Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 12/13/24 in all areas
-
அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க ஒரு விதமான மனம் வேண்டும்! இப்போது சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியர் நல்லவர்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் அசாத்தை விட மோசமானவர்களாக இருக்கப்போவதில்லை என்று சிரிய மக்களே சொல்கின்றார்கள்.6 points
-
2 points
-
முதலில் உங்கள் தெளிவான, நீண்ட பதிலுக்கும், மேலே புலிகள் மீது சொல்லப்பட்ட ஆதாரமற்ற கருத்துக்கு நீங்கள் கொடுத்த மறுத்தானுக்கும் நன்றி. உங்கள் இருவரையும் சுட்ட காரணம் உண்டு. 1. யாழை ஆரம்பகாலத்தில் இருந்து வாசிப்பவன் என்ற வகையில் - ஒரு காலத்தில் இங்கே பல புலிகளின் பிரச்சார பீரங்கிகள் இருந்தார்கள். கால ஓட்டத்தில் அவர்கள் குண்டுகள் எல்லாம் புஸ்ஸாகி விட்டது. எனக்கு தெரிய இப்போ புலிகள் மீது தவறான கருத்து எழுந்தால் - நீங்கள் இருவரும்தான் பதில் எழுதுகிறீர்கள். நான் வரலாற்றின் தரவுகள் என சிலதை திருத்தி எழுதுவதுண்டு. எவரும் எழுதாவிட்டால் விசுகு அண்ணை எழுதுவார். நான் என்றும் புலிகளின் ஆதரவாளன் என்ற profile இல் யாழில் எழுதியதில்லை. அவர்கள் தியாகங்களை மதிக்கும் இயக்கங்களுக்கு பொதுவான மனிதனாகிய நான் எழுதுவதை விட, இதற்கான பதில் அவர்களின் ஆதரவாளர்களான உங்களிடம் இருந்து வருவது சிறப்பு என எண்ணினேன். 2. ஆர்பரிக்கவில்லை. ஆனால் நிச்சயம் உங்கள் பக்கம் இருந்தே நானும் இதை அணுகுகிறேன். அதனால்தான் fact-check பண்ண எவரும் இல்லையா என கேட்டேன். அசாத்துக்கு வெள்ளை அடிக்கும் ஆர்வத்தில், புலிகள் சக இயக்கங்கள் மீது செய்த வன்முறை மிகவும் பெருப்பித்து காட்டப்பட்டது மட்டும் இல்லாமல் குடும்பங்களை கைது செய்தார்கள் என்ற நடக்காத தகவல் கூட எழுதப்படுகிறது. புலிகள் மிக மோசமான முறையில் சக போராளிகளை 86-87 இல் அழித்தார்கள் மறுக்கவில்லை. ஆனால் அசாத் எதிர்க்கும் போராளிகளை மட்டும் அல்ல, அவர்களின் ஊர்களையே அழித்தார். இரசாயன குண்டுகள் போட்டார். பல்லாயிரக்கணக்கில் மக்களை சிறை வைத்தார். பல நூறு மனித படுகொலை கூட்டு புதைகுழிகளை நாட்டில் விதைத்துளார் (mass graves). இவை எதையும் புலிகள் செய்யவில்லை. இவை எல்லாவற்றையும் வெள்ளை அடிக்க, புலிகளும் இதையே செய்தார்கள் என்ற தரவு-பிழை கையாளப்படுகிறது. 3. முன்பும் எழுதியுள்ளேன், எம்மை மேற்கு மீதான ஒரு வெறுப்பு நிலையில் வைத்திருக்க எவரோ விரும்புகிறார்கள். அது சீனாவோ ரஸ்யாவோ அல்ல. அவர்கள் எம்முடன் மினெக்கெடுவதில்லை. ஜெய் ஹிந்த்!2 points
-
இதுக்குள்ளை என்னுடையநண்பன் ஒருவரும் உள்ளார். அத்தான் இங்கைதான் வெலை செய்யிறார் என்னவென்று கேட்டுப்பாப்பம்2 points
-
ஒரு தடவை தமிழ் கடை ஒன்றிற்கு முடி வெட்டுவதற்காகப் போயிருந்தேன். சரியாக வெட்டி முடிந்ததும் முடி வெட்டியவர் திடீரென என் தலையை இரு கைகளாலும் பிடித்து இடது வலது பக்கமாக மாறி மாறித் திருகினார். என்ன நடக்கிறது என்று சுதாகரிக்க முன் பின்னாலிருந்து முழங்கையை மடக்கிக் கழுத்தை நெரித்து மேலே இரண்டு தடவை தூக்கி கழுத்தில் நெட்டி முறித்தார். அதிர்ச்சியிலிருந்து மீள சில வினாடிகள் எடுத்தது. மசாஜ் செய்தவராம். இனிமேல் யாரிடமும் கேட்காமல் இப்படிச் செய்யவேண்டாம் என்று கூறிவிட்டு வந்தேன்.2 points
-
2 points
-
