Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 10/07/24 in all areas
-
முற்றிலுமாக, சுமந்திரன், கஜேந்திரன், டக்கிளஸ், விக்கினேஸ்வரன் உட்பட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரிக்கத் தொடங்க வேண்டும். இவர்களால் இந்த 15 வருடங்களில் எந்த நன்மையும் ஏற்படவில்லை, என்பதுடன் இவர்களின் புழுத்துப் போன, வங்குரோத்து அரசியலால் தமிழ் இளைய சமுதாயம், அரசியலை விட்டே தூர விலகி நிற்கின்றது. இவர்களுடன் சேர்ந்து, தாயக அரசியலில் இருந்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் செல்வாக்கும் முற்றாகத் களையப்படல் வேண்டும். இன்றிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நிராகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும். அனைவரும் நிராகரிக்கப்பட்டு, மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பதே தமிழ் மக்களுக்கு நன்மை தரும். இயற்கை வெற்றிடங்களை நிரப்பாமல் விடுவதில்லை.6 points
-
3 points
-
உளுத்துப்போன மரம் எரிக்கவும் உதவாது . .........! இனி ஈஸிசேரில் கிடந்து அண்ணாந்து பார்த்து பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தாச்சுது, ஆனால் இந்த மக்களுக்கு என்ன நன்மை செய்தேன் என்று நினைக்கும்பொழுது கண்ணோரம் கண்ணீர் உருளும் .........!3 points
-
நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது....3 points
-
சீ சீ அவர்கள் உங்கள் பின்னால் ஓடத்தான் நேரம் இருக்கு. அங்கால கச்சையும் உருவப்படப்போவது தெரிய வாய்ப்பில்லை. எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை புலிகள் மற்றும் தேசியத்தை நேசிப்பவர்களுக்கு ஒரு கண்ணாவது போனால் காணும். அவ்வளவு சிறீலங்கா விசுவாசம்.3 points
-
இங்கே புலம் பெயர் நாடுகளில் சீமானை ஆதரிக்கும் ஒரு கூட்டம் தாம் தான் இலங்கைத் தமிழரை பிரதிநிதித்துவம் செய்யும் ஆட்கள் என்று சொல்வது போல சுமத்திரணை எதிர்க்கும் கூட்டமும் தாம் தான் மொத்த யாழ்பாணத்துக்கே சொந்தம் என்று நினைத்துக்கொண்டு உள்ளது. வெளியே தமது அரசியல் கருத்துக்ககளை பகிர்ந்து கொள்ளாத ( வெறி நாய்க்கடிக்குப் பயந்து ) நன்கு படித்த பண்பான ஒரு சனம் இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ளது. அவர்கள் சுமத்திரனைத் தான் ஆதரிப்பார்கள். மேற்படி சனங்கள் வெளியே தாம் சுமந்திரன் ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளததால் பலர் அங்கே சுமத்திரனுக்கு பயங்கர எதிர்ப்பு என்று நம்ப வைக்கப்படுகின்றார்கள்.2 points
-
விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டு இருந்த வேளை, சசிகலாவின் நெருங்கிய உறவொருவர் தன் முகனூலில் சசிகலா விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சுமந்திரனுக்கு முன்னுக்கு நிற்கின்றார் என தொடர்ந்து நிலைத்தகவல்கள் போட்டுக் கொண்டு இருந்தார். பின் நிலைமை மாறிய பின் சுமந்திரன் சுத்துமாத்து செய்துதான் சசிகலாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னுக்கு வந்தவர் என்றார். அதற்கு ஆதாரமாக சுமந்திரன் மகேசனை சந்தித்ததை குறிப்பிட்டு இருந்தார். பெரும்பாலான புலம்பெயர் தமிழ் ஊடகங்களும், சமூகவலைத்தள பக்கங்களும் அவரது முகனூலின் நிலைத்தகவலளை அடியொட்டி அதனையே கூறின. நானும் என் பங்குக்கு என் முகனூல் பக்கத்தில் சுமந்திரனை திட்டி ஒரு பதிவு வேறு போட்டிருந்தேன். ஆனால் அடுத்த நாள் மாலையின் பின், சசிகலாவின் உறவு அந்த முகனூல் பதிவுகள் அனைத்தையும் அழித்து விட்டார். சசிகலா தான் வென்றவர், ஆனால் சுமந்திரன் அதை தட்டிப் பறித்து போட்டார் என இலங்கையில் இருந்து வெளிவரும் நம்பிக்கை தரக்கூடிய எந்த ஊடகமும் செய்தியாக கூட போடவில்லை. வீரகேசரி, தினக்குரல், டெய்லி மிரர், தமிழ் மிரர் போன்றவை இவ்வாறான குற்றச்சாட்டை பற்றி பிரசுரிக்கவும் இல்லை. புலம்பெயர் ஊடகங்கள், முக்கியமாக தமிழ்வின், பதிவு போன்ற இணைய பத்திரிகைகள் மட்டுமே தொடர்ந்து இது பற்றி சொல்லிக் கொண்டு இருந்தன. உத்தியோகபூர்வமான முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின் சசிகலாவும் எந்த இடத்திலும் இது பற்றி கருத்து தெரிவிக்கவும் இல்லை, நடவடிக்கை எடுக்கவும் இல்லை. அத்துடன் சுமந்திரன் போய் மகேசனிடம் சொன்னவுடன், உடனே மகேசனால் அவ்வாறு பொய்யான முடிவை அறிவிக்க முடியாது. மீள வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டால் அவரது பதவி மட்டுமல்ல அவரது மதிப்பே நிலைகுலைந்து போகும் என்பதை அறியாதவர் அல்ல அவர். அத்துடன் அவர் அரசியல்வாதியும் அல்ல, மதிப்புமிக்க ஒரு தமிழ் அதிகாரி அவர். சசிகலா வழக்கு தொடுத்து இருந்தால், அவருக்கு கோத்தாவால் அச்சுறுத்தல் வந்திருக்கும் என்பதலெல்லாம் தவறான அனுமானம். ஏனெனில் இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் அடிபடுவதை பார்த்து கோத்தா கொடுப்புக்குள் சிரித்து கொண்டு மேலும் அந்த பிரச்சனையை தீவிரமாக்கி இருப்பார்.2 points
-
🤣உங்களுக்கும், விசுகருக்கும் போலிச் செய்திகளை முன்னிறுத்தியாவது ஒரு தரப்பை போட்டுத் தாக்க வேண்டுமென்ற மனப்பாங்கு இருக்கிறது. சில நாட்கள் முன்பு தான், மகேசன் பற்றி நீங்களே "அவர் நேர்மையாளர்" என்று எழுதி, அந்த இடத்தில் நானும் "மகேசன் தான் தேர்தல் பொறுப்பதிகாரி, ஏன் றொமெய்ன் மண்டபத்தினுள் போகலாம், காஷ் கட்டிடத்தினுள் இருந்த எண்ணும் நிலையத்திற்குப் போக முடியாது" என்று விளக்கம் தந்திருந்தேன். அப்ப பேசாமல் போய் விட்டு, இப்ப திரும்பவும் வந்து "பேப்பரில் வந்தது , அதை நம்பினோம்" என்கிறீர்கள். எந்த பேப்பரில் வந்தது? வீர கேசரி, தினக்குரல்? புலத்திலும், உள்ளூரிலும் இருந்த இருந்த ரொய்லெற் ஊடகங்களிலும், யூ ரியூப் குப்பைகளிலும் வந்ததெல்லாம் வைத்துக் கொண்டு இன்னும் போலிச் செய்திகளை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் போன்ற வயது அனுபவம் இருப்போரே இப்படி பொய் எது உண்மை எது என்று தெரியாமல் அப்பாவி கோயிந்தனுகளாக இருந்தால், இங்கே இருக்கும் "பட்டாசு றெஜிமென்ற்" பாடு தான் பரிதாபம்😂! புலிக்காய்ச்சல் இருந்து விட்டுப் போகட்டும், யாருக்குப் பாதிப்பு அதனால்? ஆனால் சீட்டுக்குப் போட்டி போடும் புழுக்கள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றிற்கு போலிச் செய்திகளை வைத்து முரட்டு முட்டுக் கொடுக்கும் உங்கள் போன்றவர்களால், இப்ப "தமிழ் தேசிய .." என்று எவராவது வாய் திறந்தாலே தாயகத்தில் மக்கள் விலகிப் போய் விடும் நிலை தான் அதிகரித்திருக்கிறது. 2020 இலேயெ அங்கஜனோடு ஆரம்பித்த போக்கு, இந்த முறை அனுர அணியோடு இன்னும் தீவிரமாகும். எல்லாப் புகழும் புலி வால்களுக்கே😂!2 points
-
பிறவிப் பெருங்கடல் விடிய எழும்ப Google calendar இல வந்த alert ஐப் பாத்து, முதல் வேலையா fb இல தேடி ஒரு photo ஐ எடுத்து what’s app குறூப்பில birthday day wish போட்டிட்டு status இல “ HBD to ……..” எண்டு முழுசாக்கூட எழுதாமல் சுருக்கிப் போட்டிட்டு தன்டை admin வேலையையும் காலைக் கடமையை வடிவாச் செய்திட்டன் என்ற திருப்பதியோட நாளை ஆரம்பித்தார் நம்பி. அவுஸ்திரேலியாவில விடிஞ்சாலும் அல்பேட்டாக்காரன், இரவுக் குளிருக்க ரெண்டு பெக்கைப் போட்டுக்கொண்டிருந்தவன், உடனயே தன்டை பங்குக்கு ஒரு பலூன் படத்தைப் போட்டான். மூத்திரம் போக வேளைக்கு எழும்பி நித்திரை வராமப் போஃனைப் பாத்திட்டு ஆரா இருக்கும் எண்டு யோசிச்சிட்டு , ஏன் பிரச்சினை எதுக்கும் ஒரு வாழ்த்துத் தானே எண்டு தன்டை பங்குக்கு கண்டிக்காரன் வாழ்த்து ஒண்டைப் போட்டான். இரவு 12.00 மணிக்கு பத்துபேர் தடதடவெண்டு வந்து வெட்டின கேக் வாயை கழுவாமலே படுத்தவன், எழும்பின கையோட எந்தெந்த குறூப்பில ஆரார் wish பண்ணினவை எண்டதைப் பாத்திட்டு, wish பண்ணாதவனை ஞாபகாமா வைச்ச படி குளிக்கப் போனான் அம்பி. கொழும்பில விடிகாலை late ஆ எழும்பி கண்ணாடி போடாமலே updated news எல்லாத்தையும் பாத்திட்டு போனகிழமை தன்டை birthdayக்குப் படத்தைப் போடேல்லை இண்டைக்குப் போட்டிருக்கிறார் adminஐத் தூக்கு , எண்டு போர்க்கொடி தூக்கினான் அப்பன். அதுக்குப் பிறகும் வாழ்க்கை வெறுத்து விட்டிட்டுப் போகாமல் அப்பன்டை friend சுப்பனைப் பிடிச்சிச் அப்பனை அடக்கிச் சமாளிச்சுக் கொண்டு குறூப்பை ஓட்டிக்கொண்டிருந்தார் நம்பி. காலமை எழும்பி ஏதாவது நல்ல விசியம் இருக்குமா எண்டு WhatsApp பாக்க ஒரு புது குறூப்பில add பண்ணி இருந்தாங்கள். விசாரிச்சா, “மச்சான் சுசிக்கு birthday வாற மாசம், மனிசி கேட்டது ஒரு video செய்ய வேணுமாம் எண்டு குசும்பர் குறூப்பி்ல நீயும் அவனும் இருக்கிறதைப் பாத்து add பண்ணினான், ஒரு wishing video message அனுப்பி விடு” எண்டான் சிங்கன். கேட்டதை மறந்திருக்க, காசைக் கட்டுங்கோ கெதியா எண்டு ஒரு மாசத்துக்கு முதலே தொடங்கி, ஒவ்வொரு நாளும் தொல்லை தாற insurance காரன் அனுப்பிற reminder இலும் பாக்க reminder கூட வர, கடைசீல சரி எண்டு போட்டு நாலு தரம் எடுத்தும் சரியா வராத வீடியோ message இல என்னை வடிவாத் தெரியிற ஒண்டை upload பண்ணி விட சுசியின்டை குடும்பம் சார்பா சிங்கன் 🙏 போட்டான். முந்தின நாட்களில வீட்டுக்காரர் ஞாபகப் படுத்தினாக்கூட வீண் செலவு எண்டு தெரிஞ்சே மறந்து போன birthday தான் நிறைய, ஆனால் இப்ப அப்பிடியில்லை. எப்ப இந்த birthday கொண்டாட்டம் பெரிசா வந்திச்சுது எண்டே தெரியேல்லை தொற்றுநோய் மாதிரி எல்லாருக்கும் பரவீட்டுது . நல்லதோ கெட்டதோ நடந்தா அதை அறியத்தாறம் எண்ட செய்தியை எங்காயாவது போட்டால் அதை வாசிச்சு அறிஞ்சதோட நிப்பாட்டாமல். வாழ்த்தில இருந்து அஞ்சலி வரை எழுத்தில தொடங்கி, சுருக்கெழுத்தா மாறி கடைசீல கைக்கு நோகும் எண்டு போட்டு Emoji இல வந்து நிக்குது. குறூப்பிலயே இல்லாதவனுக்கும் வாழ்த்துகளும் செத்தவனுக்கு RIP யும் அவங்கள் ஆவியா வந்து பாத்தாலும் எண்டோ தெரியேல்லை நிறையவே கிடைக்கும். அந்தக் காலத்தில கொஞ்சம் வசதியான வீடுகளில மட்டும் பள்ளிக்கூட friends ஐ கூப்பிட்டு பின்னேரம் வீட்டை ஒரு tea party நடக்கும் . ஒருக்கா படிக்கேக்க அப்பிடி ஆக்கள் என்னையும் கூப்பிட போறவீடு பெரிய வீடு, என்னத்தைக் கொண்டுபோற எண்டு தெரியாம முழிச்சன். அவன் “English teacherன்டை favourite student ” எண்டு போட்டு போன மாசம் புத்தகம் விக்க வந்த கப்பலில என்டை அறிவை வளக்க எண்டுஅப்பா மலிவா வாங்கித் தந்த பிரிச்சே பாக்காத பேர் தெரியாத ladybird புத்தகத்தை brown paper bag இல போட்டுக் கொண்டு போய்க்குடுத்தன். ஏனோ தெரியேல்லை அடுத்த முறை என்னை அவன் கூப்பிடவேயில்லை. பொதுவா அந்தக்காலத்தில birthday எண்டால் toffee bag தான் அதுகும் கொஞ்சம் வசதி இருந்தாத்தான். நூறு toffee உள்ள bag வாங்கி வகுப்பில எத்தினை பேர் , ரீச்சர் எத்தினை பேர் எண்டு எண்ணி, ஐஞ்சு மட்டும் கூடப் போட்டு வீட்டில குடுத்து விடுவினம். வாங்கித்தாற delta இல்லாட்டி star toffee bag ஓட பள்ளிக்கூடம் போய் தனக்கு இண்டைக்கு birthday எண்டு வகுப்ப ரீச்சரிட்டை toffee பையை நீட்ட அவ அள்ளி எடுத்திட்டு பிள்ளைகளே birthday பாட்டு பாடீட்டு ஒராள் ஒண்டு தான் எடுக்கோணும் எண்டா. “ happy birthday” வாழ்த்தோட வகுப்பைச் சுத்தி வந்திட்டு பிறகு ஒட்டிக்கொண்டு வாற ஒரு friend ஓட ஒவ்வொரு வகுப்பா ஏறி எல்லா ரீச்சர் மாருக்கும் குடுத்திட்டு வந்திருக்க மிஞ்சிற toffeeஐ பங்கிடிறதுக்கு (பறிக்கிறதுக்கு) இன்டேர்வலில ஒரு குறூப் வரும். இவ்வளவு நாளும் கொம்பாஸால குத்தினவன் இண்டைக்கு திடீர் friend