Leaderboard

 1. வல்வை லிங்கம்

  வல்வை லிங்கம்

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   6

  • Content Count

   2,660


 2. கந்தப்பு

  கந்தப்பு

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   11,882


 3. putthan

  putthan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content Count

   11,878


 4. கரும்பு

  கரும்பு

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content Count

   5,077Popular Content

Showing content with the highest reputation on செவ்வாய் 23 மார்ச் 2010 in Posts

 1. 6 points
  வணக்கம் உறவுகளே! அண்மையில் "எனது ஊர் இலக்கணாவத்தை" http://www.yarl.com/forum3/index.php?showtopic=69896 என்ற தலைப்பில் ஒரு பதிவை இணைத்து உங்களது வரவேற்பை பெற்றுக்கொண்ட நான் உங்களது ஊக்குவிப்பினால் இன்று "வாழும் புலம்" பகுதியில் "நான் வாழும் மண்" என்ற தலைப்பில் நாணறிந்த சில விடயங்களை பதிவு செய்து எனக்கு தெரியாத விடயங்களை உங்களிடம் இருந்து பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னால் இங்கு தரப்படும் தரவுகள் அண்ணளவானவையே தவிர, உறுதியானவை அல்ல. நான் வாழும் இடம் கனடாவில் (Canada) ஒன்ராறியோ(Ontario)மாநிலத்தில் North பக்கமாக Brampton என்ற இடமாகும், இது Toronto வில் இருந்து கிட்டத்தட்ட 40கிலோமீற்றர் தூரமாகும். இங்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வதிவிடமாக கொண்டுள்ளனர், இந்த தொகையில் கிட்டத்தட்ட எனது கணிப்பின் படி பத்தாயிரம் எமது மக்களும் உள்ளடங்குவர். இங்கும் எம்மவரின் வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள் போன்றவற்றிற்கும் குறைவில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இருப்பினும் Brampton பகுதியின் மொத்த சனத்தொகையில் ஜம்பதுக்கு மேற்பட்ட வீதத்தினர் இந்தியர்கள் தான் உள்ளனர். இங்கே எந்த இடத்திற்கு சென்றாலும் அவர்களின் பிரசன்னமே அதிகமாக இருக்கும். Brampton பகுதியில் எண்பது வீதத்திற்கு மேலான கட்டிடங்கள்(வீடுகள், வர்த்தக நிலையங்கள்) வீதிகள் போன்றவை யாவும் நவீன அமைப்பை கொண்ட புதியனவையாகும். சுருக்கமாக சொல்லப்போனால் கனடாவிலையே குறுகிய காலப்பகுதியில் மிக வேகமாக உருவாக்கப்பட்ட ஒரு நவீன நகரம் அல்லது பட்டணம் என்றும் கூறலாம். இந்த பதிவில் இங்கு அமைந்துள்ள ஒரு பொது மருத்துவமனை(Brampton Civic Hospital) சம்பந்தமாகவே முக்கியத்துவம் கொடுக்கவுள்ளேன். இந்த மருத்துவ மனையின் பெயர் William Osler Health Centre ஆகும், இது அமைந்திருக்கும் இடம் 2100 Bovaird Drive East என்ற முகவரியாகும்.http://www.williamoslerhc.on.ca/ இதுபற்றிய மேலதிக விபரங்களை குறிப்பிட்ட இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த மருத்துவமனை 2007ம் ஆண்டு October 28ந்திகதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. இது 2.4 கிலோமீற்றர் (Square Kilometres)அதாவது 1.3மில்லியன் Square Feet சுற்றளவை கொண்ட கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களின் வதிவிடத்தினுள் அமைந்துள்ள