர், இதோ எல்லோரும் குடையை பிடித்துக் கொண்டு நடக்கிறோமே, அது தான் சுயநலம் என்றார். அதாவது ஒருவர் தனது நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பதை சுயநலம் எனலாம். நம்மை உயிரோடு வைத்திருப்பதற்காக நாம் மூச்சு விடுவது கூட உண்மையில் ஒரு சுயநலம் தான். அப்படியே நாம் சிலவேளை முரண்பட்டு நிற்பதும் சுயநலம் தான். எனவே, சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும் போது, உறவுகளைப் பற்றிய சந்தேகங்களை ஆய முற்பட்டால், அன்புக்காக, ஆசைக்காக என்று உறவுகள் அமைவதும், உறவுகளை நாம் அமைத்துக் கொள்வதும் கட்டாயம் நம் அவசியத்திற்காக அல்லது எம் முக்கியத்திற்காக என தெரியவரும். உதாரணமாக காதலும் அப்படித்தான். அவளது அல்லது அவனது நலனுக்காக நான் காதலிக்கிறேன் என்று எவரும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் அல்லது அவன் பின் அலைகிறேன் என்பதே அவரவர் சொல்லக்கூடிய உண்மை நிலையாகும். தமிழ் மூதாட்டி ஔவையார், தனது ஒரு பாடலில், "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு" என்கிறார். அதாவது, குளத்தில் நீர் நிறைந் திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மன மில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களே யானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல. கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ;நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உண்மையில் உறவினராவார் என்கிறார். இதை மெய்ப்பித்தல் போல, ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் சாஃபக்கிளீசு (Sophocles - கிமு 496 - கிமு 406), தனது ஆண்டிகான் [Antigone - 441 BC] நாடகத்தில், தன் சகோதரன் பொலினிக்ஸ் [Polynices] இற்க்காக அல்லது குடும்ப உறவுக்காக, சகோதரி ஆண்டிகான் அரசனையே எதிர்ப்பதை காண்கிறோம். தனது சகோதரனுக்கு, தனது குடும்ப உறவுக்கு, ஒரு மரியாதையான நல்லடக்கம் செய்ய தன்னையே தியாகம் செய்ய துணிகிறாள். "அவனை நானே அடக்கம் செய்வேன் அந்த செயலில் நான் இறந்தாலும், அந்த இறப்பு ஒரு மகிமையாக இருக்கும் அவனால் நேசித்த நான், நான் நேசித்த அவனுடன் [மரண படுக்கையில்] ஒன்றாக படுப்பேன்" (ஆண்டிகான் 85- 87) "I will bury him myself. And even if I die in the act, that death will be a glory. I will lie with the one I love and loved by him" (Antigone 85- 87). உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ் விடத்தில் தோன்றுவது உடமை பூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல என்று எண்ணுகிறேன். ஏனென்றால், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அந்த ஒருவரது உணர்வு தான் தனது அங்கம் அல்லது நீட்சி போன்ற குழந்தை குறித்தும் ஏற்படுகிறது எனலாம். இதே சுய-அன்பானது, தனது குழந்தை கட்கும், பிற நெருங்கிய குடும்ப உறவு கட்கும், சற்று தொலைவான குடும்ப உறவு கட்கும் நீட்டிக்கப் படுகிறது. இதைத் தான் நாம் பண்டைக் கிரேக்க ஆண்டிகான் நாடகத்திலும் பார்த்தோம். இறுதியாக இன்னும் ஒரு பண்டைய இதிகாசமான இராமாயணத்தை பார்ப்போம். இங்கு, கைகேயி பரதன் 14 வருடம் நாடாள வேண்டும் எனவும், அப்பொழுது ராமன் 14 வருடம் காட்டுக்கு போக வேண்டும் எனவும் வரம் கேட்க, தசரதனும் அவ்வாறே வரம் கொடுக்க, தந்தை சொல் மீறாத ராமன் காட்டுக்கு செல்ல, அவனோடு செல்வதே பதிவிரதைக்கான நியதி என்று சீதாதேவி கிளம்ப, அண்ணன் இல்லாத இடத்தில் இருக்க மாட்டேனென லட்சுமணனும் கைகேயிடம் சூளுரைத்து காட்டுக்கு கிளம்புகிறான் என கதை தொடர்கிறது. ஆனால் லட்சுமணின் மனைவி ஊர்மிளாவை அவர்கள் கூட்டிப் போகவில்லை. ஊர்மிளா பதிவிரதை இல்லையா ?, ஏன் ராமன் ஊர்மிளாவையும் கூடிக் கொண்டு வா என்று லட்சுமணை கேட்கவில்லை, எங்கே போயிற்று நியாயம், எங்கே போயிற்று தம்பி என்ற உறவில் அன்பு ? ஊர்மிளா வந்தால், இலட்சுமணன் அவன் கடமையை, அதாவது ராம-சீதாவை சரிவர கவனிக்கும் கடமையை அல்லது தேவையை முழுமையாக செய்ய முடியாது என நம்பியதாலோ ? உண்மையான அன்பு உறவு இருந்தால், தம்பியை தடுத்து இருப்பான், அல்லது தம்பியுடன், சீதை போல் ஊர்மிளாவையும் கூட்டிப் போய் இருக்கவேண்டும், ஆனால் அங்கு ஒரு தேவை தான் முக்கியமாக இருந்து இருக்கிறது, என்றாலும் அதை மறைக்க பல பல காரணங்கள் அங்கு பின்னிப் பிணையப் படுகிறது. நியாயம் எல்லோருக்கும் பொதுவாகவே இருக்க வேண்டும். மற்றது நேர்மையாக சிந்தித்தால், 'உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா' என்பதற்கு உண்மையான நேரான பதிலை இங்கு நீங்கள் காணலாம் ? ஒரு கட்டத்தில், சீதை அக்னி பிரவேசம் செய்ய நேர்ந்ததை தெரிஞ்சு, ஊர்மிளா கொந்தளித்தாள். காட்டில் இத்தனை ஆபத்துகள் இருக்குமென எடுத்துச் சொல்லி ராமன் நீ வரக்கூடாது என சீதைக்கு உத்தரவு போட்டிருந்தால், பதிவிரதையான சீதையால் அதை மீற முடியுமா? பாதுகாப்பிற்கு லட்சுமணன், வேலைகளுக்குச் சீதை எனத் தேவைப் பட்டதால் தானே ராமன் பேசாமல் இருந்து விட்டான். அதனால் தானே சீதைக்கு வனத்தில் இத்தனை ஆபத்துகள் வந்ததென - சீதைக்கு தாயாய் இருந்து குமுறுகிறாள். இது உறவின் உண்மை நிலையை எடுத்து காட்டவில்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், மாறுவேடம் கொண்டு நகர்வலம் வரும்போது துணி வெளுப்பவனின் பேச்சை கேட்டு, சீதையின்பால் சந்தேகம் கொண்டு அவளை தீக் குளிக்க சொன்னதை கேட்டு ஊர்மிளா வெகுண் டெழுகிறாள். சீதையின் கற்பு பற்றி ராமனுக்கு ஐயமில்லை. ஆனா, ஊரார் எதுவும் அவளை தவறாய் பேசி விடக் கூடாது என்று தான் அக்கினிப்பிரவேசம் செய்யச் சொன்னான் என்று அவளை சமாதானப் படுத்த பலர் முயற்சிக்கையில், ஊர்மிளா ராமனிடம், இன்று ஊரார் பேச்சுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்கிறீர்களே! அன்று அயோத்தி மக்கள் எல்லோரும் நீ வனவாசம் போகக் கூடாது என கெஞ்சினார்களே! அப்போது மக்கள் கருத்துக்கு நீ ஏன் செவி மடுக்க வில்லை? அன்று தந்தைக்குக் கொடுத்த வாக்கு தான் முக்கியமென நினைத்த உனக்கு உன் குடும்பம் தானே முன்னுக்கு நின்றது? இப்போது மட்டும் என்ன மக்கள் பற்றிய கவலை? என கேட்கிறாள். பெண்களின் பல கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இல்லாதது போலவே இதற்கும் பதிலில்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
    8 points
  18. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல் March 9, 2024 12:49 am ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை உரையாடுவோம். நான் எனது பார்வைகளைச் சொன்ன பின்னர், மாணவர்கள் தங்கள் தரப்பிலிருந்து கேள்விகளையும் அனுபவங்களையும் முன் வைப்பார்கள். ஒரு நாள், ஒரு மாணவன் பெண்களின் ஆடை தொடர்பில் சிக்கல்கள் இருக்கிறது, அவர்களது ஆடையால் ஆண்களின் பாலியல் உணர்ச்சி தூண்டப்படுகிறது என்ற கருத்தை உரையாடல் ஒன்றில் முன்வைத்தார். மாணவிகள் கால் முதல் தலைமுடியின் நுனி வரை பற்றியெரியும் கோபங் கொண்டு அம்மாணவனைத் தனிப்படத் தாக்கத் தொடங்கினர். நீ தான் அப்பிடி நினைக்கிறாய், மற்றவர்கள் அப்படி நினைப்பதில்லை என்று சொன்னார்கள். ஏனைய ஆண் மாணவர்கள் மெளனம் காத்தார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகச், சொல்லுங்கள் என்று ஆண்களைக் கேட்டேன். அவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பார்வைகளைச் சொல்லத் தொடங்க மாணவிகள் எதிர்நிலைக்குச் சென்று கடுமையாக எதிர்வினையாற்றினர். மாணவிகளிடம் நீங்கள் இவ்விதம் பேசினால் அவர்கள் தங்கள் தரப்பில் உள்ள குறைகளை மறைத்துக் கொண்டு தொடர்ந்தும் அத்தகைய மனநிலைகளிலேயே இருப்பார்கள். அது உங்களுக்கு வேண்டுமா? அல்லது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வேண்டுமா? என்ற கேள்வியினால் அமைதியாகி ஆண்கள் சொல்வதைக் கேட்டார்கள். ஆண்கள் தமது பொதுப்புத்திப் பார்வைகளைச் சொல்லி முடித்ததும் பெண்களிடம் பெரிய சோர்வு உண்டாகியது. கோபம் அடங்கி சலிப்பு மேலிட்டது. பின்னர் ஒவ்வொருவராகக் கேள்வியுடன் எழுந்தார்கள். சிலர் அழுதனர். அந்த உரையாடல் மூன்று நாட்கள் நீண்டது. இறுதியில் ஆண்களில் பெரும்பான்மையான மாணவர்கள், பெண்களின் உடையில் இல்லை தங்களின் பார்வையில் தான் பிரச்சினை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு, வெளிப்படுத்தி, தம்மைச் சீர்படுத்தத் தொடங்கினர். எனது பணியென்பது, இதனைப் பாதுகாப்பாகவும் தனித்தாக்குதலாகவும் கதாப்பாத்திரப் படுகொலையாகவும் மாறாமல் காப்பதே. முதல் நாள் நிகழ்ந்த கடுமையான வாக்குவாதங்களின் பின்னர் இரண்டாவது நாள், காலை ஆறு மணி வகுப்பிற்கு, அனைவரும் நேரம் பிந்தாமல் வந்து சேர்ந்தனர். அனைவரையும் எழுந்து நின்று கண்களை மூடச் சொல்லி, வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளிற்கு நேர்ந்த கொடூரங்களைச் சொன்னேன், அவர்களுக்கான மெளன அஞ்சலியுடன் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்கள் தம்முன் நிகழ்ந்த அந்தக் கொடூரங்களைச் சில கணங்கள் நினைத்த பின் அவர்களின் உரையாடலில் பொறுப்புணர்வு கூடியிருந்தது. ஆறு வயதுச் சிறுமியை வன்புணரும் போது அவரணிந்திருந்தது ஒரு பாடசாலை உடை. கழுத்தில் டையினால் நெருக்கிக் கொல்லப்பட்டார். ஆடை என்னவாகியது என்ற கேள்வியுடன் உரையாடல் தொடங்கியது. பின்னர் அடுத்த நாள் உரையாடல்களுடன் அவர்களுக்குள் இருந்த சந்தேகங்கள் முன்முடிவுகள் ஓரளவு தீர்ந்து சமநிலையை, ஒரு புதிய நியாயத்தை அவர்களாகவே கண்டடைந்தார்கள். இதற்கான வெளியை உருவாக்குவதே முக்கியமானது. பெண்கள் ஆண்களை அறிய வேண்டும். ஆண்களும் பெண்களை எதிர் கொள்ள வேண்டும். நியாயங்கள் சந்தேகங்கள் பகிரப்பட வேண்டும். அதிலிருந்து அவர்கள் கேள்விகளற்று ஆக வேண்டும். ஒரு தியானம் நிகழ்வது போல. ஆரம்பத்தில் எழும் மனக்கூச்சல்கள் அடங்கி, தன்னை அறிவதன் தொடக்கம் நிகழ வேண்டும். * சில மாதங்கள் கழித்து ஒரு மாணவன் ‘சேர், ஒரு பிரச்சினை’ என்று வந்தார். தங்களது நண்பர்களில் ஒருவருடன் தமது பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்தார் என்று சொன்னார். நான் அந்த பாதிக்கப்பட்ட மாணவனுடன் நான்கு தடவைகளுக்கு மேல் விரிவாக உரையாடி, அவருடன் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அவருக்கு நிகழ்ந்தவற்றை அறிந்தேன். இதை வெளிப்படுத்த மூன்று வழிகளைப் பரிந்துரைத்தேன். முதலாவது, உங்களது வீட்டில் சென்று பெற்றோருடன் இது தொடர்பில் அறியப்படுத்துங்கள், அவர்களிடம் உரையாட மனத்தடையிருந்தால் நானும் வந்து உதவுகிறேன். இரண்டாவது, பாடசாலைக்கு இது தொடர்பில் அறிவிக்கச் சொன்னேன், மூன்றாவது, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை அல்லது கல்வி மேலிடங்களுக்கு அறிவிக்கலாம். அதற்கும் நான் உடனிருக்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு மூன்று வழிகளிலும் இதைத் தொடர மனத்தடை இருந்தது. ஆகவே உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டேன். அந்த ஆசிரியர் பாடசாலையில் கற்பித்தலைத் தொடரக் கூடாது. அவர் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னார். சில நாட்களின் பின் எனக்குத் தகவல் சொன்ன மாணவனும் அதே காலப்பகுதியில் அந்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட முனைந்தமை பற்றி என்னிடம் சொன்னார். முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் இதனால் தனக்கு படிக்க முடியவில்லை. அவர் தன்னை நெருங்கிய அந்த நேரம் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வருகிறது. பதட்டம் வருகிறது. வியர்த்து வழிகிறது. இதனை வெளியில் சொல்ல முடியவில்லை. யோசினையாக் கிடக்கு என்று சொன்னார். இருவருடனும் ஆறு தடவைகளுக்கு மேல் உரையாடி அவர்கள் பிரச்சினையை அவர்களே நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கான மனநிலையையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கினேன். சமூகத்தில் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது எவ்விதம் அவை எதிர்கொள்ளப்படும் என்பதை ஓரளவு அறிவேன். கீழ்மட்ட அதிகாரங்கள் அவற்றை எவ்விதம் கையாளும் என்ற என் அனுபவத்திலிருந்து பெற்ற அறிவைக் கொண்டு, மாணவர்கள் மனதளவில் தயாரானதும், மேல்மட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் நானே நேரில் சென்று புகாரளித்தேன். அவர்கள் அடுத்த நாளே அந்த ஆசிரியரை அப்பாடசாலையிலிருந்து வெளியேற்றி விசாரணைக்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். அன்றே மாணவர்கள் பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்ததை வீட்டில் சொன்னார்கள். பெற்றோர்களும் மாணவருக்கு ஆதரவாக நின்று அவர்களைப் பேச வைத்தனர். அந்த ஆசிரியர் இன்னொரு பாடசாலைக்கு விசாரணையின் பின்னர், எச்சரிக்கை செய்யப்பட்டு இடம்மாற்றப்பட்டார், அவர் புதிதாகப் பணியாற்றப்போன பாடசாலைக்கும் இத்தகவல் பகிரப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிப்படுத்தப்படாது, பாதிப்பு நிகழ்த்தப்பட்டது யாரால் என்ற செய்தி ஊரெல்லாம் பரவியது. ஊர் மக்கள் அந்த ஆசிரியரை அடிக்க வேண்டும். அப்படித் தண்டிக்காமல் அனுப்பியது தவறு என்று என்னிடம் முரண்பட்டு நின்றனர். ஒன்று, இதைச் சட்ட ரீதியில் நாம் கையாள வேண்டும். அதற்கு அந்த மாணவர்களின் மனநிலையும் பெற்றோரும் விரும்பவில்லை. இரண்டு, வன்முறையைப் பிரயோகிப்பது சமூக அச்சத்தை உண்டாக்குவது மட்டும் இப்பிரச்சினைகளில் முக்கியமில்லை. இது தொடர்பில் ஊராக நாம் என்ன செய்யலாம் என்பதைச் சிந்திப்பதே அவசியமானது என்று கூறினேன். நான் எவ்வளவு சொல்லியும் ஊர் மக்களில் சிலர், அடிப்பது தான் சேர் வழியென்று சொல்லிக்கொண்டிருந்தனர். இந்த வழிமுறை, மாணவர்களையும் தவறாக வழிநடத்தும் என்பதைச் சொல்லி, அவர்களுடனும் விரிவாக உரையாடி நிலமையைத் தணித்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கிறது என்ற தகவலை மாணவிகள் கொணர்ந்தனர். மாணவர்களுடைய நடவடிக்கைகளில் நாங்கள் மாற்றங்களை அவதானிக்கிறோம். இதை எப்படிக் கையாள்வது என்று கேட்டார்கள். மீளவும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாடல்களை நடத்தினேன். ஆண்கள் சிலர் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டு இவை நிகழ்கின்றன என்று பேசிய பின், போதைப் பொருட்களைப் பாவிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மாணவர்களைப் பட்டியற்படுத்தினோம். பதினாறு பேருக்கும் மேல் நீண்ட பட்டியலது. அவர்களுடன் நான் உரையாடினேன். அவர்களது பெற்றோருக்குத் தகவல்களைச் சொன்னேன். அவர்களது நடவடிக்கைகளை அவதானிக்க வைத்தேன். சிலரது குடும்பச் சூழல் மிக மோசமாக இருந்தது. அவர்களது குடும்பத்துடன் உரையாட முடியாத சூழல் எனக்கும் இருந்தது. ஆனால் மாணவர்கள் எல்லோரும் என்னுடன் உரையாடத் தயாராயிருந்தார்கள். தங்கள் மேலுள்ள தவறுகளைத் திருத்த வழி கேட்டனர். மாதக்கணக்கில் இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது. ஒருசிலரைத் தவிர அனைவருமே அப்பழக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறினார்கள். சிலரைக் கட்டுப்படுத்துவது இயலவில்லை. அவர்கள் குடும்பங்களும் கூட அதை ஒரு பிரச்சினையாக கவனமெடுக்கவில்லை. அவர்களை வகுப்புகளிலிருந்து நீக்கினோம். ஆனால் நான் தனிப்பட அவர்களுடன் உரையாடிக்கொண்டேயிருந்தேன். தவறுகளைச் செய்துவிட்டுத் தாங்களாகவே வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டு நிற்பார்கள். நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை உங்களைத் திருத்திக் கொண்டாலே போதும் என்று பலதடவைகள் கேட்டேன். அவர்கள் குறைத்துக் கொண்டார்களே தவிர, முழுமையாக விலகினார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. அதே நேரம் சக மாணவர்களிடமும் சிறியவர் முதல் பெரியவர் வரை இது பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இடைவிடாது உரையாடிக் கொண்டிருந்தேன். * பிறகொரு நாள், இவை பற்றி ஒரு வீதி நாடகம் ஒன்று செய்வோம். தொடர்ந்து எழும் சிக்கல்கள் தொடர்பில் சமூகத்துடன் உரையாடலை விரிவாக்குவோம் என்று கோரினேன். