Jump to content

Leaderboard

  1. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      86

    • Posts

      14948


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      70

    • Posts

      76777


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      47

    • Posts

      43268


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      45

    • Posts

      29178


Popular Content

Showing content with the highest reputation since 04/13/24 in all areas

  1. எனது மனைவியின் அறுபதாவது பிறந்தநாளை பிரான்சில் உறவுகளுடன் கொண்டாட போகிறீர்களா? வெளியே எங்காவது போவோமா என்று மக்கள் கேட்டனர். எனக்கும் ஓய்வு தேவை வெளியில் போவோம் என்றேன். கடையை பூட்டவேண்டும் என்றால் எத்தனை நாட்களுக்கு முன் உங்களுக்கு சொல்லவேண்டும் என்றபோது ஒரு கிழமை போதும் என்றிருந்தேன். போன கிழமை இதிலிருந்து இத்தனை நாட்கள் கடையை பூட்ட அறிவியுங்கள் 15 இலிருந்து 25 வரையான வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடுப்புக்களை தயார் செய்யுங்கள் என்றனர். என் மக்களுக்கு மிக மிக சவாலான விடயம் எனக்கு தெரியாமல் எதையாவது செய்வது. தமிழிலோ பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ ஏன் சிங்களத்தில் கூட எனக்கு தெரியாமல் செய்வது கடினம். இது surprise பயணம். அதிலும் இது வெளிநாடு. (பாஸ்போர்ட் கேட்டிருந்தார்கள்) பணம் எவ்வளவு கொண்டு வரவேண்டும் என்று கேட்டேன் ஒரு சதமும் கொண்டு வரவேண்டாம் என்றார்கள். அந்த நாளும் வந்தது. காலையில் மக்கள் மருமக்கள் பேரன் அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்தோம். முடிந்தவரை எங்கே போகிறோம் என்பதை கவனிப்பதை தவிர்த்து வந்தேன். விமானம் ஏற முன்னரும் வரும் அறிவித்தல்களை காதை பொத்தி தவிர்த்தேன். பிள்ளைகள் மிகவும் ஆர்வத்துடன் செய்திருப்பதை குழப்ப விரும்பவில்லை. ஆனாலும் பக்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பன்னர்களில் சில பெயர்கள் வருவதை காண்பதை தவிர்க்க முடியவில்லை. விமானத்திலும் அறிவித்தல்களை கைட்பதை தவிர்த்தாலும் வந்து இறங்கியதும் கேட்டார்கள் எங்கே நிற்கிறோம் என்று. இதுக்கு மேல சொல்லாமல் இருக்க முடியாது. Palma என்றேன். சுற்றுலாவில் இருந்து தொடரும். ..
    10 points
  2. Palma விமானநிலையத்தில் ஒரு மினிபஸ் எங்களுக்காக காத்திருந்தது. அதில் ஏறியதும் கிட்டத்தட்ட 40 நிமிட பயணத்தின் பின்னர் ஒரு நட்சத்திர ஹோட்டல் முன்னால் நின்றது. நாங்கள் 4 குடும்பம் மற்றும் எனது கடைசி மகள். அதற்கு ஏற்ப 5 ரூம்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அத்தனையையும் கடலில் இருந்து 50 மீற்றர். ஜன்னலை திறந்தால் முன்னால் கடல். கீழே நீச்சல் குளம் sauna hammam jacuzzi மற்றும் மூன்று நேர சாப்பாடு வொலாந்தேர் (நூற்றுக்கும் மேற்பட்ட சாப்பாடுகள் கேக் ஐஸ்கிரீம் மற்றும் பழ வகைகள்) அத்துடன் 24 மணிநேர ஓபன் பார். மேலும் இரவு ஏழு மணிக்கு தொடங்கி பன்னிரண்டு மணிவரை ஆடல் பாடல் விளையாட்டுக்கள். அத்துடன் காலையில் 2 வான்கள் வந்து எம்மை ஏற்றி சென்று ஒவ்வொரு நகரமாக இந்த இடத்தின் விசேடமாக பார்க்க வேண்டிய இடங்களை காட்டி மீண்டும் கொண்டு வந்து கோட்டலில் விட்டு செல்கின்றன. நேற்று பலநூறு பேர் முன்னால் கோட்டல் நிர்வாகத்தினால் என் மனைவியின் பிறந்த நாள் கேக் வெட்டி சம்பைன் உடைத்து கொண்டாடப்பட்டது. உண்மையில் மறக்க முடியாத அனுபவம். நான் எனது வாழ்க்கையில் 11 மாதங்கள் பல மணிநேர வேலை மற்றும் வேலை வீடு என்று வாழ்பவன். ஆனால் ஆவணி மாதம் மட்டும் கோடீஸ்வர வாழ்க்கை. மக்களுக்கும் அதையே பழக்கி இருந்தேன். இன்னொரு விடயம்: வீட்டில் நாங்கள் மேசையில் இருந்து சாப்பிடும் போது என் பிள்ளைகள் மற்றும் மனைவியின் கண்கள் என் கோப்பை மற்றும் கிளாசிலேயே இருப்பது வழக்கம். ஆனால் இங்கே அதிலிருந்தும் விதிவிலக்கு. நான் 4 அடி பாய்ந்தால் என் பிள்ளைகள் 16 அடி பாய்ந்ததை உணர்ந்தேன். அனுபவித்தேன். இதுவரை எனது பொக்கற்றில் இருந்து ஒரு சதம் கூட வெளியே எடுக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. நான் இந்த தீவில் பார்த்தவை மற்றும் இந்த தீவு பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். நன்றி.
    9 points
  3. பாத்து,பவுத்திரமா எழுதுங்க தம்பி! அப்புறம் ஒண்டு கிடக்க இன்னொண்டு ஆவப்போவுது ராசா... உப்புடித்தான் சிஐஏ ஈராக்கிலை தார் பீப்பாவை கெமிக்கல் ஆயுதம் எண்டு அச்சொட்டாய் ஆதாரம் காட்ட......அந்த நாட்டையே அழிச்சு நாசமாக்கினார்கள். அதே போல லிபியா,சிரியா எண்டு ஒரு பட்டியலே நீளும்.... ஈராக்கிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂 லிபியாவிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂 சிரியாவிலை சிஐஏ சொன்னது உண்மை எண்டால்😂 ஆப்கானிஸ்தானிலை சிஐஏ சொன்னது சரி எண்டால்😂 உக்ரேனிலை சிஐஏ சொல்லுறதெல்லாம் சரி எண்டால்😂 என்ரை அன்புத்தம்பி கோஷான் சொல்லுறதும் சரிதான்....🤣 அரோகரா....அரோகரா சாமிவாறார் வழி விடுங்கோ😎
    8 points
