• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. கிளியவன்

  கிளியவன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   3

  • Content Count

   1,768


 2. nedukkalapoovan

  nedukkalapoovan

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content Count

   29,543


 3. nunavilan

  nunavilan

  கருத்துக்கள நிர்வாகம்


  • Points

   2

  • Content Count

   41,677


 4. சண்டமாருதன்

  சண்டமாருதன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   2

  • Content Count

   2,451Popular Content

Showing content with the highest reputation on 07/22/2010 in all areas

 1. 3 points
  உலகெங்கிலும் உள்ள பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சங்கடம், உடல் பருமன். அதிலும், பெண்கள் மத்தியில் அதிகமாக நடக்கும் விவாதம், எப்படி இளைப்பது என்பதுதான். உடல் பருமனால் ஏற்படும் தொந்தரவுகள் பல. முதலாவதாக, நாம் விரும்பிய வண்ணம் உடையணிய இயலாது. எந்த உடையும் பொருத்தமாகத் தோன்றாது. அடுத்து உடல் பருமனால், உடலில் பற்பல பிரச்னைகள் தோன்றலாம். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தமும், இதயக்கோளாறுகளும் வரும் வாய்ப்பு அதிகம். பொதுவாக, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும். கால்களால், உடலின் அதிக பருமனைத் தாங்க முடிவதில்லை என்பதால், ஓடியாடி வேலை செய்வதோ, சட்டென்று, எழுந்து அமர்வதோ சிரமமாகத் தோன்றும். சோம்பல் அதிகரிக்கும், அதன் விளைவாக, எடை மென்மேலும் அதிகரிக்கத் தொடங்கும். உடல் மிகப் பெருத்துவிடுமாயின், தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இப்படிப் பலப்பல தொல்லைகள் தொடர வாய்ப்புண்டு. இத்தனை பின்விளைவுகளும் எங்களுக்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, உண்ணாமல் இருக்கவும் முடியவில்லை. என்னதான் செய்வது என்று சொல்பவர்களா நீங்கள்? பெரும்பாலானவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான்.வருத்தப் படவேண்டாம். நிரம்பவும் கஷ்டப்படாமல் இளைக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று இங்கு பார்க்கப் போகிறோம். முதல் மற்றும் முக்கியத் தேவை என்ன தெரியுமா? உடலை இளைக்க வைத்தே தீருவது என்று தீர்மானித்துக் கொள்வதும், அதிலிருந்து பின்வாங்காமல் இருப்பதும்தான். http://www.eelanation.com/health/45-udal-nalam/74-to-reduce-your-weight-i.html#yvComment74 இனி, இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்றஆலோசனைகளைப் பின்பற்றிப் பாருங்கள். 1. எதிர்மறைக்(negetive) கலோரி உணவு வகைகளை உட்கொள்ளுதல்: பட்டினி கிடந்தால் இளைக்கலாம் என்ற ஒரு தவறான கருத்து பலரிடம் நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் உணவு அருந்தவில்லை என்றால் நமது உடல் சோர்வடையுமே தவிர இளைக்காது. அது மட்டுமின்றி, உணவு உட்கொள்ளும் ஆர்வத்தைக் கட்டுக்குள் வைப்பது மிகக் கடினம். இதற்குப் பதிலாக, நாம் எதிர்மறைக் கலோரி உணவினைச் சாப்பிடவேண்டும். அது சரி, நெகடிவ் கலோரி உணவு என்றால் என்ன? அதைப்பற்றி முதலில் தெரிந்துகொள்வோம். நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு, நம் உடலில் ஆற்றலாகச் சேமிக்கப் படுகிறது. வேலை செய்கையில், இந்த ஆற்றல் செலவழிக்கப் படுகிறது. உணவின் மூலம் பெறும் ஆற்றல் அதிகமாகவும், நாம் செய்யும் வேலைகளில் செலவு செய்வது குறைவாகவும் உள்ளபொழுது, அளவுக்கு அதிகமான ஆற்றல் கொழுப்பாக மாறி நம் உடம்பில் தங்கி, நம்மை குண்டாக்கிவிடுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும், ஒவ்வொரு அளவில் நமது சக்தி செலவாகிறது என்று சொன்னேனல்லவா? அதில், உணவைச் செரிக்கச் செய்யும் வேலையும் அடக்கம். பொதுவாக, நாம் உட்கொள்ளும் உணவில் அடங்கியுள்ள கலோரிகளை விட, அந்த உணவைச் செரிக்கத் தேவைப்படும் கலோரிகள் குறைவுதான். இதனால், உடலின் ஆற்றல் அளவு ( இந்த ஆற்றல் / சக்தியை, நாம் பணி புரியவோ, நீண்ட தூரம் நடக்கவோ தேவைப்படும் சக்தியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) அதிகரித்து, உடலைப் பருக்க வைக்கிறது. ஆனால், நாம் சாப்பிடும் சில உணவுகளில் உள்ள கலோரிகள் குறைவாகவும், செரிமானத்திற்கு நம் உடம்பால் பயன்படுத்தப் படும் சக்தி அதிகமாகவும் இருக்கும். அதாவது, நம் உடலில் சேமிக்கப்பட்டுள்ள அதிகப்படி சக்தியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு, நம் உடலை இவ்வகை உணவுகள் ஆளாக்குகின்றன. இவற்றையே நெகடிவ் கலோரி உணவுகள் என்கிறோம். இந்த வகை உணவுகளை எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் உட்கொள்கிறோமோ அந்த அளவு, உடலில் சேமிக்கப் பட்டுள்ள அதிகப் படியான கொழுப்பு எரிக்கப் படுகிறது. பொதுவாக, அநேகமான காய்கறிகள், பழங்கள் நெகடிவ் கலோரி வகையைச் சேர்ந்தவையே. (காய்கறிகள் - காரட், பீன்சு, முட்டைக்கோசு(cabbage), பூக்கோசு (cauliflower), வெள்ளரிக்காய், கீரைவகைகள், தண்ணீர்விட்டான் கிழங்கு(asparagus), பீட்ரூட் முதலியன. பழங்கள் - ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி முதலியன). வாரத்தில் ஒரு நாள் வெறும் பழங்கள் காய்கறிகளை மட்டும் சாப்பிடுவது அல்லது இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுவது என்று பழக்கமாக்கிக் கொண்டால், கணிசமாக எடை குறைவதைக் காணலாம். அது மட்டுமன்று. இத்தகைய உணவுகள் உங்கள் செரிமான உறுப்புக்களை சுத்தம் செய்கின்றன. உங்கள் சருமத்தைப் பாதுகாக்கின்றன. மொத்தத்தில் உங்கள் உடல் எடை குறையவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் நெகடிவ் கலோரி உணவுகள் உதவுகின்றன. பட்டினி கிடப்பதற்குப் பதில், நிறையச் சாப்பிடுங்கள், நெகடிவ் கலோரி உணவுகளை.
 2. 2 points
  . யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3 கிரீங்..... கிரீங்...... கிரீங்....... வேலைக்கு செல்ல வைத்த அலார்ம் அடித்ததில்...... சினத்துடன் போர்வையை விலத்திக் கொண்டு வெளியே..... வந்தார் விசைக்கலைஞன். நேரே.... குளிர் சாதனப் பெட்டிக்கு சென்று பாலை ஒரு கப்பில் ஊத்தி...... மிக்ரோ ஓவனுக்குள் வைத்து விட்டு.... பல்லு விளக்கவில்லையே...... என்று யோசித்தவருக்கு..... பாலை குடிச்சிட்டு பல்லை விளக்கினாலும், பல்லை விளக்கி விட்டு பாலை குடிச்சாலும்...... ஒன்று தானே.... என்னும் தத்துவம் ஞாபகம் வந்து கை கொடுத்தது. பழையராஜாவின் பாடலை முணுமுணுத்துக் கொண்டு, பல்லு விளக்கிவிட்டு.... நேரத்தை பார்த்த விசை..... பத்து நிமிசம் யாழ் களத்தை பார்ப்போம் என்று..... கொம்புயூட்டருக்குள் தலையை நுளைத்தவருக்கு ...... திண்ணையில் ஒரு ஆண்களும் இல்லாமல் ......... ரதி, விஜி, யாழினி, சந்திரமதி, செவ்வந்தி, ஈழமகள், ஷாந்தி, மங்களா, தமிழச்சி , தமிழ் தங்கச்சி, கல்யாணி என்று ஒரே.... பெண்களாயிருந்தததை பார்த்த விசைக்கு, ஆயிரம் கலர் பல்புகள் மின்னி, மின்னி எரிந்தது. உடனே தட்டச்சில் hi, hai... ,கூய்.... என்று சிமைலியளை தட்டிக் கொண்டிருக்கும் போது...... அனைவருக்கும் வணக்கம் என்று வந்தார் வல்வை வயாகரா..... சிவ பூசைக்குள் கரடி வந்த மாதிரி இருக்கே..... என்று யோசித்த விசைக் கலைஞனுக்கு....... இனியும், இங்கை நின்றால்.... டங்குவார் அறுந்து போகும் என்று புத்தியாக யோசித்து, திண்ணையில் இருந்து தப்பி ஓட...... வேலைக்கு செல்லும் ஞாபகம் வந்து உதவி செய்தது. உடனே திண்ணைக்கு bye,bye காட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார் விசை. .
 3. 2 points
  எப்போதும் நான் ஜன்னல் ஒன்றை தூக்கிக்கொண்டு பயணிக்கின்றேன் அவ்வப்போது கம்பிகளினூடாக காலைக் கருக்கலையும் பொழுதுபடுதலையும் பார்ப்பேன் போறவாற ஆக்களையும் பார்ப்பேன் கம்பிகளினூடாக பர்க்கும் பேதே என்னால் எதையும் எவரையும் புரிந்துகொள்ள முடிகின்றது போற போற இடங்களில் தற்காலிக வீடுகளிலெல்லாம் இருக்கும் ஜன்னலோடு என்ர ஜன்னலையும் பிணைத்துவிடுவேன் வேற ஆட்கள் செய்த ஜன்னலால் பார்த்த மாதிரி இருக்காது ஊரில் தொலைத்த வீடுகள் வளவுகள் உறவுகள் தென்னைமரங்கள் அவை எல்லாம் இல்லாத குறையின்றி ஜன்னல் என்னை பாதுகாக்கின்றது. என் ஜன்னலால் பார்க்கும் போது coniferous மரங்களும் பனைக் கூடல்களாக தெரியும் நான் ஒரு நாடோடி ஆனால் எனது நாட்டை தூக்கிக்கொண்டுதான் ஓடுகின்றேன் அனுமான் மலையை தூக்கியதுக்கு பதிலாக அதிலிருந்த சஞ்சீவியை புடுங்கிக்கொண்டு வந்திருக்கலாம் நான் அனுமான் விட்ட தவறை விடவில்லை நாலுக்கு நாலு அளவில் நாலுகம்பி வைத்த ஜன்னல் முகத்துக்க நேர பிடித்தால் எல்லாம் என்நாடே!! ஒரே ஒரு மனவருத்தம் தான் என்ர மகனுக்கும் மகளுக்கும் இந்த ஜன்னல் பழக்கம் ஒத்துவரவில்லை ஏனென்று என் ஜன்னல் வளியே பார்க்கின்றேன் ஆனால் ஒன்றும் புரியவில்லை
 4. 1 point
  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார். இந்தியா இலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4 வது நாள் ஆட்ட நேர முடிவின் போது 798 விக்கெட்களுடன் இருந்த முரளிதரன் இன்று 5 வது ஆட்டத்தில் ஹர்பஜன், ஓஜா ஆகிய இருவரின் விக்கெட்களை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் எடுத்து முரளிதரன் சாதனை படைத்துள்ளார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்களும், 2 வது இன்னிங்சில் 3 விக்கெட்களும் எடுத்து உள்ளார். தனது 133 வது டெஸ்டில் விளையாடும் முரளிதரன் காலே போட்டியுடன் டெஸ்டில் இருந்து விடைபெறுகிறார்.
 5. 1 point
 6. 1 point
  தமிழ் மொழி ஒர் அறிவியல் ஆய்வும் .. எதிர்கால தேவையும் சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றியும் கண்டனர். அதோடல்லாமல், தமிழின் உண்மையான மேன்மையை உணர்ந்திருந்த அவர்கள், அதைப் பொறுக்க முடியாமல் தமிழை 'நீச பாஷை' என்று இழித்துரைத்தனர். ஒரு அடிமையின் மொழி நீசமாகத்தானே இருக்க முடியும். தமிழனுக்கென்று ஏதாவதொரு மாண்பு இருந்து விட்டாலும் அவன் தன்னை உயர்ந்தவனாக எண்ணி தனது அடிமைத் தனத்திற் கெதிராகக் கிளர்ச்சி செய்வானே! எனவே அவனது மொழியைக் கீழ்த்தரமான மொழியென்று மூளைச்சலவை செய்தனர். இந்த நீண்ட கால கட்டத்தின் இறுதியில்,1800களில், கால்டுவெல் என்ற, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அருட்தந்தை தமிழகம் வந்தார். தமிழ் கற்று, சமற்கிருதம் கற்று, தென்னிந்திய மொழிகளையும் கற்றுத் தௌிந்து, திராவிட மொழிகளின் மூலம் தமிழ் என்றும், அது சமற்கிருதத்திலிருந்து உருவான மொழி அல்லவென்றும் ஐயமின்றி நிறுவினார். இதை ஒரு வெளிநாட்டினர் தான் முதலில் சொல்ல வேண்டியிருந்தது என்பதிலேயே, ஒட்டு மொத்த தமிழினமும் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டிருந்தது என்பது சொல்லாமலேயே விளங்கும். அதன் பிறகு வந்த சூரியநாராயன சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) தமிழைச் செம்மொழி என்று ஆய்ந்துரைத்தார். சமற்கிருதத்தின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளான தமிழை மீட்கத் தனித்தமிழே சிறந்த வழியென்று முனைந்து மறைமலை அடிகளார் 'தனித்தமிழ்' இயக்கத்தைத் தோற்றுவித்தார். தேவநேயப்பாவாணரும் எண்ணற்ற அரும்பனிகளைச் செய்தார். தமிழின் மீட்சி தொடங்கியது. அதன் விளைவாக தமிழில் 50 விழுக்காடாக புழங்கி வந்த சமற்கிருதச் சொற்கள் தற்போது 20 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அந்த 20 விழுக்காடு அயல்மொழிச் சொற்களையும் அறவே நீக்கித் தமிழைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. அதேநேரம், தொல்காப்பியர் காலத்திலேயே இசைவளிக்கப்பட்ட, அயல் மொழிக்குரிய ஒலிகளைக் குறித்த, எழுத்துக்களையும் தவிர்ப்பது எனக்கு நல்லதொரு கொள்கையாகப் படவில்லை. நான் முன்வைக்கும், தன்னியலான தமிழின் வளர்ச்சித் திட்டத்திற்கு இது உவந்ததாக இருக்காது. இதைப்பற்றி அலசி மொழி விரிவாக்கம் பற்றிய எனது கருத்தைப் பதிவு செய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரையை தொடரும் முன்பு ஒரு செய்தியை குறிப்பிட்டே ஆகவேண்டும். அன்று சமற்கிருதத்தால் ஏற்பட்ட பாதிப்பைவிட இன்று ஆங்கிலத்தால் மிகுதியான பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலை நாடுகளின் பொருளாதார மேன்மையும், தமிழினிடத்தில் பார்ப்பனீயத்தால் ஏற்படுத்தப்பட்ட தம்மைப்பற்றிய தாழ்வு மனப்பாண்மையும் தான் இந்த ஆங்கிலக் கவர்ச்சிக்குக் காரணிகள். அதோடு தமிழின் மேன்மை, தொன்மை, பண்பாடு பற்றிய விழிப்புணர்வு பெருவாரியான தமிழிரிடத்தில் ஏற்படுத்தப் படாமையும் இந்த இழிவு நிலையின் மற்றொறு காரணி. நிற்க. உலகிலுள்ள அனைத்து மொழியினங்களும் ஒரேமாதிரியான ஒலியமைப்புகளை தங்களது மொழிகளில் பயன்படுத்தவில்லை. பொதுவான ஒலிகள் பலப்பல இருந்தாலும் ஒவ்வொரு