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த வேலைகளில் ஈடுபட்டார்கள். காலை முதல் இரவு வரை ஏராளமான பணிகளைச் செய்தனர். துஷ்பிரயோகங்கள், தண்டனைகள், போதைப்பொருள், ஆடைக் கட்டுப்பாடு, மாணவர் உரிமைகள் என்று அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சொந்தப் பிரச்சினையும் தான் அவர்களது நாடகத்தின் கருக்கள். அவர்கள் உண்மையில் பேசிய, எதிர்கொண்ட ஒவ்வொரு உரையாடலும் தான் அவர்களது வசனங்கள். அவ்வூரின் வீதியெங்கும் தாங்களே கைகளால் வரைந்த சுவரொட்டிகளை ஒட்டினார்கள். குயர் அரசியல் தொடர்பில் சாதரண தமிழ்க் கிராமமொன்றில் அங்குள்ள மாணவர்களால் அவ்வரசியல் உள்வாங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு சுவரொட்டி வரையப்பட்டு ஒட்டப்பட்டமை அதுவே நானறிந்து முதல்முறை. நாடகத்திற்குத் தயாரானார்கள். உரையாடி, சமநிலை பெற்ற அந்த நாடகம் அவ்வூரில் ஆக்கபூர்வமான கவனிப்பைப் பெற்றது. மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் பேசும் வகையறிந்தார்கள். ஆனால் இது முழுமையானதல்ல. அவர்கள் மீளவும் தவறுகளில் ஈடுபட வாய்ப்புண்டு. இன்னமும் சரிசெய்யப்படாத சிக்கல்கள் அவர்களிடமுண்டு. இத்தகைய சிக்கல்கள் எல்லா இடங்களிலும் உண்டு. ஆனால் நான் பணியாற்றிய காலத்தில் அவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் கையாளும் வழிவகைகளை, அதற்குத் தேவையான ஒற்றுமையை அறிந்து கொள்ள ஊக்கப்படுத்தினேன். அவர்களது அன்றாட அனுபவத்திற்கு வெளியே சில மாணவர்களின் வாழ்க்கையிலும் பார்வையிலுமாவது அவை செல்வாக்குச் செலுத்தும். அதுவே என்னால் இயலக்கூடியது. அந்த வீதி நாடகம் சூரியன் செம்மஞ்சளெனச் சரிந்திறங்கிய பின்மாலையொன்றில் நிகழ்ந்தது. வன்புணரப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளினதும் படங்களைத் தங்களது கைகளாலேயே மாணவர்கள் வரைந்தனர். அதை நாடகத்தின் பின்னணியில் காட்சிப்படுத்தியிருந்தோம். நிகழ்வு முடிந்த பின்னர் நன்றாக இருட்டி விட்டது. அனைவரும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். நான் வெளியில் நின்று மாணவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவரின் தாய், என்னிடம் வந்து என்ன சேர் படிக்கிறானா என்று கேட்டார். ஆள் குழப்படி தான், ஆனால் இப்ப கொஞ்சம் படிக்கிறான் என்று சொன்னேன். அவன் படிக்காட்டியும் பரவாயில்லை சேர், நல்ல பிள்ளையா இருந்தாக் காணும் என்றார். நான் சிரித்து விட்டு, அவன் நல்ல பெடியன் தான் என்றேன். வீதியில் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் சில கணங்கள் அவரது கண்கள் தெரிந்தது, கலங்கி விழியில் நீர் சேர்ந்து விழத் தொடங்கியிருந்தது. நீங்கள் அவங்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி சேர். என்ர பிள்ளை என்ன விட உங்களைத் தான் நம்பிறான் என்று சொல்லிக் குரல் தழுதழுத்த பொழுது, அருகே, மாணவர்கள் சிலர் வெளியேறி வந்து கொண்டிருந்தனர், அதெல்லாம் எப்பையோ முடிஞ்சுது அம்மா, அவன் கடந்து வந்திட்டான். நீங்கள் வீட்ட போங்கோ என்று சொன்னேன். தங்யூ சேர் என்றார். வாழ்நாளில் நான் நேரில் கேட்ட சில அரிதான நன்றிகளில் ஒன்று அது. * நிகர் வாழ்விலோ அல்லது சமூக வலைத்தளத்திலோ ஒரு மனிதர் தனக்கு நிகழும் அநீதிகளையோ துஷ்பிரயோகங்களையோ உரையாடுவதும் அதற்கான நீதியைப் பெற முனைவதற்கும் நாம் உடனிருப்பது ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டியவை. இத்தகைய அநீதிகளும் அவை நடைபெறும் முறைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் அடையப்பட நாம் உதவ வேண்டும். அதுவே பிரதானமானது. பாதிக்கப்பட்டவர்களாகத் தம்மை முன்வைக்கு ஒருவர் பக்கத்திலிருந்தே நாம் பிரச்சினைகளை அணுகும் நேரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டதினாலேயே அவர் சொல்பவை உண்மைகள் என்ற நிலையைச் சென்று சேர்வது, உண்மையைக் கண்டறிவதிலும் நீதியைப் பெற்றுத்தருவதிலும் தடைகளை ஏற்படுத்தும். அவர்களது மனநிலைகளும் நெருக்கடிகளும் அவர்களை உண்மைகளை விழுங்கவோ அல்லது வேறு விதமாக முன்வைக்கவோ தூண்டும். அவர்கள் சொல்வது பெரும்பாலும் பகுதியளவு உண்மைகள் என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வயது, பால், சாதி, இனம், வர்க்கம், உளவியல் நிலை என்று பலவிடயங்கள் அந்தப் பாதிப்பின் வகைமையில் அதற்கான நீதியில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது. எல்லா விக்டிம்களும் ஒரே வகையானவர்கள் அல்ல. அவர்கள் விரும்புவதும் ஒரே வகையான தீர்வுகளை அல்ல. சிலர் தாமாகவே தம்மைச் சரிசெய்யக் கூடியவர்கள். சிலருக்கு உதவி தேவைப்படலாம். சிலர் தன் மேல் பாதிப்பு நிகழ்த்தியவரை தண்டிக்க விரும்பலாம். சிலர் மன்னிக்கலாம். சிலர் விலகலாம். இப்படிப் பலவகையான வழிகளில் சமூகச் சிக்கல்களும் அதன் தரப்பினர்களும் வித்தியாசங்கள் கொண்டவர்கள். இத்தகைய வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள மேற்சொன்னவற்றிலிருந்து மாறுபட்ட உதாரணமொன்றைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நார்சிஸ்ட் உளவமைப்பு உடையவர்களாக இருப்பின் அவர்களை அணுகுவதைப் பற்றிய உளவியல் வேறுவிதமானது. கீழே இருக்கும் விக்டிம் நார்ஸிஸ்ட் பற்றிய அவதானிப்புகள், இணையத்தில் உள்ள உளவளத் தளங்களின் கட்டுரைகளிலிருந்து பெறப்பட்டது. நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும், நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது. முதலில் விக்டிம் பிளேமிங் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது தொடர்பில் ஓரளவு பரவலான அறிமுகம் நம் சமூகத்தில் ஏற்கெனவே உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபராக ஒருவர் தன்னை முன்வைக்கும் பொழுது அவரை நோக்கிச் சமூகம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் நபரை அல்லது அவரது முன்னுரிமையைப் பாதுகாப்பது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நிர்பந்திப்பதற்குப் பதில் பாதிக்கப்பட்டவரை நிர்ப்பந்தித்தல் என்பவற்றை விக்டிம் பிளேமிங் என்று சுருக்கமாக வரையறுக்கலாம். இதில் பல்வகைமையான பின்னணிகளைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் என்ற தரப்பு இருக்கும். ஒருவர் ஒரு தன்னிலையில் பாதிக்கப்பட்டவராகவும் இன்னொரு தன்னிலையில் பாதிப்பை ஏற்படுத்துபவராகவும் இருக்க முடியும். வன்புணர்விலோ அல்லது உடலியல் துஷ்பிரயோகங்களிலோ இவை இன்னும் அதிகமாகச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் நிகழ்த்தப்படும். ஆனால் எப்பொழுதும் முதற்கரிசனை பாதிக்கப்பட்டவரின் சொந்தக் குரலுக்கே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவராக ஒருவர் தன்னை முன்வைக்கும் போதுதான் இந்த விக்டிம் பிளேமிங் அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பதிலாக வேறு ஒரு நபர், குற்றச்சாட்டை முன்வைக்கும் போது குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர் தனது தரப்பிலிருந்து சந்தேகங்களையோ அல்லது கேள்விகளையோ மட்டுமே முன்வைக்கலாமே தவிர, பாதிப்பைச் செலுத்தியவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிட முடியாது. அல்லது அந்த நோக்கிலிருந்து உரையாடலைத் தொடரக் கூடாது. குற்றத்திற்கான ஆதரங்களை அவர் முன்வைத்தே ஆகவேண்டும். அதற்காக அவர் எந்த வெளியைத் தீர்மானிக்கிறாரோ, அதிலேயே அது வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் ஒரு வழக்கினைப் பதிகிறார் என்றால் அதற்குக் குறைந்த பட்ச ஆதாரமாவது தேவை. ஒன்று பாதிக்கப்பட்ட நபர், அல்லது அப் பாதிப்புத் தொடர்பான ஏதாவதொரு ஆதாரம். சமூக வலைத்தள பொலிஸ் நிலையத்திற்கு இது எதுவும் தேவைப்படாது, அதற்கு ஊகங்களே குற்றவாளியை முடிவு செய்யப் போதுமான ஆதாரம். அல்லது திரிபுபடுத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட அல்லது விழுங்கும் உண்மைகளே போதுமானது. சமூக வலைத்தளமோ நேர் உரையாடல்களோ கூடப் பாலியல் குற்றச் சாட்டுகளிலோ அல்லது எந்த வகையான குற்றச்சாட்டுகளிலோ அவற்றிலுள்ள உண்மையை அறிவதென்பது சிக்கலானது என்ற அடிப்படையைச் சமூகத்தில் சிறு தரப்பினராவது உள்வாங்க வேண்டும். * சமூகவலைத்தளங்களில் உருவாகியுள்ள அரியவகை முன்னேறிய பிரிவொன்றை ‘அம்பலப்படுத்தளாளர்கள்’ என்று சுட்டலாம். ஒரு சமூகத்தில் வைத்தியர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் போல் இதுவும் ஒரு வகைமை. கொஞ்சம் புதியது. சாதாரணமாக ஊர்களில் இப்படிப் புறணி பேசுபவர்கள் இருப்பார்கள். அவர்களை இந்த வகைமைக்குள் அடக்க முடியாது. அம்பலப்படுத்தலாளர்களின் சேவையும் அணுகுமுறையும் புதியது. ஆகவே குறைபாடுகள் இருக்கும். வழிமுறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும். ஒரு நபர் மீதோ அமைப்புகளின் மீதோ இவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கும் வழிமுறை அவற்றுக்கான தீர்வினை அடைவதற்குத் தடைகளை உருவாக்குகிறது. குழப்புகிறது. ஆகவே அம்பலப்படுத்தலாளர்கள் தங்கள் நோக்கமான பாதிக்கப்பட்டவருக்கு நீதியைப் பெற்றுத்தருதல் என்பதில் கூடிய கவனத்தை உருவாக்க இன்னும் உழைக்க வேண்டியும் அவை தொடர்பில் வாசித்து அறிவார்ந்து விவாதித்து தங்களது சமூகப்பணிகளைத் தொடரவும் வேண்டும். மேலும், இத்தகைய ஒரு அரிய வகைமுயற்சி தொடர்பிலும் அதன் வரலாறு, முன்னோடிகள் தொடர்பில் விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்கி பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். வரலாற்றை ஆவணப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. இன்னும் பல அம்பலப்படுத்தலாளர்கள் உருவாக அதுவொரு விதையாக இருக்கும்😉 அம்பலப்படுத்தலாளர் ஒருவர் கவனிக்க வேண்டிய ஒரு உதாரணத்தினை இப்போது பார்க்கலாம். பாதிக்கப்பட்ட விக்டிம் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இழைக்கப்பட்ட அநீதியை வெளிக்கொணரும் போது, அவர்கள் கேட்கும் தகவல்கள் அத்தனையும் உண்மையானது, அவற்றுக்கு வேறு பக்கங்களே இருக்காது போன்ற முன்முடிவுகளை எடுக்கக் கூடாது. எனது அனுபவத்தில் பாதிக்கப்பட்டவரோ பாதிப்பைச் செலுத்தியவரோ இரு தரப்பும் தன்னிலையிருந்தே தகவல்களை வெளிப்படுத்துவார்கள். அதைக் கொண்டு ஒருவர் எந்த முடிவுக்கும் வருவதும், தீர்வை நோக்கிய வழிமுறைகளைப் பொறுப்பற்றுக் கையாள்வதும், அதன் மூலம் மேலும் பாதிப்பினைப் புதிய வகைகளில் வேறு நபர்களுக்கு உண்டாக்குவதும் தவறான அணுகுமுறை. ஒரு பாதிக்கப்பட்ட நபர் நார்ஸிஸ்ட் மனநிலை கொண்டவர் என்று வைத்துக் கொண்டால் அதை எப்படிக் கையாள்வது, அல்லது அவர் வேறு வகையான பாதிக்கப்பட்ட நபர் என்பதாக இருந்தால் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் இன்னும் விரிவாக நாம் உரையாட வேண்டும். நாங்கள் எல்லோருமே இவற்றைக் கையாள்வதில் புரிதல் குறைபாடுள்ளவர்கள் என்ற அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். நான் நம்புவதே சரியானது என்று முன்னகர்ந்தால் நீதிக்கான வழிகள் அடைபடும். நார்சியஸ் என்பது ரோமானியக் கவிஞர் ஒருவர் பயன்படுத்திய ஒரு புராணக்கதை. தனது சொந்தப் பிரதிபலிப்பை நீரில் பார்த்து அதைக் காதலிக்கும்படி சபிக்கப்பட்ட ஒருவனைப் பற்றியது. நார்சியஸ் தனது சொந்தப் பிரதிபலிப்பால் தன்னைத் திரும்பக் காதலிக்க முடியவில்லை என்ற விரக்தியுடன் இறந்து போகிறான். டபொடில்ஸ் மலர்களை நார்சியஸ் தன்மைக்கான குறியீடாக ஓவியங்களில் பயன்படுத்துவார்கள். (நார்சியஸ் தன் பிரதிபலிப்பைப் பார்த்தல்) * போகன் சங்கர் விக்டிம் நார்சிஸம் பற்றிய ஒரு ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சமாக எழுதிய குறிப்பில், “தன் மேல் மட்டுமே ஆர்வம் உள்ள ஒருவர் தன்னை ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக முன்னாடி வைப்பது. அந்த விஷயம் உண்மையாகவோ கற்பனையாகவோ மிகைப் படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இப்போது அளவில்லாத கவனத்தைக் கோருவது. இப்போது அவர்கள் செய்யும் மிகுந்த சுய நலமான மற்றவரைப் பாதிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவது. ஒரு இழப்பீடு போல அவற்றைக் கருதுவது. கோருவது. தன்னைப் பற்றிய அதீத மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்கு சுற்றி இருப்பவர்கள் ஆமாம் சாமி போடா விட்டால் அவர்களைத் தாக்குவது. ஒரு குற்ற உணர்வை அவர்களிடம் உருவாக்க முயல்வது தனி வாழ்விலும் பொது வாழ்விலும் இந்த அதிகார விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவதன் மூலமாகத் தன்னை எப்போதும் ஒரு குற்றமற்ற நிலையில் வைத்துக் கொள்ள முயல்வது. அதன் மூலமாக தங்கள் தாழ்வு மனப்பான்மையை மறைத்துக் கொள்வது. நவீன உளவியல் இப்போது இதை ஒரு நோய்க் கூறு என்று சொல்கிறது. இதை victim narcissm என்கிறார்கள். இது இப்போது பெருகி வருகிறது”. விக்டிம் நார்ஸிசிட்கள் ஐந்து வகையாக உருவாகக் கூடும். துஷ்பிரயோகம் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் பெரியவர்களாகிய நார்ஸிஸ்டுகளாக வளர வாய்ப்புள்ளது. உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் முதல் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவது வரை இதில் அடங்கும். புறக்கணிப்பு அவர்கள் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தால், இது அவர்களை வெறுமையாகவும் தனியாகவும் உணர வைக்கும், இது பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து அக்கறையக் கோருவதற்கு வழிவகுக்கும். கொடுமைப்படுத்துதல் அவர்கள் பள்ளிக்கூடத்தில் துன்புறுத்தப்பட்டால், அது அவர்கள் வளரும் போது பாதிக்கப்பட்ட மனநிலையை வளர்க்க வழிவகுக்கும், அங்கு அவர்கள் தங்கள் பாதையைக் கடக்கத் துணிந்த எவருக்கும் எதிராக, தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோரின் நார்ஸிசம் அவர்களின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே நார்சிஸ்டுகளாக இருந்தால், அந்தச் சூழலில் வளரும் குழந்தை வாழ்வதற்கு இதே போன்ற குணநலன்களை வளர்த்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. சமூக அழுத்தங்கள் இந்த நாட்களில் வெற்றிபெற தனிநபர்கள் மீது நிறைய அழுத்தம் உள்ளது, மேலும் அவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் போதுமானதாக இல்லை என்று நினைக்கும் ஒருவருக்கு, நார்சிஸ்டிக் நடத்தைகளை நாடாமல் இருப்பது கடினமாக இருக்கும். உளநல ஆலோசகர்கள் இத்தகையவர்களின் இயல்புகளைப் பின்வருமாறு அவதானிக்கின்றனர். மற்றவர்களைக் குற்றம் சாட்டுதல் விக்டிம் நார்சிஸ்ட்டுகள் உள்ளார்ந்து மிகவும் பலவீனமானவர்கள். அவர்கள் தங்கள் தவறுகளையோ பிழைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாகத் தங்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்களுடன் அவர்கள் மேல் தான் தவறு என்ற குற்றவுணர்ச்சியை உருவாக்குவார்கள். எல்லாமே நான் தான் எப்பொழுதும் தங்கள் மேலேயே கவனம் குவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். தான் சொல்வதை ஒரு சொல் பிழையில்லாமல் மற்றவர்கள் நம்ப வேண்டும். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் ஆகவே நான் சொல்வது மட்டும் உண்மை. நம்பவில்லையென்றால் நீங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலைக்குச் செல்வார்கள். அப்பாவிக் கதாபாத்திரம் தன்னை எந்த நிலையிலும் அப்பாவியாகவே முன்வைத்தல். ஒருவரை நம்ப வைக்க உண்மையைக் குழப்பவும் திரிக்கவும் கூடியவர்கள். உதாரணத்திற்குத் தானறியாத ஒரு நபரின் பாலியல் தொடர்பில் தனக்கு இருக்கும் மனநிலைக்கு ஏற்ப எதையாவது ஒரு பொய்யை உருவாக்குதல். பரப்புதல். விமர்சனத்தை ஏற்காமை ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்படும் பார்வைகளைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை அவர்கள் தங்கள் உளம் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகக் கொள்வார்கள். அதிலிருந்து மீள எதிர்த்தரப்பின் மீது எந்த நிலைக்குச் சென்றும் குற்றச்சாட்டுகளை உருவாக்குவார்கள். தற்காத்துக் கொள்ளலும் குற்றச்சாட்டுகளை மாற்றிக்கொண்டிருந்தலும் தன் மீது கேள்விகள் எழும் போது தன்னைத் தற்காத்துக்கொண்டு எதையும் அல்லது யாரையும் பலி கொடுக்கத் துணிவார்கள். அதையிட்டு குற்றச்சாட்டுகளை வகைதொகையில்லால் அள்ளியிறைப்பார்கள். பொறுப்பை ஏற்க மறுத்தல் அவர்கள் விக்டிம்கள் என்ற பாவனையில் விளைவுகளுக்கான எந்தப் பொறுப்பையும் தான் ஏற்கத்தேவையில்லை என்ற நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பார்கள். நான் அதற்காகச் சொல்லவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று தப்பித்துத்துக்கொள்ள முயல்வார்கள். அதே நேரம் தாங்கள் செய்த தவறுகளுக்கும் சேர்த்து, நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். அது அவர்களைத் தாங்கள் செய்தது சரிதான் என்று தங்களையே நம்ப வைக்கத் தேவையானது. பின்வழித் தோற்றத்தை உருவாக்குதல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காண்பதற்கு முக்கியமான குறியீடு, அவர்கள் குற்றங்களைப் பிற நபர்கள் மீது சுமத்துவதிலும் அதை நம்ப வைப்பதிலும் மாஸ்ட்டர்களாக இருப்பார்கள். அந்த நேரத்தில் மிகுந்த உணர்ச்சிவசத்தினதும் கண்ணீரினதும் மூலமும் கூட கேட்பவரைக் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கித் தன் பக்கம் நிற்க வைக்கத் தூண்டுவார்கள். விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காணல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட் தொடர்ந்து தன் வாழ்வில் தனக்கு நிகழ்பவற்றுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களா? அவர்கள் தொடர்ந்து தங்கள் நட்பிலோ காதலிலோ உறவுகளை இழக்கிறார்களா? தங்களுடைய இலக்குகளை அடைவதற்குச் சிரமப்படுகிறார்களா? கழிவிரக்கம், கவலை, பொறுப்புணர்வு இந்த மூன்றும் அவர்களிடம் இல்லையென்றால் அவர்கள் ஒரு நார்சிஸ்ட். மேற்சொன்னவற்றைக் கண்டுகொண்டால் விலகி விடுவதே உங்களின் உளநலனைப் பாதுகாக்க முதல் வழி. * ஒருவர் தன்னையொரு விக்டிம் நார்சிஸ்ட்டாக உணர்ந்து கொண்டால் அவர் பின்வரும் வழிமுறைகளை அணுகலாம் என்று உளமருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிகிச்சை பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கான சிறந்த சிகிச்சையானது, மற்றவர்களை எப்படி மீண்டும் நம்புவது, கருணையை வளர்ப்பது மற்றும் அவர்களின் சொந்த செயல்களுக்குப் பொறுப்பேற்பது எப்படி என்பதை அறிய உதவும் ஒரு சிகிச்சையாகும். இது ஒரு கடினமான பாதையாக இருக்கலாம், ஆனால் ஒரு நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சையாளரின் உதவியுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய முடியும். சுய உதவி பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கு சுய உதவி மற்றொரு சிறந்த வழி. அவர்களின் உணர்வுகள், தொடர்புத் திறன் வகைகள், உறவுகளில் எல்லைகள் போன்றவற்றைச் சிறப்பாகக் கையாள்வது எப்படி என்பதை அறிய உதவும் பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன. இந்தச் சிக்கல்களைத் தாங்களே எதிர்கொள்ளும் வாய்ப்பை இது அவர்களுக்கு வழங்கும். அன்போ சக மனிதர் மீது நம்பிக்கையோ இல்லாததால் தனிநபருடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவர், சிகிச்சையாளர் அல்லது பிற நிபுணரைப் பெரிதும் நம்பியிருக்க வேண்டும். மருந்துகள் இது மனநல மருத்துவர்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற நிபுணர்களிடமிருந்து ஒரு பொருத்தமான இடத்தில் முழுமையாக சோதனை செய்யப்பட்ட வேண்டும். அங்குதான் அந்தச் சோதனைகள் பாதுகாப்பாகவும் மேற்பார்வையிலும் செய்யப்படும். * விக்டிம் நார்சிஸ்ட்டை எதிர்கொள்ளுதல் முதலாவது, விக்டிம் நார்சிசம் பற்றித் தேடி வாசித்து அறிவை விரிவாக்கிக் கொள்ளுதல். நார்சிஸ்ட்டுகளின் தந்திரங்களும் கையாளுகைகளையும் அறிந்து அவர்கள் திரிபுகளையும் பொய்களையும் ஆயுதமாக்கித் தம்மை எவ்விதம் தக்க வைக்கிறார்கள் என்பதை அறிவார்ந்து விளங்கிக் கொள்ளுதல். இரண்டாவது, உங்கள் உணர்வுகளை மதியுங்கள். உங்களுக்கும் சொந்தமான பார்வைகள் உணர்ச்சிகள் உண்டு அவையும் உண்மையானவை என உணருங்கள். மூன்றாவது, உங்கள் எல்லைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். அவர்களால் உங்களை Manipulate பண்ண முடியாது என்பதை உணர்த்துங்கள். நான்காவது, நிதானமாகி அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவது, இத்தகையவர்களை எதிர்கொள்ள உளநல நிபுணர்களை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஆறாவது, நார்ஸிஸ்ட்களிடமிருந்து தொடர்பைத் துண்டிப்பதன் மூலமாக உங்கள் சொந்த வாழ்வில் முன்னேறிச் செல்லுங்கள். இவை உளவியலாளர்கள் மற்றும் உளவள ஆலோசகர்கள் விக்டிம் நார்சிஸ்ட்டுகளுடன் உறவிலிருப்பவர்களுக்கு வழங்கும் பரிந்துரைகள். பாதிக்கப்பட்டவர்கள் என்ற பிரிவில் உள்ள ஒரு உதாரணத்திற்கு இவ்வளவு விரிவு இருக்குமென்றால் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் எவ்வளவு விரிவான உரையாடலையும் அறிதலையும் கோரக்கூடியவை என்பதை நாம் கொஞ்சமாவது மனம் திறந்து உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அம்பலப்படுத்தலாளர்கள் introverted narcissist என்றால் என்ன என்பதையும் தேடி வாசித்து அறிய வேண்டும். * எந்தவொரு குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்டவர்களை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளை உரையாடுவதாகவே இருக்க வேண்டும். அவற்றை எல்லாத் தரப்பினரும் தங்கள் புரிதல்களிலிருந்து முன் வைக்க வேண்டும். இதில் தனி நலன்களோ, பழி தீர்க்கும் உணர்ச்சிகளோ உள்நுழையாமல் தவிர்க்க வேண்டும். அதுவே ஏதாவதொரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பாதிப்புகளைத் தாமே முன்வந்து உரையாடும் பாதுகாப்பன வெளிகளை உருவாக்க உதவும். நான் என்னளவில் கையாளும் வழிமுறைகளில் சிலவற்றை இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்படிப் பல வகையான மானுடரும் அவர்களுக்கான உளவியல் நெருக்கடிகளும் நிலமைகளும் உண்டு. எங்களுக்கு நிபுணத்துவமோ குன்றாத செயலூக்கமோ இல்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, எங்களின் ஆதார விசைகள் முழுமையாக ஒன்றி நேர்நிலையான மனிதர்களுடன் பயணிக்கும் ஒரு வாழ்க்கையே பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியது. எதிர்மனநிலை கொண்டவர்கள் சூழ் காலங்களில் புயற் காற்றுள் லாந்தர் வெளிச்சமென நம் அகச்சுடரைக் காப்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கெனக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரினதும் முதன்மையான பணி. “செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி” https://kirishanth.com/archives/827/
    8 points
  19. (குறுங்கதை) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள் -------------------------------------------------------------- அன்று அவன் காரை அதன் தரிப்பிடத்தில் நிற்பாட்டும் போது அங்கு பல கார்கள் ஏற்கனவே நின்றிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் எப்பொழுதும் காலை ஏழு அல்லது ஏழரை மணி அளவில் வேலைக்கு வந்து விடுவான். அங்கு பெரும்பாலானவர்கள் பத்து மணிக்கு பின்னரே வேலைக்கு வருவார்கள். ஒருவர் மட்டும், பெரும் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக, அதிகாலை ஐந்து மணிக்கு வந்து விடுகின்றார். இது அவரே சொல்லும் ஒரு தகவல். இதுவரை அதை எவராவது உறுதிப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. அமெரிக்கரரான அவர் மதியம் உணவை முடித்துக் கொண்டு, ஒரு மணி அளவில், இன்றைய வேலை முடிந்தது என்று தினமும் கிளம்பி விடுவார். வேலை தளத்தில் பலர் ஏற்கனவே வேலையில் மூழ்கி இருந்தனர். இப்படியொரு திங்கள் காலையா என்று நினைத்தவன் உறை நிலையில் இருந்த அவனின் கணினியை தட்டி எழுப்பினான். இந்த நிறுவனத்தில் அவன் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருக்கின்றது. இதுவரை அவன் இங்கு வேறு சில நிறுவனங்களில் பல வருடங்கள் வேலை செய்துள்ளான். ஆனால் இங்கே தான் முதன் முதலாக பெரும் எண்ணிக்கையிலான தமிழ்நாடு மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுடன் வேலை செய்கின்றான். இந்த நிறுவனத்தின் புதிய மென்பொருள் திட்டம் ஒன்றிற்காக இந்தியாவின் முன்னணி கணினி தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை தற்காலிகமாக வேலைக்கு எடுத்துள்ளார்கள். அதில் சில நூற்றுக்கணக்கானவர்கள் அங்கிருந்து இங்கு வந்துள்ளனர். அங்கிருந்து இப்படி வருபவர்கள் முதலில் ஆறு மாதங்கள் மட்டும் இங்கே இருந்து பணி செய்யும் ஒப்பந்தத்துடன் வருவார்கள். சிலர் ஒரு வருடம், இன்னும் சிலர் சில வருடங்கள், பல வருடங்கள் என்று அப்படியே தங்கி விடுபவர்களும் உண்டு. இப்படியான நிலைகளில் ஒரு அளவிலான பணியாளர்களை, இங்கே குடி உரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களை, வேலைக்கு எடுக்க வேண்டும் என்ற ஒரு முறையும் இங்கே இருக்கின்றது. அவனை அப்படியே எடுத்திருந்தார்கள். 'ஏன் விக்னேஷ், எத்தனை மணிக்கு வேலைக்கு வந்தீர்கள்?' என்று கேட்டான். விக்னேஷ் சென்னையை சேர்ந்தவன், இங்கு இரண்டு வருடங்களாக வேலை செய்கின்றான். 'இல்ல சார், நாங்க நேற்றிலிருந்தே இங்க தான் உட்கார்ந்திருக்கிறம்.' இவர்கள் சிலருடன் இருக்கும் ஒரு பெரிய தொல்லை இது. எவ்வளவு தான் சொன்னாலும் இவர்கள் இந்த சார் என்று கூப்பிடுவதை விடவே மாட்டார்கள். இவர்களிடையே வேலைத் தளத்தில் இராணுவத்தில் இருப்பது போன்ற பதவி வரிசைகளும், அதற்கான ஒழுங்கும், மதிப்பும் இருக்கும். இங்கு மற்றவர்களிடையே பொதுவாக அப்படியான ஒரு ஒழுங்கோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட பணிவோ இருப்பதில்லை. அவரவர் தங்கள் வேலையை செய்து கொண்டு, மிகச் சாதாரணமாக இருப்பார்கள், பழகுவார்கள். இங்கு சேர்ந்த புதிதில் அவனுக்கு இது ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. 'நேற்று ஞாயிறில் இருந்தா, ஏன்?' 'ஆமாம் சார். வாற சண்டே ப்ராடக்ட் ரிலீஸ் என்று டெட் லைன் போட்டு விட்டார்கள். அதால சென்னையிலும், இங்கேயும் எங்க டீம் ஒண்ணா உட்கார்ந்து வேலை செய்யிறாங்கள்.' அங்கு மிச்சமாக விடப்பட்டிருக்கும் பீட்சா துண்டுகளை அவன் அப்பொழுது தான் கவனித்தான். விக்னேஷிற்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது. ஆறு மாதங்களின் முன் விக்னேஷின் மனைவியை மருத்துவரிடமும், பின்னர் மருத்துவமனைக்கும் கூட்டிப் போக வேண்டி இருந்தது. முடிவில் தனிமையும், மன அழுத்தமுமே காரணம் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தனர். இவர்கள் வேலைக்கு கொடுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தை அவனால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. காரணம் கேட்டால் அங்கே இஎம்ஐ கட்ட வேண்டும் என்பார்கள், இப்படி சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்பார்கள், இப்படி ஏதேதோ சொல்வார்கள். 'உங்க டீம் பண்ணி முடிச்சிட்டாங்களா, சார்?' 'தெரியல விக்னேஷ், இனித்தான் பார்க்கணும்.' விக்னேஷும், இவனும் வெவ்வேறு அணியில், மென்பொருளின் வெவ்வேறு பகுதிகளில் வேலை செய்பவர்கள். இவனுடைய அணியின் முதன்மைப் பொறியியலாளன் இவன் தான். விக்னேஷிற்கு அவர்களின் ஊரைச் சேர்ந்த கணேஷ் என்னும் ஒருவர் மேற்பார்வையாளராக இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் அவருக்கு மேலிருப்பவர்களை எப்படி ஆச்சரியப்பட வைக்கலாம் என்று யோசிப்பவர் கணேஷ். இவனுக்கு கணேஷுடன் பெரிதாக ஒட்ட முடியவில்லை. சுருக்கமாக் சொன்னால், ஒரு நவீன கங்காணியாகவே இவன் கணேஷைப் பார்த்தான். கணேஷிற்கும் அது தெரியும். தன் இடத்தில் வந்து அமர்ந்து, வந்திருந்த மின் அஞ்சல்களை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான். இரண்டு நாட்களில் நூறுக்கும் மேற்பட்டவை வந்திருந்தன. 'நேற்றும், முந்தா நாளும் தொடர்பு கொள்ளவே முடியவில்லையே' என்றபடியே முருகன் வந்தார். இந்த திட்டத்திற்கு அவர்களின் பக்கத்தில் இருந்து வந்திருக்கும் திட்ட மேற்பார்வையாளர் அவர். அப்படியா என்றபடி இவன் கைத்தொலைபேசியை வெளியில் எடுத்தான். 'சனி ஞாயிறு ஆளைப் பிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆமா, சனி ஞாயிறில் வேறு ஒரு உலகத்துக்கே போய் விடுகின்றாயா, என்ன?' சிரித்து சமாளித்துக் கொண்டே ஏதோ வீட்டு வேலையில் இருந்து விட்டேன் என்றான். அப்படி ஒன்றும் வீட்டில் வெட்டி நிமிர்த்துவது கிடையாது. ஆனாலும் இவர்களுடன் சேர்ந்து கண் மண் தெரியாமல் ஓடுவதில்லை என்ற முடிவை அவன் எப்பவோ எடுத்திருந்தான். முருகன் கொஞ்சம் வயதானவர். அவர் இவனுடன் ஒரு மாதிரியும், அவரின் நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் இன்னொரு மாதிரியும், கொஞ்சம் கடுமையாகவும், நடந்து கொள்வார். அவர்கள் இரவு பகலாக வேலை செய்தனர். சொன்னபடியே அந்த ஞாயிறன்று புதிய மென்பொருள் பரீட்சாத்தமாக வெளியிடப்பட்டது. பின்னர் இரண்டு வாரங்களில் அது வாடிக்கையாளர்களுக்கு, சில பிழை திருத்தங்களின் பின், வெளியிடப்பட்டது. இங்கு எந்த மென்பொருளையும், எல்லாவற்றையும் படைத்தவர் என்று ஒருவர் இருந்து, அவரே வந்து உருவாக்கி, எழுதினாலும் அதில் பிழைகள் வந்தே தீரும். பில் கேட்ஸின் விண்டோஸ் என்னும் மென்பொருளில் இந்த உலகம் பார்க்காததா? அவரை ஒரு ஜீனியஸ் என்று சொல்வார்கள். ஆரம்ப நாட்களில், பல வருடங்களின் முன், அந்த மென்பொருள் இடையிடையே கணினித் திரையை அப்படியே முழு நீலமாக மாற்றி விட்டு, அப்படியே நின்றும் விடும். முழு நீலம் ஒரு குறியீடு போல, நடுக்கடலில் உன்னை தள்ளி விட்டுள்ளோம், இனி நீயாகவே நீந்திக் கரை சேர் என்று சொல்வதற்கான ஒரு குறியீடு. இந்த நிறுவனத்தின் புதிய மென்பொருளும் வாடிக்கையாளர்களின் கைகளில் பலத்த அடி வாங்கியது. ஆனால் அதற்கு முன்னேயே புதிய மென்பொருளை சொன்ன நேரத்தில் வெளியிட்டதற்காக பெரும் விழா ஒன்று நடந்து முடிந்திருந்தது. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்கள் பலருக்கு மட்டும், இவன், கணேஷ் உட்பட, சன்மானமும் கொடுத்திருந்தனர். விக்னேஷிற்கோ அல்லது அவர்களின் பக்கத்தில் இருந்து எவருக்குமோ எதுவும் கொடுக்கப்படவில்லை, வெறும் 'தாங் யூ சோ மச்' என்ற வார்த்தையைத் தவிர. பின்னர் சில நாட்களில் இந்த புதிய மென்பொருளின் தோல்வியாலும், நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தினாலும் பலரை வேலையிலிருந்து நீக்கும் முடிவை நிறுவனத்தின் மேல் நிர்வாகம் எடுத்தது. இவனையும் நீக்கினார்கள். கணேஷையும் நீக்கினார்கள். 'என்ன சார், இப்படி அநியாயம் பண்ணிட்டாங்கள். உங்களை ஏன் சார் தூக்கினாங்கள்?' என்று கடைசி நாளான அன்று வந்து நின்றான் விக்னேஷ். அவர்களின் நிறுவனத்திலிருந்து எவரையும் வேலையிலிருந்து, இன்னமும், நீக்கவில்லை. இந்த நிறுவனத்திடம் வேறு ஒரு புதிய மென்பொருள் ஆரம்பிக்கும் திட்டம் ஒன்றும் முன்னமே இருந்தது. 'இதில என்ன இருக்கு, விக்னேஷ், தூக்க வேண்டும் என்று முடிவு செய்து எல்லாரையும் ஒன்றாக தூக்கினார்கள்.' 'நீங்க எப்படி சார் இப்படி ஈசியா இருக்கிறீர்கள். கணேஷ் சார் எங்களுடன் பேசவே இல்லை, அழுதிருப்பார் போல.' 'இதெல்லாம் இங்க சாதாரணம், விக்னேஷ்.' 'உங்களுக்கு இஎம்ஐ எதுவும் இல்லையா, சார்.' 'வீட்டிற்கு இருக்குது, இரண்டு காருக்கும் இருக்குது, இன்னும் எவ்வளவோ இருக்குது.' 'என்ன பண்ணுவீங்க, சார்?' 'அடுத்த வேலையை தேட வேண்டியது தான். இந்த துறையில் இங்க வேலை இல்லாமல் இருப்பவர்கள் என்று எவருமில்லை.' விக்னேஷ் ஆச்சரியமாகப் பார்த்தான். கை கொடுத்தவன் அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொண்டான். இருவரும் ஒருவரின் கண்களை மற்றவர்கள் பார்ப்பதை தவிர்த்தனர். அப்படியே திரும்பி நடந்த விக்னேஷை இவன் கூப்பிட்டான். 'என்ன, சார்' என்று விக்னேஷ் திரும்பினான். 'குடும்பத்தை பார்த்துக் கொள், விக்னேஷ்' என்றான் இவன்.
    8 points
  20. இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்| exercise to reduce knee pain Dr Karthikeyan
    8 points
  21. இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளையும் கருணாநிதி மோடி போன்றவர்களை மோசமாகத் திட்டியும் உச்சக் கட்டமாகப் பொதுமக்களைக் கொத்தடிமைகள் என்று பல இடங்களில் தூற்றியும் எழுதியது பாரதூரமாகத் தெரிகிறது. இந்திய அரசியலுக்குள் மூக்கை நுளைத்து 92 வீதமான தமிழக மக்களது உணர்ச்சிகளைக் கேவலப்படுத்துவது எமக்குத் தேவையானதா ? அல்லது அதற்கு நாம் தகுதியானவர்களா ?
    8 points
  22. எந்தக் கப்பல் என்றால் என்ன ஒரு நாட்டுக்குள் போகும்போது குறிப்பிட்ட கடல் எல்லையில் இருந்து சிறிய படகில்வந்து எந்த துறைமுகத்துக்கான போட்கப்ரின் என அழைக்கப்படுபவரின் கட்டளைப்படி தான் கப்பல் கொண்டுபோய்க் கட்டப்படும். அதே மாதிரி துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டுபோய் விடுவதும் போடகப்ரனின் பொறுப்பே. இதே கட்டளைகளைத் தான் விமான ஓட்டிகளும் பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் கொன்றோல்ரவரில் இருப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும். இந்தக் கப்பல் வர முதலே கப்பல் பற்றிய சகல தரவுகளும் அந்த துறைமுகத்துக்கு கிடைக்கும்.பெரிய கப்பல் தண்ணீர் போதாது கீழே மேலே முட்டும் என்பது துறைமுகத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்து தான் அனுபதிப்பார்கள். சாமானுடன் வந்த கப்பல் வெறுமையாக போனால் பல அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும். இப்போது அது வந்த பாலத்தை கடக்க முடியுமா என்றதை எல்லாம் துறைமுகத்தவர் கணிக்க வேண்டும்.