  4. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்களும், பெருமளவு சிறுவர்களும் இருந்தார்கள். வழமைபோல ஆண்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு பேச, பெண்களும் அவ்வாறே செய்தார்கள். நடுவில் சிறுவர்கள் தமது விளையாட்டுத் துப்பாக்கிகளோடு ஓடித்திரிய வீடு அமர்க்களமாகியிருந்தது. இளையராஜா பாடல்கள், அக்காலத்தில் எமக்குத் தெரியாமலிருந்த இன்னும் சில இசையமைப்பாளர்கள் , அநிருத்தின் சிட்னி இசை நிகழ்ச்சி என்று ஆரம்பித்து சில படங்கள் குறித்த விமர்சனம் என்று நீண்டு, அரசியலுக்குள் நுழைந்தது சம்பாஷணை. அங்கிருந்தவர்களில் பல தரப்பினர் இருந்தனர். புலிகளை ஆதரிப்பவர்கள், நடுநிலையாளர்கள், விமர்சிப்பவர்கள் என்று மூன்று வகையினர். நடுநிலைவாதிகள் அநேகமான வேளைகளில் அரசியலைப் பேச ஆரம்பிப்பார்கள். அங்கும் இன்றி, இங்கும் இன்றி அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். புலிகளை ஆதரிப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சிப்பவர்கள் எப்போதாவது சம்பாஷணையில் தமக்கான தருணங்கள் வரும்போது கலந்துகொள்வார்கள். நேற்றும் அதுதான் நடந்தது. கருணாவின் பிளவு குறித்து ஆரம்பித்த சம்பாஷணை, டி.பி.எஸ்.ஜெயராஜ் குறித்து நீண்டபோது, அவர் அணமையில் கொழும்பு டெயிலி மிரர் பத்திரிக்கையில் எழுதிய "கிழக்கை இழந்த கருணாவும், ஈழத்தைப் பறிகொடுத்த பிரபாகரனும்" என்கிற கட்டுரை குறித்து பேசப்பட்டபோது, நான் தலைப்பைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன் என்று கூறவும் நடுநிலைவாதியான ஒருவர், "அது எப்படி கடந்து செல்வீர்கள்? உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே விமர்சிப்பீர்களா? தலைவர் கூட இறுதிவரை அவரது கட்டுரைகளை இன்னொருவர் மொழிபெயர்க்க அறிந்துகொண்டுதான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். நானோ, "அவர் புலிகள் குறித்து அவதூறாகவே எழுதிவருகிறார், அவரின் வாசகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களே, அவர்களை மகிழ்விக்கவே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுகிறார்" என்று கூறினேன். இதில் மெதுவாக சம்பாஷணை சூடேறத் தொடங்கியிருந்தது. இடையிடையே சிலர் இதுகுறித்த தமது கருத்துக்களை கூறினார்கள். இடையில் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, நாவற்குழியில் கட்டப்பட்டிருக்கும் விகாரை பற்றியும் பேசினார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளைவிற்குப் பின்னால் தெரிவது பெளத்தர்களின் விகாரை என்று அவர் கூறி வேதனைப்படும்போது, உண்மைதான், அங்கு கிட்டத்தட்ட 148 சிங்களக் குடும்பங்களும் குடியேறியிருக்கிறார்கள் என்றுய் கேள்விப்பட்டேன் என்று கூறினேன். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. டி.பி.எஸ்.ஜெயராஜின் அபிமானியான அவர், "சிங்களவர்கள் 83 இற்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், அரச வேலைகள், தனியார் வேலைகள், வியாபாரங்கள் என்று வாழ்ந்தவர்கள், அவர்கள் மீள யாழ்ப்பாணத்திற்கு வருவதில் ஒரு பிரச்சினையுமில்லை. சண்டை ஆரம்பித்ததால் விட்டுச் சென்றவர்கள், தற்போது வருகிறார்கள். நீங்கள் கொழும்பில் சென்று வாழ்வதில்லையா? அதுபோலத்தான் அவர்களும் வடக்குக் கிழக்கில் வாழ்கிறார்கள்" என்று கூறினார். எனக்கு அது சரியென்று படவில்லை. "கொழும்பில் சிங்களவர்கள் கூறும் விலைக்கு அதிகமாகக் கொடுத்து, காணிகளை வாங்கி வீடுகளை கட்டுவதும், வாங்குவதும், வடக்குக் கிழக்கில் அரச இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்றுவிட்டோ, அடித்துத் துரத்திவிட்டோ அடாத்தாகக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறுவதும் ஒன்றா? சிங்களக் குடியேற்றவாதிகளை ஆயுதமயப்படுத்தி, கூடவே பாதுகாப்பிற்கென்று இராணுவ முகாம்களையும் அமைத்து, சிறுகச் சிறுக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதும், தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்றா? கொழும்பில் புலிகள் முகாம் அமைத்துத் தமிழர்களை ஆயுததாரிகளாக்கி, சிங்களவர்களை கொன்றோ அல்லது விரட்டியோ ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்களா? என்று சற்றுச் சூடாகவே கேட்டுவிட்டேன். அவர் மெளனமாகிவிட்டார். எதுவும் பேசவில்லை. "நான் கூறவந்ததைக் கேட்காமலேயே நீங்கள் டென்ஷன் ஆகிவிட்டீர்கள்" என்று மட்டும் கூறினார். ஆத்திரப்பட்டதற்காக வருந்தினேன். ஆனால், இக்கேள்வி அடிக்கடி நடுநிலைவாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இவர்கள் கேட்பது தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்திவிடுவதாக எனக்குப் படுகிறது. இந்த வேறுபாட்டினை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போனது எங்கணம்? இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?
    7 points
  5. இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    6 points
  6. தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்- #பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம். அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும். அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்கி - ஊசி சப்ளையை கிட்டதட்ட இல்லை என்ற அளவுக்கு ஆக்கி விடப்போகிறார்கள்.
    6 points
  7. அப்பனுக்கே அரைக்கோவணம்…. இழுத்தி போத்திகடா மகனே என்றாராம்🤣
    6 points
  8. எந்த அரசியல்வாதியின் உதவியும் இல்லாமல், ஒரு தனிமனிதன்+ ஊரவர்கள் சேர்ந்து மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் கட்டி எழுப்பியுள்ள turf மைதானம். இப்போ இதில் சர்வதேச போட்டிகளை நடத்த இலங்கை கிரிகெட் சபையை அணுகியுள்ளார்கள். யாழில் இல்லாத புலம்பெயர் தனவந்தர்களா? கொமிசன்-வாதிகளை 30 வருடமாக நம்பி கொண்டிராமல் இப்படி முயலலாம்.
    6 points
  9. நீங்கள் எந்த உறுப்பை தயார் செய்தீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளோம்? இந்த பால்மா எங்கு தம்பி இருக்கு?
    5 points
