Jump to content

Leaderboard

  1. வீணா

    வீணா

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      3

    • Posts

      791


  2. nunavilan

    nunavilan

    கருத்துக்கள நிர்வாகம்


    • Points

      2

    • Posts

      51174


  3. தமிழ்பிரியன்

    தமிழ்பிரியன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்


    • Points

      1

    • Posts

      38


Popular Content

Showing content with the highest reputation on 08/30/10 in all areas

  1. பில் கேற்ஸ் கார் விபத்து ஒன்றில் இறந்து விட்டார்.அப்போ கடவுளுக்கு ஒரு பிரச்சனையாகி விட்டது இவரை நரகத்துக்கு அனுப்புவதா அல்லது சொர்க்கத்துக்கு அனுப்புவதா என. கடவுள் பில் கேற்சுடன் (ஆவி) பேசினார்.நீங்கள் உலகிற்கு எவ்வளவு உதவி செய்துள்ளீர்கள்.ஒவ்வொரு வீட்டிலும் கொம்பியூட்டர் இயங்க உங்களின் தொண்டு அளப்பரியது.எனவே சொர்க்கத்துக்கு செல்வதோ, நரகத்துக்கு செல்வதோ என நீங்களே முடிவு செய்யுங்கள் என்று கடவுள் கூறினார். பில் கடவுளிடம் எனக்கு இரு இடங்களையும் காட்ட முடியுமா என கேட்டார்? கடவுள் நிச்சயமாக என கூறி முதலில் நரகத்துக்கு கூட்டி சென்றார். நரகம் மிக அழகாக இருந்தது.நீலக்கடலும் அழகான வெள்ளை மணல் கடற்கரையும் காணப்பட்டது. பல அழகான பெண்கள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பில்லுக்கு மிகவும் பிடித்து விட்டது.என்றாலும் சொர்க்கத்தையும் தனக்கு காட்டும் படி கேட்க கடவுள் அங்கும் கூட்டிச்சென்றார்.அங்கு உயரமான இடமாகவும் அமைதியான இடமாகவும் சில பறவைகளின் சத்தத்தையும் கேட்டார்.ஆனால் அவருக்கு நரகம் பிடித்து கொண்டது.கடவுளிடம் நான் நரகத்துக்கு தான் போக போகிறேன் என கூற அப்படியே ஆகட்டும் என கடவுள் கூறி மறைந்தார். இரண்டு கிழமையின் பின் கடவுள் பில் என்ன செய்கிறார் என பார்க்க நரகத்துக்கு செல்கிறார். அங்கு பில் வீதியோரத்தில் யாராலோ நன்றாக சாத்தப்பட்டு வீதியோரத்தில் இரத்தம் ஒழுக முனகிய படி கிடந்தார். கடவுளும் என்னப்பா நரகத்தில் என்ன நடந்தது என கேட்க பில் தன்னிடம் உள்ளதை யாரோ பறித்து விட்டு தாக்கி விட்டு சென்று விட்டதாக அழாக்குறையாக சொன்னார்.பின்னர் கடவுளிடம் அப்போ நீங்கள் காட்டிய அழகான கடற்கரை,வெள்ளை கடற்கரை மண் , அழகான பெண்கள் எல்லாம் எங்கே என்று கேட்க கடவுள் அது ஸ்கிறீன் சேவர்(screen saver) என்றார்.
    1 point
  2. நலியாத நகைச்சுவை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தான் வறுமையில் இருந்தபோதும் தனக்கே உரிய நகைச்சுவை குன்றாமல் பேசுவார் என்பதற்கான ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சி கடன் சுமையால் அவரது வீடு ஏலத்திற்கு வந்தது. அந்த கோர்ட்டின் attachment ஆர்டரை அவரிடம் கொடுக்க கோர்ட்டிலிருந்து ஒரு ஆள் வந்திருந்தார். அப்போது என்.எஸ்.கே.யை பார்க்க வந்திருந்த ஒரு நண்பர் கோர்ட்டிலிருந்து வந்திருந்தவரைப்பார்த்து “யார் இவர்?” என்று கேட்டார். வழக்கமான சிரிப்புடன் என்.எஸ்.