ஆவான். Birthday அண்டு கிடைக்கிற ஒரே ஒரு நன்மை எண்டால் , அண்டைக்கு மாத்திரம் குளப்படி செய்தாலும் அடி விழாது . செய் குழப்படிக்கு வாத்தி பிரம்பைத் தூக்கிக்கொண்டு முன்னால வா எண்டு கூப்பிட , “சேர் இண்டைக்கு இவருக்கு பேத் டே” எண்டு chorus ஆ நாலு பேர் கத்த ,”சரி போய் இரு இண்டைக்கு விடுறன்” எண்டு பதில் வரும். முந்தி birthday எண்டால் கலர்ச்சட்டை போடலாம் எண்டிருந்தது, பிறகு அதுகும் இல்லாமல் போட்டுது. என்டை கஸ்ட காலம் எனக்குப் பிறந்த நாள் பள்ளிக்கூட விடுமுறையில தான் வாறது ஆனபடியால் அந்தக் கொடுப்பனவும் இல்லை. அதோட வருசம் கழிச்சு வாறதால கூடவாச் செய்யிற பயத்தம் பணியாரமும் , முறுக்கும் தான் treat. கொஞ்சம் வளர பெடியளோட போய் ரொட்டியும் கறியும் எண்டு தொடங்கி பிறகு extra ரொட்டி போட்டு ஒரு கொத்து மூண்டு plate எண்டு கேட்டு வாங்கிப் சாப்பிடுறது தான் treat. அதுகும் வீட்டை ஆடு எண்டு சொல்லீட்டு கொண்டு போற காசுக்கு மாடுதான் வாங்கிறது. இப்ப அதுக்கெண்டு தனி budget முதலே ஒதுக்க வேணும். அதோட வெள்ளைக்காரனே வீண் செலவு எண்டு மறந்து போன கனக்கத்தை எங்கடை சனம் மட்டும் தான் பின்பற்றிற மாதிரி இருக்கு. வரியாவரியம் வாற திருவிழாவைத் தவிர double digit ஆம் எண்டு 10, teen தொடங்குதாம் எண்டு 13, adult ஆகீட்டாராம் எண்டு 18, துறப்புக் கொழுவலாமாம் எண்டு 21, golden birthday எண்டு 50, பிறகு60 எண்டு விசேச திருவிழாவும் இருக்கும். கலியாண வீடு மாதிரி hall எடுத்து , invitation card அடிச்சு, Theme colour, 3D cake, cartoon character , photo shooting face painting எண்டு அது birthday பெரிய விழாவா இப்ப வந்திட்டுது. Birthday க்கு cake எப்ப வந்தது எண்டு தெரியாது. முதலில cake இல தொடங்கி, பிறகு சும்மா ஒரு மெழுகுதிரிவந்து, அது பிறகு அது கலராகி, சின்னனாகி, நம்பரா மாறி, பிறகு மத்தாப்பு மாதிரி வந்து, இப்ப birthday song க்கு music போடிற மாதிரி எண்டு கூர்ப்படைஞ்சு வந்து கொண்டிருக்கு. மெழுகுதிரி மாதிரி பத்தாததுக்கு வெட்டிற கத்தியும் மாறிக்கொண்டு போகுது. பாண் வெட்டிற கத்தீல தொடங்கிப் பிறகு butter பூசிற கத்திக்கு ribbon கட்டி இப்ப அதுக்கும் எண்டு special கத்தி கலரில வருது. கலியாணத்தில தாலி கட்டேக்கயே பின்னால ரெண்டு மூண்டு பேர் தான் நிப்பினம் விளக்கோட ஆனால் birthday இல “பொப்” வெடிச்சுப் பூப்போட ரெண்டு பேர், பனிமழை பொழியப்பண்ணக் கொஞ்சப்பேர், chorus பாடக் கொஞ்சப் பேர் எண்டு இளையராஜான்டை stage show மாதிரி ஆக்கள் நிப்பினம். சில நேரத்தில popம் sprayம் கேக் எல்லாத்தையும் மூட சாப்பிட வேற கேக் தேவைப்படும். “அடேய் நாங்கள் அவங்களை மாதிரி இல்லை விளக்கை ஏத்தித்தான் கொண்டாட வேண்டும்” எண்டு நண்பன் நவாஸ் புது வியாக்கியானத்தோட கேக்கை வெட்டி ஆனால் விளக்கை ஏத்திக் கொண்டாடினான். பிறந்த நாள் காரனுக்குத்தான் கேக் தீத்திறது மாறி எங்கயோ படத்தில அரைகுறையாப் பாத்திட்டி இப்ப கேக் வெட்டிறவன் தான் மற்ற எல்லாருக்கும் தீத்த வெளிக்கிட்டான். பழைய காலத்தில நாள் நச்சத்திரம் பாக்கிறது நல்லது கெட்டதுக்கு மட்டுமில்லை பிறந்த நாளுக்கும் தான். பிறந்த நாளண்டு இருந்த நச்சத்த்திரம் பிறகு நாள் மாறி வரும். முந்தின காலத்தில நட்சத்திரதுக்கு கோயிலில ஒரு அருச்சனை தான் பிறந்த நாள் விசேசமா இருந்திச்சுது. இப்ப பிறந்த நாளுக்கு party வைக்கிறது வளரக் கோயிலுக்கு போறது தேய்பிறையாக மாறி நச்சத்திரம் சாத்திரத்துக்கு மட்டும் எண்டு ஆகீட்டுது. அதுகும் ஏதாவது special birthday எண்டால் Scarborough இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு கனடாவில தொடங்கி, பிறகு கொஞ்சப்பேரோட போய் கியூபாவில நிண்டு படம் போட்டிட்டு, வாற வழீல லண்டனிலேம் கொண்டாடி பிறகு ஊரில வந்து பெரிசாக் கொண்டாடி எண்டு ஒரு வருசமா அந்தப் படம் ஓடும். படிக்கேக்க இழந்தும், இடம்பெயர்ந்தும், எண்ணிக்கை சுருங்க எல்லாப் பள்ளிக்கூடத்தையும் சேத்து இவ்வளவு தான் எண்டு batchயிலேயே ஒரு இருநூறு பேர் தான் இருந்தம். அப்ப பள்ளிக்கூடம் தாண்டி உறவும் நட்பும் இருந்ததால partyயும் இருக்கிறதைக் கொண்டு பிரிச்சு உறவைப் பெருக்கி நடந்தது. ஆனாலும் பெடியள் மட்டும் தான் அப்பிடியாவது செய்தது எண்டு நெக்குறன். இப்ப ஆம்பிளையும் பொம்பிளையுமா ஆயிரம் பேர் இருக்கிற குறூப்பில ஆளே தெரியாத ஒருத்தனுக்கு birthday wish பண்ணிற காலம். அதோட இப்ப இது ஒரு நாள் திருவிழா இல்லை. முதல்ல தனி்யக் குடும்பமா birthdayகொண்டாடிப் பிறகு, வேலை குறூப், gym group, படிச்ச பள்ளிக்கூடம், ரியூசன் சென்டர், பிறந்த ஊர் எண்டு தொடங்கி சர்வதேச levelல ஒரே வருசத்தில பிறந்தது எண்டு உலகளாவிய birthday கொண்டாட்டத்தை ஊர்ஊராப் போய் வைக்கிறது தான் fashion ஆப் போட்டுது. அதோட இப்ப ஒரு புதுசா surprise party எண்டு வேற ஒண்டு தொடங்கி இருக்கு. எல்லாம் தெரிஞ்சும் எதுகும் தெரியாத மாதிரி party நட(டி)க்கிறது தான் அது. எல்லாக் கொண்டாட்டமும் முடிஞ்சு எல்லாருக்கும் நன்றி உரை சொல்லி முடியமுதலே அடுத்த birthday வந்திடும். பிறவிப் பெருங்கடல் எண்டதை சரியா? விளங்கிக் கடல் தாண்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நாங்கள் அடுத்தது விண்ணைத் தாண்டி விண்வெளியில் தான் கொண்டாடுவம் எண்டு நெக்கிறன் . Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்2 points
-
இதே கட்சியில் இது நாள் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் விலகி இன்னொரு கட்சியில் சீட்டுக்காக சேர்ந்து இருக்கின்றார். தேர்தலில் தனக்கு முறைகேடு நடந்தது என புலம்பிய இவர், அதுக்காக ஒரு முறைப்பாடு தானும் செய்யவில்லை என்பதுடன், வழக்கும் நடத்தவில்லை (இலங்கை நீதித் துறையில் தனக்கு நம்பிக்கையில்லை என இவர் சாட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் கணவரும் அதே துறையில் தான் இருந்தவர். மகளையும் அதே துறையில் தான் படிப்பித்தவர் என நினைக்கின்றேன்). கடந்த சனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு கேட்டு இருந்தார் - தன்னிச்சையாக2 points
-
தமிழரசு கட்சிக்கு.... கடைசி ஆணி அடித்து, பெட்டி மூடப் போகிறார்கள். கடைசியாக பார்க்க வேண்டிய ஆட்கள், வந்து... பார்த்திட்டு போங்கோ.2 points
-
2 points
-
இலங்கை சனாதிபதி தனது பாதுகாப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது. முன்னாள் ஆயுததாரிகளைக் கொண்டு இந்தியாவோ அல்லது ஈஸ்ரர் குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புபட்ட தரப்புக்கள் இந்தியாவுடன் சேர்ந்து இவரைக் கொல்ல முயற்சிக்கும் அபாயம் மிகவும் அதிகமாக இருக்கிறது. பழி வழமைபோல விடுதலைப் புலிகளின் மேல் போடப்படும்.2 points
-
2 points
-
2 points
-
பெருந்திணை மெய்யழகா ? - சோம.அழகு நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் படம் போல இருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு காணச் சென்றேன். திரு. கமல் அவர்கள் பாடிய பாடலோ வேறொரு பிம்பத்தைத் தந்தது. சொந்தங்கள், பந்தங்கள், பாசங்கள், நேசங்கள், துக்கங்கள், துயரங்கள் என முகம் பதினெட்டு கோணலாகும் வரை கிட்னி, கணையம், கல்லீரல், மண்ணீரல் எல்லாவற்றையும் பிழி பிழியென்று பிழிந்தெடுக்கப்போகிறார்கள் என்ற என் எண்ணம் தவிடு பொடியானதில் மகிழ்ச்சியே. நன்னெறிப் பிரசங்கங்கள் எல்லாம் இல்லாமல் போகிற போக்கில் மனதை வருடி நல்லுணர்வைத் தந்த படம். இந்த இயக்குநருக்குப் படமாக்கல் சிறப்பாக வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ‘மெய்யழகன்’ என்பதை ஒரு முழு நீளப் படம் என்பதை விட நல்ல தேர்ந்த நான்கைந்து சிறுகதைகள் மிக இயல்பாக ஒன்றாகக் கோர்க்கப்பட்ட தொகுப்பு. கம்பீரமாகச் சீறி வரும் ‘தோனி’ காளை, சைக்கிள் கதை – உணர்வுப்பூர்வமாகப் புன்னகை பூக்கச் செய்பவை. அதிலும் போலீஸ் ஒருவர் வந்து காளையைப் பார்த்ததும் காக்கியைக் கழற்றி விட்டு ஏறு தழுவுதலில் கலந்து கொண்டு காக்கிச் சட்டை அணிந்து மீண்டும் போலீஸ் ஆக மாறிய பின் பொய்யான விறைப்புடன் ‘தடை செஞ்சிருக்காங்கன்னு தெரியும்ல? அப்புறம்?’ என மென்னகையுடன் மெய்யழகனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டுச் செல்லும் காட்சி ரொம்பவே ரசனையாக இருந்தது. வெண்ணாற்றின் கரையோரம் அமர்ந்து சோழ வரலாற்றில் தொடங்கி ஈழம் சென்று தூத்துக்குடி வரையிலான பயணம் – ‘தோழர்’ மெய்யழகனின் கதாபாத்திரத்தை மனதிற்கு மிக நெருக்கமாக அழைத்து வந்தது. எல்லோருக்குள்ளும் இருக்க வேண்டிய சக உயிருக்கென கண்ணீர் விடும் உணர்வைக் கடத்திய அழுத்தமான வசனங்களும், அதை அழுகையும் சோகமும் கலந்து உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய மெய்யழகனின் முகமும் என் கண்களிலும் லேசாக நீர்த்திரையிட்டது. ‘பேசிட்டே இருக்காங்க’ என பெரும்பாலானோரால் சலித்துக்கொள்ளப்பட்ட இரண்டாம் பகுதிதான் கலவையான உணர்வுகளைத் தந்து ரொம்பவே ரசிக்க வைத்தது. ‘படத்தின் நீளத்தைக் குறைக்க’ என்ற காரணம் சொல்லப்பட்டாலும் கத்தரிக்கப்பட்ட காட்சிகளின் தெரிவு எழுப்பும் ஒரே கேள்வி ‘இந்த அளவு கூட உண்மையையும் நியாயத்தையும் ஒருவன் பேசக் கேட்கும் துணிவில்லையா? மனசாட்சி உறுத்துகிறதா?’ முதல் பாதி முழுக்க கல்யாண வீட்டைச் சுற்றியே கதை நிகழ்ந்ததில் ‘அய்யயோ! அடுத்த பாதியில் சொந்தங்களுடன் மீண்டும் சேர்வதான வழக்கமான(cliché) பூச்சுவேலைகள் நிரந்திருக்குமோ’ என கொஞ்சமே கொஞ்சம் சலிப்பு படர்ந்தது. பின் அமைந்திருந்த கதை அமைப்பு அதை வேரோடு பிடுங்கி எறிந்து ஆசுவாசமளித்தது. இரு தனி நபர்களுக்கு இடையிலான தூய்மையான அன்பு அழகியல் ததும்ப பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. படம் முடிந்த உடன், அதன் தாக்கம் மனதில் இருத்திச் சென்ற குறுநகையில் நானும் ஒரு நொடி மனம் பிறழ்ந்து உறவுகளை நினைத்தபடியே இருள் தெளிக்கப்பட்ட வானைப் பரிவோடு பார்த்தவாறே வந்து கொண்டிருந்தேன். உறவுகளில் அரிதான வெகு சில நல்ல உள்ளங்கள் அகக்கண்ணில் வந்து குளிர்ச்சியைப் படர விட்டுச் சென்றன. சடாரென்று மீதமுள்ள வன்மக் கிடங்குகள் வரிசையாக நினைவில் ‘இந்தா நானும் வந்துட்டேன்ல...’ என வரத் துவங்க, ‘சில்லென்று ஒரு காதல்’ திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் மனைவி கதாபாத்திரத்தைப் போல் ஒரு நொடி யோசித்துப் பின் முகம் சுழித்தவாறே ‘ச்சை…முடியாது…முடியாது’ என்று அபூர்வமாக என்னுள் எட்டிப் பார்த்த சினிமாத்தனத்தை எள்ளி நகையாடியது மனம். “உங்க வீட்டுக்கு என் பங்களிப்பு இருக்கக் கூடாதா?” என அருள்மொழி கேட்காமலேயே அவரின் தேவைக்காகத் தனது மொத்த சேமிப்பு, காணாததற்கு மனைவியின் நகைகளையும் அடகு வைத்துத் தருவதாகக் கூறும் மெய்யழகனின் பாத்திரப் படைப்பு எதார்த்தத்தில் இருந்து சற்றே துருத்திக் கொண்டு மிகையாகவும் மடமையாகவும் தோன்றியது. ஒரு காட்சியில் மெய்யழகன் அருள்மொழியிடம் பல காலம் முன்பு அவர் அப்பாவிடம் இருந்து அடித்துப் பிடுங்கி வீட்டை வாங்கிக் கொண்ட உறவுகளைத் தனக்காக மன்னிக்கும்படி கேட்பார். எனக்குச் சிரிப்பை வரவழைத்த இடம் அது. நம்மை ஏமாற்றியவர்கள், நமது இயல்பே மொத்தமாக மாறி நம்முள் இறுக்கம் படரக் காரணமானவர்கள் மீது எழும் வெறுப்பு அவர்களிடமிருந்து நம்மை ஒதுங்கி இருக்கச் சொல்லிப் பணிக்கும். மனம் காலப்போக்கில் அவர்களை முற்றிலும் அந்நியர்களாக்கிவிடும். பிறகு ‘மன்னிப்பு’ என்னும் வார்த்தைக்கு என்ன பெரிய பொருள் இருக்கப் போகிறது? அவர்களுக்குத் தீங்கும் நினைக்க வேண்டாம்; கவலையும் கொள்ள வேண்டாம். மீண்டும் போய் உறவைப் புதுப்பிக்கும் எண்ணம் இல்லாத பட்சத்தில் நமக்கு நிகழ்ந்ததையும் நிகழ்த்தியவர்களையும் அடியோடு மறப்பதுதானே இயற்கையாக இருக்கும்? ‘ஒருவருக்கொருவர் குறுக்கிடாமல் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் செல்ல இந்த செயற்கைப் பெருந்தன்மை எல்லாம் எதற்கு?’ என்றே தோன்றியது. இயக்குநரின் இரண்டு படங்களுக்கும் இரண்டு ஒற்றுமைகள் – எரிச்சலூட்டும் பெருந்திணை மற்றும் அநியாயத்திற்கு நல்லவனாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் ஆண் கதாபாத்திரம். ஒரு வேறுபாடு – முழுக்க முழுக்க இப்படி ஒருவர் இருக்க வாய்ப்பில்லையெனினும் எல்லாவற்றையும் மீறி ‘இப்படத்தில்’ மெய்யழகனின் கதாபாத்திரம் ரசிக்கக்கூடியதாக இருந்தது. இன்னோரு படத்த பத்திலாம் எதுக்குப் பேசீட்டு? அருள்மொழியின் உறவுக்காரப் பெண் வந்து தன் கணவன் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்த சொந்தக் கதை, அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட சோகக் கதையைக் கூறிய பின் “பேசாம உன்னையே கல்யாணம் பண்ணிருக்கலாம்” என்று அருள்மொழியிடம் ஏக்கத்தோடு கூறுவார். இருவருக்கும் தனித்தனி குடும்பங்கள் இருக்கின்றன. அப்பெண் தனது மணவாழ்வில் இருந்து வெளிவரவில்லை. மணமுறிவு ஆகியிருந்தாலும் கூட மணவாழ்க்கையில் இருக்கும் இன்னொரு ஆணிடம்(நகைச்சுவையாகக் கூட) இப்படிச் சொல்வது எப்படிச் சரியாகும்? பின்னர் கல்யாண வேலையில் தன்னை ஈடுபடுத்தும் பொருட்டு எழுந்து செல்கையில் தற்செயலாகத்(என்று நம்ப நாம் என்ன…?!) தவறான திசையில் நடக்கத் தொடங்கித் திரும்பிப் போகும் போது பட்டும் படாமல் அருள்மொழியின் தோளைத் தடவிச் செல்வார். அந்தத் தொடுதலில் தென்படும் வாஞ்சை நெருடவில்லையா? இன்னொரு காட்சியில் பந்தியில் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கும் அருள்மொழியை ஏக்கத்தோடு/பாசத்தோடு… ஏதோ ஒரு கண்றாவியான உணர்வோடு திரும்பிப் பார்ப்பார். இவ்வகையான ஒழுக்கத்திற்கு மாறான பொருந்தாக் காதல் மீது இயக்குநருக்கு ஏன் இவ்வளவு தீராக் காதல்? Emotional affair தவறில்லை என்பது போல அதை இவ்வளவு மேன்மையாகக் காட்டுவதன் பெயர் ரசனை அல்ல. இவரது முதல் படத்தின் கதைக்கரு முழுக்க முழுக்க இதுதான். அழகியல், மென்னுணர்வுகள் என்ற போர்வையில் அநாகரிகத்தை நியாயப்படுத்தவோ சாதாரணமாக்கவோ முடியாது. இதுவெல்லாம் கவித்துவம் என்று நினைப்பவர்களுக்குத் தங்கள் துணை இதைப் போல் வேறு ஒருவரிடம் சொல்வதும் அதே கவிதை மண்ணாங்கட்டியாகத்தான் தெரியுமா? என்று மண்டையில் உறைக்குமாறு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. படத்தின் மொழியிலேயே கூறுவதாயிருந்தால் இந்தப் புளிப்புக் காட்சிகள் நீங்கலாக ‘நெல்லிக்காய் சாப்டுட்டுத் தண்ணி குடிச்சாப்ல இருந்துச்சு’ படம். வெகு சில எழுத்துப் பிழைகளோடு வாசிக்கக் கிடைத்த ஓர் அருமையான கவிதை! நன்றி 'திண்ணை' இணைய இதழ். https://puthu.thinnai.com/2024/10/06/பெருந்திணை-மெய்யழகா/1 point
-
ஆகவே, மற்றவர்களும் கோடிக்கணக்கில் பணம், கணக்கில்லா வாகனங்கள் சேர்க்க வேண்டும். கொஞ்சம் இடம் விடுங்கப்பா, அப்பதான், சும்மா இருந்து சாப்பிடலாம் வயோதிபத்தில். மொத்தத்தில், பணம் வாகனம் பார்க்க. மக்கள் தலையில் அரசியல்! மக்கள் எப்பாடு பட்டாலும் பரவாயில்லை. இந்த வாதமும் நல்லாய்த்தானே இருக்கு.1 point
-
07 OCT, 2024 | 12:57 PM வீரகத்தி தனபாலசிங்கம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின் கட்சிகள் தோல்வியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்னதாக மீண்டும் தேசிய தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது. புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரசாரங்களின்போது நாட்டு மக்களுக்கு உறுதியளித்ததைப் போன்று பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைகின்றன. தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்த மக்களிடம் திசாநாயக்க தனது ஆட்சியை உறுதியான முறையில் முன்னெடுப்பதற்கு வசதியாக தேசிய மக்கள் சக்தி பலம்பொருந்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்ற தேர்தலில் அமோகமான வெற்றியைத் தருமாறு கேட்பார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் அடிப்படையில் நோக்கும்போது பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மைப் பலம் கிடைப்பது சாத்தியமில்லை என்று முன்கூட்டியே மதிப்பீடுகளை வெளியிடுகிறவர்களும் இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அவர்களின் கட்சிகளுக்கு கிடைக்கப்போவதில்லை. அதனால் அந்த மதிப்பீடுகள் பெருமளவுக்கு பொருத்தமானவை அல்ல. அத்துடன் இரு தேசிய தேர்தல்களிலும் ஒரே மாதிரியான காரணிகள் முழுமையாகச் செல்வாக்கு செலுத்துவதில்லை. ஜனாதிபதி திசாநாயக்க ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியவில்லை என்றபோதிலும், மக்கள் மாற்றம் ஒன்றுக்காகவே அவருக்கு வாக்களித்தார்கள். மாற்றத்துக்கான வேட்பாளராக திசாநாயக்கவை அடையாளம் கண்டு வெற்றிபெறவைத்த மக்கள் அவர் உறுதியான அரசாங்கத்தை அமைத்து தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவரின் கட்சியே அரசாங்கத்தை அமைக்கக்கூடியதாக பாராளுமன்ற தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது வழமையாகும். அதுவும் இந்த தடவை பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மீது மக்கள் கடுமையான வெறுப்பைக் கொண்டிருக்கும் பின்புலத்தில் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் கிடைத்த வாக்குகளையும் விடவும் கூடுதலான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தாராளமாக இருக்கின்றன. 2019 ஜனாதிபதி தேர்தலில் 3.16 சதவீதமான வாக்குகளைப் பெற்ற திசாநாயக்க இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஐம்பது சதவீதமான வாக்குகளைப் பெறுவதற்கு பிரமாண்டமான பாய்ச்சலை செய்வது சாத்தியமில்லை என்றே பரவலாக நம்பப்பட்டது. ஆனால் அரசியல் என்பது கணிதம் அல்ல சமூக விஞ்ஞானம் என்று கூறிய திசாநாயக்க நாட்டில் பரவலாக தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்துவந்த பெரும் ஆதரவின் அடிப்படையில் தனது வெற்றியில் திடமான நம்பிக்கை கொண்டவராகவே இருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி திசாநாயக்க சாதித்துக் காட்டியதைப் போன்று இலங்கையின் முன்னைய வேறு எந்த அரசியல் தலைவரும் செய்ததில்லை என்று கூறினால் அது மிகையில்லை. முன்னைய ஜனாதிபதி தேர்தலில் தனக்கு கிடைத்த வாக்குகளின் சதவீதத்தை விடவும் 14 மடங்கு பாய்ச்சலை ஒரு ஐந்து வருடங்களுக்குள் செய்து அவர் சாதித்த வெற்றி இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் வேறு பாகங்களிலும் கூட முன்னென்றும் கண்டிராததாகும் என்றுகூட சில அவதானிகள் வர்ணிக்கிறார்கள். ஐக்கிய முன்னணி என்ற பழைய வாகனம் இல்லாமல் இடதுசாரி கட்சியொன்றினால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று காட்டிய பெருமையும் ஜனாதிபதி திசாநாயக்கவையே சாரும். கடந்த நூற்றாண்டில் மிகவும் பெரிய கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடியதாக இருந்தது. அந்த கட்சி ஒருபோதும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்ததில்லை. பழைய இடதுசாரி கட்சிகள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு சுதந்திர கட்சியுடனான கூட்டணியையே நம்பியிருந்தன. அந்த இடதுசாரி கட்சிகள் எல்லாம் வரலாறாகிவிட்ட நிலையில் இன்று தேசிய மக்கள் சக்தி தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒரு சக்தியாக மாறியிருப்பது இலங்கை அரசியலில் ஒரு மைல்கல்லாகும். தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், இங்கு அதன் தேர்தல் சாதனை மீதே கவனம் செலுத்தப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியையோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையோ அல்லது ராஜபக்சாக்களின ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையோ பிரதான கட்சிகள் என்று இனிமேல் அழைப்பது பொருத்தமில்லை. அவை தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக் கூடியவையாக இல்லை. கூட்டணி அமைப்பதற்கு இந்த கட்சிகளைத் தேடி மற்றைய கட்சிகள் வந்த காலம்போய் இப்போது மற்றைய கட்சிகளைத் தேடி இவற்றின் தலைவர்கள் ஓடுகிறார்கள். ஆனால் அவர்களுடன் கூட்டணி அமைக்க குறிப்பிடத்தக்க செல்வாக்கு மிக்க வேறு எந்த கட்சியும் முன்வருவதாகவும் இல்லை. ஆளும் கட்சியாக தேசிய மக்கள் சக்தியும் பிரதான எதிர்க்கட்சியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் வெளிக்கிளம்பியிருக்கும் புதியதொரு அரசியல் கோலத்தையே இன்று காண்கிறோம். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனடியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டுச் சேருவதற்கு அழைப்பு விடுத்தது. பிரேமதாசவும் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளை சேர்த்துப்பார்க்கும்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பே அதற்கு காரணமாகும். ஆனால், பிரேமதாச அந்த அழைப்பை நிராகரித்து விட்டார். விக்கிரமசிங்க தலைவர் பதவியில் இருந்து விலகினால் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை தாங்கள் பொறுப்பேற்கத் தயாராயிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சில தலைவர்கள் கூறினார்கள். இனிமேல் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று விக்கிரமசிங்க அறிவித்திருந்தாலும், கட்சியின் தலைமைத்துவத்தை உடனடியாக அவர் கைவிடுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணியை தவிர்ப்பதற்காகவே அவர் இணங்கமுடியாத அந்த நிபந்தனையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முன்வைத்தனர் போலும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல கட்சிகளில் இருந்து வெளியேறிவந்து ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரித்தவர்கள் பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக கூறப்பட்டது ஆனால், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் வேறு பலரும் மக்கள் ஐக்கிய சுதந்திர கூட்டணி என்ற பெயரில் வேறு ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானத்திருப்பதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியும் வேறு குழுக்களுமே சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிகிறது. ராஜபக்சாக்களை கைவிட்டு விக்கிரமசிங்கவுடன் சேர்ந்தவர்களினால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றுக்ககொடுக்க முடியவில்லை. ராஜபக்சாக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்ததைப் போன்றே அவர்களுடன் சேர்ந்தவர்களும் மக்களினால் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிக்காட்டின. இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் சிலர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, உதவி தலைவர் அகில விராஜ் காரியவாசம் போனறவர்களும் கூட தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவர்கள் எல்லோரும் தங்களது அரசியல் எதிர்கால வாய்ப்புக்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவின் வெற்றியை மாத்திரமே