மொழிக் குடும்பத்திற்கென்றும் தன்னியலான ஒலிகளும் ஏராளம். இந்த தனித்தன்மைகள் அம்மொழியினங்கள் வாழ்ந்த இயற்கைச்சூழல், அச்சூழலில் வழ்ந்த பறவைகள், விலங்குகள் எழுப்பிய ஒலிகளின் அடிப்படையில் உருவானதாகும். இந்த மொழிகள் ஒவ்வொன்றும் நிறைவு பெற்றதாகவும் தமக்குத் தேவையான அனைத்து (அல்லது அனேக) ஒலிகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும் விளங்கின. ஆனால், இந்த மொழியினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் போது தான் ஒவ்வொரு மொழியின் போதாமை உணரப்பட்டது. இன்றுள்ள எந்த ஒரு மொழியும் மற்ற அனைத்து மொழிகளின் அனைத்து பெயர் சொற்களையும் உச்சரிக்க வல்லமை அற்றதாகவே உள்ளது. அந்த வல்லமை ஒவ்வொரு மொழிக்கும் முகாமையான தேவை என்பதே எனது கருத்து. அந்த வகையில் தமிழும் அந்த இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் என்பது எனது விழைவு. இத்தகைய விரிவாக்கத்திற்கு தமிழும், தமிழ் சார்ந்த மொழிகள் தவிர ஏனைய அனைத்து உலக மொழிகளும் இசைவற்றதாகவே உள்ளன. அம்மொழிகளை விரிவாக்கம் செய்வதோ கற்பதோ எளிதல்ல. ஆனால், தமிழின் அடிப்படை அமைப்பு, தமிழின் விரிவாக்கத்திற்கோ கற்பதற்கோ உகந்த முறையில் உள்ளது. நாம் அடுத்துக் காணப்போகும் மொழி பற்றிய செய்திகளில் இது தௌிவாகும். ------------------------------------------ கட்டுரையைத் தொடரும் முன்பு ஒரு சிறு விளக்கம்: சீனத்தைச் சார்ந்த அனைத்து கீழை மொழிகளும் ஒலிகளச் சார்ந்த எழுத்துகளைக் கொண்டிருக்க வில்லை. அவை கருத்துகளைத் தான் வெளிப்படுத்து கின்றன. ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு வரிவடிவம் (எழுத்துவடிவம்). கருத்தின் அடிப்படையில் எழுத்துகள் அமைவதால் அவை ஒவ்வொன்றின் தனிப்பட்ட உச்சரிப்புகளைக் கற்றல் இன்றியமையாதது. இயல்பாகவே, இம்மொழிகள் எல்லாம் மிகக் கடினமான மொழிகள். இம்மொழிகளும் விரிவாக்கத்திற்கு உவந்தவையல்ல. சீனமொழி பழம்பெரும் இலக்கியங்களைக் கொண்ட மொழி. எனினும், இக்குடும்பம் ஒரு வளர்ச்சி யடையாத மொழிக் குடும்பமே. ஆதிகால மனிதர்கள் பட எழுத்துகளைப் பயன்படுத்தினர். அதையொத்த எழுத்துகள் தாம் சீன எழுத்தமைப்பும். ஓரெழுத்துப்பேச்சு (Mono Sylabic) காலத்திலேயே தமிழகத்திலிருந்து பிரிந்து சென்ற இனம் தான் சீன மொழிக் குடும்பம். இக்குடும்ப மொழிகளில் ஒவ்வொரு புதிய கருத்திற்கும் (சொல்லிற்கும்) ஒரு புதிய வரிவடிவமும், உச்சரிப்பும் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும். இது எளிதல்ல. தமிழும், ஏனைய உலக மொழிகளும் ஒலி சார்ந்த மொழிகள் என்பதாலும், நமது கட்டுரை அதை மையப்படுத்தியது என்பதாலும் சீன மொழிக்குடும்பம் பற்றிய இந்த விளக்கம் தேவைப்பட்டது. நிற்க. --------------------------- ஒரு மொழியை கற்கின்றவர் மூன்று முகாமையான கூறுகளைக் கற்க வேண்டும். அவை முறையே; 1. எழுத்தும் அதன் ஒலியும் 2. சொல்லும் அதன் உச்சரிப்பும் 3. சொல்லின் பொருள். (இங்கே நான் கற்பது பற்றி எடுத்துக்கொண்டது எழுத, படிக்க என்ற நோக்கில் மட்டுமே.) 1. எழுத்தும் அதன் ஒலியும் எளிமையானதாக இருக்க வேண்டும். கற்பதை எளிமைப் படுத்தும் நோக்கில், எண்ணிக்கையில் குறைவானதாக இருக்க வேண்டும் அல்லது, எழுத்துக்களை அமைக்கும் முறை அவற்றைக் கற்பது எளிதாயிருக்க வேண்டும். எழுத்துகளுக்கு நிலையான, மாறாத ஒலிகள் இருக்க வேண்டும். உலகில் புழக்கத்தில் உள்ள அத்தனை சொற்களையும் முறையாக உச்சரிக்க வேண்டு மெனில் தேவையான மிகு அளவிலான எழுத்துகளும் அதற்குரிய ஒலிகளும் இன்றியமையாதது. ஆனால், மிகு அளவிலான எழுத்துக்கள், எழுத்தை உருவாக்குவது முதல், கற்பது, கணணியில் பயன்படுத்துவது உட்பட எண்ணற்ற சிக்கல்களை உள்ளடக்கியது. எனவே, முரன்பட்ட இந்த இரண்டு எதிர்பார்ப்புகளுக்கும் (அதாவது, மிகு எண்ணிக்கை, பயன்படுத்தலில் எளிமை) தீர்வு உண்டா எனில் உண்டு; அது தமிழுக்கே உள்ள சிறப்பு. இதைப்பற்றி பிறகு விரிவாக காணலாம். 2. சொல்லும் அதன் உச்சரிப்பும் எழுத்துக்களின் கூட்டு தான் சொல். அந்த எழுத்துகளுக்குரிய ஒலிகளின் சேர்க்கை தான் அந்த சொல்லின் உச்சரிப்பு. எழுத்துகளையும் அவற்றின் ஒலிகளையும் முறையாக கற்ற எவரும் சொற்களில் உள்ள எழுத்துகளை (அவற்றின் ஒலிகளோடு) கூட்டிப் படிக்கும் போது மயக்கமற்ற உச்சரிப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, எழுத்துகளுக்கு நிலையான ஒலிகள் இருப்பின் (அதாவது, இடத்திற்கு தகுந்தவாறு பிறழ்ன்று ஒலிக்காத தன்மை) மயக்கமற்ற உச்சரிப்பு இயல்பானதாகும். மிகு எண்ணிக்கையிலான எழுத்துகளைப் பயன் படுத்தும் போது அவ்வெழுத்துகளுக்குரிய நிலையான, மாறாத ஒலிகள் இயல்பாகிவிடுகிறது. இங்கு முகாமையாக நாம் உணரவேண்டியது என்னவென்றால் சொல்லின் உச்சரிப்பை, சிறப்பித்துக் கற்பிக்கத் தேவையில்லை. இது கற்றலின் சிக்கலிளுள்ள ஒரு பரிமானத்தை எளிதாக்கி விடுகிறது. எனவே, சொல்லைக் கற்கின்ற ஒருவர் சொல்லிற்குரிய எழுத்துகளைக் (Spelling) கற்றாலே போதுமானது.சரியான உச்சரிப்பு இயல்பாகவே வந்துவிடும்.ஆங்கில மொழியை இங்கு ஒப்பு நோக்கினால் நான் சொல்வது எளிதாகப் புரியும். ஆங்கிலத்தில் மொத்தமும் 26 எழுத்துகளே யுள்ளன, அததற்கு ஒதுக்கப்பட்ட ஒலிகளோடு. இந்த குறைவான ஒலிகளை வைத்துக்கொண்டு வகைவகையான சொற்களை ஒலிப்பது இயலாத செயல். எனவே, ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகளை மிகையேற்றம் (Over-Loading) செய்கின்றனர். எனவே, சொற்களைக் கற்கவேண்டிய ஒவ்வொருவரும் Spelling மட்டுமில்லாது உச்சரிப்புகளயும் (Pronunciation) கற்கவேண்டியுள்ளது. இது ஆங்கிலம் கற்பதை மிகவும் கடினமாக்கி விடுகிறது. சான்றாக, Bus என்பதை 'புஸ்' என்றுதான் இயல்பாகப் படிக்க முடியும். Card என்பதை 'சார்டு' என்றுதான் இயல்பாகப் படிக்க முடியும். ஆக, 26 எழுத்துகளயும் முறையாக பயின்ற பின்னும், எழுத்துகளைக் கூட்டி சொற்களைப் படிக்கும் போது, கிட்டத்தட்ட அனைத்து ஆங்கில சொற்களுக்கும், ஒரு ஆசானின் துணை இன்றியமையாதது. ஆனால், தமிழுக்கு இந்த அளவு கற்பித்தல் தேவையில்லை. இதைப்பற்றி பிறகு மேலும் பார்ப்போம். இந்தக் கட்டுரையாளர், சிறுவயதிலேயே சொந்த முயற்சியால் ஆங்கிலம் கற்றவர் என்ற முறையில் அது ஒரு Illogical (ஏரணமற்ற) மொழியென்பதை உணர்ந்தவர். அறிவியல் வழியாக முயன்று ஆங்கிலம் கற்க முடியாது. ஆனால், தமிழ் அறிவியல் அடிப்படையில் அமைந்த மொழி. 