மிகப்பெரிய மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை 479 படுக்கை அறைகளையும் 450 ஊழியர்களையும் கொண்டு ஆரம்பித்து இன்று 570 படுக்கை அறைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 2570 வாகன தரிப்பிட வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த மருத்துவமனை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது அதாவது North Building & South Building. North Building ஆறு மாடிகளும், South Building மூன்று மாடிகளைக்கொண்டும் அமைந்துள்ளது. இது நான்கு நுளை வாயில்களையும், நான்கு Elevators களையும் கொண்டு அமைந்துள்ளது. இங்கு நீங்கள் நுளைந்ததும் நீங்கள் கேட்காமலே உதவவென அதிகளவான தொண்டர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி வாசலில் உங்கள் கரங்களில் ஒரு வழிகாட்டி தரப்படும் அதன்படி இலகுவாக உங்களது இடங்களை அடையக்கூடியதாக இருக்கும். பிரதான நுளைவாயிலில் பல பொழுதுபோக்கு சாதனங்கள். உணவகங்கள் போன்றவை தாராளமாகவே உள்ளன சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு மருத்துவமனை என்ற நினைப்பே இல்லாத சூழ்நிலையை இங்கே உணரக் கூடியதாகவுள்ளது. 2010 மார்ச்17ல் காலை 8மணியளவில் எனக்கு மிக வேண்டியவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சையிற்காக நானும். அவரும் இங்கு செல்கிறோம், உள் நுளைந்ததும் எங்கள் கையில் உள்ள பத்திரத்தை காண்பிக்கிறோம், அங்கு கடமையில் இருந்த தொண்டர் எங்களுடன் இணைந்து நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு வந்து, இணைக்க வேண்டியவர்களுடன் இணைத்த பின்பே நகருகிறார் என்றால் புரிந்திருக்கும் தானே. அறுவைச் சிகிச்சையிற்கு முன்பும் பின்பும் அவர்களது பராமரிப்பு பாராட்டப்பட வேண்டியவை , எல்லோராலும் பாராட்டப்படும் ஜரோப்பிய நாட்டிலை பல வருடங்களாக பல மருத்துவமனைக்கு சென்றிருந்த எனக்கு இவை மிகவும் ஆச்சரியமாகவே இருந்தன. அங்கு தங்கியிருந்த ஒவ்வொரு வேளையிலும் உணவு, மருந்துகள் பரிமாறப்பட்ட பின்பு தகவல்கள் சேகரிக்கப்படும் அதாவது என்ன உணவு தரப்பட்டது, எது மிகுதியாக விட்டீர்கள் போன்ற தகவல்கள் குறித்துக்கொள்வார்கள். இப்படிப்பட்ட ஒரு மருத்துவமனை நான் வாழும் மண்ணில் இருப்பதையிட்டு பெருமைப்படுகின்றேன். இந்த மருத்துவமனை பற்றிய மேலதிக தகவல்கள் பெற ஆர்வமாகவுள்ளவர்கள் http://www.oslerfoundation.org/pdfs/WM_OSL_4PG_JUL06.pdf என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்லாம்.
 2. 3 points
  தொடர்ந்து இப்படியான பதிவுகளை எழுதுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.
 3. 2 points
  "வெடி தியபங் ,ஒக்கம கொட்டியா,காண்டா...." என்று 2ஆம் லெப்டினட் பண்டாவின் குரல் கேட்க அவனின் கட்டளையை மதித்து கீழ் பணிபுரியும் சிப்பாய்கள் துப்பாக்கியால் சாரமாரியாக் சுட்டார்கள்.மக்கள் பதட்டத்தால் நாலாபக்கமும் சிதறிஅடித்து கொண்டு ஒடினார்கள்.ஒடமுடியாதவர்கள் அந்த இடத்திலயே வீழ்ந்து மடிந்தார்கள். பண்டா தனது மேல் அதிகாரிக்கு 6 புலிகளை சுட்டு கொண்று விட்டதாக தகவல் அனுப்பினான்.