இது ஒரு பிழையான கூற்றாகும், முதலில் சிங்களவரும், முஸ்லிங்களும் ஆகும், அதன் பின்னர் தான் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்களை விட அநேகமான தமிழர்கள் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதினால் ( உண்டியல்) அதன் பயனை இலங்கை பெறுவதில்லை. 2021 இல் உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகள் இருந்து இலங்கையிலிருந்து/இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணப் பரிமாற்றங்களின் மதிப்பு (மில்லியன் அமெரிக்க டாலர்களில்) https://www.statista.com/statistics/1411921/bilateral-remittances-sri-lanka/#:~:text=For Sri Lanka%2C the top,India%2C Australia%2C and Canada.2 points
-
அவர் வேண்டுவது இந்திய குடியுரிமையினை, இலங்கைக்கு போவதனை அல்ல, ஒரு காலத்தில் இலங்கையர்கள் தனிமனித அடிப்படை சுகாதார கட்டுமானம் அற்ற இந்தியர்களை கிண்டலடித்த காலத்தில் இருந்து, தற்போது இந்திய குடியுரிமையினை கோரும் நிலைக்கு வந்துள்ளார்கள், அத்துடன் இலங்கையில் உள்ள மலையக தமிழர்களை இன்றளவும் வேற்றுமை காட்டும் இலங்கை தமிழர்கள் இந்தியகுடியுரிமையினை கோரும் முரண்நகை, இதனைத்தான் கர்மா என்பார்கள்.2 points
-
2 points
-
எனக்கு தெரிந்த ஒருவருக்கு இந்த மாதிரியான வைத்திய முறைகள் தெரியும்............. ஆனால் அவர் மருத்துவர் இல்லை................. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தான் அவர்............ கோவிட் காலத்தில் உடம்புக்குள் இருக்கும் சார்ஸ் வைரஸிற்கே நேரே மருந்தடிக்க வெளிக்கிட்டவர் அவர்................ இல்லை, கொலஸ்ட்ரோல் நீக்க இப்படியான முறை ஒன்று இல்லை, அது முடியாது என்றும் நினைக்கின்றேன். எடையை, உடல் பருமனை குறைப்பதற்காக liposuction என்று ஒன்றுள்ளது. அது வேறு.2 points
-
ஒருபக்கச் செய்திகளை மட்டும் கேட்டு அதனை அப்படியே நம்புவதும் மற்றவர்கள் அதனை மட்டும் நம்ப வேண்டும் என்று வற்புறுத்துவதும் மற்றைய தரப்புச் செய்திகளை இணைப்போரை எதிரிகளாகக் கொள்வதும் சரியான அணுகுமுறை அல்ல என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஆனால் ஒரு சிலர் தாங்கள் பொலிடோல் குடித்தால் மற்றவர்களும் பொலிடோல் குடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். 🤣2 points
-
ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅 மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅1 point
-
1 point
-
முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும் வெடித்தது காணும் .1 point
-
1 point
-
🤣................... கட்டணம் எவ்வளவு என்று கேட்டுச் சொல்கின்றேன். அது சரி, உங்களுக்குக்காக கையெழுத்து போடப் போடும் மற்ற மூவரும் யார்....... நாலு பேர்களில் நான் ஒன்று............🤣. ஊரில் அந்த நாட்களில் 'கலாநிதி ஸ்டோர்ஸ்' என்று ஒரு பலசரக்கு கடை இருந்தது.......... இந்தப் பட்டம் கொடுக்கும் வியாபாரத்திற்கு அது நல்ல தோதான பெயர்................😜.1 point
-
காலம் எல்லாவற்றையும் மாற்றும். அர்ச்சனாவின் பணி 😷 அது தான் என்று நினைக்கிறேன்.1 point
-
உங்களளவுக்கு எனக்கு பொறுமை இல்லை🤣.1 point
-
இலங்கையில் மருத்துவ துறையில் வேலை செய்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு தங்கன்ட தலையில் ஒளிவட்டம் இருப்பதாக நினைப்பு ...1 point
-
தினமும் நாலு அறிக்கைகள் விடவேண்டும் என்ற நிலையில் நாமல் இப்பொழுது இருக்கின்றார். கீதநாத்தும் இதே போல ஒரு கட்டாயத்தில் இருக்கின்றார். இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதே இதற்கு ஒரு முடிவாகும். அதையே தான் முகாம்களில் 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் எம் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். ஜெயலலிதா அவரின் கடைசி நாட்களில் இதற்கான முயற்சிகளை எடுத்தார்........... ஆனால் அவரின் திடீர் இறப்பின் பின், இந்தியக் குடியுரிமைச் சட்ட மசோதாவின் பின், இதைக் கண்டு கொள்வோர் இல்லை.........😌. அங்கேயே பிறந்து, படித்து, வளர்ந்து வரும் எம் மக்கள் குடியுரிமை இல்லை என்ற காரணத்தால் இழப்பவை மிக அதிகம். ஆசிரியப்பணி உட்பட எந்த அரச வேலைகளுக்கும் எம் மக்கள் தகுதியில்லாதவர்கள் ஆகிவிடுகின்றனர் அங்கே................😌.1 point