3. சொல்லின் பொருள் சொல்லின் பொருளைக் கற்பது ஒவ்வொரு மொழிக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவை. வேர்ச்சொல்லின் அடிப்படையில் அமைந்த சொல்லமைதிகளக் கொண்ட சிறந்த மொழிகளுக்கு சொற்களையும் அதன் பொருளையும் நினைவில் இருத்துவது ஒப்பீட்டளவில் எளிதானது. அந்த சிறப்பும் தமிழுக்கு இயல்பாகவே அமைந்த ஒன்றாகும். தமிழில் அனைத்து சொற்களும் வேர்கொண்டு எழுந்தவையே. மற்றபடி, சொற்களைக் கற்றல் என்பது அனைத்து மொழிகளுக்குமான இன்றியமையாத பரிமாணம் தான். மொழி விரிவாக்கத்தைப் பற்றி கருதுகின்ற போது, எழுத்துகள் அதிகமாவதால், தமிழர்களைப் பொருத்தவரை, சொற்கள் மிகுதியாக வேண்டிய தேவை இல்லை. ஆனால், புதிய கலைச்சொற்களை உருவாக்கும் போது புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்துகளும் பெருமளவில் உதவும். மொழி விரிவாக்கத்தின் முதன்மை தேவை என்னவெனில், மாற்று மொழிகளில் உள்ள அனைத்து பெயர்களையும் (பெயர்ச் சொற்களையும்) பிழையின்றி எழுதி உச்சரிப்பதே. இன்று நாம் அனைத்தும் தமிழில் என்று முன்னேற விரும்பும்போது இது ஒரு இன்றியமையாத தேவையாகும். நாம் மேலே கண்டவற்றிலிருந்து, உலகின் அனைத்து சொற்களின் மயக்கமில்லாத உச்சரிப்பை இயல்பாக்க நிறைய எழுத்துகளும் அதேநேரம் அவற்றைக் கற்பதை எளிமைப் படுத்தக்கூடிய தாகவும் அமையவேண்டும். இந்த வசதி தமிழுக்குள்ள இயல்பான தகுதியாகும். இதை நாம் எண்ணி எண்ணிப் பூரிப்படையலாம். -------------------------------- தமிழில் பண்டைய முறைப்படி 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், இவற்றின் சேர்க்கையால் உருவான 216 (12*18 = 216) உயிர்மெய் எழுத்துக்களும் உள்ளன. உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என்ற வகைப்பாடே சுவையான அறிவியல் அடிப்படையினால் செய்யப்பட்டது. அ முதல் ஔ வரையிலான ஒலிகளை நாம் ஏற்படுத்தும்போது உதடுகள் ஒட்டாமல், மேலண்ணத்தை நாக்கு எங்கும் தொடாமல், காற்றுக் குழாயை அல்லது உதடுகளைக் குறுக்கியோ, விரித்தோ காற்றை ஒழுங்குபடுத்தி ஒலிக்கின்றோம். உயிருக்கு முதன்மையானது காற்றுதானே! எனவே, காற்றை மட்டும் பயன்படுத்தி உருவாக்கும் ஒலிகள் உயிரொலிகள் எனப்பட்டன. மெய்யொலிகளை உருவாக்கும்போது (க், ங்,ச் . . . . ) நாவானது மேலண்ணத்தைத் தொட்டோ அல்லது உதடுகள் ஒட்டியோ ஒலிக்க வேண்டியுள்ளது. அதாவது, காற்றைவிட உடலின் (மெய்யின்) பங்கே அதிகம். அவை மெய்யொலிகள் எனப்பட்டன. ஒவ்வொரு மெய்யெழுத்தையும் ஒவ்வொரு உயிரெழுத்தோடு சேர்த்தொலிக்கும்போது வகைவகையான புதிய ஒலிகளை உருவாக்க முடியும். அவ்வெழுத்துக்கள் (ஒலிகள்) உயிர்-மெய் எழுத்துக்கள் எனப்பட்டன. அத்தகையவை எத்தனை எழுத்துக்கள் என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்துகளின் எண்ணிக்கையைப் பொருத்தது. இதில் குறிப்பிட வேண்டிய சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு மெய்யெழுத்தும், ஒரு குறிப்பிட்ட உயிரெழுத்தோடு சேர்த்தொலிக்கும்போது, அதன் மெய்யெழுத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மாற்றத்தை அடைகின்றன. சான்றாக, ஆ என்ற உயிரெழுத்தோடு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தொலிக்கும்போது, கா, ஙா, சா, நா, மா......என்ற உயிர்மெய்கள் ஒரே மாதிரியான மாற்றங்களைப் பெருகின்றன. ஒருசில தேவையான வேறுபாடுகளைத்தவிர, இது அனைத்து உயிரெழுத்துகளுக்கும் பொருந்தும். இதன்மூலம் நாம் உணரும் உண்மை என்னவெனில் உயிர்மெய்களுக்கு எழுத்து, வடிவங்களை உருவாக்குவதோ, கற்பிப்பதோ மிகவும் எளிது. அது மட்டுமல்லாமல் உயிர்மெய்கள் கூட்டொலிகள் என்பதும் அவை உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்துக்கள் தனித்தனியே கூடுவதால் உருவாவதாலும் இவற்றின் ஒலிகளை, அவற்றினோடு கூடிய எழுத்துக்களோடு நினைவில் இறுத்துவதும் எளிது. இவை மிகமிக முகாமையான உண்மைகள். தமிழின் சிறப்பின் அடிப்படையே இவைதான். பாவாணரின் வேற்சொல் ஆய்வு தமிழினத்தை வியக்க வைத்தது. தமிழ்ச்சமூகம் உலகின் தொன்மையானது. முதன்முதலில் பேசத்தொடங்கிய தமிழ்மாந்தன், ஒவ்வொரு சொல்லையும் காரணத்தோடே உருவாக்கிக் கையாண்டிருகின்றான். அதோடு சங்கம் வைத்து ஆய்ந்து செம்மைப் படுத்தப்பட்ட மொழி தமிழ் என்பதும் இச்சிறப்புகளின் அடிப்படை. மீண்டும் ஆங்கிலத்தை ஆய்வு செய்வோம். ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களும் அவற்றிற்குரிய அடிப்படை ஒலிகளுமே உள்ளன. இந்த 26 எழுத்துக்களுமே ஒன்றிற்கொன்று எந்த தொடர்பும் அற்ற தனித்தனி எழுத்து, ஒலிகளே. எனவே, இம்மொழியை விரிவாக்கம் செய்ய வேண்டுமெனில், எத்தனை புதிய எழுத்துகள் தேவையோ அத்துனை எழுத்துகளுக்கும் புதிய வரி (எழுத்து) வடிவங்களை உருவாக்க வேண்டும். அவையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற தனித்தனி வடிவங்களாகத்தான் இருக்க முடியும். (இல்லையென்றால் ஆங்கிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பே மாறிவிடும்.) இவற்றின் வடிவங்களையும் ஒலிகளையும் உருவாக்குவதும் கற்பதும் ஒப்பீட்டளவில் தமிழைவிட மிகமிகக் கடினமானதாகும். எல்லாவற்றையும்விட முகாமையான செய்தி என்னவென்றால் அப்படி விரிவாக்கம் செய்யப்பட்ட, ஆங்கிலம் போன்ற, மொழிகளை கணணியில் பயன்படுத்துவது இயலாததாகிவிடும். ஆனால், தமிழின் அடிப்படை அமைப்பு கணணி பயன்பாட்டுக்கு மிகவும் உவந்ததாக உள்ளது. உயிரும், மெய்யும் சேர்ந்து உயிர்மெய் உருவாக்கப் படுவதால் கணணியின் விசைப் பலகையில் உயிரெழுத்துகளுக்கும், மெய்யெழுத்துகளுக்கும் மட்டும் விசைகள் இருந்தாலே பொதுமானது. தற்போதுள்ள முறைப்படி, 12+18 = 30 விசைகளே போதுமானது. உற்று நோக்குங்கால், தமிழின் எழுத்துமுறை ஏதோ கணணிக்கென்றே உருவாக்கப்பட்டது போல் உள்ளது. இப்படித் தொன்மையான மொழியாக இருப்பினும், தமிழ் அரியபல மேன்மைகளைப் பெற்றிருக்கும்போது, இதன் விரிவாக்கம் பற்றிய தயக்கம் ஏன்?