  10. "உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பயண சிநேகிதர்கள், விளையாட்டு குழு, .... என உறவு தொடர்கிறது. இவர்கள் ஒவ்வொருவருடனும் நாம் ஒவ்வொரு விதமாகப் பழகுகிறோம். சுருக்கமாக 'சொந்தங்கள் அல்லது குடும்ப உறவுகள்', 'நண்பர்கள்', 'பழக்கமானவர்கள்' [Family Relationships, friends, Acquaintances] என்று உறவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். பொதுவாக மனித வாழ்க்கை என்பது உறவுகளின் ஓர் வலைப் பின்னலே என்று கூறலாம். தன்னோடு உறவு, அயலாரோடு உறவு, உலகத்தோடு உறவு, ஏன் தன்னை படைத்தவர் கடவுள் என நம்பி, அந்த ஆண்டவனோடும் உறவு, மற்றும் தன்னை சுற்றி அமைந்து இருக்கும் இயற்கையோடும் உறவு - என்று உறவுகளின் தொகுப்பே இங்கு வாழ்க்கையாக விரிகிறது. அது மட்டும் அல்ல, “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என எல்லா உலக மக்களையும் தன் உறவினராக பேணியதை இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். ஆணானாலும், பெண்ணானாலும் அவர்களுக்கு குடும்பம், உறவு, நட்பு என்பவை முக்கியமான அவசியமான ஒன்று. பொதுவாக எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்ந்து விட முடியாது. மனித வரலாறு அதைத்தான் எமக்கு காட்டுகிறது. திருவிளையாடல் படத்தில் கேபி சுந்தராம்பாள் பாடிய 'பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா' என்ற பாடலில் உறவை பற்றி மிக அழகாக கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு வரியில் 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு' என விபரிக்கிறார். அதாவது, ஊருண்டு – ஊரில் இருக்கும் பொதுச்சனம் உண்டு, பேருண்டு – சாதிக்காரங்க உண்டு. அதாவது குறிப்பிட்ட பெயர்களை கொண்ட கூட்டம் உண்டு, உறவுண்டு – தேர்வினால் வந்த சொந்தங்களும் நண்பர்களும் உண்டு [Relatives by choice], சுகமுண்டு – சுகம் தரும் மனைவி, குழந்தைகள் என்ற தன் குடும்பம் உண்டு, உற்றார் – பிறப்பினால் வந்த சொந்தம் உண்டு [Relatives by birth], பெற்றார் – தன்னை பெற்ற அம்மா அப்பா உண்டு என்கிறார். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது என்றோ அல்லது ஒரு உள்ளுணர்வு என்றோ கூறலாம். இது வெவ்வேறு சூழல்களில் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. எனவே, பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற் போல வெவ்வேறு சொற்கள், உதாரணமாக, நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் .... பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக, அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது என்றோ அல்லது இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம் என்பதால், அந்த புரிதல் தான் அன்பு என்றோ கூறலாம் என்றும் கருதுகிறேன். இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்று யாராவது கேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே அன்பும் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றை சொல்லுவது வழக்கம். அந்த ரீதியில் நாம் பார்க்கும் பொழுது வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என்பன அன்பின் எதிரான பதம் ஆகும். என்றாலும் அன்பிற்கு நாம் நாளாந்த வாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒரு அளவிடக் கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "அன்பை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய அன்பு" (“make love“, “fallen in love“, “lots of love“) போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். பண்டைய கிரேக்க தத்துவவாதிகளும் அன்பை நான்கு வகையாக பிரிக்கின்றனர். அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia), காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) ஆகும். அதன் நீட்சியாக மேலும் இன்று இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் போன்றவை அன்பின் வகைகளாக கருதப் படுகிறது. சுருக்கமாக அன்பின் அனுபவத்தை 1] இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்றும், 2] ஒரு வீட்டின் மீது கொண்டுள்ள அன்பு, பெற்றோரின் கடமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் அல்லது இணைப்பு என்றும், 3] பாலியலின் ஆரம்ப உணர்ச்சியினால் ஏற்படும் ஆசை அனுபவம் அல்லது காமம் என்றும் வல்லுநர்கள் பிரிக்கின்றனர். பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் [சுயநலம்] அவசியமாகிறது. அது மாட்டு அல்ல, சுயநலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. ஏன் என்றால், சுயநலமாய் இருக்கக் கூடாது என்று இருப்பதுவே ஒரு சுயநலம் தான். ஒருவர், சில செயல்களை செய்யும் பொழுது, சுயநலம் இல்லாமல் தாம் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச் செயல் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை தருவதால் தான் அப்படிச் செய்கிறார்கள். இதை எவரும் மறுக்க முடியாது. பெரியாரிடம் ஒரு முறை ஒருவர், பொது நலம் என்றால் என்ன என்று கேட்டார், அதற்கு பெரியார், இதோ மழை பெய்கிறதே, இது தான் பொது நலம் என்றார். அடுத்து அவர் சுயநலம் என்றால் என்ன என்று பெரியாரிடம் கேட்டார். அதற்க்கு அவர், இதோ எல்லோரும் குடையை பிடித்துக் கொண்டு நடக்கிறோமே, அது தான் சுயநலம் என்றார். அதாவது ஒருவர் தனது நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பதை சுயநலம் எனலாம். நம்மை உயிரோடு வைத்திருப்பதற்காக நாம் மூச்சு விடுவது கூட உண்மையில் ஒரு சுயநலம் தான். அப்படியே நாம் சிலவேளை முரண்பட்டு நிற்பதும் சுயநலம் தான். எனவே, சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும் போது, உறவுகளைப் பற்றிய