    8 points
  23. (குறுங்கதை) ஒரு பொய் ---------------- 'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று. நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும் சிலரை, வேலையின் அளவைப் பொறுத்து, வேலைக்கு எடுப்பார்கள். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று அவர்களுக்கு வேலை இருக்கும். அதை தாண்டியும் சிலர் இருப்பார்கள். இரண்டு பக்கங்களுக்கும் பிடித்துப் போக, நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் இணைபவர்களும் உண்டு. மைக்கேல் ஆறு மாத வேலைத் திட்டம் ஒன்றிற்காக வந்திருந்தான். வேலையில் அவனின் இடத்தையும், பொருட்களையும் சுத்தப்படுத்துவதற்கு அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாலும், மைக்கேல் வேலையில் மிகவும் திறமையானவனாக இருந்தான். அவனின் குடும்பம் நீண்ட நாட்களின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்து இங்கு குடி வந்துள்ளனர். அவன் பெரும்பாலான பாடசாலை மற்றும் பல்கலை கல்வியை இங்கே அமெரிக்காவிலேயே கற்றிருந்தான். பொதுவாக என் அனுபவத்தில் நான் கண்ட ரஷ்யர்களுக்கு இருக்கும் அபரிதமான கணித ஆற்றல் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தான் ஒரு ரஷ்யன் இல்லை என்றும், தான் ஒரு உக்ரேனியன் என்றும் என்னிடம் ஒரு தடவை தெளிவாகச் சொன்னான். அப்பொழுது ரஷ்யா - உக்ரேன் சண்டை ஆரம்பித்திருக்கவில்லை, ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்து, இவை இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்த காலம் அது. ஒழுங்காக தினமும் நேரத்திற்கு வந்து, மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அவன் திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. எங்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மூன்றாம் நாள் அவனை தொலைபேசியில் கூப்பிட்டேன். உடனேயே தொலைபேசியை எடுத்தவன், தன்னுடைய வீடு எரிந்து விட்டதாக சொன்னான். இங்கு வீடு எதுவும் எரிந்ததாக உள்ளூர் செய்திகளில் நான் பார்க்கவில்லை, ஆதலால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எரிந்த எல்லா வீடுகளையும் செய்திகளில் காட்ட வேண்டும் என்றும் இல்லைத்தான். பின்னர் வீடு எரிந்திருப்பதை காட்டும் சில படங்களை எனக்கு அனுப்பினான். அதன் பின்னர் ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரமும் நன்றாக வேலை செய்தான். மீண்டும் இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. தற்காலிகமாக வேலைக்கு வருபவர்கள் வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், நாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது. மைக்கேலின் திறமையைப் பார்த்து, அவனை வைத்தே அதில் பெரும் பகுதி ஒன்றை முடித்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன். அவன் ஒரு தடவை எங்களின் அடுத்த தளத்தில் ஒரு ரஷ்யர் வேலை செய்வதாகச் சொன்னான். நான் எனக்கு அவரை தெரியாது, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அந்த மனிதனின் கண்களை தான் பார்த்ததாகவும், அதில் ஒரு தீராத கோபம் தெரிந்ததாகவும் அவன் சொன்னான். அந்தக் கோபம் ரஷ்யர்களுக்கு மட்டுமே உரியது என்றான். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் என்ன வித்தியாசம் என்று அன்று எனக்கு தெரியாது, இரண்டும் ஒன்றே எனக்கு அன்று. நான் ஏன் நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்க, இவர்களின் தீராத கோபத்தை என் மீது இறக்கி விடுவார்களோ என்று ஒரு யோசனையாகவும் இருந்தது. இந்த தடவை அவனின் கார் களவு போய் விட்டதாக சொன்னான். சில நாட்கள் தொடர்ந்தும் வேலைக்கு வராமல் தன்னுடைய காரை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனின் கார் ஒரு கறுப்பு நிற பிஎம்டபிள்யூ. ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு, அவனின் காரை மெக்சிக்கோ எல்லைக்கு அருகே கண்டு பிடித்து விட்டதாகவும், தான் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். அடுத்த நாளும் அவன் வேலைக்கு வரவில்லை. மீண்டும் அவனே தொடர்பு கொண்டான். இந்த தடவை தான் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். என்ன நடந்தது என்றேன். கால் உடைந்து விட்டது என்றான். எப்படி உடைந்தது என்று கேட்டதிற்கு, தான் தன்னுடைய காரை காலால் அடித்ததாகவும், அப்பொழுது வலது கால் பாதம் உடைந்து போய் விட்டதாகச் சொன்னான். இதைச் சொல்லி விட்டு, தனக்கு தன்னுடைய காரின் மேல் கோபம் வந்ததால், காரை உதைத்ததாகச் சொன்னான். இது தான் தீராத கோபம் போல. அவன் இப்படியே ஏதாவது சொல்லி வேலைக்கு வராமலேயே இருந்தான். ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நிற்பாட்டுவதாக அவனுக்கு செய்தி அனுப்பினோம். சில மாதங்களின் பின்னர், ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் தனது பதவி பற்றிச் சொல்லிய பின், 'உங்களுக்கு மைக்கேலை தெரியுமா?' 'ஆ...., நல்லாவே தெரியும்' என்றேன் நான். 'மைக்கேல் எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்.' 'நல்ல விடயம்.' 'உங்களை தான் ஒரு பரிந்துரையாளராக போட்டிருக்கின்றார். நான் உங்களிடம் சில தகவல்களை கேட்கலாமா?' 'நிச்சயமாக, நீங்கள் தாராளமாக கேட்கலாம்.' மைக்கேலின் தொழில்நுட்ப அறிவு, திறமைகள் பற்றியே எல்லா கேள்விகளும் இருந்தன. அதில் மைக்கேலிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. உண்மையில் நான் பார்த்தவர்களில் அவன் மிகவும் திறமையானவன். கடைசி கேள்வி: 'மைக்கேல் திரும்பவும் உங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தால், நீங்கள் அவனை வேலைக்கு எடுப்பீர்களா?' 'நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.
    8 points
  24. ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால் பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல் அவருக்கு மட்டும் தனிக்கருத்து எழுதியிருக்கலாம். நீங்கள் புலிகளை இழுத்ததால் அது எல்லோரையும் தாக்கும். 😢
    8 points
  25. எனக்கே அடையாளம் தெரியாமல் முகத்தில் நன்கு ஐந்து இடங்களில் வீங்கிப்போய் இருந்தது. பிள்ளைகளுக்கு அனுப்புவதற்குப் படமெடுத்து அனுப்பிவிட்டு படத்தை பார்க்கச் சகிக்காது உடனேயே போனில் இருந்து அழித்துவிட்டேன் என்றால் பாருங்களன். அன்றே ஒன்லைனில் வேறு ஒரு தங்குவிடுதியை புக் செய்து போகும்போது வரவேற்பில் நின்றவரிடம் இரவு முழுதும் சரியான நுளம்புக்கடி என்கிறேன். நுளம்பே இல்லையே மடம் என்கிறார். அப்ப இரவு போய் படுத்துப்பாரும் என்றுவிட்டு வெளியேறி அடுத்த தங்குவிடுதிக்குச் சென்று சூட்கேசை வைத்துவிட்டு குளியலறையில் யன்னல் பூட்டக் கூடியதா என்று பார்த்துவிட்டுத்தான் பதிவே செய்தது. அதுமுடிய அறைக்குள் சென்றவுடன் பழைய தங்குவிடுதியின் இணையத்தளத்துக்குச் சென்று உள்ளதை உள்ளபடி விமர்சனம் எழுதி முடித்தபின்தான் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அன்று பகல் வங்கிக்குச் சென்று எமது பணத்தைப் பற்றிக் கதைத்தால் அந்த அலுவலை முடிக்க ஆறு நாட்கள் செல்லும் என்றார்கள். அத்தனை நாட்கள் சென்னையிலேயே நின்று என்ன செய்வது? அதனால் எங்காவது போய் வருவோம் என்றால் மனிசன் மதுரை போவோம் என்கிறார். எனக்கும் கீழடியைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலநாட்களாக இருக்க, நானும் சம்மதிக்க இருவரும் சென்று ஒரு பயண முகவர் ஒருவரைச் சந்தித்து அன்றைய இரவு பத்து மணிக்கு படுக்கையுடன் கூடிய சொகுசு உந்தில் மதுரை செல்லப் பயணச் சீட்டு எடுத்துவிட்டு மதிய உணவை உண்டுவிட்டு வந்து கொண்டுவந்த கைப்பொதியில் இரு நாட்களுக்கு உரிய உடைகளையும் முக்கிய பொருட்களையும் எடுத்து அடுக்கிவிட்டு படுத்துக் குட்டித் தூக்கம் ஒன்றும் போட்டு எழுந்தால் அப்பதான் மூன்று மணி. வெளியே கடைகளுக்குச் செல்ல மனமில்லை. படம் பார்க்கப் போவோமா என்கிறேன். இங்கே பக்கத்தில சினிமா இருக்கோ தெரியவில்லை என்று மனிசன் பின் வாங்க, வரவேற்பில் போய் கேட்டுக்கொண்டு வாங்கோ என்கிறேன். போன மனிசன் ஐந்து நிமிடத்தில் வந்து பத்து நிமிட நடையில் கிரிஷ்ணவேணி என்ற சினிமா இருக்காம், நாலரைக்குப் படம் இருக்காம் என்கிறார். என்ன படம் என்று எதுவும் கேட்கவில்லை. பெரிய பயணப்பொதியை இரண்டு நாட்களில் திரும்ப வருவோம் என்று கூறி கீழே வரவேற்பில் கொடுத்துவிட்டு கைப்பொதியை இழுத்தபடி செல்கிறோம். போகும் வழியில் உணவகத்தில் மனிசன் பரோட்டவும் நான் பூரியும் உண்டுவிட்டுத் தேனீரும் அருந்தி, இரவு உண்பதற்கு வடை, போண்டா எனச் சில சிற்றுண்டிகளையும் தண்ணீர் போத்தலையும் வாங்கிக்கொண்டு படம் பார்க்கச் செல்கிறோம். நாம் நின்ற இடத்திலிருந்து அரைமணி நேரத்தில் சென்று மகிழுந்தைப் பிடித்துவிடலாம். கோயம்பேடு சந்தைக்கு அருகில் தான் பஸ்கள் தரிப்பிடம் என்று எமக்குச் சொல்லப்பட்டது. அதனால் சாவகாசமாகப் படம் முடிந்து போகலாம் என்று போய் படமும் பார்க்க ஆரம்பிச்சாச்சு. சினிமா என்பதனால் போனின் சத்தத்தையும் நிறுத்தியாச்சு. ஆறரை மணிக்கு இடைவேளையில் மனிசன் சென்று பொப்கோனும் நெஸ்கபேயும் வாங்கிவர, இரசிச்சுக் குடிச்சு மீண்டும் படம்பார்க்க ஆரம்பிக்கிறோம். நாலரைக்கு படம் தொடங்கும் என்று போட்டாலும் 15 நிமிடம் விளம்பரங்களுக்குப் பின்னர்தான் படம் ஆரம்பித்தது. அதனால் இடையில் எத்தனை மணி என்று பார்க்க போனை எடுத்தால் 5 மிஸ்டு கோல்கள். என்ன ஏது என்று பார்த்தால் அப்ப ஏழரை மணி. படம் முடிய இன்னும் அரை மணி நேரமாவது செல்லும். ஏதோ மனதில் பிரையாணம் தொடர்பானதுதான் என்று தோன்ற போனை எடுத்துக் காதில் வைத்து ஏன் போன் செய்தீர்கள் என்று கேட்க, பஸ் கோயம்பேடில் நிக்காது மடம். அதுதான் உங்களையும் பிக் பண்ணிக்கொண்டு போக போன் செய்தோம் என்கிறான் அந்த பஸ்ஸின் ஓட்டுனர். நாங்கள் சினிமா பார்த்துக்கொண்டு இருந்ததில் கேட்கவில்லை. எனக்குப் பதட்டமாகிப் போகிறது. நான் வெளியே வந்து எடுக்கிறேன் என்றுவிட்டு மனிசனிடம் விடயத்தைச் சொல்லி, படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் வெளியே வந்து போன் செய்ய மீண்டும் அதையே சொல்கிறார் ஓட்டுனர். இப்ப எங்கே வந்து பஸ்சைப் பிடிப்பது என்று கேட்கிறேன். கீழாம்பாக்கம் என்ற இடத்துக்கு வரவேணும் என்று கூற எவ்வளவு தூரம் என்று கேட்கிறேன். ஒரு மணி நேரத்தில் வந்துவிடலாம் என்றுகூற எனக்குப் பதட்டமாகிறது. ஒரு மணிநேரம் என்றால் தூரமாகத்தானே இருக்கும் என்று எண்ணியபடி நடக்க, பொறு எங்கட சூட்கேசை எடுத்துக்ககொண்டு வாறன் என்றபடி சினிமாவின் ரிக்கற் கவுண்டருக்கு அருகில் சென்று அங்கு அவர்களிடம் கொடுத்தவற்றை எடுத்துக்கொண்டு வர நான் என்னதை இழுத்துக்கொண்டு போகிறேன். சினிமா அரங்குக்குப் பக்கத்தில் தான் நாம் ரிக்கற்றைப் பெற்ற கடை. இப்ப கடை பூட்டி இருக்கும் என்கிறார் கணவர். எதுக்கும் போய் பார்ப்போம் என்று சென்றால் திறந்து இருக்க எதுக்கு பிழையான இடத்தைச் சொன்னீர்கள் என்கிறேன். என்னம்மா சொல்றீங்க. புரியும்படியா சொல்லுங்க என்கிறார். நான் விபரம் சொல்ல, பக்கத்தில் நின்ற ஒருவர் இப்பல்லாம் பஸ் இங்க நிக்கிறதில்லையே என்கிறார். முகவர் சமாளித்தபடி காலைல புக் பண்ணும்போது இங்கேதான் போட்டிருந்தாங்க. திடீர்னு மாத்தீட்டாங்க என்கிறார். இப்ப எப்பிடிப் போறது என்கிறேன் நான். ஓட்டோவில போங்க என்று கூற ஓட்டோவுக்கு எவ்வளவு என்கிறார் மனிசன். இரவு நேரம் டபுளா கேட்பாங்க என்றுவிட்டு ஒரு ஓட்டோவை நிறுத்த அவ்வளவு தூரம் வரமுடியாது என்கிறான் ஒருவன். நேரம் எட்டுமணியாகிவிட எனக்குப் பதட்டம் ஏற்பட முதலே சரியான இடத்தைச் சொல்லியிருக்கவேணும் என்கிறேன் முகவரைப் பார்த்தபடி. என் கோபம் புரிய நான் உங்களை ஏற்றாமல் போகக் கூடாது என்று இப்பவே சொல்கிறேன் என்றபடி போன் செய்கிறார். அவர் பேசி முடிய அவரை நம்பாமல் எனக்கு போன் வந்த இலக்கத்தை அழுத்தி இன்னும் நாங்கள் ரி நகரில் தான் நிற்கிறோம். வந்துவிடுவோம். என்று கூற உங்களை ஏற்றாமல் பஸ்சை எடுக்கமாட்டேன் மடம், வாங்க. என்றுவிட்டு போனை வைக்க, நீங்கள் தான் ஓட்டோ பிடித்துத் தரணும் என்கிறேன். சரிம்மா என்றுவிட்டு ஓட்டோவை நிறுத்துகிறார். பலரும் வர மறுக்க, ஏன் வரமறுக்கிறார்கள் என்று கேட்கிறேன். அவ்வளோ தூரம் போயிற்று திரும்பிவர சவாரி கிடைக்காட்டி நட்டம் என்று ரொம்பக் கேக்கிறாங்கம்மா என்கிறார். பரவாயில்லை நிறுத்துங்கள் என்றதும் ஓட்டோவை நிறுத்தப் போகிறார். சாதாரணமா ஒரே றபிக் அங்கிட்டுப் போக என்கிறார் எமக்குப் பக்கத்தில் நின்றவர். அப்ப டாக்ஸி பிடித்தால் விரைவாகச் செல்லலாமே என்றுவிட்டு முகவரிடம் டாக்ஸியை அழையுங்கள் என்கிறேன். டாக்சி ஸ்ராண்ட் பக்கத்தில இல்லை. பத்து நிமிடம் அங்கிட்டுப் போகணும். அதுக்கு ஓட்டோலையே போயிடுங்க. இதோ ஒண்ணு வந்திட்டுது என்றபடி ஒன்றை நிறுத்துகிறார். நானும் கணவரும் ஏறி அமர்கிறோம். வரும்
    8 points
  26. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்களும், பெருமளவு சிறுவர்களும் இருந்தார்கள். வழமைபோல ஆண்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு பேச, பெண்களும் அவ்வாறே செய்தார்கள். நடுவில் சிறுவர்கள் தமது விளையாட்டுத் துப்பாக்கிகளோடு ஓடித்திரிய வீடு அமர்க்களமாகியிருந்தது. இளையராஜா பாடல்கள், அக்காலத்தில் எமக்குத் தெரியாமலிருந்த இன்னும் சில இசையமைப்பாளர்கள் , அநிருத்தின் சிட்னி இசை நிகழ்ச்சி என்று ஆரம்பித்து சில படங்கள் குறித்த விமர்சனம் என்று நீண்டு, அரசியலுக்குள் நுழைந்தது சம்பாஷணை. அங்கிருந்தவர்களில் பல தரப்பினர் இருந்தனர். புலிகளை ஆதரிப்பவர்கள், நடுநிலையாளர்கள், விமர்சிப்பவர்கள் என்று மூன்று வகையினர். நடுநிலைவாதிகள் அநேகமான வேளைகளில் அரசியலைப் பேச ஆரம்பிப்பார்கள். அங்கும் இன்றி, இங்கும் இன்றி அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். புலிகளை ஆதரிப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சிப்பவர்கள் எப்போதாவது சம்பாஷணையில் தமக்கான தருணங்கள் வரும்போது கலந்துகொள்வார்கள். நேற்றும் அதுதான் நடந்தது. கருணாவின் பிளவு குறித்து ஆரம்பித்த சம்பாஷணை, டி.பி.எஸ்.ஜெயராஜ் குறித்து நீண்டபோது, அவர் அணமையில் கொழும்பு டெயிலி மிரர் பத்திரிக்கையில் எழுதிய "கிழக்கை இழந்த கருணாவும், ஈழத்தைப் பறிகொடுத்த பிரபாகரனும்" என்கிற கட்டுரை குறித்து பேசப்பட்டபோது, நான் தலைப்பைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன் என்று கூறவும் நடுநிலைவாதியான ஒருவர், "அது எப்படி கடந்து செல்வீர்கள்? உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே விமர்சிப்பீர்களா? தலைவர் கூட இறுதிவரை அவரது கட்டுரைகளை இன்னொருவர் மொழிபெயர்க்க அறிந்துகொண்டுதான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். நானோ, "அவர் புலிகள் குறித்து அவதூறாகவே எழுதிவருகிறார், அவரின் வாசகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களே, அவர்களை மகிழ்விக்கவே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுகிறார்" என்று கூறினேன். இதில் மெதுவாக சம்பாஷணை சூடேறத் தொடங்கியிருந்தது. இடையிடையே சிலர் இதுகுறித்த தமது கருத்துக்களை கூறினார்கள். இடையில் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, நாவற்குழியில் கட்டப்பட்டிருக்கும் விகாரை பற்றியும் பேசினார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளைவிற்குப் பின்னால் தெரிவது பெளத்தர்களின் விகாரை என்று அவர் கூறி வேதனைப்படும்போது, உண்மைதான், அங்கு கிட்டத்தட்ட 148 சிங்களக் குடும்பங்களும் குடியேறியிருக்கிறார்கள் என்றுய் கேள்விப்பட்டேன் என்று கூறினேன். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. டி.பி.எஸ்.ஜெயராஜின் அபிமானியான அவர், "சிங்களவர்கள் 83 இற்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், அரச வேலைகள், தனியார் வேலைகள், வியாபாரங்கள் என்று வாழ்ந்தவர்கள், அவர்கள் மீள யாழ்ப்பாணத்திற்கு வருவதில் ஒரு பிரச்சினையுமில்லை. சண்டை ஆரம்பித்ததால் விட்டுச் சென்றவர்கள், தற்போது வருகிறார்கள். நீங்கள் கொழும்பில் சென்று வாழ்வதில்லையா? அதுபோலத்தான் அவர்களும் வடக்குக் கிழக்கில் வாழ்கிறார்கள்" என்று கூறினார். எனக்கு அது சரியென்று படவில்லை. "கொழும்பில் சிங்களவர்கள் கூறும் விலைக்கு அதிகமாகக் கொடுத்து, காணிகளை வாங்கி வீடுகளை கட்டுவதும், வாங்குவதும், வடக்குக் கிழக்கில் அரச இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்றுவிட்டோ, அடித்துத் துரத்திவிட்டோ அடாத்தாகக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறுவதும் ஒன்றா? சிங்களக் குடியேற்றவாதிகளை ஆயுதமயப்படுத்தி, கூடவே பாதுகாப்பிற்கென்று இராணுவ முகாம்களையும் அமைத்து, சிறுகச் சிறுக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதும், தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்றா? கொழும்பில் புலிகள் முகாம் அமைத்துத் தமிழர்களை ஆயுததாரிகளாக்கி, சிங்களவர்களை கொன்றோ அல்லது விரட்டியோ ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்களா? என்று சற்றுச் சூடாகவே கேட்டுவிட்டேன். அவர் மெளனமாகிவிட்டார். எதுவும் பேசவில்லை. "நான் கூறவந்ததைக் கேட்காமலேயே நீங்கள் டென்ஷன் ஆகிவிட்டீர்கள்" என்று மட்டும் கூறினார். ஆத்திரப்பட்டதற்காக வருந்தினேன். ஆனால், இக்கேள்வி அடிக்கடி நடுநிலைவாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இவர்கள் கேட்பது தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்திவிடுவதாக எனக்குப் படுகிறது. இந்த வேறுபாட்டினை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போனது எங்கணம்? இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?
    7 points
  27. ஒருவரது மரணத்தை கண்ட பின் தான் இந்தியா இவர்களையாவது விடுவித்திருக்கிறது..அந்த வகையில் இவர்கள் விடுதலைக்காக உழைத்த அனைத்து தரப்பினர்களுக்கும் நன்றிகள்..இனிமேலாவது இவர்களை நின்மதியாக வாழ விட வேண்டும்..இந்த மீடியாக்கள் மற்றும் யூருப்பர்ஸ் இவர்களது மிகுதி கால நலன் கருதியாவது இந்த உறவுகளை தொந்தரவு செய்யாது வாழ விடுங்கள்.🙏
    7 points
  28. "என் இறுதி சடங்கில்" "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதையில் தவழ்ந்து முட்டாளாய் வாழாதே மரணத்தை நினைத்து அஞ்சியும் சாகாதே" "நான் தீயில் சங்கமிக்கும் பொழுது நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது நான் என்னை சற்று பார்த்தேன் நாமம் அற்ற சடலமாக கண்டேன்" "உறவினர் நண்பர்கள் முகங்களைப் பார்த்தேன் உவகை இழந்த சிலரை கண்டேன் உறக்கம் துறந்த பிள்ளைகளை கண்டேன் உரிமை காட்டிட வந்தோரையும் கண்டேன்" "உடம்பு கெட்டால் உயிருக்கு மரியாதையில்லை உயிர் பிரிந்தால் உடம்புக்கு மரியாதையில்லை உலகத்தை விட்டு நான் போகும்தருவாயில் உண்மையை நான் இன்று அறிகிறேன்" "காமம் தெளித்த உடலும் படுத்திட்டு காதல் தந்த மனதும் உறங்கிற்று காதற்ற ஊசியும் வர மறுக்குது காலனின் வருகையால் எல்லாம் தொலைந்திட்டு" "என் பிள்ளைகளிடம் ஒன்று கேட்கிறேன் என் பெயரை மறக்க வேண்டாம் என் பெயர் எம் அடையாளம் எங்கள் இருப்பு இனத்தின் வாழ்வு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
    7 points
  29. கனடாவில் கார் களவு.-_ அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன். நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ. எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம். சரி என்று கனடா(மிசிசாக்குவா) போனால் ஸ்ரேறிங் லொக் வைத்திருக்கிறீங்களோ?இஞ்சை கார் களவு சரியான மோசம். பொலிஸ்காரனே சொல்லுறான் வீட்டை உடைத்து கார் திறப்பு கேக்கிறாங்கள்.கார் திறப்புகளை முன்னுக்கே வையுங்கோ என்று. இது எப்படியான பாதுகாப்பென்றே விழங்கவில்லை. இதைவிட காருக்குள்ளேயே திறப்பை வைத்துவிட்டே வரலாமே?வீணாக உடைத்த கதவுகளை யன்னல்களையும் திருத்தத் தேவையில்லை. கனடா உறவுகளுக்கும் இதுபோல ஏதாவது நடந்ததோ? நடந்தா வெட்கப்படாம சொல்லுங்க.