நம்பிக்கொண்டிருந்தார்கள். அவர் தோல்வியடைந்ததும் அவர்களின் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டுவிட்டன. எதிரணிகளுக்குள் தோன்றியிருக்கும் குழப்பநிலை தேசிய மக்கள் சக்திக்கு முன்னரை விடவும் அனுகூலமான அரசியல் சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன. குறுகிய காலத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை அறிவித்ததன் மூலம் ஜனாதிபதி திசாநாயக்க எதிரணிக் கட்சிகளை தடுமாற வைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இது இவ்வாறிருக்க, பொதுவாழ்வில் ஒரு தூய்மையைப் பேணவேண்டும் என்றும் மக்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும் அக்கறை கொண்டவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கு இந்த தடவை மக்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதுவரையில் அதிகாரத்தில் இருந்த சகல கட்சிகளும் ஊழல்தனமான அரசியல்வாதிகளினால் நிறைந்து கிடக்கின்றன. அவர்களில் பெரும்பான்மையானவர்களை தவிர்த்துவிட்டு முற்றிலும் புதியவர்களை வேட்பாளர்களாக நியமிப்பது அந்த கட்சிகளைப் பொறுத்தவரை சாத்தியமில்லை. ஆனால், தேசிய மக்கள் சக்தி அனேகமாக முற்றிலும் புதியவர்களை வேட்பாளர்களாக நியமிக்கக்கூடிய வாய்ப்பு தாராளமாக இருக்கிறது. நல்ல கல்வித்தகைமையும் மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்ட இளம் வேட்பாளர்களை களமிறக்குவதில் தேசிய மக்கள் சக்தி அக்கறை காட்டும் என்பது நிச்சயம். இதுகாலவரையில் அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்காத காரணத்தால் அத்தகைய புதிய வேட்பாளர்களை அடையாளம் காண்பதிலும் அவர்களுக்கு சிரமமில்லை. அதனால், மற்றைய கட்சிகளும் புதிய முகங்களை களத்தில் இறக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம். ஆனால் அந்த கட்சிகளை விடவும் அது விடயத்தில் தேசிய மக்கள் சக்தி பெருமளவுக்கு அனுகூலமான நிலையில் இருக்கிறது. பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத ஒரு கூட்டமாகவே மக்கள் பார்க்கிறார்கள். இரு வருடங்களுக்கு முன்னர் மக்கள் கிளர்ச்சியின்போது ராஜபக்சாக்களும் அவர்களுடன் இருப்பவர்களும் மாத்திரமல்ல, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்கு போகவேண்டும் என்று மக்கள் குரலெழுப்பியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். மிகவும் சுலபமாக குறுகிய காலத்திற்குள் பெருமளவு சொத்துக்களை குவிக்கக்கூடிய ஒரு மார்க்கமாக இன்று அரசியல் விளங்குகிறது. அந்த கெடுதியான அரசியல் கலாசாரத்தை மாற்றுவததை நோக்கிய முதற்படியாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை மக்களினால் நிச்சயமாக பயன்படுத்தமுடியும். இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் ஐக்கியம் பற்றி உரத்துப்பேசிய வண்ணம் தொடர்ந்து பிளவுபட்டுக்கொண்டு போகின்றன. எந்தவொரு கட்சிக்குள்ளும் ஒழுங்கு கட்டுப்பாடு என்பது மருந்துக்கும் கிடையாது. கட்சிகளின் உண்மையான நிலைப்பாட்டை எவர் பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் மக்கள் தடுமாறுகிறார்கள். ஏற்கெனவே சிதறுப்பட்டுக் கிடக்கும் இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒன்றுபடுவதற்கான எந்த சாத்தியத்தையும் எதிர்பார்க்க முடியாது. தலைவர்கள் எனப்படுவோரின் அகம்பாவமே தலைதூக்கி நிற்கிறது. இலங்கை தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாட்டை தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கூறுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்ற இயக்கத்திற்குள் தேர்தல் முடிந்து இரு வாரங்களுக்குள்ளாகவே பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் முரண்பாடுகள் தோன்றிவிட்டன. இலங்கை தமிழர் அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்ற விபரீதமான முனைப்புடன் செயற்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் உள்ள சில குழுக்களும் தனவந்தர்களும் வடக்கு, கிழக்கு அரசியலை ஊழல்தனமானதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு கட்டுறுதியான ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடிய ஆபத்து இருக்கிறது. காலம் வேண்டி நிற்பதற்கு ஏற்றமுறையில் உருப்படியான எந்த அணுகுமுறையையும் கடைப்பிடிக்காமல் வெறுமனே தீவிர தேசியவாத சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள். தென்னிலங்கையில் மக்கள் பாரம்பரியமான அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் நிராகரிக்கத் தொடங்கியிருப்பதைப் போன்று வடக்கு, கிழக்கிலும் ஒரு நிராகரிப்பு காலத்தின் தேவையாகிறது. ஒரு மாற்றமாக பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது குறித்து தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் சிந்திக்கத் தொடங்கியிருப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. https://www.virakesari.lk/article/1956741 point
-
தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்க்காது என்பது உண்மைதான். ஜேவிபி சமஷ்டியை ஒருபோதும் ஏற்காது ஒற்றையாட்சிக்குள்தான் அவர்களது தீர்வு இருக்கும். தமிழர் அரசியல் சாணக்கியம் 2009 இற்கு பின்னர் தோற்றது என்றால் அதற்கு முன்னர் கிடைத்த சில வாய்ப்புக்களை நந்தவனத்து ஆண்டியாக போட்டுடைத்ததே கசப்பான வரலாறு! ஆனால் ஏதேனும் மாற்றம் நடந்து தப்பித் தவறியேனும் தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்த்துவிடக்கூடாது என்பதில் ஒட்டுண்ணிகளும் பட்டாசு கோஷ்டிகளும் ஆய்வாளர்களும் முனைப்பாக இருக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் கடந்துதான் மக்கள் முடிவெடுப்பார்கள்.1 point
-
இவர்களிடம் வைகோ மண்டியிட வேண்டும். தூள் கிளப்புறாங்கள்1 point
-
சிறி, நீங்கள் யதார்த்தத்தை விட்டு விலகி ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். நான் அவர்கள் கட்சி ஆதரவாளர் இல்லை. அவர்கள் இனவாதம் பேசினார்கள். தங்கள் நிலைப்பாட்டைச் சொன்னார்கள். எழுதினார்கள். அவர்களது நோக்கம் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியே இருந்தது என்பது இப்பொழுது உ றுதியாயிற்று என்று குறிப்பிட்டேன். அவ்வளவுதான். அவர்கள் மக்களுக்கு தேசியம் என்ற படத்தைக் காட்டி தங்களுக்கான இலாபங்களைத் தேடுகிறார்கள். இது என் கணிப்பு. பொது வேட்பாளருக்கு இரண்டு லட்சத்துக்கு மேல் வாக்கு விழுந்தால் என்ன அது உங்களால்தான் கிடைத்தது என்றால் என்ன, பொது வேட்பாளர் என்பவர் தமிழினத்தின் கேலிச் சித்திரம். ஆனாலும் “சங்குச் சின்னத்தை எந்தக் கட்சி எடுத்தது அதற்கு ஆதாரம் இருக்கிறதா?” என்று ஒரு திரியில் ஆவேசமாகக் கேட்டிருந்தீர்கள். நானும் ஆதாரத்தை இணைத்திருந்தேன். இப்பொழுது, “உனக்கென்ன.. உனக்கென்ன..” என்று பாடுகிறீர்கள். இருட்டினில் வாழும் இதயங்களே கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்1 point
-
இவ்வளவு காலமும் பங்கருக்குள் இருந்தவரா? 😂1 point
-
இந்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது என்றும் ஆனாலும் எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள். இந்தத் தடவை அமுல்படுத்துவார்களா பார்ப்போம். அமுல்படுத்துவது மாத்திரமல்ல பகிரங்கப்படுத்தவும் வேண்டும்.1 point
-
"சசிகலா சொன்னது தான் சத்தியவாக்கு, ஆதாரம்" என்று நம்பும் அளவுக்கு , சதிக்கதைகளில் அமிழ்ந்து போய் கிடக்கிறீர்கள்😂! "இந்த ஆதாரத்தை வைத்து அவர் ஏன் அரச அதிபர் மகேசனை நீதிமன்றில் சந்திக்கவில்லை?" யென்று கேட்ட போது பதில் இல்லாமல் இருந்தவர்களையும் தேடுகின்றேன்! இருக்கிறார்களா இங்கே😎? இந்த முறையாவது முகநூல் பதிவை நம்பி பின்னர் ஏமாந்து ஒப்பாரி வைக்காமல், சசிகலா அவர்கள் தேர்தல் பற்றிய அறிவோடு முடிவை எதிர் கொள்ள வேண்டுமென வாழ்த்துகிறோம்!1 point
-
செத்த ஆட்களின் ஆவி.... ஒரு வருசத்துக்கு சுற்றிக் கொண்டு திரியும் என்பது சிலரின் நம்பிக்கை. அந்த வகையில்... சம்பந்தனும் இந்தக் காட்சியை பார்த்து ரசிக்கலாம். தான்... ஆரம்பித்து வைத்ததை, தனது வாரிசு சுமந்திரன் முடித்து வைக்கின்றார் என்று ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்.1 point
-
இந்த வருட முடிவில் ஓரளவு தெரியவரும்.1 point
-
ஒருபெரும் இன அழிப்பைச் சந்தித்து, ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது மக்களைத் துரத்தியடித்து அவர்களது சொத்துகளைக் கைப்பற்றி வாழும் இளைய புத்திசாலி நாடாம். வென்றவனது மட்டுமே அவனுக்கேற்றவாறு சரித்திரமாகும் என்றால் இந்த உலகு இருந்தென்ன, இல்லாதுபோனால் என்ன? எனவே இந்த உலகை அவரவர் தேசங்களுள், அவரவர் பண்பாட்டோடு வாழவிடுவதே உலக அமைதிக்கான வழி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
1 point
-
1 point
-
இந்திய எதிர்ப்பு நிலை மக்கள் விடுதலை முன்னணி இயல்பிலேயே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டினை உடையது. 1987 ஆம் ஆண்டு அக்கட்சி நடத்திய இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியே தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க இந்தியா வந்திருக்கிறது, ஆகவே அதனை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. தமிழர் விரோத, இந்திய விரோத உணர்வினை தெற்கின் பாமர மக்களிடையே வளர்த்துவிட்டே 1987 முதல் 1990 வரையான இரத்தக்குளியலை மக்கள் விடுதலை முன்னணி அரங்கேற்றியது. இக்கட்சி முன்னர் மலையகத் தமிழர்களை, "இந்தியா ஆக்கிரமிப்பின் ஐந்தாவது கருவிகள்" என்றே அழைத்து வந்தது. இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் எந்த வர்த்தகச் செயற்பாடுகளையும், இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக இந்தியாவினால் எடுக்கப்படும் முயற்சி என்றே இக்கட்சி பார்த்தது. இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணியினர் கட்சியின் இந்திய விரோத நிலைப்பாடு அநுரவிற்கும் இருந்தது. 2008 இல் பாராளுமன்றத்தில் பேசும்போது, "கச்சதீவை இந்தியாவிற்குத் தாரை வார்க்கும் செயற்பாடுகள் நடப்பதாக உணர்கிறேன், ஆனால் எமது கட்சி இருக்கும்வரை அது ஒருபோது நடவாது, எவ்விலை கொடுத்தாவது இம்முயற்சி வெற்றிபெறுவதை நாம் தடுப்போம்" என்று சூளுரைத்திருந்தார். அண்மையில்க் கூட கச்சதீவு விவகாரம் தில்லியில் பேசப்பட்டாலும் கூட, அநுரவை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இந்தியாவிற்கு மேற்கொள்ளுமாறு இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இந்தியாவால் அழைப்பு விடுக்கப்பட்டது. அநுரவின் இந்திய விஜயம் மக்கள் விடுதலை முன்னணியின் அதி தீவிர இந்திய எதிர்ப்பை சற்று களையும் அரசியல் மாற்றத்தின் அறிகுறியென்றும், இந்தியா தேவைக்கதிகமாகவே அநுரவுக்கு வளைந்துகொடுக்கிறது என்கிற தோற்றத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய விஜயத்தின்போது அநுர குமாரவும் அவரது பரிவாரங்களும் இந்தியாவின் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், வர்த்த அமைப்புக்களின் உறுப்பினர்களையும் சந்தித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீள்பரிசீலினை செய்தல் 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொருளாதாரச் சிக்கலின்பொழுது, அன்றைய ஜனாதிபதியாகவிருந்த கோட்டாபயலின் அரசாங்கம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை சிக்கலில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டிருந்தது. ஆனால், இலங்கையின் கடன் அடைக்கும் வரலாறு கத்திமுனையில் நடப்பதற்கு நிகரானது என்பதை சர்வதேச நாணய நிதியம் அறிந்தே இருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் இயக்குநர், ஜூலி கொசாக் கடந்த வாரம் பேசுகையில் மூன்றாம் கட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படு முன்னர் புதிய ஜனாதிபதியுடன் பேசவேண்டியிருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால், கடன் நிபந்தனைகளை மீள அமைக்கவேண்டும் என்று அநுர குமார பேசத் தொடங்கியிருக்கிறார்.