Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 01/14/24 in all areas
-
யூலியன் கப்பெலி (Julian Cappelli)அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். சிறுவர்களுக்கான புத்தகங்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். அவருடைய சிறுவர்களுக்கான இரண்டு புத்தகங்களுக்கு( The Missing cup cake, Block Party) நான் படங்களை வரைந்திருக்கிறேன். யூலியன் கப்பெலி ஒருதடவை ஒரு தமிழ்க் குடும்பத்தை சிட்னியில் சந்தித்த பொழுது, “பாயசம் வைக்க வேண்டும் பானையிலே அரிசி இல்லை…” என்று அங்கே சிறுவன் ஒருவன் பாடுவதைக் கேட்டு அந்தப் பாடல் பிடித்துப் போய் அதைப் பற்றி என்னிடம் கேட்டார். அந்தப் பாடலை இணையத்தில் தேடி எங்கோ ஒளிந்திருந்த பாடலைத் தேடி எடுத்து அதன் விளக்கத்தை அவரிடம் சொன்னேன். அதை வைத்து அவர் எழுதிய சிறுவர்களுக்கான பாடல் புத்தகம்தான் Oats and honey. நான் படம் வரைந்து அவரது மூன்றாவது புத்தகமாக Oats and honey கடந்த வருடம் மார்கழியில் வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் இறுதியில் “பாயசம் வைக்க வேண்டும் பானையிலே அரிசி இல்லை…” என்ற பாடலை தமிழிலேயே அவர் பதிந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாயாசம் செய்யும் முறையையும் ஆங்கிலத்தில் பதிவிட்டிருக்கிறார். புத்தகத்தின் முகப்பை யாழ் இணைய விம்பகத்தில் பதிவிட்ட கிருபனுக்கு எனது நன்றி.4 points
-
உங்கள் நாட்டில் சுதந்திரமாக வாழ முடியும் என்று யாரோ தவறான தகவல் தந்துள்ளனர். ஜனநாயகம் இல்லாத மேற்கு நாடுலளில் எவ்வாறு மனிதர்கள் சுதந்திரமாக வாழ முடியும் ? போலி ஜனநாயகம், நீதி நியாயமற்ற வெளிநாட்டுக் கொள்கை, உண்மைத் தகவல்களை மூடி மறைத்துத் தங்களுக்குத் தேவையானபடி செய்திகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்குதல், ஆயுத வியாபாரத்துக்காக உலகில் போர்களைத் தூண்டுதல் போன்ற இன்னும் எண்ணற்ற அராஜகங்கள் செய்யும் மேற்கு நாடுகளில் நிற்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் கால்கள் கூச வேண்டும். 🤣 அதுமட்டுமல்ல, உணவு முழுவது மருந்து கலப்பவர்கள், அநாவசியமான மருந்துகளைச் சாதாரண வியாதிகளுக்குத் தருபவர்கள், மருந்து விற்பதற்காகவே வியாதிகளை உருவாக்குபவர்கள் என்று உங்களைச் சுற்றி ஏராளமான சதிகள் நடந்துகொண்டிருக்கும் மேற்கு நாட்டில் மனிதன் எவ்வாறு சுதந்திரமாக வாழ முடியும் ? 🤣3 points
-
அரத்தினச் சுருக்கமாக, விடுதலைப் புலிகள் 1990ம் (மட்டு-அம்பாறை, தலைநகர் ஆகியவற்றில் 15,000 தமிழர்கள் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.) ஆண்டில் பிரமதாசாவிடம் எதை முன்மொழிந்தார்களோ அதைவிட நன்கு மேம்பட்ட ஒன்றையே 2003ல் முன்மொழிந்தார்கள். (2002ல் உடன்படிக்கை கைச்சாத்தானது) 1990ல் சுயநிர்ணயத்துடன் கூடிய தன்னாட்சியை முன்மொழிந்தார்கள். அது கைகூடவில்லை. 2003/10 ல் அதையே உலகில் எங்குமில்லாத ஒரு விதமான அரசாங்கத்தை தோற்றுவிக்கும் விதமாக, மேம்படுத்தி, "இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை" (Interim Self governing authority) என இணைத்தலைமை நாடுகளிடம் முன்மொழிந்தாார்கள். இதற்கான முன்னோட்டத்தையே ஒஸ்லோவில் வைத்து "ஒரு சமஸ்டி அடிப்படையிலான உள்ளக சுய நிர்ணயம்" (Internal self determination based on a federalism) என்றார்கள். 2002ல் எங்கும் சமஸ்டியை புலிகள் ஏற்கவுமில்லை, முன்மொழியவுமில்லை, எமக்குத் தரப்படவுமில்லை! 2006ல் தமிழர் நிகராளிகளை சப்பானிற்கு வரவழைத்து ஆயுதக் களைவை மேற்கொள்ள இணைத்தலைமை நாடுகளும் பிற நாடுகளும் சூழ்ச்சி செய்தன. இதையறிந்த புலிகள் அங்கு செல்லவில்லை. ஆனால் பாலா அங்கிள் இங்கு செல்லவேண்டும், எதுவாயினும் பார்ப்போம் என்றிருந்தார். எம்மக்களுக்கு அறழை பெயர்வது வழமையே. ஆனால் யாழில் சிலர் அதையே முத்தாய்ப்பாக்கி தம் பரப்புரைக்கு அல்லும்பகலும் பாவிக்கின்றனர்.3 points
-
சர்வதேச அரசியலில் பூகோள அரசியல் சார்ந்து அதிகாரம் மிக்க நாடுகள் இராஜதந்திர ரீதியாக தமது சுய நலன் சார்ந்தோ அல்லது அவர்கள் மூலோபாயம் சார்ந்தோ சர்வதேச அரசியலில் பொய் சொல்லி வருவதை பார்க்கிறோம். Selfish lies and strategic lies அரசுகள் கூறும் இப்படியான பொய்கள் அவர்களுக்கு நன்மையாகவும் முடிகின்றன அதே வேளையில் தோல்வியாகவும் முடிகின்றன. அரசுகளுக்கு இடையிலான யுத்தங்களுக்கும் குறிப்பாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவால் சொல்லப்பட்ட அனைத்து பொய்களும் இறுதியில் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் எல்லா நேரத்திலும் அது வெற்றி அளிக்காததற்கான பல காரணங்களும் உண்டு. அதிகாரம் கொண்ட இந்த அரசுகளின் பொய்கள் குறித்து அரசியல் வெளியுறவு ஆய்வாளர்கள் இப்படியான தமது தர்க்கங்களை முன் வைக்கிறார்கள். ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் உள்ளதாகவும் அங்கு ஓர் ஆட்சி கவிழ்ப்புக்காக அமெரிக்காவின் நலன் சார்ந்து பொய்கள் பல சொல்லப்பட்டது. இது இவ்வாறு இருக்க இப்படி எத்தனையோ ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட எத்தனையோ நாடுகளை அமெரிக்கா கவிழ்த்திருக்கிறது. இன்று உலகில் நடக்கும் யுத்ததங்களை பார்க்கும் போது இதை அவதானிக்க முடிகிறது. அமெரிக்க சொல்லும் பொய்களை அப்படியே ஏற்றுக் கொண்டு எல்லா உண்மைகளையும் சொல்ல மறுக்கிறார்கள் ஐரோப்பிய தலைவர்கள் இது தான் அவர்கள் ஜனநாயகம். இன்னும் எத்தனை யுத்தங்களை எவ்வளவு காலம் கொண்டு நடத்தப் போகிறார்கள் அமெரிகாவும் ஐரோப்பாவும் இன்னும் எத்தனை விடுதலைப் போராட்டங்களை தம் நலன் சார்ந்து அழிக்கப் போகிறார்கள் இன்னும் எத்தனை மனிதப் படுகொலைக்கு உதவப் போகிறார்கள். பொய் சொல்லுவதில் அமெரிக்காவை அடிக்க யாரும் இல்லை. அந்தப் பொய்களை எல்லாம் மூடி மறைப்பதில் ஐரோப்பாவை வெல்ல யாரும் இல்லை. உண்மைகளை உலகுக்கு சொல்ல மறுக்கிறார்கள் பெரிய அண்ணனும் தம்பிமாரும். சிரியாவில் சொன்னது பொய், ஈராக்கில் சொன்னது பொய், ஆப்கானிஸ்தானில் சொன்னது பொய், கியூபாவில் சொன்னது பொய், லிபியாவில் சொன்னது பொய், ஐ. நா. சபையில் அனைத்து தேசங்களுக்கும் சொல்லுவது பொய், ஏன் ஈழத் தமிழர் போரட்டத்திலும் சொன்னது பொய் இப்படி எத்தனை பொய்கள் அமெரிக்க சொன்ன பொய்கள் அதை ஆமோதித்து ஐரோப்பா சொன்ன பொய்கள் எத்தனை. இன்று இஸ்ரேலுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் பொய் சொல்லிக் கொண்டு பெரும் இனஅழிப்புக்கு துணை போய்க் கொண்டு பல்லாயிரக் கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறார்கள். மனிதாபிமானத்தை தொலைத்துவிட்டு இன்று உலகம் கண்ணை மூடி பார்த்துக் கொண்டு இருக்கிறது. பல அரபு நாடுகள் உட்பட ஐரோப்பிய நாடுகளும் அமைதியாய் இருக்க இன்று தென்னாபிரிக்கா இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. இனப்படுகொலை வழக்கின் மீதான விசாரணையை சர்வதேச நீதிமன்றில் (ICJ) தென்னாபிரிக்கா வாதாடி வருகிறது. அடுத்தவர்களின் துன்பத்தை மனிதாபிமானம் கொண்டு பார்க்க வேண்டும் முதலில் மனிதாபிமானம் பேசும் மானிடர்களாக வாழ வேண்டும். அன்பும் கருணையும் தான் ஆண்டவன் மொழி என்பதை மானிடம் உணர வேண்டும். மத அடிப்படை வாதிகளினதும் காலனித்துவவாதிகளினதும் ஏகாதிபத்திய வாதிகளினதும் அடிப்படை சிந்தனைகளிலோ அல்லது அவர்கள் நலன் சார் வெளியுறவுக் கொள்கைகளிலோ இன்னும் மாற்றம் ஏற்படாத வரை யுத்தங்கழும் மனித அழிவுகளும் அகதிகள் பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இன்று உலகம் பெரும் அச்சுறுத்தக்குக்கு உள்ளாகி இருக்கிறது இன்றைய மோதல்கள் நாளை ஒரு பிராந்தியங்களுக்கு இடையிலான மோதலாக வெடிக்குமா என உலகம் அச்சத்தில் உறைந்துள்ளது. Leaders believe lying is wrong but do it anyway. பா.உதயன் ✍️3 points