அவனை பாராட்டிய மேல் அதிகாரி ,இறந்தவர்களின் உடம்பை பெற்றொல் ஊத்தி எரித்துவிடும்படி கட்டளை இட்டான். "மாத்தையா மே ஒக்கம நாக்கிய மினிசு பவ்"(இவர்கள் எல்லாம் வயசு போன கிழடுகள் பாவம்)ஒட முடியாமல் வீழ்ந்து செத்துபோட்டுதுகள் என்றான் ஒரு சிப்பாய்.2ஆம் லெப்டினட் பண்டாவுக்கு கோபம் வந்துவிட்டது,இவன்கள்தான் அந்த கொட்டிகளை பெத்து போட்டவன்கள் ஆனபடியால் இவன்களும் கொட்டிதான்...இங்கு நான் சொல்லுவது தான் சட்டம் நீ எனக்கு கீழ்பணிபுறியும் சிப்பாய் .நான் உன்மேல் அதிகாரி என்று மிரட்டலாக கூறினான்.அத்துடன் அவனுக்கு தண்டனையும் கொடுத்தான்.இறந்தவர்களின் உடல்களை எரிப்பது உனது வேலை என்றான். "மேக்க அப்பெ ரட்ட" தமிழன்கள் இங்க கள்ளதோணியில் வந்தவன்கள் அவன்களை அழிக்க வேண்டும் என்று தனக்கு கீழ் பணிபுரியும் இராணுவத்திற்கு சொல்லியவண்ணமே இருந்தான். 6புலிகளை கொண்றவன் என்றபடியால் உயரதிகாரிகளுக்கு பண்டா மீது நம்பிக்கை பிறந்துவிட்டது.சுற்றிவளைப்புகள்,கைதுகள் என்று வரும்பொழுது பண்டாவைத்தான் அதிகாரிகள் அனுப்புவார்கள்.அப்பாவிகளை கைது செய்வான்,நீ கொட்டிதானே உண்மையை சொல் என சித்திரை வதை செய்வான்,ரோந்து செல்லும் பொழுது டிரக் வண்டியை பார்த்து பயந்து ஒடுபவர்களை சுட்டு கொலை செய்து போட்டு புலிகள் தப்பி ஒடினார்கள் சுட்டுக் கொண்றுவிட்டேன் என்று அதிகாரிகளுக்கு சொல்லுவான் அவர்களும் விசாரனை எதுமின்றி பாராட்டுவார்கள் பண்டாவின் இச்செயல்களால் லெப்டினட் தரத்திற்கு பதவி உயர்தப்படுகிறான்.தரமுயர்த்தப்பட்டவுடனே,இராணுவத்தில் பணிபுரியும் பெண்னை திருமணம் செய்கிறான்.குடும்ப வாழ்க்கையின் பயனாக இரு ஆண்குழந்தையும் ஒரு பெண்னும் புத்தனின் அருளால் கிடைக்கிறது.தெய்யனபிட்ட மூவரும் தாயாருடன் சொந்த ஊரில் வளர்ந்து வரும் வேளையில் பண்டா தமிழர் தாயகத்தில் தமிழர்களை புலி என்ற போர்வையில் அழித்து பல பதக்கங்களும் ,விருதுகளும் பெற்று பதவி உயர்வடைகிறான் . . விடுதலை நாட்களில் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் பொழுது "மெக்க அப்பே ரட்ட " என்று சொல்லி சிங்கள இனவாதகருத்துக்களை புகட்டுவான். ஒருநாள் கப்டன் பண்டாவை தாயார் அழைத்து உனக்கு ஒரு உண்மை தெரியுமோ? உன்னுடைய சியாவின் தாத்தே(அப்பப்பா வின் அப்பா தமிழன்) தெமிழு என்று சொல்ல இவனால் அதை ஜீரணிக்கமுடியவில்லை.....தங் மம சிங்களய.....மெக்க அப்பெ ரட்ட.......என்று சொல்லிய படியே தாயாருக்கு பதில் அளிக்காமல் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான். மகன்மார் இருவரையும் க.பொ.உயர்தரமுடிந்தவுடனே "கொத்தலாவ டிவன்ஸ் அகடமியில்" தனது செல்வாக்கை பயன்படுத்தி சேர்த்துவிடுகிறான்.இருவரையும் விமானப்படை அதிகாரியாக வரவேண்டும் அதற்கான பயிற்சியில் ஈடுபம்படி அன்புகட்டளையிடுகிறான்,இதன் மூலம்தான் புலிகளின் முக்கிய இடங்களை குண்டு போட்டு அழிக்கலாம் வவுனியாவில் பணிபுரியும் மேஜர் பண்டா கிழக்கு பிராந்தியத்திற்கு லெப்டினட் கேர்ணலாக பதவி உயர்வுடன் மாற்றலாகி செல்கிறான்.இவனினது கொடூர சித்திரவதைகள் காரணமாக இவனுக்கு ஒரு பட்டபெயரும் உண்டு அதாவது புள் பண்டா .