இதனையே சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடனை மீளச் செலுத்தும் வரலாறு குறித்து எச்சரிக்கை செய்திருந்தது. இலங்கையின் இராஜாங்க நிதியமைச்சர் செகான் சேமசிங்க பேசும்போது, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, மூன்றாவது கட்ட கடனுதவியான 350 மில்லியன் டொலர்கள் வழங்கப்படாதுவிட்டால் நாடு மீண்டும் ஒரு பொருளாதாரச் சிக்கலைச் சந்திப்பதைத் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தினை இரத்துச் செய்வதால் நாட்டில் இடம்பெற்றுவரும் சிக்கலில் இருந்து மீளுதல் முயற்சிகள் தடைப்பட்டு நின்றுவிடும் என்றும், நாடு பழையபடி 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குள் சென்றுவிடும் என்று எச்சரித்தார். "சர்வதேச நாணய நிதியத்திடம் நான் ஒத்துக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது" என்று பத்திர்க்கையாளர்களிடம் பேசும்போது சேமசிங்க மேலும் கூறினார். "இது நடக்குமாக இருந்தால் 2022 இல் இலங்கை எதிர்கொண்ட அதே நெருக்கடிக்குள் மீண்டும் சென்றுவிடும்" என்று அவர் எச்சரித்தார். தமிழர் தாயகத்தில் நடந்துவரும் இராணுவமயமாக்கல் குறித்துப் பேச மறுக்கும் அநுர குமார திசாநாயக்க அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வடக்குக் கிழக்கில் இடம்பெற்றுவரும் இராணுவமயமாக்கலினால் தமிழ் மக்கள் அடைந்துவரும் துன்பங்கள் குறித்து எதுவுமே பேசவில்லை. அதற்கு மாறாக காணிகளை பகிர்ந்தளிப்பதில் சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளினால் அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று தனியார்மயமாக்கலை மட்டுமே கருத்திற்கொண்டு பேசியிருக்கிறார். மேலும், தமது கட்சி ஆட்சிக்கு வருமிடத்து காணிப்பிரச்சினைகள் தொடர்பாக விரைவானதும், நீதியானதுமான தீர்வுகளை வழங்கும் என்று கூறுகிறார். தற்போது வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவமும், கடற்படையும் அடாத்தாக ஆக்கிரமித்து வருவதால் தமிழ் மக்கள் காணி அபகரிப்பு எனும் பிரச்சினையினை எதிர்நோக்கி வருகிறார்கள்.1 point
-
உங்கள் நம்பிக்கை மலர்ந்தால் நன்மையே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி நான் நினைக்கிறேன்... ஆனந்தக் கண்ணீர் உருளும் என்று எழுதநினைத்திருப்பீர்கள் என்று.. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
மேற்கண்ட தமிழ் கார்டியனின் கட்டுரையை இணைத்த ரஞ்சித், கந்தன் கருணை மேற்கொள்ளப்பட்ட படுகொலையை செய்த அருணாவுக்கு எதிராக அவரது பதவி குறைப்பை தவிர வேறு சட்ட நடவடிக்கைகள் தமிழர் தரப்பால் எடுக்கபாடாமையை கண்டித்து தமிழ் கார்டியன் எழுதிய கட்டுரையையும், 1990 ல் இலங்கை ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் ஆயுதமின்றி சரணடைந்த 600 பொலிசாரை சுட்டு படுகொலை செய்த யுத்த குற்றத் தைப் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபடாமை குறித்த தமிழ் கார்டியனின் கண்டன பதிவை, அல்லது அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தி எழுதிய கட்டுரையையும் இணைப்பார் என எதிர் பார்ககிறேன். (இவை இரண்டும் சிறிய உதாரணங்கள் மட்டுமே) அவ்வாறு இணைக்கப்பட்டால் தமிழ் கார்டியன் சாதாரண செய்திகளுக்கு உள்நோக்கம் கற்பித்து எழுதி ஒரு தலைப்பட்ட அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடாத நடுநிலை ஏடு என்பதும் அதில் வரும் செய்திகள் ஒருதலை சார்பற்ற வரலாறு என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். தாயகத்தில் தமிழ் தேசியம் காக்கவென தமது பிள்ளைகள் முதல் அனைத்தையும் கொடுத்த தமிழ் மக்கள் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி தாயகத்தில் தமது இருப்பை காப்பாறுவதற்கான அரசியலை செய்ய முற்படுகையில் வெளி நாடுகளில் தமது வெற்று கோஷ அரசியலாளர்களால் அதை குழப்பி தாயக அரசியலை மீண்டும் கொதி நிலையில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அங்குள்ள பல்கலைகழக மாணவர்களை போராட தூண்டும் இவர்கள், தமது பிள்ளைகளை வெளி நாடுகளில் மிக சிறந்த பலகலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்க வைக்கிறார்கள். இவர்களது அரசியல் மூலம் தாயகத்தில் மக்களின் பலம் குறைந்து வருவதையிட்டோ தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருபது குறித்தோ முன்பு 11 உறுப்பினரை கொண்ட யாழ் தேர்தல் மாவட்டம் மக்கள் தொகை இழப்பால் 6 ஆக குறைக்கப்பட்டு இருபது குறித்தோ இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மக்கள் இல்லாமல் தேசியம் இல்லை என்பது இவர்களுக்கு தெரியாதா? அல்லது நாம் வாழும்வரை எமது தேசிய வியாபாரம் நடந்தால் போதும் அதன் பின்னர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா?1 point
-
உண்மை, ஆனால் இன்று அவர்கள் பின்னால் காவடி தூக்கும் தமிழர்களுக்கு உரிமையோ, நாடோ, நீதியோ, தீர்வோ அல்லது இனம் சார்ந்த எதுவுமோ தேவைப்படுவதாகத் தெரியவில்லை. வரிசையில் நிற்காமல் பெற்றொலும், எரிவாயுவும், பாணும் கிடைத்தாலே போதும் என்கிற நிலையில்த்தான் அவர்கள் இருக்கிறார்கள்.1 point
-
உண்மை ....தமிழனை வைத்தே தமிழ் தேசியத்தை அழிக்க முயல்கின்றனர் ....... ஜெ.வி.பி க்கு பின் சென்று எமது அடையாளங்களை இழந்த பின்பு ஜெ.வி.பி யினரை தோற்கடிக்க சிங்கள வலதுசாரி இனவாதிகள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை... மீண்டும் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால்...எம் இனத்தின் இருப்பு கேள்விக்குறி தான் ... ஜெ.வி.பி யினர் எந்த வித சட்டபூர்வமான அங்கிகாரமும் எமக்கு தரப்போவதில்லை என தெரிகிறது1 point
-
2010 க்கு தமிழ் தேசியபரப்பு செயல்பாட்டாளர்கள் தங்கள் பதவிகள் நிரந்தரமானது என்ற நினைப்பில் இளைஞ சமுதாயத்தை கண்டு கொள்ளாமல் விட்டதின் விளைவு இன்று அந்த இளைய சமுதாயம் முக்கியமாக பல்கலைகழக இளைய சமுதாயத்தை கண்டுகொள்ளவில்லை...அந்த வெற்றிடத்தை யாழ் பல்கலைகழகத்தில் ஜெ.வி.பி நன்றாக பயன்படுத்தியுள்ளனர்...ஜெ,வி,பி யினர் சித்தாந்த/கொள்கை வகுப்புக்களை எடுத்துள்ளனர் ..இது எமது போராட்ட காலத்தில் 77களில் பின் நடந்த விடயங்கள். 2010 க்கு பின்பு சிங்கள இளைஞர்களின் வரவு அதிகமானது அவர்களுடன் ஜெ.வி,பி கொள்கையும் உள்வர தொடங்கிவிட்டது. எமது போராட்டம் மெளனிக்கப்பட்ட பின் எமது அரசியல் போராட்டத்தை இளைஞர்கள் மத்தியில் எடுத்து செல்லாமல் விட்டது எமது பிழை ..அந்த வெற்றிடத்தை ஜெ.வி.பி நன்றாக பயன்படுத்தியுள்ளனர்... மருத்துவர் அருள் சொல்கின்றார் தான் 2016 யாழ் மருத்துவ பீடத்திற்கு சென்றராம் ,ஜெ.வி.பியினரின் வகுப்புக்களுக்கு சென்று அந்த கொள்கைகள் தனக்கு பிடித்தமையால் முழுநேர அரசியல் செயல் பாட்டில் இறங்கி விட்டாராம்...1 point
-
நீங்கள் எப்படி குட்டினாலும் எங்களுக்கு வலிக்காது, நாங்கள் குனிந்து வாழத்தயார்!1 point
-
ஒன்று, நம்மையும் இந்த நாட்டின் சுதந்திர குடிமக்களாக அதிகாரத்தை பகிர்ந்து சமமாக வாழ முன்வரவேண்டும். இல்லையேல், நம்மை பிரிந்து வாழ அனுமதிக்கவேண்டும். ஒரு ராச்சியம் என்றால்; ஏன் மதத்தில், கல்வியில், தொழிலில், நீதி நிலைநாட்டுவதில் பாகுபாடு? அதனாற்தானே பிரச்சனை தோன்றியது. எடுத்தவுடன் யாரும் ஆயுதம் ஏந்தவில்லையே. நீதி கோரி அஹிம்ஸை வழியில் போராடியவர்களின் கோரிக்கைக்கு எப்படி பதில் வழங்கப்பட்டது? தாமுண்டு தம்பாடுண்டு பொருளாதாரத்தில் உயர்ந்து நின்ற நம்மவர்களை எரித்தும் அழித்தும் அடித்தும் உங்கள் பகுதிக்கு செல்லுங்கள் என்று விரட்டியது யார்? பின் எங்கள் பிரதேசத்தில் வந்து, அங்கிருந்தும் அழிவுகளை ஏற்படுத்தி ஏதிலிகளாக்கியது யார்? சரி, போர் முடிந்தது, நம் நிலங்களையும் ஆலயங்களையும் நமது இருப்பையும் பறிப்பது யார்? இவர்களோடு எப்படி சேர்ந்து வாழ முடியும்? எங்களுக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள், பின் இரண்டாம் பட்ஷமாக நடத்துவது ஏன்? சிங்களத்துக்கு, தமிழர் இந்த மண்ணில் தங்களுக்கு அடிமைகளாக வாழ வேண்டுமென்றே விரும்புகிறார்கள், அதையும் நம்மவர் சிலர் நிஞாயம் என்றே வாதாடுகிறார்கள். ஆளுங்கட்சி ஒரு தீர்வை வைக்கும், எதிர்க்கட்சி அதை எதிர்க்கும், அடுத்த தேர்தலில் தான் வைத்த தீர்வை எதிர்கட்சியாக இருந்து எதிர்க்கும். ஆக மொத்தத்தில் தமிழருக்கு எதுவும் கொடுப்பதில்லை, அவர்களின் வாக்கு மட்டும் வேண்டும். அதனாலேயே நம் நாடு வங்குரோத்து அடைந்திருக்கு. அவர்கள் மாறாவிட்டால் நாடு முன்னேறப்போவதில்லை. நாடு எந்த நிலைக்கு போனாலும் பரவாயில்லை, ஆனால் தமிழருக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அனுராவல்ல, எவர் வந்தாலும் தமிழர் பிரச்சனை தீராமல் நாடு அணுவளவும் முன்னேறாது! உண்மையான புத்திசாலி நாட்டை முன்னேற்ற விரும்பினால் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுப்பார். அதன் பின், பொருளாதாரம் விரட்டப்பட்ட மக்களால் கட்டியெழுப்பப்படும். இல்லையேல் சர்வதேச கூத்தாடிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நாட்டின் வளங்களை இழந்து தலையாட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அதை செய்ய தவறும் பட்ஷத்தில் அனுராவும் விரட்டப்படுவார், ஒருவேளை சர்வாதிகார ஆட்சி வரலாம். சிங்களமக்கள் விழிப்புணர்வுடன் சிந்திக்க தொடங்குவர்.1 point
-
அவர் தமிழரசுக்கட்சிக்குள் செருகப்பட்டதே, தமிழ்த்தேசியம், தமிழரசு என்கிற கட்சிகளை இல்லாது அழித்து, ஒரு ராச்சியம் என்பதை உருவாக்குவதற்கே. கிட்டத்தட்ட அவர் வந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார். ஆனால், அவரை பணிக்கு நியமித்த எஜமானர்கள் பதவியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டனர். பாவம்! கூலி முழுவதுமாக பெறமுன் இப்படியாகிவிட்டதே. இப்போ அதற்குரிய பலனை மக்கள் கொடுப்பார்கள். அடித்து விரட்டினாலும், ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டு அங்கேயே சுத்துவார். இனிமேல் சட்டாம்பி வேலைக்கும் யாரும் அமர்த்த மாட்டார்கள், சொல்வது முழுக்க பொய்யும் புழுகும். நச்சுப்பாம்பு.1 point
-
