Jump to content

Leaderboard

  1. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      14894


  2. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      76759


  3. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      15582


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      29170


Popular Content

Showing content with the highest reputation on 04/18/24 in all areas

  1. இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    3 points
  2. # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG LSG MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH Select 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) KKR #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) LSG 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JOS BUTTLER 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) VIRAT KOHLI 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JOS BUTTLER 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH
    2 points
  3. அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    2 points
  4. குமாரசாமி அண்ணை... நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂
    2 points
  5. பகிர்வுக்கு நன்றி. டொமினோஸ், பீட்சா ஹட் இரெண்டிலும் தக்காளி சோஸ்தான் கொடுத்தார்கள். யாழ்பாணத்து அரிய வகை ஏழைகள் இப்படி எல்லாம் சந்தோசமாக இருப்பதை பார்க்க - சிலருக்கு கரோலினா ரீப்பர் சோஸ் சாப்பிட்டது போல உறைக்கப்போகுது🤣. # எரியுதடி மாலா
    1 point
  6. Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀
    1 point
  7. 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற… சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
    1 point
  8. பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    1 point
  9. அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......! 😂
    1 point
  10. எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    1 point
  11. சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    1 point
  12. எனது மனைவியின் அறுபதாவது பிறந்தநாளை பிரான்சில் உறவுகளுடன் கொண்டாட போகிறீர்களா? வெளியே எங்காவது போவோமா என்று மக்கள் கேட்டனர். எனக்கும் ஓய்வு தேவை வெளியில் போவோம் என்றேன். கடையை பூட்டவேண்டும் என்றால் எத்தனை நாட்களுக்கு முன் உங்களுக்கு சொல்லவேண்டும் என்றபோது ஒரு கிழமை போதும் என்றிருந்தேன். போன கிழமை இதிலிருந்து இத்தனை நாட்கள் கடையை பூட்ட அறிவியுங்கள் 15 இலிருந்து 25 வரையான வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடுப்புக்களை தயார் செய்யுங்கள் என்றனர். என் மக்களுக்கு மிக மிக சவாலான விடயம் எனக்கு தெரியாமல் எதையாவது செய்வது. தமிழிலோ பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ ஏன் சிங்களத்தில் கூட எனக்கு தெரியாமல் செய்வது கடினம். இது surprise பயணம். அதிலும் இது வெளிநாடு. (பாஸ்போர்ட் கேட்டிருந்தார்கள்) பணம் எவ்வளவு கொண்டு வரவேண்டும் என்று கேட்டேன் ஒரு சதமும் கொண்டு வரவேண்டாம் என்றார்கள். அந்த நாளும் வந்தது. காலையில் மக்கள் மருமக்கள் பேரன் அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்தோம். முடிந்தவரை எங்கே போகிறோம் என்பதை கவனிப்பதை தவிர்த்து வந்தேன். விமானம் ஏற முன்னரும் வரும் அறிவித்தல்களை காதை பொத்தி தவிர்த்தேன். பிள்ளைகள் மிகவும் ஆர்வத்துடன் செய்திருப்பதை குழப்ப விரும்பவில்லை. ஆனாலும் பக்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பன்னர்களில் சில பெயர்கள் வருவதை காண்பதை தவிர்க்க முடியவில்லை. விமானத்திலும் அறிவித்தல்களை கைட்பதை தவிர்த்தாலும் வந்து இறங்கியதும் கேட்டார்கள் எங்கே நிற்கிறோம் என்று. இதுக்கு மேல சொல்லாமல் இருக்க முடியாது. Palma என்றேன். சுற்றுலாவில் இருந்து தொடரும். ..
    1 point
  13. கண்டவரெல்லாம் பாவித்தது என்கிறீர்களா??🤣
    1 point
  14. தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ? Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison, 48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict. செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.
    1 point
  15. துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது.
    1 point
  16. பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி 04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....! 😁
    1 point
  17. இதற்கான சின்ன உதாரணம் Pearl harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    1 point
  18. Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான். நமது favourites 1. Bleu de chanel 2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue. Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.
    1 point
  19. குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள். இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
    1 point
  20. இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    1 point
  21. நன்றிகள் அண்ணை நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.
    1 point
  22. நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று.