    7 points
  30. பிஞ்சுக் காதல்… பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்.. மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்… மெதடித்த மாணவி.. மாதவி நடிகையின் போட்டோக் கொப்பி போற வாற இடமெல்லாம் துப்புத் துலக்கியாச்சு.. என்னவென்று தொடங்குவது அய்டியாவையும் தந்தான் அந்தப் பாவிமகன் முதலில் வெற்றுத் தாளை கசக்கி காலடியில் போடு.. எடுத்தால் வெற்றி உனக்கென்றான்…. காலால் மிதிபட்டு கதியால் வேலிக்குள் கிடந்தது காகிதக் கசக்கல்… மூளையை கசக்கி பிழிந்து எப்பிடியோ பிறந்த நாள் கண்டு பிடிச்சிட்டம்.. பரிசு கொடுக்கும் அய்டியா.. பொடிநடையாய் நடந்து திருமகள் கடையில் கே.ஜி பேனையும் வாங்கியாச்சு… காலடியிலும்….போட்டு கையாலும் எடுத்துவிட்டது பிகர் இனி லைன் கிளீயர்.. அடுத்து ..கைக்குட்டை குடுக்கிற பிளான் நல்ல லேஞ்சி வாங்க நெல்லியடியில் அலைஞ்சு கண்மணியின் கையிலை கொடுத்து ஐ.லவ் யூவும் சொல்லியாச்சு… பதில் சிரிப்பே தவிர…. நோ ...வாய் மொழி… லேஞ்சி கொடுத்தால் காதல் முறியும்..என்பதை லேட்டாத்தான் வாசியாலை பேப்பரிலை…பார்த்தம் சாத்திரம் உண்மைதான்.. இரண்டாம்நாள் இன்னொருவர் மூலம் என் கையில் பேனாவும் லேஞ்சியும்.. ஏனாம் ஏற்கனவே அவவுக்கு லவ்வு இருக்காம்… அப்ப ஏன்… அவரு பசையுள்ள ஆளாம்.. நான்.. கே ஜீ ப்பேனைக்கும் லேஞ்சிக்கும் கடன் பட்ட ஆள்தானே…. எப்படி நான் மாதவிக்கு வலைவிரிக்க மூடியும் காதல் தோல்வியில் தாடி வளர்த்து வாழ்வே மாயம் பாடுவமென்றால் எட்டாம் வகுப்பு படிக்கிற எனக்கு தாடியும் வளருமோ மீசையும் வளருமோ… பிஞ்சுக்காதல்…இல்லை இது பிறரைப் பார்த்து ஆசைப்பட்ட நப்பாசை…. கூடா நட்பால் வந்தவினை பூவரசம் கம்பால் வாங்கித் தெளிந்து.. கொழும்புக்கு பெட்டி கட்டினதுதான்…மிச்சம் (கற் பனையன்றி வேறொன்றுமில்லை)
    7 points
  31. காந்தி கணக்கு ------------------------- 'ஓஷோவைத் தெரியுமா?' அந்தப் பெயரில் ஒரு ஆள் இந்தச் சுற்று வட்டாரத்தில், இந்தக் கூட்டத்தில், என்னுடைய இருபதுக்கும் மேலான வருட பழக்கத்தில் இருந்ததாக ஞாபகம் இல்லை. கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் இப்படி எந்த விளையாட்டிலும் இந்தப் பெயரில் எவரையும் நினைவில் இல்லை. 'ஓஷோ என்ன விளையாடுகிறவர்?' 'இல்லை, இல்லை, ஓஷோ விளையாடுகிறவர் இல்லை. ஓஷோ ஆசிரமம் வைத்திருந்தார். தாடி வைத்திருந்தார். தத்துவப் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.....' அந்த ஓஷோவா, அந்த தாடி வைத்த ஓஷோ இங்கே இப்பொழுது எதற்காக வருகின்றார் என்று முன்னுக்கு நின்ற புதிய பஞ்சாபி நண்பரை உற்றுப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த பஞ்சாபி நண்பர்கள் ட்ரக் ஓடுவார்கள், பெரிய தோட்டங்கள் செய்வார்கள், எல்லா விளையாட்டுகளிலும் அசத்துவார்கள். இரவில் நித்திரைக்குப் போகும் முன் தவறாமல் ஒரு கலன் பால் குடிப்பார்கள். இதைவிட மகாத்மா காந்தியைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டுவார்கள். இல்லையப்பா, அவர் அது செய்யவில்லை என்று நான் காந்திக்காக ஒவ்வொரு முறையும் ஆஜராகி, அந்த வழக்கு இன்னும் ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. ஓஷோவைப் பற்றிய விசாரணை இதுவே முதல் தடவை. ஜலியான்வாலா பாக் படுகொலை, பகத்சிங் அவர்களின் தூக்கு தண்டனை மற்றும் இன்னும் சில விடயங்களால் காந்திக்கும் சீக்கியர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்து வருகின்றது. காந்தி காலனிய ஆட்சியாளர்களை கண்டிக்காதது மட்டும் இல்லாமல், வெள்ளை இன ஆட்சியாளர்களுக்கு இந்த விடயங்களில் ஆதரவாக இருந்தார் என்ற கோபம் சீக்கிய மக்களிடையே சாம்பல் மூடிய தணலாக இன்றும் தகித்துக் கொண்டிருக்கின்றது. 'ஆ, தெரியும் ஓஷோவை. சில புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன்.......' ஓஷோவைப் பற்றித் தொடர்ந்தார் புதிய நண்பர். ஓஷோ வாழ்க்கையை அனுபவிக்க சொல்லியிருக்கின்றார், அழகை ரசிக்க சொல்லியிருக்கின்றார், சிரிக்கச் சொல்லியிருக்கின்றார், சிந்திக்கத் தேவையில்லை என்றிருக்கின்றார், இப்படியே வரிசை நீண்டது. நண்பருக்குத் தெளிவான ஆங்கிலம், மன்மோகன்சிங் குடும்பமாக இருப்பாரோ என்றும் ஒரு நினைப்பு வந்தது. 'எங்கேயும் எப்போதும் எப்படி இருந்தாலும், ஆனந்தமாய் இருங்கள்' என்று ஓஷோ சொல்லியிருக்கின்றார் என்றார் புதிய நண்பர். 'மகனே, இப்ப நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் உங்கள் அணி தோற்றால், நீங்கள் நடுவரை படுத்தப் போகும் பாடு இருக்குதே, அது தான் உங்களின் ஆனந்தம்' என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன். விளையாட்டில், போட்டியில் தோற்பவர்கள் முதலில் நடுவரைத்தான் குற்றம் சொல்வார்கள், அது கிட்டத்தட்ட ஒரு பொதுவான உலக வழக்காக ஆகிவிட்டது. 'அங்கே பார்' என்றார். அவர் காட்டின திசையில் ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தார். கோடைகால இரவு, இன்னும் வெக்கை குறையாத நேரம், அந்தப் பெண் மிகக்குறைந்த, கண்டிப்பாகத் தேவையான உடைத் துண்டுகள் மட்டுமே அணிந்திருந்தார். நண்பர் பார்த்துக் கொண்டேயிருந்தார். தன்னையும் மறந்து, என்னையும் மறந்து விட்டார். நண்பரை மெதுவாகத் தட்டினேன். 'என்ன......' என்று திரும்பினார். 'மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?' என்று கேட்டேன்........ ஓஷோவாலும் காந்தியை காப்பாற்ற முடியவில்லை. சில ரணங்கள் தலைமுறைகள் தாண்டியும், தத்துவங்கள் தாண்டியும் காயாமல் காயமாகவே நீடிக்கும் போல.
    7 points
  32. ஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூப்பக்கற், பிஸ்கட் இப்படி கண்டதை எல்லாம் வாங்கி நிரப்பி அதிலும் கிலோ கூடி ஒரு நான்கு கிலோ சொக்ளற்றும் மடிக் கணனியும் மகளிடன் திரும்பக் கொடுத்து ஒருவாறு விமானத்தில் ஏறி அமர்ந்தாயிற்று. மிகப் பெரிய விமானத்துள் ஆயிரம் பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். வலது பக்கமாக உணவு கொடுத்து முடிந்த பின் ஒரு மணி நேரத்தின் பின்னரே எமக்கான உணவு வந்து சேர்ந்தது. பக்கத்து இருக்கைக்கு உணவு வரும்போது வயிறும் மனமும் தயாரானாலும் உணவு வராத கடுப்பும் ஏமாற்றமும் சேர்ந்து இன்னும் பசியை அதிகரிக்க நன்றி கூடச் சொல்லாமல் உணவை வாங்கி உண்டு கோபத்தைக் குறைத்துக்கொண்டேன். முன்னர் எமிரேட்ஸின் கவனிப்பு மிகையாகவும் உணவும் தரமாக இருக்கும். இம்முறை மிகுந்த ஏமாற்றம்தான். இம்முறை எனது தம்பியும் எம்முடன் வந்திருந்தான். அவன் 39 ஆண்டுகளாக தாயகம் செல்லவில்லை. முன்னர் ஆனையிறவில் கைதாகி ஒருவாரம் சிறையில் இருந்தவன். தடைசெய்யப்பட்ட பட்டியலில் அப்பாவின் பெயர் போட்டபோது இலங்கை பாதுகாப்புப் பிரிவினரின் இணையத்தளத்தில் அவனும் நானும் லண்டனில் இருக்கிறோம் என்பது வரை பெயர் விபரங்களுடன் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததில் இருந்து அந்தப் பக்கமே போகமாட்டேன் என்று இருந்தவனை, நான் உன்னோடு வாறன். எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்ளுவன் என்னும் நம்பிக்கையில் என்னோடு வந்திருந்தான். விமானத்தை விட்டு இறங்கி ஒன்லைன் விசாப் படிவத்தைக் காட்டி எனக்கும் கணவருக்கும் ஒருமாத விசா வழங்கியபின்னும் எமக்கு முன்னால் போனவனை நிறுத்திவைத்துவிட்டு உள்ளே ஒரு அறைக்கு அழைத்துப் போக நானும் கணவரும் சேர்ந்தே போக, எம்மை இருக்கச் சொல்லிவிட்டு தம்பியை மட்டும் அழைத்து அவனின் பாஸ்ட்டை திரும்பத்திரும்பப் பார்ப்பதும் வெளியே போவதும் வருவதுமாக இருக்க, எதனால் பிந்துகிறது என்கிறேன். “இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா” அது அவனிடம் இல்லை என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாது “எதற்காக நாம் பழைய கடவுச் சீட்டை கொண்டுவரப் போகிறோம்” என்கிறேன். கணவர் காதுக்குள் கொஞ்சம் நைசா கதை என்கிறார். “அது இல்லாமல் இவர் எப்பிடி இந்த நாட்டை விட்டுப் போனார் என்று எங்களுக்குத் தெரியணும் இல்லையா. அதோட இத்தனைகாலம் ஏன் வரவில்லை” என்கிறார். உடனே நான் “எங்கள் குடும்பத்தவர் எல்லோருமே வெளிநாட்டில் தான். அதனால் தம்பி வரவில்லை. இம்முறை எமது ஊரையும் நாட்டையும் பார்க்கத்தான் வந்தவன்” என்கிறேன். “இந்த நாட்டை விட்டுப் போறவைக்கு இங்க பதிவிருக்கோணும்” “இதுக்கு முதல் நிறையப்பேர் பதிவே இல்லாமல் வந்திருக்கினமே” “அது முந்தி. இப்ப கட்டாயம் பதிவு இருக்கவேணும்” நான் எதுவும் பேசாமல் இருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் அவர் கணனியைப் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பொறுமை போகிறது. “எங்களை அழைத்துப் போக வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்” “இவரை நாங்கள் வடிவா விசாரிக்க வேணும். ஒரு ஐந்து ஆறு மணித்தியாலம் செல்லும்” “சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள்” நான் இறங்கிப் போய் கேட்கிறேன். அவமானமாக இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. “கொஞ்சம் பொறுங்க” என்றுவிட்டு யாருக்கோ போன் செய்ய ஒருவன் வருகிறான். பார்த்தால் தமிழன் போல இருந்தாலும் ஆங்கிலத்தில் கதைக்கிறான். இதில யார் கூட கதைக்கிறது என்கிறான். என்னோடு கதையுங்கள் என்று நான் கூற “வாங்க” என்று தமிழில் சொல்ல நான் எழுந்து செல்கிறேன். அறைக்கு வெளியே வந்ததும் கொஞ்சம் பணம் கொடுத்தா எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்கிறான். நாங்கள் லீகலா விசா எடுத்துத்தானே வந்தது என்கிறேன். “எவ்வளவு வச்சிருக்கிறீங்க” என்கிறான். நாம் பணம் ஒன்றும் கொண்டுவரவில்லை. பாங்க் காட் தான் இருக்கு என்கிறேன். “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” நான் கணவரிடம் சென்று காட்டை எடுத்துக்கொண்டு வர, என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வெளியே இருக்கும் ATM இல் பணம் எடுத்தபின் உள்ளே அழைத்து வர அறைக்குள் போக முன்னரே பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் கூற அவர் உடனே தம்பியின் கடவுச் சீட்டை அவனிடம் கொடுக்க அவனே எம்மை அழைத்துச் சென்று தம்பிக்கு விசாவைக் குத்தி வெளியே விடுகிறான். கோபம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையை எண்ணி மனதை அடக்கிக்கொண்டு வெளியே வர வேறு வழியில்லை என்று மனம் தெளிகிறது. எமக்காக வந்த வான் ஓட்டுனர் வெளியே காத்திருக்க மனம் நிம்மதியடைகிறது. போன இரண்டு நாட்களில் நெருங்கிய உறவினர்களிடம் சென்று பின் எமது வீட்டை சுற்றி கமரா பூட்டி, எனது செடிகளுக்கு சொட்டுநீர் பாசனக் குழாய்கள் பூட்டி முடிய ஒன்றரை வாரங்கள் போய்விட, அதன்பின்னர்தான் இந்தியா போனால் அந்த வங்கி அலுவலையும் ஒருக்காப் பார்க்கலாம் என்று நான் நினைவுபடுத்த, சரி நானும் வாறன். எனக்கும் சேர்த்து டிக்கற் போடு என்று மனிசன் சொல்ல எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பலாலியால் போவோமா என்று மனிசன் கேட்க, கொழும்பு போய் போவதே அதிக கிலோ கொண்டு வரலாம் என்கிறேன். பாலாலியால் போனவர்கள் உளவு இயந்திரத்தில் போனதுபோல் இருந்ததாகக் கூறியதும் ஒரு காரணம். அடுத்த நாளே விமானச் சீட்டுப் பெற்றுக்கொண்டதும் அடுத்த மூன்று நாட்களில் சென்னை செல்ல ஆயத்தம் ஆயாச்சு. ஒருவருக்கு போகவர 69 ஆயிரம் ரூபாய்கள். ஒன்லைனில் சென்னை T நகரில் ஒரு நாளுக்கு 3000 இந்திய ரூபாய்களுக்கு கோட்டல் புக் செய்து ஒருவாறு போய் இறங்கியாச்சு. அந்தக் கோட்டலுக்கு அண்மையில் சில உணவகங்களும் இருந்ததில் மூன்று நேரமும் மிகச் சுவையான உணவுகள் உண்டுவிட்டு கடைகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஒன்றுக்கு இரண்டு தேநீரும் குடித்துவிட்டு மனநிறைவுடன் இரவு ஏசியைப் போட்டுவிட்டுப் படுத்தால், சிறிது நேரத்தில் கால் கைகளில் கடி. மூட்டைப் பூச்சியாக்குமென்று துடித்துப் பதைத்து எழுந்தால் சில நுளம்புகள் பறக்கின்றன. இரவு பத்துமணி. இந்த நேரத்தில் எங்கே வேறு இடம் மாறுவது? ஏசியைக் கூட்டி விடுறன். உது மொத்தப் போர்வை தானே. இழுத்துப் போர்த்திக்கொண்டு படு என்கிறார் கணவர். பிரையாணக் களைப்பில் ஒருவாறு தூங்கி காலை எழுந்து பல் விளக்கக் குளியலறைக்குச் சென்றால் கண்ணாடியில் தெரிந்த என் முகத்தைப் பார்த்து நானே பயந்துவிட்டேன்.
    7 points
  33. இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    6 points
  34. தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்- #பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம். அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும். அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்கி - ஊசி சப்ளையை கிட்டதட்ட இல்லை என்ற அளவுக்கு ஆக்கி விடப்போகிறார்கள்.
    6 points
  35. எந்த அரசியல்வாதியின் உதவியும் இல்லாமல், ஒரு தனிமனிதன்+ ஊரவர்கள் சேர்ந்து மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் கட்டி எழுப்பியுள்ள turf மைதானம். இப்போ இதில் சர்வதேச போட்டிகளை நடத்த இலங்கை கிரிகெட் சபையை அணுகியுள்ளார்கள். யாழில் இல்லாத புலம்பெயர் தனவந்தர்களா? கொமிசன்-வாதிகளை 30 வருடமாக நம்பி கொண்டிராமல் இப்படி முயலலாம்.