அநுரவை தேசியத் தலைவருக்கு நிகரானவர் என்று வர்ணித்து வணங்குவதும், வேறு சிலர் அவரை தமிழர்களின் காவலன் என்று கூறுவதும், மீதிப்பேர் இவரை இதுவரை இலங்கை கண்டிராத நேர்மையான, இனபேதமற்ற இலங்கையன் என்று போற்றிப் புகழ்வதும் நடக்கிறது. இக்கட்சியின் உண்மையான முகம் எப்படிப்பட்டது, அக்கட்சியின் கடந்தகால தமிழர் விரோத செயற்பாடுகள் எப்படியானவை என்பதை நன்கு தெரிந்துகொண்டபோதிலும், அவற்றை மறைத்து, மறந்து, எதுவுமே நடவாததுபோல அவரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்று தமிழரின் இருப்பிற்கான போராட்டத்தில் பெரும்பகுதியில் வாழ்ந்த முதியோரும் (புலிகளினால் தமது எழுத்துக்களுக்கு பாரட்டைப் பெற்றவர்கள் உட்பட), 2009 இற்கு முன்னரான சரித்திரத்தை அறிந்திராத அல்லது அரசியல் ரீதியில் தமிழ்த் தேசியத்திலிருந்து வேண்டுமென்றே விலத்தி வழிநடத்தப்பட்ட இளையோரும் அநுரவின் பின்னால் குருடர்களாக இழுபட்டுச் செல்லுதல் நடக்கிறது. நடந்தவை தெரிந்தும், அநுரவை ஆதரித்தே தீருவது என்று கங்கணம் கட்டி நிற்கும் முதியோருக்காகவோ அல்லது, தேசிய நீக்கம் செய்து, சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் இனவிரோதிகளுக்காகவோ இத்தொடரை நான் பதியவில்லை. மாறாக இவ்வகையானவர்களினால் தவறான சரித்திரத்தை உண்மையென்று நம்பி, நமக்கிழைக்கப்பட்ட வரலாற்று அநியாயங்களை அறியாமல் சிங்கள இனவாதியொருவரை தமது நாயகனாக நம்பி பின்னால்ச் செல்லும் இளைய தலைமுறை இவற்றை அறியவேண்டும் என்பதற்காகவே இதனைப் பதிகிறேன். பதிவு இறுதிப் போரில் தமிழினக்கொலையில் முனைப்புடன் செயற்பட்ட போர்க்குற்றவாளியான சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராக நியமித்த அதே தமிழர்கள் வணங்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 23 புரட்டாதி 2024 இலங்கை ஜனாதிபதியாக தான் பதவியேற்றுக்கொண்டதும் செய்த முதலாவது பணிகளில் ஒன்று இறுதி யுத்தகாலத்தில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியாகத் திகழ்ந்த தளபதி சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராக நியமித்ததுதான். இந்த சம்பத் எனும் போர்க்குற்றவாளி முள்ளிவாய்க்கால் தமிழினக் கொலையினை தனது யுத்தவெற்றியாகப் பறைசாற்றி வெளிப்படையாகவே பேசிவந்தவன். இவனை தனது பாதுகாப்புச் செயலாளராக அநுர நியமித்திருப்பதன் மூலம் அவரை நம்பி, தெய்வம் என்று வழிபடும் தமிழ் பக்தகோடிகளுக்கு அவர் கூறும் செய்தி என்ன? இறுதி யுத்தகாலத்தில் சம்பத் தூயகொந்த இலங்கை விமானப்படையில் உலங்குவானூர்திப் படையணியின் 9 ஆவது பிரிவின் விங் கொமாண்டராகப் பணியாற்றியவன். தாக்குதல் உலங்குவானூர்தியின் கட்டளைத் தளபதியாக இறுதியுத்ததில் ஈடுபாட்டுடன் பணியாற்றிய இவன் குறைந்த 400 வான் தாக்குதல்களை தமிழர்கள் மீது மேற்கொண்டதாக வெளிப்படையாகவே கூறிப் பெருமைப்பட்டிருக்கிறான். இவனும் இவனது சகாக்களும் ஆடி முடித்த தமிழினக்கொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்டார்கள். இவனது வான்படை தமிழர் தாயகத்தின் வைத்தியசாலைகள், அகதிமுகாம்கள், யுத்த சூனிய வலயங்கள் என்று தெளிவாக அடையாளம் காணப்பட்ட சிவிலியன் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி, மக்களை அதிகளவில் கொன்றொழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே பணியாற்றியது. "வன்னிப் போர்க்களத்தில் நாம் அவர்களை ஓடவிட்டோம், கதிகலங்க அடித்தோம்" என்று இனவழிப்புப் போர் முடிந்த கையோடு சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் இனவழிப்பில் தனது பங்கினை மெச்சிப் பேசியிருந்தான். இறுதி யுத்த காலத்தில் தான் மட்டுமே 60 தாக்குதல்களில் நேரடியாகப் பங்குகொண்டு பலரைக் கொன்றதாகப் பெருமைப்பட்டிருக்கிறான். இவனது தாக்குதல் உலங்குவானூர்திப் படையணி மொத்தமாக 19,762 80 மில்லிமீட்டர் ராக்கெட்டுக்களை தமிழர்கள் மீது வீசியிருக்கிறது என்று அவன் இச்செவ்வியில் கூறியிருக்கிறான்.இவற்றிற்கு மேலதிகமாக தனது தாக்குதல் வானூர்தியில் பொருத்தப்பட்டிருந்த 23 மில்லிமீட்டர் இரட்டைக் குழல் தானியங்கித் துப்பாக்கி, 12.7 மில்லிமீட்டர் கட்லிங் இயந்திரச் சுழத் துப்பாக்கி, 30 மில்லிமீட்டர் கனொனன் ரக ஏவுகணைகளையும் தாம் பாவித்ததாகப் பெருமைப்பட்டிருக்கிறான். இவற்றுள் இவனது உலங்குவானூர்தியில் இருந்து கொட்டப்பட்ட ஒவ்வொரு குண்டினதும் நிறை குறைந்தது 250 கிலோ ஆகும். "இரண்டு எம் ஐ 24 தாக்குதல் வானூர்திகளைக் கொண்டே அவர்களுக்கு மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தினோம்". சித்திரை 2009 இல், புதுக்குடியிருப்பில் தான் பங்குகொண்ட தாக்குதல் ஒன்றுபற்றி அவன் பேசும்போது, "எதிரிகளைத் தேடித்தேடி அழிக்கும் நடவடிக்கையில் நாம் இரவு பகலாக அயராது செயற்பட்டோம். புதுவருடம் பிறக்கும் இரவில் நடக்கும் வானவேடிக்கைகள் போல வன்னி வானம் இரவில்க் காட்சியளித்தது" என்று தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனக்கொலையினை அவனால் இரசித்து விபரிக்க முடிந்தது. இனக்கொலை முடிந்த பின்னல், மற்றைய போர்க்குற்றவாளிகளைப் போல சம்பத்தும் வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றிற்கு அதிகாரியாக அனுப்பி வைக்கப்பட்டான். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளைப் பாதுகாக்கும் பொருட்டே இவனைப்போன்றவர்களை நாட்டின் இராஜதந்திரப் பதவிகளுக்கு கோட்டாபயலின் அரசாங்கம் நியமித்து வந்தது. தூயகொந்தாவும் இதே காரணத்திற்காக பாக்கிஸ்த்தானில் இயங்கும் இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்ற அதே கோட்டாபயலினால் அனுப்பிவைக்கப்பட்டான். இறுதி இனக்கொலை யுத்தத்தில் இலங்கையின் பேர்பெற்ற போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவுக்கு நிகரான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இன்னொரு அரக்கக் குணம் கொண்ட போர்க்குற்றவாளியான கமல் குணரட்ணவின் இடத்திற்கே இப்போர்க் குற்றவாளியான சம்பத் தூயகொந்தாவும் நியமிக்கப்பட்டிருக்கிறான். இவனை தனது பாதுகாப்புச் செயலாளராக அநுர நியமித்து அழகுபார்ப்பதனூடான அவர் தன்னை வணங்கிப் பிந்தொடரும் தமிழ் பக்த கோடிகளுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்னவாக இருக்கும்? அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! https://www.tamilguardian.com/content/another-accused-sri-lankan-war-criminal-appointed-defence-secretary1 point
-
எனக்கு மற்ற நாடுகளை பற்றி தேவையில்லை. ஜேர்மனி. இங்கே நான் வந்த காலத்தில் தேங்காயை கடைகளில் காணவே முடியாது. ஆனால் இன்று பெரிய/ சிறிய கடைகளில் தேங்காய் சம்பந்தப்பட்ட பொருட்களை தனி இடம் ஒதுக்கி வைத்து விற்கின்றார்கள். இளநீர் எல்லா கடைகளிலும் விற்கின்றார்கள். சிறிய அளவில் தேங்காய் சொட்டுக்கள் விற்கின்றாகள். தேங்காய் பால் பெட்டிகள் என சொல்லி வேலையில்லை. தேங்காய் எண்ணை கூடாது என சொல்பவர்கள் கேடு கெட்ட சூரியகாந்தி எண்ணையை விமர்சிப்பதில்லை.1 point
-
அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஒரு சாகச நிகழ்ச்சி வைத்தால்…. அதிக மக்கள் பார்ப்பது சகஜம் தானே. ஆசிய மக்கள் வானத்தில் சும்மா ஒரு பயணிகள் விமானம் பறந்தாலே, செய்த வேலையை விட்டிட்டு ஓடி வந்து வானத்தை அண்ணாந்து பார்க்கும் நாட்டில் சாகச நிகழ்ச்சிக்கு அதிக மக்கள் கூடுவது சர்வ சாதாரணம்.1 point
-
உலகின் பசியல்ல அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுகளின் இரத்தப்பசி அடங்காதென்பதே பொருந்துமென்று நினைக்கின்றேன்.1 point
-
இது ஒரு நல்ல கேள்வி அதுவும் 21 ம் திகதி அவர் வெற்றி பெற்ற பின்பு எப்படி இவ்வளவு நம்பிக்கை வந்தது? சிங்கள மக்கள் தான் வழிகாட்டிகள் தமிழர்கள் அவர்களை பின்பற்றுவார்களா ஒரு தமிழ் வீடியோ வட்சப்பில் அனுப்பி வைத்திருக்கிறார்கள் ஒரு தமிழர் சொல்கிறார் எங்களுக்கு ஐயர்மார்கள் வேண்டாம் அந்த ஆண்டவனே நேரடியாக எமக்கு அனுப்பிவைத்த பிள்ளை தான் அநுரகுமார திசாநாயக அந்த பிள்ளையை ஆதரிப்போம் 😭 ------------------------------------------ 1982 ஜனாதிபதி தேர்தலிலேயே அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியை ஆரம்பித்த அவர் தலைவர் போட்டியிட்டுள்ளார் ஜே.ஆர்.ஜெயவர்தன -ஐக்கிய தேசிய கட்சி 52.91 வீதம் ஹெக்டர் கொப்பேகடுவ - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 39.07 வீதம் ரோஹன விஜேவீர - ஜேவிபி 4.19 வீதம் https://en.wikipedia.org/wiki/1982_Sri_Lankan_presidential_election1 point
-
தனியார் ஊடகங்களை தனது இனவழிப்பிற்கும், சிங்களக் குடியேற்றங்களுக்கும் பிரச்சார இயந்திரங்களாக்கிய ஜெயார் பிரதான தொடரிலிருந்து சற்று விலகி அக்காலத்தில் ஜெயவர்த்தனவும், காமிணி திசாநாயக்கவும், லலித் அதுலத் முதலியும் தமது இன ஒதுக்கல் கொள்கைகளுக்கு ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதுபற்றிச் சற்று விளக்கலாம் என்று நினைக்கிறேன். தாம் செய்ய நினைத்த அனைத்து தீவிரச் செயற்பாடுகளுக்கும் சண், தி ஐலண்ட் மற்றும் அதனோடிணைந்த சிங்கள இனவாதப் பத்திரிக்கைகளை அவர்கள் பயன்படுத்த முடிவெடுத்தனர். அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட எதிர்க்கட்சிக்குச் சார்பான பத்திரிக்கைகளை எதற்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்று ஒருமுறை லலித் அதுலத் முதலியிடம் கேட்டேன். அதற்குப் பதிலளித்த லலித், "டெயிலி நியூஸ் எமது பத்திரிக்கை. ஆகவே டெயிலி நியூஸோ அல்லது தினமினவோ இவ்வாறான செய்திகளைக் காவி வந்தால் அவற்றினை நாமே வழங்கியதென்பஎன்பதை மக்கள் உடனடியாக அறிந்துகொள்வார்கள். ஆகவேதான் சண், தி ஐலண்ட் போன்ற பத்திரிக்கைகளைப் பயன்படுத்துவதென்று முடிவெடுத்தோம்" என்று கூறினார். இக்காலப் பகுதியில் ஜெயாரும் அவரது இரு சகாக்களும் தி ஐலண்ட் பத்திரிக்கையின் பீட்டர் பாலசூரிய, ஞாயிற்றுக்கிழமை பதிப்பான ஐலண்ட் பத்திரிக்கையின் ஜெனிபர் ஹென்ரிக்கஸ், மற்றும் சண்டே பத்திரிக்கை மற்றும் அதன் ஞாயிற்றுக்கிழமை பதிப்பு ஆகியவற்றின் மூத்த பத்திரிக்கையாளர்களான அநுர குலதுங்க, ரனில் வீரசிங்க ஆகியோரையும் தமது பிரச்சாரச் செயற்பாடுகளுக்காகப் பாவித்துக்கொண்டனர். 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 28 ஆம் திகதி வெளிவந்த சண்டே பத்திரிக்கையின் ஞாயிற்றுக்கிழமை பதிப்பிலும் அதன் சகோதரச் சிங்களப் பத்திரிக்கைகளிலும் ஜெயாரும் காமிணியும் முன்னெடுத்த இனவாதம் கடை விரித்திரிந்தது. காந்தியம் அமைப்பைக் கடுமையாகச் சாடிய இப்பத்திரிக்கைகள் "நாடற்ற" மலையகத் தமிழர்களை எல்லையோரக் கிராமங்களில் குடியேற்றுவதாகவும், பின்னர் அக்கிராமங்களை பயங்கரவாதிகள் மறைந்திருந்து பயிற்சி எடுக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பாவித்து வருவதாக அவை செய்தி வெளியிட்டிருந்தன. "பயங்கரவாதிகள் நாடற்ற மலையகத் தமிழர்களைக் கொண்டு மனித வேலி ஒன்றினை அமைத்து வருகின்றனர்" என்று அவை தலைப்பிட்டிருந்தன. சிங்கள இராணுவத்தினரும், காவல்த்துறையும் காந்தியம் பண்ணைகளைச் சுற்றிவளைத்துச் சோதனையிடவும், அவற்றினை அழித்து, அங்கிருந்தோரை விரட்டவும் தேவையான களநிலையினை இப்பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள் உருவாக்கிக் கொடுத்திருந்தன. 1983 ஆம் ஆண்டு, பங்குனி மாதமளவில் இப்பண்ணைகளை முற்றாகத் துடைத்தழிக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்காக ஒரு உத்தியினை சிங்கள இராணுவமும் காவல்த்துறையும் பாவித்தன. முதலில் மலையக மக்கள் வாழ்ந்துவந்த காந்தியம் பண்ணையின் பகுதியினை இராணுவம் சுற்றிவளைக்கும். பின்னர் அங்கிருப்பவர்களை பொலீஸார் வீதிக்கு இழுத்து வருவர். எங்கே கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்பதனை அறிவிக்காது பஸ்களில் ஏற்றப்படும் இந்த மலையகத் தமிழர்கள் இரவோடிரவாக மலையகத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வீதிகளில் இறக்கிவிடப்படுவர். பங்குனி 14 ஆம் திகதி இந்த துடைத்தழிக்கும் நடவடிக்கைக்கு இன்னுமொரு பரிணாமம் சேர்த்துக்கொள்ளப்பட்டது. திருகோணமலைக்கு மேற்காக 25 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் பன்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த மலையக மக்களின் 16 கொட்டகைகளுக்கு சிறிலங்கா பொலீஸார் தீமூட்டினர். தொண்டைமான் இதுபற்றிக் கேள்விப்பட்டபோது நானும் அவருடன் கூடவிருந்தேன். செய்தியைக் கேட்ட தொண்டைமான் கொதித்துப் போயிருந்தார். ஜெயவர்த்தனவின் கட்டளைகளின்படியே பொலீஸார் இவற்றைச் செய்கிறார்கள் என்பது அவருக்கு நன்கு புரிந்தது. அதனால் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம் பத்திரிக்கை அறிக்கையொன்றினை வெளியிடுவது மட்டும்தான். 