-
புத்திஜீவிகளும் புலிகள் இயக்கமும் நிர்மலா தன்னுடன் சேர்ந்து பணியாற்றப்போகிறார் என்று பிரபாகரன் கூறியபோது அடேல் பாலசிங்கம் மகிழ்ச்சியடைந்தார். விடுதலை வேட்கை எனும் புத்தகத்தில் எழுதிய அடேல், ஆங்கிலம் பேசத் தெரிந்த, பெண்ணியம் சார்ந்த அறிவுஜீவி ஒருவர் தன்னுடன் பணிபுரியப்போவதாக அறிந்தபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன் என்று எழுதுகிறார். நிர்மலாவை புலிகளின் பெண்போராளிகளின் அணிக்குத் தலைவராக நியமிக்கலாமே என்று அடேல் பிரபாகரனிடம் வினவியிருக்கிறார். ஆனால், அடேலின் ஆலோசனையினை பிரபாகரன் ஏற்கவில்லை. நிர்மலாவைப் பொறுத்தவரை பெண்விடுதலை என்பது மேற்கத்தைய சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டது என்றும், தமிழீழப் பெண்களின் விடுதலை தொடர்பான தனித்தன்மையினை நிர்மலாவின் கொள்கைகள் எடுத்தியம்பவில்லை என்றும் பிரபாகரன் கூறியிருக்கிறார். தமிழீழப் பெண்களின் விடுதலை எனும் கருதுகோள் மேற்கத்தைய பாணியிலும் இருந்து வேறுபட்டது என்று அவர் கூறினார். தமிழீழப் பெண்கள் தம்மை சமூகத்தின் முக்கிய பாத்திரமாக அடையாளப்படுத்தி, அதனை தம்முள் உணர்ந்துகொள்ளும் விதமாக தமிழீழப் பெண்களின் விடுதலை அமையவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். தனது புத்தகத்தில் தொடர்ந்து எழுதும் அடேல் பிரபாகரன் கூறியது சரியானது என்பதை தான் உணர்ந்துகொண்டதாக எழுதுகிறார். "நிர்மலாவின் அதிதீவிர பெண்விடுதலைக் கொள்கைகளை எம்முடன் இருந்த பெண்போராளிகள் புரிந்துகொள்ளச் சிரமப்பட்டனர். தமது தாயகத்தின் விடுதலைக்காகப் போராட வந்திருந்த பெண்களுக்கும் நிர்மலா அமைத்துக்கொள்ள முயன்ற பெண்விடுதலைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதை அறிந்துகொண்டேன். அப்பெண்களைப் பொறுத்தவரை நிர்மலாவின் பெண்விடுதலை தொடர்பான புரிதலோ அல்லது அதற்கான அவசியமோ இருந்ததாக நான் கருதவில்லை" என்று அடேல் எழுதுகிறார். அடேலின் வேண்டுகோலினை பிரபாகரன் நிராகரித்தமைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பிரபாகரனைப் பொறுத்தவரை அறிவுஜீவிகள் ஆயுதப் போராட்டத்தின் அங்கமாக தம்மை இணைத்துக்கொள்வது சாத்தியமற்றது என்று நம்பினார். ஏனென்றால், அவர்கள் தம்மைப் பற்றியே மட்டும் சிந்திக்கும் தன்மை கொண்டவர்கள். அனைத்தும் தமக்குத் தெரியும் என்கிற மனோநிலையில் வாழ்பவர்கள். தனித்துச் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்று எண்ணுபவர்கள். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது என்பது அவர்களால் முடியாத காரியம். விவாதிப்பதிலும், தலைமைக்கெதிராகப் புரட்சி செய்வதிலும் காலத்தைச் செலவிடுபவர்கள். தமது கருத்துக்களால் தம்மைச் சுற்றியிருப்போர் தமது பணிகளைப் புரிய இடைஞ்சலாக இருப்பவர்கள். இப்படியானவர்கள் அனுதாபிகளாகவும், ஆதரவாளர்களாகவும் இருக்கலாமேயன்றி, ஒருபோது ஆயுதப் போராட்ட அமைப்பிற்குள் நேரடியாக பங்களிப்புச் செய்ய முடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார். புத்திஜீவிகளும், இடைநடுவில் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்களும் போரிடும் அணிகளுக்குள் இணைத்துக்கொள்ளப்படமுடியாதவர்கள் என்று பிரபாகரன் நம்பினார். இராணுவ அணிகளுக்கு வெளியிலேயே அவர்களுக்கான பணிகள் கொடுக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆகவேதான் நித்தியானந்தன் விடுதலைப் புலிகள் சஞ்சிகையின் ஆசிரியராக பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அவர் எழுதும் ஆக்கங்களை பேபி சுப்பிரமணியத்திடம் காண்பித்து அவரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று அவர் கேட்கப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத நித்தியானந்தன் தனது மனைவியான நிர்மலாவையும் கூட்டிக்கொண்டு 1984 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறினார். கிராமப்புறங்களில் இருந்து போராட வந்திருந்த பெண்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது என்று நிர்மலா சொல்லியிருந்தார். இப்பெண்கள் பற்றிக் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைக்கத் தொடங்கினார். தனது நிலைப்பாட்டில் உறுதியாகவிருந்த பிரபாகரன் ஈரோஸ் அமைப்பினைக் கலைத்துவிட்டு அதன் தலைவர் பாலகுமாரும்,உதவித்தலைவர் பரா எனப்படும் பரராஜசிங்கமும் புலிகள் இயக்கத்திடம் வந்தபோது அவர்களை இராணுவ அணிகளுக்குள் உள்வாங்கவில்லை. அவர்களுக்கு பொது நிர்வாகச் சேவைகளிலேயே பணியாற்ற வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. திட்டமிடல்த் துறைக்குப்பொறுப்பாக பாலகுமாரும் நீதித்துறைக்குப் பொறுப்பாக பராவும் நியமிக்கப்பட்டனர். புலிகள் தமது நடவடிக்கைகளில் புதிய கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்பதனை மட்டக்களப்புச் சிறைச்சாலையின் இரண்டாவது உடைப்புக் காட்டியது. இது நடைபெற்று ஐந்துநாட்களுக்குப் பின்னர், காரைநகர் கடற்படை முகாமுக்கு விஜயம் செய்துவிட்டு கொழும்பு திரும்புவதற்காக கடற்படைத் தளபதி பாவித்த சீபிளேன் ரக விமானத்தை அவர்கள் எரியூட்டினார்கள். காரைநகரிலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாக விமானியால் பருத்தியடைப்புப் பகுதியில் திடீரென்று விமானம் தரையிறக்கப்பட்டது. காரைநகர் முகாமிலிருந்து 8 கிலோமீட்டர்கள் தூரத்தில் விமானம் தரையிறங்கியிருக்க, கடற்படைத் தளபதி முகாமிற்கு நடந்துசெல்ல, நான்கு கடற்படை வீரர்கள் விமானத்திற்குக் காவல்காத்து நின்றனர். அப்பகுதிக்கு வந்த புலிகள் காவலுக்கு நின்ற கடற்படை வீரர்களைத் துரத்திவிட்டு விமானத்திற்குத் தீமூட்டிச் சென்றனர். அதேநாள் இரு ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள் துணிகரமான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்கள். வீதியால் சென்ற பாரவூர்தியொன்றினை ஆயுதமுனையில் கடத்திச் சென்று, நேரே வந்துகொண்டிருந்த பொலீஸ் வாகனம் ஒன்றுடன் மோதி அதில் பயணம் செய்த உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஒருவரையும் மூன்று கொன்ஸ்டபிள்களையும் காயப்படுத்தினர். இரு நாட்களுக்குப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த வீதி வரைபடங்களை நான்கு ஆயுதம் தரித்த இளைஞர்கள் எடுத்துச் சென்றனர். தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சரான லலித் அதுலத் முதலியைக் கொல்லும் முயற்சியுடன் ஆனி மாதம் முடிவிற்கு வந்தது. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் அதிகாரியொருவர் மறைத்துவைக்கப்பட்டிருந்த பாரிய குண்டைக் கண்டுபிடித்தார். ஏழாவது மாடியில் அமைந்திருக்கும் அலுவலகத்திற்கு பந்தோபஸ்த்து அமைச்சர் வரவிருந்த வேளையில் இறுதிநேர பாதுகாப்புச் சோதனைகளில் ஈடுபட்ட ஊழியரே இக்குண்டைக் கண்டுபிடித்தார். ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்கும் இடையில் இருந்த சேமிப்பு அறையிலேயே இக்குண்டு மறைத்துவைக்கப்பட்டிருந்தது. குண்டைக் கண்டுபிடித்தபின்னர், அதனை வெடிக்கவைக்கும் அழுத்தியை அகற்றியெடுத்து, தனது மேலதிகாரியிடம் கொண்டுசென்று காண்பித்தார் அவர். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராஜாங்க அமைச்சின் செயலாளர், "அதிஷ்ட்டவசமாக அது சரியான நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட பாரிய குண்டு இதுதான். இதற்குள் 45 ஜெலிக்னைட் குச்சிகள் அடுக்கப்பட்டிருந்தன. இக்குண்டு வெடித்திருந்தால் 14 மாடிகள் கொண்ட இக்கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்திருக்கும்" என்று கூறினார். மேலும், "இக்குண்டு லலித்தின் அலுவலகத்திற்கு நேர் கீழே பொறுத்தப்பட்டிருக்கிறது. லலித் ஏழாவது மற்றும் எட்டாவது மாடிகளையே அதிகம் பயன்படுத்துவார்" என்றும் அவர் கூறினார். ஆடி மாதம் முழுவதிலும் சிறு சிறு தாக்குதல்ச் சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றுடன் சுற்றிவளைப்புக்களும், சமூக விரோதிகளுக்கான தண்டனைகளும் வழங்கப்பட்டன. இம்மாதத்தில் ஒரேயொரு இராணுவ வீரர் மட்டுமே கொல்லப்பட்டிருந்தார். பூநகரிப் பகுதியில் காட்டிற்குள் விறகெடுக்கச் சென்றவேளை கட்டுத் துப்பாக்கி ஒன்றில் அகப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.2 points
-
தவறான தகவல்களை பரப்பாதீர்கள். வரலாறுகளை சொல்லும் போது அதன் முழு விவரம் மற்றும் அது தொடர்பாக நடந்த முழு தகவல்களும் பகிரப்படவேண்டும். ஆகக் குறைந்தது இணத்தலைமை என்பது ஏன் எப்பொழுது இதற்குள் ஒரு தரப்பினருக்கு தெரியாமலேயே கரடியாக புகுத்தப்பட்டது என்றாவது எழுதி இருக்கலாம். ஆனால் உங்களுடைய தகவல்கள் சிறீலங்காவும் சர்வதேசமும் தங்க தட்டில் வைத்து இருந்தது போலவும் தமிழர் தரப்பு அதை தட்டி விட்டது போலவும் புனையப்படுகிறது. இது ஆபத்தான எழுத்துக்கள்.2 points
-
கிறீஸ்தவ மதவாதம் உங்களைப் போன்றவர்களின் மண்டைக்குள் இருக்கும் வரை விடிவில்லை…. தங்களின் தலைவராக ஓர் கிறீஸ்தவரை ஏற்றுக் கொண்ட தமிழினம் என்பதை மறந்து இன்று கிறீஸ்தவனால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று மதவாத உரிமை கொண்டாடும் நிலையில் நீங்கள்….2 points
-
எனக்கு விளங்குது அதாவது 70 ஆண்டுகளாக சிங்களவர்கள். தமிழருக்கான உலகில் சிறந்த தீர்வை தங்க தட்டில் வைத்துக் கொண்டு தமிழர்கள் பகுதியில் தெருக்களில் அலைந்து திரிந்துகொண்டே இருந்தார்கள் தமிழர்கள் அதை பெற்று கொள்ளவில்லை பாரத்தான் சிங்களவன். இனியும் இப்படி அலைந்து திரிய முடியாது என்று 2009 இல் முள்ளிவாய்க்காலில். தட்டில் இருந்த தீர்வுகளை கொட்டித்தீர்த்து விட்டார்கள் மீண்டும் தமிழர்கள் தீர்வுகள் தரும்படி கேட்டால் அவன் எங்கே போக முடியும்?? இதுவும் விளங்காது விடில். யாழ்ப்பாணத்தில் நிறையவே ரியூசன் உண்டு” நல்ல ஆசிரியர்களிடம். சேர்ந்து படியுங்கள் 😂🙏2 points
-
நீங்கள் ஏதோ விளக்க முயன்றிருக்கிறீர்கள். ஆனால் எனக்கு எதுவும் புரியவில்லை.2 points
-
சிங்களமும் இந்தியும் தட்டில் வைத்து இருப்பது போலவும் அதை தமிழர்கள் தட்டி விட்டது போலவும் இருக்கிறது உங்கள் பாலர் பாடம். உங்களில் பிழை சொல்லவில்லை. மதில் மேல் பூனையாக நின்றவர்களின் பார்வை இது தான். உங்களுடைய இந்த கருத்துக்கு லைக் கிடைக்கும் ஏனெனில் அநேகமான தமிழர்கள் மதிலில் இருந்து இறங்கி ஓரே பக்கம் நின்றிருந்தால் எவரும் எம்மை அழித்து இருக்க முடியாது. அதற்கு ஆதாரமாக பத்து வீதம் போராட்டத்துடன் நின்றே இத்தனையையும் சாதித்தவர்கள் நாம்.2 points
-
இந்தத் தேர்தலில் சுமத்திரன் வென்றால் அடுத்த 2 வருடங்களில் கட்சியை சுக்குநூறாக உடைத்து விடுவார். தோற்றால் தேசியக்கட்சிகளில் தனை;னை இணைத்துக்கொண்டு தன் வழக்கறிஞர் தொழிலைப் பார்ப்பார். அரசியல் பலமில்லாவிட்டால் அவருடைய வழக்கறிஞர் தொழில் எடுபடாது. சிறிதரன் தோற்றால் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சுமத்திரன் பாலா அண்ணை போல ஒரு விண்ணன். தமிழ்மக்களுக்கு சுமத்திரன் தேவை என்று சுமத்திரன் புராணம்பாடுவார். தொண்டர்கள் காறித்துப்புவாங்களே என்று சொன்னால் துப்பினால் துடைச்சுக்குவேன் என்று சொல்லுவார். பதவி இல்லாமல் அவரால் இருக்க முடியாது.2 points
-
Society of the snow (Netflix release) மனித இனத்துக்கு வேகமாக ஓடக் கூடிய கால்கள் இல்லை. பறப்பதற்கு சிறகுகள் இல்லை. ஏனைய விலங்குகளுடன் கைகளால் போரிட்டு வெல்ல நீண்ட நிகங்களோ அல்லது உறுதியான கைகளோ, உடலோ இல்லை. பழகாவிடின் நீந்தக் கூட முடியாது. பறவைகளைப் போல், இலகுவாக கூடு கட்ட முடியாது. அதிக குளிரையோ வெப்பத்தையோ தாங்கும் தோல் கூட இல்லை. காதின் கேட்கும் திறன் கூட மட்டுப்படுத்தப்பட்டது. இரவில் பார்க்க நல்ல வெளிச்சம் தேவை அதன் கண்களுக்கு. இயற்கையால் பல வழிகளில் வஞ்சிக்கப்பட்ட ஒரு உயிரினம் என்றால் அது மனித இனம் தான். அப்படி இருந்தும் ஏன் மனித இனம், மற்ற எல்லா உயிரினங்களை விட மேலாக நின்று ஆதிக்கம் செய்கின்றது இயற்கைக்கு சவால் விடுகின்றது என யோசித்துப் பார்த்தால், அது தன்னை தக்க வைக்க, உயிர்வாழ எந்த எல்லைக்கும் போகும் திறன் வாய்ந்தது என்பதுவும், இயற்கைக்கு சவால் விடுவதன் மூலமே தன்னை தக்கவைக்க முடிகின்றது எனவும் புரிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படை உண்மையை 1972 இல் அந்தீஸ் மலைத் தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் தப்பி மனித இனம் வாழவே முடியாத கடும் குளிர் நிறைந்த பனி சிகரத்துக்குள் 70 நாட்களுக்கும் மேல் வாழ்ந்து உயிர் பிழைத்தவர்களின் வாழ்வு எமக்கு சொல்கின்றது. உண்பதுக்கு எதுவும் இன்றி, தம்முடன் பயணித்த சக நண்பர்களின் மற்றும் பயணிகளின் இறந்த உடல்களை வெட்டி உண்ணும் நிலை வரை அவர்கள் சென்று தம் உயிரை காப்பாற்றிக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் 4 தினங்களுக்கு மேல் பனிக்குவியலால் பல அடிகள் ஆழத்தில் புதைக்கப்பட்டு மீள்கின்றனர். அருகில் இருக்கும் சக நண்பர்களின் மரணங்களை நேரடியாகவே காண்கின்றனர். எந்த ஒரு உரினமும் வாழ முடியாத சூழலை தாக்குப் பிடித்து 16 பேர் தப்புகின்றனர். அவர்களை காப்பாற்றியது மனித இனத்துக்கு என்று இருக்கும் அந்த உயிர்பிழைத்தலுக்காக எந்த சவாலையும் எதிர் கொள்ளும் பண்புதான் (Survival). இவர்களின் உண்மைக் கதையை ஒட்டி Netflix இனால் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Society of the snow. விபத்து நிகழ்ந்த இடத்துக்கே சென்று, அந்த கடும் குளிர் பிரதேசத்திலேயே செட் வைத்து, உண்மைக்கு மிக நெருக்கமாக சென்று இப்படத்தை எடுத்துள்ளனர். படம் ஆரம்பித்து, விமான விபத்து நிகழ்ந்த அந்த நிமிடத்தில் இருந்து முடிவு வரைக்கும் பார்ப்பவர்களை 'சில்லிட' வைக்கும் சினிமா இது. நேற்று இரவு இப் படத்தை பார்த்தேன். என் பிள்ளைகள் இருவருக்கும் 'கண்டிப்பாக பார்க்கவும்' என கேட்டுக் கொண்டுள்ளேன். முடிந்தால் நீங்களும் பாருங்கள்.1 point