    6 points
  36. தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை இந்தப் பெண் குறித்து நான் நேற்றுவரை அறிந்திருக்கவில்லை. இப்படியொருவர் இருப்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நேற்று இத்தாலியில் இருந்து எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பேசும்போது, "அண்ணா, சுஜிக்கு விழுந்த அடி பாத்தனீங்களோ? அவளின்ர வாய்க்கு நல்லா வேண்டிக் கட்டியிருக்கிறாள்" என்று கூறவும், யார் சுஜி என்று கேட்டேன். "உங்களுக்குத் தெரியாதே? அவளின்ர வீடியோக்களைக் காது குடுத்துக் கேக்க முடியாது. அவ்வளவும் தூஷணம். நான் இப்படி தூஷணங்களை வாழ்நாளில கேட்டிருக்க மாட்டன், அதுவும் ஒரு தமிழ்ப் பெண் பேசுவாளென்டு கனவிலையும் நினைக்கையில்லை. அனுப்பிவிடுறன், பாருங்கோ" என்று சொல்லவும், சரி பார்க்கிறேன் என்று கூறினேன். தலைவர் குறித்தும், போராளிகள், மாவீரர்கள் குறித்தும் அவதூறு பேசுவோரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஓரளவிற்கு என்ன பேசுவார்கள் என்பது குறித்த அனுமானமும் எனக்கு ஓரளவிற்கு இருந்தமையினால், இவள் புதிதாக என்னதான் பேசிவிடப்போகிறாள் என்று, மனதைக் கல்லாக்கிக்கொண்டு பார்க்கத் தொடங்கினேன். இன்ஸ்ட்ரகிராம் தளமாக இருக்கவேண்டும். நேரடியாக தனது முகத்தைக் காட்டிக்கொண்டு, துணைக்கு ஒரு மூன்று அல்லது நான்கு நபர்களை நேரலையில் அழைத்து வைத்துக்கொண்டு தலைவரைப் பற்றியும், மாவீரர் பற்றியும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தூஷண வார்த்தைகளால் இடைவிடாது திட்டுகிறாள். மகிந்தவையும், சிங்கள இராணுவத்தையும் அடிக்கொருமுறை போற்றும் இவள், தமிழருக்கென்று நாடு கிடைக்கக் கூடாதென்பதை மிகவும் ஆணித்தரமாகக் கூறுகிறாள். தனது நேரலைக் கருத்துக்களை கேட்பவர்களும் தொலைபேசியில் பேசலாம் என்று கூறிவிட்டு, அப்படி வந்து அவளது கருத்துக்களை விமர்சிப்பவர்களை மிகவும் கீழ்த்தரமாக, அவர்களின் தாயை, தங்கையை, அக்காவை வைத்து செவிகொடுத்துக் கேட்கமுடியாதளவிற்கு வைகிறாள். ஒருகட்டத்தில் "உனது தாயை....... பண்ணுவதற்கு இப்போதே ஆமிக்காரர் கொஞ்சப்பேரை அனுப்புகிறேன், பாக்கிறியாடா?" என்றும், "நீ இருக்கிற இடத்தைச் சொல்லுடா, இப்பவே மகிந்தவின்ர ஆமியை அனுப்பி உனக்கு .... அடிக்கிறேன்" என்றும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தொடர்ந்தும் பேசுகிறாள். இவளது கருத்துக்களை மறுதலித்து, இவளின் நோக்கத்தை வெளிப்படுத்த முனைந்தவர்களை உடனடியாக நேரலையில் இருந்து தடுத்து, மற்றையவர்களை விவாதத்திற்கு அழைக்கிறாள். இவளுக்கு ஆதரவாக நேரலயில் பேசும் ஒரு சிலரும் அவளைப்போன்றே தமிழர்களை ஒரு இனமாக கொச்சைப்படுத்தி வருகிறார்கள். "கருணாவைக் கூப்பிடட்டுமாடா? அவன் வந்து உங்களுக்கெல்லாம் இன்னொருக்கா ...அடிக்கச் சொல்லவாடா?" என்று இன்னொரு கருத்தாளரிடம் அட்டகாசமாகச் சொல்கிறாள். பிரான்ஸ் நாட்டின் பரீசில் இருக்கலாம் என்று நம்பப்படும் இவள் சில நாட்களுக்கு முன்னர் தன்னை எவரும் அடையாளம் காண்மாட்டார்கள் என்கிற துணிவில் லா சப்பல் எனும் பகுதியூடாக நடைபவணியில் செல்லும்போது ஒரு தமிழ் இளைஞர் இவளைப் பார்த்துவிடுகிறார். அவளருகில் சென்று "நீதானே தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திப் பேசுபவள்?" என்று கேட்கவும் அதே வைராக்கியத்துடன், "என்னடா செய்யப்போகிறாய், நான் அப்படித்தான் சொல்லுவன்டா" என்று ஆரம்பிக்கிறாள். இவர்களுக்கிடையிலான வாக்குவாதம் வீதியில் நடந்துசென்ற இன்னும் பல தமிழர்களை ஈர்க்கவே அவர்களும் அவளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இதனையடுத்து அவளைச் சுற்றிவளைத்த தமிழ் இளைஞர்கள், அவளை நோக்கி மிகுந்த ஆத்திரத்துடன் கேள்விகளை முன்வைக்க அவளும் பதிலுக்குப் பேச எத்தனிக்கிறாள். இந்தவேளையில் "என்ர அம்மா உனக்கு வேசியாடி?" என்று ஒரு இளைஞர் அவளைக் கேட்டுக்கொண்டே அவளது முகத்தில் முதலாவதாக அறைகிறார். நிலைகுலைந்து போன அவள், தனது குரலை அடக்கிக்கொண்டு, "அண்ணா, இங்க பாருங்க.." என்று தனது அகம்பாவம் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு ஒதுங்கப் பார்க்கிறாள். ஆனால், அவளை விடாது தொடர்ந்த இளைஞர்கள் மூன்று நான்கு முறை அறைகிறார்கள். பயம் பற்றிக்கொள்ளவே, வீதியில் இருந்த கடையொன்றிற்குள் நுழைய அவள் எத்தனித்தபோதும், கடை உரிமையாளரான தமிழர், "இஞ்சை வரவேண்டாம், வெளியால போ" என்று கூறி கதவைத் திறக்க மறுக்கிறார். கடை இடுக்கில் மாட்டிக்கொண்ட அவளை இளைஞர்கள் சூழ்ந்து நின்று மீண்டும் கேள்வி கேட்கின்றனர். இடையே வீதியால் சென்ற இன்னொரு இளைஞர் தான் கொண்டுவந்த முட்டையை அவள் முகத்தின்மீது எறிய, அவளது அச்சம் அதிகரிக்க ஒடுங்கியபடியே நிற்க, இரண்டாவது முட்டையும் வீசப்படுகிறது. தமிழ் இளைஞர்களிடமிருந்து தப்பிக்க வேறு வழியின்றி, "எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, அடிக்க வேணாம்" என்று வயிற்றைக் காட்டிக் கெஞ்சவும், கூட்டத்தில் இருந்த ஒரு தமிழர், "பொம்பிளையடா, அடிக்காதையுங்கோ, விடுங்கோ, சுஜி, நீ தலைவற்ற படத்தை உன்ர இன்ஸ்ட்டகிராமில் காட்டிக்கொண்டு அவரைக் கொச்சைப்படுத்துறது நிப்பாட்டு, இனிமேல் தலைவரைப் பற்றியும், போராட்டத்தைப் பற்றியும் பேசக்கூடாது" என்று கேட்க, அருகிலிருந்த இளைஞர், "ஏன் அண்ணா இவளிட்டை போய்க் கெஞ்சிறியள்? இவள் செய்த வேலைக்கு ஏன் கெஞ்சுறியள்" என்று ஆத்திரத்துடன் கேட்கிறார். இந்தச் சம்பவத்தை அருகில் நின்ற பலரும் தமது கையடக்கத் தொலைபேசிகளில் படமாக்கியிருக்கிறார்கள். யூ டியூப், முகப்புத்தகம் என்பவற்றில் ஒவ்வொரு கோணத்தில் இவளின் அகம்பாவம் உடைக்கப்படும் ஒளிப்படங்கள் வலம் வருகின்றன. குறிப்பு :இவள் பேசும் தமிழ் மொழியின் உச்சரிப்பு தமிழர் தாயகத்திற்குச் சொந்தமனாதல்ல. முழுக்க முழுக்க கொழும்புத் தமிழ் . அவளே, "நான் கொழும்புத் தமிழடா, உங்கட தமிழ் இல்லடா" என்றே தன்னை அறிமுகப்படுத்துகிறாள். இவளது வீடியோக்களை நான் இணைக்கவில்லை. வேண்டுமானால் தேடிப்பாருங்கள். விசுகு அண்ணை, உங்களுக்கு இதுகுறித்து ஏதாச்சும் தெரியுமோ?
    6 points
  37. தேனும் விஷமும் ------------------------------ நண்பன் ஒருவர் ஒரு சந்தியின் முப்பது வினாடிகள் காட்சி ஒன்றை அனுப்பியிருந்தார். நண்பன் அயலூர் தான் என்றாலும், இப்பொழுது தான் இந்தச் சந்திக்கு முதன் முதலாகப் போயிருப்பதாகச் சொன்னார். எந்தச் சந்தியும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களினதும், கதைகளினதும் களம். 'எப்படியும் சந்திக்கு வந்திடும்', 'சந்தி சிரிக்கும்', 'கடைசியாக சந்தியில் தான் நிற்கப் போகின்றாய்' என்ற அடைமொழிகளுடன் சாகாவரம் பெற்று நிற்கும் சாட்சி சந்திகள். நண்பனின் சந்திக் காட்சி ஆரம்பிக்கும் இடத்தில், குமார் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற அன்று, 1976 அல்லது 1977 அல்லது அந்த ஆண்டுகளில் ஒரு நாள், இராணுவம் வரிசையில் நின்றிருந்தார்கள். இராணுவ வரிசைக்கு நடுவில் பயத்தில் உதறி உதறி வீடு போய்ச் சேர்ந்தது அப்படியே நினைவில் இருக்கின்றது. இராணுவத்தின் மீதான பயமும், வெறுப்பும் ஆரம்பித்த இடம் இந்தச் சந்தி. அயலூரில் நடந்த ஒரு உதைபந்தாட்ட போட்டியில் எங்கள் அணியினரை அயல் ஊரவர்கள் அடித்து விட்டார்கள் என்று ஒரு நாள் திடுமென பலர் இந்தச் சந்தியில் கூடினர். நின்றவர்கள் சில வாகனங்களில் ஏறினர். ஒருவரின் கைக்குள் வெள்ளியாக மினுங்கும் ஒரு பொருள் இருந்தது. போகும் வழியில் யாரோ இவர்களை தடுத்து நிற்பாட்டியிருக்க வேண்டும், அன்று அறிந்தவரையில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அதே இடத்தில் தான் சந்தி வாசிகசாலை, இன்னமும் இருக்கின்றது. ஊர் முழுக்க வாசிகசாலைகள் இருந்தாலும், இந்த வாசிகசாலையில் மட்டுமே டொமினிக் ஜீவா அவர்களின் 'மல்லிகை' சஞ்சிகை போட்டார்கள் என்று நினைக்கின்றேன். அந்த வயதுகளில் தெரிந்து வாசிக்கும் அறிவோ அல்லது பக்குவமோ இருக்கவில்லை. எந்தக் கல் என்றாலும் சுற்றி வந்து ஒரு கும்பிடு போடுவது போல, எல்லாம் ஒரே வாசிப்பே. தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லா பிரபல சஞ்சிகைகளும் அன்று இந்த வாசிகசாலையில் போடப்பட்டன. ஜீவாவின் அயராத முயற்சியைப் பற்றிப் பின்னர் தெரிய வந்தது. இன்று ஈழ திரை படைப்பாளிகளுக்கும், தமிழ்நாட்டு திரை படைப்பாளிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டியும் இவ்வாறானதே. இதில் போட்டியே இல்லை, போட்டியே போட முடியாது என்பது தான் அன்றைய நிலையும், இன்றைய நிலையும். பின்னர் ஒரு நாளில் கமலம் கொலை வழக்கில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவருக்கு இந்தச் சந்தியில் மரண தண்டனை வழங்கப்பட்டது. கடைசியாக அவருக்கு சிகரெட் ஒன்று கொடுக்கப்பட்டது. அருகிலிருந்தவர்கள் சுடவில்லை, சந்தியின் இன்னொரு பக்கத்திலிருந்து வேறொருவர் சுட்டார். நாங்கள் பலர் பார்த்துக் கொண்டு நின்றோம். அரசாங்கம் ஒரு நவீன சந்தையை இந்தச் சந்தியில் கட்டிக் கொடுத்தது. பின்னர் அந்த அரசாங்கமே ஒரு நாள் புதிய சந்தையின் மீது குண்டும் போட்டது. நவீன சந்தையின் கூரையும், மேல் தளமும் இடிந்து போனது. கீழ் தளத்தில் சில கடைகள் அதன் பின்னரும் இயங்கின. எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஒரு தனியார் கல்வி நிலையம் நடத்தி வந்தார். அதற்கு புதிய இடம் தயார் செய்வதற்காக சந்தையின் உடைந்த கூரையிலிருந்து நாங்கள் மரங்கள், வளைகளை எடுத்தோம். அதை ஒருவர் நகரசபைக்கு சொல்லிக் கொடுத்தார். நகரசபை விசாரணை, வாருங்கள் என்றது. நகரசபையில் வேலையில் இருந்த இன்னொருவர் எங்களைக் காப்பாற்றி விட்டார். இதுதான் சமூகம் என்றால் நாலு பேர்கள் என்பது. சந்தியின் நடுவே ஒரு பெரிய அரசமரம் நின்றது. ஒரு இயக்கத்தை இன்னொரு இயக்கம் தடை செய்த போது, இங்கே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அன்றைய தளபதி ஒருவர் அரசமரத்தின் அருகே அவரது வாகனத்தை நிற்பாட்டி, வாகனத்தின் மேல் ஏறி இருந்தார். இரண்டு இயக்கங்களுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த இடம் இந்தச் சந்தி. அது அந்தக் கூட்டத்திலும் தெரிந்தது. கூடியிருந்த கூட்டம் ஏறி இருந்த தளபதியின் கருத்துகளை ஆமோதிக்கவில்லை. கூட்டம் சத்தம் போட்டது, மனைவிமார்களும், சொந்தங்களும் அழுதனர், ஆனாலும் காணாமல் போன அண்ணன்மார்கள் என்றும் திரும்பவில்லை. உயிர்களின் வாழும் விருப்பம் நிகரற்றது. அழிவுகளின் நடுவேயும் எல்லா உயிர்களும் வாழ முயன்று கொண்டேயிருக்கும். பெரும் பூகம்பத்தின் பின்னும் வாழ்க்கைகள் இருக்கும், அதே பாதைகளில் பயணிக்கும். அழகான பெண் பிள்ளைகளின் பின்னால் இந்தச் சந்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தவர்கள், எவை நடந்தாலும், என்ன இழப்புகளின் பின்னரும், அவை முடிய முடிய, போய்க் கொண்டே இருந்தார்கள். சந்தியின் ஒரு ஓரத்தில் நாங்கள் சிலர் ஒட்டுகளில் இருப்போம். 'இப்படியே இருந்து எப்படியடா உருப்படப் போகிறீர்கள்' என்று அக்கறையுள்ள அண்ணன் ஒருவர் ஒரு தடவை கேட்டார். நல்லூரில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த பொழுது, இந்தச் சந்தியிலும் உண்ணாவிரதம் இருந்தார்கள். தலைவர் கூட ஒரு இரவு வந்து பார்த்து விட்டுப் போனதாகச் சொன்னார்கள். மற்றைய இரவுகளில் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தோம். அநேகமான நண்பர்கள், தெரிந்தவர்கள் இந்தச் சந்தியிலிருந்து தான் கடைசியாக கொழும்புவிற்கு வாகனத்தில் ஏறினர். போனவர்களில் பலர் ஒரு முறை கூட இந்தச் சந்திக்கு திரும்பி வரவேயில்லை. வர முடியாத சூழலும் கூட. நான் பல வருடங்களின் பின் அந்தச் சந்திக்கு போன பொழுது, அந்த அரசமரம் இல்லை, இப்பொழுது அதே இடத்தில் புதிதாக ஒரு அரசமரம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. பழைய நினைவுகள் என்பது தேன் தடவிய விஷம் என்று சமீபத்தில் வாசித்திருந்தேன். அது எப்படி விஷமாகும் என்று ஒரே குழப்பமாகவே இருந்தது. ஒரு முப்பது வினாடிகள் வந்த காட்சியால் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கும் நினைவுகளிலேயே தேனும், விஷமும் கலந்து தான் இருக்கின்றது.
    6 points
  38. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - சுப. சோமசுந்தரம் அவ்வப்போது ஈடுபடும் இலக்கிய வாசிப்பில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தற்செயல் நிகழ்வாக இரு வேறு இலக்கியக் கூறுகள் கண்ணில் பட்டுத் தெறித்தன. ஒன்று, ஒரே பார்வையில் இரு பொருள் கொண்ட காதலவர் நோக்கு. இன்னொன்று, ஒரே பாடலில் ஈரணிகள் அமைந்து தரும் இன்பம். ஒவ்வொன்றும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாய்த் தெரிந்தன. ஒவ்வொன்றையும் தனித்தனியே எழுதலாமே என்ற நியாயமான எண்ணம் தோன்றியது உண்மை. ஒரே கட்டுரையில் இரு கூறுகளை வைப்பதும் தலைப்புக்குப் பொருந்தி வருமே என்று உடனே அநியாயமான எண்ணம் தலை தூக்கியதால், அநியாயத்துக்கு எழுதிய கட்டுரை இது எனக் கொள்ளலாம். பார்வை ஒன்று பொருள் இரண்டு எந்த ஒரு பொருளையும் இயன்றவரை வள்ளுவப் பெருந்தகையிடம் தொடங்குவது மங்களகரமாய் அமையும் என்ற நல்ல நம்பிக்கையோ அல்லது மூடநம்பிக்கையோ மனதில் படிந்து விட்டது போலும். வள்ளுவன் காட்டும் தலைவன் தன் தலைவியின் உளக்குறிப்பை அவள் பார்வையில் அறிகிறான். "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" (குறள் 1091; அதிகாரம் : குறிப்பறிதல்; காமத்துப்பால்) பொருள் : இவளது மையுண்ட கண்ணில் (உண் கண்) - பார்வையில் - இரு பொருள்கள் (இருநோக்கு) உள்ளன. ஒன்று - என் உள்ளத்தில் காதல் - நோய் தருவது; மற்றொன்று, அந்நோய்க்கு மருந்தாவது. காதல் கொண்டோர் தமக்குள் காதல் பார்வையை பரிமாறிக் கொண்டாலும், ஏனையோர்க்கு அக்காதலை மறைத்த பொதுப்பார்வை காதலர்க்கே உரித்தானது. "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள" (குறள் 1099; அதிகாரம்: குறிப்பறிதல்; காமத்துப்பால்) (ஏது - குற்றம்; ஏதிலார் போல - குற்றமற்றவர் போல - இங்கு ஏதும் அறியாதார் போல எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும்) சீவக சிந்தாமணியின் நாயகன் சீவகன் பல்லவ நாட்டிலிருந்து ஏகி தக்க நாட்டின் தலைநகராகிய கேமமாபுரத்தை அடைகிறான். அங்கு சுபத்திரன் என்னும் வணிகன் தன் மகள் கேமசரிக்குச் சீவகன் உற்ற தலைவனாகலாம் என்ற எண்ணத்தில் சீவகனைத் தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைக்கிறான். சீவகன் அவ்வில்லத்தின் வாயிலை அடைந்த மாலைப்பொழுதில் மனையின் முற்றத்தில் பெற்றோர், உற்றார் சூழ கேமசரி யாழோடு வீற்றிருக்கிறாள். சீவகனைக் கண்டவுடன் காதல் கொள்கிறாள். தனக்கு மட்டும் காதற் பொருளை உணர்த்தி ஏனையோர்க்குக் கள்ளமில்லாத பொதுப்பொருள் உணர்த்திய அவளது பார்வைக்கு இவ்வுலகையே விலையாய்த் தரலாம் என்று பாவையவளின் பார்வை நலம் பாராட்டுகிறான் சீவகன் : "காதன்மை கண்ணுளே அடக்கிக் கண்ணெனும் தூதினாற் துணிபொருள் உணர்த்தித் தான்தமர்க்கு ஏதின்மை படக்கரந்திட்ட வாட்கண் நோக்கு ஓத நீரமுதும் உலகும் விற்குமே" (சீவக சிந்தாமணி பாடல் 1485; கேமசரியார் இலம்பகம்) (பொருள் கொள்ள வசதியாக சீர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன). பொருள் : தான் மனதில் என் மீது கொண்ட - காதலைக் (காதன்மை - காதல் தன்மை) கண்ணில் அடக்கி அந்தக் கண் எனும் தூதினால் தான் எண்ணிய - காதல் - பொருளை (துணி பொருள் - துணிந்த பொருள்) உணர்த்தி, தான் தன் சுற்றத்தார்க்குக் (தமர்க்கு) கள்ளமில்லாத பார்வை மட்டும் தெரியுமாறு (ஏதின்மை பட) - அக்காதற் பொருளை - மறைத்திட்ட (கரந்திட்ட) வாள் போன்ற அவளது கூரிய பார்வைக்கு (வாட்கண் நோக்கு), பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதையும் (ஓத நீர் அமுதும்) இந்த உலகத்தையும் விலையாய்த் தருதல் தகும் (உலகும் விற்குமே). பாடல் ஒன்று அணி இரண்டு இங்கும் தொடங்கி வைக்க வள்ளுவனைத்தானே அழைக்க வேண்டும் ! "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" (குறள் 90; அதிகாரம் : விருந்தோம்பல்) பொருள் : அனிச்ச மலரானது நாம் முகர்ந்து பார்த்த (நோக்க) அளவில் - நம் மூச்சுக்காற்றின் வெம்மையால் - வாடிவிடும் (குழையும்). அதுபோல - அவர்கள் வரவினால் - மகிழ்ச்சியைக் காட்டாத நம் பார்வையைக் (முகம் திரிந்து நோக்க) கண்டு விருந்தினர் மனம் வாடிப் போகும் (குழையும் விருந்து). மேற்கொண்ட பொருள் கோளினால் குறள் எடுத்துக்காட்டுவமை அணியின்பாற் பட்டது ('அதுபோல' என்று உவம உருபை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளதால்). இக்குறளைச் சிறியதொரு விலகலுடன் பொருள் கொள்வாரும் உண்டு. அஃதாவது, "அருகில் எடுத்து முகர்ந்து பார்த்த அளவில் அனிச்சம்பூ வாடிப் போகும். ஆனால் விருந்தினரோ, சற்றுப் பழகிய பின் என்றில்லாமல், முகம் மாறி நோக்குவதாலேயே வாடிப்போவர்" என்பதாம். இப்பொருள் கோளின்படி குறள் வேற்றுமை அணியின்பாற் பட்டது. வாடிப்போதலில் ஒற்றுமையைக் கூறி, முகர்தலும் நோக்குதலும் என்ற அளவீட்டின் படி வேற்றுமைப் படுத்துவதால் வேற்றுமை அணியானது. இரு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையைக் கூறிப் பின் வேற்றுமைப்படுத்திக் காட்டுவது வேற்றுமை அணியாம். மேற்கண்ட குறளில் வெவ்வேறு வகையில் பொருள் கொண்டமையால் இரு வேறு அணிகள் அமைந்து நின்றன. மாறாக, ஒரு பொருளுக்கே இரு வேறு அணிகள் அமையவும் காணலாம். சீவக சிந்தாமணியில் முற்சொன்னவாறு பல்லவ நாட்டிலிருந்து தக்க நாடு செல்லும் சீவகன் மலை சூழ்ந்த கானகத்தின் வழியே செல்கிறான். சுனைகளாகிய கண்களையும் சுனைகளைச் சூழ்ந்த குவளை மலர்களாகிய விழிகளையும் கொண்ட மலையாகிய மங்கை கானகத்தின் வழியே வரும் சீவகனின் துன்பம் கண்டு இரங்கி அழுவது போல மலையருவி வீழ்வதாய்த் திருத்தக்க தேவர் (சீவக சிந்தாமணி ஆக்கியோர்) பாடுகிறார். சுனைகளாகிய கண்கள், குவளையாகிய விழிகள் என்றெல்லாம் உருவகித்ததால் அங்கு உருவகவணி ஆளுமை கொண்டது. அம்மலைசூழ் கானகத்தில் இயற்கையான நிகழ்வில் புலவர் தம் (கதைக்கான) குறிப்பை ஏற்றியதால் தற்குறிப்பேற்ற அணியானது. "சுனைகள் கண்க ளாகச் சூழ்ந்த குவளை விழியாவனைய லாகா வுருவ நோக்கி மைந்தற் கிரங்கிஇனைவ போலும் வரையின் னருவி யினிதி னாடிநனைகொள் போது வேய்ந்து நாதற் பாடு கின்றான்" (சீவக சிந்தாமணி பாடல் 1417; கேமசரியார் இலம்பகம்) பொருள் : சுனைகள் கண்களாக - சுனைகளாகிய கண்களைக் கொண்டு; சூழ்ந்த குவளை விழியா - (சுனைகளைச்) சூழ்ந்த குவளை மலர்களாகிய விழிகளைக் கொண்டு; வனையலாகா உருவ நோக்கி - (சிற்பியால்) வடிக்க இயலாத (சீவகனின் பொலிவான) உருவம் நோக்கி; மைந்தர்க்கு - வீரனாகிய சீவகனுக்கு; இரங்கி - இரக்கமுற்று; இனைவ போலும் - அழுவது போன்ற; வரையின் அருவி - மலையின் அருவியில்; இனிது ஆடி - இனிமையாய் நீராடி; நனைகொள் போது - தேனில் நனைந்த மலர்களை; வேய்ந்து - தூவி; நாதற் பாடுகின்றான் - அருகனாகிய நாதனைப் போற்றிப் பாடுகின்றான். வஞ்சப்புகழ்ச்சி அணியை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். அறியாதவர்களும் அதனை அன்றாட வாழ்க்கையில் அனாயசமாகப் பயன்படுத்துவர். அவ்வணியில் இரண்டு வகை உண்டு - புகழ்வது போல் இகழ்தல், இகழ்வது போல் புகழ்தல் என்பன. ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறு பாடல்களில் எடுத்தாளப்படுவதுண்டு. இரண்டும் ஒரே பாடலில் அமைந்து இன்பம் பயப்பது அருகி வருவது. அவ்வாறான புறநானூற்றுப் பாடலொன்றில் புலவரான கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் (!), பாடல் பெறும் சோழன் கடுமான் கிள்ளியை இகழ்வது போல் புகழவும், அவர்தம் பகைவரைப் புகழ்வது போல் இகழவும் காணலாம். "நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு, கேள்விக்கு இனியை, கட்கின் னாயே! அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின், ஊறுஅறியா மெய் யாக்கை யொடு, கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே! அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்; ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி! நின்னை வியக்குமிவ் வுலகம்; அ·து என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே" (புறநானூறு பாடல் 167) பொருள் : போர்க்களத்தைக் கண்டவிடத்து (அமர்காணின்) நீயே நேரில் களம் புகுந்து (நீயே அமர் கடந்து), பகைவர்தம் படை விலக்கி அவர் எதிர் நிற்கிறாய்; ஆதலின் வாளினால் வாய்த்த (வாஅள் வாய்த்த) ஆழமான வடுக்களால் ஆன (வடு ஆழ்) மேனியுடன் (யாக்கையோடு) - புகழினால் - கேட்பதற்கு இனிமையானவனாய்த் திகழ்கிறாய் (கேள்விக்கு இனியை); பார்ப்பதற்கு - வடுக்கள் பட்டதால் - இனியனாய் இல்லை (கட்கு - கண்ணுக்கு - இன்னாயே). அவரே - அப்பகைவரே - உன்னைக் கண்டதும் புறமுதுகிடுவதால் (நிற்காணின் புறங்கொடுத்தலின்), குறையற்ற (ஊறு அறியா) தத்தம் மேனிப் பொலிவுடன் (மெய்யாக்கையொடு) கண்ணுக்கு இனிமையானவர்; புகழற்று - கேட்பதற்கு இனிமையற்றோர் (செவிக்கு இன்னாரே). அதனால் நீயும் ஒரு வகையில் இனிமையானவன்; அவரும் ஒருவகையில் இனிமையானோர். இருவருக்கும் பொருந்தாத தன்மை எவை உண்டு ? (ஒவ்வா யாவுள மற்றே ?) வெல்லும் போர் புரியும் வீரக்கழல் புனைந்த (வெல்போர்க் கழல் புனை) சீரிய திருவடிகளையும் (திருந்தடி), விரைந்து செல்லும் குதிரையையும் உடைய (கடுமான்) கிள்ளியே ! உன்னையே புகழும் (வியக்கும்) இவ்வுலகம். அதன் காரணம் என்ன, பெருமைக்குரியவனே (என்னோ பெரும) ! எனக்குச் சொல்வாயாக (உரைத்திசின் எமக்கே) ! சான்றோர் கேண்மையால் வாசிப்பில் இன்பம் கொண்டு எதையெதையோ வாசிக்க, எதையெதையோ பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறதே ! தோன்றியதோடு நில்லாமல், சிறியளவு ஆட்டமாயிருப்பினும் ஆடியகால் நில்லாது என்பதற்கு இயைய, எழுதுகோலைக் கை தேடுகிறதே ! சரி விடுங்கள், அமர்காணின் தினவெடுக்கும் தோள்கள் இல்லாவிடினும் எழுத அரிப்பெடுக்கும் கையாவது வாய்க்கப் பெற்றதே!