-
மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு. ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான், அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை. புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம், அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?1 point
-
👍................ நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............ நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.1 point
-
காவடி எடுத்தால் ஆடித்தானே ஆகவேண்டும்!😂1 point
-
இதை யாழ்களத்தில் fact-check பண்ண, மறுத்துரைக்க ஒருவரும் இல்லையா? பழையகாய் ஒன்று பச்சை வேறு குத்தியுள்ளார்🤷♂️. @valavan @ரஞ்சித்1 point
-
பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர்! 10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல சபையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/14122041 point
-
மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........! 😍1 point
-
இதுவரை கூறப்பட்ட காரணங்கள் 1. குரங்கு 2. வெப்பநிலை ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லையே??? $$$ உள்ளூர்ச் சந்தையை புறக்கணித்து ஏற்றுமதியை ஊக்குவித்ததன் பலன். பாரிய தென்னந்தோட்டங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தமது உற்பத்திகளை ஏற்றுமதி நோக்கி திருப்பியதால் டாலர் இருக்கு தின்ன தேங்காய் இல்லையே…..! யாழ் உறவுகளுக்கு ஞாபகம் இருக்கும் “தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி”1 point
-
இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து புதிய கட்சி யாப்பை உருவாக்க வேண்டும்.அதன் பிரகாரம் கொள்கைகள் நிமித்தம் அனைத்து உறுப்பினர்களும் சிறந்த சட்டத்தரணி முன் சத்தியபிரமாணம் எடுத்து கையொப்பமிட வேண்டும். சட்டத்தரணி என்றவுடன் உழவன் சுமந்திரன் நினைவில் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 🤣1 point
-
சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு கிடைத்ததற்கு - அசாத்தும், தகப்பனும் காரணம். அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின் மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும். சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால். அசாத் வென்று இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும் உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட) மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை தூக்கி பிடிக்கிறது. (அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக கைது செய்து போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை - மறுக்க முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?) ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.1 point
-
ChessMood · Suivre 17 h · The updated list of the World Chess Champions The reigning World Champion: Gukesh Dommaraju பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......! 💐1 point
-
உண்மை மக்கள் என்ன பின்னுட்டம் இட்டு உள்ளார்கள்?? பார்த்தீர்களா?? அர்ச்சுனா தான் சரியான ஆள். என்கிறார்கள் அர்ச்சுனா சொன்ன முக்கிய பெயிண்ட் இந்த கூட்டம் அரசு ஊழியர்களுக்குகாக இல்லை மாறாக மக்களுக்கு தனித்து நின்று வாதிடுகிறார். கஜேந்திரகுமார் இருக்கிறார் எந்த கதையும் இல்லை1 point