-
இந்த தன்னாட்சி என்று அறிக்கை பேச்சுவார்ததை காலத்தில் கோரிக்கையாகவோ அறிக்கையாகவோ பிரேமதாசவிடம் பேச்சுவார்ததை மேசையில் வைக்கப்படவில்லை. பேச்சுவார்ததை ஜூன் 10 ம் திகதி முறிவடைந்து யுத்தம் ஆரம்பித்த பின்னர் ஒரு அறிக்கையாக விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி வெளியிட்டுருந்த ஒரு சாதாரண அறிக்கையே அது. இந்த அறிக்கை 11.07.1990 ல் வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையிலேயே வெளிவந்துள்ளது. யுத்தம் ஆரம்பித்து மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இலங்கை அரசின் போராட்டதிற்கு எதிரான பரப்ரைபுரைகளை எதிர் கொள்ள இவ்வாறான அறிக்கைகளை தந்திரோபாய ரீதியில் முன்னணி வெளியிட்டதில் எந்த தவறும் இல்லை. இதை இலங்கை அரசு கவனத்தில் எடுக்காது என்பது விடுதலைப்புலிகளுக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும்.1 point
-
நாம் குறுகிய காலம் பாவித்துவிட்டு மாற்றும் கைத்தொலைபேசிகள் ஆபிரிக்காவில் மனிதர்கள் வெறும் ஒருசில டொலர்கள் சம்பளத்தில் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்துச் சுரங்கங்களிலிருந்து எடுத்துத் தரும் கனிமப் பொருட்களைக் கொண்டுள்ளன. நான் தற்போது பாவிக்கும் iPhone 6s 2016 ஜனவரியில் மகளுக்கு வாங்கியது. 2020 மீள்மெருகேற்றப்பட்ட iPhone X ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு iPhone 6s இனை எனதாக்கிக் கொண்டேன். இதன் பற்றியை மட்டும் மாற்றினேன். இது பாவிக்க முடியாமல் போகும் போது மகளின் iPhone X இனை நான் எடுத்துக் கொள்வேன். பொதுவாக அப்பிள் மென்பொருள் மீள் பதிவுகளை (system security update) 7 வருடங்களுக்கு மேல் செய்துகொள்ள முடியும். Google Pixel தவிர்ந்த ஏனைய Android கைத் தொலைபேசிகளில் பொதுவாக 4 வருடங்களே இதன் ஆயுட்காலம். நான் 25 வருடங்களாகப் பாவிக்கும் கணணிகளும் அப்பிள்தான். வீட்டில் நான் பாவித்த iMac (ஏற்கனவே பாவித்த ஒருவரிடமிருந்து 2011 இல் வாங்கியது) தற்போது எனது மாமனார் ytube பார்ப்பதற்காகப் பாவிக்கிறார். 2013 இல் வாங்கிய iMac 21 தற்போது பாவிக்கிறேன். இதன் Disk வேகம் முறைந்தது என்பதாலும் வேலையில் மடிக்கணணி தந்துள்ளதாலும் இதனைப் பாவிப்பது இப்போது மிகக் குறைவு. அப்பிள் பொருட்கள் விலை அதிகமானாலும் அவற்றைப் பாவிக்கும் காலம் அதிகமானதாலும் பழுதுகள் வருவது முறைவு என்பதாலும் தொடர்ந்து அவற்றையே பாவிக்கிறேன்.1 point
-
1 point
-
1 point
-
மீண்டும் உங்கள் எழுத்துருக்கள் குற்றம் சாட்டி மாட்டிவிடும் ஆபத்தானது மட்டுமே. பேசிக் கொண்டே இருப்பது ஆபத்தானது. அதனால் அந்த முடிவு. தட்டில் எதுவும் இல்லை என்ற தெரிந்த பின் அது மிகவும் ஆபத்தானது. சுனாமியை தொடர்ந்து ஒரு இடை ஏற்பாடே இடைக்கால வரைவு. அதுவும் இல்லை என்ற பின்னர் சிறீலங்கா அரசை உங்களால் முடிந்ததை மேசையில் வையுங்கள் பரிசீலனை செய்கிறோம் என்பதே. அதுவும் இல்லை. இதில் பாலசிங்கம் அண்ணா பற்றிய உங்கள் திணிப்பு பொய். ஆபத்தானது. விடுதலைப் புலிகள் எந்த தளபதியையும் தனித்து தயார் செய்து எதையும் தொடங்குவதில்லை. நடாத்துவதில்லை. பாலசிங்கம் அண்ணரின் உடல் நலம் சார்ந்து தலைவருக்கு இருந்த அக்கறை பற்றி எமக்கு யாருக்கும் தெரியாது. போரின் தோல்வியை வைத்து பேசும் உங்களுக்கும் நடந்த உண்மையை வைத்து பேசும் எனக்கும் ஒட்டாது. சுய இன்பம் அடைய எதையும் எழுதுங்கள். அது வரலாறு ஆக்க முயன்றால் கவனம். நன்றி.1 point
-
ஒஸ்லோவில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டி தீர்வை நோக்கி செல்வதற்கான உடன்பாட்டில் இரு தரப்பும் கைச்சாத்திட்டது 2002 டிசம்பர் மாதத்தில். அதில் திரு. பாலசிங்கம் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து 2003 ம் ஆண்டு தாய்லாந்து, ஜேர்மனி ஆகிய இடங்களில் பேச்சுவார்ததை நடத்தப்பட்ட பின்னர், ஏற்கனவே பேசப்பட்ட தமிழ் மக்களின் நடைமுறைப் பிரச்சைனைகள் பற்றிய விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்றும்வரை பேச்சுவார்தைகளில் இருந்து விலகி இருக்கப்போவதாக 2003 ன் நடுப்பகுதியில் புலிகள் அறிவித்தார்கள். அதன்பின்னர் தான் இடைக்கால நிர்வாகசபை வரைபு ஒன்றை தயாரிக்கப்போவதாக விடுதலைப்புலிகள் அறிவித்தார்கள். இவ்வரைபுக்கான கூட்டங்கள் 2003 ம் ஆண்டு கோடை காலத்தில் ஐரோப்பாவில் நடைபெற்றது. இவ்வரைபு தொடர்பான எந்த கூட்டங்களிலும் திரு அன்ரன் பாலசிங்கம் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட விசேட ஓய்வில் அவர் இருந்தார் என்ற விடயம் அனைவருக்கும் தெரிந்ததே. 2003 ஒக்ரோபரில் தான் இந்த வரைபு கையளிக்கப்பட்டது. கையளிக்கப்பட்ட இடைக்கால வரைபுக்கும் ஒஸ்லோவில் உள்ளக சமஸ்டியை ஆராய இருதரப்பும் இணங்கிய விடயத்திற்கும் எந்த தொடர்ரபும் இல்லை. ஒஸ்லோ பேச்சுவார்ததைகளின் போது இடைக்கால நிர்வாகசபை என்ற பேச்சே இருக்கவில்லை. தொடர்ந்து தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுவதால் இதனைக் குறிப்பிட்டேன்.1 point
-
சரி விசுகர், உங்கள் வழிக்கே வருகிறேன். 2002 ல் நாங்கள் இருந்த பலத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலையில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? ஆம் என்றால் இப்படி ஒரு பலவீனமான நிலைக்கு வரக் காரணம் என்ன? அறளை பெயர்வது ஒருபக்கம் இருக்கட்டும், உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஷ்டி எனும் வாய்ப்பு வந்தது, தற்போது கோவணமும் இல்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்டது பலமா பலவீனமா? அதற்கு யார் காரணம்? எமது தெரிவுகள்தானே?1 point
-
இதன் அர்த்தம் என்ன?? தவறவிட்டோம் என்று சொல்வதே பெற்றிருக்கலாம் தந்திருப்பார்கள் என்பது தானே?? அல்லது நாம் அதனை தட்டி விட்டு விட்டோம் என்பது தானே. வெறும் தட்டை எப்படி பெறலாம் அல்லது பெற்றிருக்கலாம் எனவும் எழுதவும். ஆனால் தமிழர் தரப்பின் இப்பேச்சுவார்த்தைக்குழுவுடன் முழுநேரமும் நின்றவர்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள். பிரான்சில் அதில் நானும் ஒருவன்.1 point
-
நீங்கள் குறிய விடயத்திற்கும் நான் கூறிய விடத்துற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது பதிவு சமஸ்டி பற்றிய ஓஸ்லோ உடன்பாடு சம்பந்தமானது. பொதுவாகவே ஒவ்வொரு தரப்பும் தன்னை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்களை கூறும். இலங்கை அரசும் அதையே செய்தது செய்கிறது. அந்த காரணங்கள் ஒரு தலைப்பட்சமானது. இங்கு எவரையும் நியாயப்படுத்துவதோ குற்றம் சாட்டுவதோ எமது நோக்கமாக இல்லாமல் காய்தல் உவத்தல் இன்றி உண்மைகளை ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தை அமைப்பதே வாழப்போகும் மக்களின் பணியாக இருக்க முடியும். தற்போதைய நிலையில் சமஸ்டி தீர்வை நினைத்து கூட பார்கக முடியாத நிலையே உள்ளது என்பதே ஜதார்ததம். தற்போதைய தற்போதைய தாயக, புலம்பெயர் அரசியலாளர்கள ஒரு சிறிய துரும்பைகூட அசைக்கமுடியாத வலுவற்றவர்களாகவே உள்ளனர். அது இந்த இமாலய குழுவுக்கும் பொருந்தும். எமது அடுத்த தலைமுறையை அங்கு தக்கவைப்பது எப்படி என்பது தான் இன்றைய நிலை. அதை செய்ய வேண்டியது அங்கு வாழப்போகும் மக்களே.1 point