    1 point
  23. இதனை வேற சொல்லித்தான் தெரியனுமா ......பங்காளி மாட்டிட்டாரு ....தமிழிலில் ஒரு பழமொழி "ஆழம் தெரியாமல் காலை விடாதே " சும்மாவா சொன்னார்
    1 point
  24. பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........! 😂
    1 point
  25. ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால் கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச் சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல் என‌ நான் ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால் நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான் ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
    1 point
  26. @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான காணோளியை இணைக்கிறேன். பி. கு அனுமதி பெறாமலே😂
    1 point
  27. ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    1 point
  28. சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல, சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.
    1 point
  29. அது 1000 வ‌ருட‌த்துக்கு முத‌ல் எம் முன்னோர்க‌ள் ப‌ய‌ன் ப‌டுத்தின‌ சொல்ல‌ இங்லாந் கார‌ன் சுட்டு த‌ங்க‌ட‌ மொழி ஆக்கி விட்டான் ஹா ஹா😂😁🤣..........................
    1 point
  30. 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் யாழை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் யுவதி அமு 29 DEC, 2023 | 12:35 AM (நெவில் அன்தனி) இலங்கையின் வட பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற 17 வயது யுவதி 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் பயிற்சி குழாத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வட லண்டனைச் சேர்ந்த சகலதுறை வீராங்கனையான அமுருதா, பயிற்சிக் குழாத்தில் இணைக்கப்பட்ட செய்தியை கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அமு என கிரிக்கெட் அரங்கில் செல்லமாக அழைக்கப்படும் இந்த யுவதி கடந்த ஜூலை மாதம் தனது 16ஆவது வயதில் சன்ரைசர்ஸ் சிரேஷ்ட அணியில் முதல் தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, கவுன்டி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரபல மிட்ல்செக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 7 வயது சிறுமியாக இருந்தபோது அமுவின் ஆற்றலை நோர்த் லண்டன் கிரிக்கெட் கழகம் முதன் முதலில் இனங்கண்டது. யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தில் பிரித்தானியாவில் பிறந்த அமு, ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து குழாத்தில் இணைந்து உயர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார். உள்ளூர் மகிளிர் கிரிக்கெட் போட்டிகளில் சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் அமு, அடுத்த வருடம் இலங்கை வருகை தரவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் அடுத்த வருடம் விளையாடும்போது அமுவும் அத் தொடரில் இடம்பெறுவார் என இலங்கை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அமு இளம் வயதிலிருந்தே கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ஏனெனில் அவரது தந்தை சிவா சுரேன்குமார், யாழ். சென். ஜோன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார். 1990இல் நடைபெற்ற 87ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் சமரில் அவர் குவித்த 145 ஓட்டங்கள் இன்னிங்ஸ் ஒன்றில் ஒருவர் பெற்ற சாதனைக்குரிய அதிகூடிய எண்ணிக்கையாக இருக்கிறது. பாடசாலை கல்வியை நிறைவு செய்த பின்னர் இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்த சிவா சுரேன்குமார் அங்கு லோகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் சிரேஷ்ட புதல்வியாக அமுருதா 2006ஆம் ஆண்டு பிறந்தார். அமுருதாவின் ஆற்றல் குறித்து கருத்து வெளியிட்ட நோர்த் லண்டன் கிரிக்கெட் கழக அதிபர் மாட்டின் இஸிட், 'அவரிடம் குடிகொண்டுள்ள இயல்பான கிரிக்கெட் ஆற்றல்கள், கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்புத்தன்மை என்பன அவரை கண்ட முதல் சந்தர்ப்பத்திலேயே எங்களைப் பிரமிக்கவைத்தன. அடுத்த தலைமுறையில் அதி உயிரிய ஆற்றல் மிக்க வீரராங்கனைகளை இனங்காணத் துடிக்கும் தேர்வாளர்களை அமுருதா வெகுவாக கவர்ந்துள்ளார்' என்றார். தனது முன்னேற்றத்தைப் பயன்படுத்தி விளையாட்டில் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்த விரும்புவதாக அமு தெரிவித்துள்ளார். 'கிரிக்கெட் விளையாட்டில் பாலின சமத்துவத்தை வளர்க்க நான் விரும்புகிறேன். உதாரணமாக பெண்கள் கிரிக்கெட் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் அதிமாக வெளியிடவேண்டும். அத்துடன் கிரிக்கெட்டில் அதிகளவிலான பெண்களை ஈடுபடச் செய்யவேண்டும். நான் எனது பெற்றோரினால் உந்தப்பட்டேன். ஜொ ரூட் (இங்கிலாந்து வீரர்), அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீராங்கனை எலிஸ் பெரி ஆகியோரே எனது முன்மாதிரி' என அமு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/172664
    1 point
  31. அவரது அடுத்த பயணம் வரை இந்தப்பயணம் தொடரும் காத்திருங்கள், பொறுத்திருங்கள், அஞ்சாதீர்கள் வாசிப்பதற்கு. அப்படித்தான் எனக்கு சிறியரும் சுவியரும் ஆலோசனை தந்து ஊக்கப்படுத்தினார்கள், அதை உங்களுடன் பகிர்கிறேன். பயப்படாதீர்கள் வந்துகொண்டே இருப்பார். கண்டிப்பாக இவர் பார்க்க வேண்டியவர் பாதிக்கால் மருத்துவரை.