-
டைம் இதழின் ஆண்டின் சிறந்த நபராக பெயரிடப்பட்ட ட்ரம்ப்! அமெரிக்காவின் பிரபல டைம் இதழானது, ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) 2024 ஆம் ஆண்டின் சிறந்த நபராக பெயரிட்டுள்ளது. இதற்கு முன்பு ட்ரம்ப், 2016 இல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்த கௌரவத்தை பெற்றார். 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பின் வரலாற்று வெற்றி, அடுத்த பதவிக் காலத்தின் போதான மறுசீரமைப்புக் கொள்கைகள் என்பன இந்த ஆண்டின் சிறந்த நபராக ட்ரம்ப்பை தேர்வு செய்வ வழி வகுத்ததாக டைம் இதழின் பிரதம ஆசிரியர் சாம் ஜேக்கப்ஸ் (sam jacobs) குறிப்பிட்டுள்ளார். டைம் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில், குடியரசுக் கட்சித் தலைவர் தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கான சில திட்டங்களை மீண்டும் வலியுறுத்தினார். நேர்காணலின் போது ட்ரம்ப், தனது தேர்தல் வெற்றி, பொருளாதாரம் மற்றும் உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சூழ்நிலைகள் குறித்து விவாதித்தார். மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது, ஜனவரி 6 கேபிடல் கலவர பிரதிவாதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது உள்ளிட்ட தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கூறினார். இந்த ஆண்டின் சிறந்த நபர் விருதுக்கு, துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், வேல்ஸ் இளவரசி மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் உட்பட பத்து பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/14120881 point
-
தமிழர்களுக்கு தமது பலம் தெரிவதில்லை, இன்றைய இலங்கை பொருளாதாரம் மூச்சு விடுவதற்கு காரணம் புலம் பெயர் தமிழர்கள்தான், கடந்த ஆண்டு இலங்கை அரசுக்கு கிடைத்த 5.4 பில்லியன் அன்னிய செலாவணியில் அதிமுக்கிய பங்கினை புலம் பெயர் தமிழர்களின் நேரடி பங்களிப்பாகவும், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொறுள்களின் மூலமாக மறைமுகமாகவும் இலங்கைக்கு பெருமளவு அன்னிய செலாவணி இலங்கையினை சென்றடைகிறது. இது இலங்கையின் உல்லாச பிரயாணத்துறையினை விட முக்கியமான வருமானமாக திகழ்கிறது. இலங்கையில் நிலவும் அவசரகால சட்டம், முதலீட்டுற்கு வாய்ப்பற்ற சூழல்(Red tape), நிர்வாக சீர்கேடு, ஊழல் என்பவை புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீட்டிற்கு தயங்குவதற்கு காரணமாக இருக்கிறது, அத்துடன் இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே தொடர்ந்தும் இருக்கின்ற நிலையில், முதலீடுகள் தொடர்பான அச்சம் நிலவுவதற்கு கடந்தகால அனுபவங்களும் காரணமாகின்றது. தற்போதுள்ள நிலையில் இலங்கையில் இந்திய உதவிகள் மூலமாக தலையீடு செய்யும் இந்திய அரசின் உதவிகளையும், முதலீடுகளையும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புடன் ஒப்பிடும் போது இது ஒரு வலுவற்றதாக தெரிந்தாலும் இலங்கையின் தற்போதய பொருளாதார சூழ்நிலையில் ஒரு சிறிய அழுத்தம் இலங்கையினை பொருளாதார ரீதியாக உடைத்துவிடும். இதனை இலங்கை அறிந்துள்ளது, தற்போது இந்தியா பங்களாதேச பொருளாதாரத்திற்கு கொடுக்கும்நெருக்கடி போல ஒரு நெருக்கடி நிலையினை எதிர்காலத்தில் இலங்கையிலும் ஏற்படலாம், அதற்கான முதலீட்டுத்திட்டங்களில் இந்தியா சிறிது சிறிதாக கடந்தகாலங்களைலிருந்து ஈடுபட்டு வருகிறது. தனது அயல் நாடுகள் முழுவதிலும் இதே போல ஒரு சூழ்நிலையினையே ஏற்படுத்தி பின்னர் அதனை பாவித்து அவர்களை அடிபணிய வைக்கின்றது இந்திய அரசு, இந்தியா மட்டுமல்ல அனைத்து உலக வல்லரசுகளும் பொருளாதாரத்தினை ஆயுதமாக பயன்படுத்துகின்றநிலையே