-
1 point
-
சீ.. சீ.. இந்த பழம் புளிக்கும்.. டயபெற்ரிக் குளிசையை குடியுங்கோ..😂1 point
-
1 point
-
அல்சர்நோயாளிகள் , வயிற்றுக் கோளாறுக்காரர்கள் காரத்தைக் கண்டால் தூர ஓடுகிறவர்கள் சற்றே விலகிச் செல்லுங்கள்........ காரச் சுவை விரும்பிகள், ஆரோக்கியமானவர்கள் அருகே வாருங்கள் ஆசையோடு சாப்பிடுங்கள்...... " நாக்கு உறைப்புக்கு கண் அழுவதற்கு" 😁1 point
-
வந்தாரை வாழவைத்து தங்கடை நாட்டை சுடுகாடு ஆக்குதுகள் .1 point
-
11 NOV, 2023 | 11:56 AM பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. பயணிகள் பேரூந்துகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்குமாறும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாலக பண்டார கொட்டேகொட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துமாறும் அதன்படி பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் உத்தரவிட்டார். தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான அதிவேக நெடுஞ்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், இலாபம் ஈட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளின் இலாபத்தில் தான் நஷ்டத்தில் இயங்கும் அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த நுட்டத்தின் போது தெரியவந்துள்ளது. இதேவேளை, அனைத்து அதிவேக வீதிகளிலும் QR குறியீட்டைப் பயன்படுத்தி கட்டங்களை அறவிடுவதற்கான நடைமுறைகளை ஆரம்பிக்குமாறும் இதன் போது குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். https://www.virakesari.lk/article/1690341 point
-
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க பேருந்துகளில் சிசிடிவி அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களிலும் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவித்ததன் பின்னர், போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கும் அறிவிக்கப்பட்டு பஸ்களில் சிசிடிவி கமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். கமராக்கள் பொருத்தப்பதுவதன் மூலம் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களுக்கு வழங்கப்படும் வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கமராக்கள் பொருத்துவது உரிம நிபந்தனையாக உள்ளடக்குவது தொடர்பான யோசனை பொறுப்பு தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/2881351 point
-
அவங்களும் இந்தா தீர்வு தாறம் எண்டுற மாதிரி ரீல் விட்டுக்கொண்டு திரிவாங்கள். எங்கடையளும் இந்தா தீபாவளிக்கு தீர்வு வருது எண்டு உருட்டிக்கொண்டு திரியுங்கள்......😎1 point
-
இது சந்திரிக்கா அம்மையார் ஐனதிபதி ஆகவும் ரணில் பிரதமராகவும். இருந்த நேரம் என நினைக்கிறேன் வருடம் மாதம் திகதி எனக்கு தெரியாது பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தது ரணில் அமெரிக்காவில் இருக்கும் போது அம்மையார் பிரதமர் பதவியை பறித்து விட்டார் பாவம் ரணில் பிரதமராக அமெரிக்கா போனவர். பதவியை இழந்து திரும்பி வந்தார் அந்த நேரம் இந்த இனப்பிரச்சனையை தீர்க்கிறேன் என்று புலுடா விட்டு கொண்டு திரிந்தவர். பதவி இழந்ததும் பேச்சுவார்த்தை குழம்பி விட்டது…… இதை தான் போல சிலர் தீர்வு வந்தது தமிழர்கள் குழப்பினார்கள் என்று சொல்லுகிறார்கள் என்ன செய்வது இப்படி பச்சோந்திகள் தமிழர்கள் மத்தியில் இருக்கும் வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை 🤣1 point
-
அங்கு தமிழ் இந்துக்கள்தான் பெரும்பாண்மை. அப்படி இருக்கும்போது சுமந்திரன் எப்படி அந்த ஆயுதத்தை எடுக்க முடியும்? ஒரு கிறிஸ்தவனால் ஆரம்பிக்கப்படட கட்சியில் இன்று கிறிஸ்த்தவன் என்ற காரணத்துக்காக புறக்கணிக்கப்படும் நிலைமை. சிங்கள பவுத்தன் இதை விட மேல் என்று நினைக்கிறேன். சரத் வீரசேகர, விமல், கம்மன்பில பாடு கொண்டாட்டம்தான். வாழ்க தமிழ் ஈழம்.1 point
-
நம்மை பொருத்தவரை ஸ்ரீதரன் கூட அந்த பதவிக்கு தகுதி இல்லாதவர் அவரை விட்டால் வேறு வழியில்லை . சுமத்திரன் தலைவராய் வந்தால் அவ்வளவுதான் சிதறு தேங்கா .இங்கு இந்துவா கிறிஸ்த்தவனா என்று குறுகிய மனப்பான்மையில் பார்க்காமல் தமிழர் நலன் என்று பார்ப்பது நல்லது .1 point
-
இங்கே சமஷ்டியோ, தனிநாடோ, மாகாணசபையோ பிரச்சனை அல்ல. எந்த ஒரு முயற்சியையும் ஆரம்பிக்க காட்டப்படும் எதிர்ப்பின் அளவும் அது எங்கே ஆரம்பமாகிறது, யாரால் ஆரம்பிக்கப்படுகிறது அவர்களின் நோக்கம் என்ன என்பதே பிரச்சனைக்குரிய விடயம். அம்மக்களுக்கு நன்மை நடைபெற வேண்டும் என்றால் அது எங்கோ ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டே ஆக வேண்டும்.1 point
-
1 point
-
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. பல விடயங்களில் முன்னோடியாக திகழ்கின்றார்கள்.1 point
-
அடி ஆத்தி இது எப்ப நடந்தது?1 point
-
From Separation To Federalism? There seem good reasons for satisfaction and the Sri Lankan assertion that the two sides are firmly entrenched on the peace path and would reach the 'point of no-return to war' by the middle of 2003. Updated: 03 Feb 2022 5:25 pm The most significant achievement of the Oslo talks in December 2002 was the categorical statement, made by the head of the negotiating team of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Anton Balasingham, that the militant organization was prepared to accept a federal unit for the north and east within a united Sri Lanka. This statement represents a crucial development in the conflict transformation process in Sri Lanka. This transition from secession to internal autonomy is the outcome of two decades of civil war, combined with political and strategic sensitivity to radically new circumstances of global, regional and national politics. The details of the talks were not outlined and different positions taken by the two sides on various vital issues have not been disclosed at the conclusion of the talks. The process designers have obviously been careful to send out a positive message through the substance as well as symbolism of the talks. At the press conference held after the conclusion of discussions, the two negotiating teams, as well as the Norwegian interlocutors, expressed ‘complete satisfaction’ on the progress, and an earnest desire to carry forward the peace process. With the autonomy announcement, the LTTE has repositioned itself vis-à-vis the Sri Lankan state in such a way that returning to the old Eelam (separate state) goal would not be particularly viable. However the trajectories of transforming the LTTE’s proclamation of autonomy into a stable political commitment will be contingent on how the