சந்தேகங்களை ஆய முற்பட்டால், அன்புக்காக, ஆசைக்காக என்று உறவுகள் அமைவதும், உறவுகளை நாம் அமைத்துக் கொள்வதும் கட்டாயம் நம் அவசியத்திற்காக அல்லது எம் முக்கியத்திற்காக என தெரியவரும். உதாரணமாக காதலும் அப்படித்தான். அவளது அல்லது அவனது நலனுக்காக நான் காதலிக்கிறேன் என்று எவரும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் அல்லது அவன் பின் அலைகிறேன் என்பதே அவரவர் சொல்லக்கூடிய உண்மை நிலையாகும். தமிழ் மூதாட்டி ஔவையார், தனது ஒரு பாடலில், "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு" என்கிறார். அதாவது, குளத்தில் நீர் நிறைந் திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மன மில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களே யானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல. கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ;நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உண்மையில் உறவினராவார் என்கிறார். இதை மெய்ப்பித்தல் போல, ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் சாஃபக்கிளீசு (Sophocles - கிமு 496 - கிமு 406), தனது ஆண்டிகான் [Antigone - 441 BC] நாடகத்தில், தன் சகோதரன் பொலினிக்ஸ் [Polynices] இற்க்காக அல்லது குடும்ப உறவுக்காக, சகோதரி ஆண்டிகான் அரசனையே எதிர்ப்பதை காண்கிறோம். தனது சகோதரனுக்கு, தனது குடும்ப உறவுக்கு, ஒரு மரியாதையான நல்லடக்கம் செய்ய தன்னையே தியாகம் செய்ய துணிகிறாள். "அவனை நானே அடக்கம் செய்வேன் அந்த செயலில் நான் இறந்தாலும், அந்த இறப்பு ஒரு மகிமையாக இருக்கும் அவனால் நேசித்த நான், நான் நேசித்த அவனுடன் [மரண படுக்கையில்] ஒன்றாக படுப்பேன்" (ஆண்டிகான் 85- 87) "I will bury him myself. And even if I die in the act, that death will be a glory. I will lie with the one I love and loved by him" (Antigone 85- 87). உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ் விடத்தில் தோன்றுவது உடமை பூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல என்று எண்ணுகிறேன். ஏனென்றால், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அந்த ஒருவரது உணர்வு தான் தனது அங்கம் அல்லது நீட்சி போன்ற குழந்தை குறித்தும் ஏற்படுகிறது எனலாம். இதே சுய-அன்பானது, தனது குழந்தை கட்கும், பிற நெருங்கிய குடும்ப உறவு கட்கும், சற்று தொலைவான குடும்ப உறவு கட்கும் நீட்டிக்கப் படுகிறது. இதைத் தான் நாம் பண்டைக் கிரேக்க ஆண்டிகான் நாடகத்திலும் பார்த்தோம். இறுதியாக இன்னும் ஒரு பண்டைய இதிகாசமான இராமாயணத்தை பார்ப்போம். இங்கு, கைகேயி பரதன் 14 வருடம் நாடாள வேண்டும் எனவும், அப்பொழுது ராமன் 14 வருடம் காட்டுக்கு போக வேண்டும் எனவும் வரம் கேட்க, தசரதனும் அவ்வாறே வரம் கொடுக்க, தந்தை சொல் மீறாத ராமன் காட்டுக்கு செல்ல, அவனோடு செல்வதே பதிவிரதைக்கான நியதி என்று சீதாதேவி கிளம்ப, அண்ணன் இல்லாத இடத்தில் இருக்க மாட்டேனென லட்சுமணனும் கைகேயிடம் சூளுரைத்து காட்டுக்கு கிளம்புகிறான் என கதை தொடர்கிறது. ஆனால் லட்சுமணின் மனைவி ஊர்மிளாவை அவர்கள் கூட்டிப் போகவில்லை. ஊர்மிளா பதிவிரதை இல்லையா ?, ஏன் ராமன் ஊர்மிளாவையும் கூடிக் கொண்டு வா என்று லட்சுமணை கேட்கவில்லை, எங்கே போயிற்று நியாயம், எங்கே போயிற்று தம்பி என்ற உறவில் அன்பு ? ஊர்மிளா வந்தால், இலட்சுமணன் அவன் கடமையை, அதாவது ராம-சீதாவை சரிவர கவனிக்கும் கடமையை அல்லது தேவையை முழுமையாக செய்ய முடியாது என நம்பியதாலோ ? உண்மையான அன்பு உறவு இருந்தால், தம்பியை தடுத்து இருப்பான், அல்லது தம்பியுடன், சீதை போல் ஊர்மிளாவையும் கூட்டிப் போய் இருக்கவேண்டும், ஆனால் அங்கு ஒரு தேவை தான் முக்கியமாக இருந்து இருக்கிறது, என்றாலும் அதை மறைக்க பல பல காரணங்கள் அங்கு பின்னிப் பிணையப் படுகிறது. நியாயம் எல்லோருக்கும் பொதுவாகவே இருக்க வேண்டும். மற்றது நேர்மையாக சிந்தித்தால், 'உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா' என்பதற்கு உண்மையான நேரான பதிலை இங்கு நீங்கள் காணலாம் ? ஒரு கட்டத்தில், சீதை அக்னி பிரவேசம் செய்ய நேர்ந்ததை தெரிஞ்சு, ஊர்மிளா கொந்தளித்தாள். காட்டில் இத்தனை ஆபத்துகள் இருக்குமென எடுத்துச் சொல்லி ராமன் நீ வரக்கூடாது என சீதைக்கு உத்தரவு போட்டிருந்தால், பதிவிரதையான சீதையால் அதை மீற முடியுமா? பாதுகாப்பிற்கு லட்சுமணன், வேலைகளுக்குச் சீதை எனத் தேவைப் பட்டதால் தானே ராமன் பேசாமல் இருந்து விட்டான். அதனால் தானே சீதைக்கு வனத்தில் இத்தனை ஆபத்துகள் வந்ததென - சீதைக்கு தாயாய் இருந்து குமுறுகிறாள். இது உறவின் உண்மை நிலையை எடுத்து காட்டவில்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், மாறுவேடம் கொண்டு நகர்வலம் வரும்போது துணி வெளுப்பவனின் பேச்சை கேட்டு, சீதையின்பால் சந்தேகம் கொண்டு அவளை தீக் குளிக்க சொன்னதை கேட்டு ஊர்மிளா வெகுண் டெழுகிறாள். சீதையின் கற்பு பற்றி ராமனுக்கு ஐயமில்லை. ஆனா, ஊரார் எதுவும் அவளை தவறாய் பேசி விடக் கூடாது என்று தான் அக்கினிப்பிரவேசம் செய்யச் சொன்னான் என்று அவளை சமாதானப் படுத்த பலர் முயற்சிக்கையில், ஊர்மிளா ராமனிடம், இன்று ஊரார் பேச்சுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்கிறீர்களே! அன்று அயோத்தி மக்கள் எல்லோரும் நீ வனவாசம் போகக் கூடாது என கெஞ்சினார்களே! அப்போது மக்கள் கருத்துக்கு நீ ஏன் செவி மடுக்க வில்லை? அன்று தந்தைக்குக் கொடுத்த வாக்கு தான் முக்கியமென நினைத்த உனக்கு உன் குடும்பம் தானே முன்னுக்கு நின்றது? இப்போது மட்டும் என்ன மக்கள் பற்றிய கவலை? என கேட்கிறாள். பெண்களின் பல கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இல்லாதது போலவே இதற்கும் பதிலில்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