1983 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வவுனியாவில் இயங்கிவந்த காந்தியம் அலுவலகம் இழுத்து மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அவ்வமைப்பின் ஸ்த்தாபகர்களான வைத்தியர் ராஜசுந்தரம் மற்றும் எஸ் ஏ. டேவிட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டனர். ஜூலை இனப்படுகொலைகளில், 25 ஆம் திகதி இன்னும் 53 தமிழ் அரசியற்கைதிகளுடன் வைத்தியர் ராஜசுந்தரமும் சிங்களச் சிறைக் காவலர்களாலும், கைதிகளாலும் கொல்லப்பட்டார். டேவிட் வெலிக்கடைச் சிறைப் படுகொலையிலிருந்து உயிர் தப்பினார். மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு பின்னர் வேறு தமிழ்க் கைதிகளுடன் மாற்றப்பட்ட அவர் மட்டக்களப்புச் சிறையுடைப்பின்போது அங்கிருந்து தப்பித்து இந்தியாவைச் சென்றடைந்தார். 1983 ஆம் ஆண்டு ஆடி மாதமளவில் மலையகத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் அடாவடித்தனங்கள் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன. பண்ணைகளில் இருந்து பெரும்பாலான மலையகத் தமிழர்களை அரசு விரட்டியடித்திருந்தது. இப்பகுதிகளில் பெருமளவிலான தெற்குச் சிங்களவர்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டின் தமிழினப் படுகொலைகள் இச்சிங்களக் குடியேற்றங்களைத் தற்காலிகமான தேக்க நிலைக்கு கொண்டுவந்தன. தமிழர்களின் தனிநாடான ஈழத்திற்கான அவர்களின் கோரிக்கையினை முற்றாக அழித்துவிடுவதற்கான சூழ்ச்சித் திட்டம் 1983 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் கொழும்பு மகாவலி அமைச்சிலேயே போடப்பட்டது. தமிழீழத்தின் அடிப்பகுதியை முற்றாக உடைத்தெடுக்கும் நோக்கத்துடன் தமிழர் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதன் மூலம் மூன்று பிரிவுகளாகச் சிதைப்பதென்று அங்கு திட்டமிடப்பட்டது. அச்சிங்களக் குடியேற்றத் திட்டங்களாவன, மாதுரு ஓயாக் குடியேற்றத் திட்டம், வலி ஓயா (மணலாறு) சிங்களக் குடியேற்றம் மற்றும் மல்வத்து ஓயா சிங்களக் குடியேற்றம் என்பனவே அவை மூன்றுமாகும். சிங்களத்தில் ஓயா எனப்படுவது ஆற்றினைக் குறிக்கும். இந்த மூன்று ஆற்றுப்படுக்கைகளின் ஓரங்களில், செழிப்பான தமிழர் தாயகத்தில் சிங்களவர்கள் அரச முனைப்புடன் குடியேற்றப்பட்டார்கள். தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எல்லையிலேயே மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. மாதுரு ஓயா ஆற்றினையண்டி உருவாக்கப்படும் சிங்களக் குடியேற்றத்தினூடாக திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பு முற்றாக அறுத்தெறியப்பட்டிருக்கிறது. வெலி ஓய சிங்களக் குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இடையே இருக்கும் நிலத்தொடர்பை மிகவும் பலவீனமாக்கும் வகையில் அரசால் உருவாக்கப்பட்டது. மல்வத்து ஓய சிங்களக் குடியேற்றம் மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியூடாக ஊடறுத்துச் செல்கிறது. மன்னார் மாவட்டத்தின் தென்பகுதிகளை வட மாகாணத்திலிருந்து பிரித்தெடுக்கும் நோக்கத்துடனேயே இக்குடியேற்றம் அரசால் உருவாக்கப்பட்டது. இம்மூன்று சிங்களக் குடியேற்றங்களும் முற்றுபெற்ற பட்சத்தில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களும், சிங்களவர்களால் அரிக்கப்பட்ட மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் வடக்கு எச்சங்களும் மட்டுமே வட மாகாணத்தில் எஞ்சியிருக்கின்றன. வெலி ஓய நீர்ப்பாசணக் கால்வாய் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழினப் படுகொலை முடிந்த கையோடு மாதுரு ஓயாச் சிங்களக் குடியேற்றத் திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஆனால் மகாவலி அமைச்சில் பணிபுரிந்த அதிகாரிகளின் ஆர்வக் கோளாரினால் அவ்விடயம் வெளித்தெரிய வந்ததையடுத்து அது தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. சிங்களவர்களைக் குடியேற்றுவது தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையினைப் பலவீனப்படுத்தவே என்று அதிகாரிகள் வெளிப்படையாகப் பேசி வந்தமை இந்தியாவின் எதிர்ப்பையும், சர்வதேசத்தில் அதிருப்திகளையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. அவமானப்பட்டுபோன ஜெயார் இக்குடியேற்றங்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று காட்டத் தலைப்பட்டார். ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றினை வெலி ஓய எனும் சிங்களக் குடியேற்றமாக மாற்றும் திட்டம் முழுமூச்சுடன் ஜெயாரினால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 30 ஆம் திகதி சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து பாக்கிஸ்த்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் செய்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் கொழும்பில் தங்கி ஜெயாருடன் தேநீர் அருந்தினார். இந்திய புலநாய்வுத்தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் வெயின்பேர்கரின் ஜெயாருடனான சந்திப்பு இலங்கைக்கு ஆயுத உதவிகளைச் செய்வது தொடர்பாகவே அமைந்திருந்தது. இலங்கைக்கு நேரடியான ஆயுத வழங்கலைச் செய்வதில் அமெரிக்க அரசாங்கம் சங்கடப்படுவதாக வெயின்பேர்கர் ஜெயாரிடம் தெரிவித்திருக்கிறார். ஆகவே, இலங்கைக்குத் தேவையான ஆயுதங்களை இஸ்ரேலின் ஊடாகவோ அல்லது பாக்கிஸ்த்தானூடாகவோ தன்னால் செய்துகொடுக்கமுடியும் என்று அவர் ஜெயாரிடம் உறுதியளித்திருக்கிறார். அமெரிக்காவின் ஆயுத உதவி உறுதியாக்கப்பட்டதையடுத்து வெலி ஓயாத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க ஜெயவர்த்தன முடிவெடுத்தார். அமெரிக்காவினால் செய்யப்படவிருக்கும் ஆயுத உதவிகளுக்குப் பிரதியுபகாரமாக இலங்கை சில விடயங்களை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று ஜெயாரிடம் கோரினார் வெயின்பேர்னர். அவையாவன, இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளி மீள ஆரம்பிப்பது, வொயிஸ் ஒப் அமெரிக்கா வானொலிச் சேவையினை இலங்கையில் ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது, திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு வழங்குவது. இம்மூன்று விடயங்கள் தொடர்பான பேரம்பேசல்களுக்கு அமெரிக்க அதிபர் ரீகனின் ஆலோசகர் வேர்னன் வோல்ட்டர்ஸ் இலங்கைக்கு வருவார் என்றும் வெயின்பேர்னர் ஜெயாரிடம் தெரிவித்தார். ஆனால், வெயின்பேர்னரோ ஊடகங்களுடன் பேசும்போது தனது பயணத்திற்கான காரணத்தை திரித்துக் கூறினார். இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினை ஒரு அரசியல்ப் பிரச்சினையென்றும், அதனை அரசியல் ரீதிய்ல் மட்டுமே தீர்க்கமுடியும் என்று அமெரிக்கா நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் உதவியுடன் தமிழர் பிரச்சினையினை இலங்கை அரசியல்த் தீர்வினூடாகத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று தான் ஜெயாரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினார். அமெரிக்காவின் ஆயுத உதவியினால் உற்சாகமடைந்த ஜெயவர்த்தன உடனடியாக செயலில் இறங்கினார். 1983 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தனது பாதுகாப்புச் செயலாளரான அசோக டி சில்வாவை இணைந்த அரச படைகளின் விசேட நடவடிக்கைகள் கட்டளை மையம் எனும் புதிய பாதுகாப்புப் பிரிவை உருவாக்குமாறு பணித்தார். இக்கட்டளை மையத்தினூடாக முப்படைகளையும், பொலீஸாரையும் ஒரே கட்டளைப் பீடத்தின் கீழ் கொண்டுவர ஜெயாரினால் முடிந்தது. கடற்படைத் தளபதி அசோக டி சில்வா இக்கட்டளை மையத்தின் இணைப்பதிகாரியாகவும், மகாவலி அமைச்சின் மேலதிகச் செயலாளர் பண்டாரகொட கட்டளை மையத்தின் உதவி இணைப்பாளராகவும் ஜெயாரினால் நியமிக்கப்பட்டனர். பண்டாரகொட திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் அம்மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களை துரித கதியில் நடத்திவந்தமையினைப் பாராட்டும் முகமாகவே ஜெயாரினால் அவருக்கு விசேட கட்டளை மையத்தில் உயர் பதவியொன்று வழங்கப்பட்டது. ஜெயாரின் பணிப்பின் பேரில் விசேட கட்டளைப் பணியகத்தை உருவாக்கிய அசோக டி சில்வா, அப்பணியகத்திற்கு இரண்டு முக்கிய பணிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். முதலாவது பணி, "வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது". இரண்டாவது, "இந்த மாவட்டங்களில் இடம்பெறும் குடியேற்றங்கள் மற்றும் சிவில் நிர்வாக சேவைகளை மேற்பார்வை செய்வது". அதே பத்திரிக்கையாளர் மாநாட்டில் பண்டாரகொடவும் பங்குபற்றியிருந்தார். தொடர்ந்து பேசிய அசோக டி சில்வா, விசேட கட்டளைப் பணியகத்தின் படைகளின் முதலாவது நடவடிக்கை பயங்கரவாதிகளை குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து விரட்டியடிப்பதுதான் என்று கூறினார். அவர் குறிப்பிடும் விசேட நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை ஊடவியலாளர்கள் அவரிடம் கேட்க முட்பட்டபோது, "இராணுவ இரகசியங்களை வெளியே சொல்லமுடியாது" என்று கூறித் தவிர்த்துவிட்டார். ஆனால் சண் மற்றும் தி ஐலண்ட் பத்திரிக்கைகளில் தேவையானளவு விபரங்களுடன் இந்த விசேட நடவடிக்கை பற்றிய விடயங்கள் அரசால் கசியவிடப்பட்டிருந்தன. ஐப்பசி 7 ஆம் திகதி சண்டே ஐலண்ட்டில் வெளிவந்த பீட்டர் பாலசூரியவின் தலைப்புச் செய்தி இவ்வாறு கூறியது, "காந்தியம் அமைப்பினரால் குடியேற்றப்பட்ட சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் விரைவில் வெளியேற்றப்படவிருக்கிறார்கள்". "தெற்கில் காணியற்ற சிங்களவர்களைக் குடியேற்றவென உலக வங்கியின் உதவியோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் 500 ஏக்கர்களில் தெரிவுசெய்யப்பட்டிருந்த காணிகளில் கடந்த இரு வருடங்களாக சட்டவிரோதமாகக் கூடியேறி வாழ்ந்துவரும் 50 மலையகத் தமிழ்க் குடும்பங்களை அரசாங்கம் அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக" அச்செய்தி கூறியது. வவுனியா அரச அதிபரால் தெரிவுசெய்யப்பட்ட காணியற்ற விவசாயிகளை இந்நிலங்களில் குடியேற்றுவது சட்டவிரோத மலையகத் தமிழ்க் குடியேற்றவாசிகளால் இதுவரையில் தடைப்பட்டிருந்ததாக அச்செய்தி மேலும் கூறியது. ஜெயவர்த்தனவின் தமிழர்களைத் தோற்கடிக்கும் செயற்பாடுகளுக்கு உற்ற துணை வழங்கியவரும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதை ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தவருமான காமிணி திசாநாயக்க ஜெயாரின் ஆலோசனையின் பெயரில் உருவாக்கப்பட்ட இணைந்த படைகளின் விசேட கட்டளைப் பணியகத்தைப் பெரிதும் நியாயப்படுத்தியதுடன், அதனை பலப்படுத்தும் காரியங்களிலும் ஈடுபடலானார். வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மலையகத் தமிழர்கள் குடியேறி வாழும் இடங்களைப் பார்த்து வரவென தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அதிகாரியான கருணாதிலக்கவை 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 10 ஆம் திகதி அம்மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார். கருணாதிலக்க காமினிக்கு வழங்கிய அறிக்கையில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவான காணிகளில் பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் குடியேறி வாழ்ந்துவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தக் குடியேற்றங்களால் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். சண், தி ஐலண்ட் ஆகிய பத்திரிக்கைகள் காந்தியம் பண்ணைகளில் இருந்து தமிழர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கைகளுக்காக சிங்கள மக்களைத் தூண்டிவிடும் பிரச்சார நடவடிக்கைகளில் இறங்கின. 