கே சொன்னார். “அவர் எனக்கு வேண்டியவர். அவருக்கும் எனக்கும் ரொம்ப attachment” கோர்ட்டிலிருந்து வந்தவருக்கு ஒரு வேதனையான சிரிப்பு.. யார் துறவி? முந்தைய காலங்களில் வயது முதிர்ந்தவர்கள் ஒரு நிலையில் துறவு மனப்பான்மையுடன் காசிக்கு நடந்தே செல்வது வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு தம்பதியர் துறவு பூண நடந்தே சென்று கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் மண்ணின் கீழே ஒரு வைரக்கல் இருப்பதை கணவர் பார்த்தார். அந்த வைரத்தைப் பார்த்தவுடன் மனம் மாறி தன் மனைவி துறவு மனப்பான்மையை மறந்து விடுவாளோ என்று எண்ணி அதைத் தன் கால்களால் மறைக்க முயன்றார். அதைக் கவனித்த மனைவி சொன்னாள். “மண்ணுக்கும் வைரத்திற்கும் வித்தியாசம் தெரிந்த நீங்கள் எப்படித் துறவியாக முடியும்?” என்று கேட்டாள். நாணினார் கணவர்! ஏன் இந்த மவுனம்? ரஸ்ய அதிபர் குருஷ்சேவ் பதவியேற்றவுடன் ஒரு பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் இழைத்த கொடுமைகளைப் பற்றி அடுக்கிக் கொண்டே பேசினார். கூட்டத்தில் இருந்த ஒருவன் குரல் கொடுத்தான் “நீங்கள் ஸ்டாலினின் மந்திரிசபையில் இருந்தவர்தானே? ஏன் அப்போதெல்லாம் பேசாமல் இருந்தீர்கள்? அவரை எதிர்த்து பேசியிருக்கலாமே?” கேள்வி கேட்டவன் யாரென்று தெரியாததால் “யார் அப்படிக் கேட்டது?” என்று அதிகாரமாகக் கேட்டார் குருஷ்சேவ். ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. கேள்வி கேட்டவனும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரத்திற்குப் பின்பு குருஷேவ் “இப்போது புரிந்திருக்குமே.. நான் ஸ்டாலினை ஏன் எதிர்த்துப் பேசவில்லை என்று” என்று அமைதியான குரலில் சொன்னார். ஸ்டாலினை எதிர்த்துப் பேசுவதற்கு எல்லோருமே பயந்தார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் குருஷேவ். ஒரு ஜென் கதை ஒரு ஜென் துறவி மரத்தடியில் தன் சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கையில் அவ்வழியாக வந்த அந்த நாட்டின் சேனாதிபதி துறவியிடம் கேட்டார். “நரகம் எ‎ன்றால் எது? அது ‏இருப்பது உண்மையெ‎ன்றால் அதைக் காட்ட முடியுமா? “அது சரி. நீ யார்?”என்று கேட்டார் துறவி. மமதையுடன் சொன்னான் அவன். “நான்தா‎ன் இந்நாட்டின் சேனாதிபதி” துறவி ஏளனமாகச் சிரித்தார். “நீயா.. சேனாதிபதியா? உன்னைப் பார்த்தால் ஆடு வெட்டும் கசாப்புக் கடைக்காரன் மாதிரியல்லவா இருக்கிறது?” சேனாதிபதிக்கு வந்ததே கோபம்! வாளை எடுத்தான். ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தபடி அவரைக் கொல்ல வந்தான். ஜென் துறவி, கோபமும், ஆத்திரமும், அகங்காரமும் அடங்கிய அவனது முகத்தை நோக்கி சுட்டிக்காட்டி “இதுதான் நரகம்” என்றார். கோபத்தை விட பெரிய நரகம் எது? எத்தனை நேரம்? அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக நீண்ட க்யூ நி‎ன்றிருந்தது. அதில் ஒரு வெள்ளையருக்கு முன் ஒரு கறுப்பு இனத்தவர் நின்று கொண்டிருந்தார். வெள்ளையர் நேச பாவத்துடன் முன்னால் இருந்த கறுப்பு இனத்தவரைக் கேட்டார். “வெகு நேரமாகக் காத்திருக்கிறீர்களா?” அவர் சுருக்கென்று பதில் சொன்னார். “ஆமாம்.. இருநூறு வருஷங்களாக!” முடிந்தால் சிரிக்கலாம் - எது நின்றது? டாக்டர் ஒரு நோயாளியின் நாடியை ஒரு கையாலும், ஒரு வாட்சை இன்னொரு கையாலும் பிடித்தபடி மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த நர்ஸ் எதுவும் புரியாமல் கேட்டாள் “என்ன டாக்டர் வாட்ச்சையும் பேஷண்டின் நாடியையும் மாறி மாறிப் பார்க்கிறீர்களே.. ஏன்?” டாக்டர் சொன்னார். “இந்த இரண்டில் ஏதோ ஒன்று நின்று விட்டது. அது எது என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!”
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.