கட்டுரையைத் தொடரும்முன்பு ஒரு விளக்கம் அளிப்பது தேவையாகிறது. --------------------------------- தமிழ் ஒரு அறிவியல் மொழிதான். கணணி பயன்பாட்டுக்கு உவந்ததுதான். ஆனால், கணணியில் தட்டச்சு செய்யும்போது பெரும்பாலான எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளை அழுத்த வேண்டியுள்ளதே (அதாவது உயிரும், மெய்யும்) . அதனால், ஒரே கருத்தை கணணியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சேற்றும்போது தமிழுக்கு கூடுதல் விசைகளை அழுத்த வேண்டியிருக்குமே என்று கேட்கலாம். அது தான் இல்லை!!!! எப்படி? ஆங்கிலத்தில் பெரும்பாலான சொற்கள் அதிக எழுத்துக்களைக் கொண்ட நீண்ட சொற்கள். ஆனால், தமிழில் பெரும்பாலான சொற்கள் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட சிறிய சொற்களே. இது எதனால் எற்பட்டது என்றால், மீண்டும், ஆங்கிலத்தின் எழுத்துப் பற்றாக்குறைதான். இதைக் கணித ஆய்வு வழியாக விளக்குகின்றேன். மூன்றெழுத்து சொற்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். ஆங்கிலத்தில் 26 எழுத்துகளிலிருந்து ஒவ்வொரு முறையும் வெவ்வேறான 3 எழுத்துக் குழுக்களை (Combinations) எடுத்து அவற்றை வெவ்வேறாக இடவமைதி (Permutations) செய்து மேலளவாக எத்தனை சொற்களை உருவாக்கமுடியும் என்றால், அவை மொத்தம் 15,600 மட்டுமே. அதே நேரம் தமிழில் 247 மொத்த எழுத்துக்களிலிருந்து 1,48,86,690 எண்ணிக்கையான 3 எழுத்து சொற்களை உருவாக்க முடியும். இந்த இரண்டு எண்ணிக்கைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த இரண்டு மொழிகளிலுமே இந்த எண்ணிக்கை களிலிருந்து மிகச்சிறிய விழுக்காடு தான் பயன்படு சொற்களாகும். ஏனென்றால் அத்துனை சொற்களுக்கும் சொற்களுக்கான ஓசையமைதி இருக்காது; வேர்ச்சொல் தொடர்பும் இருக்காது. இங்கு நாம் காணவேண்டியது வாய்ப்புகளைப் பற்றியதுதான். குறைந்த எழுத்துகளையுடைய ஆங்கிலத்திற்கு சிறிய சொற்களுக்கான வாய்ப்புகள், ஒப்பீட்டளவில், தமிழைவிட மிகமிகக் குறைவு. ஆகவே, ஆங்கிலத்தில் பெரும்பாலான சொற்கள் நீண்ட சொற்களே. சான்றாக, சிலவற்றைப் பார்ப்போம். Complication சிக்கல் Beauty அழகு Stop நில் Compettition போட்டி Compare ஒப்பிடு Listen கவனி Statue சிலை Uncomparable ஒப்பற்ற Go போ Difficulty கடினம் Situation சூழ்நிலை Silence அமைதி Sound ஒலி Comfort வசதி Exhibition காட்சி Shadow நிழல் Doubt ஐயம் Place இடம் Concentration கவனம் Install நிறுவு House வீடு Come வா Government அரசு Justice நீதி மேலும், ஓரெழுத்துச் சொற்கள் இந்த இரண்டு மொழிகளிலும் எத்துனை உள்ளன என்று பார்த்தாலே விளங்கிவிடும். ஆங்கிலத்தில் ஓரெழுத்துச் சொற்கள் இரண்டே இரண்டு தான். அவை A (ஒரு), I (நான்) என்பன. ஆனால், தமிழில் எத்துனை என்று பாருங்கள். Tamil Alphabet நீ, வை, கை, தை, போ, வா, கோ, மா, மை, பா, நா, பை, தா, தீ, ஈ, ............... இந்தப் பட்டியல் முடிவானதல்ல. இதற்கு இணையான ஆங்கில சொற்கள் அனைத்தும் பல்லெழுத்துச் சொற்களே. ஆக, சராசரியாக, ஒரே கருத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேற்றும் போது, ஆங்கிலத்தைவிட தமிழுக்கு குறைவான விசையழுத்தங்களே தேவைப்படும் என்பது உண்மை. அதோடு, தமிழ் மென் பொருளில் சுயமாக புள்ளியிடும் வசதியும் உண்டு. நிற்க. இக்கருத்துக்கு உரம் சேர்க்க, திருக்குறளையும், அதன் ஆங்கில மொழியாக்கமும் (கவிதை வடிவிலேயே, G. U. Pope) ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். இங்கு சான்றாக எடுத்துக் காட்டும் குறள், நேரடியாக பொருள் கொள்ளக் கூடிய எளிய குறளே. அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (35 எழுத்துக்கள்) The loveless to themselves belong alone; The loving men are others' to the very bone. (68 எழுத்துக்கள்) வேறு ஏதாவதொரு சொற்றொடரை மொழிபெயர்த்தாலும் இதே போன்ற முடிவே கிடைக்கும். (34 எழுத்துக்கள்) If any different sentence is translated, similar result would be arrived at. (62 எழுத்துக்கள்) ஆக, நான் முன்பே குறிப்பிட்டதுபோல் தொல்காப்பியர் இசைவளித்த ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ எழுத்துகளைக்கூட தவிர்ப்பது முறையன்று. பார்ப்பனீயத்தின் மீதுள்ள வெறுப்பால் தமிழை முடக்குவது எள்ளளவும் சரியன்று. அழகிய தமிழின் தூய்மையைக் காப்பதாக எண்ணி, தமிழை தேக்கி வைப்பது ஒரு அடிப்படை வாதமே. அடிப்படை வாதங்கள் முன்னேற்றத்தின் எதிரிகள். உலகின் அனேக மொழிகள் விரிவாக்கத்திற்கு இயைந்த மொழிகள் அல்ல. தமிழுக்கு மட்டுமே இந்தத் தகுதியுண்டு. விரிவாக்கதின் மூலம் தமிழை உலகின் முதன்மை மொழியாக்க முடியும். அதற்குரிய அத்துனை தகுதிகளும் தமிழுக்குண்டு. மொழி விரிவாக்கம் பற்றிய கருத்தை ஒரு சான்றோடு விளக்குவோம். ஆடுகள் தமிழ் மண்ணிற்குரிய விலங்கு. இருந்தும் ஆடு கத்தும் ஒலியை தமிழில் எழுத முடியாதென்பதே வருந்தக்கூடிய செய்தி. தற்போது ஆடு கத்துவதை 'மே' (ம்+ஏ = மே) என்றே எழுதுகின்றோம். இது May என்பதில் உள்ள ஏ தான். ஆனால், Man என்பதில் உள்ள ஏ தான் சரியான உச்சரிப்பு. அதற்குரிய உச்சரிப்பு (எழுத்து) தற்போது நம்மிடத்தில் இல்லை. மாறுபட்ட இந்த 'ஏ' க்கான ஒரு உயிரெழுத்தை உருவாக்கினால் இந்த புதிய 'மே' மட்டுமல்ல 18 புதிய உயர்மெய்கள் கிடைக்கும். சரி. எவ்வாறு விரிவாக்கம் செய்யலாம் என்று இப்போது பார்ப்போம். நமது குறிக்கோள், உலகிலுள்ள அனைத்து மொழியினங்களின் பெயர்ச் சொற்களை அவ்வினங்களின் உரிய உச்சரிப்புகளோடு எழுதிப் படிப்பதே. எனவே, அத்தகைய மொழிகளைக்கற்ற தமிழர்களின் உதவியோடு என்னென்ன ஒலிகள் தமிழில் சேர்க்கப்பட வேண்டும் என்பதைப் பட்டியலிட வேண்டும். பிறகு, அப்புதிய ஒலிகளை உருவாக்க என்னென்ன புதிய உயிரொலிகள், மெய்யொலிகள் தேவையென்பதை ஆய்ந்தறிய வேண்டும். இந்த ஆய்வின்பின் அவ்வுயிர் மெய்களுக்குறிய, தமிழின் தன்மையோடு இயைந்த, புதிய வரிவடிவங்களை உருவாக்க வேண்டும். இதைச்செய்த உடனேயே பட்டியலிட்ட அனைத்து ஒலிகளுக்கும் வரிவடிவங்கள் எளிதாக உருவாகிவிடும். தற்போது உள்ள செந்தமிழின் அமைப்பில் உயிரும், மெய்யும் உயிர்மெய்யும் சேர்த்து 12+18+(12*18=216)+1 = 247 எழுத்துக்கள் உள்ளன. இதனுடன், எடுத்துக் காட்டுக்காக, 8 உயிரெழுத்துக்களையும், 2 மெய்களையும் சேர்த்தால் 20+20+(20*20 = 400)+1 = 441 மொத்த ஒலிகளையும், எழுத்துக்களையும் பெறமுடியும். வெறும் 10 புதிய ஒலிகளையும், வரி வடிவங்களையும் மட்டும் உருவாக்கி கிட்டத்தட்ட 200 பதிய ஒலிகளையும், எழுத்துக்களையும் பெறுவது என்பது எப்பேர்ப்பட்ட விந்தை! அதுதான் தமிழ். இதற்குரிய, புதிய எழுத்துக்களுக்கு, விசைகளாக விசைப்பலகையில் Num Lock பகுதியில் உள்ள விசைகளைப் பயன்படுத்தலாம். நான் மேற்கூறியது ஒரு எடுத்துக்காட்டே. எத்தனை உயிர்கள், எத்தனை மெய்கள் என்பது மொழி வல்லுனர்கள் முடிவு செய்ய வேண்டியது. விரிவாக்கம் செய்யப்பட்ட தமிழுக்கு 