government handles the future challenges and progress towards the establishment of a firm mechanism for devolving power to the north and east regions. That is an extremely hazardous path and substantial reforms will be required to reach that goal. The history of Sri Lankan agreements and subsequent failures of implementation goes back five decades. The differences between the two principal ethnic communities in the country came into prominence even before independence in 1948. The Sri Lankan state was not founded on a collective idea acceptable to the principal ethnic minority – the Tamils – and this has manifested itself, first in peaceful and non-violent protests, and subsequently in an armed struggle that has created critical constitutional and legal challenges to the state and its institutions. Democratic Tamil leaders of the Federal Party (FP) had advocated a federal solution from the very beginning. However, various agreements – such as the Bandaranaike-Chelvanayagham (1957), Senanayake-Chelvanayagham (1965), the Annexure C Formula proposed by Special Indian Envoy G. Parthasarathy to President Jayewardene (1983), the Indo-Sri Lanka Agreement (1987) – were either abrogated or were not fully implemented. Similarly, all rounds of negotiations between the government and the LTTE – Thimpu (1985), Delhi and Bangalore (1987), Colombo (1989-90) and Colombo (1994-95) – faced the same fate, with disastrous results in terms of escalating violence after each debacle. Political analysts are, however, much more optimistic about the current peace process. The post-9/11, global anti-terrorism drive; pressure from the Tamil Diaspora on the LTTE; the realization on the part of the government and people of Sri Lanka as well as the LTTE that no side could attain a final military victory; and growing economic compulsions are some of the international and domestic factors underlying this https://www.outlookindia.com/website/story/from-separation-to-federalism/218279/amp1 point
-
சமஷ்டி(உள்ளக) என்கிற அடிப்படையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் இணங்கியிருந்தன என்பதுதான் என் புரிதல். தற்போது அது தொடர்பான தரவுகள் என்னிடம் இல்லை. முடிந்த அளவு தேடிப்பார்த்து இணைக்கிறேன். (சஷ்டியை ஏற்றுக்கொள்வதாக கொள்கையளவில் இணங்கியதன் பின்ணணியிலே கருணாவின் பிளவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன) முதலலாவது பந்தியை பார்க்கவும் 👇 https://reliefweb.int/report/sri-lanka/breakthrough-sri-lanka-peace-negotiations Breakthrough in Sri Lanka peace negotiations Format News and Press Release Source Govt. Norway Posted 5 Dec 2002 Originally published 5 Dec 2002 The third session of Sri Lanka peace negotiations was completed in Oslo today. The government and LTTE have decided to explore a political solution founded on internal self-determination based on a federal structure within a united Sri Lanka. This is a most positive breakthrough in the peace negotiations and an important step in the direction of a solution for lasting peace in Sri Lanka, says Deputy State Secretary Vidar Helgesen in the Norwegian Ministry of Foreign Affairs. The parties agreed on a common declaration (attached) Statement of the Royal Norwegian Government Oslo, 5 December 2002 Parties have decided to explore a political solution founded on internal self-determination based on a federal structure within a united Sri Lanka The third session of peace talks between the Government of Sri Lanka (GOSL) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) was held in Oslo, Norway on 2 to 5 December 2002. In a frank, open and constructive manner, the parties focused on three major areas: Consolidation of the ceasefire Humanitarian and rehabilitation action Political matters The parties agreed on a working outline defining the objective as well as a number of substantive political issues for negotiation. Responding to a proposal by the leadership of the LTTE, the parties agreed to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples, based on a federal structure within a united Sri Lanka. The parties acknowledged that the solution has to be acceptable to all communities. Guided by this objective, the parties agreed to initiate discussions on substantive political issues such as, but not limited to: Power-sharing between the centre and the region, as well as within the centre Geographical region Human Rights protection Political and administrative mechanism Public finance Law and order The parties recognised that progress on political issues must be supported by the continued consolidation of the Ceasefire Agreement. New concrete measures will be taken to facilitate further de-escalation and to improve normalcy: The GOSL will shortly return one of the hotels in Jaffna to its original use The LTTE will ensure that all future transportation of area commanders will take place under the supervision of the Sri Lanka Monitoring Mission (SLMM) The LTTE will accept the right of political groups to carry out political work, including in the Jaffna peninsula and the islands, provided that they are unarmed, as stipulated by the Ceasefire Agreement The GOSL will, in consultation with all relevant parties and groups, evolve a solution to the problems arising from recent developments in the Delft island The parties will facilitate restoration and rehabilitation of places of worship in the north and the east belonging to all religious communities. On the basis of their firm conviction that the maintenance of law and order in the north and east is of paramount importance, the parties agreed to request the Sub-Committee on De-escalation and Normalization to propose a common approach to settling cases involving the disputed use of private property, where such use has been impeded by the conflict. Furthermore, the LTTE will ensure that the activities of their law and order mechanisms will not be extended beyond