    1 point
  32. இன்னும் 48 மணித்தியாங்களுக்கு குறைவான நேரமே உள்ளது. யாழ்களப் போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் தாமதிக்காமல் போட்டியில் கலந்துகொள்ளுங்கள். போட்டியில் கலந்துகொண்ட @ஏராளன் மற்றும் @நிலாமதி அக்கா வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் குறைந்தது 5 பேராவது கலந்துகொண்டால்தான் போட்டி நடக்கும்!
    1 point
  33. முடிந்தளவு யாழில் இம்முறை எடுத்து வரும் தின்பண்டங்களை உற்பத்தியாளர்களிடமே வாங்கினேன். வெளிநாட்டுக்கு, எனக்கு என சொல்லியே வாங்கினேன். ஒருவர் கூட ஏய்க்கவில்லை. அதுவும் அந்த எள்ளுபாகு வித்த அம்மா, “சாப்பிட்டு பாருங்கோ, சாப்பிட்டு பாருங்கோ” என எனக்கும் ஆட்டோ ஓட்டியவருக்கும் சேர்த்து ஒரு பக்கெட்டையே இனாமாக தந்து விட்டார். நான் வங்கியதோ வெறும் 10 பக்கெட். இதில் இவர் இனி எங்கே இலாபம் பார்பது?(11க்கு விலை கொடுத்தேன்). போர் பலதை பறித்து கொண்டாலும் என் மக்களின் என் மக்களின் தன்மானத்தை, நாணயத்தை பறிக்கவில்லை என்பதுதான் உண்மை. எல்லா சமூகத்திலும் கறுபாடுகள் உண்டே. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. இதை இங்கே தூக்கி பிடிக்கும் புலம்பெயர் சமூகம் மட்டும் என்ன திறமா? இலண்டன் கடைகளில் விலை அடிக்காமல், நான் போனால் ஒரு விலையும், என் இளவயது மகன் போனால் கூடிய விலையும் பல தரம் அடித்துள்ளார்கள். எனது திரியில் கூட பதிந்தேன், எப்படி 80ரூபாய்க்கு ஊரில் மஞ்சள் கடலை வாங்கி அதை இங்கே 500 ரூபாய்க்கு விற்கிறார்கள் என.
    1 point
  34. பஞ் அண்ணா சொன்ன‌து முற்றிலும் உண்மை இதை விட‌ ப‌ல‌வித‌மாய் யோசிச்சு காசு அடிக்கும் கூட்ட‌ம் இருக்கின‌ம் / அப்ப‌டியான‌ கூட்ட‌ம் க‌ஸ்ர‌ம் என்று சொல்லி க‌ஞ்சா வேண்டுவ‌துக்கு ப‌ல‌ பொய்க‌ளை அவுட்டு விடுங்க‌ள் ந‌ம்ம‌ல‌ மாதிரி ஏமாளியில் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ பார்கேட்டில் இருப்ப‌தை எடுத்து கொடுத்து விடுவோம் பாவ‌ம் பார்த்து.......................