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 17 ஆம் திகதி வெளிவந்த சண் பத்திரிக்கை, "பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் வடக்குக் கிழக்கில் சட்டவிரோ காணி பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று ஓலமிட்டிருந்தது. அப்பத்திரிக்கையின் முதலாம் பக்கத்தின் காற்பகுதி இம்மலையகத் தமிழ் மக்களின் குடியேற்றத்தினை விமர்சிக்கும் விதமாகவே அமைந்திருந்தது. "பொலீஸாரும், படையினரும் இக்குடியேற்றங்களால் பாதுகாப்பு அச்சுருத்தல் ஏற்படப்போகிறது என்று அஞ்சுகின்றனர்", "அரச சார்பற்ற நிறுவனங்கள் பெருமளவு நிதியினை இச்சட்டவிரோதக் குடியேற்றங்களுக்காக வாரியிறைக்கின்றனர்", "மனித வேலியமைத்து ஈழத்தின் எல்லைகளைக் காத்துக்கொள்ள பிரிவினைவாதிகள் எத்தனிக்கிறார்கள்" என்கிற தலைப்புக்கள் கொட்டை எழுதுக்களுடன் முதற்பக்கத்தை அலங்கரித்திருந்தன. வவுனியாவில் இடம்பெற்ற விடயங்களை திகதி அடிப்படையில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருந்தது, "கூட்டம் கூடமாக பிரஜாவுரிமையற்ற மலையகத் தமிழர்கள் தொண்டைமானின் மிக இழிவான செயலினால் வடக்குக் கிழக்கின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் காந்தியம் போன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அரச சார அமைப்புக்கள் நாடற்ற மலையகத் தமிழர்களைப் பொறுப்பேற்று யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் எல்லையோரக் கிராமங்களில் தமக்கென்று பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றினை மனித வேலி கொண்டு உருவாக்கி வருகின்றனர். இதுவரையில் சுமார் 10,000 நாடற்றவர்கள் இப்பகுதிகளில் குடியேறி உள்ளதுடன் இவர்களுக்கான நிதியினை நோர்வேயின் ரெட்பாணா, ஜேர்மன் அமைப்பு, கத்தோலிக்கத் திருச்சபையினால் நடத்தப்படும் செடெக் மற்றும் சர்வோதய ஆகிய அரசுசாரா அமைப்புக்கள் வழங்கிவருகின்றன" என்றும் கடுமையாகச் சாடியிருந்தது.1 point
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். Digital News Team அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். ஆனால் அதனை செய்ய எள்ளளவும் துணிய மாட்டார்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று(05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் தெற்கு அரசியலில் மாற்றம் என்பது தற்போது கவர்ச்சி அரசியலாகி மக்கள் மயப்படுத்தபட்டு வருகின்றது. இது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அது மேலும் கவர்ச்சியாகலாம். இந்த அரசியல் கலாச்சாரத்திற்குள் வடகிழக்கின் புத்தி ஜீவிகளாகவும், கல்வியாளர்களாகவும் கருதப்படுவோரும் இழுத்துச் செல்லப்படும் அபாயமும் நிலவுகின்றது. அதேபோல் தாயகத்தில் பாரம்பரிய கட்சிகளாகவும், ஈழப் போராட்டத்தில் முனைப்போடு செயற்பட்டவர்களாகவும் (காட்டிக் கொடுத்தவர்கள்) வீர வசனம் பேசுபவரும் வாக்கு கொள்ளைக்காக கூட்டு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர் .இவர்கள் தமிழர் தேசியத்தை முள் வேலிக்குள் தள்ளி கொலை செய்ய எடுக்கும் முயற்சியை வருடந்தோறும் மாவீரர்களுக்கு சுடர் ஏற்ற ஒழுங்குகள் செய்வோரும், சுடர் ஏற்றுவோரும் தகர்த்தெறிய வேண்டும். தற்போதைய நாட்டின் ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை தமதாக்க இறுதியாக யாழ்ப்பாணம் வந்தபோது மாற்றத்தை தேடும் தென்பகுதி மக்களோடு இணைந்து கொள்ளுங்கள் என்றே அழைப்பு விடுத்து வாக்கு கேட்டார். வடகிழக்கு தமிழர்கள் தேசத்தில் அவர்கள் நடத்திய யுத்தம்,அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், காணாமலாக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தினர், தொல்லியல் திணைக்கத்தினர், சிங்கள பௌத்த துறவிகள் ஆகியோரால் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான மக்கள் எதிர்பார்க்கும் நீதி, அரசியல் பிரச்சனைக்கான தீர்வு எதையும் குறிப்பிடவில்லை. ஜனாதிபதி அவர்களின் மாற்றம் என்பது தமிழர்கள் வாழ்வோடு தொடர்பு பட்டதல்ல. அது முழுக்க முழுக்க தனது அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான சிங்கள பௌத்த மக்களை திருப்திப்படுத்துவதற்கான அரசியல் என்பதனை நாம் ஆழமாக சிந்திப்போம். இதற்குள் சிக்கிவிட வேண்டாம் என தமிழர் தாயக மக்களை கேட்டுக் கொள்கின்றோம். இடதுசாரி சிந்தனை உடைய மக்கள் விடுதலை முன்னணியினர் வடகிழக்கு மக்கள், மலையக மக்கள் என்போர் அரச அதிகார தரப்பாலும் அரச இயந்திரத்தினராலும் பொருளாதார, சமூக அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் போது அவர்களை தங்கள் வர்க்கமாக ஏற்று அவர்களோடு சேர்ந்து பயணிக்கவில்லை. தமது அரசியலின் எதிரியாகவே அவர்களைப் பார்த்தார்கள். ஆட்சியாளர் சேர்ந்து ஒடுக்குமுறைக்கும் இன அழிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் துணை நின்றது அவர்கள் வரலாறு. இதனால்தான் யாழ்ப்பாணத்தில் அவருடைய மேடையில் தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வாய் திறக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழ் அச்சு ஊடகம் ஒன்று தற்போதைய பிரதமர் வழங்கி உள்ள செவ்வியில்”என்ன பிரச்சனைக்கு ஒரு நிலைக்குள் இருந்து கொண்டு மாத்திரம் தீர்வு காண முடியாது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் புதிய சட்டம் உருவாக்குதல் ஊடாக தீர்வு காணலாம் என்று கருதுகிறார்கள் அதுவல்ல அரசாங்கம் செயற்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்”என்று கூறியவர் “தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கம் தம்மையும் பிரதிநிதித்துவம்படுகிறது என்பதை உணர வேண்டும். அவ்வாறான வகையில் அரசாங்கம் செயப்பட வேண்டும்” எனக் கூறியிருக்கின்றார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இனப் பிரச்சனைக்கான தீர்வு யாப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் அது மக்கள் தீர்ப்புக்கு விடப்படும் என்றும் கூறியுள்ளார்.இதனை சிங்கள பௌத்தர்களிடம் அரசியல் தீர்வினை விட்டு விடுவோம் என்பதாகவே நாம் பொருள் கொள்ளல் வேண்டும். அது மட்டுமல்ல அமைச்சரவை தீர்மானங்களை அமைச்சர் விஜித்த ஹோரத் அவர்கள் அறிவித்த போது “அரசியல் கைதிகள் நாட்டின் சட்டம் மூலம் விடுதலை செய்யப்படுவார்கள்” எனக்கூறினார். இதுவரை காலமும் அவ்வாறே விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்களுடைய சட்டம் காரணமாக பலர் 25 வருட காலமாக சிறை கம்பிகளுக்குள் அடைப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் தான் தீர்வு காண்போம் என்பதன் மூலம் அரசியல் தீர்மானம் எடுத்து அவர்களை விடுதலை செய்ய மாட்டோம் என்று கூறுவதாகவே உள்ளது. அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். அதற்கு இவர்கள் எள்ளளவும் துணிய மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம். இந்நிலையில் ஒரு சில தமிழ் அரசியல் கட்சி தலைமைகள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது ஆதரவு கரத்தை நீட்டுவதாக அடையாளம் காட்டி சந்திப்புகளை செய்துள்ளனர். மேலும் சிலர் தமிழர் தேசியத்தின் முகம் காட்டி ஆட்சி கதிரைகளை தமதாக்கியும் ஆதரவு கொடுக்க முயல்கின்றனர். இன்னும் சிலர் மேற்கூறியர்கள் எல்லாம் தோற்கடித்து நேரடியாகவே பேசிய மக்கள் சக்திக்கு ஆதரவினை கொடுக்க துணிந்துள்ளனர். இன்னும் சிலர் தமிழர்களை சிதைக்க சுயேட்சையாகவும் களமிறங்கவும் ஆயத்தமாய் உள்ளனர். இவர்கள் வீட்டில் பூச்சிகள் மட்டுமல்ல. இவர்கள் இனப்படுகொலையாளர்கள். தனது அரசியல் நலன் கருதி இந்தியாவும் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. இவர்களுடைய நோக்கம் தமிழர் தேசியத்தையும் அது தொடர்பாக தெளிவோடு விட்டுக் கொடுக்காது பேசுகின்றவர்களையும் அரசியல் சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே.இதற்கும் இடமளிக்க கூடாது. அரசியல் பன்முகம் கொண்ட இராவண கூட்டம் தமிழர் தேசியத்தை சிதைத்தழிக்க அணிவகுத்து நிற்கையில் விட்டில் பூச்சிகளாக தமிழர்கள் அதில் விழுந்து விடக்கூடாது. தேசிய அரசியல் முகமூடி கொள்ளையர்களிடம் தப்பித்தால் மட்டுமே எமது அரசியல் கௌரவத்தை தற்காத்துக் கொள்ளலாம். இல்லையேல் இனமாக எழ முடியாத சூழல் ஏற்படுவதே பலரது நோக்கம். அதனை தோல்வியுறச் செய்வோம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் நாம் எழுந்தோம். என்பதையே நினைவில் கொள்வோம். அதுவே எமது சக்தி எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/3103141 point
-
சும்ம ஒரு நகைச்சுவைக்காக பதியப்பட்டது எந்த அரசியல் பின்புலத்துடனும் பதியப்படவில்லை.1 point
-
ஆண்கள் அணி மோசமாக விளையாடியபோது பெண்கள் அணி சிறப்பாக விளையாடியது. இப்போது ஆண்கள் சிறப்பாக விளையாட தொடங்க பெண்கள் அணி சோர்ந்து விட்டது.1 point
-
இந்தக் காணொளியில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் எடுத்தவர்களின் குணாதிசயங்கள் அனுபவங்கள் தமிழ்தேசியம் என்று சொல்லிச் சொல்லியே எப்படி தமிழ்மக்களை அழிக்கிறார்கள் என்று பல்வேறு கோணத்தில் அலசப்படுகிறது. இடையில் ஒரு உதாரணத்துக்கு தேசியதலைவரின் மதிநுட்பத்தையும் குறுகிய சிந்தனை இல்லாமல் நீண்டகாலமாக மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்று எண்ணி நந்திக் கடலில் இரால்பண்ணை வைக்கலாம் நிறைய லாபம் எடுக்கலாம் என்று ஒரு திட்டத்தை வைத்த போது இதில் அனுபவம் இல்லாத தலைவர் இரால்பண்ணை எங்கெங்கே செய்கிறார்கள் என்று ஆராய்ந்து நீர்கொழும்மு பக்கத்திலிருந்தவர்களை வரவழைத்து அதன் நன்மைதீமை பற்றி முழுமையாக ஆராய்ந்து கடைசியில் அந்த திட்டம் வருமானமாக இருந்தாலும் இந்த மண்ணும் கடலும் நச்சுத் தன்மை கொண்டதாகவும் மலட்டுத்தன்மை கொண்டதாகவும் 10-15 வருடங்களில் மாறிவிட்டால் மீண்டும் அந்த கடலையோ மண்ணையோ அடுத்த சந்நதி பாவிக்க முடியாது என்பதால் அத்திட்டத்தை முற்றாகவே கைவிட்டதாக சொல்கிறார். இவர் தான் மக்களுக்கான தலைவன்.இல்லை கடவுள். இதைப்பற்றிய உரையாடலை 18வது நிமிடத்திலிருந்து விரும்பியவர்கள் கேட்கலாம்.1 point
-
இப்பவும் நான் வீட்டில், மற்றவர்களுடன் கதைக்கும் போது, சில சிங்களச் சொற்கள் தானாகவே/ இயல்பாகவே என் வாயிலிருந்து வந்துவிடும். அந்தளவுக்கு நான் சிங்களவர்களுடன் பல வருடங்களாக பழகியிருக்கின்றேன். இன்றும் சிங்கள சினிமாவையும். பாடல்களையும் ரசிக்கின்றேன். பல சிங்கள நண்பர்கள் முக நூலிலும் சரி, அதற்கு வெளியிலும் சரி இன்றும் தொடர்பில் உள்ளனர். கனடாவுக்கு வந்து சில நாட்கள் எம்முடன் தங்கிச் செல்லும் ஒரு சிங்களவர் கூட இருக்கின்றார். நீங்கள் மேலே குறிப்பிட்டவாறு தான் அவர்கள் நடந்து கொள்வர். பழகும் போது, உயிரையே கொடுக்கின்றவர்கள் போல பழகுவார்கள். தமிழர் தாயகம், சக உரிமை என்று கதைக்க வெளிக்கிட்டால், உயிரையே எடுக்கும் அளவுக்கு கோபப்படுவார்கள். சிங்கள இனவாதம் ஒரு போதும் மாறாது, நிறங்களை மட்டும் மாற்றிக் கொள்ளும்.1 point