சாதாரணமக்கள் இவனை புள் பண்டா என்று தான் தங்களுக்குள் கதைத்துக் கொள்வார்கள். கிழக்கில் பல தாக்குதல்களை நடத்தி கிழக்கின் கட்டளை அதிகாரியாகிறான் கேர்ணல் பண்டா... புலிகளின் கன்னி வெடித்தாக்குதலில் ஒரு கண்ணயும் ஒரு காலையும் இழக்கிறான் கேர்ணல் பண்டா தொடர்ந்து பணி செய்ய முடியாததால் பிரிகேடியர் பண்டா என்ற பதவியுடன் புள் பண்டா ஒய்வு பெறுகிறான். மகன் பிரியங்க சுமன பண்டா வன்னியில் குண்டு மழை போடப்போகும்பொழுது புலிகளின் விமானஎதிர்ப்பு பீரங்கி படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு மரணமடைகிறான். தனது இழப்புக்களை பற்றிய கவலையில் இருக்கும் பொழுது இராணுவ பொலிசார் அவனது வீட்டை வருகிறார்கள்.புலிகளுக்கு இராணுவம் பற்றிய சில தகவல்களை வழங்கியமைக்காக விசாரனை செய்ய வேண்டும் என அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுகிறான். சில சிங்கள பத்திரிகைகளை இராணுவீரன் ஒருவன் கொடுக்கின்றான்.... செய்திகளின் தலையங்களை வாசிக்கின்றான் ,எல்லாம் கொட்டிகளின் செய்தியாக இருக்கின்றன. புலிகளின் தளபதியின் தாயார் வெளிநாடு பயணம். புலிகளின் தளபதி முதலமைச்சர். புலிகளின் தளபதி கட்சியின் உபதலைவர், புலிகளின் தளபதி ஜனதிபதியின் பிராந்திய ஆலோசகர் புலிகளின் தளபதியின் மனைவி மேயர் .... புலிகளின் தளபதி ஜனாதிபதி வேட்பாளர். "அப்பெ ரட்ட அப்பெ மினிசு "என்று எனது மகனை இழந்தேன் ,காலையும் ,கண்ணையும் இழந்தேன் ..தங் மம அத்துள(உள்ளே) கொட்டி ஒக்கம எளிய(வெளியில்) கத்தியவன் நெஞ்சை பிடித்தபடியே நிலத்தில் வீழ்ந்தான் .
 4. 2 points
  நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் நாம் எதிர் காலம் தமிழே நீ நலமா... அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று அழுதே உன்னைப் பார்க்கின்றோம் உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும் பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்... தமிழே நீ நலமா... தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான் கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும் திண்ணை விட்டகல திராணியும் இல்லை மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை தமிழே நீ நலமா... சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்று வென்றுவிட வீரமின்றி பகைவன் எச்சிச் சோற்றினை உண்ணும் துயர நிலையை பார்த்தாயோ நான் என்று நாவிருக்கும்வரை கூறாமல் முடியாது என்று முடித்துவிடக் கூடாமல் என்னுள்ளே ஒளிந்துள்ள மறவனைக் கேட்டுக்கொண்டேன்... நாங்கள் நாங்கள் என்று நாண்கள் எடுத்தால் தானோ வாங்கள் வாங்களென வாழ்த்தும் இவ் வையகம்? தமிழே நீ நலமா... நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் ஆனால்... பல 'நான்'கள் (நாண்கள்) சேர்ந்திடின்.... நாம் தான் இவ் வையகத்தின் எதிர் காலம்
 5. 1 point
  வல்வை அண்ணை, சுவாரசியமாய் எழுதி இருக்கிறீங்கள், நல்லாய் இருக்கிது. நான் பிரம்டன் வந்து போவதுண்டு. இந்த வைத்தியசாலையை கண்டது இல்லை. மிசிசாகாவில இருக்கிற திரில்லியமும் நல்லாய் வந்திட்டிது என்று நினைக்கிறன்.
 6. 1 point