    5 points
  11. இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான் தனது இராணுவத் தளபதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்க, இஸ்ரேல் மீது ஈரான் தற்போது பல ட்ரோன்களைக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. நூற்றிற்கு மேற்பட்ட ட்ரோன்களும், பலிஸ்ட்டிக் ஏவுகனைகளும் இத்தாக்குதலில் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் பதிலடித்தாக்குதலை ஆரம்பிக்கும்போது, அயல் நாடுகள் எவராவது இஸ்ரேலிய விமானங்கள் பறப்பதற்கு தமது வான்பரப்பை திறந்துவிட்டால் அந்த நாடுகளையும் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது. ட்ரோன்கள் இன்னும் இஸ்ரேல் வந்து சேரவில்லை. இஸ்ரேல் அவற்றை அவதானிக்கின்றதாம். அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு உடவுவோம் என்று கூறியிருக்கிறது https://edition.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-04-13-24/index.html மத்திய கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு உதவும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. ஈரானைத் தோற்கடிப்போம் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும், ஏவப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை அமெரிக்கா இடைமறித்திருக்கிறது. இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு நிலை மீது ஹிஸ்புள்ளா ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலிய மக்களை பாதுகாப்பான பகுதிகள் என்று அறியப்பட்ட இடங்கள் நோக்கி நகருமாறு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
    4 points
  12. சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    4 points
  13. வந்துடடேன் வந்துடடேன் என்று இன்னுமா வந்து முடியவில்லை ?😃
    4 points
  14. நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும் இருந்தும், வேறு எதனை எதிர்பார்க்கப் போகின்றீர்கள்" என்றே. இதனால் என்ன பயன்? போர்க் குற்ற விசாரணை எல்லாம் நடக்குமா? எனக் கேட்டால், கண்டிப்பாக இல்லை. ஆனால், ஆகக் குறைந்தது ஒரு சிலருக்காவது, இலங்கை எனும் சொர்க்க புரியில், ஒரு இனப்படுகொலை யுத்தம் இடம்பெற்றதா என கேள்விகளாவது மனசில் எழும். நீங்கள் யாழ்ப்பாணம் போனால், வெளி நாட்டில் இருந்து வந்தவர் என்று அவர்கள் புரிந்து கொண்டால், முச்சக்கர சாரதியில் இருந்து தின்னவேலி சந்தையில் காய்கறி விற்பவர் வரைக்கும் நன்றாக ஏமாற்றுவார். கேள்வி கேட்டால், போருக்கு பயந்து ஓடிப் போனவர் தானே என்றும் சிலர் நக்கலடிப்பர்.
    4 points
  15. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    4 points
  16. இன்னும் நான்கு நாட்கள்தான் உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு முன்னர் குறைந்தது பத்துப் பேராவது கலந்துகொண்டால்தான் போட்டி யாழ்களத்தில் நடக்கும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.😀 @suvy, @ஏராளன், @Eppothum Thamizhan, @MEERA, @தமிழ் சிறி, @kalyani, @சுவைப்பிரியன், @வாதவூரான், @வாத்தியார், @nunavilan, @பிரபா, @Ahasthiyan, @புலவர், @நீர்வேலியான், @நந்தன், @முதல்வன், @nilmini, @ஈழப்பிரியன், @நிலாமதி, @குமாரசாமி, @goshan_che, @கறுப்பி, @Kandiah57
    4 points
  17. நீங்கள் பிராண்டும் போது மற்றவர்களும் திருப்பி பிராண்டுவார்கள். நாங்கள் சில்லரை அலப்பறை. தாங்கள் தாள்காசு அலப்பறையோ???😂
    4 points
  18. உங்களை போல் முட்டு, கொடுத்து கொடுத்து…இப்போ மிக மோசமன மத, இன, பாலின அடக்குமுறையாளரான முல்லாக்களுக்கும் முட்டு கொடுக்கும் நிலையில் நான் இல்லை ப்ரோ… #முல்லாக்களுக்கு முரட்டு முட்டு # மு (ல்லா)ட்டு சந்து ————— ஆனால் அமெரிக்க கூட்டணிக்கு அரை கோவணம் இல்லை. முழு கோவணம்தான். ஏன்? 1. உக்ரேனுக்கு ஆதரவளித்து, மூன்று வருடமாய் முக்கி 21% நிலத்தை மட்டுமே பிடிக்க கூடியவாறு செய்து, அரக்க முடியாத நிலையில் (படைகளை தாம் நேரடியா இறக்காமலே) ரஸ்யாவை, அதன் பலத்தை முடக்கியமை. 2. தனது சகாவான தென் கொரியா, ஜப்பான் மீது தாக்காமல் வடகொரியாவை கட்டுக்குள் வைத்துள்ளமை. 3. இதையே பெரும் சக்தியான சீனாவுக்கு கூட தைவான் விடயத்தில் செய்தமை. 4.சகாவான இஸ்ரேலை நோக்கி ஈரான் அனுப்பிய 99% அனுமான் ராக்கெட்டை, ஜோர்தானில் வைத்து ஊதி நூத்தமை. இதெல்லால்லாம்தான் ஒரு உலக வல்லரசின் அடையாளங்கள். இது முட்டு இல்லை. நடப்பதை பட்டியல் இட்டுள்ளேன். இது முழுக்கோவணம்தான். பக்கதில் இருக்கும், ஒரு கோமாளியால் வழி நடத்தப்படும் உக்ரேனை 48 மணியில் பிடிப்போம் என வெளிக்கிட்டு, 3 வருடமாய், 21% சதவீத நிலத்தை மட்டுமே பிடித்ததும், இதுவும் ஒன்றா? 👆🏼இது அரைகோவணம்தான். 2/300! வீரவேல்…வெற்றிவேல்🤣. அதிலும் சேதம் ஏதுமில்லை. ஓம்…அதுதான் உலக வல்லரசு கூட்டணியின் சகாவாக இருப்பதில் உள்ள நன்மை. ஆனால் இஸ்ரேலுக்கு சல்லி காசு விரயம் இல்லை🤣. ஈரானின் நிலைக்கு 1000 டொலரே பெரிய விடயம். எனக்கு £50 பெரிய காசு. அதுவே @பாலபத்ர ஓணாண்டி க்கு £5000 உம் டிப்ஸ் கொடுக்கும் காசு.
    4 points
  19. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இப்படி ஒரு கேள்வி எழுவதே பிழை என்பது என் எண்ணம். நாவற்குழி குடியேற்றமும், கொழும்பில் தேவை நிமித்தம் போய் வாழ்வதும் ஒன்று என நினைப்பது அவர்களுக்கு தமிழர் போராட்ட வரலாறு தொடர்பான அடிப்படை அறிவே இல்லை எனக் காட்டுகிறது.