    6 points
  39. இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்? என்றே யோசிக்கிறேன். ஒரு இனத்தை, மிக் கேவலமாக இனவாதமாக திட்டுகிறார். Inciting racial hatred, inciting violence, இதை ஒத்த பிரிவுகள் நிச்சயம் பிரான்சிலும் இருக்கும். இவவை எப்போதோ கம்பி எண்ண வைத்திருப்பதோடு, சமூக வலைதளத்துக்கு வருவதில் இருந்து நிரந்தர தடையும் வாங்கி கொடுத்திருக்கலாம். அடித்தவர்களின் உணர்சியை புரிந்துகொள்கிறேன். ஆனால் வேறு மாதிரி கையாள வேண்டிய விடயம் இது.
    6 points
  40. நுணா, ஒரு அருமையான காணொளி இது. முழங்கால் மூட்டு வலி, மூட்டழற்சி இருப்போர் மிதமான உடற் பயிற்சி மூலம் நிவாரணம் பெறலாம் என்பதை இப்படி சிறப்பாக யாரும் தமிழில் விளக்கி நான் காணவில்லை. இந்த முழங்கால் பிரச்சினை எனக்கும் இருந்தது, என் அனுபவம் இது. 2019 இல் பெருந்தொற்று ஆரம்பித்த நேரம் ஒரு முழங்காலில் சாதுவான அழற்சி (mild arthritis) ஏற்பட்டது. ஒரு நாளைக்கு 6 மைல், வாரத்தில் 30 மைல்கள் ஓடுவதால் வந்திருக்கிறது. ஓட்டத்தைக் கைவிடு என்று மருத்துவர் சொன்னார். 8 வாரங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு, நீச்சல் பழக ஆரம்பித்தேன். அரைத் தடாகம் மட்டும் மூச்செடுக்காமல் போக முடியும், மூச்செடுக்க தலையைத் திருப்பினால் மரக் குற்றி போல தாழ ஆரம்பிப்பேன். நீச்சல் சரிப் பட்டு வரவில்லை😂. அதன் பிறகு பின் வரும் வழிகளில் நானே எனக்கு மூட்டு சிகிச்சையை ஆரம்பித்தேன். 1. எங்கள் முழங்கால் மூட்டை நோக்கி, தொடையில் இருந்தும், கணுக்காலில் இருந்தும் கேபிள்கள் போல பல tendon கள் வந்து இணைகின்றன. இந்த தொடை, கணுக்கால் தசைகள் பலம் இழந்தால், நடக்கும், ஓடும் போது உருவாகும் விசை பலமாக முழங்காலைத் தாக்கும். இது நடக்காமல் முழங்கால் மூட்டைப் பாதுகாக்க, தொடை, பிருஷ்டம், கணுக்கால் தசைகளை இலக்கு வைத்து தசைப் பயிற்சிகளைச் செய்யலாம். இவை மூன்றையும் ஒரு சேர பலமாக்கும் ஒரு பயிற்சி சுமோ பழு தூக்கல் (Sumo dead weight lifting) என்ற முறை. இதை யூ ரீயூப் வீடியோக்களில் ஆர்வமுள்ளோர் தேடிப் பாருங்கள். 2. சைக்கிளோட்டம்: 8 வார ஓய்வுக்குப் பின்னர், மேலே சொல்லியிருப்பது போல 12 - 24 மணி நேர இடைவெளியில் 30 நிமிடம் சைக்கிளோட்டம் செய்த போது, முழங்காலில் இருந்த சிறிய வலி மறைந்து விட்டது (காரணம் இப்போது தெரிகிறது). 3. ஒரு 6 மாதம் வரை இப்படி சைக்கிளோட்டம், தசைகள் பலமாக்கல் செய்த பின்னர், ஒரு trail shoe வாங்கி trail running ஆரம்பித்தேன். மண் தரையான trail இல் ஓடும் போது, இரு நன்மைகள். 1. உங்கள் காலில் பல தசைகள் ஒரே நேரத்தில் வேலை செய்யும் (balancing) 2. முழங்காலைத் தாக்கும் விசை தார் ரோட்டை, கொங்க்ரீட்டை விட குறைவாக இருக்கும். 4. 8 மாதம் கழித்து, மீண்டும் தார் ரோட், கொங்கிரீட் நடை பாதை, என்பவற்றில் ஓட ஆரம்பித்தேன். ஆனால், வலி இருக்கிறதோ இல்லையோ, ஓடி முடித்தவுடன் முழங்கால் மூட்டிற்கு 10 நிமிடம் ஐஸ் வைக்க வேண்டும். இதைச் செய்தால் ஓட்டத்தினால் அழற்சி ஏற்படுவது கட்டுப் படும். மொத்தமாக , மீண்டும் வாரத்திற்கு 30 மைல்கள் ஓடும் நிலைக்கு நான் வர, 1 வருடம் ஆனது. ஆனால், இப்போது முழங்கால் வலி, அழற்சிக்கான அறிகுறிகள் எவையும் இல்லை.
    6 points
  41. எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகிய போது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேட வேண்டியுள்ளது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும். காடுகள், கொடிய மிருகங்கள், இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல் மற்றும் பூமி அதிர்ச்சி போன்ற ஆபத்து நிறைந்த இயற்கை அனர்த்தங்கள், சூழ ஆதி கால மனிதர்கள் வாழ்ந்தார்கள். பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. அந்த கும்மிருட்டில் கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து, இந்த பயத்தினால் இரவானால் குகைகளினுள் குடியிருப்பு. பகல் வந்த பின்பு தான் அவர்களுக்கு உலகமே மீண்டும் தெரியும். அப்பொழுது தான், அவன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று, குழுவாக வேட்டையாடி, கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்து உண்டான். அவன் பயந்தது பெரும்பாலும் இயற்கைக்கு மட்டுமே. இந்த பயம் தான் முதலாவது சமயத்தை. கடவுளை உருவாக்கி இருக்கும் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இப்படியான பாதுகாப்பற்ற உலகில், மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் தமது கட்டுப்பாட்டில் அடங்காத சுற்றுப்புற சூழலையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், அந்த மனித இனக்குழுவில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ - இவைகளை பார்த்து பார்த்து அவர்களின் இந்த பய உணர்வை போக்கி ஒரு ஆறுதல் அளிக்க, அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள். அந்த விளக்கமே கடவுளை, மதத்தை உண்டாக்கியது எனலாம். அந்த ஆதி மனிதனிடம் தன்னைப் பற்றியும் தான் வாழும் சூழ்நிலை பற்றியும் பல பல கேள்விகள் கட்டாயம் மனதில் எழுந்திருக்கும். எது இயற்கையின் பருவ கால சுழற்சியை கட்டுப்படுத்துகிறது? - கதிரவனின் நாளாந்த அசைவா?, விண்மீன்களின் அசைவா?, கடந்து செல்லும் கால நிலைகளா? .... எது தமது சுற்றுப்புற சூழலை கட்டுப்படுத்துகிறது? - எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது? / ஏற்படுத்துகிறார்கள்? ... எது கருவுறுதலை கட்டுப்படுத்துகிறது? - தமது இனத்தின்?, தமது வளர்ப்பு பிராணியின்?, தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை? ... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலைநாட்ட எப்படியான அறநெறி அல்லது ஒழுக்க நெறி தேவை? ... எல்லாத்திற்கும் மேலாக, முக்கியமான கேள்வி, ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது? .. . விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காணமுடியாது. ஏன்? இன்றும் கூட, கடைசிக்கு முதல் கேள்விக்கு - அறநெறி அல்லது ஒழுக்க நெறிக்கு - இன்னும் விவாதித்துக்கு கொண்டு இருக்கிறோம், கடைசி கேள்விக்கு - மறுமைக்கு - இன்னும் ஒரு ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த இரு கேள்விக்கும் [கட்டாயம் இறுதி கேள்வியான மறுமைக்கு] ஒரு ஊகத்தின் அடிப்படையிலாவது ஒரு முன் எச்சரிக்கையாக ஒரு பதில் வேண்டும். ஆதி மனித இனக் குழுவில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட அனுமானத்தின் அடிப்படையில் விடை கண்டார்கள். அதுவே, முதலாவது கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கை அமைப்பு முறை [சமயம்] தோன்றவும், முதலாவது சமய குருமார் அமைப்பு தோன்றவும், கடவுளை சாந்தப்படுத்த முதலாவது வழிபாட்டு சடங்குகள் தோன்றவும், கருவுறுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் அம்சங்களை கட்டுப்படுத்தும் முதலாவது சடங்குகள் தோன்றவும், இனக்குழு உறுப்பினர்களின் நடத்தை எதிர்பார்ப்புகளை விளக்கும் முதலாவது அறிவுறுத்தலும் அதற்கான ஒழுக்கநெறி தோன்றவும் வழிசமை த்தது. ஆகவே சுருக்கமாக கடவுளை மனிதன் தான் உண்டாக்கினான். அன்றைய சூழலில், ஒரு கட்டுப்பாட்டை, ஆறுதலை, நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு சிலர் செய்த சூழ்ச்சி என்று கூட சொல்லலாம். அதனால் அந்த ஒரு சிலர் சாதாரண மனிதர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் ஒரு தூதுவராக , குருவாக தன்னை திடப்படுத்திக் கொண்டான். அவனுக்கு கடவுள் என்று ஒன்று இல்லை என்று நன்றாகத் தெரியும், ஆனால் இருக்கு என்றால்த் தான் அவனின் இருப்பும் இருக்கும். அது தான் உண்மை! உலகின் முதல் நாகரிகம் கண்ட சுமேரியரின் இலக்கியத்தில் இருந்து இலகுவாக இதற்கு உதாரணம் கொடுக்கலாம். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
    6 points
  42. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 25ஆவது ஆண்டினை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2024) 26ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கருத்தாளர்களே யாழ் இணையத்தின் மிகப் பெரும் பலம். அந்த வகையில் யாழ் இணையத்தின் கருத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு மற்றும் சகிப்புத் தன்மை இன்னும் மேலதிகமாக இருக்க வேண்டும் என்றும் யாழ் இணையம் விரும்புகின்றது. கருத்தாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருத்தாட வேண்டும் என்றும் அவ்வாறு நிபந்தனைக்கு உட்படும் போது கருத்தாடல்கள் ஆரோக்கியமாக அமையும் என்பதுடன் தேவையற்ற கசப்புணர்வுகள் தவிர்க்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில்லை. தவிர மட்டுறுத்துனர்களும் மட்டுறுத்தலுக்கு பெரும் நேரம் தொடர்ந்தும் செலவழிக்க வேண்டிய தேவையிருக்காது. வெகுவிரைவில் இந்தியாவில் தேர்தல் வருகின்றது. முன் போலவே யாழ் இணையம் தமிழக மண்ணில் தேர்தலில் பங்கேற்கும் எந்த ஒரு கட்சி சார்ந்து சார்பானதான அல்லது எதிரான நிலைப்பாட்டினையோ எடுப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்கின்றது. தாய் தமிழகத்தினை எமக்கான பலமாக நாம் கருதி அந்த மக்களின் முடிவுக்கு கட்டுப்படுகின்றோம். கட்சி சார்பில்லாது அனைத்து தமிழக உறவுகளையும் நாம் நேசிக்கின்றோம் என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றோம். அதேவேளை ஈழத்தமிழர்களை தமது நலன் சார்ந்து போலிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதை எதிர்ப்போம் என்பதையும் பதிவு செய்து கொள்கின்றோம். காலங்காலமாக எமது தமிழினம் மோசடியாக இலங்கை அரசினாலும் தமது நலன்சார்ந்த உலகத்தினாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருவது எமக்குத் தெரிந்ததே. தற்போது கூட இருக்கும் சில தமிழர்களாலும் மாவீரர்களை அவமரியாதை செய்யும் வகையில் தவறான தகவல் பரப்புரைகள் மேற்கொள்ளப்டுவதுடன் அவை உண்மை என்று நிரூபிக்க கடும் முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்படுவதையும் அவதானத்துடன் இருந்து அவற்றை முறியடிக்க வேண்டிய தேவையுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இவைகளுக்கு துணைபோகாது நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவைகள் உள்ளது. மேலும் எமது மக்களின் நேர்மையான போராட்டங்களுக்கு ஒன்றுபட்டு எமது ஆதரவினை வழங்க வேண்டும் என்பதையும் எமது வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கின்றோம். யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இந்த 26வருடத்தில் இன்னும் புதியவர்களை உள்வாங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். யாழ் இணையப் பாவனையாளர்கள் உங்களைச் சார்ந்தோருக்கு யாழ் இணையத்தினை அறிமுகம் செய்து வையுங்கள். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
    6 points
  43. யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம் ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட 36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான் நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே, நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    6 points
  44. எதுவும் கதைப்பதாக தெரியவில்லை. சொல்லப்போனால் தமிழர்களே இதை பற்றி அதிகம் அலட்டி கொள்ளவில்லை. கேள்வி கேட்ட என்னை பைத்தியக்காரர் போல தமிழர்கள் சிலர் பார்க்கிறார்கள். சம் சும், கஜே, விக்கி வகையறாக்களின் பைத்தியக்காரத்தனம் = தமிழ் தேசியமே பைத்தியக்காரத்தனம் என நினைக்கும் போக்கு பல தமிழரிடம் கண்டேன். முன்னர் பெரும்பான்மையான தமிழர் அரசியல் உணர்வோடும், ஒரு 25% நழுவும் மனநிலையில் இருந்திருப்பின், இப்போ பத்துக்கு எட்டு பேர் நழுவல் மனநிலையில்தான் உள்ளனர். ஆனால் சிங்கள பெளத்தத்தை மீறி ஒரு அடி நகரவில்லை நாடு. முன்னர் போல சிங்கலே…அடிதடி, வெருட்டு, வெளிப்படையாக இல்லை - ஆனால் பிக்குகளின் சிங்கள மக்கள் மீதான பிடி அப்படியேதான் இருக்கிறது. நான் கதைத்த மட்டில், போர் வெற்றி இறுமாப்பை பொருளாதார அழிவு கொஞ்சம் குறைத்துள்ளது, ஆனால் இன்றும் தமிழர் நிலத்தை பறிப்பது, அரசியல் உரிமையை மறுப்பது, சிங்கள மயமாக்கலை நியாயப்படுத்துவது இப்படியானவற்றில் சிங்கள சமூகம் பழைய மனநிலையில்தான் உள்ளது. நான் நினைக்கிறேன்…. பிரித்தானிய காலத்தில் இருந்தது போல சிங்கள இனவாதம் முகிழ்த்துக் கிடக்கிறது. இப்போ இருக்கும் பிரச்சனைகள் தீர, முஸ்லிம், தமிழர்களின் நல்வாழ்வு கண்ணை குத்தும் போது - இன்னொரு அநகாரிக தம்மபால, அல்லது பண்டா வந்து அதை இலகுவாக கிண்டி கிளப்பலாம். தமிழர்களும், முஸ்லிம்களும் மனசார தாம் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதாக உணர்கிறனர். அதுவே உண்மையும் கூட.