  காணததுகளை கண்டால்தானே காண தோன்றும்........? பெண்களின் மார்பகங்கள் பெரும் உஸ்ணத்தை உண்டு பண்ணுகின்றன. வேலை இடங்களில் வேகமாக வேலை பாhக்கும்போது அது வியர்வையை அதிகரிக்கின்றது. அதலால் கொஞ்சமாவது காற்றோட்டமாக இருக்க ஒன்றோ இரண்டு பட்டன்கள் தளர்கின்றன. தவிர உடை அலங்காரம் என்பது மேலை நாடுகளில் ஒரு நாகரீக வளர்சியாகவே பார்க்கபடுகின்றது. அக உடையின் அமைப்பு ஒரு பெண்ணை எந்தளவிற்கு அழகாக்குகின்றது என்பதில் போட்டிகள் ஆடைவடிவமைப்பாளர்களுக்குள் இருப்பதால் இந்த மாதிரியான உடைகள் விற்பனையாகின்றன. இதில் உற்றுபார்ப்பதற்கு அப்படியென்ன இருக்க போகின்றது? பெண் மார்ப்புக்குள் ஒரு மனசுண்டு கொஞ்சம் அதையும் பாருங்கள்!
 7. 1 point
  நன்றி வல்வை அண்ணா....நானும் இந்த வைத்தியசாலைக்கு 2008ல் போயிருந்தேன். நீங்கள் குறிப்பிட்டது போல அவர்களது சேவை மெச்சும்படியாகவே இருந்தது. கனடாவில் பல வைத்தியசாலைகளின் சேவைகள் நன்றாக இருந்தாலும் அவசரப்பிரிவு சேவையில் இன்னும் மாற்றங்கள் தேவை என்பது என் கருத்து. இந்த வைத்தியசாலையில் அவசரப்பிரிவு சேவை எப்படியுள்ளது என்பதை முடிந்தால் அறியத்தாருங்கள். நீங்கள் இருக்கும் நகரத்தின் சிறப்புக்களை மேலும் எடுத்துவாருங்கள். நன்றி
 8. 1 point
  ... நீங்கள் எழுதியவைகளை கண்ணால் பார்த்து மகிழ வேண்டும் போலுள்ளது! இயலுமானால் ஒரு விமான ரிக்கட் போட்டனுப்பினால் ...
 9. 1 point
  . வந்த அன்று, எல்லாப் பகுதிகளிலும் எழுத அனுமதிக்க மாட்டார்கள், பாரதிப்பிரியன். நீங்கள் முதலில் அரிச்சுவடி பகுதியில் மேலும் சில பதிவுகளை இட்டு, உங்கள் பதிவு எண்ணிக்கையை கூட்டுங்கள். அதன் பின், விரைவில் நல்ல செய்தி உங்களை தேடி வரும்.
 10. 1 point
  http://karumpu.com/wp-content/uploads/2009/10/Maaveerare Engal.mp3 பல்லவி மாவீரரே எங்கள் மண்ணின் வீரரே | 2 மறந்தோம்மல்ல | 2 விழி மழை சொரிகிறதே (மாவீரரே...) இருவிழி சொரிந்து இமை மடல் வலிக்கிறதே ஈகத்தின் உச்சத்தில் இதயம் நொந்து இரும்பாய்க் கனக்கிறதே (மாவீரரே...) சரணம் -1 பூத்த மலர் வதனமும் பொருத்திய தடந் தோள்களும் விதை குழி தின்றதே விதியென மனம் ஆறுமோ ? நேற்றுவரை களத்திலே நிமிர்ந்த ஒரு பெருமலை நீள்துயில் வீழ்ந்ததே பரணி நாளை பாடுமோ ?| 2 (மாவீரரே..) சரணம் -2 கழுத்தின்றி தமிழ் உடலம் கரைசேர துடித்தீரே கலமேறி வந்துதாய் கடல்மடி வெடித்தீரே உயிர் உருகிப் போகுதையா ஒருமுறை முகம் காட்டும் உள்ளத்தில் கனலாகி மறுமுறை தெம்பூட்டும் | 2 (மாவீரரே...) சரணம் -3 சந்தன மேனியில் கந்தகம் சுமந்தீரே சதிகள் நடுவினிலும் கனலாய் எரிந்தீரே விழி சிந்த மழை கழுவும் கார்த்திகை இரவினிலே விதைகுழி விட்டு வருவீரோ குமுதவிழி திறப்பீரோ | 2 (மாவீரரே..) குரல்: கிருஷ்ணராஜ் இசை: வி.எஸ்.உதயா பாடல்: கவிஞர் - சோதியா (நோர்வே) தயாரிப்பு: வசீகரன் இசைக்கனவுகள் வெளியீடு: 27.11.2009
 11. 0 points
  மலையோரம் மயிலே.... http://www.youtube.com/watch?v=9dUNrtp9w28
 12. 0 points
  தமிழ் பெடியன்கள் தான் சட்டைக்கு நடிவில் உள்ள இடைவெளியை வாயைப் பிளந்து கொண்டு ஆவெண்டு பார்க்கிறது ...மற்ற நாட்டுக்கார ஆண்கள் கண்டும் காணாத மாதிரிப் போவார்கள்.