the areas dominated by the LTTE. The parties strongly underlined the need to move rapidly on humanitarian and rehabilitation efforts in the north and east. For this purpose, the early establishment of the North-East Reconstruction Fund will be critical. The parties agreed that the custodian of the fund should be selected and modalities for its operation agreed at the next meeting of the Sub-Committee on Immediate Humanitarian and Rehabilitation Needs. The parties expressed their appreciation of the strong support extended by several governments to the peace process at the Sri Lanka Support Meeting held in Oslo on 25 November, and urged these governments to rapidly release funds needed for humanitarian and rehabilitation efforts. The parties agreed that a committee of women will be instituted to explore the effective inclusion of gender issues in the peace process. The committee will also, on a regular basis, submit proposals relating to women's interests to the sessions of negotiations and to the sub-committees of the peace process. The committee will consist of four representatives of each party. As a priority area identified by the parties for humanitarian action, the parties stressed the need to improve the situation for children affected by armed conflict. Inspired by the international norms protecting the rights of the child, the parties underlined that children belong with their families or other custodians and not in the workplace, whether civilian or military. The LTTE will engage in a partnership with the United Nations Children's Fund (UNICEF) to draw up an action plan for restoring normalcy to the lives of children, and the parties called on the international community to provide financial support for such an action plan. The GOSL will, in order to arrive at the broadest possible consensus, establish an appropriate mechanism for consultation with all segments of opinion as part of the ongoing peace process.1 point
-
1 point
-
1 point
-
1 point
-
ஏன் அண்ணா அங்கு வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா?...தமிழர்கள் தற்போது அதிகம் இடம் பெயர காரணம் பணம்...இலகுவாய் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் ...வட,கிழக்கில் இருப்பவர்கள் தமிழர்கள் என்றாலும்,சிங்கள அரசிற்கு கட்டுப்பட்டு தான் வாழ வேண்டும்...நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள அரசாங்கம் உங்களுக்கு பிடிக்குதோ ,இல்லையோ அவர்ளுக்கு கட்டுப்பட்டு தான் நீங்கள் வாழ்கிறீர்கள் ..அதே போல் தான் இதுவும் .1 point
-
கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பொருட்களை எரித்ததில், காற்று மாசு சராசரியைவிட இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரிய தகவலின்படி, இன்று காலை 7 மணிக்கு சென்னையில் காற்றுத் தரக் குறியீட்டின் சராசரி அளவு 378 ஆக உயர்ந்தது. இதில், அதிகபட்சமாக சென்னை ராயபுரத்தில் காற்றுத் தரக் குறியீடு 770 ஆகவும், அரும்பாக்கத்தில் 501 ஆகவும் இருந்தது. காற்று மாசு காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த சிங்கப்பூர் மற்றும் லண்டன் விமானங்கள் தரையிறங்க முடியாமல், ஹைதராபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டன. அதேபோல, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபத், பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டன. காலை 9 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கியது. பனி மூட்டத்துடன் காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளதால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் எதிரே வரும் வாகனங்கள்கூடத் தெரியாமல் சிரமப்பட்டனர். சென்னையை ஸ்தம்பிக்க வைத்த காற்று மாசு தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பாக சென்னையில் உள்ள ஒன்பது காற்று மாசு கண்காணிப்பு நிலையங்களில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இன்று காலை 8 மணிக்கு பெருங்குடியில் அதிகபட்சமாக காற்று மாசுக் குறியீடு 289 ஆக இருந்தது. அதேபோல, மணலி பகுதியில் காற்று மாசுக் குறியீடு 272 ஆகவும், எண்ணூர் காந்தி நகர் பகுதியில் 232 ஆகவும், அரும்பாக்கத்தில் 216 ஆகவும், ராயபுரத்தில் 207 ஆகவும், கொடுங்கையூரில் 156 ஆகவும் இருந்தது. ஆனால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மிகக் குறைந்த இடங்களிலேயே காற்றுமாசு கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு கட்டடங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்கள் அமைத்து கண்காணித்தால்தான் துல்லியமாக காற்று மாசுபாட்டைக் கண்டறிய முடியும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். காற்று மாசைக் கண்காணிக்கும் தனியார் நிறுவனமான ஏ.க்யூ.ஐ(AQI) தரவுகளின்படி, ராயபுரத்தில் அதிகபட்சமாக காற்றுத்தரக் குறியீடு 770 ஆக இருந்தது. மேலும், பெருங்குடி பகுதியில் 609, பொத்தேரியில் 534, ஆலந்தூர் பகுதியில் 511, அரும்பாக்கத்தில் 501 என காற்றின் மாசுபாட்டு அளவு பதிவாகியுள்ளது. காற்றுத்தரக் குறியீட்டின் அடிப்படையில் அவற்றின் தன்மையை மாசுக் கட்டுபாட்டு வாரியம் வகைப்படுத்தியுள்ளது. அதன்படி, காற்றுத் தரக் குறியீடு 0-50 வரை இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம் 51-100 வரை இருந்தால், அது திருப்திகரமானது 101 முதல் 200 வரை இருந்தால் காற்றின் தரம் மோசமாக உள்ளது அதுவே 201-300 வரை இருந்தால், அது மிக மோசமான காற்றுத்தரத்தை குறிக்கும். காற்றின் தரம் 301-400 இருந்தால், காற்று மாசு மிகக் கடுமையாக மோசமாக உள்ளதாகக் குறிக்கும் 401-500 வரை இருந்தால், காற்று மாசு அபாயகரமான நிலையில் இருப்பதைக் குறிக்கும் கடந்த ஆண்டுகளைவிட பல மடங்கு அதிகரித்த காற்று மாசு கடந்த 2023ஆம் ஆண்டு போகி பண்டிகையின்போது ஏற்பட்ட காற்று மாசைவிட இந்த ஆண்டு இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு போகி பண்டிகை அன்று சென்னையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வைக்ப்பட்டுள்ள எட்டு காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்களிலும், காற்றுத் தரக் குறியீடு 100இல் இருந்து 200க்குள் தான் பாதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஆலந்தூர் காற்று தரக் கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தரக் குறியீடு 197 ஆக பதிவாகியிருந்தது. தனியார் காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகள்படி, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் காற்றுத் தரக் குறியீடு 277 ஆகவும், அண்ணா நகரில் 135 ஆகவும் பதிவாகியிருந்தது. ஆனால் இதுவே 