'பெருந்தமிழ்' என்று பெயரிடலாம். ஐந்தாம் வகுப்பு வரை செந்தமிழும் அதன்பிறகு பெருந்தமிழும் மாணவர்களுக்கு கற்பிக்கலாம். தமிழின் இலக்கணத்தில், இந்த விரிவாக்கத்தால், ஏதேனும் மாறுதல் வேண்டின் அதனையும் கவனிக்க வேண்டும். தொல்காப்பியர் ஏற்படுத்திய வட எழுத்துக்கள் இப்பெரும் விரிவாக்கத்தின் ஒரு சிறிய அங்கமாக இருக்கும். பெருந்தமிழ் என்பதற்கு பதிலாக "உலகத்தமிழ்" என்றும் பெயரிடலாம்! இக்கட்டுரையாளர் ஒரு மொழி வல்லுனரல்லர், ஒரு இயற்பியல் அறிஞர் தாம். ஆனால், அறிவியல் கண்ணோட்டத்தில் மொழியை அனுகும்போது, மேற்குறிப்பிட்ட தமிழின் 'வியத்தகு' மேண்மைகள் புலப்பட்டன. இத்தகைய விந்தை மொழியை மேலும் செழுமையுறச் செய்ய வேண்டியது, இந்தத் தலைமுறையின் கடப்பாடு அல்லவா? இக்கட்டுரையின் நோக்கம், அந்தத் திசையில், இன்றியமையாததொரு தருக்கத்தை ஏற்படுத்துவது தான். காலம் தாழாமல் அப்படியொரு தருக்கம் தொடங்கினால் தமிழும், தமிழுலகமும் மேன்மையடையும். இணையத் தமிழ் அறிஞர்களும், மாநாட்டுக் குழுக்களும் இக்கருத்துக்களை பரிசீலிப்பர் என்று கருதுகிறேன். தமிழுக்கு Unicode ல் உயிரெழுத்துக்கும், மெய்யெழுத்துக்குமான குறியீடுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்க் கோப்புகளை சேமிக்க மிகையான இடமும், அவற்றைக் கையாள மிகையான கணணி நேரமும் தேவை என்ற ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அனைத்து எழுத்துக்களுக்கும் தனித்தனி குறியீடுகள் கொடுக்கப்பட்டால், இடத்தேவையும், கையாளும் நேரமும் குறையும் என்பது தமிழை மட்டும் வைத்துப்பார்த்தால் உண்மையே. ஆனால், தற்போதிருக்கும் முறையிலேயேகூட ஆங்கிலத்தைவிட தமிழுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான மிகையான இடங்களும், கையாளும் நேரமும் தேவையில்லை என்ற உண்மையை, இக்கட்டுரையின் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளேன். வெல்க தமிழ். நன்றி: தனி தமிழ்நாடு தோழர் முனைவர் வே.பாண்டியன்
 7. 1 point
  தேங்காய் சாதம்.. தேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 10 தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை: அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.ஒரு தட்டில் சாதத்தைக் கொட்டி, சிறிது தேங்காய் எண்ணையை அதன் மேல் விட்டு பரப்பி விடவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கடலைப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் (நறுக்கியது), கறிவேப்பிலைச் சேர்த்து, சிறிது வறுக்கவும். பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஓரிரு வினாடிகள் வத‌க்கி, உப்பு சேர்த்து இறக்கி வைத்து, அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறவும். இது சகோதரிக்கு.. நன்றி: சமையல் அறை.காம்
 8. 1 point
  ஓல்(O/L) பரீட்சையில் ஓல்(all) எவ்(F) வந்ததும் தலை கிறுகிறுக்க அலைந்த போது.. இயக்கத்துக்கு ஓடிடுவானோ.. பயந்தாள் அம்மா. ஊருக்க வைச்சிருந்தா உவங்கள் வந்து இழுத்துக் கொண்டு போயிடுவாங்கள் உங்கால உள்ள காணியை வைச்சிட்டு அனுப்பிவிடு இவனை கொழும்புக்கு.. புத்தி சொன்னார் அப்பா. கொழும்பில போய் பொடி கெட்டிடும் உந்த ஊரெல்லாம் போகுது கனடா அனுப்பிவிடு அங்க.. பத்தாக்குறைக்கு பத்த வைத்தார் மாமா..! நானும் சோதனையில் பெயிலான (fail ஆன) சோகம் தீர புறப்பட்டேன் தாண்டிக்குளம் தாண்டி ரொராண்டோ. வருசம் ஒரு 5 போய் இருக்கும் நாலு காசு நாய்படா பாடுபட்டு வெள்ளைத் தோலிடம் ஏச்சும் இழிவும் வாங்கி உழைச்சது தான்..! அம்மா கேட்டாள் பொம்பிளை ஒன்று அனுப்பி வைக்கட்டே..??! இளமைத் துடிப்பும் சோடியாய் அலையும் ரொராண்டோ வீதிகளும் எனக்குள்ளும் மோகத்தைக் கிளறி விட அம்மாவின் கேள்வியில் நியாயத்தை தேடி.. ஓம் என்றேன்..! கலியாணம் முடிக்க.. சிறீலங்கா போக ஏலாதாம் ஏனென்றால் நான் அகதியாம்.. அட கடவுளே செல் (shell) வந்து அறியா ஊரை விட்டு ஒரு நாளும் ஓடினதில்ல.. ஓல் லில பெயிலானதுக்கு அம்மாக்குப் பயந்து கோவிலில போய் ஒளிச்சிருந்ததை தவிர.. எனக்கும் அகதிப் பட்டம். பொம்பிளைக்கு ஆசைப்பட்ட மனசு சிங்கப்பூர் போயாவது கொண்டு வரத் துடித்தது அந்த ஊர் மறி ஆட்டை..! கனடா குளிருக்க இருந்த பசிக்கு வேட்டைக்கு அது அவசியம்.. என்று கண்டதால றிஸ்க்(risk) எடுப்பது றஸ்கு சாப்பிடுவது போலாச்சு எனக்கு. எல்லாம் நல்ல படியா முடிஞ்சு அவளும் வந்து சேர்ந்தாள். மாதம் ஒரு 10 போய் இருக்கும் யூனியரும் தவழ்ந்தது என் மடியில். அதுக்குள்ள ஊரில பிரச்சனை என்று அம்மாவும் அப்பாவும் கூட தங்கையும் ஓடி வந்துவிட்டனர் கொழும்புக்கு. ஊரே காலி. நானும் ஓர் நாள் தற்செயலாக செய்தி கேட்க.. முள்ளிவாய்க்காலாம் எண்டாங்கள்..! என்ர பொடியும் வெளியுலகம் பார்த்தது இல்ல.. நானும் புலி வால் பிடிச்சு அறிஞ்சதில்ல.. புறப்பட்டோம்.. போராட என்று தமிழீழம் கேட்டு.. கட்டினோம் புலிக்கொடி.. காரெல்லாம். போதாக்குறைக்கு பொடிக்கும் மூஞ்சியெல்லாம் புலி வேசம் வரைஞ்சு.. போட்டோம் கூச்சல்... விடுப்போடு பொழுது போக்க புலி ஆதரவும் காட்டி நிற்க..! நாலு சனம் பார்த்துப் பேச..! இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு அமைதி வந்திட்டு அவங்கள் எல்லாம் செத்துட்டாங்கள் போற வாற வழியில வரியும் இல்ல புலியும் இல்ல.. ஆமிக்காரங்கள் இங்கிலீசில கதைச்சு எங்கட பிள்ளைகளை கொஞ்சி மகிழுறாங்கள் நீயும் கொண்டு போய் காட்டன்.... என்றார் சுப்பர் மார்க்கட்டில் என்னோட கூட மாரடிக்கும் மாதகல் மதன். போன மாதம் தான் ஊருக்கு போய் வந்தவராம். மதனின் கதை கேட்டதில எனக்கும் ஊருக்கு போற ஆசை முளைக்க சும்மா கிடக்கேலாம கடைசி நேரத்தில புலிக்கொடி புடிச்சது பயமும் வந்து தொலைய.. தயங்கிப் போட்டு என்ன ஊருக்குப் போவமே உமக்கும் ஒரு ஆறுதலா இருக்கும்.. மனிசி என்று வந்து வீட்டுக்கையே இருந்து எனக்காய் உழைக்கும் அவளையும் சும்மா கருத்துக் கேட்டன். ஓமங்க.. எங்கட பொடிக்கும் ஊர் காட்ட வேணும் எனக்கும் அப்பா அம்மாவை பார்க்க வேணும்.. வாங்கோ போவம். ரிக்கட் போடுறதென்றால் சிறீலங்கன் எயார் லைன்சில போடுங்கோ.. தமிழ் படம் போடுவாங்களாம்.. எங்கட ஊர் சாப்பாடாம்.. குணம் அன்ரி சொன்னவ..! அப்ப சரி நல்லூர் திருவிழாவும் பார்க்கிற மாதிரி ரிக்கட் போடுறன்.. நீர் இப்பவே ரெடியாகும் ஊரில உள்ளதுகளுக்கு சும்மா வெறும் கையோட போக ஏலுமே நாலு சாமான் வாங்கிச் சேரும்.. என்ன..! நாலு