    6 points
  45. நாம் இலங்கை திரும்ப இன்னும் நான்கு நாட்கள் இருக்க தாஜ்மகாலை இன்னும் நாம் பார்க்கவில்லை. போய் பார்க்கலாம் என்கிறேன். யாரிடம் அங்கு போவது பற்றி விசாரித்தாலும் காரைப் பிடித்துக்கொண்டு போங்கள் என்கின்றனர் எமக்குத் தெரிந்த எம்மவர்கள். விலையை விசாரித்தால் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களைத் தாண்டி விலை சொல்ல, இன்னொருவர் தனக்குத் தெரிந்த டிராவல் ஏஜெண்ட் இருக்கிறார். அவர்கள் எல்லா வசதியும் செய்து தருவார்கள் என்கிறார். அவர்கள் வெளிநாட்டினர் என்றதும் இன்னும் அதிக விலை சொல்ல, வேண்டாம் என்றுவிட்டு போனில் ஒன்லைனில் புக் செய்ய முயன்றால் அதிலும் விலை அதிகமாகக் காட்ட, உது சரிவாராது என்று எண்ணி நாமே நேரில் T நகரில் உள்ள ஐந்து டிராவல் ஏஜெண்ட்டிடம் போய் விசாரித்ததில் ஐந்தாவதாகப் போனவர் நியாய விலை சொல்கிறார். வெளிநாட்டு என்று கூட்டிப் போடாதீர்கள் என்றதற்கு நீங்கள் பக்கத்தில் வந்து இருந்தே பாருங்கள் என்கிறார். சென்னையில் இருந்து மூன்று நாட்கள் தொடருந்தில் போகலாம். அது சீப். ஆனால் உடனே ரிக்கற் எடுக்க முடியாது என்கிறார். எமக்கு மூன்று நாட்கள் போவது சரிவாராது. விமானத்தையே பாருங்கள் என்கிறேன். ஆக்ராவுக்கு நேரே விமானச் சேவை இல்லை. நீங்கள் டெல்லி போய் அங்கிருந்து தொடருந்தில் தான் போக வேண்டும் என்கிறார். விமான மற்றும் தொடருந்து இரண்டுக்குமான விலை 36 ஆயிரம் முடிய மகிழ்வோடு ரிக்கற்களை வாங்கிக்கொண்டு வருகிறோம். சென்னையில் இருந்து அடுத்தநாள் அதிகாலை விமானம். ஹோட்டலில் இருந்து ஊபர் போட 565 ரூபாய்களுக்கு வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பயணம். விமானத்தில் தண்ணீர் மட்டும் இலவசம். இந்திராகாந்தி விமான நிலையம் நன்றாகத்தான் இருக்கிறது. அங்கிருந்து வெளியேவந்து தொடருந்தைப் பிடிக்க அரை மணிநேரம் டாக்ஸியில் பயணம் செய்து நிசாமுதீன் என்னும் தொடருந்து நிலையத்தை அடைந்தால், அது சேரியைப் போன்று காட்சியளிக்கிறது. சேறும் சகதியும் நாற்றமும் சனக் கூட்டமும்...........அப்படி ஒரு இடத்தை இதுவரை நான் காணவே இல்லை. அதிகாலையில் புறப்பட்டதால் காலை உணவும் உண்ணவில்லை. எனக்கோ பசி. இன்னும் எமக்கு ஒன்றரை மணி நேரம் இருக்கு. வடிவா உணவகம் ஒன்றில் உந்துவிட்டுப் போவோம் என்று இருவரும் முடிவெடுத்து எமது கைப்பொதியை நிலத்தில் வைத்து உருட்டாது கையில் தூக்கியபடி நல்ல உணவகத்தைத் தேடினால் ஒன்றுகூடச் சொல்லும்படியாக இல்லை. ஓட்டோக்காரர் வேண்டுமா வேண்டுமா என்று கரைச்சல் வேறு. அவர்களைப் பார்க்கவே காட்டுமிராண்டிகள் போன்ற தோற்றம். படங்களில் வரும் வில்லன்கள் கூட அப்படி இருக்க மாட்டார்கள். ஓட்டோவில் ஏறி வேறு இடம் சென்று உணவகம் தேடி உண்ணவே பயமாக இருக்க அங்கேயே ஒரு ஓட்டலில் அமர்ந்தால் நெருக்கமான மேசை கதிரை. ரொட்டி வகைகளே அதிகமிருக்க பூரியைத் தெரிவு செய்கிறோம். அப்படி ஒரு உணவை என் வாழ்நாளில் உண்டதே இல்லை. எண்ணெயில் குளித்த பூரிக்கு சாம்பார் போல ஒன்று. அதைவிட இரு நிறங்களில் சட்னி போல ஒன்று. அதைவிட ஊறுகாய். என்னடா கறுமம். பூரிக்கு யாராவது ஊறுகாய்தொட்டு உண்பார்களா என எண்ணியவுடன் சென்னை உணவகங்களின் சுத்தமும் சுவையுமே கண்முன் வந்தது. வேண்டா வெறுப்பாக பூரியை உண்டுவிட்டு கோப்பியும் குடித்துவிட்டு வெளியே வர, இன்னும் நேரம் இருக்கு. வா அந்தப் பக்கம் இருக்கும் கடைத் தெருவைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார் மனிசன். கடைகளில் உடைகளும் சரி உணவுப் பொருட்கள் சரி மிகச் சொற்பமகவே இருக்கின்றன. பழங்கள் வாங்குவோம் என்று பழத்தைத் தொட்டுப் பார்த்தால் குளிரூட்டியில் இருந்து எடுத்தவை போல் குளிர்கின்றன. சரி கச்சான் வாங்குவோம் என்று எண்ணி ஒரு பையை எடுத்துக்கொண்டு பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றபின் தொடருந்து நிலையத்துள் நுளைகிறோம். எக்கச்சக்கச் சனம் போவதும் வருவதுமாக இருக்க பயணிகள் இருப்பதற்கான அறை ஒன்று தெரிகிறது. அங்கு சென்று வெறுமையாக இருந்த இருக்கையில் அமர்கிறோம். கணவர் சென்று எத்தனையாவது இலக்க நடைமேடை என்று பார்த்துவிட்டு வருகிறார். இன்னும் முக்கால் மணி நேரமிருக்க ஆண்கள் பலரும் பலவிதமான குளிராடைகளையும் தொப்பிகளையும் அணிந்திருக்க, இவர்கள் ஏன் இதை அணிகிறார்கள் என்று எண்ணினேனே தவிர யாரையும் கேட்கவில்லை. பெண்களும் தடிப்பான சால்வைகளையும் ஒன்றுக்கு இரண்டு ஆடைகளையும் அணிந்திருக்க பான் காத்து இதுகளுக்குக் குளிருதுபோல. றெயினுக்குள்ளும் ஏசி வேலைசெய்யும்போல என்கிறேன். ஒரு பதினைந்து நிமிடம் இருக்க நாம் எழுந்து எமது தொடருந்து நடைமேடைக்குப் போய்ப் பார்க்கிறோம். பெரும்பாலான தொடருந்துகள் மிக மிக நீளமானவையாக இருக்கின்றன. எமது விரைவுத் தொடருந்து. ஆனாலும் ஆக்ரா செல்ல கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். தொடருந்தில் ஏறி அமர்ந்ததும் அதன் வசதியைப் பார்த்து மகிழ்வு ஏற்பட்டது. இடைஞ்சல் இல்லாமல் வசதியான சாய்ந்து தூங்கக்கூடியதாயக இருக்க மனதில் நிம்மதி ஏற்பட்டது. இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் விவசாய நிலங்களில் பல பயிர்கள் நடப்பட்டிருக்க எங்கும் பச்சைப் பசேல். ஆனால் தொடருந்துத் தடத்துக்கு அண்மையில் சேரிகள் போன்று வடிவமற்ற வீடுகளும் ஆட்களும். நீர்கள் தேங்கி இருந்த இடங்களில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க தமிழ் நாட்டின் செழிப்பும் மக்களும் தான் மனக்கண்ணில் வருகிறார்கள். தொடருந்து கிளம்பி ஒரு மணி நேரம் போக உணவுகள் வருகின்றன. எம்மை முதலே பயண முகவர் உணவும் ஓடர் செயவா என்று கேட்க சுத்தமாக இருக்காது என்று வேண்டாம் என்றுவிட்டோம். ஆனால் அவர்கள் பரிமாறிய உணவு மற்றும் முறைகளைப் பார்த்தபின் அதுவும் அக்கம்பக்கம் உணவு வாசனை எம் பசியைக் கிளற, நாமும் உணவை வாங்கி உண்கிறோம். முன்னரே ஊடர் செய்திருந்தால் 200 ரூபாய்கள். இப்ப செய்வதால் 250. ஆனால் நினைத்ததுபோல் இல்லாமல் உணவு நன்றாக இருக்க, சிறிது நேரம் செல்லத் தேனீர்,தண்ணீர் போத்தல் எல்லாம் தருகின்றனர். சிறிது நேரம் தூங்கி வெளியே பார்த்து ஆக்ரா வரும்வரை நேரம் போவதே தெரியவில்லை. வரும்
    6 points
  46. கண்டால் வரச் சொல்லுங்க… கார் களவெடுக்கும் தம்பி… கண்டால் வரச் சொல்லுங்க… கனடா…கார் களவெடுக்கும் தம்பியை.. கண்ட இடமும் அலையாமல் நேராய் வரச் சொல்லுங்க.. முத்தத்தில் மூணுகாரு.. மினுக்கிக் கொண்டு நிற்கும்… முதல் ஆளு..கமரி பார்க்கப் பளபளப்பா நிற்பார்.. பற்ரறி மாத்தவேணும்.. மூணு நாளைக்கு ஒருக்கால் ஒயில் விடவேணும்.. பார்ட்ஸ் எல்லாம் பழசு.. பார்த்துத் தூக்கு தம்பி.. அக்கூரா அடுத்து நிற்பார்.. ஆளு வாட்ட சாட்டமாய் இருப்பார்.. இப்பதான் அடிவாங்கி ஆசுபாத்திரியால் வந்திருக்கார்.. அவர் சுக நலம் இன்னும் எனக்கே தெரியாது… பார்த்து எடுடா தம்பி… பார்ட்ஸ் ஏதாவது கழண்டும் விழலாம்.. பலமான அடிவாங்கிய ஆள் தம்பி.. மூணாவது பி .எம் டபிள் யு.. தளுக்கி மினுக்கி சும்மா தகதக வென்று .. மினுங்குவார்… இவர் ..சுக நலம் நானறியேன்… வந்து மூன்று நாள்தான். என்னைக்கேட்டால் எதுவும் தெரியாது.. ஏனெனில் அது நிலக்கீழ் வீட்டுகாரனுடையது…. கராச்சுக்குள் .. இரண்டுபேர் நிக்கினம்.. இரண்டு பேரும் புது இறக்குமதி… தொட்டால் சுள்ளிடும்.. கிட்டப் போனாலே குய்யோ முறையோ என்று சத்தமும் போடுவினம்… அதைவிட … இந்தக் கார்களில் நீ கைவைத்தால் நான்தான்…வாங்கிக் கட்ட வேணும்.. அதாலை நான் நைற் வாச்சர். யாராவது ..கண்டால் வரச்சொல்லுங்க கனடா கார் கள்ளனை கண்டவுடன்… நான் இதில் சொன்னதையும் சொல்லிவிடுங்க….அவனை கண்டால் வரச்சொல்லுங்க.. காண ஆசையாய் ..இருக்கென்று.. வேண்டாமிந்த விபரீத ஆசை (யாவும் கற்பனையே)
    6 points
  47. சிறிது நேரம் யாருமே பேசவில்லை. ஓட்டோ ஓட்டுனர் : கீளாம்பாக்கம் தானே? கணவர்: ஓம் ஓ ஓ : எங்க போறீங்க கணவர்: மதுரை நான்: அந்த இடம் தெரியும்தானே? ஓ ஓ : ஆமா ஆமா. கீளாம்பாக்கத்தில ஆறு மாசம் முன்னாடிதான் புதிசா கலைஞர் கருணாநிதி நினைவா தொறந்து வைச்சாங்க. ரொம்பப் பெரிசு. மின்னாடியே உங்களுக்குத் தெரியாதா? கணவர்: தெரியாது. கோயம்பேடு என்று சொன்னாங்களே. ஓ ஓ: அங்க இப்ப யாரையும் ஏத்தக் கூடாது. எந்த பஸ்சும் வராது. நான்: ரிக்கற் போட்டவர் பொய் சொல்லீட்டார் கணவர்: ஒரு மணித்தியாலத்தில போகலாமோ? ஓ ஓ: இன்னிக்கி வெள்ளிக்கிழமை. ரொம்ப ராபிக்கா இருக்கும். எப்பிடியும் நான் ஒண்ணரை மணி நேரத்தில கொண்டு போயிடுவன். அன்று போய் சேர ஒன்றே முக்கால் மணிநேரம் பிடிக்க நான் டென்ஷன் ஆனதுக்கு அளவே இல்லை. அப்பா! மிகப் பிரமாண்டமாக ஒரு விமானநிலையம் போல வடிவமைத்திருந்தார்கள். நானும் லண்டன் விக்டோரியா கோச் நிலையம் போல ஒரு பத்து சொகுசு பஸ்கள் நிற்கும் என்று பார்த்ததால் - சினிமாவில் கூட அப்படிப் பார்த்ததில்லை. மிகப் பிரமாண்டம். ஒரு நூறு பஸ்கள் ஆவது நிற்கும். மற்றும் வேளையென்றால் இறங்கி நின்று படமோ வீடியோவோ எடுத்துவிட்டுத்தான் போயிருப்பேன். என் பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேறு எதுவுமே தோன்றவில்லை. உள்ளே சென்றால் ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக்கூடியதாக பெரிதாக இருந்தது மண்டபம். மலசலகூடமும் மிகச் சுத்தமாக இருக்க நம்ப முடியாததாக இருக்க கணவரிடம் வாய்விட்டுச் சொல்கிறேன். இன்னும் ஒரு வருடம் போகட்டும். அதன்பின் வந்து பாரன் என்கிறார். எமது பஸ்ஸைத் தேடிப் பிடித்து உள்ளே சென்றால் நாம் மட்டும் தான் உள்ளே. யாரையும் காணவில்லை. எல்லா ஏசியையும் போட்டு குளிர் தாங்கவே முடியவில்லை. 96 ம் ஆண்டு இத்தாலி செல்லும்போது தான் முதன்முதல் தொடருந்தில் தூங்கிக்கொண்டு வந்தோம். இதுவே பேருந்தில் தூங்கியது முதல் அனுபவம். நாம் கொண்டுபோன விரிப்பை விரித்துவிட்டு திரைச் சீலையையும் இழுத்துவிட்டுப் படுத்தபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். நான் நினைத்ததுபோல இல்லாமல் சுத்தமாக இருந்தது. ஆனாலும் அந்த ஏசியிலும் ஒரு நுளம்பு ஓடி ஓடிக் கடிக்க மனிசன் ஒரு இருபது நிமிடப் போரில் நுளம்பை வெல்ல அதன் பின் நிம்மதியான தூக்கம்தான். காலை ஆறு மணிக்கு மதுரை போகும் என்று சொன்னாலும் ஆறரைக்கே பேருந்து போய் சேர்ந்தது. பேருந்துத் தரிப்பிடம் போல் இல்லாமல் ஒரு வெட்டவெளியில் நிறுத்த, நாம் இறங்க இரண்டு மூன்று ஓட்டோக்காரர் என்னிடம் வாங்க, என்னிடம் வாங்க என்கின்றனர். அதில் ஒரு அப்பாவிபோல் இருந்த ஒருவரை கணவர் தெரிவு செய்ய, நாம் ஏறி அமர எங்கே போகணும் என்கிறார் அவர். மீனாட்சி அம்மன் கோவில் பக்கமாக நல்ல கோட்டல் ஒன்றுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார் கணவர். கோவிலுக்குக் கிட்ட கோட்டல்கள் இல்லீங்க. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் தான் கோட்டல் எல்லாம் இருக்கு. கோயிலுக்கு அங்கிருந்து 200 ரூபா தான் என்கிறார். இரண்டு மூன்று கோட்டல்கள் தொடர்ந்து இருக்க, ஓட்டுனர் சென்று இரண்டு கோட்டல்களில் கேட்க எல்லாம் புல் என்கின்றனர். மூன்றாவதில் இடம் இருக்க நான் உள்ளே சென்று அறையைப் பார்க்கவேண்டும் என்கிறேன் வரவேற்பில். தாராளமாகப் பாருங்கள் என்கின்றார். அறை என்னவோ பரவாயில்லை. ஆனால் போகும் வழியில் சுத்தம் இல்லாமல் இருக்க இது வேண்டாம் என்கிறேன். இன்னிக்கி சனிக்கிழமை வெளியூர்காரங்க வந்திருப்பாங்க. வேறு இடம் பார்க்கலாம் என்று இரண்டு மூன்று பார்த்து நான்காவதாக 3700 ரூபாய்கள் காலை உணவுடன் என்று கூற அதைத் தெரிவு செய்கிறோம். அறையில் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கீழே வர உணவகம் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது. பபே என்றாலும் கேட்டுக்கேட்டு தோசை, பூரி என்று கொண்டுவந்து தருகின்றனர். அவர்களின் உபசரிப்பில் மனமும் வயிறும் நிறைந்து போகிறது. சரி இனி மீனாட்சி அம்மனிடம் செல்வோம் என்கிறார் கணவர். அவரது போனில் ஊபர் அப் இருக்கு. எனவே ஊபர் கிளிக் செய்ய அதில் ஓட்டோவும் வர ஓட்டோவுக்குப் போடுவம் என்று போட 157 ரூபாய்கள் என்றும் பணமாகக் கொடுக்கலாம் என்னும் ஒப்ஷன் வர, மனிசனும் மலிவாக இருக்கு என்று சந்தோசப்படுறார். 7 நிமிடத்தில் வருவதாகக் காட்டிய ஓட்டோ மூன்று நிமிடத்தில் தானாகவே கான்சல் ஆகிது. திரும்ப ஒன்று போட அதுவும் அப்படி இப்படி என்று எழு நிமிடத்தில் கான்சல் ஆக எனக்குக் கடுப்பு ஏற்பட, ரோட்டில் போய்நின்று பிடிப்போம் என்று ரோட்டுக்குச் சென்றால் அங்கு வந்த ஓட்டோ ஐநூறு கேட்கிறது. மனிசன் கூட என்று சொல்ல எவ்ளோ தருவீங்க என்று கேட்க மனிசன் இருநூறு என்கிறார். வேறு ஓட்டோ பாருங்க என்று கூறிவிட்டு அவன் கிளம்ப, வாற இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன். அடுத்த ஓட்டோவில் நானூறு சொல்ல மனிசன் கதைக்க முதலே நான் ஏறி அமர்கிறேன். உனக்கு எதிலும் அவசரம் என்று மனிசன் புறுபுறுக்க இது எங்கட ஊர் இல்லை. எங்களுக்கு அலுவல்தான் முக்கியம் என்கிறேன். சனி தொடரும்
    6 points
  48. இந்த சம்பவம் நடந்தது 15 வருடமாவது இருக்கும். நண்பன் ஒருவர் (அப்போ திருமணம் செய்யவில்லை) நண்பர்களோடு ல் இருந்தவர். அப்போ இருந்த தமிழ் குடும்பம் இரவு உணவுக்காக அழைத்தது. பனியும் கொட்டிய படி உள்ளது. குறிப்பிட்ட நண்பரும் இன்னும் சில அவரின் நண்பர்களையும் கூட்டிக்கொண்டு பின்னேரம் போல் ( 6 - 6:30) போயடைந்தார்கள். போன நண்பர் அதிகம் குடிக்காதவர். கொஞ்சம் வைனுடன் சாப்பிடுபவர். மற்றவர்கள் சொல்ல தேவை இல்லை. மது, உணவு முடிய 11:30 ஆகி விட்டது. பனியும் சுமாராக கொட்டி விட்டது. "சரி காணும் வாங்கோடாப்பா" என நண்பர்களையும் கூட்டிக் கொண்டு காரை நோக்கி செல்கிறார்கள். காரில் எல்லோரும் ஏறிய பின்னர் காரை start பண்ண எந்த சத்தமும் வரவில்லை. பற்றரி போட்டுது போல இருக்கு "இறங்கி தள்ளுங்கோடா "என்று கூறி இருக்கிறார். அவர்கள் காரை கொஞ்ச தூரம் தள்ளியும் கார் startஆக வில்லை. கார் Hood ஐ திறந்து பார்த்த போது என்ஞினை காணவில்லை.😞 அந்த நண்பர் அத்தோடு நியூயோர்க்கை விட்டு பலோ அல்டோ(Palo alto), கலிவோர்ணியாவில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறார். எப்போதும் நியூயோர்க் என்ற பேச்சு வந்தாலே அவரின் இந்த அனுபவத்தை சகலரிடமும் பகிர்வார்.
    6 points
  49. சிலர் "கடந்து போ, பேசாமல் போ, மறையும்" என்கின்றனர் - இதெல்லாம் கடந்து போன காலங்கள் இருந்தன. இவர்களின் தியரி சரியானால் இப்போது சாதி ஒரு பொருட்டில்லாமல் போயிருக்க வேண்டும், அப்படியா போய் விட்டது? இல்லையல்லவா? ஜே.பி.சி மெசின் தேர் முதல் (2023 இல்) தீவகத்தின் அதிபர் பதவி வரை சாதி மீண்டும் மூர்க்கமாக எழும்பி நடமாடுகிறதல்லவா? பிறகேன் இந்த இத்துப் போன "வைக்கோல் போருக்குள் மறைச்சு விட்டால், எல்லாம் கிளீனாகி விடும்" என்ற வாதம் இன்னும் தொடர்கிறதெனத் தெரியவில்லை. எனவே, வெளிப்படையாகப் பேசும் துணிவில்லாதவர்கள், பேசத் துணிந்தவர்களையாவது நையாண்டி செய்யாமல் மௌனமாக இருங்கள் - உங்கள் மௌனம் சில நேரங்களில் சாதி வாதத்தை ஒழிக்க உதவலாம்!
    6 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.