2022இல், சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலுமே காற்று மாசுத் தரக்குறியீடு 50 முதல் 100க்குள் தான் இருந்துள்ளது. அதில், குறைந்தபட்சமாக தேனாம்பேட்டை பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 61 ஆகவும், அதிகபட்சமாக மாதவரம் பகுதியில் 91 ஆகவும் பதிவாகியிருந்தது. காற்று மாசு காரணமாக கடந்த ஆண்டும் சென்னை விமான நிலையத்தில் 60 விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின. இந்த ஆண்டு எத்தனை விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின, தாமதமாகப் புறப்பட்டன என்ற தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை. பண்ணாட்டு விமானங்களான, சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் ஹைதராபத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு, 9 மணிக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை முதல் எந்த விமானங்களும் புறப்படாமல், அனைத்து விமானங்களும் தாமதமாக காலை 9 மணிக்கு மேல் கிளம்பின. காற்று மாசு எப்போது குறையும்? பனிமூட்டத்துடன் காற்று மாசும் சேர்ந்துள்ளதால், இது மாசுத் துகள் அதிக நேரம் காற்றில் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன். "இந்த குளிர்ந்த தன்மை விலகி, வெயில் வரத் தொடங்கும்போது, காற்று மாசு குறையும். ஆனால், மக்கள் மீண்டும் பழைய பொருட்களை எரிக்கத் தொடங்கினால், காற்று மேலும் மாசடையும்,” என்றார் அவர். மேலும், போகி பண்டிகைகளுக்கு முன்பே மக்கள் எரிக்கக்கூடாது என்று எச்சரிக்கையாக மட்டும் இல்லாமல், அதை மீறி பழைய பொருட்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். “நீங்கள் எச்சரிக்கை கொடுப்பதால், எந்தப் பயனும் இல்லை. செய்பவர்கள் செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், மக்கள் போகி கொண்டாடுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், ஒருவர் பழையப் பொருட்களை எரிப்பதால், அது அவர்களோடு முடிவதில்லை. மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை கோருகிறோம்,” என்றார். போகி பண்டிகையின்போது ஏற்பட்ட காற்று மாசு எதிர்பார்க்காத ஒன்றுதான் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தெரிவித்தனர். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத மாசுக் கட்டுபாட்டு வாரிய அதிகாரி ஒருவர், “கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு காற்று மாசு அதிகமாக உள்ளது. இன்று காலை முதல் பதிவான காற்றுத் தரக் குறியீட்டை வைத்துப் பார்த்தாலே, இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது தெரிகிறது. ஆனால், இதுவரை பதிவானதிலேயே இது அதிகமான அளவா என்பதை முழுமையான தரவுகளை ஆராய்ந்துதான் சொல்ல முடியும்,” என்றார். போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் கூறியது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் கேட்டோம். ஆனால், இதுபோல் தனிநபர்கள் காற்றை மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித விதிகளும் இல்லையெனத் தெரிவித்தார். காற்று மாசுபாட்டால் என்ன உடல் உபாதைகள் ஏற்படும்? காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள சூழலில் முன்னதாகவே சுவாசக் கோளாறு உள்ளவர்களும், இதய நோய் பாதிப்பில் உள்ளவர்களும் கூடுமானவரை வெளியே செல்வதைட்ப தவிர்க்க வேண்டும் என இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். “பெரும்பாலும் கரும்புகையாக இருக்கும் மாசுபட்ட காற்றில் நுண் துகள்களின் அளவு அதிகமாக இருக்கும். அவை நாம் சுவாசிக்கும் மூக்கின் வழியாக உள்ளே செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், மிகச் சிறிய அளவிலான நுண் துகள்கள் எளிமையாக நாம் சுவாசிக்கும் போதே உள்ளே சென்றுவிடும். நீண்ட நேரம் இப்படியான காற்று மாசுபட்டுள்ள சூழலில் இருந்தால், மூச்சுத் திணறல் மற்றும் நீண்டகால சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்,” என்றார். அதேபோல குழந்தைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் தோல்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “இந்தக் காற்று மாசு பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் துணி உள்ளிட்டவையை எரித்ததால் ஏற்பட்டிருக்கும். இந்தப் புகையால், ஐந்து வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பகள் உள்ளது. அதேபோல, அவர்களின் தோல்கள் மிகவும் இலகுவாக இருப்பதால், தோல் எரிச்சல் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cxwd7v9k3xeo0 points
-
0 points
-
ரணில் பிரதமராக போய் பதவியிழந்து வந்தார் என்பது தவறான தகவல். ஒஸ்லோ உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது 2002 டிசம்பர் மாதத்தில். அதன் பின்னரும் தாய்லாந்து, பேர்லின் போன்ற இடங்களில் பேச்சுவார்ததைகள் நடந்தன. ஒஸ்லோ உடன்பாடு என்பது, உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் ஒரு சமஸ்டியை இலங்கையில் ஏற்படுத்தும் ஒரு ஒரு தீர்வை நோக்கி செல்வதற்கு இரு தரப்பும் இணங்குவதாக ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையே. சமஸ்டி அரசியலமைப்பு தொடர்பாக பொறிமுறை ஆலோசனைகளை வழங்க சமஸ்டி அரசியமைப்பில் நிபுணத்துவம் மிக்க கனடாவை சேர்ந்த அரசியலமைப்பு வல்லுனர் குழுவும் நியமிக்கப்பட்டது. அன்றைய நிலையில் அதற்கு அழுத்தம் கொடுத்து செயற்படுத்துவதற்கான பலம் விடுதலைப்புலிகளிடம் இருந்தது. அது தவறிப்பொனது தமிழரின் இன்னொரு துரதிஷரமே. இன்றைய நிலையில் அதை போன்றதொரு சமஸ்டியை போன்ற தீர்வுக்கு கிட்ட கூட செல்ல முடியாது என்பதே ஜதார்த்தம். புலம் பெயர், தாயக அரசியலளர்கள் என்று கூறுவோ வெற்று கூச்சல்களை தவிர எதையும் செய்ய முடியாது என்ற ஆற்றாமையே கருத்துகளாக ஒலிக்கிறது. நான் ஏற்கனவே கூறியது போல் ஒன்றுமில்லாததில் இருந்து தொடங்கிய பிரபஞ்சம் போல் தாயகத்தில் வாழப்போகும் புதிய தலைமுறை இதுவரையான உதவாக்கரை அரசியலை Reset செய்து குப்பையில் போட்டுவிட்டு (அந்த குப்பைகள் நாறி புதிய தலைமுறைக்கு பாதிப்பு வராமல் இருக்க தகுந்த Disposal அவசியம்😂) புதிய, அவர்களுக்கு பொருந்தக்கூடியவகையிலான உலக ஜதார்தததமை அனுசரித்த அரசியல் வழிமுறைகளைக்கட்டி எழுப்பி பேரினவாத அடக்குமுறைகளில் இருந்து தம்மை தற்காத்து கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளது.0 points
-
14 JAN, 2024 | 12:47 PM கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்திப் பகுதிலுள்ள நீர்ப்பாசன கால்வாய் ஒன்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நீர்ப்பாசன வாய்க்காலுக்கு பாய்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்று (13) இரவு இடம்பெற்றதாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுஷன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஷ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜமீல் விசாரணைகளை மேற்கொண்டார். சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதனையடுத்து அவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டன. https://www.virakesari.lk/article/1739300 points