சாமான் வாங்கிச் சேர்த்து நாலு லக்கேஜ் கட்டி ஏத்தி நானும் கட்டுநாயக்கா தாண்டி ஊருக்கு போனது தான்.. ஊரெல்லாம் நல்ல கலகலப்பு.. உவங்கள் யாரோ ஈழம் கேட்டு நாசமாக்கினதை தவிர சனம் ஸ்கூட்டியில பறக்குதுகள்.. ஆமிகாரன் நின்று விசிலடிச்சு எங்கட பெட்டையளுக்கு விளையாட்டு காட்டுறான் என்ன ஒரு பொழுதுபோக்கு என்ன ஒரு இன ஐக்கியம்..! கொழும்பில பார்த்த சிங்களம் மணிக்கூட்டு கோபுரத்தில ஏறி நிற்குது.. மருதானையில பார்த்த புத்தர் சிலை.. மருதனார் மடத்திலும் இப்ப இருக்குது.. பஸ்ஸில பார்த்த ஆமத்துறு ஆரிய குளத்தில குளிக்கிறான்..! என்ர பொடிக்கு உதுகள் தான் எங்கட அடையாளங்கள் காட்டின திருப்தியோட கல்வியங்காடு தாண்டி வரேக்க சொன்னன்.. இதுதான் செங்குந்தா இந்துக்கல்லூரி இங்க தான் நான் படிச்சது. பொடியும் கேட்டான் அதென்ன செங்குந்தா என்றால் அது அந்த ஊரில இருந்த சாதி அதென்னப்பா சாதி என்றால்.. காட்டுறன் வா.. அழைச்சுக் கொண்டு யாழ்ப்பாணச் சாதியெல்லாம் காட்டிப் போட்டு.. கடைசில.. விடை பெற்றோம்.. கனடாவுக்கு..! லக்கேச்சுக்கு மேல.. காவுகின்றோம் கனக்க தலை நிறைய...! அடுத்த தலைமுறைக்கு அடையாளமாய் காட்ட..! அதோட அடுத்த முறைக்கு வரேக்க கண்டிக்கும் போக வேணும்.. அதுவும் எங்கட நாடு தான் என்றேன் பெருமையோடு என்ர பொடிக்கு. அது சரி உவங்கள் உந்த சீமேந்து இல்லாத காலத்திலும் சக்கரையும் சுண்ணாம்பும் போட்டு கட்டினது மாவீரர் இல்லங்கள் எண்டாங்கள் அதுகளைக் காணவே கிடைக்கல்ல.. ஓடேக்க இடிச்சிருப்பாங்கள் போல..! இப்ப ஆமிக்காரன் நல்லாத்தான் வைச்சிருக்கிறான் ஊரை.. ஓல் லில சமூகக்கல்வியில.. படிச்சதை வைச்சு எவ் எடுத்ததில.. உதயமான அரசியல் ஞானம்.. ஆராய்ச்சி செய்து கண்ட உண்மை இது. ஊரில அமைதி வந்திட்டு சுதந்திரம் கிடைச்சிட்டு.. சரி எல்லாரும் வாங்கோ ஒருக்காலாவது சிறீலங்கன் எயார் லைன்ஸ் ஏறி எங்கடையளுக்கு அடையாளம் காட்ட ஊருக்குப் போவம் இதுவே கனடாவில என்ர அரசியல் பிரச்சாரம் இன்று..!
 9. 1 point
  பாடல்: நான் பிறந்த நேரமா படம்: கண்ணுக்குள்ளே
 10. 1 point
  . நல்ல அழகாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இது தான் நாம் உனக்குப் பார்த்திருக்கும் பெண் என்றார்கள்.படத்தைப் பார்த்ததுமே பிடித்துக் கொண்டது. அவர்கள் காட்டிய முதலும் கடைசியுமான படம். இன்று... அழகு மாத்திரம் போதாது என்று உணர்கிறேன். வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. குறிப்பாக பிள்ளைகள் பிறந்ததும் வாழ்க்கைச் சக்கரம் மிகவும் விரைவாகச் சுழலத் தொடங்கும். இக்கட்டத்தில் ஆண் தன் தோள் மீதுள்ள சுமையின் ஒரு பங்கையாவது பெண் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பான். நன்பர்களின் மனைவிமார்களில் சிலர் அழகாகவும் நல்ல‌ திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களைப் பார்க்கும் போது நாம் பின்தங்கி விட்டோமோ என்ற எண்ணம் ஏற்படும். எல்லாம் சரிவர அமையாது என்று சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியது தான். வேற வழி ?
 11. 1 point
  நீங்கள் அவசரப்பட்டு எழுதுறீங்க என்று நினைக்கிறன். ஓல்லில பெயிலாயிட்டதால பொடி இயக்கத்துக்கு ஓடிடுமோ என்ற பயம் தாயிடத்தில் வருகிறது என்பதாகத்தான் காட்டி எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் றிசல்ட் வந்த உடன ஒரு கூட்டம் இயக்கத்துக்கு புதிதாக வருவதை இயக்கமே கண்டிருக்கிறது. இது மறுக்கப்பட முடியாத உண்மையும் கூட. அங்கு பெயில் விட்டவர்கள் மட்டுமல்ல.. தரப்படுத்தலால் பல்கலைக்கழகம் போக முடியாதவர்களும் அடங்கி இருந்தனர். ஏன் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவர்கள் கூட போராளி ஆகி இருக்கின்றனர். குறிப்பாக திலீபன் அண்ணா போன்றவர்கள்.. மருத்துவ பீடத்துக்கு தெரிவானவர்கள். இவ்வளவு நியாயம் கேட்கிறீங்களே.. இயக்கதிற்குப் போன யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் வாரிசுகள் எத்தனை பேர்...??! அத்தனை வாரிசுகளும் இன்று லண்டனிலும் கனடாவிலும் அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் இருக்கினம். யார் போராடப் போனார்கள்.. அதிகம் ஏழை மக்களும்.. யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகளால்.. கீழ் சாதி என்று வர்ணிக்கப்பட்ட மக்களின் வாரிசுகளுமே..! கிழக்கில் யார் போராடப் போனார்கள் வறிய கிராமங்களைச் சேர்ந்த எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களே. மாவீரர் பட்டியலை எடுத்துப் பாருங்கள்.. படுவான்கரையும்.. பழுகாமமும்.. வாகரையும்.. கிரானும்.. தந்தது தான் அதிகம். மட்டக்களப்பு நகரை விட. யார் சிறீலங்காவிற்கு காட்டிக் கொடுத்து அரசியல் செய்தார்கள்.. அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் நித்தியானந்தன்களும்.. நீலன் திருச்செல்வங்களும்.... அவர்களின் மனைவிகளும் வாரிசுகளும். சித்தார்த்தன் யார்.. டக்கிளஸ் தேவானந்தா யார்..??! நாங்கள் ஆத்திரப்படுவதில் நியாயம் இல்லை. நாங்கள் ஒதுங்கி இருந்து ஓடி வர சந்தர்ப்பம் பார்த்து நின்ற மக்களை தான் அதிகம் கண்டிருக்கிறோமே தவிர பங்காளிகளாக இருக்க பலர் விரும்பவில்லை. இன்றும் கூட அதே மக்கள் தான் ஊருக்கு சுற்றுலாப் போகவும் முண்டி அடிக்கின்றனர். மக்களில் பலர் இன்னும் மாறவில்லை. ஆனால் போராளிகள் தான் இவர்களுக்காக போராடி மாய்ந்திருக்கிறார்கள்...! வீழ்ந்தது அவர்கள் வாழ்ந்தது இவர்கள்..! இதில் ஒரு நன்றிக்கடன் கூட இல்லாத மக்களையே நான் அதிகம் காண்கிறேன்..! வாய்கிழிய முழக்கம் போட்டவர்கள் எல்லாம் இன்று சிறீலங்கன் எயார் லைன்ஸில் பறக்கின்றனர்.. நேற்று வரை புறக்கணிப்போம் என்றவர்கள் இன்று புறப்பட்டு நிற்கிறார்கள்.. இதுதான் எமது தோல்விக்கு காரணமே அன்றி.. வேறல்ல..! இவர்கள் இன்று அடையாளம் காட்டப் போகின்றோம் என்று போகின்றனர்.. அங்கோ மாவீரர் துயில் இல்லங்கள் கூட அடையாளம் இன்றி போய் சிங்கள பெளத்த சின்னங்கள் அடையாளமாகிக் கிடக்கின்றன. இந்த நிலையில்.. எதை அடையாளமாகக் காட்டப் போகின்றனர்..??! இவர்களின் வாரிசுகளுக்கு தமது தேசம் சிங்கள பெளத்த தேசம் என்றா சொல்லிக் கொடுக்கப் போகின்றனர்..??! :lol:
 12. 1 point