    1 point
  35. வந்துடடேன் வந்துடடேன் என்று இன்னுமா வந்து முடியவில்லை ?😃
    1 point
  36. ரைட்டு, சாத்ஸ் கொச்சிக்காயை கடித்தே விட்டார்🤣. பிகு 1. ஒரு மனிதன் ஒரு நாட்டுக்கு போய் தன் பார்வையில் எழுதிய ஒரு பயணகட்டுரைக்கு (அதில் சொல்லப்பட்டவை கொஸ்பெல் உண்மைகள் என நான் சொல்லவில்லை, நான் கண்டதன் அடிப்படையில் என் கருத்துக்கள் மட்டுமே) - ஒரு மாதமாக சம்பந்தமே இல்லாத பல திரிகளில் குய்யோ….முறையோ என கதறி திரியும், உங்களையும் உங்கள் சகாக்களை நினைக்க பரிதாபமாகவே உள்ளது. 2. சேவல் கூவாமல் விட்டாலும் பொழுது விடியும். நீங்கள் யாழில் எப்படி கதறினாலும் இலங்கையில் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கும் - நான் கண்டு வந்து எழுதியது - இப்போ இலங்கையில் உள்ள நிலைமை என நான் காண்பதை. யாழில் எழுதும் பல இலங்கை வாசிகள் உளர். எவரும் நான் சொன்னதை மறுக்கவில்லை. நான் எழுதுவது பிழை என்றால் என்னை திருத்துங்கள் என நானே சொன்ன பின்னும். சிலர் வரவேற்று கருத்திட்டுள்ளனர். எதிர்மறையாக எழுதியோர் பலர் 20+ வருடங்களா இலங்கை போகாதோர். @MEERA @nedukkalapoovan சில கேள்விகளை எழுப்பினர் பதில் கூறினேன். அவர்கள் நிலை இலங்கையில் அப்படி ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதாக படுகிறது. இருக்கட்டும். என்னது போலவே அவர்கள் அனுபவத்தையும் மறுக்கும் தகுதி எனக்கில்லையே. 3. இலங்கை “சொர்க்காபுரி” என எங்கும் நான் எழுதவில்லை. இலங்கை சொர்க்கம் எண்டால் நான் ஏன் இந்த குளிருக்குள் கிடந்து மாரடிக்கப்போகிறேன். “நிலமை எதிர்பார்த்தளவு மோசமில்லை” என்பதற்கும் “நாடு சொர்க்கம்” என்பதற்கும் உள்ள வேறுபாடு புரியாத அளவுக்கு மூளை சிலருக்கு சக்கு பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது. பிகு:பிகு: மேலே “சொர்கம்யா” என எழுதியது நையாண்டி. கூடவே எலி பிடிக்க சீஸ் தூவது போல், இப்படி எழுதினால் யாருக்கு அதிகம் பத்தும் என ஒரு பரிசோதனையும். காங்கிராட்ஸ் - போட்டியின் வெற்றியாளர் நீங்கள்தான்.
    1 point
  37. நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம்.
    1 point
  38. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    1 point
  39. வெய்யில் பிடித்த இடம் எல்லாம் கறுத்து இருக்கு. 😂
    1 point
  40. பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........! 👍
    1 point
  41. நீங்கள் எந்த உறுப்பை தயார் செய்தீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளோம்? இந்த பால்மா எங்கு தம்பி இருக்கு?
    1 point
  42. என்னும் 6 நாள் தான் இருக்கு ஒரு த‌ரும் ஆர்வ‌மாய் போட்டியில் குதிச்ச‌ மாதிரி தெரிய‌ல‌.................. பையா டேய் நீ க‌வ‌லைப் ப‌டாத‌ போட்டியில் நீ க‌ட‌சியில் வ‌ந்தாலும் முத‌ல் ஆளா க‌ள‌த்தில் குதிச்சியே அது தான் துணிவு இப்ப‌டி சொல்லி என்ர‌ ம‌ன‌சை நானே தேர்த்திக் கொள்ளும் சூழ் நிலைக்கு வ‌ந்து விட்டேன் லொல்😁.......................................