    4 points
  20. "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்" உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் . அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது: "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008] இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை. ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம். என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது. ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும் ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி: எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன். குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 , பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில், "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody'] என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம், "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்] 'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம், "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்" 'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான். அவள் அவனுக்குப் பதிலளித்தாள்: "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
    3 points
  21. அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    3 points
  22. பையன் மைண்ட் வொய்ஸ்: அப்பாடா .......... பெரியப்பாவுடன் 10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........! 😂 கிருபன் & பையன்.......! 🤣
    3 points
  23. அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    3 points
  24. முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே பக்கத்தில் உள்ள இன்னொரு சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்துள்ளனர். மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார். Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள். இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. கிடைக்கும் மழைத் தண்ணீரை நிலத்திற்குள் சேமித்து தங்கள் தண்ணீர் தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்: alua camp de mar நன்றி.
    3 points
  25. அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    3 points
  26. இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    3 points
  27. குமாரசாமி அண்ணை... நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂
    3 points
  28. எனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
    3 points
  29. மின்னம்பலம் திமுகவினது இல்லை. எல்லாக் கட்சிகளும் விளம்பரங்களைப் போடுவதைப் பார்க்கின்றேன். கருத்துக்கணிப்பு தெளிவாகச் சொல்வது என்னவென்றால் எவர் வெல்லும் கூட்டணியை அமைக்கின்றாரோ அவர் கட்சிக்கூட்டணியே வெல்லும். அதிமுக, பிஜேபி, பா.ம.க கூட்டணி அமைத்திருந்தால் திமுகவுக்கு பத்துக்குள்தான் வெற்றிவாய்ப்பு உள்ளது. கூட்டணி எப்போதும் ஜனநாயகத்தைக் காப்பாற்றும். ஆனால் சுயநலத்திற்காகத்தான் தமிழ்நாட்டில் கூட்டணிகள் அமைவதும், பிரிவதும் உண்டு. எல்லாமே பகடை பன்னிரண்டுதான்! இப்போது 40 தொகுதிகளுக்குமான கருத்துக்கணிப்பு வந்துள்ளது. அண்ணாமலைக்கும் வெற்றி வாய்ப்பில்லை. ஆனால் கடினமாக முயன்றால் வெல்ல இப்போதும் சந்தர்ப்பம் இருக்கின்றது! வாய்ப்பில்லை ராஜா!😜 பிஜேபி கூட்டணி மூலம் வளர்ந்து வருகிறது. எப்படியும் அதிமுகவுடன் மீண்டும் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று நினைக்கின்றேன்.
    3 points
  30. அகவை என்பது ஒரு எண்ணிக்கை அவ்வளவுதான்! முக்கியம் வேண்டியது ஆரோக்கியமும் வலிமையையும் நல்ல சிந்தனையும் கருத்தாடலும் அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே ஆகவே நான் மௌனமாகிறேன்
    3 points
  31. இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம். நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    3 points
  32. அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வைத் தரவில்லை என்று நாம் சொல்கிறோமோ, அதே அரசுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். தனக்கெதிராகப் போராடியபோது கொடுக்காத விடயங்களை, தன்னுடன் சேரும்போது கொடுத்துவிடும் என்கிறீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். தேவநாயகம், இராசதுரை, டக்ளஸ், தொண்டைமான், கதிர்காமர், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், மகேஸ்வரன் தம்பதிகள் போன்ற தமிழர்கள் அரசில் நேரடியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ அங்கம் வகித்தவர்கள். இவர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டதன் மூலம் சிங்களம் அடைந்த ஒரு பிரச்சார நண்மை என்னவென்றால் தமிழர்கள் எம்மோடு இருக்கிறார்கள், எமது கொள்கைகளை ஆதரிக்கிறார்கள், அவர்களது நலன்களை நாம் பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்கள், ஒருசில தமிழர்கள் தான் முரண்டுபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்தில் தனக்கு நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிந்தமைதான். ஆனால், இத்தமிழ் அரசியல்வாதிகளால் காக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் என்ன? தொண்டைமான் கூட மலையக மக்களின் பல விடயங்களில் அரசுடன் விட்டுக்கொடுத்தே செல்ல வேண்டியதாயிற்று. அவர்களின் அன்றாட வாழ்க்கை நூற்றாண்டுகளாக இன்னும் அப்படியே கிடக்கிறது. ஏனைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று எமக்குத் தெரியும். இத்தனை தமிழ்த் தலைவர்களும் ஏறத்தாள அடிமைகளைப்போன்றே அரசில் ஒட்டியிருந்தார்கள். அப்படியிருக்க, இனிவரும் தலைமுறை சிங்கள அரசுடன் எவ்வாறான இணக்கப்பட்டுடன் செல்லாம் என்று கருதுகிறீர்கள்? இவர்களையும் தமது "தமிழ் நண்பர்களாக" அரசு சர்வதேசத்தில் காட்டாது என்பது என்ன நிச்சயம்?