  ஐரோப்பிய நாடொன்றில் ...அந்த வதிவிடத்தின் மாடியில் ஒரு அறையில் அந்த முதியவர் வாழ்ந்து கொண்டு இருந்தார் ..இளைப்பாற்று ( பென்ஷன்) சம்பளம் எடுப்பவர் போலும்........அவரது அறையின் ஜன்னல் அருகே கதிரையில் உட்கார்ந்த படி போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருப்பது .. பிடித்தமான பொழுது போக்கு. மாதத்தில் ஒரு தடவை வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும்போது தனக்கு தேவையான் சமையல் பொருட்களை வாங்கி வருவார். தினசரி பத்திரிகை படிப்பார். அவை அவரது குடியிருப்பின் வாயிலுக்கு வந்து விழும். ........இப்பொது பனி கொட்டும் காலம். குடிமனைச்சொந்தகாரர் தான் அவர்களது நடை பாதையை சுத்தம் செய்ய வேண்டும். சிலர் தாங்களாகவே செய்வார்கள் சிலர் வாடகைக்கு கூலியாட்களை அமர்த்தி செய்வார்கள். அந்த வேலையை செய்யும் கூலியாள் தினமும் வந்து பனி ( சினோ) தள்ளுவான். வீசுகின்ற காற்று குளிர் நிலையை மேலும் கூட்டும். அவனை கண்டவர் அவன் சினோ தள்ளி முடிய தன் அறைக்கு வரும்படி செய்து சூடான் தேநீர் பரிமாறினார். அந்த கூலியாளின் மலர்ச்சி.....மன மகிழ்வு , இவரை .மகிழ்வித்தது. விடைபெற்று சென்று விடான். மீண்டுமொரு நாள் ..அந்த நடை பாதையில் ஒரு கிழவி பழங்களை கடை பரப்பி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். கூடை கூடையாக் வைத்திருப்பாள். அந்த வழியால் வந்த சிறுவன் ...அந்த கூடையில் இருந்து ஒரு ஆரஞ்சு பழத்தை திருடி தின்றான் .. இதை அவள் கண்டு விட்டு அவனை பிடித்த்துநன்றாக் அடித்தாள். இதைக்கண்ட முதியவர் கீழே வந்து இன்னொரு ஆரஞ்சு ் பழத்தை எடுத்து அந்த சிறுவனை சாப்பிட சொன்னார் இரு பழங்க்களுக்குமான் காசை தானே கொடுத்தார். சிறுவன் நன்றியோடு ... பெற்றுக்கொண்டான். சரியான் பசி போலும். கையில் காசு இல்லை திருடி இருக்கிறான்..........சந்தர்ப்பங்கள் தான் குற்றம் செய்ய வைக்கின்றன. இன்னொரு முறை ...துணிகளை சலவை செய்பவள். இவரது வீடுக்கு வந்து ..சலவைத்துணிகளை எடுத்து சென்றாள். ...மீண்டும் மூன்றாம் நாள் கொண்டு வந்து கொடுத்து பணத்தை பெற்றாள். தான் பட்டாதாரித்தரம் வரையில் ..படித்திருப்பதாகவும் தனக்கு பொருத்தமான் வேலை கிடைக்கக் வில்லை என்றும் ..கஷ்டத்தின் நிமித்தம் இந்த வேலையை செய்வதாகவும் சொன்னாள். அவள் கதையை கேட்டவர் ...வாரம் ஒரு முறை வந்து துணி எடுத்து செல்லும்படி சொன்னார். அவளுக்கு வாடிக்கையாளர் கிடைத்த்தை எண்ணி ...மகிழ்ந்தாள். முதியவர் நன்றாக் புத்தங்கள் படிப்பார். அருகே இருந்த் சமய சஞ்சிகையை ..திறந்த போது ...".ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்பாய்."............குளிரால் விறைத்த மனிதனுக்கு சூடான் தேநீர்.........பசியால் வாடிய சிறுவனுக்கு ஆரஞ்சு ....வேலையற்று சீவியம் நடத்தத் கக்ஷ்டபட்ட்வளுக்கு வேலை .....இவர்களின் சிரிப்பு அவர் மனத்தில் நிழலாடியது ..... ..மறு நாள் பேப்பர் காரன் கதவு தட்டியபோது ..கதவு தானாகவே திறந்து கொண்டது ....நெஞ்சில் பைபிள் புத்தகம் ...தரையில் மூக்கு கண்ணாடி ...கைகளை விரித்தபடி ....மீளாத உறக்கத்தில்........போகும் வழிக்கு தேடிக்கொண்ட புண்ணியம். அவரது உடல் வேண்டியவர்களுக்கு அறிவிகக்பட்டு கிறிஸதவ முறைப்படி அடக்கம் செய்ய பட்டது. ..இறுதி நாளில் அவஸ்தை இல்லாத மரணம். ஒரு மனிதனின் வாழ்வு பற்றி கேள்விபட்ட் ஒரு கதை ...நீ மரணிக்கும்போது உன்னுடன் கூட வருவது வாழ்வில் நீ செய்யும் நல்ல செயல்களால் வரும் ,மன அமைதி......... முற்றும். ..
 13. 1 point
  புளிக்குளம்பு தேவையானப்பொருட்கள்: புளி – சிறு எலுமிச்சம் பழ அளவு தயிர் – 1 கப் சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு வெண்டைக்காய் – 4 அல்லது 5 வறுத்தரைக்க: காய்ந்த மிளகாய் – 5 முதல் 6 வரை உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் – 1/2 அல்லது 3/4 கப் தாளிக்க: எண்ணை – 1 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை: புளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர் சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். வெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும். குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். (கெட்டியான மோர் இருந்தாலும் சேர்க்கலாம்). அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும். கவனிக்க: இந்தக் குழம்பிற்கு எந்த எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் தேங்காய் எண்ணையை உபயோகப்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும். குறிப்பு: இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக்காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சௌசௌ, வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும். வெண்டைக்காயை சேர்ப்பதானால், மேற்கூறியபடி, ஒரு டீஸ்பூன் எண்ணையில் வதக்கி சேர்க்கவும். கத்திரிக்காயென்றால், துண்டுகளாக்கி அப்படியே புளித்தண்ணீரில் சேர்க்கலாம். மற்ற காய்கள் என்றால், ஆவியில் வேக விட்டு பின்னர் சேர்க்கவும் http://barthee.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/
 14. 1 point
  தக்காளி சாதம் தேவையானவை * அரிசி - 150 கிராம் * வெங்காயம் - 100 கிராம் * தக்காளி - 250 கிராம் * பூண்டு - 50 கிராம் * பச்சை மிளகாய் - 3 * பச்சை பட்டாணி - 50 கிராம் * இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி * பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 1 * சோம்பு - 1/2 தேக்கரண்டி * தேங்காய் - 2 தேக்கரண்டி * காய்ந்த மிளகாய் - 3 * தயிர் - 3 தேக்கரண்டி * எண்ணெய் / நெய் - 50 ml * உப்பு - தேவையான அளவு * புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு * தேங்காய், சோம்பு காய்ந்த மிளகாய் மூன்றையும் ஒன்றாக அரைக்கவும். * நெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை கருவேப்பில்லை போடவும். * பொரிந்ததும் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். * வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். * தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதிக்கி அரைத்த விழுது சேர்த்து மேலும் 5 நிமிடம் வரை வதக்கவும். * நறுக்கிய கொத்தமல்லி புதினா பச்சை பட்டாணி மற்றும் தயிர் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அரிசி சேர்த்து 5 நிமிடம் வதக்கி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும். * சுவையான தக்காளி சாதம் ரெடி. http://www.arusuvai.com/tamil/node/15611