    1 point
  43. எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக்தியை தாறது. கொஞ்ச நாளைக்கு "முன் லைனிலே, பொசிசன் எடுத்து நிக்கப்போறன் - ஓவர்" ஒருகாலத்தில் (மைத்திரி வந்த போது) கொழும்பில் போய் இருப்பது (ஊரில் இருக்க முடியுமா தெரியவில்லை) திட்டமாக இருந்தது. கோத்தபாயவின் வருகை, கொரோனாவின் தாக்கம், பொருளாதார நெருக்கடி இதனால் முடிந்தவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு ஓடியதால் தற்போது வந்திருக்கும் Brain Drain போய் இருக்கும் எண்ணத்தை வெகுவாக பாதித்துள்ளது. இப்பத்தான் 38ஆவது வயசு நடப்பதால் பென்சன் எடுக்கும் காலம் பத்தி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பொருளாதார ரீதியில் சிறு உற்பத்தி ஏற்றுமதிகளோட மட்டுமில்லாமல் தகவல் நுட்பத் துறை சார்பான ஏற்றுமதிகளை எமது பக்கங்களில் ஊக்குவிப்பது தான் இப்போதைக்கு நாங்கள் லடயஸ்பொறா டமில்ஸ் செய்ய வேண்டியது/செய்யக் கூடியது. ஆனால் யாழ் மாவட்டத்தில் வேலை வாங்குவது மிகவும் கடினம். உதாரணத்துக்கு எனது நண்பன் ஒருவன் ஒரு சுயதொழில் செய்தார். அவரின் operations ஐ பாத்தவுடனேயே அதில் பல குறைபாடுகளை கண்டு பிடித்துவிட்டேன். இந்த இந்த மாதிரி செய், இத ட்ரை பண்ணு இன்னும் லாபத்தில ஓடும் எண்டு சொன்ன போது உதெல்லாம் வெளிநாட்டுக்குத்தான் சரி, எங்கட ஆக்களுக்கு உதுகள செய்ய பஞ்சி எண்டு சொல்லிப் போட்டான். ரெண்டு வாரியத்தில அவனிண்ட லாபத்தை விட கால்வாசி சம்பளத்தில அரச வேலை வந்தவுடனேயே பிஸினசையும் மூடிப்போட்டு இருக்கிறார். அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள். பொருளாதார இறுக்கத்தின் பின்னர் எனது நண்பர்களில் பல்கலை போன 90% எஞ்சினியர்/டொக்டர் ஊரிலே இல்லை. இருப்பவர்கள் ஆங்கில அறிவு போதாமையால் போகமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
    1 point
  44. ஊருக்கு போய் வருபவர்களில் பலவகை இருக்குது . ஊரில் இருந்து வியபாரம் செய்பவர்கள் அடிக்கடி போய் வருவார்கள் முட்டை போட்ட ஆமை போல் அமைதியாக இருப்பார்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது போனின் ரிங் சத்த வேறு பாடு மூலமே ஆள் எங்கு நிக்கிறார் என்று தெரியும் . இன்னொரு வகை முப்பது நாப்பது வருஷம் கழிந்து ஊர் பக்கம் போனவர்கள் அப்படியானவர்கள் ஊரை பார்த்த புளுகில் அவர்கள் ஏதாவது வாட்சப் குழுமத்தில் இருந்தால் அந்த குழுமத்தில் சிங்கன் ஊரில் நிக்கும் காலம்மட்டும் பனாட்டு வேப்பமரம் பணம் கிழங்கு கருவாடு எல்லாம் இலவச ஒளிபரப்பில் படமாய் கொட்டி மண்டை காய வைப்பார்கள் .குழந்தையின் ஆனந்த ஆட்டத்தை ரசிப்பது போல் அமைதியாக இருந்துட வேண்டியதுதான் 😀 அடுத்த கூட்டம் ஊரைபார்த்த புளுகில் தாங்கள் ஊரில் இருக்கும்மட்டும் கனவு இடங்களின் விலையை பார்த்து உடனே காணியை வேண்டி மூன்று மாடி வீடும் கட்டி கமராவை பூட்டி விட்டு இங்கு வந்து கமராவுக்குள் தங்கள் வீட்டை பார்த்து ஆனந்தப்படும் கூட்டம் இருக்குது அங்கிருக்கும் வசதியில்லாத ஆரையாவது குடியேற்றி இருக்கலாமே என்று கேட்டால் ஓம் இரவு வந்தால் லைட் போட ஒரு ஆளை வேலைக்கு வைத்து இருக்கிறேன் என்பார் .