    3 points
  33. ஓவர் நக்கல்…🤣…. சோத்துக்கு சிங்கி அடிக்கும் எனக்கு சி ஐ ஏ தகவல் சொல்லுமா 🤣 நான் மேலே எழுதியது நடப்பவைகளை வைத்து நான் கருதும், எனது கருத்து. அது எனது கருத்து என்பதால்தான் எந்த டிக் டொக் ஆதாரத்தையும் இணைக்கவில்லை. அண்ணை நான் இவர்களை அச்சா பிள்ளைகள் என சொல்லவில்லை. அவர்களுக்கு சில மூலோபாய குறிக்கோள்கள் உள்ளன. அதில் ஒன்று மத்திய கிழக்கில் ஸ்திரமின்மையை பேணுவது. இன்னொரு ரஸ்யாவில் யெல்சின் அல்லது பழைய புட்டின் போல ஒரு நட்பு சக்தியை வைத்திருப்பது. இரெண்டையும் அடையும்/ தொடர்ந்து பேணும் எத்தனிப்பே நாம் இப்போ காண்பது. இப்போ ரஸ்யா உக்ரேனில் முடக்கப்பட்டுள்ளதா? நிச்சயமாக ஆம். மத்திய கிழக்கில் மட்டும் அல்ல, அண்டைநாடுகளான கசகஸ்தான், ஆர்மேனிய, ஜோர்ஜிய, துருக்மனிஸ்தான் க்கு கூட படை அனுப்பி மேலாண்மையை பேணும் நிலையில் இப்போ ரஸ்யா இல்லை என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுகிறன. ஏன்? முழுப்பலமும் 21% உக்ரேனை தக்கவைப்பதில் செலவழிகிறது. தமக்கு எந்த செலவுமில்லாமல் மேற்கு ரஸ்யாவை உலக இராணுவ அரங்கில் இருந்து வெளியேற்றி வைத்துள்ளது. டிரம்ப் வந்த பின் - நிலைமை நிச்சயம் தலை கீழாக மாறும் (ஏன் என்றால் டிரம்பின் துருப்பு புட்டின் கையில்). ஏதோ ஒரு ஒப்பந்தம் மூலம் புட்டினை தாஜா செய்வார் டிரம்ப். அது உக்ரேனுக்கு பாதிப்பாகவே அமையும். அதற்கு பிரதியுபகாரமாக ஈரானுக்கு வாயளவு உதவியோடு நிறுத்தி கொள்வார் புட்டின். ஆங்கிலத்தில் time is of the essence என்பர். உக்ரேன் விடயத்திலும் அதுதான். வாலி சொன்னது போல் ஈரானின் முல்லா+புட்டின் சாம்ராஜ்யங்கள் ஒரு சேர முடியும் நிலை ஏய்தப்பட - நொவெம்பர் 2024 வரைக்கும் மட்டுமே காலம் இருக்கிறது. இல்லாவிடின் சகல எதிர்வுகூறல்களையும் பொய்யாக்கி - பைடன் வெல்ல வேண்டும். பிகு மேலே எழுதியது என் கருத்து. தனிப்பட்டு என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 1. ஈரானில் சொந்த மக்களை,மத, இன, பால்நிலை, இனச்சேர்க்கை விருப்பு அடிப்படையில் துன்புறுத்தும் முல்லாக்கள் ஒழிய வேண்டும். 2. ரஸ்யாவில் ஜனநாயகத்தை கேலிகூதாக்கி, ஆயுட்கால அதிபராகியுள்ள, அன்நாட்டின் வளங்களை ஒலிகார்குகளு தாரை வார்த்த புட்டின் - ரஸ்யர்களுக்காக - ஒழிய வேண்டும் 3. ஏனைய சிறிய ஐரோபிய தேசிய இன வழி நாடுகளின் சுய உரிமையை கேள்விக்குள்ளாக்கி mother Russia விற்குள் போலந்து முதல் பெலரூஸ் வரை தேசிய இனங்களை விழுங்கும், புட்டினின் 2ம் ரஸ்ய சாம்ராஜ்ய கனவு தோற்கடிக்கப்படவேண்டும். 4. இந்த கனவின் முதல் போரிற்கு முகம் கொடுத்துள்ள உக்ரேனிய தேசிய இனம் வென்று, அதன் சுயநிர்ணய உரிமை நிலை நாட்டப்படவேண்டும். 5. பலஸ்தீனருக்கும், இஸ்ரேலுக்கும் கீறின் லைன் எனப்படும், 1969 இல் இருந்த சர்வதேச அங்கீகாரமுள்ள எல்லைகள் அடிப்படையில் இரு நாடுகள் அமைய வேண்டும்.
    3 points
  34. எம்மவர்கள் தெற்கில் சென்று சிங்களம் தெரிந்தே அரச அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள்.வடக்கு கிழக்கில் சிங்கள உத்தியோகத்தர்கள் மக்களிடம் சிங்களத்தில் பேசி தமது அலுவல்களை செய்யும் படி மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வற்புறுத்தி சிங்களம் பேச முடியாத தமிழ் மக்களை மிகுந்த அசெளகரியத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.
    3 points
  35. தனிப்பட்ட விதமாக பையனின் ஆங்கில அறிவுபற்றி நக்கலாக எழுதியது நீங்களே! கையை தூக்கிக்கொண்டு போய் இங்கிலாந்தில் இருந்துகொண்டு எதோ Professional Migration இல் போனமாதிரி படம்காட்ட வேண்டாம்! பலதடவை எழுதியாகிவிட்டது. ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே அது மட்டுமே உங்கள் அறிவை தீர்மானிக்காது!
    3 points
  36. சுற்றுலா என்றாலே புதிய இடங்கள் புதிய தங்குமிடங்கள், ஹோட்டல்கள் அதுதான் எல்லாவற்றிற்கும் தயாராகப் போக சொல்லியிருக்கிறார்கள்.......நீங்கள் வேற........! 😂 பல்மா, ஸ்பெயினுக்கு அருகில் கச்சதீவின் அமைவிடம் போல் ஒரு கச்சான் அளவு தீவு.........! 😁
    3 points
  37. நக்கல்களை நிற்பாட்டினால் கருத்தாடலாம். நானும் பொறுப்போடு விலகுவேன்.
    3 points
  38. இந்த லிங் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா @பாலபத்ர ஓணாண்டி 🤣🤣🤣 இஸ்ரேலில் ஒரு சிறுமிக்கு தலையில் சிராய்ப்பு காயம். அதை விட வேறொன்றும் இல்லை. இது தன் மக்கள் மத்தியில் நானும் ரவுடிதான் என காட்ட ஈரான் செய்த புஸ்வாண வேடிக்கை. ——- உண்மையில் தூதரகத்தை தாக்குவது மிக மோசமானதும், எதிர்பாராத பின்விளைவுகளை தரகூடியதும், சட்டமீறலுமாகும். ஆனால் இஸ்ரேல் தந்திரமாக உரிமை கோரவில்லை. ஆனால் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு உரிமை கோரி ஈரானிய முல்லா அடிப்படைவாத அரசு நீண்ட சிக்கலில் மாட்டியுள்ளது. @வாலி இதை பற்றி முன்னர் எழுதினார். ஈரானுக்கும், இஸ்ரேலுக்கு இதுவரை நடந்தது புரொக்சி யுத்தம். ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வைத்து ஈரானும், உரிமை கோராமல் இஸ்ரேலும் தாக்கி கொண்டன. உள்நாட்டில் ஏலவே பலர் எதிர்க்கும் ஈரானிய முல்லா அடிப்படைவாதம் - இஸ்ரேல் மீது கை வைத்தால், ஈரானில் தன் இருப்புக்கே ஆபத்து என்பதை உணர்ந்து நேரடியாக இறங்குவதில்லை. ஆனால் மேற்கு, இஸ்ரேல் படிபடியாக முல்லாகளிடம் இருந்து ஈரானை மீட்பது (regime change) என்ற முடிவுக்கு வந்து, ஈரானை சீண்டி இந்த நிலையை உருவாக்கியுள்ளன. தூதரக தாக்குதல் ஈரானுக்கு ஒரு செக்மேட். பதிலடி கொடுக்காவிட்டால் - உள், வெளிநாட்டில் முல்லாக்கள் மீதான, பயம், மரியாதை போய் விடும். பதிலடி கொடுத்தால் - முல்லாக்கள் ஆட்சியையே ஆட்டம்காண வைக்க கூடிய போர் வரக்கூடும். ஆனால் நடந்தது என்ன? ஈரான் தாக்கியும், ஒரு பாதிப்பும் இல்லை. மொக்கேனப்பட்டதே மிச்சம். ஆனால் இனி இதை வைத்தே இஸ்ரேல் எழும்பி ஆடும். இது மட்டும் அல்ல, முதலில் ரஸ்யாவை உக்ரேனில் அரக்க முடியாமல் மாட்ட வைத்ததும் - சிரியா போல் இங்கேயும் ராஸ்யா தலையிடுவதை தடுக்க அல்லது தலையீட்டின் பாதிப்பை குறைக்க. இங்கே நடப்பது ஒரு 4D chess விளையாட்டு.
    3 points
  39. சிரியாவுக்குள் ஈரானிய தூதரகத்தை தாக்கியது மிகவும் மோசமான இஸ்ரேலின் சர்வதேச பயங்கரவாதமாகும். இதனை யதார்த்தமாக சர்வதேசம் கண்டித்திருக்க வேண்டும்..! ஆனால் இஸ்ரேலும் அதன் அமெரிக்க மேற்குலக அடிவருடிகளும் செய்தியை வெளியிடுவதோடு அடங்கிவிட்டார்கள். இரண்டாம் உலகப் போர் கூட ஒரு தூதரக அதிகாரியின் கொலையுடனே தான் ஆரம்பமானது... என்ன தான் பல உள் காரணிகள் இருப்பினும். இஸ்ரேலின் எல்லை தாண்டிய உலக பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது கடினம். ஈரான் என்ற சுயாதிபத்திய நாட்டின் தூதரகத்தை தாக்கி அதன் அதிகாரிகளை கொலை செய்த இஸ்ரேலின் பயங்கரவாதம் சர்வதேச நீதியின் பால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக.. ஈரானின் பலவீனமான பதில் தாக்குதலால் அல்ல என்பதுவே எங்கள் கணிப்பு.
    3 points
  40. இஸ்ரேலின் அடாவடியான நடவடிக்கைகளுக்கும், பலஸ்தீனர்களை பட்டினிபோட்டு, கைது செய்தவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வதற்கும் ஒரு போதும் ஆதரவளிக்கப்போவதில்லை. அதற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்காவும் மத்தியகிழக்கில் ஒரு பாடம் படிக்கவேண்டும். ஆனாலும் ஈரானின் ஜனநாயகமற்ற மதவாதிகளுக்கும் ஆதரவு கிடையாது.
    3 points
  41. இஸ்ரேலிய ஈரான் யுத்தத்தின்மூலம், பலஸ்த்தீன மக்களின் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அம்மக்களின் அவலங்கள் உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு விடும். இஸ்ரேலோ, ஈரானோ இந்த யுத்தத்தில் வெல்லப்போவதில்லை. வெறும் அழிவுகள் மட்டும்தான் மிஞ்சப்போகிறது. பலஸ்த்தீன அரசினை அங்கீகரித்து, அவர்கள் மீதான ஆக்கிரமிப்பினை நிறுத்துவதுதான் இப்பிரச்சினைகளை முடிவிற்குக் கொண்டுவர ஒரே வழி. ஆனால், இஸ்ரேலிய அரசு இதற்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை. மத்திய கிழக்கு தொடர்ந்தும் எரிந்துகொண்டே இருக்கப்போகிறது. இதன்மூலம் ஈரானைப் பலவீனப்படுத்த இவர்களால் முடியாது. ஏவப்பட்டவை ஏவுகணைகள் மட்டும்தான். அவற்றைச் சுட்டு வீழ்த்துவதுடன் இவர்களின் பணி முடிந்துவிடும்.
    3 points
  42. என்னும் 6 நாள் தான் இருக்கு ஒரு த‌ரும் ஆர்வ‌மாய் போட்டியில் குதிச்ச‌ மாதிரி தெரிய‌ல‌.................. பையா டேய் நீ க‌வ‌லைப் ப‌டாத‌ போட்டியில் நீ க‌ட‌சியில் வ‌ந்தாலும் முத‌ல் ஆளா க‌ள‌த்தில் குதிச்சியே அது தான் துணிவு இப்ப‌டி சொல்லி என்ர‌ ம‌ன‌சை நானே தேர்த்திக் கொள்ளும் சூழ் நிலைக்கு வ‌ந்து விட்டேன் லொல்😁.......................................
    3 points
  43. பொய் சொல்லலாம். ஆனால்... ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக்கூடாது. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன். வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.." என்ற மாதிரி, உங்கடை கதை போகுது. 😂
    3 points
  44. ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    2 points
  45. டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில் அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும் செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது. வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும் 2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது. நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில் வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால், Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம் The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815) கொழும்பு வை எடுத்துக்கொண்டால் பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல இனம் சனத்தொகை மொத்த % 1 சிங்களவர் 265,657 41.36 2 இலங்கைத் தமிழர் 185,672 28.91 3 இலங்கைச் சோனகர் 153,299 23.87 4 இலங்கையின் இந்தியத் தமிழர் 13,968 2.17 5 இலங்கை மலேயர் 11,149 1.73 6 பறங்கியர் 5,273 0.82 7 கொழும்புச் செட்டி 740 0.11 8 பரதர் 471 0.07 9 மற்றவர்கள் 5,934 0.96 10 மொத்தம் 642,163 100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது] இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession [amnesty international அறிக்கை] Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights. THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer நன்றி
    2 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.