காணப்படுகின்றது. இந்த பூகோள அரசியலில் தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்தாலே தெரிகிறது அடுத்த பத்தாண்டுகளில் உலக அரசியலின் போக்கு. பெட்ரோ டொலரில் இருந்து எண்ணெய் வள நாடுகளின் விலகல், அதன் பின்னணியில் உலக பொருளாதார மாற்றம், பல துருவ பொருளாதார மையமாக மாறிவரும் உலக பொருளாதாரம் இந்தியாவினையும் வட பூகோள நாடுகளையும் எதிரெதிர் நலன் சார் நிலையில் நிறுத்திவிட்டுள்ளது, இந்தியா அதனால் ஏற்பட போகும் நெருக்கடிகளை கையாள இலங்கையில் இந்திய இருப்பு அவசியமாக உள்ளது, இலங்கைக்கும் அது புரிந்துள்ளது என கருதுகிறேன் ஆனால் இலங்கையின் பொருளாதார நிலை இந்தியாவின் அனுகூலத்தில் தங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இந்தியாவிற்கும் அதன் அயல் நாடுகளுக்குமிடையேயான உரசல்களுக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பது தெரியும், அந்த சக்தி கூட தனது அதிகாரத்தினை தக்கவைக்கும் பகீரத பிரயத்தனங்களின் மூலம் இலங்கையினை நெருக்குகின்றது, ஆனால் இலங்கை எப்போதும் ஓடும் குதிரையிலேயே தனது பணத்தினை வைக்கிறது, மறுவளமாக தமிழர்கள் தமது சொந்த பலத்தினை உணரவில்லை உலகில் ஏற்படும் மாற்றங்களையும் உணரவில்லை. இந்த பயணத்தில் பிரிக்ஸில் இலங்கை இணைவதற்கு இலங்கை அழுத்தம் கொடுகும் என நம்புகிறேன். இந்த கருத்தோஒவியம் இலங்கையின் நிலையினை சிறப்பாக காட்டுகிற மிக சிறந்த கருத்தோவியம்.1 point
-
தே.ம.ச எம்.பிகளின் பட்டங்களை ஆராய குழு நியமிக்க பிரேரணை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி, பேராசிரியர், கலாநிதிப் பட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய ஜனநாயக முன்னணியும் தீர்மானித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் குழுத் தலைவர் ஜீவன் தொண்டமான் இது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் மற்றும் மற்றுமொரு அமைச்சரின் பொறியியற் பட்டம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இந்த தெரிவுக்குழுவை நியமிக்க முன்வந்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிக்கு சபாநாயகரிடமிருந்தோ அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்தோ ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் கிடைக்காததால், உரிய தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என்றும், புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/தே-ம-ச-எம்-பிகளின்-பட்டங்களை-ஆராய-குழு-நியமிக்க-பிரேரணை/175-3486871 point
-
கழுத்துப் பிடிப்பு தானாகவே சரியாகிவிடும் அக்கா. சுடுதண்ணி பாக் இளம் சூட்டில் வைத்துப் பாருங்க.1 point
-
க.பொ.வின் முயற்சி கண்ணுக்கை குத்துதுபோலும். அதனால், பழயை நட்பைப் புதுப்பிக்கிறாராம். தாங்கள் முந்தியே கூட்டு. இதில இவரென்ன புதுசா என்பதுதான் அவரது வியாக்கியானமாக இருக்கலாம். நாங்கள் இழவுவீட்டிலும் பிணமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையுடையோராக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
கனடாவில் உந்த குளிர் எண்ணெய் வைத்து மசாஜ் செய்ய விசேட பணமாம்..அதாலை நான் அந்தப் பக்கமே போறதில்லை...1 point
-
நாட்டுக்குப்போய் அதிகமாக சந்தித்த ஆட்களென்றால் இவையள்தான்...இலங்கைக் குரங்குக்கு ஒரு அழகிருக்குது. ஊரில் நின்ற நாட்களில்...நடையாகத் திரிந்தேன்...ஒவ்வொரு தெருவிலும் இப்படியான் நாய்கள்..பெரும் தொகை.. ஒவ்வொரு வீட்டிற்கு முன்னாலும் குறைந்தது 5 --6 இதேகோலத்தில் நிற்கும் ...பயங்கரம்1 point
-