😀இரண்டு மூன்று வருடத்துக்கு ஒருக்கா ஊர் போறவர்களுக்கு ஏன் வீடு தேவை? அடுத்தது இங்கிருக்கும் மட்டும் வாட்சப் குழுமத்தில் புலி பற்றி எதாவது செய்தி வந்தால் வீழ்ந்து விடாத வீரம் அப்படி இப்படி உசுப்பேத்தும் ஸ்ட்டேட் போட்டு கொண்டு இருப்பவர் ஊர் போய் வந்த வுடன் புலி புலித்தலைமை எல்லாத்தையும் போட்டு திட்டும் வகை இந்த சேர்க்கையில் யாழிலும் ஒரு சிலர் உள்ளனர் . ஆனால் எல்லாத்திலும் ஒரு மோசமான கூட்டம் உண்டு அவர்கள்தான் நீங்கள் சொல்லும் ஆட்கள் ஊரில் இருபவர்களுக்கு படம் காட்டும் கூட்டம் அனேகமாக அவர்கள் சோசல் பணத்தில் அரசின் உதவிகளை பெற்றுகொள்பவர்கள் இவர்கள் ஊர் போய் வந்தால் அங்கு அப்படி இப்படி ஆகா ஓகோ என்று இலங்கையரசின் உத்தியோகப்பற்று அற்ற உல்லாசபயண விளம்பர முகவர் ஆட்டம் ஆட்டம் காட்டுவார்கள் .அத்துடன் அடிக்கடி போய் வருவார்கள் . இதுக்குள் @goshan_cheஎல்லாத்தையும் ஒரு செய்தியாளர் போல் கவனிக்க முயற்சி பண்ணியிருக்கார் . இப்ப விடயம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் ஒன்றுக்கு ஒன்று வந்தால் யார் போவார்கள் அரச உதவி கூட்டம் மட்டுமே போகும் காரணம் அதுகளுக்கு இங்கு சிலவு செய்ய முடியாது . அடுத்த உண்மை எந்த ஒரு காலமும் யுரோவுக்கு அல்லது பவுனுக்கு நிகராக இலங்கை நாணயம் வலுபெற போவதில்லை காரணம் இலங்கையை சுற்றி கடல் மாத்திரம் அல்ல கடனும் இருக்கிறது.
    1 point
  45. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித எதிர்பார்ப்புகளுடன் இலங்கைக்குப் போவதால் அவரவர் அனுபவங்களும் வேறுபடுகிறது.. என்னைப் பொறுத்தவரையில் எனது அனுபவங்களின் படி அங்கே உள்ளவர்களுடன் 2009 முன் 2009 பின் பற்றி கதைப்பதை விரும்புவதில்லை, ஏனென்றால் எனது தந்தை கூறுவது நீ இங்கே வந்து ஏதாவது சொல்லிவிட்டு போய்விடுவாய் பிறகு ஏதும் என்றால் எங்களுக்குத் தானே கஷ்டம் என்று. அது உண்மை என்பதால் தேவையில்லாமல் கதைப்பது இல்லை. அதேபோல எனது அம்மாவின் மறைவிற்குப் பின் அனேகமாக ஒவ்வொரு வருடமும் போவதால் சில விடயங்கள் /பழக்கவழக்கங்கள் முன்னரை விட அதிகரித்துள்ளது போலவும்.. சில விடயங்களில் முன்னேற்றம் போல இருந்தாலும் எங்களுடைய அடையாளத்தை இழக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. சில நேரங்களில் வளங்கள் இருந்தும் அநியாயமாக வீணக்குகிறார்கள் அல்லது பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என கவலைப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு ஆடம்பரங்கள், தேவைக்கு அதிகமான திருமண மண்டபங்கள் தேவைதானா என்றெல்லாம் யோசிப்பதுண்டு..ஆனால் பல விடயங்களில் அவர்களாக உணராமல் ஒன்றும் கதைத்து பயனில்லை என்பதால் பேசாமல் இருப்பதுண்டு. இப்பொழுதெல்லாம் புலம்பெயர்ந்தோர், அங்கே வாழ்வோர் என ஒப்பிட்டுப் பார்ப்பதை கூடியளவு தவிர்ப்பதையே விரும்புகிறேன். ஆனால் ஊருக்கு போய்விட்டு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் எங்களது தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன். ஊருக்குப் போகிறேன்.. பார்க்கிறேன்..திரும்ப அவுஸ் வருகிறேன் என்ற ரீதியில்தான் எனது பயணங்கள் உள்ளன. ஒரு மாதிரி 5 பக்கங்களையும் வாசித்து எனது எண்ணத்தையும் பகிர்ந்துள்ளேன்.😅 பயண அனுபவத்திற்கு நன்றி கோஷான்..
    1 point
  46. நிறையப் பேரை நெளிய வைத்து விட்டது, யாழிணையத்தில் போட்டால் முகநூலில் ரியாக் ஷன் வரும் அளவுக்கு இருக்கிறது. இதில் இருக்கும் எல்லாவற்றையும் கோசானின் கட்டுரை சுட்டிக் காட்டியிருக்கிறது. 50 பைசா புல்டோ ரொபி இன்னும் 50 பைசாவுக்கு கிடைக்காதா என்று ஏங்குவதை nostalgia என்று தான் அழைக்க முடியும்😂.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.