இருக்கிறது எனது நண்பனுக்கு. வேலை செய்து கொண்டிருக்கும்போது மூக்கால். இரத்தம் ஒழுகியது மருவரிடம். காட்டி பரிசோதித்து இதயத்திலிருந்து சிறுநீரகத்துக்கு செல்லும் நாடி அல்லது நாளம் அடைத்து இருந்ததால் இரத்த போக்குவரத்து குறைத்து இருந்தது உடனும். மாற்றி விட்டார்கள் உடலில் மற்ற பகுதிகளில் நாடி,.நாள. அடைப்புகள். எடுக்க முடியுமா தெரியாது நான் லண்டனில் கனடாவில் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட. போய்யுள்ளேன். இவற்றுடன். ஒப்பிடும் போது ஜேர்மனி உயர்தரம். வாய்ந்தது 🙏🤣 குறிப்பு,..பொருமைக்கா சொல்லவில்லை உண்மை ஜேர்மன் மருத்துவம் சிறந்தது தான் 🙏1 point
-
😅தமிழ் தேசியவாதிகளே! எமது அதி உத்தம தோழரின் தோழர் செய்த சிறு தப்பை வைத்து நீங்கள் குளிர்காய வேண்டாம் ...உங்களுக்கு பட்டம் முக்கியமா? பணியாரம் முக்கியமா? பணியாரம் தான் முக்கியம் ...உயிர் வாழ்வதற்கு... காகிதத்தில் இருக்கும் பட்டத்தை வைத்து நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் ...தமிழ் தேசிவாதிகளே மீண்டும் உங்களுக்கு நான் சொலவது ஒன்றே ஒன்று பட்டத்தை வைத்து பட்டம் செய்து விளையாடலாம் ....ஆனால் விளையாடுவதற்கு சக்தி தேவை அதாவது பணியாரம் தேவை ... இப்படிக்கு சிங்கள அடியான்😅1 point
-
வாழ்க்கையை நன்கு துவங்கிட வேண்டிய கதைகள்: 1. நோக்கியா ஆண்ட்ராய்டை நிராகரித்தது 2. yahoo Google ஐ நிராகரித்தது 3. கோடாக் டிஜிட்டல் கேமராக்களை நிராகரித்தது வாழ்க்கை பாடங்கள்: 1. வாய்ப்புகளை தவற விடாதீர்கள் 2. மாற்றத்தைத் தழுவுங்கள் 3. கால ஓட்டத்திற்கு ஏற்ப நீங்கள் மாற மறுத்தால், நீங்கள் காலாவதியாகிவிடுவீர்கள் மேலும் இரண்டு கதைகள்: 1. Facebook whatsapp மற்றும் instagram ஐ கைப்பற்றுகிறது 2. தென்கிழக்கு ஆசியாவில் உபெர் நிறுவனத்தை கிராப் கைப்பற்றுகிறது மேலும் பாடங்கள்: 1. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் கூட்டாளிகளாக மாறும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறுங்கள் 2. முன்னேறி சென்று போட்டியை அகற்றுங்கள். 3. புதுமைகளைத் தொடருங்கள் மேலும் இரண்டு கதைகள்: 1. கர்னல் சாண்டர்ஸ் 65 இல் KFC ஐ நிறுவினார் 2. கேஎஃப்சியில் வேலை கிடைக்காத ஜாக் மா, அலிபாபாவை நிறுவி 55 வயதில் ஓய்வு பெற்றார். மேலும் பாடங்கள்: 1. வயது என்பது வெறும் எண் 2. தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுவார்கள் இறுதியாக: ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட டிராக்டர் உற்பத்தியாளரின் பழிவாங்கலின் விளைவாக லம்போர்கினி நிறுவப்பட்டது. பாடங்கள்: யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், எப்போதும்! ✔️ கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள் ✔️ உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள் ✔️ தோல்விக்கு பயப்பட வேண்டாம்1 point
-
நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!1 point
-
தாய்லாந்து மஜாஜ்ஜில் இரண்டு வகைகள் உள்ளது என்பதை சிறித்தம்பியவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். 😎1 point
-
👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.1 point
-
கனடாவுக்குள் என்ன செய்யவேண்டுமென்று அமெரிக்காவுடன் கனடிய அரசு போய் பேசுமா? இங்கிலாந்துக்குள் என்ன செய்ய வேண்டுமென்று ஜேர்மனியுடன் போய் பிரிட்டன் அரசு இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துமா? பிராந்திய வல்லரசுக்கு அடிபணிந்து வாழ்ந்தாலும் வாழ்வோமேயொழிய தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கமாட்டோம் என்று வாழும் ஆணவ நிலை தொடரும்வரை உன்னுடைய வீட்டுக்குள் நீ எப்படி குடும்பம் நடத்த வேண்டுமென்று பக்கத்து வீட்டுக்காரன் கட்டளை போடும் அவலநிலை தொடர்ந்தே தீரும்1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point